புதன், 25 மே, 2011

மனோரம்மா பிறந்த நாள் மே 26 .

மனோரம்மா (பி. 26 மே 1943, மன்னார்குடி, தமிழ்நாடு, இந்தியா) தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார்.நகைச்சுவைக் கதாபாத்திரங்களின் நடிக்கும் இவர் 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்தவரென்பது குறிப்பிடத்தக்கது.இவர் தமிழ்த் திரையுலகினராலும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் ஆச்சி என அன்போடு அழைக்கப்படுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இவர் தென்னிந்தியாவின் ஐந்து முதல் அமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். கா. ந. அண்ணாதுரை, முத்துவேல் கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர ஜெயலலிதா ஜெயராம் மற்றும் ம. கோ. இராமச்சந்திரன் இவருடன் தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் என். டி. ராமராவ் தெலுங்கு படங்களில் இவருடன் நடித்திருக்கிறார்.

பெற்ற விருதுகள்

மனோரம்மா கலைப்பயணங்கள்