திங்கள், 31 ஆகஸ்ட், 2009

           ஓணம் பண்டிகை
கேரள மக்களின் வசந்த கால விழாவாக ஓணம் கொண்டாடப்படுகிறது. மாவேலி சக்கரவர்த்தி மக்களை பார்க்க வரும் நாளாக ஓணம் கருதப்படுகிறது. அன்றைய தினம் பூக்களால் வீடுகள் அலங்கரிக்கப்படும்.

மாவேலி மன்னனை மக்கள் அன்புடன் வரவேற்று உபசரிக்கும் இந்த விழா கேரள மக்களின் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகையை விவரிச்சுச் சொல்லணுமுன்னா இது 10 நாள் கொண்டாடற பண்டிகை.கடைசி நாள்தான் ஓணம். சிங்க மாசத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரம் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரைஇருக்கும் 10 நாட்கள்தான் விழா நாட்கள்

மகாபலியை வரவேற்க வாசலில் போடும் பூக்களம்ன்னு சொல்ற அலங்காரம் பண்டைய நாட்களில் ஹஸ்த்தம் ( அத்தம்) நட்சத்திரம் வரும் முதல்நாளே ஆரம்பிக்குமாம். குடும்பத்திலே இருக்கும் ஆண்பிள்ளைகள் அத்தப்பூ என்னும் பூவை சேகரிச்சுக்கிட்டு வருவாங்களாம். அதைத்தான் பூக்களத்துலே முதல்லே வைக்கணும். அப்புறம் தினமும் வெவ்வேறு பூக்களைச் சேகரிச்சு அலங்கரிச்சுக்கிட்டே இருப்பாங்களாம்.இப்படியே 10 நாள் ஆனதும் அந்தக் கோலம் பிரமாண்டமாய் பெரூசா இருக்குமாம்.


ஓணத்தினத்தில் காலையிலே புது அரிசியை இடிச்சு மாவாக்கி இலையில் எழுதிய அடை, ஆவியில் புழுங்கிஅதைப் பாயாசம் செஞ்சு கடவுளுக்குப் படையல் வைப்பாங்க.


ஓணம் மஹாபலிச் சக்கரவர்த்தி...
மஹாபலிச் சக்கரவர்த்தி வேள்விகள் செய்ய ஆரம்பித்தான். அவன் வேள்வியில் வரும் அத்தனை பேருக்கும் தான, தருமங்கள் கொடுத்து வந்தான். அப்போது அவன் ஏற்கெனவே தேவர்களால் வெல்ல முடியாமல் இருக்கின்றான். தேவலோகத்தையும் ஆண்டு வருகின்றான். இவன் மேலே மேலே வேள்விகள் செய்து வந்தால் அவன் சக்தி இன்னும் அதிகம் ஆகிவிடுமே என நினைத்த தேவர்கள், இறைவனை வேண்ட, அவரும் ஏற்கெனவே தாம் காச்யபரின் மனைவி வயிற்றில் பிறந்திருப்பதாய்த் தெரிவித்திருந்தார். அந்தப் பிள்ளைக்குத் தக்க சமயம் வந்ததும் உபநயனம் செய்விக்கின்றார் காச்யபர். பிரம்மச்சாரியான அந்தப் பிள்ளை பிட்சை எடுக்கப் போகும் சமயம் மஹாபலியின் வேள்வியில் செய்யப் படும் தானங்கள் பற்றிக் கேள்விப்பட்டு அங்கே வருகின்றான் அந்தப் பிள்ளை.


கையிலே தாழங்குடை, காலிலே பாதரட்சைகள். திருவோட்டை ஏந்திக் கொண்டு, உலகுக்கே அன்னம் அளிப்பவன், உலகுக்கே பிட்சை போடுபவன், மஹாபலியிடம் வந்து பிச்சை கேட்கின்றான். "பவதி பிட்சாம் தேஹி!" என! அடடா, இப்போ தானே தான, தருமங்கள் முடிந்தது! இந்தப் பிள்ளை இப்போ வந்து கேட்கின்றதே! பதறினான் மஹாபலி, சின்னஞ்சிறு பிள்ளை ஏதேனும் கொடுத்தே ஆகவேண்டுமே?? "அப்பா, நீ யார்? உனக்கு என்ன வேண்டும்? தானங்கள் அனைத்தும் கொடுத்து முடிந்துவிட்டதே?" என்று மஹாபலி கேட்க, மாயக் கள்வன், சிரித்துக் கொண்டே, "மஹாபலிச் சக்கரவர்த்தியே, நான் காச்யபரின் மகன். எனக்கு வேறு ஒன்றும் வேண்டாம். என் காலால் அளந்த மூவடி மண்ணே போதும். அதைக் கொடுங்கள்." என்று சொல்ல, மஹாபலியும் அவ்வண்ணமே தந்தேன் எனத் தன் கையில் உள்ள கமண்டலத்தில் நீர் வார்த்துத் தானம் செய்ய எத்தனிக்கின்றான்.


அசுர குருவான சுக்ராசாரியார் பார்க்கின்றார். அவருக்குப் புரிகின்றது உலகாள்பவனே, வாமன வடிவத்தில் வந்திருக்கின்றான், என்றும், இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கின்றது என்றும். உடனேயே குலகுருவான அவர் மஹாபலியிடம் சொல்கின்றார், தானத்துக்கு ஒத்துக் கொள்ளாதே! இது அந்த மஹாவிஷ்ணுவின் தந்திரம், வந்திருப்பது கூட அவன் தான் என்று சந்தேகிக்கின்றேன். என்று சொல்கின்றார். மஹாபலியோ ஆஹா, அந்த சாட்சாத் மஹாவிஷ்ணுவே வந்தான் என்றால் நான் அதை மறுப்பதும் முறையாமோ?? தானம் கொடுத்தே தீருவேன் என்று சொல்லிவிட்டு, தன் கைக் கமண்டலத்தின் நீரால் அர்க்யம் அளித்துத் தானம் கொடுக்க முயல, சுக்ராசாரியார் ஒரு வண்டு உருவில் கமண்டலத்தின் வாயை அடைக்க, அவர் தந்திரம் புரிந்த வாமனன், வண்டை ஒரு சிறு தர்ப்பைப் புல்லால் குத்தித் தள்ள, தானம் வழங்கப் படுகின்றது. சிறுவன் அளக்க ஆரம்பிக்கின்றான். ஆனால்??? இது என்ன??? இவன் வாமனனா??? திரி விக்கிரமனா??? வளர்ந்து கொண்டே போகின்றானே???


ஓங்கி உலகளக்க ஆரம்பிக்கின்றான் திரி விக்கிரமன். ஆயிற்று ஒரு அடியால் இந்த பூமியையும், மறு அடியால் விண்ணையும் அளந்தாயிற்று. மூன்றடிக்கு இன்னொரு அடி குறையுதே?? மஹாபலி, இது என்ன?? மூன்றாவது அடியை எங்கே வைப்பேன்? என்று கேட்க, மஹாபலியோ, "தந்தேன் ஸ்வாமி!" என இரு கையையும் கூப்பிக் கொண்டு பணிவோடு, அவன் தாள் பணிய, அவன் தலையில் மூன்றாவது அடியை வைத்து ஒரு அழுத்து அழுத்திப் பாதாளத்துக்கு மஹாபலியை அனுப்புவதோடு அல்லாமல், அவன் பக்தியை மெச்சி அவனுக்கு முக்தியையும் கொடுக்கின்றார், உலகாள வந்த பரந்தாமன். அப்போது பரந்தாமனிடம் தான் நாட்டு மக்களிடம் பெரும் அன்பு வைத்திருப்பதால் வருடம் ஓர் முறை பாதாளத்தில் இருந்து நாட்டுக்கு வந்து மக்களைக் கண்டு, மகிழ சந்தர்ப்பம் கொடுக்குமாறு மகாபலி வேண்ட பரந்தாமனும் அப்படியே அருளுகின்றான். மேலும் பரந்தாமனின் திரு நட்சத்திரமும் திருவோணமே ஆகும். "திரு" என்ற அடைமொழியோடு கூடிய இரு நட்சத்திரங்களில் ஒன்று ஆடவல்லானின் திருநட்சத்திரம் ஆன "திரு" ஆதிரை என்றால், பாற்கடலில் பள்ளி கொண்ட எம்பெருமானின் திரு நட்சத்திரம் "திரு" ஓணம் ஆகும். அந்த நாள் இந்த நாள், இனிய நாள்! ஓணம் கொண்டாடும் அனைவருக்கும்
 
இனிய ஓணம் வாழ்த்துகள். ....
அரேபியா நாட்டுப் பழமொழிகள்...*அதிட்டம் உள்ளவனை நைல் நதியில் தள்ளினாலும்
அவன் தன்னடைய வாயில் ஒரு மீனோடு வெளி வருவான்.


*எனக்கு செருப்புக்கள் இல்லை என்று முணுமுணுத்தேன்
பாதங்களே இல்லாத நம்பிக்கையுள்ள மனிதனைச் சந்திக்கும்வரை.


*தன் மனைவியை மதிக்காதவன்
தன்னையே அவமதித்துக் கொள்கிறான்.


*தகுதிக்கு மீறி செலவு செய்பவன்
தன் உயிரை முடித்துக்கொள்ள கயிறு திரிக்கிறான்.


*ஓநாய்க்கு கருணை காட்டுவோர்
மறைமுகமாக ஆட்டுக்குட்டிக்கு தீங்கு செய்கிறார்கள்.


*தாயின் செல்லக் குழந்தைகள்
இறுதியில் வெண்ணெய் வெட்டும் வீரராகவே இருப்பர்.


*அறிவைத் தேடும் ஒருவருக்கு
தேவதைகள் தங்களுடைய சிறகை வளைத்துக் கொடுக்கின்றன.


*நண்பர்களைப் பற்றி நல்லது பேசு
விரோதிகளைப் பற்றி எதுவும் பேசாதே.


*குரைக்காத நாயும், கனைக்காத குதிரையும்,
கருத்தைச் சொல்லாத மனிதனும் உள்ள நாட்டில் வாழாதே.நன்றி-அலைகள்,.

வியாழன், 27 ஆகஸ்ட், 2009

பிரபலங்களின் சிறப்புப் பட்டப்பெயர்கள்..!

1. அமெரிக்க சுதந்திர போரின் வீரர் ஜார்ஜ் வாஷிங்டன்

2. விதியின் மனிதர் நெப்போலியன்

3. ஹரியானா எக்ஸ்பிரஸ் கபில்தேவ்

4. சாதுமுனிவர் திரு.வி.கல்யாணசுந்தரனார்.
5. ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார்
6. பண்டிதமனி மு,கதிரேசன் செட்டியார்


7.இந்தியாவின் சார்லி சாப்ளின் என்.எஸ்,கிருஷ்ணன்.
8. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
9. கருப்பு காந்தி காமராசர்

10. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்.

11. நவீன இந்தியாவின் தந்தை இராஜாராம் மோகன்ராய்


12. பறவைகளின் தோழர் சலீம்அலி
13. கிரிக்கெட்டின் தந்தை டபிள்யூ வி.கிரேஸ்

14. ரேடியம் லேடி மேரிகியூரி

15. உயிரியலின் தந்தை சார்லஸ் டர்வின்

16. இரும்பு வண்ணத்துப்பூச்சி இமெல்டா மார்கோஸ்

17. மக்களின் மனிதன் ஆண்ட்ரூ ஜாக்சன்

18. அமெரிக்காவின் தந்தை ஜார்ஜ் வாஷிங்டன்


19. இயற்பியலின் தந்தை சர்.ஐசக்.நியூட்டன்.

20. மாதர்குல மாணிக்கம் முத்துலட்சுமி

21. இந்திய எக்கு தொழிலின் தந்தை ஜே.ஆர்.டி.டாட்டா

22. அமைதி மனிதர் லால்பகதுர் சாஸ்திரி

23. இயற்கை கவிஞர் வில்லியம் வொர்ட்ஸ்வொர்த்

24. இந்தியாவின் நைட்டிங்கேல் சரோஜினி நாயுடு

25. திராவிட வித்யாபூசணம் உ.வே.சாமிநாதய்யர்

26. அணு விஞ்ஞானத்தின் தந்தை ஜான் டால்டன்

27. சாரணர் தந்தை லார்ட் பேடன்பவுல்

28. தமிழ் மாணவர் ஜி.யூ.போப்

29. கவிக்குயில் சரோஜினி நாயுடு

30. தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர்

31. வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன்

32. பஞ்சாப் கேசரி லாலா லஜபதி

33. இந்திய வானவியலின் தந்தை வராகமிகிரர்
34. பறக்கும் சீக்கியர் மில்காசிங்
35. ஒலிம்பிக் ராணி வில்மா ருடால்ப்
36. உருக்கு தொழிலின் தந்தை சர்.ஹென்றி பெசிமர்
37. சிலம்பு செல்வர் ம,பொ.சிவஞானம்
38. கணித மேததை ராமானுஜம்
39. அதிசய மனிதர் ஜி.டி.நாயுடு
40. குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா
41. ஈமெயிலின் தந்தை ரே. டாம் வின்சன்
42. மலை எலி வீரசிவாஜி
43. குருஜி கோல்வல்கர்
44. இந்திய அறிவியலின் தந்தை சர்.சி.வி.இராமன்
45. விஞ்ஞான மந்திரவாதி மைக்கேல் பாரடே
46. மைசூர்புலி திப்புசுல்தான்
47. கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி
48. தமிழ் நாடகத்தின் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள்
49. இந்தியாவின் சேக்ஸ்பியர் காளிதாசர்.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

இசைஞனி உதய‌ நாள் ஜுன் 2..


இளையராஜா ( Ilaiyaraajaa ) (பி. ஜூன் 2, 1943) என்ற பரவலாக அழைக்கப்படும் ராசய்யா, இந்தியாவின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவர். அன்னக்கிளி என்ற தமிழ்த் திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1970 களின் பிற்பகுதியில் அறிமுகமானார். இதுவரை 800 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.


தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பிண்ணனி இசையமைப்பிற்கும் பெயர் பெற்றவர்.

வாழ்க்கைச் சுருக்கம்.

இளையராஜாவின் இயற்பெயர் ராசய்யா. தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரம் ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை பெயர் ராமசாமி, தாயார் சின்னத்தாயம்மாள். பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் ஆகிய மூவரும் இவருடைய தமையர்களாவர். இவருடைய மனைவியின் பெயர் ஜீவா. இவருடைய பிள்ளைகள் கார்த்திகேயன், யுவன் ஷங்கர் மற்றும் பவதாரிணி.

இவருடைய தமையனார்கள் பாவலர் வரதராஜன், அமர் சிங் எனப்படும் கங்கை அமரன், இவருடைய பிள்ளைகள் கார்த்திகேயன் (கார்த்திக் ராஜா) , யுவன் ஷங்கர் (யுவன் சங்கர் ராஜா), பவதாரிணி ஆகிய ரும் இசையமைப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவயதிலேயே ஹார்மோனியம் வாசிப்பதிலும், கிட்டார் வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். 1961 இல் இருந்து 1968 வரை அவருடைய சகோதரர்கள் மூவருடனும் இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு நாடகக்குழுவோடு சென்று சுமார் இருபதாயிரம் கச்சேரிகளிலும் நாடகங்களிலும் பங்கு கொண்டார்.

1969 ஆம் ஆண்டு தன் 29ஆம் வயதில் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஆர்வத்தில் சென்னைக்கு வந்தார். சென்னையில் தன்ராஜ் என்பவரிடம் மேற்கத்திய பாணியில் பியானோ கருவியையும், கிதார் கருவியினையும் வாசிக்க கற்றுக்கொண்டார். பின்னர் லண்டனில் உள்ள டிரினிடி இசைக்கல்லூரியில் Classical guitar (Higher Local) தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றார்.

1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குன்றாமல் வழங்கினார். அன்னக்கிளி திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்து எஸ். ஜானகி பாடிய "மச்சானைப் பாத்தீங்களா.." என்ற பாடல் மிகப் பிரபலமானது. அதை தொடர்ந்து பதினாறு வயதினிலே, பொண்ணு ஊருக்கு புதுசு போன்ற படங்களில் கிராமிய மணம் கமழ இவர் இசையமைத்த பாடல்கள் பெரும் வரவேற்பினை பெற்றன.

நாட்டுப்புற இசை மட்டுமல்லாமல், கருநாடக செவ்விசை மெட்டுக்களில் இவர் அமைத்த பாடல்களாகிய, மோகன ராகத்தில் கண்ணன் ஒரு கைக்குழந்தை, ரீதி கௌளை ராகத்தில் சின்னக் கண்ணன் அழைக்கிறான் போன்றன இவருக்கு மேலும் புகழினை தேடித்தந்தன.

ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவில் இசையமைப்பவர்கள் "மேஸ்ட்ரோ" என்று அழைக்கப்படுகின்றனர். ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிரா, இளையராஜா இசையமைத்த சிம்பொனியினை இன்னும் வெளியிடவில்லை என்றாலும், இளையராஜா தமிழ் திரைப்படக் கலைஞர்களால் "மேஸ்ட்ரோ" என்று அழைக்கப்படுகின்றார்.

இந்திய திரைப்படங்களில் மேற்கத்திய பாரம்பரிய இசையை புகுத்தியவர்களில் இளையராஜாவுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.


* திரைப்படமல்லாத மற்ற இசையாக்கங்கள்

இளையராஜா, "பஞ்சமுகி" என்ற கர்னாடக செவ்வியலிசை ராகத்தினை உருவாக்கியுள்ளார்.

"How to name it" என்ற இசைத்தொகுப்பினை முதலில் வெளியிட்டார் இளையராஜா. இசை ரசிகர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகம் செய்தது இந்த இசைத்தொகுப்பு. இத்தொகுப்பினை இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் மற்றும் மேற்கத்திய இசையமைப்பாளரான ஜே.எஸ்.பாஹ் ஆகிய இருவருக்கும் காணிக்கையாக்கினார்.

"Nothing But Wind" என்ற இரண்டாம் இசைத்தொகுப்பினை புல்லாங்குழல் கலைஞர் ஹரி பிரசாத் சௌராஸியாவுடன் இணைந்து வெளியிட்டார்.

"India 24 Hours" என்ற இந்திய பண்பாட்டின் பல்வேறு வர்ணங்களை விவரிக்கும் ஆவண-குறும்படத்திற்கு பின்னணி இசையினை அமைத்தார். இதில் வலி, மகிழ்ச்சி, ஏக்கம், நம்பிக்கை, உற்சாகம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது சிறப்பாகும்.

1996 ஆம் ஆண்டு உலக அழகிப் போட்டியின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தார்.

"ராஜாவின் ரமண மாலை" என்ற இசைத் தொகுப்பினை எழுதி, இசையமைத்து வெளியிட்டார். இது ரமண மகரிஷிக்கு காணிக்கை செலுத்துவதாக அமைந்துள்ளது.

"இளையராஜாவின் கீதாஞ்சலி" என்ற பக்தி இசைத்தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.

ஆதி சங்கரர் எழுதிய "மீனாக்ஷி ஸ்தோத்திரம்" என்ற பக்திப்பாடலுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

"மூகாம்பிகை" என்ற பெயரில் கன்னட பக்தி இசைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.

மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்திற்கு, தெய்வீக அருளிசை வடிவில் இசையமைத்து வெளியிட்டுள்ளார்.


 சாதனைகள்

இளையராஜா, இதுவரை நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். எழுநூற்றியைம்பதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பின்னணி இசை கோர்த்துள்ளார்.

ஆசிய கண்டத்திலிருந்து ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ராவில் சிம்பொனிக்கு இசையமைத்த முதல் இசையமைப்பாளர் இளையராஜா. (அந்த சிம்பொனியை ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ரா இன்னும் வெளியடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது)

தமிழக அரசின் கலைமாமணி விருதினையும், 1988ஆம் ஆண்டு மத்திய பிரதேச அரசின் லதா மங்கேஷ்கர் விருதினையும், 1995ஆம் ஆண்டு கேரள அரசின் விருதினையும், இசையில் சாதனை புரிந்ததற்காக 1994ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைகழகத்தினாலும், 1996ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைகழகத்தினாலும் முனைவர் பட்டம் (டாக்டர் - Degree of Doctor of Letter) பெற்றவர், இளையராஜா.

இளையராஜா, இந்திய அரசின் இசைக்கான தேசிய விருதினை மூன்று முறைப்பெற்றுள்ளார். அவருக்கு விருதினைப் பெற்றுத் தந்த படங்கள் :

1985இல் - சாகர சங்கமம் (தெலுங்கு)

1987இல் - சிந்து பைரவி (தமிழ்)

1989இல் - ருத்ர வீணை (தெலுங்கு)

*இளையராஜா புகைப்படக்கலையிலும், இலக்கியத்திலும், ஆன்மீகத்திலும் ஆர்வம் கொண்டவர். இவர் எழுதிய புத்தகங்கள் :

சங்கீதக் கனவுகள் (ஐரோப்பா பயண குறிப்புகள்)

வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது (புதுக்கவிதைகள் தொகுப்பு)

வழித்துணை

துளி கடல்

ஞான கங்கா

பால் நிலாப்பாதை

உண்மைக்குத் திரை ஏது?

யாருக்கு யார் எழுதுவது?

என் நரம்பு வீணை

நாத வெளியினிலே (வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது, சங்கீதக் கனவுகள், வழித்துணை, இளையராஜாவின் சிந்தனைகள், துளி கடல் ஆகிய புத்தகங்களின் தொகுப்பு)

பள்ளி எழுச்சி பாவைப் பாடல்கள்

இளையராஜாவின் சிந்தனைகள் .
 
நன்றி -‍‍விக்கிப்பீடியா..

திங்கள், 24 ஆகஸ்ட், 2009

சிந்தனைக்கு... சில...

1. உலகை அறிந்தவன் வெட்கப்படமாட்டான்! தன்னை அறிந்தவன் அகம்பாவம் அடையமாட்டான்.

2. அருகில் இருக்கும்போது கோபுரங்கள்கூட உயரமாகத் தெரிவதில்லை. தூரத்திலிருக்கும்போதே பிரமாண்டமாகத் தெரிகின்றன.

3. நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை நீ உயிருள்ள போதே தேடி வைத்துக்கொள்.

4. ஒருவன் அரசனாக வாழலாம் - ஆனால் அவன் மனிதனாகத்தான் மரிக்கவேண்டும்.

5. படுக்கச்செல்வதற்கு முன்பாக கவலைகள் அனைத்தையும் செருப்போடு கழற்றி வைக்கவேண்டும்.


6. மனிதன் யாருடைய குறைகளை எண்ணிவிட முடியுமோ அவர் உண்மையில் உயர்ந்த மனிதர்.

மகிழ்ச்சி பொன்மொழிகள்:


"மகிழ்ச்சிக்கு வெற்றி திறவுகோலல்ல. மகிழ்ச்சியே வெற்றிக்குத் திறவுகோல். நீ செய்வதை நீ நேசித்தாயானால், நீ வெற்றியடைவாய்." - Albert Schweitzer


"உங்கள் விதி என்னவாயிருக்கும் என்று நானறியேன், ஆனால் ஒன்று நானறிவேன்: உங்களில் யார் சேவை செய்வது எப்படி என்று விழைந்து கண்டுபிடித்துள்ளீர்களோ, அவர்கள் தான் உண்மையில் மகிழ்ச்சியடைவீர்கள்." - Albert Schweitzer

"மகிழ்ச்சி என்பது நல்ல ஆரோக்கியமும் குறைந்த ஞாபக சக்தியையும்விட வேறொன்றுமில்லை." - Albert Schweitzer

"செய்வதற்குச் சில, நேசிப்பதற்குச் சில, மற்றும் எதிர்பார்ப்பதற்குச் சில, இவைகளே மகிழ்ச்சியின் உன்னத அத்தியாவசியத் தேவைகள்." - Allan K. Chalmers

"மகிழ்ச்சி: இதை நாம் அபூர்வமாக உணர்கிறோம். நான் அதை விலைக்கு வங்குவேன், யாசிப்பேன், திருடுவேன்,இரத்தம் சொட்டும் நாணயங்களால் விலை கொடுப்பேன் இந்த எல்லையற்ற நன்மைக்காக." - Amy Lowell

"நாமனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் குறிக்கோளுடன் வாழ்கிறோம்; நம் வாழ்க்கைகள் எல்லாம் வேறுபட்டவை, இருப்பினும் ஒன்றே." - Anne Frank

"மகிழ்ச்சி தன்நிறைவு பெற்றவருக்கு உரியது." - Aristotle

"செயல்கள் எப்போதும் மகிழ்ச்சியைக் கொண்டு வருவதில்லை, ஆனால் செயலில்லாமல் மகிழ்ச்சியில்லை." - Benjamin Disraeli

"நமது மனோபலத்தின் பரிபூரண உபயோகிப்பும் நாம் வாழும் உலகைப் பரிபூரணமாய் உணர்வதும்உண்மையிலேயே திருப்திதரும் மகிழ்ச்சியை அளிக்கின்றன." - Bertrand Russell

உன்னுடைய உழைப்பும் சொற்களும் உனக்கும் பிறர்க்கும் பயனுள்ளனவாயிருக்கையில் மகிழ்ச்சி வருகிறது. - Buddha

'வெற்றியை வெளியே தேடாதீர்கள்'
* நம்பிக்கையோடு வாழுங்கள்.

* நியாயமான தவறுகளை மறந்துவிடுங்கள்.

* வாழ்க்கையில் முன்னோக்கிப் போக வேண்டும்;

பின்னோக்கிப் பார்க்க வேண்டும்.

* என்னுடைய நம்பிக்கை என்னும் ஊற்று காயாமல் இருக்க வேண்டும் என்று கவனமாக இருக்கிறேன்.

* முள்ளை முள்ளால் எடுக்கலாம். ஆனால் ஒரு தவறை இன்னொரு தவறால் திருப்பிக் கொடுக்க வேண்டாம்.

* எதிரியாக இருந்தாலும் பசி தீருங்கள்.

* விழலாம், எழாமல் இருக்கக் கூடாது.

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

நட்பு மொழிகள்
ந‌ட்‌பி‌ல் இரு‌ந்துதா‌ன் காத‌ல் ‌பிற‌க்‌கிறது. ‌சில காத‌ல்களை‌த் த‌விர.

பு‌த்தக‌ங்க‌ள்தா‌ன் ந‌ம்முட‌ன் பேசு‌ம் மெளன ந‌ண்ப‌ர்க‌ள்.

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.

உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.

வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.

உரிமை கொண்டாடும் உறவை ‌விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.

உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.

பெருமை‌க்கார‌ன் கடவுளை இழ‌‌ப்பா‌ன், பொறாமை‌க் கார‌ன் ந‌ண்பனை இழ‌ப்பா‌ன், கோப‌க்கார‌ன் த‌ன்னையே இழ‌ப்பா‌ன்.

ந‌‌ண்பனு‌க்காக உ‌யிரை‌க் கொடு‌ப்பதை ‌விட, உ‌யிரை‌க் கொடு‌க்கு‌ம் அள‌வி‌ற்கு ந‌ண்ப‌ன் ‌கிடை‌ப்பதுதா‌ன் அ‌ரிது.

நா‌ன் உ‌ன் மு‌ன்னா‌ல் நட‌‌‌ந்து வ‌ழிகா‌ட்டியாக இரு‌க்க மா‌ட்டே‌ன், உ‌ன் ‌பி‌ன்னா‌ல் வ‌ந்து உ‌ன்னை‌க் க‌ண்கா‌ணி‌க்க மா‌ட்டே‌ன். உ‌ன் ப‌க்க‌த்‌தி‌ல் நட‌க்‌கிறே‌ன் ந‌ண்பா உ‌ன் துணையாக.

ந‌ண்ப‌ர்க‌ள் காதல‌ர்களாகலா‌ம். ஆனா‌ல் காதல‌ர்க‌ள் ந‌ண்ப‌ர்களாக‌க் கூடாது.

உ‌ன் ந‌ண்ப‌ர்களை அ‌றிமுக‌ப்படு‌த்‌தி வை. ‌உ‌‌ங்க‌ள் ந‌ட்பு ஒரு வளைய‌ம் ஆகு‌ம்.