வெள்ளி, 29 ஜூலை, 2016

சர்வதேச தாய்ப்பால் தினம் ஆகஸ்ட் 01.


சர்வதேச தாய்ப்பால் தினம் ஆகஸ்ட் 01.
தாய்ப்பால் கலப்படமற்ற இயற்கை உணவு. குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துகளும் தாய்ப்பாலில் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியாகவும், குழந்தையின் மரணத்தை தடுக்கவும், மேலும் குழந்தையின் மூளை நன்கு வளர்ச்சியடையவும் உதவுகிறது. தாய்ப்பால் கொடுப்பது என்பது நாளுக்குநாள் குறைந்து வருகிறது. தாய்ப்பாலைக் குழந்தைகளுக்கு அவசியம் தர வேண்டும் என்பதை வலியுறுத்தவே இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

குழந்தையின் சீரான ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் தாய்ப்பாலே மிகச்சிறந்த உணவு. ஒரு உயிரின் அடிப்படைத் தேவையை உடலில் ஓடும் குருதி மூலம் நேரிடையாகக் கொடுக்கும் சிறப்பு பெண்ணினத்திற்கே உண்டு. ஆதலால்தான் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 ம் நாள் சர்வதேச தாய்ப்பால் தினம் அனுசரிக்கப்படுகிறது.

வளர்ந்து வரும் நாகரிக உலகில் தாய்ப்பால் கொடுப்பது என்பது நாளுக்கு நாள் குறைந்து வருவது கவலைக்குரியது. சில பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதால் தங்கள் அழகு கெட்டுவிடும் என நினைப்பது தவறான கருத்து என்பதுடன் மிகவும் வருந்தத்தக்கது.

தாயால் சேய்க்கு கிடைக்கும் வரப்பிரசாதம்

தாய்ப் பால் என்பது குழந்தைகளுக்கு இயற்கை கொடுத்த அற்புதமான வரம். பாலூட்டி இனத்தைச் சேர்ந்த எல்லா உயிரினங்களும் தங்கள் குழந்தைகளைப் பாலூட்டிப் பராமரிக்கின்றன. தாய்ப்பாலின் முக்கியத்துவத்தையும், மகத்துவத்தையும் ஒவ்வொரு இளம் தாய்மார்களுக்கு உணர்த்த வேண்டும். எத்தகைய சிரமங்கள் ஏற்பட்டாலும் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் "தாய்ப்பால் ஊட்டுவது பேரிடரிலும் இன்றியமையாதது - நீங்கள் தயாரா?' என்பதை இந்த ஆண்டு உலக தாய்ப்பால் வாரத்தின் கோஷமாக உலக சுகாதார நிறுவனம் (டபிள்யு.எச்.ஓ.) வரையறுத்துள்ளது.

பெண் உயிரினத்திக்கே உரிய தனித்துவம்

 பால் என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்த குட்டியீன்ற தாயின் (பெண் விலங்கின்) பால் சுரப்பிகளில் சுரக்கும் ஒரு சத்துள்ள திரவமாகும். இத்திரவம் பாலூட்டி விலங்குகளின் குட்டிகளுக்கு ஆரம்ப காலத்தில் உணவாக பயன்படுகிறது. குட்டிகள் மற்ற உணவுகளை உண்ணும் திறன் பெறும் வரை தாயின் பாலே முதன்மை உணவாகும். ஒரு குழந்தை பிறந்ததும் அக்குழந்தைக்கு தாயின் பாலை ஊட்டுவது இயற்கையானது. குறிப்பிட்ட காலம்வரை குழந்தைக்கு தாய்ப் பாலை ஊட்ட வேண்டிய கடமை தாய்க்குண்டு. இந்த நவீன இலக்ரோனிக் யுகத்தில் தாய்ப்பால் கொடுப்பது தொடர்பாக பல்வேறுபட்ட சிரம நிலைகள் கூறப்பட்டாலும்கூட,வளர்ச்சியடைந்த நாடுகளிலும் சரி, வளர்முக நாடுகளிலும் சரி தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும் எனும் நிலைப்பாட்டின் உறுதித்தன்மையில் மாத்திரம் மாற்றங்களே வரவில்லை. விஞ்ஞானம் வளர்ச்சிடைய வளர்ச்சியடைய தாய்ப்பாலின் முக்கியத்துவம் விஞ்ஞான ரீதியாகவும் உறுதிப்படுத்தப்பட்டே வருகின்றது. வேலைக்குச் செல்லும் தாயாக இருந்தால் தாய்ப்பாலூட்டுவது இன்று ஒரு பெரும் பிரச்சினையாக மாறி வருகின்றது.

இந்நிலையைக் கருத்திற் கொண்டு அபிவிருத்தியடைந்த நாடுகளிலும் சரி, அபிவிருத்தியடைந்துவரும் பெரும்பாலான நாடுகளிலும் சரி 'சிசு" பராமரிப்பைக் கருத்திற் கொண்டு பிரசவத்தின் பின்பு தாய்க்கு நீண்டகால விடுமுறை வழங்கப்படுகின்றது. அது தவிர, பாலூட்டும் காலம்வரை சில சலுகைகளும் வழங்கப்படுகின்றன. ஆனாலும், சில தாய்மார் குறிப்பாக தொழில் செய்யும் தாய்மார் இது விடயத்தில் ஓரளவுக்கு அசட்டைத்தனம் காட்டுவதும் தமது பிரசவ விடுமுறை முடிவதற்கு முன்பு குழந்தைக்கு வேறு ஏதாவது ஒரு பாலைப் பழக்கி விடவேண்டும் என்று ஆர்வம் காட்டுவதையும் காணமுடிகிறது. எத்தனையோ பெண்கள் குழந்தை இல்லாமையால் வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் குழந்தை பெறும் வரம் பெற்றவர்கள் அந்த பேற்றின் மகத்துவம் தெரியாமல் அதை அலட்சியப்படுத்துகின்றனர். எத்தகைய இடர்பாடுகள் ஏற்பட்டாலும் குழந்தைக்கு தாய்ப்பாலை ஊட்ட ஒரு தாய் தயாராக இருக்க வேண்டும் என்ற கருத்தினையே இவ்வாண்டுக்கான உலக தாய்ப்பால் வாரத்தின் தொனிப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளதன் ஊடாக இத்தகைய தாய்மாரின் மனநிலைகளும் போக்குகளும் கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக தோன்றுகின்றது. வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தங்களுக்கு கிடைக்கும் மருத்துவ விடுப்பில் முழுமையாக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதையே முக்கிய பணியாகக் கருத வேண்டும். குழந்தை அழும்போதெல்லாம் அதற்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அடிக்கடி பாலூட்டும்போது தான் போதுமான அளவு பால் சுரக்க வழி ஏற்படுகிறது. பேறு கால மருத்துவ விடுப்பு முடிந்து, குழந்தையை வீட்டில் விட்டு விட்டு மீண்டும் வேலைக்குச் செல்லும் நிலையிலும் தாய்ப்பால் கொடுக்க முடியும். காலையில் வேலைக்கு புறப்படும் முன்பு, எத்தனை முறை தாய்ப்பால் கொடுக்க முடியுமோ அத்தனை முறை கொடுக்கலாம்.

தொப்புள்கொடி உறவைத் தொடர்ந்து தாய்ப்பால்

கர்ப்பத்தில் தாய்க்கும் சேய்க்குமுள்ள தொப்புள்கொடி உறவைத் தொடர்ந்து தாய்ப்பால் ஊட்டுவதினூடாகவே தாய்க்கும், குழந்தைக்கும் உள்ள உறவு நெருக்கமாக்கப்படுவதாக பெரியவர்கள் கூறுவார்கள். இயற்கையின் படைப்புகளில், விந்தைகளில், நியதிகளில் தாய்ப்பால் ஊட்டுவதும் ஒன்று. உலகிலுள்ள ஏறத்தாழ 4500 வகையான பாலுட்டும் உயிரினங்களில் ஒன்றாக மனித இனமும் காணப்படுகின்றது. ஆனால், ஆறறிவு படைத்த மனித இனத்தில் மட்டுமே தாய்ப்பால் ஊட்டுவதில் பல்வேறு பிரச்சினைகள் உண்டாவது விந்தைக்குரியதே. பொதுவாக அந்தந்த உயிரினங்களுக்கு அதனதன் பாலே உணவாகிறது.

தாய்ப் பாலினால்  குழந்தைகளுக்குக் கிடைக்கும் நன்மைகள்

* தாய்ப்பால் கலப்படமற்ற இயற்கை உணவு

* குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துக்களும் தாய்ப்பாலில் கிடைக்கின்றன.

* தாய்ப்பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளது.

* குழந்தை அளப்பரிய பாசத்துடன் வளர்கிறது.

* குழந்தை மரணங்கள் தவிக்கப்படுகின்றன.

* குழந்தையின் மூளை நன்கு வளர்ச்சி அடைகிறது.


ஐயறிவு படைத்த ஜீவராசிகள் கூட தமது குட்டிகளுக்கு தமது பாலையே ஊட்டும். இது தவிர, பிற மிருகங்களின் பாலை ஊட்ட எத்தனிக்காது. இது இயற்கை. இந்த எல்லா உயிரினங்களிலும் நாம் மட்டுமே மற்ற விலங்குகளின் பாலை விலை கொடுத்து வாங்கிக் குடிக்கின்றோம். குறிப்பாக அந்தந்த இனத்தின் தேவைக்கேற்ப அந்தந்தப்பால் அமைந்துள்ளது என இயற்கை விதியினை மறந்து புறக்கணிக்கின்றோம். தாய்ப்பால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, ஒரு நாட்டிற்கே பொருளாதாரப் பொக்கிஷம். குழந்தைகளை நோய்களிலிருந்து தாய்ப்பால் காப்பதுடன் குடும்பச் செலவுகளையும் குறைக்கின்றது.. தாய்ப்பால் எளிதில், வெதுவெதுப்பான சூட்டில் தேவைப்படும் போதெல்லாம் குழந்தைக்குக் கிடைக்கக் கூடியது. கலப்படம் செய்ய முடியாதது. உயர்தரப் புரதம், கொழுப்பு, அமினோஅமிலங்கள், தாது உப்புக்கள் மற்றும் லேக்டோ பேசிலஸ் பைபிடஸ்பேக்டர் போன்ற தடுப்புப் பொருட்கள் இவை அனைத்தையும் கொண்ட குழந்தையின் முதல் மூன்று மாதங்களுக்கான ஒரு முழுமையான உணவு. தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும், சேய்க்கும் எண்ணற்ற பயன்கள் உள்ளன. தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் ஒரு நெருக்கமான பிணைப்பு ஏற்படுகிறது. தாய்க்கு மகிழ்ச்சியையும், ஆத்ம திருப்தியையும் தருகிறது. குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும், இயக்கத்திற்குத் தேவையான எல்லாச் சத்துக்களும் சரியான அளவில் தாய்ப்பாலில் மட்டுமே உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி உடையது

பிற பால்களை விட தாய்ப்பால் எளிதில் செரிமானமாகும் வல்லமைபடைத்தது. தாய்ப்பாலில் உள்ள "நோய் எதிர்க்கும் சக்தியை உடைய புரதப் பொருள்' (Immuno Globulin) குழந்தையை கொடிய நோய்கள், மார்புச் சளி (நிமோனியா), தோலில் ஏற்படும் ஒவ்வாமை (அலர்ஜிக்) போன்ற பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது. மருந்துகளே கிடைக்க வழியில்லாத குக்கிராமங்களில்கூட கிருமிகளினால் ஏற்படும் வாந்தி, பேதியை தாய்ப்பால் மட்டும் கொடுத்து குணப்படுத்தலாம். தாய்ப்பாலில் புரதம், கொழுப்புச் சத்து மற்றும் மூளை வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமில, கொழுப்பு அமிலங்கள் ஆகியவை இருப்பதால் குழந்தை சீராக உடல் வளர்ச்சி மற்றும் மன வளர்ச்சி பெற்று வளரும். தாய்ப்பால் அருந்தி வளரும் குழந்தைகளுக்கு பிற்காலத்தில் இரத்தநாள அடைப்பு நோய்கள் வரும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக ஆராய்ச்சிகளின் மூலம் தெரிய வந்துள்ளது. தாய்ப்பாலில் நோய்க் கிருமிகள் இருப்பதில்லை.. பிறவகை பால்களில் கிருமிகளை அகற்ற விசேஷ கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். தாய்ப்பால் சில நோய்களுக்கும் மருந்தெனவும் சித்த வைத்தியம் குறிப்பிடுகின்றது.


தாய்ப்பாலின் மகத்துவம்

அதாவது எல்லாவிதமான தோல் நோய்களுக்கும் சிறந்த மருந்து, ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட இடத்தில் சிறிதளவு தாய்ப்பாலை தடவி வந்தால் விரைவில் குணமாகி விடும், கண்களில் ஏற்படும் எல்லாவித எரிச்சல், உறுத்தல், கண் வலி நோய் போன்றவற்றிற்கு கண்களில் தாய்ப்பாலை ஒரு சொட்டு விட்டு உடனடி நிவாரணம் பெறலாம், இரத்த சோகை: இந்த நோயினால் மிகவும் உடல் வலுவின்றிக் காணப்படுவோர் நாள்தோறும் ஒரு சிறிய தேனீர் குவளை அளவு தாய்ப்பாலினைப் பருகி வர நல்ல பலன் தெரியும், கொசுக்கடி, எறும்பு மற்றும் பூச்சிக்கடியினால் குழந்தைகள் பாதிக்கப்பட்டால் பாதிக்கப்பட்ட இடத்தில் தாய்ப்பாலைத் தடவலாம், குழந்தைகளின் உடல் சூடு மற்றும் வயிற்று வலிகளுக்கு தாய்ப்பாலினை குழந்தைகளின் வயிறு, உச்சித் தலை மற்றும் உள்ளங்கால் பகுதிகளில் தடவி வரலாம், சளி, இருமலுக்கும் சிறந்த மருந்து, தொண்டை கரகரப்பு, மூக்கடைப்புக்கும் ஏற்றது, காது வலிக்கு காதில் ஒரு சொட்டு விட்டால் போதும்.... புட்டிப்பால் தருவதினால் குழந்தைக்கு அடிக்கடி நோய் வருவதுடன் பணமும் வீணாகச் செலவிடப்படுகிறது. புட்டிப் பாலினால் ஏற்படும் வாந்தி , பேதி மற்றும் காதில் சீழ் வடிவது போன்ற முக்கிய நோய்கள் புட்டிப் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. தாய்ப்பால் ஊட்டுவதினூடாக தனது அழகு சீர்குலைந்துவிடுமென சில தாய்மார் கருதுகின்றனர். ஆனால், விஞ்ஞான ரீதியான விளக்கப்படி தாய்ப்பால் ஊட்டுவதினுடாக தாயின் மனநலம் பாதுக்கப்படுகின்றது.

இங்கு தாயின் அழகு கூடுமே தவிர குறையாது;. குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்குப் பால் உறிஞ்சும் தன்மை மிக அதிகமாகவும் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும். குழந்தை பிறந்த அரை மணி நேரத்திற்குள் கண்டிப்பாக ஒவ்வொரு தாயும் தாய்ப்பால் கொடுத்திட வேண்டும். சிசேரியன் பிரசவம் எனில் மயக்க நிலையிலிருந்து தாய் வெளிவந்த உடன் பாலூட்டத் தொடங்கிவிடலாம். குழந்தை பிறந்த உடனே பாலூட்டத் தொடங்கினால்தான் பால் சுரப்பு அதிகமாக இருக்கும். அதுவும் குழந்தை பிறந்தவுடன் சுரக்கும் மஞ்சள் நிற - நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்த சீம்பாலை கட்டாயம் குழந்தைக்கு தாய் கொடுக்க வேண்டும். பிரசவம் ஆகிய முதல் மூன்று நாட்கள் இந்த 'கொலஸ்ட்ரம்" என்ற சீம்பால் - வெளிர் மஞ்சள் நிற பால் சுரக்கும். இவற்றில் நோய் எதிர்ப்பு அணுக்களும் புரதச் சத்தும் நிறைந்திருக்கும். பொதுவாக கிராமப்புறங்களில் அல்லது வயது முதிர்ந்தவர்களிடம் இந்த மஞ்சள் நிற சீம்பாலை குழந்தைக்குக் கொடுக்கக் கூடாது எனவும் அந்தப் பாலை பீய்ச்சி வெளியேற்றிவிட வேண்டும் என்றும் கூறுவர். உண்மையிலேயே இது மிகவும் தவறான கருத்தாகும். விஞ்ஞான விளக்கங்களின்படி இந்த சீம்பாலிலே குழந்தைக்கான நோய் எதிர்ப்பு சக்திகள் கூடவே காணப்படுகின்றது. பாலூட்டும் போது கடைசியில் வரும் பாலில் கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும். இது குழந்தைகளுக்கு அதிகப்படியான சக்தியை அளிக்கும். சில தாய்மாருக்கு தனது பிள்ளைக்கு தேவையான அளவு பால் சுரப்பதில்லை என்று ஒரு ஆதங்கம் காணப்படுவதுண்டு.

உறுதுணையாக இருப்பதாகவும் அண்மைய ஆய்வுகளிலிருந்து தெரியவருகிறது. கடந்த ஏழு வருடங்களில் மாத்திரம் இந்த நிலைமை சுமார் 25 சதவீதத்தினால் அதிகரித்திருப்பதாகவும், இதற்கு உலக சுகாதார ஸ்தாபனம், இலங்கை சுகாதார அமைச்சின் தாய்/சேய் நலன்பிரிவு உள்ளிட்ட பல அமைப்புக்களினதும் கடுமையான பிரச்சாரமே காரணம் என்றும் கருதப்படுகிறது. நாங்கள் வாழும் காலகட்டம் வர்த்தகமயமாக்கப்பட்ட ஒரு காலகட்டமாக காணப்படுகின்றது. எனவே, குழந்தைகள் பால்மா தொடர்பான பல்வேறுபட்ட விளம்பரங்கள் கவர்ச்சிகரமாக மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கைப் போன்ற சில நாடுகளில் இத்தகைய விளம்பரங்கள் தடைசெய்யப்பட்டுமுள்ளன. விளம்பரங்களால் கவரப்பட்டு தாய்ப்பாலுக்குப் பதிலாக வேறு பால்மா வகைகளை எமது தாய்மார் கொடுக்க விளைவதையும் காணுகின்றோம். உண்மையிலேயே இது பெரும் தவறாகும். இறைவன் எமக்கருளிய வளத்தினை எமது குழந்தைகளுக்கு கொடுத்து குழந்தைகளின் உரிமைகளையும் பேண வேண்டியது தாய்மாரின் கடமையாகும். அதாவது, தாய்ப்பால் ஒரு குழந்தையின் உரிமை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அவ்வாறு மறந்து செயற்படுவது இயற்கைக்கும் எமது குழந்தைக்கும் நாம் செய்யும் துரோகமாகும். தற்போது தமிழ்நாட்டில் ஆய்வு அறிக்கையானது கூறுவது யாதெனில் பிறந்த குழந்தைக்கு தாய்பால் கொடுக்கும் தாய்மார்கள் வெரும் 18.8% மட்டுமே உள்ளனர். இந்த நிலை மாறவேண்டும்.எதிர்கால குழந்தைகளை நோய் நொடியின்றி வாழ வழிவகை செய்வோம்…!
நன்றி -விவேகம் நியூஸ் .

சர்வதேச நட்பு தினம் ஜூலை - 30.


 சர்வதேச நட்பு தினம்  ஜூலை - 30.
சர்வதேச நட்பு தினம்
(International Day of Friendship)
அழகு, அறிவு, அந்தஸ்து, பணம், பதவி, ஜாதி, மதம், இனம், மொழி, நாடு போன்ற வேறுபாடுகளைக் கடந்து உள்ளத்தை மட்டுமே நேசிக்கும் உயரிய பண்பு கொண்டது நட்பு. இளைஞர்களே நாட்டின் தலைவர்கள் மற்றும் சமூகப் பணியாளர்கள். அவர்களை நட்பின்மூலம் இணைப்பதால் உலகளவில் சமாதானம், அமைதி நிலைபெறும் என்பதற்காக ஐ.நா. சபை ஏப்ரல் 2011இல் இத்தினத்தை அறிவித்தது.


 நட்பு, புனிதமானது;  விலை மதிப்பற்றது; ஈடுஇணையில்லாதது; பணம் கொடுத்துப் பெற முடியாதது; வலிமையானது;  உண்மையானது; ஒப்பிட முடியாதது;  இன்பத்தைத் தரக் கூடியது;  துன்பத்தைப் போக்கக் கூடியது.  தன்னம்பிக்கையைத் தருவது; சுயநலமற்றது.

எனக்கும் நல்ல நண்பர்களுண்டு.என் வளர்ச்சிக்கு துணை நிற்பவர்களே அவர்கள் தான்; என் வளர்ச்சியைக் கண்டு முதலில் பூரிப்பவர்களும் அவர்கள் தான்; நல்ல நண்பர்களைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்.

நல்ல நண்பர்கள் அனைவருக்கும், எனது சர்வதேச நண்பர்கள் தின  வாழ்த்துக்கள் உரித்தாகுக.


நட்பைப் பற்றி அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள்?

நட்புக்கு வலிமை சேர்க்கும் பொன்மொழிகள்

*ஒரு நண்பனைப் பெறுவதறகு ஒரே வழி, நீயும் நல்ல நண்பனாக இருப்பது தான். - எமர்சன்

*புது நண்பர்களைப் பெற முடியாதவன், வாழும் கலையை மறந்தவனாவான். -புல்லர்

*நட்பு பழக்கத்தாலேயே வளரும்; பழக்கத்தாலேயே நிலை பெறும். - கதே

*நல்ல மனிதர்களோடு நட்பு வைத்திரு; நல்ல மனிதர்களின் சாயலை அடைவாய். - வில்லியம் ஜேம்ஸ்

*நட்பு மகிழ்ச்சியை  இரட்டிப்பாக்குகின்றது; துயரத்தைப் பாதியாக்குகின்றது. - பிரான்சிஸ் பேகன்

*விசுவாசமான நண்பன் தெய்வத்தின் சாயலானவன். - கார்லைல்

நல்ல நட்பை இழப்பதை விட, கொஞ்சம் பணத்தை இழப்பது மேலானது. - காந்தியடிகள்

*நல்ல எண்ணமே சிறந்த நண்பன். - அன்னை திரேசா

*உன்னுடன் சிரித்து மகிழ்பவர்கள் எல்லோரும், உன் நண்பர்கள் அல்லர். - தோமஸ் ஏ.பெக்கட்

*பொறாமைக்காரன் நண்பனை இழக்கிறான்; கோபக்காரன் தன்னையே இழக்கிறான். - பீட்டர் வெல்ஸ்

*வெற்றி பல நண்பர்களைப் பெற்றுத்  தரும். -  வில்லியம் ஜேம்ஸ்

*வளமான காலத்தில் நண்பர்கள் நம்மைத் தெரிந்து கொள்வர்; வறுமைக் காலத்தில் நாம் நண்பர்களைத் தெரிந்து கொள்கின்றோம்.  -  இங்கர்சால்
   
*நிலையான புத்தி இல்லாதவனையும், போலியானவனையும், நன்றி மறப்பவனையும் நண்பனைக்கிக் கொள்ளாதே. - ஜெசி

மனிதர்கள் கடத்தலுக்கு எதிரான உலக தினம் ஜூலை-30


மனிதர்கள் கடத்தலுக்கு எதிரான உலக தினம்   ஜூலை-30.
ஆட்கடத்தலுக்கு எதிரான உலக நாள்
(World Day Against Trafficking in Persons)
ஆட்கடத்தல் என்பது மனித உரிமை மீறல் மற்றும் மிகக் கொடுமையானதாகும். உலகளவில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துக்கொண்டே இருக்கின்றன. இதனைத் தடுத்திட ஐ.நா.வின் 68ஆம் பொதுச்சபை, மூன்றாவது குழுவின் 46 ஆவது கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டு, 2014ஆம் ஆண்டுமுதல் இத்தினத்தை கொண்டாடுமாறு அறிவித்தது.

புதன், 27 ஜூலை, 2016

உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் ஜூலை 28.


உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் ஜூலை 28.

(World Nature Conservation Day) july 28.

உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அதனால் ஏற்படும் சவால்களை உலகம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆகவே இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்கிற நோக்கில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

---
இயற்கை – இது நமக்குக் கிடைத்த வரம், அள்ள அள்ளக் குறையாத அட்சயபாத்திரம் இயற்கைக்கு மனிதனைப் போன்று சுயநலமில்லை. அனைத்திலும் பொதுநலம் பார்க்கும் இயற்கையானது நமக்கு தூய காற்றையும், நீரையும் வழங்குவதோடு உணவு, உடை, உறைவிடத்திற்குத் தேவையான அத்தனை மூலப்பொருட்களையும் நமக்கு வழங்கி நம்மை வாழ்விக்கிறது. இவ்வாறு நமக்கு உதவி வரும் இயற்கையை நாம் காக்கிறோமா? என்றால் இல்லை.
இந்த விசயத்தில் கல்வி நிறுவனங்கள், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இயற்கையின் அவசியத்தை உணர்த்தும் சுற்றுச்சூழல் கல்விக்கு முக்கியத்துவம் தருகிறதா? இதனைச் சரியாகக் கற்றுக் கொடுக்கிறதா? என்றால் அது கேள்விக்குறிதான். தற்போது கணினியும், ஆடம்பரத்திற்குத் தேவையான உபகரணங்களும் பெருகி உள்ளதால் இதனைப் பயன்படுத்தும் போது சுற்றுச்சூழல் பாதிக்கப்படுமே என்று எத்தனை பேர் அறிந்து செயல்படுகிறோம் என்று தெரியவில்லை.
இயற்கை அழிந்தும், சுற்றுச்சூழல் நாளுக்கு நாள் பாதிப்படைந்தும் வருவதால் பாதிக்கப்படுவது நம்மைச் சார்ந்தவர்களும், எதிர்காலச் சந்ததியினருமே.
சுற்றுச்சூழல் கல்வி:
ஐம்பூதங்கள் எனப்படும் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் போன்றவை, உலகின் உயிர்கள் நிலைத்தும், நீடித்தும் வாழ்வதற்குத் தேவையான அனைத்தையும் உருவாக்கித் தருகிறது. 19ம் நூற்றாண்டிலும், இதற்குப் பிறகு நடந்த உலகப் போர்கள், தொழிற்புரட்சி, பொருளாதாரத்திலும் இதன் வளர்ச்சியிலும் ஏற்பட்ட பின்னடைவுகள் போன்ற நிகழ்வுகள், உலக நாடுகளை மிகவும் பாதிப்படையச் செய்தது. இதனால் அவர்கள் அனைவரும் காடுகள், கனிம வளங்கள், நீர், நிலம், காற்று என்று இயற்கை வளங்கள் ஒன்றையும் விடாமல் சுரண்டினர்.
இதன் பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை நெருக்கடிக்குள்ளாகி உள்ளன. தற்போது அமில மழை, பாலைவனமாதல், உலக வெப்பநிலை மாறுபாடு, ஓசோன் படலம் பாதிப்பு, கதிரியக்கம், உயிர்களின் அழிவு போன்றவை மனிதர்களுக்குப் பெரும் சோதனையாகிவிட்டன. மேற்சொன்ன நிலையை மாற்றவும், ஆய்வுகள் நடத்தி தீர்வு காணவும் எண்ணிய ஐ.நா. சபை 1992-ல் சுற்றுச்சூழல் வளர்ச்சி மாநாட்டை ஏற்பாடு செய்தது. இம்மாநாட்டில் உலக நாடுகள் அனைத்தும் கலந்து கொண்டது. இதில் சுற்றுச்சூழல் கல்வியை எல்லா நிலைகளிலும் கொண்டுவர வேண்டும்’ என்று உறுதி எடுக்கப்பட்டது. இதற்கு “அஜெண்டா-21” என்று பெயரிடப்பட்டது. இதன் மூலம் கல்வி, பொது விழிப்புணர்வுப் பயிற்சி போன்றவை சுற்றுச் சூழலை மேம்படுத்த வேண்டிய காரணிகளாகக் கொள்ள வேண்டும் என்று முடிவானது. மேலும் சுற்றுச்சூழல் கல்வி , கல்வி நிறுவனங்களில் கட்டாயமாக்கப்பட்டது.
சுற்றுச்சூழல் கல்வியின் அவசியம்:
நேற்றைய இயற்கை அழிவிலிருந்து உலகினை மீட்டெடுக்கவும், இன்றைய இயற்கை அழிவிலிருந்து உலகைப் பாதுகாக்கவும், நாளைய அல்லது எதிர்கால உலகில், இயற்கை வளங்களினால் மனித சமூகத்துக்குக் கிடைக்கும் நன்மைகளில் பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் சமாளிக்கவும், ஆக்கப்பூர்வமான சுற்றுச்சூழல் கல்வி தேவைப்படுகிறது. இக்கல்வியின் மூலம் இருக்கும் வளங்களைக் கொண்டு, முன்னேற்றத்திற்கான வழிவகைகளைச் சிந்திப்பதும், அவற்றைச் செயல்படுத்துவதுமே இதன் நோக்கமாகும்.
கணிதம், அறிவியல், சுற்றுச்சூழல் கல்வி என இம்மூன்றையும் ஒரே கற்றல் செயலாக இணைப்பதன் மூலம் கல்விப் பணியை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல இயலும். அன்றாட வாழ்க்கையில் இம்மூன்றும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுவதால் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் என அனைத்துத் தடத்திலும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க இம்முறை உதவும் என சுற்றுச்சூழல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். இதனை நடைமுறைப்படுத்தும் அம்சங்களையும் கல்வியில் புகுத்தியுள்ளனர். ஆகவேதான் சுற்றுச்சூழல் கல்வி மிகவும் அவசியமாகிறது.
சுற்றுச்சூழல் மாசும் இதனால் ஏற்படும் பாதிப்புகளும்:
சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கான காரணங்களை ஆராய்ந்தால், மக்கள் தொகைப் பெருக்கம், நவீன அறிவியல் வளர்ச்சியினால் குறுகிய கால வேளாண்மை, தொழிற்சாலைகள் மற்றும் நகரங்களின் உருவாக்கம், போக்குவரத்தினால் ஏற்படும் மாறுதல்கள் போன்றவற்றால் சுற்றுச்சூழல் முக்கிய அங்கங்களாகிய இயற்கை வளங்கள் (நிலம்,நீர்,காற்று) பாதிக்கப்பட்டன. இப்பாதிப்பாதிப்புக்குப் பெயர் தான் ‘சுற்றுச்சூழல் மாசு’ என்கிறோம். இன்றைக்கு உலக நாடுகள் அனைத்தும் சுற்றுச்சூழல் மாசிற்கு உள்ளாகியுள்ளனர்.
‘மாசு’ என்னும் சொல் இலத்தீன் மொழியில் ‘பொலுட்டோனியம்’ என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டு உருவானது. இச்சொல்லை முதலில் 1966-ம் ஆண்டு ‘ஹெனி’ என்பவரே கண்டறிந்து அறிமுகம் செய்தார்.
காற்று மாசு:
மாசு என்று கூறினாலே முதலில் நம் நினைவுக்கு வருவது காற்றில் கலக்கும் மாசு தான். ஏனெனேன்றால் நம் வாழ்வாதாரமே சுவாசத்தில்தான் 

உலகக் கல்லீரல் அழற்சி நாள் ஜூலை 28.


உலகக் கல்லீரல் அழற்சி நாள் ஜூலை  28.
உலகக் கல்லீரல் அழற்சி நாள் (World Hepatitis Day), ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது.கல்லீரல் அழற்சி நோய்களுக்கான அறிகுறிகள், தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த நாள் உலக சுகாதார அமைப்பால் (WHO) ஏற்படுத்தப்பட்டது.

உலகளவில் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் கடும் கல்லீரல் அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் பேர் இந்நோயின் தாக்கத்தால் மரணமடைகின்றனர்.

உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்ட எட்டு மக்கள் நல்வாழ்வுப் பரப்புரைகளில் உலகக் கல்லீரல் அழற்சி நாளும் ஒன்று. மற்ற ஏழு நாட்கள்: உலக சுகாதார நாள், உலக குருதிக் கொடையாளர் நாள், உலக நோய் எதிர்ப்புத் திறனூட்டல் வாரம், உலக காச நோய் நாள், உலக புகையிலை எதிர்ப்பு நாள், உலக மலேரியா நாள், உலக எயிட்சு நாள்.

பின்னணி
உலகளவில் கிட்டத்தட்ட 500 மில்லியன் மக்கள் கல்லீரல் அழற்சி பி அல்லது கல்லீரல் அழற்சி சி நோயுடன் வாழ்கின்றனர்.[4] சரியான கவனமும் சிகிச்சையும் அளிக்கப்படாத கல்லீரல் அழற்சி பி மற்றும் கல்லீரல் அழற்சி சி நோய்கள் முற்றி, கல்லீரல் இழைநார் வளர்ச்சி நோயாகி (சிர்ரோசிஸ்), கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் செயலிழப்பு போன்ற சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும்.

எயிட்சு நோயைக் கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்தே அனைவரும் அதிக கவனம் கொண்டுள்ள நிலையில், உண்மையில் எயிட்சின் பாதிப்பால் நேரும் மரணத்தை விட வேகமாக, ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் பேர் கல்லீரல் அழற்சி பி அல்லது கல்லீரல் அழற்சி சி நோய் பாதிப்பால் மரணமடைகின்றனர்.

கல்லீரல் அழற்சி நோய் விழிப்புணர்வு குறித்த உலகளவிலான நிகழ்வுகளில் ஜூலை 28 ஆம் நாளன்று, ஹெபடைடிஸ் குழுக்கள், நோயாளிகள், குரல்கொடுப்போர் எனப் பலரும் கலந்து கொள்கின்றனர். குறிப்பாக 2012 இல், இந்நோய் குறித்த அறியாமையை அடையாளம் காட்டும் விதமாக ,20 நாடுகளில் இருந்து 12,588 பேர் ”மூன்று புத்திசாலி குரங்குகள்” செய்கைகளைச் செய்து, உலக கின்னஸ் சாதனை நிகழ்த்தினர்.

வரலாறு
2012, அக்டோபர் மாதம் முதல் திகதியன்று முதன்முதலில், பன்னாட்டு கல்லீரல் அழற்சி சி விழிப்புணர்வு நாள் துவக்கம் நடந்தது. ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நோயால் பாதிக்கப்பட்ட்டோர் குழுக்களின் கூட்டு முயற்சியால் இது நடத்தப்பட்டது.[4] எனினும் நோயால் பாதிக்கப்பட்டோரின் வெவ்வேறு குழுக்கள் இந்நாளை வெவ்வேறு திகதிகளில் அனுசரித்தனர். ஒருங்கிணைக்கும் முயற்சியாக, உலக ஹெபாடைடிஸ் கூட்டணி, நோய் பாதிக்கப்பட்டோர் குழுக்களுடன் இணைந்து, 2008 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதியை முதல் உலகக் கல்லீரல் அழற்சி நாளாக அறிவித்தது.

2010 ஆம் ஆண்டு, மே மாதம் நடந்த 63வது உலக நல்வாழ்வு கூட்டத்தில் நிறைவேறிய தீர்மானத்தைத் தொடர்ந்து, உலகக் கல்லீரல் அழற்சி நாள் உலகளவில் முக்கியம் வாய்ந்ததானது. தேசிய, பன்னாட்டு அளவிலான விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்வதை முதன்மை நோக்காகக் கொண்டதாக இந்நாள் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஹெபடைடிஸ் பி நச்சுயிரியைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசுபெற்ற அறிவியலாளர் பாருச் சாமியெல் பிளம்பெக்கை (Baruch Samuel Blumberg ) நினைவுகூரும் விதமாக, அவர் பிறந்த நாளான ஜூலை 28 க்கு இந்நாள் அனுசரிக்கப்படும் திகதி மாற்றப்பட்டது.

தற்பொழுது நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் உலகக் கல்லீரல் அழற்சி நாள் அனுசரிக்கப்படுகிறது. இலவசமாக நோய் கண்டறிதல், பதாகை பரப்புரைகள், செயற்விளக்கங்கள், சொல்லாடல் நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், தடுப்பூசி முகாம்கள் போன்ற பல நிகழ்வுகள் இந்நாளில் மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார அமைப்பு ஆண்டறிக்கையை வெளியிடுகிறது.

கருப்பொருட்கள்
உலகக் கல்லீரல் நாள் கீழ்வரும் செயற்பாடுகளில் கவனம் செலுத்துவதற்கான வாய்ப்புகளைத் தருகிறது:

பல்வேறு விதமான கல்லீரல் அழற்சி நோய்கள் மற்றும் அவை பரவும் விதங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரித்தல்;
தடுப்பைப் பலப்படுத்தல், நோய் கண்டறிதல், ஹெபடைடிஸ் நச்சுயிரியையும் அது தொடர்பான நோய்களையும் கட்டுப்படுத்தல்;
ஹெபடைடிஸ் பி தடுப்பூசி போடுதல், தேசிய தடுப்பாற்றல் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை ஒருங்கிணைத்தல்
உலகளவில் ஹபடைடிசுக்கான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தல்.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருள் முன்னிறுத்தப்படுகிறது:

2016: ஹெபடைடிசை வருமுன் காக்க: அது உன்னைப் பொறுத்ததே
2015: ஹெபடைடிஸ் நச்சுயிரி தடுப்பு: இப்பொழுதே செயற்படு.
2014: ஹெபடைடிஸ்: மீண்டும் யோசி.
2013: சத்தமில்லாமல் கொல்லும் இந்நோயைத் தடுக்க மேலதிகச் செயற்பாடு தேவை.
2012: நீ நினைப்பதைவிட அது அருகிலுள்ளது.
2011: ஹெபடைடிஸ் எங்கும், எவரையும் தாக்கும். தெரிந்து கொள். அதனை எதிர்கொள்.

 கல்லீரலைக் காப்போம்..
இதயம், மூளையைப் போலவே முக்கியமான இன்னொரு உடல் உள் உறுப்பு கல்லீரல். ஆனால் இதயம், மூளை ஆகிய உறுப்புகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம், கல்லீரலுக்குக் கொடுக்கப்படுவதில்லை. உடலின் ரத்தம் முழுவதும் கல்லீரல் வழியே தினமும் பல முறை கடந்து செல்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட பணிகளைக் கல்லீரல் செய்கிறது. ஆனால், குடிப் பழக்கம், தவறான உணவு பழக்கம், வாழ்க்கை முறை மாற்றம் ஆகியவற்றின் காரணமாகக் கல்லீரலைப் பல வகைகளில் பாதிப்புக்கு உள்ளாக்குகிறோம்.

இன்றைக்கு உலக அளவில் மனிதர்களின் இறப்புக்கு மூன்றாவது முக்கிய காரணமாக இருப்பது கல்லீரல் கோளாறுகள்தான். உலகில் ஒவ்வோர் ஆண்டும் 15 லட்சம் பேர் கல்லீரல் பாதிப்பு காரணமாக உயிரிழப்பதாக, உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது. சிக்கல் என்னவென்றால் கல்லீரலில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், அது உடனே தெரிய வராது. பிரச்சினை தீவிரமடைந்த பிறகே அறிகுறிகள் தெரியவரும். அதனால் கல்லீரல் நோய்களை லேசாக எடுத்துக்கொண்டால், நமக்குத்தான் ஆபத்து.

ஹெப்படைட்டிஸ் என்றால்

கல்லீரலைப் பாதிக்கும் வைரஸ் கிருமிகளை ஹெப்படைட்டிஸ் என அழைக்கிறார்கள். ஹெப்படைட்டிஸ் கிருமிகளில் ஏ, பி, சி, டி, இ எனப் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிரச்சினையை ஏற்படுத்தினாலும், அனைத்துமே கல்லீரலைப் பாதிக்கும் வைரஸ் கிருமிகளே. பொதுவாக வைரஸ் கிருமிகளால் கல்லீரல் பாதிக்கப்பட்டால், கல்லீரல் அழற்சி அல்லது வீக்கம் உண்டாகும். கல்லீரல் செல்கள் அழற்சி அடைவதாலேயே ஹெப்படைட்டிஸ் வைரஸ் கிருமி தொற்றவும் முடிகிறது.

இன்றைக்கு உலகில் ஹெப்படைட்டிஸ் பி, ஹெப்படைட்டிஸ் சி வைரஸ் பாதிப்பால் 50 கோடிப் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஹெப்படைட்டிஸ் பி, சியை கவனிக்காமல் விட்டுவிட்டால் சிரோசிஸ் (கல்லீரல் இழைநார் வளர்ச்சி நோய்), கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் செயலிழப்பு போன்றவை ஏற்படலாம்.

கடுமையான வகை

மருத்துவத்தில் கல்லீரல் அழற்சியைக் கடுமையான வகை, நீடித்த கடுமையான வகை என்று இரண்டு பிரிவாக அழைக்கிறார்கள். கடுமையான வகை கல்லீரல் அழற்சி என்று கண்டறியப்பட்டால் கல்லீரல் உறுப்பு மாற்றம் செய்ய வேண்டிய நிலைகூட வரலாம். மஞ்சள் காமாலை நோய்கூட கல்லீரல் கடுமையாக பாதிக்கப்படும்போதே வருகிறது. காய்ச்சல், உடல் சோர்வு, தசை மற்றும் மூட்டு வலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைவலி, பசியின்மை, புகைப்பிடிக்க வெறுப்பு, அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது, கண்கள், தோல் மஞ்சள் நிறமடைதல் (மஞ்சள் காமாலை), வயிற்று வலி ஆகியவை இதற்கு அறிகுறிகள்.

நீடித்த கடுமையான வகை

நீடித்த கடுமையான வகையில் பலருக்கும் ஹெப்படைட்டிஸ் இருப்பதே தெரியாது. கல்லீரல் சேதமடைந்துள்ளதைப் பொறுத்து, இந்த வகையில் நோயின் தீவிரம் வெளியே தெரியும். மஞ்சள் காமாலைக்கான அறிகுறிகளுடன் வயிறு உப்பி இருப்பது, எடை குறைதல், ரத்தக் கசிவு, முகப்பரு, அளவுக்கு அதிகமாக மாதவிடாய் நீள்வது, சிறுநீரக அழற்சி, வீக்கம் ஆகியவை இந்த வகைக்கான அறிகுறிகள். பொதுவான அறிகுறியாக ஜீரணப் பிரச்சினையும் ஏற்படலாம்.

காரணம்

கல்லீரல் அழற்சி எப்படி ஏற்படுகிறது? இதற்குப் பல காரணங்கள் உள்ளன. நோய்த் தொற்றுகள், சில மருந்துகள், நச்சுப் பொருட்கள், குறிப்பாக குடிப் பழக்கம், கல்லீரல் புற்றுநோய் காரணமாகக் கல்லீரலில் ஹெப்படைட்டிஸ் வைரஸ் கிருமிகள் தொற்றிவிடுதல் போன்றவை அவற்றில் சில. இவற்றில் ‘சிரோசிஸ்’ எனும் நோய்தான் , கல்லீரல் நோய்களின் கடைசி நிலை. இதற்கு மிகவும் முக்கியக் காரணம் மது அருந்துவது.

தடுப்பு முறைகள்

சீரான உணவு முறை, உடற்பயிற்சி, உரிய ஓய்வு ஆகியவையே கல்லீரலை ஆரோக்கியமாக வைப்பதற்கு மட்டுமல்லாமல், ஆரோக்கிய வாழ்வுக்கும் அடிப்படை. ஹெப்படைட்டிஸ் ஏ, ஹெப்படைட்டிஸ் பி வராமல் தடுக்கத் தடுப்பூசிகள் போட்டுக்கொண்டால் கல்லீரல் பாதிப்புக்கு உள்ளாகாமல் தடுக்கலாம். மது அருந்துவது கல்லீரலைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதால் குடிப் பழக்கத்தை முற்றிலும் கைவிட வேண்டும். கல்லீரலைப் பாதிக்காத மருந்து, மாத்திரைகளை மட்டுமே பொதுவாக எடுத்துக்கொள்ள வேண்டும். எந்த மருந்தையும் மருத்துவர் அறிவுரையின்றி நீண்ட நாட்களுக்குச் சாப்பிடக் கூடாது. கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் ரத்தம், உறுப்பு, திசுக்கள், விந்து ஆகிய வற்றைத் தானமாக அளிக்கக் கூடாது.

என்ன செய்யலாம்?

• கல்லீரல் அழற்சி உள்ளவர்களுக்குச் சைவ உணவே சிறந்தது.

• திராட்சை ஜூஸ், கேரட் ஜூஸ் ஆகியவற்றைத் தினசரி குடிப்பதன் மூலம் சிறுநீர் எளிதாகப் பிரியும். மலம் இளகும்.

• எலுமிச்சை சாறு சேர்த்த நீரைக் குடித்தால் கல்லீரலின் செல்கள் பலமடையும். இது மஞ்சள் காமாலைக்கும் நல்லது.

• பூண்டைத் தினசரி சமையலில் சேர்த்துக்கொள்வது நல்லது. சீரகப் பொடி கலந்த மோர் பருகினால் ஜீரணம் மேம்படும்.

• கல்லீரல் கோளாறு உள்ளவர்களும், கல்லீரல் நோய் வராமல் தடுத்துக்கொள்ள நினைப்பவர்களும் சமையல் எண்ணெயை மிகக் குறைவாகப் பயன்படுத்துவது நல்லது.

நன்றி -விக்கிபீடியா ,தி இந்து தமிழ் 

செவ்வாய், 26 ஜூலை, 2016

உலக புலிகள் தினம் ஜூலை 29


 உலக புலிகள் தினம் ஜூலை 29 

புலிகளை பாதுகாக்க வேண்டிய தன் அவசியத்தை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்தும் வகையில், உலகம் முழுவதும் ஜுலை 29-ம் தேதி சர்வதேச புலிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ‘புலிகளை பாதுகாத்தால், அணைகள், ஆறு களுக்கு நீர்வரத்து அதிகரிக்கும். மழையளவு அதிகரிக்கும்’ என வன அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவின் தேசிய விலங்கு புலி. உலகில் முன்பு 8 வகையான புலிகள் இருந்துள்ளன. அவற்றில் தற்போது எஞ்சியவை 5 இனங்கள் மட்டுமே. இந்த இனங்களில் தற்போது 4 ஆயிரத்து 600 முதல் 7 ஆயிரத்து 200 புலிகள் மட்டுமே உலக காடுகளில் உள்ளன.

இந்தியாவில் உள்ள புலிகள் இனம், ‘ராயல் பெங்கால் டைகர்’ என அழைக்கப்படுகிறது. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை 40 ஆயிரமாக இருந்தது. அதன்பின், புலிகள் வாழ்விடத்தை அழித்து அவற்றை வேட்டையாடியதால் புலிகள் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துவிட்டது.

சர்வதேச அளவில் மொத்த புலிகளின் எண்ணிக்கையில், இந்திய இனம் 60 சதவீதம் உள்ளது. இந்திய இன புலிகள், இந்தியா, நேபாளம், பூடான் மற்றும் வங்கதேசத்தில் காணப்படுகின்றன. இதில் இந்திய காடுகளில் மட்டுமே 70 சதவீதம் புலிகள் காணப்படுகின்றன.

‘புலிகளை பாதுகாத்தால், நீர் வளத்தைப் பெருக்கலாம். அதன்மூலம், விவ சாயத்தையும், குடிநீர் ஆதாரத்தை யும் வளப்படுத்தி நாட்டை வளமாக் கலாம்’ என வன ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முண்டந்துறை புலிகள் காப்பகம்

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் ‘தி இந்து’விடம் கூறிய தாவது: 1972-ம் ஆண்டு, இந்திய காடுகளில் வாழும் புலிகளின் வாழ்விடங்களை காப்பகங்களாக அறிவித்து புலிகள் பாதுகாக்கப் படுகின்றன. இந்த வகையில், தற்போது இந்தியாவில் 40 புலிகள் காப்பகங்கள் உள்ளன.

இவற்றில் தமிழகத்தில் உள்ள களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகங்கள் முக்கிய மானவை. 1988-ம் ஆண்டு இந்தியாவின் 17-வது புலிகள் காப்பகமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அறிவிக்கப்பட்டது.

வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி, இந்த புலிகள் காப்பகத்தில்தான் உருவாகிறது. இதுதவிர, மணிமுத்தாறு, சேர்வலாறு, ராமநதி, கடனா நதிகளும் இந்த காப்பகத்தில்தான் உருவாகின்றன.

திருநெல்வேலி மாவட்டத்தின் ஒட்டுமொத்த விவசாயமும் குடிநீர் ஆதாரமும் இந்த ஆறுகளை நம்பியே அமைந்துள்ளன. தாமிரபரணி ஆறு, கடந்த 1970-80ஆம் ஆண்டு காலகட்டத்தில் 4 முறை தண்ணீரின்றி வறண்டது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், இந்த புலிகள் காப்பகத்தை ஒட்டி வசிக்கும் மக்களுடைய வாழ்வாதாரம், அனைத்தும் இந்த காப்பகத்தை சார்ந்தே இருந்ததுதான்.

நீர்வளம் அதிகரிப்பு

தினமும் 3 ஆயிரத்து 215 தலைச்சுமை விறகுகளை, இந்த புலிகள் காப்பகத்தில் இருந்து மக்கள் எடுத்துச் சென்றனர். அது மட்டும் இல்லாது, சுமார் 22 ஆயிரம் கால்நடைகளை மக்கள் தினமும் இந்த காப்பகத்துக்குள் அழைத்து வந்து மேய்ச்சலுக்கு விடுகின்றனர்.

இவை தவிர மறைமுகமாக மரம் வெட்டுதல், வேட்டையாடுதல், போன்ற சம் பவங்களிலும் ஈடுபட்டனர். 1988-ம் ஆண்டில் புலிகள் காப்பகம் ஆரம்பிக்கப்பட்ட பின்பு, உலக வங்கி மூலம் சூழல் மேம்பாட்டுத் திட்டம் 1995-ம் ஆண்டில் இந்த காப்பகத்தில் தொடங்கப்பட்டது.

கிராம மக்கள் காட்டினை நம்பி வாழும் மக்களுக்கு வனத்துறை மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கி கொடுக்கப்பட்டன. அதனால், இப்பகுதி மக்கள் புலிகள் காப்பகத்தை சார்ந்து வாழும் வாழ்க்கை முறை மாறி அவர்களுடைய வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைந்தது. இத்திட் டம் செயல்பாட்டுக்கு வந்த கடந்த 20 ஆண்டுகளில் இங்கு உருவா கும் நதிகளின் நீர் வளம் அதிகரித் துள்ளது.

பாதுகாப்பது கடமை

இதற்குச் சான்றாக இப்புலிகள் காப்பகத்தில் உள்ள கரையாறு அணையை எடுத்துக் கொள்ளலாம். இந்த அணையில் 1946-ம் ஆண்டில் இருந்து 1990-ம் ஆண்டு வரை அணைக்கு தண்ணீர் வரத்து ஆண்டுக்கு 13 ஆயிரம் கனஅடியாக இருந்து வந்துள்ளது. ஆனால், புலிகள் காப்பகம் தோற்றுவிக்கப்பட்ட பிறகு, அதாவது 1990-ஆம் ஆண்டுக்கு பின்பு, கரையாறு அணைக்கு வந்த சராசரி நீர்வரத்து (1990 முதல் 2010) 26 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

அதேபோன்ற சேர்வலாறு அணைப் பகுதியில் 1990 முதல் 2000-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பெய்த ஆண்டு சராசரி மழையளவு 654 மில்லி மீட்டர் ஆகும். ஆனால், 2000 முதல் 2010 வரையிலான பத்தாண்டு கால சராசரி மழையளவு 1183.5 மி.மீ.

எனவே, இப்புலிகள் காப்பகம் ஆரம்பிக்கப்பட்ட 1988-ஆம் ஆண் டுக்கு பின்னர்தான், இங்கு உருவா கும் தாமிரபரணி நதியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் பாய்ந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், இந்த புலிகள் காப்பகம் தான். ஆகவே, புலிகள் மற்றும் அது சார்ந்த வாழ்விடங்களைப் பாதுகாத்தால், நீர் வளத்தை பெருக்கலாம். வறட்சியை தவிர்க்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

உலகில் இந்தியா, நேபாளம், வங்கதேசம், சீனா உள்ளிட்ட 13 ஆசிய நாடுகளின் காடுகளில் புலிகள் உயிர்வாழ்கின்றன. கடந்த 1900ம் ஆண்டில், உலகில் லட்சம் புலிகள் இருந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

19ம் நூற்றாண்டில், இந்தியாவில் 37 ஆயிரம் புலிகள் இருந்ததாகவும், 1969ல், புலிகள் எண்ணிக்கை 2,500 ஆக குறைந்துவிட்டதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, புலிகள் கணக்கெடுப்பு நடக்கிறது. இதன்படி 2011ம் ஆண்டில், 1706 புலிகள் உள்ளதாக தெரியவந்தது. கடந்த 2006ல் இருந்த எண்ணிக்கையைவிட 296 புலிகள் அதிகமாகியுள்ளன.

வங்கப்புலி, மலேயப்புலி, சுமத்ரா (இந்தோனேசியா) புலி, சைபீரியன் புலி, தென் சீனப்புலி என, பல வகை புலிகள் உள்ளன. புலியின் மீதுள்ள கோடுகள் ஒவ்வொன்றுக்கும் வித்தியாசப்படும். அதன் எலும்பு, பற்கள், நகம், தோல் என அனைத்து உறுப்புகளும் மருத்துவ குணம் கொண்டவையாக கருதப்படுகிறது.

சீனாவில், இவற்றைக் கொண்டு நாட்டு மருந்தும் தயாரிக்கின்றனர். மத்திய அரசு 1970ல், புலி வேட்டைக்கு தடை விதித்து சட்டம் இயற்றியது. இந்தியாவில், புலிகளுக்கான முதல் சரணாலயம், உத்தரப்பிரதேசம் நைனிடால் மாவட்டத்தில், 1973ம் ஆண்டு, ஏப்.,1ல் துவக்கப்பட்டது. இந்த ஆண்டு, மார்ச் 15ல், சத்தியமங்கலம் வனப்பகுதி, புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில், மொத்தம் 43 சரணாலயங்கள் உள்ளன.

உலகளவில் கடந்த நூறு ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையில் 97 சதவீதம் அழிந்து விட்டன. அதாவது ஒரு லட்சம் புலிகளில், தற்போது வெறும் 3,200 புலிகள் மட்டுமே வாழ்கின்றன. உலகில் புலிகளின் இயற்கை வாழ்விடங்களில், 93 சதவீதம் அழிக்கப்பட்டு, அது விவசாய நிலங்களாகவும், குடியிருப்புகளாகவும் மாறி விட்டது.

புலிகள் மற்றும் யானைகளுக்கு சர்வதேச சந்தையில் நல்ல மதிப்பினால், பல ஆண்டுகளாக மனிதர்கள் புலிகளை சட்ட விரோதமாக வேட்டையாடி வந்தனர். இதன் காரணமாக புலிகள் எண்ணிக்கை குறைந்தது. மேலும் காடுகளில் ஏற்படும் தீ விபத்து, காட்டாற்று வெள்ளம் காரணமாகவும் புலிகள் அழிகின்றன.

உலகிலேயே இந்திய வங்கதேச எல்லையில் உள்ள சுந்தரவனக்காடுளில் தான், புலிகள் அதிகளவில் வாழ்கின்றன. இவ்வகை புலிகள் பெங்காலி புலிகள் என அழைக்கப்படுகின்றன.

இருப்பினும் இப்பகுதியில் வெப்பமயமாதல் காரணமாக கடல் நீர்மட்டம் உயரும் ஆபத்து உள்ளதால், இங்கு வாழும் புலிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

நன்றி- தி இந்து தமிழ் ,ப்ரு நியூஸ் 

இந்திய பறவையியல் வல்லுநர் சலீம் அலி நினைவு தினம் ஜூலை 27.


இந்திய பறவையியல் வல்லுநர்  சலீம் அலி நினைவு தினம் ஜூலை 27.
 சலீம் அலி (நவம்பர் 12, 1896 - ஜூலை 27, 1987) உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுநர் மற்றும் இயற்கையியல் அறிஞர் ஆவார். சலீம் அலியின் முழுப்பெயர் சலீம் மொய்ஜுதீன் அப்துல் அலி என்பதாகும்.இவர் இந்தியாவில் முதன்முதலில்பறவைகளைப் பற்றிய முழுமையான தரவுகளைத் துவக்கியவர். இவர் பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் (Bombay Natural History Society) புரவலராக (patron) விளங்கியவர். பறவைகளின் வாழ்க்கையைப் பற்றியும், பழக்க வழக்கங்கள் குறித்தும் அவர் வெளியிட்ட கட்டுரைகளும், நூல்களும் உலகப் புகழ் வாய்ந்தவை.

சலீம் அலி பறவைகளின் நண்பராகவும், பாதுகாவலராகவும் விளங்கியதோடு மட்டுமன்றி, இயற்கைப் பாதுகாப்பிலும் பெரும் நாட்டம் கொண்டவர்; பறவைகளின் நல்வாழ்வும், பாதுகாப்பும், இயற்கைப் பாதுகாப்போடு பின்னிப்பிணைந்தவை என்ற சூழியல்சார்ந்த கருத்தில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார்.

“இந்திய, பாகிஸ்தான் நாட்டுப் பறவைகளின் கையேடு (Handbook of the Birds of India and Pakistan) மற்றும் தன்வரலாற்று நூலான ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி (The Fall of Sparrow) ஆகிய நூல்கள் சலீம் அலியின் முக்கிய நூல்களாகும்.

இளமைப் பருவமும் பறவை நோக்கலும்
1876 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் நாள் அன்றைய பம்பாய் மாநிலத்தில் கேத்வாடி (Khethwadi) என்ற ஊரில் சலீம் அலி பிறந்தார். தன் பள்ளிப் பருவத்திலிருந்தே சலீம் அலி ஒரு வேட்டை பிரியர். பறவைகள் மீது சலீம் அலியின் ஆர்வம் திரும்பியதற்கு, அவரது இளமையில் நடைபெற்ற ஒரு சிறு நிகழ்ச்சியே காரணம். இளம் வயதில் அவர் ஒரு சின்னஞ்சிறு சிட்டுக் குருவியை சுட, அது இறந்து வீழ்ந்தது; இறந்துபோன அக்குருவியின் கழுத்தில் திட்டாக மஞ்சள் நிறக் கறை படிந்திருப்பதைக் கண்டார் சலீம் அலி. இதற்கான காரணத்தைத் தன் சிற்றப்பாவிடம் கேட்க, அவரோ அப்போது பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் கெளரவச் செயலராக இருந்த டபள்யூ.எஸ்.மில்லர்ட் (W S Millard) என்பவரிடம் சலீம் அலியை அறிமுகப்படுத்தினார். மில்லர்டின் உதவியுடன் பறவைகளை எவ்வாறு அறிந்துகொள்வது, எப்படிப் பாதுகாப்பது போன்ற விவரங்களை சலீம் அலி தெரிந்துகொள்ள முடிந்தது. அப்பொழுதிலிருந்து சலீம் அலிக்கு பறவைகள் மீது தீராத நாட்டம் பிறந்தது. பின்பு கல்லூரிப் படிப்பை மேற்கொண்டபோதிலும் பட்டம் ஏதும் பெறவில்லை. தன் தமையனுக்கு தொழிலில் உதவுவதற்காக இடையில் பர்மா சென்றுவிட்டார். அங்குச் சென்றும் தமையனுக்கு உதவுவதைவிடப் பறவைகளைக் கவனிப்பதிலேயே பெரும் கவனம் செலுத்தினார். பின்னர் 1920இல் மீண்டும் சலீம் அலி பம்பாய் திரும்பினார்.

மஞ்சள் தொண்டைக் குருவி
பர்மாவிலிருந்து திரும்பியவுடன் சலீம் அலிக்கு விலங்கியல் துறையில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இக்கல்வி பெற்றதன் காரணமாக பம்பாய் தேசிய வரலாற்றுக் கழக அருங்காட்சியகத்தில், அவருக்கு வழிகாட்டி வேலை கிடைத்தது. ஏற்கனவே பறவைகளின் வாழ்க்கை முறையில் நாட்டம் கொண்டிருந்த சலீம் அலிக்கு இவ்வேலை மென்மேலும் அத்துறையில் ஆர்வத்தை ஊட்டியது. பறவையியலில் தன் அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள சலீம் அலி ஜெர்மனி சென்று டாக்டர் இர்வின் ஸ்ட்ராஸ்மன் (Dr Irwin Strassman) என்பவரிடம் பயிற்சி பெற்றார். பயிற்சி முடிந்து இந்தியா திரும்பியவுடன், தன் வாழ்க்கைச் செலவுக்குப் போதிய வருமானமின்றி சலீம் அலி வாட நேர்ந்தது. அவர் ஏற்கனவே பார்த்துவந்த வழிகாட்டி வேலையும் பண நெருக்கடி காரணமாக நிரப்பப்படவில்லை.

மைசூர் மாகாண பறவை கணக்கெடுப்பின்போது சலீம் அலி சேகரித்த பறவை பற்றிய குறிப்பு
திருமண வாழ்க்கை
சலீம் அலியின் 18-ஆவது வயதில், 1918 திசம்பரில் சலீம் அலிக்கும் தெஃமினாவுக்கும் திருமணம் நடைபெற்றது. சலீம் அலியின் வணிகம் காரணமாக இவர்கள் இருவரும் சிறிது காலம் பர்மாவில் வாழ்ந்தனர்.திருமணமாகி குடும்ப வாழ்க்கையை மேற்கொண்ட சலீம் அலி வேலையின்றி வாடினார். ஆனால் அவரது மனைவி தெஹ்மினா பணியில் இருந்தமையால் வறுமைத் துன்பம் பெருமளவுக்கு அவரைத் தாக்கவில்லை. வேலையின்றி இருந்த நாட்களில் சலீம் அலி தனது வீட்டுத்தோட்டத்திலிருந்த மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு பறவைகளை நோட்டம் விடுவது வழக்கம்; அங்கிருந்த தூக்கணாங்குருவியின் வாழ்க்கை முறையைக் கூர்ந்து கவனித்து, அதைப்பற்றிய எல்லா விவரங்களையும் குறித்துக்கொண்டார். 1930 ஆம் ஆண்டு தான் திரட்டிய குறிப்புகளைக்கொண்டு, தூக்கணாங்குருவியின் பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள் ஆகியவை பற்றிய ஆய்வுக்கட்டுரை ஒன்றை வெளியிட்டார். இது முனைவர் பட்டத்திற்கான ஓர் ஆய்வேடு போல விளங்கியது. இக்கட்டுரை, பறவையியலில் சலீம் அலிக்குப் பெரும்புகழையும், பெயரையும் ஈட்டித்தந்தது.

பறவையியல் ஆராய்ச்சி
சலீம் அலி பறவைகளைப் பற்றிய ஆய்வு மேற்கொள்ள இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றார். பறவைகளைப் பற்றியும் அவற்றின் ஒவ்வொரு செயலையும் கூர்ந்து கவனித்து, ஆய்வு செய்து பின்னரே தகுதியான முடிவுக்கு வருவது சலீம் அலியின் வழக்கம். இத்தகைய சிறந்த ஆய்வு முறைகளை மேற்கொண்டு சலீம் அலி தனது புகழ் பெற்ற “இந்தியப் பறவைகளைப் பற்றிய கைநூல் (The HandBook on Indian Birds)” என்பதனை இயற்றி வெளியிட்டார். இந்தியப் பறவைகளைப் பற்றி தெரிந்துகொள்ள மிகவும் இன்றியமையாத நூல் இது. இந்நூல் மொத்தம் 13 முறை மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.

சலீம் அலியின் உலகமே இந்திய நாட்டுப் பறவைகளோடு பின்னிப் பிணைந்ததாக விளங்கியது. இந்நிலையில் அவர் உலகப்புகழ் வாய்ந்த பறவையியல் அறிஞரான எஸ்.தில்லான் ரிப்ளே (S.Dillon Ripley) என்பவருடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார். அப்போது இந்தியத் துணைக்கண்டத்துப் பறவைகளைப்பற்றி 10 தொகுதிகளைக்கொண்ட தொகுப்பு நூல் ஒன்றைப் படிக்க நேர்ந்தது. இத்தொகுப்பில் பறவைகளைப் பற்றிய பல்வேறு விவரங்களும், அதாவது அவற்றின் தோற்றம், உணவுப் பழக்கவழக்கம், இனப்பெருக்க முறை, வலசை போதல் போன்ற பல்வேறு செய்திகளும் அடங்கியிருந்தன. பறவைகளைப் பற்றி அறிந்துகொள்வதை தனது பொழுதுபோக்காக மட்டுமன்றி, வாழ்க்கைப் பணியாகவே சலீம் அலி மேற்கொண்டிருந்தார். மக்கள் அவரை, “பறவைகளைப் பற்றிய நடமாடும் கலைக்களஞ்சியம்” என்றே அழைத்தனர். ஏறக்குறைய 65 ஆண்டுகள் இடைவிடாது பல்வேறு இடங்களுக்கும் பயணம் செய்து, தான் விருப்பத்தோடு ஏற்றுக்கொண்ட பணியில் பெரும் சாதனைகளைப் புரிந்த சலீம் அலிக்கு அப்பட்டம் மிகவும் பொருத்தமே.

சலீம் அலி பறவையியல் ஆராய்ச்சி செய்த முக்கிய இடங்கள்
பரத்பூர்
மேற்குத் தொடர்ச்சி மலைகள்
கிழக்குத் தொடர்ச்சி மலைகள்
இமாலய மலைகள்
கிழக்கு இமாலய மலைகள்
இராஜஸ்தானின் பாலைவனங்கள்
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் பனிச் சிகரங்கள்
மியான்மர்
நேபாளம்
தக்கான பீடபூமி
இறப்பு
சலீம் அலி 1987 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் நாள் முன்னிற்குஞ்சுரப்பி (prostate)புற்றுநோயால் இயற்கை எய்தினார்.

விருதுகள்
பத்ம பூஷண் (1958)
பிரித்தானியப் பறவையியல் கழகத்தின் விருது (1967)
ஜோன் சி. பிலிப்ஸ் விருது (World Conservation Union - 1969)
பத்ம விபூஷண் (1976)
J. Paul Getty Wildlife Conservation Prize of the World Wildlife Fund (1976)
Commander of the Netherlands (Order of the Golden Ark) (1986)
சலீம் அலி இயற்றிய நூல்கள்
Handbook of the Birds of India & Pakistan (Vols. 1-10) with Sidney Dillon Ripley, Bombay: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்(OUP) (1964-74)
Volume 1 Divers to Hawks
Volume 2 Megapodes to Crab Plover
Volume 3 Stone Curlews to Owls
Volume 4 Frogmouths to Pittas
Volume 5 Larks to Grey Hypocolius
Volume 6 Cuckoo-Shrikes to Babaxes
Volume 7 Laughing Thrushes to the Mangrove Whistler
Volume 8 Warblers to Redstarts
Volume 9 Robins to Wagtails
Volume 10 Flowerpeckers to Buntings
Fall of a Sparrow, (Autobiography) (1985)
The Book of Indian Birds, Bombay: BNHS (1941), ISBN 0-19-566523-6
Common Birds with Laeeq Futehally. with Laeeq Futehally, New Delhi: National Book Trust(NBT) (1967)
A Pictorial Guide to the Birds of the Indian Subcontinent with Dillon Ripley, Bombay: OUP (1983)
Common Indian Birds, A Picture Album New Delhi: NBT (1968)
Hamare Parichat Pakshee with Laeeq Futehally (இந்தி). New Delhi: NBT (1969)
Handbook of the Birds of India & Pakistan (compact edition) with Ripley, D., Bombay: OUP (1987)
The Book of Indian Birds (12th and enlarged centenary ed.) New Delhi: BNHS & OUP (1996)
Bird Study in India: Its History and its Importance New Delhi: ICCR (1979)
The Great Indian Bustard (Vols.1-2). with Rahmani, A. Bombay: BNHS (1982-89)
வட்டார வழிகாட்டிகள்[தொகு]
Birds of Bhutan with Biswas, B. & Ripley, D., Calcutta: Zoological Survey of India (1996)
The Birds of Bombay and Salsette with H. Abdulali, Bombay: Prince of Wales Museum (1941)
The Birds of Kutch, London: OUP (1945)
Indian Hill Birds Bombay: OUP (1949)
The Birds of Travancore and Cochin Bombay: OUP (1953)
The Birds of Gujarat Bombay: Gujarat Research Society (1956)
A Picture Book of Sikkim Birds Gangtok: Government of Sikkim (1960)
The Birds of Sikkim Delhi: OUP (1962)
Birds of Kerala Madras: OUP (1969)
Field Guide to the Birds of the Eastern Himalayas Bombay: OUP (1977)
The Vernay Scientific Survey of the Eastern Ghat; Ornithological Section—Together with The Hyderabad State Ornithological Survey 1930-38 with Hugh Whistler, Norman Boyd Kinnear (undated)
ஆய்வுக்கட்டுரைகள்[தொகு]
Studies on the Movement and Population of Indian Avifauna Annual Reports I-4. with Hussain, S.A., Bombay: BNHS (1980-86)
Ecological Reconnaissance of Vedaranyam Swamp, Thanjavur District, Tamil Nadu Bombay: BNHS (1980)
Harike Lake Avifauna Project (co-author) Bombay: BNHS (1981)
Ecological Study of Bird Hazard at Indian Aerodromes (Vols. I & 2). with Grubh, R. Bombay: BNHS (1981-89)
Potential Problem Birds at Indian Aerodromes with Grubh, R. Bombay: BNHS
The Lesser Florican in Sailana with Rahmani et al. Bombay: BNHS (1984)
Strategy for Conservation of Bustards in Maharashtra (co-author) Bombay: BNHS (1984)
The Great Indian Bustard in Gujarat (co-author) Bombay: BNHS (1985)
Keoladeo National Park Ecology Study with Vijayan, S., Bombay: BNHS (1986)
A.Study of Ecology of Some Endangered Species of Wildlife and Their Habitat. The Floricans with Daniel J.C. & Rahmani, Bombay: BNHS (1986)
Status and Ecology of the Lesser and Bengal Floricans with Reports on Jerdon’s Courser and Mountain Quail Bombay: BNHS (1990)

நாவலர் சோமசுந்தர பாரதியார் பிறந்த தினம் ஜூலை 27.


நாவலர் சோமசுந்தர பாரதியார் பிறந்த தினம் ஜூலை 27.
ச. சோமசுந்தர பாரதியார் (சூலை 27, 1879 - 1959, திசம்பர் 14; எட்டயபுரம், தமிழ்நாடு) என்னும் நாவலர் சோமசுந்தர பாரதியார் சிறந்த தமிழறிஞர் ஆவார். இவர் பல பாடல்களையும் நூல்களையும் எழுதியதோடு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்று செயலாற்றியவர். மதுரை மாவட்டத்தின் தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் தலைவராகவும் செயற்பட்டவர்.

பிறப்பு
சத்தியானந்த சோமசுந்தரன் என்ற இயற்பெயரைக் கொண்ட சோமசுந்தர பாரதியார் சுப்பிரமணிய நாயகர் (எட்டப்ப பிள்ளை) - முத்தம்மாள் இணையருக்கு மகனாக 1879 சூலை 27 ஆம் நாள் எட்டயபுரத்தில் பிறந்தார். சோமசுந்தர பாரதியார் எட்டயபுரம் அரண்மனையில் அரசியாரின் அரவணைப்பில் வளர்ந்தார்.

பாரதி பட்டம்
அரண்மனையில் பணியாற்றிவந்த சின்னசாமி ஐயரின் புதல்வர் சுப்பிரமணிய பாரதிக்கு நண்பர் ஆனார். இருவரும் தமிழ் நூல்களைக் கற்பதிலும், பாடல்களை உருவாக்குவதிலும் பெரு விருப்புக் கொண்டிருந்தனர். நெல்லைக்கு யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு புலவர் வருகை தந்திருந்தார். அரண்மனை அவையில் நடந்த புலவர் கூட்டத்தில் ஈற்றடி ஒன்றைக் கொடுத்துப் பாடல் ஒன்றை இயற்றித் தருமாறு வேண்டினார். கூட்டத்துக்குச் சென்றிருந்த சோமசுந்தரமும் சுப்பிரமணியனும் தாம் எழுதிய பாடல்களைக் கொடுத்தனர். அனைத்துப் பாடல்களிலும் இவர்கள் எழுதிய பாடல்களே சிறந்ததெனத் தெரிந்தெடுத்த அப்புலவர் இருவருக்கும் பாரதி என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்தார்.

கல்வி
சோமசுந்தர பாரதியார் தனது தொடக்கக் கல்வியை எட்டயபுரத்திலும்  இடைநிலைக் கல்வியை நெல்லையில் சி.எம்.எஸ். கல்லூரி பள்ளியில் கல்வி கற்றார்.

நெல்லையில் படிப்பை முடித்த சோமசுந்தர பாரதி சென்னை கிருத்துவக் கல்லூரியில் பயின்று கலை இளவர் (Bachelor of Arts ) பட்டமும் சென்னை சட்டக் கல்லூரியில் படித்து 1905 ஆம் ஆண்டில் சட்ட இளவர் பட்டமும் (Bachelor of Law) பெற்றார். தூத்துக்குடியில் வழக்கறிஞராகத் தொழிலாற்றியபொழுது தானே பயின்று 1913 ஆம் ஆண்டில் கலை முதுவர் (Master of Arts) பட்டம் பெற்றார்.

குடும்பம்
சோமசுந்தர பாரதியார் 1894 (ஏறத்தாழ) ஆம் ஆண்டில் மீனாட்சி அம்மையாரை மணந்தார். இவர் வழியாகச் சோமசுந்தர பாரதியாருக்கு இராசராம் பாரதி (1898 மார்ச் 30 -?), இலக்குமிரதன் பாரதி [4] (1903 பிப்ரவரி 16 -?) என்னும் மகன்களும் இலக்குமி பாரதி (1905 அக்டோபர் 13 - ?) என்னும் மகளும் பிறந்தனர்.

திருவெட்டாற்றில் 1927 திசம்பர் 1 ஆம் நாள் வசுமதி அம்மையாரை சோமசுந்தர பாரதியார் தனது 48ஆம் வயதில் மணந்தார். இவ்வம்மையாரின் வழியாக மீனாட்சி (1929 பிப்ரவரி 28 -  லலிதா  (1930 சூலை 27 - ) ஆகிய இரு மகள்களும் பிறந்தனர்.

தொழில்
சோமசுந்தர பாரதியார் சிறிது காலம் எழுத்தராகவும், தட்டச்சாளராகவும் பணியாற்றினார்.[சான்று தேவை]

1905 ஆம் ஆண்டு முதல் 1920 ஆம் ஆண்டு வரை தூத்துக்குடியில் வழக்குரைஞராகத் தொழிலாற்றினார்.

1920 ஆம் ஆண்டு முதல் 1933 ஆம் ஆண்டு வரை மதுரையில் வழக்கறிஞராகத் தொழிலாற்றினார்.

1933 ஆம் ஆண்டு சூன் மாதம் முதல் 1938 ஏப்ரல் மாதம் வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

இந்திய விடுதலைப் போராட்டம்[தொகு]
சோமசுந்தர பாரதியார் 1905 ஆம் ஆண்டில் தூத்துக்குடியில் வழக்கறிஞராகத் தொழிலாற்றத் தொடங்கியபொழுது, அங்கே விடுதலைப் போராட்டம் கனன்றுகொண்டிருந்தது. அப்போராட்டத்தால் சோமசுந்தர பாரதியாரும் ஈர்க்கப்பட்டார். இந்திய தேசிய காங்கிரசு இயக்கம் நடத்திய பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். இதனால் 1905ஆம் ஆண்டு முதல் 1919 ஆம் ஆண்டு வரை அவரது பெயர் அரசினரின் ஐயப்பாட்டு பட்டியலில் இடம்பெற்று இருந்தது.

வ. உ. சிதம்பரம் பிள்ளையின் அழைப்பை ஏற்றுக்கொண்டு சோமசுந்தர பாரதியார் “இண்டியன் நேவிகேஷன்” என்னும் சுதேசி கப்பல் கம்பெனியின் செயலாளராக இருந்தார்.

மதுரையில் தமிழ் மாநிலக் காங்கிரஸ் மாநாட்டினைக் கூட்டி அதன் செயலாளராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றினார். 1926 ஆம் ஆண்டில் சித்தரஞ்சன் தாசை மதுரைக்கு அழைத்து, சொற்பொழிவாற்றச் செய்தார்.

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்[தொகு]
1937ஆம் ஆண்டில் இராசகோபாலாச்சாரியார் சென்னை மாகாண முதலமைச்சராகப் பதவியேற்றபோது உயர்நிலைப் பள்ளிகளில் முதல் மூன்று படிவங்களில் (6, 7, 8 ஆம் வகுப்புகளில்) இந்தி மொழி கட்டாய பாடமாக்கப்பட்டது. தாய்மொழியைத் தவிர்த்து வேற்று மொழியைத் திணிக்கக் கூடாதென்ற கருத்தால் இந்தி எதிர்ப்பு இயக்கத்தை நாவலர் உருவாக்கினார்.


ச.சோ.பாரதியார் எழுதிய திறந்த மடல்
1937 செப்டம்பர் 5 ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டின் தலைவராகப் பொறுப்பேற்றார். அக்டோபர் 25 ஆம் நாள் கட்டாய இந்திக் கல்வியை கைவிடக் கோரி, அன்றைய முதலமைச்சர் ச. இராசகோபாலாச்சாரியருக்கு திறந்த மடல் (An Open Letter to Honourable Minister C. Rajagopalachariar)ஒன்றை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினார்.

1948 ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாவது இந்திப் போராட்டத்தின்பொழுது சோமசுந்தர பாரதியார் அன்றைய கல்வி அமைச்சர் தி. சு. அவிநாசிலிங்கனாருக்கு மடல் எழுதினார்.

தமிழ்ப்பணி
இளமையிலேயே தமிழிலக்கியத்தில் ஈடுபாடுகொண்டிருந்த சோமசுந்தர பாரதியார், பின்னாளில் தமிழிலக்கிய, இலக்கண ஆராய்ச்சியிலும் படைப்பிலக்கியத்திலும் ஈடுபட்டார். தனது ஆராய்ச்சிகளைச் சொற்பொழிவின் வழியாகவும் ஆய்வுநூல்கள் எழுதுவதின் வழியாகவும் வெளியிட்டார்.

1932 -33 ஆம் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக இருந்தார்.

சொற்பொழிவுகள்
சோமசுந்தர பாரதியார் 1916 ஆகத்து 16 ஆம் நாள் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தசரதன் குறையும் கைகேயி நிறையும் என்னும் தலைப்பில் ஆராய்ச்சிச் சொற்பொழிவாற்றினார்.[1] இச்சொற்பொழிவு இதே தலைப்பில் பின்னர் நூலாக வெளியிடப்பட்டது.

மதுரைத் தமிழ்ச் சங்கமும் இளம் கிறித்துவ ஆடவர் சங்கமும் (YMCA ) மதுரையில் 1926 சனவரி 26 ஆம் நாள் நடத்திய ஆய்வரங்கிலும்  1929 மார்ச் 11 ஆம் நாள் சென்னைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டத்திலும் [6] திருவள்ளுவர் என்னும் தலைப்பில் உரையாற்றினார். இவ்வுரைகளே பின்னர் திருவள்ளுவர் என்னும் நூலாக வெளியிடப்பட்டன.

திராவிடர் கழகம் கம்பராமாயணத்தையும் பெரிய புராணத்தையும் எரிக்க வேண்டும் என இயக்கம் நடத்தியது. அதன் ஒருபகுதியாக நடைபெற்ற பட்டிமன்றத்தில் சோமசுந்தர பாரதியார் கலந்துகொண்டு கம்பராமாயணத்தை எரிக்கக் கூடாது என அண்ணாதுரையுடன் வாதிட்டார். அச்சொற்பொழிவு தீபரவட்டும் என்னும் நூலில் இடம்பெற்று இருக்கிறது.

நூல்கள்
ஆய்வு நூல்கள்
திருவள்ளுவர், தொல்காப்பியர் ஆகியோரைப் பற்றிப் புனையப்பட்ட பொய்க்கதைகளை தன்னுடைய ஆய்வுகளின் மூலம் தகர்த்த சோமசுந்தர பாரதியார் பின்வரும் நூல்களை எழுதினார்:

தசரதன் குறையும் கைகேயி நிறையும் (1926)
திருவள்ளுவர் (1929) -தமிழ், ஆங்கிலம்.
சேரர் தாயமுறை (1960) -தமிழ், ஆங்கிலம்
தமிழும் தமிழரும்
சேரர் பேரூர் (தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும்)
அழகு
பழந்தமிழ் நாடு (1955)
நற்றமிழ் (1957)
படைப்பிலக்கியங்கள்
சோமசுந்தர பாரதியார் பல தனிச்செய்யுள்களை அவ்வப்பொழுது இயற்றி இருக்கிறார். எனினும் பின்வரும் இரண்டு படைப்புகள் மட்டுமே நூல்களாக உருப்பெற்றிருக்கின்றன.

மங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி: ஒரு செய்யுட் கதை (1947)
மாரி வாயில் (1936)
உரைநூல்
சோமசுந்தர பாரதியார் தொல்காப்பியத்தின் பொருள் இலக்கணப்பகுதியில் உள்ள அகத்திணை, புறத்திணை, மெய்ப்பாட்டியல் ஆகிய மூன்று இயல்களுக்கும் முழுமையாக உரை எழுதியிருக்கிறார். அவ்வுரை நூல் தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை என்னும் தலைப்பில் 1942 அம் ஆண்டில் வெளியிடப்பட்டது. மீதமுள்ளவற்றுள் களவியல், கற்பியல், செய்யுளியல் ஆகியவற்றில் இன்றியமையாச் சில நூற்பாக்களுக்கு மட்டும் புத்துரை எழுதினார். அவை அவருடைய காலத்தில் நூலாக உருப்பெறவில்லை.

பின்னர் 1997ஆம் ஆண்டில் நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி – 2 : தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை என்னும் தலைப்பில் சோமசுந்தரனார் தொல்காப்பிய பொருளதிகாரத்திற்கு எழுதிய உரைகள் அனைத்தையும் திரட்டி மதுரை ச. சாம்பசிவனாரை பதிப்பாசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்டது. சோமசுந்தரனாரின் மகள் மருத்துவர் லலிதா காமேசுவரன் அந்நூலை வெளியிட்டார்.

அரசியல் நூல்
”இந்தி” கட்டாய பாடமா?
வாழ்க்கை வரலாறு
நான் கண்ட சுப்பிரமணிய பாரதி
மாநாடுகள்
சொற்பொழிவுகள், நூல்கள் ஆகியவற்றின் வழியாகத் தமிழ்ப்பணி ஆற்றியதைப் போலவே தமிழ் மாநாடுகள் சிலவற்றில் சொற்பொழிவாளராகவும் அமைப்பாளராகவும் தலைவராகவும் பொறுப்பேற்று சோமசுந்தர பாரதியார் செயற்பட்டார். அம்மாநாடுகளுள் சில பின்வருமாறு[6]:

மதுரையில் 1942 ஆகத்து 1, 2, 3 ஆகிய மூன்று நாள்கள் நடைபெற்ற முத்தமிழ் மாநாட்டின் வரவேற்புக் குழுத் துணைத் தலைவராக வினையாற்றினார்.
சென்னையில் 1948 பிப்ரவரி 14 ஆம் நாள் நடைபெற்ற அகில தமிழர் மாநாட்டின் தலைவர்.
சிதம்பரம் அண்ணாமலை நகரில் 1954 சூலை 11 ஆம் நாள் நடைபெற்ற சென்னை மாநிலத் தமிழாசிரியர் மாநாட்டிற்குத் தலைமை வகித்தார்.
மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பொன்விழாவின் 5ஆம் நாள் விழா 1956 சூன் 3 ஆம் நாள் நடைபெற்றது. அன்றைய இயலரங்கிற்கு இவர் தலைமை வகித்தார்.
தமிழகப் புலவர் குழுவின் அமைப்புக் கூட்டம் 1958 திசம்பர் 14 ஆம் நாள் பசுமலையில் நடைபெற்றது. அக்கூட்டத்தின் முடிவுப்படி சோமசுந்தர பாரதியார் தமிழகப் புலவர் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1959 நவம்பர் 8 ஆம் நாள் மதுரை எழுத்தாளர் மன்ற ஆண்டுவிழாவில் தொடக்கவுரை ஆற்றினார்.
சமூகச் சீர்திருத்தப்பணி
சோமசுந்தர பாரதியார் இளமையிலேயே சமூகச் சீர்திருத்தத்தில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தோடு தொடர்புடையவராக இருந்தார். எனவே சடங்குகள் நீக்கிய திருமணம் உள்ளிட்ட விழாகளை முன்னின்று நடத்தினார். தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் மதுரை மாவட்ட தலைவராகவும் செயற்பட்டார்.

அப்பணியின் உச்சமாக, 1933 மே 13 ஆம் நாள் மதுரைக்கு அருகில் உள்ள உசிலங்குளத்தில் தாழ்த்தப்பட்டோர்க்கு எனத் தொடக்கப்பள்ளி ஒன்றி நிறுவினார். அதன் தொடக்கவிழாவில் வ. உ. சிதம்பரனார் சிறப்புரையாற்றினார்.

வெளிநாட்டுப் பயணம்
சோமசுந்தர பாரதியார் 1930, 1936, 1944 ஆகிய ஆண்டுகளில் ஈழ நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

பட்டங்களும் விருதுகளும்
நாவலர் பட்டம் - ஈழ நாட்டிற்கு 1944 ஆம் ஆண்டு திசம்பர் 30 – 31 ஆம் நாள்களில் சோமசுந்தர பாரதியார் சென்றிருந்த பொழுது அங்குள்ள ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் மன்றம் நாவலர் பட்டத்தை அவருக்கு அளித்தது.
கணக்காயர் விருது - 1954 சனவரி 17 ஆம் நாள் மதுரைத் திருவள்ளுவர் கழகம் சோமசுந்தர பாரதியாருக்குப் பொன்னாடை போர்த்தி கணக்காயர் என்னும் பட்டத்தை அளித்தது.
மதிப்புரு முனைவர் (Honory Doctor) பட்டம் - அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் வெள்ளி விழாவில் சோமசுந்தர பாரதியாருக்கு மதிப்புரு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.
1959 சூலை 27 ஆம் நாள் மதுரையில் சோமசுந்தர பாரதியாரின் 80ஆம் அகவை நிறைவுப் பாராட்டுக்கூட்டம் நடைபெற்றது.
1959 அக்டோபர் 4 ஆம் நாள் மதுரை நகரவையும் தமிழகப் புலவர் குழுவும் இணைந்து சோமசுந்தர பாரதியாருக்குப் பாராட்டுக் கூட்டம் நடத்தினர்.
மறைவு
1959 திசம்பர் 2 ஆம் நாள் சோமசுந்தர பாரதியார் மதுரை பசுமலையில் உள்ள தனது வீட்டில் மயக்கமுற்று விழுந்தார். திசம்பர் 4ஆம் நாள் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். திசம்பர் 7 ஆம் நாள் தந்நினைவு இழந்தார். திசம்பர் 14ஆம் நாள் இரவு 8.40 மணிக்கு மரணமடைந்தார். திசம்பர் 15ஆம் நாள் மாலை 6 மணிக்கு அவரது உடலுக்குப் பசுமலையில் எரியூட்டப்பட்டது.

சோமசுந்தர பாரதியாரைப் பற்றிய கட்டுரைகள் / நூல்கள்[தொகு]
ச. சாம்பசிவனார் எழுதிய நாவலர் சோமசுந்தர பாரதியாரின் தமிழ் இலக்கியப்பணி என்னும் நூலில் இவரது வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பும் இலக்கியப்பணி பற்றிய திறனாய்வும் இடம்பெற்றிருக்கின்றன.
குன்றக்குடி பெரியபெருமாள் எழுதிய தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள் என்னும் நூலில் இவரைப் பற்றிய கட்டுரை இடம் பெற்றிருக்கிறது. (சென்னை, 1996)
தமிழ்ப்பிரியன் எழுதிய இரு நூற்றாண்டுகளும் 50 தமிழ் அறிஞர்களும் என்னும் நூலில் இவரைப் பற்றிய கட்டுரை இடம் பெற்றிருக்கிறது. (சென்னை, 2005)


விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த தமிழ் அறிஞருமான நாவலர் சோமசுந்தர பாரதியார் அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் (1879) பிறந்தார். இயற்பெயர் சத்தியானந்த சோமசுந்தரன். எட்டயபுரம் அரசியின் பராமரிப்பில் வளர்ந்தார். அரண்மனையில் பணியாற்றிவந்த சுப்பிரமணிய பாரதிக்கு நண்பரானார். இருவரும் இணைந்து பல நூல்களைக் கற்றனர். பாடல்கள் இயற்றினர். அரண்மனைக்கு வந்திருந்த ஈழப்புலவர் ஒருவர், இவர்கள் இருவருக்கும் ‘பாரதி’ என்ற பட்டத்தை வழங்கினார்.

l எட்டயபுரத்திலும், நெல்லை சிஎம்எஸ் கல்லூரி பள்ளியிலும் பயின்றார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பி.ஏ. பட்டப் படிப்பையும், சென்னை சட்டக் கல்லூரியில் இளநிலை சட்டப் படிப்பையும் முடித்தார்.

l வழக்கறிஞராகப் பணியாற்றிக்கொண்டே, முதுநிலை சட்டம் படித்து பட்டம் பெற்றார். சிறந்த வழக்கறிஞர் என்று புகழ்பெற்றார். ஆயிரக்கணக்கில் சம்பாதித்தவர் அதை விட்டுவிட்டு, வ.உ.சி.யின் அழைப்பை ஏற்று ரூ.100 சம்பளத்தில் அவரது சுதேசிக் கப்பல் கம்பெனியின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார்.

l ஒத்துழையாமை இயக்கம், தீண்டாமை ஒழிப்பில் காந்தியடிகளைப் பின்பற்றியவர். நெல்லை, மதுரையில் காங்கிரஸ் கட்சி மாநாட்டைத் தலைமை ஏற்று நடத்தினார்.

l ‘என்னிடம் 2 சரக்கு கப்பலோடு, 3-வதாக ஒரு தமிழ்க் கப்பலும் உள்ளது’ என்று வ.உ.சி. பெருமிதத்துடன் இவரைக் குறிப்பிடுவார். வ.உ.சி., சுப்பிரமணிய சிவா மீதான வழக்குகளில் அவர்களுக்காக வாதாடினார்.

l காந்தியடிகளை முதன்முதலில் தமிழகத்துக்கு வரவழைத்து உரையாற்றச் செய்தார். தன் குடும்பத்தினரையும் விடுதலை இயக்கத்தில் பங்குபெறச் செய்தார். சுதந்திரப் போராட்டத்துக்கு நன்கொடையாக, குழந்தைகளின் நகைகளைக் கழற்றி காந்தியிடம் அளிக்கச் செய்தார். இந்தி எதிர்ப்பு மாநாடுகளில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

l அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராக பணியாற்றினார். தமிழ் இலக்கண, இலக்கிய ஆய்வுகளில் ஈடுபட்டார். தமிழ்க் கழகம் என்ற அமைப்பை நிறுவினார். ‘தசரதன் குறையும் கைகேயி நிறையும்’, ‘அழகு’, ‘சேரர் தாயமுறை’, ‘தமிழும் தமிழரும்’, ‘திருவள்ளுவர்’ உட்பட பல நூல்களையும், 5 ஆங்கில நூல்களையும் எழுதியுள்ளார். தமிழ் இலக்கண இலக்கி யங்கள், அரசியல், வரலாறு, தமிழர் நாகரிகம், பண்பாடு, மொழி பெயர்ப்பு என நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்.

l தொல்காப்பியப் பொருளதிகார அகத்திணையியல், புறத்திணையியல், மெய்ப்பாட்டியல் ஆகியவற்றுக்கு உரை எழுதினார். ‘நான் கண்ட சுப்பிரமணிய பாரதி’ என்ற நூலை எழுதினார். மதுரை அடுத்த உசிலங்குளத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான தொடக்கப்பள்ளியை நிறுவினார்.

l இவரது தமிழ்த் தொண்டைப் பாராட்டி ஈழநாட்டுப் புலவர் மன்றம் ‘நாவலர்’ என்ற பட்டத்தை வழங்கியது. திருவள்ளுவர் கழகம் ‘கணக்காயர்’ என்ற பட்டத்தையும், அண்ணாமலை பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டத்தையும் வழங்கியது.

l சமூக சீர்திருத்தங்களில் ஈடுபாடு கொண்டவர். சடங்குகள் இல்லாத திருமண விழாக்களை முன்னின்று நடத்தினார். தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் மதுரை மாவட்டத் தலைவராக செயல்பட்டார். தமிழுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் அருந்தொண்டுகள் ஆற்றிய நாவலர் சோமசுந்தர பாரதியார் 80 வயதில் (1959) மறைந்தார்.

நன்றி -விக்கிபீடியா ,தி இந்து தமிழ் ,

திங்கள், 25 ஜூலை, 2016

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவு தினம் ஜூலை 27,


டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம்  நினைவு தினம் ஜூலை 27,
ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (அக்டோபர் 15, 1931 - ஜூலை 27, 2015) பொதுவாக டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம், என்று குறிப்பிடப்படுகிறார். இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும் நிர்வாகியும் ஆவார். கலாம் தமிழ்நாட்டில் இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.

கலாம், குடியரசுத் தலைவராக பதவி ஏற்பதற்குமுன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார். 1974 ஆம் ஆண்டில் நடந்த முதல் அணு ஆயுத சோதனைக்கு பிறகு 1998 ஆம் ஆண்டில் நடந்த போக்ரான் - II அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப, மற்றும் அரசியல் ரீதியாக அவர் முக்கிய பங்காற்றினார். எனினும், சில அறிவியல் வல்லுனர்கள் கலாம் அணு இயற்பியலில் ஆளுமை இல்லாதவர் என்றும், ஹோமி ஜே பாபா மற்றும் விக்ரம் சாராபாய் அவர்களை பின்பற்றினார் என்றும் கூறினர்.

கலாம், இந்தியாவின் முக்கியக் கட்சிகளான இந்திய தேசிய காங்கிரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன், 2002 ஆம் ஆண்டில் லட்சுமி சாகலை தோற்கடித்து, இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பாட்னா, அஸ்தினாபூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனங்களில் ஒரு வருகைப் பேராசிரியர் ஆகவும், திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தர் ஆகவும், சென்னை அண்ணா மற்றும் ஜே எஸ் எஸ் மைசூர் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் ஆகவும் பணியாற்றியதோடு, சோமாலியாவில் உள்ள பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் துணை/வருகைப் பேராசிரியர் ஆகவும் பணியாற்றினார்.

கலாம் தனது இந்தியா 2020 என்ற புத்தகத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற திட்டங்களை முன்மொழிந்துள்ளார். தென் கொரியாவில் அவருடைய புத்தகங்கள், மொழிபெயர்ப்புப் பிரதிகளாக மாற்றுவதற்காக பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அவர் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா உட்பட, பல மதிப்புமிக்க விருதுகளை பெற்றுள்ளார். கலாம் தனது ஊக்குவிக்கும் முறையிலான பேச்சுக்களாலும், இந்திய மாணவர் சமூகத்துடன் கலந்துரையாடல்களாலும் பெரிதும் அறியப்படுகிறார். அவர் 2011 ஆம் ஆண்டில் தேச இளைஞர்களுக்காக, இந்தியாவில் ஊழலை ஒழிப்பதை மையக் கருவாகக் கொண்டு, "நான் என்ன தர முடியும்" என்ற இயக்கத்தை ஆரம்பித்தார். கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது, கருணை மனுக்களின் மீது முடிவேதும் எடுக்காமல் இருந்த காரணத்தால், குற்றவாளிகளின் மீதான நடவடிக்கைகள் கால தாமதம் ஆகியதற்காக, விமர்சிக்கப்பட்டுள்ளார்.


ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்
கலாம் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாளில், ஒரு படகுச் சொந்தக்காரரும் மரைக்காயரும் ஆன ஜைனுலாப்தீன் அவர்களுக்கும், இல்லத்தரசி ஆஷியம்மா அவர்களுக்கும், தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரத்தில், மகனாகப் பிறந்தார். அவர் வறுமையான பின்னணியிலிருந்து வந்தவர் ஆனதால், இளம் வயதிலேயே, அவருடைய குடும்பத்திற்கு கூடுதல் வருமானம் கிடைப்பதற்காக, வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார். அவர் பல மத சூழ்நிலையில் வளர்க்கப்பட்டவர் என்றாலும், ஒரு மத வழக்கத்தையே பின்பற்றினார். பள்ளி முடிந்ததும், கலாம் அவரது தந்தையின் வருமானத்திற்குப் பங்களிக்கும் பொருட்டு, செய்தித்தாள்கள் விநியோகத்தில் ஈடுபட்டார். தனது பள்ளிப்பருவத்தில், கலாம் சராசரி மதிப்பெண்களே பெற்றார். என்றாலும், பிரகாசமான மாணவனாகவும், கற்பதில் திடமான ஆர்வமும், படிப்பிற்காக, முக்கியமாக கணக்குப் பாடத்திற்காக, பல மணி நேரங்கள் செலவளிப்பவராகவும், அவர் சித்தரிக்கப்படுகிறார்.

இராமேஸ்வரம் தொடக்கப் பள்ளியில் தனது பள்ளிக் கல்வியை முடித்த பின்னர், கலாம் திருச்சிராப்பள்ளியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் சேர்ந்து, 1954 ஆம் வருடத்தில், இயற்பியலில் பட்டம் பெற்றார். அந்த பட்டப் படிப்பின் இறுதியில் கலாமிற்கு இயற்பியலில் ஆர்வம் இல்லாது போனதால், பின்னாளில் இந்த நான்கு வருட படிப்பைக் குறித்து வருத்தப்பட்டார். அவர் 1955 ஆம் ஆண்டில், எம் ஐ டி சென்னையில், விண்வெளி பொறி இயல் படிப்பிற்காக, சென்னை சென்றார். அங்கு அவர் முதுகலை பட்டமும் பெற்றார். கலாம் பல கவுரவ டாக்டர் பட்டங்கள் பெற்று இருந்தாலும், முறையான படிப்பை, எம் ஐ டி சென்னையில் படித்த முதுகலை பட்ட படிப்பைக் கொண்டு முடித்தார்.

கலாம் ஒரு உயர்ரகத் திட்டத்திற்காக உழைத்துக் கொண்டிருந்த போது, கல்லூரி முதல்வர், அந்த திட்டத்தின் முன்னேற்றத்தைக் குறித்து அதிருப்தி ஆனதோடு, இரண்டு தினங்களுக்குள் திட்டம் முடிக்கப்படவில்லை என்றால் அவருடைய கல்வி உதவித் தொகை நிறுத்தப்படும் என்று மிரட்டினார். அதனால் கலாம், ஓய்வு ஒழிவில்லாமல் அந்த திட்டத்திற்காக உழைத்து, திட்டத்தை உரிய காலத்தில் முடித்து, கல்லூரி தீனின் நன்மதிப்பை பெற்றார். பின்னர் அவர் "நான் உனக்கு அதிக பளு கொடுத்து மிக கஷ்டமான காலக்கெடுவை விதித்தேன்." என்று கூறினார்.

விஞ்ஞானப்பணித்துறை
சென்னை தொழில்நுட்ப நிறுவனம் (MIT) சென்னையில் 1960 ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்த கலாம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் முதன்மை விஞ்ஞானியாக சேர்ந்தார். கலாம் இந்திய இராணுவத்துக்காக ஒரு சிறிய ஹெலிகாப்டரை வடிவமைத்துக் கொடுத்து பணித்துறையை தொடங்கினார். இருப்பினும் அவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் சேர்ந்தது குறித்து ஒரு வித அதிருப்தியுடன் இருந்தார். பிரபல விண்வெளி விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் கீழ் இயங்கி வந்த ஒரு குழுவின் (INCOSPAR) அங்கமாகவும் கலாம் இருந்தார். 1969 ஆம் ஆண்டில், கலாம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மாற்றப்பட்டு அங்கு இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோள் பாய்ச்சுதல் வாகனம் (launcher) (எஸ். எல். வி-III) திட்டத்தின் இயக்குனர் ஆனார். (எஸ். எல். வி-III) பாய்ச்சுதல் வாகனம் ரோகினி செயற்கைக்கோளை புவிச்சுற்றின் அருகே வெற்றிகரமாக 1980 ல் ஏவியது. கலாமின் வாழ்வில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்ததில் மிகப்பெரிய சாதனையாகக் கருதப்பட்டது. கலாம் அவர்கள் எஸ். எல். வி திட்டத்தில் வேலை செய்ய ஆரம்பித்தப் பிறகுதான் தன்னையே கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. கலாம் 1965 ல் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் விரிவுப்படுத்தக்கூடிய வின்கலத்திட்டத்தில் தனித்துப் பணியாற்றினார். 1969 இல், கலாம் அரசாங்கத்தின் அனுமதிப் பெற்று மேலும் பல பொறியாளர்களை அந்தத் திட்டத்தில் சேர்த்துக் கொண்டார்.


கலாம் ஐ.ஐ. டி குவஹாத்தி பொறியியல் மாணவர்களிடம் உரையாற்றுகிறார்.
1963–64 இல், அவர் நாசாவின் ஹாம்ப்டன் வர்ஜீனியாவில் லாங்க்லியின் ஆராய்ச்சி மையம், கிரீன்பெல்டில் உள்ள கோடார்ட் விண்வெளி மையம், மேரிலாண்ட் மற்றும் விர்ஜினியா கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள வால்லோப்ஸ் விமான வசதி ஆகிய இடங்களுக்கு சென்று வந்தார். 1970 லிருந்து 1990 வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் கலாம் போலார் எஸ். எல். வி மற்றும் எஸ். எல். வி-III திட்டங்களுக்காக முயற்சி மேற்கொண்டார். இரண்டு திட்டங்களும் வெற்றிகரமாக முடிந்தன.

கலாம் அணு ஆயுத வடிவமைப்பு, வளர்ச்சி, மற்றும் சோதனைத் தள முன்னேற்பாடு ஆகியவற்றில் பங்கேற்காதபோதிலும், தேசத்தின் முதல் அணு ஆயுத சோதனையான புன்னகைக்கும் புத்தன் திட்டத்தைக் காண்பதற்காக ராஜா ராமண்ணாவால் முனைய எறிகணை ஆய்வகத்தின் (TBRL) பிரதிநிதியாக அழைக்கப்பட்டார். 1970 இல், எஸ். எல். வி ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி - 1 விண்வெளியில் ஏவப்பட்டது இஸ்ரோவின் சாதனை ஆகும். 1970 களில், கலாம் வெற்றிகரமான எஸ். எல். வி திட்டத்தின் தொழில்நுட்பத்திலிருந்து எறிகணைத் (ballistic) தயாரிப்புக்காக டெவில் செயல் திட்டம் (Project Devil) மற்றும் வாலியன்ட் செயல் திட்டம் (Project Valiant) என்ற இரு திட்டங்களை இயக்கினார். மத்திய அமைச்சரவை மறுத்தபோதிலும் பிரதமர் இந்திரா காந்தி தனது தன்னதிகாரம் மூலம் கலாமின் கீழ் இயக்க உள்ள விண்வெளி திட்டங்களுக்கு ரகசிய நிதி ஒதுக்கினார். கலாம் மத்திய அமைச்சரவை இந்த விண்வெளி திட்டங்களின் உண்மையான தன்மையை மறைப்பதற்கு ஏற்கும்படி செய்வதில் முக்கியப்பங்கு வகித்தார். அவரது ஆராய்ச்சி மற்றும் கல்வி தலைமையால் அவருக்குக் கிடைத்த பெரும் வெற்றி மற்றும் கௌரவத்தால், 1980 களில், அவரை அரசாங்கம் தனது இயக்கத்தின் கீழ் ஒரு கூடுதல் ஏவுகணை திட்டத்தைத் துவக்க தூண்டியது. கலாம் மற்றும் டாக்டர் வி,எஸ் அருணாச்சலம், உலோகவியல் மற்றும் பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகரும் அப்பொழுது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஆர். வெங்கட்ராமனின் யோசனையைப் பின்பற்றி ஒரே சமயத்தில் பல ஏவுகணைகளின் தயாரிப்பில் ஈடுபட்டார்கள். ஆர் வெங்கட்ராமன் ஒருங்கிணைந்த ஏவுகணை மேம்பாட்டு திட்டப் (IGMDP) பணிக்காக 388 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறுவதற்கும், கலாமை தலைமை நிர்வாகியாக்கவும் காரணமாக இருந்தார். அக்னி இடைநிலை தூர ஏவுகணை , ப்ரித்வி தந்திரோபாய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் பல ஏவுகணைகளை உருவாக்குவதில் ஏற்படும் தவறான நிர்வாகம், அதிக செலவு மற்றும் கால விரயம் பற்றி குறையாக விமர்சிக்கப்பட்டாலும் கலாம் இந்தத் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார். ஜூலை 1992 முதல் டிசம்பர் 1999 வரை அவர் பிரதமரின் தலைமை அறிவியல் ஆலோசகராகவும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயலாளராகவும் இருந்தார். அவர் இந்த சமயத்தில் நடந்த பொக்ரான்- II அணு ஆயுத சோதனையில் தீவிர அரசியல் மற்றும் தொழில்நுட்பப் பங்களித்தார். சோதனை கட்டத்தில் கலாம், ஆர் சிதம்பரத்துடன் சேர்ந்து தலைமை திட்ட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார். ஊடகங்கள் எடுத்த புகைப்படங்கள் கலாமை நாட்டின் உயர்மட்ட அணு விஞ்ஞானியாக உயர்த்திக்காட்டியது.

1998 இல் கலாம் இதயம் சார்ந்த மருத்துவரான டாக்டர் சோம ராஜுவுடன் சேர்ந்து ஒரு குறைந்த செலவு கரோனரி ஸ்டென்ட் உருவாக்கினார். இது அவர்களை கெளரவப்படுத்தும் வகையில் "கலாம், ராஜூ ஸ்டென்ட்" என பெயரிடப்பட்டது. 2012 இல் கிராமப்புறங்களில் உள்ள சுகாதார வழிமுறைக்காக இவர்கள் வடிவமைத்த டேப்லெட் கணினி "கலாம், ராஜூ டேப்லெட்" என்று பெயரிடப்பட்டது.

குடியரசுத் தலைவர் பதவி
அப்துல் கலாம் இந்தியாவின் பதினொன்றாவது குடியரசுத் தலைவராக, கே ஆர் நாராயணனுக்கு பிறகு பணியாற்றினார். அவர் 2002-ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் 107,366 வாக்குகளை பெற்ற லட்சுமி சாகலை, 922,884 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் 25 ஜூலை 2002 முதல் 25 ஜூலை 2007 வரை பணியாற்றினார்.
10 சூன் 2002 ல் அப்பொழுது அதிகாரத்தில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA), எதிர்க்கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் ஜனாதிபதி பதவிக்கு கலாமை முன்மொழியப் போவதாக அறிவித்தது. சமாஜ்வாடி கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் அவரை வேட்பாளராக ஆதரிப்பதாக அறிவித்தது. சமாஜ்வாடி கட்சி கலாமிற்கு தனது ஆதரவை அறிவித்த பின்னர், அப்போதைய ஜனாதிபதி கே ஆர் நாராயணன் இரண்டாவது முறையாக போட்டியிடாமல் கலாம் நாட்டின் 11 வது குடியரசுத் தலைவர் ஆவதற்கு களத்தை விட்டு வெளியேறினார்.

18 சூன் 2002 இல் கலாம், வாஜ்பாய் மற்றும் அவரது மூத்த அமைச்சரவை சகாக்களுடன் சேர்ந்து இந்திய பாராளுமன்றத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

15 ஜூலை 2002 ல் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு மாநிலங்கள் அவையுடன் பாராளுமன்றத்தில் ஊடகங்களின் கலாமிற்கு வெற்றியென்ற முடிவான கூற்றுடன் நடந்தது. வாக்குகள் எண்ணும் பணி ஜூலை 18 ம் தேதி நடைபெற்றது. கலாம் ஒரு தலை போட்டியில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார். அவர் இந்தியக் குடியரசின் 11 ஆவது தலைவரானார். ஜூலை 25 ஆம் தேதியில் பதவியேற்ற பின்பு ராஷ்ட்ரபதி பவனுக்கு குடியேறினார். குடியரசுத் தலைவர் ஆவதற்கு முன் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா கொடுத்து கௌரவிக்கப்பட்ட மூன்றாவது ஜனாதிபதி ஆவார். டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்(1954) மற்றும் டாக்டர் சாகிர் ஹுசைன்(1963) ஆகியோர் ஜனாதிபதி ஆவதற்கு முன் பாரத ரத்னா விருது பெற்றவர்கள். அவர் ராஷ்ட்ரபதி பவனை ஆக்ரமித்த முதல் விஞ்ஞானி மற்றும் மணமாகாதவர் ஆவார்.

ஜனாதிபதி காலத்தில் விளாடிமிர் புடின் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோருடன் கலாம்
அவரின் ஜனாதிபதி காலத்தில், அவர் "மக்களின் ஜனாதிபதி" என்று அன்பாக அழைக்கப்பட்டார். அவர், ஆதாயம் தரும் பதவி மசோதாவை கையெழுத்திடுவதே தனது பதவி காலத்தில் எடுத்த கடினமான முடிவு என்று கூறுகிறார்.

21 இல் 20 கருணை மனுக்களை ஜனாதிபதியாக விசாரித்து முடிவெடுப்பதில் செயலற்றவர் என்று விமர்சிக்கப்படுகிறார். இந்திய அரசியலமைப்பின் 72 வது சட்டத்தின் கீழ் மன்னிப்பு வழங்கல், இறப்பு தண்டனை வழங்கல் மற்றும் நிறுத்தல், மாற்று இறப்பு வரிசையில் குற்றவாளிகளின் மரண தண்டனையை நிகழ்த்தல் ஆகியவற்றை செயல்படுத்த ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. கலாம் தனது 5 ஆண்டு பதவிக் காலத்தில், கற்பழிப்பு குற்றம் புரிந்த தனஞ்சாய் சட்டேர்ஜீயின் கருணை மனுவை தள்ளுபடி செய்து தூக்கிலிட ஆணை கொடுத்து ஒரே ஒரு தீர்மானமெடுத்தார். 20 மனுக்களில் மிக முக்கியமான காஷ்மீரி தீவிரவாதி அப்சல் குருவிற்கு அவர் டிசம்பர் 2001 ல் பாராளுமன்றத்தின் மீது நடத்திய தாக்குதலுக்காக 2004 ல் உச்ச நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது. 20 அக்டோபர் 2006 ம் நாள் மரண தண்டனை நிறைவேற்ற வழங்கிய உத்தரவின் மீதான கருணை மனு நிலுவையில் வைக்கப்பட்டதால் அவர் மரண வரிசையில் தொடர்ந்து வைக்கப்பட்டார்.

20 சூன் 2007 ஆம் தேதியில், தனது பதவிக் காலத்தின் இறுதியில், 2007 ஜனாதிபதித் தேர்தலில் தனது வெற்றி நிச்சயமாக இருந்தால் இரண்டாவது முறையாக குடியரசுத் தலைவர் பதவியில் நீடிக்க தனது சம்மதத்தைத் தெரிவித்தார். எனினும், இரண்டு நாட்கள் கழித்து எந்த அரசியல் செயல்பாடுகளிலிருந்தும் ராஷ்ட்ரபதி பவனை சம்பந்தப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கூறி மறுபடியும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று முடிவு செய்தார். அவருக்கு இடது சாரி, சிவ சேனா மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் புதுப்பிக்கப்பட்ட ஆணை / ஆதரவு இல்லை.

24 ஜூலை 2012 , 12 வது குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டிலின் பதவிக் காலம் முடிவு பெரும் நிலையில், ஏப்ரலில் ஊடக அறிக்கைகள் இரண்டவது முறையாக கலாம் பரிந்துரைக்கப்படலாம் என்று கூறின. அந்த அறிக்கைக்குப் பிறகு, சமூக வலைப்பின்னல் தளங்கள் கலாம் வேட்பாளராக நிற்பதற்கு ஆதரவை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் செயல்பட்டன. திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகள், தனது பரிந்துரையான கலாமை 2012 ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக நிறுத்த ஆதரவு கொடுக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி கூறியது. தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு முலாயம் சிங் யாதவ் மற்றும் மமதா பானெர்ஜி கலாமிற்கு தங்களது ஆதரவையும் அவரின் பெயரை முன்மொழியவும் ஆர்வம் தெரிவித்தனர். சம்மதம் தெரிவித்த சில நாட்களில் முலாயம் சிங்க் யாதவ் மமதா பானெர்ஜியை தனி ஆதரவாளராக்கி விட்டு பின்வாங்கினார். 18 சூன் 2012 ம் தேதியில் பல ஊகங்களுக்குப் பிறகு, கலாம் 2012 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மறுத்து விட்டார்.

விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகள்
போக்ரான் II இன் நம்பகமான மற்றும் உண்மை அறிக்கை பற்றிய பற்றாக்குறையால், ஒரு விஞ்ஞானியாக கலாமைச் சுற்றி சர்ச்சை உள்ளது. தள சோதனை இயக்குனர் கே சந்தானம் வெப்ப அணு ஆற்றல் குண்டு ஒரு தோல்வியுற்ற சோதனையென்றும் கலாமின் அறிக்கை தவறானதென்றும் விமர்சித்தார். எனினும் இந்த கூற்றை கலாமும், போக்ரான் II இன் முக்கிய கூட்டாளியான ஆர் சிதம்பரமும் மறுத்தனர்.

தனிநபர் தாக்குதல்கள்
அணுசக்தித் திட்டங்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய போதிலும், அணு அறிவியலில் கலாமிற்கு "அதிகாரம்" இல்லை என்று அவரின் பல சக பணியாளர்கள் கூறினர். ஹோமி சேத்னா என்ற இரசாயனப்பொறியாளர், அணு அறிவியல் மற்றும் அணு இயற்பியல் கட்டுரைகளை வெளியிட கலாமிற்கு எந்தப் பின்னணியும் இல்லை என்று விமர்சித்தார். கலாம் அணுப் பொறியியலில் இருந்து முற்றிலும் வேறுபட்ட விண்வெளிப் பொறியியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார். மேலும் அவரது சாதனைகளுக்காக பல பல்கலைக்கழகங்கள் வழங்கிய பட்டமும் அணுப் பொறியியலிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்றும் சேத்னா கூறினார். 1950 இல் கலாம் தனது கல்லூரிப் படிப்பில் மேம்பட்ட இயற்பியலில் தோல்வி அடைந்தார் என்றும் "அவருக்கு அணு இயற்பியல் பற்றி என்ன தெரியும்" என்றும் சேத்னா அவரது கடைசி தேசிய தொலைக்காட்சிப் பேட்டியில் கூறினார். மேலும் அணு விஞ்ஞானி என்ற தேசிய அந்தஸ்து பெற ஜனாதிபதி பதவியை உபயோகிப்பதாகவும் கூறினார். மற்றவர்கள், இந்திய அணு சக்தி ஆலைகளில் கலாம் பணிபுரியவில்லையென்றும் ராஜா ராமண்ணா கீழ் முடிக்கப்பட்ட அணு ஆயுத வளர்ச்சியில் அவருக்கு பங்கு இல்லையென்றும் கூறினர். 1970 இல் எஸ். எல். வி திட்டத்தில் விண்வெளிப் பொறியாளராகவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் சேர்வதற்கு முன், 1980 முதல் திட்ட இயக்குநராகவும் இருந்தார் என்றும் சேத்னா முடித்தார். பெங்களூருவில் உள்ள பிரபல இந்திய அறிவியல் கழகம், அறிவியல் சான்றிதழ்கள் இல்லாததால் கலாமின் விண்ணப்பத்தை நிராகரித்தது.

2008 இல் ஏவுகணை திட்டத்தில் ஏவுகணை கண்டுபிடிப்புகள் பற்றிய அவரின் சொந்தப் பங்களிப்பை இந்திய ஊடகங்கள் கேள்வியாக்கியது. கலாம் அக்னி, ப்ரித்வி மற்றும் ஆகாஷ் ஏவுகணை கண்டுபிடிப்பில் தனி புகழ் பெற்றிருந்தார். மேற்கண்ட எல்லாவற்றையும் பிற விஞ்ஞானிகள் ஆராய்ந்து, வடிவமைத்து, உருவாக்கியபோது கலாம் அதற்கான நிதி மற்றும் பல ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் இயக்குநர் என்ற முறையில் கலாமிற்கு நிறைய புகழ் சென்றடைந்தன. மேம்பட்ட கணினி ஆய்வகத்தின் முன்னாள் இயக்குநர் மற்றும் அக்னி ஏவுகணை முன்னாள் இயக்குநரான அகர்வால் அக்னி ஏவுகணையின் வெற்றிகரமான வடிவமைப்புக்கு உண்மையான காரணமாக இருந்தார் என்று கருதப்படுகிறது. கலாம் அவரது சொந்த வாழ்க்கை வரலாற்றில், அக்னி ஏவுகணை கண்டுபிடிப்பில் முன்னாள் சென்னை தொழில்நுட்ப நிறுவன மாணவரான அகர்வாலின் முக்கியப் பங்கை புகழ்ந்து எழுதினார். பிரித்வி திட்டத்தில் சுந்தரம் என்பவரை நிழல் மூளை என்றும் திரிசூல் ஏவுகணைத் திட்டத்தில் மோகனை என்பவரையும் புகழ்ந்துள்ளார். 2006 இல் பிரபல மூத்த ஊடக நிருபர் பிரபுல் பிடவை ஒரு செய்தித்தாளில் (THE DAILY STAR), முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அங்கீகரிக்கப்பட்டு டாக்டர் அப்துல் கலாம் இயக்கத்தின் கீழ் நிறுவப்பட்ட இரண்டு விண்வெளித் திட்டங்கள் "மொத்தத் தோல்வி" என்று எழுதியிருந்தார். 1980 களில் இந்தத் திட்டங்கள் இரண்டும் இந்திய இராணுவம் கொடுத்த அழுத்தத்தினால் ரத்து செய்யப்பட்டன.

உள்ளூர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் கூடங்குளம் அணு சக்தி ஆலை அமைப்பதில் ஆதரவு தந்து தனது நிலைபாட்டைக் கூறிய கலாமை மக்கள் குழுவினர் குறை கூறினர். அவர்கள் கலாம் ஒரு அணு சக்தி சார்பு விஞ்ஞானி என்றும் பாதுகாப்பு பற்றிய அவரது உறுதிமொழியை ஏற்க விருப்பமில்லாமலும் அவரது வரவை விரோதமாகவும் கருதினர்.

அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளின் தனி நபர் சோதனை[தொகு]
29 செப்டம்பர் 2011 இல் நியூ யார்க்கின் கென்னெடி விமான நிலையத்தில் விமானம் ஏறும் போது தனி நபர் சோதனைக்கு உட்பட்டார். அமெரிக்கப் பாதுகாப்பு நெறி முறைகளின் கீழ் பாதுகாப்பு சோதனை நடைமுறைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட முக்கிய பிரமுகர்கள் வகையின் கீழ் அவர் வரவில்லை என்று "தனித் திரையிடப்பட்ட" சோதனைக்குட்பட்டார். இதற்கு விமானக் குழுவிலிருந்து எதிர்ப்பு இருந்த போதிலும், "தனித் திரையிடப்பட்ட" சோதனை நிபந்தனையின் கீழ் சரி என்று கூறி, அவரது வெளிச்சட்டை மற்றும் காலணிகளை அவர் "ஏற் இந்திய" விமானம் ஏறிய பிறகு சோதனைக்கு கேட்டனர். 13 நவம்பர் 2011 வரை இச்சம்பவம் வெளி வரவில்லை. இச்சம்பவம் பொதுச் சீற்றத்தை நாட்டு மக்களிடம் உருவாக்கியுள்ளது என்றும் இதற்கு இந்தியா பதிலடி நடவடிக்கை எடுக்கும் என்றும் அச்சுறுத்தியது. இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த சம்பவம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்தும், பதிலாக அமெரிக்க அரசு சிரமத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து கலாமிற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது என்றும் தெரிவித்தது. இதற்கு முன் 2009 இல், சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகத்தின் இந்தியாவில் பாதுகாப்பு சோதனை விலக்கு பட்டியலில் கலாம் இருந்த போதிலும், புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி பன்னாட்டு விமான மையத்தில் "காண்டினெண்டல் ஏர்லைன்ஸ்" ன் அடிப்படை பணியாளர்கள் அவரை ஒரு சாதாரண பயணியைப்போல் சோதனைக்கு உட்படுத்தினர்.

எதிர்கால இந்தியா: 2020

ஏ பீ ஜே அப்துல் கலாம் உரை நிகழ்த்துகிறார்
அவருடைய இந்தியா 2020 என்ற புத்தகத்தில் கலாம், இந்தியா அறிவிலே வல்லரசு நாடாகவும், வளர்ந்த நாடாகவும், 2020 ஆம் ஆண்டிற்குள் மாறுவதற்குரிய வரை திட்டத்தை அறிவித்திருந்தார். எதிர்கால வல்லரசுகளில் ஒன்றாக இந்தியா இடம் பிடிக்க இந்திய அணு ஆயுத திட்டத்திற்கு தனது பணியை அர்ப்பணிக்கிறார்.

அவருடைய புத்தகங்களின் மொழி பெயர்ப்புப் பதிப்புகளுக்கு தென் கொரியாவில் நல்ல வரவேற்பு இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பத் துறைகளின் வேறு பல வளர்ச்சிகளிலும் கலாம் மிகுந்த ஈடுபாட்டுடன் தொடர்ந்து பணியாற்றுகிறார். உயிரி செயற்கை பதியன்கள் (BIO-IMPLANTS) வளர்ப்பதற்கான ஆராய்ச்சித் திட்டம் ஒன்றை முன்மொழிந்திருக்கிறார். அவர் தனியுரிமை தீர்வுகள் மீது திறந்த மூல ஆதரவாளராகவும் மற்றும் பெரிய அளவிலான இலவச மென்பொருள் பயன்படுத்துதல், பெருமளவு மக்களுக்கு தகவல் தொழில்நுட்ப நன்மைகளை கொண்டு வரும் என்றும் நம்புகிறார்.

விஞ்ஞான ஆலோசகர் பதவியிலிருந்து 1999 ல் ராஜினாமா செய்த பிறகு, ஒரு லட்சம் மாணவர்களுடன் இரண்டு வருடங்களுக்குள் கலந்துரையாட வேண்டுமென்று குறிக்கோள் வைத்திருந்தார்.

அவர் அவரது சொந்த வார்த்தைகளில் "நான் இளம் வயதினருடன் குறிப்பாக உயர்நிலைப் பள்ளி மாணவர்களுடன் இருக்கும்போது நிறைவாக உணர்கிறேன்" என்று கூறியுள்ளார்.

இனிமேல் என்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் நோக்கமும் அவர்களுடைய கற்பனா சக்தியை ஊக்குவிக்கவும் இந்தியாவை வல்லரசாக மாற்றும் திட்டத்திற்கு அவர்களை தயார்படுத்தவும் வரை படம் ஏற்கனவே தயாரித்துள்ளேன்.

அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்திலும், அதற்கு பிந்தைய காலத்தில் அகமதாபாத் மற்றும் இந்தோரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்திலும் வருகை பேராசிரியராகவும், அதிபராக இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திலும், பேராசிரியராக சென்னை அண்ணா பலகைக்கழகத்தின் விண்வெளி பொறியியல் பிரிவிற்கும், மைசூரில் உள்ள ஜெ.எஸ்.எஸ். பல்கலைகழகம் மற்றும் சோமாலியாவில் முழுவதிலும் உள்ள பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு சேர்ப்பு / வருகை ஆசிரியராகவும் மாணவர்களுடன் கலந்துரையாடுவதைத் தொடர்ந்து செய்து வந்தார்.

பிரபல கலாசாரம்
மே 2011 இல், கலாம், ஊழலைத் தோற்கடிக்க பணியை மைய கருவாக கொண்ட "நான் என்ன கொடுக்க முடியும்" என்ற திட்டத்தைத் தொடங்கினார். அவருக்கு தமிழ்க் கவிதை எழுதுவதிலும், கம்பியைக் கொண்டு தயாரான தென்னிந்திய இசைக் கருவியான வீணை வாசிப்பதிலும் ஆர்வம் இருந்தது.

2003 மற்றும் 2006 ஆம் வருடங்களுக்கான ஒரு சங்கீதத் தொலைக்காட்சியின் (எம்.டி.வி.) "யூத் ஐகான்" விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். 2011 ஆம் ஆண்டில் வாடிய ஆனால் புத்திசாலியான "சோட்டு" என்ற பெயருள்ள ராஜஸ்தானி பையனிடம் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தியதாகவும், அந்தச் சிறுவன் கலாமை கௌரவிக்கும் விதமாக தன்னுடைய பெயரை கலாம் என்று கொண்டதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

காட்சியகம்

காட்சியகமாக மாறிய அப்துல் கலாம் பிறந்த வீடு, ராமேஸ்வரம்
ராமேஸ்வரம், மசூதி தெருவில் உள்ள அப்துல் கலாம் பிறந்த வீட்டின் முதல் மாடியில், மிஷன் ஆப் லைப் காலேரி (Mission of Life Gallery) என்ற பெயரில், அப்துல் கலாம் பெற்ற விருதுகள், முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்ற புகைப்படங்கள் மற்றும் எழுதிய நூல்கள் இடம் பெற்றுள்ளன. இக்காட்சியம் நாள்தோறும் காலை எட்டு மணி முதல் இரவு ஏழு மணி வரை பொது மக்கள் கட்டணமின்றி காணும் வகையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பெற்ற விருதுகளும் மரியாதைகளும்
ஐக்கிய நாடுகள் அவையில் ஏபிஜே அப்துல் கலாமின் 79 ஆவது பிறந்த நாள் உலக மாணவர் தினமாக அறிவிக்கப்பட்டது. அவர் 40 பல்கலைக்கழகங்கள் வழங்கிய மதிப்புறு முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றியமைக்கும், அரசின் விஞ்ஞான ஆலோசகராக பணியாற்றியமைக்கும், 1981 ஆம் ஆண்டில், பத்ம பூஷண் விருதையும், 1990 ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் விருதையும் இந்திய அரசு வழங்கிக் கௌரவித்தது.

இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவை விஞ்ஞான வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பம் நவீனமயமாக்கலில் அவரின் மகத்தான மற்றும் மதிப்புமிக்க பங்களிப்புக்காக பெற்றார்.

விருது அல்லது மரியாதை பெற்ற ஆண்டு விருது அல்லது மரியாதையின் பெயர் விருது வழங்கும் அமைப்பு
2014 அறிவியல் டாக்டர் (பட்டம்) எடின்பரோ பல்கலைக்கழகம்.
2012 சட்டங்களின் டாக்டர் (பட்டம்) சைமன் ஃப்ரேசர் பல்கலைக்கழகம்.
2011 IEEE கவுரவ உறுப்பினர்.
2010 பொறியியல் டாக்டர் (பட்டம்) வாட்டர்லூ பல்கலைக்கழகம்.
2009 ஹூவர் மெடல் ASME மணிக்கு, அமெரிக்கா.
2009 சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, அமெரிக்கா.
2008 பொறியியல் டாக்டர் (பட்டம்) நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சிங்கப்பூர்.
2007 கிங் சார்லஸ் II பதக்கம் ராயல் சொசைட்டி, இங்கிலாந்து.
2007 அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம் உல்வெர்ஹாம்டன் பல்கலைக்கழகம், இங்கிலாந்து
2000 ராமானுஜன் விருது ஆழ்வார்களில் ஆராய்ச்சி மையம், சென்னை
1998 வீர் சவர்கார் விருது இந்திய அரசாங்கம்
1997 தேசிய ஒருங்கிணைப்பு இந்திரா காந்தி விருது இந்திய அரசாங்கம்.
1997 பாரத ரத்னா இந்திய அரசாங்கம்
1990 பத்ம விபூஷன் இந்திய அரசாங்கம்
1981 பத்ம பூஷன் இந்திய அரசாங்கம்
மறைவு
ஜூலை 27, 2015-ல் இந்தியாவின் மேகாலயா மாநிலத்தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாற்றுகையில் (மாலை சுமார் 6.30 மணியளவில்) மயங்கி விழுந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார்.

இறுதி மரியாதை
இராமேஸ்வரத்தில் முழு இராணுவ மரியாதையுடன் 2015 ஜூலை மாதம் 30ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட நல்லடக்க நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

மறைவுக்குப் பின்னர் பெற்ற சிறப்புகள்
பீகார் மாநிலம் பாட்னாவில் கிஷான்கஞ்சில் உள்ள வேளாண் கல்லுாரி மற்றும் அறிவியல் நகரத்துக்கு, அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்தது.
அப்துல் கலாம் பிறந்த தினமான அக்டோபர் 15 ஆம் தேதி வாசிப்பு நாளாக கொண்டாடப்படும் என்று மகாராஷ்ட்ர அரசு அறிவித்தது.
உத்தரபிரதேச மாநில தொழில் நுட்ப பல்கலைக்கழகத்திற்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அறிவித்தார்.
அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15 அன்று தமிழ்நாட்டில் இளைஞர் எழுச்சி நாளாக தமிழ்நாடு அரசு சார்பில் கொண்டாடப்படும் எனவும், ஒவ்வொரு ஆண்டும் இந்திய விடுதலை நாளான ஆகஸ்டு 15 ஆம் தேதியன்று அறிவியல் வளர்ச்சி, மாணவர் நலன் மற்றும் மனிதவியலில் சிறப்பாக செயல்பட்ட ஒருவருக்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது வழங்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் அறிவித்தார்.
புதுதில்லியில் உள்ள அவுரங்சீப் சாலைக்கு எ. பி. ஜெ. அப்துல் கலாம் சாலை எனப் பெயரிட்டு புதுதில்லி மாநகராட்சி ஆணையிட்டது.
ஆந்திர பிரதேச சட்டபேரவையில் இவருக்கு புகழாரம் சூட்டப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் சிறந்த மனிதன் விவேகனந்தர், 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த மனிதர் காந்தி அடிகள், 21 ஆம் நூற்றாண்டின் சிறந்த மனிதர் அப்துல் கலாம் அவர்கள் என்று புகழ் பாடப்பட்டது.
கலாம் எழுதிய புத்தகங்கள்
Turning Points; A journey through challenges 2012.
Wings of Fire: An Autobiography அக்னிச் சிறகுகள் அருண் திவாரியுடன் இணைந்து எழுதிய சுய சரிதை; பல்கலைக்கழகங்கள் பிரஸ், 1999.
இந்தியா 2020: புதிய ஆயிரம் ஆண்டு காலத்திற்காக ஒரு பார்வை வை எஸ் ராஜனுடன் இணைந்து எழுதியது; நியூயார்க், 1998.
Ignited Minds : Unleashing the Power Within India ; வைகிங், 2002.
The Luminous Sparks (வெளிச்சத் தீப்பொறிகள்) ; புண்ய பப்ளிசிங் பிரைவேட் லிமிடெட், 2004.
Mission India (திட்டம் இந்தியா) ; ஏ பீ ஜே அப்துல் கலாம், மானவ் குப்தா மூலம் ஓவியங்கள் ; பென்குயின் புக்ஸ், 2005.
Inspiring Thoughts (ஊக்கப்படுத்தும் யோசனைகள்) ; ராஜ்பால் & சன்ஸ், 2007.
Developments in Fluid Mechanics and Space Technology ரோட்டம் நரசிம்காவுடன் இணைந்து எழுதியது; இந்திய அறிவியல் கலைக்கழகம், 1988.
(Guiding souls) எனது வானின் ஞானச் சுடர்கள் தனது நண்பர் அருண் கே.திவாரியுடன் இணைந்து எழுதியது.
கலாம் குறித்த வாழ்க்கை சரிதங்கள்.
Eternal Quest: Life and Times of Dr. Kalam எஸ் சந்திரா; பென்டகன் பதிப்பகம், 2002.
ஆர்.கே. ப்ருதி மூலம் குடியரசு தலைவர் ஏ பீ ஜே அப்துல் கலாம்; அன்மோல் பப்ளிகேஷன்ஸ், 2002.
A. P. J. Abdul Kalam: The Visionary of India கே பூஷன், ஜி காட்யால் ; APH பப். கார்ப், 2002.
பி தனாபால் A Little Dream (ஒரு சிறிய கனவு ) (ஆவணப்படம்); மின்வெளி மீடியா பிரைவேட் லிமிடெட், 2008 இயக்கியது.
The Kalam Effect: My Years with the President பீ எம் நாயர் ; ஹார்ப்பர் காலின்ஸ், 2008.
Fr.AK ஜார்ஜ் மூலம் My Days With Mahatma Abdul Kalam (மகாத்மா அப்துல் கலாமுடன் என் நாட்கள்) ; நாவல் கழகம், 2009.

'நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்... ஆனால் அவரது இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும்' என்ற பொன்னா வார்த்தைகளுக்கு உதாரணமாக வாழ்ந்தவர் மறைந்த குடியரசுத்தலைவர் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம்.

அப்துல்கலாம் நினைவு நாளில் அவரது பொன்னான மொழிகளை நினைவு கூர்வோம்
•ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் உறைந்து கிடக்கும் அக்னிக் குஞ்சுகள் சிறகு முளைத்து பறக்கட்டும்! இந்திய புண்ணியத் திருநாட்டின் புகழ் ஜூவாலை விண்ணிலும் பேரொளி வீசி பரவட்டும்!
 •ஒருவர் தன்னைத்தானே ஆராய்ந்து பார்க்கும்போது, தான் காண்பதைத் தவறாக எடைப்போடக்கூடும். பெரும்பாலானோரின் நோக்கங்கள் நல்லபடியாக இருப்பதால், தாங்கள் என்ன செய்தாலும் அது நல்ல விஷயம் தான் என்றே முடிவு செய்துவிடுகிறார்கள். எந்த ஒரு நபரும் நேர்மையோடும் நியாயத்தோடும் தன்னை எடை போட்டுப் பார்ப்பதில்லை.
 •சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.
 •இன்னல்களும் பிரச்சனைகளும் நாம் வளர்ச்சியடைவதற்காக கடவுள் வழங்கும் வாய்ப்புகள் என்பது என் நம்பிக்கை. எனவே உங்களுடைய நம்பிக்கைகளும் கனவுகளும் இலட்சியங்களும் தகர்க்கப்படும்போது அந்த சிதைவுகளுக்கிடையே தேடிப் பாருங்கள்!
•இடிபாடுகளுக்கிடையே புதைந்து கிடக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு உங்கள் கண்ணில் படக்கூடும்!
•தெளிவான கண்ணோட்டம் இல்லாத தடுமாற்றம்; திசை தெரியாத குழப்பம். இதுதான் இந்திய இளைஞர்களை வாட்டும் மிகப் பெரிய பிரச்சனை. நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை. •பிரச்சனையை சகித்துக்கொள்ளாமல், எதிர்கொண்டு சமாளியுங்கள். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நிர்ணயிப்பதுதான் பிரச்சினை. வாட்டி வதைத்தாலும் கடுமையாக பாடுபட்டால்தான் பிரச்சைனைகளோடு மல்லுக்கு நின்று தீர்வு காண முடியும். •காலத்தின் மணல் பரப்பில் உன் கால்சுவடுகளைப் பதிக்க விரும்பினால் உன் கால்களை இழுத்து இழுத்து நடக்காதே!
 •கற்றலின் ஒரு அங்கமாக தவறுகளை அனுதிக்க வேண்டும். தவறே செய்யக்கூடாது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. துணிச்சலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம்.
•தனது இலக்கைக் குறிவைத்து தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு சின்னப்புள்ளியும் பெரும் புள்ளிதான். எனவே சளைக்காமல் முயற்சித்து கொண்டிருங்கள்.
 •வெட்டித்தனமாக இருப்பதிலும் சில்லரைத்தனமான விஷயங்களிலும் மனதை அலைபாய விடக்கூடாது என்பதில் விடாப்பிடியாக இரு! •அதிகமான உணர்வதலில், ஏராளமாகக் கற்றுக் கொள்வதில், நிறைய வெளிப்படுத்துவதில் ஆசை கொண்டிரு!
 •வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி.
 •அலட்டிக் கொள்ளாமல் இருக்கும் போது அபாரமான செயல்பாட்டிற்குப் பலன் கிடைக்கும்! விஷயங்கள் எப்படி வருகின்றனவோ அதை அப்படியே எடுத்துக் கொள்ளவேண்டும்.
•வெற்றிகரமான சாதனைகளுக்கு நான்கு அடிப்படை அம்சங்கள் அவசியம். அவை இலக்கு நிர்ணயம் ஆக்கபூர்வமான சிந்தனை; கற்பனைக் கண்ணோட்டம்; நம்பிக்கை என நான்காகும்.
 •தங்களுடைய தொழிலில் சிகரத்தை எட்ட விரும்புகிறவர்களுக்குத் தேவையான அடிப்படைத் தகுதி முழுமையான பொறுப்புணர்வு.
 •கால எல்லையைத் தவிர வேறு எந்த வித்த்திலும் ஒருவரின் அறிவாற்றலை அபகரிக்க இயலாது.
 •சுயசிந்தனை ஆற்றலும் தன்னம்பிக்கையும், தன்னைத்தானே அறிந்துக் கொள்ளும் திறனும், நிறைந்த மக்களைக் கொண்டிருக்கும் தேசத்தை எந்த தேசவிரோத அல்லது சுயநல சக்தியாலும் ஆட்டிப் படைக்க முடியாது.

கார்கில் போர் வெற்றி நாள் ஜூலை 26.


கார்கில் போர் வெற்றி நாள் ஜூலை  26.
கார்கில் போர் ( Kargil War) அல்லது கார்கில் பிரச்சனை, 1999இல் மே முதல் ஜூலை வரை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில், நடந்த போராகும். இந்த போர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் நகரின் அருகில் நடந்தது. கார்கிலை மீட்க இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையான விஜய் நடவடிக்கை என்ற பெயரிலும் இது வழங்கப்படுகிறது.

மே 1999இல் பாகிஸ்தான் இராணுவமும் காஷ்மீரி போராளிகளும் பாகிஸ்தானிலிருந்து கட்டுப்பாடுக் கோடைத் தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்ததே போருக்கு முக்கிய காரணமாகும்.போரின் ஆரம்பத்தில் பாகிஸ்தான், பழியை முற்றிலுமாக காஷ்மீரி போராளிகள் மீது சுமத்தியது. ஆனால், உயிரிழந்த வீரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலமாகவும், போருக்குப்பின் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆகியோர் விடுத்த அறிக்கைகள் மூலமாகவும், பாகிஸ்தான் துணை இராணுவப் படையினர், தளபதி அஷ்ரஃப் ரஷீத் தலைமையில் போரில் ஈடுபட்டிருந்தது உறுதியானது. இந்திய வான்படையின் துணையோடு, இந்தியத் தரைப்படை, பாகிஸ்தான் இராணுவம் மற்றும் போரளிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்தியப் பகுதிகளை மீட்டது. சர்வதேச நாடுகள் பாகிஸ்தானின் செயலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், பாகிஸ்தான் படைகள் இந்தியாவுடனான போரைக் கைவிட்டன.

இப்போரானது, மிக உயர்ந்த மலைத்தொடரில் மிகுந்த சவால்களை எதிர்கொண்டு நடந்த போருக்கு சிறந்த உதாரணமாகும். இதுவரை இந்த போர் மட்டுமே, அணு ஆயுத சக்தியுடைய நாடுகள் இரண்டுக்கிடையில் நடந்த நேரடிப் போராகும். இந்தியா முதன்முறையாக 1974 இல் வெற்றிகரமாக அணு ஆயுதச் சோதனை நிகழ்த்தியது. பாகிஸ்தானும் இரகசியமாக அணு ஆயுத ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தாலும், 1998 ஆம் ஆண்டு இந்தியா நிகழ்த்திய இரண்டாவது அணு ஆயுதச் சோதனைக்குப் பிறகு இரண்டு வாரங்கள் கழித்தே பாகிஸ்தான் தனது முதல் அணு ஆயுதச் சோதனையை நிகழ்த்தியது.

அமைவிடம்
1947 ஆம் ஆண்டு நடந்த இந்திய பிரிவினைக்கு முன், கார்கில் பகுதி லடாக்கின் பல்திஸ்தான் மாவட்டத்தோடு இணைந்திருந்தது. உலகின் பல உயர்ந்த மலைகளைக் கொண்ட கார்கில் பகுதி, பல இன, மொழி மற்றும் சமய வேறுபாடுடைய மக்களைக் கொண்டது. முதல் காஷ்மீர் போருக்குப் பின் (1947 - 1948) வரையறுக்கப்பட்ட கட்டுப்பாட்டுக் கோட்டின் படி, கார்கில் நகரம் இந்திய மாநிலமான ஜம்மூ காஷ்மீரின் லடாக் பகுதியுடன் இணைக்கப்பட்டது. இந்திய-பாகிஸ்தான் போரில் (1971) பாகிஸ்தானின் தோல்விக்குப் பின் இந்தியாவும் பாகிஸ்தனும் செய்துகொண்ட சிம்லா உடன்படிக்கையில், இரு நாடுகளும் கட்டுப்பாட்டு எல்லையைத் தாண்டி இராணுவ மோதல்களில் ஈடுபடக்கூடாது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.

போர் நடைபெற்ற கார்கிலின் அமைவிடம்
கார்கில் நகரம், ஸ்ரீநகரில் இருந்து 205 கி.மீ. (127 மைல்) தொலைவில், இந்தியாவிற்குட்பட்ட பகுதிகளின் வடக்கு எல்லையில் உள்ளது. இமய மலைகளுக்கு அருகில் அமைந்துள்ளதால் மிதமான வானிலை கொண்டதாக கார்கில் விளங்குகிறது. கோடை காலங்கள் குளுமையாகவும்; குளிர்காலங்கள் நீண்டதாகவும், மிகவும் குறைந்த வெப்பநிலை (-48 °C வரை) கொண்டதாகவும் இருக்கும். ஸ்ரீநகரையும் லேவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையான NH-1D, கார்கில் வழியாக செல்கிறது.ஊடுருவல் நடந்தது இந்த சாலைக்கு சிறிது தொலைவில் இருக்கும் முகடுகளில்தான். இப்பகுதியல் உள்ள இராணுவ கண்காணிப்புத் தளங்கள் தரைமட்டத்தில் இருந்து சுமார் 5000 மீட்டர் (16,000 அடி) உயரத்தில் அமைந்துள்ளன. மாவட்டத் தலைநகரைத் தவிர முஷ்கோ பள்ளத்தாக்கு, திரஸ் எனும் நகரம், படாலிக் பகுதி, கார்கிலின் வடகிழக்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளில் மக்கள் வசிக்கின்றனர்.

கார்கில் நகரம் ஊடுருவப்பட்டதற்கு முக்கிய காரணம், அதன் அருகில் இருந்த காலியான இராணுவ கண்காணிப்புத் தளங்களாகும். இதுபோன்ற இடங்களில், மலை முகடுகளின் உச்சியில் தற்காப்பு நிலைகள் ஏற்படுத்தப்பட்டால், அது கோட்டையை போன்ற பாதுகாப்பைத் தரும். உயரத்தில் இருக்கும் இராணுவத்தை எதிர்த்துப் போரிடும் படையினருக்கு பன்மடங்கு அதிக பலம் தேவைப்படும். என்பதைத் தவிர நடுங்க வைக்கும் குளிரையும் அப்படையினர் தாக்குப்பிடித்தாக வேண்டும்.

பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்கார்டூ எனும் நகரம் கார்கிலில் இருந்து 173 கி.மீ (107 மைல்) தொலைவில்தான் உள்ளது. அந்நகரம் பாகிஸ்தான் படையினருக்கு, தாக்குதலின் போது தேவையான ஆயுதங்கள் மற்றும் பிற தளவாடங்களை விநியோகிக்கக்கூடியதாக அமைந்தது.

பின்புலம்

இமய மலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள கார்கில் நகரம்
1971 ஆம் ஆண்டு நடந்த இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பின் இரு நாடுகளுக்கிடையே பெரும்பாலும் அமைதியே நிலவியது. ஆனால் சியாசென் பனிமலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு இரு நாடுகளும் செய்த முயற்சிகளும் அதன் காரணமாக அமைக்கப்பட்ட இராணுவ கண்காணிப்பு நிலைகளும், சிறிய அளவில் மோதல்கள் ஏற்பட காரணமாக அமைந்தது.காஷ்மீரில் 1990 களில் பாகிஸ்தான் ஆதரவுடன் நடந்த பிறிவினைவாத மோதல்களும், இரு நாடுகளும் 1998 இல் மேற்கொண்ட அணு ஆயுத சோதனைகளும், பதற்றம் அதிகரிக்கக் காரணமாயின. பதற்றத்தைத் தணிக்கவும், காஷ்மீர் மோதல்களை அமைதியான முறையில் தீர்த்துக் கொள்ளவும் இரு நாடுகளும் பிப்ரவரி 1999 இல், லாகூர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.

பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த பாகிஸ்தான் இராணுவத்தின் சில பிரிவுகளும் பாகிஸ்தான் துணை இராணுவப் படையினரும் முஜாஹிதீன் போராளிகளைப்போல இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதிக்குள் 1998-1999 களில் ஊடுருவத் தொடங்கினர். இந்த ஊடுருவல் பத்ர் நடவடிக்கை என்ற குறியீட்டுப் பெயரால் அறியப்பட்டது. காஷ்மீருக்கும் லடாக்குக்கும் உள்ள இணைப்பைத் துண்டிப்பதும்; சியாசென் பனிமலையில் இருக்கும் இந்தியப் படையினரைப் பின் வாங்க வைத்து காஷ்மீர் எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண இந்தியாவை நிர்பந்திப்பதும் இதன் முக்கிய நோக்கங்களாகக் கருதப்படுகின்றன. காஷ்மீர் பகுதியில் பதற்றம் அதிகரித்தால் சர்வதேச நாடுகள் தலையிடும் என்றும் அதன் மூலம் காஷ்மீர் பிரச்சனைக்கு விரைவில் முடிவு காண முடியும் என்றும் பாகிஸ்தான் நம்பியது. இந்தியக் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரில் நடந்து வரும் கிளர்ச்சியையும் இதன்மூலம் பெரிதாக்க முடியும் என்பதும் இதன் ஒரு முக்கிய இலக்காக இருந்திருக்கலாம்.

பாகிஸ்தான் இராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் சாகித் அஸிஸ் மற்றும் ஐ.எஸ்.ஐ யின் கூற்றுகளால் ஊடுருவலில் முஜாகிதீன் ஈடுபடவில்லை என்பதும், ஊடுருவியதும் கார்கில் போரில் ஈடுபட்டதும் பாகிஸ்தான் படையினர்தான் என்பதும் புலனாகிறது. இந்த நடவடிக்கை, இந்தியாவின் மேக்தூத் நடவடிக்கைக்குப் பாகிஸ்தானின் பதிலடி என்றும் நம்பப்படுகிறது.

இந்தியாவின் அப்போதைய தரைப்படைத் தளபதியான வேத் பிரகாஷ் மாலிக் மற்றும் பலர், இந்த ஊடுருவல் பாகிஸ்தான் இராணுவத்தால் பல காலமாகத் திட்டமிடப்பட்டது என்று கருதுகின்றனர். பல முறை பாகிஸ்தான் இராணுவம் இத்திடத்தை செயல்படுத்தப் பாகிஸ்தான் தலைவர்களிடம் (சியா உல் ஹக் மற்றும் பெனசீர் பூட்டோ) அனுமதி கேட்டும், இது பெரும் போருக்கு வித்திடக்கூடும் என்ற அச்சத்தால் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

பர்வேஸ் முஷாரஃப் பாகிஸ்தான் இராணுவத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டதும் தாக்குதலுக்கானத் திட்டங்கள் மீண்டும் வகுக்கப்பட்டன. போருக்குப் பின் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், தனக்குத் தாக்குதல் திட்டங்கள் குறித்து எவ்விதத் தகவல்களும் தெரியாது என்றும் இந்தியப் பிரதமராக விளங்கிய அடல் பிகாரி வாஜ்பாய் தொலைப்பேசியில் அழைத்து எல்லை நிலவரம் குறித்துப் பேசிய பின்னர்தான் தனக்குத் தாக்குதல் பற்றித் தெரியும் என்றும் கூறியுள்ளார். ஷெரீஃப், இத்தாக்குதலுக்கு முழு காரணம், பாகிஸ்தான் இராணுவத் தளபதியாக விளங்கிய பர்வேஸ் முஷாரஃபும் அவரது கூட்டாளிகளான சில தளபதிகளும்தான் என்று கூறியுள்ளார். ஆனால் தாக்குதல் திட்டம் குறித்து நவாஸ் ஷெரீஃபுக்கு, வாஜ்பாய் பிப்ரவரி 20 அன்று லாகூர் வருவதற்குப் பதினைந்து நாட்களுக்கு முன்னரே தெரிவிக்கப்பட்டது என்று பர்வேஸ் முஷாரஃப் கூறியுள்ளார்.

போரின் போக்கு
மோதல் சம்பவங்கள்
தேதி (1999) சம்பவம்
மே 3 கார்கிலில் பாகிஸ்தான் ஊடுருவியிருப்பது அங்குள்ள மேய்ப்பர்கள் மூலம் அறியப்பட்டது
மே 5 இந்திய இராணுவம் கார்கில் பகுதிக்கு ரோந்துக் குழுவை அனுப்பியது; பாகிஸ்தான் வீரர்கள், ஐந்து இந்திய வீரர்களைச் சிறைபிடித்து சித்திரவதை செய்து கொன்றனர்.
மே 9 பாகிஸ்தான் குண்டு வீச்சில் கார்கிலில் இருந்த ஆயுதக் கிடங்கு சேதம் அடைந்தது
மே 10 திரஸ், கக்சர் மற்றும் முஷ்கோ பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவம் ஊடுருவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது
மே மாத மத்தி இந்திய இராணுவம் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து படைகளை கார்கில் பகுதிக்கு அனுப்பியது
மே 26 ஊடுருவியவர்களுக்கெதிரான வான்வழித் தாக்குதலை இந்திய வான்படைத் தொடங்கியது
மே 27 இந்திய வான்படை மிக்-21 மற்றும் மிக்-27 ஆகிய இரண்டு போர் விமானங்களை இழந்தது; வான்படைலெப்டினன்ட் நசிகேதாவை பாகிஸ்தான் வீரர்கள் போர் கைதியாகப் பிடித்துச் சென்றனர்
மே 28 இந்திய வான்படையின் எம்.ஐ-17 என்ற போர் விமானம் பாகிஸ்தான் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது; அதனுள் இருந்த நான்கு வீரர்களும் உயிரிழந்தனர்
சூன் 1 பாகிஸ்தான் தனது தாக்குதலை பலப்படுத்தியது; இந்தியாவின் NH 1A தேசிய நெடுஞ்சாலை குண்டுவீசித் தாக்கப்பட்டது
சூன் 5 ஊடுருவலில் பாகிஸ்தான் சம்பந்தப்பட்டிருப்பது, இறந்துபோன பாகிஸ்தான் விரர்களிடமிருந்து இந்திய இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் உறுதியானது
சூன் 6 இந்திய இராணுவம் கார்கிலில் பெரும் தாக்குதலைத் தொடங்கியது
சூன் 9 படாலிக் பகுதியில் இரு முக்கிய நிலைகளை இந்திய இராணுவம் கைப்பற்றியது
சூன் 11 சீனா சென்றிருந்த பாகிஸ்தான் இராணுவ தளபதி பர்வேஸ் முஷாரஃபுக்கும் ராவல்பிண்டியில் இருந்த பாகிஸ்தானின் தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அஸிஸ் கானுக்கும் நடந்த உரையாடலை இந்தியா இடைமறித்து, ஊடுருவலில் பாகிஸ்தான் ஈடுபட்டிருப்பதை உறுதி செய்தது
சூன் 13 இந்திய இராணுவம், திரஸிலுள்ள தோலோலிங் பகுதியைக் கைப்பற்றியது
சூன் 15 அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டன், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கார்கிலில் இருந்து படைகளைத் திரும்பப்பெறுமாறு வலியுருத்தினார்
சூன் 29 இந்திய இராணுவம், இரண்டு முக்கிய நிலைகளான புள்ளி 5060 மற்றும் புள்ளி 5100 ஆகியவற்றைக் கைப்பற்றியது
சூன் 2 இந்திய இராணுவம் கார்கிலில் மும்முனைத் தாக்குதலைத் தொடங்கியது
சூன் 4 இந்திய இராணுவம் பதினோரு மணிநேரப் போராட்டத்திற்குப்பின் டைகர் ஹில் பகுதியை மீட்டது
சூன் 5 இந்திய இராணுவம் திரஸ் பகுதியை முழுமையாக மீட்டது. கிளின்டனுடனான சந்திப்பைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், பாகிஸ்தான் படைகளைத் திரும்பப்பெற ஒப்புக்கொண்டார்
சூன் 7 இந்திய இராணுவம் படாலிக் பகுதியிலுள்ள ஜுபார் என்ற இடத்தைக் கைப்பற்றியது
சூன் 11 பாகிஸ்தான் இராணுவம் கார்கிலில் இருந்துத் திரும்பத் தொடங்கியது; இந்திய இராணுவம் படாலிக் பகுதியில் முக்கிய முகடுகளைக் கைப்பற்றியது
சூன் 14 இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், விஜய் நடவடிக்கை வெற்றி அடைந்ததாக அறிவித்தார்; பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர இந்திய அரசு பல நிபந்தனைகளை முன்வைத்தது
சூன் 26 கார்கில் பிரச்சனை அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது. பாகிஸ்தானிலிருந்து ஊடுருவியவர்கள் கார்கிலில் இருந்து முற்றிலும் அகற்றப்பட்டதாக இந்திய இராணுவம் அறிவித்தது


கார்கில் போரை மூன்று முக்கிய கட்டங்களாகப் பகுக்கலாம். முதல் கட்டம், பாகிஸ்தான் தனது படை வீரர்களை இந்திய கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் எல்லைக்குள் அனுப்பி முக்கிய நிலைகளை ஆக்கிரமித்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலை NH1, பாகிஸ்தான் இராணுவத்தால் தாக்கக்கூடிய எல்லைக்குள் வந்தது. இரண்டாம் கட்டம், பாகிஸ்தான் இராணுவம் கார்கிலில் ஊடுருவியிருப்பதை இந்திய இராணுவம் கண்டுபிடித்து அவர்களுக்கெதிராக எல்லையில் படைகளைக் குவித்தது. இறுதிக் கட்டம், இந்திய இராணுவத்தினர் பாகிஸ்தான் படைகளுடன் போரிட்டு அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பல முக்கிய நிலைகளைத் தங்கள் வசமாக்கினர். சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் தனது படைகளைக் கார்கிலில் இருந்துத் திரும்பப்பெற்றது.

பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு

போரின் நிகழ்வுகள்
குளிர் காலங்களில் பனி படர்ந்த மலைகளில் உரைய வைக்கும் குளிர் நிலவும் என்பதால் இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லைக் கோட்டுக்கருகில் இருக்கும் தத்தம் இராணுவ நிலைகளைத் தற்காலிகமாக காலி செய்து பின் வாங்கிச் செல்வது வழக்கம். குளிர்காலம் முடிந்த பின் காலியாக விடப்பட்ட தத்தம் இராணுவ நிலைகளை மீண்டும் உபயோகப்படுத்துவர். ரோந்துப் பணிகள் வழக்கம் போல் தொடரும்.

பிப்ரவரி 1999 இல் பாகிஸ்தான் இராணுவம் தனது இராணுவ நிலைகளோடு சேர்த்து, கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பால் இருந்த இந்தியாவின் இராணுவ நிலைகளையும் சேர்த்து ஆக்கிரமித்துக் கொண்டது.பாகிஸ்தான் இராணுவத்தைச் சேர்ந்த வடக்குக் காலாட்படைப் பிரிவு மற்றும் சிறப்பு சேவைகள் குழுவைச் சேர்ந்த வீரர்கள் இந்திய நிலைகளை ஆக்கிரமித்து அவற்றுக்கருகில் இராணுவ தளங்களை ஏற்படுத்தினர். பாகிஸ்தான் படையினருக்கு காஷ்மீரி கொரில்லாக்களும் ஆப்கான் கூலிப்படையினரும் உதவியதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் படையினர், முஷ்கோ பள்ளத்தாக்கு, திரஸிலுள்ள மார்ப்போ லா முகடுகள், கார்கிலுக்கு அருகில் உள்ள கக்சர், சிந்து நதிக்குக் கிழக்கில் உள்ள படாலிக் பகுதி, எல்லையோரத்தில் உள்ள சோர்பாட்லா பகுதி மற்றும் சியாச்சென் பனி மலைக்குத் தெற்கேயுள்ள துர்தோக் ஆகிய பகுதிகளில் ஊடுருவினர்.

எல்லையில் இந்தியப் படைகள் குவிப்பு
இந்திய ரோந்துப் படையினர் பாகிஸ்தான் ஆக்கிரமித்தப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கவில்லை. பாகிஸ்தானின் குண்டு வீச்சுகள் இந்தியப் படையினரின் கவனத்தை ஈர்த்து, ஊடுருவும் பாகிஸ்தான் படையினருக்குத் திரைமறைவாக செயல்பட்டது. இந்த இரண்டு காரணங்களால் பாகிஸ்தானின் ஊடுருவலை இந்தியப் படையினர் கவனிக்கத் தவறினர். ஆனால் மே மாதத்தின் இரண்டாம் வாரத்தில், ஆடு மேய்ப்பவர்களிடமிருந்து கிடைத்த ஊடுருவல் குறித்தத் தகவலால் படாலிக் எல்லைப்பகுதியில், கேப்டன் சௌரப் காலியா[50] தலைமையில் இந்தியப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இவர்களை ஊடுருவியிருந்த பாகிஸ்தான் இராணுவத்தினர் தாக்கினர். இதன்மூலம் எல்லையில் ஊடுருவல் நடந்திருப்பது உறுதிபடுத்தப்பட்டது. ஆனால் ஆரம்பத்தில் ஊடுருவியவர்கள் ஜிகாதிகளாகத்தான் இருக்கக்கூடுமெனவும் ஓரிரு நாட்களில் அவர்களை அப்புறப்படுத்திவிட முடியும் எனவும் இந்திய இராணுவத்தினர் நினைத்தனர். பின்னர், எல்லைக்கோடு நெடுகவும் ஊடுருவல் நிகழ்ந்திருப்பது கண்டறியப்பட்டதும், தாக்குதல் எதிர்பார்க்கப்பட்டதைவிட பல மடங்கு பெரிதாகத் திட்டமிடப்பட்டிருப்பது இந்தியப் படையினருக்குப் புலனானது. ஆக்கிரமிப்பாளர்கள், 130 சதுர கி.மீ முதல் 200 சதுர கி.மீ வரை இந்திய நிலப்பரப்பில் ஊடுருவியதாக அறியப்படுகிறது.

இந்திய அரசு, ஆக்கிரமிப்புக்காரர்களுக்குப் பதிலடி கொடுக்க விஜய் நடவடிக்கையைத் தொடங்கியது. எல்லையில் 2,00,000 இந்திய போர் வீரர்களைக் குவிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் கார்கில் நகரம் கரடு முரடான மலைப் பகுதியில் அமைந்திருந்ததால் பெரிய படைகளை அங்கு கொன்டு செல்ல முடியாமல் போனது. எனவே இந்திய படையினர் சிறு குழுக்களாக முன்னேறினர். இந்திய இராணுவத்தைச் சேர்ந்த 20,000 வீரர்களோடு இணைந்து சில ஆயிரம் இந்திய துணை இராணுவ வீரர்களும் இந்திய வான்படையும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் தாக்குதல் நடத்தினர். இந்த இராணுவ நடவடிக்கையில் கார்கில்-திரஸ் பகுதிகளில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 30,000 ஆகும். போரின் உச்ச நிலையில் பாகிஸ்தான் படையைச் சேர்ந்த 5,000 வீரர்கள் தாக்குதலில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தியத் தரைப்படையினருக்கு உதவும் வகையில் இந்திய வான்படை, சஃபேத் சாகர் நடவடிக்கையை ஆரம்பித்தது. ஆனால் அப்போது நிலவிய வானிலை மற்றும் போர் நடைபெற்ற மலைகளின் உயரம் ஆகியவை காரணமாக இந்நடவடிக்கையின் பயன் இந்தியத் தரைப்படையினருக்கு முழுமையாகக் கிட்டவில்லை.

கடற்படைத் தாக்குதல்
தல்வார் நடவடிக்கையின் கீழ் இந்தியக் கடற்படை, பாகிஸ்தான் துறைமுகங்களை (முக்கியமாக, கராச்சி துறைமுகத்தை) முற்றுகையிட தயாரானது. இந்தியக் கடற்படையின் கிழக்கு மற்றும் மேற்கு படைப்பிரிவுகள் இனைந்து, வடக்கு அரபிக்கடலில் தீவிரமான ரோந்துப் பணிகளில் ஈடுபட்டன. பாகிஸ்தானின் கடல் வர்த்தகம் நசியும் அபாயம் ஏற்பட்டது. போரின் போது பாகிஸ்தான் பிரதமாரக இருந்த நவாஸ் ஷெரீஃப், பாகிஸ்தானிடம் அப்போது ஆறு நாட்களுக்குத் தேவையான எரிபொருட்கள் மட்டுமே இருந்தன என்று பின்னாளில் கூறினார்.

பாகிஸ்தான் நிலைகளின் மீது இந்தியத் தாக்குதல்[தொகு]
காஷ்மீர் நகரம், இமய மலைத்தொடருக்கு மிக அருகில் அமைந்துள்ளதால் அந்நகர் வழியாகச் செல்லும் ஸ்ரீநகரையும் லேவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையான NH 1D கூட இரு வழிச்சாலையாகத்தான் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அச்சாலை பாகிஸ்தான் படையினரால் குண்டு வீசித் தாக்கப்பட்டுக் கொண்டிருந்ததால் படைகளை எல்லைப் பகுதிகளுக்குக் கொண்டு செல்வது இந்திய இராணுவத்திற்கு சவாலான காரியமாக அமைந்தது. அவ்வழியாகச் சென்ற இந்திய படையினர் பாகிஸ்தானின் தாக்குதலுக்கு உள்ளாயினர். NH 1D தேசிய நெடுஞ்சாலை தொடர்ந்து பாகிஸ்தான் படைகளால் தாக்கப்பட்டு வந்ததால் லே பகுதி மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக்காரர்கள் கையெறி குண்டுகள், குண்டு எறியும் துப்பாக்கிகள், விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் மற்றும் சிறிய ரக ஆயுதங்களைக் கொண்டிருந்தனர். மேலும், பல நிலைகளில் மிதிவெடிகள் பொருத்தப்பட்டிருந்தன. சுமார் 8,000 மிதிவெடிகளை அகற்றியதாக இந்தியா போருக்குப் பின் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான், இந்தியப் படைகளின் நடமாட்டத்தை ஆளில்லா உளவு விமானங்கள் மூலமாகவும் அமெரிக்காவிடமிருந்து வாங்கிய கதிரலைக் கும்பாக்கள் மூலமாகவும் கண்காணித்தது. இந்தியப் படைகளின் முதன்மையான பணி, NH 1D தேசிய நெடுஞ்சாலையைப் பாதுகாப்பதாக இருந்தது. ஏனெனில் இந்தியப் படைகள் முன்னேறவும், உதவிப் படைகள் வந்து சேரவும் அந்த சாலை முக்கியமானதாக இருந்தது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இருந்த பல இராணுவ நிலைகள் அந்த சாலைக்கருகிலேயே அமைந்திருந்தன. எனவே அந்த சாலையைப் பாதுகாக்க அதனருகில் இருந்த நிலைகளை மீட்பது இந்தியப் படைகளுக்கு முக்கியமான பணியாக இருந்தது.

நெடுஞ்சாலைக்கு அருகில் இருந்த மலை முகடுகளைக் கைப்பற்றுவது இந்திய இரானுவத்தின் முக்கிய நோக்கமாக அமைந்தது. எனவே இந்தியப் படைகள், டைகர் ஹில், திரஸிலிருந்த தோலோலிங் பகுதி ஆகியவற்றை முதலில் தாக்கின.[65] அடுத்ததாக சியாசென் பனிமலைக்கு அருகில் இருந்த படாலிக்-துர்தோக் பகுதிகளை இந்தியப் படைகள் தாக்கின. NH 1D தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகில் அமைந்திருந்த புள்ளி 4590 மற்றும் திரஸ் பகுதியின் மிக உயரமான புள்ளி 5353 ஆகியவை பாகிஸ்தான் படையினர் ஆக்கிரமித்திருந்த முக்கியத்துவம் வாய்ந்த சில பகுதிகளாகும். இப்பகுதிகளில் இருந்து பாகிஸ்தான் படையினரால் NH 1D தேசிய நெடுஞ்சாலையை எளிதாகத் தாக்க முடிந்தது.இந்தியப் படையினர், சூன் 14 அன்று புள்ளி 4590 பகுதியைப் பாகிஸ்தான் படையினரிடமிருந்துக் கைப்பற்றினர். இம்முயற்சியில்தான் இந்தியப் படையினர் கார்கில் போரிலேயே மிக அதிகமான உயிரிழப்புகளைச் சந்திக்க நேர்ந்தது. சூன் மாத மத்தியில் அநேகமாக அனைத்து நிலைகளையும் இந்தியப் படையினர் கைப்பற்றிவிட்டபோதிலும் போரின் இறுதி வரை திரஸ் பகுதிக்கு அருகில் இருந்த நெடுஞ்சாலையின் சில பகுதிகள் தொடர்ந்து பாகிஸ்தான் படையினரின் தாக்குதலுக்கு உள்ளானது.


கார்கில் போரில் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட இந்திய வான்படையின் மிக்-21 ரக போர் விமானம்
NH 1D தேசிய நெடுஞ்சாலை இந்தியப் படையினர் வசம் வந்த பிறகு, பாகிஸ்தான் படையினரை எல்லைக் கோட்டுக்கு அப்பால் பின்வாங்க வைப்பதில் இந்திய இராணுவத்தின் கவனம் திரும்பியது. தோலோலிங் யுத்தத்தின் முடிவில் இந்தியாவின் கை ஓங்கத்தொடங்கியது. தோலோலிங் யுத்தத்தில் பாகிஸ்தான் படையினருக்குக் காஷ்மீர் போராளிகள் உதவினர். பாகிஸ்தானியரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த சில இராணுவ நிலைகள் பலமாக எதிர்த்து நின்றன. டைகர் ஹில் பகுதி (புள்ளி 5140), போரின் இறுதிக் கட்டத்தில்தான் வீழ்ந்தது. டைகர் ஹில்லில் பாகிஸ்தான் வீரர்கள் பதுங்கியிருந்துத் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் பலத்த இழப்புகள் ஏற்பட்டன. இந்தியத் தரப்பில் ஐந்து வீரர்களும், பாகிஸ்தான் தரப்பில் பத்து வீரர்களும் டைகர் ஹில்லில் நடந்த யுத்தத்தில் உயிரிழந்தனர். பல யுத்தங்கள் முன்னர் அறியப்படாத மலைகளின் உச்சியில் நடந்தன. பெயரற்ற அந்த மலைகளை அடையாளப் படுத்த புள்ளி எண்களே பயன்படுத்தப்பட்டன.

போரின் உச்சத்தில் ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற பீரங்கிகளை இந்திய இராணுவம் போர்களத்தினுள் கொண்டு வந்தது. அவ்வகையில் போஃபர்ஸ் பீரங்கிகள் கார்கில் போரில் முக்கியப் பங்காற்றின. இந்தியப் படையினர் போஃபர்ஸ் பீரங்கியைப் பயன்படுத்தித் தங்கள் தாக்குதலை விரிவாக்கினர். ஆனால் பல இடங்களில் இடப்பற்றாக்குறை காரணமாக அவற்றை உபயோகப்படுத்த முடியாமல் போனது.

இடப்பற்றாக்குரை நிலவிய இடங்களில் இந்திய வான்படை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்திய வான்படையைச் சேர்ந்த மிராஜ் 2000எச் ரக போர் விமானங்கள், பாகிஸ்தான் படையினரின் பதுங்குக்குழிகள் மீது குண்டு வீச பயன்படுத்தப்பட்டன. இந்திய வான்படை, மிக்-27 ரக போர் விமானமொன்றை இயந்திரக் கோளாரால் இழந்தது. இந்திய வான்படையைச் சேர்ந்த மிக்-21 ரக போர் விமானமொன்று பாகிஸ்தான் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்திய வான்படையைச் சேர்ந்த எம்.ஐ-8 ரக உலங்கு வானூர்தி ஒன்று, பாகிஸ்தான் படையினரின் நில வான் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பலியானது.


கார்கில் போரில் இந்திய வானபடையால் மிராஜ் 2000எச் ரக விமானங்கள் பாகிஸ்தான் படையினருக்கு எதிராகத் தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்டன
மே 27, 1999 அன்று வான்படை லெப்டினன்ட் நசிகேதா ஓட்டிச் சென்ற விமானம், படாலிக் பகுதியில் இயந்திரக் கோளாரால் வெடித்ததால் அவ்விமானத்திலிருந்து அவர் வான்குடை மூலம் வெளியேறினார். அவரைத் தேடிச் சென்ற சுகுவாட்ரன் லீடர் அஜய் அஹுஜாவின் விமானம் பாகிஸ்தான் படையினரின் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பலியானது. விமானத்திலிருந்து அவர் வான்குடை மூலமாகத் தப்பினாலும், அவரை பாகிஸ்தான் வீரர்கள் சிறைபிடித்து, சித்தரவதை செய்து கொன்றனர்.

பல முக்கிய இரானுவ நிலைகளில் இந்தியா, பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல் ஆகியவற்றைக் கையாண்டாலும், பாகிஸ்தான் படையினர் தாக்குதல் எல்லைக்கு அப்பால் இருந்ததால் அவர்களை பின்வாங்கச் செய்வது கடினமான காரியமாக அமைந்தது. எனவே, இந்திய இராணுவம் பாகிஸ்தான் படையினருக்கு எதிராக நேரடித் தாக்குதல்களை நடத்தியது. போர்களம் உயரமான மலைகளின் (18,000 அடி) உச்சியில் அமைந்திருந்தமையால் அவ்வகைத் தாக்குதல்களில் இந்தியப் படைகளால் மிக மெதுவாகவே முன்னேற முடிந்தது. பகல் நேர வெளிச்சத்தில் தாக்குவது அபாயகரமானதால், இந்தியப் படையினர் இரவின் இருளில் ஆனால் கடும் குளிரில் தாக்குதல் நடத்தினர். நேரடியாகத் தாக்குவதற்கு பதிலாக, பாகிஸ்தான் படையினரின் போக்குவரத்து வழிகளை அடைத்துக் கொண்டு முற்றுகை இடும் போர் உத்தியும் ஆராயப்பட்டது. ஆனால் இதைச் செய்வதானால் இந்தியப் படையினர் எல்லை தாண்டி, பாகிஸ்தான் பகுதிக்குள் செல்ல வேண்டி இருந்தது. போர் மேலும் பெரிதாகும் என்பதாலும் சர்வதேச நாடுகளின் ஆதரவை இழக்க நேரிடும் என்பதாலும் இந்தியா அந்த முறையைக் கையாளவில்லை.

போர் ஆரம்பித்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இந்தியப் படையினர் பெரும்பான்மையான பகுதிகளை ஆக்கிரமிப்புக்காரர்களிடமிருந்து மீட்டனர். அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களின் படி, 75% முதல் 80% வரையிலான ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் மீண்டும் இந்தியாவின் வசம் வந்திருந்தன.

இறுதிக் கட்டம்
கார்கிலில் மோதல்கள் ஆரம்பமானவுடன், பாகிஸ்தான் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்காவின் உதவியை நாடியது. மிகப்பெரிய அளவில் போர் வெடிக்கும் என்ற அச்சத்தில், பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களை ஆயத்தப்படுத்தியிருக்கிறது என்பதை அமெரிக்க உளவுத்துறை கண்டறிந்து, அப்போதைய அமெரிக்க அதிபரான பில் கிளின்டனுக்கு அவரது உதவியாளர் புரூஸ் ரீடல் மூலமாகத் தெரிவித்தது. அமெரிக்க அதிபர் பில் கிளின்டன், பாகிஸ்தான் தனது படைகளை இந்தியப் பகுதிகளில் இருந்து விலக்கிக் கொள்ளும் வரை இப்பிரச்சனையில் தலையிட மறுத்துவிட்டார். வாஷிங்டன் ஒப்பந்தப்படி, சூலை 4 ஆம் தேதி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தனது படைகளைத் திரும்பப் பெற ஒப்புக்கொண்ட பின் போர் அநேகமாக முடிவுற்ற போதிலும், சில இடங்களில் பாகிஸ்தான் படைகள் இந்தியப் பகுதிகளில் ஆக்கிரமிக்கப்ப்ட்ட நிலைகளிலிருந்து வெளியேறாமல் இருந்தனர். மேலும் பாகிஸ்தான் படையினருக்கு ஆதரவாக போரிட்ட ஜிகாத் அமைப்புகள் பாகிஸ்தானின் பின்வாங்கும் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தன; அவை போரட்டத்தைத் தொடர்ந்தன.

இந்திய இராணுவம், தனது இறுதித் தாக்குதலை சூலை மாதத்தின் இறுதி வாரத்தில் தொடங்கியது. திரஸ் பகுதியில் இருந்து பாகிஸ்தான் படையினர் முழுமையாக வெளியேற்றபட்ட பின், சூலை 26 ஆம் தேதி போர் முற்றிலும் முடிவுக்கு வந்தது. அந்த நாள் இந்தியாவில் கார்கில் வெற்றி நாள் என்று இந்தியாவில் ஆண்டுதோரும் கொண்டாடப்படுகிறது. போரின் முடிவில், 1972 ஆம் ஆண்டு சிம்லா உடன்படிக்கையில் இந்தியாவின் பகுதிகள் என வரையறுக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் இந்தியா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

உலகத்தின் பார்வையில்
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை பாகிஸ்தானியப் படைகள் தாண்டி இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்ததால் சர்வதேச நாடுகள் பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்தன.பாகிஸ்தான் அரசு, பழியை காஷ்மீர் போராளிகள் மீது சுமத்த முயன்றாலும் அது பலனளிக்கவில்லை. போர் ஆய்வாளர்கள், மிகவும் உயரமான மலைப்பகுதிகளை ஆக்கிரமிப்பது என்பது தேர்ந்த பயிற்சியுடைய இராணுவத்தினரால் மட்டுமே முடியக்கூடிய ஒன்று; அதை, மிகக் குறைவான பயிற்சியுடைய போராளிகளால் செய்ய இயலாதது என்று கூறினர். மேலும் பாகிஸ்தான் அரசு கார்கில் பிரச்சனையில் தனது ஈடுபாட்டை மறுத்து வந்தாலும், இரு பாகிஸ்தான் போர் வீரர்களுக்கு, கார்கில் போரில் தீரத்துடன் போரிட்டதற்காக, பாகிஸ்தானின் மிக உயரிய வீர விருதான நிஷான்-இ-ஹைதர் விருது வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி 90 பாகிஸ்தான் படை வீரர்களுக்கு (பெரும்பான்மையானவர்கள், இறந்தவர்கள்) பல்வேறு வீர விருதுகள், கார்கில் போரில் அவர்களது சிறந்த செயல்பாட்டிற்காக வழங்கப்பட்டது பாகிஸ்தான் கார்கில் போரில் ஈடுபட்டதை உறுதி செய்வதாக அமைந்தது. பாகிஸ்தான் இராணுவ தலைமை தளபதிக்கும் பாகிஸ்தான் இராணுவ உயர் அதிகாரி ஒருவருக்கும் நடந்த தொலைபேசி உரையாடலை இந்தியா இடைமறித்து பதிவு செய்தது. அதில் அவர்கள் பேசியதிலிருந்து கார்கிலை ஆக்கிரமித்திருப்பது பாகிஸ்தான் படையினரே என்பது உறுதியானது. ஆனால் அதையும் பாகிஸ்தான் மறுத்தது. கார்கில் பிரச்சனை குறித்து விமர்சிக்கப்பட்ட போது, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடே சர்ச்சைக்குரியது என்று கூறியபோதும், கார்கில் பிரச்சனையை காஷ்மீர் பிரச்சனையோடு இணைத்து சர்வதேச நாடுகளின் ஆதரவைக் கோரியபோதும் பாகிஸ்தான் படைகள்தான் கார்கிலில் ஊடுருவியது என்பது வெட்டவெளிச்சமானது.

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் தாக்குதல்கள் தீவிரமடைந்தபோது, அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் அமெரிக்காவின் ஆதரவைக் கோருவதற்காக அமெரிக்க அதிபர் பில் கிளின்டனை சந்தித்தார். ஆனால் கிளின்டன், நவாஸ் ஷெரீஃபை கண்டித்ததோடு, பாகிஸ்தான் படைகளைத் திரும்பப்பெருமாறு வலியுறுத்தினார். பில் கிளின்டன் தனது சுய சரிதையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:

பாகிஸ்தான் பிரதமரின் செயல்பாடுகள் அதிருப்தியளிப்பதாக இருந்தன. இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், காஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக லாகூர் வந்து பேச்சுவார்த்தை நடத்திவிட்டு திரும்பிய சில மாதங்களில் பாகிஸ்தான் இந்தியா மீது படையெடுத்தது அந்த அமைதிப் பேச்சுவார்தைகளை அர்த்தமற்றதாக ஆக்கிவிட்டது. இருந்தும் கார்கில் பிரச்சனையைக் காரணமாகக் கொண்டு பெரும் போர் தொடங்காமல் விட்டது இந்தியாவின் பெருந்தன்மையைக் காட்டுகிறது.

கொலோன் மாநாட்டில் ஜி8 நாடுகள், பாகிஸ்தானின் செயலை வன்மையாகக் கண்டித்ததோடு மட்டுமின்றி இந்தியாவுக்கு தங்கள் ஆதரவையும் தெரிவித்தன. ஐரோப்பிய ஒன்றியமும் பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி வந்து இந்திய பகுதிகளை ஆக்கிரமித்ததைக் கண்டித்தது. பாகிஸ்தானின் நீண்டகால நட்பு நாடான சீனாவும், படைகளைத் திரும்பப் பெறுமாரு பாகிஸ்தானை வலியுறுத்தியது. ஆசியான் போன்ற பல கூட்டமைப்புகள் கார்கில் பிரச்சனையில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தன.

சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், பாகிஸ்தான் படைகளைத் திரும்பப் பெற ஒப்புக்கொண்டார். பில் கிளின்டனும் நவாஸ் ஷெரீஃபும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் அமைதியான முறையில் காஷ்மீர் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டுமென்று நவாஸ் ஷெரீஃப் கூறினார்.

வீர விருதுகள்
இந்தியா
கார்கில் போரில் போரிட்ட பல இந்திய வீரர்கள் வீர விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

கிரனேடியர் யோகேந்திர சிங் யாதவ், 18 கிரனேடியர் பிரிவு, பரம் வீர் சக்ரா
லெப்டினன்ட் மனோஜ் குமார் பாண்டே, 1/11 கூர்கா ரைஃபில்ஸ், பரம் வீர் சக்ரா (மறைவுக்குப் பின்னர்)
கேப்டன் விக்ரம் பத்ரா, 13 ஜெ.ஏ.கே ரைஃபில்ஸ், பரம் வீர் சக்ரா (மறைவுக்குப் பின்னர்)
ரைஃபில்மேன் சஞ்சய் குமார், 13 ஜெ.ஏ.கே ரைஃபில்ஸ், பரம் வீர் சக்ரா
கேப்டன் அனுஜ் நாயர்,17 ஜெ.எ.டி ரெஜிமென்ட், மகா வீர் சக்ரா (மறைவுக்குப் பின்னர்)
மேஜர் ராஜேஷ் சிங் அதிகாரி, 18 கிரனேடியர் பிரிவு, மகா வீர் சக்ரா (மறைவுக்குப் பின்னர்)
மேஜர் சரவணன், 1 பிகார் படைப்பிரிவு, வீர் சக்ரா (மறைவுக்குப் பின்னர்)
சுகுவாட்ரன் லீடர் அஜய் அஹுஜா, இந்திய வான்படை, வீர் சக்ரா (மறைவுக்குப் பின்னர்)
பாகிஸ்தான்
இரண்டு பாகிஸ்தான் வீரர்களுக்கு நிஷான்-இ-ஹைதர் விருது வழங்கப்பட்டது.

கேப்டன் கர்னல் ஷேர் கான், நிஷான்-இ-ஹைதர் (மறைவுக்குப் பின்னர்)
ஹவல்தார் லாலக் ஜன், வடக்கு காலாட்படை, நிஷான்-இ-ஹைதர் (மறைவுக்குப் பின்னர்)
ஊடகங்களின் தாக்கம்
இரு நாட்டு மக்களின் கருத்துகளிலும் ஊடகங்கள் மிகப்பெரும் தாக்கங்களை ஏற்படுத்தின. கார்கில் போர் நடைபெற்ற சமயத்தில் இந்தியாவில் மின்னணு ஊடகவியல் பெருமளவில் வளர்ந்து கொண்டிருந்தது. அதன் காரணமாக போர் நடந்த இடங்களிலிருந்து பல காட்சிகள் இந்தியாவில் நேரலையாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டன.[85] பல இணையதளங்கள் போர் குறித்த விரிவான பகுப்பாய்வுகளை வழங்கின. தெற்காசியாவில் நேரடியாகத் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட முதல் போர் கார்கில் போரேயாகும்.[86] ஊடகங்களின் ஆழமான தாக்கத்தால் போரின்போது மக்களிடையே நாட்டுப்பற்று பெருமளவு வளர்ந்தது.

ஊடகங்களின் அதீத ஈடுபாட்டால் முரண்பாடான செய்திகள் வெளிவரத் தொடங்கின. இதை கட்டுப்படுத்த இந்திய அரசு, பாகிஸ்தான் ஊடகங்களைத் தற்காலிகமாக தடை செய்தது. பாகிஸ்தான் அரசால் இயக்கப்படும் ஊடகமான பிடிவி என்ற தொலைகாட்சி நிலையமும், டான் என்ற பாகிஸ்தான் நாளிதழின் இணையவழிப் பதிப்பும்[88] இந்தியாவில் தடை செய்யப்பட்டன. இந்தியாவின் இச்செயலை, ஊடகங்களின் சுதந்திரத்தை இந்தியா கட்டுப்படுத்துகிறது என்று சாடின. ஆனால் இந்திய ஊடகங்கள், அவை தேசத்தின் பாதிகாப்பு கருதி எடுக்கப்பட்ட முடிவிகள் என்றன. இந்திய அரசாங்கம், தி டைம்ஸ், தி வாஷிங்டன் போஸ்ட் போன்ற அயல்நாட்டு ஊடகங்களில், பாகிஸ்தான் அரசு காஷ்மீர் போராளிகளுக்கு உதவி வருவது குறித்து விளம்பரம் வெளியிட்டு இந்தியாவிற்கு ஆதரவு திரட்டியது.

போர் தீவிரமடைந்த சமயத்தில் ஊடகங்களும் தீவிரமாக போர் குறித்த செய்திகளை வெளியிட்டன. பல இந்திய தொலைகாட்சி நிலையங்கள், வளைகுடா போரில் சி.என்.என் தொலைகாட்சியில் வெளியானது போன்ற படங்களை ஒளிபரப்பின. பாகிஸ்தான் படைகளால் வீசப்பட்ட குண்டு ஒன்று, போர்களத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த தூர்தர்ஷன் தொலைகாட்சியின் ஒளிபரப்பு நிலையத்தையும் தாக்கியது. இந்தியாவின் ஊடகங்கள் பாகிஸ்தான் ஊடகங்களைவிட வெளிப்படையான தன்மையுடையதாக இருந்ததற்கு இந்தியாவில் தனியார் ஊடகங்கள் பெருமளவில் இருந்ததே காரணமாகக் கருதப்படுகிறது. கராச்சியில் பாகிஸ்தான் ஊடகவியலாளர்களிடையே நடந்த கூட்டத்தில், இந்திய அரசு தனது நாட்டு மக்களையும் ஊடகங்களையும் நம்பியது, ஆனால் பாகிஸ்தான் அரசு அதை செய்யவில்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

சர்வதேச மற்றும் இந்திய ஊடகங்கள் இந்தியாவின் நிலைக்கு ஆதரவாக இருந்தன. பல மேற்கு நாட்டு ஊடகங்கள், போருக்கு பாகிஸ்தானே காரணம் என்ற கருத்தைக் கொண்டிருந்தன. பாகிஸ்தான் ஊடகங்களைவிட அளவில் மிகப் பெரியதாக இருந்த இந்திய ஊடகங்கள், இந்திய மக்களிடையே தேசப்பற்று உணர்ச்சியைப் பன்மடங்கு அதிகமாக்கியது எனவும் அது இந்திய இராணுவ நடவடிக்கைகளின் உறுதியை அதிகரித்தன எனவும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.போர் தீவிரமடைந்தபோது பாகிஸ்தானின் வாதங்கள் சர்வதேச நாடுகளிடையே வலுவிழந்தன. இது இந்தியாவிற்கு உலக நாடுகளின் ஆதரவு கிடைக்க உதவியது.

பேரழிவு ஆயுதக் காரணிகள்
போரில் ஈடுபட்ட இரண்டு நாடுகளுமே பேரழிவு ஆயுதங்கள் (அணு ஆயுதங்கள்) கொண்ட நாடுகளாகையால், போர் முற்றி அணு ஆயுதப் போர் மூளக்கூடும் என பல நாடுகள் கவலையடைந்தன. இந்தியாவும் பாகிஸ்தானும் 1999 ஆம் ஆண்டு அணு ஆயுதச் சோதனை நடத்தியிருந்தன (இந்தியா 1974 ஆம் ஆண்டே தனது முதல் அணு ஆயுதச் சோதனையை நடத்தி இருந்தாலும் பாகிஸ்தானுக்கு 1999 ஆம் ஆன்டு நடத்தப்பட்ட சோதனையே முதலாவதாகும்). தெற்காசியப் பகுதியில் வளர்ந்து வரும் அமைதியின்மைக்கு கார்கில் போர் ஒரு அறிகுறி பல அரசியல் வல்லுநர்கள் கருதினார்கள். இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதச் சோதனை செய்த சில மாதங்களிலேயே கார்கில் போர் துவங்கியதால், அதை கூடிய விரைவில் முடிவுக்குக் கொண்டுவர பல நாடுகள் விரும்பின.

பாகிஸ்தானின் அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஷம்ஷாத் அஹ்மெத், மே 31 அன்று, "போர் பெரிதானால் அதை முடிவுக்குக் கொண்டு வர பாகிஸ்தான் தன்னிடம் உள்ள எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தத் தயங்காது" என்று கூறியது சர்வதேச அரங்கில் சர்ச்சையைக் கிளப்பியது. இதை உலக நாடுகள் பாகிஸ்தான் விடுத்த அணு ஆயுத மிரட்டல் என்றே எண்ணின. பாகிஸ்தான் நாடுளுமன்றத் தலைவர், "ஆயுதங்களைத் தேவைப்படும்போது பயன்படுத்தாவிடில் அவற்றை உருவாக்கியதே அர்த்தமற்றதாகி விடும்" என்று கூறியது உலக நாடுகளின் எண்ணத்தை உறுதிபடுத்தியது. இவ்வாறு இரு நாடுகளிலிருந்தும் பலரால் விடுக்கப்பட்ட மறைமுக அறிக்கைகளை ஆணு ஆயுதப் போருக்கான எச்சரிக்கை என்றே பல நாடுகள் எண்ணின. சோவியத் ஒன்றியத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிகழ்ந்த அணு ஆயுதப் போட்டி போல இதுவும் வளரக்கூடும் என உலக நாடுகள் அஞ்சின. பாகிஸ்தான் 1999 ஆம் ஆண்டு நிகழ்த்திய அணு ஆயுதச் சோதனைக்குப் பின்னர் அது பெற்ற அணு ஆயுதத் தற்காப்பின் காரணமாக இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் துணிவுடன் ஈடுபடத் துவங்கியதாக சில வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

பாகிஸ்தான் தனது அணு ஆயுத ஏவுகணைகளை எல்லைப் பகுதிகளுக்கு அருகில் கொண்டு சென்றுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை கண்டறிந்தபின் பதற்றம் மேலும் அதிகரித்தது. அப்போதைய அமெரிக்க அதிபராக விளங்கிய பில் கிளின்டன் பாகிஸ்தான் பிரதமரிடம் பாகிஸ்தான் படைகளைப் பின்வாங்கச் செய்யும்படி கூறினார்; மறுத்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தார். வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர், பாகிஸ்தான் பிரதமர் ஷெரீஃப், தனக்கு அணு ஆயுத ஏவுகணைகள் எல்லைக்கருகில் நகர்த்தப்பட்டது குறித்து எதுவும் தெரியாது என்றும் இந்தியாவும் அதுபோன்ற ஏற்பாடுகளைச் செய்திருக்கக்கூடும் என்றும் தெரிவித்ததாகக் கூறியுள்ளார். டாக்டர். சஞ்சய் பத்ரி மகாராஜ், இந்தியா போரின்போது குறைந்தபட்சம் ஐந்து அணு ஆயுத ஏவுகணைகளத் தயார் நிலையில் வைத்திருந்ததாக 2000 ஆம் ஆண்டு மே மாதம் கூறினார். ஆனால் தகுந்த ஆதாரங்களுடன் அவரது கூற்றை உறுதிபடுத்த அவரால் இயலவில்லை.

போரில் ஏற்பட்ட இழப்புகள், சர்வதேச அரங்கில் குறைந்து வரும் ஆதரவு மற்றும் போர் முற்றி அணு ஆயுதப் போராக மாறும் அபாயம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பாகிஸ்தான் பிரதமராக விளங்கிய நவாஸ் ஷெரீஃப் பாகிஸ்தான் படைகளைத் திரும்பப்பெற்றார். பாகிஸ்தானின் இராணுவத் தளபதியாக விளங்கிய பர்வேஸ் முஷாரஃப் தனது அனுமதி பெறாமலே அணு ஆயுத ஏவுகணைகளை எல்லையில் நிலை நிறுத்தியதாக தனது சுய சரிதையில் நவாஸ் ஷெரீஃப் குறிப்பிட்டுள்ளார். ஆனால், பாகிஸ்தானின் அணு ஆயுத ஏவுகணைகள் அப்போது செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்படவே இல்லை என்று பர்வேஸ் முஷாரஃப் பின்னர் தெரிவித்தார். கார்கில் போர் அணு ஆயுதப் போராக மாறியிருந்தால் பாகிஸ்தானுக்கு அது பெரிய பின்னடைவாக அமைந்திருக்கும்.

பேரழிவு ஆயுதங்களின் அபாயம் இரசாயன மற்றும் உயிரி ஆயுதங்களையும் உள்ளடக்கியதே ஆகும். இந்தியா தடை செய்யப்பட்ட இரசாயனங்களை காஷ்மீர் போராளிகளுக்கு எதிராகப் பயன்படுத்திய ஆயுதங்களில் உபயோகித்ததாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. மற்றொரு பக்கம் பாகிஸ்தான் வீரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட வாயுத் தடுப்பு முகமூடிகளை ஆதாரமாகக் கொண்டு, பாகிஸ்தான் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தத் திட்டமிட்டதாக இந்தியா பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டியது. அமெரிக்க அதிகாரிகளும் மற்றும் வேதி ஆயுதங்களின் தடைக்கான அமைப்பும், இந்தியா மீது பாகிஸ்தான் சுமத்திய இரசாயன ஆயுதம் குறித்த குற்றங்கள் ஆதாரமற்றவை என்று தீர்மானித்தனர்.

பின்விளைவுகள்
இந்தியா

கார்கில் போரின்போது இந்தியப் பிரதமராக விளங்கிய அடல் பிகாரி வாஜ்பாய். போரில் இந்தியா மிகப்பெரிய வெற்றி பெற்றதால், 1999 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தே.ஜ.கூ மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது
கார்கில் போர் முடிவடைந்ததிலிருந்து பிப்ரவரி 2000 வரை, இந்திய பங்குச் சந்தையில் பங்குகளின் மதிப்புகள் 30% வரை அதிகரித்தன. போருக்கு அடுத்த இந்தியாவின் தேசிய நிதியறிக்கையில் இராணுவத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது.

போரின்போது நாட்டு மக்களிடையே நாட்டுப்பற்று பெருமளவு அதிகரித்தது; பல பிரபலங்கள் கார்கில் போரில் இந்திய இராணுவத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இந்திய வான்படையைச் சேர்ந்த விமானி அஜய் அஹுஜா, பாகிஸ்தான் இராணுவத்தினரால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட செய்தி வெளியானபோது பாகிஸ்தான் படையினரின் செயலுக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்திய தரப்பில் இழப்புகள் எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகமாக இருந்தது; உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் புதிதாக இராணுவத்தில் இணைந்திருந்த இளம் வீரர்களாவர். போர் முடிந்து ஒரு மாதத்திற்குப் பின் அட்லான்டிக் சம்பவத்தில் பாகிஸ்தான் கடற்படையைச் சேர்ந்த விமானம் ஒன்றை இந்தியா சுட்டு வீழ்த்தியது மீண்டும் பதற்றத்தை உருவாக்கியது.

போருக்குப்பின் இந்தியா, பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொண்டது; இராணுவத்தின் தயார் நிலையை அதிகப்படுத்தியது. இந்தியா நவீன ஆயுதங்களையும் போர் கருவிகளையும் வாங்குவதற்காக தனது இராணுவத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை அதிகப்படுத்தியது. ஊடுருவலை முன்கூட்டியே கண்டறியத் தவறிய உளவுத்துறையை ஊடகங்கள் கடுமையாக சாடின. இந்திய நாளிதழ் ஒன்றில் வெளியான இந்திய இராணுவத்தின் சிய மதிப்பீட்டு அறிக்கையில், "கவனக்குறைவு", "போருக்கு ஆயத்தமற்ற தன்மை", "அணு ஆயுதம் பெற்றிருப்பதால் போர் எளிதில் ஏற்படாது என்ற எண்ணம்" போன்றவை இந்திய படைத்துறைகளிடமிருந்த பின்னடைவுகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தன. இராணுவத்தின் அதிகாரத்தில் இருந்த இடைவெளிகள், படைவீரர்கள் பற்றாகுறை மற்றும் கனரக ஆயுதங்களின் பற்றாகுறை போன்றவற்றையும் அந்த அறிக்கை சுட்டியது. இந்திய இராணுவம், அரசாங்கத்திடம் ஊடுருவல் பற்றிய முழுமையான தகவல்களை தெரிவிக்கவில்லை என்றும் தரைப்படையின் தலைமை தளபதி வேத் பிரகாஷ் மாலிக், விமானப்படையின் உதவியை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளாமல் உலங்கு வானூர்திகளின் உதவியை மட்டுமே கோரினார் என்றும் ஓய்வுபெற்ற விமானப்படை தளபதி ஏ. ஒய். திப்னிஸ் குற்றம் சாட்டியுள்ளார். போர் முடிவடைந்தவுடன், பாகிஸ்தானால் முடக்கப்பட்ட, எல்லைக்கோடு நெடுகிலும் வேலி அமைக்கும் திட்டத்தை விரைந்து முடிக்க இந்தியா முடிவு செய்தது.

போருக்கு அடுத்து நடந்த பதிமூன்றாவது இந்திய மக்களவை பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றது. மக்களவையில் மொத்தம் உள்ள 545 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 303 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சி அமைத்தது. போருக்குப்பின் இந்திய-அமெரிக்க உறவுகள் வலுவடைந்தன; போரைப் பெரிதாக வளரவிடாத இந்தியாவின் நிலையை அமெரிக்கா பாராட்டியது. போரின்போது, பீரங்கிகள், செயற்கைக்கோள் புகைப்படங்கள், ஆளில்லா விமானங்கள், குண்டுகள் போன்றவற்றை அளித்து உதவிய இஸ்ரேலுடனான உறவையும் இந்தியா பலப்படுத்திக் கொண்டது.

கார்கில் ஆய்வுக் குழு
போரின் முடிவில் அடல் பிகாரி வாஜ்பாயின் அரசாங்கம், போருக்கான காரணங்களையும் இந்திய உளவுத்துறையின் தோல்விக்கான காரணங்களையும் விசாரிக்க உத்தரவிட்டது. உயர் அதிகாரம் கொண்ட குழு ஒன்று, கே. சுப்பிரமண்யம் தலைமையில் உருவாக்கப்பட்டு, முன்னாள் பிரதமர்கள் மற்றும் பாதுகாப்புத்துறையுடன் சம்பந்தப்பட்ட எவரையும் விசாரிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது. சுப்பிரமண்யம் அறிக்கை என்று அறியப்படும் அக்குழுவின் அறிக்கையில் செய்யப்பட்டிருந்த பரிந்துரைகள் காரணமாக இந்திய உளவுத்துறையில் பெரிய அளவில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் கார்கில் பிரச்சனையை முன்கூட்டியே கண்டறியத் தவறியதற்குக் காரணமானவர்கள் யார் என்பதை அந்த அறிக்கை தெளிவாக சுட்டிக்காட்டவில்லை என்று விமர்சிக்கப்பட்டது.மேலும் அந்த அறிக்கை, பிரிகேடியர் சுரிந்தர் சிங் மீது, கார்கில் ஊடுருவல் குறித்து சரியான நேரத்தில் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கத் தவறியதாகக் குற்றம் சாட்டியது. ஆனால் ஊடகங்கள், சுரிந்தர் சிங் தனது உயர் அதிகாரிகளிடம் கார்கில் ஊடுருவல் குறித்த தகவல்களை முன்கூட்டியே தெரிவித்திருந்தார் எனவும், ஆனால் அவர் அளித்த தகவல்கள் இராணுவ மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகளால் அலட்சியம் செய்யப்பட்டது என்றும் கூறின.

அரசாங்க வழக்கத்திற்கு மாறாக, சுப்பிரமண்யம் அறிக்கை பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டது. ஆனால், அந்த அறிக்கையின் சில பாகங்கள் மட்டும் அரசாங்க இரகசியங்களைப் பற்றியது என்ற காரணத்திற்காக இரகசியமாகப் பாதுகாக்கப்பட்டது. குழுவின் தலைவர் சுப்பிரமண்யம், "அந்த பாகங்கள் இந்தியாவின் அணு ஆயுதத் திட்டம் மற்றும் அத்திட்டத்தில் முன்னாள் இந்தியப் பிரதமர்களின் பங்குகள் பற்றிய தகவல்கள் அடங்கியவை" என்று பின்னாளில் கூறினார்.

பாகிஸ்தான்

கார்கில் போரின் போது பாகிஸ்தான் பிரதமராக விளங்கிய நவாஸ் ஷெரீஃப். போர் முடிந்த சில மாதங்களில் இராணுவப் புரட்சி செய்து இவரது அரசைக் கவிழ்த்து, அதிகாரத்தை பர்வேஸ் முஷாரஃப் கைப்பற்றிக்கொண்டார்.
சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்படும் அபாயம் காரணமாக பலவீனமான பாகிஸ்தானின் பொருளாதாரம் மேலும் நலிவடைந்தது. பாகிஸ்தான் படையைச் சேர்ந்த வடக்கு காலாட்படைப்பிரிவு அதீத இழப்புகளைச் சந்தித்ததால் பாகிஸ்தான் படைகளின் மனஉறுதி குலைந்தது. உயிரிழந்த பாகிஸ்தான் போர் வீரர்களின் சடலங்களை வாங்கிக்கொள்ள பாகிஸ்தான் அரசு மறுத்துவிட்டது. இதன் காரணமாக பாகிஸ்தானின் வடபகுதிகளில், மக்கள் அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆரம்பத்தில் பாகிஸ்தான் படைகளுக்கு ஏற்பட்ட பெரும்பான்மையான இழப்புகளை பாகிஸ்தான் அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், குறைந்தபட்சம் 4000 பாகிஸ்தான் வீரர்கள் அப்போரில் உயிரிழந்ததாகக் கூறினார்.[9] இதற்கு பதிலளிக்கும் விதமாக பர்வேஸ் முஷாரஃப், "ஒரு முன்னாள் பிரதமரே தனது படைகளை குறைத்து மதிப்பிடுவது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது" என்று கூறினார். இந்தியத் தரப்பு இழப்புகள் பாகிஸ்தானுடையதைவிட பன்மடங்கு அதிகம் என்றும் அவர் கூறியுள்ளார். பாகிஸ்தான் ஊடகங்கள் முஷாரஃபால் நியாயப்படுத்தப்பட்ட கார்கில் போர் குறித்து இன்றளவும் விவாதம் செய்கின்றன.

பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் வாயிலாக, பாகிஸ்தான் படைகள் கார்கிலில் வெற்றி பெரும் என்று பாகிஸ்தான் மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் பாகிஸ்தான் பிரதமர், படைகளைப் பின்வாங்க உத்தரவிட்டபோது பெரிதும் ஏமாற்றமடைந்தனர். பாகிஸ்தான் படைத் தலைவர்களும் பிரதமரின் முடிவால் ஏமாற்றமடைந்தனர். ஆனால் செண்ட்காமின் முன்னாள் படைத் தளபதியும் முஷாரஃபின் நண்பருமான அந்தோனி சின்னியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபும், பாகிஸ்தான் படைகளைப் பின்வாங்க உத்தரவிடுமாறு முஷாரஃப்தான் கோரியதாகக் கூறியுள்ளனர். முஷாரஃபின் மூத்த அதிகாரியும் ஓய்வு பெற்ற இராணுவத் தளபதியுமான அப்துல் மஜீத் மாலிக், கார்கில் போர் குறித்து, "பிசககான காரியம்" என்று கூறியதோடு, முஷாரஃபையும் கடுமையாக சாடினார். இந்தியாவுடன் அப்பகுதியில் போரிடும் நிலைமையில் பாகிஸ்தான் படைகள் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், நவாஸ் ஷெரீஃபின் அரசுதான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி பாகிஸ்தானை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாற்றியது என்றும் கூறியுள்ளார். மேலும், கார்கிலில் ஊடுருவியவர்கள் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை என்றும் அவர்கள் அனைவரும் பாகிஸ்தான் படையைச் சேர்ந்தவர்களே என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.


கார்கில் போரில் பாகிஸ்தான் வான்படையைச் சேர்ந்த எஃப்-16 ரக போர் விமானங்கள் ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன. எனினும் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் விமானங்களைப் பயன்படுத்தவில்லை.
பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தலைமையில் கூட்டுத் தலைமையகத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்புக் கூட்டத்தில், பர்வேஸ் முஷாரஃப், அவர் மீது இராணுவ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய பாகிஸ்தான் வான்படைத் தலைமை தளபதி அட்மிரல் ஃபஸி பொகாரியுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கூட்டத்தில் கலந்து கொண்ட பாகிஸ்தான் வான்படையின் தலைமை தளபதி பி. க்யூ. மேதி, "கடற்படையும் வான்படையும் கார்கில் விவகாரத்தில் தலையிட்டிருந்தால் அது போரை பெரிதாக்கியிருக்கும்" என்று கூறியுள்ளார். இதை முஷாரஃப் கடுமையாக விமர்சித்ததை அடுத்து, அவர் விமானப்படை விமானங்களை ஸ்கார்டு பள்ளத்தாக்கில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தினார். கார்கில் போரின்போது பாகிஸ்தான் கடற்படை பெரும்பாலும் விலகியே இருந்தது; நீர்மூழ்கிக் கப்பல்கள் மட்டும் ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன. போருக்கான முழு பழியையும் பாகிஸ்தான் பிரதமர், பர்வேஸ் முஷாரஃப் மீது சுமத்தியதால் அவர்கள் இருவருக்குமிடையே இணக்கமற்ற சூழ்நிலையே நிலவியது. அக்டோபர் 12, 1999 அன்று பர்வேஸ் முஷாரஃப், இராணுவப் புரட்சி செய்து நவாஸ் ஷெரீஃபிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றினார்.

பாகிஸ்தானின் நாடுளுமன்றத் தலைவரும் முன்னாள் பிரதமருமான பெனசீர் பூட்டோ, கார்கில் போர் பாகிஸ்தானின் மிகப்பெரிய பிசகு என்று கூறியுள்ளார். பாகிஸ்தான் இராணும் மற்றும் பாகிஸ்தானின் உளவு அமைப்பைச் சேர்ந்த பல்வேறு அதிகாரிகள், "நேர விரயம்", "கார்கில் போரால் எவ்வித நன்மையும் விளைந்திருக்க முடியாது", "கிழக்கு பாகிஸ்தான் சோகத்தைவிட கார்கில் போர் மிகப்பெரிய துக்கம்", "சரிவரத் திட்டமிடப்படாத கார்கில் தாக்குதல் பல பாகிஸ்தான் படை வீரர்களின் உயிரை பலி வாங்கியது" என்று பலவாறாக கார்கில் போர் குறித்து விமர்சித்துள்ளனர். கார்கில் ஆக்கிரப்பு பாகிஸ்தானுக்கு இழப்புகளை மட்டுமே ஏற்படுத்தியதால், பாகிஸ்தான் ஊடகம் அதை கடுமையாக விமர்சித்தது.

கார்கில் போருக்குக் காரணமானவர்களை விசாரிக்க குழு அமைக்கப்பட வேண்டும் என்று பலர் கோரினாலும் அது நிறைவேற்றப்படவில்லை. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் கூற்றுப்படி, நவாஸ் ஷெரீஃப் கார்கில் போர் குறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைத்தார்; ஆனால், முஷாரஃபின் மீது இராணுவ விசாரணைக்குப் பரிந்துரைத்திருந்த அக்குழுவின் அறிக்கை முஷாரஃபால் மறைக்கப்பட்டுவிட்டது.கார்கில் ஆக்கிரமிக்கப்படப்போகும் செய்தி ஆக்கிரமிப்புத் தொடங்குவதற்கு 11 மாதங்கள் முன்னரே இந்தியாவிற்குத் தெரியும் என்றும் அதனால் இந்தியா எளிதாக பாகிஸ்தான் படைகளைக் கார்கிலில் தோற்கடித்து விட்டது என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.பாகிஸ்தான் படையின் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ஜம்ஷெத் குல்சர் கியானி, "பாகிஸ்தான் பிரதமருக்கு கார்கில் மீது தாக்குதல் நடத்தப்படப் போகும் செய்தி தெரிவிக்கப்படவில்லை" என்று கூறியதால் போரின் மீது விசாரணை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவடைந்தன.

காஷ்மீர் விவகாரத்தை உலக நாடுகளின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற பாகிஸ்தானின் விருப்பம் கார்கில் போர் மூலம் நிறைவேறினாலும், இரு நாடுகளுக்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த சமயத்தில் போர் நடைபெற்றதால், அது பாகிஸ்தானை எதிர்மறையாக பாதித்ததோடு பாகிஸ்தானின் நம்பகத்தன்மையையும் உலக நாடுகளிடையே குறைத்து விட்டது. சர்வதேச நாடுகள் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை அங்கீகரித்தன. அமெரிக்க அதிபர், பாகிஸ்தான் படைகளைத் திரும்பப் பெற வலியுறுத்தியது, பாகிஸ்தானுடனான உறவுகளில் அமெரிக்காவின் மிகப்பெரிய மாற்றமாகக் கருதப்பட்டது.

போருக்குப் பின் பாகிஸ்தான் படைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. போரில் வெகு சிறப்பாக போரிட்ட வடக்குக் காலாட்படைப்பிரிவு இராணுவத்துடன் முழுமையாக இணைத்துக்கொள்ளப்பட்டது. போர் மிக நன்றாகத் திட்டமிடப்பட்டிருந்தாலும், இரு நாடுகளுக்கிடையே செய்யப்பட்ட ஒப்பந்தங்களை அது அலட்சியம் செய்தது. பாகிஸ்தானால் மேற்கொள்ளப்பட்டு தோல்வியடைந்த பல நடவடிக்கைகளில் காணப்பட்டது போலவே இப்போரிலும் பாகிஸ்தான் படைப்பிரிவுகளுக்கிடையே தகவல் பரிமாற்றம் என்பது மிகவும் மோசமாக இருந்தது. முன்னர் நடந்த போர்களில் செய்த அதே தவறுகளை கார்கிலிலும் பாகிஸ்தான் செய்ததாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.. கார்கில் போர் இந்திய உளவுத்துறையின் கவனக்குறைவாலும் பாகிஸ்தானின் தவறானத் திட்டமிடலாலும் விளைந்தது என்றும் கார்கில் ஆக்கிரமிப்பு குறித்து முஷாரஃபுக்கும் அவரது நான்கு நெருக்கிய கூட்டாளிகளுக்கு மட்டுமே தெரியும் என்றும் முஷாரஃபின் நம்பிக்கைக்குரிய ஓய்வுபெற்ற பாகிஸ்தான் தளபதியான ஷாகித் அசீஸ் கூறியுள்ளார்.

இழப்புகள்

விஜய் நடவடிக்கையின் நினைவுச் சின்னம்
பாகிஸ்தான் இராணுவத்தின் மொத்த இழப்புகள் சரிவர மதிப்பீடு செய்யப்படவில்லை. பாகிஸ்தான் தரப்பில் 453 வீரைகள் பலியானதாக பாகிஸ்தான் அரசு கூறியது. அமெரிக்க உளவுத்துறை, குறைந்தபட்சம் 700 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்ததாக மதிப்பிட்டுள்ளது. நவாஸ் ஷெரீஃப், 4000 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்ததாகக் கூறியுள்ளார். அவரது கட்சி வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் 3000 முஜாஹிதீன் போரளிகள், அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.பாகிஸ்தானின் மற்றொரு முக்கிய அரசியல் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி, ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் வீரர்கள் பலியானதாகக் கூறியுள்ளது.இந்தியா, 1,042 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக கணித்துள்ளது. முஷாரஃப் தனது குறிப்புகளில், 357 வீரர்கள் மரணமடைந்ததாகவும் 665 வீரர்கள் காயமடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் இராணுவ இணையதளத்தில், 400 பாகிஸ்தான் வீரர்கள் காயமடைந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையைச் சேர்ந்த விமானி ஒருவர் பாகிஸ்தான் படைகளால் சிறை பிடிக்கப்பட்டார். பாகிஸ்தான் வீரர்கள் எட்டு பேரை இந்திய வீரர்கள் சிறை பிடித்தனர். அந்த எட்டு வீரர்களையும் இந்தியா, 13 ஆகஸ்டு, 1999 அன்று பாகிஸ்தானிடம் ஒப்படைத்தது.

இந்தியா, தனது தரப்பில் 527 வீரர்கள் உயிரிழந்ததாகவும் 1,363 வீரர்கள் காயமடைந்ததாகவும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் கார்கில் நினைவுச் சின்னம்[தொகு]

இந்திய இராணுவத்தால் திரஸில் நிறுவப்பட்டுள்ள கார்கில் நினைவுச் சின்னத்தின் பிரதான நுழைவாயில்
திரஸ் பகுதியிலுள்ள தோலோலிங் மலையடிவாரத்தில் இந்திய இராணுவம், போர் நினைவுச் சின்னம் ஒன்றை அமைத்துள்ளது. டைகர் ஹில் பகுதியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த நினைவிடம், போரில் உயிர்த் தியாகம் செய்த இந்திய வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டதாகும். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் தந்தை ஹரிவன்ஷ் பச்சன் எழுதிய கவிதை இந்நினைவுச் சின்னத்தின் நுழைவாயிலில் பொறிக்கப்பட்டுள்ளது. நினைவிடத்திற்க்கு அருகில், விஜய் நடவடிக்கையின் வெற்றியைக் கொண்டாட ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, போர் வீரர்களின் படங்கள், போர் குறித்த ஆவணங்கள் மற்றும் பதிவேடுகள், பாகிஸ்தான் படையினர் பயன்படுத்திய ஆயுதங்கள் ஆகியவை மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

கார்கில் போர் வெற்றியின் பதிமூன்றாவது ஆண்டுவிழாவின் நினைவாக, 15 கிலோ எடையுடைய இந்திய தேசியக் கொடி கார்கில் நினைவுச் சின்னத்தில் நிறுவப்பட்டது.

கலைகளில் கார்கில் போர்

கார்கில் போர் நினைவிடத்தில் நிறுவப்பட்டுள்ள இந்திய தேசியக் கொடி

கார்கில் போர் நினைவுச் சின்னம்

கார்கில் போரில் இந்தியப் படையினரால் கைப்பற்றப்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் பயன்படுத்திய பதுங்கு குழி
கார்கில் போர் மூலம், திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் சிறந்த கரு கிடைத்தது. கார்கில் போர் குறித்து எடுக்கப்பட்ட சில ஆவணப்படங்கள், பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசாரத்தின் போது பயன்படுத்தப்பட்டன. கார்கில் போர் குறித்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் மற்றும் நாடகங்களின் பட்டியல் பின்வருமாறு:

லார்டு ஜான் மார்பரி (த வெஸ்டு விங்) (1999), முதல் பாகத்தில் 11 வது அத்தியாயம் கற்பனை கலந்த கார்கில் போரை சித்தரிக்கிறது.
1999 ஆம் ஆண்டு வெளியான பென்டகிராமின் பிரைஸ் ஆஃப் புல்லட்ஸ் என்ற பாடல் கார்கில் போர் பற்றியதாகும்.
கார்கில் போரிலிருந்து பல சம்பவங்களை சித்தரித்த, 2003 ஆம் ஆண்டு வெளியான எல்.ஓ.சி. கார்கில் என்ற இந்தி திரைப்படம், இந்தியத் திரைப்பட வரலாற்றிலேயே மிக நீளமான திரைப்படமாகும்.
லட்சியா (2004) என்ற மற்றொரு இந்தி திரைப்படம், கார்கில் போரை ககற்பனை கலந்து விவரிக்கிறது.இத்திரைப்படம், இரு தரப்பையும் நியாயமாகச் சித்தரித்ததால், பாகிஸ்தானிலும் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
சைனிகா (2002), என்ற கன்னட திரைப்படம், கார்கில் போரில் போரிடும் வீரன் ஒருவனின் வாழ்வை ஒரு சம்பவமாகக் கொண்டிருந்தது.
தேசிய விருது பெற்ற அஷ்வினி சவுத்ரியால் 2003 ஆம் ஆண்டு இயக்கப்பட்ட, தூப் என்ற இந்தி திரைப்படம், இந்திய இராணுவ கேப்டன் அனுஜ் நாயரின் மறைவுக்குப்பின் அவரது பெற்றோரின் வாழ்வைப்பற்றி கூறுகிறது. அனுஜ் நாயர், கார்கில் போரில் உயிர்துறந்த இந்திய இராணுவ வீரர் ஆவார். அவரது மறைவுக்குப்பின் அவருக்கு மகா வீர் சக்ரா வ்ருது வழங்கப்பட்டது.
மிஷன் ஃபதே என்பது சகாரா தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்ட, இந்திய இராணுவம் கார்கிலில் நடத்திய போர் குறித்த நிகழ்ச்சியாகும்.
பிப்டீ டே வார் என்பது கார்கில் போர் நிகழ்வுகளைக் கொண்டு அமீர் ராஸா ஹுசைனால் தயாரிக்கப்பட்ட திரைப்படமாகும். விமானங்கள் மற்றும் குண்டுகள் என்று அனைத்தும் உண்மையாகவே அமைக்கப்பட்டு இப்படம் தயாரிக்கப்பட்டது.
ஓய்வுபெற்ற இந்திய இராணுவ மேஜர் ரவி, போரில் அவரது அனுபவங்களை மையமாகக் கொண்டு குருக்‌ஷேத்ரா என்ற மலையாள திரைப்படம் ஒன்றை 2008 ஆம் ஆண்டு தயாரித்தார்.
லாக் என்ற பாகிஸ்தானிய திரைப்படம், பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு மற்றும் போர் முனையில் பாகிஸ்தான் வீரர்களின் போராட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட திரைப்படமாகும்.
டேங்கோ சார்லி போன்ற பல திரைப்படங்கள் கார்கில் சம்பவம் குறித்த நிகழ்வுகளைக் கொண்டுள்ளன. இன்றும் கார்கில் தொடர்பான கதைகளுடைய கீர்த்தி சக்ரா போன்ற திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன.

கார்கில் போர் நடந்த முடிந்த சமயத்தில் துடுப்பாட்ட உலகக் கோப்பைப் போட்டிகள் துவங்கின. அதில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய போது போரின் தாக்கத்தை வெகுவாக உணர முடிந்தது. அப்போட்டிகள் அந்த உலகக் கோப்பைத் தொடரிலேயே மிகவும் அதிகமாகப் பார்க்கப்பட்ட போட்டிகளாக அமைந்தன.
நன்றி  -விக்கிபீடியா