பக்கங்கள்

செவ்வாய், 27 டிசம்பர், 2016

இயற்கை அறிவியலாளர் கோ. நம்மாழ்வார் நினைவு தினம் டிசம்பர் 30


இயற்கை  அறிவியலாளர் கோ. நம்மாழ்வார் நினைவு தினம் டிசம்பர் 30 .

கோ. நம்மாழ்வார் (06 ஏப்ரல் 1938 - 30 திசம்பர் 2013) தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர் ஆவார். தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு சிற்றூரில் பிறந்த இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பை கற்றவர். பசுமைப் புரட்சி, தொழில்மயமாக்கம், சூழல் மாசடைதல் தொடர்பாக காரமான விமர்சனங்களையும் ஆக்கபூர்வமான மாற்றுகளையும் முன்வைத்தவர். தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்தவர். வானகம், குடும்பம் அமைப்பு உட்பட பல அரசு சாரா அமைப்புகளின் அமைப்பாளராக இருந்தார்.

30 திசம்பர் 2013 அன்று பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டியில் (பிச்சினிக்காடு சிற்றூரில்) மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த சென்றிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்

வரலாறு
நம்மாழ்வார், தஞ்சை மாவட்டத்தில் 1938இல் பிறந்தார். தந்தை பெயர் ச கோவிந்தசாமி. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 2007இல் காந்திகிராம பல்கலைக்கழகம் அறிவியலில் மதிப்புறு முனைவர் பட்டம் தந்தது. கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் 1960ஆம் ஆண்டு ஆய்வு உதவியாளராக பணியில் சேர்ந்து ஆய்வகங்களில் நிலவும் களப்பணியில் ஈடுபடாது செய்யப்படும் பயனில்லாப் பணிகளுக்கு எதிராக குரல் கொடுத்து மூன்றாண்டுகளில் வெளியேறினார். 1963ஆம் ஆண்டு முதல் 1969ஆம் ஆண்டு வரை அவர் மண்டல விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் வேலை செய்தார். ஜப்பானிய சிந்தனையாளர் மற்றும் விவசாயி, மசனோபு ஃபுக்குவோக்காவால் ஈர்க்கப்பட்டு இயற்கை அறிவியலாளர் ஆனார் நம்மாழ்வார்.

எதிர்த்துப் போராடியவை

பூச்சி கொல்லிகள்
மீத்தேன் வாயு திட்டம், இந்தியா
மரபணு சோதனைகள்
பி.டி. கத்தரிக்காய்க்கு அனுமதி
வெளிநாடுகளில் இருந்து உணவு தானியங்கள் இறக்குமதி
விவசாய நிலங்களை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்துதல்

களப்பணிகள்

சுனாமியினால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்ட நிலங்கள் சீரமைப்பு
இந்தோனேசியாவில் சுனாமி பாதிக்கப்பட்ட பகுதியில் 30 மாதிரி பண்ணைகள் அமைத்தல்
60 க்கும் மேற்பட்ட கரிம விவசாய பயிற்சி மையங்களை தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் நிறுவினார்.
மீத்தேன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்தார்.
"தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்' என்ற அமைப்பினைத் தொடங்கி, தமிழ்நாட்டின் கிராமப்புறங்கள் எல்லாவற்றையும் கால்நடையாக எட்டி, அங்கு கருத்தரங்கங்களும், பயிற்சி வகுப்புகளும் நடத்தினார். "பேரிகை' என்றொரு இயற்கை உழவாண்மை வாழ்வியல் மாத இதழை வெளிட்டார்.

நடைப் பயணங்கள்

1998 - கன்னியாகுமாரி - சென்னை - சுதேச பயிர் வளர்ப்பின் முக்கியத்துவத்திற்காக
2002 - 25 நாட்கள் பாத யாத்திரை ஈரோடு மாவட்டம் - அங்கக வேளாண்மைப் பிரச்சாரம்.
2003 - பூம்புகார் முதல் கல்லனை வரை 25 நாட்கள் - கரிம வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து பிரச்சாரம்
2002 - இயற்கை உழவாண்மைகாக ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து கொடுமுடி வரை 25 நாள் நடைபயணம் மேற்கொண்டார்.
உருவாக்கிய அமைப்புகள்[தொகு]
1979ல் குடும்பம்
1990 லிசா (1990 – LEISA Network)
1990 – மழைக்கான எக்லாஜிக்கள் நிறுவனம், கொலுஞ்சி , ஒடுகம்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம்
இந்திய அங்கக வேளாண்மை சங்கம் (Organic Farming Association of India)
நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்
வானகம், நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம் உலக உணவு பாதுகாப்பிற்கான பண்ணை ஆராய்ச்சி மையம்
தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்.


படைப்புகள்
தாய் மண் (இயற்கை வழி உழவாண்மை பாடநூல்), வெளியீடு: வானகம்
உழவுக்கும் உண்டு வரலாறு (நூல்) விகடன் வெளியீடு
தாய் மண்ணே வணக்கம் (நூல்) நவீன வேளாண்மை வெளியீடு
நெல்லைக் காப்போம்
வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும், இயல்வாகை வெளியீடு
இனி விதைகளே பேராயுதம், இயல்வாகை வெளியீடு
நோயினைக் கொண்டாடுவோம், இயல்வாகை வெளியீடு
எந்நாடுடையே இயற்கையே போற்றி, விகடன் வெளியீடு
பூமித்தாயே, இயல்வாகை வெளியீடு
நோயினை கொண்டாடுவோம், இயல்வாகை வெளியீடு
மரபை அழிக்கும் மரபணு மாற்று விதைகள் (நூல்) வாகை வெளியீடு
களை எடு கிழக்கு பதிப்பகம்

விருதுகள்

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், இவருக்கு சுற்றுச் சூழல் சுடரொளி விருதினை வழங்கியது. திண்டுக்கல்லைச் சேர்ந்த காந்திகிராம கிராமப்புற நிறுவனம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது

திங்கள், 26 டிசம்பர், 2016

எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பிறந்த நாள் டிசம்பர் 27 .


எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பிறந்த நாள் டிசம்பர் 27 .

 நாஞ்சில்நாடன் (பிறப்பு: திசம்பர் 27 , 1947, வீர நாராயண மங்கலம் (கன்னியாகுமரி மாவட்டம்) ) நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் க.சுப்பிரமணியம். துணைவியார் பெயர் சந்தியா சுப்பிரமணியம். வேலையின் காரணமாகப் பல ஆண்டுகள் மும்பையில் வாழ்ந்தார். தற்போது கோயம்புத்தூரில் வாழ்ந்து வருகிறார்.

நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ்பெற்றவர். தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் என்ற சிறுகதைத்தொகுதி மூலம் புகழ்பெற்றார். தலைகீழ்விகிதங்கள் இவரது முதல் நாவல்.

இவரின் மிக முக்கியமான அடையாளம் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கிலான எழுத்துநடை. தலைகீழ் விகிதங்கள் நாவலை இயக்குநர் தங்கர்பச்சான் சொல்ல மறந்த கதை என்ற பெயரில் திரைப்படமாக்கி இருக்கிறார்.

பெருமைகளும் விருதுகளும்

2010ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது இவரது "சூடிய பூ சூடற்க" என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது.
கனடாவின் இலக்கியத்தோட்டத்தின் 2012 ஆம் ஆண்டுக்கான இயல்விருது தொராண்டோவில் இவருக்கு அளிக்கப்பட்டது.

படைப்புகள்
புதினங்கள்

1977 தலைகீழ் விகிதங்கள்
1979 என்பிலதனை வெயில்காயும்
1981 மாமிசப்படைப்பு
1986 மிதவை
1993 சதுரங்க குதிரை
1998 எட்டுத் திக்கும் மதயானை
சிறுகதை தொகுதிகள்[தொகு]
1981 தெய்வங்கள் ஆடுகள் ஓநாய்கள்
1985 வாக்குப்பொறுக்கிகள்
1990 உப்பு
1994 பேய்க்கொட்டு
2002 பிராந்து
2004 நாஞ்சில் நாடன் கதைகள்
சூடிய பூ சூடற்க
முத்துக்கள் பத்து (தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு)
கான் சாகிப்
கொங்குதேர் வாழ்க்கை
கவிதை[தொகு]
2001 மண்ணுள்ளிப் பாம்பு
பச்சை நாயகி
வழுக்குப்பாறை
கட்டுரைகள்[தொகு]
2003 நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை
2003 நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று
நதியின்பிழையன்று நறும்புனல் இன்மை
தீதும் நன்றும்
திகம்பரம்.
காவலன் காவான் எனின்
அம்பறாத்தூணி (கம்பராமாயணம் குறித்த கட்டுரை தொகுதி)
அகம் சுருக்கேல்
எப்படிப் பாடுவேனோ?
2015 கைம்மண் அளவு (குங்குமம் வார இதழ் கட்டுரைகள்)

கருத்துக்கள்

இவர் தனக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது பற்றி குறிப்பிடுகையில் காலம் கடந்து இந்த விருது தனக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். சாகித்ய அகாடமி அரசியல் மற்றும் பணபலத்தின் செயல்பாட்டுக் களமாகி விட்டது. அங்கு வெறும் கல்வியாளர்களின் கைதான் ஓங்கி உள்ளது. அவர்கள் மரபு இலக்கியங்களை முழுமையாக படிப்பதில்லை. அரசியல் செல்வாக்கோ, பண செல்வாக்கோ இருந்தால் விருதை பெறவேண்டியதில்லை, வாங்கிவிடலாம் என்கிறார். எனக்கு முன்னால் மிகப் பெரிய தகுதியுடையவர்கள் 20 முதல் 30 பேர் வரை விருது பெற காத்திருக்கின்றனர். ஆண்டுதோறும் 25 பேருக்கு இந்த விருதை வழங்கலாம் என்றும் கூறியுள்ளார்

ஞாயிறு, 25 டிசம்பர், 2016

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர் நல்லக்கண்ணு பிறந்த நாள் டிசம்பர் 26 .


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர் நல்லக்கண்ணு பிறந்த நாள் டிசம்பர் 26 .

நல்லக்கண்ணு சுமார் 25 ஆண்டுகள் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார். 13 ஆண்டுகாலம் .இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராகவும் இருந்துள்ளார். இப்போது மத்திய கமிட்டி உறுப்பினர்,தேசிய கட்டுப்பாட்டுக் குழு தலைவர்.

வாழ்க்கை வரலாறு‍
திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 1925ல் பிறந்தார். நல்லக்கண்ணு அவர்கள் 18ஆவது வயதிலேயே .இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர்.

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இரண்டாயிரம் மூட்டை நெல் வைத்திருப்பதைக் கண்டுபிடித்து ஜனசக்தி பத்திரிகையில் எழுதினார். அதைப் படித்த கலெக்டர், உடனடியாக நடவடிக்கை எடுத்து அத்தனை மூட்டைகளையும் பறிமுதல் செய்தார். இவருடைய முதல் நடவடிக்கை என்று பார்த்தால் இதுதான். இனிமேல் மக்களுக்காக முழு நேரமும் உழைப்பது என்று முடிவெடுத்தார். அப்பாவிடம் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறினார். கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடைவிதிக்கப்பட்ட போது நெல்லைச் சதி வழக்கில் கைது செய்யப்பட்டார். ஏழு ஆண்டுகள் இருட்டறை வாழ்க்கை நாங்கள் வெளியில் வந்தபோது நாடு சுதந்திரம் அடைந்திருந்தது. அன்று ஆரம்பித்தது அரசியல் பயணம் இன்று வரை தொடர்கிறது.

சாதி எதிர்ப்புப் போராளி
இவருடைய 80 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய் வசூலித்து“ கொடுத்தது கட்சி. அதை அந்த மேடையில் வைத்து கட்சிக்கே திருப்பிக் கொடுத்து விட்டார். தமிழக அரசு அம்பேத்கர் விருது கொடுத்து ஒரு லட்சம் ரூபாயை வழங்கியது. அதில் பாதியைக் கட்சிக்கும் மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்துவிட்டார்.

சாதீய அக்கிரமங்களுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். அதற்காக தன் வாழ்க்கையைச் சிறைக்கொட்டடிகளிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்தவர். இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை. சாதீய ஒடுக்கு முறைகள் மேலோங்கியிருக்கும் தென்மாவட்டங்களில் குறிப்பாக முக்குலத்தோர் பிரிவில் பிறந்தவர்.

விருதுகள்
தமிழக அரசின் அம்பேத்கர் விருதைப் பெற்றுள்ளார்.

சுனாமி நினைவு தினம் டிசம்பர் 26.


சுனாமி நினைவு தினம் டிசம்பர் 26.
12 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ருத்ர தாண்டவம் ஆடிய சுனாமி எனும் ஆழிப்பேரலையை யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது.

அதுவரை, துள்ளிக்குதித்து வரும் கடல் அலையையும், கரையோடு மோதும் போது எழும் ஓசையையும் ரசித்து வந்த நமக்கு, கடல் அலையும் ஒரு நாள் ஆபத்தை ஏற்படுத்தும் என்று உணர்த்திய நாள் தான் 2004-ம் ஆண்டு டிசம்பர் 26. அன்று காலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்திரா தீவில் கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டு, அதனால் சுனாமி எனும் ஆழிப்பேரலை விஸ்வரூபம் எடுத்து, பயங்கர வேகத்துடன் கடலோர நகரம், கிராமம் என்று வித்தியாசம் பாராமல் உள்ளே புகுந்தது.

ராட்சத அலைகளால், கடற்கரையில் நின்றவர்கள், கடலோர கிராமங்களில் வசித்தவர்கள் என வாரிச் சுருட்டி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இந்த கோர சம்பவத்தில் இந்தோனேசியா, இலங்கை, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கடற்கரையோரம் வசித்த 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் மரணம் அடைந்தனர். தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி மாவட்டங்களில் பல ஆயிரம் பேர் மாண்டனர். குவியல் குவியலாக கிடந்த பிணங்கள் ஒரே குழிக்குள் போட்டு புதைக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது. அன்று கேட்ட மரண ஓலம் 12 ஆண்டுகளுக்கு பிறகும் கடற்கரையோர கிராமங்களில் இன்னும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

அன்று மாண்ட குழந்தைகள் உயிரோடு இருந்திருந்தால், இன்று இளைஞராக வலம் வந்து கொண்டிருப்பார்கள். அன்று இளைஞராக இறந்து போனவர்கள் இருந்திருந்தால், இன்று திருமணமாகி பிள்ளைகள் பெற்று குடும்பத் தலைவராக வாழ்ந்திருப்பார்கள். அன்று குடும்ப தலைவராக மரித்தவர்கள் இருந்திருந்தால், இன்று பிள்ளைகளுக்கு திருமணம் செய்துவைத்து பேரன்-பேத்திகளை கையில் எடுத்திருப்பார்கள்.

இப்படி எத்தனையோ ஆசைகளுடன் அன்று கரைந்து போனவர்களின், மிச்ச மீதி குடும்பங்களின் இன்றைய நிலை தான் என்ன?. சிதிலமடைந்த இடங்கள் கூட, சுனாமி ஏற்படுத்திய சுவடு தெரியாமல் மீண்டும் உயிர்பெற்றுவிட்டன.

ஆனால், உயிர்களை பலிக்கொடுத்த மக்கள் உள்ளங்களில் ரணமாக இருக்கும் காயம் இன்னும் ஆறாமல் அப்படியேத்தான் இருக்கிறது. அதற்கான மருந்து காலத்திடம் தான் உள்ளது. காலம் கடந்து போக... போக... இந்த காயமும் ஆறட்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம். இனியும் இதுபோல் இயற்கை பேரிடர் ஒன்றும் ஏற்பட வேண்டாம் என்றும் வேண்டுவோம்.
நன்றி-மாலை மலர் .

வீரமங்கை வேலு நாச்சியார் நினைவு தினம் இன்று டிசம்பர் 25.


வீரமங்கை வேலு நாச்சியார் நினைவு தினம் இன்று டிசம்பர் 25.

* இந்திய சுதந்திர வரலாற்றின் அதிகம் வெளிவராத பக்கங்களில் ஒன்று *
ராணி வேலு நாச்சியாரின் வீரக்கதை. வரலாற்று ஆசிரியர்களால் நமக்கு போதிக்கப்பட்ட வீர வரலாறு, ஜான்சி ராணி லட்சுமி பாய் பற்றியது மட்டுமே. ஆனால், ஜான்சி ராணியின் சுதந்திரப் போராட்டத்துக்கு 85 ஆண்டுகள் முன்பே நடந்தேறிய வீர வரலாறு... தமிழகத்தைச் சேர்ந்த வேலு நாச்சியாருடையது!
ராமநாதபுர மன்னர் செல்லமுத்து சேதுபதி யின் ஒரே செல்ல மகளாகப் பிறந்த வேலு நாச்சியார், அரண்மனையில் ஆண் வாரிசு இல் லாத குறை இல்லாமல் வீர விளையாட்டு களான சிலம்பம், குதிரை ஏற்றம், வாள் வீச்சு, வில் வித்தை முதலான வீரக்கலைகளில் பயிற்சி பெற்றார். போர் பயிற்சிகளுடன் ஃபிரெஞ்சு, ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளிலும் தேர்ச்சி பெற்றார். 16 வயதானபோது சிவகங்கையின் மன்னரான முத்துவடுகநாதரை மணந்தார். 1772-ம் ஆண்டு நடந்த காளையார்கோயில் போரில் முதுவடுகனாதரையும் வேலு நாச்சியாரின் மகளான கௌரி நாச்சியாரையும் கொன்றனர் வெள்ளையர்கள். கொதித்து எழுந்த வேலுநாச்சி யார், தனது அரசை மீட்க சூளுரைத்தார்.
தனது தளவாய் தாண்டவராயன் பிள்ளையையும் சேனாபதிகள் மருது சகோதரர்களையும் அழைத்துக் கொண்டு குறுநில மன்னர்களை ஒன்று சேர்த்து போராட பல இடங்களுக்குச் சென்றார். தளவாய் தாண்டவராயன் பிள்ளை, வேலு நாச்சியாரின் சார்பாக சுல்தான் ஹைதர் அலிக்கு மடல் ஒன்றை எழுதினார். அந்த மடலில்... 5,000 வீரர்கள் கொண்ட காலாட்படையும் 5,000 வீரர்கள் கொண்ட குதிரைப்படையும் கேட்டிருந்தார். இதையடுத்து, வேலு நாச்சியாரை நேரில் அழைத்த ஹைதர் அலி, அவரின் உருதுப் புலமையைக் கண்டு வியந்தார். வேலு நாச்சியார் கேட்டவண்ணம் படைகளைக் கொடுத்து அனுப்பினார்.
படைகளைப் பெற்ற வேலு நாச்சியார், வெள்ளையர்களை வெல்வதற்கான உத்திகளை வகுத்தார். தனது படைகளை தானே முன்னின்று நடத்தினார். சேனாபதிகளான மருது சகோதரர் கள், உற்ற துணையாக இருந்து படைகளுக்குத் தலைமை தாங்கினர். குதிரை வீரர்கள், காலாட்படை வீரர்கள் மற்றும் பீரங்கிப்படை யோடு... திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்ட வேலு நாச்சியார், காளையார் கோயிலை கைப்பற்றினார்.
இறுதியாக, சிவகங்கை நகரைக் கைப்பற்றத் திட்டமிட்டு, சின்னமருது, பெரியமருது, தலைமை யில் படை திரட்டப்பட்டது. வெள்ளையரின் ஆக்கிரமிப்பில் இருந்த சிவகங்கை அரண்மனையில் விஜயதசமி, நவராத்திரி விழாவுக்காக மக்கள் கூடினர். அதில் பெண்கள் படை, மாறுவேடத்தில் புகுந்து செல்ல வியூகம் அமைத்தார் நாச்சியார். குயிலி என்ற பெண்ணை தற்கொலைப்படையாக அனுப்பினார். குயிலி தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள். உலகிலேயே முதன் முதலாக மனித வெடிகுண்டாக ஒரு பெண்ணை வேலு நாச்சியார் அனுப்பியது, பிற்கால தற்கொலைப் படைகளுக்கு முன்னோடியாக அமைந்தது.
கோட்டையை நோக்கி முன்னேறிய வேலு நாச்சியாரை தடுக்கும் எண்ணத்துடன் ஆற்காட்டு நவாப் வெள்ளையர்களுடன் படை எடுத்து வந்தபோது, வேலு நாச்சியாரும் மருது சகோதரர்களும் அப்படைகளை வென்று சிவகங்கையை அடைந்தனர். இறுதி யில் வென்றார் வீரமங்கை! தன் கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும், தளபதி பான் ஜோரையும் வேலு நாச்சியார் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது! இத்தனையையும் அவர் சாதித்தது... தன்னுடைய ஐம்பதாவது வயதில்!
சிவகங்கைச் சீமையை மீட்டு, 1780-ம் ஆண்டு முதல் 1789-ம் ஆண்டு வரை ராணியாக மக்கள் போற்ற ஆட்சி புரிந்தார் நாச்சியார். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வெள்ளையர்களை வென்று முடி சூட்டிய ஒரே ராணி, வீரமங்கை வேலு நாச்சியார். அவரது சுதந்திரப் போராட்ட தியாகத்தை கௌரவிக்கும் பொருட்டு, இந்திய அரசு 2008-ம் ஆண்டு தபால் தலை ஒன்றை வெளியிட்டது.
நம் குழந்தைகளுக்கு ஃபிரான்ஸ் நாட்டின் ஜோன் ஆஃப் ஆர்க் மற்றும் வடநாட்டின் ஜான்சி ராணியின் கதைகளையே சொல்லி வளர்த்த நாம், நம் மண்ணில் தோன்றி பெருமை சேர்த்த வேலு நாச்சியாரின் கதையையும் சொல்லி வளர்ப்போம். பட்டுக்கோட்டையார் பாடியது போல், வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைக்காமல், வீரக்கதையை சொல்லி வளர்ப்பது நமக்கும் தமது மண்ணுக்கும் பெருமை சேர்க்கும் தானே!

************************************************************************
இராணி வேலுநாச்சியார்

இந்திய சுதந்திர வரலாற்றின் அதிகம் வெளிவராத பக்கங்களில் ஒன்று... ராணி வேலு நாச்சியாரின் வீரக்கதை. வரலாற்று ஆசிரியர்களால் நமக்கு போதிக்கப்பட்ட வீர வரலாறு, ஜான்சி ராணி லட்சுமி பாய் பற்றியது மட்டுமே. ஆனால், ஜான்சி ராணியின் சுதந்திரப் போராட்டத்துக்கு 85 ஆண்டுகள் முன்பே நடந்தேறிய வீர வரலாறு... தமிழகத்தைச் சேர்ந்த வேலு நாச்சியாருடையது!

ராமநாதபுர மன்னர் செல்லமுத்து சேதுபதி யின் ஒரே செல்ல மகளாகப் பிறந்த வேலு   நாச்சியார், அரண்மனையில் ஆண் வாரிசு இல் லாத குறை இல்லாமல் வீர விளையாட்டு களான சிலம்பம், குதிரை ஏற்றம், வாள் வீச்சு, வில் வித்தை முதலான வீரக்கலைகளில் பயிற்சி பெற்றார். போர் பயிற்சிகளுடன் ஃபிரெஞ்சு, ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளிலும் தேர்ச்சி பெற்றார். 16 வயதானபோது சிவகங்கையின் மன்னரான முத்துவடுகநாதரை மணந்தார். 1772-ம் ஆண்டு நடந்த காளையார்கோயில் போரில் முதுவடுகனாதரையும் வேலு நாச்சியாரின் மகளான கௌரி நாச்சியாரையும் கொன்றனர் வெள்ளையர்கள். கொதித்து எழுந்த வேலுநாச்சி யார், தனது அரசை மீட்க சூளுரைத்தார்.

தனது தளவாய் தாண்டவராயன் பிள்ளையையும் சேனாபதிகள் மருது சகோதரர்களையும் அழைத்துக் கொண்டு குறுநில மன்னர்களை ஒன்று சேர்த்து போராட பல இடங்களுக்குச் சென்றார். தளவாய் தாண்டவராயன் பிள்ளை, வேலு நாச்சியாரின் சார்பாக சுல்தான் ஹைதர் அலிக்கு மடல் ஒன்றை எழுதினார். அந்த மடலில்... 5,000 வீரர்கள் கொண்ட காலாட்படையும் 5,000 வீரர்கள் கொண்ட குதிரைப்படையும் கேட்டிருந்தார். இதையடுத்து, வேலு நாச்சியாரை நேரில் அழைத்த ஹைதர் அலி, அவரின் உருதுப் புலமையைக் கண்டு வியந்தார். வேலு நாச்சியார் கேட்டவண்ணம் படைகளைக் கொடுத்து அனுப்பினார்.

படைகளைப் பெற்ற வேலு நாச்சியார், வெள்ளையர்களை வெல்வதற்கான உத்திகளை வகுத்தார். தனது படைகளை  தானே முன்னின்று நடத்தினார்.  சேனாபதிகளான மருது சகோதரர் கள்,  உற்ற துணையாக இருந்து படைகளுக்குத்  தலைமை தாங்கினர். குதிரை வீரர்கள், காலாட்படை வீரர்கள் மற்றும் பீரங்கிப்படை யோடு... திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்ட வேலு நாச்சியார், காளையார் கோயிலை கைப்பற்றினார்.

இறுதியாக, சிவகங்கை நகரைக் கைப்பற்றத் திட்டமிட்டு, சின்னமருது, பெரியமருது, தலைமை யில் படை திரட்டப்பட்டது. வெள்ளையரின் ஆக்கிரமிப்பில் இருந்த சிவகங்கை அரண்மனையில் விஜயதசமி, நவராத்திரி விழாவுக்காக மக்கள் கூடினர். அதில் பெண்கள் படை, மாறுவேடத்தில் புகுந்து செல்ல வியூகம் அமைத்தார் நாச்சியார். குயிலி என்ற பெண்ணை தற்கொலைப்படையாக அனுப்பினார். குயிலி தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள். உலகிலேயே முதன் முதலாக மனித வெடிகுண்டாக ஒரு பெண்ணை வேலு நாச்சியார் அனுப்பியது, பிற்கால தற்கொலைப் படைகளுக்கு முன்னோடியாக அமைந்தது.

கோட்டையை நோக்கி முன்னேறிய வேலு நாச்சியாரை தடுக்கும் எண்ணத்துடன் ஆற்காட்டு நவாப் வெள்ளையர்களுடன் படை எடுத்து வந்தபோது, வேலு நாச்சியாரும் மருது சகோதரர்களும் அப்படைகளை வென்று சிவகங்கையை அடைந்தனர். இறுதி யில் வென்றார் வீரமங்கை! தன் கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும், தளபதி பான் ஜோரையும் வேலு நாச்சியார் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது!  இத்தனையையும் அவர் சாதித்தது... தன்னுடைய ஐம்பதாவது வயதில்!

சிவகங்கைச் சீமையை மீட்டு, 1780-ம் ஆண்டு முதல் 1789-ம் ஆண்டு வரை ராணியாக மக்கள் போற்ற ஆட்சி புரிந்தார் நாச்சியார். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வெள்ளையர்களை வென்று முடி சூட்டிய ஒரே ராணி, வீரமங்கை வேலு நாச்சியார். அவரது சுதந்திரப் போராட்ட தியாகத்தை கௌரவிக்கும் பொருட்டு, இந்திய அரசு 2008-ம் ஆண்டு தபால் தலை ஒன்றை வெளியிட்டது.

இந்தியக் கடலோரக் காவல் படை, கப்பல்களுக்கு சிறப்புமிக்க பெண்கள் பெயரை வைப்பது வழக்கம். தற்போது ராணி வேலு நாச்சியாரின் பெயரை புதிதாக வரவிருக்கும் இந்திய கடலோர காவல் படை கப்பலுக்கு வைப்பதற்கு பரிசீலித்து வருகிறது பாதுகாப்பு துறை. அந்தக் கப்பலில் பிரத்யேகமாக வைப்பதற்காகவே ஓவியர் மருது வரைந்து அளித்த வேலு நாச்சியாரின் ஓவியம்தான் இக்கட்டுரையை அலங்கரிக்கிறது.

நம் குழந்தைகளுக்கு ஃபிரான்ஸ் நாட்டின் ஜோன் ஆஃப் ஆர்க் மற்றும் வடநாட்டின் ஜான்சி ராணியின் கதைகளையே சொல்லி வளர்த்த நாம், நம் மண்ணில் தோன்றி பெருமை சேர்த்த வேலு நாச்சியாரின் கதையையும் சொல்லி வளர்ப்போம். பட்டுக்கோட்டையார் பாடியது போல், வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைக்காமல், வீரக்கதையை சொல்லி வளர்ப்பது நமக்கும் நம் மண்ணுக்கும் பெருமை சேர்க்கும்  தானே!

வீரச் சிதறல்கள் !

1772ல் ஐரோப்பியரின் படையெடுப்பால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க, இடம் மாறிச் சென்றார் வேலு நாச்சியார். ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக்கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறி மாறி முகாமிட்டு வாழ்ந்தார். இதற்கிடையில் தமது எட்டு வயது மகளையும் பாதுகாக்க வேண்டிய நிலை அவருக்கு இருந்தது.

காளையார்கோவிலை மீட்க நடந்த போரின்போது வேலுநாச்சியாரை, ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுக்க மறுத்தாள் உடையாள் என்ற பெண். இதனால், வெள்ளையரால் வெட்டப்பட்டாள் அந்தப் பெண். அவளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு, தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார் நாச்சியார். அந்த வழிபாடு... வாழையடி வாழையாகத் தொடர்ந்து, கொல்லங்குடி வெட்டுடைய காளியம்மன் கோயிலில் இன்றும் சிறப்பாக நடக்கிறது.

1793ல் பேத்தி மறைந்து போக, நாச்சியாருக்கு துயரம் அதிகமானது. அதனால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார், டிசம்பர் 25, 1796 அன்று இறந்தார்.

ஆண் வாரிசு இல்லாமல் உள்ள நாட்டை தாமே எடுத்து நடத்தலாம் என்று ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி சட்டம்  போட்டிருந்தது. அதன்படி சிவகங்கையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முயற்சித்தது ஆங்கிலேய படை. ஆனால், இதை ஏற்க மறுத்தனர் ராணியின் தளபதிகளான மருது சகோதரர்கள். அவர்களே தங்களது இறப்பு வரையிலும் தளபதிகளாக இருந்து, சிவகங்கையை சிறப்பான கட்டமைப்போடு காத்து வந்தனர்.
***********************************
இராணி வேலுநாச்சியார்
பதினெட்டாம் நூற்றாண்டில்
தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின்
இராணி மற்றும் பிரித்தானியக்
கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம்
ஏந்திப் போராடிய பெண் விடுதலைப்
போராட்டத் தலைவி. இவரே இந்தியாவின்
முதல் பெண் விடுதலைப் போராட்ட
வீராங்கனை ஆவார்.
இராணி வேலு நாச்சியார்
சிலையும் சிவகங்கை அரண்மனையும்
இளமை
1730ஆம் ஆண்டு, இராமநாதபுரம்
மன்னர் செல்ல முத்து சேதுபதி - சக்கந்தி
முத்தாத்தாளுக்கு ஒரே பெண்
மகளாக பிறந்தார் வேலுநாச்சியார்.
எனினும் ஆண் வாரிசு போலவே
வளர்க்கப்பட்டார். ஆயுதப் பயிற்சி
பெற்றார்; பல மொழிகள்
கற்றார். 1746இல் சிவகங்கைச் சீமை மன்னர்
முத்துவடுகநாதத்தேவருக்கு
மனைவியானார்.
ஆங்கிலேயர்
படையெடுப்பு
1772இல் ஐரோப்பியரின் படையெடுப்பால்
ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க
இடம் மாறி மாறிச் சென்றார்
வேலுநாச்சியார். இந்தப் படையெடுப்பை
எதிர்க்க நினைத்த வேலுநாச்சியார்
அவர்கள் விருப்பாட்சியில் தங்கி ஹைதர்
அலியைச் சந்தித்து உருது மொழியில்
ஆங்கிலேயர் எதிர்ப்பு பற்றி பேசி
விளக்கினார். வேலு நாச்சியாரின் உருது
மொழித் திறமையைக் கண்டு
ஆச்சர்யப்பட்ட ஹைதர் அலி உதவிகள் பல
செய்வதாக உறுதியளித்தார்.
ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை,
விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை
என இடம் மாறி மாறி முகாமிட்டு
வாழ்ந்து வந்தார். இதற்கிடையில் தமது
எட்டு வயது மகளையும் பாதுகாக்க
வேண்டிய நிலை அவருக்கு இருந்தது. அமைச்சர்
தாண்டவராயன் பிள்ளையின்
முயற்சியினால் சிவகங்கை மக்கள்
பிரதிநிதிகள் வேலுநாச்சியாரோடு கலந்து
பேசியதின் படி கம்பனி எதிர்ப்புப்படை ஒன்று
உருவாக்கப்பட்டது. மருது சகோதரர்கள்
இப்போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்.
ஆங்கிலேயர்களின்
சட்டதிருத்தம்
ஆண் வாரிசு இல்லாமல் உள்ள நாட்டை
(அரசாங்கத்தை) தாமே எடுத்து
நடத்தலாம் என்று ஆங்கிலேயர்களின்
கிழக்கிந்திய கம்பெனியின்
அவகாசியிலிக் கொள்கை
(ஆங்கிலம்: Doctrine of Lapse )
தோற்றுவிக்கப்பட்டது. அதன் பின்பு,
சிவகங்கையின் ஆட்சி அதிகாரத்தை காக்கும்
பொறுப்பில் இருந்த மருது சகோதர்களே
ஆட்சியை கைப்பற்றி இருபது வருடங்கள்
சிறப்பாக ஆட்சி நடத்தினர். மேலும்,
தங்களது இறப்பு வரையிலும் சிவகங்கையை
சிறப்பான கட்டமைப்போடு ஆண்டு வந்தனர்.
படை திரட்டல்
1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள்
வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை
திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப்
புறப்பட்டது. ஹைதர் அலி 5000 குதிரை
வீரர்களையும் 5000 போர்வீரர்களையும்,
பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார்.
படை காளையார் கோயிலை கைப்பற்றியது.
சிவகங்கையில் வேலுநாச்சியார், தம்மைக்
காட்டிக் கொடுக்காது
வெள்ளையரால் வெட்டுண்ட
உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு, தமது
திருமாங்கல்யத்தை முதல்
காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி
செலுத்தினார். இந்தக் கோயில்
கொல்லங்குடி
வெட்டுடையகாளியம்மன் கோயில் என்று
அழைக்கப்படுகிறது. இறுதியாக சிவகங்கை
நகரைக் கைப்பற்ற சின்னமருது , பெரிய
மருது , தலைமையில் படை திரட்டப்பட்டது. சிவகங்கை
அரண்மைனயில் விஜயதசமி, நவராத்திரி
விழாவிற்காக கூடிய மக்கள் கூட்டத்தில்
பெண்கள் படை மாறுவேடத்தில் புகுந்து
அதில் குயிலி , என்ற பெண் தன்
உடம்பில் தீ வைத்து வெள்ளையரின்
ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை
அழித்தாள். வேலுநாச்சியார், தனது
ஐம்பதாவது வயதில், தனது கணவரைக்
கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி
பான் ஜோரையும் தோற்கடித்தார்.
இறுதி நாட்கள்
1793இல் வேலு நாச்சியாரின் பேத்தியின்
மரணத்தால் நாச்சியாருக்கு துயரம்
அதிகமானது. அதனால் விருப்பாட்சி
அரண்மனையில் தங்கினார். பெரும்
போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட
வேலுநாச்சியார் டிசம்பர் 25, 1796 அன்று
இறந்தார். இதன்
தொடர்ச்சியாக சிவகங்கைச் சீமையை
ஆட்சி புரிந்த மன்னர்களின் பட்டியல் கீழே
உள்ளது.
அருங்காட்சியகம்
வேலு நாச்சியார் பயன்படுத்திய ஈட்டி,
வாள் முதலான பல பொருட்கள்
சிவகங்கையில் அருங்காட்சியகத்தில் வைத்துப்
பாதுகாக்கப்படுகின்றன.
நினைவு தபால்தலை
ராணி வேலு நாச்சியார் நினைவு தபால்
தலை இந்திய அரசால் 31 டிசம்பர் 2008
அன்று வெளியிடப்பட்டது.
சிவகங்கைச் சீமை பதவி
வகித்த மன்னர்கள்
1. 1728–1749 - முத்து வீஜயரகுநாத உ.
சசிவர்ணத்தேவர்
2. 1749–1772 - சசிவர்ண விஜயரகுநாத
முத்துவடுகநாதப்பெரிய உடையத்தேவர்
3. 1780–1790 - வீரமங்கை ராணி வேலு
நாச்சியார் முத்துவடுகநாத பெரிய
உடையாத்தேவர்
4. 1790–1793 - வெள்ளச்சி
நாச்சியார் வேலு நாச்சியார் மகள்
5. 1793–1801 - வேங்கை பெரிய உடையனத்
தேவர் வேங்கை பெரிய உடையனத் தேவர்
வெள்ளச்சி நாச்சியார் கனவர்
5. 1801–1829 - கெளரிவல்லப
உடையணத்தேவர் மன்னர் முத்துவடுகநாத
பெரிய உடையணத்தேவரின் உடன்
பங்காளி ராணி வேலு நாச்சியாரின்
தத்து மைந்தன்
6. 1829–1831 - உ.முத்துவடுகநாதத்வேர்
7. 1831–1841 - மு. போதகுருசாமித்தேவர்
8. 1841–1848 - போ. உடையணத்தேவர்
9. 1848–1863 - மு.போதகுருசாமித்தேவர்
10. 1863–1877 - ராணி
காதமநாச்சியார் போதகுருசாமி
11. 1877 - முத்துவடுகநாதத்தேவர்
12. 1878–1883 - துரைசிங்கராஜா
13. 1883–1898 - து. உடையணராஜா
1892ஆம் ஆண்டு ஜமின்தார் முறை
ஒழிக்கப்பட்டு பிரிட்டிஷ் கலெக்டர்
நியமிக்கப்பட்டார். ஜே. எப். பிரையன்ட் முதல்
கலெக்டர் ஆவார்.
1910ஆம் ஆண்டில் ராமநாதபுரம்
மதுரை, திருநெல்வேலியின் சில பகுதிகளைக்
கொண்டு உருவாக்கப்பட்டது.
ஆங்கிலேயர்கள் காலத்தில்
ராமநாதபுரம் ராமநாடு என
அழைக்கப்பட்டது.
சுதந்திரத்திற்கு பின் 1985ம் ஆண்டு
மார்ச் 15ம் தேதி ராமநாதபுரம் 3
பகுதிகளாக பிரிக்கப்பட்டது. 
சிவகங்கைச் சீமை
வாரிசுகள்
1. 1898–1941 - தி. துரைசிங்கராஜா
2. 1941–1963 - து. சண்முகராஜா
3. 1963–1985 -
து.ச.கார்த்தகேயவெங்கடாஜலபதி
ராஜா
4. 1986 - முதல் ராணி
டி.எஸ்.கே.மதுராந்தகி நாச்சியார்.

சனி, 24 டிசம்பர், 2016

கீழ்வெண்மணிப் படுகொலைகள் நினைவு தினம் டிசம்பர் 25. 1968

கீழ்வெண்மணிப் படுகொலைகள் நினைவு தினம் டிசம்பர் 25. 1968.

கீழ்வெண்மணிப் படுகொலைகள் என்பது 25 திசம்பர் 1968இல் இந்தியாவின், தமிழ்நாட்டில், ஒன்றினைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில், நாகப்பட்டினத்திலிருந்து 25 கி. மீ., தொலைவில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்தில், நிலக்கிழார்களால் நடத்தப்பட்ட 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 பள்ளர் வேளாண் தொழிலாளர்கள் படுகொலை நிகழ்வாகும்.

வரலாறு
தஞ்சை மாவட்டம் மிகுந்த செழுமையான மாவட்டமாக இருந்தது அங்கு பாசன வசதி மிகுந்து. விளைநிலங்கள் செழுமையாகவும் அதிக விளைச்சலை தருபவை ஆக இருந்தது. தமிழ்நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில் முப்பது சதவிகித விளைநிலங்கள் தஞ்சை மாவட்டத்தின் கீழ் இருந்தது. தஞ்சையில் பல நிலங்களில் வேலை செய்யும் வேளாண் தொழிலாளர்கள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் பள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே இருந்தனர். அங்கு இருந்த நிலக்கிழார்கள் அவர்களை அடிமையாக எண்ணி நடத்திவந்தனர். அங்கு இருந்த பண்ணை ஆட்கள் அராஜக போக்கால் அவர்கள் மிக குறைந்த ஊதியம் மிக குறைந்த வேளை உணவு வழங்க பட்டது. கூலி ஆட்களுக்கு கொடுக்கப்பட்ட குறைந்த சம்பளம் அவர்கள் வழக்கை முறை வெகுவாக மன உளைச்சலை ஏற்படுத்தியது. அவர்கள் நல்ல வழக்கை முறை அடைய பல முறை முயற்சி செய்தும் அவர்கள் அடிமை நிலையும் குறைந்த ஊதியமும் அவர்களை முன்னேற விடவில்லை. அவர்கள் நியாமான கோரிக்கை எதுவும் அவர்களை பணி அமர்தியவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
1960 ஆம் ஆண்டு இந்திய சீனா போரால் எங்கும் ஏற்பட்ட பஞ்சம் இவர்களை பெரிதும் வாட்டியது.

தஞ்சை மண்ணில் "பண்ணையாள் முறை" ஆழமாக வேரூன்றியிருந்த காலம். சாணிப்பால், சாட்டையடி என்பதெல்லாம் சர்வ சாதாரணமான தண்டனைகளாக இருந்தன . கம்யூனிஸ்ட் தலைவர்களான மணியம்மையும் பி. சீனிவாசராவ்வும். சங்க உணர்வை உருவாக்கினார்கள். விவசாயிகள் பலரும் ஒன்று சேர்ந்து விவசாயிகள் சங்கத்தை உருவாக்கினார்கள். நிலச்சுவான்தார்களும் ஒன்றுகூடி நெல் உற்பத்தியாளர் சங்கத்தை உருவாக்கினார்கள். உழைப்புக்கு‍ ஏற்ற கூலியைக் கேட்டார்கள் விவசாயிகள். ஒப்புக் கொள்ளாமல் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதற்குள் கீழ்வெண்மணியை சேர்ந்த இருவரை நிலச்சுவான்தார்கள் கட்டி வைத்து அடித்ததும் கலவரம் மூண்டது. கோபாலகிருஷ்ண நாயுடு மற்றும் நில உடமையாளர்கள் அவர்களின் அடியாட்கள், விவசாயத் தொழிலாளர்களை ஒடுக்குவதற்காகவே அமைக்கப்பட்ட கிஷான் போலீஸ் துணையுடன் படுகொலையை அரங்கேற்றினார்கள்.

1968 டிசம்பர் 25. கிறித்துமசு நாள். நாட்டுத் துப்பாக்கிகளுடன் சிலர் கீழ்வெண்மணிக்குள் புகுந்தார்கள். விவசாயிகளைத் தாக்கினார்கள், விவசாயிகள் திருப்பித் தாக்கினார்கள். நில உடமையாளர்களின் அடியாட்கள் துப்பாக்கியால் சுட்டதில் பலர் ஓடினார்கள். ஓடியவர்கள் தெருவொன்றின் மூலையில் "ராமையன்" என்பவரின் குடிசைக்குள் ஓடி ஒளிந்தார்கள். எட்டடி நீளம், ஐந்தடி அகலமுள்ள அந்தக் குடிசையில் 48 பேர் அடைந்திருந்தனர். கதவு அடைக்கப்பட்டுத் தீ வைக்கப்பட்டதில் அக்குடிசை எரிந்து சாம்பலானது. பெண்கள், குழந்தைகள் உட்பட 44 பேர் உடல் கருகி மாண்டனர்.

பெயர் வயது
பாப்பா (ராமய்யன் மனைவி) 25
ஆசைத்தம்பி 10
சந்திரா 12
வாசுகி 23
சுந்தரம் (பெண்) 45
சரோஜா 12
மருதம்பாள் 25
தங்கையன் 5
சின்னபிள்ளை (பெண்) 25
கருணாநிதி 12
வாசுகி 5
குருவம்மாள் 30
பூமயில் 16
கருப்பாயி 35
நாச்சியம்மாள் 16
தாமோதரன் 12
ஜெயம் 10
கனகம்பாள் 25
ராமச்சந்திரன் 7
சுப்பன் 70
குப்பம்மாள் 60
பாக்கியம் (பெண்) 35
ஜோதி 10
காளிமுத்து (பெண்) 35
குருசாமி 15
நடராஜன் 5
வீரம்மாள் 22
பட்டு 46
சண்முகம் 13
வேதவல்லி 13
முருகன் 40
ஆச்சியம்மாள் 30
நாகராஜன் 10
ஜெயம் 6
செல்வி 3
கருப்பாயி 50
சோலை 26
நடராஜன் 6
அஞ்சலை 45
ஆண்டாள் 12
சீனிவாசன் 40
காவேரி 50
சீனிவாசன் 38
முருகன் 45

106 பேர் கைதானார்கள். "இது சாதிய மோதல்" என்று காவல்துறை முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டது. "அதிக நிலங்களைச் சொத்துக்களாக வைத்திருப்பவர்கள் இப்படியொரு செயலைச் செய்திருக்கமாட்டார்கள். அவர்கள் குற்றவாளிகள் அல்ல…" என்று 1973 ஏப்ரல் 6 ஆம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையானார்கள்.

வெள்ளி, 23 டிசம்பர், 2016

கிறிஸ்துமஸ்



கிறிஸ்துமஸ்

கிறித்துமசு (Christmas) அல்லது கிறித்து பிறப்புப் பெருவிழா (நத்தார்  ) ஆண்டு தோறும் இயேசு கிறித்துவின் பிறப்பைக் குறிக்க கொண்டாடப்படும் விழாவாகும். இவ்விழாவானது கிறித்தவத் திருவழிபாட்டு ஆண்டில் திருவருகைக் காலத்தினை முடிவு பெறச்செய்து, பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்படும் கிறித்து பிறப்புக் காலத்தின் தொடக்க நாளாகும்.

இவ்விழாவின் கொண்டாட்டங்களில் திருப்பலி, குடில்கள், கிறித்துமசு தாத்தா, வாழ்த்து அட்டைகளையும் பரிசுகளையும் பரிமாறல், கிறித்துமசு மரத்தை அழகூட்டல், கிறித்துமசு மகிழ்ச்சிப் பாடல், சிறப்பு விருந்து என்பன பொதுவாக அடங்கும். கிறித்தவக் கருத்துகளோடு, கிறித்தவத்துக்கு முந்திய காலப்பகுதியின் குளிர்காலக் கொண்டாட்டங்களின் சில பகுதிகளையும் கிறித்துமசு தன்னகத்தே கொண்டுள்ளது. இக்கொண்டாட்டத்தின் மதம் சாராப் பகுதிகளாக குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடல், நல்லெண்ணங்களை வளர்த்தல் என்பன பின்பற்றப்படுகின்றன.

கிறித்து பிறப்புவிழா கிறித்தவர்களின் ஒரு முக்கியமான திருநாளாகும். இது பெரும்பாலான கிறித்தவர்களால் டிசம்பர் 25ஆம் நாள் கொண்டாடப்படுகிறது எனினும் கிழக்கு மரபுவழி திருச்சபைகள் இதனை யூலியின் நாட்காட்டியில் டிசம்பர் 25ஐக் குறிக்கும் நாளான சனவரி 7ஆம் நாள் கொண்டாடுகின்றன. கிறித்துமசு கொண்டாடப்படும் நாளானது மரபு வழி வருவதேயன்றி இது இயேசு பிறந்த நாளன்று.

கிறித்துமசு இன்று உலகின் பெரும்பாலான நாடுகளில் கிறித்தவத்தினது பரவல் காரணமாகவும் அக்கொண்டாட்டங்களில் காணப்படும் மேற்குலக நாகரிகங்களின் கவர்ச்சி காரணமாகவும் கொண்டாடப்படுகிறது. அமெரிக்க, பிரித்தானிய வழமைகளுக்கு மேலதிகமாக அவ்வப்பகுதிகளில் கிறித்துமசுக் கொண்டாட்டங்கள் வேறுபடுகின்றன.

கிறிஸ்து பிறப்பு
வரலாறு
கிறிஸ்தவத்துக்கு முந்திய கொண்டாட்டங்கள்

குளிர்கால கொண்டாட்டங்கள் ஒவ்வொரு நாகரிகத்திலும் மிக முக்கியமான கொண்டாட்டங்களாக இருந்து வந்துள்ளன. கிறிஸ்தவ கருத்துக்களின் படி இயேசு கிறிஸ்து தம் சாவிற்குப் பிறகு மீண்டும் உயிர்பெற்றெழுந்த நாளாகிய உயிர்த்த ஞாயிறு மிக முக்கியமான கொண்டாட்டமாக கருதப்படுகிறது.தொடக்கத்தில் கிறிஸ்துமஸ் முன்னுரிமை குறைந்த கொண்டாட்டமாக கருதப்பட்டது; மேலும் ஆரம்பகால கிறிஸ்துவ சமூகத்தில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் விரும்பப்படவில்லை.இன்றைய சமூகத்தில் கிறிஸ்துமஸ் முக்கிய கொண்டாட்டமாக வளர்ந்திருப்பதற்கு கிறிஸ்தவதுக்கு முன்னதான குளிர்கால கொண்டாட்டங்களின் பாதிப்பும் காரணம் எனக்கருதப்படுகிறது. அவற்றில் முதன்மையானவை சில பின்வருமாறு:

சடுர்நலியா பண்டிகை

இயேசுவை ஒளிவீசும் சூரியனாக சித்தரித்து வரையப்பட்டுள்ள படம்
உரோமப் பேரரசின் நாட்களில், சடுர்நலியா, இத்தாலி முழுவதும் நன்கறியப்பட்ட குளிர்கால கொண்டாட்டமாகும். சடுர்நலியாவின் போது களியாட்டங்களும், கேளிக்கை நிகழ்வுகளும் காணப்பட்டது. இதன் போது பரிசு பரிமாற்றங்களும் முக்கிய இடம் வகித்தது. பெரியவர்களுக்கு மெழுகுவர்த்திகளும் சிறுவருக்கு பொம்மைகள் வழங்குவதும் வழக்கமாக காணப்பட்டது.சடுர்நலியாவிம் போது வர்த்தக நடவடிக்கைகள் பிற்போடப்பட்டதோடு அடிமைகளுக்கும் கொண்டாட்டங்களில் ஈடுபட அனுமதியளிக்கப்பட்டிருந்தது. மது அருந்துதல், பொது இடங்களில் உடையின்றி இருத்தல் போன்றவையும் காணப்பட்டது.சடுர்நலியா சனிக் கடவுளை மதிப்பதற்காக நடைபெற்றது. இது ஆண்டுதோறும் டிசம்பர் 17-டிசம்பர் 24 வரை நடைபெற்றது. பின்னர் இது ஐந்து நாட்களாகக் குறைக்கப்பட்டது.

நட்டாலிஸ் சோலிஸ் இன்விக்ட்டி (natalis solis invicti) பண்டிகை[தொகு]
உரோமர்கள் டிசம்பர் 25 ஆம் நாள் வெற்றிவீரன் சூரியன் (sol invictus) என்றைழைக்கப்பட்ட சூரியக்கடவுளின் பிறந்த நாளை கொண்டாடு முகமாக நட்டாலிஸ் சோலிஸ் இன்விக்ட்டி என்ற பண்டிகையை கொண்டாடினார்.இது கி.மு. 218-222 இல் உரோமை அரசனான எலகாபலுஸ் காலத்தில் உரோமைக்கு அறிமுகப்படுத்தப்பட்டு கி.மு. 270-275 இல் அவுரேலியன் காலத்தில் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது.சோல் இன்விக்டுஸ் ("வெற்றிவீரன் சூரியன்", "தோல்வியடையாத சூரியன்") சிரியாவில் தொடக்கத்தைக் கொண்ட சூரியக் கடவுளாவார். டிசம்பர் 25 குளிர்கால சம இராப்பகல் நாளாக கருதப்பட்டது, இதனை உரோமர்கள் புருமா என அழைத்தனர். ஜூலியஸ் சீசர் கி.மு. 45 இல் ஜுலியின் நாட்காட்டியை அறிமுகப்படுத்திய போது குளிர்கால சம இராப்பகல் நாள் டிசம்பர் 25 நாளில் வந்தது எனினும் தற்காலத்தில் அது டிசம்பர் 21 அல்லது 22 இல் வருகின்றது. சோல் இன்விக்டுஸ் கிறிஸ்துமசின் தொடக்கத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பை செய்துள்ளதாக கத்தோலிக்க கலைக்களஞ்சியம் குறிப்பிடுகிறது. சில ஆரம்ப கிறிஸ்தவ எழுத்தாளர்களும் இயேசுவின் பிறப்பை சூரியனின் மீள் உதயத்தோடு ஒப்பிட்டுள்ளதைக் காணலாம்,எடுத்துக்காட்டாக, சிப்ரியன் என்ற கிறிஸ்தவ ஆயர் (கிமு 300கள் - கிபி258) பின்வருமாறு எழுதியுள்ளார்:

O, how wonderfully acted Providence that on that day on which that Sun was born . . . Christ should be born
ஓ, எவ்வளவு அதிசயமானது இறை பராமரிப்பின் செயல், சூரியன் பிறந்த நாளில்...கிறிஸ்துவும் பிறந்தது
—சிப்ரியன்,
மார்ச்சு மாதம் 25ஆம் நாள் மரியா இயேசுவைக் கருத்தரித்தார் என்னும் நம்பிக்கை தொடக்க காலக் கிறித்தவரிடையே நிலவியது. அதிலிருந்து ஒன்பது மாதங்கள் கணக்கிட்டு, டிசம்பர் 25இல் இயேசு பிறந்தார் என்று கிறித்தவர்கள் ஆண்டுதோறும் கிறிஸ்து பிறப்புவிழாக் கொண்டாடலாயினர்.

எனவே, இன்றைய ஆய்வு முடிவுகளின்படி, இயேசு கிறித்து இவ்வுலகிற்கு ஒளியாக வந்தார் என்னும் கருத்தை வலியுறுத்தும் வகையில் பண்டைக் காலக் கிறித்தவர்கள் அக்காலத்தில் வழக்கிலிருந்த சோல் இன்விக்டி விழாவைத் தழுவி இயேசுவின் பிறப்புவிழாவை அமைத்தனர்.

யூல் பண்டிகை

யூல் பண்டிகையில் "சூரிய சக்கரத்தை எரியூட்டுதல்
ஸ்கென்டினேவியாவைச் சேர்ந்த நாடுகளில் ஆவி வழிபாட்டாளர்கள் யூல் பண்டிகையை டிசம்பர் கடைசி தொடக்கம் சனவரி ஆரம்பம் வரையான பகுதியில் கொண்டாடினார்கள். இப்பண்டிகையின் போது தோர், இடியின் கடவுளை மகிமைப் படுத்தும் வகையில் பெரிய மரம் ஒன்றை எரிப்பது வழக்கமாகும். இதன் போது அந்நெருப்பில் இருந்து வரும் ஒவ்வொரு எரிதங்களும் புதுவருடத்தில் பிறக்கப் போகும் கால்நடைகளை குறிப்பதாக நம்பப்பட்டது. மரம் எரிந்து முடியுமளவும் பண்டிகை தொடரும் இது சுமார் 12 நாட்கள் வரை எடுக்கலாம்.யேர்மனியில் இதையொத்த பண்டிகை மிட்விண்டனெச் (மத்திய குளிர்கால இரவு) என அழைக்கப்பட்டது. வடக்கு ஐரோப்பாவே கடைசியாக கிறிஸ்தவத்துக்கு மாற்றப்பட்டமையால் அதன் ஆதி வழிபாட்டு முறைகள் கிறிஸ்துமசில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஸ்கென்டினேவியர் கிறிஸ்துமஸ் பண்டிகையை இன்றும் யூல் என்றே அழைக்கின்றனர். யூல் என்ற பதம், 900 ஆண்டு முதல் ஆங்கிலத்தில் கிறிஸ்துமஸ் என்பதற்கு ஒத்த கருத்துள்ள சொல்லாக பயன்படுகிறது.

கிறிஸ்தவ பண்டிகையின் தோற்றம்

ஒரிஜென், ஆரம்ப கால கிறிஸ்தவ குரு, இயேசு உட்பட அனைவரது பிறந்த நாள் கொண்டாட்டங்களையும் எதிர்த்தார்.
இயேசு டிசம்பர் 25இல் பிறந்ததாக கி.பி. மூன்றாவது நூற்றாண்டைச் சேர்ந்த கிறிஸ்தவ எழுத்தாளரும் தேச சஞ்சாரியுமான செக்டுஸ் ஜூலியஸ் அப்ரிகானுஸ் என்பவரால் கி.பி. 221 இல் கிறிஸ்தவருக்காக எழுதப்பட்ட நூல் ஒன்றின் மூலம் அறிவிக்கப்பட்டது. இந்நாள் இயேசு கருவில் உருவாகியதாக கருதப்படும் மார்ச் 25இலிருந்து ஒன்பது மாதங்கள் கடந்த நாளாகும். மார்ச் 25 தற்பொழுது மங்கள வார்த்தை அறிவிப்பின் திருநாளாக கொண்டாடப்படுகிறது. மார்ச் 25 வசந்த கால சம இராப்பகல் நாளாகவும் கருதப்படுவதால் ஆதாம் படைக்கப்பட்ட நாளாகவும் இந்நாள் விளங்குகிறது.ஆரம்ப கிறிஸ்தவர்கள் மார்ச் 25ஆம் நாளே இயேசு சிலுவையில் அறையப்பட்டதாக கருதினார்கள். இதன் உள்கருத்து இயேசு கருவில் உருவாகிய அதே நாளில் இறத்தல் என்பதாகும்; இது, தீர்க்கதரிசி (இறைவாக்கினர்) ஒருவர் முழு எண்ணளவான நாட்களே உயிர் வாழ்வாரென்ற யூதர்களது நம்பிக்கையின் காரணமாக எழுந்ததாகும். தொடக்க கால கிறிஸ்தவ அவையில் இயேசுவின் பிறந்த நாள் திருநாளாகக் கொண்டாடப்படவில்லை. கி.பி. 245ஆம் ஆண்டு ஒரிஜென் என்ற கிறிஸ்தவ இறையியல் அறிஞர் இயேசுவின் பிறப்பை கொண்டாடுவதை பலமாக எதிர்த்தார். அவர் பார்வோனனரசரைப் போல இயேசுவின் பிறப்பை கொண்டாடக்கூடாது எனவும் பாவிகளே அவ்வாறு செய்வதாகவும் புனிதர்கள் அல்ல எனவும் குறிப்பிட்டார்.ஒரிஜெனின் கருத்து கிறித்தவ திருச்சபையால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

கிறிஸ்துமஸ் விழா டிசம்பர் 25ஆம் நாள் கொண்டாடப்பட்டது என்னும் மிகப்பழைமையான குறிப்பு கி.பி. 354ஆம் ஆண்டளவில் உரோமில் தொகுக்கப்பட்ட பிலோகலசின் நாட்குறிப்பில் காணப்படுகிறது. கி.பி. 360களின் ஆதாரமொன்று அக்காலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உரோமில் நிலைபெற்றிருந்ததைக் காட்டுகின்றன. ஆனால் கிழக்குத் திருச்சபை கிறிஸ்தவர்கள் குழந்தை இயேசுவைக் காண கிழக்கில் இருந்து ஞானிகள் வந்ததை கொண்டாடும் திருநாளின் (சனவரி 6) ஒரு அங்கமாக பிறப்பையும் கொண்டாடினராயினும் இயேசுவின் திருமுழுக்குக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.[20] இயேசுவின் பிறப்பு யூதர்களுக்கு மட்டுமன்றி உலக மக்கள் அனைவருக்குமே மகிழ்ச்சியும் ஒளியும் கொணர்ந்தது என்பதை வலியுறுத்தும் வகையில் சனவரி 6 கிறிஸ்து பிறப்புவிழாவாகக் கீழைத் திருச்சபையின் பல பிரிவினரால் கொண்டாடப்பட்டது; இன்றும் அப்பழக்கம் நிலவுகிறது. கத்தோலிக்க திருச்சபை இவ்விழாவை இறைக்காட்சி விழா (Epiphany) என்று அழைக்கிறது.

கிழக்கில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஆரிய சார்பான பேரரசன் வலென்ஸ் கி.பி. 378இல் அட்ரினாபோல் சமரின் போது இறந்ததை அடுத்து அங்கு தந்தை, மகன், தூய ஆவி என்று ஒரே கடவுள் மூன்று ஆள்களாக உள்ளார் என்னும் கொள்கையை ஏற்கும் கிறித்தவ சபை பரவியதன் மூலம் புதுப்பிக்கப்பட்டது. கொன்சாந்தினோபிலுக்கு கி.பி 379இலும் அந்தியோக்கியாவுக்கு 380இலும் அலெக்சாந்தரியாவுக்கு சுமார் 430இலும் அறிமுகப்படுத்தப்பட்டது. எட்வட் கிப்பன் என்ற ஆய்வாளரின் கருத்துப்படி ஆரியவாதம் (Arianism) மிகுந்து காணப்பட்ட கொன்சாந்தினொபிலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஆரம்பத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கி.பி 381 இல் அப்போதைய ஆயரான கிரெகொரி நசியன்சுஸ் பதவி விலகியதைத் தொடர்ந்து வழக்கொழிந்து போய் மீண்டும் யோன் கிறிசொஸ்டொம் கி.பி. 400இல் ஆயராக பதவியேற்றப்பின்பு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.

மத்திய காலம்

கிழக்கிலிருந்து வந்த ஞானிகள் இயேசுவை வணங்குதல் டொன் லொரென்சோ மொனாகோவின் 1422 ஓவியம்
ஐரோப்பாவின் ஆரம்ப மத்திய காலத்தில்,கிறிஸ்துமசின் முக்கியத்துவம் திருக்காட்சி விழா (மூன்று அரசர் திருவிழா) திருநாளினால் குறைக்கப்படிருந்தது. ஆனால் மத்தியக்காலத்தில் கிறிஸ்துமஸ் தொடர்பான திருநாட்கள் முக்கியத்துவமைடைந்து காணப்பட்டன. கிறிஸ்துமசுக்கு முன் 40 நாட்கள் "புனித மார்டினின் நாற்பது நாட்கள்" (இது நவம்பர் 11 இல் ஆரம்பித்தது) என அழைக்கப்பட்டது, தற்காலத்தில் திருவருகைக்காலம்(Advent) என இது அழைக்கப்படுகிறது.இத்தாலியில் சடுர்நெலிய அம்சங்கள் வருகைக்கால முறைமைகளுக்குள் உள்வாங்கப்பட்டது.12வது நுற்றாண்டளவில் இவ்வம்சங்கள் கிறிஸ்துமசின் 12 நாட்களுக்குள் (டிசம்பர் 26-சனவரி 6) ஊடுகடத்தப்பட்டன.

கிறிஸ்துமசின் முக்கியத்துவம் பேரரசர் சார்லிமேன் (Charlemagne) கி.பி. 800ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் நாளில் முடிசூட்டப் பட்டதனாலும் இங்கிலாந்தின் முதலாவது வில்லியம் மன்னர் 1066 கிறிஸ்மஸ் நாளன்று முடிசூட்டப்பட்டதனாலும் அதிகரித்தது. உயர் மத்திய காலத்தில் வரலாற்று நூல்கள் பல முக்கிய நபர்கள் கிறிஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடியதை குறித்துள்ளன. இங்கிலாந்தின் இரண்டாம் ரிச்சர்ட் மன்னன் 1377ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் விருந்தொன்றை கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது.யூல் பன்றி மத்திய கால கிறிஸ்துமஸ் விருந்துகளில் கட்டாய அங்கமாக காணப்பட்டது. கெரொல் பாடல் இசைப்பதுவும் இக்காலத்தில் பிரபலமடைந்து வந்தது. ஆரம்பத்தில் கெரொல் குழு நடனமாடுபவர்களால் ஆனதாக காணப்பட்டது. குழுவில் ஒரு தலைமை பாடகரும் அவரைச் சுற்றி நடனமாடும் குழுப்பாடகர்களையும் கொண்டிருந்தது. அக்காலத்தின் பல எழுத்தாளர்கள் கெரோல் இசையை சடுர்நலிய, யூல் அம்சங்களின் தொடர்ச்சி என சாடினார்கள்.விதிமுறைகளை மீறுதலும்,குடிபோதை,சூதாட்டம் போன்றவையும் கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக காணப்பட்டது. இங்கிலாந்தில் புத்தாண்டு நாளில் பரிசுகள் பரிமாறப்பட்டது.

சமய மறுசீரமைப்பும் 1800களும்

கிறிஸ்துமஸ் தந்தை
கிறிஸ்தவ சமய மறுசீரமைப்பின்போது சீர்திருத்தத் திருச்சபைகள் கிறிஸ்துமஸ் கொண்டாங்களை "பாப்பரசரின் ஆடம்பரம்" எனவும், தூய்மை வாதிகள் என்னும் பிரிவினர் (Puritans) கிறிஸ்து பிறப்புவிழாக் கொண்டாட்டத்தை "விலங்கின் (சாத்தானின்) கந்தல் துணி" எனவும் கண்டித்தனர். இதற்குப் பதில்மொழி தரும் விதத்தில் கத்தோலிக்க திருச்சபை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் வெளி ஆடம்பரங்களைக் குறைத்து, அதன் உள்ளார்ந்த சமய தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டியது.

இங்கிலாந்து உள்நாட்டு போரின் போது முதலாம் சார்ல்ஸ் மன்னனை பாராளுமன்றம் வென்றதன் காரணமாகா இங்கிலாந்தின் தூய்மைவாத கிறிஸ்தவ மறுசீரமைப்பு ஆட்சியாளர்கள் 1647 இல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை இங்கிலாந்தில் தடை செய்தனர். இதனைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் ஆதரவு கலவரங்கள் பல நகரங்களில் வெடித்தது. கண்டர்பெரி பல கிழமைகளுக்கு கலகக்காரர்களின் வசமிருந்தது. அவர்கள் ஒஃலி கிளைகளால் பாதைகளை அலங்கரித்தோடு அரசனுக்கு ஆதரவளிக்கும் வாசகங்களையும் காட்சிப்படுத்தினார்கள். 1660 இல் இங்கிலாந்தின் ஆட்சியாளர்கள் கிறிஸ்துமஸ் மீதான தடையை நீக்கினார்கள். இன்னமும் சில அங்கிலிக்கன் திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை ஏற்க முன்வருவதில்லை.

அமெரிக்காவின் புதிய இங்கிலாந்தில் தூய்மைவாத கிறிஸ்தவ மறுசீரமைப்பினர் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை எதிர்த்தார்கள்; பொஸ்டன் நகரில் 1659 தொடக்கம் 1681 வரையான காலப்பகுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தடை செய்யப்பட்டிருத்தது. அதே காலப்பகுதியில் நியூயார்க் வர்ஜீனியா நகர மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை கொண்டாடி வந்தனர். அமெரிக்க புரட்சிக்குப் பிறகு இங்கிலாந்தின் கலாச்சரம் எனக் கருதப்பட்டதால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் பாலான ஈர்ப்பு அமெரிக்காவில் குன்றியது.

1820களில் இங்கிலாந்தின் பிரிவினைவாதம் தலைதூக்கியிருந்த காலத்தில் பலஎழுத்தாளர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை அருகிக்கொண்டு போவதாக கருதினார்கள். அவர்கள் கிறிஸ்துமஸ் மனமார்ந்த ஒரு கொண்டாட்டத்துக்கான காலமாக கருதியால் அதனை மீட்பிக்க பல முயற்சிகளை செய்தனர்.1843 இல் சார்ல்ஸ் டிக்கின்ஸ் வெளியிட்ட "கிறிஸ்மஸ் கெரொல்ஸ்" என்ற நூல் கிறிஸ்துமஸ் பண்டிகையை சமூக களியாட்டம் வீண்விரயம் செய்யும் காலமாக அல்லாமல் குடும்பம், நல்லெண்ணம், கருணை போன்றவற்றில் மையப்படுத்தி கொண்டாடும் பழக்கத்தை முன் கொணர்வதில் முக்கிய பங்காற்றியது.

19ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் வாசிண்டன் இர்விங் என்ற எழுத்தாளரின் "The Sketch Book of Geoffrey Crayon", "Old Christmas" சிறுகதைகள் காரணமாக அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மீள்ப்பிக்கப்பட்டன, இச்சிறுகதைகளில் இங்கிலாந்தில் கடைப்பிடிக்கப்பட்டதாக எழுத்தாளர் கூறிய விடுமுறைகளால் மக்கள் கவரப்பட்டனர். ஆனால் சிலர் இர்வினின் நூலில் வரும் விடுமுறை தொடர்பான கூற்றுகள் கற்பனையானவை என்றும் பின்னாளில் அமெரிக்கர்கள் அந்நூலில் உள்ளவற்றை பின்பற்றியதன் மூலமே நூலில் உள்ள விடுமுறைக் கலாச்சாரம் தோன்றியதாகவும் கருதுகின்றனர்.[24] மேலும் அமெரிக்க உள்நாட்டு போரைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு வந்த அதிகளவான யேர்மனிய குடிவரவாளர்கள் ஐரோப்பிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை அமெரிக்காவுக்கு கொணர்வதில் முக்கிய பங்காற்றினார்கள். 1870 கிறிஸ்துமஸ் அமெரிக்காவில் கூட்டரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.


20ஆம் நூற்றண்டும் அதன் பிற்பட்ட காலமும்

"மீண்டும் கிறிஸ்துமஸ்": (1907) கார்ல் லார்சன்
1914 இல் முதலாம் உலகப் போரின் போது, பிரித்தானிய, யேர்மனிய இராணுவ வீரர்களிடையே அதிகாரபட்சமற்ற போர்நிறுத்த உடன்பாடொன்று காணப்பட்டது. இராணுவத்தினர் தாமாகவே போர் செய்வதை நிறுத்திவிட்டு கெரோல் இசைக்க தொடங்கிவிட்டார்கள். இப்போர்நிறுத்தம் கிறிஸ்மஸ் அன்று தொடங்கி சில நாட்கள் நீடித்தது.

20 ஆம் நூற்றண்டில் அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் மத சார்பானதா சார்பற்றதா என்பதைப் பற்றிய சர்ச்சைக்கு முகம் கொடுத்தது. சிலர் கிறிஸ்துமஸ் கூட்டரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டமையானது மதத்தையும் நாட்டையும் பிரித்தல் என்பதற்கு முரணானது என வாதிட்டார்கள். "லின்ச் எதிர் டொனெலி (1984)"[26], "கனுலின் எதிர் ஐக்கிய அமெரிக்க (1999)"  வழக்குகள் உட்பட பல முறை நீதிமன்றத்தும் இப்பிரச்சினை எடுத்துச்செல்லப்பட்டது. "கனுலின் எதிர் ஐக்கிய அமெரிக்க (1999)" வழக்கில் நீதிமன்றமானது கிறிஸ்மஸ் கூட்டரசு விடுமுறையாக அறிவிக்கப் பட்டமையானது, அதில் காணப்படும் மதசார்பற்ற அம்சங்கள் காரணமாக சட்ட மீறல் அல்ல என தீர்ப்பளித்தது. இதனை டிசம்பர் 19, 2000 இல் அமெரிக்க உயர் நீதி மன்றமும் ஆதரித்து தீர்ப்பளித்தது.

21ஆம் நூற்றாண்டில் கிறிஸ்துமஸ் கிறிஸ்தவ மற்றும் மதசார்பற்ற அம்சங்களைக் ஒன்றுசேர கொண்டுள்ளது. டிசம்பர் 26,2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையின் காரணமாக இலங்கை, இந்தியாவின் கடற்கரை அண்டிய பகுதிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் குறைந்தாலும், தற்போது வழக்கம்போல ஒரு சமூக விழாவாக, குடும்ப விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

பிறப்பு

இயேசுவின் பிறப்பு
இயேசுவின் பிறப்பு பற்றி கிறித்தவ மறைநூலாகிய விவிலியத்தின் பகுதியாகிய புதிய ஏற்பாடு தகவல் தருகிறது. குறிப்பாக, மத்தேயு, லூக்கா என்னும் நற்செய்திகள் தருகின்ற தகவற்படி, கபிரியேல் என்ற இறைத்தூதர், கன்னி மரியாளிடம் பரிசுத்த ஆவிமூலமாக இயேசு பிறக்கப்போவதை முன்னறிவித்தார். அச்சமயம் மரியாள் யோசேப்பு என்பவருக்கு மணமுடிக்க நிச்சயிக்கப் பட்டிருந்தார். மரியாள் கற்பமாயிருப்பதை தெரிந்து கொண்ட யோசேப்பு மரியாளை இரகசியமாக விலக்கிவிட நினைத்தார். இறைத்தூதர் யோசேப்புக்கு தோன்றி மரியாள் கருத்தரித்திருப்பது பரிசுத்த ஆவியினால் என்பதை தெரிவிக்கவே யோசேப்பு மரியாளை மனைவியாக ஏற்றுக்கொண்டார்.

மரியாள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது பாலஸ்தீனத்தை ஆட்சி செய்த உரோமைப் பேரரசன் அகுஸ்துஸ் மக்கள் தொகை கணிப்பீடு ஒன்றை கட்டளையிட்டார். அவர் கட்டளைப்படி யோசேப்பும் மரியாளும் தங்களை பதிவு செய்ய யோசேப்பின் முன்னோரான தாவீதின் நகரமான பெத்லகேமுக்குச் சென்றனர். தங்குவதற்கு அறைகள் கிடைக்காத நிலையில் மாட்டுத் தொழுவமொன்றில் தங்கினார்கள். அம் மாட்டுத் தொழுவத்தில் மரியாள் இயேசுவை பெற்றார்.இயேசு பிறந்ததற்கு அடையாளமாக விண்மீன் ஒன்று வானில் தோன்றியது.

இயேசு பிறந்த நேரம், அருகிலுள்ள புல்வெளியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த இடையருக்கு இறைத்தூதர் தோன்றி பெத்லகேமில் மீட்பர் பிறந்திருக்கிறார் என்ற நற்செய்தியை அறிவிக்கிறார். மேலும் பரலோக இறைத்தூதரனைவரும் "உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக, இப் பூமியில் நன்மனதோருக்கு அமைதியுமாகுக" என பாடினர். இடையர் எழுந்து நகருகுள் சென்று குழந்தை இயேசுவை கண்டு வணங்கினார்கள்.


இலங்கையில் கிறிஸ்துமஸ்

ஆங்கிலேயர்கள் காணப்படும் 19 ஆம் நூற்றாண்டு ஓவியம். பின்னனியில் அலங்காரப் பொருட்கள்
கிபி 6வது நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் கொஸ்மாஸ் இண்டிகொப்லெய்ட்ஸ் எழுதிய "Topographia Christiana" என்ற நூலில் அக்காலப் பகுதியில் தப்ரபேனில் கிறிஸ்தவர்கள் வசித்ததாகவும் அவர்களுக்கு ஒரு தேவாலாயம் இருந்ததாகவும், ஒரு பாதிரியார் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.[28] மேலும் இலங்கையில் அனுராதபுர இராச்சியத்தில் கிறிஸ்தவர்கள் வாழ்ந்ததாக, 1913 ஆம் ஆண்டு அனுராதபுரத்தில் நடைப்பெற்ற அகழ்வாராய்சிகளில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு சிலுவைகளாலும் வவுனியாவுக்கு அண்மையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட திருமுழுக்குத் தொட்டியின் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பண்டுகாபய மன்னர் புதிய நகரைக் கட்டுவிக்கும் போது தேவாலயம் ஒன்றை கட்டி கொடுத்ததாக மகாவம்சம் கூறும் யோணா பிரிவினர் நெஸ்டோரியன் கிரேக்க மரபுவழி கிறிஸ்தவர்கள் எனக் கருத்தப்படுகிறார்கள். அக்காலத்தில் இங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார்களா என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் கிடையாது.

இலங்கையில் வரலாற்றில் எழுத்தப்பட்ட முதலாவது கிறிஸ்துமஸ் பண்டிகை 1505 இல் இலங்கைக்கு கத்தோலிக்கர்களான போர்த்துக்கேயர் வருகையை அடுத்தே நடைபெற்றது. 1505 நவம்பர் 15 இல் கொழும்புத் துறைமுகத்தை அடைந்த லோரோன்சோ டி அல்மேதா தலைமையிலான போர்த்துக்கேய மாலுமிக் குழுவினர் அங்கு தமது கப்பலை பழுதுபார்க்கும் பணிகளிலும் கோட்டே அரசனுடன் தொடர்புகளையும் மேற்கொண்ட அதே வேலை கொழும்புத் துறைமுகத்தில் சிறிய தேவாலயம் ஒன்றை கட்டினார்கள். இத்தேவாலயத்தில் 1505 முதலாவதாக கிறிஸ்துமஸ் திவ்விய பலியை ஒப்புக் கொடுத்தார்கள்.

இலங்கையில் கிறிஸ்தவர்கள் 7-8 விழுக்காடு மட்டுமே உள்ளனர் எனினும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இலங்கையில் முக்கிய இடம் பெறுகின்றது. கிறிஸ்தவர்கள் சமய நிகழ்வுகளில் பங்கு கொள்ளும் அதே வேலை ஏனைய சமயத்தவர்களும் சமய சார்பற்ற விடுமுறையாக கொண்டாடுகின்றனர். பல தொழில் நிறுவனங்களில் கிறிஸ்துமஸ் விடுமுறைகள் விடப்படுவதோடு பல விழாக்களும் எடுக்ப்படுவது வழக்கமாகும். கிறிஸ்துமஸ் இலங்கையில் பொது விடுமுறை நாளாகும். டிசம்பர் மாததில் ஆரம்பம் முதலே வானொலி தொலைக்காட்சி போன்றவற்றில் கிறிஸ்துமஸ் சிந்தனைகள் கெரொல் இசைகள் என்பன ஒலி ஒளி பரப்பப்படும். விற்பனை நிலையங்களில் கிறிஸ்துமஸ் அலங்காரங்களையும் காணலாம்.

கிறிஸ்துமஸ் நாளுக்கு ஒரு கிழமைக்கு முன்னர் கிறிஸ்துமஸ் மரம் ஒன்றை வீட்டில் அலங்கரிப்பதோடு கிறிஸ்துமஸ் கொண்ட்டாங்களை கிறிஸ்தவர்கள் ஆரப்பிப்பது வழக்கமாகும். கிறிஸ்துமஸ் நாளன்று புத்தாடை அணியும் வழக்கமும் காணப்படுகிறது. கத்தோலிக்கர் இயேசு பிறப்பின் மாட்டுத்தொழுவக் காட்சிகளை பொது இடங்களிலும் வீடுகளிலும் காட்சிக்கு வைப்பது வழக்கமாகும். கத்தோலிக்கரும் அங்கிலிக்கன் சபையினரும் டிசம்பர் 24 நடு இரவு, டிசம்பர் 25 காலை திருப்பலிகளில் பங்குகொள்ளும் அதே வேளை சீர்த்திருத்த சபையினர் முழு இரவு தியானங்கள், செபக்கூட்டங்கள் என்பற்றில் ஈடுபடுவது வழக்கமாகும். டிசம்பர் 25 காலையில் அயலவருடன் உணவுகளை பகிர்தலும், விருந்து கொடுத்தலும் பொதுவான வழக்கமாகும்.

இந்தியாவில் கிறிஸ்து பிறப்புவிழாக் கொண்டாட்டங்கள்

கடை ஒன்றில் அலங்காரப் பொருட்கள், கேரளா
இந்தியாவில் கிறித்தவக் கொண்டாட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு விடுமுறை நாள்கள் பெரிய வெள்ளி அல்லது புனித வெள்ளி (Good Friday), மற்றும் கிறிஸ்து பிறப்புவிழா ஆகும்.

டிசம்பர் 24ஆம் நாள் நள்ளிரவில் கிறித்தவர் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு நடத்துவர். கத்தோலிக்கர் நள்ளிரவுத் திருப்பலியில் கலந்துகொண்டு நற்கருணை விருந்தில் பங்கேற்பர். கிறிஸ்து பிறப்புவிழாவிற்கு அடையாளமாக நாணல் போன்ற புல்லினால் குடில் கட்டி குழந்தை இயேசு,மரியாள், யோசேப்பு, இடையர்கள், ஞானிகள் செரூபங்களை வைப்பர்.விண்மீன்க்கு அடையாளமாக காகதித்தாலான விண்மீன்களை வண்ண விளக்குக்களால் அலங்கரிப்பர்.

வீடுகளில் விருந்து நடைபெறும். எல்லாரும் புத்துடை அணிவர். நண்பர்களையும் உறவினரையும் சந்திக்கச் செல்வர். மேலும், இரவில் வாண வேடிக்கைகள் நடைபெறும்.

பல இடங்களில் கிறிஸ்துமஸ் பஜனை நடைபெறும். அப்போது பாடல் குழுவினர் அணியாகச் சென்று வீடுகளைச் சந்தித்து கிறிஸ்துமஸ் பாடல்கள் (Carols) இசைப்பார்கள்.

கிறித்தவர்களோடு பிற சமயத்தவரும் இணைந்து இவ்விழவைக் கொண்டாடுகின்றனர். இது சமய நல்லிணக்கம் உருவாக உறுதுணையாக உள்ளது என்பதில் ஐயமில்லை.

தேசிய விவசாயிகள் தினம் டிசம்பர் 23 .

தேசிய விவசாயிகள் தினம் டிசம்பர் 23 .

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23-ம் தேதி 'தேசிய விவசாயிகள் தினமாக' கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பிறந்த நாளே கடந்த 16 ஆண்டுகளாக விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சரண் சிங்கின் பிறந்த நாளை விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுவதற்கு தனிப்பட்ட காரணங்கள் உண்டு.

பல்வேறு நெருக்கடியான அரசியல் சூழல்களுக்கிடையே ஜூலை 1979-ம் ஆண்டு, இந்தியாவின் 5-வது பிரதமராக பதவியேற்றார் சவுத்ரி சரண் சிங். பின்னர் 1980-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி வரை 7 மாதங்கள் ஆட்சியில் இருந்த சரண் சிங் 'ஜமீன்தாரி ஒழிப்புமுறை சட்ட'த்தை கொண்டு வந்தார். அதேசமயம் நிலச் சுவான்தார்கள், வட்டிக்கு பணம் வழங்குவோர் மீது கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும், விமர்சனங்களையும் முன்வைத்தவர் சரண்சிங்.

அவருடைய ஆட்சியின்போதே விவசாயிகளின் விளைபொருள் விற்பனைக்காக 'வேளாண் விளைபொருள் சந்தை மசோதா'வையும் அறிமுகப்படுத்தினார். இதுதான் அவர் ஆட்சியின் போது விவசாயிகளின் நலன்களுக்காக கொண்டுவரப்பட்ட முக்கிய அம்சங்கள்.

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம். உண்மைதான். இன்றும் இந்தியாவின் மக்கள்தொகையில் 60 சதவிகிதத்துக்கு மேலானோர் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுப்பட்டு வருகின்றனர். 

வியாழன், 22 டிசம்பர், 2016

தந்தை பெரியார் நினைவு தினம் டிசம்பர் 24 .


தந்தை பெரியார் நினைவு தினம் டிசம்பர் 24 .

பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள், எழுச்சியூட்டும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்ததிற்காவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், சாதி வேற்றுமைகளை அகற்றுவதற்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர். தமிழகத்தின் மிகப்பெரிய கழகமான திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவர். பெண்விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும், திராவிடர்கள் பார்பனரல்லாதார் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும் எதிர்த்துப் போராடிய சமூக சீர்திருத்தத்தின் தந்தை. தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ் என்றும் இந்தியாவின் கண்ணிராத பகுத்தறிவு சிற்பி என்றும் போற்றப்பட்ட ஈ.வெ. ராமசாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை இங்கு விரிவாக காண்போம்.

பிறப்பு: செப்டம்பர் 17, 1879

இடம்: ஈரோடு, தமிழ்நாடு(இந்தியா)

இறப்பு: டிசம்பர் 24, 1973

பணி: அரசியல்வாதி, சமூக சேவகர்.

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு:

ஈ.வெ. ராமசாமி அவர்கள், 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் நாள் வெங்கட்ட நாயக்கருக்கும், சின்னதாயம்மைக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர், ஈரோடு வெங்கட்ட இராமசாமி நாயக்கர். இவருக்கு கிருஷ்ணசாமி என்ற சகோதரனும், கண்ணம்மா மற்றும் பொன்னுதாயி என்ற சகோதரிகளும் இருந்தனர். இவருடைய குடும்பம் வசதியான வணிக பின்னணியைக் கொண்டதாக இருந்தது.

ஆரம்ப வாழ்க்கை:

தனது படிப்பை ஐந்தாம் வகுப்புவரை முடித்துகொண்ட ஈ.வெ.ரா, அதன் பின் கல்வி பயில விருப்பம் இல்லாததால் தன்னுடைய 12 வது வயதில் தந்தையின்  வணிகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தன்னுடைய இளம் வயதிலேயே, தனது பகுத்தறிவு சிந்தனையால், திராவிடத்தை சதியால் அடக்கியாண்ட ஆரியத்தை பல கேள்விகள் கேட்கத்தொடங்கினார். அவருடைய 19 வது வயதில்,13 வயது நிரம்பிய நாகம்மையாரை மணந்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு நாகம்மையார் தன்னுடைய கணவரின் புரட்சிக்கு முழுவதுமாக தன்னை அற்பணித்துக்கொண்டார். திருமணமான இரண்டு ஆண்டுகளில் ஒரு பெண்குழந்தை பிறந்தது ஆனால், அந்த குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்துவிட்டது.1902 ஆம் ஆண்டுகளில் கலப்புத் திருமணங்களைநடத்திவைத்தார். அனைத்து சமய, சாதியினருடனும் சேர்ந்து விருந்துண்டார். இதனால் இவருக்கும், இவருடைய தந்தைக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. பின்னர்,இவருடைய பகுத்தறிவு செயல்களை ஏற்கமுடியாத தந்தையின் கண்டனத்தால் துறவு பூண்டு காசிக்கு சென்றார்.

காசிக்கு பயணம்:

காசியில் அவருக்கு நடந்த நிகழ்வு அவரின் எதிர்கால புரட்சிகரசிந்தனைக்கு  வித்திட்டது. பெரியாருக்கும் அவரது தந்தைக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் காசிக்கு சென்ற அவருக்கு, அங்கு பிராமணரல்லாதார் வழங்கும் நிதியில் நடத்தப்படும் அன்னசத்திரத்தில் உணவு மறக்கப்பட்டு வீதியில் தள்ளப்பட்டார். இந்த நிலைமையை எண்ணி மிகவும் வருந்தினார். பின்னர் குப்பைத் தொட்டியில் விழும் எச்சில் இலைகளின் உணவை உண்டு பசியாற்றினார். அதுமட்டுமல்லாமல், காசியில் வேசிகளின் வேசமும், திராவிடர்கள் பிச்சைகாரர்களாக இருப்பதையும் மற்றும் புனித கங்கையில் பிணங்கள் மிதப்பதையும் கண்ட அவர் அன்றிலிருந்து இறைமறுப்பாளராக(ஒரு நாத்திகவாதியாக) தன்னை மாற்றிக் கொண்டார்.

ஆரம்பகால அரசியல் வாழ்க்கை:

காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளில் ஈடுபாடுகொண்ட பெரியார்,1919 ஆம் ஆண்டு தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். காந்தியடிகளின் கொள்கைகளை பின்பற்றியதுமட்டுமல்லாமல் பிறருக்கும் எடுத்துக்கூறினார். வெளிநாட்டு துணிகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல் போராட்டங்களையும் நடத்தினார். 1921 ஆம் ஆண்டுகள்ளுக்கடைகளை மூட வலியிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்,தன்னுடைய தோட்டத்திலிருந்த 500 தென்னைமரங்களை வெட்டிச்சாய்த்தார். இப்போராடத்தில்,கைது செய்யப்பட்டு சிறைதண்டனையும் பெற்றார்.1921-1922-ல் ஒத்துழையாமை மற்றும் மிதமாக மதுகுடித்தல் சட்டங்களை எதிர்த்து மறியலில் ஈடுபாட்ட அவர், மீண்டும் கைதுசெய்யப்பட்டார்.1922-ல் சென்னை மாகாண காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்தெடுக்கப்பட்டார். பின்னர், திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் அரசுப் பணிகளிலும், கல்வியிலும் இடஒதுக்கீட்டை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். ஆனால்,இது இனவேற்றுமையை பிரதிபலிப்பதாக அமைவதால் அன்றைய காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் ஏற்க மறுத்தனர். இதனால் பெரியார் 1925- ல் அக்கட்சியை விட்டு விலகினார்.

வைக்கம் போராட்டம்:

பெரியாருக்கு காந்தியின் கொள்கைகளில் ஒரு வலுவான நம்பிக்கை இருந்தது. கேரளாவில் வைக்கம் என்னும் ஊரில் அரிசன மக்கள் என்றழைக்கப்படும் தலித் மக்களும், ஈழவர்களும் கோயில் இருக்கும் வீதிகளில் நடக்கவும் கோயிலுக்குள் நுழையவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. 1924 ஆம் ஆண்டு டி.கே. மாதவன் அவர்கள், இதை எதிர்த்து காந்திய வழியில் சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கினார். இப்போராட்டதில், நாடெங்குமுள்ள காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தமிழகத்தின் சார்பாக தந்தை பெரியார் கலந்துகொண்டார் பின்னர்,கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். அவருடைய துணைவியான நாகம்மையாரும் இப்போராட்டத்தில் பங்கேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பெரியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டபோதிலும், அவருடைய தொண்டர்கள் கைவிடாது போராட்டத்தை தொடர்ந்ததால் வெற்றியும் கிட்டியது. இந்த போராட்டதிற்கு பிறகு பெரியார் ‘வைக்கம் வீரர்’ என தமிழக மக்களால் அழைக்கப்பட்டார்.

சுயமரியாதை இயக்கம்:

1925 ஆம் ஆண்டு பெரியாரால் சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் முக்கிய கொள்கையே ‘மூடபழக்க வழக்கங்களை சமுகத்தில் மக்களிடம் இருந்து அகற்றுவதை’ நோக்கமாக கொண்டு செயல்பட்டது.தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைபிடிக்கும் பார்ப்பனியம், பெண்களை தாழ்வாக கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து குரல்கொடுத்தார். தென்னிந்தியாவில் பழம்பெருமை வாய்ந்த திராவிடர்கள் பார்பனரல்லாதார் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர் வாழ்வு சுரண்டப்படுவதையும், பெரியார் எதிர்த்தார். கைம்பெண் மறுமணம் போன்ற புரட்சி திருமணங்களை நடத்திக்காட்டியது மட்டுமல்லாமல் கலப்பு திருமணமுறையையும் இவ்வியக்கம் ஆதரித்தது. கோயில்களில் சட்டத்திற்கு புறம்பாக பின்பற்றப்படும் தேவதாசி முறையையும், குழந்தைகள் திருமணத்தையும் தடைசெய்தது.அரசு நிர்வாகப் பணி மற்றும் கல்வி ஆகியவற்றில் இடஒதுக்கீடு முறையை கடைபிடிக்க இவ்வியக்கம் வலியுறுத்தியது. பின்னர், தன்னுடைய கொள்கைகளையும் சிந்தனைகளையும் பரப்புவதற்கு “குடியரசு நாளிதழை” 1925 ஆம் ஆண்டு தொடங்கினார். சுயமரியாதை இயக்கம், வெகுவேகமாக வளர்ந்தது மட்டுமல்லாமல், மக்களின் ஆதரவையும் பெற்றது. சுயமரியாதையாளர்கள் ஈரோடு மற்றும் பிற மாவட்டங்களிலும்,மாநாடுகளும், கூட்டங்களும் நடத்தப்பட்டு மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 1929 முதல் 1932 வரை மலேசியா, ரஷ்யா, ஐரோப்பா, பிரான்ஸ், ஜெர்மனி, கிரிஸ், சிங்கப்பூர், இலங்கை, மேலும் பல வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு தன்னுடைய சுயமரியாதைக் கொள்கைகளை விளக்கிக்கூறினார்.

இந்தி எதிர்ப்பு:

1937 ஆம் ஆண்டு சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றபிறகு ‘இந்தி’ கட்டாயமொழியாக பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் வெடித்தன. இந்தி பேசும் வடஇந்தியர்களிடமிருந்து தமிழர்களை பிரித்து இரண்டாம் தர குடிமக்களாக காட்டுவது மட்டுமல்லாமல், தமிழர்களின் முன்னேற்றத்தையும், பண்பாட்டையும் சிதைத்து விடும் என வலியுறுத்தி 1938- ல் நீதிக்கட்சியின் சார்பாக பெரியார் மற்றும் சர்.ஏ.டி. பன்னீர் செல்வம் தலைமையில் நடந்த போராட்டத்தில் பெரியாருடன் பலர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். 1939 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட பெரியார் “நீதிக்கட்சியின்”(1916 ஆம் ஆண்டு பிராமணர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக தொடங்கப்பட்ட தென்னிந்திய நலஉரிமை சங்கம் என்ற அரசியல் கட்சி பின்னாளில் நீதிக்கட்சியாக மாறியது) தலைவராக பொறுப்பேற்றார். அவரது தலைமையில் நீதிக்கட்சி பெரும் வளர்ச்சிப்பெற்றது. இருப்பினும், நீதிக்கட்சியில் பெரும்பாலான உறுப்பினர்கள் செல்வந்தராகவும், கல்வியறிவு பெற்றவர்களாகவும் இருந்ததால், பெரியாரின் கீழ் செயல்பட மனமில்லாமல் கட்சியிலிருந்து விலகினார்.

பெரியாரின் திராவிட கழகம்:

பெரியார் அவர்கள், நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு ‘நீதிக்கட்சி’ என்ற பெயரை 1944-ல் ‘திராவிட கழகம்’ என பெயர் மாற்றினார். திராவிட கழகத்தின் கொள்கைகள் வெகு விரைவில் மக்களிடத்தில் சேர்ந்தது. திராவிடர் கழகம், சமுகத்தில் பரவிக் கிடந்த தீண்டாமையை ஒழிப்பதிலும், சுயமரியாதை, சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு, இறைமறுப்பு, பெண் உரிமை மற்றும் பெண்கல்வி போன்றவற்றையும் வலியுறுத்திதொடங்கப்பட்ட ஒரு சமூக இயக்கமாகும்.‘கருப்பு சதுரத்தின் நடுவே சிவப்பு வட்டம்’ என்பதே திராவிட கழகத்தின் கொடியாக இருந்தது.

பெரியாருக்கும் அண்ணாவிற்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு:

பெரியாரின் திராவிட கழகம், சமுதாய மறுமலர்ச்சி, விழிப்புணர்வு,  மூடநம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு போன்ற கொள்கைகளை சார்ந்து இருந்ததால், திராவிட கழகத்தை அரசியல் கட்சியாக மாற்ற பெரியார் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாமல்,‘திராவிடநாடு’ அல்லது ‘தனி தமிழ்நாடு’ என்ற கோரிக்கையையும் முன்வைத்தார். ஆனால் கா.ந. அண்ணாதுரை மத்திய அரசுடன் இணைக்கமாக இருந்து கொண்டு கூடுதல் அதிகாரங்களை கொண்ட மாநில சுயாட்சியை பெறுவதில் அக்கறை காட்டினார். இதனால் இருவருக்குமிடைய கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. திராவிட கழகத்தின் தொண்டர்களும், உறுப்பினர்களும் கழகத்திலிருந்து விலக சரியான நேரத்தை எதிர்நோக்கி காத்திருந்தபொழுது, ஜூலை 9, 1948  ஆம் ஆண்டு பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான மணியம்மையை மறுமணம் புரிந்து கொண்டதை காரணம் காட்டி, அண்ணாதுரை தலைமையிலான திராவிட கழகத்திலிருந்து விலகினார். பின்னர் கா.ந. அண்ணாதுரை தனது வழிகாட்டியான பெரியாரிடமிருந்து பிரிந்து,1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க) என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

இறுதிகாலம்:

இந்து மத மூடநம்பிக்கைகளை அறவே எதிர்த்த பெரியார்,1952-ல் பிள்ளையார் உருவ பொம்மைகளை உடைத்தது மட்டுமல்லாமல்,1956 ஆம் ஆண்டு இந்துக்களின் கடவுளாக கருதப்பட்ட ராமரின் உருவப்படம் எரிப்புப் போராட்டத்தையும் நடத்தி, கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர்,1962 –ல் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளராக கி. வீரமணியை நியமித்தார். மக்களுக்குள் சுயமரியாதை, சமத்துவம், சகோதரத்துவம் ஓங்கி வளரவேண்டும் என்று கடைசிவரை போராடிய பெரியாரின் கடைசி கூட்டம் 1973  டிசம்பர் 19 ஆம் தேதி சென்னை தியாகராஜர் நகரில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ‘சாதிமுறையையும், இழிவுநிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடவேண்டும்’ என்று முழக்கமிட்டு தன்னுடைய கடைசி உரையை முடித்துக்கொண்டார்.

புனைபெயர்கள்:

இவருடைய சமுதாய பங்களிப்பைப் பாராட்டி ‘யுனஸ்கோ நிறுவனம்’ ஜூன் 27, 1973 ஆம் ஆண்டு பெரியாரை ‘புத்துலக தொலைநோக்காளர்’, ‘தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ்’, ‘சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை’ என பாராட்டி விருது வழங்கியது. அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் ‘கடும் எதிரி’, ‘பகுத்தறிவு பகலவன்’, ‘வைக்கம் வீரர்’மற்றும் ‘தந்தை பெரியார்’ என பல்வேறு பெயர்களில் அழைக்கபடுகிறார்.

இறப்பு:

‘பகுத்தறிவின் சிற்பி’,‘அறிவு பூட்டின் திறவுகோல்’, எதையும் ‘ஏன்? எதற்கு? எப்படி?’ என்று கேட்கவைத்தவர், மூட நம்பிக்கையை ஒழித்துத் தன்னம்பிக்கையை விதைத்தவர், உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும், அழியாத வரலாற்றின் அறிஞருமான தந்தை பெரியார், டிசம்பர் 24, 1973 ஆம் ஆண்டு தனது 94 வது வயதில் காலமானார்.

பலநூற்றாண்டு கால வரலாற்றை வெறும் இருபது வருடங்களில் நிகழ்த்திக்காட்டிய வரலாற்றுத் தேடல்; மனிதகுல வரலாற்றில் தன் மக்களின் விடியலுக்காகப் போராடிய மாபெரும் விரர்; இந்திய விடுதலையில் பங்காற்றி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராயிருந்து, மதுவிலக்குக் கொள்கைகளை காந்திக்கு எடுத்துரைத்து, சுயமரியாதை இயக்கம் கட்டமைத்து, சீர்திருத்த திருமணம் என்ற ஒரு புதிய வாழ்க்கை ஒப்பந்த முறையை சட்டமாக்கி, தன் தமிழினம் தலைநிமிர்ந்து வாழ வகைசெய்த பகுத்தறிவு பகலவன், திராவிடம் என்கிற பல நூற்றாண்டு கால வரலாற்றின் ‘வெற்றி நாயகன்’என இன்னும் சொல்லிக்கொண்டே போகக்கூடிய அரும்பணியை ஆற்றிய மாபெரும் சிந்தனையாளர் ‘பெரியார்’ என்றால் அது மிகையாகாது.

காலவரிசை:

1879 – செப்டம்பர் 17 ஆம் தேதி ஈரோட்டில் பிறந்தார்.

1898 – நாகம்மையாரை மணந்தார்.

1904 – காசிக்கு சென்று ஒரு நாத்திகவாதியாக திரும்பினார்.

1919 – இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

1922 – மெட்ராஸ் ப்ரிசிடென்ஸி காங்கிரஸ் கமிட்டி தலைவரானார்.

1925 – இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.

1924 – வைக்கம் போராட்டத்தை நடத்தினார்.

1925 – சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது.

1929 – ஐரோப்பா, ரஷ்யா, மற்றும் மலேஷியா போன்ற சர்வதேச நாடுகளுக்கு பயணம்.

1929 – தன்னுடைய பேருக்கு பின்னால் இருந்த ‘நாயக்கர்’ என்ற பட்டத்தைத் துறந்தார்.

1933 – பெரியாரின் துணைவியாராகிய நாகம்மையார் மரணம்.

1938 – தமிழர்கள் வாழும் நாடு தமிழர்கே என முழங்கினார்.

1939 – நீதி கட்சி தலைவரானார்.

1944 – நீதி கட்சியின் பெயர் ‘திராவிட கழகம்’ என மாற்றப்பட்டது.

1948 – ஜூலை 9, ஆம் தேதி பெரியார் மணியம்மையை மறுமணம் புரிந்து கொண்டார்.

1949 – பெரியார் மற்றும் கா.ந.அண்ணாதுரையிடையே பிளவு ஏற்பட்டு ‘திராவிட முன்னேற்ற கழகம்’ என்ற புதிய கட்சி தொடங்கப்பட்டது.

1973 – பெரியார் டிசம்பர் 24 ஆம் தேதி, தனது 94 வது வயதில் காலமானார்.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நினைவு தினம் டிசம்பர் 24 .


புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்  நினைவு தினம் டிசம்பர் 24 .

எம்.ஜி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், சனவரி 17, 1917 – திசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர்.

எம். ஜி. சக்கரபாணி அவர்களின் தம்பியான இவர்,தொடக்க காலத்தில் நாடகங்களில் நடித்தார். அண்ணல் காந்தியடிகளின் கருத்துகளால் ஈர்க்கப்பெற்று தேசிய முற்போக்கு காங்கிரசில் இணைந்தார்.சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமாகி, கதாநாயகனாக மாறிய பிறகு, அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அண்ணாவின் மறைவுக்குப்பிறகு, கருணாநிதியால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, தேர்தலில் நின்று தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றிபெற்று முதலமைச்சரானார்.

இவர் உயரிய விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருதினை பெற்றவர்.

தனிப்பட்ட வாழ்க்கை
இளமைப்பருவம்
இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார்.

அவருடைய தந்தை மருதூர் கோபாலமேனன் வக்கீலாகக் கேரளாவில் பணிபுரிந்தார். அவருடைய மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாகப் படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார். இவருடன் சக்ரபாணி என்ற சகோதரரும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி முதன்மை நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமாவார். காந்திய கொள்கைகளால் உந்தப்பட்டு, இவர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.

இல்லறம்
முதல் திருமணம்
எம்.ஜி.ஆர் முதலில் தங்கமணியை மணந்தார். பிரசவத்திற்காகத் தாய் ஊருக்குச் சென்ற தங்கமணிக்கு குழந்தை இறந்தே பிறந்தது. அதன் பின் தங்கமணியும் உடல்நலக் குறைவினால் இறந்தார்.

இரண்டாவது திருமணம்
அதன் பிறகு சதானந்தவதியை மணந்தார் எம்.ஜி.ஆர். இருவருக்கும் குழந்தைகள் இல்லை. பின்னர் சதானந்தவதி நோய்க் காரணமாக இறந்தார்.

மூன்றாவது திருமணம்
ம. கோ. இரா. இரண்டாவது கதாநாயகனாகத் தியாகராஜ பாகவதர் தயாரித்த இராஜமுக்தி படத்தில் நடித்தார். அப்படத்தில் வைக்கம் நாராயணி ஜானகி என்னும் வி. என். ஜானகி கதாநாயகியாக நடித்தார். அவர் ம. கோ. இரா.வின் முதல் மனைவியான தங்கமணி சாயலில் இருந்தார். இதனால் ஜானகியின் மீது ம. கோ. இரா.விற்கு ஈர்ப்பு ஏற்பட்டது.

அவ்வீர்ப்பு மோகினி படத்தில் சேர்ந்து நடித்தபொழுது இருவரும் நெருங்கிப் பழகினர். 1950 ஆம் ஆண்டில் மருதநாட்டு இளவரசி படத்தில் கதைத் தலைவனாக ம. கோ. இரா.வும் கதைத்தலைவியாக ஜானகியும் நடிக்கும்பொழுது காதலாக மாறியது. அக்காலகட்டத்தில் ம. கோ. இரா.வால் ஜானகிக்கு எழுதப்பட்ட காதற்கடிதங்கள் ஜானகிக்கு முதற்கணவரான கண்பதிபட்டிக் கைகளில் கிடைத்தன. கணபதிபட்டிற்கும் ஜானகிக்கும் இடையில் சண்டை முற்றியது. ஜானகி நள்ளிரவொன்றில் தன் மகனுடன் தனது வீட்டைவிட்டு வெளியேறி, அப்பொழுது லாயிட்ஸ் சாலையில் (தற்பொழுது அவ்வை சண்முகம் சாலை) குடியிருந்த ம. கோ. இரா.வின் வீட்டிற்கு அடைக்கலம் தேடிவந்தார். ம. கோ. இரா. அவரைத் தனது வீட்டிற்கு எதிரே இருக்கும் தெருவில் ஒரு வீட்டில் குடிவைத்தார். கேரளாவில் ஒரு கோவிலில் சில நண்பர்கள் முன்னிலையில் ம. கோ. இரா.வும் ஜானகியும் மாலை மாற்றிக் கொண்டனர். ஜானகிக்கு மகனான அப்பு என்ற சுரேந்திரனை ம. கோ. இரா. தன் வளர்ப்பு மகனாக ஏற்றுக்கொண்டார்.[7] இத்திருமணத்தை ம. கோ. இரா.வின் அண்ணனும் நடிகருமான ம. கோ. சக்ரபாணியும் குடும்ப நண்பரும் நடிகருமான சி. டி. இராஜகாந்தமும் ஏற்க மறுத்தனர். எனினும் ம. கோ. இரா.வின் இரண்டாம் மனைவி சதானந்தவதி உயிரோடு இருந்ததால் தம்திருமணத்தைப் பதிவுசெய்து கொள்ளாமலேயே ம. கோ. இரா.வும் ஜானகியும் உடனுறைந்தனர் (Lived Together). 12 ஆண்டுகள் கழித்து 1962 பிப்ரவரி 25 ஆம் நாள் சதானந்தவதி மறைந்த பின்னர் சூன் 14ஆம் நாள் ம. கோ. இரா.வும் ஜானகியும் சட்டப்படி தம் திருமணத்தைப் பதிவு செய்துகொண்டனர். இருவரும் லாயிட்சு சாலை வீட்டைலிருந்து கிளம்பி இராமவரம் தோட்டத்திற்குச் சென்று குடியேறினர்.

வளர்ப்பு குழந்தைகள்
மூன்று திருமணங்கள் என்றாலும் எம்.ஜி.ஆருக்கு குழந்தைகள் இல்லை. எனவே ஜானகி- கண்பதிபட் ஆகிய இருவருக்கும் பிறந்த அப்பு என்ற சுரேந்திரனையும் ஜானகியின் தம்பியாகிய மணி என்னும் நாராயணன் குழந்தைகளாகிய லதா (ராஜேந்திரன்), கீதா (மதுமோகன்), சுதா (கோபாலகிருஷ்ணன்). ஜானகி (சிவராமன்), தீபன் ஆகிய ஐவரையும் தன் வளர்ப்புப் பிள்ளைகளாகத் தத்தெடுத்துக் கொண்டார்.

கல்வி உதவி
எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா என்று எம்.ஜி.ஆர் 25ல் ஆனந்த விகடன் இதழ் குறிப்பிட்டுள்ளது.

செல்லப் பிராணிகள்
எம்.ஜி.ஆர் ராஜா-ராணி என்ற பெயர்களுடைய இரண்டு சிங்கங்களை வளர்த்தார். ராணி சிங்கம் இறந்துவிட ராஜா சிங்கமும் உடல் தளர்ந்திருந்தது. அது தனியாக இருக்க வேண்டாமென வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அளித்தார். நெடுநாட்கள் வாழ்ந்த ராஜா மறைந்த போது, அதன் உடலைத் தகுந்த ஆவணத்துடன் பெற்று, பாடம் செய்து தன் தி.நகர் வீட்டில் வைத்துக் கொண்டார்.

சிங்கங்களைத் தவிர எம்.ஜி.ஆர் தனது வீடு அமைந்திருந்த ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும் வளர்த்தார். இவற்றைக் கவனிக்க தனி மருத்துவரைப் பணியமர்த்தியிருந்தார்.

சிறுகுட்டியாக எம்.ஜி.ஆரிடம் இருந்த கரடி வளர்ந்ததும் மருத்தவரின் உதவியுடன் மூக்கில் சங்கிலி இணைக்க ஏதுவாகத் துளையிட முயன்றபோது எதிர்பாராத விதமாக இறந்துவிட்டது. இதை நடிகர் சங்கத்தின் நாளிதழில் ஒரு பேட்டியின் போது வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார் எம்.ஜி.ஆர்.

திரைப்பட வாழ்க்கை
முதன்மை கட்டுரை: எம்.ஜி.ஆரின் திரைப்பட வாழ்க்கை
1936ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை.

இச்சம்பவத்திற்குப் பின்னார் முதன் முதலாக வெளிவந்த திரைப்படம் காவல்காரன். இது மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது. 1971 ஆம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, “பாரத்” விருதை வழங்கியது. இது சத்யா மூவிஸ் தயாரிப்பான “ரிக்சாக்காரன்” படத்தில் நடித்ததற்காகக் கிடைத்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது படம்.

அவர் நடித்துக் கடைசியாக வெளி வந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன். தனது திரைப்பட நிறுவனத்தின் கீழ் எம்.ஜி.ஆர். மூன்று படங்களைத் தயாரித்தார்: நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன். நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களை அவரே இயக்கினார்.



அரசியல் வாழ்க்கை
முதன்மை கட்டுரை: எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கை
இவர் ஒரு மலையாளியாக இருந்தும், ஒரு முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். கருணாநிதியுடன் நட்பாக இருந்தார். சி. என். அண்ணாத்துரையின் மறைவுக்குப் பின், மு. கருணாநிதி முதலமைச்சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேறினார்.

1972-இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார். பின்பு அக்கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழமாக மாறியது. முதன் முதலாகப் போட்டியிட்ட திண்டுக்கல் பகுதியில் பெரும் வெற்றி பெற்றது.

திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின. 1977ல் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். 1984 ல் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரசாரத்திற்கே வராமல் முதலமைச்சர் ஆன ஒரே முதல்வரானார் எம்.ஜி.ஆர். 1984 இல் இவரது ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். மறைவிற்குப் பின் அவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

இவரது கட்சி 1988-இல் பிரிந்து 1989-இல் இணைந்தது. 1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும் 2011 முதல் இன்று வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஜெ. ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்திருக்கிறது.

இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் திராவிடக் கட்சியில் இருந்தபோதிலும் தமிழ் நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள். இவர் இறந்து 29 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த பெரும் செல்வாக்கைக் காட்டுகிறது.


திட்டங்கள்
சத்துணவுத் திட்டம்
விதவை ஆதரவற்ற பெண்களுக்குத் திருமண உதவி
தாலிக்கு தங்கம் வழங்குதல்
மகளிருக்கு சேவை நிலையங்கள்
பணிபுரியும் பெண்களுக்குத் தங்கும் விடுதிகள்
தாய் சேய் நல இல்லங்கள்
இலவச சீருடை வழங்குதல் திட்டம்
இலவச காலணி வழங்குதல் திட்டம்
இலவச பற்பொடி வழங்குதல் திட்டம்
இலவச பாடநூல் வழங்குதல் திட்டம்
வறட்சிக் காலத்தில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குகின்ற திட்டம்.
தமிழ் பல்கலைக் கழகம் நிறுவுதல்[மூலத்தைத் தொகு]
1921ம் ஆண்டு தமிழ் மொழிக்கு எனத் தனியே ஒரு தமிழ்ப் பல்கலைக் கழகம் வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய உமாமகேசுவரனார் பிறந்த தஞ்சையில், தீர்மானம் இட்ட அறுபது ஆண்டுகள் கழித்து தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவினார் எம்.ஜி.ஆர். தமிழ்மொழி, தமிழர்களின் கலை, இசை, நாடகம், ஓவியம், சிற்பம், கட்டிடக் கலை, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், மொழியியல், வரலாறு, புவியியல், மெய்யியல், கடலியல், சித்த மருத்துவம், கைவினைக் கலை, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழை மேம்படுத்த, தமிழர்களின் மரபுப் பெருமையைப் பரப்ப, 1981 இல் அன்று முதலமைச்சராகயிருந்த திரு.எம்.ஜி. இராமச்சந்திரன் முன் முயற்சியில் தமிழக அரசால் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது.

முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் 13. சூன் 1981 இல் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இப்பல்கலைக்கழகத்தின் உடனடித் தேவைக்கும், எதிர்கால விரிவாக்கத்திற்கும் 1000 ஏக்கர் நிலம் தேவை என முடிவு செய்யப்பட்டது.
1981 ஆகஸ்ட் 1 ஆம் நாள் தமிழக ஆளுநர் மூலம் “தமிழ்ப் பல்கலைக் கழக அவசரச் சட்டம் 1981” பிறப்பிக்கப்பட்டு தமிழ்ப் பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழ் பல்கலைக் கழகத்திற்கு 972.7 ஏக்கர் நிலத்தை எம்.ஜி.ஆர் தலைமயினான அரசு கையகப்படுத்தி ஒதுக்கியது.
தமிழ் ஈழம் குறித்த நிலைப்பாடு[மூலத்தைத் தொகு]
இலங்கையில் இருக்கும் கண்டியில் பிறந்தமையால் தமிழ் ஈழம் குறித்தான ஆர்வமும், செயல்பாடுகளும் எம்.ஜி.ஆரிடம் அதிகம் காணப்பட்டன. ஈழத்திற்காக வெளிப்படையான ஆதரவினை எம்.ஜி.ஆர் தமிழக முதலமைச்சராக இருக்கும் போது தந்தார்.

பழ நெடுமாறன் கருத்து
1980களில் ஈழப்போராட்டம் தீவிரமடைந்த போது அதற்கு ஆதரவளித்தார் எம். ஜி. ஆர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழர்களுக்கென்று தனி நாடு அமைய வேண்டுமென்றும் அவர் விரும்பினார் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். பிரபாகரனின் தலைமையிலான புலிகளின் போராட்டத்துக்குத் தேவையான ஆயுதங்கள் வாங்க ரூ.7 கோடி சொந்தப் பணத்தை தந்தார் என நெடுமாறன் கூறியுள்ளார்.


எம்.ஜி.ஆர் பற்றிப் பிரபாகரன்
விடுதலைப் புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் வெளிப்படையான ஆதரவு அளித்தார் எம்.ஜி.ஆர். ஆயுதம் வாங்கி இலங்கை கொண்டு சென்று தமிழ்மக்களை காப்பாற்ற, முதலில் இரண்டு கோடி ரூபாயை தந்தார். அந்த உதவி இல்லையென்றால் இந்தளவிற்கு இயக்கம் வளர்ந்திருக்க இயலாது என்று பிரபாகரன் பேட்டியில் கூறியிருக்கிறார். மேலும் எம்.ஜி.ஆரை அண்ணன் என்றே அழைத்ததாகவும் கூறியிருக்கிறார். மத்திய அரசு விடுதலை புலிகளுக்கு நெருக்கடி கொடுத்த காலக்கட்டத்திலும், பெரிய தொகையைக் கொடுத்து உதவி செய்தார். மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றே எம்.ஜி.ஆர் தன் நிலையை பற்றிப் பிரபாகரனிடம் கூறியுள்ளார். எம்.ஜி.ஆர் உயிர் பிரிவதற்கு ஒரு வாரம் முன்புகூட ரூ. 40 லட்சம் வரை புலிகளுக்கு உதவியாக வழங்கியதாகப் பிரபாகரனே கூறியுள்ளார். எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிரபாகரன் வெளியிட்ட இரங்கல் செய்தியில் ”தமிழீழ மக்கள் சுதந்திரமாக வாழவேண்டுமென விரும்பிய மாண்புமிகு முதலமைச்சர் எம்.ஜி.ஆர், அவர்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர்” என்று கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆரின் ஈழக்கனவுப் பற்றி ஆன்டன் பாலசிங்கம்[மூலத்தைத் தொகு]
1984 ஆம் ஆண்டு அளவில் எம்.ஜி.ஆருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் ஏற்பட்ட தோழமைப் பற்றி ஆன்டன் பாலசிங்கம் விடுதலை கட்டுரைத்தொகுதியில் தந்துள்ளார். "எதிர்பாராத விதமாக எம்.ஜி.ஆருக்கும் விடுதலை இயக்கத்திற்குமான உறவு மலர்ந்தது. தலைவர் பிரபாகரனின் தலைமைப் பண்பும், வீரமும் எம்.ஜி.ஆரைக் கவர்ந்தது. அது நாளடைவில் நட்பாக மாறியது." என்று விடுதலை கட்டுரைத் தொகுதியில் தந்திருக்கிறார்.

இயக்குனர் சீமான் நம்பிக்கை
"முன்னாள் தமிழக முதல்வர் அமரர். எம்.ஜி.ஆர். போன்று ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்தவர்கள் யாருமில்லை. அவர் மட்டும் மேலும் 10 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் ஈழத்தமிழர்களுக்குத் தனி நாடு கிடைத்திருக்கும். அது நடக்காததுதான் வரலாற்று துயரம்" என்று இயக்குனரும் நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோது தெரிவித்தார்.

எழுத்துகள்
நாடோடி மன்னன் புத்தகம்
எம்.ஜி.ஆர் தானே தயாரித்த நாடோடி மன்னன் திரைப்படத்தினைப் பற்றிப் புத்தகம் எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தில் படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரைப் பற்றியும் எழுதியுள்ள எம்.ஜி.ஆர், படத்தின் கதை, அதை தானே தயாரிக்கவேண்டிய நிலை என பல விஷயங்களை எழுதியுள்ளார். இந்தப்படம் வெளிவந்தபின் வெற்றி அடைந்தால் தாம் ஒரு மன்னன் என்றும், தோல்வியுற்றால் தாம் ஒரு நாடோடி என்றும் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருந்தார்.

சுயசரிதைத் தொடர்
‘நான் ஏன் பிறந்தேன்?’ - ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர். அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை.

சிறப்பு விருதுகளும் பட்டங்களும்

எம்.ஜி.ஆர் என்கிற எம்.ஜி.ராமச்சந்திரன் தனது திரைச்சேவைக்காகவும், பொதுச்சேவைக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவைகளில் குறிப்பிடத்தக்க சில மட்டும்.

விருதுகள்
பாரத் விருது - இந்திய அரசு
அண்ணா விருது - தமிழ்நாடு அரசு
பாரத ரத்னா விருது - இந்திய அரசு
பத்மசிறீ விருது - இந்திய அரசு (ஏற்க மறுப்பு)
சிறப்பு முனைவர் பட்டம் - அமெரிக்கா அரிசோனா பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (ஏற்க மறுப்பு), சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு)
வெள்ளியானை விருது - இந்திய சாரணர் இயக்கம்.
திரைச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும்[மூலத்தைத் தொகு]
இதயக்கனி - அறிஞர் அண்ணா
புரட்சி நடிகர் - கலைஞர் மு. கருணாநிதி
நடிக மன்னன் - சென்னை ரசிகர்கள் (சி.சுப்பிரமணியம் அவர்களால் வழங்கப்பட்டது.)
மக்கள் நடிகர் - நாகர்கோவில் ரசிகர்கள்
பல்கலை வேந்தர் - சிங்கப்பூர் ரசிகர்கள்
மக்கள் கலைஞர் - காரைக்குடி ரசிகர்கள்
கலை அரசர் - விழுப்புரம் முத்தமிழ்க் கலை மன்றம்
கலைச்சுடர் - மதுரை தேகப்பயிற்சிக் கலை மன்றம்
கலை மன்னர் - நீதிபதி ராஜமன்னார்
கலை மன்னன் - சென்னை ரசிகர்கள்
கலை வேந்தர் - மலேசிய ரசிகர்கள்
திரை நாயகன் - சேலம் ரசிகர்கள்
பொதுச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும்[மூலத்தைத் தொகு]
கொடுத்துச் சிவந்த கரம் - குடந்தை ரசிகர்கள்
கலியுகக் கடவுள் - பெங்களூர் விழா
நிருத்திய சக்கரவர்த்தி - இலங்கை ரசிகர்கள்
பொன்மனச் செம்மல் - கிருபானந்த வாரியார்
மக்கள் திலகம் - தமிழ்வாணன்
வாத்தியார் - திருநெல்வேலி ரசிகர்கள்
புரட்சித்தலைவர் - கே. ஏ. கிருஷ்ணசாமி
இதய தெய்வம் - தமிழ்நாடு பொதுமக்கள்
மக்கள் மதிவாணர் - இரா. நெடுஞ்செழியன்
ஆளவந்தார் - ம. பொ. சிவஞானம்
செயல்பாடுகள்
1. சனவரி 1986 அன்று அண்ணாவின் பவள விழாவின் நினைவாக அமைக்கப்பட்ட அண்ணா வளைவினை திறந்துவைத்தார் எம்.ஜி.ஆர்.7.47 லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட இது, எம்.ஜி.ஆரின் அலோசனையால் 54 அடி உயரத்தில் அமைக்கப்பட்டது. இந்த வளைவை ஸ்தபதி கணபதி 105 நாட்களில் கட்டி முடித்தார்.



எம்.ஜி.ஆர் நினைவிடம்
தமிழ்நாடு அரசு எம். ஜி. ஆர் நினைவாகச் சென்னையில் மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்துக்கு அருகில் அவரது உடல் புதைக்கப்பட்டது. அந்த இடத்தில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எம்.ஜி.ஆரின். மார்பளவுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்களும், அவருடைய சில பொருட்களும் மக்களின் பார்வைக்கு தனி கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

தாமரை மலர் விரிந்த நிலையில் இருப்பது போன்ற அமைப்பின் நடுவே அவர் உடல் வைக்கப்பட்டுள்ள சமாதி உள்ளது. சமாதியின் அருகே நினைவுத்தூண் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில், பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் தொண்டர்களும் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த நினைவிடத்திற்கு வருகை தந்து தங்களின் அன்பு தலைவருக்கு மரியாதை செலுத்துகின்றனர்.

சென்னை கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் தினமும் அன்னதானம் வழங்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர் சி. கிருஷ்ணன் (ஓமலூர்) மார்ச் 2012 பட்ஜெட் மீதான விவாதத்தின் போது கோரிக்கை விடுத்தார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஏழைகளுக்காகப் பாடுபட்டவர். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் ஏழைகளுக்குக் கோவில் போன்றது. அதனால் கோவில்களில் வழங்கப்படுவதைப் போல அன்னதானம் எம்.ஜி.ஆர் நினைவிடத்திலும் வழங்க வேண்டும் என்று கூறினார்.


டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம்
சென்னை தியாகராய நகரில் உள்ள ஆற்காடு முதலித் தெருவில் அமைந்துள்ளது எம்.ஜி.ஆர் நினைவு இல்லம். எம்.ஜி.ஆர் இந்த இல்லத்தினை தனது அலுவலகமாகப் பயன்படுத்தி வந்தார். இல்லத்தின் முன்புறம் டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் எனும் அரைவட்ட வடிவிலான பெயர்ப் பலகை அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலையொன்று அழகிய சிறு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எம்.ஜி.ஆர் பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்திய TMX 4777 எண்ணுள்ள அம்பாசிடர் கார் வைக்கப்பட்டுள்ளது.மேலும் எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட பரிசு பொருள்களும், அவர் பயன்படுத்திய பொருள்களும் இந்த இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளன.

அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்
திருநின்றவூர் நத்தம் மேடு கிராமத்தில் உள்ள செல்லியம்மன் சாலையில் 1800 சதுர அடி மனையில் எம்.ஜி.ஆருக்கான ஆலையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, புதுப்பேட்டையை சேர்ந்தவர் கலைவாணன் மற்றும் சாந்தி தம்பதியினர் இந்தக் கோவிலை அமைத்துப் பாதுகாவலர்களாக உள்ளார்கள். 15.08.11 அன்று எம்.ஜி.ஆர் கோவிலுக்குக் கும்பாபிசேகமும், உற்சவர் சிலைக்குப் பக்தர்கள் 108 குடங்களில் பால் அபிசேகமும் நடந்தது.

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும் புகழ்பெற்ற நடிகருமான எம்.ஜி.ஆருக்கு தமிழகம் முழுவதிலும் பல ஊர்களில் கோயில்கள் உள்ளன என்று 30, மே 2011ல் வெளிவந்த நக்கீரன் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

*****************************************************************************

எம்.ஜி.ஆர் பற்றி சுவையான சிறு குறிப்புகள்

சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... 25 மட்டும் இங்கே !

எம்.ஜி.ஆர் நடித்த மொத்தப் படங்கள் 136. முதல் படம் சதிலீலாவதி(1936). கடைசிப் படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977).
பெரும்பாலும் (60 படங்கள்) தெலுங்குப் படங்களைத்தான் ரீ-மேக் செய்வார் எம்.ஜி.ஆர். அத்தனையும் என்.டி.ஆர். நடித்ததாகவே இருக்கும். ‘உரிமைக்குரல்’ மட்டும் விதிவிலக்கு. அது நாகேஸ்வர ராவ் நடித்த தெலுங்குப் படம் !
எம்.ஜி.ஆரின் முதல் மனைவி தங்கமணி. இரண்டாவதாக சதானந்தவதியைத் திருமணம் செய்தார். அவரது மறைவுக்குப் பிறகு வி.என்.ஜானகி !
எம்.ஜி.ஆர்.நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் ‘அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிட உடைமையடா’ பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும் !
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 6 கோடியே 37 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியவர் எம்.ஜி.ஆர். அவருக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கியைப் பரிசாக அளித்தார் பிரபாகரன் !
சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைத் தவிர்த்தார். ‘நினைத்ததை முடிப்பவன் ’படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார். மலைக்கள்ளனில் ‘ஹீக்கா’ பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டதாம் !
முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஷீட்டிங் போக முடியாது என்பதால், பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளிப்போட்டு ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முடித்துக் கொடுத்தார் !
‘கர்ணன்’ படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம்’ என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர் !
நம்பியாரும் அசோகனும் தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள். பி.எஸ்.வீரப்பாவும், ஜஸ்டினும் இருந்தால் சண்டைக் காட்சிகளில் குஷியாக நடிப்பார்
எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா !
எம்.ஜி.ஆர் - கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம் ‘மலைக்கள்ளன்’. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது !
காஞ்சித் தலைவனில் இருந்து தனது கட்டுமஸ்தான உடம்பைக் காண்பித்து நடிக்கத் தொடங்கினார்.எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் ‘உரிமைக் குரல்’ காட்சி பெண்களை அவர் பக்கம் ஈர்ப்பதில் பெரும் பங்கு வகித்தது !
நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன்,மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - மூன்றும் எம்.ஜி.ஆர் டைரக்ஷ்ன் செய்த படங்கள் !
சினிமாவில் அதுவரை கட்சிக் கருத்துக்களைப் புகுத்துவார்கள்.ஆனால் எம்.ஜி.ஆர் காட்சிகளையே புகுத்தினார். தி.மு.க கொடி, உதயசூரியன் சின்னம், அண்ணா படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார் !
எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா !
தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970 - ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அடித்த கமென்ட் இதுதான‘அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்லை. 10 நிமிஷங்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் கேட்குறாங்க அப்படி வெச்சாத்தான் படம் ஓடும்’.
‘பொன்னியின் செல்வன்’ கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக் கொண்டார். ஆனால், ஆசை நிறைவேறவில்லை !
அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து ‘நான் எம்.ஜி.ராமச்சந்திரன் - சினிமா நடிகர்’ என்று அறிமுகம் செய்துகொள்வார் !
ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார் எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டர் வைத்திருந்தார் !
ரொம்பவும் நெருக்கமானவர்களை ‘ஆண்டவனே !’ என்றுதான் அழைப்பார் !
அடிமைப் பெண் பட ஷீட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர்.குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார் !
எம்.ஜி.ஆர்.பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கிய பெருமை இரண்டு பேருக்கு உண்டு. ஒருவர், நடிகர் எம்.கே.ராதா. கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு இவர்தான் எம்.ஜி.ஆரூக்கு இன்ஸ்பிரேஷன். இரண்டாமவர், ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். இவரது படங்களைத்தான் நிறையப் பின்பற்றினார் எம்.ஜி.ஆர் !
முழுக்கை சில்க் சட்டை, லுங்கியுடன் தொப்பி, கண்ணாடி இல்லாமல் தன் காரை தானே டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம். ‘யாருக்கும் என்னைத் தெரியலை. தொப்பி, கண்ணாடி இருந்தாதான் கண்டு பிடிப்பாங்க போல’ என்பாராம் !
அன்னை சத்யாவை வணங்க ராமாவரம் தோட்டத்துக்குள்ளேயே கோயில் வைத்திருந்தார் !
‘நான் ஏன் பிறந்தேன்?’ - ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர்.அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை. இன்றும் அவர் வாழ்ந்து கொண்டு இருப்பதாகவே நினைக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். முற்றும் பெறவில்லை அவர் பெருமைகள் !
*****************************************************************************

டாக்டர் எம்.ஜி.ஆரின் முக்கிய திரை உலக குறிப்புகள்....

திரு.எம்.ஜி.ஆர்.இயக்கிய படங்கள் 1) நாடோடி மன்னன்,
2) உலகம் சுற்றும் வாலிபன்,

3) மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்

திரு.எம்.ஜி.ஆர். நடித்த இரட்டை வேடங்கள் 17 படங்கள்
அதிகப் படங்களில் நாயகியாக நடித்தவர் செல்வி ஜெ.ஜெயலலிதா-28 படங்கள்,
திருமதி. சரோஜாதேவி - 26 படங்கள்

அதிகப்படங்கள் இயக்கியவர் திரு. ப. நீலகண்டன்-17 படங்கள்,
திரு. எம்.ஏ. திருமுகம்-16 படங்கள்.

அதிகப்படங்கள் தயாரித்த நிறுவனம் தேவர் பிலிம்ஸ்-16 படங்கள்
அதிக படங்கள் இசை அமைத்தவர் திரு.எம்.எஸ்.விஸ்வநாதன்-49 படங்கள், திரு.கே.வி.மகாதேவன் -37 படங்கள்
அதிக பாடல்கள் பாடியவர்கள் திரு. டி.எம். சௌந்தரராஜன்,
திருமதி. பி. சுசீலா.

100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றிகண்டவை 86 படங்கள்
வெள்ளி விழா கண்டவை 12 படங்கள்
வண்ணப் படங்கள் (கலர்) 40 படங்கள்
300 நாட்களுக்கு மேல் ஓடியது என் தங்கை
உலகம் சுற்றும் வாலிபன்.

தென்னிந்தியாவில் ஜனாதிபதி விருதுபெற்ற முதல் தமிழ் படம் மலைக்கள்ளன்
தமிழ் திரையுலகின் முதல் வண்ணப்படம் அலிபாபாவும் 40 திருடர்களும்
தெலுங்கு மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டவை 60 படங்கள்
இந்தி மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டவை 9 படங்கள்.

********************************************************************************

எம்.ஜி.ஆரின் பொன் மொழிகள் ....

1. அறிவியல் துறையில் போட்டி வேண்டும். ஆற்றலுக்கு முதலிடம் தரப்பட வேண்டும். ஆற்றல் இல்லாதவர்களுக்கு அது கிடைக்க வழி செய்யப்பட வேண்டும்.

2. சமுதாய உணர்வோடு நாம் பிரச்சனைகளை அணுக வேண்டும். நாம் தனி மனிதர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியமானது நாம் ஒரு சமுதாயத்தின் அங்கங்கள் என்பது !

3. வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொண்டால் மட்டும் போதாது ! விலங்கினங்கள் கூடத்தான் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்கின்றன. அவற்றினின்றும் மேம்பட்ட நிலையை மனிதன் அடைவதற்குத் தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் ஓர் ஒழுங்கினை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.

4. வன்முறை தான் போராட்டமுறை என்றால் தோல்வி தான் அதற்குப் பரிசாகக் கிடைக்கும் என்பது நிச்சயம்.
5. எழுத்தாளர்களின் திறமை என்பது காலப்போக்கில் மாறுவது என்றாலும் அந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் எதிர்காலச் சந்ததிகளின் தலையெழுத்தை நிர்ணயிக்கின்றவைகள்.

எழுத்துக்கள் என்பதில் பல்வேறு வகை இருக்கின்றன. பிறரைச் சிந்திக்க வைக்கிற மாதிரி எழுதுவது ஒரு வகை, பிறரைப் புண்படுத்தாமல் எழுதுவது ஒரு வகை, பிறரை வைத்துச் சிந்திக்க வைப்பது ஒரு வகை. அப்படிச் சிந்திக்க மறுப்பவர்களைச் சந்திக்கு இழுப்பது என்பது ஒரு வகை.

6. நமத சமுதாயத்தின் அனைத்துப் பகுதி மக்களும் நல்லிணக்கமான முறையில் சீராக முன்னேற்றம் பெற உத்தரவாதம் தரப்பட வேண்டும். சமநிலைக்குப் பங்கம் ஏற்படாத வகையில் வளர்ச்சிகள் அமைய வேண்டும்.

7. சமூக முன்னேற்றமும், பொருளாதார வளர்ச்சியும் ஒரு நாட்டின் இன்றியமையாத தேவை என்றாலும், அதன் பலன்கள் ஏழை, எளிய மக்களுக்குக் கிடைப்பது அவசியம்.
நன்றி -விக்கிபீடியா ,லஷ்மண் சுருதி .
*********************************************************************************

புரட்சி நடிகர் நடித்த திரைப்படங்கள்....

வ. எண்திரைப்படம்
வெளியான நாள்
இயக்குநர்
இசை
கதா-          பாத்திரத்தின்        பெயர்
ஓடிய நாட்கள்
1.சதிலீலாவதி28/03/1936எல்லீஸ்.   ஆர்.டங்கன்   ரெங்கையா                              நாயுடு145
2.இரு சகோதரர்கள்10/09/1936எல்லீஸ்.   ஆர்.டங்கன்குன்னக்குடி வெங்கட்ராமய்யாமுஸ்லீம்       இளைஞன்100
3.தட்சயக்ஞம்31/03/1938ராஜா சந்திரசேகர்ஜி.பி.ராவ்-மாசிலாமணி-ரெட்டிவிஷ்ணு175
4.வீர ஜெகதீஷ்28/8/1938டி.பி.பிரகாசம்-ஆர்.பிரகாஷ்பாபநாசம் சிவன்காவல்துறை    அதிகாரி-
5.மாயா மச்சிந்திரா22/04/1939ராஜா சந்திரசேகர்பாபநாசம் சிவன்சூரியகேது100
6.பிரஹலாதா12/12/1939பி.என்.ராவ்மாணிக்இந்திரன்100
7.வேதவதி (அல்லது)
சீதா ஜனனம்
22/02/1941டி.ஆர்.ரகுநாத்ஜி.ராமநாதன்இந்திரஜித்100
8.அசோக்குமார்10/07/1941ராஜாசந்திரசேகர்பாபநாசம் சிவன்தளபதி175
9.தமிழ் அறியும் பெருமாள்30/04/1942டி.ஆர்.ரகுநாத்பாபநாசம் சிவன்கௌரவவேடம்169
10.ஜோதி மலர் (அல்லது) தாசிப்பெண்-எல்லீஸ்.   ஆர்.டங்கன்-ஆர்.எஸ்.மணிஜி.ராமநாதன்கௌரவவேடம்-
11.ஹரிச்சந்திரா14/01/1944நாகபூஷணம்ஜி.ராமநாதன்தளபதி157
12.சாலிவாகனன்16/02/1945பி.என்.ராவ்எஸ்.எம்.சுப்பையா            நாயுடுவிக்கிரமாதித்தன்160
13.மீரா03/11/1945எல்லீஸ்.   ஆர்.டங்கன்எஸ்.வி. வெங்கட்ராமன்அமைச்சர்140
14.ஸ்ரீமுருகன்04/06/1946ஏ.எஸ்.ஏ.சாமிசி.ஆர்.சுப்புராமன்சிவன்175
15.ராஜகுமாரி11/04/1947ஏ.எஸ்.ஏ.சாமிஎஸ்.எம்.சுப்பையா                நாயுடுமோகன்168
16.பைத்தியக்காரன்26/09/1947கிருஷ்ணன்                      -பஞ்சுசி.ஆர்.சுப்புராமன்மூர்த்தி133
17.அபிமன்யூ06/05/1948எம்.சோமசுந்தரம்-ஏ.காசிலிங்கம்எஸ்.எம்.சுப்பையா            நாயுடுஅர்ஜுனன்100
18.ராஜமுக்தி09/10/1948ராஜாசந்திரசேகர்சி.ஆர்.சுப்புராமன்-எஸ்.எம்.சுப்பையா   நாயுடு-                   ஜி.ராமநாதன்தளபதி50
19.மோகினி31/10/1948லங்கா சத்யம்சி.ஆர்.சுப்புராமன்விஜயகுமார்133
20.ரத்னகுமார்15/12/1949கிருஷ்ணன்-பஞ்சுசி.ஆர்.சுப்புராமன்-ஜி.ராமநாதன்பாலதேவன்100
21.மருதநாட்டு இளவரசி02/04/1950ஏ.காசிலிங்கம்எம்.எஸ்.ஞானமணிகாண்டீபன்133
22.மந்திரி குமாரி24/06/1950எல்லீஸ்.   ஆர்.டங்கன்ஜி.ராமநாதன்வீரமோகன்151
23.மர்மயோகி02/02/1951கே.ராம்நாத்சி.ஆர்.சுப்புராமன்-எஸ்.எம்.சுப்பையா நாயுடுகரிகாலன்151
24.ஏக்த ராஜா (ஹிந்தி)15/06/1951கே.ராம்நாத்---
25.சர்வாதிகாரி14/09/1951டி.ஆர்.சுந்தரம்எஸ்.எம்.சுப்பையா           நாயுடுபிரதாபன்142
26.சர்வாதிகாரி (தெலுங்கு)05/10/1951டி.ஆர்.சுந்தரம்எஸ்.எம்.சுப்பையா நாயுடுபிரதாபன்-
27.அந்தமான் கைதி14/03/1952வி.கிருஷ்ணன்கோவிந்தராஜுலு    நாயுடுநடராஜன்133
28.குமாரி11/04/1952ஆர்.பத்மநாபன்சி.ஆர்.சுப்புராமன்விஜயன்112
29.என் தங்கை31/05/1952சி.எச்.நாராயணமூர்த்திசி.என்.       பாண்டுரங்கன்ராஜேந்திரன்352
30.நாம்05/03/1953ஏ.காசிலிங்கம்சி.எஸ்.ஜெயராமன்குமரன்50
31.ஜெனோவா (மலையாளம்)05/03/1953எஃப்.நாகூர்டி.ஏ.கல்யாணம்-.ஞானமணி-சி.ஆர்.சுப்புராமன்சிப்ரேஸா-
32.பணக்காரி05/03/1953கோபால     கிருஷ்ணன்எஸ்.வி.   வெங்கட்ராமன்சுந்தர்50
33.ஜெனோவா (தமிழ்)05/03/1953எஃப்.நாகூர்.ஞானமணி-எம்.எஸ். விஸ்வநாதன்-டி.கே.ராமமூர்த்திசிப்ரேஸா133
34.மலைக்கள்ளன்22/07/1954ஸ்ரீராமுலு           நாயுடுஎஸ்.எம்.சுப்பையா நாயுடுகுமாரதேவன்150
35.கூண்டுக்கிளி26/08/1954டி.ஆர்.ராமண்ணாகே.வி.மகாதேவன்தங்கராஜ்42
36.குலேபகாவலி29/07/1955டி.ஆர்.ராமண்ணாஎம்.எஸ்.  விஸ்வநாதன்-டி.கே.ராமமூர்த்திதாசன்166
37.அலிபாவும் 40 திருடர்களும்14/01/1956டி.ஆர்.சுந்தரம்தட்சணாமூர்த்திஅலிபாபா168
38.மதுரை வீரன்13/04/1956டி.யோகானந்த்ஜி.ராமநாதன்வீரன்200
39.தாய்க்குப் பின் தாரம்21/09/1956எம்.ஏ.திருமுகம்கே.வி.மகாதேவன்முத்தையா166
40.சக்ரவர்த்தி திருமகள்18/01/1957ப.நீலகண்டன்ஜி.ராமநாதன்உதயசூரியன்140
41.ராஜராஜன்26/04/1957டி.வி.சுந்தரம்கே.வி.மகாதேவன்ராஜன்50
42.புதுமைபித்தன்02/08/1957டி.ஆர்.ராமண்ணாடி.ஆர்.பாப்பாஜீவகன்105
43.மகாதேவி22/11/1957சுந்தர்ராவ்         நட்கர்னிஎம்.எஸ்.  விஸ்வநாதன்-டி.கே.ராமமூர்த்திதாசன்177
44.நாடோடி மன்னன்22/08/1958எம்.ஜி.ஆர்.எஸ்.எம்.சுப்பையா நாயுடுவீராங்கன்-மார்த்தாண்டன்200
45.தாய் மகளுக்குக் கட்டிய தாலி31/12/1959ஆர்.ஆர்.சந்திரன்டி.ஆர்.பாப்பாகனகு-
46.பாக்தாத் திருடன்06/05/1960டி.வி.சுந்தரம்இப்ராஹீம்அபு112
47.ராஜாதேசிங்கு02/09/1960டி.ஆர்.ரகுநாத்ஜி.ராமநாதன்தேசிங்கு                    -தாவுத்கான்50
48.மன்னாதி மன்னன்19/10/1960எம்.நடேசன்எம்.எஸ்.  விஸ்வநாதன்-டி.கே.ராமமூர்த்திமணிவண்ணன்100
49.அரசிளங்குமரி01/01/1961ஏ.எஸ்.ஏ.சாமிஜி.ராமநாதன்அறிவழகன்50
50.திருடாதே23/03//1961ப.நீலகண்டன்எஸ்.எம்.சுப்பையா நாயுடுபாலு161
51.சபாஷ் மாப்பிளே14/07/1961எஸ்.ராகவன்கே.வி.மகாதேவன்வாசு50
52.நல்லவன் வாழ்வான்31/08/1961ப.நீலகண்டன்டி.ஆர்.பாப்பாமுத்து70
53.தாய் சொல்லைத் தட்டாதே07/11/1961எம்.ஏ.திருமுருகம்கே.வி.மகாதேவன்ராஜ்140
54.ராணி சம்யுக்தா14/01/1962டி.யோகானந்த்கே.வி.மகாதேவன்பிரிதிவிராஜன்50
55.மாடப்புறா16/02/1962எஸ்.ஏ.சுப்பராமன்கே.வி.மகாதேவன்ராமு40
56.தாயைக் காத்த தனயன்13/04/1962எம்.ஏ.திருமுருகம்கே.வி.மகாதேவன்சேகர்140
57.குடும்பத் தலைவன்15/08/1962எம்.ஏ.திருமுருகம்கே.வி.மகாதேவன்வாசு108
58.பாசம்31/08/1962டி.ஆர்.ராமண்ணாஎம்.எஸ்.  விஸ்வநாதன்-டி.கே.ராமமூர்த்திகோபி70
59.விக்கிரமாதித்தன்27/10/1962டி.ஆர்.ரகுநாத்-என்.எஸ்.ராமதாஸ்சி.ஆர்.சுப்புராமன்மாதித்தர்50
60.பணத்தோட்டம்11/01/1963கே.சங்கர்எம்.எஸ். விஸ்வநாதன்-டி.கே.ராமமூர்த்திசெல்வம்80
61.கொடுத்து வைத்தவள்09/02/1963ப.நீலகண்டன்கே.வி.மகாதேவன்செல்வம்60
62.தர்மம் தலைகாக்கும்22/02/1963எம்.ஏ.திருமுருகம்கே.வி.மகாதேவன்சந்திரன்117
63.கலை அரசி19/04/1963ஏ.காசிலிங்கம்கே.வி.மகாதேவன்மோகன்50
64.பெரிய இடத்துப் பெண்10/05/1963டி.ஆர்.ராமண்ணாஎம்.எஸ். விஸ்வநாதன்-டி.கே.ராமமூர்த்திமுருகப்பன்131
65.ஆனந்த ஜோதி28/08/1963வி.என்.ரெட்டி-ஏ.எஸ்.ஏசாமிஎம்.எஸ்.  விஸ்வநாதன் -டி.கே.ராமமூர்த்திஆனந்த்50
66.நீதிக்குப் பின் பாசம்15/08/1963எம்.ஏ.திருமுருகம்கே.வி.மகாதேவன்கோபால்100
67.காஞ்சித் தலைவன்26/10/1963ஏ.காசிலிங்கம்கே.வி.மகாதேவன்நரசிம்ம             பல்லவர்50
68.பரிசு15/11/1963டி.யோகானந்த்கே.வி.மகாதேவன்வேணு100
69.வேட்டைக்காரன்14/01/1964எம்.ஏ.திருமுருகம்கே.வி.மகாதேவன்பாபு147
70.என் கடமை13/03/1964எம்.நடேசன்எம்.எஸ். விஸ்வநாதன்-டி.கே.ராமமூர்த்திநாதன்70
71.பணக்கார குடும்பம்24/04/1964டி.ஆர்.ராமண்ணாஎம்.எஸ். விஸ்வநாதன்-டி.கே.ராமமூர்த்திநல்லதம்பி133
72.தெய்வத்தாய்18/07/1964பி.மாதவன்எம்.எஸ். விஸ்வநாதன்-டி.கே.ராமமூர்த்திமாறன்105
73.தொழிலாளி25/09/1964எம்.ஏ.திருமுருகம்கே.வி. மகாதேவன்            -ராஜ்77
74.படகோட்டி03/11/1964டி.பிரகாஷ்ராவ்எம்.எஸ்.விஸ்வநாதன்-டி.கே.ராமமூர்த்திமாணிக்கம்102
75.தாயின் மடியில்18/12/1964ஏ.சுப்பாராவ்எஸ்.எம்.சுப்பையா நாயுடுராஜா50
76.எங்க வீட்டுப் பிள்ளை14/01/1965சாணக்யாஎம்.எஸ்.  விஸ்வநாதன்இளங்கோ-            ராமு236
77.பணம் படைத்தவன்27/03/1965டி.ஆர்.ராமண்ணாஎம்.எஸ்.  விஸ்வநாதன்ராஜா90
78.ஆயிரத்தில் ஒருவன்09/07/1965பி.ஆர்.பந்துலுஎம்.எஸ். விஸ்வநாதன்-டி.கே.ராமமூர்த்திமணிமாறன்125
79.கலங்கரை விளக்கம்28/08/1965கே.சங்கர்எம்.எஸ்.  விஸ்வநாதன்ரவி90
80.கன்னித்தாய்10/09/1965எம்.ஏ.திருமுருகம்கே.வி.மகாதேவன்சரவணன்60
81.தாழம்பூ23/10/1965என்.எஸ்.ராமதாஸ்கே.வி.மகாதேவன்துரை50
82.ஆசைமுகம்10/12/1965பி.புல்லையாகே.வி.மகாதேவன்மனோகர்-   வஜ்ரவேலு70
83.அன்பே வா14/01/1966ஏ.சி.திருலோகசந்தர்எம்.எஸ்.  விஸ்வநாதன்பாலு(ஜே.பி.)154
84.நான் ஆணையிட்டால்04/02/1966சாணக்யாஎம்.எஸ்.  விஸ்வநாதன்பாண்டியன்70
85.முகராசி18/02/1966எம்.ஏ.திருமுருகம்கே.வி.மகாதேவன்ராஜ்100
86.நாடோடி14/04/1966பி.ஆர்.பந்துலுஎம்.எஸ்.  விஸ்வநாதன்தியாகு70
87.சந்திரோதயம்27/05/1966கே.சங்கர்எம்.எஸ்.  விஸ்வநாதன்சந்திரன்100
88.தாலிபாக்கியம்27/08/1966கே.பி.நாகபூஷணம்கே.வி.மகாதேவன்முருகன்45
89.தனிப்பிறவி16/09/1966எம்.ஏ.திருமுருகம்கே.வி.மகாதேவன்முத்தையா70
90.பறக்கும் பாவை11/11/1966டி.ஆர்.ராமண்ணாகே.வி.மகாதேவன்ஜீவா70
91.பெற்றால்தான் பிள்ளையா09/12/1966கிருஷ்ணன்-பஞ்சுஎம்.எஸ்.  விஸ்வநாதன்ஆனந்தன்100
92.தாய்க்குத் தலைமகன்13/01/1967எம்.ஏ.திருமுருகம்கே.வி.மகாதேவன்மருது70
93.அரச கட்டளை19/05/1967எம்.ஜி.சக்ரபாணிகே.வி.மகாதேவன்விஜயன்150
94.காவல்காரன்07/09/1967ப.நீலகண்டன்எம்.எஸ்.  விஸ்வநாதன்மணி169
95.விவசாயி01/11/1967எம்.ஏ.திருமுருகம்கே.வி.மகாதேவன்முத்தையா100
96.ரகசிய போலீஸ் 11511/01/1968பி.ஆர்.பந்துலுஎம்.எஸ்.  விஸ்வநாதன்ராமு113
97.தேர்த் திருவிழா23/02/1968எம்.ஏ.திருமுருகம்கே.வி.மகாதேவன்சரவணன்50
98.குடியிருந்த கோயில்05/03/1968கே.சங்கர்எம்.எஸ்.  விஸ்வநாதன்சங்கர்-பாபு133
99.கண்ணன் என் காதலன்25/04/1968ப.நீலகண்டன்எம்.எஸ்.  விஸ்வநாதன்கண்ணன்70
100.புதிய பூமி27/06/1968சாணக்யாஎம்.எஸ்.  விஸ்வநாதன்கதிரவன்50
101.கணவன்15/08/1968ப.நீலகண்டன்எம்.எஸ்.  விஸ்வநாதன்முருகன்30
102.ஒளி விளக்கு20/09/1968சாணக்யாஎம்.எஸ்.  விஸ்வநாதன்முத்து175
103.காதல் வாகனம்21/10/1968எம்.ஏ.திருமுருகம்கே.வி.மகாதேவன்பாலு40
104.அடிமைப் பெண்01/05/1969கே.சங்கர்கே.வி.மகாதேவன்வேங்கையன்176
105.நம் நாடு07/11/1969ஜம்புஎம்.எஸ்.  விஸ்வநாதன்துரை147
106.மாட்டுக்கார வேலன்14/01/1970ப.நீலகண்டன்கே.வி.மகாதேவன்வேலன்-ராமு177
107.என் அண்ணன்21/05/1970ப.நீலகண்டன்கே.வி.மகாதேவன்ரங்கன்112
108.தலைவன்24/07/1970தாமஸ்சிங்கமுத்து-எஸ்.எம்.சுப்பையா நாயுடுராஜா50
109.தேடி வந்த மாப்பிள்ளை29/08/1970பி.ஆர்.பந்துலுஎம்.எஸ்.  விஸ்வநாதன்சங்கர்105
110.எங்கள் தங்கம்09/10/1970கிருஷ்ணன்-பஞ்சுஎம்.எஸ்.  விஸ்வநாதன்தங்கம்112
111.குமரிக் கோட்டம்26/01/1971ப.நீலகண்டன்எம்.எஸ்.  விஸ்வநாதன்கோபால்119
112.ரிக்ஷாக்காரன்29/05/1971எம்.கிருஷ்ணன்எம்.எஸ்.  விஸ்வநாதன்செல்வம்167
113.நீரும் நெருப்பும்18/10/1971ப.நீலகண்டன்கே.வி.மகாதேவன்மணிவண்ணன்-கரிகாலன்108
114.ஒரு தாய் மக்கள்09/12/1971ப.நீலகண்டன்எம்.எஸ்.  விஸ்வநாதன்கண்ணன்50
115.சங்கே முழங்கு04/02/1972ப.நீலகண்டன்எம்.எஸ்.  விஸ்வநாதன்முருகன்60
116.நல்ல நேரம்10/03/1972எம்.ஏ.திருமுருகம்கே.வி.மகாதேவன்ராஜ்113
117.ராமன் தேடிய சீதை13/04/1972ப.நீலகண்டன்எம்.எஸ்.  விஸ்வநாதன்ராமன்110
118.நான் ஏன் பிறந்தேன்09/06/1972எம்.கிருஷ்ணன்சங்கர் கணேஷ்கண்ணன்100
119.அன்னமிட்டகை15/09/1972எம்.கிருஷ்ணன்கே.வி.மகாதேவன்துரைராஜ்50
120.இதய வீணை20/10/1972கிருஷ்ணன்-பஞ்சுசங்கர் கணேஷ்சுந்தரம்133
121.உலகம் சுற்றும் வாலிபன்11/05/1973எம்.ஜி.ஆர்.எம்.எஸ்.  விஸ்வநாதன்ராஜ்-முருகன்300
122.பட்டிக்காட்டுப் பொன்னையா10/08/1973பி.எஸ்.ரங்காகே.வி.மகாதேவன்முத்தையா-பொன்னையா30
123.நேற்று இன்று நாளை12/07/1973ப.நீலகண்டன்எம்.எஸ்.  விஸ்வநாதன்மாணிக்கம்124
124.உரிமைக்குரல்07/01/1974சி.வி.ஸ்ரீதர்எம்.எஸ்.  விஸ்வநாதன்கோபி200
125.சிரித்து வாழ வேண்டும்30/11/1973எஸ்.எஸ்.பாலன்எம்.எஸ்.  விஸ்வநாதன்ராமு-ரஹ்மான்105
126.நினைத்ததை முடிப்பவன்09/05/1975ப.நீலகண்டன்எம்.எஸ்.  விஸ்வநாதன்சுந்தரம்-ரஞ்சித்112
127.நாளை நமதே04/07/1975கே.எஸ்.சேதுமாதவன்எம்.எஸ்.  விஸ்வநாதன்சங்கர்-விஜய்140
128.இதயக்கனி22/08/1975ஏ.ஜெகநாதன்எம்.எஸ்.  விஸ்வநாதன்மோகன்151
129.பல்லாண்டு வாழ்க31/10/1975கே.சங்கர்கே.வி.மகாதேவன்ராஜ்112
130.நீதிக்குத் தலைவணங்கு18/03/1976ப.நீலகண்டன்எம்.எஸ்.  விஸ்வநாதன்விஜய்151
131.உழைக்கும் கரங்கள்23/05/1976கே.சங்கர்எம்.எஸ்.  விஸ்வநாதன்ரங்கா103
132.ஊருக்கு உழைப்பவன்12/11/1976எம்.கிருஷ்ணன்எம்.எஸ்.  விஸ்வநாதன்செல்வம்-குமார்101
133.நவரத்தினம்05/03/1977ஏ.பி.நாகராஜன்குன்னக்குடி வைத்தியநாதன்தங்கம்70
134.இன்று போல் என்றும் வாழ்க05/05/1977கே.சங்கர்எம்.எஸ்.  விஸ்வநாதன்முருகன்119
135.மீனவ நண்பன்14/08/1977சி.வி.ஸ்ரீதர்எம்.எஸ்.  விஸ்வநாதன்குமரன்151
136.மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்14/01/1978எம்.ஜி.ஆர்.எம்.எஸ்.  விஸ்வநாதன்சுந்தரபாண்டியன்60
137.அவசர போலீஸ் 10017/01/1990கே.பாக்யராஜ்எம்.எஸ்.  விஸ்வநாதன்-கே.பாக்யராஜ்ராஜ்60