வியாழன், 30 மார்ச், 2017

ஏப்ரல் 1 முட்டாள்கள் நாள் @ அறிவாளிகள் தினம்



ஏப்ரல் 1 முட்டாள்கள் நாள்   @  அறிவாளிகள் தினம்

ஏப்ரல் முட்டாள்கள் நாள் ஏப்ரல் முதலாம் நாள் உலகம் முழுவதும் உத்தியோகப்பற்றற்ற முறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

வரலாறு

இந்நாள் எவ்வாறு எப்போது ஆரம்பமானது என்பதில் தெளிவான வரலாறு இல்லாதபோதும் பிரான்ஸ் நாட்டிலேயே இது முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது எனத் தெரிகிறது .
16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப்ரல் 1 இலேயே புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர்
1562ம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான 13வது கிரகரி அவர்கள் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி புதிய
கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி 1 அன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது.
எனினும் இந்தப் "புதிய" புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் சில காலம் எடுத்தது. பிரான்ஸ் 1852ம் ஆண்டிலும்,
ஸ்கொட்லாந்து 1660ம் ஆண்டிலும்,
ஜெர்மனி , டென்மார்க் , நோர்வே போன்ற நாடுகள் 1700ம் ஆண்டிலும், இங்கிலாந்து
1752ம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டன.
புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் திகதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள் இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்பிரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்பிரல் முட்டாள்கள் என்று இவர்கள் அழைத்தார்கள். இதலிருந்து ஏப்பிரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
எனினும் 1582ம் ஆண்டுக்கு முன்னரேயே
1508ம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றுகள் உண்டு. அதேபோல் டச்சு மொழியிலும் 1539ம் ஆண்டுக் காலப்பகுதியில் முட்டாள்கள் தினம் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை அறியக் கூடியதாக உள்ளது.
1466ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்பிரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.


அறிவாளிகள் தினம்

சர்வதேச ரீதியில் அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், மகளிர் தினம், தொழிளாலர்கள் தினம் என்று மனிதர்களுக்குப் பலவிதமான தினங்கள் இருப்பது போலவே முட்டாள்களுக்கும் என்று ஒரு தினம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய தினங்களுக்கு உரிமை கொண்டாடுவதைப் போல இத்தினத்தில் தமக்கும் பங்கிருப்பதாகச் சொல்லிக்கொள்ள எவரும் முன் வருவதில்லை. அதே நேரம் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளாமல் அடுத்தவரை முட்டாளாக்க முனையும் முட்டாள்களான அறிவாளிகளின் தினம் என்றாலும் பிழையாகாது. அதுதான் இந்த ஏப்ரல் முதல் தேதியாகும்.
விஷயங்களை அறிந்து கொள்பவன் அறிஞன் ஆகின்றான் என்பார்கள். அதேபோல் ஒரு முட்டாள் ‘தான் ஒரு முட்டாள்’ என்பதை அறிந்து கொள்ளும்போது அவனும் ஒரு ‘அறிஞனாக’ வாய்ப்புக் கிட்டுகிறதா என்று எமக்கும் முட்டாள்தனமாக சிந்திக்க தோன்றுகிறது.
“The first of April is the day we remember what we are the other 364 days of the year ” – Mark Twain என்று நம்மைப்பற்றி முன்பே உரத்துச் சொல்லிவிட்டார். கற்றாரைக் கற்றாரே காமுறுவது போல் ஒரு முட்டாள் அவனை விடப் பெரிய முட்டாளை மெச்சுவான் என்றும் யாரோ ஒருவரும் கூறியுள்ளதாகவும் அறிகிறோம்.
“முட்டாள்கள் தினம்” ஏப்ரல் 1ம் தேதி உலகமெல்லாம் முட்டாள்களாக்கும் முயற்சி நடைபெறுகிற ஒரு முட்டாள் நாள். இது எவ்வாறு ஆரம்பமானது என்ற வினாவும் எம்முள் எழுகின்றது.
புராதான வரலாற்றில் ரோமானிய நாட்காட்டியின்படி ஏப்ரல் 1ம் தேதி தான் வசந்தம் ஆரம்பிக்கும் பொன்னாளாகும். புராதான வரலாற்றில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடியதற்கான வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன. ஹார்வி என்னும் வரலாற்றாய்வாளர் தனது குறிப்பில், ” பிரான்ஸ் தேசத்தின் அரசன் ஒன்பதாம் சார்லஸ் காலத்தில் மார்ச் மாதம் 25ம் தேதியிலிருந்து ஒருவார கால புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாக குறிப்பிட்டுள்ளார். திருவிழாவைப்போல் நடைபெறும் இந்தக் கொண்டாட்டங்களின்போது ஒருவருக்கொருவர் பரிசுப் பொருள்களையும், அன்பளிப்புகளையும் வழங்கி தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒருவாரக் கொண்டாட்டத்தின் இறுதி நாளான ஏப்ரல் ஒன்றாம் தேதி பெரு விருந்துடன் புத்தாண்டு விழா நிறைவெய்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
1562ம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான 13வது கிரகரி அவர்கள் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரகரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி 1 அன்று தான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது. 1562ம் ஆண்டில் போப் கிரகரி புதிய ஆண்டுத் துவக்கத்தை நடைமுறைப்படுத்தும்படி அறிவித்தார். ஆண்டுத் துவக்க நாளாக ஜனவரி 1ம் தேதியை அறிமுகம் செய்து வைத்தார்.
இனி மேல் பிரான்ஸ் தேசம் முழுமையும் இந்த நாட்காட்டி தான் என்று ஊர்தோறும் அறிவிக்கப்பட்டது. இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அல்லது போப்பின் அறிவிப்பை நம்பாதவர்கள் ஏப்ரல் 1ம் தேதியையே புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடினர்.
இந்தப் “புதிய” புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் சில காலம் எடுத்தது. அதற்குக் காரணங்கள் பல உண்டு. அன்றைய கால கட்டத்தில் இது போன்ற செய்திகள் அல்லது மாற்றங்கள் சகலரையும் சென்றடைவதற்குரிய தகுந்த சாதனங்கள் இருக்கவில்லை. அத்தோடு பழைய வழக்கத்தைப் புறம் தள்ளி புதிய வழக்கத்தை ஏற்றுக் கொள்வதையும் இம்மக்கள் மறுத்திருக்கலாம். ஆகவே இம்மக்கள் தொடர்ந்தும் ஏப்ரல் மாதம் முதலாம் தேதியையே தமது புத்தாண்டுத் தினமாகக் கொண்டாடி வந்தார்கள்.
எவ்வாராயினும் பிரான்ஸ் 1582ம் ஆண்டிலும் ஸ்காட்லாந்து 1660ம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நார்வே போன்ற நாடுகள் 1700ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752ம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டன.
புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் தேதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள் இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்ரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்ரல் முட்டாள்கள் என்று அழைத்தார்கள். இதிலிருந்து ஏப்ரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
என்றாலும் 1582ம் ஆண்டுக்கு முன்பே 1508ம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றுகள் உண்டு. அதேபோல் டச்சு மொழியிலும் 1539ம் ஆண்டுக் காலப் பகுதியில் முட்டாள்கள் தினம் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை அறியக் கூடியதாக உள்ளது.
1466ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்ரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.
ரோமாபுரியில் கிறிஸ்தவர்கள் அதிகாரத்திற்கு வந்தபோது, நடைமுறைகளை மாற்றினார்கள். தற்போதுள்ள ஈஸ்ட்டர் பண்டிகையினையும் மாற்றி அறிவித்தார்கள். பழமையான கொண்டாட்டங்களை மாற்றியதோடு அவற்றில் ஒரு சிலவற்றை வேடிக்கை, வினோத கொண்டாட்டங்களுக்குரிய நாளாக மாற்றினர்.
இந்த மாற்றங்களில் நம்பிக்கை இல்லாமலிருந்த இவர்களை கேலியும் கிண்டலும் செய்து விளையாட்டாக முட்டாளாக்கி ஏமாற்றும் போக்கில் ஈடுபட்டனர்.
இதுவே நாம் இன்றைக்கு வேடிக்கையாய் முட்டாள்களாக்கி மகிழ்கிற நாளாக தொடர்ந்திடுகிறது எனலாம். ஜனவரி மாதம் 1ம் தேதியை புத்தாண்டாக ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள் அல்லது மறந்தவர்களுக்கு முட்டாள்தனமான பரிசுகளை அனுப்பினர். பெரிய பரிசுக்கூடைகள் போன்று வடிவமைத்து உள்ளே குதிரை முடி, பழைய குப்பை என்று நிரப்பிக் கொடுத்து ஏமாற்றுதல் போன்ற ஏமாற்று வேலைகளைச் செய்து ஏமாற வைத்தனர்.
இதை நம்பும்படியான ஆனால் நகைக்கும்படியான செயலாக செய்து மகிழ்ந்தனர். முதலாம் நெப்போலியன் ஆஸ்திரியாவைச் சேர்ந்த மேரி லூயிஸை 1810ல் திருமணம் செய்துகொண்டார். அவர்கள் ஏப்ரல் 1ம் தேதி திருமணம் செய்து கொண்டதால் மணமகளை கேலி செய்து இருக்கின்றனர். நெப்போலியன் உண்மையாகத் திருமணம் செய்யவில்லை. உன்னை முட்டாளாக்கவே திருமணம் செய்திருக்கிறார் என்று எள்ளி நகையாடியதாகக் கூறப்படுகிறது.
ஏப்ரல் முதல் நாளை, “Poission d’avril ” என்று அழைத்துள்ளனர். இத்தகைய கேலிக்கூத்துக்கள் சுற்றிச் சுழன்று பிரான்சிலிருந்து இங்கிலாந்துக்கும் அங்கிருந்து அமெரிக்காவுக்கும் ஏப்ரல் ஃபூல் விரிந்து பரவி இருக்கிறது. இது குறித்து சிகாகோவில் உள்ள இலினாய்ஸ் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் ஸ்டீவன் பேன்னிங் ஐரோப்பாவில் எப்படி எல்லாம் நடந்தது என்று விலாவாரியாகக் குறிப்பிட்டுள்ளார்.
கிரகரியன் காலண்டரை ஏற்றுக்கொண்ட முதல் நாடாக பிரான்ஸ் இருந்தாலும் இத்தகைய கேளிக்கைகளின் ஆணிவேரைக் கண்டுபிடிக்கப் போதுமான ஆதாரக் குறிப்புகள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
ஸ்காட்லாந்தில் April Fool’s Dayயை April Gawk என்று கடைப்பிடித்ததாக பேராசிரியர் ஸ்டீவன் தெரிவித்துள்ளார். அதாவது ஏப்ரல் 1ம் தேதி வினோதமாக உடையுடுத்தி ரெண்டுங்கெட்டானாக நடந்து கொண்டு ஸ்காட்டிஷ் மக்கள் அந்த நாளை கொண்டாடியதாக மேலும் தெரிவித்தார்.
ஒரு பொய்யை உண்மை என்று நம்ப வைப்பது, ஒரு கடிதத்தில் அவசரம் என்று மேலே எழுதி உள்ளே முட்டாள், “இன்று ஏப்ரல் ஃபூல் தினம் தெரியுமா? அது வேறு யாருமில்லை நீதான்”, இப்படி எழுதி அனுப்புவதை வழக்கமாகச் செய்திருக்கின்றனர்.
பிரெஞ்சுக் குழந்தைகள்கூட காகிதத்தில் மீன் போன்று செய்து தனது சினேகிதர்களின் முதுகில் ஒட்டி அனுப்பிக் கேலி செய்திருக்கின்றனர். இப்படி முதுகில் மீனோடு திரிகிற குழந்தைகளைப் பார்க்கும் குழந்தைகள் “ஏப்ரல் மீன்” என்று அழைத்துக் கேலி செய்திருந்திருக்கின்றனர்.
1986ல் ப்ரெட் வால்டன் இயக்கிய, “ஏப்ரல் ஃபூல்ஸ் டே” திரைப்படம் மிகப் பிரபலமானது. டெபோரா போர்மேன், ஜேய் பேக்கர், டெபோரா குட்ரிச் நடித்திருந்தனர். பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தார் பிரம்மாண்டமாக தயாரித்திருந்த இப்படம் ஒளி நாடாக்களிலும் வீர நடை போட்டு வந்ததை குறிப்பாகச் சொல்லலாம்.
ஏப்ரல் முதல் தேதி பல வேடிக்கைகள் மட்டுமல்லாது பல வினைகளும் வந்துள்ளன. அத்தோடு பல மூட நம்பிக்கைகளையும் இந்த ஏப்ரல் முதல் தேதி மக்களுக்கு வழங்கியிருக்கின்றது.
அல்லது மக்களே தங்களுக்கு வழங்கி இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்!.

செவ்வாய், 28 மார்ச், 2017

யுகாதித் திருநாள்



யுகாதித் திருநாள்

யுகாதித் திருநாள் புதிய வாழ்க்கையின் ஆரம்பமாகக் கொண்டாடப்படுகிறது..!
"யுகாதி'என்றால் "புதிய பிறப்பு'.
புதிதாக பிறக்கும் ஒவ்வொரு ஆண்டும் நலமாகவும், ஒற்றுமை உணர்வை தூண்டுவதாகவும் அமைய வேண்டும் என்னும் நோக்கத்தில் சிறப்புப்பெறுகிறது..!
சந்திரனின் சஞ்சாரப்படி சித்திரை முதல்நாள் தான் யுகாதி கொண்டாடப்பட்டது.
பிற்காலத்தில் சூரிய சஞ்சாரத்தின் அடிப்படையில் புத்தாண்டு பிறப்பு கணிக்கப்பட்ட போது, யுகாதி கொண்டாட்ட நாளில் மாற்றம் ஏற்பட்டது.
யுகாதித்திருநாளில் திருப்பதியில் விசேஷ பூஜைகள் நடக்கும்.
ஏழுமலையான் பவனி சிறப்பாக நடக்கும்.
யுகாதி நாளில் லட்சுமி குபேரருக்கு செல்வ அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

நம்ம ஊர் மாவிளக்கு போல ஆந்திரத்தில் பிரபலமான இனிப்பான சலுவுடி என்னும் மாவுப்பண்டம் . தெலுங்கு வருடப்பிறப்பிற்கு வீட்டுக்கு வீடு அவசியம் செய்வார்கள் .

அதிரசம் யுகாதி அன்று செய்யடும் சிறப்பான இனிப்பு..!
“தெலுங்கு தேவதை”.ஒரு கையில் அமிர்த கலசம் மறுகையில் விவசாயிகளின் உயிர் “நெற்பயிர்” கொண்டு யுகாதி – யுகத்தின் தொடக்கம் (யுகம் + ஆதி = யுகாதி) என்று பொருள்.
, ஒரு சில இடங்களில், சந்திர நாட்காட்டியின் வழியே புத்தாண்டு கொண்டாடப்பட்டு வந்தது...
சூரிய நாட்காட்டியின் வழியே, தமிழ் நாட்டில் தமிழ் புத்தாண்டாகவும், அசாமில் பிஹுவாகவும், பஞ்சாபில் வைசாஹியாகவும், ஒரிஸாவில் பாண சங்கராந்தியாகவும், மேற்கு வங்கத்தில் நாப பார்ஷாவாகவும்
ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் யுகாதி, மகாராஷ்டிராவில் குடி பட்வா,
சேடி சந்த் (Cheti Chand) என்றும் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
இது பெரும்பாலும், ஏப்ரல் 14 அல்லது இரு தினங்கள் முன்னரோ அல்லது இரு தினங்கள் பின்னரோ கொண்டாடப்படுகிறது.
கோவில்களில், சர்க்கரை மற்றும் வெண் பொங்கலுடன் யுகாதி பச்சடியும் வழங்கப்படும்....
""யுகாதியின் போது, அறுசுவை கொண்ட யுகாதி பச்சடி பரிமாறப்படும். இந்த பச்சடியை ஆண்டுக்கு ஒரு முறை சாப்பிடுவது நல்லது.
பச்சடியில், இனிப்புக்கு வெல்லம், புளிப்புக்கு புளி தண்ணீர், கசப்புக்கு வேப்பம்பூ, துவர்ப்புக்கு மாங்காய், காரத்திற்கு மிளகு மற்றும் உப்பு சேர்த்து வழங்கப்படும். இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது ,

மக்கள் தத்தம் வீடு வாசல்களை தூய்மையாக்கி, வெள்ளையிட்டு, புத்துணர்வு பெற என்னை குளியல், உற்சாகத்துக்கு புது துணிமணிகள் அணிந்து மிகவும் மகிழ்ச்சியாக புது வருடத்தை வரவேற்று பிரார்த்தனை செய்வர்.
யுகாதி பச்சடி எனப்படும், ஆறு சுவை கொண்ட பாரம்பரியமிக்க உணவினை உண்ட பிறகே மற்ற இனிப்பு வகைகளைக் கூட அருந்துவர்.
அந்த நாள் முழுவதும், வண்ணங்களால் சூழ வாசலில் ரங்கோலி கோலமிட்டு, “பஞ்சாங்க சரவணம்” என்னும் “பஞ்சாங்கம்” படித்து அந்த வருடத்தின் தன்மையை தெரிவிப்பார்கள்..!
யுகாதித் தினத்தில் , நல்ல காரியங்கள் துவங்கினால் நிச்சயம் வெற்றி கிட்டும் என்றும் நம்பப்பட்டு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
 அனைவருக்கும், “யுகாதி சுபக்காஞ்சலு”


யுகாதித் திருநாள் வாழ்த்துகள்...
யுகாதி ஆன்று ராமாயணக்கதை ஒன்றை உதாரணமாகச் சொல்வார்கள்.
ராமர் காட்டிற்கு புறப்பட்டார். மகனின் பிரிவைத் தாங்காத தாய் கவுசல்யா அவருடன் காட்டுக்கு வருவதாக அடம் பிடித்தாள்."

"அம்மா! கணவருக்குப் பணிவிடை செய்வதே மனைவிக்குரிய தர்மம். நீங்கள் அப்பாவைக் கவனித்துக் கொண்டு இங்கேயே இருங்கள்,'' என்று பக்குவமாக எடுத்துச் சொல்லி தாயை சமாதானப்படுத்தினார் ராமர்..!

இதையடுத்து சீதையும் அவருடன் வருவதாக கிளம்பிய போது, ""சீதா நீ அங்கே வராதே. கல்லிலும் முள்ளிலும் சிரமப்படுவாய். வேண்டாம்,'' என்றார்.
""ஸ்ரீராமா! என்ன நியாயம் இது? உங்கள் அம்மா உங்களுடன் கிளம்பிய போது, கணவனைக் காப்பது மனைவியின் கடமை என்று தர்மத்தைப் போதித்தீர்கள். அதே தர்மம் தானே எனக்கும் பொருந்தும்! அம்மாவுக்கு ஒரு விதி, மனைவிக்கு ஒரு விதியா! நானும் உங்களுக்கு சேவை செய்ய வேண்டுமல்லவா! நீங்கள் இருக்குமிடமே எனக்கு அயோத்தி, நின் பிரிவினும் சுடுமோ பெரும் காடு ...! அதனால் உங்களோடு வருகிறேன்,'' என்று சாதுர்யமாக பதிலளித்தாள்.
ராமரால் பேச முடியவில்லை. மனைவியை அழைத்துச் செல்ல சம்மதித்தார் ...
எந்தக்காலத்தில் தான் தன் மனைவியை கணவனால்
பேச்சில் வெல்லமுடிந்திருக்கிறது..!??
கணவனுக்காகமனைவி, மனைவிக்காக கணவன், குடும்பத்துக்காக பிள்ளைகள் என்ற ஒற்றுமை தத்துவத்தை இந்தக்கதை போதிக்கிறது.
யுகாதியன்று இதுபோல ராமாயண சம்பவங்கள் மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படும். குடும்ப ஒற்றுமை ஓங்க யுகாதி நன்னாளில் சபதமேற்கும் நன்னாளாகும்..!

ஞாயிறு, 26 மார்ச், 2017

உலகத் திரையரங்கு தினம் மாரச் 27.( World Theater Day )


உலகத் திரையரங்கு தினம் மாரச் 27.( World Theater Day )

உலகத் திரையரங்க நாள் ( World Theater Day ) யுனெஸ்கோவின் முயற்சியால் சர்வதேச திரையரங்க நிறுவனம் 1948 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. யுனெஸ்கோ மற்றும் அதன் கலாச்சாரத் துறையின் சார்பாக 1961 ஆம் ஆண்டில் உலகத் திரையரங்க நாள் கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27 அன்று உலகத் திரையரங்க தினம் சர்வதேச திரையரங்க நிறுவனம் மூலம் கொண்டாடப்படுகிறது.

வெள்ளி, 24 மார்ச், 2017

எழுத்தாளர் தி. க. சிவசங்கரன் நினைவு தினம் மார்ச்- 25 2014.



எழுத்தாளர் தி. க. சிவசங்கரன்  நினைவு தினம் மார்ச்- 25 2014.
தி. க. சிவசங்கரன் ( Thi. Ka. Sivasankaran , 30 மார்ச் 1925 - 25 மார்ச் 2014),  மார்க்சிய திறனாய்வாளர். திருநெல்வேலி நகரில் பிறந்தவர். சிறு வயதிலேயே இவரது இளமைப் பருவ நண்பரான
வல்லிக்கண்ணனுடன் இணைந்து முற்போக்கு இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். ப.ஜீவானந்தத்தால் இலக்கிய வழிகாட்டுதல் பெற்றார். இந்திய பொதுவுடமைக் கட்சி இலக்கிய இதழான தாமரையில் 1960 முதல் 1964 வரை ஆசிரியராகப் பணியாற்றினார். 1964ல் சோவியத்து கலாச்சார நிலையத்தில் செய்தித் துறையில் சென்னையில் பணியாற்றி 1990ல் ஓய்வுபெற்றார். தி.க.சிவசங்கரனின் மகன் வண்ணதாசன் என்ற கல்யாணசுந்தரம் எழுத்தாளரும், தமிழில் முக்கியமான சிறுகதையாசிரியரும் ஆவார்.
திறனாய்வாளர்
நா. வானமாமலை , தொ. மு. சி. ரகுநாதன் ஆகியோரிடம் தொடர்பு கொண்டிருந்த தி.க.சிவசங்கரன் உறுதியான கட்சிப் பிடிப்புக் கொண்டவர். கட்சி எடுக்கும் அதிகாரபூர்வ நிலைப்பாட்டை ஒட்டித் திறனாய்வுகள் செய்வார். கடுமையான விமரிசனங்களை முன்வைத்து விவாதிப்பவர்.
புதுமைப்பித்தனை ஒரு இலக்கிய முன்னுதாரணமாக க. நா. சுப்ரமண்யம் முன்வைத்தபோது புதுமைப்பித்தன் ஒரு பிற்போக்குத்தனமான கலாச்சார நசிவு சக்தி என்று அடையாளம் காட்டி "அதில் புதுமையும் உண்டு, பித்தமும் உண்டு" என்று அவர் எழுதிய சாடல் கட்டுரை பெரிய விவாதத்தை உருவாக்கியது. அதன் பிறகு அக்கருத்துக்களை மாற்றிக் கொண்டார்.
இளம் எழுத்தாளர் அறிமுகம்
தாமரை இதழில் பணியாற்றிய போது பல இளம் எழுத்தாளர்களை அறிமுகம் செய்தார். இளம் எழுத்தாளர்களுக்கு கார்டுகளில் கடிதங்கள் எழுதுவது, இதழ்களில் வாசகர் கடிதங்கள் எழுதுவது அவரது முக்கியமான இலக்கியச் செயல்பாடுகளாக இருந்தன. இதனால் தமிழ்நாட்டில் பல புதிய எழுத்தாளர்கள் தோன்ற காரணமாக இருந்தார்.
சாகித்ய அகாதமி விருது
இவரது மதிப்புரைகளும் கட்டுரைகளும் முதிய வயதில்தான் திகசி கட்டுரைகள் என இரு பகுதிகளாக தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டன. இத்தொகுதிகளுக்கு
2000 ஆம் ஆண்டில் சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.
ஆவணப்படம்
தி.க.சி.யின் வாழ்க்கை குறித்தும்-எழுத்துலகம் குறித்தும் 2007-ஆம் ஆண்டு சென்னையில் இயங்கி வரும் தமிழ்க்கூடம் என்ற கலை-இலக்கிய அமைப்பு ஒரு ஆவணப் படத்தை உருவாக்கியது. ”21-இ,சுடலை மாடன் தெரு,திருநெல்வேலி டவுன்” என்று பெயர் சூட்டப்பட்ட இப்படத்தை எழுத்தாளரும் இயக்குநருமான எஸ். ராஜகுமாரன் எழுதி-இயக்கியுள்ளார். திருப்பூர் மத்திய அரிமா சங்கத்தின் 2008-க்கான சிறந்த ஆவணப்பட விருது மற்றும் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கத்தின் சிறந்த ஆவணப்பட விருது-2008 ஆகிய விருதுகள் இந்த ஆவணப்படத்திற்கு கிடைத்தன.
மறைவு
சிவசங்கரன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பாளையங்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், 2014 மார்ச் 25 இரவு 11.30 மணியளவில் காலமானார்.  மறைந்த தி.க.சிவசங்கரனுக்கு 3 மகள்கள் மற்றும் எழுத்தாளர் வண்ணதாசன் உள்பட 3 மகன்கள் உள்ளனர்.

வியாழன், 23 மார்ச், 2017

உலக காச நோய் தினம் மார்ச் 24.

  

உலக காச நோய் தினம் மார்ச் 24.


அனைத்துலக காச நோய் நாள் ( World Tuberculosis Day ), மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வோர் ஆண்டும்
மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
காச நோய் இன்று உலகில் 1.7 மில்லியன் மக்களை ஆண்டுதோறும் கொன்று குவிக்கும் ஒரு முக்கிய உயிர்கொல்லி நோயாக உள்ளது. முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்நோய் இன்னமும் கட்டுக்கடங்காமல் உள்ளது.

வரலாறு

மார்ச் 24, 1882 ஆம் ஆண்டில் டாக்டர்
றொபேர்ட் கொக் ( Robert Koch ) என்பவர் காசநோய்க்கான காரணியை ( TB bacillus )
பெர்லினில் அறிவித்து அறிவியல் உலகை வியப்பில் ஆழ்த்தினார். ஆந்நாளில் இந்நோய் ஐரோப்பா மற்றும்
அமெரிக்காவில் ஏழு பேருக்கு ஒருவரின் உயிரைக் காவு கொண்டு வந்தது. கொக்கின் இக்கண்டுபிடிப்பு காச நோய் பற்றி முழுமையாக அறிய வழிவகுத்தது.
1982 ஆம் ஆண்டில் இக்கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நினைவு நாளில் காச நோய் மற்றும் இருதய நோய்களுக்கெதிரான அனைத்துலக அமைப்பு (International Union Against Tuberculosis and Lung Disease - IUATLD) மார்ச் 24 ஆம் நாளை உலக காசநோய் நாளாக அறிவிக்க வேண்டுகோள் விடுத்தது. 1996 ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு (WHO) இந்நாளை காசநோய் விழிப்புணர்வு நாளாக அறிவித்தது.


காச நோய் எனப்படும் டி.பி. ஒரு காலத்தில் உயிர்க்கொல்லி நோய். இன்றைக்கும் அந்த நோய் பரவும் முறைகளுக்கும் ஏற்படுத்தும் பாதிப்புகளுக்கும் குறைவில்லை. ஆனால், அந்த நோயை குணப்படுத்துவதற்கு மருந்துகள் இருப்பதுதான் ஒரே மாற்றம்.
டியூபர்செல் பாசிலஸ் அல்லது டியூபர் குளோசிஸ் என்பதன் சுருக்கம்தான் டி.பி. வீட்டில் உள்ள ஒருவருக்கு இந்நோய் வந்தால், மற்றவர்கள் அஞ்சி ஓடும் நிலை முன்பு இருந்தது. இன்றோ காச நோய் உயிரைக் காவு வாங்கக்கூடிய அளவுக்குக் கொடிய நோயாக இல்லை. நோய் வந்தால் சில மாதங்களுக்கு முழுமையாக மருந்து, மாத்திரை எடுத்துக்கொண்டால் போதும். நோயை விரட்டிவிடலாம்.
மோசமான நோய்
காச நோய்க்கு இன்று மேம்பட்ட சிகிச்சை முறைகள் வந்துவிட்டாலும்கூட, இன்றும் இந்நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. மூன்றாம் உலக நாடுகளில் ஒவ்வோர் ஆண்டும் இந்நோய்க்கு 17 லட்சம் பேர் உயிரிழப்பதாகக் கூறுகிறது உலகச் சுகாதார அமைப்பு. ஆண்டுதோறும் 80 - 90 லட்சம் பேர் காச நோயால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்று அந்த அமைப்பு எச்சரிக்கிறது.
பொதுவாக மூச்சுத் தொகுதியில், நுரையீரலைத் தாக்கி நோயை உண்டாக்கக் கூடியவை காச நோய்க் கிருமிகள். இவை நரம்புத் தொகுதி, நிணநீர்த் தொகுதி, இரைப்பை-குடல் தொகுதி, எலும்பு மூட்டுகள், ரத்த சுழற்சிப் பாதை, சிறுநீரகம், பாலுறுப்புகள், தோல் போன்ற பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் வெங்கட் ரமணி.
‘‘இருமல், தும்மல், எச்சில் ஆகியவற்றிலிருந்து காற்றில் பரவும் தன்மை கொண்டது காச நோய். எனவேதான், அந்தக் காலத்தில் இந்நோய் பெரும் அச்சத்தை உண்டாக்கியது. இன்றைக்கும் அதே வழிமுறைகள் காரணமாகவே பெருமளவு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்’’ என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
திருப்புமுனை
1880களின் தொடக்கத்தில் ஐரோப்பா, அமெரிக்கக் கண்டங்களில் காச நோய் தீவிரமாக இருந்த காலம். பல மருத்துவ விஞ்ஞானிகளும் நோய்க்கான காரணங்களைக் கண்டறிய ஆய்வில் ஈடுபட்டிருந்த நேரம். அந்த நேரத்தில் 1882ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி ஜெர்மனி மருத்துவ விஞ்ஞானி ராபர்ட் காஹ் என்பவர் காச நோயை உண்டாக்கும் பாசிலஸ் என்ற நுண்ணுயிரியைக் கண்டறிந்தார். அந்தக் காலத்தில் மருத்துவ உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்திய கண்டுபிடிப்பு இது.
இந்தக் கண்டுபிடிப்புக்குப் பிறகே காச நோயின் தன்மை குறித்து மருத்துவ உலகம் அறிய முடிந்தது. மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியும், இதன் பின்னரே தீவிரமடைந்தது. இன்று இந்நோய்க்கு மேம்பட்ட சிகிச்சை முறைகள் இருப்பதற்கு இந்தக் கண்டுபிடிப்பே முன்னோடி. இந்தக் கண்டுபிடிப்புக்காக 1905ஆம் ஆண்டில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு ராபர்ட் காஹுக்குக் கிடைத்தது.
இந்தக் கண்டுபிடிப்பின் நூற்றாண்டு விழா 1982ஆம் ஆண்டில் நடைபெற்றபோது, காச நோய் மற்றும் இருதய நோய்களுக்கு எதிரான அனைத்துலக அமைப்பு, இந்நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மார்ச் 24ஆம் தேதியை உலகக் காசநோய் நாளாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. இதை ஏற்று 1996ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி முதல் உலகக் காச நோய் தினம் கடைபிடிக்கப்படும் என உலகச் சுகாதார அமைப்பு அறிவித்தது.
எச்சில் துப்பாதீர்கள்...
# உலகிலேயே காச நோயாளிகள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணியில் உள்ளது. 2012ஆம் ஆண்டு உலகச் சுகாதார அமைப்பின் புள்ளிவிவரப்படி 20 முதல் 30 லட்சம் நோயாளிகள் நம் நாட்டில் உள்ளனர்.
# இந்த நோய் மிகச் சுலபமாகப் பரவக்கூடிய ஒரு நோய். காச நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருமினாலோ, சளி மற்றும் எச்சிலைத் துப்பினாலோ அதிலிருந்து வெளிவரும் கிருமிகள் காற்றில் கலந்து மற்றவர்களுக்கு நோயை உண்டாக்கிவிடும்.
# நம் நாட்டில் பொது இடங்களில் எச்சில், சளி துப்புவது பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. இருமும்போது வாயையும், மூக்கையும் மூடிக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு குறைவாகவும் அலட்சியம் அதிகமும் உள்ளவர்கள் நம்மிடையே அதிகம். இந்த நோய் அதிகம் பரவ இது முக்கியக் காரணம்.
# கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் இருக்கும்போதும் மருத்துவமனைகள், சிறைகள், ஆதரவற்றோர் முகாம்கள் என எந்தப் பொது இடத்துக்குச் சென்றாலும், முகமூடியை அணிவது நல்லது. இதேபோலப் பேருந்து, ரயில் பயணங்களின்போதும் இதைக் கடைபிடிப்பது காசநோய்த் தடுப்புக்குப் பலனளிக்கும்

எழுத்தாளர் அசோகமித்ரன் காலமானார் மார்ச் 23 .


எழுத்தாளர்  அசோகமித்ரன் காலமானார் மார்ச் 23 .

சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் அசோகமித்ரன் காலமானார்
வியாழன், 23 மார்ச் 2017 .

பிரபல தமிழ் எழுத்தாளர் அசோகமித்ரன் சற்று முன்னர் காலமானார். அவருக்கு வயது 86. கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அசோகமித்ரன் சிகிச்சையின் பலனின்றி சற்று முன்னர் காலமானார்.

தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் கடந்த 1931 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் உள்ள செகந்திராபாத் நகரத்தில் பிறந்தவர். தந்தையின் மறைவிற்கு பிறகு தனது 21ஆம் வயதில் சென்னைக்கு குடியேறிய அவர். எளிமையும், மெல்லிய நகைச்சுவையும் கொண்டவர். இவருடைய எழுத்து. தமிழ் இலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவை என்று கூறினால் அது மிகையாகாது. அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை இவருக்குரியது. இவரது நாவல்கள் ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தமிழ் மட்டுமின்றி ஆங்கில நாளிதழ்களில் தொடர்ந்து எழுதி வரும் அசோகமித்திரன், அயோவா பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்து கொண்டவர். இவர் எழுதிய நாடகத்தின் முடிவு, வாழ்விலே ஒருமுறை, விமோசனம் விடுதலை, காலமும் ஐந்து குழந்தைகளும், முறைப்பெண், சினேகிதர் மற்றும் மானசரோவர் உள்பட பல நாவகள் புகழ்பெற்றவை. அசோகமித்ரன் எழுதிய 'அப்பாவின் சிநேகிதர்' என்னும் சிறுகதை தொகுப்புக்கு 1996 ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அசோகமித்திரன், தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் 1931 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் உள்ள செகந்திராபாத் நகரத்தில் பிறந்தவர். தந்தையின் மறைவிற்கு பிறகு தனது 21ஆம் வயதில் சென்னைக்கு குடியேறினார்  . எளிமையும், மெல்லிய நகைச்சுவையும் கொண்டது இவருடைய எழுத்து. தமிழ் இலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவை இவரது கதைகள். அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை இவருக்குரியது. இவரது நாவல்கள் ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கில நாளிதழ்களில் தொடர்ந்து எழுதி வரும் அசோகமித்திரன், அயோவா பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்து கொண்டவர்.

1996 இல் அப்பாவின் சிநேகிதர் சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர். இவரது படைப்புகள் பெரும்பாலும் சென்னை அல்லது ஹைதராபாத்தை கதைக்களமாக கொண்டு அமைந்திருக்கும். சாதாரணமான கதாபாத்திரங்களின் மூலம் அசாதாரண கருத்துக்களை வெளிப்படுத்துவதாக இவரது படைப்புகள் அமைந்திருக்கும் என்று ஒரு கருத்தும் உள்ளது.

ஆக்கங்கள்
சிறுகதைகள்

நாடகத்தின் முடிவு
வாழ்விலே ஒருமுறை
விமோசனம் விடுதலை
காலமும் ஐந்து குழந்தைகளும்
முறைப்பெண்
சினேகிதர்
பிப்லப் சௌதுரியின் கடன் மனு
நாவல்கள்[தொகு]
பதினெட்டாவது அட்சக்கோடு
தண்ணீர்
இன்று
ஆகாசத்தாமரை
ஒற்றன்
மானசரோவர்
கரைந்த நிழல்கள்.

குறுநாவல்கள்

இருவர்
விடுதலை
தீபம்
விழா மாலைப் போதில்
பிற[தொகு]
அசோகமித்திரன் கதைகள் தொகுப்பு 1&2

கட்டுரைகள்

அசோகமித்திரன் கட்டுரைகள் தொகுப்பு 1&2

தகைமைகளும் விருதுகளும்

இவருக்குப் பல தகைமைகளும் விருதுகளும் கிடைத்துள்ளன. அவற்றில் சில கீழே தரப்படுகின்றன:

இவருக்குத் தமிழ்நாடு அரசு பரிசுகள் மும்முறையும் இலக்கியச் சிந்தனை விருதுகள் 1977 இலும் 1984 இலும் இருமுறையும் கிடைத்துள்ளன
இவருக்கு இந்திய இலக்கியத்தை ஒப்பீடு செய்யும் ஆய்வுக்கு கே.கே. பிர்லா நல்கை கிடைத்தது. மேலும் 1973-74 இல் அயோவா பல்கலைக்கழகத்தின் படைப்பிலக்கிய நல்கையும் கிடைத்தது.
லில்லி நினைவுப் பரிசு, 1992
இவருக்கு 1993 இல் இராமகிருஷ்ணா ஜெய்தயாள் அமைதி விருது டால்மியா அறக்கட்டளையால் தரப்பட்டது.
அக்ட்சரா விருது, 1996.
இவரது அப்பாவின் சிநேகிதர் எனும் சிறுகதை தொகுப்புக்கு 1996 இல் சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது.
இவர் 2007 ஜனவரியில் எம்.ஜி.ஆர் விருதைப் பெற்றார்
இவர் 2012 மே மாதத்தில் என்.டி.ஆர். தேசிய இலக்கிய விருதை என்.டி.ஆர். அறிவியல் அறக்கட்டளையில் இருந்து பெற்றார்.
இவர் 2013 பிப்ரவரி 10 இல் சென்னையில் நடந்த விழாவொன்றில் தொடக்கநிலைக் க.நா.சு. விருதைப் பெற்றார்.
2013 மார்ச்சு 30 இல் இவர் கொல்கத்தாவில் உள்ள பாரதீய பாஷா அறக்கட்டளையின் விருதைப் பெற்றார்.

மேலும் காண்க

ஜெயகாந்தன்

க.நா.சுப்பிரமணியம்

சுந்தர ராமசாமி

ஜெயமோகன்

ஆங்கிலம்

ஃபோர்டீன் இயர்ஸ் வித் பாஸ்
தி கோஸ்ட் ஆஃப் மீனம்பாக்கம்
ஸ்டில் ப்ளீடிங் ஃபிரம் தி வூண்ட்

புதன், 22 மார்ச், 2017

வீரத் தியாகிகள் தினம் மார்ச் 23,


வீரத் தியாகிகள் தினம் மார்ச் 23,

மார்ச் 23 அன்று, நம்முடைய வீரத் தியாகிகள் பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோரின் ஈடுஇணையற்ற தியாகத்தை நாம் வணங்குகிறோம். இந்தியாவை ஆங்கிலேய காலனியர்களுடைய பிடியிலிருந்து விடுவிப்பதற்காகவும், மனிதனை மனிதன் சுரண்டுதலற்ற ஒரு சமுதாயத்தை நிறுவுவதற்காகவும், பகத் சிங்கும் அவருடைய தோழர்களும் அழைப்பு விடுத்தனர். அவர்களுடைய இந்த எழுச்சிமிக்க உணர்வு, எண்ணெற்ற தியாகிகளிடமிருந்தும், 1857 கெதர் எழுச்சியின் வீரமிக்க போராளிகளிடமிருந்தும், அமெரிக்கா, கனடா மற்றும் பிற நாடுகளிலிருந்தும், இந்திய மண்ணிலிருந்தும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக விடுதலைக்காக 1915-இல் குரலெழுப்பியவர்களிடமிருந்தும் பெற்றனர். நமது நாட்டு மக்களுக்கு எதிராக ஆங்கிலேய ஆட்சியாளர்கள் நடத்திய ஜாலியன் வாலா பாக் படுகொலைகள் போன்ற காட்டுமிராண்டித்தனமான கொடூரங்கள் தங்களுடைய நோக்கங்களுக்காகப் போராடுவதற்கான நம்முடைய தியாகிகளுடைய மன உறுதியை மேலும் வலுப்படுத்தியது. 19 வயது கர்த்தார் சிங் சாராபா போன்ற இளைஞர்களுடைய பணிகளால் அவர்கள் ஆர்வமூட்டப் பட்டனர்.
சுரண்டலற்ற ஒரு நியாயமான வளமான ஒரு சமுதாயத்திற்காக நமது தியாகிகள் கண்ட கனவுகள் இன்றுவரை நிறைவேறாமல் இருக்கின்றன. பெரும்பான்மையான நமது மக்களைக் கொள்ளையடிப்பது, சுரண்டுவது மற்றும் ஒடுக்கும் அடிப்படையில் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் அமைப்பை நிறுவினர். இந்தியாவிற்கு சுதந்திரம் என்ற பெயரில் அதிகாரத்திற்கு வந்த இந்திய முதலாளித்துவ வர்க்கம், ஆங்கிலேயர்கள் நிறுவிய அந்த அமைப்பை மேலும் பன்மடங்கு தீவிரப்படுத்துவதில் பெரும் வெற்றி கண்டிருக்கிறது. பெரும் முதலாளிகளுக்கு அதிகபட்ச இலாபத்தை உறுதி செய்யும் நோக்கத்தில் பொருளாதாரத்தின் போக்கும், அரசு அமைப்பும் தீர்மானிக்கப்பட்டன. காங்கிரசு அல்லது பாஜக என எந்த அரசாங்கமாக இருந்தாலும் அவர்கள் முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதிகளாகவும், அவர்களுடைய நலன்களுக்காக ஆட்சி நடத்துபவர்களாகவும் இருக்கின்றனர்.
இன்று ஒரு பக்கம் விரல் விட்டு எண்ணக்கூடிய இந்திய முதலாளிகள், உலகிலுள்ள மிகப் பெரிய பணக்காரர்களாக இருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் நமது மக்கள் ஊட்டச் சத்து குறைந்தவர்களாகவும், கல்வியறிவு இல்லாதவர்களாகவும், வேலையற்றவர்களாகவும், வீடற்றவர்களாகவும், சுகாதாரம் மற்றும் பிற அடிப்படைத் தேவைகள் மறுக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர். நமது நாடு நீர், வனம், நிலம், மற்றும் கனிம வளங்கள் நிறைந்ததாக இருந்தாலும், கடன்களில் சிக்கிக் கொண்ட காரணத்திற்காக ஒவ்வொரு நாளும் உழவர்கள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டு வருகிறார்கள். தொழிற் சாலைகள், ஆலைகள், இயற்கை வளங்களென எல்லா குறிப்பிடத்தக்க உற்பத்திக் கருவிகளும் ஆளும் முதலாளி வர்க்கத்தின் உடமைகளாக இருக்கின்றன. அவர்கள், மேலும் கொழுப்பதற்கும், உழைக்கும் மக்களை ஓட்டாண்டிகளாக ஒதுக்கித் தள்ளுவதற்கும் இந்த வளங்களை வெட்கமின்றி கொள்ளையடித்து வருகின்றனர். இந்தக் கொள்ளையில் மிகப் பெரிய இந்திய மற்றும் அன்னிய ஏகபோகங்கள் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டுள்ளன. அவர்களுடைய நலன்களுக்கு ஏற்ப சட்டதிட்டங்கள் மாற்றப்படுகின்றன.
“மக்களுடைய கட்டளையை” வெளிப்படுத்தும் விதமாக, உலகின் மிகப் பெரிய சனநாயகத்தில் தேர்தல்கள் அவ்வப்போது நடத்தப்படுகின்றன. வாக்களிப்பதற்கான உரிமை, சுதந்திரத்திற்கும் சனநாயகத்திற்கும் மிகப் பெரிய அத்தாட்சியாக கூறப்படுகிறது. ஆனால் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கவோ, தங்கள் பிரதிநிதிகளைத் தங்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர்களாக ஆக்கவோ அல்லது அவர்களைத் திருப்பியழைக்கவோ மக்களுக்கு எவ்வித உரிமையையும் இல்லை. கொள்கைத் திட்டங்களைத் தீர்மானிக்கவோ, சட்டங்களை முன்வைக்கவோ மக்களுக்கு எந்த உரிமையும் இல்லை. தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய எந்த வழிமுறையும் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த சனநாயகமானது ஒரு மோசடியாகும். இந்த மாயைகளை நீடிப்பதற்கும், இளைஞர்களிடையே இதன் மீது நம்பிக்கையை உறுதி செய்வதற்கும், முதலாளிகளின் கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்களும், பாராளுமன்ற அரசியல் கட்சிகளும், முதலாளி வர்க்கத்தின் எல்லாவகையான கருத்தை உருவாக்குபவர்களும் காது செவிடாகும் வண்ணம் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
அநீதிக்கு எதிராகப் போராடுவதில் நமது இளைஞர்கள் எப்போதுமே முன்னணியில் இருந்து வந்திருக்கிறார்கள். பாரம்பரியமாகவே, நமது நாட்டின் பாதுகாப்பிற்காகவும், வளமைக்காகவும் எந்தத் தியாகங்களைச் செய்வதற்கும் நமது நாட்டு இளைஞர்கள் தயாராக இருந்திருக்கின்றனர். இன்றும் கூட இது உண்மையாகும். இன்றும் கூட நம்முடைய இளைஞர்களிடையே பகத் சிங்குகளுக்கும், கர்த்தார் சிங்களுக்கும், வீரபாண்டிய கட்டபொம்மன்களுக்கும் ஜான்சி ராணிகளுக்கும் கொஞ்சமும் குறைவு இல்லை. எனவே தான், நம்முடைய இளைஞர்களைக் குழப்புவதற்கும், அவர்களுடைய புரட்சிகர எண்ணங்களை சிதறடிப்பதற்கும், இந்த அமைப்போடு அவர்களைக் கட்டிப்போடுவதற்கும் சுரண்டும் முதலாளி வர்க்கம் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது.
இந்த அமைப்பில், முதலாளிகளுக்குத் தேவைப்படும் உழைப்பாளர்களுக்கு ஆதாரமாக இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களைச் சுரண்டுவதன் மூலம் ஒவ்வொரு நாளும் முதலாளி வர்க்கம் தங்களுடைய இலாபத்தைப் பெருக்கி வருகிறார்கள். முதலாளி வர்க்கத்தின் போர்களில் இளைஞர்கள் தள்ளப்பட்டு, பீரங்கிகளுக்குத் தீனியாக ஆகிறார்கள். அவர்களுடைய பிணங்கள் மீது, முதலாளி வர்க்கம் தன்னுடைய ஏகாதிபத்தியப் பேராசைகளை அடைய முடியும். குற்றச் செயல்களிலும், போதைப் பழக்கங்களிலும் இளைஞர்கள் சிக்கிக் கொள்கிறார்கள், எனவே சமுதாயத்தின் உண்மையான பிரச்சனைகளைப் பற்றி அவர்கள் குழம்பிப் போய் இருக்கிறார்கள். தேர்தல் மோதல்களாகட்டும் அல்லது அரசு திட்டமிட்டு நடத்தும் வகுப்புவாத படுகொலைகளாகட்டும், எல்லா வகையான குற்றவியலான செயல்களுக்கும் இளைஞர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். சமுதாயத்தில் உள்ள பல்வேறு அநீதிகளுக்கு எதிராக இளைஞர்கள் குரலெழுப்பினால் அவர்களை பயங்கரவாதிகளென அவர்களுடைய கதையை முடிக்கிறார்கள் அல்லது சிறையிலடைக்கின்றனர். மதம், தேசியம் ஆகிய அடிப்படைகளில் குறிப்பாக இளைஞர்கள் பலியாக்கப்படுகிறார்கள். இந்த அமைப்பிலேயே அவர்கள் முன்னேற முடியுமென தவறான கனவுகளில் ஒரு பக்கத்தில் அவர்கள் மூழ்கடிக்கப்படுகின்றனர். இன்னொரு பக்கம், இந்த அமைப்பை மாற்றுவதற்கான போராட்டத்தில் ஈடுபட முடியாதவாறு அவர்கள் கடுமையாக ஒடுக்கப்படுகிறார்கள்.



இந்திய மற்றும் அயல்நாட்டு சிறுபான்மையான சுரண்டல் பேய்கள், நம்மீது ஆட்சி செலுத்தி வரும் வரை, இந்தச் சுரண்டலிலிருந்தும் அநீதியிலிருந்தும் நாம் விடுதலை பெற முடியாதென நமது வீரத் தியாகிகள் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். இந்த உண்மையானது இந்தியாவிலுள்ள ஒவ்வொரு இளைஞருக்கும் இன்று மிகத் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். சுரண்டலதிபர்களுடைய ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதும், பெரும்பான்மையாக உள்ள தொழிலாளி வர்க்கத்தின் அரசை அமைப்பதும் எப்படி என்ற சவாலை இன்று இளைஞர்கள் சந்தித்து வருகின்றனர்.
நம்முடைய விடுதலைக்கு, நம்முடைய வீரத் தியாகிகள் சுட்டிக் காட்டியுள்ள புரட்சிகரப் பாதையே ஒரே வழியாகும். பாட்டாளி வர்க்கப் புரட்சிக்காக, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ், முன்னணி கம்யூனிஸ்டு கட்சியின் வழிகாட்டுதலின் கீழ் எல்லா ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களோடு இளைஞர்கள் அணிதிரட்டப்பட வேண்டும். பாட்டாளி வர்க்கப் புரட்சியின் அறிவியலான மார்க்சிசம்-லெனினிசத்தால் இளைஞர்கள் வழிநடத்தப்பட வேண்டும். ஒரு சில முதலாளிகளுடைய பைகளை நிரப்புவதற்காக இல்லாமல், எல்லா மக்களுடைய தேவைகளையும் நிறைவேற்றுமாறு பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் சமுதாயத்திற்காக நாம் போராட வேண்டும். அப்படிப்பட்ட சமுதாயத்தில், தொழிலாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ் எல்லா உற்பத்தியும் நடைபெறும், தங்களுடைய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மக்களுக்கு இருக்கும். நமக்கு முன்னே இருக்கும் சவால், முதலாளிவர்க்கத்திற்கும், அதனுடைய அரசுக்கும் எதிராக வாளை உயர்த்துவதாகும். இதுவே இளைர்களுக்கு முன்னாலுள்ள சவாலாகும்.
நம்முடைய இளைஞர்களுடைய விருப்பங்களை நிறைவேற்ற பாட்டாளி வர்க்கப் புரட்சி மட்டுமே ஒரே வழியாகும்!
அணிதிரள்வோம், ஆளும் வர்க்கமாக ஆவோம், சமுதாயத்தை மாற்றியமைப்போம்!
நன்றி -   CGPI



இன்று பக்த்சிங்-ராஜகுரு-சுகதேவ்க்கு மரண தண்டனை உறுதி செய்த நாள் மார்ச் 23,.....

சுதந்திர இந்தியாவிற்கு பூரண சுதந்திரம், சுரண்டலற்ற சோசலிச சமூகம் என்ற லட்சியங்களை முன்வைத்து, தேச விடுதலையின் இன்பமே தங்களின் இன்பம் என சுதந்திரப் போரில் ஈடுபட்ட வீரமிக்க பகத்சிங், ராஜகுரு, சுகதேவ், சிவவர்மா, பி.கே.தத், சந்திர சேகர அசாத், ஜதீன் தாஸ், துர்கா தேவி, யஷ்பால் மற்றும் தோழர்கள் தீவிரமாக பங்கேற்றனர்.
அகிம்சை என காந்திஜி புன்னகைத்தபோது மாற்று திட்டத்தின் மூலம் சுதந்திர போராட்டத்தின் வரலாற்றையே மாற்றியமைத்தனர், கேளாகாதர்களாக இருந்த பிரிட்டிஷ் பக்கிங்காம் அரண்மனையை அசைத்து பார்த்து இளைஞர்களையும், மாணவர்களையும் சுதந்திர போரில் ஈடுபட வைத்தனர். அதனால் தான் சுதந்திரப் போராட்டத்தில் இளைஞர்களின் அடையாளமாக இவர்களையே வரலாற்று பக்கங்கள் நிருபிக்கின்றன. ஆனால், இவர்கள் கண்ட கனவுகள் தான் தற்போது பொய்த்து போனது.
விடுதலைப் போராளிகள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் உள்ளிட்டோருக்கு மரண தண்டனையை ஆங்கிலேய அரசு
உறுதி செய்த நாள் பிப்ரவரி 14. மரண தண்டனையை உறுதி செய்து நிறைவேற்றும் தேதியாக மார்ச் 24-ஐ அறிவிக்கின்றார்கள்.
கடுமையான நெருக்கடிகள், போராட்டங்கள் காரணமாக யாருக்கும் தெரியாமல் மார்ச் 23 மாலையே தூக்கில் போட சிறை அதிகாரிகள் ஏற்பாடு செய்கின்றனர். சிறை அதிகாரிகள் பகத்சிங் அறையை தட்டுகிறார்கள், அப்போது பகத்சிங் லெனினின் அரசும், புரட்சியும் புத்தகத்தோடு உறைந்து கிடக்கிறார், ஒரு புரட்சியாளனோடு உரையாடிக் கொண்டிருக்கிறேன் என பதில் கொடுக்கிறார். பிறகு மூவரும் தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். தூக்குமேடையில் நின்று கொண்டு பகத்சிங் “நாங்கள் எத்தனை முறை பிறந்தாலும் நாட்டின் விடுதலைக்காக போராடிக் கொண்டே இருப்போம்” என வீராவேசமான வார்த்தைகளோடு இன்குலாப் ஜிந்தாபாத் என்ற முழக்கம் அதிருகிறது. தூக்கிலிடபட்ட பகத்சிங், சுகதேவ்க்கு வயது 23, ராஜகுருவுக்கு 24, தோழர்கள் வாழ்ந்த காலம் கொஞ்சம்தான், ஆனால் பல துறைகளில் கவனம் செலுத்தியதோடு அறிவுஜீவியாகவும் வாழ்ந்தார்கள். 

இந்திய விடுதலை போராளி சுக்தேவ் நினைவு தினம் - மார்ச் 23, 1931 .


இந்திய விடுதலை போராளி  சுக்தேவ் நினைவு தினம்  - மார்ச் 23, 1931 .

சுக்தேவ் தபார் அல்லது சுக்தேவ் (15 மே 1907 - மார்ச் 23, 1931 (பஞ்சாபி: ਸੁਖਦੇਵ ਥਾਪਰ, سُکھدیو تھاپر) பஞ்சாப் மாநில லூதியானாவில் பிறந்த இந்திய விடுதலை போராளி. பிரித்தானிய காவல்துறை அதிகாரியான சான்டர்சு மற்றும் அவர் கீழுள்ள சில அதிகாரிகள் லாலா லஜபத் ராய் என்ற விடுதலை போராட்டக்காரரை அடித்துக்கொன்றனர். அதற்கு பலி வாங்குவதற்காக சுக்தேவ் அவருடையக் கூட்டாளிகளான பகத்சிங், சிவராம் ராஜ்குரு போன்றோருடன் சேர்ந்து சான்டர்சு பதில் கொலை செய்ததற்காக அதிகம் அறியப்பட்டவர்.

இக்கொலைவழக்கில் இம்மூன்று பேரும் லாகூர் மத்திய சிறையில் மார்ச் 23, 1931ல் தூக்கிலிடப்பட்டு, எவரும் அறியாமல் இருப்பதற்காக சிறைக்கு பின் பக்கமாக கடத்தப்பட்டு லாகூரிலிருந்து 50 மைல் தொலைவிலுள்ள சட்லஜ் ஆற்றாங்கரையில் எரியூட்டப்பட்டனர்.

பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை

சுக்தேவ், பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா மாவட்டத்தில், லயால்பூரியில் மே 15 , 1907 ஆம் நாள் பிறந்தார். அவரது தந்தையார் பெயர் ராம் லால் தாப்பர். லயால்பூர் தன்பத்மல் ஆரியா பள்ளியில் ஏழாவது வகுப்புவரை பயின்றார். பின்னர், சனாதன உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்து பத்தாம் வகுப்பில் தேர்ச்சியடைந்தார்.

இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு என்ற இயக்கத்தில் சேர்ந்து, இந்திய விடுதலை போராளி ஆனார்.

காந்தியின் ஒப்புதல்

இம்மூவரின் தூக்குதண்டனையின் போது வெள்ளையர்கள் கேட்ட தூக்குதண்டனை அங்கீகரிக்கும் பத்திரத்தில் காந்தி கையொப்பம் இட்டது போலவும், தி லெஜன்ட் ஆஃப் பகத்சிங் என்ற இந்தி திரைப்படத்தில் இந்த தண்டனைக்கான ஒப்பீட்டு பத்திரத்தில்(காந்தி இர்வின் பேக்ட்) கையெழுத்திட்டதற்காக காந்தியை மக்கள் கடுமையாக விமர்சிப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அகிம்சையை பின்பற்றுபவர் எப்படி இம்சை தரும் தூக்குதண்டனைக்கு ஒப்புதல் அளிக்கலாம் என்பது போல கருத்துகள் மக்களால் பேசப்பட்டது. இதற்கான ஆதாரம் ஃபிரன்ட் லைன் பத்திரிக்கையில் உள்ளது.

இந்திய விடுதலைப் போராளி ராஜகுரு நினைவு தினம் மார்ச் 23 .1931 .


இந்திய விடுதலைப் போராளி  ராஜகுரு நினைவு தினம் மார்ச் 23 .1931 .

சிவராம் ஹரி ராஜகுரு அல்லது ராஜ குரு (Shivaram Hari Rajguru) (24 ஆகஸ்டு 1908–23 மார்ச் 1931), பகத் சிங், சுக்தேவ் ஆகியவர்களுடன் இணைந்து, பிரித்தானிய இந்திய அரசை எதிர்த்து போராடிய மகாராஷ்டிரவைச் சேர்ந்தவர். இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு என்ற இயக்கத்தைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராளி ஆவார். 1928ஆம் ஆண்டில் லாகூரில், பிரித்தானிய காவல்துறை அதிகாரி ஜெ. பி. சாண்டர்ஸ் கொலை வழக்கில், பகத் சிங், சுக்தேவ் ஆகியோர் 23 மார்ச் 1931ஆம் நாளில் தூக்கிலிடப்பட்டனர்.

கொலைக்கு காரணம்

லாலா லஜபதி ராயை பிரித்தானிய இந்தியக் காவல்துறையினர் அடித்துக் கொன்றமைக்குப் பழி வாங்க, பகத் சிங், சுக்தேவ், ராஜகுரு மூவரும் ஆங்கிலேயக் காவல்துறை அதிகாரி ஜெ. பி. சாண்டர்சைக் கொன்றனர்.

தூக்குத் தண்டனை

காவல் துறை அதிகாரியைக் கொன்ற வழக்கில், பிரித்தானிய இந்திய அரசின் நீதிமன்றம், ராஜகுரு, பகத்சிங் மற்றும் சுக்தேவ் மூவருக்கும் விதித்த தூக்கு தண்டனை தீர்ப்பின்படி, அவர்களுக்கு மார்ச் 23, 1931ஆம் நாளில், இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான உசைனி வாலா கிராமத்தில், தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

பின்னர் மூவரின் உடல்கள் பஞ்சாப், பெரோசாபூர் மாவட்டம், சட்லஜ் ஆற்றங்கரையில் உள்ள உசைனிவாலா என்ற கிராமத்தில் எரியூட்டப்பட்டது.

உலக வானிலை நாள் (World Meteorological Day) மார்ச் 23 .



உலக வானிலை நாள் (World Meteorological Day) மார்ச் 23 .

உலக வானிலை நாள் (World Meteorological Day); இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 இல், கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1950 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டு வரும் இந்நாள். ஜெனீவாவில் அமைந்துள்ள உலக வானிலை அமைப்பு தலைமையகத்தால் பிரகடனம் செய்யப்பட்டாதாகும்.

உலக வானிலை தினம் 

வானிலை, பருவமழை அளவு, மேகமூட்டம், மழை, வெப்பம், காற்றின் வேகம், திசை போன்ற பல தகவல்களை வானிலை ஆராய்ச்சி மையங்கள் தருகின்றன. இவற்றில், பொதுவாக நமக்குத் தெரிவது, இன்று மழை வருமா வராதா, பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா போன்ற சில விஷயங்களே!
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23ஆம் தேதி 'உலக வானிலை தினம்' (வேர்ல்டு மெட்ராலாஜிகல் டே - World Meteorological Day) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்தத் தினத்தில், மக்களுக்கு வானிலை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக்கிய கருத்துகள் வலியுறுத்தப்படுகின்றன.
வானிலை பற்றிய செய்திகளில் குறிப்பாக, வெப்ப மயமாதல், பனி உருகுதல், கடல் மட்டம் உயர்தல், ஓசோன் படலம் பாதிப்பு, காற்று மாசுபடுதல், இயற்கை பேரிடர்கள், மழை பற்றிய நிகழ்வுகள் முக்கியமானவை. தற்போது விஞ்ஞானம், தொழில்நுட்ப வளர்ச்சியால் வானிலை செய்திகளை நாம் உடனுக்குடன் அறிந்து கொள்கிறோம்.
வானிலை பற்றிய மாற்றங்களையும், இயற்கையைப் பாதுகாப்பதின் அவசியத்தையும் நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே உலக வானிலை தினத்தின் நோக்கம்.


சில வானிலை குறியீடுகள்

ஷாஃப்ட் (Shaft) - 3 mphக்கும் குறைவான காற்று.
காம் (Calm) - காற்று இல்லாத நிலை.
பென்னன்ட் (Pennant) - காற்றின் வேகம் 55-60 mphக்கும்(mph - mile per hour) இடையில்

1950ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி 'உலக வானிலைக் கழகம்' தோற்றுவிக்கப்பட்டது. இதில் 189 உறுப்பு நாடுகள் உள்ளன. ஒவ்வொரு வருடமும் ஒரு கருத்தை மையமாக வைத்து வானிலை நாள் கொண்டாடப்படுகிறது. இந்த வருடத்திற்கான மையப் பொருள்: 'அதிக வெப்பம், அதிக வறட்சி, அதிக மழை - எதிர்கொள்ளும் விதம்'.

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங் நினைவு தினம் மார்ச் 23, 1931.



இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங் நினைவு தினம் மார்ச் 23, 1931.

பகத்சிங் ஒரு குறிப்பிடத்தக்க இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் புரட்சியாளர் ஆவார். உண்மையான வீரனாக வாழ்ந்து, நாட்டிற்காகப் போராடி மடிந்து போனதால், இவர் ‘சாஹீது (மாவீரன்) பகத்சிங்’ என அழைக்கப்பட்டார். ஆங்கில ஆட்சியை வெளியேற்றி, இந்தியாவை சுதந்திர நாடாக்க ஆயுதமேந்தி போராடிய புரட்சி அமைப்பான “இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு” அமைப்பின் தலைவர்களுள் ஒருவர் ஆவார். கடுமையான போராளி, தீவிர எதிர்ப்பாளர், உண்மையான ஜனநாயகவாதி என ஆங்கில ஆட்சிக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய மாவீரன் பகத்சிங்கின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: செப்டம்பர் 27, 1907
இடம்: பங்கா (லயால்பூர் மாவட்டம்), பஞ்சாப், இந்தியா
பணி: இந்திய விடுதலைப் போராட்ட வீரர்
இறப்பு: மார்ச் 23, 1931
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
‘சாஹீது பகத்சிங்’ என அழைக்கப்படும் ‘பகத்சிங்’ அவர்கள், 1907 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் நாள், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் லயால்பூர் மாவட்டத்திலுள்ள “பங்கா” என்ற கிராமத்தில், சர்தார் கிசன் சிங் என்பவருக்கும், வித்தியாவதிக்கும் இரண்டாவது மகனாக ஒரு சீக்கிய குடும்பத்தில் பிறந்தார்.
ஆரம்ப வாழ்க்கை
பகத்சிங்கின் குடும்பம் ஒரு விடுதலைப் போராட்ட வீரர்களைக் கொண்ட குடும்பம் என்பதால், இளம் வயதிலேயே நாட்டுப்பற்று மிக்கவராக விளங்கினார். லாகூரில் உள்ள டி.ஏ.வி பள்ளியில் கல்வியைத் தொடங்கிய பகத்சிங் அவர்கள், லாலா லஜபதிராய் மற்றும் ராஸ் பிஹாரி போஸ் போன்ற அரசியல் தலைவர்களிடம் நட்புறவு கொண்டிருந்தார். 1919 ஆம் ஆண்டு, இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில், ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாராமல், ஆங்கில அரசு, ‘ரெஜினால்ட் டையர்’ என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலைக் கண்டு நாடே கொதித்தது. இந்த கொடூரமான படுகொலை, பகத்சிங்கின் மனதில் பெரும் மாற்றத்தையும் விதைத்ததோடு மட்டுமல்லாமல், இரத்தம் படிந்த மண்ணை ஒரு புட்டியில் அடைத்து எடுத்துவந்து தன்னுடன் வைத்துக்கொண்டு, அவர் வெள்ளையர்களை விரட்ட சபதமும் பூண்டார்.
விடுதலைப் போரில் பகத்சிங்கின் பங்கு
தன்னுடைய பதின்மூன்று வயதில், மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்த பகத்சிங் அவர்கள், 1922 ஆம் ஆண்டு கோரக்பூரீல் நடந்த “சௌரி சௌரா” வன்முறைக்கு எதிராக காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியபோது, பகத்சிங் பெரிதும் ஏமாற்றம் அடைந்தார். ‘அகிம்சை வழியில் சென்றால் சுதந்திரம் பெறமுடியாது, ஆயுதம் தாங்கினால் மட்டுமே சுதந்திரம் பெறமுடியும்!’ என முடிவுக்கு வந்தார். 1924 ஆம் ஆண்டு, சச்சீந்திரநாத் சன்யால் என்பவரால் தொடங்கப்பட்ட “இந்துஸ்தான் குடியரசுக் கழகம்” என்னும் அமைப்பில் இணைந்தார். பிறகு 1926ல் பகத்சிங், சுகதேவ், பவதிசரண் வேரா, எஷ்பால் போன்றோர் இணைந்து “நவ்ஜவான் பாரத் சபா” என்ற இளைஞர் அமைப்பை நிறுவினர்.
லாகூர் கொலை வழக்கு
1928 ஆம் ஆண்டு, “சைமன் கமிஷனை” எதிர்த்து காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் போலீஸாரால் தடியடிப்பட்டு இறந்தார். இதனால் கோபம்முற்ற பகத்சிங்கும், ராஜகுருவும் இணைந்து, லாலா லஜபதிராய் இறப்புக்கு காரணமாயிருந்த காவலதிகாரியான சாண்டர்ஸை சுட்டுக் கொன்றுவிட்டு தலைமறைவாயினர். அதே நேரத்தில், ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்து தொழிலாளர்கள் தீவிராமாகப் போராடினர். இதனால், அவர்களை ஒடுக்க நினைத்த ஆங்கில அரசு “தொழில் தகராறு சட்ட வரைவு” என்ற ஒன்றை கொண்டுவந்தது. இச்சட்ட வரைவை ஏற்காத பகத்சிங் “சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில்” குண்டு வீசுவதென்று தீர்மானித்தார். 1929 ஆம் ஆண்டு, ஏப்ரல் 8 ஆம் தேதி, இச்சட்ட வரைவு நிறைவேற்றப்பட்ட பொழுது, குண்டுகளை வீசினர். இதனால் பகத்சிங், ராஜகுரு, மற்றும் சுகதேவ் ஆகிய மூன்று பேரும் குண்டு வீசிய வழக்கில் கைதுசெய்யப்பட்டனர்.
இறப்பு
சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில் வெடிகுண்டு வீசியது மற்றும் துண்டு பிரச்சாரம் போட்டு “இன்குலாப் ஜிந்தாபாத்” என்று முழக்கமிட்டு தானே சரணடைந்த பின்னர், காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் என்பவரின் இறப்புக்கு காரணமாயிருந்த காவலதிகாரியை சுட்டுக்கொன்ற குற்றத்திற்காக தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பகத்சிங், ராஜகுரு, மற்றும் சுகதேவ் ஆகியோர் ஆங்கில அரசின் 24 வது அகவையில் 1931 ஆம் ஆண்டு, மார்ச் 23 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்கள்.
ஒரு போராளியின் வாழ்க்கை என்பது வெறும் சரித்திரம் மட்டுமல்ல, அது ஒரு பாடமும் கூட. இன்றைய இந்தியாவில் எத்தனையோ இளைஞர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் பகத்சிங் வாழ்க்கை போற்றத்தக்க ஒன்றாகும். விடுதலைப் போராட்ட உணர்வுகளை இளைஞர்கள் மனதில் விதைத்திட, தன் மரணத்தையே பரிசாகத் தந்த மாபெரும் போராளி. வாழ்வதன் மூலமாக மட்டுமல்லாமல், இறப்பதன் மூலமாகவும் ஒரு சகாப்தத்தினை உருவாக்க முடியும் என வாழ்ந்துக் காட்டியவர். அவர் வாழ்ந்த வாழ்க்கை காலம் குறுகியது என்றாலும் நூற்றாண்டுகளைக் கடந்து சுமந்து நிற்கும்.

இந்திய ஆட்சிப்பணி அதிகாரி உ. சகாயம் பிறந்த நாள் மார்ச் 22 ,1964.



இந்திய ஆட்சிப்பணி அதிகாரி உ. சகாயம் பிறந்த நாள்  மார்ச் 22  ,1964.
உ. சகாயம் (பிறப்பு : 22 மார்ச் 1964)
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இந்திய ஆட்சிப்பணி அதிகாரி ஆவார். தாம் பணியாற்றிய மதுரை மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளாலும் நேர்மையான அணுகுமுறைகளாலும் மாநிலம் முழுவதும் பரவலாக பேசப்பட்டவர். தனது சொத்துக் கணக்குகளை வெளியிட்ட முதல் தமிழக இ.ஆ.ப அதிகாரியாவார். அவை முறையே, மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் இந்திய ஆயுள் காப்பீடுக் கழக வீட்டுக் கடன் வழங்கும் நிதி நிறுவனத்தின் கடனுதவித் திட்டம் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு, வங்கியில் 7,172 ரூபாய் சேமிப்பு.
தமிழ் மக்களின் விருப்பத்துடன் முதல்வர் வேட்பாளராக 2016 தேர்தலில் போட்டியிடுவார் என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டன.
பிறப்பு, படிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் அருகில் உள்ள பெருஞ்சுணை சிற்றூரைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த உபகாரம் பிள்ளை - சவேரி அம்மாள் தம்பதியினரின் ஐந்து மகன்களில் கடைசியாகப் பிறந்தவர். பெருஞ்சுணையில் பள்ளிப்படிப்பு,
புதுக்கோட்டையில் பட்டப்படிப்பு,
சென்னையில் புகழ்பெற்ற லயோலா கல்லூரியில் முதுநிலைப் பட்டப்படிப்பு (சமூகத் தொண்டு), சென்னை அப்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பு என அடுத்தடுத்து தன் கல்வித் தகுதியை சகாயம் உயர்த்திக் கொண்டார்.
பணிக் கொள்கை
லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து என்பது இவரது கொள்கையாகும். இந்த வாசகத்தை அவரது இருக்கையின் பின்புறம் காணலாம். அவரது 23 ஆண்டு பணிக்காலத்தில் 24 முறை பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பதவிகள்
தர்மபுரியில் பயிற்சி ஆட்சியர், நீலகிரி மாவட்டம், கூடலூரில்
கோட்ட வளர்ச்சி அதிகாரி
திருச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)
கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை சிறப்பு அதிகாரி
காஞ்சிபுரம் கோட்ட வளர்ச்சி அதிகாரி
திருச்சி உணவு பொருள் வழங்கல் துறையின் முதுநிலை மண்டல மேலாளர்
கோவை ஆயப்பிரிவு துணை ஆணையாளர்
சென்னை, மாவட்ட வருவாய் அதிகாரி
தொழில் வணிகத்துறை இணை இயக்குநர்
மாநிலத் தேர்தல் ஆணையச் செயலர்
நுகர்பொருள் வழங்கல் துறை இணை ஆணையர்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர்
புது திருப்பூர் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர்
மதுரை மாவட்ட ஆட்சியர்
கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர்
இந்திய மருந்து மற்றும் ஹோமியோபதி இயக்குநர்.
சயின்ஸ் சிட்டி எனப்படும் அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர்
குறிப்பிடத்தக்கச் செயல்கள்
கூடலூர், கோட்ட வளர்ச்சி அதிகாரியாக இருந்த போது அவரது அறையில் “If you have power, use it for the poor” - உனக்கு அதிகாரம் இருந்தால் அதை ஏழைகளின் மேம்பாட்டிற்கு பயன்படுத்து என்கிற வாசகங்களை எழுதி வைத்திருந்தார்.
காஞ்சிபுரத்தில் டி.ஆர்.ஓ.வாக இருந்த போது பெப்சி குளிர்பானத்தில் அழுக்குப்படலம் இருந்ததாக எழுந்த புகாரினைத் தொடர்ந்து ஆதாரங்களைத் திரட்டி அந்த ஆலைக்கு பூட்டு பூட்டினார்.
நாமக்கல், மாவட்ட ஆட்சியராக இருந்த போது, இவரது சொத்துக்கள் விவரத்தை அரசின் இணையதளம் மூலம் வெளியிட்டார்.
நாமக்கல்லில் ஆட்சியராக இருந்த போதும், பிறகு மதுரையிலும்
தொடுவானம் என்ற இணைய வலைப்பூ வாயிலாக பொது மக்கள் தங்களுக்கான புகாரை நேரடியாக மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பும் வழிவகை செய்திருக்கிறார். கிராமங்களில் தன்னார்வலர்களுக்குப் பயிற்சி அளித்து இந்தத் திட்டத்தை திறம்பட செயல்படுத்தி வந்திருக்கிறார்.
கோ-ஆப்டெக்ஸில் பொது விநியோகத்திற்கு வழங்கப்பட்ட இலவச வேட்டி சேலைகளின் முத்திரைகளை அழித்து அவற்றை மீண்டும் கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு விற்க முயன்ற ஜவுளி உற்பத்தி ஆலையின் ஊழலைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தார்.
மதுரை மாவட்ட ஆட்சியராக.
மதுரை மாவட்டத்தில் 2011 சட்டமன்ற தேர்தல் நியாயமான முறையில் நடைபெற வழி செய்தார். இவரது அறையில் “லஞ்சம் தவிர்த்து. நெஞ்சம் நிமிர்த்து” என்கிற வாசகம் காணப்பட்டது.
கிரானைட் மற்றும் கனிம மணற் கொள்ளை பற்றி தமிழக அரசுக்கு விரிவான அறிக்கை அனுப்பி நடவடிக்கை எடுக்கச் செய்தார்.
ஏதிலியர் முகாமில் வசித்து வந்த இலங்கைத் தமிழர்களுக்காக தையல் பயிற்சி அளித்து தையல் வேலை வாய்ப்பு, மற்றும் கணினி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். அதே போல ஊனமுற்றவர்களுக்கு ‘ஊன்று கோல் திட்டம்’, உழவர்களுக்காக ‘உழவன் உணவகம்’ திட்டம் ஆகியவற்றையும் சிறப்புற செயல்படுத்தினார்.
மாவட்டத்திற்குட்பட்ட திருமங்கலம் மற்றும்
மேலூர் பேருந்து நிலையங்களில் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் அதன் உரிமத்தை இரத்து செய்தார்.
பரிசுகள் / விருதுகள்.
2011 ஆம் ஆண்டிற்கான சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான மூன்றாவது பரிசினைப் பெற்றார் ,சிறந்த ஆட்சியர் பரிசு
எதிர்ப்புகள்
சகாயம் நாமக்கல்லில் ஆட்சியராக இருந்த போது அப்போதைய தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் தி.மு.க.வின் வி.பி.துரைசாமி ஒரு இதழுக்கு சகாயத்தைப் பற்றி எதிர்மறையாகப் பேட்டி அளித்தார். இதனை எதிர்த்து சகாயம் துரைசாமி மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.
மே 24, 2012 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் பொறுப்பிலிருந்து விடுவித்து கோஆப்டக்ஸ் நிர்வாக இயக்குனராக பணி மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சகாயம் கோ - ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனராக இருந்த போது கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் கோகுல இந்திராவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக மாற்றப்பட்டார். கோ - ஆப் டெக்ஸ் தலைமை அலுவலகத்தில், தனக்கு அறை ஒதுக்கி தரும்படி, அமைச்சர் கேட்டார். ஆனால் சகாயம், அறை ஒதுக்கினால், அங்கு கட்சிக்காரர்கள் திரள்வர். ஊழியர்கள் பணி பாதிக்கப்படும். எனவே, அமைச்சர் வரும்போது, என் அறையில் அமரலாம்' என, பதில் அனுப்பினார். இதனால் மாற்றப்பட்டார்
விசாரணைக் குழுத் தலைவர்
கருங்கல் (கிரானைட்) மற்றும் கனிம மணற் கொள்ளை பற்றி விசாரிக்க இவர் தலைமையில் விசாரணைக்குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் 11 செப்டம்பர் 2014 அன்று உத்தரவிட்டது.
இவ்வுத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது. அதைத் தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வெளியாகி 4 நாட்களுக்குள் குழு அமைக்க வேண்டும் என்று உத்தவிட்டது .
திருச்சி சிறையில் நடத்திய உரையாடலில் இவரை கூலிப்படை வைத்து கொலை செய்யப்போவதாக கிடைத்த தகவலால் 2013 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 22 ஆம் திகதி தமிழ் நாடு தலைமைச் செயளரை சந்தித்து இதுபற்றி முறையிட்டதாக தகவல்கள் வெளியாகின.

செவ்வாய், 21 மார்ச், 2017

நான்காம் சங்கம் நிறுவியதமிழ்க்காவலர் பொ.பாண்டித்துரையார் பிறந்த நாள் 21.3.1867

நான்காம் சங்கம் நிறுவியதமிழ்க்காவலர் பொ.பாண்டித்துரையார் பிறந்த நாள்
21.3.1867.
மதுரை மாநகரிலே அவரின் தமிழ்ச்சொற்பொழிவு கேட்க தமிழன்பர்கள் விருப்பப்பட்டனர்.  இராமநாதபுரத்திலிருந்து  மதுரைக்கு வந்து சேர்ந்த அவருக்கு திருக்குறள் நூலும், கம்பராமாயணம் நூலும் தேவைப்பட்டது. கூட்டம் நடத்துபவர்களிடம் கேட்டுப் பார்த்தார். எவரும் தம்மிடம் இல்லையென்றே கை விரித்தனர். பிறகு அருகில் உள்ள நூல் அங்காடியான புது.மண்டபத்தில் விலைக்கு வாங்கி உரையாற்றினார். ஆனாலும் அவரின்   உள்ளம் மகிழ்ச்சி கொள்ள வில்லை.

செந்தமிழ் பிறந்த மதுரையிலே தமிழுக்கு  தாழ்வு நிலை கண்டு மனம் வருந்தினார். அது முதல் பாண்டிய மன்னர்கள் எந்த மண்ணில் சங்கம் உருவாக்கினார்களோ அதே மண்ணில் தமிழுக்கென்று சங்கம் அமைக்க உறுதி பூண்டார். அவர் வேறு யாருமல்ல, நான்காம் தமிழ்ச்சங்கம் (1901) நிறுவிய தமிழ் வள்ளல் என்று போற்றப்படும் பாண்டித்துரை ஆவார்.

இவர் சேது நாட்டு அமைச்சர் பொன்னுச்சாமி தேவர்- முத்து வீராயி நாச்சியார் இணையருக்கு மூன்றாவது மகனாக 21.3.1867இல் பிறந்தார். இவரின் பெற்றோர் கடைச்சங்க காலத்தில் இறுதியாக ஆண்ட மன்னன் உக்கிரப் பெருவழுதிப் பாண்டியன்  நினைவாக அப்பெயரையே பாண்டித்துரைக்குச் சூட்டினர்.

சிறுவயதில் தனது தந்தையை இழந்த பாண்டித்துரை முகவர் சேசாத்திரி என்பவரின் பொறுப்பில் வளர்ந்தார். அழகர் ராசு என்ற புலவரிடம் தமிழறிவை வளர்த்துக் கொண்டவர் இராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் துரை உயர்தர பள்ளியில் படித்து ஆங்கிலத்திலும் தேர்ச்சி பெற்றார்.

தனது பதினெட்டாவது வயதில் பாலவனத்தம் சமீன்தாராகப் பொறுப்பேற்றார். இராமசாமிப் பிள்ளை என்பாரிடமிருந்து சைவ தத்துவத்தை கற்றுக் கொண்டார். மதுரை சோமசுந்தர கடவுள் மீது மிகுந்த பக்தி கொண்ட காரணத்தால் இராமநாதபுரத்தில் தாம் கட்டிய மாளிகைக்கு 'சோமசுந்தர விலாசம்' என்றும் பெயர் சூட்டினார். இசைத்தமிழ் மீது  மிகுந்த ஆர்வமுடையவராகி தமது இருபத்திரண்டாம் வயதில் இசைத்தமிழ் மாநாட்டை ஏழு நாட்கள் நடத்தி புகழும்  அடைந்தார்.

அந்நாளில் ஸ்காட்துரை என்ற பரங்கியர் திருக்குறளை எதுகை மோனையோடு திருத்தி வெளியிட்டார். "சுகாத்தியரால் திருத்தியும் பதுக்கியும்.பதிப்பிக்கப்பட்ட குறள்" என்ற தலைப்பில் வெளியான அந்த நூலை பாண்டித்துரையாரும் வாங்கிப் படித்தார். முதல் பாடலே முற்றும் கோணலாய் இருந்தது. அப்பாடலில்,

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"

-என்பதற்குப் பதிலாக

"அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி உகர முதற்றே உலகு"

-என்று அச்சிடப்பட்டிருந்தது.

இதைக் கண்டு கோபமடைந்த பாண்டித்துரையார்  அந்த வெள்ளைப் பரங்கியரின் அறியாமைக்கும், செருக்குத்தனத்திற்கும் பாடம் புகட்ட விரும்பினார். அதன்படி மொத்தம் அச்சடித்த ஐநூறு பிரதிகளுள் விற்பனை செய்தது போக மீதமுள்ள முந்நூறு பிரதிகளை பணம் கொடுத்து வாங்கினார். பின்னர்  ஆழக்குழி தோண்டி அந்தப்பிரதிகள் அனைத்தையும் போட்டு எரிக்கும்படி ஆணையிட்டார்.

இதைப் பாராட்டி பண்டிதர் அ.முத்துசாமிப் பிள்ளை என்பவர் பாடல் தீட்டினார். அது வருமாறு:

"வள்ளுவர் அருளிய மாண்புறு குறளைத் திருத்திய
வெள்ளையன் செய்கையை அறிந்து
வருத்தமுற் றதனை வாங்கித் தீக்கிரை ஆக்கியல் வெள்ளையற்(கு) அரும்பொருள் கொடுத்துப்
போக்கிய புண்ணியன் புவிபுகழ் கண்ணியன்"

1900ஆம் ஆண்டு திருப்பாதிரிப் புலியூரில் உள்ள தவத்திரு ஞானியார் அடிகளை பாண்டித்துரை யார் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அன்று மாலை சொற்பொழிவு நிகழ்த்திய ஞானியார் அடிகள், "பாண்டித்துரையாரும், பிற செல்வந்தர்களும் சேர்ந்து மீண்டும் ஒரு தமிழ்ச் சங்கத்தை மதுரையில் நிறுவி தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடவேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஏற்கெனவே, தமிழுக்கு நேர்ந்த இழிநிலை குறித்து வருத்தம் கொண்டிருந்த பாண்டித்துரையாருக்கு ஞானியார் அடிகளின் பேச்சு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

அவரின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்கும் வகையில், உடனடியாக தனது சகோதரர் பாசுகர சேதுபதியிடம் கலந்து பேசி மதுரையில் 1901ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் நாள் நான்காவது தமிழ்ச் சங்கம் நிறுவப்படும் என்று அறிவித்தார். முதல் தமிழ்ச் சங்கத்தை காய்சினவழுதிப் பாண்டியன் என்பாரும், இரண்டாம் தமிழ்ச் சங்கத்தை வெண்டேர்ச் செழியன் என்பாரும், மூன்றாம் தமிழ்ச் சங்கத்தை முடத்திருமாறன் என்ற உக்கிரப் பாண்டியன் என்பாரும் தோற்றுவித்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மதுரை சேதுபதி உயர் நிலைப்பள்ளியில் நடைபெற்ற நான்காம் தமிழ்ச் சங்க தொடக்கவிழாவில், உ.வே.சாமிநாதைய்யர், ரா.இராகவைய்யங்கார், வை.மு.சடகோப ராமாநுஜாசாரியார், வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரியார், சோழவந்தான் அரசஞ் சண்முகனார், பின்னத்தூர் நாராயண சாமி ஐயர், திருமயிலை சண்முகம் பிள்ளை போன்ற தமிழறிஞர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

தமிழேடுகள், அச்சிடப்பட்ட தமிழ்நூல்கள் ஆகியவற்றை தேடியெடுத்து பிறருக்கு பயன்படுமாறு தொகுக்கப்பெறுவதும், வெளிவராத அரிய பல தமிழ் நூல்களை அச்சிலேற்றி பரவச் செய்வதும், வடமொழி, ஆங்கிலம் முதலிய பிறமொழிகளில் உள்ள அரிய நூல்களை மொழிபெயர்த்து வெளியிடுவதும், தமிழைப் பரப்பும் ஏடு தொடங்குவதும், தமிழறிஞர்கள் சொற்பொழிவு நிகழ்த்துவதும், நல்லறிஞர்களால்  எழுதப்பெற்ற நூல் உரையை வெளிக்கொண்டு வருவதும் நான்காம் தமிழ்ச் சங்கத்தின் நோக்கங்களாக அறிவிக்கப்பட்டன.

மேற்படி நோக்கங்களை நிறைவேற்றிட வித்துவான் கழகம், சேதுபதி செந்தமிழ்கலாசாலை, பாண்டியன் புத்தக சாலை, தமிழ்ச் சங்க முத்திரா சாலை ஆகிய நான்கும் தமிழ்ச் சங்கத்தை தாங்கி நிற்கும் தூண்களாக பாண்டித்துரையார்  அவர்களால் நிறுவப்பட்டன.

தமிழறிஞர்களுக்காக உருவாக்கப்பட்ட வித்துவான் கழகமானது கடல் கடந்து வாழும் தமிழறிஞர்களையும் தன்பால் ஈர்த்தது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அ.குமாரசுவாமிப்பிள்ளை, ஆ.முத்துத்தம்பி பிள்ளை, நா.கதிரைவேற்பிள்ளை,  கு.கதிரைவேற்பிள்ளை மற்றும் பிரெஞ்சு நாட்டு அறிஞர் பேராசிரியர் ஜீலியன்வில்சன், மலேசியா காரை.சிவசிதம்பரை அவர்களும் மதுரைத் தமிழ்ச்சங்கத்தின்உ றுப்பினர்களாக இருந்து  தமிழ்ச்சங்கம் அடுத்தக் கட்ட வளர்ச்சி  நோக்கிச் செல்வதற்கு தேவையான திட்டங்களை வகுத்துக் கொடுத்தனர்.

சேதுபதி செந்தமிழ் கலாசாலையில் பயிலும் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம் ஆகிய மொழிப்பாடங்களோடு தேவாரமும், திருவாய்மொழியும் சேர்த்து கற்றுத் தரப்பட்டது. அம்மாணவர்களுக்கு பாண்டித்துரையார் தம் சொந்த செலவில் இலவய உணவும், உடையும் வழங்கியதோடு,  நன்கு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பரிசுப் பணமும், பதக்கங்களும் அளித்துச் சிறப்பித்தார்.

தமிழ்ச்சங்க முத்திராசாலையில் நிறுவப்பட்ட அச்சகத்தில் பல அரிய தமிழ்நூல்கள் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டன. தமிழ்த் தாத்தா உ.வே.சா.வின் பதிப்புப் பணிக்கு பாண்டித்துரையார் உறுதுணையாக விளங்கினார். புறநானூறு, புறப்பொருள் வெண்பா மாலை, மணிமேகலை ஆகியவை பாண்டித்துரையாரின் பொருளுதவியோடு வெளிவந்தன.

ஞானாமிர்தம், சைவ மஞ்சரி, ஐந்திணையைம்பதுரை, இனியவை நாற்பதுரை,   விவசாய ரசாயன சாஸ்திர சுருக்கம், யாப்பு அணியிலக்கணங்கள், வைத்தியசார சங்கிரகம் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் முத்திராசாலையில் அச்சடிக்கப்பட்டு வெளிவந்தன. தமிழர் மரபாகிய சித்த மருத்துவத்தை மீட்டெடுக்கும் வகையில்  பாண்டித்துரை அவர்களே வைத்தியசார சங்கிரகம் நூலுக்கு அணிந்துரை வழங்கியது போற்றத்தக்க ஒன்றாகும்.

1902ஆம்ஆண்டு டிசம்பர் 7ஆம் நாளில் இரா.இராகவையங்காரை ஆசிரியராகக் கொண்டு."செந்தமிழ் " இதழ் தொடங்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து மு.இராகவையங்கார் இதழின் பொறுப்பாசிரியராக  நீண்டகாலம் பணியாற்றி வந்தார். அவ்விதழில் தமிழின் பூர்வ வரலாற்றை  எடுத்துரைக்கும் பல ஆய்வு கட்டுரைகள் நுண்மான் நுழைபுலம் மிக்க அறிஞர்களால் எழுதப்பட்டு வந்தன. முதல் இதழிலேயே "உயர்தனிச்செம்மொழி " எனும் தலைப்பில் சூரிய நாராயண சாஸ்திரி கட்டுரை எழுதி தமிழுக்குப் பெருமை சேர்த்தார்.

அவருக்குப் பின் மறைமலையடிகளாரின் பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை, இரா.இராகவையங்காரின் சேது நாடும் தமிழும், சோமசுந்தர பாரதியாரின் தமிழ் நூல்களும் தமிழகமும், சேரர் பேரூர், மு.இராகவையங்காரின் வேளிர் வரலாறு, சாசனத் தமிழ்க்கவி சரிதம், தமிழரும், ஆந்திரரும் ஆகிய கட்டுரைகள் செந்தமிழ் ஏட்டை அலங்கரித்தன.

பாண்டித்துரையார்.தோற்றுவித்த மதுரைத் தமிழ்ச்சங்கத்திலும் தொல்காப்பியரை பிராமணர் என்றும், வடமொழி உயர்ந்ததென்றும், ஆரிய நாகரிகமே சிறந்தது என்றும் வைதீக பிராமணப் புலவர்கள் பேசி வந்தனர். இக்கருத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த பாண்டித்துரையார் மறைமலையடிகள் மூலம் பதிலடி தர விரும்பினார்.

25.5.1905இல், "மதுரைத் தமிழ்ச்சங்க நான்காம் ஆண்டு விழாவும் -தமிழர் நாகரிகப் போராட்டக் கொடி ஏற்றமும்"   என்ற  தலைப்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

அதில் உரையாற்றிய மறைமலையடிகள் ஆரிய நாகரிகத்திற்கும், பிராமணர்களுக்கும் தமிழர் கடமை பட்டிருக்க வில்லை என்றும், ஆரியர்களால் தான் தமிழும், தமிழரும் பாழ்பட நேர்ந்தது என்பதை ஆதாரங்களோடு எடுத்துக்காட்டிப்  பிராமணர்களின் வாயடைத்தார். அப்போது அதைக் கேட்டு வெகுவாக இரசித்த பாண்டித்துரையார்  மறைமலையடிகளுக்குப் பாராட்டுரை வழங்கினார்.

1906இல்  வ.உ.சிதம்பரனார் பரங்கியருக்கு எதிராக சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்கினார். அப்போது ஒரு இலட்சம் ருபாயை தனது பங்குத் தொகையாகப் பாண்டித்துரையார் வ.உ.சி.க்கு அளித்தார். இதன் மூலம் அவரின் தமிழினப் பற்றும், இந்திய விடுதலைப் பற்றும் ஒரு சேர வெளிப்படுவதை உணரலாம்.

தமிழுக்குத் தீங்கு நேரும் போதெல்லாம் பாண்டித்துரையார் குரல்கொடுக்கவும் தயங்க வில்லை. சென்னை பல்கலை.யில்  பாடப்புத்தகத்திலிருந்து தமிழ்ப்பாடத்தை நீக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  இதனை தடுத்துநிறுத்துவதற்கு சூரிய நாராயண சாஸ்திரியும், பூரணலிங்கம் பிள்ளை அவர்களும் பாண்டித்துரையாரை நேரில் சந்தித்து உதவி வேண்டினர்.

உடனடியாக மதுரைத் தமிழ்ச்சங்கத்தைக் கூட்டி ஒரு தீர்மானம் நிறைவேற்றி  தனது எதிர்ப்பைக்.காட்டினார் பாண்டித்துரையார். மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் எதிர்ப்பினை புரிந்து கொண்ட சென்னைப் பல்கலை. தமிழை நீக்கும் முடிவை கைவிடுவதாக அறிவித்தது.

ஆரியர் தமிழரை அழைத்த 'திராவிடர்' என்ற சொல்லுக்கு 'ஓடுதல்' என்றபொருளும் உண்டு என்பதை தாம் எழுதிய 'தமிழ்ப் பழஞ்சரிதம்' நூலில் பாண்டித்துரையார் குறிப்பிட்டார். இதனை தொடர் கட்டுரையாக தமது 'செந்தமிழ்' ஏட்டிலே எழுதினார். அது பின்வருமாறு:

"தமிழணங்கு ஆந்திரம், கன்னடம், முதலிய சேய்களைப் பிறப்பியாது தனியிளமை பெற்று விளங்கிய காலத்திலே, அந்நங்கை தனக்கு ஆடலரங்கமாகக் கொண்ட பிரதேசம் வடவேங்கடந் தென்குமரியாயிடை யன்று.வடவியந்தென்குமரியாயிடையே அவ்வாறிளமை பெற்றிருந்த தமிழ் பின்பு ஆரியர் படையெடுப்புகளால் அலைப்புண்டு, தன் ஆடலரங்கைச் சுருக்கிக் கொள்ள வேண்டியதாயிற்று. அன்றியும் அவ்வந்நியரது.கூட்டுறவை வெறுத்து அத்தமிழ் நங்கையோடி யொளியுமிடங்கள் பலவற்றில், தான்பெற்ற சேய்களை அங்கங்கே விட்டுப் பிரியவும் நேர்ந்தது. இவ்வாறு தமிழணங்கு தம்மையஞ்சியோடி ஒளிவது கண்ட ஆரியர் அந்நங்கைக்குத் 'திராவிடம்' என்னுங் காரணப்பெயரை வழங்கலாயினர்.
(திராவிடம் என்னும் மொழிக்கு வடமொழியில் ஓடுதலையுடையதென்பது பொருள்).

தமிழ்ப்பணியே தம் வாழ்நாள் பணியாக மேற்கொண்டிருந்த பாண்டித்துரையார் ஒருநாள் தம் மாளிகையில் பலருடன் பேசிக் கொண்டிருந்த போது திடீரென்று மயக்கமுற்று கீழ விழுந்தார். அப்போது நினைவிழந்தவர் மறுபடியும் மீள வில்லை. அவர் 2.12.1911இல் தமிழ் மண்ணை விட்டு உயிர் நீத்தார். அப்போது அவருக்கு அகவை நாற்பத்தி நான்கு. அந்த அகவைக்குள் அவர் செய்த தமிழ்ப்பணிகள் நம்மை மலைக்க வைக்கிறது. மனம் சில்லிடவே செய்கிறது.

அந்நாளில் அவர் தமிழ்ச் சங்கத்தை தொடங்கிய போது , சங்கம் வைத்த பாண்டியருக்கு ஒப்ப இவரால் தமிழ்ச் சங்கத்தை செலுத்த இயலாது என்று பலரும் ஏகடியம் செய்தனர். அவற்றையெல்லாம் புறந்தள்ளி புகழ்க்கொடி நாட்டினார் பாண்டித்துரையார். 

இவற்றை தம்பாட்டுத் திறத்தால் பின்வருமாறு விளக்குகிறார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
"இனியுமோர் தமிழ்ச் சங்கம் காண்பேன் இருந்த முதலிடை கடைச் சங்கம் போலவே
எனச் சொன்ன பாண்டித் துரைத்தேவன் சொல்லை
இவ்வையம் அந்நாளில் நம்பவே இல்லை.
வியந்தது வையம் சென்றநாள் சிலவே விரிந்தது மதுரைத் தமிழ்ச்சங்க நிலவே
அயர்ந்த தமிழரின் ஆடலும் பாடலும் அறிவின் செயலும் மிளிர்ந்தன பலவே"

1921ஆம் ஆண்டு ஆம்பூர் உயர் நிலைப்பள்ளியில் பணியாற்றிய போது தமிழாசிரியர் தகுதி பெற மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் தேர்வெழுதி தகுதி பெற்றேன். அப்போது எழுந்த தமிழ்வெறியினால் ஆங்கிலத்தை அறவே புறக்கணித்து தமிழராய்ச்சியில் ஆழ முழுகித் தமிழின் அடிமட்டத்தைக் கண்டதாக மொழிஞாயிறு பாவாணர் குறிப்பிடுவார்.
பாண்டித்துரையார் உருவாக்கிய தமிழ்ச்சங்கம் இல்லையெனில்  மொழி ஞாயிறு இல்லையென்பார் செந்தமிழ் அந்தணர் இளங்குமரனார்.

பாவணரும் தனது 'பாண்டித்துரை பதிகம்' பாடலின் மூலம் பாண்டித்துரையாரை போற்றி வணங்கத் தவறவில்லை. அவர் கூறியதையே இந்நாளில்  நாமும் கூறிடுவோம்.

"தென்மதுரைப்பாண்டியன் தெய்வத் தமிழ்வாழி 
நன்மதுரை நாலாஞ்சங் கம் வாழி -
சொன்மதுரப் பாலவ நத்தம் வேள் பாண்டித் துரைத்தேவன்
போலிமை யற்ற புகழ்!"

(பாண்டித்துரையாரின் திருவுருவச்சிலை  மதுரைத் தமிழ்ச்சங்கம் சாலையில்
நிறுவப்பட்டுள்ளது)

நன்றி: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், மார்ச் 16-31, 2017