செவ்வாய், 31 ஜனவரி, 2017

உலக சதுப்பு நில நாள் (World Wetlands Day) பிப்ரவரி 2 .


உலக சதுப்பு நில நாள் (World Wetlands Day)  பிப்ரவரி 2 .

உலக சதுப்பு நில நாள் (World Wetlands Day) என்பது சதுப்பு நிலங்களின் முக்கியத்துவத்தினை மக்கள் அறிந்து கொள்ள கொண்டாடப்படும் நாளாகும். இந்த நாள் பிப்ரவரி 2 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

உலகில் உவர்நீர் நிறைந்த கடலுக்கும், நிலங்களுக்கும் இடையில் குறைந்த ஆழத்தில் ஆண்டு முழுவதும் நீர் தேங்கி இருக்கும் பகுதியாக சதுப்பு நிலங்கள் உருவாகின. பூமியின் மொத்தப் பரப்பில் 6 சதவீத பகுதி சதுப்பு நிலங்களாக உள்ளன. இவை பெரும்பாலும் இயற்கையாக உருவானவை, மனிதனால் உருவாக்கப்பட்டவை என இரண்டு பிரிவாக வகைப்படுத்தப்படுகின்றன.

அலையாத்திக் காடுகள், குட்டைகள் உள்ளிட்டவை இயற்கையாக உருவானவை என்றும், ஏரிகள், குளங்கள், நீர்தேங்கும் குவாரிப்பள்ளங்கள் ஆகியவை மனிதனால் உருவாக்கப்பட்டவை என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.

சதுப்புநில நாள் துவக்கம்

1971-ல் காசுபியன் கடற்பகுதியிலுள்ள ஈரான் நாட்டின் ராம்சர் நகரில் 18 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் சதுப்பு நிலங்களையும், நீர்நிலைகளையும் பாதுகாப்பது குறித்து முடிவுசெய்து, அதுபற்றிய விவாதக் கூட்டத்தையும், அதே ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்கி ஒருமனதாக முடிவுசெய்யப்பட்டது. இதேநாளை (பிப்ரவரி 2-ஐ) உலக சதுப்புநில நாளாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. மேலும் இக்கூட்டம் ராம்சர் நகரில் நடைபெற்றதால் இந்த அமைப்புக்கு ராம்சர் அமைப்பு என பெயர் பெற்றது.

விவரங்கள்

ராம்சர் அமைப்பில், இந்தியா உட்பட 161 நாடுகள் உள்ளன. உலகின் சுற்றுசூழல் முக்கியத்துவம் வாய்ந்த 1,950 சதுப்புநிலங்கள் பட்டியலிடப்பட்டு அவ்வமைப்பால் அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் மட்டும் 25 சதுப்புநிலங்கள் ராம்சர் தகுதிவாய்ந்தவையாகவும் அதில் தமிழகத்தில் கோடியக்கரை, பழவேற்காடு போன்றவை அடங்கும்.

வியாழன், 26 ஜனவரி, 2017

ஆன்மிகவாதி வள்ளலார் இராமலிங்க அடிகளார் நினைவு தினம் ஜனவரி 30ஆன்மிகவாதி வள்ளலார் இராமலிங்க அடிகளார் நினைவு தினம் ஜனவரி 30

வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (அக்டோபர் 5, 1823 – சனவரி 30, 1873) ஓர் ஆன்மிகவாதி ஆவார். இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர். "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடியவர் இவர்.

சாதி சமய வேறுபாட்டுக்கு எதிரான தமது நிலைப்பாடு காரணமாக, சமுதாயத்தின் பழைமைப் பற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டவர். வள்ளலாருக்கு எதிராக வழக்குமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் ஆறுமுக நாவலர்.

பிறப்பு

இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 05.10.1823இல் பிறந்தவர். பெற்றோர் இராமையாபிள்ளை, சின்னம்மையார். இவரோடு சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகிய நால்வரும் உடன்பிறந்தவர்கள். இராமலிங்கர் பிறந்த ஆறாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார். தாயார் குழந்தைகளோடு பொன்னேரி சென்று வாழ்ந்தார். பின்னர் சென்னையில் ஏழுகிணறு பகுதி 39, வீராசாமி பிள்ளை தெருவில் உள்ள வீட்டில் குடியேறினார். அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து வந்தார்.
பசியாற்றல்
அரிசி மூட்டைகள் இருக்கும் இராமலிங்க அடிகளால் உருவாக்கப்பட்ட தருமசாலை

இராமலிங்க அடிகள் 23–5–1867 அன்று வடலூர் மக்களிடம் இருந்து 80 காணி நிலம் பெற்று தருமசாலையை தொடங்கினார். இந்த தருமசாலைக்கு வந்தவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டது.தற்போது தருமசாலைக்கான உணவுப்பொருட்களை தமிழக அரசு குறைந்த விலைக்கு வழங்கி வருகிறது என்பது பாராட்டுக்கு உரியதாகும்.மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியை போக்கிட வள்ளலார் வழி வகுத்தார். இன்றளவும் வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்கு பசியாற்றப்படுகிறது. வடலூரில் தலைமை இடம் இருந்தாலும், உலகமெங்கும் அவரது கொள்கையைப் பின்பற்றுகின்றவர்கள் பசியாற்றுகிறார்கள்.

வள்ளலாரின் பன்முக ஆற்றல்கள்.
    சிறந்த சொற்பொழிவாளர் .
    போதகாசிரியர்.
    உரையாசிரியர்.
    சித்தமருத்துவர்.
    பசிப் பிணி போக்கிய அருளாளர் .
    பதிப்பாசிரியர்.
    நூலாசிரியர்.
    இதழாசிரியர்.
    இறையன்பர்.
    ஞானாசிரியர்.
    அருளாசிரியர்.
    சமூக சீர்திருத்தவாதி.
    தீர்க்கதரிசி
    மொழி ஆய்வாளர் (தமிழ்)

சன்மார்க்கச் சிந்தனையாளர்
the main gate of sathya gnana tharuma sabai, vadalur, established by vallalar ramalinga adigal

தன் வாழ்வின் பெரும்பகுதியைச் சென்னையில் கழித்த இவர், நவீன சமுதாயங்களின் பிரச்சினைகளை உணர்ந்திருந்தார். அனைத்துச் சமய நல்லிணக்கத்திற்காகவும் சன்மார்க்கத்திற்காகவும் (righteousness in all endeavours) தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார். இந்நோக்கத்தை அடையும் பொருட்டு சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையை அமைத்தார். 1867ஆம் ஆண்டில் சத்திய தரும சாலையையும் நிறுவினார். அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாக கருதப்பட்டாலும், தற்பொழுது உலகெங்கும் அவருடைய சிந்தனைகளுக்கு ஒத்த கொள்கைகள் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்படுகின்றன.
இவருடைய காலத்தில் இருந்தவர்கள்

    ஆறுமுக நாவலர்
    மீனாட்சிசுந்தரம் பிள்ளை
    காஞ்சிபுரம் சபாபதி முதலியார்

இராமலிங்க அடிகள் கோட்பாடுகள்
இராமலிங்க அடிகள் கொள்கைகள்


    கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.
    புலால் உணவு உண்ணக்கூடாது.
    எந்த உயிரையும் கொல்லக்கூடாது.
    சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது.
    இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்.
    எதிலும் பொது நோக்கம் வேண்டும்.
    பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.
    சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது.
    எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது.
    மத வெறி கூடாது .

    எம்மத நிலையும் நின் அருள்

    நிலையில் இலங்குதல் அறிந்தனன் எல்லாம் சம்மதம் ஆக்கிக் கொள்கின்றேன் அல்லால் தனித்து வேறு எண்ணியது உண்டோ? செம்மல் உன்பாதம் அறிய நான் அறியேன் சிறிதும் இங்கு இனித்துயர்ஆற்றேன் இம்மதிக்கு அடியேன் குறித்தவாறு உள்ளது இயற்றுவது உன்கடன்
    எந்தாய்
    —திருவருட்பா, ஆறாம் திருமுறை ,3639

அதாவது எந்த சமயத்தின் நிலைப்பாட்டையும், எல்லா மத நெறிகளையும் சம்மதம் ஆக்கிக் கொள்கிறேன் என்கிறார்.
வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்

    நல்லோர் மனதை நடுங்க செய்யாதே.
    தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே.
    மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே.
    ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே.
    பொருளை இச்சித்து பொய் சொல்லாதே.
    பசித்தோர் முகத்தைப் பாராதிராதே.
    இரப்போர்க்கு பிச்சை இல்லை என்னாதே.
    குருவை வணங்கக் கூசி நிற்காதே.
    வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே
    தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே.

படைப்புக்கள்
வள்ளலார் பதிப்பித்தவை


    சின்மய தீபிகை
    ஒழிவிலொடுக்கம்
    தொண்டமண்டல சதகம்

இயற்றிய உரைநடை

    மனுமுறைகண்ட வாசகம்
    ஜீவகாருண்ய ஒழுக்கம்

திருவருட்பா

இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது.[5]இது ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது. திருவருட்பா, முதலில் இராமலிங்கஅடிகளின் தலைமைச் சீடர் தொழுவூர் வேலாயுதனாரால் நான்கு திருமுறைகளாக வெளியிடப்பட்டது. பின்னர் ஐந்தாம், ஆறாம் திருமுறைகள் வெளியிடப்பட்டன. முன்னாள் தமிழக அறநிலையத்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன், இராமலிங்கரின் உரைநடை, கடிதங்கள் முதலியவற்றைத் தனி நூலாகத் தொகுத்து வெளியிட்டார். பின்னர் ஊரன் அடிகளும் காலமுறை பதிப்பு வெளியிட்டுள்ளார்.
அருள் விளக்க மாலை பாடல் (4174)

நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே
மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார்
இலைநீ விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே

கண்டன நூல்கள்


வள்ளலார் எழுதிய திருவருட்பாவுக்கு எதிராக பல கண்டன நூல்கள் வெளிவந்தன.வள்ளலார் மேற் கொண்ட சமய சீர்திருத்தத்தால் அவரை அன்றைய சைவவாதிகள் ஏற்கவில்லை. இதன் தொடர்ச்சியாக வள்ளலார் எழுத்துக்களையும் புறம் தள்ளினர். எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் செய்தனர். வள்ளலார் முன் வைத்த மாற்றுப் பண்பாட்டையும் மறுத்தனர். 1868 இல் சண்முகம் பிள்ளை என்பவரால் திருவருட்பா தூஷண பரிகாரம் என்னும் நூலின் வழி இவ்விவாதம் தொடங்க ஆரம்பித்தது. 1869 இல் போலியருட்பா மறுப்பு என்ற நூல் எழுதப்பட்டது , இது அருட்பா அல்ல, அது போலி அருட்பா என்று பல காரணங்களைக் கூறி இந்நூல் மறுத்தது. இதற்கு எதிராக 12 கண்டன நூல்கள் வெளிவந்தன.

1904 இல் கதிரைவேல் பிள்ளை வள்ளலாருக்கு எதிராக இராமலிங்கம் பிள்ளை பாடல் ஆபாச தர்ப்பணம் அல்லது மருட்பா மறுப்பு என்ற நூலை அவர் எழுதி வெளியிட்டார். இந்நூலுக்கு மறுப்பாக ம.தி. பானுகவி என்பவர், 1905 இல் இராமலிங்கம் பிள்ளை பாடல் ஆபாச தர்ப்பண கண்டன நியாய வச்சிர குடாரம் என்ற நூலை எழுதி வெளியிட்டார். சைவ சமயத்தில் சீர்திருத்தம் செய்த வள்ளலாரை பழைமை வாதிகள் ஏற்றுக் கொள்ள மறுத்த நிகழ்வுகளாகவே இக்கண்டன நூல் போக்குகளைப் பார்க்கலாம்.

மகாத்மா காந்தி நினைவு தினம் ஜனவரி 30, 1948.மகாத்மா காந்தி நினைவு தினம் ஜனவரி 30, 1948.

மோகன்தாசு கரம்சந்த் காந்தி (Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை"  என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.

இவரது பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது.

    வாழ்க்கை
இளமை


மோகன்தாஸ் காந்தி 2 அக்டோபர் 1869 அன்று இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். இவரது தாய் மொழி குஜராத்தி. தந்தையார் பெயர் கரம்சந்த் காந்தி, தாயார் புத்லிபாய். காந்தி தனது 13ஆம் வயதில் தம் வயதேயான கஸ்தூரிபாயை மணந்தார். பின்னாளில் இருவரும் நான்கு ஆண் மகன்களைப் பெற்றெடுத்தனர்: ஹரிலால் (1888), மணிலால் (1892), ராம்தாஸ் (1897), தேவ்தாஸ் (1900). தனது 16வது வயதில் காந்தி தன் தந்தையை இழந்தார்.


பள்ளிப்படிப்பில் ஒரு சுமாரான மாணவனாகவே காணப்பட்டார் காந்தி. தனது 18ஆம் வயதில் பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு பாரிஸ்டர் (barrister) எனப்படும் வழக்குரைஞர் படிப்பிற்காக காந்தி இங்கிலாந்து சென்றார். தன் படிப்பை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்குரைஞராக பணியாற்றினார். இது வெற்றிகரமாக அமையாததால் தன் அண்ணன் இருப்பிடமான ராஜ்கோட்டிற்கு சென்ற காந்தி, அங்கேயுள்ள நீதிமன்றத்தில் வழக்காட வருபவர்களின் படிவங்களை நிரப்பும் எளிய பணியில் ஈடுபட்டார். ஆனால் அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரியிடம் ஏற்பட்ட சிறிய தகராறால் இவ்வேலையும் பறிபோனது. இச்சமயத்தில் தென்னாப்பிரிக்காவில் தன் தகுதிக்கேற்ற வேலை ஒன்று காலியிருப்பதாக அறிந்த காந்தி, 1893 ஏப்ரல் மாதம் அப்துல்லாஹ் அன் கோ எனும் இந்திய நிறுவனம் ஒன்றின் உதவியுடன் உடனே அங்கு பயணமானார்.
தென்னாப்பிரிக்காவில்

இச்சமயம் தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும் இனப்பாகுபாடும் மிகுந்து இருந்தது. இதுவரை அரசியல் ஈடுபாடில்லாது தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டுமே கவனித்து வந்த இளைஞராயிருந்தார் காந்தி. தென்னாப்பிரிக்காவில் அவருக்கேற்பட்ட அனுபவங்கள், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்க உதவியது.

அங்குள்ள நாட்டல் (Natal) மாகாணத்தின் டர்பன் (Durban) நகரில் உள்ள நீதிமன்றத்தில் ஒருநாள் இந்திய வழக்கப்படி தலைப்பாகை அணிந்து வழக்காடச்சென்ற காந்தியிடம் அத்தலைப்பாகையை விலக்குமாறு நீதிமன்றத்தின் நீதிபதி உத்தரவிட்டார். காந்தியோ இவ்வுத்தரவை எதிர்க்கும் பொருட்டு நீதிமன்றத்தை விட்டு உடனே வெளியேறினார். பிறகொரு நாள் பிரிட்டோரியா (Pretoria) செல்வதற்காக தகுந்த பயணச்சீட்டுடன் தொடருந்தில் முதல் வகுப்புப் பெட்டியில் பயனம் செய்த காந்தி, அவர் ஒரு வெள்ளையர் இல்லை என்ற காரணத்திற்காக, ஆங்கிலேய அதிகாரி ஒருவரால் (Pietermaritzburg) தொடருந்து நிலையத்தில் பெட்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். வெள்ளையர் அல்லாத ஒரே காரணத்தால் இது போன்று பல இன்னல்களை காந்தி அனுபவித்தார். இதன் மூலம் தென்னாப்பிரிக்காவின் கறுப்பின மக்களும் அங்கே குடியேறிய இந்தியர்களும் படும் இன்னல்களை காந்தி நன்குணர்ந்தார்
.
தென்னாப்பிரிக்காவில் காந்தி (1906)

தனது ஒப்பந்தக்காலம் முடிவடைந்து இந்தியா திரும்ப காந்தி தயாரானபோது, அங்குள்ள இந்தியரின் வாக்குரிமையைப் பறிக்கும் தீர்மானத்தை நாட்டல் சட்டப்பேரவை இயற்ற இருப்பதாக செய்தித்தாளில் படித்தறிந்தார். இதை எதிர்க்குமாறு காந்தி அவரது இந்திய நண்பர்களிடம் அறிவுறுத்தினார். அவர்களோ, தங்களிடம் இதற்குத் தேவையான சட்ட அறிவு இல்லையெனக் கூறி, காந்தியின் உதவியை நாடினர். காந்தியும் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, தன் தாயகம் திரும்பும் முடிவை மாற்றிக்கொண்டு இத்தீர்மானத்தை எதிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் அங்குள்ள இந்தியர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பிறகு 1894ம் ஆண்டு நாட்டல் இந்திய காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி தொடங்கி அதற்கு அவரே பொறுப்பாளரானார். இதன் மூலம் நாட்டல் மாகாணத்திலிருந்த இந்தியர் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களை தங்கள் உரிமைக்காக குரலெழுப்ப ஊக்கப்படுத்தினார்.

1906ஆம் ஆண்டு ஜோகார்னஸ்பேக் நகரில் நடந்த ஒரு போராட்டத்தில் முதன்முறையாக சத்தியாகிரகம் எனப்படும் அறவழிப்போராட்டத்தை பயன்படுத்தினார். அகிம்சை, ஒத்துழையாமை, கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல் ஆகிய கொள்கைகள் இவ்வறவழிப் போராட்டத்தின் பண்புகளாகும். இந்த காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை சென்றனர். தொடக்கத்தில் ஆங்கில அரசாங்கம் இவர்களை எளிதாக அடக்கியது போல் தோன்றியது. பின்னர் பொதுமக்களும் ஆங்கில அரசாங்கமும் இவர்களின் உண்மையான மற்றும் நேர்மையான வாதங்களை புரிந்துகொண்டு இவர்களுடைய கோரிக்கைகளை ஏற்கும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு தனது அறவழிப் போராட்டத்தின் மூலம் தென்னாப்பிரிக்க வாழ் இந்தியரின் சமூக நிலையை மேம்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்ட காந்தி தாயகம் திரும்பினார்.
மும்பை துறைமுகத்தில்

1915 -ம் ஆண்டு ஜனவரி 9 ம் தேதி மும்பை துறைமுகத்தில் காந்தி இறங்கியபோது உடையில் அடியோடு உருமாறியிருந்தார். தழையத் தழையக் கச்சமிட்டுக் கட்டிய மில் வேட்டி, தொள தொள ஜிப்பா, அங்கவஸ்திரம், தலையில் பெரிய முண்டாசு சகிதம் ஒரு கத்தியவாரி விவசாயி உடையில் காட்சியளித்தார்.

அப்பல்லோ பந்தர் துறைமுகத்தில் இறங்கிய காந்தி - கஸ்தூரிபா தம்பதி வெளியே வந்தபோது ஒரு கோலாகல வரவேற்பளிக்க, மிதவாத அரசியல் தலைவர் கோபாலகிருஷ்ண கோகலே ஏற்பாடு செய்திருந்தார். மேல் விரிப்பு திறந்த மோட்டார் காரில் காந்தியையும் அவரது மனைவியையும் அமரச் செய்து ஊர்வலமாக இட்டுச் சென்றார். (தற்போது இந்நாளை நினைவு கூர்ந்து வெளிநாடுவாழ் இந்தியர் நாள் கொண்டாடப்படுகின்றது)

இந்தியாவுக்கு வந்து சேர்ந்த மூன்றாம் நாள், 1915 ஜனவரி 12 அன்று பம்பாய் பெட்டார் சாலையில் மவுண்ட் பெடிட் வளாகத்தில் காந்திஜிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய விடுதலைப் போராட்டத்தில்

தென்னாப்பிரிக்காவில் காந்தி தலைமையேற்று நடத்திய போராட்டங்களைப் பற்றி இந்திய மக்கள் அறிந்திருந்தனர். காந்திக்கு, கோபால கிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர் போன்றோருடன் நட்பு ஏற்பட்டது. காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் முழு வீச்சில் ஈடுபட்டார்.

1924ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைமையேற்றவுடன் காங்கிரசில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தி இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார். அறப்போராட்ட வழிமுறைகளையும் சுதேசி போன்ற கொள்கைகளையும் வலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை இந்தியாவின் மாபெரும் விடுதலை இயக்கமாக்கினார்.
உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை (மார்ச் 1930)

பிப்ரவரி 1930ல் ஆங்கிலேய அரசு, இந்தியாவில் இந்தியர்களால் தயாரிக்கப்படும் உப்புக்கு வரி விதித்தது. மேலும், இந்தியாவில் இந்தியரால் தயாரிக்கப்படும் உப்பை பிரிட்டிஷ் அரசாங்கத்தை தவிர வேறு யாரும் விற்கக் கூடாது என்ற சட்டத்தையும் இயற்றியது. இதை விலக்கிக் கொள்ளுமாறு காந்தி பிரிட்டிஷாரிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. சத்தியாகிரக முறையில் இதை எதிர்க்க முடிவெடுத்த காந்தி மார்ச் 2, 1930 அன்று 78 சத்தியாகிரகிகளுடன் அகமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை துவக்கினார். 23 நாட்கள் நடைப் பயணத்திற்குப் பிறகு, தன் சகாக்களுடன் தண்டி கடற்கரை வந்து சேர்ந்த காந்தி, அங்கிருந்த கடல் நீரை காய்ச்சி உப்பு தயாரித்து பிரிட்டிஷ் சட்டத்திற்கு எதிராக பகிரங்கமாக பொதுமக்களுக்கு விநியோகித்தார். மேலும் இந்தியாவில் கடலோரத்தில் இருந்த அனைத்து இந்தியர்களையும் இது போல் உப்பு தயாரித்து பயன்படுத்தச் சொன்னார். இந்தியாவின் பல இடங்களில் இது போல் நடந்தது; காந்தி உட்பட பல்லாயிரக் கணக்கான இந்தியர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.
காந்தி-ஜின்னா (காங்கிரஸ்-முஸ்லீம்லீக் பேச்சுவார்த்தை)
காந்தியடிகளுடன் முகமது அலி ஜின்னா

வேறு வழியில்லாமல் பிரிட்டிஷ் அரசாங்கம் காந்தியுடன் பேச்சு வார்த்தை நடத்தி இறுதியில் வரியை நீக்கிக் கொண்டது. உப்பு சத்தியாகிரகம் என்று அழைக்கப்படும் இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட சரித்திரத்தில் ஒரு திருப்புமுனையாக கருதப்படுகிறது. 1942ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும் காந்தி பெரும் பங்கு வகித்தார்.

இது போன்ற பல போராட்டங்களின் முடிவில் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா சுதந்திர நாடாக மலர்ந்தது. ஆனால் காந்தியோ, சுதந்திர கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை நினைத்து மனம் வருந்தி துக்கம் அனுசரித்தார்.
உண்ணாநிலைப் போராட்டங்கள்
முதன்மை கட்டுரை: காந்திஜியின் உண்ணாநிலைப் போராட்டப் பட்டியல்

காந்திஜி இந்திய விடுதலைக்கும், சமூக நீதியை வலியுறுத்தியும், சமய நல்லிணக்கதிற்கும், தீண்டாமைக்கு எதிராகவும், முழு மதுவிலக்கு கோரியும் 17 முறை, 139 நாட்கள் உண்ணாநிலைப் போராட்டங்கள் மேற்கொண்டார்.[5]அவற்றில் மூன்று முறை 21 நாட்கள் கொண்ட தொடர் உண்ணாநிலைப் போராட்டங்களை நடத்தினார்.
மகாத்மா

காந்திக்கு “மகாத்மா” என்னும் பட்டம் அளித்தவர் இரவீந்திரநாத் தாகூர்
மறைவு
பிர்லா மாளிகை (காந்தி சமிதி)
MKGandhi assassination spot.jpg
Gandhi death.jpg
மகாத்மா காந்தியின் அஸ்தி அலகாபாத் சங்கமத்தில் கரைப்பு காட்சி ஜவகர்லால் நேரு, மகாத்மா காந்தியின் புதல்வர்கள் ராம்தாஸ் (கலசத்துடன்) மற்றும் தேவ்தாஸ் ஆகியோருடன்

மகாத்மா காந்தி 1948 ஆம் ஆண்டு, ஜனவரி 30 ஆம் நாள் மாலை (5:17 மணி) தன் வாழ்நாளில் இறுதியாக 144 நாட்கள் தங்கியிருந்த டில்லி பிர்லா மாளிகை காந்தி சமிதி தோட்டத்தில் நாதுராம் கோட்ஸே ஆல் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
நினைவு நாள்

ஜனவரி 30 இந்தியாவில் தியாகிகள் தினமாக நடத்தப்படுகிறது.
கொள்கைகள்
பகவத் கீதை, ஜைன சமய கொள்கைகள், லியோ டால்ஸ்டாயின் எழுத்துக்கள் போன்றவற்றால் ஈர்க்கப்பட்ட காந்தி, சத்தியம், அகிம்சை ஆகிய கொள்கைகளை தன் வாழ்நாள் முழுவதும் விடாமல் கடைபிடித்தார். அசைவ உணவுகளை தவிர்க்கும் வைணவ குடும்பத்தில் பிறந்த காந்தி, சிறு வயதில் புலால் உணவை சிறிது உண்டாலும், பின்னர் சைவ உணவையே, குறிப்பாக பழங்கள், கடலை, ஆட்டுப்பால் போன்றவற்றையே உண்டு வாழ்ந்தார். சைவ உணவே அசைவ உணவை விட மனித உடலுக்கு ஆரோக்கியமானது என்று தன் சோதனைகள் மூலம் அறிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 1902 ஆம் ஆண்டுக்குப் பிறகு, பிரம்மச்சரிய விரத்தையும் கடைபிடித்தார். இவர் தனது காமத்தை வெல்லும் பொருட்டு பல்வேறு சோதனைகளைச் செய்து வந்தார். அவை பெரும் விமரிசனத்திற்கு உள்ளாகின.அவரது பரிசோதனைகளை அவரது மனைவியின் அனுமதியுடன் தான் செய்தார். இவை இன்றளவும் சரியாகப் புரிந்து கொள்ளப்படாமல் விமர்சிக்கப்படுகின்றன. வாரத்திற்கு ஒருநாள் மௌன விரதம் மேற்கொண்டார். தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியவுடன், மேல்நாட்டு உடை அணிவதைத் தவிர்த்து இந்திய உடைகளையே அணியத் தொடங்கினார். உள்நாட்டில் தயாரிக்கப்படும் காதி உடையையே இந்திய மக்கள் உடுத்தவேண்டும் என்று அறிவுறுத்தினார்.
வேறுபாடுகள்

தாழ்த்தப்பட்டவர்களும் கோயிலுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என போராட்டங்கள் எழுந்த பொழுது, அனைவரும் இந்து மதத்தின் அறத்தைப் பேண வேண்டும் என காந்தி சொன்னார் என அம்பேத்கர் எழுதி உள்ளார்.

திருநெல்வேலி சைவ சித்தாந்த குருகுலப் பள்ளியில், சமூகத்தில் உயர்ந்த வகுப்பினர்க்கு தனி விடுதி, மற்றவர்க்கு தனி விடுதி என கடைபிடிக்கப்பட்டதை, இந்து மத அறத்தின்படி சரி என காந்தி வாதிட்டார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே, ஈ. வெ. இராமசாமி நாயக்கரை பேராய கட்சியிலிருந்து (congress party) வெளியேற முடிவெடுக்க தள்ளியது. இதனை ஒட்டி, பெங்களூரில் ஈ. வெ. இராமசாமி நாயக்கருக்கும், காந்திக்கும் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது. இக் கலந்தாய்விலும், காந்தி இந்து மத அறத்தின் தேவையை வலியுறுத்தியதால் ஈ. வெ. இராமசாமி நாயக்கர் பேராய கட்சியிலிருந்து வெளியேற முடிவெடுத்தார்.
சுயசரிதை

காந்தி குஜராத்தி மொழியில் எழுதிய சுயசரிதை, சத்திய சோதனை என்ற பெயரில் தமிழ் மொழியிலும் An Autobiography: The Story of My Experiments with Truth என்ற பெயரில் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.
தமிழ்நாடு நினைவுச் சின்னங்கள்
மகாத்மா காந்தி நினைவு மண்டபம் கன்னியாகுமரி
மகாத்மா காந்தி அருங்காட்சியகம்-மதுரை

தமிழ்நாடு அரசு காந்திக்கு அவரது தியாகத்தைப் போற்றிச் சிறப்பிக்கும் வகையில் சென்னை கிண்டியில் காந்தி மண்டபம் மற்றும் அருங்காட்சியகம் அமைத்துள்ளது. மதுரையில் இராணி மங்கம்மாள் காலத்தில் அமைக்கப்பட்ட கட்டிடத்தில் 1959 முதல் காந்தி அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது.[10] இங்கு அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரிக் கரையில் நினைவு மண்டபம் அமைத்துள்ளது. இங்கு அண்ணல் காந்தியடிகளின் மார்பளவு சிலை ஒன்று வளாகத்திலும், மற்றொன்று அருங்காட்சியகத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆயிரம் பேர்கள் அமரக்கூடிய அளவில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகமும் நூலகமும் இங்குள்ளது.
மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருள்கள் ஏலம்

இந்திய தேசத் தந்தை மகாத்மா காந்தி பயன்படுத்திய சர்க்காவும், அவரது கடைசி உயிலும் 2013இல் லண்டனில் ஏலத்தில் விடப்பட்டது.அவரது சர்க்கா 1,10,000 பவுண்டுக்கும் (சுமார் ரூபாய் ஒரு கோடி), அவரது கடைசி உயில் 20,000 பவுண்டுக்கும் (சுமார் ரூபாய் 18 லட்சம்) ஏலம் போனது. இந்த ஏலம் பற்றி முன்னமே அறிந்திருந்தும் எந்த தடையும் இந்திய அரசு ஏற்படுத்தாதலால், அவை தனி நபர் வசம் செல்லும் மதிப்பற்ற நிலை அந்தப் பொருட்களுக்கு ஏற்பட்டது.
விமர்சனங்கள்
பகத்சிங்கின் தூக்குதண்டனை

பகத் சிங் கின் தூக்குதண்டனையின் போது வெள்ளையர்கள் கேட்ட தூக்குதண்டனை அங்கீகரிக்கும் பத்திரத்தில் காந்தி கையொப்பம் இட்டார்.தி லெஜன்ட் ஆஃப் பகத்சிங் என்ற இந்தி திரைப்படத்தில் இந்த தண்டனைக்கான ஒப்பீட்டு பத்திரத்தில்(காந்தி இர்வின் பேக்ட்) கையெழுத்திட்டதற்காக காந்தியை மக்கள் கடுமையாக விமர்சிப்பது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அகிம்சையை பின்பற்றுபவர் எப்படி இம்சை தரும் தூக்குதண்டனைக்கு ஒப்புதல் அளிக்கலாம்? என்பது போல கருத்துகள் மக்களால் பேசப்பட்டன.
கறுப்பின மக்களுக்கு எதிரான இனவாதம்

தென் ஆப்பிரிக்க காந்தி: பேரரசின் பல்லக்குப் பணியாளன் (The South African Gandhi: Stretcher-Bearer of Empire) என்ற நூலும் தெய்வீக முகமூடிக்குப் பின்னால் உள்ள காந்தி (Gandhi Behind the Mask of Divinity) என்ற நூலும் பிற பல கட்டுரைகளும் காந்தியை அவரது தென் ஆப்பிரிக்க எழுத்துக்களையும் செயற்பாடுகளையும் முன்வைத்தும் கறுப்பின மக்களுக்கு எதிரான இனவாதியாகவும், வெள்ளை அரசுக்கு சார்பான ஆரிய பேரினவாதியாகவும் சித்தரிக்கின்றன, விமர்சிக்கின்றன. எ.கா நற்றல் (Natal) நாடுளுமன்றத்துக்கு 1893 ஆம் ஆண்டு காந்திய எழுதிய ஒரு கடிதத்தில் பின்வருமாறு கூறுகிறார்:
“     I venture to point out that both the English and the Indians spring from a common stock, called the Indo-Aryan. … A general belief seems to prevail in the Colony that the Indians are little better, if at all, than savages or the Natives of Africa. Even the children are taught to believe in that manner, with the result that the Indian is being dragged down to the position of a raw Kaffir.”     ”
“     இந்தியர்களும் ஆங்கிலேயர்களும் இந்தோ-ஆரியர்கள் என்ற ஒரே பொதுவான மூலத்தில் இருந்து வந்தவர்கள். ...கொலனிகளில் இந்தியர்கள் ஆப்பிரிக்க காட்டுமிராண்டிகளை விட மேம்பட்டவர்களாக கருதப்படவில்லை. குழந்தைகளும் இதனை நம்ப கற்பிக்கப்படுகிறார்கள். இதனால் இந்தியர்கள் பச்சைக் காப்புலிகளின் நிலைக்கு கீழே இழுக்கப்படுகிறார்கள்.

தமிழ்க்கடல் நெல்லைக் கண்ணன் பிறந்த நாள் ஜனவரி 27 .
தமிழ்க்கடல் நெல்லைக் கண்ணன் பிறந்த நாள் ஜனவரி 27 .

நெல்லைக் கண்ணன் (பிறப்பு: சனவரி 27, 1945) என்பவர் பேச்சாளரும், பட்டிமன்ற நடுவரும் ஆவார். காமராசர், கண்ணதாசன் முதலிய 1970களில் தொடங்கி தமிழ்நாட்டு சூழலில் முக்கிய தலைவர்களாக, ஆளுமைகளாக, பிரமுகர்களாக இருந்தவர்களிடம் நெருங்கிப் பழகியவர்[சான்று தேவை].

திருநெல்வேலியில் வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்த நெல்லைக் கண்ணனின் தந்தை ந.சு. சுப்பையாபிள்ளை, தாயார் முத்துஇலக்குமி, இவருடன் உடன் பிறந்தோர் எட்டுப் பேர். நெல்லைக்கண்ணனின் முதல் மகன் சுகா எனப்படும் சுரேஷ் கண்ணன் திரைப்பட இணை இயக்குநராகவும் எழுத்தாளருமாக உள்ளார். இரண்டாம் மகன் பண்பலை வானொலியில் நிகழ்ச்சியாளராகவும் உள்ளார்.
-------------------------------------------------------------------------------------------------------------------
நெல்லைக் கண்ணன்
தந்தை - ந.சு. சுப்பையாபிள்ளை

தாய் - முத்துஇலக்குமி அம்மாள்

ஜனவரி 27 ,1945ல் பிறந்தேன்.

எட்டுப்பேர் உடன் பிறந்தோர்.

ஒரு வருடம் தந்தையின் அன்பிற்காக கல்லூரி சென்றேன்.
அடிப்படை தொழில் வேளாண்மையாகக்கொண்ட குடும்பம்.
என் துணைவி வேலம்மாளை 1969, செப்டம்பர் 7ல் கரம்பிடித்தேன்.

1997 பிப்ரவரி 23ல் அவர்கள் புற்றுநோயால் மறைந்தார்கள்.
இரு மகன்கள் -முதல் மகன் , திரைத்துறையில் இணை இயக்குநராகவும், இரண்டாம் மகன் பண்பலை வானொலியில் நிகழ்ச்சியாளராகவும் உள்ளனர்.

முதல் மருமகள் வங்கிப்பணியாளராகவும், இரண்டாமவர் ஆசிரியராகவும் உள்ளனர்.

இரண்டு பேரன்கள். ஒரு பேத்தி.

இரண்டாம் மனைவி தெய்வநாயகி

தமிழறிவு, தந்தை தந்தது. தந்தையாரின் மிகப்பெரிய நூலகம், தந்தையார்
பள்ளியே செல்லாதவர், தமிழறிஞர்கள் பலர் அவர்களிடம் பாடம் கேட்டவர்கள்.
-எழுதியது நெல்லை கண்ணன்

கிராமிய இசைக் கலைஞர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் பிறந்த நாள் ஜனவரி 27 .
கிராமிய இசைக் கலைஞர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் பிறந்த நாள் ஜனவரி 27 .

விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் (பிறப்பு: 27 ஜனவரி, 1946) ஒரு தமிழ்நாட்டு நாட்டுபுறவியலாளர், கிராமிய இசைக் கலைஞர் மற்றும் பேராசிரியர் ஆவார். தமிழ் நாட்டுப்புறப் பாடல்களை உயிர்ப்பிக்கும் முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

வாழ்வு

விஜயலட்சுமி பிறந்த ஊர் இராஜபாளையம் அருகில் உள்ள சின்னசுரைக்காயமப்பட்டி ஆகும். தந்தை பொன்னுசாமி, தாய் மூக்கம்மாள்; எம்.ஏ. முனைவர் பட்டப்படிப்பு படித்துள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கலை வரலாறு, அழகியல் நுண்கலைத் துறையின் நாட்டுப்புற கலை மையத்தின் பேராசிரியையாகப் பணிபுரிந்தார். இவரது கணவர் முனைவர் நவநீதகிருஷ்ணணும் இதே துறையில் பேராசிரியர்.

பணிகள்

மறைந்துவரும் மரபார்ந்த நாட்டார் மக்களின், பழைமையான இசை, ஆடல், கூத்து உள்ளிட்ட கலைவடிவங்களை கண்டறிந்து ஆய்வு செய்யும் முயற்சியில் 1979 முதல் ஈடுபட்டு வந்தார். ஒரே கதையின் பல்வேறு வடிவங்களைத் தொகுத்து அதை முழுமையான நிகழ்ச்சியாக அளித்தார். காட்டாக இராமாயண ஏற்றப்பாட்டு, தாலாட்டு, பாவைக்கூத்து, இசைநாடகம், கோலாட்டம், என ஒரே கதையில் பல கலைவடிவங்களைத் தொகுத்து, கிராமிய இராமாயணம் எனும் படைப்பை அரங்கேற்றியுள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த 'சூழ்நிலை பாரதம்' என்ற தெருக்கூத்தை உருவாக்கினார். நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 'பச்சைக்கோயில்' என்ற ஒலிப்பேழையை வெளியிட்டார். கடந்த பல பத்தாண்டுகளாகப் பல்வேறு கிராமங்களில் நிகழ்ந்துவரும் கோயில் திருவிழாக்கள், வழிபாடுகள், சடங்குகள், நாட்டார் தெய்வங்களின் சிற்ப அமைப்புகள், நிகழ்த்துக் கலைகள், பாடல்கள், பழைமையான இசைக்கருவிகள். மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறைகள், இசைக் குழுக்களின் கலாச்சாரங்கள், ஆகியவற்றை உற்றுநோக்கி 5000 ஒலி நாடாக்களும், 300 காணொளி நாடாக்களும் பதிவு செய்து பாதுகாத்து வருகிறார்.

விருதுகள்

தமிழக அரசு இவரது பணிகளைப் பாராட்டும் விதமாகக் கலைமாமணி விருதளித்துள்ளது

புதன், 25 ஜனவரி, 2017

இந்தியக் குடியரசு நாள் (Republic Day of India) ஜனவரி 26 .


இந்தியக் குடியரசு நாள் (Republic Day of India) ஜனவரி 26 .

இந்தியக் குடியரசு நாள் (Republic Day of India) இந்திய ஆட்சிமைக்கான ஆவணமாக இந்திய அரசு சட்டம் 1935 இன் மாற்றாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளாகும்.இந்தியாவின் முக்கிய தேசிய விடுமுறை நாட்களில் இதுவும் ஒன்று.

வரலாறு

குடியரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத் (குதிரை வண்டியில்) முதல் குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொள்ள தயாராகிறார்.ராஜ்பத், புது தில்லி, 1950.
1930ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தினர் பூர்ண சுவராஜ் என்ற விடுதலை அறைகூவலை நினைவுகூர சனவரி 26 ஆம் நாள் விடுதலை நாளாக காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அன்றைய நாளில் நகர்ப்புறங்களிலும் சிற்றூர்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்தியடிகள் கீழே கண்டவாறு பரிந்துரைத்த விடுதலை நாள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
"பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மீகம் ஆகிய நான்கு விதத்திலும் நமது தாய் நாட்டிற்குக் கேடு விளைவித்துவரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம்."
28 ஆம் நாள் ஆகஸ்து மாதம் 1947 ஆண்டு ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அந்தக் குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை 1947 நவம்பர் 4 ஆம் நாள் அரசியமைப்பு சட்டவாக்கயவையில் சமர்ப்பித்தது.
2 ஆண்டுகள், 11 மாதங்கள், 166 நாட்கள் பொது திறந்த அமர்வுகளில், சந்தித்து அரசியலமைப்பின் ஏற்புக்கு முன்னதாக பல விவாதங்கள் நடைபெற்றன. கடைசியாக சனவரி 24 ஆம் நாள் 1950 ஆம் ஆண்டு 308 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இரண்டு கையால் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது.
அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து, 1950ஆம் ஆண்டில், விடுதலை பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியடிகள் ஏற்படுத்திய விடுதலை நாளான சனவரி 26ஆம் நாளை, மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது.
1950 முதல் இது குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த அரசியலமைப்பு சட்டம் பெரும் முதலாளிகலுக்காக உருவாக்கப்பட்டது.

கொண்டாடும் முறை
தேசியத் தலைநகரில்
நாட்டின் தலைநகர் தில்லியில் இந்தியப் பிரதமர், மறைந்த இந்தியப்படை வீரர்களுக்காக இந்தியா கேட்டில் உள்ள அமர்சோதிக்கு வீரவணக்கம் செலுத்துவதுடன் தொடங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் மூவண்ணக் கொடியை ஏற்றி படைவீரர்களின் அணிவகுப்பைப் பார்வையிடுகிறார்.
தலைநகர் தில்லியில் குடியரசு நாள் அன்று குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறும்.
கடந்த ஆண்டில் நாட்டுக்கு மிகப்பெரும் சேவை புரிந்த படைவீரர்களுக்கான பதக்கங்களும் விருதுகளும் வழங்கப்படுகின்றன.

மாநிலத் தலைநகரங்களில்

மாநிலங்களில் மாநில ஆளுநர் கொடியேற்றுவதுடன் காவலர் அணிவகுப்பையும் அரசுத்துறை மிதவைகளையும் பண்பாட்டு நிகழ்ச்சிகளையும் பார்வையிடுகிறார்.
சிறந்த காவலர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

தேசிய வாக்காளர் நாள் ஜனவரி 25 .


தேசிய வாக்காளர் நாள்  ஜனவரி 25 .

இந்திய அரசாங்கத்தால் இளம் வாக்களர்களை ஊக்கப்படுத்துவதற்காக தேசிய வாக்காளர் நாள் (National Voters' Day) அனுசரிக்கபடுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி "தேசிய வாக்காளர் நாள்" ஆகும். ஓட்டளிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது இந் நாளின் நோக்கமாகும். 18 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்கள் அனைவரும் ஓட்டளிக்கத் தகுதி வாய்ந்தவர். தேர்தல் என்பது பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது. சாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகளைக் களைந்து 18 வயது நிரம்பிய இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் அனைவரும் ஓட்டளிக்கத் தகுதி உள்ளவர்கள். வாக்காளர் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை ஒன்று தேர்தல் ஆணையத்தால் வழங்கபடுகின்றது.

செவ்வாய், 24 ஜனவரி, 2017

மகி..

மகி ...

மகி என்பது மகரச்
சங்கராந்திக்கான பஞ்சாபி
மொழிப் பெயராகும். இது
குளிர்கால அறுவடைப்
பண்டிகையாக இந்தியா
முழுவதும்
கொண்டாடப்படுகிறது .  மகி  மக
முதல் நாளில் பஞ்சாப்,
இமாச்சலப்பிரதேசம் , அரியானா
பகுதிகளில் பஞ்சாபியர் கால
அட்டவணைப்படி
கொண்டாடப்படுகிறது. இது
பண்பாட்டுப் பண்டிகையாக
மட்டுமன்றி பருவக்கால, சமயப்
பண்டிகையாகவும்
விளங்குகிறது. இது
வேளாண்மைப் புத்தாண்டு
தொடங்கும் பகல்வெளிச்ச மிக்க
நாட்களில் விளையாட்டுகள்
நிகழும் பண்டிகையாகவும்
திகழ்கிறது.
பண்பாட்டுத்
திருவிழா
பருவக் காலத் திருவிழா
மகி பகல் வெளிச்சம் மிகுவதைக்
குறிப்பிடுகிறது .  இது
குளிர்காலக் கதிர்த்திரும்பலில்
ஏற்படும். இது பெருநாள் எனும்
பொருள் உள்ள பாரா தின் என
வழங்கும். இது பின்பனிக்காலத்
(சிசிர்பருவத்)தொடக்கமும் ஆகும்
. சிசிர் பருவம் குளிர்காலத்தின்
இரண்டாம் பகுதியான
பின்பனிக்காலம் ஆகும். எனவே
மகி பருவக்காலப் பண்டிகையும்
ஆகும்.
மரபுகள்
உணவு
இந்தியாவின் மற்ற
பகுதிகளைப்போல
குளிர்காலத்தில் பஞ்சாபிலும்
இமாச்சலப் பிரதேசத்திலும்
ஃஆர்யானாவிலும் நெல்
அறுவடை நிகழ்வதில்லை.
என்றாலும் நெல் அறுவடை
இலையுதிர் காலத்தில்
நடைபெறுகிறது. இந்த
அறுவடை மகியன்று
கொண்டாடப்படுகிறது. எனவே
இன்று பாற்கஞ்சி காய்ச்சிப்
பருகப்படுகிறது . குளிர்கால
விளைச்சலான கரும்புச் சாறு
அருந்தப்படுகிறது. இது கீர் என
வழங்குகிறது. "Poh ridhi, Magh khadi"
என்றொரு பஞ்சாபிப் பழமொழி
உண்டு. இதன் பொருள் போ மாதப்
பாற்கஞ்சி அடுத்த மகி மாத முதல்
நாளில் பருகப்படுகிறது
என்பதாகும். பஞ்சாபின் சில
பகுதிகளில் கிச்சடி வெல்லமும்
கரும்புத் துண்டும் கலந்து
உண்ணப்படும். இவை எல்லாமே
குளிர்கால அறுவடைப்
பொருள்களாகும். எள்கலந்த
தின்பண்டங்களும் மரபாக
உண்ணப்படுவதுண்டு.
இவற்றோடு, வசந்தப் பட்டப்
பண்டிகையின்போது கவிநிற
அரிசியுணவு மரபாக
ஆர்வத்தோடு
சேர்த்துக்கொள்ளப்படுகிறது.
மகி விருந்து (மோகு-
மகி)
பஞ்சாபின் சில பகுதிகளில்
இளம்பெண்கள் மூத்த பெண்டிரிடம்
விருந்து கேட்பர். இது மகி
விருந்து (மோகு-மகி) எனப்படும்.
இந்நிகழ்வு மகியன்று
காலையின் நிகழும். The only song
sung on this occasion is:
மொழிபெயர்ப்பு
(இங்கு பஞ்சாபிச் சொல்லான
தாடி விருந்தளிக்கும்
எதிர்பெண்ணின் முகம், கன்னம்
குறிக்கும்).
மகி விழாக் காட்சிகள்
மரபாக மகியன்று பல பண்பாட்டுக்
காட்சிகள் நிகழும்.  மக்கள்
குழுமிப் பார்க்க பலவிழாக்
காட்சிகளாக, கபட்டி, மற்போர்,
பஞ்சாப் பகுதி விளையாட்டுகள்,
இந்திய விளையாட்டுகள்
போன்றவை நிகழும்.
முக்த்சார் போர்ப்
பெருவிழா
Gurudwara Muktsar Sahib
மகியன்று முக்த்சார் நகரில்
மிகப்பெரிய கண்காட்சிக்கு
ஏற்பாடு செய்யப்படும். இது மகி
மேளா எனப்படுகிறது. இதில்
சாளி முக்தேவின் போர்க்காட்சி
அரங்கேறும். இது வரலாற்றுக்
கால முக்த்சார் போர்க் காட்சி
ஆகும். [8] இந்நகரிலுள்ள
குளத்தில் குளிப்பவர்களுக்கு
விடிவு கிட்டுமென
நம்பப்படுகிறது.

சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் ஜனவரி 23 .

சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம்  ஜனவரி 23 .

நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897 – இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.

இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், உருசியாவிற்கு சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985 இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. 1945 ஆகத்து 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது போஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியுள்ளது. இந்திய அரசால் நியமிக்கப்பட்டு இதைப்பற்றி விசாரித்த முகர்ஜி கமிஷன், நேதாஜி அவ்விமான விபத்தில் இறக்கவில்லை எனத் தெரிவித்து விட்டது.


இளமை
பிறப்பு

இந்தியாவில் ஒரிசா (இன்றைய ஒடிசா) மாநிலத்தில் கட்டாக் எனும் இடத்தில் 1897 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் நாள் வங்காள இந்து குடும்பத்தில் சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார். இவரது தந்தையின் குடும்பம் 27 தலைமுறையாக வங்க மன்னர்களின் படைத்தலைவர்களாகவும் நிதி மற்றும் போர் அமைச்சர்களாகவும் பணியாற்றி வந்த பெருமைமிக்க மரபுவழியை உடையது.இவரது தாயார் பிரபாவதிதேவி "தத்" எனும் பிரபுக்குலத்திலிருந்து வந்தவர்.8 ஆண் பிள்ளைகளையும் 6 பெண் பிள்ளைகளையும் கொண்ட இக்குடும்பத்தில் ஒன்பதாவது பிள்ளையாகப் பிறந்தவரே சுபாஷ் சந்திரபோஸ். சிறு வயது முதலே பல பிள்ளைகளுடன் வளர்ந்த படியால் சந்திரபோஸ் தன் சிறு வயதில் தாய் தந்தையரை விட தன்னைக் கவனித்து வந்த தாதியான சாரதா என்பவருடன் பெரிதும் இருந்தார்.
கல்வி
இளமையில் சுபாஷ் சந்திர போஸ்

ஐந்து வயதான போது கட்டாக்கிலுள்ள பாப்டிஸ்ட் மிஷன் ஆரம்பப் பள்ளியில் இணைந்த சுபாஷ் ஏழு ஆண்டுகள் அங்கு கல்வி பயின்றார். பின்னர் தன் உயர் கல்வியை கொல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில் தொடங்கிய சந்திர போஸ் 1913 ஆம் ஆண்டுத் தேர்வில் கொல்கத்தா பல்கலைக்கழக எல்லைக்குள் 2 ஆவது மாணவராகத் தேறினார். இவரது தாயார் மிகுந்த தெய்வ பக்தி மிக்கவர். அதனால் சுபாஷும் சிறு வயது முதலே விவேகானந்தர் போன்ற ஆன்மிக பெரியார்களின் பால் ஈடுபாடுடையவராயும் அவர்களின் அறிவுரைகளைப் படித்து வருபவராயும் இருந்தார். இதனால் ஞான மார்க்கத்தின் பால் ஈடுபாடு கொண்டார்; துறவறத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பினார். எதிலுமே பற்றற்று இருந்ததுடன் தனது 16 ஆவது வயதில் வீட்டை விட்டு வெளியேறிய சுபாஷ் சந்திரபோஸ் தன் ஞானவழிக்கான ஆசானைத் தேடி இரண்டு மாதங்கள் அலைந்தார்.

அப்போது வாரணாசியில் ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமி பிரம்மானந்தரைச் சந்தித்தார். இவருக்கு சுபாஷின் தந்தையையும், குடும்பத்தையும் நன்கு தெரியும்.இந்த சந்திப்பு குறித்து பின்னாளில் தனது நண்பரான திலீப் குமார் ராயிடம், "யாருக்கெல்லாம் சுவாமி பிரம்மானந்தரது அருள் கிடைக்கிறதோ அவர்கள் வாழ்வே மாறிவிடுகிறது. எனக்கும் அவரது அருளில் ஒரு சிறு துளி கிட்டியது. அதனால் தான் என் வாழ்க்கையைத் தேசத்திற்கு அர்ப்பணித்து அதன் பலனைப் பெற விரும்புகிறேன்.இன்னொன்றும் சொல்லிவிடுகிறேன்: அதே ராக்கால் மகராஜ் (சுவாமி பிரம்மானந்தர்) வாரணாசியிலிருந்து என்னை வரச் சொல்லி, என்னைத் தேசத்துக்காக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்." என்று குறிப்பிட்டுள்ளார். தன் மானசீக ஆசானாக விவேகானந்தரையே ஏற்று வீடு திரும்பினார்.

துறவறப் பாதையில் செல்ல விரும்பிய சுபாஸ் சந்திரபோஸ் ஞான மார்க்கத்திற்கு ஏற்ற குரு கிடைக்காததால் தந்தையாரின் வேண்டுகோளிற்கு இணங்கி 1915 ஆம் ஆண்டு கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். அக்காலத்தில் ஆங்கில இனவெறி மிக்க வரலாற்று ஆசிரியரான சி. எப். ஓட்டன் என்ற ஆசிரியர் அங்கு கற்பித்தார். அவர் கல்வி கற்பிக்கும் நேரங்களில் பெரும்பாலும் இந்தியர்களை அவமதித்து வந்தார். இவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக சுபாஸ் சந்திர போஸும் அவரது நண்பர்களும் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டதுடன் இரண்டு ஆண்டுகள் வேறெந்த கல்லூரிகளிலும் படிப்பை தொடரமுடியாது செய்யப்பட்டனர்.

இதனால் தன் கல்வியை ஓராண்டுகாலம் தொடர முடியாதிருந்த சுபாஷ், சி. ஆர். தாஸ் என்று அறியப்பட்ட சித்தரஞ்சன் தாஸ் மற்றும் சிலரின் உதவியுடன் 1917 ஆம் ஆண்டு ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு 1919 ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேறியதுடன் மாணவர்களுக்குரிய படைப் பயிற்சியிலும் சிறப்பாகத் தேறினார்.
மக்கள் சேவைப் பணி
நேதாஜியின் வீடு

அக்காலத்தில் நாட்டுச் சூழ்நிலை பற்றி அடிக்கடி வீட்டில் விவாதங்களில் ஈடுபட்ட சுபாசைப் பார்த்த அவரது தந்தையார் இவரை அரசியலில் ஈடுபடுத்த விரும்பாது லண்டனுக்கு ஐ.சி.எஸ் தேர்வுக்குப் படிக்க அனுப்பி வைத்தார்.தன் படிப்பை தொடர்ந்த போஸ் லண்டனில் நடந்த 1920 இல் இந்திய மக்கள் சேவை படிப்புக்கான ("இந்தியக் குடிமைப் பணி" எனப்படும் ஐசிஎஸ் தேர்வு) நுழைவுத்தேர்வில் பங்கேற்ற அவர் இந்தியாவிலேயே நான்காவதாகத் தேர்ச்சி பெற்றிருந்தார். ஆனால் தன் நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயனிடம் வேலை செய்யக் கூடாது எனக் கருதி, தான் முயற்சியுடன் படித்துப் பெற்ற தனது பதவியை லண்டனிலேயே பணித்துறப்பு செய்தார்.
சுதந்திரப் போரில் ஈடுபாடு

வழக்குரைஞரான சி. ஆர். தாஸ் தன் தொழிலை விட்டுவிட்டு ஒத்துழையாமை இயக்கத்திற்குத் தலைமை தாங்கி தேசப் பணியாற்றிக் கொண்டிருந்தார். சுபாஷ் கடிதம் மூலம் சி.ஆர்.தாசிடம் தான் தாய் நாடு திரும்பியதும் இந்திய சுதந்திரப் போரில் பங்கேற்க ஆலோசனை கேட்டிருந்தார். அதை ஏற்று சுபாஷ் சந்திர போஸ் வருவதாயிருந்தால் தான் ஏற்றுகொள்வதாகவும் பதவி துறந்ததைப் பாராட்டியும் சி. ஆர். தாஸும் மறுகடிதம் அனுப்பினார்.

இக்காலகட்டத்தில் தான் தென்னாபிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியிருந்த காந்தியும் இந்திய அரசியலில் ஈடுபட்டார். இந்திய மக்களும் காங்கிரசின் தலைமையின் கீழ் சுதந்திர எழுச்சி பெற்றிருந்தனர். 1921 ஆம் ஆண்டு மும்பை துறைமுகத்தில் வந்திறங்கிய சுபாஷ் சந்திரபோஸ் மும்பையில் அப்போது தங்கியிருந்த காந்தியையும் சந்தித்து சுமார் ஒரு மணிநேரம் கலந்தாலோசித்தார். போஸ் சித்தரஞ்சன்தாஸின் கீழ் தொண்டாற்றவே விரும்பினார். போசை ஏற்று கொண்ட சி.ஆர்.தாஸும் அவரின் திறமையை நன்கு அறிந்திருந்ததுடன் திறமைமிக்க அவரது குடும்ப பின்னணியையும் அறிந்திருந்தார். இதனால் சி.ஆர்.தாஸ் தான் நிறுவிய "தேசியக் கல்லூரியின்" தலைவராக 25 வயதே நிரம்பிய போஸை நியமித்திருந்தார். லண்டனில் கேம்பிரிட்ஜில் படிக்கும் போது மேல்நாட்டு விடுதலைப் போர் வரலாறுகளையும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் நன்கு அறிந்து கற்றிருந்த சந்திரபோஸ் தன் கல்லூரியில் மாணவர்களுக்கு விடுதலை உணர்ச்சி பொங்கும் வண்ணம் சொற்பொழிவு ஆற்றியதுடன் பாடமும் கற்பித்தார்.
அரசியல் நுழைவு

1922 இல் வேல்ஸ் எனும் இளவரசரை இந்தியாவுக்கு அனுப்ப பிரித்தானிய அரசு தீர்மானித்து இருந்தது. இந்தியாவிலிருந்த பிரித்தானிய ஆதிக்கக்காரர்களும் வேல்ஸ் இளவரசரை வரவேற்க நாடு முழுதும் சிறப்பான ஏற்பாடு மேற்கொண்டிருந்தனர். ஆனால் சுயாட்சி அதிகாரத்தைத் தரமறுத்த பிரித்தானிய இளவரசரின் வருகையை இந்திய மக்களும் காங்கிரசும் புறக்கணிக்க முடிவு செய்திருந்தனர். மும்பை துறைமுகத்தை வேல்ஸ் இளவரசர் வந்தடையும் போது நாடு முழுதும் எதிர்க்க காந்தி அழைப்பு விடுத்தார். இதனால் சினமுற்ற ஆங்கில அரசாங்கம் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் போன்றவற்றுக்குத் தடை விதித்தது.

இவ்வாறு பொதுகூட்டங்களுக்கு அரசாங்கம் தடை விதித்திருந்த போதும் வேல்ஸ் இளவரசர் கொல்கத்தாவுக்கு வருகை தரும் போது கல்கத்தாவில் மறியல் நடத்த காங்கிரசு கட்சி முடிவு செய்திருந்து. கொல்கத்தா தொண்டர் படையின் தலைவராக சந்திரபோஸை நியமித்திருந்தது. தீவிரத்தை அறிந்திருந்த ஆங்கில அரசு போஸின் தலைமையிலான தொண்டர் படையை சட்ட விரோதமானது என அறிவித்து, போஸையும் சில காங்கிரஸ் தொண்டர்களையும் கைது செய்தது. மேலும் அவருக்கு 6 மாத காலச் சிறைத்தண்டனையும் கிடைத்தது. சில நாட்களின் பின்னர் ஜவகர்லால் நேரு, சித்தரஞ்சன் தாஸ் போன்றோரும் கைதானார்கள். இவ்வாறு அரசியல் கட்சி தலைவர்கள் கைதானதால் மக்கள் மட்டத்தில் இருந்து பெரும் எதிர்ப்பலைகள் கிளம்பின. மேலும் தலைவர்கள் யாரும் இல்லாத போதும் கொல்கத்தாவில் மறியல் சிறப்புற மக்களால் நடக்கப் பெற்றது. ஆறு மாதம் கழித்து போஸ் 1922 ஆம் ஆண்டு அக்டோபரில் விடுதலையானபோது காந்தியும் ஒத்துழையாமை இயக்கத்தையும், வரிகொடா இயக்கத்தையும் விரிவுபடுத்தியிருந்தார்.
காங்கிரசில் பிளவு

இடையில் சில காரணங்களுக்காக போராட்டத்தை நிறுத்தியதால் காந்திக்கு எதிராக பல கண்டனங்கள் எழுந்தன. 1922 ஆம் ஆண்டு சிறையிலிருந்து வெளியான சித்தரஞ்சன் தாஸ் கயையில் கூடிய காங்கிரஸ் மகாசபைக்குத் தலைமை தாங்கினார். சட்ட சபைத் தேர்தல்களில் இந்தியர்கள் போட்டியிட்டு சட்டசபைகளை கைப்பற்றுவதன் மூலம் தான் இந்திய சுதந்திரத்தை விரைவில் பெறமுடியும் என சி.ஆர்.தாஸும் மோதிலால் நேருவும் கருதினர். ஆனால் இதை காந்தி ஆதரவாளர்கள் எதிர்த்தனர். தாஸுக்கும் காந்திக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காந்தியின் வழிமுறைகளை தாஸ் கண்டித்தார். காங்கிரஸில் இருந்தபடி சுயாட்சிக் கட்சி என்ற அமைப்பை தாஸ் தொடங்கினார். காந்திக்கு பதிலடி தர "சுயராஜ்யா என்னும் பத்திரிகையை ஆரம்பித்து ஆசிரியர் பொறுப்பை போஸிடம் ஒப்படைத்தார்.

ஜாலியன்வாலா பாக் படுகொலைக்குத் தலைமை ஏற்று நடத்திய ஜெனரல் டயரைச் சுட்டுக் கொன்றார் உத்தம் சிங். அதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார் காந்தி. ஆனால், உத்தம் சிங்கைப் பாராட்டி கடிதம் அனுப்பினார் போஸ், காந்திக்கும் போஸுக்கும் இடையிலான உரசலை இந்தச் சம்பவம் அதிகரித்தது.

1928 ல் கொல்கத்தாவில் காங்கிரஸ் பேரியக்கத்தின் மாநாடு காந்தி தலைமையில் கூடியது. சுயாட்சிக்கு எதிர்ப்பு காட்டிய காந்தியின் முடிவை எதிர்த்துப் பேச காங்கிரஸ் தலைவர்கள் தயங்கினர். கொல்கத்தா மாகாண தலைவரான போஸ் எழுந்தார் காந்தியின் முடிவு தவறு என எதிர்த்தார். காந்தி-போஸ் மோதல் ஆரம்பமானது. போஸின் முடிவை நேரு ஆதரித்தார். இதனால் இருவரும் இணைந்து காங்கிரஸில் இருந்தபடி விடுதலைச் சங்கம் என்ற பெயரில் இயக்கம் ஒன்றை நடத்தினர். காந்தியின் பல முடிவுகளை நேரடியாகவே எதிர்த்தார் போஸ். இதனால் திட்டமிட்டே காரிய கமிட்டியில் இருந்து போஸ் நீக்கப்பட்டார். அவரைப்போல் சென்னை மாகாணத்தை சேர்ந்த சீனிவாச அய்யரும் நீக்கப்பட்டார். உடனே போஸ், காங்கிரஸ் மிதவாதிகள் கைக்கு போய்விட்டது; அங்கு எங்களுக்கு வேலையில்லை எனக் கட்சியிலிருந்து விலகி, சீனுவாச அய்யரைத் தலைவராகக் கொண்டு 'காங்கிரஸ் ஜனநாயக கட்சி'யைத் தொடங்கினார்.

1939 இல் சுபாஷ் சந்திர போஸ் இரண்டாவது முறையாகக் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். போஸின் செல்வாக்கு உயர்ந்து வருவதை அறிந்து காந்தி, அவருக்கு எதிராக ராஜேந்திரப் பிரசாத்தையும், ஜவஹர்லால் நேருவையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். அவர்கள் மறுக்கவே, பட்டாபி சீதாராமையாவை நிறுத்தினார். போஸ். 1,580 வாக்குகளுடன் வெற்றிபெற்றார். சீதாராமையாவின் தோல்வி தனக்குப் பெரிய இழப்பு என்று வெளிப்படையாகவே காந்தி தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். அதனால், அவரைச் சமாதானப்படுத்த போஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.1939 இல்அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியை தொடங்கினார்,அதன் அகில இந்திய தலைவராக நேதாஜியும்,தமிழக தலைவராகபசும்பொன் முத்துராமலிங்க தேவர் உம் பதவியேற்று கொண்டனர்
அரசியல் பணி

காங்கிரஸ் ஜனநாயக கட்சியின் "பார்வட் " எனும் ஆங்கில இதழில் ஆசிரியாரான நேதாஜி உணர்ச்சி ததும்பும் பல கட்டுரைகளை எழுதினார். இதைத் தொடர்ந்து தேர்தல்களில் மத்திய மாகாணசபைக்கும்,கல்கத்தா மாநகராட்சிக்கும் நடைபெற்ற தேர்தலில் சுயராஜ்ஜியக் கட்சி வெற்றிபெற்றது. 1924-ல் மாகாண சபைக்கு மேயராக சி.ஆர்.தாஸும் மாநகராட்சி நிர்வாக அதிகாரியாக போஸும் தெரிந்தெடுக்கப்பட்டனர்.[14] கொல்கத்தா நகரில் பல சீர்திருத்தங்கள் மேற்கொண்டதுடன் மக்கள் ஆதரவையும் பெற்றனர்.
சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தபோது காந்தியுடன் இந்திய தேசிய காங்கிரஸ் வருடாந்த கூட்டத்தின்போது, 1938

இதனைக் கண்ட அரசு, நேதாஜியை ஓர் அவசரச்சட்டத்தின் மூலம் 1924 ஆம் ஆண்டு ஐப்பசி 25 ஆம் நாள் கைது செய்து கொல்கத்தா மத்திய சிறையில் அடைத்தது. மேலும் வங்கத்தில் பிரித்தானிய ஆட்சியை கவிழ்க்க சதிகார இயக்கம் ஓன்று தோன்றி இருப்பதையும் அதில் சிலரையே கைது செய்திருப்பதாயும் போலி அறிக்கையை வெளியிட்டது. நேதாஜிக்கு ஆதராவாய் மக்களும் பல தலைவர்களும் நாடு முழுதும் முழங்கினர். கொல்கத்தா விரைந்த காந்தி உட்பட பல தலைவர்களும் நேதாஜிக்கு ஆதரவை தெரிவித்தனர். இச்சமயத்தில் தான் சுயராஜ்ஜியக் கட்சி சட்டசபைகளில் வெற்றி பெற்று ஆற்றி வந்த சீர்திருத்தங்களையும் பணிகளையும் கண்ணுற்ற காந்திஜி 'சட்டசபை வெளியேற்றம்' எனும் கொள்கையைக் கைவிட்டு சுயராஜ்ஜியக் கட்சியின் கொள்கையே காங்கிரசின் கொள்கை எனக் கூறி இரு கட்சிகளின் கருத்து வேறுபாடுகளை முடித்து வைத்தார்.

போஸிற்கு ஆதரவான போராட்டங்கள் வலுப்பதை கண்ணுற்ற பிரிட்டிஷ் அரசும் அவரை கடல் கடந்து மாண்டலே சிறைக்கு மாற்றியது. அங்கு காலநிலைகளுடன் நேதாஜியின் உடல்நிலை ஒத்து வராததால் அவர் காசநோய்க்கு ஆளாக நேர்ந்தது.[15] நோயின் தீவிரம் அதிகரித்ததால் சுபாஷும் படுத்த படுக்கையானார். ஆனால் அரசு மருத்துவ பரிசோதனைக்குகூட அவரை அனுமதிக்கவில்லை. இதனால் காங்கிரசு அவரை வெளிக்கொணர ஒரே வழி 1926 ஆம் ஆண்டு தேர்தலில் நேதாஜியை சட்டமன்ற வேட்பாளராய் அறிவிப்பதுதான் என்று முடிவு செய்தது நேதாஜியும் தன் சேவையைக் கருதி அதற்கு உடன் பட்டார். இதனால் சிறையிலிருந்தவாறே வேட்பாளர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அனால் அரசு அவ்வறிக்கையை வெளியிட மறுத்துவிட்டது. வேட்பாளரும், வேட்பாளர் தேர்தல் அறிக்கையும் வெளிவரவில்லை. ஆனால் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் நேதாஜி வெற்றி பெற்றார். துளியும் அசைந்து கொடுக்காத அரசோ நேதாஜியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு "கொல்கத்தா வராமல் சிகிச்சைக்காக ஐரோப்பா சென்று விடவேண்டும் 1930 வரை அவர் அங்கேயே இருக்க வேண்டும்" என்றும் இதற்கு போஸ் சம்மதித்தால் விடுதலை செய்ய தயார் என அறிக்கை விட்டது. ஆனால் ஆங்கிலேயர்களின் கட்டளைக்கு கீழ்ப்படிய விரும்பாத நேதாஜி இதற்கு முற்றிலும் மறுத்துவிட்டார்.

இதனால் சிறையிலேயே இருந்ததால் நோய் அதிகரித்து நேதாஜியைப் படுக்கையில் தள்ளீயது. இச்செய்தி வெளியில் பரவி "சுபாஷ் பிழைப்பதே அரிது" என்றும் "அவர் சிறையிலேயே மரணித்து விட்டார் " என்றும் வதந்திகள் பரவின. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட அரசாங்கம் அல்மோரா சிறைக்கு சந்திரபோஸை கொணர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்க சம்மதித்தது. ஆனால் நேதாஜியின் உடல் நிலையின் மோசம் கருதி அவர் இனி பிழைக்கப் போவதில்லை எனத் தீர்மானித்த அரசாங்கம் அவரை நிபந்தனை இன்றி விடுதலை செய்தது. கல்கத்தா திரும்பியதும் படுக்கையிலேயே தன்னை வெற்றியடைய வைத்த மக்களுக்கு நன்றி கூறி ஓர் அறிக்கை விடுத்தார் நேதாஜி. சிறையில் இருந்து வெளிவந்ததும் 1930 சுபாஷ் சந்திர போஸ் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்தார். அங்கு முசோலினி போன்றோரைச் சந்தித்தார். 1938-ல் காங்கிரசின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பிரித்தானிய இந்தியாவிடமிருந்து தப்பிச் செல்லுதல்

இரண்டாவது உலகப்போர் மூண்டதும், இந்திய மக்களின் ஒத்துழைப்பைப் பிரித்தானிய அரசு கோரியது. ஆனால், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுவதில் ஈடுபட்டார். இதன் காரணமாக 1940 ஜுலையில் நேதாஜியை அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது.

உலகப்போரின் ஆரம்பத்தில், பிரித்தானிய படைகளுக்கு தோல்வியே ஏற்பட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பிரிட்டனின் எதிரி நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்தியாவை விடுவிக்கவேண்டும் என்று நேதாஜி எண்ணினார். அதற்கு சிறையில் இருந்து வெளியே வரவேண்டும் என்று கருதினார். 1940 நவம்பரில், சிறையில் உண்ணாவிரதம் தொடங்கினார். சுபாஷ் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், பெரும் விளைவுகள் ஏற்படும் என்பதைப் பிரித்தானிய அரசு அறிந்திருந்தது. எனவே, உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி அவரிடம் அதிகாரிகள் கெஞ்சினார்கள். ஆனால் சுபாஷ் இணங்கவில்லை. உண்ணாவிரதம் தொடங்கி ஒரு வாரம் ஆயிற்று. நேதாஜியின் உடல் நிலை மோசம் அடைந்தது. வேறு வழியின்றி நேதாஜியை அரசாங்கம் விடுதலை செய்தது. ஆனால் அவர் வீட்டைச்சுற்றி ரகசியக் காவலர்கள் சாதாரண உடையில் 24 மணி நேரமும் கண்காணித்தபடி இருந்தனர். எப்படியும் இந்தியாவிலிருந்து வெளியேறிவிடவேண்டும் என்று நேதாஜி தீர்மானித்தார். வெளிநாடு செல்ல உதவுவதாக, அவருடைய நண்பர்கள் சிலர் வாக்களித்தனர்.
ஹைன்ரிச் ஹிம்லருடன் சுபாஷ் சந்திர போஸ்
தலை மறைவு

26. சனவரி 1941 அன்று இரவிலிருந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவருடைய அறையில் காணப்படவில்லை என்றும் இருப்பிடம் பற்றி இதுவரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்றும் தகவல் வெளியிடப்பட்டது.

1941-ம் ஆண்டு ஜனவரி 15-ம் நாள் நேதாஜி ஒரு முஸ்லிம் போல் தாடி வைத்துக்கொண்டு, மாறு வேடத்தில் தப்பிச்சென்றார். ஒரு காரில், கொல்கத்தாவிலிருந்து தொடர்வண்டியில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்தார். பெசாவர் நகரை (தற்போது இது பாகிஸ்தானில் உள்ளது) அடைந்து இந்தியாவின் எல்லையைக் கடந்தனர். பின்னர் ஆப்கானிஸ்தான் சென்றார். அங்கு இத்தாலி நாட்டு தூதரக அதிகாரிகளுடன் நேதாஜி தொடர்பு கொண்டு இத்தாலிக்குச் செல்ல அனுமதி வாங்கினார். ரஷ்யா வழியாக இத்தாலிக்குச் செல்ல வேண்டும் என்பது நேதாஜியின் திட்டம். ஆனால் எதிர்பாராதவிதமாக ஜெர்மனிக்கு வருமாறு ஹிட்லரிடமிருந்து அழைப்பு வந்தது. அதை ஏற்ற நேதாஜி, தொடர்வண்டி மூலம் மாஸ்கோ சென்று அங்கிருந்து ஜெர்மன் தலைநகரான பெர்லினுக்குப் போய்ச்சேர்ந்தார். அவர் ஜெர்மனி வந்து சேர்ந்த செய்தியை மார்ச் 28-ந்தேதி ஜெர்மனி பத்திரிகைகள் வெளியிட்டன.அப்போதுதான், அவர் இந்தியாவில் இருந்து மாறுவேடத்தில் தப்பிச் சென்ற விடயமே பிரித்தானிய அரசுக்குத் தெரிந்தது.ஜெர்மனியில் நேதாஜிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹிட்லரை நேதாஜி சந்தித்துப்பேசினார். இந்தியாவின் விடுதலைக்கு முழு ஆதரவு தருவதாக ஹிட்லர் உறுதி அளித்தார்.
சுதந்திர இந்திய இராணுவம்
நவம்பர் 1943இல் பெரும் கிழக்கு ஆசிய மகாநாடு, வலது பக்கத்தில் சுபாஷ் சந்திர போஸ்

1941 ல் சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பை தொடங்கி ஆசாத்ஹிந்த் என்ற ரேடியோவையும் உருவாக்கி சுதந்திர தாகத்தை அங்கிருந்த இந்திய மக்களிடம் விதைத்தார். நாட்டுக்கு எனத் தனிக் கொடியை உருவாக்கி ஜனகனமன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்.

ஜெர்மனி, இத்தாலியின் உதவி கிடைக்காது என தெரிந்தபின் ஜப்பான் செல்ல முடிவு செய்து, போர் காலத்தில் நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ஜப்பான் சென்று ராணுவ ஜெனரல் டோஜோவை சந்தித்து உதவி கேட்டார். உதவிகள் தயாரானது. பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ராஷ் பிஹாரி போஸால் உருவாக்கப்பட்டு செயல்படாமல் இருந்த இந்திய தேசிய ராணுவத்தை மீள் உருவாக்கம் செய்து அதன் தலைவரானார் சுபாஷ். சுதந்திரத்திற்கு போராடி நாட்டிற்காக உயிர் தர இளைஞர்கள் வேண்டுமென ஆட்கள் திரட்டி பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தியாவில் அனைவரும் காந்தியின் அகிம்சை வழி போராட்டத்தி விரும்பி சென்றமையால் இராணுவத்திற்க்கு சிலரே செல்ல நேர்ந்தது, தமிழகத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்அவர்களால் சுமார் 60 க்கும் மேற்பட்ட தமிழர்கள் ராணுவத்தில் இணைந்தனர்.
சப்பானிய நீர்மூழ்கி ஐ-29 இருந்த நீர்மூழ்கி ஓட்டுனர்கள் செருமன் நீர்மூழ்கி யு-180ஐ மடகாசுகின் தென் கிழக்கில் 300 சட்ட மைலில் சந்தித்துக் கொண்டபோது. முன்வரிசையில் வலப்பக்கத்தில் சுபாஷ் சந்திர போஸ். திகதி: 28 ஏப்ரல் 1943

1943 அக்டோபர் 21ல் சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில் போஸ், சுதந்திர அரசு பிரகடனத்தை வெளியிட்டார். டிசம்பர் 29 ந் தேதி அரசின் தலைவராகத் தேசியக் கொடியை ஏற்றினார். அவற்றை ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, சீனா உட்பட 9 நாடுகள் ஆதரித்தன. பர்மாவில் இருந்தபடி தேசிய படையை இந்தியாவை நோக்கி நகர்த்தினார். ஆனால் பிரித்தானியப் படைகள் முன் தாக்கு பிடிக்க முடியாமல் இப்படை தவித்தது. மனம் தளராமல் இந்தியாவின் எல்லைக்கோடு வரை வந்தவர்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது பிரித்தானியப் படை. இந்திய தேசிய படை தோல்வியைத் தழுவியது.அது மட்டுமல்ல ஜப்பான் இரண்டாம் உலக போரில் சரணடைந்தது எனவே போரை முன்னெடுத்து செல்ல முடியாத நிலைக்கு சுபாஷ் சந்திர போஸ் ஆளானார்.

கல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.வி.சக்ரபர்த்தி எழுதிய கடிதத்திலிருந்து எடுக்கப்பட்ட பகுதி பின்வருமாறு:

சட்டமறுப்பு இயக்கம் நேரடியாகவே இந்திய சுதந்திரத்தை வழிநடத்தியது என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை. காந்தியின் பிரச்சாரங்கள்...இந்தியா சுதந்திரத்தை அடைவதற்கு கிட்டத்தட்ட பதினான்கு வருடங்களுக்கு முன்பே நீர்த்துப்போய்விட்டது...முதலாம் உலகப்போரின்போது ஆயுதக் கிளர்ச்சிகளின் மூலம் நாட்டை விடுதலை செய்வதற்கு போர்த்தளவாடங்கள் வடிவத்தில் ஜெர்மானியர்களின் அனுகூலத்தை இந்திய புரட்சியாளர்கள் கோரினர். ஆனால் இந்த முயற்சி வெற்றிபெறவில்லை. இரண்டாம் உலகப்போரின்போது சுபாஷ் போஸ் இதே முறையைப் பின்பற்றி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார். அற்புதமான திட்டமிடல் மற்றும் துவக்கநிலை வெற்றிகள் இருந்தபோதிலும் சுபாஷ் போஸின் வன்முறைப் பிரச்சாரம் தோற்றுப்போனது...இந்திய சுதந்திரத்திற்கான போர் ஐரோப்பாவில் ஹிட்லராலும், ஆசியாவில் ஜப்பானும் மறைமுகவாகவேனும் பிரிட்டனுக்கு எதிராக போர்புரிவதாக இருந்தது. இவை எதுவும் நேரடியாக வெற்றிபெறவில்லை, ஆனால் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத்தந்த மற்ற மூன்றின் ஒட்டுமொத்த விளைவுதான் இது என்பதை ஒருசிலர் மறுக்கின்றனர். குறிப்பாக, இந்திய தேசிய ராணுவத்தின் விசாரணையின்போது வெளிப்பட்டவை, அது இந்தியாவில் உருவாக்கிய எதிர்வினையானது ஏற்கனவே போரினால் வலுவிழந்திருந்த பிரிட்டிஷாரின் வெளியேறுவது என்ற திட்டத்தை உருவாக்கியது, இந்தியாவில் தங்கள் அதிகாரத்தைப் பாதுகாத்திடுவதற்கு சிப்பாய்களின் விதுவாத்தை இனிமேனும் சார்ந்திருக்க முடியாது என்பதும் காரணமாகும். இதுதான் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவது என்ற இறுதி முடிவிற்கு பெரும் தூண்டுதலாக இருந்திருக்க முடியும்.
திருமணம்

13 பிப்ரவரி 1933ல் உடல் நிலை சரியில்லை என வியன்னா சென்றவர் அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளான செக்கோசிலோவாக்கியா, போலந்து, ஹங்கேரி, இத்தாலி, ஜெர்மனி என பயணம் மேற்கொண்டு அந்த நாடுகளில் இருந்த இந்திய இளைஞர்களை சந்தித்து நாட்டின் விடுதலையை பற்றி பேசி ஒத்துழைப்பு கேட்டார். ஐரோப்பாவின் அரசியல்வாதிகளையும், ஆட்சியாளர்களையும் சந்தித்து விடுதலைக்கு உதவும்படி கேட்டார். 1935ல் முசோலினியை சந்தித்து ஆதரவு கேட்டார். பயணத்தில் ஆஸ்திரியாவை சேர்ந்த எமிலியின் அறிமுகம் கிடைத்தது. அவரை தனது உதவியாளராக்கிக்கொண்டார். உடல் நலம் தேறியது. அதற்கு எமிலியும் ஒரு காரணம். இருவருக்குள்ளும் காதல் அரும்பியது. 1937 டிசம்பர் 27ல் எமிலியை போஸ் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நவம்பர் 29, 1942-ல் அனிதா போஸ் என்ற ஒரு மகள் வியன்னாவில் பிறந்தார்.
கொள்கை

போஸ் இந்தியாவுக்கு நிபந்தனையற்ற முழுவிடுதலை வேண்டும் என்ற உறுதியுடன் அதற்கான பரப்புரையைச் செய்தார். அதே நேரத்தில் இந்திய காங்கிரஸ் சபை படிப்படியாக விடுதலை பெறுவதை ஆதரித்தது. மேலும் முழு விடுதலைக்குப் பதில் பிரித்தானியாவின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக இந்தியா இருக்க விரும்பியது. லாகூரில் நடைபெற்ற காங்கிரசு கருத்தரங்கில் முழுவிடுதலை பெறுவதைத் தன் குறிக்கோளாக ஏற்றுக்கொண்டது.

போசு இரு முறை தொடர்ச்சியாகக் காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காந்தியுடன் ஏற்பட்ட கொள்கை வேறுபாடு காரணமாக தலைவர் பதவியில் இருந்து விலகினார். விலகியதும் கட்டுப்பாடுகள் தகர்ந்ததால் காங்கிரசின் வெளிநாட்டு, உள்நாட்டு கொள்கைகள் தவறானவை எனக் கண்டித்தார். காந்தியின் அறவழிப் போராட்டத்தால் இந்தியாவிற்கு விடுதலை வாங்கி தரமுடியாது என்றும் பிரித்தானியருக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடுவதே விடுதலைக்கான வழி என்றும் கருதினார். இவர் பார்வட் பிளாக் என்ற அரசியல் கட்சியைத் தோற்றுவித்தார். இரத்தத்தை தாருங்கள் உங்களுக்கு விடுதலையைப் பெற்று தருகிறேன் என்பதே இவரின் புகழ்பெற்ற சூளுரையாக இருந்தது.

இரண்டாம் உலகப்போரின் போதும் இவர் தன் நிலையை மாற்றிக் கொள்ளவில்லை. அப்போது பிரித்தானியாவின் பலவீனத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்து சோவியத் ஒன்றியம், நாட்சி ஜெர்மனி, நிப்பான் போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்து இந்தியாவில் பிரித்தானியரைத் தோற்கடிக்க உதவி வேண்டினார். நிப்பானியர்களின் துணையுடன் தென்கிழக்கு ஆசியாவில் இருந்த இந்திய தொழிலாளர்களைக் கொண்டும் நிப்பான் பிடித்து வைத்திருந்த பிரித்தானியப் படையில் இருந்த இந்திய போர்க்கைதிகளைக் கொண்டும் இந்திய தேசிய இராணுவத்தை மறுசீரமைத்து வழிநடத்தினார்.
அரசியல் தத்துவம்

சுபாஷ் சந்திர போஸ் பிரித்தானியாவிற்கெதிரான போராட்டத்திற்கான பெரும் தூண்டுதல் மூலமாக பகவத் கீதையைக் கருதினார்.அவரது சொந்த சாமான்கள் கொண்ட சிறு பையொன்றில் மிகச்சிறிய பகவத் கீதை புத்தகத்தையும், துளசி மாலையையும் மூக்குக் கண்ணாடியையும் மட்டுமே வைத்திருந்தார்.

சுவாமி விவேகானந்தரின் சர்வமயவாதம் பற்றிய கற்பித்தலும் தேசியவாத, சமூக சிந்தனையும் சீரமைப்பு எண்ணங்களும் சிறு வயதிலேயே இவரிடம் தாக்கத்தை ஏற்படுத்தின. இந்து சமய ஆன்மீக் கருத்துக்களே இவரின் பின்னாளைய அரசியல், சமூக எண்ணங்களுக்கு வித்திட்டதாக பல அறிஞர்கள் கருதுகிறார்கள். இந்து ஆன்மீகத்தின் தாக்கம் இருந்தாலும் இவரிடம் மதவெறியோ பழைமைவாதமோ இருக்கவில்லை . சுபாஷ் தன்னை சமதர்மவாதி என அழைத்துக்கொண்டார். இந்தியாவில் சமதர்மக் கொள்கையின் முன்னோடி சுவாமி விவேகானந்தர் என நம்பினார்.
பெண்ணுரிமை

இவர் தன் இந்திய தேசிய ராணுவத்தில் பெண்களுக்கென தனிப் பிரிவான ஜான்சி ராணி படையை தொடங்கியவர். ஒரு முறை ஜான்சி ராணி படை கூடாரப் பகுதிக்குள் இவர் நுழைந்ததை வேறு யாரோ என்று எண்ணி கோவிந்தம்மாள் என்னும் பெண் அதிகாரி அவரைத் தடுத்து நிறுத்தினார். அதைப் பொருட்படுத்தாமல் அவருக்கே அப்படையின் உயரிய விருதான லாண்ட்சு நாயக் விருதை வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது..
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மரணத்திலுள்ள மர்மம்
முதன்மை கட்டுரை: நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மரணத்திலுள்ள மர்மம்

இரண்டாம் உலகப்போரில் செர்மனி, இத்தாலி தோற்கடிக்கப்பட்டு அச்சு நாடுகள் சார்பில் நிப்பான் மட்டுமே போரில் இருந்தது. நிப்பான் ஆதிக்கத்தின் கீழ் இருந்த மஞ்சூரியா மேல் ருசியா படையெடுத்து அதை ஆகசுட்டு 9-20, 1945 வரை நடந்த போரில் முழுமையாக கைப்பற்றிக்கொண்டது. பாங்காகில் இருந்த நிப்பானிய தொடர்பு அதிகாரி நேதாஜி பாங்காக்கில் இருந்து டோக்கியோ வழியாக மஞ்சூரியாவை அடைந்து அங்கிருந்து இருசியாவை அடைய ஒத்துக்கொண்டார். நேதாஜியின் கடைசி புகைப்படம் சைகோன் (தற்போதைய கோ சு மிங் ஆகசுட்டு 17, 1945) நகரில் எடுக்கப்பட்டதாகும் . ஆகசுட்டு 23, 1945 அன்று நிப்பானிய செய்தி நிறுவனம் ஆகசுட்டு 18, 1945 அன்று தாய்பெயில் வானூர்தி தளத்தில் நடந்த விபத்தில் போஸ் இறந்ததாக அறிவித்தது . ஆனால் தைவான் நாடு அப்படி ஒரு வானூர்தி விபத்து நடக்கவில்லை எனக் கூறி மறுத்தது.
ரெங்கோயி கோயில், யப்பான்

இந்தச்செய்தி, இந்திய மக்களை நிலைகுலையச் செய்தது. நேதாஜி இறந்துவிட்டார் என்பதைப் பலர் நம்பவில்லை. “நேதாஜி இறந்து விட்டார் என்றால், அவர் உடலை ஏன் இந்திய மக்களிடம் ஒப்படைக்கவில்லை?” என்று கேட்டனர். ஆயினும் நேதாஜியுடன் பயணம் செய்து, படுகாயத்துடன் தப்பிய ஹபிப்-வுர்-ரகிமான், “நேதாஜியின் உடல் தகனம் செய்யப்பட்டதை என் கண்ணால் பார்த்தேன்” என்று கூறினார். ஆயினும்,பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் முதன்முதலாக மற்றும் பல தலைவர்கள், “நேதாஜி உயிருடன் இருக்கிறார்” என்றே கூறி வந்தனர். சிலர் அவர் துறவி வேடத்தில் இந்தியாவில் வசிப்பதாகவும் சிலர் அவர் சோவியத் ஒன்றியத்துக்குத் தப்பி சென்று விட்டதாகவும் நம்புகின்றனர்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின், 1956 ஏப்ரல் மாதம், முன்னாள் பிரதமர் நேரு ஆட்சியின் போது நேதாஜி பற்றிய உண்மைகளைக் கண்டறிய மூவர் கொண்ட ஷாநவாஸ் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் டோக்கியோ, சைகோன், பாங்காக் உள்பட பல இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்தியது. இறுதியில், ஆணையத்தின் மூன்று உறுப்பினர்களில் இரண்டு பேர், வானூர்தி விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை, டோக்கியோவில் உள்ள புத்தர் கோவிலில் இருப்பது அவருடைய அஸ்திதான் என்று அறிக்கை கொடுத்தனர்.[38][39] மூன்றாவது உறுப்பினர் சுரேஷ் சந்திரபோஸ் (நேதாஜியின் அண்ணன்) இதை ஏற்க மறுத்து தனி அறிக்கை கொடுத்தார். அதன்படி 1970-ம் ஆண்டு ஜுலை மாதம் முன்னாள் பிரதமர் இந்திரா ஆட்சியின் போது ஓய்வு பெற்ற பஞ்சாப் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜி. டி. கோசலாவைக் கொண்ட “ஒரு நபர் விசாரணை ஆணையம்” அமைக்கப்பட்டது. அவர் நிப்பான், தைவான் உள்பட பல நாடுகளுக்குச் சென்று விசாரணை நடத்தி, “வானூர்தி விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை” என்று உறுதி செய்து அறிக்கை தந்தார். 1999-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியின் போது , 'முகர்ஜி ஆணையம்', என மூன்று ஆணையங்கள் நியமிக்கப்பட்டது. இதில் முகர்ஜி ஆணைய அறிக்கை 2006-ம் ஆண்டு மே 17-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஜஸ்டிஸ் முகர்ஜி கமிஷன் சமர்ப்பித்த அறிக்கையில் நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை என்றும் சோவியத் ரஷ்யாவிற்குத் தப்பிச் சென்று இருக்கலாம் என்றும் கூறியது. அதனாலும் நேதாஜி மரணம் குறித்து தெளிவான முடிவுக்கு வரவில்லை.
இரகசியத் துறவி

உத்திரப் பிரதேசத்தில் 1985 வரை வாழ்ந்த இந்துத் துறவி பகவான்ஜி அல்லது 'கும்னமி பாபா' என்பது சுபாஷ் சந்திர போஸ் என சிலர் நம்புகின்றனர்.நான்கு சம்பவங்கள் அத்துறவி போஸ்தான் என நம்பக் காரணமாகின.அத்துறவியின் மரணத்தின் பின், அவரது உடமைகள் நீதிமன்ற உத்தரவின்படி உடமையாக்கப்பட்டன. இது பின்பு முகர்ஜி ஆணையத்தினால் சோதனைக்குட்படுத்தப்பட்டன. துறவி மரணமானதும், முகம் அமிலம் மூலம் சிதைக்கப்பட்டு எரியூட்டப்பட்ட சம்பவம் ஐயப்பாட்டிற்குக் காரணமாகியது. கையெழுத்தியல் நிபுணர் பி. லால் வாக்குமூலத்தில் பகவான்ஜி மற்றும் போஸின் கையெழுத்துக்கள் ஒத்துப் போயின என்றார். ஆயினும், முகர்ஜி ஆணையம் மேலதிக சான்று வேண்டுமென அதனை நிராகரித்த அதேவேளை, இந்திய அரசின் போஸின் இறப்பு 1945ம் ஆண்டில் நடைபெற்றது என்ற பார்வையையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே, பகவான்ஜிதான் போஸ் என்ற நம்பிக்கை மேலும் வலுப்பட்டது.
இறுதி உரை

இந்திய தேசிய ராணுவம் நெருக்கடியான நிலையில் இருந்த போது ஆகத்து 15, 1945ல் அவர் இறுதியாக அறிக்கை வெளியிட்டார்.அதன்படி இந்தியா,
“    

"நமது வரலாற்றில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு சிலவற்றை கூற விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் உணர்வுகளை தளர விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல. விரைவில் இந்தியா விடுதலை அடையும். ஜெய் ஹிந்த்!"
    ”
பாரத ரத்னா விருது

1992-இல் சுபாஷ் சந்திரபோசுக்கு, இறப்புக்குப் பின்னான இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ஆனால் விருது வழங்கும் குழுவால் சுபாஷ் சந்திர போஸின் இறப்பு குறித்த ஆதாரங்களைத் தர முடியவில்லை எனவே உச்சநீதிமன்ற ஆணையின்படி இவ்விருது திரும்ப வாங்கப்பட்டது.[46]
இரகசிய ஆவணங்கள்

சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான இரகசிய ஆவணங்களை மேற்கு வங்காள அரசு 17 செப்டம்பர் 2015 அன்று வெளியிட்டது.[47]
போஸ் பற்றிய சித்தரிப்புக்கள்
திரைப்படங்கள்

    2010: கன்னடத் திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளிலும் உள்ள "சுப்பர்".
    2008: தெலுங்கு மொழித் திரைப்படம் "சுபாஷ் சந்திர போஸ்"
    2005: இந்தி மொழித்திரைப்படம் "நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்: மறக்கப்பட்ட கதாநாயகன்"
    2002: இந்தி மொழித்திரைப்படமான "பகத் சிங்கின் கதை" இல் போஸ் பற்றிய காட்சிகள்
    1966: வங்காளி மொழித்திரைப்படம் "சுபாஷ் சந்திரா"
    1950: இந்தி மொழித்திரைப்படமான "சமாடி" இல் போஸின் சிறு பாத்திரம்

ஆவணப்படங்கள்

    இட்லருக்கும் காந்திக்குமிடையே - சுபாஷ் சந்திர போஸ்: மறக்கப்பட்ட சுதந்திரப் போராளி

நூல்கள்

    1986: "பெரும் இந்தியப் புதினம்" (த கிரேட் இன்டியன் நோவல்) என்ற புதினத்தில் போஸ் பற்றிய கதாபாத்திரம்
    2012: கே.எஸ்.சிறிவஸ்டவா எழுதிய சுபாஷ் சந்திர போஸ்

திங்கள், 16 ஜனவரி, 2017

உழவர் திருநாள் ஜனவரி 16.

உழவர் திருநாள் ஜனவரி 16.

"
எந்நன்றி கொன்றார்க்கும்
உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகர்க்கு"
என்ற வள்ளுவம் தமிழரிடத்து
என்றும் வாழ்ந்திருக்கிறது.
மனிதர்களிடம் மட்டுமில்லை,
விலங்குகளுக்கும் அந்நன்றியைக்
காட்டியிருக்கிறார்கள் தமிழர்கள்.
மாடுகள், வயல்கள், பண்ணைகள்
உள்ளவர்கள் இந்நாளைக்
கொண்டாடுகிறார்கள்.
உழுவதிலிருந்து உழுத
நிலத்திற்கு தனது சாணத்தை
இயற்கை உரமாகத் தந்தும்,
அடுப்பெரிக்க, ஏரிழுக்க, பரம்படிக்க,
நீரிறைக்க, போரடிக்க என்று
எத்தனையோ வேலைகளில்
மனிதனுக்கு உதவி, எண்ணற்ற
விதங்களில் பயன்படும் மாடுகளை
கெளரவிக்கும் வகையில் வகையில்
மாட்டுப் பொங்கல்
என்றழைக்கப்படும் உழவர் திருநாள்
கொண்டாடப்படுகிறது.
வண்டியிழுக்க செய்வது
காளைமாடு; காலை மாலை
சுவைதரும் பால்தருவது
பசுமாடு; அவை அனைத்தும்
அன்று குளித்து, கொம்புகளை
சீவிக்கொள்ளும். கொம்புகளில்
வண்ணங்களைப் பூசிக்கொள்ளும்;
(அன்று மட்டும் மாடுகளுக்கு அடி
விழாது) எருமை மாடுகளுக்கும்,
ஆடுகளுக்கும் கூடகொம்புகளில்
வண்ணம் பூசுவர். கூரான
கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை
கட்டிவிடுவார்கள்.
கழுத்துக்கு தோலிலான வார்
பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி
அழகுபடுத்துவார்கள். திருநீறு
பூசி குங்குமத் திலகமிட்டும்
புதிய மூக்கணாங் கயிறு,
தாம்புக்கயிறு அணிவித்தும்
தயார் செய்வார்கள்.
உழவுக்கருவிகளை அது
டிராக்டராகருந்தாலும் கொழு
கொம்பு கலப்பையாக
இருந்தாலும் சுத்தம் செய்து
சந்தனம்,குங்குமம் வைப்பார்கள்.
விவசாயத்தில் பயன்படுத்தப்படும்
மோட்டார் பம்பு செட் உட்பட
அனைத்து கருவிகளையும் இதே
போலச் செய்வார்கள்.
தாம்பாளத் தட்டுகளில் தோட்டம்
காடுகளில் விளைந்த பயிர்,
பச்சைகளை வைத்தும் தேங்காய்,
பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என
எல்லாம் பூஜைக்காக எடுத்து
வைப்பார்கள். பொங்கல் பொங்கும்
போது " பொங்கலோ பொங்கல்
மாட்டுப் பொங்கல்" என்ற எல்லோரும்
குரல் கொடுக்க சிறுவர்கள்
சந்தோஷித்து குதூகலிப்பார்கள்.
தொடர்ந்து சாமி கும்பிட்டு கற்பூர
தீபாராதனை காட்டப்படும். அதன்
பின் பசு, காளை, எருமை என
அனைத்து கால்நடைகளுக்கும்
பொங்கல், பழம் பிரசாதத்தை
கொடுப்பார்கள். இப்படி
கால்நடைகளுக்கு நன்றிகூறும்
நாளைத்தான் "மாட்டுப்
பொங்கலாக" கொண்டாடுகின்றனர்.
சில வீடுகளில்
கால்நடைகளுக்கு
காலையிலேயே பூஜை
செய்துவிடுவார்கள். சிலர்
மாலையில் விளக்கு வைக்கும்
நேரத்தில் பூஜை செய்து
அதன்பின் கால்நடைகளை சற்று
வெளியே ஓட்டிப் போய் திரும்ப
வீட்டுக்கு கூட்டி வருவார்கள்.
வீட்டுக்கு திரும்பக் கொண்டு
வரும்போது வீட்டு நிலைப்படியில்
உலக்கையை வைத்துஅதைத்
தாண்டிப் போகுமாறு அழைத்துச்
செல்வது வழக்கம். சிறுவர் முதல்
பெரியோர் வரை விரும்பிச்
சுவைக்கும் விதவிதமான
கரும்புகள் தெருத்தெருவாக
விற்பனையாகும். கரும்பு
திண்ணக் கூலியா என்ன?
பல்லில்லாத வயதான
மழலைகளுக்குக் கூட நாவினில்
எச்சில் ஊற வைக்கும்
சமாச்சாரமாயிற்றே...

ஞாயிறு, 15 ஜனவரி, 2017

திருவள்ளுவர் தினம் ஜனவரி15.

திருவள்ளுவர் தினம் ஜனவரி15.

திருவள்ளுவர் ஆண்டு என்பது
ஆண்டுகளை வரிசையாக,
தொடர்ச்சியாக குறிக்க எழுந்த
காலம் காட்டும் முறை. இன்று பல
நாடுகளில் பரவலாக வழக்கில்
உள்ள கிரிகோரியன் ஆண்டு
முறையுடன் ஒப்பிட்டுப்
பார்த்தால் திருவள்ளுவர் ஆண்டு
31 ஆண்டுகள் கூடி இருக்கும். 2011
ஆண்டு என்று கிரிகோரியன்
ஆண்டு முறையில்
கூறப்படுவது 2042 ஆம் ஆண்டு
என்று திருவள்ளுவர் ஆண்டு
முறையில் குறிப்பிடப்படும்.
வரலாறு
தமிழில் தொடர்ச்சியாக
ஆண்டுகளைக் குறிக்க சக வருடம்
பயன்படுத்தப்பட்டாலும் அது
தமிழரல்லாத சகர்களின் ஆட்சியை
ஆதாரமாகக் கொண்டதால்,
தமிழர்களுக்கு என தனியாக
தொடர்ச்சியாக கூடும்படி ஓர்
ஆண்டு முறை வேண்டும் என
எண்ணி தமிழறிஞர்களும்,
சான்றோர்களும், புலவர்களும்
1921 ஆம் ஆண்டு (கிரிகோரியன்
ஆண்டு) பச்சையப்பன்
கல்லூரியில் மறைமலை அடிகள்
தலைமையில் கூடி முன்பு
செய்த ஆய்வின் பயனாக
திருவள்ளுவர் இயேசு
கிறிஸ்த்து பிறப்பதற்கு 31
ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர்
என முடிவுகட்டினர்.
திருவள்ளுவர் பெயரால்
தொடர்ச்சியாக ஆண்டுகளைக்
குறிப்பிடலாம் என
முடிவெடுத்தனர். இம்முடிவை
கூட்டாக எடுத்த
தமிழ்ப்பெரியோர்களில்
மறைமலை அடிகள் .
தமிழ்த்தென்றல் என்றழைக்கப்பெற்ற
திரு. வி. கலியாணசுந்தரனார்,
தமிழ்க் காவலர் சுப்பிரமணியப்
பிள்ளை , சைவப் பெரியார்
சச்சிதானந்தம் பிள்ளை . நாவலர்
நா.மு. வெங்கடசாமி நாட்டார்,
நாவலர் சோமசுந்தர பாரதியார் ,
முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ.
விசுவநாதம் ஆகியோர்
அடங்குவர்.
தமிழக அரசு 1971 ஆம் ஆண்டில்
திருவள்ளுவர் ஆண்டு முறையை
ஏற்றது. 1972 ஆண்டு அரசிதழிலும்
வெளியிட்டு - தமிழக அரசு
அலுவலகங்களில் திருவள்ளுவர்
ஆண்டு பின்பற்றப் பெற்று
வருகின்றது.