புதன், 31 ஆகஸ்ட், 2016

பூலித்தேவன் பிறந்த தினம் செப்டம்பர் 01.பூலித்தேவன் பிறந்த தினம் செப்டம்பர் 01.

பூலித்தேவன் (1715–1767) நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார். இந்திய விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’ என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்.


"நெற்கட்டாஞ் செவ்வலுக்கு பெருமை என்ன?
நெருப்பாற்றைக் கடந்த பூலித்தேவனாலே"


என்ற நாட்டுப்புற பாடலை கொண்டு இவரின் சிறப்பை அறியலாம்.


பூழி நாடு

பூழி நாடு என்பது பாண்டிய நாட்டில் அமைந்த அகநாடுகளுள் ஒன்று. சங்ககாலம் தொட்டே இருந்து பாண்டியர் ஆட்சியின் கீழ் வரும் இந்நாடு 1378ஆம் ஆண்டு சேர நாட்டில் இருந்த ஒரு பாண்டிய மன்னனால் வரகுண ராமன் சிந்தாமணி காத்தப்ப பூழித்தேவர் என்ற தளபதிக்குத் தானமாக வழங்கப்பட்டது. இவர் ஆப்பநாட்டுக் கொண்டையங்கோட்டை மறவர் வழியில் வந்தவராவார். ஆரம்ப காலத்தில் இதன் தலைநகரம் ஆவுடையாபுரம். நாயக்கர் காலத்தில் (1529–64) பாண்டி நாடு 72 பாளையங்களாக பிரிக்கப்பட்ட போது, பூழி நாட்டின் பகுதிகள் அதனுள் அடங்கின. அதன் பிறகு சில வருடங்கள் கழித்து அதன் தலைநகரம் நெற்கட்டாஞ்செவ்வலுக்கு மாற்றப்பட்டது. நாயக்கர் கால வீழ்ச்சியின் போது பாளையங்கள் சுயவுரிமை பெறத்தொடங்கின.வரகுண ராமன் சிந்தாமனி காத்தப்ப பூலித்தேவரின் வழிவந்த பத்தாம் தலைமுறை மன்னனே சித்திர புத்திரத்தேவர் என்றவர் ஆவார்.

பெயர் காரணம்
பூலித்தேவன், தன்பகுதியில் நிலத்தை அடமானம் பிடிக்கும் பண்ணையார்களுக்கோ அல்லது ஆதிக்கம் செலுத்தும் மேல் இடத்திற்கோ, மேல்வாரம் தன்மையிலோ, வரி என்ற பெயரிலோ, ஒரு மணி நெல்லைக் கூட யாருக்கும் கண்ணில் காட்டமாட்டாராம், இதன் காரணமாய் ஆவுடையாபுரம் நெற்கட்டுஞ்செவ்வல் என்றாகியது.

பட்டியல்
தலைமுறை பெயர் ஆட்சியாண்டுகள்
1 வரகுண சிந்தாமணி பூலித்தேவன் 1378–1424
2 வடக்காத்தான் பூலித்தேவன் 1424–1458
3 வரகுண சிந்தாமணி வடக்காத்தான் பூலித்தேவன் 1513–1548
4 சமசதி பூலித்தேவன் 1548–1572
5 முதலாம் காத்தப்ப பூலித்தேவன் 1572–1600
6 இரண்டாம் காத்தப்ப பூலித்தேவன் 1600–1610
7 முதலாம் சித்திரபுத்திரத்தேவன் 1610–1638
8 மூன்றாம் காத்தப்ப பூலித்தேவன் 1638–1663
9 இரண்டாம் சித்திரபுத்திரத்தேவன் 1663–1726
10 நான்காம் காத்தப்ப பூலித்தேவன் 1726–1767
வரகுண ராமன் சிந்தாமனி காத்தப்ப பூலித்தேவரின் வழிவந்த பத்தாம் தலைமுறை மன்னனே சித்திர புத்திரத்தேவர் என்றவராவார். இவருக்கு பிறந்த பூலித்தேவன் என்பவரே இந்திய விடுதலைப் போராட்டத்தை தமிழகத்தில் தொடங்குவதற்கு காரணமாயிருந்த பாளையக்காரர் போர்களின் முன்னோடி.

பிறப்பு
மதுரையில் நாயக்க மன்னர்களின் ஆட்சி 1529 முதல் 1736 வரை இருந்தது. இவர்களில் விசுவநாத நாயக்கர் முதல்வராவார். இவர் 1529 முதல் 1564 வரை ஆட்சி புரிந்தார். இவருடைய ஆட்சி காலத்தில் தான் பாண்டிய நாடு ஆறு மண்டலங்கள் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டதில் மதுரை,திருவில்லிப்புத்தூர்,திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் 18 மறவர் பாளையங்கள் ஏற்படுத்தப்பட்டது.ஒவ்வொரு பாளையமும் ஒருவரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு அவர்களுக்கு அந்த பாளையத்துக்கு முழுமரியாதையும், தனி அதிகாரங்களும்[3] வழங்கப்பட்டன. இத்தகைய பாளையங்களில் ஒன்று நெற்கட்டுஞ்செவ்வல் பாளையம் ஆகும்.

பூலித்தேவரின் பெற்றோர்கள் பெயர் சித்திரபுத்திரத் தேவரும் சிவஞான நாச்சியாரும் ஆவர். பூலித்தேவர் 1-9-1715 ல் இவர்களின் புதல்வராகப்பிறந்தார். இயற்பெயர், 'காத்தப்பப் பூலித்தேவர்' என்பதாகும். 'பூலித்தேவர்' என்றும் 'புலித்தேவர்' என்றும் அழைக்கலாயினர்.[2]

சிறுவயதிலேயே வீர உணர்ச்சியும், இறையுணர்வும் மிகுந்தவராக விளங்கினார். அவர் தன்னுடைய ஆறு வயது சிறுவனாக இருக்கும் பொழுது அவருக்கு முறைப்படியான கல்வி ஆரம்பிக்கப்பட்டது. இலஞ்சியைச் சேர்நத சுப்பிரமணிய பிள்ளை என்பவரிடம் சன்மார்க்க நெறிகளைப் பூலித்தேவர் பயின்று வந்தார். மற்ற தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களையும் கற்று, தாமே கவிதை எழுதும் அளவுக்குத்திறம் பெற்று விளங்கினார்.

பூலித்தேவருக்கு பன்னிரண்டு வயதான பொழுது அவருக்குப் போர்ப் பயிற்சி தொடங்கப்பட்டது. குதிரை ஏற்றம், யானை ஏற்றம்,மல்யுத்தம், வாள் வீச்சு, வேல் எய்தல், அம்பு எய்தல், சிலம்பு வரிசைகள், கவண் எறிதல், வல்லயம் எறிதல் மற்றும் சுருள் பட்டா சுழற்றுதல் போன்ற சகலவிதமான வீரவிளையாட்டுகளிலும் அவருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இவர்கள் முக்குலத்தில் ஒரு பிரிவினர் ஆனாலும் இவர்கள் பெரும்பாலும் தங்களில் வீரத்திற்காக மட்டுமே அடையாளம் காணப்பட்டனர். தமிழில் "மறம்" என்றால் "வீரம்" என்று பொருளாகும். யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை என பல்வேறு பிரிவுகளை போர்ப்படை பிரிவுகள் இருந்தாலும் வெற்றியை நிர்ணயிப்பது காலாட்படையாகவே அப்பொழுது இருந்தது. அன்றைய காலாட்படையில் அதிக வீரமிக்க மக்கள் மறவர் குழுக்களுக்கே பெரும்பங்கு அளிக்கப்பட்டது. செம்ம நாட்டு மறவர்கள் செம்ம நாட்டு மறவர் பெண்கள் மூக்குத்தி அணியும் பழக்கம் உள்ளவர்கள். செம்ம நாட்டு மறவர்கள் அக்கா மகளை திருமணம் செய்யும் பழக்கம் உள்ளவர்கள். முதன்முதலில் வெள்ளையனை எதிர்த்த மன்னர் புலித்தேவன் இந்த செம்ம நாட்டு மறவர் இனத்தை சேர்ந்தவர். மறவர் இனத்தில் இவர்கள் மிகவும் தொன்மையானவர்கள்.

வாழ்க்கை

இவர் குளம் அமைத்துக் கொடுத்ததற்கான செப்பேடு.
அவரைப் பற்றிய ஒரு நாட்டுப் பாடலில் அவரின் உடல்வாகு பற்றிக் கூறப்பட்டுள்ளது. மாவீரன் பூலித்தேவர் ஆறடி உயரமுடையவர். ஒளி பொருந்திய முகமும், திண் தோள்களையும் உடையவர், பவளம் போன்ற உதடுகளும், மார்பும் இருந்ததாக அப்பாடல் கூறுகின்றது.

மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள புலிகளைக் கொன்று விளையாடுவதில் மிகுந்த விருப்பம் கொண்டு விளங்கினார். புலித்தோல் மற்றும் புலி நகங்களை அணிவதிலும் அவருக்கு விருப்பம் இருந்தது. இதனால் பூலித்தேவரை எல்லோரும் புலித்தேவர் என்றே அழைத்து வந்தனர். காத்தப்ப பூலித்தேவரின் திறமையைக் கண்ட அவரது பெற்றோர் அவருடைய பன்னிரண்டாவது வயதில் அதாவது 1726 ல் அவருக்குப் பட்டம் சூட்டி அரசராக்கினார்கள்.

பின்னர் பூலித்தேவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. அவருக்கு வாழ்க்கைத் துணைவியாக அமைந்தவர் அவருடைய (அக்கா) மகள் கயல்கண்ணி என்கின்ற இலட்சுமி நாச்சியார். கயல் கண்ணியின் சகோதரர் சவுணத்தேவரும், பூலித்தேவரும் இணைபிரியாத நண்பர்கள். பூலித்தேவருக்கு கோமதி முத்துத் தலவாச்சி, சித்திரபுத்திரத் தேவன் மற்றும் சிவஞானப் பாண்டியன் என்று மூன்று மக்கள் பிறந்தனர்.

பாளையத்திலிருந்து வரும் வருமானத்தை அவர் நிர்வாகத்திற்கும், மக்களுக்கும் பயன்படுத்தி மற்றும் எஞ்சியதை கோயில் திருப்பணிக்காகவும் செலவு செய்தார். சங்கரன்கோயில், பால்வண்ணநாதர் கோயில், வாசுதேவநல்லூர் அர்த்தநாரீசுவரர் கோயில், நெல்லை வாகையாடி அம்மன் கோயில் மற்றும் மதுரை சொக்கநாதர் கோயில் என்று திருநெல்வேலிச் சீமையில் உள்ள பல கோயில்களுக்கும் பூலித்தேவர் திருப்பணி செய்துள்ளார். திருப்பணிகள், முழுக்கோவிலையும் சீர்படுத்துவது முதல் அணிகலன்கள் வழங்குவது வரை பலதரப்பட்டது. இவர் குளம் அமைத்துக் கொடுத்ததற்கான செப்பேடுகளும் உள்ளன.

விடுதலைப்போராட்டத்தில் பங்கு
1750-ல் இராபர்ட் கிளைவ் திருச்சிக்கு வந்து ஆங்கிலக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு தென்னாட்டுப் பாளையக்காரர்கள் தன்னை பேட்டி காண வேண்டுமென்ற அறிவிப்பைக் கொடுத்தான். இதனால் வெகுண்ட பூலித்தேவன் திருச்சிக்குத் தனது படையுடன் சென்று ஆங்கிலேயரை எதிர்த்தான். இதில் பூலித்தேவனே வெற்றிபெற்றான் என 'பூலித்தேவன் சிந்து' என்ற கதைப்பாடல் கூறுகிறது.[4] பூலித்தேவனும் இராபர்ட் கிளைவும் திருவில்லிப்புத்தூர் கோட்டையில் சந்தித்திருக்கலாம் என்றவும் கருதப்படுகிறது.

1755ஆம் ஆண்டு கர்னல் கீரோன் (கர்னல் அலெக்ஸாண்டர் ஹெரான்) தம் கோட்டையை முற்றுகையிட்டு கப்பம் கட்ட நிர்ப்பந்தம் செய்தபோது தன்னுடைய நிலப்பகுதியில் வசூலிக்கும் உரிமை வெள்ளையர் எவருக்கும் கிடையாது என வீர முழக்கமிட்டு வெள்ளையனை விரட்டியடித்து முதல் வெற்றி பெற்றார்.

அதே ஆண்டில் களக்காட்டிலும், நெற்கட்டும் செவல் கோட்டையிலும் நடைபெற்ற போரில் ஆங்கிலேயரின் கைக்கூலியான மாபூஸ்கானை தோற்கடித்தார். அதனை அடுத்து திருவில்லிபுத்தூர் கோட்டையில் நடைபெற்ற போரில் ஆற்காடு நவாபின் தம்பியைத் தோற்கடித்தார்.

1756 மார்ச்சு மாதம் திருநெல்வேலியில் மாபஸ்கானுடன் புலித்தேவர் நடத்திய போரில் புலித்தேவனின் உயிர்த்தோழன் மூடேமியாவை ஆங்கிலேயர்கள் துண்டு துண்டாக வெட்டி எறிந்ததால் மனமுடைந்த புலித்தேவன் போரை நிறுத்தித் திரும்பினார். அதனால் மாபஸ்கான் திருநெல்வேலியை தன்வசப்படுத்தினான். 1765 அக்டோபர் மாதம் வாசு தேவ நல்லூர் கோட்டையைத் தாக்கிய காப்டன் பெரிட்சன் புலித்தேவனிடம் தோற்றான்.

1760ஆம் ஆண்டு யூசுபுகான் நெற்கட்டும் செவல் கோட்டையைத் தாக்கியபோதும், 1766ஆம் ஆண்டு கேப்டன் பௌட்சன் வாசுதேவ நல்லூர்க் கோட்டையைத் தாக்கிய போதும் அவற்றை முறியடித்து வெற்றி கொண்டார். 1766ஆம் ஆண்டு தொடர்ந்து ஆங்கிலேயரிடம் தலைமைத் தளபதி பொறுப்பேற்றிருந்தவனும், கொடூரமான போர்முறைக்கும் பெயர் பெற்றவனுமாகிய கான்சாகிப்வால் பூலித்தேவரை ஆரம்பத்தில் வெல்ல முடியாமல் சுமார் 10 ஆண்டுகள் போரிட்டு அதன் பின் பூலித்தேவர் தோல்வியடைந்தார். அதன் பின் தலைமறைவானார்.

நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட ஆங்கிலேயருக்கு எதிரான போர் என்கின்ற வகையில் உதவ வந்த டச்சுக்காரர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியையும் பூலித்தேவர் மறுத்துவிட்டார்.

அன்னியர் எதிர்ப்பு

பூலித்தேவர் ஆட்சி செய்து காலம் பாண்டியராட்சியின் முடிவும், நாயக்கராட்சியின் சரிவு காலமும் ஆகும். ஆற்காடு நவாப்பின் அத்துமீறல்கள் அதற்குள் ஆங்கிலேயரின் வருகை என்று பல தோற்றம் மறைவுகளைச் சந்தித்துக் கொண்டிருந்த காலம். இவ்வாறு பெரிய அளவில் நடக்கும் ஆட்சி மாற்றங்களால் சிறிய பாளையக்காரர்களுக்கு ஆபத்து என்பதை மன்னர் உணர்ந்தார். அதனால் அனைத்துப் பாளையக்காரர்களையும் ஒன்று கூட்டி அரசியலில் ஏற்படும் மாற்றங்களை பற்றித் தீவிரமாக விவாதித்து பாளையக்காரர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார்.

பூலித்தேவர் திட்டப்படி அனைத்து பாளையக்காரர்களும் நாயக்கராட்சிக்குக் கப்பம் கட்டுவதைத் தவிர்த்தனர். நாயக்கராட்சியும் வலுவிழந்து முகம்மதியர்கள் கையில் விழுந்தது. பின்னர் அது மகாராஷ்டிர அரசர்கள் கைகளுக்கு மாறி பின்னர் மீண்டும் முகம்மதியர் கைக்கு வந்தது.

ஆனால் ஆற்காடு நவாபுக்கும் மற்றோர் முகம்மதிய அரசனுக்கும் இடையில் ஏற்பட்ட பூசல் காரணமாக இரு பிரிவனரும் தனித்தனியே கப்பம் வசூல் செய்ய முனைந்தனர். இந்த இரு பிரிவினருக்கும் நடந்த குழப்பத்தைப் பயன்படுத்தி, பாளையக்காரர்கள் கப்பம் கட்டுவதை மொத்தமாக நிறுத்தினார்கள்.

இத்தகு சூழ்நிலையில் ஆற்காடு நவாபு ஆங்கிலேயர்களின் உதவியை நாடினான். இருவருக்கும் நடந்த ஒப்பந்தப்படி ஆற்காடு நவாபு வரிவசூலிக்கும் உரிமையை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்தான். அன்றிலிருந்து ஆங்கிலேயர்கள் இந்திய மன்னர்களோடு நேரடியாகப் போரிட ஆரம்பித்தனர்.

பாளையக்காரர்கள் கப்பம் கட்டாததால் கர்னல் கீரான் தலைமையில் கும்பினிப் படைமற்றும் ஆற்காடு நவாபின் அண்ணன் மாபூஸ்கான் தலைமையில் நவாபு படைகளும், கான்சாகிப் தலைமையில் உள்நாட்டுச் சிப்பாய் படைகளும் 1755-ஆம் ஆண்டு பாளையக்காரர்களைத் தாக்குவதற்குப் புறபட்டது. பேச்சளவில் இருந்த பாளையக்காரர்களின் ஒற்றுமை போர் என்றவுடன் உடைந்தது.

மாபூஸ்கான், கர்னல் கீரானுக்குச் செய்தி அனுப்பி உடனே புறப்பட்டுவரச் செய்தான். இருவரும் சேர்ந்து பூலித்தேவரின் கோட்டையை முற்றுகையிட்டனர். ஆங்கிலேயர் வசம் வெடிமருந்துகளும், துப்பாக்கிகளும், பீரங்கிகளும் இருந்தன. இருந்தும் பூலித்தேவரின் கோட்டையில் ஒரு சிறு விரிசலைக் கூட ஏற்படுத்த முடியவில்லை. மாறாக அவர்களிடம் இருந்த தளவாடங்களும் உணவும் தீர்ந்தது. இந்த செய்தியைத் தன் ஒற்றர்கள் மூலம் கேள்விப்பட்ட மன்னர் உடனடியாக கோட்டையை விட்டு வெளியே வந்து ஆங்கிலப்படைகளைக் கொன்று குவித்து சின்னாபின்னமாக்கினார்.

ஆங்கிலேயருடனான முதல் போரில் பூலித்தேவர் வெற்றி பெற்றாலும் மறுபடியும் அவர்கள் தாக்குவார்கள் என்கிற காரணத்தினால் மீண்டும் பாளையகாரர்களை ஒன்றுபடுத்த பூலித்தேவர் முயற்சி செய்தார். ஆனால் அவருடைய எண்ணம் ஈடேறவில்லை. பல பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்க்கத் துணிவின்றி தங்கள் அரசாட்சியே போதும் என்கின்ற சுயநலத்தோடு ஒதுங்கிவிட்டார்கள். பூலித்தேவரின் கூட்டணி முயற்சி ஆற்காடு நவாபுக்கும் ஆங்கிலேயர்க்கும் தெரியவந்தது. உடனே அவர்கள் மற்ற பாளையக் காரர்களோடு தொடர்பு கொண்டு அவர்களுக்குப் பதவி ஆசையைக் காட்டி, தங்கள் வசப்படுத்தினார்கள்.

இதன் மூலம் சுதேசிப்படை என்கின்ற புதிய படையை உருவாக்கி அதை யூசுப்கான் என்பவனிடம் ஒப்படைத்தனர். இந்த யூசுப்கான் பிறப்பால் மருதநாயகம் என்ற தமிழன். பின்னர் நாளடைவில் மதம் மாறி ஆங்கிலேயர்களோடு துணை சேர்ந்து பின்னர் சுதேசிப் படைகளின் தலைவன் ஆன இவன், பதவி ஆசைக்காக, அன்னியராட்சியை எதிர்த்து முதல் குரல் கொடுத்த மாவீரன் பூலித்தேவரை கடுமையாக எதிர்த்தான்.

1755-ஆம் ஆண்டு தொடங்கி 1767-ஆம் ஆண்டு வரை பல போர்களைப் பூலித்தேவர் சந்திக்க நேர்ந்தது, பரப்பளவில் ஒரு சிறிய பாளையத்திற்கு மட்டுமே தலைவரானாலும் பூலித்தேவரால் ஆங்கிலேயர்களையும், கூலிப்படைகளையும் எதிர்த்துப் பன்னிரெண்டு ஆண்டுகள் போர் புரிய முடிந்தது.

1761-ஆம் ஆண்டு கான்சாகிபுடன் இறுதியாக நடைபெற்ற போரில் பூலித்தேவரின் படைகள் யூசுப்கான் படைகளிடம் தோற்றன. பத்தாண்டுகளாக போராடியும் வெற்றி பெற இயலாத நிலையில் இங்கிலாந்திலிருந்து தருவிக்கப்பட்ட பேய்வாய் பீரங்கிகளின் உதவியோடு பூலித்தேவரின் கோட்டையில் முதன் முதலாக உடைப்பு ஏற்படுத்தப்பட்டது.

அதற்குப்பின் ஆங்கிலேயப் படை, தளவாடங்களோடு கோட்டைக்குள் புகுந்தது. இந்நிலையில் வேறு வழியின்றி எஞ்சிய படைகளோடு பூலித்தேவர் கடலாடிக்குத் தந்திரமாகத் தப்பிச் சென்றார். அவர் கோட்டையை விட்டு சென்றாலும் ரகசியமாக படைகளைத் திரட்டும் பணியில் ஈடுபட்டார். சில மாதங்களுக்குப் பின்னர் பூலித்தேவர் மீண்டும் கோட்டையைப் பிடித்து பாளையத்தைச் சீர்படுத்தினார்.

ஆனால் இதையறிந்த ஆங்கிலேயர் நெற்கட்டான் செவ்வல் பாளையத்தின் மன்னர் பூலித்தேவரைப் பிடிக்க ஒரு நாட்டையே வளைக்கக் கூடிய அளவுக்குப் பெரும் படையுடன் வந்தனர். 1767 மே மாதம் டொனால்டு காம்பெல் தலைமையில் மேஜர் பிளிண்ட், காப்டன் ஹார்பர் ஆகியோர் வாசு தேவ நல்லூர் கோட்டையைத் தாக்கினர். இத்தகைய பெரும்படையை எதிர்பார்க்காத நிலையிலும் பூலித்தேவர் நிலைத்து நின்று போரைத் தொடர்ந்தார். ஆனால் ஆங்கிலேயப் படை பீரங்கிகளின் முன் மன்னர் படையின் வாளும் வேலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. குண்டுகளால் கோட்டை சுவரில் ஏற்பட்ட ஓட்டையை வீரர்கள் களிமண்ணும் வைக்கோலும் வைத்து அடைத்தனர். அதுவும் முடியாத சூழ்நிலையில் தத்தம் உடல்களைக் கொண்டு ஓட்டையை அடைத்துக் காத்தனர். ஒருவாரம் நடந்த இந்த போரில் எதிர்பாராமல் அச்சமயம் பெய்த பலத்த மழையைப் பயன்படுத்தி மன்னர் தப்பிச்சென்று மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மறைந்து கொண்டார்.[7]1767 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போரே மன்னரின் கடைசிப்போர்.

மறைவு
பூலித்தேவரின் மறைவு பற்றி இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. மன்னர் தப்பிச் சென்றாலும் அவர் உயிரை குறியாகக் கொண்ட ஆங்கிலேயர்கள் அவரைத் தீவிரமாகத் தேடினர். ஒரு சாரார் கருத்துப்படி ஆரணிக் கோட்டையின் தலைவன் அனந்த நாராயணன் என்பவனின் மாளிகைக்கு பூலித்தேவரை வரச் செய்து அங்கு கைது செய்யப்பட்டார் என்றும், பாளையங்கோட்டைக்குக் கொண்டு செல்லும் வழியில், சங்கரன் கோயிலின் இறைவனை வழிபட வேண்டும் என்று பூலித்தேவர் விரும்பியதாகவும், அதன்படி கும்பினியப் போர் வீரர்கள் புடைசூழச் சென்று இறைவனை வழிபட்டதாகவும், அப்போது பெரிய புகை மண்டலமும் சோதியும் கைவிலங்குகள் அறுந்து விழ சோதியில் கலந்தார் என்றும், பூலித்தேவன் சிவஞானத்துடன் ஐக்கியமானதால் "பூலிசிவஞானம்" ஆனார் என்றும் நாட்டுப்புறப் பாடல்கள் கூறுகின்றன. இன்றைக்கும் சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயணன் கோவிலில் பூலித்தேவர் மறைந்த இடம் என்று ஒரு இடம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

மற்றொரு கருத்து பூலித்தேவர் ஆங்கிலேயரால் கைதுசெய்யப்பட்டு தூக்கிலிட்ட செய்தியை மக்கள் அறிந்தால் அவர்கள் கிளர்ச்சி செய்யக்கூடும் என்பதால் ஆங்கிலேயர் இதனை ரகசியமாகச் செய்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் தமிழக அரசால் புதுப்பிக்கப்பட்டு அவரது நினைவு மாளிகையாக அமைக்கப்பட்டுள்ளது.

நினைவு மாளிகை
தமிழ்நாடு அரசு திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி வட்டம் பகுதியிலுள்ள நெல்கட்டும்செவல் எனும் ஊரில் பூலித்தேவன் நினைவைப் போற்றும் வகையில் பூலித்தேவன் நினைவு மாளிகை, திருமண மண்டபம் ஆகியவைகளை அமைத்துள்ளது. இந்த நினைவு மாளிகையின் முகப்பில் பூலித்தேவன் முழு அளவு திருஉருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு ஆயிரம் பேர் அமரக்கூடிய அளவில் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. பூலித்தேவன் காலத்து நினைவுச் சின்னங்கள் மற்றும் ஆயுதங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

இத்தாலியைச் சேர்ந்த கல்வியாளர் மரியா மாண்ட்டிசோரி பிறந்த நாள் ஆகஸ்ட் 31.


இத்தாலியைச் சேர்ந்த கல்வியாளர் மரியா மாண்ட்டிசோரி பிறந்த நாள் ஆகஸ்ட் 31.
மரியா மாண்ட்டிசோரி (ஆகஸ்ட் 31, 1870 – மே 6, 1952) இத்தாலியைச் சேர்ந்த கல்வியாளர், மனோதத்துவ மருத்துவர். இத்தாலியில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண். இவர் சிறு குழந்தைகளை பயிற்றுவிக்க ஒரு புதிய முறையை உருவாக்கி ஜனவரி 6, 1907 இல் ரோம் நகரில் தனது பள்ளியில் அறிமுகப்படுத்தினார்.

இவரது முறையை பின்பற்றி கல்வி கற்ற குழந்தைகள் சிறு வயதிலேயே விளையாட்டை விட வேலையில் சாதிக்க அதிக ஆர்வம் காட்டினர். தொடர்ந்து மூளைக்கு வேலை கொடுத்தாலும் அதிகம் களைப்படைவதில்லை. இதனால் இவரது முறையை ஐரோப்பா முழுவதும் பயன்படுத்த துவங்கினர். நெதர்லாந்தில் மிக புகழ் வாய்ந்த ஆசிரியப்பயிற்சி பள்ளியை நிறுவினார். பின்னாளில் 1939 முதல் 1947 வரை இந்தியாவிலும் இலங்கையிலும் பணியாற்றினார்.

மாண்டிசோரி முறைக் கல்வி
இந்த கல்வி முறை குழந்தைகள் தாமாக முன்வந்து செயல்படுவதற்கும், தனது தேவைகளை தானே செய்து கொள்ளவும் வழி செய்கிறது. இந்த முறையில் நடக்கும் வகுப்புகளில் ஆசிரியர்கள் இல்லை, மாறாக அவர்கள் வழிநடத்துபவர்கள் என்றே கருதப்படுகிறார்கள்.

குழந்தைகள் புதியவற்றை தாமாக முன்வந்து ஆர்வமுடன் கற்றுக் கொள்ளவும். அவர்கள் தவறான பழக்கங்களை கற்றுக் கொள்ளாமலும், குழந்தைகளின் முயற்சிகள் வீணாகிப் போகாமலும் பார்த்துக் கொள்வதே இந்த வழிநடத்துபவர்களின் (ஆசிரியர்களின்) பணி. இவரது மிகச்சிறந்த புத்தகங்கள் "The Absorbent Mind", "The Discovery of the Child".

திங்கள், 29 ஆகஸ்ட், 2016

ஜி. கே. மூப்பனார் நினைவு தினம் ஆகஸ்ட் 30


ஜி. கே. மூப்பனார் நினைவு தினம் ஆகஸ்ட் 30.
ஜி. கே. மூப்பனார் (ஆகஸ்ட் 19, 1931 - ஆகஸ்ட் 30, 2001) ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் காங்கிரசு தலைவர். இவர்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் கிராமத்தில் பெரும்பண்ணையார் குடும்பத்தில் கோவிந்தசாமி மூப்பனார் செல்லத்தம்மாள் ஆகியோருக்கு புதல்வராக பிறந்தவர். இவரது உடன் பிறந்தோர் அறுவர் - சகோதரர்கள்: ஜி.ரெங்கசாமி மூப்பனார், ஜி.சம்பத் மூப்பனார், ஜி.சந்துரு மூப்பனார்; சகோதரிகள்: ராமாநுஜத்தம்மாள், சாந்தா அம்மாள், சுலோச்சனா அம்மாள். இவர் மனைவி பெயர் கஸ்தூரி.

தமிழக சட்டபேரவை காங்கிரஸ் தலைவராக ஒருமுறையும், நான்கு முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், இரு முறை தமிழக காங்கிரஸ் தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராக எட்டாண்டுகளும் பணியாற்றிய இவர் கருத்து வேறுபாடால் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை நிறுவி அதன் தலைவராக பணியாற்றி இறுதியில் 30-8-2001 ல் காலமானார்.


ஜி. கே. மூப்பனார் நினைவிடம்
இவரது மகன் ஜி.கே.வாசன்.சென்ற நடுவண் அரசின் கப்பல் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.

வகித்த பதவிகள்
புரவலர்-தலைவர் கும்பகோணம் சாரணர் சங்கம்
தலைவர் சந்திரசேகராபுரம் கூட்டுறவு பண்டகசாலை 1956-1972
,, திருவையாறு ஸ்ரீ தியாகப் பிரம்ம மகோத்சவ சபை 1980-2001
,, தஞ்சாவூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி 1965-1975
,, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி 1976-1980
பொதுச் செயலாளர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி 1980-1988
தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி 1988-1989
தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் 1989-1990
ராஜ்யசபா உறுப்பினர் 1977-1989
தலைவர் தமிழ் மாநில காங்கிரஸ் 1996-2001
ஆயுள் உறுப்பினர் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்
ஈடுபாடு
இசை
அரசியல்
பொதுத் தொண்டு

அனைத்துலக காணாமற்போனோர் நாள் ஆகஸ்ட் 30 .


அனைத்துலக காணாமற்போனோர் நாள் ஆகஸ்ட் 30 .
அனைத்துலக காணாமற்போனோர் நாள் (International Day of the Disappeared) ஆகஸ்ட் 30 ஆம் நாளன்று உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலகின் பல நாடுகளிலும் காவற்துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு காணாமற்போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. கொஸ்டா ரிக்காவில் 1981 இல் தொடங்கப்பட்ட கைதாகிக் காணாமற்போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு (Federation of Associations for Relatives of the Detained-Disappeared, FEDEFAM) என்ற அரசு சார்பற்ற அமைப்பினால் இலத்தீன் அமெரிக்காவில் இரகசியமான முறையில் கைது செய்யப்படலை எதிர்த்து இக்கோரிக்கை முதன் முதலில் விடுக்கப்பட்டது.

அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் குறிப்பாக அனைத்துலக மன்னிப்புச் சபை, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு, செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன இந்த இரகசியக் கைதுகளுக்கு எதிராக அதிக அக்கறை எடுத்துச் செயற்படுகின்றன. "அனைத்துலக காணாமற்போனோர் நாள்" இந்த அமைப்புகளின் சேவை குறித்து பொதுமக்களுக்கு விளக்கவும் அவர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நிதி மற்றும் தன்னார்வலர்களை சேர்ப்பதற்கும் உதவுகிறது.

சிகரம் தொடு...


சிகரம் தொடு...
------------------------
பூமியில் விதைக்கப்பட்ட விதை கூட
எதிர்ப்பை சமாளித்து வாழ்ந்து
காட்டுகிறது.
சிங்கம்,புலி வாழும்
காட்டில் துணிச்சலாக
வாழ்ந்து காட்டுகிறது மான்!
பெரிய மீன்களால் விழுங்கப்படும் சிறிய
மீன்கள் கூட கடலில்
எதிர் நீச்சல்
போடுகின்றன.
மனிதனால் வெட்டப்படும் மரங்கள் கூட
மீண்டும் தலை நிமிர்கின்றன.
பல மைல்கள் ஆகாரத்திற்காக பறக்கும்
பறவைகள் கூட சந்தோஷமாக வாழ்ந்து
காட்டுகின்றன.
சிறிய உடலை உடைய எறும்புகள் கூட
எவ்வளவு சுறுசுறுப்பாக வாழ்க்கையை
வாழ்கிறது.
தண்ணீரே இல்லாத பாலைவனத்தில்கூட ஓட்டகம்
வாழ்ந்து காட்டுகிறது.
ஒரே ஒரு நாள் வாழும் பூச்சிகள் கூட
வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கின்றன.
அப்புறம் நீ ஏன் புலம்பிக் கொண்டு சாகிறாய்,,
அதை ஏன் நொந்து கொண்டே
சாகிறாய்,
ஏன் வெறுத்துக் கொண்டு
வாழ்கிறாய்,
ஏன் தப்பிக்கப் பார்க்கிறாய்?
ஏன் அழுது கொண்டு வாழ்கிறாய்?
ஒரு வாய்ப்புத்தான்.
சந்தோஷமாகத் தான்
வாழ்ந்து பாரேன்,,
பரந்த உலகம், எண்ணற்ற இயற்கைச் செல்வம்,
பார்க்க, கேட்க, ரசிக்க, ருசிக்க.
கொட்டிக் கிடக்கும்
சந்தர்ப்பங்கள்,
கண்னை திறந்துதான் பாரேன்,,
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்,,,,
தொட்டி மீனாக இருக்காதே!
கடல் மீனாக மாறு!
கூட்டின் சிங்கமாக இருக்காதே
காட்டின் சிங்கமாக இரு!
இறக்கை மறந்த கோழியாக இருக்காதே!
இறக்கைகொண்டு பறந்த
கழுகாக மாறு.
வாழ்ந்து விடவே வாழ்க்கை
வீழ்ந்து விட அல்ல! ...

யாழி(யாளி)


யாழி(யாளி)
******************
நம்மில் எத்தனைப் பேருக்கு யாழி(யாளி) என்றால் என்னவென்று தெரியும்?
யாழிகள் - தென்னிந்திய கோவில் சிற்பங்களில் மட்டும் காணக் கிடைக்கும் ஒரு விசித்திரமான மிருகம். கோயில் கோபுரங்கள், மண்டப தூண்களில் மட்டுமே காணப்படும் ஒரு கற்பனைச் சிலை என்பது தான் பலரது எண்ணம். சிங்க முகமும் அதனுடன் யானையின் துதிக்கையும் சேர்ந்தார் போல் காட்சி தருவதைப் போன்று பல கோவில்களில் இவற்றின் சிலைகள் அமைக்கபெற்றுள்ளது.
சிங்கத்தின் தலை கொண்டதை "சிம்ம யாழி" என்றும்,
ஆட்டுத்தலை கொண்டதை "மகர யாழி" என்றும்,
யானை முகத்தை "யானை யாழி" என்றும் அழைக்கிறார்கள்.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இதே பூமியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ராட்சச உடல் அமைப்புடன் "டைனோசர்" என்ற மிருகங்கள் வாழ்ந்தது என்று கூறிய போது முதலில் நம்ப மறுத்த உலகம், பின்னர் அது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடத்தி அவற்றின் எலும்புகள், முட்டைகள், உருவ அமைப்பு போன்றவற்றை ஆதாரத்துடன் வெளியிட்ட பின்பு தான் நம்பத் தொடங்கினார்கள். பின்னர், இது குறித்த திரைப்படங்களை இயக்கியதும் இந்த மிருகங்கள் குறித்த தகவல் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சென்றடைந்தது. அப்படியானால் பல ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று பின்னணி கொண்ட இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியில் இப்படி ஒரு பிரமாண்ட விலங்கின் பதிவுகள் ஏராளமாக பரவிக்கிடப்பதை பார்க்க முடிகிறது. சில கோவில்களில் இந்த மிருகத்தை குதிரையை போன்று கடிவாளமிட்டு அடக்கி அதன் மீது வீரர்கள் கையில் வாளுடன் அமர்ந்திருக்கிறார்கள். அப்படியானால் இவை போருக்கு பயன்படுதப்பட்டிருக்குமா?
இவற்றை எல்லாம் விட்டு ஒரு படி மேலே சென்று பார்த்தோமேயானால், இந்த யாழிகளுக்கென்று தமிழர்கள் தனியாகவே ஒரு வரிசையை கோவில் கோபுரத்தில் ஒதுக்கி இருக்கிறார்கள். அதை "யாழி வரிசை" என்றே அழைக்கிறோம். ராஜ ராஜன் கட்டிய பிரம்மாண்டமான தஞ்சை கோயிலில் கூட இந்த யாழிக்கென்று ஒரு முழு தனி வரிசையே ஒதுக்கப்பட்டுள்ளது. உருட்டும் கண்களோடும், கோரப்பற்களோடும் ஒரு விலங்கின் முகத்தை கோபுரத்தின் நான்கு திசையிலும் எளிதில் பார்க்க முடிகிறது. மேலும் தஞ்சை பெரியகோவில், மதுரை மினாட்சிஅம்மன் கோவில் போன்ற தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான பழமையான கோவில்களில் எல்லாம் இரண்டு கால்களில் நிற்கும் முழு உயர முப்பரிமான யாழியின் சிலையும், அந்த யாழி சிலையின் முழங்காலுக்கு கீழே யானை நிற்கும் சிலையையும் வடித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட யாழி சிலை தென் இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான கோவில்களில் ஆயிரத்துக்கு மேல் சிலைகள் உள்ளன. உலகில் எந்த விலங்குகளுக்கும் இந்த எண்ணிக்கையில் முழு உருவ, முப்பரிமான சிலைகள் கிடையாது என்பது உலகம் அறிய தவறிய உண்மை. குறிப்பாக தமிழர்கள் அறிய தவறிய உண்மை. நம்மில் பலர் கோவில்களுக்கு சென்றிருந்தாலும், இந்த யாழி சிலைகளை முழு மனதோடு இதுவரை கவனித்து இருக்க மாட்டோம். அது தான் யாழி என்ற அதிசய விலங்குக்கு இதுவரை நடக்கும் அவலநிலை.
யாழிக்கு எத்தனை கோவில்களில், எத்தனை விதமான சிலைகள் உள்ளன? யாழியில் எத்தனை வகைகள் உள்ளன? பண்டைய காலத்தில் வாழ்ந்த சிற்பக்கலை நிபுணர்கள் காணாத ஒரு உருவத்தை சிலையாக வடித்திருப்பார்களா? யாழி உருவம் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது? நமது சிறிய கோவில்களிலும் யாழியின் உருவம் உள்ளதை நாம் அறிவோமா? யாழியைப் பற்றி புராணங்கள் என்ன சொல்கின்றன? யாழி என்ற உயிரினம் கற்பனையா? இல்லை அறிவியல் பூர்வமாக அது ஒரு உயிரினமா? யாழி லெமூரிய நாகரீகத்தின் உண்மையான மிருகமா? வாழாத ஒரு உயிரினத்தை ஆயிரக்கணக்கில் சிற்பங்களாக வடிக்க காரணம் என்ன? குடிக்கு அடிமையாகிக் கிடக்கும் தமிழ் சமூகத்தில் இவற்றை குறித்து யார் ஆராய்ச்சி செய்யப்போகிறார்? பதவிக்கு அடித்துக்கொள்ளும் தமிழக அரசியலில் இவற்றின் ஆராய்ச்சிகளுக்கு நிதி ஒதுக்கப்படுமா அல்லது கடைசி வரை அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சாகவே இவை மண்ணோடு மண்ணாகிவிடுமா?
எதற்குமே பதில் இல்லை !!!!
என்னைப்பொருத்தவரை....
யாழிகள் ஒருவேளை கற்பனை விலங்காகவே இருந்தாலும் கூட...
சீனர்களின் புராதன விலங்கு டிராகன் போல...
எகிப்தியரின் புராதன பறவை ஃபீனிக்ஸ் போல...
தமிழரின் புராதன விலங்கு யா‌ழி
அவை போற்றப்பட வேண்டும்

ஹாக்கி உலகின் முடிசூடா மன்னன் தியான்சந்த் பிறந்தநாள் ஆகஸட் 29.


ஹாக்கி உலகின் முடிசூடா மன்னன் தியான்சந்த் பிறந்தநாள் ஆகஸட் 29.
இந்திய ஹாக்கி அணிக்காக விளையாடி 3
ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்வதற்கு
காரண கர்த்தவாக விளங்கிய
தியான்சந்தின் பிறந்ததினமான ஆகஸ்ட் 29,
தேசிய விளையாட்டு தினமாக கடைபிடிக்கப்பட்டு
வருகிறது. ஹாக்கி விளையாட்டின் மேஜிக் மேன்
என உலகம் போற்றும் அளவுக்கு விளையாடிய
தியான்சந்த், உத்தரப்பிரதேச மாநிலம்
ஜான்சியில் 1905 ஆக. 29 ஆம் தேதி
பிறந்தார். ஹாக்கி வீரர் சமேஷ்வர் தத்
சிங்குக்கு மகனாக பிறந்த தியான்சந்தின்
கவனம், இளம் வயதில் மல்யுத்தத்தின் மீதே
இருந்தது.
16 வயது சிறுவனாக இருந்த தியான்சந்த்,
இந்திய ராணுவத்தில் பணியில் சேர்ந்த போது,
அவரது ஆர்வம் ஹாக்கியின் பக்கம்
திரும்பியது. ஒவ்வொரு நாள் பணி
முடிந்த பின்னும், இரவு நேரத்தில் ஹாக்கி
விளையாடுவதை வழக்கமாகக்
கொண்டிருந்தார் தியான்சந்த்.
மின்னொளி வசதி இல்லாத கால
கட்டத்தில், நிலவொளியின் துணையுடன்
ஹாக்கி விளையாடிய தியான்சந்துக்கு
துல்லியமாக கணித்து ஆடும் திறன் மேம்பட்டது.
கோல் கம்பம் இடைவெளியை கணித்த
தியான்: ஒருமுறை ஹாக்கி
ஆடிக்கொண்டிருந்த தியான்,
கோலடிக்க முடியாமல் தவித்துக்
கொண்டிருந்தார். நடுவர்களை
அணுகிய அவர், கோல் கம்பங்களுக்கு
இடையிலான அளவு குறித்து
விவாதித்தாராம். நடுவர்கள் ஆய்வு
செய்தபோது, இரு கம்பத்துக்கும்
இடையிலான அகலம் சர்வதேச விதிமுறைப்படி
இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம், தியான்சந்த் எவ்வளவு
துல்லியமாகவும், நுணக்கத்துடனும் ஹாக்கி
ஆடினார் என்பதை உணர முடியும்.
வாழ்வை மாற்றிய நியூஸிலாந்து பயணம்:
1922 முதல் சுமார் 14 ஆண்டு காலம்,
ராணுவ ரெஜிமென்ட் ஹாக்கிப்
போட்டிகளில் விளையாடிய தியான்,
நியூஸிலாந்தில் சுற்றுப் பயணம் செய்த
இந்திய ராணுவ அணியில் இடம் பிடித்தார்.
அங்கு நடைபெற்ற 18 ஆட்டங்களில் இந்திய
அணி 15 வெற்றிகளைப் பதிவு
செய்தது. 2 ஆட்டம் டிராவான நிலையில்,
ஒரு போட்டி தோல்வியில் முடிந்தது. 2 டெஸ்ட்
போட்டிகளில் தலா ஒரு வெற்றி, தோல்வியை
பதிவு செய்தது இந்திய அணி.
நியூஸிலாந்து பயணத்தில் சிறப்பாக
செயல்பட்ட தியான்சந்த்துக்கு,
ராணுவத்தில் பதவி உயர்வு கிடைத்ததோடு,
சர்வதேச ஹாக்கி உலகில் நுழைவதற்கான
வாய்ப்பும் கிடைத்தது. 1928 ஆம் ஆண்டு
ஒலிம்பிக்கில், ஹாக்கிப் போட்டிக்கு மீண்டும்
அனுமதி அளிக்கப்பட்டது. அதில் பங்கேற்கும்
இந்திய அணியைத் தேர்வு செய்வதற்காக
1925 ஆம் ஆண்டு மாகாண அளவிலான
ஹாக்கிப் போட்டி நடைபெற்றது.
ஒருங்கிணைந்த மாகாண அணிக்காக
மத்திய முன் கள வீரராக விளையாடினார்
தியான். எதிரணி வீரர்களிடமிருந்து பந்தை
கடத்திச் சென்று கோலாக மாற்றும்
தயான்சந்தின் அற்புதமான ஆட்டம்,
பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியையும்,
ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. அதே நேரத்தில்,
இந்திய ஒலிம்பிக் அணியில் தியானுக்கான
இடமும் உறுதி செய்யப்பட்டது.
ஒலிம்பிக்கில் மும்முறை தங்கம்:
ஆம்ஸ்டர்டாமில் 1928-இல் நடைபெற்ற
ஒலிம்பிக் போட்டியில் தியான் சந்தின் ஆட்டம்
முக்கிய பங்கு வகித்தது. அரையிறுதிக்கான
தகுதிச் சுற்றில் 6 கோல்கள் அடித்த தியான்,
அரையிறுதி ஆட்டத்தில் 4 கோல்கள் அடித்தார்.
இதனால், 6-0 என்ற கணக்கில்
ஸ்விட்சர்லாந்து அணியை வீழ்த்தியது இந்திய
அணி.
உடல் நலக்குறைவு காரணமாக,
நெதர்லாந்துக்கு எதிரான இறுதி
ஆட்டத்தில் தியான் சந்த் விளையாட
முடியாமல் போனது. ஆனாலும், 3-0 என்ற கோல்
கணக்கில் இந்தியா வெற்றி
பெற்று, ஒலிம்பிக்கில் முதல் தங்கப்
பதக்கத்தை கைப்பற்றியது. அதிக கோல் அடித்தவர்
என்ற சிறப்பு தியான் சந்துக்கு (14 கோல்கள்)
கிடைத்தது. இதனால், ஹாக்கியின்
வித்தைக்காரர் என்ற
பாராட்டுக்குரியவரானார்.
1932-ஆம் ஆண்டில் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில்
நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில்,
ஹாக்கியில் 2 ஆவது முறையாக தங்கப்
பதக்கத்தை கைப்பற்றிய இந்தியா, இறுதி
ஆட்டத்தில் 24-1 என்ற கணக்கில்
அமெரிக்காவை வீழ்த்தியது. இந்த
ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 35 கோல்கள்
அடிக்கப்பட்டன. அதில், 25 கோல் தியான் சந்த்
மற்றும் அவரது சகோதரர் ரூப்சிங் ஆகியோரால்
அடிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
1934-ஆம் ஆண்டு இந்திய ஹாக்கி அணியின்
கேப்டனாக உயர்த்தப்பட்டார் தியான்
சந்த். 1936-இல் பெர்லின் நகரில்
நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில்
தியான்சந்த் தலைமையிலான இந்திய அணி,
இறுதி ஆட்டத்தில் 8-1 என்ற கோல்களில்
ஜெர்மனியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தைக்
கைப்பற்றியது. இதில், 3 கோல்கள் அடித்து
அசத்தினார் தியான்சந்த் என்பதோடு, அந்த
போட்டி ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெற்றது
என்பதும் குறிப்பிடத்தக்கது. 22 ஆண்டுகள்
இந்திய ஹாக்கியில் முடிசூடா மன்னனாக
திகழ்ந்த தியான் சந்த், உலக ரசிகர்கள்
மத்தியிலும் தனக்கான ஒரு இடத்தை
உருவாக்கினார்.
வாழும் போது புறக்கணிப்பட்ட தியான்:
இந்தியாவின் 3ஆவது உயரிய விருதான
பத்மபூஷண் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட
தியான், ஓய்வுக்குப் பின்னும் ஹாக்கியின்
வளர்ச்சிக்காக உழைப்பதை நிறுத்தவில்லை.
பல்வேறு சாதனைகளுக்கு
சொந்தக்காரராக திகழ்ந்த
அவருக்கு உரிய அங்கீகாரம்
வழங்கப்படவில்லை என்பது துரதிருஷ்டமே.
கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு,
சிறப்பு சிகிச்சை வசதி கிடைக்காமல், எய்ம்ஸ்
மருத்துவமனையில் பொதுப் பிரிவில்
அனு
மதிக்கப்பட்ட அவர், 1979 }ஆம் ஆண்டு
டிசம்பர் 3-ஆம் தேதி உயிரிழந்தார்.
இறந்த பின் கௌரவிக்கப்பட்ட தயான் சந்த்:
எதிரணியினருக்கு சிம்ம
சொப்பணமாக திகழ்ந்த
தியான்சந்த், வாழ்வின் இறுதி நாள்களில்
புறக்கணிக்கப்பட்டார். ஆனாலும், அவரது
மறைவுக்குப் பின் தேசிய விளையாட்டு தினமாக
அவரது பிறந்தநாளை அறிவித்து கௌரவித்தது
மத்திய அரசு. மேலும், விளையாட்டுத்துறையில்
சிறந்து விளங்குவோருக்கு, தியான்சந்தின்
பெயரிலேயே வாழ்நாள் சாதனையாளர்
விருதும் வழங்கப்படுகிறது.
தியான் சந்தின் சிறப்புகள்
ஹாக்கி ஆடிய 22 ஆண்டுகளில், உள்ளூர்
மற்றும் சர்வதேச போட்டிகளில் 1,000 கோல்களுக்கு
மேல் அடித்துள்ளார். டெல்லியில் உள்ள
தேசிய விளையாட்டு மைதானம், லண்டனில்
உள்ள இந்திய ஜிம்கானா கிளப்பில்
அமைக்கப்பட்டுள்ள ஹாக்கி மைதானம்
ஆகியவற்றுக்கு தியான்சந்த் பெயர்
சூட்டப்பட்டுள்ளது.

1936 ஒலிம்பிக் போட்டியின் போது இந்திய மேஜிக்
மேன் தியான்சந்தின் ஆட்டத்தைக் காண
செல்லுங்கள் என ஜெர்மனி பத்திரிகை
செய்தி வெளியிட்டது. லண்டனில்
உள்ள சுரங்க ரயில்பாதையில் உள்ள ஒரு
நிறுத்தத்துக்கு தியான்சந்தின் பெயர்
சூட்டப்பட்டுள்ளது.
1936 ஒலிம்பிக் போட்டியில் தியான்சந்தின்
ஆட்டத்தை பார்த்து ஜெர்மனியை ஆண்ட
சர்வாதிகாரி ஹிட்லர் அசந்து போனார்.
ஜெர்மனி குடியுரிமையுடன், அந்நாட்டு
ராணுவத்தில் பணி வழங்குவதாகவும் கூறி
தியான்சந்தை அழைத்துள்ளார் ஹிட்லர்.
அதற்கு புன்னகையை மட்டுமே பதிலாக உதிர்த்த
தியான், ஹிட்லரின் கோரிக்கையை மறுத்து
விட்டாராம்.
நன்றி...தினமணி

சனி, 27 ஆகஸ்ட், 2016

உறவுகள் மேம்பட A to Z

*உறவுகள் மேம்பட A to Z*

மனிதன் தன் அறிவியல் ஆற்றல் மூலம் வாழ்க்கையை வசதியாக்கிக் கொண்டான். ஆனால் இனிமையாக்கிக் கொள்ள தவறிவிட்டான். இனிய வாழ்க்கைக்கு சுமுகமான உறவு அவசியம். அது மேம்பட வழிகாட்டுகிறது இந்த 26 வார்த்தைகள்!

*A - Appreciation*
மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.

*B - Behaviour*
புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

*C - Compromise*
அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள்.

*D - Depression*
மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்.

*E - Ego*
மற்றவர்களை விட உங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு கர்வப்படாதீர்கள்.

*F - Forgive*
கண்டிக்கக்கூடிய அதிகாரமும் நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த் தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்.

*G - Genuineness*
எந்த விஷயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள்.

*H - Honesty*
தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள்.

*I - Inferiority Complex*
எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.

*J - Jealousy*
பொறாமை வேண்டவே வேண்டாம். அது கொண்டவனையே கொல்லும்.

*K - Kindness*
இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.

*L - Loose Talk*
சம்பந்தமில்லாமலும் அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேச வேண்டாம்.

*M - Misunderstanding*
மற்றவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்.

*N - Neutral*
எப்போதும் எந்த விஷயத்தையும், முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். பேசிவிட்டு முடிவு எடுங்கள். நடுநிலை தவறாதீர்கள்.

*O - Over Expectation*
அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். தேவைக்கு அதிகமாக ஆசைப்படாதீர்கள்.

*P - Patience*
சில சங்கடங்களை சகித்துத்தான் ஆகவேண்டும் என உணருங்கள்.

*Q - Quietness*
தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்னைகளுக்குக் காரணம், தெரியாததைப் பேசுவதுதான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள்.

*R - Roughness*
பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்.

*S - Stubbornness*
சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.

*T - Twisting*
இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விடுங்கள்.

*U - Underestimate*
மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்.

*V - Voluntary*
அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்னை வரும்போது எதிர்த்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள்.

*W - Wound*
எந்தப் பேச்சும் செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்.

*X - Xerox*
நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம்.

*Y - Yield*
முடிந்தவரை விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.

*Z - Zero*
இவை அனைத்தையும் கடைப் பிடித்தால் பிரச்னை என்பது பூஜ்ஜியம் ஆகும்.

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

12 இராசி மண்டலங்கள்

🌻 27 நட்சத்திரங்களும் 4 பாதங்களைக் கொண்டுள்ளது. ஆக மொத்தம் 108 நற்பண்புகள் உள்ளன. அவை 12 வகைகளாக பிறிக்கப்படுகிறது. அதுவே 12 இராசி மண்டலமாகும். அவை :

👆 மேஷம்
✋ ரிஷபம்
✌ மிதுனம்
✊ கடகம்
💪 சிம்மம்
👋 கன்னி
👍 துலாம்
👇 விருச்சிகம்
☝ தனுசு
👌 மகரம்
👏 கும்பம்
👊 மீனம்

🔎ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

👆 மேஷம் :

1. வைராக்கியம் (Assertiveness)
2. தேசநலன் (Citizenship)
3. நிறைவேற்றுதல் (Chivalry)
4. துணிச்சல் (Courage)
5. கீழ்படிதல் (Obedience)
6. வெளிப்படையாக (Openness)
7. ஒழுங்குமுறை (Order)
8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
9. ஆன்மிகம் (Spirituality)

🎯 மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்

✋ ரிஷபம் :

1. கருணை (Mercy)
2. இரக்கம் (Compassion)
3. காரணம் அறிதல் (Consideration)
4. அக்கறையுடன் (Mindfulness)
5. பெருந்தன்மை (Endurance)
6. பண்புடைமை (Piety)
7. அஹிம்சை (Non violence)
8. துணையாக (Subsidiarity)
9. சகிப்புத்தன்மை (Tolerance)

🎯 ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்

✌ மிதுனம் :

1. ஆர்வம் (Curiosity)
2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
3. நகைச்சுவை (Humor)
4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
5. வழிமுறை (Logic)
6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
7. காரணம் (Reason)
8. தந்திரமாக (Tactfulness)
9. புரிந்து கொள்ளுதல் (Understanding)

🎯 மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.

✊ கடகம் :

1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
3. அறம் (Charity)
4. உதவுகின்ற (Helpfulness)
5. தயாராக இருப்பது (Readiness)
6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
7. தொண்டு செய்தல் (Service)
8. ஞாபகசக்தி (Tenacity)
9. மன்னித்தல் (Forgiveness)

🎯 கடகராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.

💪 சிம்மம் :

1. வாக்குறுதி (Commitment)
2. ஒத்துழைப்பு (Cooperativeness)
3. சுதந்திரம் (Freedom)
4. ஒருங்கிணைத்தல் (Integrity)
5. பொறுப்பு (Responsibility)
6. ஒற்றுமை (Unity)
7. தயாள குணம் (Generosity)
8. இனிமை (Kindness)
9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)

🎯 சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.

👋 கன்னி :

1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
2. அருள் (Charisma)
3. தனித்திருத்தல் (Detachment)
4. சுதந்திரமான நிலை (Independent)
5. தனிநபர் உரிமை (Individualism)
6. தூய்மை (Purity)
7. உண்மையாக (Sincerity)
8. ஸ்திரத்தன்மை (Stability)
9. நல்ஒழுக்கம் (Virtue ethics)

🎯 கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.

👍 துலாம் :

1. சமநிலை காத்தல் (Balance)
2. பாரபட்சமின்மை (Candor)
3. மனஉணர்வு (Conscientiousness)
4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
5. நியாயம் (Fairness)
6. நடுநிலையாக (Impartiality)
7. நீதி (Justice)
8. நன்னெறி (Morality)
9. நேர்மை (Honesty)

🎯 துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.

👇 விருச்சிகம் :

1. கவனமாக இருத்தல்(Attention)
2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
4. சீரிய யோசனை (Consideration)
5. பகுத்தரிதல் (Discernment)
6. உள் உணர்வு (Intuition)
7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
8. கண்காணிப்பு (Vigilence)
9. அறிவுநுட்பம் (Wisdom)

🎯 விருச்சகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.

☝ தனுசு :

1. லட்சியம் (Ambition)
2. திடமான நோக்கம் (Determination)
3. உழைப்பை நேசிப்பது (Diligence)
4. நம்பிக்கையுடன் (Faithfulness)
5. விடாமுயற்சி (Persistence)
6. சாத்தியமாகின்ற (Potential)
7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
8. உறுதி (Confidence)
9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)

🎯 தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.

👌 மகரம்:

1. கண்ணியம் (Diginity)
2. சாந்த குணம் (Gentleness)
3. அடக்கம் (Moderation)
4. அமைதி (Peacefulness)
5. சாதுவான (Meekness)
6. மீளும் தன்மை (Resilience)
7. மௌனம் (Silence)
8. பொறுமை (Patience)
9. செழுமை (Wealth)

🎯 மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.

👏 கும்பம் :

1. சுய அதிகாரம் (Autonomy)
2. திருப்தி (Contentment)
3. மரியாதை (Honor)
4. மதிப்புமிக்க (Respectfulness)
5. கட்டுப்படுத்துதல் (Restraint)
6. பொது கட்டுப்பாடு (Solidarity)
7. புலனடக்கம் (Chasity)
8. தற்சார்பு (Self Reliance)
9. சுயமரியாதை (Self-Respect)

🎯 கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.

👊 மீனம் :

1. உருவாக்கும் கலை (Creativity)
2. சார்ந்திருத்தல் (Dependability)
3. முன்னறிவு (Foresight)
4. நற்குணம் (Goodness)
5. சந்தோஷம் (Happiness)
6. ஞானம் (Knowledge)
7. நேர்மறை சிந்தனை (Optimism)
8. முன்யோசனை (Prudence)
9. விருந்தோம்பல் (Hospitality)

🎯 மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.

தேசிய விளையாட்டு நாள் ஆகஸ்ட் 29.


தேசிய விளையாட்டு நாள் ஆகஸ்ட்  29.
இந்திய தேசிய விளையாட்டு நாள் (Indian National Sports Day) இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராக திகழ்ந்த தியான் சந்த்தைப் பெருமைப்படுத்தும் விதமாக அவரது பிறந்த நாளன்று (ஆகத்து 29) கொண்டாடப்படுகிறது. இந்நாளின் முக்கிய நோக்கமானது நாட்டு மக்களிடம் ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிப்பதாகும். தேசிய விளையாட்டு நாளில் குடியரசுத் தலைவரால், விளையாட்டுகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, மற்றும் துரோணாச்சாரியார் போன்ற விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. 2012 இல் முதன் முதலாக இந்திய அரசு, தியான் சந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 29ஆம் நாளை, தேசிய விளையாட்டு தினமாக அறிவித்தது.

கத்தார் தேசிய விளையாட்டு நாள்
கத்தார் நாட்டில் தேசிய விளையாட்டு நாள் ஆண்டுதோறும் பெப்ரவரி மாதத்தின் இரண்டாம் செவ்வாய்க்கிழமையில் கொண்டாடப்படுகிறது. இந்நாள் ஒரு பொது விடுமுறை நாளும் ஆகும். முதலாவது தேசிய விளையாட்டு நாள் 2012 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.
பெரிய பதவி தருகிறேன். எங்கள் நாட்டுக்காக விளையாட வந்துவிடுங்கள்' - என்று ஹிட்லர் கேட்டபோது, மறுத்து தாய்நாடுதான் பெரிது என்று இந்தியாவுக்காக தொடர்ந்து ஹாக்கி விளையாடிய வீரர் தயான் சந்த்-தின் பிறந்த தினம் தான் தேசிய விளையாட்டு தினம்!

இந்தியாவில் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 29-ம் தேதி தேசிய விளையாட்டு தினமாக (National Sports Day) கொண்டாடப்படுகிறது.

இந்தத் தினம், நாட்டின் தேசிய விளையாட்டான ஹாக்கியில் சாதனை படைத்த தயான் சந்த் நினைவாக அவரின் பிறந்த தினத்தில் கொண்டாடப்படுகிறது.

தயான் சந்த் கடந்த 1905-ம் ஆண்டு, ஆகஸ்ட் 29-ம் உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் பிறந்தார். இவரின் தந்தை சாமேஸ்வர் தத் சிங், இந்திய ராணுவத்தில் பணி புரிந்தார். அவர் ராணுவ ஹாக்கி அணிக்காக விளையாடி இருக்கிறார். அரசு பணி என்பதால் சாமேஸ்வர் தத் சிங் பல ஊர்களுக்கு பணி மாற்றம் நடந்தது. இதனால், தயான் சந்த் சரிவர கல்வி கற்க முடியவில்லை. அவர் ஆறாம் வகுப்புடன் படிப்பை முடித்துக் கொண்டார். இவர்கள் குடும்பம் ஒரு வழியாக உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் வீடு கட்டி அமர்ந்தது.

சிறு வயது முதல் தயான் சந்த்க்கு வலுதூக்குவதில்தான் அதிக ஆர்வம். 1922-ம் ஆண்டு ராணுவத்தில் தயான் சந்த் சேர்ந்த பிறகே அவருக்கு ஹாக்கி மீது ஒர் ஆர்வம் பிறந்தது. அப்போது அவருக்கு வயது 16. அப்போது ஹாக்கி விளையாட்டில் சாதனை படைக்க வேண்டும் என்கிற மனதில் இருத்துக் கொண்டார். 1926 வரை இந்திய ராணுவ அணி சார்பில் ஹாக்கி போட்டிகளில் பங்கேற்று விளையாடினார். 1934-ல் தயான் சந்த் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஆக உயர்ந்தார்.

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம்..!

1928 (ஆம்ஸ்டர்டாம்), 1932 (லாஸ் ஏஞ்செல்ஸ்), 1936 (பெர்லின்),  ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்ல தயான் சந்த் முக்கிய காரணமாக இருந்தார்.

ஆயிரம் கோல்களுக்கு மேல் போட்டு சாதனை படைத்த இவர், தன் 51-வது வயதில் 1956-ம் ஆண்டு இந்திய ராணுவ மேஜர் பதிவியிலிருந்து ஓய்வு பெற்றார். அந்த ஆண்டு அவருக்கு நாட்டின் மூன்றாவது பெரிய விருதான பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. இன்றைய தேதி வரையில் ஹாக்கி வீரர் ஒருவர் இவர் மட்டும்தான் இந்த உரிய விருதை பெற்றிருக்கிறார்.

பணி ஓய்வுக்கு பிறகு ராஜஸ்தானில் மவுண்ட் அபு-ல் இருந்துக் கொண்டு ஹாக்கி பயிற்சி அளித்தார். மேலும், பாட்டியாவில் உள்ள தேசிய விலையாட்டு அமைப்பின் தலைமை ஹாக்கி பயிற்சியாளராக இருந்தார்.

1952-ல் கோல் என்கிற பெயரில் சுய சரிதை எழுதினார். இதை சென்னையை சேர்ந்த ஸ்போர்ட் அன்ட் பாஸ்டைம் நிறுவனம் வெளியிட்டு பெருமை சேர்த்துக் கொண்டது.  தயான் சந்த், 1979-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி இந்த உலகிலிருந்து விடை பெற்றார்.

தயான் சந்த்-தின் தேசப்பற்று..

1936-ல் பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் தயான் சந்த் சிறப்பாக விளையாடினார். அதை பார்த்த ஹிட்லர், 'மேஜர் பதவி மற்றும் ஜெர்மன் குடியுரிமை தருகிறேன்,' என்று சொல்லி இருக்கிறார். அதற்கு எல்லாம் மசியாமல் தாய்நாட்டுக்கு மட்டும் தான் ஹாக்கி விளையாடுவேன் என்று தயான் சந்த் சொல்லி இருக்கிறார்.

1935-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உலக கிரிக்கெட் சாதனையாளர் பிராட்மேன், தயான் சந்த்தின் ஹாக்கி ஆட்டத்தை பார்த்தார். இது குறித்து பிராட்மேன் கூறும் போது, "கிரிக்கெட்டில் ரன் எடுப்பது போல் தயான் சந்த் கோல்களை எடுக்கிறார்" என்றார்.

ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் இவருக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது. அது நான்கு கைகளில் நான்கு ஹாக்கி மட்டைகளுடன் காட்சி அளிக்கிறது.

ஆனால், தற்போது 'இந்திய ஹாக்கி'யோ ஐ.சி.யு.வில் முடங்கியுள்ளது. தேசிய விளையாட்டு மீண்டும் எழுச்சி பெறுவது ஒன்றே தயான் சந்த்-துக்கு நாம் அளிக்கிற உண்மையான சல்யூட்!

நந்தி பற்றிய 50 சுவையான தகவல்கள்


நந்தி பற்றிய 50 சுவையான தகவல்கள் 
1. நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள்.

2. நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது. நந்தி அனமதி கிடைத்தால்தான் ஈசன் அருளைப்பெற முடியும். எனவேதான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது தடுத்தால், "என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான்'' என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.

3. பிரதோஷ காலங்களில் நந்தியை தவறாமல் வழிபடுபவர்களுக்கு அருள் வரம் தரும் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

4. நந்தி தேவர் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் அற்புத காட்சி ஒன்று, நாகை மாவட்டம் ஆத்தூர் மந்தாரவனேசுவரர் கோவிலில் உள்ளது.

5. சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோவிலில் பிரமாண்ட அதிகார நந்தி வாகனம் உள்ளது. இந்த அதிகார நந்தியை தமிழ்ப் பேரறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் தந்தை பொன்னுசாமி கிராமணி என்பவர் செய்து கொடுத்தார்.

6. ஆந்திர மாநிலம் லேபாட்சியில் உள்ள கருங்கல்லில் வடிக்கப்பட்ட நந்தியே இந்தியாவில் உள்ள கல் நந்திகளில் பெரிய நந்தியாம்.

7 தமிழ்நாடு மக்களுக்கு நந்நி என்றதும் தஞ்சை பெரிய கோவில் நந்திதான் நினைவுக்கு வரும். இந்த நந்தி ஒரே கல்லால் ஆனது.

8. மதுரை ஆவணி மூல வீதியில் "மாக்காளை'' எனப்படும் சுதையால் அமைக்கப்பட்ட பிரமாண்ட நந்தி உள்ளது. இத்தகைய மாக்காளை நந்திகளை நெல்லை, சுசீந்திரம், ராமேஸ்வரம், திருவிடை மருதூர் ஆலயங்களிலும் காணலாம்.

9. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஜோதி நந்தி உள்ளது. இந்த நந்தி முன் தீபம் ஏற்றி வலம் வந்து மலையை நோக்கி வழிபடுவதை பக்தர்கள் வழக்கத்தில் கொண்டுள்ளனர்.

10. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருந்து பார்த்தால், மலையானது, நந்தி ஒன்று படுத்து இருப்பது போன்ற தோற்றத்தில் காட்சித்தரும். அந்த இடத்தை "நந்திமுக தரிசனம்'' என்கிறார்கள்.

11. மைசூர் சாமுண்டி மலை மீதுள்ள நந்தி கண்கவர் அழகான நந்தியாகும். இது சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

12. கேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவ ஆலயம் உள்ளது. அங்கு 4 மூலைகளிலும் நந்தி வைக்கப்பட்டுள்ளது.

13. மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள நந்திக்கு கருவறை நந்தி என்று பெயர்.

14. திருவாரூர் தியாகராஜர் கோவில் சன்னதியில் ஈசனை ஆச்சரியத்துடன் பார்த்தபடி எழுந்து நிற்கும் நிலையில் நந்தி உள்ளது. இந்த நந்தியை வழிபட்டால் செய்த பாவங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்பது நம்பிக்கை.

15. திருமந்திரம் எனும் நூலை எழுதிய திருமூலருக்கு குருவாக நந்தி திகழ்ந்தார். திருமூலருக்கு நந்தி பெருமான்தான் 9 வேத ஆகமங்களை விளக்கி அருளியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

16. சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமார், பதஞ்சலி, சிவயோக மாமுனி, வியாக்கிரமர், திருமூலர் ஆகிய 8 பேரும் நந்தி பெருமானின் மாணவர்களாவர்.

17. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் நந்தி துர்கா மலையே பரவலாக நந்தி மலை என்று அழைக்கப்படுகிறது. நந்தி மலையே பென்னாறு, பாலாறு பொன்னையாறு ஆகிய ஆறுகளில் பிறப்பிடமாக கருதப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 1,500 அடி உயரத்தில் இருக்கின்றது. ஆயிரம் வருடத்து பழமை வாய்ந்த நந்தி கோவிலால் நந்தி மலை என்ற பெயர் ஏற்பட்டது.

18. நந்திகேசுரரின் வரலாற்றை லிங்க புராணம் கூறுகிறது. பிறப்பில் எம்பெருமானாகிய சிவபெருமானே நந்திகேசுவரராகப் பிறந்து கணங்களின் தலைவரானார் என்பது புராண மரபு.

19. இந்திய வரலாற்றை ஆராய்ந்தால் தத்துவம், யோகம், நாட்டியம், இசை, ஆயுர்வேதம், அஸ்வவேதம், காமவேதம் முதலிய பல்வேறு சாத்திரங்களைத் தோற்றிவைத்தவராக நந்திகேசுரர் என்ற முனிவர் வாழ்ந்திருக்கிறார் என அறியலாம்.

20. சிவபெருமான் நாட்டியக் கலையைப் பிரும்மாவுக்கு கற்றுக் கொடுக்க அம்முறையை அறிந்த நந்தி பரத முனிவருக்குப் போதித்தார் என்று அபிநய தர்ப்பணம் கூறுகிறது.

21. தமிழ்நாட்டில் ஆடவல்ல பெருமான் தண்டுவுக்கு நாட்டியம் கற்றுக்கொடுப்பதாக ஒரு சிற்பம் மாமல்லபுரத்தில் தர்மராஜ ரதத்தில் உள்ளது. இங்கு சிவன் நாட்டியாசாரியராகவும் தண்டு முனிவர் மனித உருவிலும் உள்ளனர்.

22. காஞ்சிபுரத்தில் இராஜ சிம்மன் கட்டிய கைலாய நாதராலயத்தில் பின்புறச் சுவரில் ஒரு சிற்பம் உள்ளது. அதில் சிவபிரான் ஊர்த்துவதாண்டவம் புரிகிறார். அவர் அருகில் நந்திகேசுவரர் ஆனந்தமாக நாட்டியம் கற்றுக் கொண்டு ஆடுகிறார்.

23. தமிழ்நாட்டில் நந்திகேசுவரரின் மதம் கி.பி. 700லேயே சிறப்பிடம் பெற்றிருந்தது.

24. தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் பிற இடங்களிலும் உள்ள சிற்பங்களில் சிவன் ஆடும்போது நந்திகேசுவரர் பஞ்சமுக வாத்யம் என்னும் குடமுழா வாத்தியத்தை வாசிப்பதாக உள்ளதைக் காணலாம். திருவாரூர், திருத்துறைபூண்டி ஆகிய தலங்களில் இன்றும் பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்படுகிறது.

25. பஞ்சமுக வாத்தியலடீசணம் என்னும் சுவடியில் குடமுழா வாத்தியம் நந்திகேசுவரரால் இசைக்கப்பட்டது என்றும், ஆதலின் இதை இசைக்கும் முன்னர் நந்திகேசுவரருக்குச் சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது.

26. காமசாஸ்திரத்தை தோற்றுவித்தவரும் நந்திகேசுவரரே என்று பல நூல்கள் கூறுகின்றன. நந்தி இயற்றிய பல செய்யுட்களை ''ரதி ரகசியம்'' என்று தம் நூலில் கொக்கோகர் மேற்கோளாகக் காட்டுகிறார்.

27. ஆகம சாஸ்திரங்களையும், சைவசித்தாந்த தத்துவங்களையும் சிவபெருமானிடம் அறிந்து உலகுக்குப் போதித்தவர் நந்திகேசுவரரே. சைவமரபில் தலையாயது ''சிவஞான போதம்'' என்னும் நூல். இதை நந்திகேசுவரரே முதலில் போதித்தார்

28. சிவாலயங்களில் துவாரபாலர் இருவரில் தலையில் சூலம் தரித்து நிற்பவர் நந்திகேசுவரர் ஆவார்.

29. சிதம்பரம் நடராஜப் பெருமானின் கோயிலில் நான்கு கோபுரங்களிலும் அதிகார நந்தியின் உருவத்தைக் காணலாம்.

30. நந்திகேசுவரரின் மறு அவதாரமாக அனுமான் கருதப்படுகிறார்.

31. சில சிவாலயங்களில் நந்திக்குப் பதிலாகக் குரங்கு தூவாரபாலனாகத் திகழ்வதைக் காணலாம். எவ்வாறு சிவதத்துவத்தை நந்தி வாயிலாகப் பரமன் போதித்தாரோ அதே போல ராமதத்துவம் அனுமன் வாயிலாகப் போதிக்கப்பட்டது.

32. தானும் நந்தியும் வேறல்ல, ஒருவரே என்று சிவபெருமான் நந்தி புராணத்தில் கூறுகிறார். நந்தியைத் தொழுவது சிவபெருமானைத் தொழுவதே ஆகும்.

33. முனிவர்களுக்கும் சித்தர்களுக்கும் யோகிகளுக்கும் நந்திதேவரே ஆதி குரு.

34. `நந்தி' என்ற வார்த்தையுடன் `ஆ' சேரும்போது `ஆநந்தி' என்ற பொருள் தருகிறது. `நீயும் ஆனந்தமாக இரு, பிறரையும் ஆனந்தமாக வைத்திரு!' என்று சிவபெருமான் நந்திக்கு அளித்த வரம் அது.

35. நந்தியைத் தொழாமல் சிவபெருமானைத் தொழ முடியாது. ஆலயத்தில் நந்தியை மட்டுமே தொழுதுவிட்டு திரும்பிவிட்டால் கூட சிவபெருமானை வணங்கியதன் முழுபலனும் கிட்டும்.

36. ஆலயங்களைக் காவல் காக்கும் அதிகாரமும் நந்திக்கே உரியது என்பது தெளிவாகிறது. இதன் அடையாளமாகத் தான் திருக்கோவில்களின் மதில் சுவர்களில் நந்தியின் திருவுருவை அமைத்துள்ளனர்.

37. நந்தி தேவருக்கு சிவ பெருமானைப் போலவே நெற்றிக்கண்ணும் நான்கு புஜங்களும், கையில் பிரம்பும், உடைவாளும், இருபுஜங்களில் மான் மழுவும் உண்டு. மானும் மழுவும் வேதத்தைக் குறிக்கிறது. மழு வீரத்தை அல்லது ஆண்மையைக் குறிக்கிறது எனவும் கூறுவர்.

38. நந்திக்கு இவ்வுலகத்தின் எதையும் கண்டிக்கவும் தண்டிக்கவும் அதிகாரம் வழங்கியுள்ளான் பரமேஸ்வரன்.

39. நந்தியின் அருள் இருந்தால்தான் மனிதர்களுக்கு மட்டுமின்றி தேவர்களுக்கும் முக்தி கிடைக்கும். அதனாலேயே தேவர்களும் நந்திதேவரைப் போற்றித் துதிக்கின்றனர்.

40. எல்லா உயிர்களையும் ஒரு காலத்தில் ஓய்வு படுத்துதல் மகாசங்காரம் எனப்படும். இந்த அதிகாரத்தை சிவபெருமான் நந்தி தேவருக்கு வழங்கியிருக்கிறார்.

41. நந்திதேவருக்கு ருத்திரன் என்ற பெயரும் உண்டு. ருத் என்பது துக்கம். ரன் என்பது ஓட்டுகிறவன். துக்கத்தை ஓட்டுகிறவன் என்பதே ருத்திரன். தூயவன், சைலாதி எனவும் நந்தியை அழைப்பர்.

42. மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், ருத்திரன், கந்துரு, காலாங்கி, கஞ்சமாலையன் போன்ற தேவர்களெல்லாம் நந்தியைக் குருவாகக் கொண்டு வேதம் கற்றவர்கள் ஆவர்.

43. பிரவிர்த்தி என்ற சேர்க்கையை விட்டு நிவிருத்தி என்ற விலகலைத் தேர்ந்தெடுப்பது ஞானத்தின் மார்க்கம். இதைக் கற்றுக் கொடுத்தவர் நந்திதேவரே. இவர் வழி வந்தவர்களே மெய் கண்ட சந்தானத்தின் குருபரம்பரை என்றழைக்கப்படுகிறார்கள்.

44. சிவபெருமானின் முக்கண்ணின் பார்வைக்கு எதிரில் நிற்க நந்திதேவரைத் தவிர வேறுயாராலும் இயலாது. இது சிவபெருமானே நந்தி தேவருக்கு அளித்த வரமாகும்.

45. சிவ பெருமான் திருநடனம் புரிகையில் நந்திதேவரே மத்தளம் வாசித்ததாக சிவபுராணம் கூறுகிறது.

46. பிரதோஷ காலம் மட்டுமின்றி எக்காலத்தும் நாம் சிவபெருமானி டம் வைக்கும் வேண்டுதல் களை நந்திதேவரிடம் வைத்தால் போதும். அவர் அதைப் பரமேஸ்வரனிடம் கொண்டு சேர்த்துவிடுவார் என்பது ஐதீகம்.

47. நந்தியை வழிபடும்போது, `சிவனடியில் சரணம் புகுந்து சிவத்தியானத்தில் ஆழ்ந்திருக்கும் மகா புண்ணியம் பெற்ற நந்திகேசுவரரே! சன்னிதிக்குச் சென்று உமையோடு கூடிய ஈஸ்வரனைத் தரிசிக்க எனக்கு உத்தரவு தருக' என்று பிரார்த்திக்க வேண்டும்.

48. நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும், சிவப்பு அரிசி நிவேதனமும் நெய்விளக்கும் வைத்து வழிபட வேண்டும்.

49. பிரபஞ்சத்தில் உள்ள தீர்த்தங்கள் எல்லாம் பிரதோஷ காலத்தில் பீஜத்தை வந்தடைகின்றன. அதனால் நந்தியின் பீஜத்தைத் தொட்டு வணங்கிய பிறகே சிவதரிசனம் காணவேண்டும். பிறகு வாலைத் தொட்டு வணங்க வேண்டும்.

50. நாட்டியம் பயில்வோரும் இசை பயில்வோரும் நந்தியை வழிபட்டால் அவர்களின் கலைகள் தடையின்றி சிறந்து வளரும்.*

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

ஆன்மிகவாதி ஸ்ரீ நாராயணகுரு பிறந்த தினம் ஆகஸ்ட் 28.


ஆன்மிகவாதி  ஸ்ரீ நாராயணகுரு பிறந்த தினம் ஆகஸ்ட் 28.
நாராயணகுரு (ஆகஸ்ட் 28, 1855 - செப்டம்பர் 20, 1928), இந்து ஆன்மிகவாதியும்  இந்தியாவின் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். இந்தியா முழுவதும் பரவியிருந்த சாதிக் கொடுமைகளில் கேரளாவில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அடிப்படை உரிமைகள் பல மறுக்கப்பட்ட காலகட்டத்தில் ஈழவர் சமூகத்தில் பிறந்தவர் நாராயணகுரு. குருதேவன் என்று அவரது சீடர்களினால் அழைக்கப்பட்ட நாராயணகுரு சாதிக்கட்டுப்பாடுகளை சகித்து தாங்கள் ஏன் இவ்வுலகில் பிறந்தோம் என்று மனம் நொந்து வாழ்ந்து வந்தவர்களுக்கு வழிகாட்டவும் அவர்களை நல்வழிப்படுத்தவும் முனைந்தவர்.

ஸ்ரீ நாராயணகுருவின் வாழ்க்கை.

1855 ஆம் ஆண்டில் ஆகஸ்ட்மாதம் 28ம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள செம்பழந்தி எனும் கிராமத்தில் ஈழவ சமுதாயத்தில் விவசாயம் செய்து வந்த மாடன் ஆசான் - குட்டி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர்தான் நாராயணன். இவர் பெற்றோர்களால் நாணு என்று சுருக்கமாகவும் செல்லமாகவும் அழைக்கப்பட்டார்.

இவரது தந்தை மாடன் விவசாயம் செய்து வந்தாலும் சிறிது சமஸ்கிருதம் தெரிந்திருந்ததால் இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற கதைகளை அந்த கிராம மக்களுக்கு கிராமியக் கதைகளாகச் சொல்லி வந்தார். மேலும் கிராம மக்களுக்கு "ஆசான்" (ஆசிரியர்) ஆகவும் இருந்தார். தந்தை சொல்லும் கதைகளை ஆர்வமுடன் கேட்டு வந்த நாராயணன், தந்தை இல்லாத நேரங்களில் அவரது தந்தையைப் போல் அவரும் கிராம மக்களுக்கு கதைகளைச் சொல்லி மகிழ்ச்சி அடைவார்.

இவரது மாமாவான கிருஷ்ணன் வைத்தியன் ஆயுர்வேத வழி மருத்துவர். சமஸ்கிருதம் தெரிந்த பண்டிதரும் கூட. இவருடைய பரிந்துரையில் உள்ளூர் பள்ளி ஆசிரியரும், கிராம அதிகாரியுமாக இருந்த செம்பழந்திப் பிள்ளை என்பவர் நாராயணனுக்கு வீட்டிலிருந்தபடியே அடிப்படைக்கல்வியைக் கற்றுக் கொடுத்தார். இதன் பிறகு அவரது தந்தை மற்றும் மாமா அவருக்குத் தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளின் அடிப்படைகளையும் சிந்தனைகளையும் கற்றுக் கொடுத்தனர். அத்துடன் அவர்கள் தொழில் முறைப் பாடங்களான சித்தரூபம், பாலபுரோபதனம், அமரகோசம் போன்றவைகளையும் கற்றுக் கொடுத்தனர்.

15 வயதில் தனது தாயை இழந்த நாராயணன் அதிகமான நேரம் தனது தந்தையின் ஆசிரியப் பணியிலும், மாமாவின் ஆயுர்வேத மருத்துவப் பணியிலும் உதவியாக சில பணிகளைச் செய்து வந்தார். மீதமுள்ள நேரத்தில் அருகிலுள்ள கிராமக் கோவில் ஒன்றில் தெய்வ வழிபாடுகளில் கவனம் செலுத்தினார். அதன் பிறகு நாராயணனின் கூர்மையான அறிவுத்திறன் கண்டு அவரை அவரது வீட்டிலிருந்து 50 மைல் தொலைவிலிருந்த கருநாகபள்ளி எனுமிடத்தில் பிரபலமான பண்டிதராக விளங்கிய கும்மம்பிள்ளி ராமன் பிள்ளை ஆசான் என்பவரிடம் கல்வி கற்றுக் கொள்ள அனுப்பினர். அங்கு சமஸ்கிருதத்தை முழுமையாகக் கற்றுக் கொண்டார். அங்கு அவர் வேதங்களையும், உபநிஷதங்களையும் கற்றுத் தேர்ந்தார். அதன் பிறகு அருகிலுள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியர் பணி செய்தார். இவருடைய திறனைக் கண்டு வியந்த அப்பகுதி மக்கள் அவரை "நாணு ஆசான்" என்று செல்லமாக அழைக்கத் துவங்கினர்.

பின் அங்கிருந்து தனது சொந்த ஊர் திரும்பிய நாராயணன் அந்தப்பகுதி சிறுவர்களுக்கு கல்வி அளிக்க குறுகிய காலத்திற்குள் அங்கு ஒரு பள்ளியைத் துவக்கினார். அந்த பள்ளியில் கல்வி வழங்கியது போக மீதி நேரம் கோவிலுக்குச் சென்று அங்கு கவிதைகள் எழுதுவது, கிராம மக்களுக்கு தத்துவம் மற்றும் நீதிக்கதைகள் சொல்வது என்பதாக ஒரு துறவியைப் போல் தனது சேவைகளைத் தொடர்ந்தார்.

நாராயணன் துறவியாகி விடக்கூடாது என்று அவரது குடும்பத்தினர் தொடர்ந்து அவரை வற்புறுத்தி தொழில் முறை கிராம மருத்துவர் ஒருவரின் மகளான காளியம்மா என்பவரை அவருக்கு எளிமையான முறையில் திருமணம் செய்து வைத்தனர். நாராயணன் துறவியைப் போல் அலைந்து திரிந்து கொண்டிருந்ததால் அவரது மனைவி அவருடைய தந்தை வீட்டிற்குச் சென்று விட்டார். சில காலத்திற்குப் பின்பு அவரது தந்தையும், மனைவியும் மரணமடைந்ததை அடுத்து ஆன்மீக சன்னியாசியாக பல இடங்களுக்குச் செல்லத் துவங்கினார்.

இப்படி திருவனந்தபுரத்திற்குச் சென்ற நாராயணனுக்கு பிரிட்டிஷ் அரசாங்கப் பணியாளராகப் பணிபுரிந்த தைக்காடு அய்யாவு என்ற தமிழர் பழக்கமானார். இவர் சிலம்பு, யோகக் கலைகள் போன்றவைகளைக் கற்றுக் கொடுக்கும் ஆசானாகவும் இருந்தார். இவரிடம் தியானம், யோகா போன்ற கலைகளுடன் தமிழில் ஆழமான அறிவையும் பெற்றார். திருமந்திரம் போன்ற தமிழ் நூல்களையும் கற்று அறிந்தார். 23 வது வயதில் துறவறம் மேற்கண்ட நாராயணன் கன்னியாகுமரி மாவட்டம் பொற்றையடி எனும் ஊரின் அருகிலுள்ள மருத்துவாமலையில் தனிமையில் தியானங்கள் செய்து எட்டு வருடங்கள் வரை இளம் துறவியாக வாழ்ந்தார்.

இந்த மருத்துவாமலையில் தியானம், யோகா போன்ற கலைகளால் அவருக்குக் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு மலையாள மொழியில் ஆத்மோபதேச சதகம் எனும் நூறு செய்யுள்களை இயற்றினார். இதன் மூலம் அவருடைய கவி நயத்துடன் தத்துவார்த்தமான பல கருத்துக்களை அறிய முடிந்தது. தீண்டப்படாத சமூகத்தில் பிறந்தவர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் மலையாளம், தமிழ், சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் அதிகப் புலமையும் அம்மொழிகளில் உள்ள வேதங்களையும், உபநிடதங்களையும் கற்றுத் தேர்ந்த இவர் சன்னியாசியாகவே சுற்றித் திரிந்தார்.

அருவிப்புரம் சிவன் கோவில்
சன்னியாசியாகத் திரிந்த நாராயணன் தனது கொள்கைகளை விரும்பும் சிலரை தனது சீடர்களாக்கிக் கொண்டார். அதன் பிறகு நாராயண குருவாக உயர்ந்தார். 1888-ல் திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள அருவிப்புரம் என்கிற மலைகளும் காடுகளும் சூழ்ந்த இடத்தில் நெய்யாறு ஓடும் இடத்திற்கு அருகில் ஒரு இடத்தைத் தேர்வு செய்தார். அந்த இடத்தில் தனது சீடர்கள் உதவிகளுடன் அந்த ஆற்றில் இருந்து ஒரு கல்லை எடுத்து வந்து அந்தக் கல்லை சிவலிங்கமாகப் பிரதிஷ்டை செய்தார். இந்தக் கோவிலுக்கு முதலில் தென்னை மரக்கிளைகள் மற்றும் மாமரத்து இலைகளைக் கொண்டு மேற்கூரை அமைக்கப்பட்டது.

கேரள மாநிலத்தில் தீண்டத் தகாதவர்களுக்குக் கடவுள் வழிபாடு மறுக்கப்பட்ட காலத்தில் இந்த அருவிப்புரம் சிவன் கோவில் அமைக்கப்பட்டது ஒரு புரட்சிகரமான செயலாக இருந்தது. அதே சமயம் உயர் சாதியினர்களுக்கு இது எரிச்சலையும் இந்தக் கோவிலில் தங்கள் தெய்வத்தை எப்படி பிரதிஷ்டை செய்யலாம்? என்கிற பிரச்சனையையும் எழுப்பினர். ஆனால் நாராயண குரு கடவுள் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினருக்கு மட்டும் சொந்தமானதல்ல என்று சொன்னதுடன் இந்தக் கோவிலில் சாதி-மத பேதமில்லாமல் அனைவரும் வணங்கும் தலம் என்று எழுதி வைக்கவும் செய்தார். (மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவருடைய படைப்பில் இதை ஈழுவ சிவன் கோவில் என்று குறிப்பிட்டிருக்கிறார்.)

1904-ல் தனது சன்னியாசி வாழ்க்கையிலிருந்து புனிதமான வாழ்விற்கான பயிற்சிகளை மேற்கொண்டார். இதற்காக திருவனந்தபுரத்திற்கு வடக்கே 20 மைல் தொலைவிலிருந்த சிவகிரி எனுமிடத்தைத் தேர்வு செய்தார். இங்கு அம்பாள் ஆலயம் அமைத்து அதில் தெய்வ ஆராதனைகளைத் தொடர்ந்தார்.

இதன் பிறகு “வர்க்கலை” எனும் ஊரில் சமஸ்கிருதப் பள்ளி ஒன்றை அமைத்தார். இங்கு சாதிப் பாகுபாடுகளின்றி கல்வித்தகுதிகள் எதுவுமின்றி பலரும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இதில் ஏழைக் குழந்தைகள், அனாதையாக விடப்பட்டவர்கள் போன்றவர்களுக்கு ஆதரவளித்தார்.

நம்பூதிரிகளுக்கு அடுத்த நிலையிலிருந்த நாயர் வகுப்பினர்கள் கூட கோவில்களின் கருவறைக்குள் நுழைய முடியாத நிலையில் நாராயண குரு பல கோவில்களைக் கட்டி ஆலயப் பிரவேசத்திற்கு புதிய வழி முறையைக் கொண்டு வந்தார். கேரளாவில் திருச்சூர், கண்ணூர், அஞ்சுதெங்கு, கோழிக்கோடு போன்ற இடங்களில் கோவில்களைக் கட்டினார். கர்நாடகாவில் மங்களூர் பகுதியிலும், தமிழகத்தில் நாகர்கோவிலிலும் இலங்கையில் கொழும்புவிலும் சில முக்கியமான கோவில்களைக் கட்டி அங்கு சிவன், விஷ்ணு, தேவி போன்ற தெய்வங்களை பிரதிஷ்டை செய்தார். இக்கோவில்களில் வழிபாட்டுப் பூஜைகளுக்காக இவரே சமஸ்கிருதம், மலையாளம் மொழியில் சில மந்திரங்களையும் உருவாக்கிக் கொடுத்தார். இவைகளில் சுப்பிரமணிய சதகம், காளி நாடகம், தெய்வ தசகம், சாரதா தேவி துதி போன்றவை முக்கியமானவையாகக் கருதப்படுகிறது.

ஈழவ மக்களிடையே இருந்து வந்த சிறு தெய்வ வழிபாடு எனும் குலதெய்வ வழிபாட்டு முறையை ஒழித்து பெரும் தெய்வ வழிபாட்டுக்கு வழிவகுத்துக் கொடுத்தார் என்று சொல்லலாம். ஏனெனில், குல தெய்வ வழிபாட்டு முறையில் கள், சாராயம் போன்றவைகளையும், மிருகங்களைப் பலியிட்டு மாமிசங்களைப் படைத்து அதை அனைவரும் குடித்தும் சாப்பிட்டு மகிழ்வதாக கடைப்பிடிக்கப்பட்டது. இதனால் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு இந்த வழிபாட்டில் குழந்தைகள், பெண்கள் போன்றவர்கள் கலந்து கொள்ள முடியாமல் இருந்தது. மேலும் இந்நிலை சமுதாயத்தின் அவமானச் சின்னங்களாகவும் இருந்தன. இதை மாற்றும் நோக்கத்தில் குலதெய்வ ஒழிப்பு முறையை கொண்டு வருவதற்காக சிவன், விஷ்ணு போன்ற பெரும் தெய்வங்களை ஸ்ரீ நாராயண குரு பிரதிஷ்டை செய்து புதிய கோவில்களைக் கட்டினார் என்று சில ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

1913-ல் ஆலுவா எனுமிடத்தில் அத்வைத ஆசிரமம் அமைக்கப்பட்டது. இந்த ஆசிரமத்தின் முக்கிய கொள்கையாக "கடவுளின் கண்களுக்கு அனைத்து மனிதர்களும் சமம்" என்கிற வாசகம் வலியுறுத்தப்பட்டது.

ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபா.
அருவிப்புரம் சிவன் கோவில் அமைத்து புதிய புரட்சியை ஏற்படுத்திய ஸ்ரீ நாராயண குருவின் செயல்பாட்டில் ஈர்க்கப்பட்ட மைசூரில் மருத்துவராக இருந்த டாக்டர் பல்பு என்பவர் (கேரளாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவருடைய உண்மையான பெயர் பத்மனாபன். தீண்டப்படாத சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் கடவுள் பெயர் வைத்துக் கொள்ள அந்தப்பகுதி நில உடமையாளரால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவராலேயே பெயர் மாற்றமும் செய்யப்பட்டது) ஸ்ரீ நாராயண குருவைச் சந்தித்தார். அவர் மூலம் கேரள மக்களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களின் நிலையை மாற்றம் செய்யவும் முன்னேற்றம் செய்யவும் 1903-ல் திருவனந்தபுரத்தை மையமாகக் கொண்டு அருவிப்புரத்தில் "ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபா" எனும் அமைப்பு நிறுவப்பட்டது.

இந்த அமைப்பில் ஈழவர்கள் மட்டுமின்றி புலையர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் கல்வி, செல்வம், ஆன்மீகம் போன்றவற்றில் உயர்சாதியினரைப் போல் முன்னிலைக்கு வந்தால் உயர்வு தாழ்வு எனும் பாகுபாடு நிலை இல்லாமல் போய்விடும் எனவே அந்த நிலைக்கு உயர்வதற்கு முதலில் அவர்களிடையே அறியாமையைப் போக்க வேண்டும்.

இதற்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்தமானதாக இருக்கும் சிறு தெய்வக் கோவில்களை எல்லாம் இடித்துவிட்டு அந்த இடங்களில் பலர் கூடும் பொது இடங்களாகவும், கல்வி வழங்கும் பள்ளிக்கூடங்களாகவும் உருவாக்கத் திட்டமிட்டார். சிறு தெய்வக் கோவில்களை இடித்தால் அந்தத் தெய்வங்களின் தீய செயலுக்கு உள்ளாகி பாதிக்கப்படுவோம் என்று பலரும் பயந்த நிலையில் தானே முன்னின்று அந்தக் கோவில்களை அகற்றி அந்த இடங்களைச் சமூகப் பொது இடங்களாகவும் பள்ளிக்கூடங்களாகவும் அமைக்க முற்பட்டார். இவர் கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து திருவில்லிபுத்தூர் வரை இது போன்ற பல சிறு தெய்வக் கோவில்களை இடிப்பதற்கு முன்னின்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கள் வாழ்க்கையில் ஒன்றாக இருந்து வந்த அவர்களுக்குப் பிடித்த ஒன்றை அல்லது பயந்த ஒன்றை துணணயாக இருக்க வேண்டி தெய்வமாக வழிபட்டு வந்தனர். இது இடம், சாதி, மொழி என்று பல வழிகளில் பல பெயர்களில், பல தெய்வங்களாக வழிபடப்பட்டது. இது இன்னும் சிறு தெய்வங்களாக நீடித்துக் கொண்டிருக்கின்றன. இதிலிருந்து சற்று முன்னேற்றமடைந்த சிலர் இயற்கை அமைப்பில் அவசியத் தேவைகளை தெய்வங்களாக்கி அதை முழுமுதல் தெய்வங்களாக வைத்து வழிபட்டனர். இதில் குறிப்பிட்ட சில தெய்வங்கள் மட்டும் இடம் பெற்றது. இவைதான் வாழ்விற்குத் தேவையான அனைத்தையும் வழங்குவதாக சற்று முன்னேற்றம் கண்டது.

இவற்றை விட தத்துவார்த்தமான கடவுள் கொள்கைகளை சிலர் வலியுறுத்தியதுண்டு. இது போல் ஸ்ரீ நாராயண குருவும் தத்துவார்த்தமுடைய சில அடிப்படைகளைக் கொண்டு கோவில்களை அமைத்தார். சிவன், விஷ்ணு, சுப்பிரமணியர் போன்ற முழு முதல் தெய்வங்களைப் பிரதிஷ்டை செய்து கோவில்களை உருவாக்கிய ஸ்ரீ நாராயண குரு அடுத்து இந்த தத்துவார்த்தமான கொள்கைகளை வலியுறுத்தும் வழியில் முதலில் விளக்கை கருவறை தெய்வமாகப் பிரதிஷ்டை செய்தும், பின்பு சத்யம்-தர்மம்-தயை எனும் சொற்களை கருவறை தெய்வமாகப் பிரதிஷ்டை செய்தும் கோவில்களை அமைத்தார். பின்னர் களவங்கோடு எனும் பகுதியில் நிலைக் கண்ணாடியை தெய்வமாகப் பிரதிஷ்டை செய்து புதிய கோவில் ஒன்றை அமைத்தார்.

ஆன்மீக வழியில் புதிய நடைமுறைகளை உருவாக்கி பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு ஒரு புதிய வழியைக் காட்டிய ஸ்ரீ நாராயண குரு ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபாவின் மூலம் ஏராளமான பள்ளிகளையும் கல்விக்கூடங்களையும் கட்டினார். ஈழவ சமுதாயத்தினர் செய்து வந்த குலத் தொழிலான ஆயுர்வேத மருத்துவத் தொழிலுக்கு சமஸ்கிருதம் கற்றவர்கள் அச்சமுதாயத்தில் சிலர் இருந்தாலும் அவர்களுக்கு அதில் முழுமையான அறிவு இல்லாமலே இருந்தது. எனவே பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் சமஸ்கிருதத்தை முழுமையாகக் கற்றுக் கொள்ள வலியுறுத்தினார். ஆங்கிலம் உலகம் முழுவதுமுள்ள பொது மொழியாக அவர் கருதியதால் அதையும் அனைவரும் கற்றுக் கொள்ள தனது சீடர்களில் ஒருவரான நடராஜ குரு என்பவரை மேலைநாட்டிற்கு அனுப்பி பல விஷயங்களைக் கற்று வரச் செய்தார்.

கல்வி, சமூக நிறுவனங்களை அதிக அளவில் கொண்ட ஒரு பெரிய அமைப்பாக ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபா உருவானது. இதன் மூலம் கேரளாவில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் அனைவரும் கல்வி கற்க முற்பட்டனர். இன்று இந்தியாவில் கேரளா மாநிலம் நூறு சதவிகிதம் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள், அனைவரும் கல்வி அறிவுடையவர்கள் என்கிற முதல் நிலையைப் பெற்றிருப்பதற்கு அடிப்படைக் காரணம் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபாவின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் அதன் செயல்பாடுகள்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

கேரளாவில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் ஆன்மீகம், கல்வி போன்றவற்றில் முன்னிலை பெற்றவர்கள் இதைத் தொடர்ந்து செல்வத்திலும் முன்னிலை பெறத் துவங்கினர். ஆனால் பிற்காலத்தில் இந்த சமூகச் சீர்திருத்த அமைப்பின் எல்லை விரிவு அடைய அடைய நிர்வாகச் சீர்கேடுகளும் அரசியல் தலையீடுகளும் உள்ளுக்குள் வரத்துவங்கின என்பதையும் இங்கு சொல்ல வேண்டியிருக்கிறது.

ஸ்ரீ நாராயண குருவின் இலக்கியப் படைப்புகள்.
ஸ்ரீ நாராயண குரு இந்தியாவின் குறிப்பிடத்தக்க சமூக சீர்திருத்தப் பெரியார்களில் ஒருவராக அறியப்படும் போது அவருடைய மலையாளம், சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழிகளில் எழுதிய 30 படைப்புகளுடன் மூன்று மொழிபெயர்ப்பு படைப்புகளையும் குறிப்பிட வேண்டும்.

மலையாளப் படைப்புகள்
ஸ்வனுபவகீதை
ஆத்மோபதேச சதகம்
அத்வைத தீபிகா
அறிவு
தெய்வ தேசகம்
ஜீவகாருண்ய பஞ்சகம்
அனுகம்ப தசகம்
ஜாதி நிர்ணயம்
ஜாதி லட்சணம்
சிஜந்த சிந்தகம்
தெய்வ சிந்தனம்-1 &2
ஆத்ம விலாசம்
சிவ சதகம்
சமஸ்கிருத படைப்புகள்
தர்சன மாலா
பிரம்மவித்ய பஞ்சகம்
நிர்வுறுத்தி பஞ்சகம்
சுலோகதிரயி
வேதாந்த சூத்திரம்
ஹோம மந்திரம்
முனிசர்ய பஞ்சகம்
ஆஸ்ரமம்
தர்மம்
சரம சுலோகங்கள்
சிதம்பரஆஸ்தகம்
குக ஆஸ்தகம்
பத்ரகாளி ஆஸ்தகம்
விநாயக் ஆஸ்தகம்
ஸ்ரீ வாசுதேவ ஆஸ்தகம்
ஜெனனி நவமஞ்சரி
தமிழ் படைப்பு
தேவாரப் பதிகங்கள்
மொழிபெயர்ப்பு படைப்புகள்
திருக்குறள்
ஈசோவாஸ்யோ உபநிஷத்
ஒளிவில் ஒடுக்கம்
-என்று மூன்று மொழிகளில் இவர் படைத்த படைப்புகளும் மொழிபெயர்ப்புப் படைப்புகளும் இன்றும் சிறப்பு மிக்கதாய் போற்றப்படுகிறது.

ஸ்ரீ நாராயண குரு மறைவு
இந்திய சமூகச் சீர்திருத்தப் பெரியார்களில் ஒருவராகவும், ஆன்மீகத்தில் பல புதுமைகளைக் கொண்டு வந்தவரும் சிறந்த இலக்கியப் படைப்பாளியாகவும் அறியப்பட்டு தத்துவ ஞானியாகவும் உயர்ந்த ஸ்ரீ நாராயண குரு 1928-ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் தனது சிவகிரி மடத்தில் உடல் நிலை சரியின்றி இருந்து வந்தார். அந்த ஆண்டில் செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதியில் மகாசமாதி எனும் நிலையில் அடக்கமானார்.

ஸ்ரீ நாராயணகுருவின் உயிர் பிரிந்த அறையில் அவர் பயன்படுத்திய கட்டிலும், நாற்காலியும், தலையணைகளும் அப்படியே இருக்கின்றன. அங்கு ஒரு விளக்கு எந்நேரமும் எரிந்து கொண்டிருக்கிறது.

ஸ்ரீ நாராயண குருவின் தத்துவங்கள்.

ஸ்ரீ நாராயண குருவின் தீண்டாமை ஒழிப்புக் கொள்கைகள் முக்கியத்துவமுடையது என்றாலும் அதற்குப் பின்பு அவர் எடுத்துச் சொன்ன "அனைத்தும் ஒன்றே" என்பதுதான் முக்கியமானதாக வலியுறுத்தப்பட்டது. நாராயணகுருவின் வழிமுறை எதையும் நிராகரிப்பது அல்ல. அவர் அனைத்தையும் கற்று உள்ளடக்கி தனக்கென ஒரு நோக்கை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றார். அனைத்தையுமே கற்றுக் கொள்ள வேண்டும். இது போல் அனைத்தையும் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்றார். அறிவு ஒன்றுதான் மனித குலத்துக்கு உரியது என்றும் அதைக் கொண்டு முன்னேற்றம் காண்பதுதான் வாழ்க்கை என்றும் சொன்னார். இந்த அறிவுக்கு குறுக்கு வழிகள் எதுவும் இல்லை என்ற அவரது உபதேசம் முக்கியமானது.
தன்னை பின்பற்றியவர்களிடம் தான் கற்றறிந்தது மட்டுமின்றி அனைவரும் வேதங்கள், உபநிடதங்கள் இந்திய மற்றும் மேலை நாட்டு தத்துவங்கள், சமஸ்கிருத மலையாள காவியங்கள் தமிழிலக்கிய மரபு அனைத்துமே கற்று தெரிவு செய்து மறு ஆக்கம் செய்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நாராயண குருவின் கொள்கைகளையும் செய்திகளையும் உலகம் முழுவதும் கொண்டு சென்றவர்களில் அவரது சீடரான நடராஜ குரு முக்கியமானவர். இவர் நாராயண குருகுலம் எனும் ஒரு அமைப்பை நிறுவி அவருடைய தத்துவங்களையும், நூல்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஐரோப்பிய நாடுகளுக்குச் கொண்டு சென்றதுடன் அங்கும் நாராயண குருகுலத்தின் கிளை அமைப்புகளைத் துவக்கி உலகத் தத்துவ ஞானிகளில் ஒருவராக அவரைப் பரிணமிக்கச் செய்தவர் என்பது இங்கு குறிப்பிடக் கூடிய ஒன்று.
ஸ்ரீ நாராயண குருவின் கொள்கைகள், கோட்பாடுகள், செயல்பாடுகள் என்று பல விஷயங்கள் கேரளாவில் உள்ள பல பல்கலைக்கழகங்களிலும் வேறு சில பல்கலைக் கழகங்களிலும் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு பல மாணவர்கள் முனைவர் (Ph.D.,) பட்டமும், ஆய்வியல் நிறைஞர் (M.Phil.,) பட்டங்களும் பெற்றுள்ளனர். கேரளாவில் ஒரு பல்கலைக் கழகத்தில் ஸ்ரீ நாராயண குரு கருத்துக்கள் தனித்துறையாகவே இடம் பெற்றிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ நாராயண குருவின் சிறப்புகள்
1901ல் வெளியிடப்பட்ட திருவாங்கூர் மாநில மக்கள் தொகை கணக்கெடுப்பு புத்தகத்தில் ஸ்ரீ நாராயணா "குரு" எனும் அடை மொழியுடன் சம்ஸ்கிருத பண்டிதராகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாமியார்களைச் சந்திக்கவே விரும்பாத மகாத்மா காந்தி 1925-ல் கேரளாவில் இவரை பல எதிர்ப்புகளுக்கிடையே சந்தித்ததுடன் "அவதார புருஷர்" என்றும் பாராட்டினார்.
தமிழகத்தின் புரட்சிக்கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் இவருடைய சமூகச் சீர்திருத்தக் கொள்கைகளைப் பாராட்டி எழுதியிருப்பதுடன் இவருடைய சமஸ்கிருத நூல்களையும் கருத்துக்களையும் பாராட்டியிருக்கிறார்.
கேரளத்தின் மகாகவி ஜி.சங்கரகுரூப் எழுதிய செய்யுளில் ஸ்ரீ நாராயண குருவை " இரண்டாம் புத்தர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கேரளாவில் ஸ்ரீ நாராயண குருவின் பிறந்த நாள் மற்றும் அடக்கமான நாள் ஆகியவை கேரள அரசால் அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
2006- ஆம் ஆண்டில் ஸ்ரீ நாராயண குருவின் 150 வது பிறந்த நாளின் போது இந்திய அரசு ரிசர்வ் வங்கி மூலமாக சிறப்பு நாணயங்களை வெளியிட்டு சிறப்பித்தது.
ஸ்ரீ நாராயணகுரு பெயரிலான அமைப்புகள்
தமிழ்நாட்டில் ஸ்ரீ நாராயணகுருவின் பெயரில் பல சமூக சேவை அமைப்புகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவை ஸ்ரீ நாராயணகுருவின் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை பரப்புவதற்கு உறுதுணையாக இருந்து வருகின்றன.

ஸ்ரீ நாராயண குரு பண்பாட்டு பேரவை (SNPP)
ஸ்ரீ நாராயணகுருகுலம்
நாராயணகுருவின் முதன்மைச்சீடர் நடராஜகுருவால் உருவாக்கப்பட்ட அமைப்பு. இதன் தலைமைப்பீடம் வற்கலாவில் உள்ளது. முதன்மைக்கிளை ஊட்டியில் உள்ளது[ நாராயணகுருகுலம் , மஞ்சணகொரே, ஃபெர்ன் ஹில், ஊட்டி]ஸ்ரீ நாராயணகுரு பொன்மொழிகள்
*ஒரு சாதி, ஒரு மதம், ஒரு கடவுள் - மனிதருக்கு. மதம் எதுவாயினும் மனிதன் முன்னேறினால் போதும். எல்லா மதங்களின் உயிர்ச்சத்தும் ஒன்றே.
சாதியைப் பேசாதே! சாதியைக் கேடாதே!! சாதியை நினைக்காதே!!!
*செய்வது எதுவாக இருந்தாலும் அதை அழகுறச் செய்ய வேண்டும். எதையும் செய்வதற்குச் சோம்பல் கூடாது.
*ஒருவர் செய்யும் செயல் பிறருக்கான நன்மையின் நோக்கமாக இருத்தல் வேண்டும்.
*துறவி என்பவர் பரோபகாரம், தியாகம், சுயநலமின்மை, பொதுமக்களுக்குச் சேவை செய்தல் ஆகியவற்றைச் செய்பவர்.
*தர்மம் என்பதுதான் முழுமையான கடவுள். முழுமையான செல்வம். தர்மம் எங்கு சென்றாலும் வெற்றியடையும். உயர்வுக்கும் வழிகோலும்.
ஒருவன் நல்லவனா? தீயவனா? என்பதை அவனது செய்கைகளிலிருந்து கவனித்துப் புரிந்து கொள்ள் வேண்டும்.
*மகிழ்ச்சியடைவது என்பது அவரவர்களுடைய செய்கையின் தீவிரத்தினால் மட்டுமே இயலும்.
*விவேகம் என்பது தானாகவே ஒருவனுக்கு அமையுமா? அதற்கு நல்ல பயிற்சி வேண்டும். நல்ல புத்தகங்களைப் படிக்க வேண்டும்.
*நூறு வருடங்களாக இருண்டு கிடந்த அறையில் நூறு வருடங்கள் தொடர்ந்து விளக்கு எரிந்தால்தான் அந்த இருள் நீங்கும் என்பது சரியாகுமா?
*வற்றாத அன்புடன் கணவன், மனைவி எங்கு வாழ்கின்றனரோ அங்குதான் அதிக அழகுடனும், முழு செழிப்புடனும் விளங்கும் உண்மையான முழுமையான குடும்பத்தைக் காண முடியும்.
*மதங்கள் என்பது நுணுக்கமான உயர்ச் செய்திகளை அறிய உதவும் பாதைகள் அவ்வளவுதான்.
*அனைத்து விலங்கினங்களிடமும், கருணையும், நட்பும் கொண்டு சமமாகப் பாவிக்கும் மனிதர்களாக இருக்க வேண்டும்.
*கோபம் கொள்ளக் கூடாது. எதையும் அமைதியாகவே சாதிக்க வேண்டும்.
*சாதி, மத வேறுபாடுகள் நீங்க வேண்டும். எந்நாட்டினரும் உயர்வு, தாழ்வின்றி ஒன்றுபட வேண்டும். அப்போதுதான் மனித இனம் சிறந்த சமுதாயமாக விளங்கும்.