வெள்ளி, 30 ஜூன், 2017

திமுக துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் (Durai Murugan) பிறந்த நாள் ஜூலை 1 , 1938 .திமுக துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் (Durai Murugan) பிறந்த நாள்  ஜூலை 1 , 1938 .

துரைமுருகன் (Durai Murugan) (பிறப்பு; 1 ஜூலை , 1938 ) இந்தியாவின் , தமிழ்நாடு, மாநிலத்தில் வேலூர் மாவட்டத்திலுள்ள மேல்மயில் கிராமத்தில் பிறந்தவரான இவர்
தமிழக அரசியலில் மிக முக்கியப் பங்கு வகிப்பவராவார். வழக்குரைஞரும் ஆவார்.
திமுக வின் துணைப் பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகிப்பவர். தமிழகத்தின் வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டத்துறை அமைச்சராகத் தமிழக அமைச்சரவையில் பணியாற்றியுள்ளார். திமுக வின் மேடைப்பேச்சாளர், இலக்கியவாதியுமாவார். சென்னை சட்டக் கல்லூரியில் இளங்கலைமானி சட்டம் மற்றும் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலைமானி கல்வி பயின்று பட்டம் பெற்றவர்.
துரைமுருகன் முதன் முதலில் 1971இல் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 8 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

எழுத்தாளர் ஞானி பிறந்த நாள் ஜூலை 1 , 1935.எழுத்தாளர் ஞானி பிறந்த நாள் ஜூலை 1 , 1935.

ஞானி (பிறப்பு: சூலை 1 , 1935 ) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர், திறனாய்வாளர், கவிஞர்.
வாழ்க்கைக் குறிப்பு
கோயம்புத்தூர் மாவட்டம் சோமனூரில் பிறந்த இவரது இயற்பெயர் கி. பழனிச்சாமி . இவர் இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் மார்க்சியக் கோட்பாட்டாய்வுகளையும் செய்து வருபவர். முன்பு தமிழாசிரியராக பணியாற்றி பணி நிறைவு பெற்று, தற்போது கோயம்புத்தூரில் வசித்து வருகிறார். மார்க்சிய ஆய்வாளரான எஸ். என். நாகராஜனின் வழி வந்தவர். பண்பாட்டை வெறுமே பொருளியல் அடிப்படையில் ஆராயும் செவ்வியல் மார்க்சியத்துக்கு எதிரானவர். அண்டோனியோ கிராம்ஷி , அல்தூஸர் போன்ற நவமார்க்ஸியர்களை தமிழுக்கு அறிமுகம் செய்தவர். இளம் மார்க்ஸ் முன்வைத்த அன்னியமாதல் கோட்பாட்டின் அடிப்படையில் மார்க்ஸியத்தை விளக்க முயன்றவர்.
ஞானி புதியதலைமுறை, நிகழ் என இரு சிற்றிதழ்களை நடத்திவந்தார். இப்போது தமிழ்நேயம் என்ற சிற்றிதழை நடத்திவருகிறார். கவிதைக்காக உருவான வானம்பாடி இயக்கத்தில் முக்கியமான பங்காற்றியிருக்கிறார். ஞானிக்கு கனடாவில் இருந்து வழங்கப்படும் இயல்விருது 2010ல் அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு சிறந்த நூலாசிரியர் விருது
இவர் எழுதிய “மார்க்சியம் பெரியாரியம்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சமயம், ஆன்மீகம், அளவையியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

நூல்கள்
திறனாய்வு நூல்கள்
மார்க்சியமும் தமிழ் இலக்கியமும் - 1988
தமிழகத்தில் பண்பாட்டு நெருக்கடிகள் - 1994
எண்பதுகளில் தமிழ் நாவல்கள் - 1994
படைப்பியல் நோக்கில் தமிழிலக்கியம் -
தமிழில் நவீனத்துவம் பின்நவீனத்துவம் - 1997
நானும் என் தமிழும் - 1999
தமிழன் வாழ்வும் வரலாறும் - 1999
தமிழில் படைப்பியக்கம் - 1999
மறுவாசிப்பில் தமிழ் இலக்கியம் - 2001
எதிர் எதிர் கோணங்களில் - 2002
மார்க்சிய அழகியல் - 2002
கவிதையிலிருந்து மெய்யியலுக்கு - 2002
தமிழ் தமிழர் தமிழ் இயக்கம் - 2003
தமிழ் நாவல்களில் தேடலும் திரட்டலும் - 2004
வரலாற்றில் தமிழர் தமிழ் இலக்கியம் - 2004
தமிழ் வாழ்வியல் தடமும் திசையும் - 2005
தமிழன்பன் படைப்பும் பார்வையும் - 2005
வள்ளுவரின் அறவியலும் அழகியலும் - 2007
தமிழ் மெய்யியல் அன்றும் இன்றும் - 2008
நெஞ்சில் தமிழும் நினைவில் தேசமும் - 2009
செவ்வியல் நோக்கில் சங்க இலக்கியம் - 2010
தமிழிலக்கியம் இன்றும் இனியும் - 2010
வானம்பாடிகளின் கவிதை இயக்கம் - 2011
ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம் - 2012
அகமும் புறமும் புதுப்புனல் - 2012
அகமும் புறமும் தமிழ்நேயம் - 2012
ஞானியின் எழுத்துலகம் - 2005
ஞானியோடு நேர்காணல் - 2012
மெய்யியல்
மார்க்சியத்திற்கு அழிவில்லை - 2001
மார்க்சியமும் மனித விடுதலையும் - 2012
இந்திய வாழ்க்கையும் மார்க்சியமும் - 1975
மணல் மேட்டில் ஓர் அழகிய வீடு - 1976
கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை - 1996
நானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும் - 2006
கவிதை நூல்கள்
கல்லிகை - 1995
தொலைவிலிருந்து - 1989
கல்லும் முள்ளும் கவிதைகளும் - 2012
தொகுப்பு நூல்கள்
தமிழ்த் தேசியம் பேருரைகள் - 1997
அறிவியல் அதிகாரம் ஆன்மீகம் - 1997
மார்க்சியத்தின் எதிர்காலம் - 1998
படைப்பிலக்கியம் சில சிகரங்களும் வழித்தடங்களும் - 1999
மார்க்சியத்தின் புதிய பரிமாணங்கள் - 1999
விடுதலை இறையியல் - 1999
இந்தியாவில் தத்துவம் கலாச்சாரம் - 2000
மார்க்சியம் தேடலும் திறனாய்வும் - 2000
நிகழ் நூல் திறனாய்வுகள் 100 - 2001
பெண்கள் வாழ்வியலும் படைப்பும் - 2003

எழுத்தாளர் புதுமைப்பித்தன் நினைவு தினம் ஜூன் 30 , 1948 .


எழுத்தாளர்  புதுமைப்பித்தன் நினைவு தினம் ஜூன் 30 , 1948 .

புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ. விருத்தாசலம் ( ஏப்ரல் 25 , 1906 - ஜூன் 30 , 1948 ), மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன. இவரது படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் மிகவும் அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளன. 2002ல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை ஆக்கியது.

வாழ்க்கைக் குறிப்பு
மணிக்கொடி இதழ்
புதுமைப்பித்தன் கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூரில் பிறந்தார். தொடக்கக் கல்வியைச் செஞ்சி ,
திண்டிவனம் , கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் பயின்றார். தாசில்தாராகப் பணி புரிந்த அவர் தந்தை ஓய்வு பெற்றமையால், 1918-இல் அவரது சொந்த ஊரான திருநெல்வேலிக்குத் திரும்பினார். அங்குள்ள ஆர்ச் யோவான் ஸ்தாபனப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்பு நெல்லை இந்துக் கல்லூரியில் இளங்கலைப் (பி. ஏ) பட்டம்பெற்றார். 1932 ஜூலையில்
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கமலாவை மணந்தார்.
இவரது முதல் படைப்பான குலோப்ஜான் காதல் காந்தி இதழில் 1933-இல் வெளிவந்தது. 1934-இலிருந்து
மணிக்கொடியில் இவரது படைப்புகள் பிரசுரமாகத் துவங்கின. மணிக்கொடியில் வெளிவந்த இவரின் முதல் சிறுகதை ஆத்தங்கரைப் பிள்ளையார். இந்தக் காலகட்டத்தில் அவர்
சென்னைக்குக் குடிபெயர்ந்தார். இவர் வாழ்ந்த இடங்களான திருநெல்வேலியையும் சென்னையையும் மையமாகக் கொண்டே இவரது படைப்புகள் அமைந்தன. இவரது சிறுகதைகள் கலைமகள், ஜோதி, சுதந்திரச் சங்கு, ஊழியன், தமிழ்மணி, தினமணியின் ஆண்டு மலர், நந்தன் ஆகிய பத்திரிக்கைகளிலும் பிரசுரமாயின. 1940ல் புதுமைப்பித்தனின் கதைகள் என்ற அவரது சிறுகதைத் தொகுப்பு வெளியானது. சென்னையிலிருந்த காலத்தில் இவர் ஊழியன், தினமணி, மற்றும் தினசரியிலும் பணிபுரிந்தார். [8]
இவர் திரைப்படத் துறையிலும் ஆர்வம் செலுத்தினார். ஜெமினி நிறுவனத்தின்
அவ்வை மற்றும் காமவல்லி படங்களில் பணிபுரிந்தார். பின்பு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான "பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ்" -ஐத் துவங்கி வசந்தவல்லி என்ற படத்தைத் தயாரிக்க முயன்று தோல்வியுற்றார். எம். கே. தியாகராஜ பாகவதரின் ராஜமுக்தி திரைப்படத்திற்கு வசனம் எழுதுவதற்காகப் புனேவில் சில மாதங்கள் வாழ்ந்தார். அங்கு அவர் கடுமையான காச நோய்க்கு ஆளாகி மே 5, 1948-இல் காலமானார்.

படைப்புகளும் சிந்தனைகளும்
புதுமைப்பித்தன் எழுத்துப்பணியில் முழுவீச்சில் ஈடுபட்டது 15 ஆண்டுகளுக்கும் குறைவான காலம் தான். அக்குறுகிய கால அளவிலேயே அவர் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையுள்ள கட்டுரைகள், 15 கவிதைகள், சில நாடகங்கள், புத்தக விமரிசனங்கள் என எழுதிக் குவித்தார். அவரது எழுத்துக்கள் அவரைப் புரட்சி எழுத்தாளராக அடையாளம் காட்டின. அவர் கையாண்ட விஷயங்களும் கதாபாத்திரங்களும் தமிழ்ப் புனைவு உலகுக்குப் புதியதாய் அமைந்தன. தமிழ் இலக்கிய உலகம் சில எழுதப்படாத விதிகளால் முடக்கப்பட்டிருப்பதாக அவர் கருதினார்.  தன் கட்டுரை ஒன்றில் இவ்வாறு கூறுகிறார்:
“ இலக்கியத்தில் இன்னதுதான் சொல்ல வேண்டும், இன்னது சொல்லக்கூடாது என ஒரு தத்துவம் இருப்பதாகவும், அதை ஆதரித்துப் பேசுவதாகவும் மனப்பால் குடித்துக்கொண்டிருக்கலாம். உண்மை அதுவல்ல; சுமார் இருநூறு வருஷங்களாக ஒருவிதமான சீலைப்பேன் வாழ்வு நடத்திவிட்டோம். சில விஷயங்களை நேர் நோக்கிக் பாக்கவும் கூசுகிறோம். அதனால் தான் இப்படிச் சக்கரவட்டமாகச் சுற்றி வளைத்துச் சப்பைக்கட்டு கட்டுகிறோம். குரூரமே அவதாரமான ராவணனையும், ரத்தக்களறியையும், மனக் குரூபங்களையும், விகற்பங்களையும் உண்டாக்க இடம் இருக்குமேயானால், ஏழை விபசாரியின் ஜீவனோபாயத்தை வர்ணிப்பதாலா சமூகத்தின் தெம்பு இற்றுப்போய் விடப்போகிறது? இற்றுப்போனது எப்படிப் பாதுகாத்தாலும் நிற்கப்போகிறதா?
மேலும் இலக்கியம் என்பது மன அவசத்தின் எழுச்சிதானே? நாலு திசையிலும் ஸ்டோர் குமாஸ்தா ராமன், ஸினிமா நடிகை சீத்தம்மாள், பேரம் பேசும் பிரமநாயகம் - இத்யாதி நபர்களை நாள் தவறாமல் பார்த்துக்கொண்டிருந்து விட்டு, இவர்களது வாழ்வுக்கு இடமளிக்காமல், காதல் கத்தரிக்காய் பண்ணிக்கொண்டிருப்பது போன்ற அனுபவத்துக்கு நேர் முரணான விவகாரம் வேறு ஒன்றும் இல்லை. நடைமுறை விவகாரங்களைப் பற்றி எழுதுவதில் கௌரவக் குறைச்சல் எதுவும் இல்லை.
தனது சமகால எழுத்தாளர்களின் எதிர்விமர்சனங்களைப் புறந்தள்ளி பின்வருமாறு கூறுகிறார்:
“ வேதாந்திகள் கைக்குள் சிக்காத கடவுள் மாதிரிதான் நான் பிறப்பித்துவிட்டவைகளும். அவை உங்கள் அளவுகோல்களுக்குள் அடைபடாதிருந்தால் நானும் பொறுப்பாளியல்ல, நான் பிறப்பித்து விளையாடவிட்ட ஜீவராசிகளும் பொறுப்பாளிகளல்ல; உங்கள் அளவுகோல்களைத்தான் என் கதைகளின் அருகில் வைத்து அளந்து பார்த்துக்கொள்கிறீர்கள் என்று உங்களுக்குச் சொல்லிவிட விரும்புகிறேன்.
புதுமைப்பித்தன் கதைகள் பல்வேறு பதிப்புகளில் வெளிவந்துள்ளன.

சிறுகதைகள்
புதுமைப்பித்தனின் சிறுகதைகள் தான் அவருக்கு எழுத்துலகில் தனி இடத்தை அளித்தன. அவர் எழுதியதாகக் கணிக்கப்படும் 108 சிறுகதைகளில் 48 மட்டுமே அவர் காலத்திலேயே வெளியாகின. அவரது சிறுகதைகள் மணிக்கொடி, கலைமகள், ஜோதி, சுதந்திர சங்கு , ஊழியன், தமிழ்மணி, தினமணியின் ஆண்டு மலர், நந்தன் ஆகிய பத்திரிக்கைகளில் பிரசுரமாயின. மற்றவை அவர் மறைவுக்குப் பின்னர் வெவ்வேறு காலங்களில் பிரசுரமாயின. கடைசித் தொகுப்பு 2000ல் வெளியானது. புதுமைப்பித்தன் 1930களில் உருவாகிய மணிக்கொடி இயக்கத்தின் முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவராக விளங்கினார். கு. ப. ராஜகோபாலன், பி. எஸ்.ராமையா , வ. ராமசாமி ஆகியோர் மணிக்கொடி இயக்கத்தின் மற்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களாவர்.

மொழிபெயர்ப்புகள்
புதுமைப்பித்தன் 50க்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் பிற மொழிகளிலிருந்து மொழிபெயர்த்துள்ளார். அவர் மொழிபெயர்த்த எழுத்தாளர்களில் சிலர்:
மொலியர் , கே பாயில், மேக்சிம் கார்க்கி , சின்கிளெயயர் லூயிஸ், எர்னஸ்ட் டோலர்,
வில்லியம் ஷேக்ஸ்பியர் , இ. எம். டேலாஃப்ல்டு, வில்லியம் சரோயன், இ. வி. லூகாஸ், மோஷே ஸ்மிலான்ஸ்கி, ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்ஸன் , பிரட் கார்ட், ஜான் கால்ஸ்வொர்த்தி, அலெக்ஸாண்டர் குப்ரின் ,
ஆன்டன் செக்கோவ் , பிராண்ஸ் காஃப்கா , இல்யா எக்ரன்பர்க், கை டி மாப்பாசான், வலெரி பிர்யுசொவ், அனாடோல் பிரான்ஸ், லியோனிட் ஆண்டிரியேவ்,
ஹென்ரிக் இப்சன் , நாத்தேனியல் ஹாத்தோர்ன், எட்கர் ஆலன் போ , ராபர்ட் முரே கில்கிரிஸ்ட், பிரான்ஸிஸ் பெல்லர்பி, லியோனார்ட் ஸ்ட்ராங், ஜேக் லண்டன், பீட்டர் எக்கி, மிக்கெயில் அலெக்ஸாண்ட்ரோவிச் ஷோலோகோவ், தாமஸ் வுல்ஃப் மற்றும் ஜேம்ஸ் ஹேன்லி ஆவர். [16] அவருக்கு மொழிபெயர்ப்புகள், தழுவல்கள் குறித்து தெளிவான கருத்து இருந்தது. தழுவல்கள் இலக்கியத் திருட்டுக்குச் சமம் என்றும் பிறமொழி படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டுவர மொழிபெயர்ப்பே சிறந்த வழியெனவும் கருதினார். 1937ல் மொழிபெயர்ப்பா, தழுவலா என்ற பிரச்சனையில் அவருக்கும் கல்கி கிருஷ்ணமூர்த்திக்கும் இடையே காட்டமான இலக்கியச் சண்டையொன்று நிகழ்ந்தது.

கவிதைகள்
புதுமைப்பித்தன் 15 கவிதைகள் எழுதியுள்ளார். அவரது முதல் கவிதையான திரு ஆங்கில அரசாங்க தொண்டரடிப்பொடியாழ்வார் வைபவம் , 1934ல் வெளிவந்தது. அவரது கவிதைகள் பெரும்பாலும் அவரது நண்பர் தொ. மு. சிதம்பர ரகுநாதனுக்கு வெண்பா வடிவில் எழுதப்பட்ட கடிதங்களாக அமைந்திருந்தன. அவரது 15 கவிதைகளும் அவர் இறந்த பின்பு தான் பிரசுரமாயின. அவரது சிறுகதைகளைப்போலவே அவரது கவிதைகளும் நையாண்டியும், நக்கலுமாக இருந்ததன.
மூனாவருணாசலமே மூடா, அவரது கவிதைகளுள் புகழ் பெற்றது. அது மணிக்கொடி இயக்கத்தைப் பற்றிக் குறிப்பிடாமல் விட்டுவிட்ட ஒரு தமிழ் புத்தகத்தினைச் ( மு. அருணாசலத்தின்
இன்றைய தமிழ் வசன நடை ) சாடும் விமரிசனமாக எழுதப்பட்டிருந்தது.
அரசியல் புத்தகங்கள்
புதுமைப்பித்தன் அடிப்படையில்
சோஷியலிச கருத்துகளைக் கொண்டவர். அவரது அரசியல் கட்டுரைகள் மற்றும் புத்தகங்களில் குறிப்பிடத்தக்கவை நான்கு. அவை ஃபாசிஸ்ட் ஜடாமுனி, ( முசோலினியின் வாழ்க்கை வரலாறு)
கப்சிப் தர்பார் , ( ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு) ஸ்டாலினுக்குத் தெரியும் மற்றும் அதிகாரம் யாருக்கு (இரண்டும்
கம்னியூசத்தையும் ஸ்டாலினின் கொள்கைகளையும் விவரிப்பவை). நான்கு புத்தகங்களுமே ஃபாசிசத்தை எதிர்த்தும் ஸ்டாலினிய கொள்கைகளுக்கு ஆதரவாகவும் எழுதப்பட்டன.
எழுத்துநடை
சென்னை , தஞ்சாவூர்த் தமிழ் அல்லாது பிற வட்டார வழக்குத் தமிழில் எழுதிய முதல் எழுத்தாளர் புதுமைப்பித்தன். பெரும்பாலும் இவரது கதாபாத்திரங்கள்
நெல்லைத் தமிழில் பேசினர். அவரது கதைகள் அவர் வாழ்ந்த இடங்களான சென்னை மற்றும் திருநெல்வேலியைக் களமாகக் கொண்டிருந்தன. அவரது நடையில் பேச்சுத்தமிழ் மற்றும் செந்தமிழ் இரண்டும் கலந்திருந்தன. சிக்கலான விஷயங்களைக் கையாளும்போது கூட அவரது எழுத்துக்களில் நையாண்டி இழைந்தோடுவது அவரது சிறப்பு. கல்கி கிருஷ்ணமூர்த்தி போன்ற இலக்கிய எதிராளிகளுடன் விவாதம் செய்தபோது கடுஞ்சொற்களைப் பயன்படுத்தினார். நூல் விமரிசனங்களில் வசைபாடல்களையும் எழுதியுள்ளார்.

பிரபலமான எடுத்துக்காட்டுகள்
புதுமைப்பித்தனின் தனித்துவ நடைக்கு அவரது கதைகளிலிருந்து சில எடுத்துக்காட்டுகள்:
புனைப்பெயர்கள்
புதுமைப்பித்தனின் பிற புனைப்பெயர்கள்: சொ.வி, ரசமட்டம், மாத்ரு, கூத்தன், நந்தன், ஊழியன், கபாலி, சுக்ராச்சாரி மற்றும் இரவல் விசிறிமடிப்பு. புதுமைப்பித்தன் என்ற பெயரே அவருக்குப் பிடித்தமானதாக இருந்தது. அவரது கதைகளின் கவர்ச்சிக்கு அப்பெயர் தான் ஓரளவு காரணம் என்று அவர் கருதினார். தனது கவிதைகளை வேலூர் வே. கந்தசாமிப் பிள்ளை என்ற புனைப்பெயரில் எழுதினார். அவரது படைப்புகளில் தழுவல்கள் உள்ளன என எழுந்த குற்றச்சாட்டால் அவரது புனைப்பெயர்கள் ஆழமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. தொ. மு. சிதம்பர ரகுநாதன் எழுதிய புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாறான புதுமைப்பித்தன் கதைகள்: சில விமரிசனங்களும் சில விஷமங்களும் என்ற புத்தகத்தில் நந்தன் என்ற புனைப்பெயரில் எழுதப்பட்டவை யாவும் தழுவல் படைப்புகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்ச்சைகள்
தழுவல் கதைகள்
மாப்பாசான் என்ற பிரெஞ்சு கதாசிரியரின் படைப்புகளின் தழுவல்களாகப் புதுமைப்பித்தனின் சில கதைகள் அமைந்துள்ளன என்று அவரது சம காலத்து எழுத்தாளர்களான பெ. கோ. சுந்தரராஜன் (சிட்டி) மற்றும் சோ. சிவபாதசுந்தரம் குற்றம் சாட்டியுள்ளனர். இலக்கிய ஆய்வாளர் காரை கிருஷ்ணமூர்த்தியும் பின்னர் இதே கருத்தினைக் கூறினார். புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய தொ. மு. சிதம்பர ரகுநாதன் சமாதி, நொண்டி , பயம்,
கொலைகாரன் கதை , நல்ல வேலைக்காரன் ,
அந்த முட்டாள் வேணு ஆகிய கதைகள் மாப்பாசான் கதைகளின் தழுவல்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். பித்துக்குள்ளி என்ற கதை ராபர்ட் பிரௌனிங் கவிதையொன்றின் தழுவல் எனவும் கூறியுள்ளார். டாக்டர் சம்பத், நானே கொன்றேன், யார் குற்றவாளி ,
தேக்கங்கன்றுகள் போன்ற கதைகளும் தழுவல்களாக இருக்கலாம் எனக் கருத்துகள் உள்ளன. தமிழ் படித்த பொண்டாட்டி என்ற கதையைப் புதுமைப்பித்தன் தானே வெளியிட்டுள்ளார். அதன் முன்னுரையில் அது மாப்பாசான் கதையின் தழுவல் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். தழுவல்கள் எனக் குற்றச்சாட்டிற்கு உள்ளான பிற கதைகள் அவர் இறந்தபின் பிறரால் வெளியிடப்பட்டுள்ளன. அவரது ஆதரவாளர்கள், அவர் வெளியிட்டிருந்தால் கண்டிப்பாகத் தழுவல் என்பதைக் குறிப்பிட்டிருப்பார் எனக் கூறுகின்றனர். மேலும் அவர் உயிரோடு இருந்த காலகட்டத்தில் மாப்பாசானின் கதைகள் பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை. அவருக்கோ பிரெஞ்சு மொழி தெரியாது. எனவே அக்கதைகள் எவ்வாறு தழுவல்களாக இருக்க முடியும் எனக் கேள்வி எழுப்புகின்றனர். அவரது தழுவல் கதைகள் அனைத்தும் 1937க்கு முன்னதாக எழுதப்பட்டவை. அவ்வாண்டுதான் அவர் கல்கி கிருஷ்ணமூர்த்தியுடன் பிறமொழி படைப்புகளிலிருந்து தழுவி எழுதுவது குறித்து கடுமையான இலக்கியச் சண்டை நடத்தினார். தழுவல்கள் இலக்கியத் திருட்டுக்குச் சமம் என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.

பிற விமர்சனங்கள்
புதுமைப்பித்தன் சிந்தனை செய்ய வேண்டிய விஷயங்களைப் பற்றி எழுதியுள்ளார், ஆனால் அவற்றுக்கான தீர்வைப் பற்றிக் கூற முயற்சிக்கவே இல்லை என விமர்சிக்கப் படுகிறார். அவரது படைப்புகளில் பிரச்சனைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன; தீர்வுகளை வாசகர்களின் வசம் விட்டுவிடுகிறார். சில சமயங்களில் அவர் கதை நடைபெறும் களத்தையும் கதாபாத்திரங்களின் தன்மையையும் விவரிக்கும் அளவு மையக்கருத்துக்கு முக்கியத்துவம் தருவதில்லை எனக் குற்றஞ்சாட்டப்படுகிறார். சமீபத்தில் தமிழ் விமர்சகர் அ. மார்க்ஸ் தலித்துகள் , மறவர்கள் ,
கிருத்துவர்கள் மற்றும் புலால் உண்பவர்களை புதுமைப்பித்தன் இழிவு படுத்தியுள்ளார் என விமரிசனம் செய்துள்ளார். 2014ம் ஆண்டு
சென்னைப் பல்கலைக்கழகம் புதுமைப்பித்தனின் துன்பக்கேணி ,
பொன்னகரம் ஆகிய இரு சிறுகதைகளை தனது பாடத்திட்டத்திலிருந்து நீக்கியது. பல்கலைக்கழக ஆட்சிக்குழு இக்கதைகள் தலித்துகளை இழிவுபடுத்துகின்றன என்று கருதியதால் அவற்றை நீக்கியது. [2
படைப்புகளின் பட்டியல்
(முழுமையானதல்ல)
கவிதைகள்
திரு ஆங்கில அரசாங்க தொண்டரடிப்பொடியாழ்வார் வைபவம்
மூனாவருணாசலமே மூடா
இணையற்ற இந்தியா
செல்லும் வழி இருட்டு
அரசியல் நூல்கள்
ஃபாசிஸ்ட் ஜடாமுனி
கப்சிப் தர்பார்
ஸ்டாலினுக்குத் தெரியும்
அதிகாரம் யாருக்கு
சிறுகதைகள்
1. அகல்யை
1. செல்லம்மாள்
2. கோபாலய்யங்காரின் மனைவி
3. இது மிஷின் யுகம்
4. கடவுளின் பிரதிநிதி
5. கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்
6. படபடப்பு
7. ஒரு நாள் கழிந்தது
8. தெரு விளக்கு
9. காலனும் கிழவியும்
10. பொன்னகரம்
11. இரண்டு உலகங்கள்
12. மனித யந்திரம்
13. ஆண்மை
14. ஆற்றங்கரைப் பிள்ளையார்
15. அபிநவ ஸ்நாப்
16. அன்று இரவு
17. அந்த முட்டாள் வேணு
18. அவதாரம்
19. பிரம்ம ராக்ஷஸ்
20. பயம்
21. டாக்டர் சம்பத்
22. எப்போதும் முடிவிலே இன்பம்
23. ஞானக் குகை
24. கோபாலபுரம்
25. இலக்கிய மம்ம நாயனார் புராணம்
26. 'இந்தப் பாவி'
27. காளி கோவில்
28. கபாடபுரம்
29. கடிதம்
30. கலியாணி
31. கனவுப் பெண்
32. காஞ்சனை
33. கண்ணன் குழல்
34. கருச்சிதைவு
35. கட்டிலை விட்டிறங்காக் கதை
36. கட்டில் பேசுகிறது
37. கவந்தனும் காமனும்
38. கயிற்றரவு
39. கேள்விக்குறி
40. கொடுக்காப்புளி மரம்
41. கொலைகாரன் கை
42. கொன்ற சிரிப்பு
43. குப்பனின் கனவு
44. குற்றவாளி யார்?
45. மாயவலை
46. மகாமசானம்
47. மனக்குகை ஓவியங்கள்
48. மன நிழல்
49. மோட்சம்
50. 'நானே கொன்றேன்!'
51. நல்ல வேலைக்காரன்
52. நம்பிக்கை
53. நன்மை பயக்குமெனின்
54. நாசகாரக் கும்பல்
55. நிகும்பலை
56. நினைவுப் பாதை
57. நிர்விகற்ப சமாதி
58. நிசமும் நினைப்பும்
59. நியாயம்
60. நியாயந்தான்
61. நொண்டி
62. ஒப்பந்தம்
63. ஒரு கொலை அனுபவம்
64. பால்வண்ணம் பிள்ளை
65. பறிமுதல்
66. பாட்டியின் தீபாவளி
67. பித்துக்குளி
68. பொய்க் குதிரை
69. 'பூசனிக்காய்' அம்பி
70. புரட்சி மனப்பான்மை
71. புதிய கூண்டு
72. புதிய கந்த புராணம்
73. புதிய நந்தன்
74. புதிய ஒளி
75. ராமனாதனின் கடிதம்
76. சாப விமோசனம்
77. சாளரம்
78. சாமாவின் தவறு
79. சாயங்கால மயக்கம்
80. சமாதி
81. சாமியாரும் குழந்தையும் சீடையும்
82. சணப்பன் கோழி
83. சங்குத் தேவனின் தர்மம்
84. செல்வம்
85. செவ்வாய் தோஷம்
86. சிற்பியின் நரகம்
87. சித்தம் போக்கு
88. சித்தி
89. சிவசிதம்பர சேவுகம்
90. சொன்ன சொல்
91. சுப்பையா பிள்ளையின் காதல்கள்
92. தனி ஒருவனுக்கு
93. தேக்கங் கன்றுகள்
94. திறந்த ஜன்னல்
95. திருக்குறள் குமரேச பிள்ளை
96. திருக்குறள் செய்த திருக்கூத்து
97. தியாகமூர்த்தி
98. துன்பக் கேணி
99. உணர்ச்சியின் அடிமைகள்
100. உபதேசம்
101. வாடாமல்லிகை
102. வாழ்க்கை
103. வழி
104. வெளிப்பூச்சு
105. வேதாளம் சொன்ன கதை
106. விபரீத ஆசை
107. விநாயக சதுர்த்தி
மொழிபெயர்ப்பு சிறுகதைகள்
1. ஆஷாட பூதி
2. ஆட்டுக் குட்டிதான்
3. அம்மா
4. அந்தப் பையன்
5. அஷ்டமாசித்தி
6. ஆசிரியர் ஆராய்ச்சி
7. அதிகாலை
8. பலி
9. சித்திரவதை
10. டைமன் கண்ட உண்மை
11. இனி
12. இந்தப் பல் விவகாரம்
13. இஷ்ட சித்தி
14. காதல் கதை
15. கலப்பு மணம்
16. கனவு
17. காரையில் கண்ட முகம்
18. கிழவி
19. லதீபா
20. மகளுக்கு மணம் செய்து வைத்தார்கள்
21. மணிமந்திரத் தீவு
22. மணியோசை
23. மார்க்ஹீம்
24. மிளிஸ்
25. முதலும் முடிவும்
26. நாடகக்காரி
27. நட்சத்திர இளவரசி
28. ஓம் சாந்தி! சாந்தி!
29. ஒரு கட்டுக்கதை
30. ஒருவனும் ஒருத்தியும்
31. பைத்தியக்காரி
32. பளிங்குச் சிலை
33. பால்தஸார்
34. பொய்
35. பூச்சாண்டியின் மகள்
36. ராஜ்ய உபாதை
37. ரோஜர் மால்வினின் ஈமச்சடங்கு
38. சாராயப் பீப்பாய்
39. சகோதரர்கள்
40. சமத்துவம்
41. ஷெஹர்ஜாதி - கதை சொல்லி
42. சிரித்த முகக்காரன்
43. சூனியக்காரி
44. சுவரில் வழி
45. தாயில்லாக் குழந்தைகள்
46. தையல் மிஷின்
47. தந்தை மகற்காற்றும் உதவி
48. தெய்வம் கொடுத்த வரம்
49. தேசிய கீதம்
50. துன்பத்திற்கு மாற்று
51. துறவி
52. உயிர் ஆசை
53. வீடு திரும்பல்
54. ஏ படகுக்காரா!
55. யாத்திரை
56. எமனை ஏமாற்ற
57. யுத்த தேவதையின் திருமுக மண்டலம்.


தமிழ் எழுத்தாளர், கவிஞர்
நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி எனப் போற்றப்படும் புதுமைப்பித்தன் (Pudhumaipithan)
அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலி யூரில் (1906) பிறந்தார். இயற் பெயர் சொ.விருத்தாசலம். தந்தை தாசில்தார். அவர் ஓய்வு பெற்றதும் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு குடும்பம் குடியேறியது.
l தொடக்கக் கல்வியை செஞ்சி, கள்ளக்குறிச்சி, திண்டிவனத்தில் பயின்றார். நெல்லை இந்துக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். உலக இலக்கியங்களை தேடித் தேடி வாசித்தார். இவரது முதல் படைப்பான ‘குலாப்ஜான் காதல்’ 1933-ல் வெளிவந்தது.
l இவரை பத்திரிகை உலகுக்கு அழைத்து வந்தவர் வ.ராமசாமி. சென்னையில் 1934-ல் குடியேறினார். ‘ஊழியன்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். ‘மணிக்கொடி’ இதழில் இவரது படைப்புகள் பிரசுரமாகின. அதில் வெளியான இவரது முதல் சிறுகதை ‘ஆத்தங்கரைப் பிள்ளையார்.’
l ‘மணிக்கொடி’, ‘கலைமகள்’, ‘ஜோதி, ‘சுதந்திரச் சங்கு’, ‘ஊழியன்’, ‘தமிழ்மணி’ உள்ளிட்ட பல இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளிவந்தன. ‘புதுமைப்பித்தனின் கதைகள்’ என்ற தொகுப்பு 1940-ல் வெளியானது. ‘கிராம ஊழியன்’, ‘சிவாஜி’ போன்ற சிற்றிதழ்களில் பணம் பெற்றுக்கொள்ளாமல் எழுதினார். ‘தினமணி’, ‘தினசரி’ பத்திரிகைகளிலும் பணிபுரிந்தார்.
l எழுத்துப் பணியில் 15 ஆண்டுகளுக்கும் குறைவாகவே ஈடுபட்டார். அதற்குள் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 100-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 15 கவிதைகள், சில நாடகங்கள், எண்ணற்ற மொழிபெயர்ப்புகள், புத்தக விமர்சனங்கள் எழுதினார்.
l சென்னை, தஞ்சாவூர் அல்லாத பிற வட்டார வழக்கு தமிழில் எழுதிய முதல் எழுத்தாளர் இவர். இவரது கதாபாத்திரங்கள் பெரும்பாலும் நெல்லைத் தமிழ் பேசின. மாக்சிம் கார்க்கி, எர்னஸ்ட் டோலர், ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற படைப்பாளிகளின் 50-க்கும் மேற்பட்ட படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்தார்.
l இவர் சிறந்த இலக்கிய விமர்சகரும்கூட. சொ.வி., ரசமட்டம், மாத்ரு, கூத்தன், நந்தன், கபாலி, சுக்ராச்சாரி, இரவல் விசிறிமடிப்பு ஆகிய புனைபெயர்களில் எழுதினார். இலக்கியத்தின் பல துறைகளிலும் எழுதினாலும், சிறுகதைகள்தான் இவருக்கு தனியிடம் பெற்றுத் தந்தன. ‘காஞ்சனை’, ‘நாசகாரக் கும்பல்’, ‘மனித யந்திரம்’, ‘பொன்ன கரம்’, ‘இது மிஷின் யுகம்’, ‘சாபவிமோசனம்’, ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’, ‘ஒருநாள் கழிந்தது’, ‘சிற்பியின் நரகம்’, ‘செல்லம் மாள்’ முதலான அற்புதமான படைப்புகள் சாகாவரம் பெற்றவை.
l திரைப்படத் துறையிலும் ஆர்வம் செலுத்தினார். ‘அவ்வை’, ‘காமவல்லி’ ஆகிய படங்களில் பணிபுரிந்தார். சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, திரைப்படம் தயாரிக்க முயன்றார். அந்த முயற்சி வெற்றிபெறவில்லை.
l கூர்மையான சமூக விமர்சனம், அபாரமான அங்கதம், கதை வடிவங்களில் பரிசோதனை, வேகமான நடை, ஆழம், துல்லியமான சித்தரிப்புகள், வலுவான பாத்திரப் படைப்புகள் ஆகியவை இவரது தனி முத்திரைகள்.
l ‘ராஜமுக்தி’ படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுத 1947-ல் புனே சென்றிருந்தபோது, காசநோயால் பாதிக்கப்பட்டார். ஊர் திரும்பிய பிறகும் உடல்நிலை தேறவில்லை. மிகக் குறுகிய காலமே படைப்புலகில் இருந்தாலும் தமிழ் இலக்கியத்தில் தனி முத்திரை பதித்த புதுமைப்பித்தன் 42-வது வயதில் (1948) மறைந்தார். இவரது படைப்புகள் 2002-ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. @mathinews

செவ்வாய், 27 ஜூன், 2017

இந்திய மாற்றுத்திறனாளர் தடகள விளையாட்டு வீரர் மாரியப்பன் தங்கவேலு ( Mariyappan Thangavelu , பிறந்த நாள் ஜூன் 28, 1995.
இந்திய மாற்றுத்திறனாளர் தடகள விளையாட்டு வீரர் மாரியப்பன் தங்கவேலு ( Mariyappan Thangavelu , பிறந்த நாள் ஜூன்  28, 1995.

மாரியப்பன் தங்கவேலு ( Mariyappan Thangavelu , பிறப்பு: சூன் 28, 1995) இந்திய மாற்றுத்திறனாளர் தடகள விளையாட்டு வீரர் ஆவார். தமிழ்நாட்டு விளையாட்டு வீரரான இவர் உயரம் தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்று வருகின்றார்.
இரியோ டி செனீரோவில் நடந்த 2016 மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் டி42 வகுப்பில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.  2017 சனவரி 25 ஆம் தேதி, இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருதினை அறிவித்தது.
வாழ்க்கை வரலாறு
தமிழ்நாட்டிலுள்ள சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள பெரிய வடகம்பட்டியைச் சேர்ந்தவர். இவருக்கு நான்கு சகோதரர்கள், ஒரு சகோதரி உள்ளனர். தந்தை ஆரம்பத்தில் குடும்பத்தை கைவிட்டார். தாயார் சரோஜா குழந்தைகளை வளர்த்தார். தாயார் செங்கல் தூக்கும் தொழிலாளியாகவும் மரக்கறி விற்றும் ஒரு நாளைக்கு 100 ரூபாய் வருமானத்தில் குடும்பத்தை வளர்த்தெடுத்தார். [3] தனது ஐந்தாவது அகவையில் பள்ளி செல்கையில் ஏற்பட்ட விபத்தில் பேருந்து வலது காலில் ஏறி முழங்காலுக்குக் கீழே காலை இழந்தார். இந்தப் பின்னடைவிலும், அவர் இரண்டாம்நிலைப் பள்ளியை நிறைவு செய்தார். [3]
தனது காலை இழந்தநிலையிலும் மாரியப்பனுக்கு விளையாட்டுக்களில் ஆர்வம் இருந்தது. இவரது பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் ராஜேந்திரன் பரிந்துரைப்படி இவர் உயரம் தாண்டுவதில் பயிற்சி எடுத்துக் கொண்டார். தனது 14ஆவது வயதில் நற்தேகம் உடையவர்களும் கலந்துகொண்ட போட்டியில் இரண்டாவதாக வந்தார். 2013 தேசிய மாற்றுத்திறனாளர் போட்டிகளில் கலந்து கொண்ட மாரியப்பனை கண்ட பயிற்றுநர் சத்தியநாராயணா தமது பயிற்சிக்கு ஏற்றுக் கொண்டார். 2015இல் பெங்களூருவில் அவரது பயிற்சி மையத்தில் இணைந்தார்.
2016ஆம் ஆண்டு மார்ச் மாதம்
தூனிசியாவில் நடந்த ஐபிசி கிராண் பிரீ போட்டியில் 1.78 மீ தாண்டி இரியோ மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றார். தங்கம் வென்ற இவருக்கு இந்தியாவில் அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.
தங்கப் பதக்கம் வென்றதால் இவருக்கு
இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 75 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்க இருக்கிறது. அத்துடன் தமிழக அரசு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கியுள்ளது. தனக்கு அறிவிக்கப்படும் பரிசுத்தொகைகளிலிருந்து தான் படித்த அரசு பள்ளிக்கூடத்திற்கு 30 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

அஞ்சல் தலை

மை ஸ்டாம்ப் என்ற திட்டத்தின்கீழ் சேலம் தபால் துறை சார்பில் அஞ்சல் தலை வெளியிடப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.

விருதுகள்

2016 - ஆனந்த விகடன் "டாப் 10" மனிதர்கள் விருது.


பிரேசிலில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் ‘தங்க’வேலு. சேலத்தில் உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான தங்கவேலு, இன்று இந்தியா முழுவதிலும் பிரபலமடைந்திருக்கலாம். ஆனால், தங்கவேலுவின் இந்தச் சாதனைக்குப் பின்னால் கடும் வலியும், வறுமையும் நீக்கமற நிறைந்திருந்தது. இன்று மீடியாவில் ஃப்ளாஷ் ஆவதற்கு முன்பு, தமிழகத்தில் எத்தனை பேருக்கு தங்கவேலுவைத் தெரிந்திருக்கும்? ‘பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டும் போட்டிகளில் இதுவரை இந்தியாவிலிருந்து தங்கம் வென்றதில்லை’ என்ற அவப்பெயரைச் சுக்குநூறாக உடைத்திருக்குறார் தங்கமான தங்கவேலு.

சேலம் பெரியவடகம்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது தந்தை, செங்கல்சூளையில் வேலை செய்கிறார். இவரது தாய் சரோஜா, காய்கறி வியாபாரம் செய்துவருகிறார். தங்கவேலு ஐந்து வயது குழந்தையாக இருந்தபோது, பஸ் விபத்தில் அவரது வலதுகால் உடைந்துபோனது. அதன் பிறகு, எவ்வளவு சிகிச்சை எடுத்தும் அவரது கால் குணமாகவே இல்லை. தங்கவேலுவுக்கு விளையாட்டில் ஆர்வம். ஆனால், பள்ளியில் அவரது கால் ஊனத்தைக் காரணம் காட்டி விளையாட்டில் சேர்த்துக்கொள்ள மாட்டார்களாம்.
மனம் உருகி மற்ற மாணவர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்ப்பதை வழக்கமாகவைத்திருந்த தங்கவேலுவுக்கு, விடாமுயற்சி குணம் இருந்தது. பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டுக்குச் சென்ற பிறகு தங்கவேலு மட்டும், மைதானத்தில் தனியாக விளையாடினார். இதனை ஒருநாள், உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் பார்த்தார். அப்போது, தங்கவேலுவுக்கு வாலிபால் விளையாட்டில்தான் அதீதஆர்வம் இருந்தது. உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன்தான் தங்கவேலுவுக்குள் இருந்த உயரம் தாண்டுதல் திறமையைக் கண்டு, உயரம் தாண்டுதலில் அவருக்குப் பயிற்சி அளிக்க ஆரம்பித்தார்.

‘‘என்னால் உயரம் தாண்ட முடியும் என என்னுடன் படித்தவர்களால் நம்ப முடியவில்லை. அவர்கள் முன்பு நான் தாண்டிக் காட்டியபோது அசந்துபோனார்கள். அதன்பிறகு, அவர்களின் உதவி மூலமே பல போட்டிகளில் கலந்துகொண்டேன். நான் உடல் ஊனமுற்றவன் என எப்போதும் நினைத்ததில்லை’’ என்கிறார் தங்கவேலு.
தனது 14 வயதில், முதல் உயரம் தாண்டுதல் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார் தங்கவேலு. அரசுப் பள்ளி ஆசிரியரான ராஜேந்திரனிடம் 12-ம் வகுப்புவரை பயிற்சி எடுத்து தங்கவேலு, அதன்பிறகு பெங்களூருவில் சத்தியநாராயணா என்பவரிடம் பயிற்சி பெற்று மேலும் தன்னை மெருகேற்றிக்கொண்டார். இதற்கு முன்பு மாவட்ட அளவிலான போட்டிகளில் தங்கப் பதக்கம், 2011-ல் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் தங்கப் பதக்கம், சர்வதேச உயரம் தாண்டும் போட்டியில் பதக்கம் என தங்கவேலு பல பதக்கங்களைக் குவித்துள்ளார். இந்தப் பதக்கங்கள் எல்லாம், அவரது குடிசை வீட்டை அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன.
தங்கவேலுவின் கால் உடைந்தபோது மருத்துவச் செலவுக்கு அவரது அம்மா ரூ.3 லட்சம் கடன் வாங்கியிருந்தார். ஆனால், அந்தக் கடனை இன்னும் அடைக்க முடியாத அளவுக்கு வறுமையில் உழலும் தங்கவேலுவின் குடும்பத்துக்குத் தற்போது விடிவுகாலம் பிறந்துள்ளது. தங்கவேலுவின் இந்தச் சாதனையை பெரியவடகம்பட்டி கிராம மக்கள் திருவிழாபோல கொண்டாடி வருகின்றனர். தங்கவேலுவுக்கு பேனர்வைத்தும், அவரது படத்துக்கு பாலாபிஷேகம் செய்தும் பெரியவடகம்பட்டி மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
தங்க மகனுக்கு சல்யூட்!

ஏ டி எம் மெஷினுக்கு பிறந்த நாள் ஜூன் 27,1967.ஏ டி எம் மெஷினுக்கு பிறந்த நாள் ஜூன் 27,1967.

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஷெப்பர்டு பரன் கண்டு பிடித்த ஏடிஎம் எந்திரம் முதன் முறையாக கடந்த 1967ம் ஆண்டு இதே ஜூன் 27ம் தேதிதான் வடக்கு லண்டனில் பார்கிளேஸ் வங்கி கிளையில் பொருத்தப்பட்டது. அப்போது பிளாஸ்டிக் கார்டு கண்டுபிடிக்கப்படவில்லை. ரசாயன குறியிடப்பட்ட சிறப்பு செக் அடிப்படையாகக் கொண்டு அந்த ஏடிஎம் கரன்சியை வழங்கியது.

இந்த செக்கை ஒரு டிராயரில் வைத்துவிட்டு தனி அடையாள குறியீட்டை (பின் நம்பர்) தெரிவித்தால் மற்றொரு டிராயரில் பிரிட்டிஷ் பவுண்டு வரும். மேலும், 6 இலக்க பின் நம்பரை பதிவு செய்யும் வகையில் ஏடிஎம்மை வடிவமைத்திருந்தார்.

அதை நினைவில் வைத்துக் கொள்வதற்கு சிரமமாக இருப்பதால் 4 இலக்கமாகக் குறைத்து வடிவமைத்தார். பின்னர் பிளாஸ்டிக் கார்டை பயன்படுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.

இனி ஏ டி எம் பற்றி கொஞ்சம் அடிசினல் தகவல்;

ஏடிஎம் போல ஒரு மெஷின் தயாரிக்க வேண்டும் என ஜப்பான், ஸ்வீடன், அமெரிக்கா, இங்கிலாந்து என பல நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு முயன்றன. இருந்தாலும் அந்த பெருமையைத் தட்டிக் கொண்டு போனது “லூத்தர் ஜார்ஜ் சிம்ஜியன்” என்பவர் தான். 1939 களுக்கு முன்பே அவர் இந்த முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அதற்கான காப்புரிமையை 1963ல் தான் பெற்றார் !

1939 ம் ஆண்டு நியூயார்க்கில் “சிட்டி பேங்க் ஆஃப் நியூயார்க்” ஒரு மெஷினை வைத்தது. அதை “பேங்கோகிராஃப்” என்று அழைத்தார்கள். நமது ஏ.டி.எம் களின் முன்னோடி என்று அதைச் சொல்லலாம். ஆனாலும் அதில் பணம் பட்டுவாடா செய்யும் வசதி இருக்கவில்லை. டெபாசிட் செய்யும் வசதி மட்டுமே இருந்தது. ஆனாலும் இதை மக்கள் விரும்பவில்லை. எனவே ஆறே மாதத்தில் மூட்டையில் கட்டி பரணில் போட்டார்கள்.

பணம் பட்டுவாடா செய்யும் மெஷின் தனது கணக்கைத் துவங்கியது 1966ம் ஆண்டு, டோக்கியோவில். அதற்கு அடுத்த வருஷம் அது ஸ்வீடனிலும் சுவடை எடுத்து வைத்தது !

1967ம் ஆண்டுதான் இப்போதைய வகையான ஏடிஎம் மெஷினை உருவாக்கினார்கள். ஆனாலும் அப்போதைய அந்த ஏடிஎம் மெஷினுக்கும் இப்போதைய மெஷினுக்கும் ஏணி என்ன ? ராக்கெட் விட்டால் கூட எட்டாத அளவுக்கு இடைவெளி இருந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

1972ம் ஆண்டு யூகேவில் அறிமுகமான ஏ.டி.எம் தான் இன்றைய நவீன ஏடிஎம் களின் ஒத்த ஸ்டைல் பணிகளைச் செய்தது எனலாம்.

சனி, 24 ஜூன், 2017

தோல் நிறமி இழத்தல் தினம் ஜூன் 25.தோல் நிறமி இழத்தல் தினம் ஜூன் 25.


தோல் நிறமி இழத்தல் என்னும் இந்த சரும பாதிப்பு, தோலின் நிறமிகள் இழக்கப்பட்டு வெள்ளையாக மாறுவதால் ஏற்படும் பாதிப்பாகும். இது தோலின் நிறமி செல்கள் இறப்பதால் அல்லது தொடர்ந்து வேலை செய்ய முடியாததால் ஏற்படுகிறது. இந்த பாதிப்பு உடலில் ஏற்படுவதற்கான தெளிவான ஒரு காரணம் மட்டும் இல்லை என்றாலும், மரபணு, விஷத்தன்மை உடைய அழுத்தம், நரம்பு மண்டலப் பாதிப்பு அல்லது வைரஸ் காரணங்கள் போன்றவை இவற்றின் மூலமாக செயல்படலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக தோல் நிறமி இழப்பதை இருவகையாகப் பிரிக்கலாம். ஒன்று கூறுபடுத்தப்பட்ட தோல் நிறமி இழத்தல், மற்றொன்று கூறுபடுத்தப்படாத தோல் நிறமி இழத்தல்.
உலகளவில், தோல் நிறமி இழக்கும் இந்தப் பாதிப்பு ஒரு சதவீதத்திற்கும் குறைவான அளவே உள்ளது. ஒரு சில குறிப்பிட்ட பகுதி மக்கள் தொகையில் மட்டும் சராசரியாக இரண்டு முதல் மூன்று சதவீத மக்கள் தொகையில் பாதிப்பு ஏற்படுகிறது, அத்துடன் சில இடங்களில் உள்ள மக்களுக்கு 16 சதவீத மக்கள் தொகையில் கூட பாதிப்புகள் ஏற்படுகின்றன. அடிசனின் நோய், ஹாஷிமோட்டோ தைராய்டியம் மற்றும் வகை 1 நீரிழிவு போன்ற நோய்கள் பெரும்பாலும் தோல் நிறமி இழத்தல் பாதிப்படைந்தவர்களைத் தாக்குகிறது. இதனைக் குணப்படுத்தும் தெளிவான முறை இல்லாவிட்டாலும், சில குறிப்பிட்ட சிகிச்சை முறைகள் பிரபலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றுள் மேற்பூச்சு ஸ்டீராய்டு மருந்துகள், கால்சினெரின் தடுப்பான்கள் மற்றும் ஒளிக்கதிர் சிகிச்சைகள் போன்றவை முக்கியமானவை.
வகைப்படுத்துதல்
இந்த பாதிப்பினை, சமீபத்திய ஒருமித்த கருத்துக்களை மையமாகக் கொண்டு கூறுபடுத்தப்பட்ட தோல் நிறமி இழத்தல் மற்றும் கூறுபடுத்தப்படாத தோல் நிறமி இழத்தல் என இரு வகைகளாகப் பிரிக்கலாம். இதில் கூறுபடுத்தப்படாத
தோல் நிறமி இழத்தலால் பொதுவாக பலர் பாதிக்கப்படுகின்றனர்.
கூறுபடுத்தப்படாத தோல் நிறமி இழத்தல்
கூறுபடுத்தப்படாத தோல் நிறமி இழத்தல் வகை தோல் நிறமி இழத்தலில் சமச்சீர் முறையில் நிறமி இழக்கப்பட்ட சருமத்தில் பிணைப்புகள் தோன்றும். புதிய பிணைப்புகள் பெரிய பகுதிகளில் தோற்றமளிக்கும் அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் தோற்றமளிக்கும். கூறுபடுத்தப்படாத தோல் நிறமி இழத்தல் பாதிப்பு எந்த வயதினருக்கும் வரும் சாத்தியக்கூறுகள் உண்டு (ஆனால் கூறுபடுத்தப்பட்ட தோல் நிறமி இழத்தல் 13 முதல் 19 வயதுடைய இளம்பருவத்தினருக்கு பாதிப்பினை ஏற்படுத்தும்) [7]
கூறுபடுத்தப்படாத தோல் நிறமி இழத்தலின் உட்பிரிவுகள் பின்வருமாறு:
பொதுவான தோல் நிறமி இழத்தல்:
இது பொதுவாக ஏற்படும் தோல் நிறமி இழத்தல் ஆகும். நிறமிகள் இழக்கப்படும் அனைத்து உடல் பாகங்களிலும் இது ஏற்படும் வாய்ப்புள்ளது.
உலகளாவிய தோல் நிறமி இழத்தல்:
உடலின் பெரும்பகுதியினை தோல் நிறமி இழக்கும் நிகழ்வு சூழ்ந்துகொள்ளும்.
குவியும்படியான தோல் நிறமி இழத்தல்:
பெரும்பாலும் குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த பாதிப்பு பிரிவில், சருமத் தோலின் நிறப்புள்ளிகள் சிலவிடங்களில் மட்டும் குழிந்து காணப்படும்.
ஆக்ரோஃபேசியல் தோல் நிறமி இழத்தல்:
விரல்களில் அதிகமாக ஏற்படும் பாதிப்புகள்.
மியூகஸ் தோல் நிறமி இழத்தல்: கோழை போன்ற சவ்வுகளில் ஏற்படும் நிறமிகளின் இழப்பினால் ஏற்படும் பாதிப்புகள்.

கூறுபடுத்தப்பட்ட தோல் நிறமி இழத்தல்
கூறுபடுத்தப்பட்ட தோல் நிறமி இழத்தல் வகை சருமப் பாதிப்பு இதர தொடர்புடைய நோய்களுக்கான காரணங்கள் மற்றும் நோய்த்தாக்கம் ஆகியவற்றில் இருந்து வேறுபட்டவை. இதன் சிகிச்சை முறைகள் கூறுபடுத்தப்படாத தோல் நிறமி இழத்தல் பாதிப்பில் இருந்து வேறுபட்டவை. முதுகெலும்பு தண்டுவடத்தின், முகுகுப்புற வேர்களுடன் தொடர்புடைய பகுதிகளில் இவ்வகைப் பாதிப்பு ஏற்படும். [6][9] கூறுபடுத்தப்படாத தோல் நிறமி இழத்தல் பாதிப்புகளை விட இவை விரைவாக பரவும் தன்மை கொண்டது. பொதுவான கூறுபடுத்தப்பட்ட தோல் நிறமி இழத்தல் பாதிப்பினைக் காட்டிலும் இதன் பாதிப்புகள் நிலையாகவும் அதிகமாகவும் இருக்கும்.
பாதிக்கப்படுபவர்கள்
உலக மக்களில் 0.5% முதல் 2% வரை மக்கள் இந்த தோல் நிறமி இழத்தல் பாதிப்புக்குள்ளாகின்றனர். அனைத்து இன மக்களும் இதில் சரிசமமாக பாதிப்படைகின்றனர். ஆண் மற்றும் பெண் என இருபாலரும் சம எண்ணிக்கையிலேயே பாதிக்குள்ளாகின்றனர். இருப்பினும் அதிகப்படியான பெண் நோயாளிகள் பற்றி வெளியில் தெரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 50 சதவீதம் நோயாளிகளுக்கு அவர்களின் சருமம் வெள்ளை நிறமாக மாற்றமடைதல் 20 வயதிற்குள்ளாகவே நடந்துள்ளது. வயது முதிர்ந்தவர்களுக்கு இதுபோன்று நடப்பது பொதுவான நிகழ்வன்று. வயது முதிர்ந்தவர்களுக்கும், குழந்த பருவத்தினருக்கும் தோல் நிறமி இழப்பு ஏற்படும் நிகழ்வு மிகவும் குறைவு.
காரணங்கள்
வித்தியாசமான மாற்றங்களுக்குட்பட்டு இது மக்களைப் பாதிப்பதால் தோல் நிறமி இழப்புகள் எப்போது ஏற்படும், எப்படி ஏற்படும் மற்றும் எவ்வளவு தூரம் ஏற்படும் என்பது பற்றி துல்லியமாக கணிப்பது கடினம். இது குழப்பமான நோய்தோன்றும் வகையினைச் சார்ந்தது என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். சில மரபணு சம்பந்தப்பட்ட காரணங்களால் கூட மெலனோசைட் இழப்புகள் ஏற்படலாம். ஆனால் 30% நோயாளிகள் தங்கள் குடும்பத்தில் ஏற்கனவே பாதிக்கப்பட்டவரை கொண்டுள்ளனர்.
தூண்டுதல்கள்
தோல் நிறமிகள் இழத்தலைப் பின்வரும் காரணிகள் அதிகரிக்கின்றன.
குடும்ப தோல் நிறமி இழத்தலுக்கான வரலாறு
பீனால் கலந்த பொருட்களை அதிகம் பயன்படுத்துவது
கூடுதல் தைராய்டு சுரப்பி செயலாக்கத்தினால் நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் அதிகரித்து மெலனோசைட்களை அழித்துவிடுதல்.
அழுத்தமான நிகழ்ச்சிகள்
நரம்பு மண்டல காரணங்கள்
வைரஸ் காரணங்கள்

வியாழன், 22 ஜூன், 2017

உலக விதவைகள் தினம் ஜூன் 23.உலக விதவைகள் தினம் ஜூன் 23.

உலகம் முழுவதும் கணவன்மார்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் பெண்களின் நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்  சூன் 23 ம் தேதியினை பன்னாட்டு விதவைகள் நாள் .   (பன்னாட்டுக் கைம்பெண்கள் நாள் ) என ஐ.நா. சபை அறிவித்துள்ளது.  இந்த நாளில் உலகம் முழுவதும் உள்ள ‌கோடிக்கணக்கான. கைம்பெண்கள் சந்தித்துவரும் பிரச்னைகள், மற்றும் இன்னல்கள் குறித்து ஐ.நா. கண்காணித்துத் தீர்வுக்கு வழி வகுக்கும். பன்னாட்டுக் கைம்பெண்கள் நாளை அறிவிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி உலகத் தலைவர்களும் ஐ.நா.சபையில் பேசி வந்தனர். காபூன் நாட்டின் மறைந்த முன்னாள் அதிபர் ஒமர் பூன்கோ ஒடிம்பாவின் மனைவி சில்வையோ பூன்கோ ஒடிம்பாவின் கோரிக்கைப்படி ஐ.நா.வின் பொதுச்சபைக்கூட்டத்தில் மொத்தம் 195 பிரதிநிதிகளின் சார்பில் அமைக்கப்பட்ட 3வது குழுவின் அறிக்கையடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து ஐ.நா. பொதுச் சபையில் 23 டிசம்பர், 2010 அன்று ஒருமனதாகத் தீர்மானமும் நிறைவேறியது.உலகம் முழுவதும் விதவைகள் எண்ணிக்கையும் அவர்கள் மீதான வன்முறையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
ஜூன் 23 ம் தேதியை சர்வதேச விதவைகள் தினமாக (International Widows' Day)அறிவித்து, 2010-ம் ஆண்டு இறுதியில் ஐ.நா. பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
உலக முழுவதும் கணவன்மார்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் பெண்களின் நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்திலும், அவர்களின் துயரை துடைக்கும் வகையிலும் சர்வதேச தினத்தை அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் ஐ.நா பொது சபைக்கு கோரிக்கை விடுத்துவந்தனர்.
சர்வதேச விதவை தினத்தை அறிவிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி உலகத் தலைவர்களும் ஐ.நா. சபையில் பல தடவை பேசியுள்ளனர்.காபூல் நாட்டின் மறைந்த முன்னாள் அதிபர் ஒமர் பூன்கோ ஒடிம்பாவின் மனைவி சில்வியா போங்கோ ஒனடிம்பாவின் கோரிக்கைப்படி, ஐ.நா.வின் பொதுச் சபைக் கூட்டத்தில் மொத்தம் 195 பிரதிநிதிகளின் சார்பில் அமைக்கப்பட்ட குழுவின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி ஆண்டுதோறும் ஜூன் 23 ம் தேதியினை சர்வதேச விதவைகள் தினமாக அறிவித்து வருடந்தோறும் அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது.இன்று உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விதவைகள் சந்தித்துவரும் பிரச்னைகள் மற்றும் இன்னல்கள் குறித்து ஐ.நா. கண்காணித்து தீர்வுக்கு வழி வகுத்து வருகிறது.
உலகம் முழுக்க சுமார் 245 கோடி கைம்பெண்கள் இருக்கிறார்கள்.இவர்களில் கிட்டத்தட்ட 11.5 கோடி பேர் மிகவும் ஏழ்மையில் வசித்து வருகிறார்கள்.குடும்பத்தில் வருமானம் ஈட்டும் ஆண் இறக்கும் நிலையில்,சமூக நீதி அடிப்படையில் விதவை பெண்களுக்கு அரசு வேலை அளிப்பது அவசியமாகிறது.அப்போதுதான் நாட்டில் வறுமையில் வாடும் கைம்பெண்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும்.
அதே நேரத்தில் நிறுவனங்களும், தனிநபர்களும் குடும்பத் தலைவர்களை இழந்து தவிக்கும் கைம்பெண்களுக்கு பொருளாதார ரீதியில் உதவி செய்வது அவசியம். குறிப்பாக, அவர்களின் பிள்ளைகளின் படிப்பு மற்றும் வேலைக்கு உதவி செய்ய முன் வர வேண்டும்...!
பொருளாதார ரீதியில் கைம்பெண்கள் வலிமையாக இல்லை என்றாலும், அவர்கள் மன ரீதியாக வலிமையானவர்களாக இருக்கிறார்கள். தற்கொலை செய்துக் கொள்வது, குடும்ப பெண்களை விட விதவை பெண்கள் மத்தியில் குறைவாக இருக்கிறது.இது காலம் கொடுத்த வல்லமை என்றே சொல்ல வேண்டும்.

புதன், 21 ஜூன், 2017உலக இசை தினம் ஜூன் 21 (21 Jun)

நாடு, மொழிகளுக்கு அப்பாற்பட்டது இசை. இசை இல்லாமல் வாழ முடியாது. இசை ஒரு கலை. இசைக்கு மயங்காதோர் உலகில் எவரும் இல்லை. இசை நமது எண்ணம், செயல்கள் மற்றும் நினைவுகள் ஆகியவை அடங்கிய உணர்வு. பெரும்பாலனவர்களின் கவலையை தீர்க்கும் மருந்து; சிறந்த பொழுதுபோக்கு அம்சம். வரும் தலைமுறையினருக்கு ஆர்வத்தை அளிக்கவும், இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாரட்டும் விதத்திலும் ஜூன் 21ம் தேதி உலக இசை தினம் கொண்டாடப் படுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட 110க்கும் மேற்பட்ட நாடுகளில் இது கொண்டாடப்படுகிறது. தோற்றம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இசை தோன்றி விட்டது. ஆரம்பத்தில் இசை என்பது மனிதன், பறவை, விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களின் சத்தத்தின் மூலம் உருவானது. இன்றைய இசையின் நிலை, பல பரிமாணங்களை கடந்து தொழில்நுட்பத்தை சார்ந்து புதிய பாதையில் பயணிக்கிறது. இசைகள் பலவிதம் ஒவ்வொன்றும் புதுவிதம் பழங்கால இசை, இடைக்கால இசை, ஐரோப்பிய கிளாசிக்கல் இசை, கிளாசிக்கல் (இலக்கிய) இசை, கற்பனை இசை மற்றும் நவீன இசை என பல பரிமாணங்கள் உருவாகின. உலகில் ஒவவொரு நாடும் கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு பல வகையான இசைகளை இசைக்கின்றனர். ராக் மியூசிக், சோல் மியூசிக், பாப் மியூசிக், டிஸ்கோ, போக், சிம்பொனி உள்ளிட்ட இசைகள் உலகளவில் உள்ளன. இந்தியாவில் பெரும்பாலும் இரு விதமான இசைகள் தான் பின்பற்றப்படுகிறது. ஒன்று வட இந்தியாவின் இந்துஸ்தானி இசை, மற்றொன்று தென்னிந்தியாவின் கர்நாடாக இசை. இசை ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும். கலாச்சாரத்தை சீரழிக்கும் இசை உருவாவதை துவக்கத்திலேயே தடுக்க வேண்டும். இசை மனங்களை இணைக்கிறது இசை எனும் கலை மட்டும் தோன்றியிருக்காவிட்டால், மனிதன் காட்டுமிராண்டியாகவே காடுகளிலும் குகைகளிலும் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பான் என்பது சிதார் இசைமேதை பண்டிட் ரவிசங்கரின் வார்த்தைகள். அதேபோல் "போர் நாடுகளைப் பிரிக்கிறது, இசை மனங்களை இணைக்கிறது" என்று இசைப்பிரியர்கள் பெருமையாகக் கூறுவது ஒன்றும் பீற்றல் அல்ல. உண்மையும் அதுதான். அப்படிப்பட்ட இசையை போற்றிப் பாராட்டுவதுடன் பாதுகாக்கவும் வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் வகையில் உலகில் உள்ள 32 நாடுகளில் ஜூன் 21ஆம் தேதியை உலக இசை தினமாகக் கொண்டாடுகிறார்கள். வாழ்வியல் நீரோட்டங்களில் இசைக்கென்று தனியிடம் கொடுத்துள்ளன ஆசிய, ஐரோப்பிய நாடுகள். இந்தப் பட்டியலில் இடம்பெறாத நாடுகள் எல்லாம் இசைக்கு எதிரிகள் என்ற முடிவுக்கு யாரும் வந்து விடக்கூடாது. அந்நாடுகளில் தங்கள் வசதிக்கேற்ப, கலாசாரத்துக்கேற்ப வேறு தினங்களில் இசை தினத்தைக் கொண்டாடி வருகின்றனர். சங்கராந்தி உதாரணமாக அர்ஜெண்டினாவில் வசந்தம் தொடங்கும் முதல் நாளான செப்டம்பர் 21 அன்று இசை தினம் கொண்டாடப்படுகிறது. உலகின் முதல் இசை தினம் பிரான்சில் 1982ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. 1976ஆம் ஆண்டில் அமெரிக்க இசைக் கலைஞர் இந்த ஆலோசனையை பாரீஸில் நடந்த ஓர் இசை நிகழ்ச்சியில் முன்வைத்தார். கோடையில் பூமத்திய ரேகையை விட்டு சூரியன் வெகுதொலைவில் இருக்கும் நாளன்று இரவு முழுவதும் இசைக் கொண்டாட்டங்களை நடத்தி மகிழ்ந்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார். இந்த நாளை இந்திய நாட்டில் சங்கராந்தி என்று கூறுகிறார்கள். இந்தக் கொண்டாட்டங்கள் இசைக்கு எல்லையில்லை என்பது உண்மை என்று கூறுவது போல் பிரான்சுடன் நின்று விடவில்லை. உலக நாடுகள் முழுவதும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. நாட்கள் தான் மாறுபடுகின்றன. எப்படிக் கொண்டாட வேண்டும்? உலக இசை தினத்தன்று தெருவெங்கும் இலவச இசைக்
கச்சேரிகள், நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்று இசை தின வழிகாட்டல்கள் கூறுகின்றன. ஆனால் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் அப்படி கச்சேரிகள் நடப்பதாக தகவல்கள் இல்லை. கடவுளும் இசையும் கோவில்களில் கூட இலவசமாக பாட மறுக்கும் இந்திய இசைக் கலைஞர்கள் இதற்கு சம்மதித்து வருவார்களா என்று தெரியவில்லை. இந்திய இசைக்கு ஒரு தனி பாரம்பரியம் உண்டு. ஆன்மீகத்திலும், ஆரோக்கியத்திலும், விவசாயத்திலும் அதற்கு ஒரு பங்கு உண்டு என்று கூறுவார்கள். ஆன்மீகத்தில் கண்ணன் ஒரு முரளிதரன் ஆவார். பெயருடன் கலந்த இசை முரளி என்றால் புல்லாங்குழல் என்று அர்த்தம். தரன் என்பதற்கு அணிந்திருப்பவர் என்று அர்த்தம். எனவே புல்லாங்குழல் வைத்திருக்கும் கண்ணனை முரளிதரன் என்று ஆன்மீகவாதிகள் அழைக்கிறார்கள். தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படும் சிவனின் கையில் வீணையும், ருத்திரன் என்று அழைக்கப்படும் சிவனின் கையில் உடுக்கையும் இருப்பதை நாம் காண முடிகிறது. சரஸ்வதியின் கையில் வீணையும், நாரதரின் கையில் தம்புராவும் இருப்பதை இன்று நாம் ஓவியங்களிலும், சிலைகளிலும் காண முடிகிறது. தேவாரம், திருவாசகம், பாசுரங்கள், திருப்பாவை ஆகிய அனைத்தும் தமிழும் இசையும் கலந்த இசைக்கருவூலங்கள். வாழ்வுடன் அர்த்தப்படும் ராகங்கள் ஆன்மீகத்தில் இசையின் பங்கு பற்றி ஏராளமாகக் கூறலாம். தாலாட்டு முதல் ஆவி அடங்கிய பின் பாடப்படும் ஒப்பாரி வரை இசை ரத்த அழுத்தத்திற்கு நீலாம்பரி, மன அழுத்தத்திற்கு லதாங்கி, ஞாபகமறதிக்கு ரேவதி என்று பலராகங்கள் இசை மருத்துவமாகப் பயன்படுகின்றன. தான்சேனின் வரலாற்றில் தீபக் என்ற ராகத்தைப் பாடி அணைந்திருந்த விளக்குகளை எரிய வைத்தார் என்றும் கூறப்படுகிறது. நாதஸ்வர இசையால் தாவரங்களை நன்கு விளைய வைக்க முடியும் என்று அண்மைக்கால ஆய்வுகள் கூறுகின்றன. இந்திய நாட்டில் இசை இல்லாத இடம் இருக்க முடியாது. குழந்தை பிறந்தவுடன் பாடப்படும் தாலாட்டு முதல் ஆவி அடங்கிய பின் பாடப்படும் ஒப்பாரி வரை இசை இல்லாத வாழ்வியல் நிகழ்வுகள் இல்லை என்று கூறும் அளவுக்கு இசை இந்தியா உள்ளிட்ட ஆசியநாடுகளின் பண்பாட்டில் பின்னிப் பிணைந்தது. திக்கெட்டும் தமிழ்த் திரையிசை திரை இசைப்பாடல்கள் பற்றி கூறவே வேண்டாம். துன்பம் நேர்கையில் யாழெடுத்துப் பாடி இன்பம் சேர்க்கமாட்டாயா என்று தொடங்கி ஒரு நாள் போதுமா, இசை கேட்டால் புவி அசைந்தாடும் என்று எத்தனை பாடல்கள் மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளன. இசை தமிழர்களின் வாழ்வில் இணைந்து விட்ட ஒரு கலை இந்திய திரையுலகில் மாஸ்ட்ரோ பட்டம் பெற்ற இளையராஜாவும், ஆஸ்கர் விருது பெற்ற ரஹ்மானும் தமிழர்கள் என்பது நமது நெஞ்சை நிமிர்த்துகின்றன. இசை மனிதனின் வாழ்வோடு இணைந்த ஒன்று. இசையை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. இசை தமிழர்களின் வாழ்வில் இணைந்து விட்ட ஒரு கலை. இசைக்கு மயங்காதோர் யாரும் இல்லை.உலக இசை தினத்தில் சில மணி நேரம் இசையைக் கேட்டு மனம் மகிழ்வோம். மனிதர்கள் இசைபட வாழ இசை அவசியமானதொன்றாகும்.


இசை, மனிதனை மட்டுமல்ல, இறைவனையும் மயக்கும் தன்மை கொண்டது. தேவார மும்மூர்த்திகளின் இசை கேட்க, சிவபெருமான் நடத்திய நாடகங்கள் சுவையானவை… நாகப்பட்டினம் அருகிலுள்ள வேதாரண்யம் சிவாலயம், ஒரு காலத்தில் சில காரணங்களால் மூடப்பட்டது. அவ்வூருக்கு சம்பந்தரும், திருநாவுக்கரசரும் வந்தனர். கதவு அடைக்கப்பட்டிருந்ததால், கோவிலுக்கு பக்கவாட்டு வாசல் வழியாக பக்தர்கள் சென்று வந்ததைக் கண்டு,
அவர்கள் வருத்தம் அடைந்தனர். கதவு திறக்க வேண்டுமென சம்பந்தர் ஒரே ஒரு பாட்டைத் தான் பாடினார்; கதவு திறந்தது. மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளே சென்று இறைவனை வழிபட்டனர். திறந்த கதவை அடைக்க அவர்களால் முடியவில்லை; எனவே, கதவை மூடுவதற்காக, தொடர்ச்சியாக, 11 பாடல்கள் பாடினார் நாவுக்கரசர்; கதவு மூடிக் கொண்டது.
“சம்பந்தரே… நீங்கள் ஒரே பாட்டில் கதவைத் திறந்து விட்டீர்கள். உங்கள் சக்தியின் முன், நான் மிகச் சாதாரணமானவன் என்பதை நிரூபிக்க நினைத்த சிவன், என்னை, 11 பாடல்கள் பாட வைத்து விட்டான்…’ என, தன்னடக்கத்துடன் சொன்னார் நாவுக்கரசர்.
“நாவுக்கரசரே… தாங்கள் நினைப்பது தவறு. என்னுடைய, ஒரு பாட்டே இறைவனுக்கு சலித்து விட்டது போலும்; அதனால், அவன் கதவைத் திறந்து விட்டான். உங்கள் பாடல்களைக் கேட்க, கேட்க தேனாய் தித்தித்ததால் தான், அவன் உங்களை தொடர்ந்து பாட வைத்திருக்கிறான்…’ என்றார் சம்பந்தர்.
இப்படி, இசை கேட்க ஆசைப்பட்டு, சிவபெருமான் ஒரு லீலையை நிகழ்த்தினார்; மற்றொரு நிகழ்வும் சுவையானது… சுந்தரர் எனும் வாலிபருக்கு, திருமணம் முடிவானது. மணவறைக்கு வந்து விட்டாள் மணப்பெண். தாலி கட்டும் வேளையில் முதியவர் வேடத்தில் நுழைந்தார் சிவன். திருமணத்தை தடுத்து நிறுத்திய அவர், “இந்த மணமகன் எனக்கு அடிமை என, இவனது முன்னோர் சாசனம் எழுதித் தந்துள்ளனர். இவனோ திருமணம் செய்து, தப்பிக்க எண்ணுகிறான். இவனை என்னுடன் அனுப்புங்கள்…’ என்றார்; மறுத்தார் சுந்தரர்.
“இந்தக் கிழவன் ஒரு பித்தன்; அதனால் தான், பைத்தியம் பிடித்து என்னை அடிமை என்கிறான்…’ என்று கத்தினார்; ஆனால், முதியவர் தகுந்த ஆதாரங்களைக் காட்டியதால், ஊர்ப் பெரியவர்கள் சுந்தரரை முதியவருடன் அனுப்பி வைத்தனர். திருவெண்ணெய்நல்லூருக்கு அவரை அழைத்துச் சென்று, சிவலிங்கத்துடன் ஐக்கியமாகி விட்டார். இதைக்கண்டு ஆனந்த மடைந்த சுந்தரர், “இறைவா… நீயா என்னை அடிமை கொண்டது…’ என மகிழ்ந்தார். அப்போது, சிவன் அவர் முன் தோன்றி, தன்னைப் பாடும்படி, வேண்டினார். எப்படி பாடுவது என சுந்தரர் கேட்கவே, “நீ என்னை பித்தன் என திட்டினாய். அந்த வார்த்தையை முதலாவதாகக் கொண்டே பாடு…’ என சொல்லவே, “பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா…’ என பிரபலமான பாடலைப் பாடினார். இவரே சிவபெருமானை, “ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவனே…’ என்று பாடியுள்ளார்.
தியாகராஜர் எனும் இசைமேதை, ராமபிரானை வாழ்த்திப் பாடிய கீர்த்தனைகள் பேரின்பம் தருபவை. சங்கீத மாணவர்கள் தியாகராஜருக்கு தேன் அபிஷேகம் செய்கின்றனர். இங்கு வந்து அரங்கேற்றம் செய்பவர்கள் ஏராளம். இவரது ஆராதனை விழாவில், பஞ்சரத்ன கீர்த்தனைகளை பிரபல இசைக் கலைஞர்கள் பாடுவர். தியாகராஜர் இந்த கீர்த்தனைகளை பாடிய போதுதான், ராமபிரான் அவருக்கு காட்சி கொடுத்தார். உலக இசை தினத்தன்று, இசையால்
இறைவனைப் பாடிய மாணிக்க வாசகர், அருணகிரியார், நக்கீரர், குமரகுருபரர் உள்ளிட்ட இசைஞானிகளின் பாடல்கள், மழை போல் நம் இல்லங்களை நனைக்கட்டும்.

திங்கள், 19 ஜூன், 2017

உலக யோக தினம் ஜூன் 21


உலக யோக தினம் ஜூன்  21

உலக யோகா நாள் (International Yoga Day) ஆண்டுதோறும் சூன் 21 ஆம் நாள் கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது.
ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா நாளாக ஆண்டின் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஐநா பொதுச்சபையில் 2014 செப்டம்பர் 27 அன்று வலியுறுத்தி உரையாற்றியிருந்தார். சூன் 21 ஆம் நாளை அவர் இதற்காகப் பரிந்துரைத்திருந்தார். இரண்டு கதிர்த்திருப்பங்களில் ஒன்று நிகழும் இந்நாள், வடக்கு அரைக்கோளத்தில் மிக நீண்ட நாளாகவும் உள்ளது. பல உலக நாடுகளில் இந்நாள் ஒரு குறிப்பிடத்தக்கதாகவும் உள்ளது என அவர் தெரிவித்தார்.அமெரிக்கா, கனடா, சீனா உட்படப் பல உலக நாடுகள் நரேந்திர மோதியின் பரிந்துரையை ஆதரித்தன.
2014 டிசம்பர் 11 அன்று 193-உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபை சூன் 21 ஆம் நாளை 'பன்னாட்டு யோகா நாளாக' அறிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது.
முதல் சர்வதேச யோகா தினம்
முதல்முறையாக ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதற்காக இந்தியத் தலைநகர் தில்லியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தலைமை வகித்தார்.
யோகா தரும் யோகம்
உங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட ஒரு நாள் போதும்! நீங்கள் ஆரோக்கியம், ஆனந்தம், அமைதி, அன்பு - இவற்றில் எதைத் தேடினாலும் சரி; உலகில் வெற்றி பெற வேண்டும் என்றாலும் சரி, உள்நிலை மாற்றம்தான் உங்கள் நோக்கம் என்றாலும் சரி, இங்கு வழங்கப்படும் யோகப் பயிற்சிகள் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை களைந்து வாழ்வை மிகச் சுலபமாய் கையாள வழி ஏற்படுத்திக் கொடுக்கும்.
கிடைக்கும் பலன்கள்
* ஞாபக சக்தி, மனம்குவிப்பு திறன், செயல்திறன், மேம்படுகிறது
·* உடல், மனம் மற்றும் உணர்ச்சி நிலைகள் உறுதியடைகின்றன
·* முதுகுத்தண்டை வலுப்படுத்தவும், சமநிலைப்படுத்தவும் செய்கிறது
·* முதுகு வலி, மன அழுத்தம், பயம் மற்றும் கோபம் ஆகியவற்றிலிருந்து விடுதலை
·* நாட்பட்ட நோய்களிலிருந்து நிவாரணம் அளிப்பதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
·* வேலை செய்யும் இடத்தில், குழுவாக பணியாற்றும் திறன் மற்றும் தகவல் பரிமாறும் திறன் மேம்படுகிறது.
·* அமைதியும், ஆனந்தமும், நீடித்து நிலைத்திருக்கச் செய்கிறது.
அனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா.
மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப்பயிற்சி எனும் அறிவியல் தோன்றிவிட்டது சிவனே ஆதியோகி என்றும் ஆதி குரு என்றும் யோக வரலாறுகளில் குறிப்பிடப்படுகிறார் இமய மலைத்தொடரில் உள்ள காந்தி சரோவர் ஏரியின் கரையில் சப்தரிஷிகளுக்கு சிவபெருமான் தனது யோக ஞானத்தை வழங்கியதாகச்சொல்லப்படுகிறது சப்தரிஷிகளம் அந்த யோக ஞானத்தை ஆசியாவின் பிற பகுதிகள் மத்தியக்கிழக்கு நாடுகள் வடக்கு ஆப்பிரிக்கா தென்அமெரிக்கா போன்ற பல்வேறு இடங்களில் பரப்பினர்
தற்கால ஆராய்ச்சியாளர்கள் அந்த பண்டைய பண்பாட்டிற்கு இணையான போக்குகளை உலகின் பல பகுதிகளிலும் தற்காலத்தில் கண்டறிந்துள்ளனர் எனினும் இந்தியாவில் தான் யோகப்பயிற்சி முறை தனது முழுப்பரிமாணமும் வெளிப்படுமாறு ஆழ வேரூன்றி உள்ளது சிவ பெருமானிடம் ஞான உபதேசம் பெற்ற சப்தரிஷிகளில் ஓருவரான அகத்தியர் பாரத கண்டத்தில் யோகப்பயிற்சியை ஒரு வாழ்க்கை முறையாகவே ஆக்கிவிட்டார் மனித குல நாகரிகம் தோன்றிய போதே யோகப்பயிற்சி முறைகளும் தோன்றிவிட்டதாக நம்பப்படுகிறது
கி.மு.2700ல் நிலவிய சிந்து சரஸ்வதி சமவெளி நாகரிகம் வழங்கிய அழிவில்லாத பண்பாட்டுக்கொடை என்று யோகப்பயிற்சியை போற்றுகின்றனர் லிங்க வடிவங்கள் தேவி உருவங்கள் போன்றவை தாந்த்ரீக யோக முறைக்குச் சான்றாக திகழ்கின்றன மேலும் வேத உபநிஷத மரபுகள் பௌத்த சமண மரபுகள் போன்றவற்றிலும் யோகப்பயிற்சிக்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன சைவ வைணவ நெறிகளிலும் யோகப்பயிற்சி பற்றி பல செய்திகள் இருக்கின்றன
மனதையும் உடலையும் ஓன்றினைக்கும் மிக நுட்பமான அறிவியல் கூறுகள் அடங்கிய ஆன்மிக அனுபமே யோகா எனப்படுகிறது ஆரோக்கிய வாழ்வுக்கலை என்றும் அறிவியல் என்றும் அதனைக்கூறலாம் யோகா என்ற சொல் சமஸ்கிருத மூலமான யுக் என்ற பதத்தில் இருந்து தோன்றியது இதற்குப்பொருள் இணை கட்டு ஒன்று சேர் என்பதாகும் யோகப்பயிற்சி செய்வதன் மூலம் தனி மனிதனின் உணர்வுகள் இந்த பிரபஞ்சத்தின் உணர்வோடு ஒன்றிணையைச்செய்யும் என்கின்றன
யோக சாஸ்திரங்கள் மனதிற்கும் உடலுக்கும் ஒன்றிணைப்பு உருவாகி அப்படியே மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே ஒத்திசைவு ஏற்படுத்துவதே யோகப்பயிற்சியாகும் மோட்சம் அல்லது கைவல்யம் என்ற வீடு பேற்றைப்பெறுவதற்கு சுயத்தை அறியும் வழியே யோகப்பயிற்சியின் நோக்கம் எனலாம் வேத காலம் தொட்டே யோகப்பயிற்சிகள் நடைமுறையில் இருந்தாலும் அவற்றை ஒழுங்குப்படுத்தி தொகுத்தவர் பதஞ்சலி மகரிஷி ஆவார் யோக சூத்திரங்கள் என்ற அவருடைய தொகுப்புக்கு பிறகு பல்வேறு யோகக்கலை நிபுணர்களும் யோகிகளும் தமது தொண்டுகளால் உலகம் முழுவதும் யோகக்கலையை பரப்பியுள்ளனர் பொதுவாகப்பலரும் பின்பற்றும் யோக பயிற்சிகள் யாமம். நியமம். ஆசனம். பிரணாயாமம். ப்ரத்யாஹாரம.; தாரணம். தியானம். சமாதி. பந்தங்கள். முத்திரைகள். ஷத்-கர்மாயுத்த-ஆஹாரம். யுத்தகர்மா. மந்திரஜபம். போன்றவையாகும்
யோகத்தத்துவங்கள் மரபுகள் குரு-சிஷ் பரம்பரைகளுக்கு ஏற்றவாறு ஞானயோகம் பக்தியோகம் கர்மயோகம் தியானயோகம் பதஞ்சலியோகம் குண்டலினியோகம் ஹாதாயோகம் மந்திரயோகம் லயயோகம் ராஜயோகம் ஜைனயோகம் புத்தயோகம் என்று பல வடிவங்கள் தோன்றிவிட்டன
யோகாவின் தாயகமான இந்தியாவில் வழங்கும் பல்வேறான சமூகப்பழக்கங்களும் சடங்குகளும் எல்லா உயிரினங்களிடமும் பரிவும் பிற சிந்தனைப்போக்குகளுடன் சகிப்புத்தன்மையும் கொண்டிருப்பதோடு சூழல் சமநிலையைப்பேணுவதில்; அக்கரையும் கொண்டுள்ளன எந்தவிதமான யோக சாதனைகள் ஆனாலும் அது அரத்தமுள்ள வாழ்வுக்காக அதுவே சர்வரோக நிவாரணியாகக் கருதப்படுகிறது இது போன்ற பல வரலாறுகளை கொண்டது யோகக்கலை ஆனால் உலகத்தில் இருப்பவர்களில் அதிகமானோர்க்கு இதன் பயன் தெரியாது என்றே கூறலாம்
இதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர்27ம் தேதி நடைபெற்ற ஜக்கிய நாடுகள் சபையின் 69வது கூட்டத்தில் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி ஜக்கிய நாடு சபையில் உலகத்தில் உள்ள அனைவரும் ஜீன் 21ம்தேதியை சர்வதேச யோகா தினமாக மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை முன்மொழிந்தார் அதன் அடிப்படையில் டிசம்பர் 11ம்தேதி 193நாட்டு உறுப்பினர்களைக்கொண்ட ஜக்கிய நாடு சபை இந்த முன் மொழிவிற்கு 177இணை ஆதரவு நாடுகளிடம் இருந்து பெறப்பட்ட ஓரு மித்தகருத்தின் அடிப்படையில் ஜீன்மாதம் 21ம்தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவிக்கை செய்யும் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்தது
ஜக்கிய நாடுகள் சபையி;ன் தீர்மானத்தில் யோகாவானது மக்கள் நல்வாழ்விற்கான முழுமையான அனுகு முறையாக விளங்குகிறது மேலும் யோகா பயிற்சி பெறுவதால் உருவாகும் நன்மைகளை பெறுவதற்கும் அடிப்படையான கருத்துகளை பரப்புவதற்கும் உரிய வழிகளை அளிக்கிறது சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களிடத்திலும் நல்லிணகத்தை ஏற்படுத்துகிறது நோய் வருமுன் தடுத்தல் பாதுகாத்தல் நல்வாழ்வு மேம்பாடு மற்றும் நவீன வாழ்க்கை முறை தொடர்பான நோய்களையும் குறைபாடுகளையும் போக்கும் மேலாண்மை முறையாகவும் விளங்குகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது நமது நாட்டின் ரிஷி முனிவர்களாலும் யோகாச்சாரியர்களாலும் மனித சமுதாயம் நலன்களும் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்திட இந்த யோகா முறையானது கண்டுப்பிடிக்கப்பட்டு முயற்சி செய்யப்படுவதை இன்று உலகமே ஏற்றுள்ளது தனி மனிதனுக்கும் சமூகத்திற்கும் நலன் பயப்பதே யோகப்பயிற்சியின் நோக்கம் என்பதால் எந்த நாடாக இருந்தாலும் சரி எந்த சமயமாக இருந்தாலும் சரி அனைவரும் எந்த வித பேதமும் இல்லாமல் யோகப்பயிற்சியை மேற்கொள்ளலாம்

உலக அகதி நாள் ( World Refugee Day ) ஜூன் 20உலக அகதி நாள் ( World Refugee Day ) ஜூன் 20 

உலக அகதி நாள் ( World Refugee Day ), ஆண்டுதோறும் ஜூன் 20 -ம் நாளன்று நினைவுகூரப்பட்டு வருகின்றது. 2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானமொன்றின்படி, அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, உலக அகதிகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆபிரிக்க அகதிகள் நாள் ஜூன் 20 இல் கொண்டாடப்படுவதால் இந்நாள் உலக அகதிகள் நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி அகதிகளாக தாம் வசிக்கும் நாட்டினுள், பிற நாடுகளிலென இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களுக்குள்ளாகி வாழ்ந்துவரும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கியமான நோக்கமாகும்.
அன்றைய நாள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் பல்வேறு போர்களால் அரசியல், சமூகச் சூழல்களால் அகதிகளாக அல்லலுறும் அகதிகளை நினைவு கூரும் வகையில் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள், இசை நிகழ்ச்சிகள், நினைவஞ்சலி நிகழ்வுகளெனப் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் (UNHCR) ஒவ்வோர் ஆண்டும் இந்நிகழ்வுகளுக்கான கருப்பொருளைத் தீர்மானிக்கிறது.


இந்த பூமி உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் சொந்தமனது என்றால் எங்கிருந்து வந்தது இந்த 'அகதிகள்' என்ற வார்த்தை.
அதிகார வர்க்கத்தின் அலட்சியங்களாலும், ஆனவத்தாலும் ஏற்படும் பிரச்சினைகளின்வி ளைவுகளே பல மக்கள் இன்று தாங்கள் பிறந்து வளர்ந்த, இடத்தைவிட்டு, மொழி தெரியாத, இனம் புரியாத தேசங்களை நோக்கி அகதிகளாக படையெடுக்கின்றனர்.
உலக அகதிகள் தினம் ஆண்டுதோறும் ஜூன் 20 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானமொன்றின்படி, அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, உலக அகதிகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆபிரிக்க அகதிகள் நாள் ஜூன் 20 இல் கொண்டாடப்படுவதால் இந்நாள் உலக அகதிகள் நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி அகதிகளாக தாம் வசிக்கும் நாட்டினுள், பிற நாடுகளிலென இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களுக்குள்ளாகி வாழ்ந்துவரும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கியமான நோக்கமாகும்.
அன்றைய நாள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் பல்வேறு போர்களால் அரசியல், சமூகச் சூழல்களால் அகதிகளாக அல்லலுறும் அகதிகளை நினைவு கூரும் வகையில் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள், இசை நிகழ்ச்சிகள், நினைவஞ்சலி நிகழ்வுகளெனப் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் (UNHCR) ஒவ்வோர் ஆண்டும் இந்நிகழ்வுகளுக்கான கருப்பொருளைத் தீர்மானிக்கிறது.
சகமனிதர்களை நேசிக்க தொடங்கிவிட்டால் இங்கு யாரும் அகதிகள் இல்லை.

19.6.1907 அன்று ‘ஒரு பைசாத் தமிழன்’ஒரு நிமிடக் கட்டுரை: ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது!

இந்திய இதழியல் வரலாற்றிலும், தமிழக அரசியல் வரலாற்றிலும் பண்டிதர் அயோத்தி தாசரின் ‘தமிழன்’ இதழுக்குத் தனித்த இடமுண்டு. இம்மண்ணுக்குப் பூர்வீக பவுத்தத்தையும், இம்மக்களுக்கு ‘தமிழன்’ எனும் அடையாளத்தையும், சாதிபேதமற்ற திராவிட அரசியல் கோட்பாட்டைக் கொடுத்ததில் ‘தமிழன்’ இதழுக்கு முக்கியப் பங்குண்டு.

சென்னை ராயப்பேட்டையில் 19.6.1907 அன்று ‘ஒரு பைசாத் தமிழன்’ எனும் வார இதழைத் தொடங்கினார் அயோத்தி தாசர். டேப்லாய்டு அளவில் 4 பக்கங்களில் அச்சான இவ்விதழ், அன்றைக்குக் காலணாவுக்கு விற்கப்பட்டது. ‘ஒடுக்கப்பட்டோரை ஒரு பைசாவுக்குப் பெறாதவர் என இளக்காரமாகப் பேசுவோர், ஒரு பைசாத் தமிழனை முழுமையாக அறிந்தால், ஒரு கோடி பொன் என்று பேசுவார்’ எனத் தன் இதழுக்குப் பெயர்க் காரணம் கொடுத்தார் அயோத்தி தாசர். ஓராண்டுக்குப் பின் வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க, இதழின் பெயரில் இருந்த ‘ஒரு பைசா’ நீக்கப்பட்டு, ‘தமிழன்’ ஆனது. இதழ் அச்சடிப்பதில் சிரமம் ஏற்பட்டதால், கோலார் தங்கவயல் வாசகர்கள் அயோத்தி தாசருக்குப் புதியதாக அச்சு இயந்திரம் வாங்கிக்கொடுத்தனர். இதையடுத்து, சொந்தமாக ‘கவுதம சித்தார்த்தா’ அச்சகத்தை நிறுவி, ‘தமிழ’னை இறுதிவரை புதன்கிழமை தவறாமல் வெளியிட்டார்.

பவுத்தத்தின் குறியீடான தாமரையை முகப்பாகக் கொண்ட ‘தமிழன்’ இதழில் நவீன அரசியல், ஆய்வுக் கட்டுரை, பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, பிராமணிய ஆதிக்க எதிர்ப்பு, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், முற்போக்கு, பவுத்தம் போன்றவை குறித்த தீவிர கருத்துகள் இடம்பெற்றன. இலக்கியம், அறிவியல், மருத்துவம், விவசாயம், வானியல் அறிக்கை, வாசகர் கேள்வி - பதில் உள்ளிட்டவையும் மூன்று பத்திகளில் நெருக்கமான எழுத்தில், நேர்த்தியான வடிவமைப்புடன் பிரசுரமாகின.


சமகால அரசியல் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிய அயோத்தி தாசர், ‘புத்தரது ஆதி வேதம், இந்திர தேச சரித்திரம், திருவள்ளுவர் சரித்திரம்’ உள்ளிட்ட தொடர்களையும் மரபான ஆய்வு முறையோடு ‘தமிழ’னில் எழுதினார். இதில் ஏ.பி.பெரியசாமிப் புலவர், தங்கவயல் ஜி.அப்பாதுரையார் போன்ற  பெரியார்களும், பேரா.லட்சுமி நரசு, எம்.சிங்காரவேலு என பல  அறிவுஜீவிகளும் தொடர்ந்து எழுதினர். இந்திய அளவில் ஒடுக்கப்பட்டோரிடம் இருந்து எழுந்த, முதல் காத்திரமான உரிமைக் குரல் தமிழனுடையது.

தமிழகம் மட்டுமல்லாமல் நாடு கடந்தும் ‘தமிழ’னுக்கு வாசகர்கள் பெருகினர். ‘தமிழன்’ மூலமாகவே அவர் அனைத்து பவுத்த சங்கங்களையும் ஒருங்கிணைத்து பவுத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்டார். ஒருவேளை ‘தமிழன்’ ஆங்கிலத்தில் முழங்கியிருந்தால், தேசிய அளவில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும்! 5.5.1914 அன்று அயோத்தி தாசர் மரணிக்கும் தறுவாயில் தன் மகன் பட்டாபிராமனை அழைத்து, ‘தமிழன்’ இதழைத் தொடர்ந்து நடத்துமாறு பணித்தார். பட்டாபிராமனின் ஆசிரியத்துவத்தில் வெளிவந்த ‘தமிழன்’ மாதமிரு முறையாக மாறி, இடையில் நின்றது. பின்னர், கோலார் தங்கவயலுக்கு இடம்பெயர்ந்த ‘தமிழன்’ இதழ் ஜி.அப்பாத்துரையார், இ.என்.அய்யாக்கண்ணு புலவர், பி.எம்.ராஜரத்தினம் ஆகியோரை ஆசிரியர் களாகக் கொண்டு சிறுசிறு இடை வேளைக்கு நடுவே வெளிவந்தது. 1933-ல் ‘தமிழன்’ முற்றிலுமாக நின்றுபோனது.

நூற்றாண்டை நெருங்கும் தறுவாயில் மீண்டும் கண்டெடுக்கப்பட்ட ‘தமிழன்’ தற்போது தொகுப்புகளாகப் புத்துயிர் பெற்றுள்ளது. எந்தெந்த நோக்கங்களுக்காக அயோத்தி தாசர் ‘தமிழன்’ இதழைத் தொடங்கினாரோ, அந்தந்த நோக்கங்களை அடைய இன்றும் வழிகாட்டுகிறது!

(ஜூன்.19-ல் ‘தமிழன்’ இதழ் தொடங்கப்பட்டு 110 ஆண்டுகள் ஆகின்றன.)
@ Tamil the Indu .


ஞாயிறு, 18 ஜூன், 2017


உவமைக் கவிஞர் சுரதா நினைவு தினம் - ஜூன் 19 , 2006 .

சுரதா ( நவம்பர் 23 , 1921 - ஜூன் 19 , 2006 ) தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை
சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.

வாழ்க்கைக் குறிப்பு
சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன்.
தஞ்சை மாவட்டம் பழையனூர் (சிக்கல்) என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் திருவேங்கடம்-சண்பகம் அம்மையார் ஆவர். பள்ளியிறுதி வகுப்புவரை பயின்றார். சீர்காழி அருணாசல தேசிகர் என்பவரிடம் தமிழ் இலக்கணங்களைக் கற்றார்.

பாரதிதாசனுடன் தொடர்பு
1941 சனவரி 14 இல் பாவேந்தர்
பாரதிதாசனை முதன்முதல் கண்டு பழகிய சுரதா அவருடன் சிலகாலம் தங்கியிருந்து அவரது கவிதைப் பணிக்குத் துணை நின்றுள்ளார். பாவேந்தர் பாடல்களைப் படியெடுத்தல், அச்சுப் பணிகளைக் கவனித்தல், பாவேந்தரின் நூல் வெளியீட்டிற்குத் துணை நிற்றல் எனப் பல நிலைகளில் பாவேந்தருடன் சுரதாவுக்குத் தொடர்பு இருந்துள்ளது.
கவிதை இயற்றல்
சுரதாவின் சொல்லடா என்னும் தலைப்பில் அமைந்த கவிதையைப் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த பொன்னி என்னும் இதழ் 1947 ஏப்பிரல் திங்கள் இதழில் வெளியிட்டு இவரைப் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராக அறிமுகம் செய்தது.
பாவேந்தரின் புரட்சிக்கவி நாடகம் தந்தை பெரியார் , கலைவாணர் முன்னிலையில் நடைபெற்ற பொழுது அந்த நாடகத்தில் அமைச்சர் வேடத்தில் நடித்த பெருமைக்கு உரியவர் சுரதா. அரசவைக் கவிஞராக நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை இருந்தபொழுது அவரின் உதவியாளராக இருந்தார்.
நாராயணன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த தலைவன் இதழின் துணை ஆசிரியராக பணியாற்றினார். அக்காலத்தில் பல சிறுகதைகளை எழுதினார். கவிஞர் திருலோகசீதாராமின் சிவாஜி இதழில் தொடக்கக் காலத்தில் சுரதாவின் கவிதைகள் வெளிவந்துள்ளன. திருச்சிராப்பள்ளி வானொலியில் சுரதாவின் பல கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன.
திரைப்படத் துறையில்
சுரதாவின் கலையுணர்வினைக் கண்ட கு.ச.கிருட்டிணமூர்த்தி என்பவர் இவரைத் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தினார். 1944 ஆம் ஆண்டு
மங்கையர்க்கரசி என்னும் திரைப்படத்திற்கு முதன்முதல் உரையாடல் எழுதினார். மிகக் குறைந்த அளவுக்கான பாடல்களையே அவர் எழுதியுள்ளார்.
சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் அவரது இரண்டு பாடல்கள், 'அமுதும் தேனும் எதற்கு, நீ அருகினில் இருக்கையிலே எனக்கு', மற்றும் 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா' ஆகியவை. 100 இற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார்.
எழுத்துப்பணி
சுரதாவின் முதல் நூல் சாவின் முத்தம் . இதனை வி.ஆர்.எம்.செட்டியார் என்பவர் 1946 மார்ச்சு மாதம் வெளியிட்டார். 1956 இல் பட்டத்தரசி என்ற சிறு காவிய நூலை வெளியிட்டார். 1954 இல் கலைஞர் கருணாநிதியின் முரசொலி இதழில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்தார்.
1955 இல் காவியம் என்ற வார இதழைத் தொடங்கினார். இவ்விதழைத் தொடர்ந்து இலக்கியம் (1958), ஊர்வலம் (1963), விண்மீன் (1964), சுரதா (1988) எனக் கவிதை வளர்ச்சிக்குப் பல இதழ்களை வெளியிட்டார்.
1971 ஆம் ஆண்டு ஆனந்தவிகடன் இதழில் சுரதா திரைப்பட நடிகைகளின் அகவாழ்க்கையைப் பற்றி எழுதிய கவிதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. பின்னாளில் இக்கவிதைகள் தொகுக்கப்பட்டு சுவரும் சுண்ணாம்பும் என்னும் பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளது (1974).
பாரதிதாசனின் தலைமாணாக்கராகக் கருதத்தகும் கவிஞர் சுரதா, பல நூல்களாக இருந்த பாவேந்தர் கவிதைகளை ஒரே தொகுப்பாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுத் திருவாசகன், கல்லாடன் பெயரில் அந்த நூல் வெளிவரக் காரணமானார். உலகின் அரிய செய்திகளைப் பட்டியலிட்டுக் காட்டும் சுரதா இல்லத்தில் அரிய நூல்கள் கொண்ட நூலகத்தை உருவாக்கினார்.
தமிழ், கவிதை, புகழ் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்ட புரவலர்கள், ஆர்வலர்கள் ஆகியோரை இணைத்துச் சில வினோதக் கவியரங்கங்களை நடத்துபவராக இருந்தார் சுரதா. படகுக் கவியரங்கம், கப்பல் கவியரங்கம், விமானக் கவியரங்கம் முதலியவை அவை. கவியரங்குகளைக் கொண்டாட்ட நிகழ்வாக மாற்றியதில் அவருக்கு மிகுந்த பங்குண்டு.
பாவேந்தர் தலைமையில் இயங்கிய தமிழ்க்கவிஞர் பெருமன்றத்திற்கு 1966 இல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார்.
பெற்ற சிறப்புகள்
1969 இல் தேன்மழை என்ற சுரதாவின் கவிதை நூலுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்தது.
1972 இல் தமிழக அரசு சுரதாவுக்குக் கலைமாமணி என்னும் விருது வழங்கிச் சிறப்பித்தது.
1978 இல் ம.கோ.இரா. தலைமையில் அமைந்த அரசு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கிச் சிறப்பித்தது.
தமிழக அரசு சுரதாவின் நூல்களை நாட்டுடைமையாக்கி அவர் குடும்பத்திற்குப் பத்து இலட்சம் உரூவா பரிவுத்தொகை வழங்கியுள்ளது(2007).
1982 இல் சுரதாவின் மணிவிழாவையொட்டி நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் நடந்த விழாவில் ரூபா அறுபதாயிரம் பரிசாகத் தரப்பெற்றது.
1982 இல் சுரதாவின் கவிதைப் பணிகளைப் பாராட்டிக் குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடந்த விழாவில் கவியரசர் பட்டம் வழங்கப்பட்டது.
1987 இல் மலேசியாவில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டிற்குச் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பெற்றார்.
1990 இல் கலைஞர் அரசு பாரதிதாசன் விருதினைச் சுரதாவுக்கு வழங்கியது.
1990 இல் கேரளாவில் மகாகவி குமரன் ஆசான் விருது சுரதாவுக்குக் கிடைத்தது.
சுரதாவின் தேன்மழை நூலுக்குத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ரூபா ஒரு இலட்சம் இராசராசன் விருது வழங்கப்பட்டுள்ளது.
29.09.2008 இல் சென்னையில் சுரதாவுக்கு நினைவுச்சிலை நிறுவப்பட்டு கலைஞர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப் பெற்றுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இச்சிலை அமைக்கப்பட்டது.
சுரதாவின் கவிதைகள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன. சுரதாவின் கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

மறைவு
இவர் தன்னுடைய 84ம் வயதில் 20.06.2006 அன்று சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார்.
குடும்ப உறுப்பினர்கள்
சுரதாவுக்குச் சுலோசனா என்ற மனைவியும், கல்லாடன் என்ற மகனும் உள்ளனர். இவரின் மருமகள் பெயர் இராசேசுவரி கல்லாடன். பெயரர்கள் இளங்கோவன், இளஞ்செழியன் என இருவர்.
சுரதாவின் படைப்புகள்
தேன்மழை (கவிதைத் தொகுப்பு, 1986)
துறைமுகம் (பாடல் தொகுப்பு, 1976)
சிரிப்பின் நிழல் (பாடல் தொகுப்பு)
சுவரும் சுண்ணாம்பும் (பாடல் தொகுப்பு, 1974)
அமுதும் தேனும் , 1983
பாரதிதாசன் பரம்பரை (தொ.ஆ), 1991
வினாக்களும் சுரதாவின் விடைகளும்
உதட்டில் உதடு
எச்சில் இரவு
எப்போதும் இருப்பவர்கள்
கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்
சாவின் முத்தம்
சிறந்த சொற்பொழிவுகள்
சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு)
சுவரும் சுண்ணாம்பும்
சொன்னார்கள்
தமிழ்ச் சொல்லாக்கம்
தொடாத வாலிபம்
நெஞ்சில் நிறுத்துங்கள்
பட்டத்தரசி
பாவேந்தரின் காளமேகம்
புகழ்மாலை
மங்கையர்க்கரசி
முன்னும் பின்னும்
வார்த்தை வாசல்
வெட்ட வெளிச்சம்.


கவியரங்குகளுக்கு புது வடிவம் கொடுத்த ‘உவமைக் கவிஞர்’ சுரதா (Suratha) நினைவு தினம் இன்று ஜூன்  19.). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l தஞ்சை மாவட்டம் பழையனூரில் (சிக்கல்) 1921-ல் பிறந்தார். இயற்பெயர் ராஜகோபாலன். பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்றார். சீர்காழி அருணாசல தேசிகரிடம் தமிழ் இலக்கணங்கள் கற்றார். பாவேந்தர் பாரதிதாசன் மீது மிகுந்த பற்று கொண்டவர்.
l பாவேந்தரின் இயற்பெயரான சுப்புரத்தினம் என்பதை அடிப்படையாகக் கொண்டு ‘சுப்புரத்தினதாசன்’ என்று தன் பெயரை மாற்றிக்கொண்டார். இதன் சுருக்கமான ‘சுரதா’ என்ற பெயரில் இலக்கியப் படைப்பாளியாக பரிணமித்தார்.
l செய்யுள் மரபு மாறாமல் உவமைகளுடன் கவிதை படைப்பதில் வல்லவர் என்பதால் ‘உவமைக் கவிஞர்’ என போற்றப்பட்டார். பாரதி தாசனை 1941 ஜனவரியில் சந்தித்தார். அவருடன் சில காலம் தங்கியிருந்து, அவரது கவிதைகளைப் படியெடுத்தல், அச்சுப் பணி, நூல் வெளியீடு போன்றவற்றில் உறுதுணையாக இருந்தார்.
l ‘மங்கையர்க்கரசி’ திரைப்படத்துக்கு 1944-ல் வசனம் எழுதினார். ‘அமுதும் தேனும் எதற்கு’, ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ என்பது போன்ற சாகாவரம் பெற்ற பாடல்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை எழுதியுள்ளார்.
l புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த ‘தலைவன்’ இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போது பல சிறுகதைகள் எழுதினார். ‘சிவாஜி’ இதழில் கவிதைகள் எழுதினார். இது பின்னர் கவிதைத் தொகுப்பாக வெளியிடப்பட்டது.
l முதல் நூலான ‘சாவின் முத்தம்’ 1946-ல் வெளிவந்தது. 1955-ல் ‘காவியம்’ என்ற வார இதழைத் தொடங்கினார். ‘இலக்கியம்’, ‘ஊர்வலம்’, ‘விண்மீன்’, ‘சுரதா’ என பல கவிதை இதழ்களை வெளியிட்டார். நடிகைகளின் வாழ்க்கையைப் படம்பிடித்துக்காட்டும் வகையில் ஆனந்த விகடன் இதழில் 1971-ல் வெளிவந்த இவரது கவிதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
l உலகத் தமிழ்க் கவிஞர் பேரவையைத் தொடங்கியவர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவியரங்குகளை தலைமையேற்று நடத்தியவர். வீட்டுக்கு வீடு கவியரங்கம், முழுநிலாக் கவியரங்கம், படகுக் கவியரங்கம், ஆற்றுக் கவியரங்கம், கப்பல் கவியரங்கம் என புதுமையான கவியரங்குகளை நடத்தி இளைஞர்களிடம் கவிதை ஆர்வத்தை ஏற்படுத்தினார்.
l யாரையும் பின்பற்றி எழுதுவதில் உடன்பாடு இல்லாதவர். இவரது கவிதைகள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன. பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மருதுபாண்டியர் உள்ளிட்ட வரலாற்று நாயகர்கள் குறித்த அரிய தகவல்களை புத்தக வடிவில் ஆவணப்படுத்தியுள்ளார். பல நூல்களாக இருந்த பாரதிதாசன் கவிதைகள் இவரது முயற்சியால் ஒரே தொகுப்பாக வெளியிடப்பட்டது.
l தமிழக அரசின் பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ராஜராஜன் விருது, மகாகவி குமரன் ஆசான் விருது உள்ளிட்ட பல விருதுகள், பரிசுகள் பெற்றவர். மலேசியாவில் 1987-ல் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.
l இவரது தமிழ்த் தொண்டை கவுரவித்து சென்னையில் இவருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது. முதன்முதலில் கவிதையிலேயே வார இதழ் நடத்திய பெருமைக்கு உரியவர். கவிதை படைப்பதை உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்த ‘உவமைக் கவிஞர்’ சுரதா 85-வது வயதில் (2006) மறைந்தார்.


‘ ‘ந டுவிரல்போல் தலைதூக்கு – நம்
நாட்டாரின் இன்னலைப் போக்கு!’’ - என தன்னுடைய முதல் கவிதையிலேயே முத்திரை வரிகளைப் பதித்தவர் உவமைக் கவிஞர் சுரதா. அவருடைய பிறந்த தினம் இன்று.
புதுப்புது உவமைகளைப் புகுத்தியவர்!
மகாகவி பாரதியாரின் மீது கொண்ட பற்றினால் பாரதிதாசன், தன் பெயரை மாற்றிக் கொண்டதைப்போல... ராஜகோபாலன் என்னும் தம் பெயரை, சுப்புரத்தின தாசன் என மாற்றிக் கொண்டார். இதன் சுருக்கம்தான்‘சுரதா’என மாறியது. சீர்காழி அருணாசல தேசிகரிடம் தமிழ் இலக்கணங்கள் கற்ற சுரதா, பாரதிதாசனிடம் சீடனாகச் சேர்ந்து அவருடைய எழுத்துப் பணிக்கு உதவினார்.

அந்தக் காலத்தில் அரசவைக் கவிஞராக விளங்கிய நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளையுடன் பல மாதங்கள் தங்கியிருந்து அவருடைய எழுத்துப் பணிக்கு உதவினார். இதன்மூலம் சிறந்த இலக்கியவாதியாய் தமிழ் உலகுக்கு அறிமுகமானார். யாரையும் பின்பற்றி எழுதுவதில் உடன்பாடு இல்லாதவர்; செய்யுள் மரபு மாறாமல் உவமைகளுடன் கவிதை படைப்பதில் வல்லவர்; மரபுக் கவிஞரான இவர், தம்முடைய பாடல்களில் புதுப்புது உவமைகளைப் புகுத்திப் புகழ் பெற்றார். இதன் காரணமாக சிறுகதை எழுத்தாளர் ஜெகசிற்பியால், ‘உவமைக் கவிஞர்’ எனப் பாராட்டப்பட்டார்.
புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த ‘தலைவன்’ இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். 1955-ல் ‘காவியம்’ என்ற வார இதழைத் தொடங்கினார். ‘இலக்கியம்’, ‘ஊர்வலம்’, ‘விண்மீன்’, ‘சுரதா’ என பல கவிதை இதழ்களை வெளியிட்டார். நடிகைகளின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் வகையில் ‘ஆனந்த விகடன்’ இதழில் 1971-ல் வெளிவந்த இவரது கவிதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. மருது பாண்டியர் உள்ளிட்ட வரலாற்று நாயகர்கள் குறித்த அரிய தகவல்களை புத்தக வடிவில் ஆவணப்படுத்தினார். பல நூல்களாக இருந்த பாரதிதாசன் கவிதைகளை ஒரே தொகுப்பாக மாற்றினார்.

உவமைகளைக் கற்பனையுடன் தந்தவர்!
இவர், மாநிறத்தை, ‘கறுப்பின் இளமை’ என்றார்; பல்லியை, ‘போலி உடும்பு’ என்றார்; அழுகையை, ‘கண் மீனின் பிரசவம்’ என்றார். நீர்க்குமிழிகளை, ‘நரைத்த நுரையின் முட்டை’ என்றார்; வெண்ணிலவைச் ‘சலவை நிலா’ என்றார். இப்படி அவருடைய கவிதைகள் அனைத்திலும் உவமைகள் வாரி இறைக்கப்பட்டிருக்கும். ‘நாணல்’ என்ற திரைப்படத்தில், ‘விண்ணுக்கு மேலாடை’ என்று தொடங்கும் பாடலில்... ‘மண்ணுக்கு மேலாடை மரத்தின் நிழல்’ என்று கதாநாயகன் பாடுவார். அதற்கு, ‘மண்ணுக்கு மேலாடை வண்ண மயில் இருட்டு’ என்று கதாநாயகி பதிலளிப்பார். காரணம், நிழலுக்கும்... இருட்டுக்கும் கவிஞர் இங்கே வேறுபாடு கண்டிருப்பதை நாம் காண முடிகிறது. ஆம், நிழல் என்பது இடம் மாறக் கூடியது. இருட்டு என்பது மண்ணில் நிரந்தரமாக தொடரக்கூடியது. இப்படி இடம் மாறக்கூடிய நிழல் எப்படி மண்ணின் மேலாடையாக இருக்க முடியும் என்பதே கவிஞர் சொல்லும் பதில் ஆகும். இதுபோன்ற உவமைகளைக் கற்பனையுடன் கலந்து தந்தவர் சுரதா என்றால் மிகையாகாது. இதே பாடலில், பதினொன்றைக்கூட... பத்துக்கான மேலாடை என்றே வர்ணிக்கிறார்.
வாழ்க்கையின் தத்துவம்!
‘நீர்க்குமிழி’ திரைப்படத்தில், ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ என்று ஆரம்பிக்கும் பாடலில்... வாழ்க்கையைப் பற்றி இப்படிச் சொல்லியிருப்பார்.
‘ பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்!’
ஒவ்வொரு கட்டுரைகளிலும் முகவுரையும், முடிவுரையும் இருப்பதுபோல... வாழ்க்கையிலும் இதுபோன்ற உவமைகளைப் புகுத்திப் பாடல்கள் எழுதியவர் சுரதா. அந்தப் பாடலின் இறுதியில்,
‘ வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை!’ என்று வாழ்க்கையின் தத்துவத்தை உணர்வுபூர்வமாக உணர்த்தியிருப்பார்.
உவமைகள் மூலம் தன்னுடைய கவிதைகளையும், பாடல்களையும் எழுதிய சுரதாவை... வாலிபக் கவிஞர் வாலி, ‘‘அவன் உரைக்காத உவமையில்லை... அவனுக்குத்தான் உவமையில்லை’’ என்று புகழ்ந்தார்.
‘ முதன்முதலில்’ சுரதா!
1942-ம் ஆண்டு சுய மரியாதை கருத்துகளைப் பரப்பும் வகையில் நாடகக்குழு ஒன்று இயங்கி வந்தது. இந்த நாடகக் குழுவினரால் பாரதிதாசன் இயற்றிய நாடகம் ஒன்று தமிழகம் எங்கும் நடத்தப்பட்டது. இதில், அமைச்சர் வேடத்தில் சுரதா நடித்தார். வாழ்க்கையில் நடிக்கத் தெரியாத அவர், நாடகத்தில் நடித்து அசத்தினாராம். ‘முதன்முதலில்’ என்னும் வார்த்தைக்குச் சொந்தக்காரராக விளங்குபவரும் உவமைக் கவிஞர் சுரதாதான். வீட்டுக்கு வீடு கவியரங்கம், முழுநிலா கவியரங்கம், படகு கவியரங்கம், ஆற்றுக் கவியரங்கம் என விதவிதமாக கவியரங்க நிகழ்ச்சிகளை முதன்முதலில் நடத்தி இளைஞர்களைக் கவிதை பக்கம் சாயவைத்தவர் சுரதா.
முதன்முதலில் கவிதைகளில் திரைப்படச் செய்திகளைத் தந்து இதழ் நடத்தியவரும், அதிக கவியரங்கங்களில் பங்கேற்ற கவிஞரும் இவரே. 1944-ல் ‘மங்கையர்க்கரசி’ என்னும் திரைப்படத்துக்கு உரையாடல் எழுதினார். இந்தத் திரைப்பட உரையாடல்தான், ஒரு திரைப்படத்தின் கதை, வசன நூலாக முதன்முதலில் வெளிவந்தது. இதன்மூலம், குறைந்த வயதில் ‘முதன்முதலில்’ திரைப்பட உரையாடலை எழுதியவர் என்ற பெருமையைப் பெற்றார். தமிழக அரசு, ‘முதன்முதலில்’ ஏற்படுத்திய பாவேந்தர் விருதைப் பெற்றவரும் சுரதாதான். 20-ம் நூற்றாண்டுக் கவிஞர்களில் முதன்முதலில் ராஜராஜன் விருதைப் பெற்றவரும் இவரே. ‘தேன்மழை’ நூலுக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. 1956-ல், ‘பட்டத்தரசி’ என்கிற சிறு காவியத்தை வெளியிட்டார். 16 பக்கங்கள் கொண்ட பரபரப்புக்குரிய அந்த நூலின் முன்னுரைக் கவிதையை ஒரு மணிநேரத்தில் எழுதி முடித்து சாதனை படைத்தார். ‘முரசொலி’ இதழில் அவர் எழுதிய கவிதைகள் எழுச்சியும், வேகமும் பெற்றன. இதன் பிறகு சுரதா பரம்பரை என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அவருக்கு ரசிகர்கள் அதிக அளவில் உருவாகினர்.
சுரதாவின் படைப்புகள்!
‘சாவின் முத்தம்’, ‘சுவரும் சுண்ணாம்பும்’, ‘துறைமுகம்’, ‘சிரிப்பின் நிழல்’, ‘அமுதும் தேனும்’, ‘உதட்டில் உதடு’, ‘எச்சில் இரவு’, ‘எப்போதும் இருப்பவர்கள்’, ‘தொடாத வாலிபம்’, ‘நெஞ்சில் நிறுத்துங்கள்’, ‘மங்கையர்க்கரசி’, ‘முன்னும் பின்னும்’, ‘வார்த்தை வாசல்’, ‘வெட்ட வெளிச்சம்’ ஆகியவை உவமைக் கவிஞர் சுரதாவின் படைப்புகளாகும். இவரது கவிதைகள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன.
கலைமாமணி, மகாகவி குமரன் ஆசான் உட்பட எண்ணற்ற விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்ற உவமைக் கவிஞர் சுரதா, தமிழறிஞர்கள் பிறந்த ஊர்தோறும் சென்று அங்குள்ள மண்ணை எடுத்து மண் கலயத்தில் சேர்த்து வந்தார். ‘‘அவற்றைத் திரட்டி என்ன செய்யப் போகிறேன் என்பது ஒரு கனவு’’ எனக் கூறி வந்தவர், அதனை நிறைவேற்றாமலேயே மறைந்துவிட்டார்.

இந்திய தேசிய காங்கிரஸ் ராகுல் காந்தி பிறந்த நாள் ஜூன் 19, 1970.இந்திய தேசிய காங்கிரஸ் ராகுல் காந்தி  பிறந்த நாள் ஜூன் 19, 1970.

ராகுல் காந்தி  ( 19 ஜூன் 1970 ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர், அமேதி தொகுதி பிரதிநிதி ஆவார். அவருடைய அரசியல் கட்சியின் பெயர்
இந்திய தேசிய காங்கிரஸ்  இவர் நேரு-காந்தி குடும்பத்தை சார்ந்தவர், இது இந்தியாவில் மிகுந்த பாரம்பரியம் மிக்க
அரசியல் குடும்பம் ஆகும்.காங்கிரஸ் கட்சி 2009-ம் ஆண்டு பாரளுமன்ற தேர்தலில் மிகபெரிய வெற்றியை பெற்றதற்காக ராகுல் காந்தி பரவலாக புகழப்பட்டார்.இவரின் உத்திகள் மிகவும் சுவாரசியமானது: அடித்தட்டு மக்களிடையே மிகவும் அன்னியோனியம், கிராம மக்களிடையே ஆழ்ந்த தொடர்பு, மற்றும் காங்கிரஸ் கட்சிக்குள் சிறந்த ஜனநாயக பண்பினை கொண்டுவர முயற்சித்து வருகிறார். [3] இவர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் அமரும் வாய்ப்பினை மறுத்துவிட்டு அடித்தளம் வரை கட்சியினை பலப்படுத்தும் பணியில் உள்ளார்.
ஆரம்ப வாழ்க்கை
இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரியான ராஜீவ் காந்திக்கும் , இத்தாலியில் பிறந்து தற்போதைய
காங்கிரஸின் தலைவராக இருக்கும்
சோனியா காந்திக்கும் மகனாக ராகுல் காந்தி புது டெல்லியில் பிறந்தார். அவருடைய பாட்டி முன்னாள் பிரதம மந்திரியான இந்திரா காந்தி ஆவார். அவருடைய சிறப்புமிக்க பாட்டனார்
இந்தியாவின் முதல் பிரதம மந்திரியான
ஜவஹர்லால் நேரு மற்றும் மிகவும் சிறப்புமிக்க முப்பாட்டனார் இந்தியாவின் சுதந்திர விடுதலை இயக்கத்தின் தனித்துவம் வாய்ந்த தலைவரான மோதிலால் நேரு ஆவார்.
இவர் டூன் பள்ளி சேர்ந்து பயிலுவதற்கு முன்னாள் நியூ டெல்லி மாடர்ன் பள்ளி சேர்ந்து பயின்றார். இவர் 1981-83 ஆம் ஆண்டுகளில் தன் தந்தையின் தாயகக் கல்வி நிலையத்தில் சேருவதற்கு முன்னால், பாதுகாப்பு கருதி வீட்டிலிருந்தே கல்வி பயின்றார்.  1994 ஆம் ஆண்டில் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் படிப்பை தொடர்ந்து அதே சமயம்
ரோல்லின்ஸ் காலேஜ் , ப்ளோரிடாவில் இளங்கலை பி.ஏ. பட்டம் பெற்றார். ] இவர் 1995 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் , ட்ரினிட்டி கல்லூரியில் வளர்நிலைக் கல்வியலில்
ஆய்வியல் நிறைஞர் (M.PHIL) பட்டம் பெற்றார்.

பணித்துறை

ஆரம்பகால வாழ்க்கை
ராகுல் காந்தி, பட்டபடிப்பு முடித்த பின்
மைக்கேல் போர்டேர்ஸ் நிர்வாக ஆலோசனை நிறுவனம் , மற்றும்
கண்காணிப்பு குழுமத்தில்  மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார்.இவர் தன்னை யார் என்று வெளிப்படுத்திக் கொள்ளாமல் பணிபுரிந்ததால் தான் இன்னாருடன் பணிபுரிகின்றோம் என்பதே சக பணியாளர்களுக்கு தெரியாமல் இருந்தது.இவரின் மூத்த கூட்டாளி ஒருவர் கூறுகையில் இவரின் பணி முத்திரை பதிக்கும் படியாக இருந்தது என்று கூறுகின்றார். பொறியியல் மற்றும் தொழில் நுட்பத்துறை குழுமத்தை நடத்துவதற்காக 2002 - இன் பிற்பகுதியில் மும்பைதிரும்பினார் .

அரசியல் வாழ்க்கை
2003-இல் இவர் தேசிய அரசியலுக்கு வரப்போவதாக ஊடகங்கள் பரவலாக செய்திகள் வெளியிட்டன. ஆனாலும் இவர் அதை உறுதிப்படுத்தவில்லை. ] இவர் தனது தாயாருடன் பொது நிகழ்ச்சிகளிலும் காங்கிரஸ் கட்சியின் கூட்டங்களிலும் கலந்து கொண்டார்.
பதினான்கு வருட இடைவேளைக்குப்பின் நல்லெண்ணப் பயணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியைக் காண இவரது சகோதரி பிரியங்கா காந்தியுடன்
பாகிஸ்தானுக்கு சென்று வந்தார்.
இவர் தன் தந்தையின் முன்னாள் தொகுதியும் தன் தாயின் அப்போதைய தொகுதியுமான அமேதிக்கு ஜனவரி 2004-இல் சென்றிருந்தபோது இவர் மற்றும் இவருடைய சகோதரியின் அரசியல் பிரவேசம் பற்றிய ஆருடங்கள் பலமாக வலம்வந்தன. அரசியல் பிரவேசம் பற்றிய தீர்மானமான முடிவை சொல்ல நிராகரித்து விட்டாலும் தான் அரசியலை வெறுக்கவில்லை என்று பதிலளித்தார். "தான் உண்மையாகவே எப்பொழுது அரசியலில் நுழைவது என்று இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், தான் எப்பொழுது வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்" என்றும் பதிலளித்தார்.
ராகுல்காந்தி அவர்கள் அரசியலில் தனது வருகையை மார்ச் 2004 ல்அறிவித்தார். இந்தியாவின் பாராளுமன்றத்தின் கீழ்சபையான லோக்சபாவிற்கு மே 2004 ல் நடைபெற்ற தேர்தலில், தனது தந்தையின் தொகுதியான உத்திரப்பிதேசத்தில் உள்ள
அமேதியில் தான் போட்டியிடப்போவதாக மார்ச் 2004 ல், அறிவித்தார். இவர் தந்தைக்கு முன்பே, அவரது சித்தப்பா
சஞ்சய் காந்தி விமானவிபத்தில் இறப்பதற்கு முன்பு வரை அமேதியின் பிரதிநிதியாக - இருந்தார். இவரது தாயாரும் ரேபரேலி தொகுதிக்கு மாறும் வரை அமேதி தொகுதியில் பதவியில் இருந்தார். அப்பொழுது காங்கிரஸ் கட்சி என்பது தொகுதி கொண்ட உத்திர பிரதேசத்தில் வெறும் பத்து பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்தது. இவரது சகோதரியான பிரியங்கா காந்தியின் அதிக வசீகரம் கூடுதலான வெற்றியை பெற்றுத்தரும் என்று எதிர்பார்த்த அரசியல் விமர்சகர்களுக்கு காங்கிரசின் இந்த நிலை பெரும் வியப்பை உண்டாக்கியது. கட்சி பிரமுகர்களிடம் ஊடகங்களுக்கு அளிப்பதற்கு தேவையான தன்விபர பட்டியல் இல்லை. இவ்வாறு அவரின் பிரவேசம் ஆச்சர்யப்படும் வகையில் இருந்தது. இந்தியாவின் தலைசிறந்த அரசியல் குடும்பத்தின் இளம் உறுப்பினர் என்ற முறையில் காங்கிரஸ் கட்சியின் அரசியல் எதிர்காலத்தை இந்தியாவின் இளய தலைமுறையில் ஒருவராக இருந்து சீரமைக்க முடியும் என்ற நம்பிக்கையை வெளிநாட்டு ஊடகங்களுக்கு இவர் அளித்த நேர்காணலால் அறியலாம். அதில் இந்தியாவின் ஒற்றுமைக்கு பாடுபடுவேன் என்றதோடு, அரசியல் பிளவுகளுக்கு கண்டனமும் தெரிவித்தார். மேலும் ஜாதி , மத பதற்றத்தை குறைக்க பாடுபடுவேன் என்றும் தெரிவித்தார். அவருடைய குடும்பத்தின் ஈடுபாடு அத்தொகுதியில் நீண்ட காலமாக இருப்பதை கண்ட அத்தொகுதி உள்ளூர்வாசிகள் அவர் வேட்பாளர் ஆனதும் வாழ்த்துக்களையும் சந்தோஷங்களையும் தெரிவித்தனர்.

இந்திய தேசிய காங்கிரஸின் அரசியல் பிரமுகர்.

ராகுல் தன் குடும்பத்தின் திடமான ஆதரவுடன் பெரும்பான்மை வாக்குகளை பெற்று யாருமே எதிர்பாராத வகையில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்
பாரதிய ஜனதா கட்சியை முறியடித்தார். அவருடைய தேர்தல் பிரச்சாரம் அவரது சகோதரி பிரியங்கா காந்தி வாத்ஸராவின் மேற்கோள்படி வழி நடத்தப்பட்டது. 2006 வரையிலும் அவர் வேறு எந்த துறையிலும் கவனம் செலுத்தாமல் தனது தொகுதி பிரச்சினைகளிலும், உத்திர பிரதேச அரசியலிலும் மட்டுமே கவனம் செலுத்தினர். மேலும் இதனால் இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்கள் சோனியா காந்தி இவரை வருங்காலத்தில் தேசிய காங்கிரஸ் தலைவராக மாற்ற தயார் படுத்தி வருவதாக ஊகங்களை தெரிவித்தனர்.
ஜனவரி 2006 இல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் ஹைதராபாத் மாநாட்டில் ராகுல் காந்தி அவர்கள் கட்சியின் முக்கிய பொறுப்பேற்று நடத்திட வேண்டும் எனவும் மற்றும் பிரதிநிதிகளை அறிமுகம் செய்யுங்கள் எனவும் ஆயிரக்கணக்கான கட்சி உறுப்பினர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டார். அதன் பின் பேசிய அவர் "உங்களின் உணர்வுகளுக்கும், ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் உங்களை கைவிட்டு விடப்போவதில்லை என்று உறுதி கூறுகின்றேன்". ஆனால் உடனடியாக கட்சியின் உயர் பதவியை ஏற்றுக்கொள்ளவதை மறுத்துவிட்டு அனைவரையும் அமைதிகாக்கும் படி கேட்டுக்கொண்டார்.
2006 ல் ரேய்பரேலி தொகுதியில் நடைபெற்ற மறுதேர்தலில் இவரது தயார் போட்டியிட்டபோது, ராகுல் காந்தியும் அவரது சகோதரியும் தங்களது தாயாருக்காக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இதன் விளைவாக இத் தேர்தலில் தங்களது தாயார் நான்கு லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் மிக எளிதாக வென்றார்.
2007 ல் உத்திரபிரதேச சட்ட சபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரசின் உச்சகட்ட தேர்தல் பிரச்சாரத்தில் மிகப்புகழ் வாய்ந்த ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். இருப்பினும் காங்கிரஸ் கட்சி 8.53% வாக்குகளைப்பெற்று வெறும் 22 இடங்களில் மட்டுமே வென்றது. இத்தேர்தலில், தாழ்த்தப்பட்ட இந்திய மக்களின் பிரதிநிதிக் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி முதல் முறையாக தனிப்பெரும்பான்மை பெற்று பதினாறு ஆண்டுகளுக்கு பின் ஆட்சியமைத்தது.

24 செப்டம்பர் 2007 ல் காங்கிரஸ் கட்சியின் செயல் அலுவலகத்தில் நடந்த கட்சியின் மறுசீரமைப்பில் ராகுல் காந்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளராக நியமிக்கப்பட்டார். இச் சீரமைப்பிலேயே இவர் இளைஞர் காங்கிரஸ் அமைப்புக்கும்,
இந்திய தேசிய மாணவர் அமைப்பிற்கும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
இவர் இளைய தலைவராக தன்னை நிரூபித்துக்கொள்ளும் முயற்சியாக நவம்பர் 2008 ல், டெல்லியில் உள்ள அவரது இல்லமான 12, துக்ளக் லேன் ல் நேர்காணல் நடத்தி குறைந்த பட்சம் 40 நபர்களை தேர்வுசெய்து இந்திய இளைஞர் காங்கிரசை வழிநடத்தும் ஆலோசகர்களாக நியமித்தார். இவர் 2007 இந்திய காங்கிரஸின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றது முதல் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.
2009 ஆம் தேர்தல்
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட நபரை 3,33,000 க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வென்று மீண்டும் அமேதி தொகுதியிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்டார்.இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி உத்திர பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 21 தொகுதிகளை கைப்பற்றியது. இந்த வெற்றிக்கு முழுமையான காரணம் ராகுல் காந்தியே ஆவார்.  இவர் ஆறு வாரங்களில் 125 பிரச்சார பொது கூடங்களில் பங்கேற்று பேசினார்
இவருடைய கட்சி வட்டாரத்தில் இவர் ஆர் ஜி என அறியப்படுகிறார்.

தனிப்பட்ட வாழ்க்கை
2004 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கட்டிட கலை நிபுணரான வெரோனிக்கா என்ற பெண்ணுடன் டேட்டிங் சென்றார் என்று குற்றம்சாட்டப்பட்டார். அவர்கள் இருவரும் பல்கலை கழகத்தில் படிக்கும்போது சந்தித்து கொண்டனர்.

விமர்சனம்
2006 ஆம் ஆண்டு இறுதியில் நியூஸ் வீக் என்ற பத்திரிக்கை இவர் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்தது. இவர் ஹார்வர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் பட்டபடிப்பை முடிக்கவில்லை என்று
பார்வையாளர் குழு கூறியது. ராகுல் காந்தியின் சட்ட ரீதியான அறிக்கைக்கு பின்னர் நியூஸ் வீக் தனது முந்தைய குற்றச்சாட்டை மறுத்து கருத்து வெளியிட்டது.
1971 இல் பாகிஸ்தானை இரண்டாக பிரித்ததை தனது குடும்பத்தின் சாதனையாக கூறினார். இவர் கூறிய இந்த கருத்து இந்திய அரசியல் பிரமுகர்களிடம் மட்டுமல்லாது பாகிஸ்தானின் ஒரு சில முக்கியமான மக்களாலும் அந்நாட்டு வெளியுறவு தொடர்பு அதிகாரியாலும் விமர்சனத்திற்கு உள்ளானது.மிக பிரபலமான வரலாற்று அறிஞர் இர்பான் ஹபிப் அவர்கள் இந்த கருத்து பங்களாதேஷ் புரட்சியை அவமதிப்பதாக உள்ளது என்று கூறினார்.

2007-இல் உத்திரப்பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய இவர் "காந்தி-நேரு குடும்பத்தில் இருந்து யாரேனும் ஒருவர் அரசியலில் இருந்திருந்தால் பாபர் மசூதி இடிக்கப்பட்டிருக்காது" என்று கூறினார். இக்கருத்து 1992 - ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அப்போதைய பிரதமராக இருந்த திரு. பி.வி.நரசிம்மராவ் அவர்களை தாக்கி பேசியதாகவே கருதப்பட்டது. ராகுலின் இந்த அறிக்கை பி.ஜே.பி.-இன் சில உறுப்பினர்களுடன் கடும் வாக்குவாதத்தை உண்டு பண்ணியது. சமாஜ்வாடி கட்சியும் இடது சாரிகளும் கூட இவரது கருத்தை "இந்து-முஸ்லிம்களுக்கு எதிரானது" என்றனர். இவர் சுதந்திரப்போரட்டவீரர்கள் மற்றும்
காந்தி-நேரு குடும்பத்தைப்பற்றி கூறிய கருத்துக்களுக்கு எதிராக பி.ஜே.பி.-இன் தலைவரான திரு.வெங்கையா நாயுடு அவர்கள் "அவசரநிலை பிரகடனத்திற்காக காந்தியின் குடும்பம் பொறுப்பு ஏற்றுக்கொள்ளுமா" என்ற கேள்வியை எழுப்பி விமர்சித்தார்.

2008 - ன் பிற்பகுதியில் ராகுல் காந்திக்கு ஏற்படுத்தப்பட்ட அவமதிப்பின் பலனாக அவருக்கு இருந்த செல்வாக்கு வெளிப்பட்டது. காந்தி மாணவர்களிடையே உரையாற்றுவதற்காக
சந்திர சேகர் ஆசாத் விவசாய பல்கலைகழக மண்டபத்தை பயன் படுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. அரசியல் காரணங்களின் விளைவாக முதல் அமைச்சர் செல்வி. மாயாவதி அவர்களால் இது தடை செய்யப்பட்டது ] .இதைத் தொடர்ந்து அப் பல்கலைக்கழக துணை வேந்தர் திரு.வி.கே.சூரி அவர்கள், அம்மாநில கவர்னரும், அப் பல்கலைக் கழக வேந்தரும், காந்தி குடும்பத்தின் ஆதரவாளரும், திரு.சூரி அவர்களை நியமித்தவருமான
திரு.டி.வி.ராஜேஸ்வர் அவர்களால் பதவி நீக்கம் செய்யப்பட்டார் .இந்நிகழ்ச்சி கல்வி, அரசியல் மயமாக்கப்பட்டுள்ளதற்கான எடுத்துக்காட்டாக அமைந்ததைத் தொடர்ந்து, டைம்ஸ் ஆப் இந்தியாவில் "அரச குடும்ப சம்பந்தமான கேள்விகளுக்கு ராகுல் காந்தியின் அடிவருடிகளால் பதிலளிக்கப்பட்டுள்ளன" என்று அஜித் நினன் என்பவர் கேலிச்சித்திரம் வரைந்திருந்தார்.
தூய ஸ்டீபன் கல்லூரியில்இவருக்கு இருந்த துப்பாக்கி சுடும் திறமையை அடிப்படையாகக் கொண்டு அக் கல்லூரியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இது சர்ச்சைக்குரிய விஷயமானது.  ஒரு வருடம் கல்வி கற்ற பின் 1990 ல் அக்கல்லூரியிலிருந்து வெளியேறினார்.
தூய. ஸ்டீபன் கல்லூரியில் தான் தங்கியிருந்த ஒரு வருட கால அனுபவத்தை பற்றி கூறுகையில் அங்கு கேள்வி கேட்கும் மாணவர்களை "ஏற-இறங்க" பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களை கண்டிப்புடன் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள், என்று கூறினார். தூய. ஸ்டீபன் கல்லூரியில் தான் படித்த நாட்களை நினைவு கூறுகையில், வகுப்பறையில் கேள்வி கேட்பது என்பது நல்ல விஷயமாக இருந்ததில்லை என்றும், நீங்கள் நிறைய கேள்வி கேட்டீர்களானால் உங்களை ஏற இறங்க பார்ப்பார்கள், என்றும் கூறினார். இவரின் கருத்தைப்பற்றி அக்கல்லூரியின் ஆசிரியர்கள் கூறும்போது, "அவரின் சொந்த அனுபவத்தை பொறுத்து" அவர் கூறிய கருத்துக்கள் சரியானவையே என்றும் தூய.ஸ்டீபன் கல்லூரியின் பொதுமையாக்கப்பட்ட கல்வி சூழ்நிலைக்கானது அல்ல என்றனர். [36]
ஜனவரி 2009 இல் பிரிட்டிஷ் நாட்டின் அயல் நாட்டு செயலாளர் டேவிட் மிலிபான்ட் அவர்களுடன், உத்திரப்பிரதேசத்தில் இருக்கும் தன்னுடைய பாராளுமன்ற தொகுதியான அமேதிக்கு அருகாமையில் ஒரு கிராமத்தில் காந்தி மேற்கொண்ட எளிய சுற்றுலாவிற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அடுத்ததாக திரு.மிலிபான்ட் அவர்களின் தேவையற்ற ஆலோசனைகளும், தீவிரவாதம் மற்றும் பாகிஸ்தான் பற்றிய கருத்துக்களும், திரு.முகர்ஜி மற்றும் பிரதம மந்திரி மன்மோகன் சிங் அவர்களுடன் நடத்திய ரகசிய சந்திப்பு முறைகளும்,பின்னடைவாகக் கருதப்பட்டத