புதன், 30 நவம்பர், 2016

உலக எய்ட்ஸ் நாள் டிசம்பர் 1.

உலக எய்ட்ஸ் நாள்  டிசம்பர் 1.

உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும்
டிசம்பர் முதல் நாள்
கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் ஒரு
கருப்பொருளின் அடிப்படையில்
நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது
வழக்கம். இந்நாள் எய்ட்ஸ் நோய்
மற்றும் அதன் விளைவுகள் பற்றிய
விழிப்புணர்வை
ஏற்படுத்துவதை நோக்கமாகக்
கொண்டது. எய்ட்ஸ் நாள் பற்றிய
எண்ணக்கரு முதலாவதாக 1988 இல்
நடைப்பெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக
சுகாதார அமைச்சர் மாநாட்டில்
உருவானது. அதன் பிறகு
அரசுகளும் தன்னார்வத் தொண்டு
நிறுவனங்களும் இந்நாளை உலகம்
முழுவதும் நடைமுறைப்படுத்தி
வருகின்றன.
1981-ஆம் ஆண்டிலிருந்து 2007-ஆம்
ஆண்டு வரை எய்ட்ஸ் நோயால்
இறந்தவரின் எண்ணிக்கை 250
லகரங்களுக்கு மேல். மற்றும்
2007-ஆம் ஆண்டு வரை 332 லகரம்
மக்கள் இந்நோயுடன் வாழ்ந்து
வருகின்றனர்.இதனால் இந்நோய்
வரலாற்றிலேயே மிக
கொடூரமான தொற்றுநோயாக
கருதபடுகிறது. சமீபத்திய
சிகிச்சை முறைகளின்
முன்னேற்றம் மற்றும்
கண்காணிப்பின் கீழ் இருந்தும்,
எய்ட்ஸ் நோயால் உலகெங்கிலும்
2007-ஆம் ஆண்டில் 20 லகரம்
உயிரிழப்பு ஏற்பட்டது  ,இதில்
270,000 குழந்தைகள்.
வரலாறு
சுவிட்சர்லாந்தில் உள்ள
ஜெனீவாவில் அமைந்துள்ள உலக
சுகாதார அமைப்பில்
எயட்சிர்க்கான உலகளாவிய
நிகழ்ச்சியின் பொது தகவல்
அதிகாரிகளான ஜேம்ஸ் பன்ஸ்
மற்றும் தாமஸ் நெட்டேர் எனும்
இருவரால் 1987-ஆம் ஆண்டு ஆகஸ்ட்
மாதம் உருவாக்கப்பட்டதே உலக
எய்ட்ஸ் தினம்.  . தங்கள்
யோசனையை எயட்சிர்கான
உலகளாவிய நிகழ்ச்சியின்
இயக்குனர் முனைவர் ஜோனதன்
மன்னிடம் கொண்டு சென்றனர்
இருவரும். முனைவர்.மன்னுக்கு
இது பிடித்து போகவே,அவர்
இதை அங்கீகரித்து , 1988-ஆம்
ஆண்டு டிசம்பர் ஒன்றாம் நாளை
உலக எய்ட்ஸ் தினமாக கடைபிடிக்க
பரிந்துரை செய்தார்.
டிசம்பர் ஒன்றாம் நாளை
அத்தினமாக கடைபிடிக்க பன்
தான் யோசனை
வழங்கினர்,ஏனெனில்
அப்பொழுது தான் மேற்க்கத்திய
செய்தி நிறுவனங்களின் கவனம்
அவ்வருடம் (1988) நடைபெறும்
தேர்தலை முழுமையாக
ஒலிபரப்பு செய்து
ஓய்ந்திருக்கும்.ஆதலால்,புது
செய்திக்காக காத்திருக்கும்
அமெரிக்க செய்தி
நிறுவனங்களை கொண்டு
இந்நாளை உலகம் முழுதும்
கடைபிடிக்க அணுகவது
செரியானது என்று
தீர்மானித்தார்கள்.மேலும், டிசம்பர்
ஒன்று என்பது தேர்தல் முடிந்து
சில நாட்களுக்கு பின்னும்,
கிறிஸ்த்துமஸ் விடுமுறை
தொடங்க சில நாட்களுக்கு
முன்னும் வருவதால், அதுவே
உலக நாள்காட்டியில் சரியான
நாளாக அமையும் என்று பன்ஸ்
மற்றும் நெட்டேர் உணர்ந்தார்கள்.
எச். ஐ. வி/எய்ட்ஸ்க்காக கூட்டு
ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சி 1996-ஆம்
ஆண்டு செயல்பாட்டிற்கு வந்தது,
மேலும் இதுவே உலக எய்ட்ஸ்
தினத்திற்கான திட்டம் மற்றும்
ஊக்குவிப்பை செய்தது  . ஒரே
நாளில் செய்வதற்கு பதிலாக1997-
ஆம் ஆண்டு இந்நிகழ்ச்சி உலக
எய்ட்ஸ் பிரச்சாரத்தை
உருவாக்கி,அதன் மூலமாக
வருடம் முழுவதும்
செய்திப்பரிமாற்றம்,தடுப்பு
மற்றும் கல்வி வழங்கின  .
முதல் இரண்டு
வருடங்களில்,எய்ட்ஸ்
தினத்திற்கான கருப்பொருள்
குழந்தைகள் மற்றும் இளம்
வயதினரையே சுற்றி இருந்தது.
எய்ட்சால் அவதியூருபவர்கள்
மற்றும் ஹெட்ச்.ஐ.வியால்
பாதிக்கப்படுபவர்கள் எல்லா
வயதினருமே என்பதனால் இந்த
கருப்பொருள்கள் பின்பு
கடினமாக எதிர்க்கப்பட்டன.
2004-ஆம் ஆண்டு உலக எய்ட்ஸ்
பிரச்சாரம் ஒரு சுதந்திர சங்கமாக
மாறியது.
ஒவ்வொரு வருடமும்,
போப்பரசர்கள் இரண்டாம் ஜான் பால்
மற்றும் பதினாறாம் பெனெடிக்ட்
உலக எய்ட்ஸ் தினத்தன்று
நோயாளிகள் மற்றும்
மருத்துவர்களுக்கு வாழ்த்துச்
செய்தி வெளியிடுவார்கள் .
நோக்கம்
எயிட்சு மேலும் பரவாமல்
தடுக்கவும், அதனால் ஏற்பட்ட
பாதிப்புகளை குறைக்கவும்,
பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிவு
காட்டவும் மக்கள் மத்தியில்
விழிப்புணர்வை
ஏற்ப்படுத்துவது தான்
உலகளாவிய இந்த தினத்தின்
நோக்கமாகும். எயிட்சு
பாதிப்புக்கு உள்ளானவர்களின்
உணர்வுகளை மதிக்கவும்
அவர்களின் உரிமைகளை
மதிக்கவும் மக்களை பழக்குவதும்
இதன் முக்கிய குறிக்கோளாகும்.
'கல்வி மற்றும் விழிப்புணர்வு'
மட்டுமே எயிட்சு தடுப்பிற்க்கான
சிறந்த மற்றும் சரியான சமூக
மருந்து என்பதை உணர்ந்து
விழாக்கள், நாடகங்கள்,
நாட்டியங்கள் ஆகியவற்றில்
எயிட்சு தடுப்பு மற்றும்
விழிப்புணர்வு அம்சங்களை இடம்
பெற செய்து மக்களுக்கு
விழிப்புணர்வு கருத்துகளை
பரப்ப செய்வதே இந்நாளின்
நோக்கமாகும்.
எச் ஐ வி
பாதிப்பின்
விவரங்கள்
எச் ஐ வி பாதிப்புக்குள்ளான
மக்களை அதிகம் கொண்டுள்ள
இரண்டாவது நாடு இந்தியா
ஆகும். 35 % எயிட்சு நோயாளிகள்
15 முதல் 24 வயதிற்கு
உட்பட்டவர்களே. 86 % பாதுகாப்பு
அற்ற உடலுறவின் மூலமாகவும்,
4 % எச் ஐ வி தொற்று உள்ள
கர்ப்பிணிகளின் மூலமாகவும், 2 %
சரியாக சுத்தம் செய்யப்படாத
ஊசிகளை பயன்படுத்துவதின்
மூலமும், 2 % பரிசோதனை
செய்யப்படாத ரத்தத்தின்
வழியாகவும், மீதி 6 % பிற
காரணங்களாலும் பரவுவதாக
கண்டறியப்பட்டுள்ளது. (NACO 2004).
இந்தியாவில்
எயிட்சு தடுப்பு
முயற்சிகள்
எயிட்சு-ஐ வெற்றிகொள்ள
யுவா என்னும் இளைஞர் தேசிய
இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
யுவா என்பது 'Youth Unite for Victory
on Aids என்பதன் சுருக்கமாகும்.
அதாவது எயிட்சு-ஐ வெல்ல
ஒன்றுபட்ட இளைய பாரதம் .
இத்திட்டம் 27.06.2006 -இல் குடியரசு
துணைத் தலைவரால்
தொடங்கப்பட்டது. நாட்டு
நலப்பணித் திட்டம் , தேசிய மாணவர்
படை ,நேரு யுவ கேந்த்ரா , சாரணர்
இயக்கம் , இளைஞர் செஞ்சிலுவை
சங்கம் உள்ளிட்ட 7 தேசிய இளைஞர்
அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன.
மொத்தமாக 21 மில்லியன் தனார்வ
தொண்டர்கள் சேவை
புரிகின்றனர்.
தமிழ்நாட்டில்
எயிட்சு தடுப்பு
முயற்சிகள்
2005 -06 ம் கல்வி ஆண்டு முதல்
தமிழகத்தில் உள்ள அனைத்து
கல்லூரிகளிலும் தமிழ்நாடு
மாநில எயிட்சு கட்டுப்பாட்டு
சங்கத்தின் நிதி ஆதரவில் ரெட்
ரிப்பன் கிளப் தொடங்கப்பட்டு
உள்ளது.
கருப்பொருட்களை
தேர்ந்தெடுத்தல்
30 நவம்பர் 2007 அன்று உலக
எய்ட்ஸ் தினத்திற்காக
வெள்ளை மாளிகையின்
வடக்கு வாசலின்
தூண்களுக்கு இடையே
தொங்கவிடப்பட்டுள்ள
பெரிய சிகப்பு நாடா
2005-ஆம் ஆண்டு உலக
எய்ட்ஸ் தினத்திற்காக
விழிப்புணர்ச்சி
பிரச்சாரத்தின் ஒரு
அங்கமாக
அர்ஜெண்டினாவின்
புவெனஸ் ஐரிஸ் நகரில்
வைக்கப்பட்டுள்ள 67 மீட்டர்
உயரமுள்ள ஆணுறை
1988- 2004 வரையான எய்ட்ஸ் நாள்
யுஎன்எய்ட்ஸ் நிறுவனத்தால்
மேற்கொள்ளப்பட்டு வந்தது. 2005
முதல் இப்பொறுப்பு "உலக எய்ட்ஸ்
பிரச்சாரம்" ( உலக எய்ட்ஸ்
பிரச்சாரம் ) என்ற அமைப்பிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உலக எய்ட்ஸ் நாள் கருப்பொருள்
1988 - 2015
1988 தொடர்பாடல்
1989 இளைஞர்
1990 எய்ட்சும் பெண்களும்
1991 சவாலை பகிர்ந்து கொள்ளல்
1992 சமூகத்தின் ஈடுபாடு
1993 செயலாற்றுதல்
1994 எய்ட்சும் குடும்பமும்
1995
உரிமைகளையும்
பொறுப்புகளையும்
பகிர்ந்து கொள்ளல்
1996 ஒரு உலகம் ஒரு நம்பிக்கை
1997 எய்ட்சுடன் வாழும்
குழந்தைகள்
1998
மாற்றத்துக்கான சக்தி: இளம்
வயதினருடன் உலக எய்ட்ஸ்
பிரச்சாரம்.
1999
செவிகொடு, கற்றுக்கொள்,
வாழ்: குழந்தைகள் மற்றும்
இளம் வயதினருடன் உலக
எய்ட்ஸ் பிரச்சாரம்.
2000 எய்ட்ஸ்: மாற்றம் செய்யும்
மனிதர்
2001 நான் கவனிக்கிறேன்.நீங்கள்?
2002 வடு மற்றும் பாகுப்பாடு
2003 வடு மற்றும் பாகுப்பாடு
2004 பெண்கள், எச்.ஐ.வி., எய்ட்ஸ்
2005 எய்ட்சை நிறுத்து.
சத்தியத்தை காப்பாற்று
2006
எய்ட்சை நிறுத்து.
சத்தியத்தை காப்பாற்று-
Accountability
2007 எய்ட்சை நிறுத்து.
சத்தியத்தை காப்பாற்று
2008 எய்ட்சை நிறுத்து.
சத்தியத்தை காப்பாற்று
2009 எய்ட்சை நிறுத்து.
சத்தியத்தை காப்பாற்று
2010 எய்ட்சை நிறுத்து.
சத்தியத்தை காப்பாற்று
2011
பூஜ்யத்தை அடைவோம் :
எச்.ஐ.வி பாதிப்பு
பூஜ்யமாக இருக்கட்டும்
2012 ஒன்றாய் இணைந்து
எய்ட்ஸை ஒழிப்போம்
2013 பூஜ்ஜிய பாகுபாடு
2014 இடைவெளியை
குறைப்போம்
2015
விரைவான வழியில்
எய்ட்ஸ்க்கு முடிவளிப்போம்

************************************
20ஆம் நூற்றாண்டில் இறுதிப்
பகுதியிலிருந்து உலகை
ஆட்டிப் படைக்கும் பயங்கர
ஆட்கொல்லி நோயாகவே
எய்ட்ஸ் இனங்காட்டப்பட்டது. இந்த
கொடிய நோயால்
உயிரிழப்பவர்களின்
எண்ணிக்கை இன்றுவரை
நாளுக்கு நாள்
உயர்ந்துகொண்டே
செல்கிறது. அதேநேரம்,
அனைத்து நாடுகளும்
இந்நோயின்
பாதிப்பிலிருந்து
விடுவிப்பதற்கான
முயற்சிகளை தொடர்ந்து
மேற்கொண்டு
வந்தபோதிலும்கூட, இந்த
நோயை பூரணமாகக்
கட்டுப்படுத்த இன்றுவரை
எந்தவித
கண்டுபிடிப்புக்களும்
மேற்கொள்ளப்படவில்லை.
உலகளவிலான எய்ட்ஸ் நோய்
எதிர்ப்பை குறிக்கும் ‘சிகப்பு
நாடா சின்னம்” அல்லது ‘உலக
எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம்”
ஆண்டுதோறும் டிசம்பர்
முதலாம் திகதி
அனுஸ்டிக்கப்படுகிறது.
இந்நாளில் எய்ட்ஸ் நோய்
பற்றியும், அதன் கொடிய
விளைவுகள் பற்றியும்
விழிப்புணர்வை
ஏற்படுத்துவதை பிரதான
நோக்காகக் கொண்டு
திட்டமிடப்படுகின்றது.
1981ம் ஆண்டில் உலகின்
முதலாவது எயிட்ஸ் நோயாளி
அமெரிக்காவில்
(U.S.A.)கண்டுபிடிக்கப்பட்டார்.
முதலாம் நோயாளி
இனங்காணப்பட்டு ஏழு
ஆண்டுகளுக்குள் 1988ம்
ஆண்டு நவம்பர் மாதம் 30ம்
திகதி வரை உலக சுகாதார
ஸ்தாபன (W.H.O.)
அறிக்கையின்படி, 119, 818
நோயாளர்கள்
பதிவாகியிருந்தனர்.
இந்நிலையில் எய்ட்ஸ் தினம்
பற்றிய எண்ணக்கரு
முதலாவதாக 1988 இல்
நடைபெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக
சுகாதார அமைச்சர்
மாநாட்டில் உருவானது.
இம்மாநாட்டிலேயே எய்ட்ஸ்
தினம் அனுஸ்டிக்கப்பட
வேண்டுமென
தீர்மானிக்கப்பட்டதுடன், டிசம்பர்
மாதம் முதலாம் திகதி
இத்தினத்தை அனுஸ்டிக்க
வேண்டும் என ஐக்கிய நாடுகள்
சபை முடிவெடுத்தது.
இதையடுத்து அரசுகளும்
தன்னார்வத் தொண்டர்
நிறுவனங்களும் இந்நாளை
உலகம் முழுவதும்
நடைமுறைப்படுத்தி
வருகின்றன. ஒவ்வோர்
ஆண்டும் ஒரு
கருப்பொருளின்
அடிப்படையில் நிகழ்வுகள்
ஒழுங்குபடுத்தப்படுவது
வழக்கம். 1988-2004 வரை எய்ட்ஸ்
தினம், ஐக்கிய நாடுகள்
சபையின் எய்ட்ஸ்
நிறுவனத்தால் நேரடியாக
மேற்கொள்ளப்பட்டு வந்தது.
1988ஆம் ஆண்டு இதன்
கருப்பொருள் ‘தொடர்பாடல்”
என்பதாகும். தொடர்ந்து 1989 –
‘எய்ட்சும் இளைஞர்களும்’, 1990 –
‘எய்ட்சும் பெண்களும்’, 1991 –
‘சவாலை பகிர்ந்து கொள்ளல்’,
1992 – ‘சமூகத்தின் ஈடுபாடு’,
1993 – ‘செயலாற்றுதல்’, 1994 –
‘எய்ட்சும் குடும்பமும்’, 1995 –
‘உரிமைகளையும்,
பொறுப்புகளையும் பகிர்ந்து
கொள்ளல்’, 1996 – ‘ஒரு உலகம்
ஒரு நம்பிக்கை’, 1997 –
‘எய்ட்சுடன் வாழும்
குழந்தைகள்’, 1998 –
‘மாற்றத்துக்கான சக்தி’, 1999
-‘செவிகொடு, கற்றுக்கொள்,
வாழ்’. 2000 – ‘எய்ட்ஸ்: மாற்றம்
செய்யும் மனிதர்’, 2001 – ‘நான்
பாதுகாப்புடன் – நீ?’, 2002, 2003
– ‘தழும்புகளும். சாதக
பாதகத்தை வித்தியாசம்காண்’,
2004 – ‘பெண்கள், எச்.ஐ.வி.,
எய்ட்ஸ்’ ஆகிய தலைப்புகளில்
அனுஸ்டிக்கப்பட்டது. 2005
முதல் இப்பொறுப்பு “உலக
எய்ட்ஸ் பிரசாரம்” (The World AIDS
Campaign) என்ற அமைப்பிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து 2005 முதல்
2010ஆம் ஆண்டுவரை இதன்
கருப்பொருள் ‘எய்ட்சை
நிறுத்து. சத்தியத்தை
காப்பாற்று’ (Stop AIDS. Keep the
Promise.” என்பதாகும்.
பல மில்லியன் உயிர்களை
காவுகொண்டுள்ள
இக்கொடிய நோயைப் பற்றிய
முழு விவரங்களை நாம்
ஒவ்வொருவரும் அறிந்திருக்க
வேண்டியது காலத்தின்
தேவையாகும். அவ்வாறு
முழுமையாக அறிந்து
கொண்டு விழிப்புணர்வுடன்
இருந்தால் மட்டுமே எய்ட்ஸ்
அரக்கனை வெல்ல முடியும்.
‘ஒருவர் தானே பெற்ற நோய்த்
தடுப்பாற்றல் குறைபாட்டு
கூட்டு அறிகுறி” எனப்
பொருள் தரும் எய்ட்ஸ் (AIDS-
Acquired – (பெற்ற) Immuno –
(நிர்பீடக், ) Deficiency –
(குறைபாட்டுச்) Syndrome-
(சிக்கல்) ) என்பது மனித நோய்த்
தடுப்பாற்றல் இழப்பைக்
குறிக்கும் நோயாகும்.
பல்வேறு நோய்கள் தாக்கப்பட்ட
ஒருவருக்கு அவருடைய
உடலின் நோய் எதிர்ப்பு சக்தி
குறையத்
தொடங்கியிருப்பதை
மருத்துவ பரிசோதனை
உறுதி செய்யும் நிலைதான்
எய்ட்ஸ் என்று
அழைக்கப்படுகிறது.
எய்ட்ஸ் வைரஸினால் பரவும்
நோய்.
எச்.ஐ.வி எனும்
வைரஸினால்தான் எய்ட்ஸ்
ஏற்படுகிறது. வைரஸ் என்பதை
நோயை உண்டாக்கக்கூடிய
மிக சிறிய நுண்ணுயிர்
என்று சொல்லலாம். பக்டீரியா
(Bacteria), பங்கஸ் (Fungus) போன்ற
நுண்ணுயிர்களைச் சாதாரண
நுணுக்குக்காட்டி (Microscope)
மூலம் பார்க்கலாம். சாதாரண
நுணுக்குக்காட்டி மூலம்
காணமுடியாத அளவிற்கு
வைரஸ் மிகச்சிறியது.
இதனை மிகவும் சக்தி வாய்ந்த
இலத்திரன் நுணுக்குக்காட்டி
(Electron Microscope) மூலமே
பார்க்கமுடியும். தற்போது
இலங்கையில் மிக
வேகமாகப்பரவி வரும் பன்றிக்
காய்ச்சலும், A H1N1 வைரஸ்
தொற்றின் காரணமாகவே
பரவுகின்றது.
வைரஸ் கிருமிகள்
விருத்தியடைந்து,
பெருகுவதற்கு உயிருள்ள
கலம் (Cell) தேவை. அது
பெருகும் போது, தான்
தங்கியிருக்கும் கலத்தை
அழிக்கக்கூடும்; அல்லது
செயற்திறனைப்
பாதிக்கக்கூடும்.
எயிட்சை உண்டாக்கும் HIV
வைரஸ் மனித உடலின்
நிர்ப்பீடனத் தொகுதியை
தாக்குகின்றது.
நிர்பீடனத்தொகுதியில் உள்ள
ரீ-ஹெல்பர் கலங்களையே (T-
helper Cell) இது முக்கியமாகத்
தாக்குவதை விஞ்ஞானிகள்
கண்டறிந்துள்ளனர். HIV வைரஸ்
தொற்றியிருக்கும் கலத்தில்
பெருகிப் பின் அக்கலத்தை
அழித்து வெளியேறுகிறது.
வெளியேறிய வைரசுகள்
மேலும் பல கலங்களைத் தாக்கி
அழித்துப் பெருகுகின்றன.
இவ்வாறு நோயாளியின்
நிர்பீடனத் தொகுதி பெரிதும்
பாதிக்கப்படும்.
இந்நிலையிலேயே
நோய்க்கான அறிகுறிகள்
தோன்ற ஆரம்பிக்கிறது.
ஒருவர் எச்.ஐ.வி யுடன் பல
ஆண்டுகாலம் வாழ முடியும்.
ஆனால், அவர் உடல் நோய்
எதிர்ப்புச் சக்தியை இழக்கும்
போதுதான் எய்ட்ஸ்
நோயாளியாகிறார். ஓர்
ஆண்டுக்குள் அவருக்கு
ஏராளமான நோய்கள் ஒன்றன்
பின் ஒன்றாக தொற்றிக்
கொள்ளும் நிலை அவருக்கு
ஏற்படுகிறது.
எயிட்ஸின் வரலாறு
ஜூன் 5, 1981அன்று
அமெரிக்காவைச் சேர்ந்த
நோய்கட்டுப்பாடு மற்றும்
தடுப்பு மையம் சி.டி.சி. ஆண்
ஓரினச்சேர்க்கை
கொண்டிருந்த 5 நபர்களிடம்
ஒரு அரிய வகை
நிமோனியாவைக் கண்டறிந்து
ஓர் அறிக்கையை
வெளியிட்டது. இந்த
அறிக்கையே எய்ட்ஸ்
கண்டறியப்பட்டதற்கான முதல்
ஆவணமாகும். முதலில் எய்ட்ஸ்
என்பது
ஓரினச்சேர்க்கையோடு
தொடர்புடைய நோய் எதிர்ப்பு
குறைப்பாடு என்று
அழைக்கப்பட்டது.
ஓரினச்சேர்க்கை புற்று நோய்
என்றும் இது ஆரம்பத்தில்
அழைக்கப்பட்டது. இவ்வாறாக
எயிட்ஸ் நோய் 1981ம்
ஆண்டிலேயே அறியப்பட்ட
போதிலும், அதை
உண்டாக்கும் வைரஸ் கிருமி
1983ம் ஆண்டிலேயே
இனங்காணப்பட்டது. பிரான்ஸ்
நாட்டில் உள்ள பாஸ்டர்
விஞ்ஞானக் கூடத்தில் (Institute
Pasteur) பிரான்சு நாட்டு
விஞ்ஞானி லூக்
மொண்டிக்கயர் எனும்
விஞ்ஞானியால் முதலில்
கண்டுபிடிக்கப்பட்டது.
அப்பொழுது இது L.A.V
வைரஸ் (Lymphadenopathy associated
Virus) என்று பெயரிடப்பட்டது.
1984 ம் ஆண்டு அமெரிக்காவில்
உள்ள ”தேசிய புற்று நோய்
நிறுவனம்” இக்கிருமிதான்
எயிட்ஸ் நோயை
உண்டாக்குகிறது என்பதை
உறுதிப்படுத்தியது.
அப்பொழுது இதற்கு H.I.V –
type III வைரஸ் ( Human T-
Iymphotrophic Virus type III) என்று
பெயரிடப்பட்டது. 1986 ம்
ஆண்டில் தான் தற்போது
பயன்படுத்தப்படும் HIV வைரஸ்
(Human (மானுட) I mmuno deficiency
(நீர்ப் பீடனக் குறைபாடு.) Virus
(வைரசு)) என்ற பெயர்
உலகளாவிய ரீதியில்
ஏற்றுக்கொள்ளப்பட்டது.
HIV வைரஸின் இரண்டு உப
பிரிவுகள் இருப்பதாக
இப்பொழுது நம்பப்படுகிறது.
ஆரம்பத்தில் அமெரிக்கா உட்பட
மேற்கத்தைய நாடுகளில்
கண்டுபிடிக்கப்பட்டதை HIV-I
என்றும், பின்பு மேற்கு
ஆபிரிக்க நாடுகளில் கண்டு
பிடிக்கப்பட்ட புதிய
உபபிரிவை HIV – II என
அழைக்கிறார்கள்.
எயிட்ஸ் பரவுதல்
உலக சுகாதார அமைப்பின் 2006
கணக்கெடுப்பின்படி
உலகளாவிய ரீதியில் எய்ட்ஸ்
தொடர்புடைய நோயின்
காரணமாக
மரணமடைந்தவர்களின்
எண்ணிக்கை 330,000
குழந்தைகள் உட்பட 2.1
மில்லியனாக
அதிகரித்திருந்தது. 39.5
மில்லியன் மக்கள் எச்.ஐ.வி.யால்
பாதிக்கப்பட்டிருந்தனர். இதில்,
4.3 மில்லியன் மக்கள் புதிதாக
நோய் காவப்பட்டவர்கள் என்பது
குறிப்பிடத்தக்கது.
ஆபிரிக்காவின் சகாராப்
பாலைவனப்பகுதியை
அண்மித்த பகுதி எய்ட்ஸ்
நோயினால் மிக மோசமாகப்
பாதிக்கப்பட்ட பகுதியாகும்.
2007-ல் அப்பகுதியில்
எயிட்ஸுடன் வாழ்பவர்களில் 68 %
ஐயும், எயிட்ஸினால்
மரணமடைந்தவர்களில் 76%
ஐயும்
உள்ளடக்கியிருந்ததோடல்லாம
ல், பின்பு வந்த 1.7 மில்லியன்
புதிய நோய்த்தொற்றுக்கள், எச்
ஐ வி யுடன் வாழ்வோர்
எண்ணிக்கையை 22.5
மில்லியன் என்ற அளவிற்கு
உயர்த்தியுள்ளதையும்,
அப்பகுதியில் எயிட்ஸினால்
அனாதையாக்கப்பட்ட 11.4
மில்லியன் குழந்தைகள்
வாழ்ந்து வருவதையும்
உள்ளடக்கியிருந்தது. ஏனைய
பகுதிகளைப் போலல்லாமல்
சகாராவை அண்மித்த
பகுதிகளில் எச் ஐ வி யுடன்
வாழ்வோரில் 61% பேர்
பெண்களாவர்.
தென்னாப்பிரிக்காவே
உலகிலேயே அதிக அளவில் எச்
ஐ வி நோயாளிகளைக்
கொண்டிருக்கிறது. இதைத்
தொடர்ந்து நைஜீரியாவும்
இந்தியாவும் உள்ளன.
பொதுவாக HIV மனித உடலில்
உள்ள எல்லா திரவங்களிலும்
படிந்திருக்கிறது என்றாலும்
கூட, இரத்தம், விந்து,
பெண்ணுறுப்புகளில்
உருவாகும் திரவம், தாய்ப்பால்
ஆகியவற்றின்
வாயிலாகத்தான்
பரவுகின்றது. எனவே ஆண்
பெண் உடலுறவின் போது
பாதுகாப்பு முறைகளைக்
கையாள்வது
அவசியமாகின்றது. எச்.ஐ.வி
தொற்று உள்ளவருடன்
பாதுகாப்பற்ற உடல் உறவு
கொள்வோருக்கு இந்த எச்.ஐ.வி
தொற்றி விடுகிறது. 80 சதவீத
எய்ட்ஸுக்கு காரணம்
பாதுகாப்பற்ற உடல் உறவுதான்
என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 25
வயதுக்குட்பட்ட
இளைஞர்களுக்கு எய்ட்ஸ்
அதிகமாக பரவுகிறது.
அதற்கு காரணம் அந்த வயதில்
அவர்கள் பாலுறவில் அதிக
நாட்டமிக்கவர்களாக
இருப்பதால் பாதுகாப்பான
உடல் உறவை மறந்து
விடுகிறார்கள். “நீங்கள்
எப்படிபட்டவராக இருந்தாலும்,
எங்கு வாழ்கிறவராக
இருந்தாலும் எச்.ஐ.வி
தொற்று பற்றிய
விழிப்புணர்வுடன் செயல்பட
வேண்டும்’ என்று தேசிய
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம்
மற்றும் யுனிசெப் கூட்டாக
வெளியிட்டுள்ள கையேட்டில்
தெரிவித்துள்ளது.
மேலும் போதைப்
பொருட்களைப்
பயன்படுத்துகையில் சுத்தம்
செய்யாப்படாத ஊசியை
ஒருவருக்கொருவர்
செலுத்திக் கொள்வதன்
மூலமாகவும் HIV பரவுகிறது.
இதே போல் அறுவை
சிகிச்சையின் போது
சுத்திகரிக்கப்படாத
ஆயுதங்களைப்
பயன்படுத்துவதனாலும், HIV
பரவக்கூடிய வாய்ப்புகள்
உள்ளன. அதே நேரம் HIV உள்ள
இரத்தம் மூலமாகவும் எளிதாக
பரவுகிறது.
பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து
குழந்தைக்கு பரவுதல் எனும்
போது
கர்ப்பகாலம், பேறு காலம்,
தாய்ப்பால் புகட்டும் காலம்
ஆகிய காலங்களில்
குழந்தைக்கு HIV பரவுகிறது.
எயிட்ஸ் நோயுற்றவரின் உடற்
திரவங்களுடன் தொடர்பு
ஏற்பட்ட எவரையுமே இந்நோய்
தாக்கக்கூடும். அதே நேரம்
கொனரியா (Gonorrohoea),
சிபிலிஸ் (Syphilis), ஹெர்பீஸ்
(Herpes) போன்ற ஏனைய
பாலியல் நோய்
உள்ளவர்களுக்கும், பாலியல்
உறுப்புகளில் சிறுகாயங்கள்,
உரசல்கள் உள்ளவர்களுக்கும்.
பலரோடு உடலுறவு
வைப்பவர்களுக்கும் இந்நோய்
ஏற்படக்கூடிய நிகழ்தகவு
அதிகம்.
HIV தொற்றியோருடன்
சாதாரணமாக சமூக
பழக்கவழக்கங்களில்
ஈடுபடுவதனூடாகவோ,
கைகுலுக்குதல், தொடுதல்,
கட்டியணைத்தல்,
விளையாடுதல், புகையிரதம்
மற்றும் பஸ் வண்டிகளில் பயணம்
செய்தல், வியர்வை, கண்ணீர்,
சிறுநீர் மற்றும் முத்தமிடல்
மூலமாகவோ,
பொதுக்கழிப்பறைகள் மற்றும்
படுக்கை, அவர்கள்
பயன்படுத்திய உணவுப்
பாத்திரங்கள் மூலமாகவோ,
நீச்சல் குளம் மற்றும் இருமல்,
தும்மல், கொசுக்கடி
மூலமாகவோ பரவாது.
இருப்பினும் பொது
இடங்களில் சவரம் செய்து
கொள்ளும் ஆண்கள் பொதுக்
கத்திகளைப் பயன்படுத்தாமல்
புதிய சவர அலகுகளை
பயன்படுத்துவதை உறுதி
செய்து கொள்ளல் வேண்டும்.
எயிட்ஸ் அறிகுறிகள்
அறிகுறிகள் HIV
பாதிப்புக்குள்ளான பலரிடம்
ஆரம்பநிலையில் அதற்கான
அறிகுறிகள் தெரிவதில்லை.
இருந்தபோதிலும் சிலரிடம்
இது “ஃப்ளு
சுரமாக” (காய்ச்சல்)
வெளிப்படுகிறது. அதுவும்
இந்த வைரஸ் மூன்று முதல்
ஆறு வாரங்களுக்குப் பிறகே
தெரிகிறது. இந்தத் தீவிர HIV
பாதிப்பினால் ஏற்படும் உடல்
நலக்குறைவு, காய்ச்சல்,
தலைவலி, உடல்சோர்வு,
குமட்டல், வியர்வை
(குறிப்பாக இரவு
நேரங்களில் ) நடுக்கம்,
வயிற்றுப்போக்கு,
நெறிகட்டுதல் (அக்குள்,
கழுத்து) போன்றவற்றினைத்
தோற்றுவிக்கின்றது. இந்த
அறிகுறிகள் கூட HIV
தொற்றிய ஒரு சில நாட்களில்
தெரிவதில்லை. மேலும் இது,
ஆரம்பநிலையில் வேறு ஏதோ
ஒரு வைரஸ் என்று தவறாகவே
இனங் காணப்படுகிறது.
எனவே ஆரம்ப நிலையில் HIV
தொற்றைக் கண்டுபிடிப்பது
கடினமாகும்.
தொற்று ஏற்பட்ட முதல் மூன்று
மாதங்களில் வைரசின்
எண்ணிக்கை கணக்கற்றுப்
பெருகி, உடலின் பல
பாகங்களிலும் பரவுகின்றன.
குறிப்பாக மூட்டுக்களில்
உள்ள இழையங்கள் இதனால்
பாதிக்கப்படுகின்றன.
இந்நிலையில் அத்தொற்று,
பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து
மற்றவர்களுக்கு எளிதாகப்
பரவிவிடுகின்றது.
உடலில் உள்ள நோய் எதிர்ப்பு
கலங்களான வெண்
குருதித்துணிக்கை
அனைத்தும் ஒன்று திரண்டு
போராடத் தொடங்கும்
போதுதான் HIV யின் வேகம்
சற்று குறைகிறது. HIV
தொற்றின் தீவிரமான
அறிகுறிகள் தெரிய பல
வருடங்கள் ஆகின்றன.
பெரியவர்களுக்கு HIV
தொற்றிய பிறகு அது
வெளித் தெரிவதற்கு 10
வருடங்களுக்கும் மேல்
ஆகிறது. HIV தொற்றோடு
பிறக்கும் குழந்தைகளுக்கு
அது தெரிய இரண்டு
வருடங்கள் ஆகின்றன.
இவ்வாறு அறிகுறிகள்
தெரியாத நிலை மனிதருக்கு
மனிதர் மாறுபடும்.
“எய்ட்ஸ்” வெளியில் தெரிய
ஆரம்பித்த உடன் பாதிக்கப்பட்டவர்
அடிக்கடி நோய் வாய்ப்படுவர்.
உடல் எடை குறைவு, தொடர்
காய்ச்சல், வயிற்றுப்போக்கு
ஆகியன எய்ட்ஸின்
முக்கியமான
அறிகுறிகளாகும். மேலும்
எய்ட்ஸ் நோயாளிகள், காசநோய்,
பூஞ்சான் நோய் தொற்று, சில
வகைப்புற்று நோய்கள்,
நிமோனியா போன்ற
பல்வேறு நோய்களால்
பாதிக்கப்படுகின்றனர்.
எச் ஐ. வீ இரத்தச் சோதனை.
HIV தொற்றடைந்தோர்
நீண்டகாலம் செல்லும் வரை
எவ்வித
நோயறிகுறிகளையும்
வெளிக்காட்டுவதில்லை.
எனவே புறத்தே தென்படும்
பண்புகளை கொண்டு
அவர்களை இனம்காண
முடியாது. HIV
தொற்றடைந்துள்ளோரை
இனம்காணப்படுவதற்கு மிகச்
சிறந்த முறை அவர்களது
இரத்தத்தில் அடங்கியுள்ள HIV
பிறபொருளெதிரிகளை
இனம்காண்பதாகும். இதற்காக
இரண்டு வகை இரத்தச்
சோதனைகள்
நடத்தப்படுகின்றன.
முதலாவதாக நடத்தப்படும்
இரத்தச் சோதனை. ELISA TEST
எலைசா சோதனையாகும்.
இது இனம்காணல்
பரிசோதனை (screening test)
எனப்படுகிறது. ELISA
சோதனையானது HIV தொற்று
அல்லாத பிற காரணங்கள்
தொடர்பாகவும் நேர் வகை
பெறுபேற்றை தர இடமுண்டு.
Western blot test வெஸ்டர்ன்
புலொட் சோதனை. இது
உறுதிப்படுத்தும்
சோதனையாகும் (Conformation
test). ELISA சோதனையில் நேர்
வகையை காட்டும் ஒவ்வொரு
இரத்த மாதிரியும் Western blot
சோதனைக்கு உட்படுத்தப்படும்.
இது ஒரு சிறப்பான
சோதனையாகும். இரத்த
வகையில் HIV
பிறபொருளெதிரி
காணப்பட்டால் மாத்திரமே இச்
சோதனையின் போது
பெறுபேறு காட்டப்படும்.
ELISA சோதனை, Western blot
சோதனை ஆகிய இரண்டு
சோதனையிலும் (+ ) வகை
பெறுபேறு காணப்பட்டால் HIV
பிறபொருளெதிரி உண்டு
என்பது அல்லது HIV தொற்று
ஏற்பட்டுள்ளது என்பது
உறுதியாகும்.
இவ்விடத்தில் யார் HIV குருதிப்
பரிசோதனையைச் செய்து
கொள்ள வேண்டும் என்ற
கேள்வியும் எழுகின்றது.
குறிப்பாக தமது பாலியல்
நடத்தைகள் தொடர்பாக
ஒருவருக்கு சந்தேகம்
ஏற்பட்டால் அல்லது
ஒருவருக்கு HIV தொற்று
ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்
சந்தேகப்படுவதாக இருந்தால்,
மேலும் வேலை வாய்ப்புப்
பெறுவதற்கோ வெளிநாட்டு
வேலை வாய்ப்பு பெறச்
செல்வதற்கோ முன்
தேவையாகக் கருதப்படும்
சந்தர்ப்பத்தில் இரத்தப்
பரிசோதனை மேற்கொள்ளுதல்
அவசியமானதாகும்.
அதேபோல இரத்ததானம்
செய்யப்படும்போது
இரத்த மாதிரி
ஒவ்வொன்றிலும் HIV தொற்றுக்
காணப்படுகின்றதா என்பதை
அறிதல் அவசியம். இத்தகைய
சந்தர்ப்பங்களில் இரத்த
சோதனைகள் செய்து
கொள்ளல் வேண்டும். மேலும்,
சுய விருப்பின் பேரிலும்
ஒருவர் இரத்தப் பரிசோதனை
செய்து கொள்ளலாம்.
இத்தகைய இரத்த சோதனைகள்
பாலியல் நோய்கள் தொடர்பான
வைத்திய நிலையங்களிலும்,
அரசாங்க, தனியார்
வைத்தியசாலைகளிலும்,
இரத்தப் பரிசோதனையை
மேற்கொள்ளும்
ஆய்வுகூடங்களிலும், விசேட
இரத்த பரிசோதனைக்
கூடங்களிலும்
இச்சோதனைகளை செய்து
கொள்ளலாம்.
HIV தொற்றுக்கு
ஆளாகியிருப்பதாக
அறுவுத்தலானது மிக
உறுத்துணர்வுடைய ஒன்றாக
அமையக் கூடுமாதலால்
சோதனைப் பெறுபேற்றை
அறிந்து கொள்ளத்தக்க
வகையில் அவரைத்
தயார்படுத்த வேண்டியது
அவசியமாகும்.
இரத்தச்சோதனைக்கு
உள்ளானவருக்கே சோதனைப்
பெறுபேறு வழங்கப்படும்.
அதன் அந்தரங்கத் தன்மையைப்
பேணுவது சுகாதார ஊழியர்
ஒருவரினதும்
பொறுப்பாகும். நோய் பற்றித்
தீர்மானிப்பதற்காக HIV
சோதனை நடத்துதல். இச்
சோதனைப் பெறுபேறு
அதனைக் கோரிய
வைத்தியருக்கு மாத்திரமே
வழங்கப்படும். ஒவ்வொரு
சுகாதார ஊழியரும்
சோதனையின் அந்தரங்கத்
தன்மையைப்
பேணக்கடமைப்பட்டுள்ளனர்.
எயிட்ஸ் மருந்துகள்
HIV தொற்று ஏற்பட்ட பின்பு
அதனை முற்றாக அழிக்க
இதுவரை மருந்துகள்
கண்டுபிடிக்கப்படவில்லை.
இதன் காரணமாகவே எய்ட்ஸைக்
குணப்படுத்த முடியாத
நோயாக கூறப்படுகின்றது.
இருப்பினும் HIV கிருமிகள்
உடலினுள் பரவும் வேகத்தை
குறைக்கக் கூடிய மருந்துகள்
இப்போது சந்தையில்
கிடைக்கின்றன. நோய்த்
தொற்றுக்களுக்கான
சிகிச்சையுடன் இந்த
மருந்துகளையும்
முறையாகப்
பயன்படுத்தினால் HIV
பாதிப்பு உள்ளவர்கள் பல
ஆண்டுகள் ஆரோக்கியத்துடன்
உயிர் வாழக்கூடிய நிகழ்தகவு
உண்டு.
HIV யைக் கட்டுப்படுத்தும்
மருந்துகள் பொதுவாக
“ஆண்டி ரெட்ரோ வைரஸ்
மருந்துகள்” (Antireteoviral Drugs)
என்று அழைக்கப்படுகின்றன.
இம்மருந்துகள் பல்வேறு
நிறுவனங்களின் மூலம்
மூன்று நிலைகளில்
கிடைக்கின்றன. இவை
இரத்தத்தில் கலந்துள்ள
வைரசின் எண்ணிக்கையைக்
குறைப்பதுடன், அவை
பரவுவதையும்
கட்டுப்படுத்துகின்றன.
மருந்துகளில் ஏற்படும்
ஒவ்வாமையைக் குறைக்க
பொதுவாக “ஆன்டி ரெட்ரோ
வைரஸ் (Antireteoviral Drugs)
மருந்துகளை கலப்பு
சிகிச்சை முறையில் தான்
எடுத்துக் கொள்ள வேண்டும்
என்று சிபாரிசு
செய்யப்பட்டுள்ளது.
‘ஆன்டி ரெட்ரோ வைரஸ்”
மருந்துகளை
பயன்படுத்துபவர்கள்
முறையாகவும்,
தொடர்ச்சியாகவும் சிகிச்சை
மேற்கொள்வது
அவசியமாகும். HIV க்காக
மாத்திரமல்லாமல்
அபாயகரமான வைரஸ்
தொடர்பாக எத்தகைய
தொற்றுக்களுக்கும் இது
பொருந்தும். சிகிச்சை
மேற்கொள்ளப்படுவது
மாத்திரமன்றி
வைத்தியர்களின்
ஆலோசனைப்படி உரிய
மருந்தை உரியநேரத்தில்
உட்கொள்ளுதல்
அவசியமானதாகும். மாறாக
தான் நினைத்தவாறு
மருந்துகளை உட்கொண்டால்
அதன் பலன் குறைவாகவே
இருக்கும். மேலும்,
தொடர்ச்சியாக மருத்துவரை
உரிய நேரத்தில் சந்தித்து
ஆலோசயைப்
பெறுவதினூடாக, தான்
உட்கொள்ளும் மருந்தின்
ஆற்றலை அறிந்து கொள்ளவும்
அல்லது அதனால் ஏற்படும் பக்க
விளைவுகளை அறிந்து
விரைவாக அவற்றைப்
போக்கிக் கொள்ளவும்
முடியுமானதாக இருக்கும்.
ஒரு முறை ‘ஆன்டி ரெட்ரோ
வைரஸ்” மருந்துகளை
பயன்படுத்த ஆரம்பித்து
விட்டால் அவர்கள் வாழ்நாள்
முழுவதும் அம்மருந்துகளை
பயன்படுத்த வேண்டும்.
எனினும் இம்மருந்து
வகைகளுக்கு அதிக பணம்
செலுத்தவேண்டியதால் சிலர்
தொடர்ச்சியாகப்
பயன்படுத்துவதில்லை.
இருப்பினும் தற்போது
இம்மருந்துகளின் விலைகள்
குறைக்கப்பட்டிருக்கிறது.
அதேநேரம், HIV ஆனது இம்
மருந்து வகைகளுக்கு
இசைவாக்கமடைந்து
எதிர்ப்பைக் காட்டும் ஆபத்து
நிலையும் தற்போது
உருவாகியுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் HIV
தொற்றடைந்தோருக்காகப்
பெரும்பாலும் ஏக காலத்தில்
இரண்டு அல்லது மூன்று
வகை மருந்துகள்
வழங்கப்படுவதுண்டு.
இவ்வாறான நிலைமைகளில்
வைரஸின் இசைவாக்கத்தன்மை
குறைவடையலாம்.
HIV தொற்றுக்கு
பெரும்பாலும் பின்வரும்
மருந்து வகைகளே
பயன்படுத்தப்படுகின்றன.
!. Nucleoside analogues
2. NonNucleoside reverse
trancriptasinhibirors
3.Protese inhibitors
இந்த மருந்து வகைகள்
வெவ்வேறு வர்த்தகப் பெயரில்
சந்தையில் காணப்படுகின்றன.
ஆராய்ச்சி நிலையிலுள்ள
சிகிச்சை முறைகள்
ஆல்பேர்டா பல்கலைக்கழக
(University of Alberta)
விஞ்ஞானிகள் எச்.ஐ.வி வைரஸ்
பரவுவதைத் தடுக்கும் ஆற்றல்
கொண்ட TRIM 22 என்ற ஒரு
பரம்பரை அலகைக் (Gene)
கண்டுபிடித்துள்ளதாக
அண்மையில்
அறிவித்துள்ளார்கள். இது
பற்றிய செய்தி scienceblog.com ல்
வெளியாகியுள்ளது. இந்த
பரம்பரை அலகானது எச்.ஐ.வி
வைரஸ் மனித கலங்களில்
பெருகுவதைத்த தடுக்கும்
ஆற்றல் கொண்டது என்பதை
அவர்கள் ஆய்வுகூடப்
பரிசோதனைகளிலேயே
கண்டுள்ளனர். ஆயினும்
எச்.ஐ.வி வைரஸ் தொற்றிய
மனிதர்களில் வைரஸ் தொற்றை
அழிக்கும் முறையை இன்னும்
அவர்கள் கண்டறியவில்லை.
அதனை கண்டறியும்
முயற்சியில் அவர்கள்
ஈடுபட்டுக் கொண்டு
இருக்கிறார்கள். இந்த ஜீனைக்
கண்டுபிடித்ததன் மூலம்
எதிர்காலத்தில் எயிட்ஸ{க்கு
எதிரான புதிய இன
மருந்தையோ அல்லது தடுப்பு
மருந்தையோ கண்டு பிடிக்க
முடியும் எனவும்
நம்புகிறார்கள்.
தடுப்பூசி குறைந்த
விலையில் கிடைக்கக்கூடும்
என்பதாலும், இதனால் வளர்ந்து
வரும் நாடுகள் தடுப்பூசி
பெற்றுக் கொள்ள எதுவாய்
இருக்கும் என்பதாலும்,
தடுப்பூசி இருக்கும் பட்சத்தில்
தினசரி சிகிச்சை
தேவையற்றது என்பதாலும்
இப்பரவல் தொற்றினைத் தடுக்க
தடுப்பூசி ஒன்றே சிறந்த வழி
என்று கணிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் ஏறத்தாழ 30
வருடங்களுக்குப் பின்னும் எச்
ஐ வி -1 தடுப்பூசி
தயாரிப்பதென்பது கடினமான
இலக்காகவே உள்ளது.
தற்போதைய மருந்துகளின்
பக்கவிளைவுகளைக்
குறைப்பது, சிகிச்சை
பின்பற்றப்படுதலை அதிகரிக்க
மருந்து நியமங்களை
எளியவையாக்குதல், மற்றும்
மருந்துக்கான எதிர்ப்பை
சமாளிக்க சிறந்த மருந்து
நியமத் தொடர்களைத்
தீர்மானித்தல்
ஆகியனவைகளை
உள்ளடக்கியதே தற்போதைய
சிகிச்சை முறைகளை
முன்னேற்றும்
ஆராய்ச்சியாகும்.
எச் ஐ வி தொற்றின் வீச்சு
குறைகிறது – ஐ நா
தெரிவிப்பு
கடந்த எட்டு ஆண்டுகளில்
புதிதாக ஏற்படும் எச் ஐ வி
தொற்றின் அளவு கணிசமாக
குறைந்திருப்பதாக ஐநா
மன்றத்தின் அறிக்கை
குறிப்புணர்த்தியுள்ளது.
எயிட்ஸ் நோய் எதிர்ப்பில்
செயலாற்றிவரும் ஐ.நா மன்ற
அமைப்பின் அறிக்கையில்,
சஹாராவுக்கு தெற்கே
இருக்கும் ஆபிரிக்க
நாடுகளில் தான் மிகப்பெரிய
முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. 2001
ஆம் ஆண்டின் ஆரம்பத்துடன்
ஒப்பிடும்போது, 2008 ஆம்
ஆண்டில் ஏற்பட்ட புதிய எச் ஐ
வி தொற்றுக்களின்
எண்ணிக்கை 4 லட்சமாகக்
குறைந்திருப்பதாக இந்த
அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.
எச் ஐ வி தடுப்பு
நடவடிக்கைகள் ஓரளவு இதற்கு
காரணமாக இருந்ததாக ஐநா
மன்றத்தின் எயிட்ஸ் நோய்
தடுப்புப்பிரிவின் இயக்குநர்
தெரிவித்திருக்கிறார்.
அதேசமயம் இந்த எயிட்ஸ் நோய்
தன்னை தொடர்ந்து
தகவமைத்துக்கொண்டு
வருவதாக தெரிவித்த அவர்,
இதனால் அதிகம் பாதிக்கப்படக்
கூடியவர்களுக்கு இதை
தடுக்கும் நடைமுறைகள்
சென்று அடைவதில்லை
என்றும் கவலை
வெளியிட்டிருக்கிறார்.
HIV தொற்று வராமல் இருக்க…
எய்ட்ஸ் பாதுகாப்பு HIV
தொற்றுவராமல் இருக்க
தடுப்பூசிகளோ அதனை
குணப்படுத்துவதற்கு
மருந்துகளே இல்லை. HIV
தொற்று வராமல் இருக்க ஒரே
வழி பாதுகாப்பான
நடத்தைகளே ஆகும்.
பிரதானமாக உடலுறவின்
மூலம் பரவுவதைத்
தடுத்தலுக்கான பூரண
முயற்சிகளை மேற்கொள்ளல்
வேண்டும். இச்சந்தர்ப்பத்தில்
பாதுகாப்பான
உடலுறவுக்குப் பின்வரும்
வழிகாட்டு நெறிகள் உதவும்.
ஒருவருக்கொருவர்.
உண்மையாக இருத்தல்
வேண்டும். பாலுறவு
நடத்தைகள் நபருக்கு நபர்
வேறுபடுவதால்
ஒருவருக்கொருவர்
நம்பிக்கையோடு இருத்தல்
அவசியமானதாகும்.
இச்சந்தர்ப்பத்தில் ஒருவர்
மற்றொருவரை உண்மையாக
இருக்க வலியுறுத்த
வேண்டும். மேற்கத்தேய
நாடுகளைப் போல எண்ணற்ற
நபர்களுடன் உடலுறவு
கொள்வதை தவிர்த்துக்
கொள்ளல் வேண்டும். இதே
போல் அடிக்கடி உடலுறவு
கொள்வோரை
மாற்றுவதையும் இயலுமான
வரை தவிர்த்துக் கொள்ளல்
வேண்டும்
பிற பாதுகாப்பு
முறைகளிலும் அவதானம்
செலுத்துதல் வேண்டும். ஒரே
முறை பயன்படுத்தக் கூடிய
ஊசியை மட்டுமே
உபயோகப்படுத்த வேண்டும்.
அதிலும் குறிப்பாக
நரம்புகளில் செலுத்தும்
ஊசியைப் பயன்படுத்தும்
போது இதை கண்டிப்பாகக்
கடைப்பிடிக்க வேண்டும். இது
முடியாமல் பல முறை
பயன்படுத்தக் கூடிய ஊசியை
ஏற்க வேண்டியிருந்தால் அது
நன்கு சுத்திகரிக்கப்பட்டதாக
இருக்க வேண்டும். கருவுற்ற
பெண்கள், “தாய் சேய்
தொற்றுத் தடுப்பு மையத்தை”
அணுக வேண்டும். அங்கு
பரிசோதனை செய்து
கொண்டு HIV இருப்பது
கண்டுபிடிக்கப்பட்டால்
மருத்துவர்களின்
அறிவுரையைப் பின்பற்றி
குழந்தைகளுக்கு இத்தொற்று
பரவாமல் இருக்க முயற்சிக்க
வேண்டும்.
இரத்தம் தேவைப்பட்டால்
அங்கீகரிக்கப்பட்ட இரத்த
வங்கிகளை அணுக வேண்டும்.
HIV தொற்று இல்லை என்ற
சான்றிதழுடன் கூடிய
இரத்தத்தைப் பெறுவது
அவசியமாகும். ஒருவர்
பால்வினை நோயைப்
பெற்றிருந்தால், அவர்
உடலுறவு கொள்ளும் போது
அந்நோய் அதிகரித்து
பல்வேறு மாற்றங்களை
அடைந்து HIV தொற்றாக
மாறிவிடும். எனவே
பால்வினை நோய் உள்ளவர்கள்
எவ்வளவு விரைவாக
முடியுமோ அவ்வளவு
விரைவாக தகுந்த
சிகிச்சையினை
மேற்கொண்டு இந்நோயை
குணப்படுத்திக் கொள்ள
வேண்டும்.
எய்ட்ஸ் நோயாளிகளும்
மனிதர்களே!
எய்ட்ஸ் நோயாளிகள்
சமூகத்தின் பார்வையில்
பொதுவாக
வேண்டப்படாதவர்களாகவே
கருதப்படுகின்றனர். இது
தவறு. ஒரு எயிட்ஸ்
நோயாளியைப்
பொறுத்தமட்டில் தகாத
பாலுறவால் மாத்திரம்
நோயைப் பெற்றிருப்பார்
என்று கூற முடியாது. சில
சந்தர்ப்பங்களில் அத்தகைய
பழக்கங்கள்
இல்லாதவர்களும்கூட
அவர்களை அறியாத
சந்தர்ப்பங்களிலும் இந்நோய்
தொற்றலாம். எனவே எயிட்ஸ்
நோயாளிகளை சாதாரண
மனிதர்களாக கருதி
அவர்களுக்கு உரிய
உரிமைகளைகளையும்,
சலுகைகளையும் வழங்க
வேண்டியது சமூகத்தின்
கடமையாகும்.
சட்டத்தின் முன் அனைவரும்
சமமானவர்களே.
அனைவருக்கும் சம உரிமைகள்
உண்டு. பிறப்பு, பால், இனம்,
மதம் முதலிய வேறுபாடுகள்
இன்றி உரிமைகள்
அனைவருக்கும்
பொதுவானவை. எயிட்ஸ் ஆல்
பாதிக்கப்பட்டவர்கள் என்பதற்காக
அவர்களுக்கு இந்த உரிமைகள்
மறுக்கப்படக் கூடாது.
தெரிந்து தெளிவடைதல்,
ஒப்புக் கொள்ளுதல் என்பது
ஒரு விஷயத்தையும் அதற்கு
உட்பட்டவர், அதனைப் புரிந்து
கொண்டு சுயமாக
முடிவெடுப்பதாக இருக்க
வேண்டும்.
மருத்துவர் மற்றும்
நோயாளியின் உறவு நிலை
புரிதலின் அடிப்படையில்
அமைய வேண்டும். எனவே
மருத்துவர், ஒரு
நோயாளியிடம் பரிசோதனை
மேற்கொள்கிறார் என்றால்
அதன் உண்மையான
நிலையினை அந்த
நோயாளியிடம்
தெரிவித்துவிட வேண்டும்.
அவருடைய முழுமையான
சம்மதத்தை தெரிந்த பிறகே
அந்தப் பரிசோதனையைத்
தொடருவதோ, விடுவதோ
என்று வைத்தியர்
முடிவெடுக்க வேண்டும்.
எயிட்ஸ் பாதிப்பானது மற்ற
நோய்களிலிருந்து
மிகப்பெரிய வித்தியாசத்தை
உடையது. எனவே இது
குறித்து பரிசோதனை
என்றால் சம்பந்தப்பட்டவருக்குத்
தெளிவாக இப்பரிசோதனை
குறித்துத் தெரிவித்துவிட
வேண்டும். தெரிவித்த பின்
வேறு ஒரு பரிசோதனையை
மேற்கொள்ளல் கூடாது. இது
நோயாளிகளின்
உரிமையாகும். அப்படி
ஏதேனும் தவறு நேர்ந்தால்
அது குறித்து
நோயாளிகளினால் நீதி
மன்றத்தை அணுக முடியும்.
ஆனால் HIV . மற்றும் எய்ட்சுடன்
வாழும் மக்கள் நீதி மன்றம்
செல்ல அஞ்சுகின்றனர்.
ஏனெனில் வெளி
உலகத்திற்குத் தங்களின்
நிலைமை தெரிந்துவிடும்
என்று பயப்படுகின்றனர்.
வேறுபடுத்திப் பார்க்கும்
போக்கிற்கு எதிரான உரிமை
எனும் போது ‘எல்லோரையும்
சமமாக நடத்த வேண்டியது
அடிப்படை உரிமையாகும்.”
இதனை அரசாங்கம்
போற்றுகிறது. ஆனால்
தனியாரிடம் இது
காணப்படுவது குறைவு.
இது குறித்து சட்டம்
தெரிவிக்கும் கருத்து,
அரசுத்துறையோ அல்லது
அரசு சார்புடைய
நிறுவனங்களோ, அல்லது
தனியார் துறையோ தங்களிடம்
பணிபுரிந்தவர்கள் இடையே
வேறுபாடு காட்டக்கூடாது
என்பதாகும்.
தங்கள் உடல் நலனில் அக்கறை
காட்டுதல் என்பது ஒவ்வொரு
மனிதருக்குமான அடிப்படை
உரிமையாகும். எனவே
எயிட்ஸ் நோயாளிகள்
பரிசோதனைக்காக
மருத்துவமனையை அணுகும்
போது, அவர்களை
மருத்துவமனைகளில் சேர்க்க
மறுப்பதோ, சிகிச்சைஅளிக்க
மறுப்பதோ கூடாது. அப்படி
நடந்தால் அதற்கு எதிராக
சட்டத்தை நாடலாம்.
அதே போல் பணிபுரியும்
இடங்களில் HIV நோயாளிகளை
வேறுபடுத்திப்
பார்க்கக்கூடாது. உடல் நலக்
குறைவின் காரணமாக,
ஒருவர் தொடர்ந்து வெகுநாள்
பணிக்கு வரவில்லை என்றால்
அவர்களை வேலையை விட்டு
நீக்கலாம். ஆனால் HIV உள்ளது
என்ற ஒரே காரணத்திற்காக
ஒருவரை வேலையை விட்டு
நீக்க கூடாது. அப்படிச்
செய்தால், அவர்கள்
சட்டபூர்வமான
நடவடிக்கைகளை
மேற்கொள்ளலாம். எனவே
சாதாரண மனிதர்களைப்
போலவே HIV எய்ட்ஸ்
நோயாளிகளுக்கும் எல்லா
உரிமைகளும் உண்டு. அந்த
உரிமைகள்
மறுக்கப்படும்போது அவர்கள்
நீதி மன்றத்தை நாடலாம்.