வியாழன், 30 நவம்பர், 2017

உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 01.உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 01.

உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நாள்
எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988 இல் நடைப்பெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.
1981-ஆம் ஆண்டிலிருந்து 2007-ஆம் ஆண்டு வரை எய்ட்ஸ் நோயால் இறந்தவரின் எண்ணிக்கை 250 லகரங்களுக்கு மேல். மற்றும் 2007-ஆம் ஆண்டு வரை 332 லகரம் மக்கள் இந்நோயுடன் வாழ்ந்து வருகின்றனர்.இதனால் இந்நோய் வரலாற்றிலேயே மிக கொடூரமான தொற்றுநோயாக கருதபடுகிறது. சமீபத்திய சிகிச்சை முறைகளின் முன்னேற்றம் மற்றும் கண்காணிப்பின் கீழ் இருந்தும், எய்ட்ஸ் நோயால் உலகெங்கிலும் 2007-ஆம் ஆண்டில் 20 லகரம் உயிரிழப்பு ஏற்பட்டது  ,இதில் 270,000 குழந்தைகள்.

வரலாறு

சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் அமைந்துள்ள உலக சுகாதார அமைப்பில் எயட்சிர்க்கான உலகளாவிய நிகழ்ச்சியின் பொது தகவல் அதிகாரிகளான ஜேம்ஸ் பன்ஸ் மற்றும் தாமஸ் நெட்டேர் எனும் இருவரால் 1987-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்டதே உலக எய்ட்ஸ் தினம். . தங்கள் யோசனையை எயட்சிர்கான உலகளாவிய நிகழ்ச்சியின் இயக்குனர் முனைவர் ஜோனதன் மன்னிடம் கொண்டு சென்றனர் இருவரும். முனைவர்.மன்னுக்கு இது பிடித்து போகவே,அவர் இதை அங்கீகரித்து , 1988-ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் நாளை உலக எய்ட்ஸ் தினமாக கடைபிடிக்க பரிந்துரை செய்தார்.
டிசம்பர் முதலாம் நாளை அத்தினமாக கடைபிடிக்க பன் தான் யோசனை வழங்கினர்,ஏனெனில் அப்பொழுது தான் மேற்க்கத்திய செய்தி நிறுவனங்களின் கவனம் அவ்வருடம் (1988) நடைபெறும் தேர்தலை முழுமையாக ஒலிபரப்பு செய்து ஓய்ந்திருக்கும்.ஆதலால்,புது செய்திக்காக காத்திருக்கும் அமெரிக்க செய்தி நிறுவனங்களை கொண்டு இந்நாளை உலகம் முழுதும் கடைபிடிக்க அணுகவது செரியானது என்று தீர்மானித்தார்கள்.மேலும், டிசம்பர் ஒன்று என்பது தேர்தல் முடிந்து சில நாட்களுக்கு பின்னும், கிறிஸ்த்துமஸ் விடுமுறை தொடங்க சில நாட்களுக்கு முன்னும் வருவதால், அதுவே உலக நாள்காட்டியில் சரியான நாளாக அமையும் என்று பன்ஸ் மற்றும் நெட்டேர் உணர்ந்தார்கள்.
எச். ஐ. வி/எய்ட்ஸ்க்காக கூட்டு ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சி 1996-ஆம் ஆண்டு செயல்பாட்டிற்கு வந்தது, மேலும் இதுவே உலக எய்ட்ஸ் தினத்திற்கான திட்டம் மற்றும் ஊக்குவிப்பை செய்தது .
ஒரே நாளில் செய்வதற்கு பதிலாக1997-ஆம் ஆண்டு இந்நிகழ்ச்சி உலக எய்ட்ஸ் பிரச்சாரத்தை உருவாக்கி,அதன் மூலமாக வருடம் முழுவதும் செய்திப்பரிமாற்றம்,தடுப்பு மற்றும் கல்வி வழங்கின .
முதல் இரண்டு வருடங்களில்,எய்ட்ஸ் தினத்திற்கான கருப்பொருள் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரையே சுற்றி இருந்தது. எய்ட்சால் அவதியூருபவர்கள் மற்றும் ஹெட்ச்.ஐ.வியால் பாதிக்கப்படுபவர்கள் எல்லா வயதினருமே என்பதனால் இந்த கருப்பொருள்கள் பின்பு கடினமாக எதிர்க்கப்பட்டன.
2004-ஆம் ஆண்டு உலக எய்ட்ஸ் பிரச்சாரம் ஒரு சுதந்திர சங்கமாக மாறியது.
ஒவ்வொரு வருடமும், போப்பரசர்கள்
இரண்டாம் ஜான் பால் மற்றும் பதினாறாம் பெனெடிக்ட் உலக எய்ட்ஸ் தினத்தன்று நோயாளிகள் மற்றும் மருத்துவர்களுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிடுவார்கள்.

நோக்கம்

எயிட்சு மேலும் பரவாமல் தடுக்கவும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை குறைக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிவு காட்டவும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்ப்படுத்துவது தான் உலகளாவிய இந்த தினத்தின் நோக்கமாகும். எயிட்சு பாதிப்புக்கு உள்ளானவர்களின் உணர்வுகளை மதிக்கவும் அவர்களின் உரிமைகளை மதிக்கவும் மக்களை பழக்குவதும் இதன் முக்கிய குறிக்கோளாகும். 'கல்வி மற்றும் விழிப்புணர்வு' மட்டுமே எயிட்சு தடுப்பிற்க்கான சிறந்த மற்றும் சரியான சமூக மருந்து என்பதை உணர்ந்து விழாக்கள், நாடகங்கள், நாட்டியங்கள் ஆகியவற்றில் எயிட்சு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு அம்சங்களை இடம் பெற செய்து மக்களுக்கு விழிப்புணர்வு கருத்துகளை பரப்ப செய்வதே இந்நாளின் நோக்கமாகும்.
எச் ஐ வி பாதிப்பின் விவரங்கள்
எச் ஐ வி பாதிப்புக்குள்ளான மக்களை அதிகம் கொண்டுள்ள இரண்டாவது நாடு இந்தியா ஆகும். 35 % எயிட்சு நோயாளிகள் 15 முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்களே. 86 % பாதுகாப்பு அற்ற உடலுறவின் மூலமாகவும், 4 % எச் ஐ வி தொற்று உள்ள கர்ப்பிணிகளின் மூலமாகவும், 2 % சரியாக சுத்தம் செய்யப்படாத ஊசிகளை பயன்படுத்துவதின் மூலமும், 2 % பரிசோதனை செய்யப்படாத ரத்தத்தின் வழியாகவும், மீதி 6 % பிற காரணங்களாலும் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. (NACO 2004).
இந்தியாவில் எயிட்சு தடுப்பு முயற்சிகள்
எயிட்சு-ஐ வெற்றிகொள்ள யுவா என்னும் இளைஞர் தேசிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. யுவா என்பது 'Youth Unite for Victory on Aids என்பதன் சுருக்கமாகும். அதாவது எயிட்சு-ஐ வெல்ல ஒன்றுபட்ட இளைய பாரதம் . இத்திட்டம் 27.06.2006 -இல் குடியரசு துணைத் தலைவரால் தொடங்கப்பட்டது.
நாட்டு நலப்பணித் திட்டம் , தேசிய மாணவர் படை,நேரு யுவ கேந்த்ரா ,சாரணர் இயக்கம்,இளைஞர் செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட 7 தேசிய இளைஞர் அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன. மொத்தமாக 21 மில்லியன் தனார்வ தொண்டர்கள் சேவை புரிகின்றனர்.
தமிழ்நாட்டில் எயிட்சு தடுப்பு முயற்சிகள்
2005 -06 ம் கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் தமிழ்நாடு மாநில எயிட்சு கட்டுப்பாட்டு சங்கத்தின் நிதி ஆதரவில் ரெட் ரிப்பன் கிளப் தொடங்கப்பட்டு உள்ளது.
கருப்பொருட்களை தேர்ந்தெடுத்தல்
30 நவம்பர் 2007 அன்று உலக எய்ட்ஸ் தினத்திற்காக
வெள்ளை மாளிகையின் வடக்கு வாசலின் தூண்களுக்கு இடையே தொங்கவிடப்பட்டுள்ள பெரிய சிகப்பு நாடா
2005-ஆம் ஆண்டு உலக எய்ட்ஸ் தினத்திற்காக விழிப்புணர்ச்சி பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக அர்ஜெண்டினாவின்
புவெனஸ் ஐரிஸ் நகரில் வைக்கப்பட்டுள்ள 67 மீட்டர் உயரமுள்ள
ஆணுறை
1988- 2004 வரையான எய்ட்ஸ் நாள் யுஎன்எய்ட்ஸ் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. 2005 முதல் இப்பொறுப்பு "உலக எய்ட்ஸ் பிரச்சாரம்" ( உலக எய்ட்ஸ் பிரச்சாரம் ) என்ற அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உலக எய்ட்ஸ் நாள் கருப்பொருள் 1988 - 2015

1988 தொடர்பாடல்
1989 இளைஞர்
1990 எய்ட்சும் பெண்களும்
1991 சவாலை பகிர்ந்து கொள்ளல்
1992 சமூகத்தின் ஈடுபாடு
1993 செயலாற்றுதல்
1994 எய்ட்சும் குடும்பமும்
1995 உரிமைகளையும் பொறுப்புகளையும் பகிர்ந்து கொள்ளல்
1996 ஒரு உலகம் ஒரு நம்பிக்கை
1997 எய்ட்சுடன் வாழும் குழந்தைகள்
1998 மாற்றத்துக்கான சக்தி: இளம் வயதினருடன் உலக எய்ட்ஸ் பிரச்சாரம்.
1999 செவிகொடு, கற்றுக்கொள், வாழ்: குழந்தைகள் மற்றும் இளம் வயதினருடன் உலக எய்ட்ஸ் பிரச்சாரம்.
2000 எய்ட்ஸ்: மாற்றம் செய்யும் மனிதர்
2001 நான் கவனிக்கிறேன்.நீங்கள்?
2002 வடு மற்றும் பாகுப்பாடு
2003 வடு மற்றும் பாகுப்பாடு
2004 பெண்கள், எச்.ஐ.வி., எய்ட்ஸ்
2005 எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று
2006 எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று- Accountability
2007 எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று
2008 எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று
2009 எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று
2010 எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று
2011 பூஜ்யத்தை அடைவோம் : எச்.ஐ.வி பாதிப்பு பூஜ்யமாக இருக்கட்டும்
2012 ஒன்றாய் இணைந்து எய்ட்ஸை ஒழிப்போம்
2013 பூஜ்ஜிய பாகுபாடு
2014 இடைவெளியை குறைப்போம்
2015 விரைவான வழியில் எய்ட்ஸ்க்கு முடிவளிப்போம்.


டிசம்பர் - 1 உலக எய்ட்ஸ் தினம் - எச்சரிக்கை
2015-ம் ஆண்டுக்குள் ஹெச்.ஐ.வி தொற்றை அறவே அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. எய்ட்ஸ் நோய் தாக்கியவர்கள் அனைவருக்கும் ஏ.ஆர்.டி தெரப்பி சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதை மையக் கருத்தாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
உலக அளவில் 3.5 கோடி மக்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1.17 கோடி பேர் மட்டுமே எய்ட்ஸ் நோயைக் கட்டுக்குள் வைக்கும் ‘ஏ.ஆர்.டி தெரப்பி’ சிகிச்சையை எடுக்கின்றனர். மற்றவர்களின் நிலை கவலைக்கிடம்தான்.

ஹெச்.ஐ.வி தாக்கிய ஒருவரின் உடலில் ஒரு துளி ரத்தத்தில் 250-க்கும் கீழ் வெள்ளை அணுக்கள் இருந்தால், அவர் கண்டிப்பாக ஏ.ஆர்.டி தெரப்பியை எடுக்க வேண்டும். தினமும் இரண்டு வேளை, இந்த ஆன்ட்டி ரெட்ரோவைரல் மருந்தை 12 மணி நேர இடைவேளையில் எடுக்க வேண்டும். ஒரு நாள்கூட மருந்தை நிறுத்தக் கூடாது. எய்ட்ஸ் நோயைக் கட்டுக்குள் வைப்பதற்கு மட்டுமே மருந்துகள் இருக்கின்றன. குணப்படுத்த முடியாது.
பாதுகாப்பற்ற உடலுறவின் மூலமாகவே 90 சதவிகிதத்தினரை ஹெச்.ஐ.வி வைரஸ் தாக்குகிறது. எய்ட்ஸ் நோய் பாதித்தவர்களை தொடுவதாலோ அவர்களது எச்சில், வியர்வை மூலமாகவோ மற்றொருவருக்குப் பரவாது. எய்ட்ஸ் நோயாளியின் ரத்தத்தை செலுத்தும்போதும், ஊசிமருந்து செலுத்துவதன் மூலமும் எய்ட்ஸ் பரவும்.
ஒருவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறாரா, இல்லையா என்பதை அறிய `எலிசா' பரிசோதனை செய்ய வேண்டும். எய்ட்ஸ் பரிசோதனை முடிவை அறிந்துகொள்ள நாட்கணக்கில் காத்திருக்கத் தேவை இல்லை. 15 நிமிடங்களில் முடிவைத் தெரிந்துகொள்ளலாம்.
திருமணம் செய்துகொள்ளும் ஆண், பெண் இருவரும் கட்டாயம் ஹெச்.ஐ.வி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கருவுற்ற பெண்களுக்கு, மருத்துவமனையிலேயே எய்ட்ஸ் பரிசோதனை செய்யப்படுகிறது. கருவுற்ற பெண்களுக்கு எய்ட்ஸ் இருந்தால் குழந்தைக்கு அந்த நோய் பரவாமல் தடுத்துவிட முடியும்.
உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி, உலக அளவில் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் வசிக்கும் மூன்றாவது நாடாக இந்தியா இருக்கிறது. இந்தியாவில் மட்டும் 24 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதில் தமிழ்நாட்டில் மட்டும் 1.5 லட்சம் பேர் உள்ளனர்.
எய்ட்ஸ் நோய் வந்தவர்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். உடலில் வரும் சிறு ரத்தக் காயம்கூட மிகப் பெரிய விளைவை ஏற்படுத்தும். உடலில் வரும் புண்கள் விரைவில் ஆறாது. காலணிகள் அணியாமல் வெளியே செல்லக் கூடாது.வினையாக முடியும் "விளையாட்டு' : -உலக எய்ட்ஸ் தினம்

எய்ட்ஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவுக் கரம் நீட்டவும், டிச.,1ம் தேதி உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2011 - 2015 வரை "கெட்டிங் டூ ஜூரோ' (எய்ட்ஸ் இல்லாத) என்பது மையக்கருத்து. எச்.ஐ.வி., வைரசால் எய்ட்ஸ் ஏற்படுகிறது. இது மனித செல்களில் பரவி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்கி, உடலை போராட முடியாத நிலையை ஏற்படுத்துகிறது.
எப்படி பரவுகிறது:
பாதுகாப்பற்ற உறவு, எச்.ஐ.வி., உள்ள தாய் மூலம் குழந்தைக்கு, பரிசோதிக்கப்படாத ரத்தம், சுத்திகரிக்கப்படாத ஊசி ஆகிய காரணங்களால் மட்டுமே எச்.ஐ.வி., தாக்குகிறது. இதைத்தவிர அவர்களின் பொருட்களை பயன்படுத்துவது, அவர்களை தொடுவது, அவர்களுடன் உணவுகளை பகிர்ந்துகொள்வது ஆகியவற்றால் எச்.ஐ.வி., பரவாது.
என்ன சிகிச்சை:
எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிப்பதில், ஆராய்ச்சியாளர்கள் இன்னமும் தீவிரமாக உள்ளனர். தற்போது, வைரசின் வீரியத்தை குறைக்கும் மருந்து மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எய்ட்சை முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும், நீண்ட நாட்கள் வாழ சிகிச்சை முறைகள் உள்ளன.
எத்தனை பேர் :
உலகில், 2011ம் ஆண்டு கணக்கின் படி 3 கோடியே 40 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயுடன் வாழ்கின்றனர். 25 லட்சம் பேருக்கு புதிதாக நோய் ஏற்பட்டுள்ளது. 17 லட்சம் பேர் இறந்துள்ளனர் என ஐ.நா., ஆய்வு தெரிவிக்கிறது. "இந்தியாவில் 1986ம் ஆண்டு, தமிழகத்தில் தான் எச்.ஐ.வி., கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது 57 லட்சம் பேர் எய்ட்சுடன் வாழ்கின்றனர். இதில் 35 சதவீதம் பேர், 25 வயதுக்குட்பட்டவர்கள். 38 சதவீதம் பேர் பெண்கள். 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் குழந்தைகள். இந்தியாவில், ஆண்டுதோறும் 60 ஆயிரம் குழந்தைகள் எய்ட்ஸ் பாதித்த தாய்க்கு பிறக்கின்றன என யூனிசெப் தெரிவிக்கிறது.
எப்படி தடுப்பது:
எய்ட்ஸ் வராமல் தடுப்பது, அவரவர் கையில் உள்ளது. பாதுகாப்பற்ற உடலுறவை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எய்ட்ஸ் குறித்த பாடங்கள் மூலம் மாணவர்களிடம் எய்ட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.உலக எய்ட்ஸ் தினம்: இனி ஒரு விதி செய்வோம்.. எய்ட்ஸை ஒழிப்போம்

1988-ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 1-ம் நாள் உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
எச்.ஐ.வி (Human Immuno Deficiency Virus) என அழைக்கப்படும் கொடுமையான வைரஸ் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்திகளை அழித்து, உடலில் வேகமாக பரவிக் உயிர் செல்களை அழிக்கும் திறன் வாய்ந்தது. இந்த வைரசே எய்ட்ஸ் நோயிக்கு முக்கிய காரணமாகும். உலகில் அதிக எய்ட்ஸ் நோயாளிகளை கொண்ட நாடுகளில் இந்தியா 3-வதாக உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, இந்தியாவில் 2.1 மில்லியன் பேருக்கு இந்த நோய் பாதிப்பு உள்ளது. அதில் 36% பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எச்.ஐ.வி, பாதுகாப்பற்ற உடலுறவு, பரிசோதனை செய்யப்படாத ரத்தம் மற்றும் எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து குழந்தைகளுக்கு ஆகிய மூன்று முக்கிய வழிகளில் பரவுகிறது.
அரசு மருத்துவ மையங்களில் எச்.ஐ.வி பரிசோதனை செய்யவும், உரிய சிகிச்சையளிக்கவும் வசதிகள் இருப்பதோடு மட்டுமல்லாமல், நோயாளிகளின் பதிவேடுகளை இரகசியமாக பராமரிக்கவும் வசதிகள் உள்ளன. எச்.ஐ.வி-ஐ ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் மூலம், அது எய்ட்ஸ் என்ற முழு வல்லமை வாய்ந்த உயிர்க்கொல்லி நோயாக வளர்வதை தவிர்த்திட முடியும்.
எச்.ஐ.வி-யின் ஆரம்ப கால அறிகுறிகள்: எடை குறைதல், தொடர்ந்த இருமல், நகம் பிரிந்து அவற்றின் வண்ணங்கள் குறைவது, களைப்பு, தசைகள் மற்றும் மூட்டுகளில் வலி, தலைவலி, தோலில் எரிச்சல் ஆகியவை ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. எச்.ஐ.வி பாதிப்புகளை சிகிச்சை செய்வதை விட, வராமல் தவிர்ப்பதையே நோக்கமாக கொண்டு செயல்படுவோம்.


இந்தி எதிர்ப்புப் போரின் முதல் படைத்தலைவி அன்னை மீனாம்பாள் சிவராஜ் நினைவு தினம் -நவம்பர் 30 , 1992.இந்தி எதிர்ப்புப் போரின் முதல் படைத்தலைவி அன்னை மீனாம்பாள் சிவராஜ் நினைவு தினம் -நவம்பர் 30  , 1992.

மீனாம்பாள் சிவராஜ் (அன்னை மீனாம்பாள் சிவராஜ்) 26 டிசம்பர் , 1904 - 30 நவம்பர் , 1992 பெண் விடுதலைக்காகவும், தலித் விடுதலைக்காகவும் போராடுவததைத் தன் வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டு போராடி வென்ற பெண். இவர் இந்தி எதிர்ப்புப் போரின் முதல் படைத்தலைவியாக விளங்கியவர்.
தமிழ் , தெலுங்கு , இந்தி , ஆங்கிலம் போன்ற மொழிகளில் வல்லமை பெற்றவர். சென்னை மாநகராட்சியின் துணை மேயர். 1938 திசம்பரில் நீதிக்கட்சியின் மாநாடு 29,30,31 மூன்று நாட்கள் நடைப்பெற்றன.அந்த மாநாட்டில்தான் பெரியார் நீதிக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த மாநாட்டுப் பந்தலிலேயே மூன்றாம்நாள் இறுதியில் ஆதி திராவிடர் மாநாடு நடத்த மீனாம்பாள் சிவராஜ் நீதிக்கட்சி தலைவர்களிடம் ஒப்புதல் பெற்றிருந்தார்.மீனாம்பாள் தலைமையில் நடைபெற்ற அந்த மாநாட்டில் அம்பேத்கர் தலைமையை ஏற்று அகில இந்திய அளவில் மாநாடு நடத்துவது என்று தீர்மானித்தனர் .

குடும்பவிபரம்

இவர் தலித் சமுதாயத்திலிருந்து சென்னை மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதிநிதியான வாசுதேவப்பிள்ளையின் மகள். முதன் முதல் கப்பலோட்டிய தமிழர் என்று புகழப்பட்டவரும், கோடீஸ்வரப்பிள்ளை என்று அழைக்கப்பட்டவருமான மதுரைப்பிள்ளையின் பேத்தி.இவர் அக்காலத்தில் ரங்கூனில் மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். அக்காலத்திலேயே ரங்கூனில் மெட்ரிக்குலேசன்வரை படித்தவர். இவர் தனது 16வது வயதில் 1918இல் தலித் இயக்கத் தலைவர் ந. சிவராஜ் என்பவரை மணந்து கொண்டார்.


பொறுப்புகளும் பணிகளும்

கவுன்சிலர் (6 ஆண்டுகள்)
கௌரவ மாகாண நீதிபதி (16 ஆண்டுகள்)
திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் (6 ஆண்டுகள்)
சென்னை மாகாண ஆலோசணைக் குழு உறுப்பினர் (9 ஆண்டுகள்)
தொழிலாளர் ட்ரிப்யூனல் உறுப்பினர்
சென்னை நகர ரேஷன் ஆலோசனைக் குழு உறுப்பினர்
சென்னை பல்கலைக் கழக செனட் உறுப்பினர் (13 ஆண்டுகள்)
போருக்குப்பின் புனரமைப்புக்குழு உறுப்பினர்
S.P.C.A உறுப்பினர்
நெல்லிக்குப்பம் பாரி கம்பெனி தொழிலாளர் தலைவர்
தாழ்த்தப்பட்டோர் கூட்டுறவு வங்கி இயக்குனர்
அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினர் (6 ஆண்டுகள்)
சென்னை கூட்டுறவு வீட்டு வசதி சங்க இயக்குனர்
விடுதலை அடைந்த கைதிகள் நலச்சங்க உறுப்பினர்
காந்தி நகர் மகளிர் சங்கத் தலைவர்
மகளிர் தொழிற் கூட்டுறவு குழுத்தலைவர் (6 ஆண்டுகள்)
சென்னை அரசு மருத்துவ மனைகளின் ஆலோசனைக் குழு உறுப்பினர்
அடையார் மதுரை மீனாட்சி மகளிர் விடுதி நடத்துனர்
லேடி வெலிங்டன் கல்லூரி தேர்வுக்குழு தலைவர்.


பழங்குடி மக்களுக்கு மாதர் தரப்பில் கிடைத்த தாய் அன்னை மீனாம்பாள் சிவராஜ் அவர்கள். அறிவிலும் ஆற்றலிலும் பெருமையுடன் திகழ்ந்தவர். அன்னை அவர்கள் நாடறிந்தவர். குறிப்பாகவும் சிறப்பாகவும் பழங்குடி மக்களின் வாழ்வுப் போராட்ட சரித்திரத்தில் அவருக்கு நிறைவான இடம் ஒதுக்கப்பட்டே ஆக வேண்டும்.
அன்னை மீனாம்பாள் குறித்து சில முக்கிய குறிப்புகள்:-
பல்வேறு மகளிர் போராட்டங்களில் தலைமை ஏற்று வழி நடத்தியவர் அன்னை மீனாம்பாள் .
திராவிட கழக தலைவர் ஈ. வெ. ராமசாமிக்கு "பெரியார்" என்ற பெயர் வழங்கி சிறப்பித்தவர் அன்னை மீனாம்பாள்.
சைமன் குழு வருகையை ஆதரித்து முதல் மேடை பேச்சில் 1928 ல் தம் பொது வாழ்வை தொடங்கினார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் வல்லமை பெற்றவர்.
இந்தி எதிர்ப்பு போரின் முதல் படைத்தலைவியாக விளங்கியவர்.
1930 இல் இருந்தே அண்ணல் அம்பேத்கரின் பணிகளை தமிழக மக்களிடம் எடுத்துக் கூறியவர்.
இணையர் தந்தை சிவராஜுடன் இணைந்து பவுத்த நெறியினை மக்களிடம் பரப்பினார் அன்னை மீனாம்பாள்.
டாக்டர் அம்பேத்கரின் தங்கை என செல்லமாக அழைக்கப்பட்டவர் அன்னை மீனாம்பாள் .
அன்னை மீனாம்பாள் குடும்பம்:
அன்னை மீனாம்பாள் 26 -12 -1904 இல் வி .ஜி.வாசுதேவப்பிள்ளை -மீனாட்சி தம்பதியருக்கு மகளாய் பிறந்தார்.
அன்னையின் பிறப்பிலேயே பெருமையிருக்கிறது என்றால் மிகையாகாது. அவரது முப்பாட்டனார் ஒரு வணிகர். தாய்வழிப்பாட்டனார் பெ. ம.மதுரைபிள்ளை ஒரு பெரும் வணிகர். வள்ளலுங்கூட இரங்கூன் மாநகரில் கப்பல் வணிகத்தில் சிறந்து வாழ்ந்தவர். கப்பல் வைத்திருக்குமளவுக்கு செல்வம் படைத்தவர். அன்னையாரின் தந்தை திரு. வி.ஜி.வாசுதேவப்பிள்ளை அவர்கள் ஆதிதிராவிட தலைவர்களில் சிறப்பானவர். பழங்குடி மரபில் சென்னை மாநிலத்திலேயே முதன்முதலில் மாநகராட்சி மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். நெடுங்காலம் சென்னை மாநில சட்டமன்றத்தை அலங்கரித்தவர்.
தந்தை சிவராஜின் வாழ்க்கை இணையர்.
பொது வாழ்க்கை :-
சைமன் குழு வருகையை ஆதரித்து முதல் மேடை பேச்சில் 1928 ல் தம் பொது வாழ்வை தொடங்கினார். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் வல்லமை பெற்றவர். இந்தி எதிர்ப்பு போரின் முதல் படைத்தலைவியாக விளங்கியவர். 1930 இல் இருந்தே அண்ணல் அம்பேத்கரின் பணிகளை தமிழக மக்களிடம் எடுத்துக் கூறியவர். "என் அன்பு சகோதரி" என்று அண்ணல் அம்பேத்கரால் அழைக்கப்பட்டவர். திராவிட கழக தலைவர் ஈ. வெ. ராமசாமிக்கு "பெரியார்" என்ற பெயர் வழங்கி சிறப்பித்தவர்.
கிட்டதட்ட 1970 வரை அவரது பொதுப்பணி தீவிரமாக இருந்தது. அன்னையின் அயராத உழைப்பிற்கும் உண்மையான தொண்டிற்கும் பல பதிவிகள் அவரைத் தேடிவந்தன. அவரில் சில:- சென்னை மாநகராட்சியின் துணை மேயர் ,கவுன்சிலராக 6 ஆண்டுகள், கவுரவ மாகாண நீதிபதியாக 16 ஆண்டுகள், திரைப்பட தணிக்கை குழு உறுப்பினராக 6 ஆண்டுகள், சென்னை மாகாண ஆலோசணைக் குழு உறுப்பினராக 9 ஆண்டுகள், தொழிலாளர் ட்ரிப்யூனல் உறுப்பினர் , சென்னை நகர ரேஷன் ஆலோசனைக் குழு உறுப்பினர், சென்னை பல்கலைக் கழக செனட் உறுப்பினராக 13 ஆண்டுகள் , போருக்குப்பின் புணரமைப்புக்குழு உறுப்பினர், S.P.C.A உறுப்பினர், நெல்லிக்குப்பம் பாரி கம்பெனி தொழிலாளர் தலைவர், தாழ்த்தப்பட்டோர் கூட்டுறவு வங்கி இயக்குனர், அண்ணாமலை பல்கலை கழக செனட் உறுப்பினராக 6 ஆண்டுகள் , சென்னை கூட்டுறவு வீட்டு வசதி சங்க இயக்குனர், விடுதலை அடைந்த கைதிகள் நலச்சங்க உறுப்பினர், காந்தி நகர் மகளிர் சங்கத் தலைவர், மகளிர் தொழிற் கூட்டுறவு குழுத்தலைவராக 6 ஆண்டுகள், சென்னை அரசு மருத்துவ மனைகளின் ஆலோசனைக் குழு உறுப்பினர், அடையார் மதுரை மீனாட்சி மகளிர் விடுதி நடத்துனர், லேடி வெலிங்டன் கல்லூரி தேர்வுக்குழு தலைவர் போன்ற பொறுப்புகள் வகித்து மக்கள் பணி ஆற்றியவர்.

அரசியல் வாழ்க்கை :-
அன்னையார் ஆதிதிராவிடர் தலைவர்களுடன் இன்னைந்து பணியாற்றியவர், அவர்களால் விரும்பப்பட்டு பெரிதும் பாராட்டப்பட்டவர். இருப்பினும் தான் தனித்தன்மையை நிலைநாட்டுவதில் சற்றும் தயங்காதவர். அன்னையவர்கள் பலநூறு கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் தலைமை தாங்கியும் கலந்துகொண்டும் சிறப்பித்திருக்கிறார்.
31 -1 -1937 இல் திருநெல்வேலில் ஆதிதிராவிடர் மாநாட்டில் அன்னை மீனாம்பாள் பேசியது :-
" ஒற்றுமையில்லாக் குடும்பம், ஒருமிக்க கெடும் என்பார்கள். அதுபோல ஒரு குடும்பமோ, ஒரு சமுதாயமோ, ஒரு தேசமோ முன்னேற்றமடைய வேண்டுமானால் ஒற்றுமை மிகவும் அவசியம். நாம் தேசத்தில் சாதிப்பிரிவினை அறவே ஒழிய இன்னும் பல ஆண்டுகள் செல்லுமாயினும் நம் சமூகத்தினர், நாம் முன்னேற்றமடைய நாங்களும் மனிதர்கள்தான்; எல்லா உரிமைகளும் எங்களுக்கும் உண்டு என்று நிருபிப்பான் வேண்டி நாம் யாவரும் பிரிவினை இல்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஆதிதிராவிடர்களின் கடைசி தலைவியான அன்னை மீனாம்பாள் சிவராஜ் அவர்கள்
30 -11 -1992 இல் இம் மண்ணுலகிலிருந்து மறைந்தார்.

புதன், 29 நவம்பர், 2017

ஒரு ரூபாய் நோட்டு பிறந்த நாள் நவம்பர் 30. ( 30-11-1917 )


ஒரு ரூபாய் பிறந்த நாள் நவம்பர் 30. ( 30-11-1917 )
ஒரு ரூபாய் வரலாறு!
பார்க்கக்கூடிய சில விஷயங்களில் மிகவும் அரிதான ஒன்று நாம் பயன்படுத்திய ஒரு ரூபாய். அந்த ஒரு ரூபாய் நோட்டிற்கு இன்றுடன் 100 வயது ஆகிறது.
💸 ரூபாய் நோட்டு இல்லாத டிஜிட்டல் பரிவர்த்தனையை நோக்கி நாடு சென்று கொண்டு இருக்கிறது. ஆனாலும் ரூபாய் நோட்டுகளுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் மதிப்பு இருக்கத்தான் செய்கிறது. தற்போது ஒரு ரூபாய் நோட்டை கண்ணில் பார்ப்பது என்பது அரிதாகிவிட்டது. ஏனெனில் அதன் மதிப்பு குறைந்து போய்விட்டது.
💸 ஆனாலும் அந்த காலம் முதல் இந்த காலம் வரை, ஒத்த ரூபா கூட இல்லையா? என்பது வழக்கு சொல்லாக இருக்கிறது. அந்த ஒத்த ரூபாய் நோட்டுதான் தற்போதைய புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கெல்லாம் முன்னோடி என்று சொல்லலாம். இந்தியாவில் கடந்த 30-11-1917-ம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட ஒரு ரூபாய் நோட்டுக்கு இன்றுடன் (புதன்கிழமை) 100 வயது ஆகிறது.
💸 இந்தியாவில் முதன் முதலாக கி.பி.1770-ம் ஆண்டு பேங்க் ஆப் இந்துஸ்தான் என்ற தனியார் வங்கி மூலம்தான் ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டது. பின்னர், ரூபாய் நோட்டுகள் இந்திய அரசின் அதிகாரப்பு+ர்வ நோட்டாக கடந்த 6-8-1861-ம் ஆண்டு முதல் வெளியானது. முதலில் வெளியான 10 ரூபாய் நோட்டு ஒரு பக்கம்தான் அச்சிடப்பட்டு இருக்கும். பின்புறம் வெள்ளையாகவே இருந்தது.
💸 இந்த நிலையில் ஒரு ரூபாய் நோட்டுகள் இந்தியாவில் கடந்த 30-11-1917-ம் ஆண்டு அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இரு பக்கமும் அச்சிடப்பட்ட முதல் நோட்டும் இதுதான். அதில் 5-ம் ஜார்ஜ் மன்னரின் உருவம் அச்சிடப்பட்டு இருக்கும்.
💸 இதைத்தொடர்ந்து கடந்த 1935-ம் ஆண்டு முதல், நோட்டு அச்சிடும் முழு அதிகாரத்தையும் இந்திய ரிசர்வ் வங்கி ஏற்றது. முதலில் வெளியிடப்பட்ட ஒரு ரூபாய் நோட்டில் தமிழ் உள்பட 8 மொழிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. தற்போது வெளியாகும் ரூபாய் நோட்டுகளில் 15 மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன. 1940-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி வெளியிட்ட 1 ரூபாய் நோட்டில் 6-ம் ஜார்ஜ் மன்னரின் உருவம் வெளியிடப்பட்டது. சுதந்திரத்துக்கு பிறகு வெளியான நோட்டில் அப்போதைய நிதித்துறை செயலாளர் கையொப்பம் இடம் பெற்றது. ஜார்ஜ் மன்னருக்கு பதிலாக அசோக் ஸ்தூபி சின்னம் இடம் பெற்றது.
💸 1952-ம் ஆண்டு முதல் 1956-ம் ஆண்டு வரையிலும், 1958-ம் ஆண்டு முதல் 1962-ம் ஆண்டு வரையிலும், 1982-ம் ஆண்டிலும் ஒரு ரூபாய் நோட்டு அச்சடிக்கப்படவில்லை. மீண்டும் கடந்த 2015-ம் ஆண்டு ஒரு ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்டு வெளியானது. ஒரு ரூபாய் நோட்டு அச்சடிக்க அரசுக்கு ரூ.1.14 பைசா செலவாகிறது.
நம் பாரம்பரியமிக்க ஒரு ரூபாய் நோட்டுகளை பாதுகாப்போம். அதற்கு இன்று 100 வயது என்பதில் பெருமிதம் கொள்வோம்!...

செவ்வாய், 28 நவம்பர், 2017

175 ஆம் ஆண்டில் கம்பீரமாக கால் எடுத்து வைக்கும் நெல்லை சுலோச்சனா முதலியார் பாலம் நவம்பர் 28, 1843.175 ஆம் ஆண்டில் கம்பீரமாக கால் எடுத்து வைக்கும் நெல்லை சுலோச்சனா முதலியார் பாலம்  நவம்பர் 28,
1843.

175 ஆம் ஆண்டில் கம்பீரமாக கால் எடுத்து வைக்கும் நெல்லை சுலோச்சனா முதலியார் பாலம் -   முத்தாலங்குறிச்சி காமராசு

    உதவிய நூல்கள்  குகன் அவர்களின் பெரும்புள்ளிகள்- எழிழமுதனின் புதுமை பித்தன் நூல்,  திருநெல்வேலி மாவட்ட  அரசு வெளியீடு

1840 மார்ச் மாதம் 10ஆம் தேதி இரவு, திருநெல்வேலி கலெக்டராக ணி.றி.தாம்சன் பொறுப்பேற்று இருந்தார்.
 திருநெல்வேலி&பாளையங்கோட்டை ஆகிய இரட்டை நகரங்களை பிரிக்கும் தாமிரபரணி ஆற்றில் அப்போது பாலம் இல்லை. ஆனால்  வெள்ளம் வந்தால் ஆற்றை கடப்பது கடினம்.
  கொக்கிரக்குளத்தில் இருந்து நெல்லை செல்ல தாமிரபரணி 800 அடி அகலமாக இருந்தது.  வியாபார பொருட்களை கொண்டு வருவது படகு மூலமாகவே நடைபெற்று வந்தன. ஆற்றங்கரையில் அமைந்த படகுத்துறையில் எப்போதுமே ஆண்களும், பெண்களும், வியாபாரிகளும் மொய்த்துக் கொண்டிருப்பது வழக்கம். கரையில் பல மணி நேரம் காத்திருந்தால்தான் படகு கிடைக்கும். அதிலும் பத்து பேர் கொண்ட ஒரு குடும்பம்தான் போக வேண்டும் என்றால், அவர்கள் ஒரே படகில் ஏறி விட முடியாது.  எல்லோருக்கும் ஒரே படகில் இடம் கிடைக்காது. முன்னால் இடம் கிடைத்தவர்கள் அக்கரைக்கு போய் மற்றவர்கள் வரும் வரை காத்திருக்க வேண்டும். அதிலும் குழந்தைக் குட்டிகளோடு படகில் ஏறிச் செல்வது ஒரு சோதனை மிகுந்த காட்சி.
 இந்த லட்சணத்தில் படகுத்துறையில் முந்தி இடம் பெற லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் சர்வசாதரணமாகவே நடந்தது. தட்டுமுட்டு சாமான்களோடு வருபவர்களின் பொருட்கள் களவாடப்படுவதும் சமூகவிரோதிகள் ஆங்காங்கே குழப்பத்தை உண்டாக்குவதும், திடீர் என்று சாதிச்சண்டை தோன்றுவதும் அப்போதே நடைபெற்று வந்தன.
 இப்படியாக திருநெல்வேலி ஜில்லா போர்டின் கட்டுப்பாட்டில் செயல் பட்டு வந்த இப்படகு துறைகளில் ஒவ்வொரு நாளும், பொழுதும் விடிந்து, பொழுது போவது என்பது ஒரு யுகமாகவே கருதப்பட்டது. 19&ம் நூற்றாண்டில் இடைப்பகுதி வரை படகுத்துறையில் நடந்த குழப்பங்களை பற்றி அப்போது ஆட்சி செய்த வெள்ளையக்காரர்களே வேதனையோடு எழுதியிருக்கிறார்கள்.
 படகுத்துறை என்றால் இதுபோன்ற நிகழ்ச்சிகள் எல்லாம் நடக்கும் என்பது கலெக்டருக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அன்று மார்ச் 10 ம் நாள் படகுத்துறையில் சாதிக்கலவரம் உச்சகட்டத்தை அடைந்து நாலைந்து கொலைகள் விழுந்து விட்டன.
   தாமிரபரணி பாலத்தை பற்றி தனக்கு முந்திய கலெக்டராக இருந்த ஆர்.ஈடன் என்பவர் 1836ல் எழுதி வைத்த குறிப்பை படித்துப் பார்க்கிறார்.  அவசியத்தினை உணருகிறார். உடனே அவசர கூட்டம் ஒன்று நடத்தப்படுகிறது.
  பாலங்களுக்கு வரைபடம் தயாரிக்கும் புகழ்பெற்ற கேப்டன் பேபெர் தொழில் நுட்ப வல்லுநர் இஞ்சினியர் கேப்டன் டபிள்யூ.எச்.ஹார்ஸ்லி ,கலெக்டர் அலுவலகத்தில் சிரஸ்தராக வேலை பார்த்துக் கொண்டிருந்த  சுலோச்சன முதலியாரும்   உள்பட பலர் அதில்  கலந்துகொண்டார்.
 லண்டன் தேம்ஸ் நதியில் அமைந்துள்ள வாட்டர்லூ பாலத்தை  மாதிரியாக கொண்டு பாலம் தயாரிக்கப்பட்டது. பாலத்தின் அடிமட்ட நீளம் 760 அடியாகவும், அகலம் 21 1/2 அடியாகவும், 11 ஆர்ச்சிகளோடு, ஒவ்வொரு ஆர்ச்சின் விட்டமும் 60 அடியாகவும் அமைந்திருந்தன. ஒவ்வொரு ஆர்ச்சையும் தாங்குகின்ற இரட்டைத் தூண்கள் ரோமானிய அரண்மனை தூண்களை நினைவுபடுத்தின. அதை கட்டி முடிக்க அரைலட்சத்திற்கு சற்று அதிகமாகவே பணம் தேவைப்பட்டது.  இன்றைய மதிப்பீட்டில்  இருபத்து ஐந்து  கோடி ரூபாய்.
 பணத்துக்கு எங்கே போவது? அன்றைய அரசிடம் பணம் இல்லை. மக்களிடம் வசூல் செய்து தான்  இந்த பாலப்பணியை முடிக்க வேண்டும்.
 இந்த சமயத்தில் தான் சுலோச்சன முதலியார் உதவிசெய்ய முன்வருகிறார்.
 இவர் தென்மாவட்டங்களிலேயே மிகப்பெரிய செல்வந்தர். கௌரவமாக உத்தியோகம் பார்ப்பவர். அந்த காலத்தில் குதிரை பூட்டிய கோச் வண்டியில் கலெக்டருக்கு சமமாக அலுவலகத்துக்கு வருபவர். நீளமான கறுப்பு கோட்டு, தலையில் ஜரிகை தலைப்பாவும், கழுத்தை சுற்றி அங்கவஸ்திரமும், காதில் வைரக்கடுக்கனும் அணிந்து அவர் அலுவலகத்துக்கு வரும் அழகே தனி அழகாம்.
     மனைவி வடிவோடு சேர்ந்து பேசுகிறார். அவரிடம் இருந்து நகைகளையெல்லாம் பெற்று, அதன் பின் அ¬தை விற்று பாலம் கட்டககூடிய  முழுதொகையை அவரே கொடுத்துவிடுகிறார்.
 பாளையங்கோட்டையிலிருந்து இடிந்து போன கோட்டைகளிலிருந்து கருங்கற்கள்  கொண்டு வரப்படுகிறது.
 இக்கற்களை கொண்டே பாலத்தின் அஸ்திவாரமும், தூண்களும் உருவாகின்றன. சிமெண்ட் இல்லாத அந்த காலத்தில் சுண்ணாம்புடன், பதனி, கருப்புக்கட்டி இவைகளை சாந்தாக்கி செங்கல்லை கொண்டு பாலம் உருவாகின்றது. இந்த வேலைக்காக சிறையில் இருந்த ஆயுட்கைதி 100 பேரை அரசாங்கம் தந்து உதவுகின்றது. இஞ்சினியர் டபிள்யூ.எச்.ஹார்ஸ்லி மேற்பார்வையில் பால வேலை வேகமாக நடைபெறுகின்றது. பணத்தட்டுப்பாடு இல்லாமல் சுலோசன முதலியார் பார்த்துக்கொள்ள ஏனைய மேற்பார்வை பணியாளர்களையும் தொழில்நுட்ப வல்லுநர்களையும்அரசாங்கம் தந்து உதவுகின்றது. 60 அடி விட்டத்தில் ஆர்ச் வடிவில் 11 தூண்களும், பிரமாண்டமான தூண்களும், 21 1/2 அடி அகலமும், 760 அடி கீழ் நீளமும்கொண்ட பாலம் 1843ல் கட்டி முடிக்கப்படுகின்றன. இதற்கு சுலோசன முதலியாரின் பெயரும் சூட்டப்படுகின்றன.

 பால வேலை நடந்து கொண்டிருக்கும் போதே கலெக்டர் தாம்சனுக்கு மாற்றம் ஏற்பட  கலெக்டர் தாமஸ் என்பவர் கலெக்டர் பொறுப்பை ஏற்கிறார். பாலத்தின் திறப்புவிழா 1843 நவம்பரில் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. திறப்புவிழா அன்று அலங்கரிக்கப்பட்ட யானை ஒன்று முதல் பயணி அல்லது முதல் குடிமகன் என்ற பெருமிதத்தோடு பாலத்தில் முன்செல்கிறது. இதை தொடர்ந்து ஆங்கில வீரர்கள் அடங்கிய காலட்படை சென்றது. அதைதொடர்ந்து சீறிய பீரங்கிபடைப் போகிறது. இவர்களை தொடர்ந்து சுலோசன முதலியாரும், இவருக்கு பின்னால் நீதிபதி டக்லஸ், கலெக்டர் தாமஸ் அவருக்கு பின்னால் மேற்பார்வையிட்டு பாலத்தை கட்டிமுடித்த இஞ்சினியர் ஹார்ஸ்லி ஆகியோர் சென்றனர். இவர்களையெல்லாம் தொடர்ந்து திருநெல்வேலி நகரின் மக்கள் வெள்ளம் இப்படியாக ஒரு கோலாகல திறப்பு விழா ஊர்வலம் யானையின் தலைமையில் அன்று நடந்தது.
 150வருடங்களுக்கு முன்னால் அரசால் சாதிக்க முடியாத ஒரு சாதனையை தனி ஒரு மனிதர் தம் வள்ளல் தன்மையால் சாதித்து விட்டார்.  எனவே அவர் பெயரால் சுலோசன முதலியார் பாலம் என இது அழைக்கப்படுகிறது.
 1869ல் தாமிரபரணியில் ஏற்ப்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு காரணமாக இப்பாலத்தின் நான்கு தூண்கள் சேதமடைந்தன.  அந்த சமயத்தில் கலெகடராக இருந்து பககிள் துரை இந்த பாலத்தினை செப்பனிட்டார். மீண்டும் 1871ல்  இப்பாலம் திறககப்பட்டது. விடுதலைக்கு பின் இப்பாலத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவாயிற்று,. தென்வடலாக இருக்கும் இப்பாலத்தின் பழைமை கெட்டுவிடாமல் பாலத்தின் மேற்குப்பகுதியை மட்டிலும் விரிவுபடுத்தினர் அப்பகுதியில் அமைந்திருந்த வளைவுகள் அதனுள் அடங்கிவிட்டன. காங்கிரீட் முறையில் இது அமைக்கப்பட்டது. 21 1/2 அடியாக இருந்த பாலம் 50 அடி அகலம் கொண்ட பாலமாக விரிவுபடுத்தப்பட்டு 1967ல் அப்போதைய முதல்வர் பகதவத்சலம் திறந்து  வைத்தார்.
    லண்டன் லாட்டரி பணத்தினால்தான் இந்த பாலம் கட்டப்பட்டது என்ற ஒரு வரலாறும் பேசப்பட்டு வருகிறது. அந்த வரலாறும் சுவையானது தான். அதாவது  லண்டனுக்கு வெள்ளைத்துரைகளோடு சுலோசனா முதலியார் சென்ற போது அங்கு ஒரு லாட்டரியை வாங்குகிறார். அதில் 1 லட்ச ரூபாய் பரிசு விழுகிறது. அந்த சமயம் வெள்ளையனை எதிர்த்து இந்தியாவில்  போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. எனவே வீட்டில் கூட  ஆங்கிலேயரிடம் வேலை பார்த்த சுலோசனா முதலியாருக்கு எதிர்ப்பு  காத்திருந்தது. தாயாரிடம் வந்து , “அம்மா எனக்கு லண்டன் லாட்டரியில் ஒரு லட்சம் விழுந்து இருக்கிறது என்ன செய்ய” என்று கேட்டாராம். அதற்கு அவர் “இங்கிலிஸ்காரன் பணம் அதை கொண்டு போய் ஆத்தில போடு”. என்று கூறி விட்டாராம். அதிர்ந்து போன சுலோசன முதலியார் வெளியே வந்து விட்டார். கலெக்டர் ஆபிஸ்  வேலைக்கு வர ஆற்றில் படகில் -ஏற நிற்கிறார். அப்போது படகில் ஏறுவோர் சண்டை போடுகிறார்கள்  அங்கு வந்த போலீஸ் அவர்களை குண்டுகட்டாக தூக்கிக்கொண்டு செல்கிறது.  இதனால்  வேதனை பட்ட அவர்,  “தாயார்  லண்டன் பணத்தினை ஆற்றில் போடு என்று சொன்னாரே, பேசாமல்  ஆற்றில் பாலமாக போட்டுவிட்டால் என்ன” என்று  பாலம் கட்ட ஏற்பாடு செய்தாராம் என்றும் சுவையாக ஒரு வரலாறு சொல்வார்கள்.
  எது எப்படி என்றாலும் அந்த பணம் சுலோசன முதலியார் பண ம் தான். 174 வருடங்களை கடந்துவிட்டது. அந்த பாலத்தில் நாம் செல்லும் போதெல்லாம் அவரின் நினைப்பு நம்மை மென்மையாக வருடிக்கொண்டே தான் இருக்கும்

திங்கள், 27 நவம்பர், 2017

சமூக சீர்திருத்தவாதி மகாத்மா ஜோதிபாபூலே நினைவு தினம் நவம்பர் 28. சமூக சீர்திருத்தவாதி மகாத்மா ஜோதிபாபூலே நினைவு தினம் நவம்பர் 28.

மகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலே ( மராட்டி : जोतीबा गोविंदराव फुले ஆங்கிலம் : Mahatma Jyotirao Govindrao Phule ) இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் வாழ்ந்த ஒரு சமூக சீர்திருத்தவாதி . சமூக அவலங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்ததோடு அவற்றைக் களையும் முயற்சிகளிலும் இறங்கியவர். ஒடுக்கப்பட்டோர் மற்றும் பெண்களுக்கென்று பள்ளிகளை நடத்தியவர்.
ஆங்கிலேயர் ஆட்சியை விரும்பியவர்களுள் இவரும் ஒருவர். 1857
சிப்பாய்க் கலகத்தை இவர் உயர் சாதி
இந்துக்கள் உண்டாக்கிய கலகமாகவே பார்த்தார்.
1873 ஆம் ஆண்டு தனது ஆதரவாளர்களுடன் இணைந்து இவர் சத்ய சோதக் சமாஜம் (பொருள்: உண்மையைத் தேடுவோரின் சமூகம்) எனும் அமைப்பைத் துவங்கினார். ஆனால் இவரது மறைவுக்குப் பின் இந்த இயக்கம் காங்கிரசுடன் கரைந்தது.

வாழ்க்கை
அக்கால வழக்கப்படி இவர்தன் 13 ஆம் அகவையில் சாவித்ரிபாய் (9 அகவை) அவர்களுடன் 1840இல் திருமணம் நடந்தது. ஜோதிராவ் புலே அவர்கள் தனது துணைவி சாவித்ரிபாய் புலே அவர்களைச் சாதீய, பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் இணைத்துக் கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஒரு அந்தண விதவையின் யஸ்வந்த் ராவ் என்ற குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர்.
பெண் உரிமை போராளி
மனுதர்மம் எல்லாப் பெண்களையும், சாதி வித்தியாசம் பாராமல் அடிமைகளாக (தாஸா) அல்லது சூத்திரர்களாக நடத்துகிறது. சூத்திராதி சூத்திரர்கள் என்ற தனது கணிப்பில் பெண்களையும் புலே இணைத்தார். 1842 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கான அவரது முதல் பள்ளிக் கூடத்திற்கு சமூக அந்தஸ்து கிடைக்கவில்லை. குழந்தைகளைக் கருவிலேயே கலைக்க வேண்டிய நிலையிலோ அல்லது பிறந்த பின் அவற்றைக் கொல்ல வேண்டிய நிலையிலோ உள்ள விதவைப் பெண்களுக்கான இல்லத்தை 1863 ஆம் ஆண்டில் நிறுவினார். 1864 ஆம் ஆண்டில் நடைபெற்ற சாரஸ்வத் பிராமண விதவையின் மறுமணத்தில் முக்கியப் பங்கு புலேயினுடையது. 1882 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பெண் விடுதலை பற்றிய தவறான கருத்துக்களைக் கொண்ட ஆய்வுக் கட்டுரையான, ஆண் பெண் பற்றிய ஒப்பீடு (ஸ்திரீ புருஷ்துலானா) என்பதை எதிர்த்து குரல் கொடுத்தவர் புலே மட்டுமே.


சமூக சீர்திருத்தத்தின் தந்தை ஜோதிபாபூலே

புலே ஒரு முதல் சூத்திர அறிஞர். அவரே தன்னைப் பற்றி மதிப்பீடு செய்ய விரும்பியது போல பெண்பால் பற்றிய கேள்விகளை முதலில் ஆராய்ந்தவர் என்ற பெயரும் அவருக்கு உண்டு. இந்தப் பிரச்சினையில் அடித்தளமான மனித நேயப் பார்வை கொண்டால் போதும் என்ற மனநிலையை இந்திய மறுமலர்ச்சியின் சமூக சீர்திருத்தவாதிகள் பலரும் கொண்டனர். அவர்களது அணுகுமுறை வரலாற்று நோக்கமும், தாராளமனப்பாங்கும் முற்போக்கும் கொண்டதாக இருந்தது. அவர்களது பிரச்சாரத்திலும், செயலிலும் மேல் ஜாதியினரின் வெறுப்பு மேலோட்டமாக வெளிப்பட்டது. ஆனால் தனது சமகாலத்தவரை விட புலே மிகவும் முற்போக்காக இருந்தார் எனத் தெரிகிறது.
மனுசாஸ்திரம் எல்லாப் பெண்களையும், ஜாதி வித்தியாசம் பாராமல் அடிமைகளாக (தாஸா) அல்லது சூத்திரர்களாக நடத்துகிறது. சூத்திராதி சூத்திரர்கள் என்ற தனது கணிப்பில் பெண்களையும் புலே இணைத்துள்ளார். 1842 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கான அவரது முதல் பள்ளிக் கூடத்திற்கு சமூக அந்தஸ்து கிடைக்கவில்லை. குழந்தைகளைக் கருவிலேயே கலைக்க வேண்டிய நிலையிலோ அல்லது பிறந்த பின் அவற்றைக் கொல்ல வேண்டிய நிலையிலோ உள்ள விதவைப் பெண்களுக்கான இல்லத்தை 1863 ஆம் ஆண்டில் நிறுவினார்.
ஒரு பிராமண விதவையின் மகனை தனது மகனாக புலே தத்தெடுத்தார். 1864 ஆம் ஆண்டில் நடைபெற்ற சரஸ்வட் பிராமண விதவையின் மறுமணத்தில் முக்கிய பங்கு புலேயினுடையது. பிராமண சாஸ்திரத்தின் படி அக்காலத்தில் விதவைகள் தங்களது தலையை மொட்டையடித்துக் கொள்ள வேண்டும். மனித நேயமில்லாத இந்தப் பழக்கத்தை எதிர்த்து சவரத் தொழிலாளிகளின் வேலை நிறுத்தத்தை நடத்தினார், தாராபாய் ஷிண்டே..
1882 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பெண் விடுதலை பற்றிய தவறான கருத்துக்களைக் கொண்ட ஆய்வுக் கட்டுரையான, ஆண் பெண் பற்றிய ஒப்பீடு (ஸ்திரீ புருஷ்துலானா) என்பதை எதிர்த்து குரல் கொடுத்தவர் புலே மட்டுமே.
பெண்களின் பிரச்சினையை பிராமண சூத்திராதி சூத்திரர்களின் பிரச்சினையாக புலே பார்க்கவில்லை. தனது சத்திய தர்மாபுஸ்தக் என்ற நூலில் எல்லா பெண்களும், ஆண்களும் ஒன்றே (சர்வ எகாண்டர் ஸ்திரீபுருஷ்) என்று பேசுகிறார். ஆண் – பெண் இருவருக்கும் பொதுவாக சமமான மனித உரிமைகள் தேவை என்று கூறும்போது, ஆண் – பெண் (ஸ்திரி – புருஷ்) என்று வேறுபாட்டினை காட்டும்படியான சொல்லைப் பயன்படுத்துகிறார். மனிதம் என்று பொதுவான வார்த்தையை உபயோகப்படுத்தவில்லை என்று கெய்ல் ஓம்வெட் சுட்டிக் காட்டுகிறார். இந்தியாவிலேயே இதுபோல் முதன் முதலாக செய்தவர் புலே மட்டுமே.
ஆண் வழிச் சமுதாயம் பற்றி புலே பேசவில்லை. ஆண் – பெண் ஏற்றத்தாழ்வு நிலை பற்றியும் கருத்துக் கூறவில்லை. ஆனால், பிராமணிய சமூக வாழ்நிலையில் இருந்த பெண்களின் நிலையோடு ஒப்பிட்டு கருத்துக்கள் கூறியுள்ளார்.
பிராமணிய அதிகாரம் முடிவடையும் காலத்தில் ஆண் – பெண் சமத்துவம் ஏற்படும் என்று வெளிப்படையாகக் கூறாவிடினும் அந்தக் கருத்தினையே மறைமுகமாக கோடிட்டுள்ளார். சூத்திராதி சூத்திரர்களை அடிமைப்படுத்திய மிகப் பெரிய சூழ்ச்சியின் ஒரு பகுதியே பெண்களையும் அடிமைப்படுத்தியது என்பது இக்கருத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.
வெவ்வேறு ஜாதியின் அடிப்படையில் பெண்களை இயக்க ரீதியில் திரட்டும் தற்போதைய போக்கினை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு தலித் பெண்ணைப் போலவே பிராமணப் பெண்ணும் ஒரு சூத்திராதி சூத்திரர் என்று எண்ணினார். பெண்ணடிமைக்குரிய அடிப்படைக் காரணமாக வர்ணாஸ்ரமல்லாது பால் வேறுபாட்டை மட்டுமே காரணமாகக் கொண்ட அவரது கருத்து மிகப் புதுமையாக இருந்தது.
குடும்பம் என்ற ஏற்பாடு சமூகத்தின் மைய நிலையாக இருந்தது போல சமூகத்தில் அடக்குமுறைக்கும் மையமாக இருந்தது என்றே புலே நம்பினார். அதன் அடிவேர்கள் ஜாதிய முறையில் கிடைக்கும். வர்ணாசிரமம் பற்றிய புலேயின் கருத்துக்கள் உண்டு. ஆனால் ஆண் வழிச் சமுதாய முறையினால் ஆண் – பெண் இருபாலரின் ஏற்றத் தாழ்வும், பெண்ணடிமையும் ஏற்பட்டன என்ற எண்ணங்கள் அவரிடம் இல்லை.
19 ஆம் நூற்றாண்டில் மிக அதிகமான சீர்திருத்தவாதிகள் பெண்களின் பிரச்சினைகளான விதவை திருமணம், குழந்தை திருமணத்தை தடை செய்தல், சதி என்ற பழக்கத்தை தடை செய்தல், பெண்களுக்கு கல்வி உரிமை முதலியவற்றை கையிலெடுத்துள்ளனர். புலேயும் அவர்களில் ஒருவர். இளம் மணப்பெண் திருமணம் செய்து போகும் குடும்பத்தின் ஒப்பந்த ஊழியராக செல்கிறாள் என்ற கருத்தினை நோக்கி தனது வாதத்தைக் கொண்டு சென்றார்.
ஒட்டுமொத்தமாக மாற்றம் செய்ய முடியாவினும் திருமணமும் குடும்ப வாழ்க்கை முறையும் சில மாற்றங்களுக்காவது உட்பட வேண்டும் என்று புலே நம்பினார். பரம்பரையாக பின்பற்றப்படும் திருமண சடங்குமுறைகளை மாற்றி அமைப்பது பற்றி சத்யதர்ம புஸ்தக் என்ற நூல் அலசுகிறது. புலேயைப் பின்பற்றி பல சமூக சீர்திருத்தவாதிகளும் திருமண சடங்குகளைப் பற்றியே சிந்தித்து செயல்பட்டனர் என்று கெய்ல் ஓம்வெல்ட் கூறுகிறார். தனது சுயமரியாதை இயக்கத்தின் ஒரு பகுதியாக சுயமரியாதைத் திருமணங்களாக மாற்றியவர் ஈ.வே.ரா. பெரியார். நாட்டின் சில பகுதிகளில், தேசிய இயக்கத்தின் ஒரு அம்சமாக காந்திய கொள்கையின் வழியில் கல்யாணங்கள் நடைபெற்றன.
பண்டித ரமாபாய் கிறித்தவத்திற்கு மதமாற்றம் செய்ததற்கு ஆதரவாக புலே இருந்தது பற்றி நாம் விளக்கியுள்ளோம். பால் சார்ந்த ஒரு அம்சத்தை அந்த ஆதரவில் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஆனால் பிராமண பரம்பரை வழக்கத்திலிருந்து விடுதலையாகும் இயக்கத்திற்கு ஆதரவாக இருந்தார்.
ஒரு பெண் தனது அடிமைத்தளத்திலிருந்தும், பிராமண வழக்கங்களிலிருந்தும் வெளியில் வருவதற்கான தனது உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதே அவருக்கு முக்கியம். பிராமணியத்தை எதிர்த்த சூத்திரர்களின் புரட்சியாகவே அதைக் கண்ணுற்றார். சூத்திராதி சூத்திரர்களின் போராட்டத்தின் அடிப்படையாக பெண்ணுரிமையை நிலை நாட்டுவதும் அமையும் என்பதே புலேயின் எண்ணமாக இருந்தது.
மராட்டிய இலக்கியத்தின் வரலாற்று ஆசிரியர்கள் பலரும் புலேயைப் பற்றி குறிப்பிடுவதில்லை. இது மிகவும் விநோதமாகவும் வருத்தமாகவும் உள்ளது. புலேயின் உரைநடை, பத்தொன்பதாம் நூற்றாண்டின் பேச்சு வழக்கு மொழியை அவர் உபயோகம் செய்தது, அவரது கோர்வையான கருத்துரையாடல்களில் வந்து விழுந்துள்ள மிகவும் காட்டமான சொல்லாடல்கள், அவரது கவிதைகள் (18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பக்தி இலக்கிய கவிஞர் துர்காராமின் தாக்கம் உள்ளவை) மராட்டிய சமூக இலக்கிய விமர்சனங்களுக்கு இட்டுச் சென்ற பக்தி இலக்கிய கவிதைகள் குறித்த அவரது ஆய்வு என்ற பல அம்சங்கள் பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை. இவற்றில் ஏதோ ஒரு சிலவற்றை குறிப்பிடுபவர்களும் பிராமணர்கள் புலேயின் கருத்துக்களில் கவலை கொள்ளவில்லை என்று எடுத்துக் காட்டவோ அல்லது மராட்டியத்தில் முதன் முதலில் அரசியல் விவாதம் செய்யும் நாடகமாகிய திருத்திய ரத்னைவை எழுதியவர் என்று சொல்வதற்கும் அவரது பெயரை உபயோகப்படுத்தியுள்ளார்.
பால் சந்திர நமதா என்பவர் புலேயின் புலமை பற்றி எழுதிய கட்டுரையைத் தவிர்த்து, அவரது எழுத்துக்ள் மீதான அக்கறை கொண்ட விமர்சனங்கள் இல்லை என்றே கூறலாம். மராட்டியத்தில் நிரப்பப்பட வேண்டிய ஒரு இடைவெளி இது. ஆனால் அந்த வேலையை நிறைவு செய்வதல்ல நமது நோக்கம். ஆனால் நமது கருத்துப் பதிவுகளை வரிசையாக இங்கே எடுத்துரைக்கலாம்.
உரையாடல் வடிவத்தில் எழுதுவது புலேக்கு மிகவும் பிடிக்கும். அவரது மிகப் பல நூல்களும், குறிப்பாக ஒரு நாடகமும், இந்த இலக்கிய வடிவத்தில் உள்ளன. ஒருபுறத்தில் மேற்கத்திய பழக்கமான கிரேக்க எழுத்துப் பரம்பரையையும் அவருக்குப் பிடிக்காவிடினும், உபநிடதங்களில் உள்ள வழக்கத்தையும் இது இணைப்பதாக இருந்தது. பாத்தாஸ் என்பவர்கள் இது போன்ற உரையாடல் வடிவத்தை பயன்படுத்தியுள்ளனர். 1909 ஆம் ஆண்டில் வெளியான காந்தியின் இந்து சுயராஜ்ஜியம் என்ற புத்தகம் இந்த உரையாடல் வடிவத்தில் வெளியான முதல் பெரிய இந்திய நூல் என்றாகிறது.
அவருடைய காலத்தில் அவரது மொழி உபயோகம் மிகவும் தனித்துவம் வாய்ந்தது. அவருடைய மராட்டிய மொழியின் துள்ளலையும் முரட்டுத்தனத்தையும் அவ்வளவு எளிதாக மொழி மாற்றம் செய்ய முடியாது. நமது மொழி பெயர்ப்பாளர்கள் துணிவோடு இப்படிப்பட்ட ஒரு சோதனையை மேற்கொண்டுள்ளனர். இலக்கிய மராட்டியத்தை விடவும் பேச்சு மொழியையே அதிகமாகப் பயன்படுத்தியுள்ளார். அடிமைப்படுத்தப்பட்டவர்களுக்காக இயக்கத்தை கட்டியதால் தனது எழுத்துக்களின் மூலம் முதன் முதலில் பொது ஜனத்தை அடைய முயன்றார். அவர்களுக்காக பேசும் போது அவர்களது பேசும் மொழியை உபயோகப்படுத்தினார் என எதிர்பார்க்கலாம். ஆனால் புலே இன்னும் கொஞ்சம் ஆழமாகவே சென்றார். பொது ஜனக் கல்விக்காக அவர் எழுதாத போது கூட வழமையான மராட்டிய மொழி போல் இல்லாமல் வித்தியாசமாக அவரது காலத்தில் தோற்றம் அளித்தது. உண்மையான மராட்டிய மொழி சமஸ்கிருத மொழி கலந்த பிராமணீய தாக்கம் கொண்டதாக இல்லாமல் பொது ஜனங்களின் மொழியாகவே இருக்க வேண்டும் என்று புலே அதற்கு மறு உருவம் கொடுப்பதில் கவனமாக இருந்தார்.
இந்த இடத்தில் மிக ஆர்வம் தரும் இன்னுமொரு கருத்தினை பதிவு செய்தல் வேண்டும். புலேயின் தனிப்பட்ட உதாரணம் தவிர மற்ற பத்தொன்பதாம் நூற்றாண்டு மராட்டிய நூல்களில் ஏழை முகமதிய விவசாயியோ அல்லது கைத்தொழிலாளியோ பேசப்படவில்லை. ஒவ்வொரு முறையும் இடம் கிடைக்கும் போதெல்லாம், ஏழை மராட்டிய முகமதியன் பேசிய வார்த்தைகள் அல்லது சொல்லாடல்களை புலே உபயோகப்படுத்தினார். ராணடேக்கு எழுதிய கடிதத்தின் கடைசி வரி இதற்கு நல்ல உதாரணமாகும்: எப்படியாவது இந்த முதியவனின் வணக்கத்தை ஏற்றுக் கொள்ளவும் தீர்க்கதரிசி முகம்மது பற்றி ஒரு கவிதை எழுதினார். நம் காலத்தைச் சேர்ந்த மத அடிப்படைவாதிகள் உட்படுத்தும் கடுமையான தத்துவக் கொள்கைகளுக்கான பரீட்சையில் இந்தக் கவிதை வெற்றி பெறாது. ஆனால் முகம்மது இஸ்லாம் மதத்தில் தாராளமான முற்போக்கான சாரத்தைக் காட்டியவர் என்பது புலேயின் கருத்து.
தற்கால சமூக உண்மையை மொத்த ரூபத்தில் கண்டு உணரும்படியான ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்று புலே முயன்றார். சமூக மாற்றத்தை உருவாக்க வல்லவர் எவரும் செய்வதைப் போலவே இறந்த காலம் மற்றும் நிகழ் காலத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டார். இரு ஜாதி சமூகக் கட்டமைப்பை தூக்கி எறிவதற்காக அதைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள முயன்றார். பிராமணர்களைப் போல சமகாலத்தில் கிறிஸ்தவ மத சேவகர்கள் பழைமைவாதிகளாகவோ எதிர்ப்பாளர்களாகவோ இருக்கவில்லை என்று அவர் நினைத்தது ஒரு உதாரணம். மத சேவகர்கள் இன உணர்வோடும் காலனியாதிக்கத்திற்கு ஆதரவாகவும் எப்படியெல்லாம் எந்த காரணங்களுக்காக அப்படி இருந்தனர் என்பது பண்டித ராமபாய் எதிர்நோக்கிய பிரச்சினை. இதுபோன்ற கேள்வியை புலே எழுப்பவில்லை.
திருத்திய ரத்னாவில் சிலை வழிபாட்டிற்கு எதிரான கடுமையான வாதத்தைக் காணலாம். ஒரு கிறித்துவ மதசேவகரை சிலைகளை உடைப்பவராக, அதுவும் கிறித்துவ சிலைகளல்லாது இந்து சிலைகளை உடைப்பராக மாற்றியுள்ளார். பக்தி இயக்கத்தையும், அதிலிருந்த உருவ வழிபாட்டினையும் புலே பெரிது பண்ணவில்லை. சில நூல்களில் புலேயால் தாக்கப்பட்ட தியானேஷ்வர் உருவ வழிபாட்டினை எதிர்த்துக் கவிதைகள் எழுதியுள்ளார். மராட்டிய சூத்திராதி சூத்திரர்களின் நம்பிக்கைக்கு மிகவும் பாத்திரமான பழக்கங்களை தாக்குவது போல் அவர் தனது வாதங்களை அமைக்கவில்லை. மத சேவகர்களின் செயல்பாட்டினை சரிவர முழுமையாகப் புரிந்து கொள்ளாததால் வந்த விளைவு. ஏகாதிபத்தியம் பற்றியும் காலனியாதிக்கம் பற்றியும் அவர் கொண்டிருந்த புரிதல் இத்தோடு தொடர்புடையது.
மிகவும் கவனமாக ஆராய வேண்டிய ஒரு கேள்வியும் உள்ளது. ஏகாதிபத்தியம் பற்றிய வாதங்கள் இன்றைய மகாராஷ்டிரத்தில் இல்லையென்றே சொல்லலாம். காரல் மார்க்ஸ் புரிந்து கொண்டது போல் இந்தியாவில் ஆங்கில ஆட்சியைப் பற்றி புலே ஓரளவு புரிந்திருந்தார். 1853 ஆம் ஆண்டில் மார்க்ஸ் இவ்வாறு எழுதினார், இந்தியாவில் இங்கிலாந்து இரண்டு வகையான சேவை செய்ய வேண்டியுள்ளது. ஒன்று அழிக்கும் பணி. அதாவது பழைய ஆசிய சமூக முறையை அழித்தொழிப்பது. மற்றொன்று ஆக்கும் பணி.
அதாவது இந்தியாவில் மேற்கத்திய சமுதாயத்திற்கான பொருளாதார அஸ்திவாரத்தை அமைப்பதுதான் ஆங்கிலேய ஆட்சியின் எதிர்கால விளைவாக இருக்கும் என மார்க்ஸ் எழுதினார். ஆனால் ஆங்கில ஆட்சியில் இந்தியாவின் எதிர்காலம் பற்றி புலே சிந்தித்தார். பிராமண சமூக அமைப்பை முற்றிலுமாக ஆங்கில ஆட்சி முறை அழிக்க முடியும் என்றால் அது வரவேற்கக் கூடியதாக இருக்கும் என அவர் கருதினார். புதிய சமத்துவ சமூகத்திற்குரிய நிர்வாக பொருளாதார ரீதியான அடித்தளத்தை ஆங்கில அரசாட்சி அமைத்து தரும் என்று நம்பினார். கட்டாயமாக அது நடந்தே தீரும் என்பதில் அவ்வளவு நிச்சயம் அவருக்கில்லை. ஆதலால் அவர் நம்பினார் என்ற சொல் உபயோகப்படுத்தப்படுகிறது. மக்களுடைய தேவைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் ஆங்கில அரசின் செயல்பாடு எரிச்சலூட்டும் வகையில் மிகவும் காலம் தாழ்த்துவதாக இருந்தது பற்றிய கருத்தில் ஓரளவிற்கு அவரிடம் ஒரு இரட்டைத் தன்மை காணப்பட்டது. மார்க்ஸ் மற்றும் புலே இரண்டு வேறுபட்ட கோணத்திலிருந்து கண்டு கொண்ட அதனது அழிக்கும் சக்தி மிக முக்கியமானது. அதையே இருவரும் எதிர்பார்த்தனர். ஏகாதிபத்தியம் பற்றிய புலேயின் கருத்து சரித்திர கண்ணோட்டத்தில் அமைந்தது என்று வாதிடலாம்.
ஏகாதிபத்தியம் தர்க்கத்திற்குரியதாக புலே கருதவில்லை. ஆங்கிலேயே ஆட்சியாளர்கள் கீழ்மட்ட மக்களிடம் அன்பாக இல்லை என்றும் நினைக்கவில்லை. ஆங்கில சட்ட அமைப்பில் புலே நம்பிக்கை கொண்டிருந்தார். விவசாயிகளிடமும், தொழிலாளர்களிடமும் சுரண்டல் தன்மையைக் காட்டுவதிலும் அநியாயமாக நடப்பதிலும் கொஞ்சமும் ஆங்கில சட்டத்துறை குறைத்துக் கொள்ளவில்லை. அவரது காலத்திலேயே ஆங்கில அரசாங்கத்தை எதிர்த்து நடந்த சூத்திராதி சூத்திரர்களின் கிளர்ச்சியில் அவருக்குள்ள அவநம்பிக்கை ஆங்கில அரசின் மீது அவர் கொண்டிருந்த ஆர்வத்தை காட்டுகிறது. இதற்கு ஒரு எடுத்துக் காட்டாக உமாஜிநாயக் தலைமையில் நடந்த கிளர்ச்சியைக் கூறலாம்.
பிராமண தேசியத்தின் உயர்ந்தோர் கூட்டத்தைப் பற்றி பற்றி கெய்ல் ஓம்வெட் கூறும் கருத்துக்கள் இதுபோல அமைந்துள்ளன. பி.டி. ராணடே இப்புத்தகத்தைப் பற்றிய தனது விமர்சனத்தில் ஒரு கேள்வியை எழுப்புகிறார், இது ஒரு மார்க்சிய கண்ணோட்டத்தின் படியான ஆய்வா? மார்க்சியம் புரிவதற்குரிய மூலமாகவும் அதுவே மிகச்சரியான கொள்கையாகவும், மனித சமூகத்தை புரிந்து கொள்ளவும், மாற்றவும் வல்லது என ஒம்வெட் எண்ணுவதால் இந்தக் கேள்வி மிகவும் சரியானது. இன்னும் ஆழமான ஒரு கேள்வியும் எழலாம். பிராமண உயர்ந்தோர் கூட்டம் எந்த வகையில் தேசியமாகும்? பிராமண உயர்ந்த அறிவு ஜீவிகள் என்ற வேறுபாட்டினை ஒருவர் ஏற்றுக் கொண்ட போதிலும், அதே பக்கத்தில் மற்ற வகுப்பினர்களும், உழைக்கும் மக்களும் இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டியது அவசியமாகிறது. உதாரணமாக வாசுதேவ் பாதக் என்ற பிராமணன் ரொமோசிஸ் உடன் சேர்ந்து இயங்கியதை புலே பொருட்படுத்தவில்லை. அதன் விளைவாக புலேயும் அவரது தோழர்களும் சீடர்களும் ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தைப் பற்றிய மிதமான கருத்துக்களைக் கொண்டனர். இறுதியாக தேசிய இயக்கத்தின் அடிப்படையை இழந்தனர்.
இதே போன்ற நிகழ்வினை இன்றும் நாம் காணலாம். இன்றைய நிலையில் இன்னும் மோசமான சூழ்நிலையாக உள்ளது. இன்றைய தேசிய அறிவு ஜீவிகள் தங்களது கொள்கைகளில் உலகமயமாகியும் உலகம் தழுவிய கண்ணோட்டம் கொண்டுள்ள சூழலில் வாழ்ந்து வருகின்றோம். வெளிறிய கண்கள் கொண்ட சிவந்த மக்கள் என்று பிராமணர்களைப் பற்றிய புலேயின் கருத்து இன்றும் உபயோகமாக உள்ளது. உள்ளூர் பிராமணர்கள் உலகலாவிய பிராமணர்களுடன் உறவாடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சூத்திராதி சூத்திரர்களிடையே ஏகாதிபத்தியம் பற்றிய கவனம் குறைந்து கொண்டே வருகிறது. அறிவு ஜீவிகள் ஏகாதிபத்தியத்தை ஒரு பிரச்சினையாக கருதுவது இல்லை. உள்ளூர் பிராமணர்கள் வாஷிங்டன் பிராமணர்களின் விளையாட்டை விளையாடுகிறார்கள். ஆனால் உள்ளூர் பிராமணர்களுக்கும் பிறநாட்டு பிராமணர்களுக்கும் உறவு எதுவுமில்லை என்று நடித்துக் கொண்டே சூத்திராதி சூத்திரர்களும் இந்த விளையாட்டை ஒட்டியே செல்கின்றனர். சூத்திராதி சூத்திரர்களுக்காக பரிந்து பேசிய சமூக அரசியல் இயக்கங்கள் இவர்களை ஒன்று சேர்ப்பதற்காக வேலை செய்துள்ளனர். ஒரு புதிய கண்ணோட்டமும் கூடுதல் செரிவான கொள்கைப் பிடிப்பும், ஏகாதிபத்தியம் குறித்து எழுந்தால் மட்டுமே புலேயின் கருத்தோட்டம் உபயோகம் உள்ளதாகவும், மாற்றங்களுக்கு உதவுவதாகவும் அமையும் என்று பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.
மராட்டிய சமுதாய இயக்கங்களுக்கும், ஒன்றுபட்ட இடதுசாரிகளுக்குமுள்ள உறவு பற்றியும் இதுபோலவே பேச வேண்டியுள்ளது. இடதுசாரிகள் தேவையில்லாதவர்கள் என்ற கருத்தை நிலை நிறுத்துவதற்காக புலேயையும் அம்பேத்காரையும் உபயோகப்படுத்துகிறார்கள். சரத் பட்டீல் தனது எழுத்துக்களில் மார்க்ஸ், புலே மற்றும் அம்பேத்காரை இணைத்துப் பேசுகிறார்.
நமது சமுதாயத்தில் உள்ள உண்மையான பிரச்சினை வலதுசாரிகளின் வெறித்தனமான குறுகிய நோக்கு காரணமல்ல. இடதுசாரிகளின் வளைந்த கொடுக்காத, மரபு பிறழாத தன்மையே முக்கிய காரணம் என்கிறார். ஏகாதிபத்தியம் பற்றி மிகவும் அரிதாகவே பேசுகிறார். மகாராஷ்டிரத்திலுள்ள இன்றைய சமூக அரசியல் குழுக்களின் நிலையும் இதுபோலவே உள்ளது என்பதும் உண்மை.
இந்த மாதிரியான அணுகுமுறை மிக முக்கியமான ஒரு கருத்தை நழுவவிடுகிறது. ஒரு அமைப்பை உருவாக்குபவரோடு எப்படி தொடர்புபடுத்துவது? இன்றைய பிரச்சினைகளோடு அந்த அமைப்பினைப் பற்றிய விளக்கம் செய்தல் வேண்டும். ஏகாதிபத்தியம் குறித்த புலேயின் மிதவாத கருத்துக்களை ஒதுக்காமல் புலேயின் பிற கருத்துக்களுக்கு உருப்படியாக விளக்கம் கூற முடியாது.
பிரச்சினையின் உண்மை இதுதான். சமுதாயத்தை அடிப்படையிலிருந்தே உருமாற்றம் செய்ய வேண்டும் என்று நினைக்கின்ற அத்துனை ஆற்றல்களுக்கும் உரியவர்கள் சூத்திராதி சூத்திரர்கள். அவர்களை எதிர்த்து நிற்பவர்கள் பிராமணர்கள். தேசியத் தலைவர்களை பிராமணர்கள் என்று பழிசொல்லும் தவறுகளும், அதுபோல கம்யூனிஸ்ட்டுகளை பிராமணக் கம்யூனிஸ்ட் என்று பெயரிடும் தவறுகளும் நிறுத்தப்படுவதற்கு இந்தக் கருத்தினை புரிந்து கொள்ள வேண்டும். எதிர்வரும் தடைகளை பார்க்காவிடில், எல்லா இயக்கங்களும் தேவையற்றவை என்ற நிலை உருவாகும். படைப்புத் திறன் கொண்டவர், முற்போக்குவாதி என்ற கண்ணோட்டத்தோடு புலேயின் நூல்கள் வாசிக்கப்பட வேண்டும்.
அமைப்புக்களை உருவாக்குபவர்கள் இவ்வாறே புரிந்து கொள்ளப்பட வேண்டும். அவரது கூடாரம் மிக பரந்து பட்டது. வேகம் கம்பீரமானது. அவரது காலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளின் தன்மைகளின் படியே அதைக் கொள்கை ரீதியாகப் பார்த்தார். மதம், வர்ணாசிரமம், சடங்குகள், மொழி, இலக்கியம், ஆங்கிலேயே ஆட்சி பழங்கதைகள், ஆண் – பெண் சமத்துவம், விவசாயத்தில் விளைச்சலுக்குரிய பிரச்சினைகள். இந்தப் பட்டியல் இன்னும் அதிகரிக்கலாம். இவ்வளவு பெரிய பட்டியலை வெளியிட்ட இந்திய நபர் 19ஆம் நூற்றாண்டில் யாருமில்லை. அப்படியெனில் புலே ஒரு சமூக சீர்திருத்தவாதியா? இல்லை என்பதே இதற்குரிய பதில். பரந்த மனம் கொண்ட மனித தேசியவாதியாக மட்டும் இருந்தால் கூட சமூக சீர்திருத்தவாதியாக முடியும். ஆனால் புலே புரட்சியாளர். இந்திய சமுதாயத்தில் இருந்த வகுப்புப் பிரிவுகளை அடையாளம் கண்டு கொண்ட அறிஞர்களில் முக்கியமானவர். அவருக்கென்று முழுமை யான ஒரு அமைப்பு ரீதியான கருத்துக்களை கொண்டிருந் தார். துவை வர்னிக் என்ற இந்திய சமூக கட்டமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து, அதில் சூத்திராதி சூத்திரர்கள் சமூகப் புரட்சியை வழிநடத்தும் செயல் வல்லவர்கள் என்று கண்டார்.

மாவீரர் நாள் நவம்பர் 27மாவீரர் நாள் நவம்பர் 27 

தமிழீழத்தில் மாவீரர் நாள் என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களையும், அவர்களோடு சேர்ந்து போரிட்டு உயிர் ஈந்த
எல்லைப்படை துணைப்படை வீரர்களையும், புலிகளோடு இணைந்து உயிர் ஈந்த ஈழ புரட்சிகர மாணவர் இயக்க உறுப்பினர்களையும், மற்றும் குட்டிமணி,
தங்கத்துரை போன்ற வேறு சில ஈழப்போராட்ட போராளிகளையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செய்து, பெருமைப்படுத்தும் நாள் ஆகும். இதற்குரிய நாளாக நவம்பர் 27 ஆம் நாள்
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் 1989 ஆண்டில் அறிவிக்கப்பட்டது. நினைவுறுத்தும் நாள் போன்று மற்ற நாடுகளில் போர்வீரர்களை நினைவு கூரும் நாட்களோடு மாவீரர் நாள் ஒப்பிடத்தக்கது.
ஈழத்தமிழர் அனேகர் வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும், ஈழப் போராட்டத்தில் மடிந்த வீரர்களுக்கு மரியாதை செய்வர். மற்ற இயக்கங்களுடைய போராளிகளுக்கும் இவ்வாறு வணக்கம் செலுத்தும் நாட்கள் உண்டு.
வரலாறு
விடுதலைப் புலிகள் ஈழப் போரில் இறந்த போராளிகளை நினைவுகூருவது, மதிப்பது தமது அடிப்படைக் கடமைகளில், கொள்கைகளில் ஒன்றாகக் கருதுகிறார்கள். மாவீரர் நாளாக நவம்பர் 27
விடுதலைப் புலிகளால் 1989 அறிவிக்கப்பட்டது. தமிழீழ மாவீரர் நாளாக இந்நாளைத் தேர்ந்தெடுத்ததற்கு தமிழீழ போராட்ட வரலாற்றுடன் இணைந்த ஒரு முக்கிய காரணம் உள்ளது. இந்த நாளில்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது போராளியான
சங்கர் (செ. சத்தியநாதன்) வீரமரணம் அடைந்தார்.
மாவீரர் எண்ணிக்கை
முதன்மை கட்டுரை: தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் எண்ணிக்கை
கடைப்பிடிப்பு
தமிழீழம்
போராட்டக் காலத்தில் மாவீரர் நாளில் பல மாவீரர் குடும்பங்கள் மாவீரர்களின் கல்லறைக்களுக்கு சென்று அஞ்சலி செலுத்துவர். கொடியேற்றுதல், ஈகைச்சுடரேற்றுதல், மலர்தூவி அஞ்சலி செய்தல் என்பன மாவீரர்நாளின் முக்கிய நிகழ்வுகளாக இடம்பெறுகின்றன. அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியத்தலைவரின் மாவீரர்நாள் உரையும், விடுதலை வேட்கையையும், வீர உணர்வுகளையும் தரக்கூடியதான கலைநிகழ்வுகளும், பல்வேறு நினைவுகூர் நிகழ்வுகள், உரைகளும் இடம்பெற்றன. மாவீரர் வாரத்தில் மாவீரர் குடும்பங்களின் உறுப்பினர்களும் கௌரவிக்கப்பட்டனர். 2009 ஈழப்போராட்டத் தோல்வியின் பின் இலங்கை அரசால் மாவீரர்நாள் துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டும், மாவீரர்நாள் நினைவு நிகழ்வுகள் தடைசெய்யப்பட்டும் உள்ளன.
புலம்பெயர் நாடுகள்
மாவீரர் துயிலுமில்லம் செயற்கை முறையில் அமைக்கப்பட்டு நினைவுகூரப்படல், இடம்: ஜெர்மனி
புலம்பெயர் நாடுகளிலும் தமிழீழத்தில் கடைப்பிடிக்கப்படும் அத்தனை முறைகளும் மாவீரர்நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் மாவீரர்துயிலும் இல்லமும், கல்லறைகளும் செயற்கை முறைகளில் வடிவமைக்கப்பட்டு அதற்கென ஒரு மண்டபத்தில் வைத்து மாவீரர்கள் நினைவுகூரப்படுகிறார்கள். முன்னர் புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் மாவீரர்நாட்கள் அந்தந்த நாடுகளின் விடுமுறைகளோடு ஒட்டி, ஈழமக்களின் வசதிக்கேற்றபடி நாள் குறிக்கப்பட்டு நினைவுகூரப்பட்டது. தற்போது சில ஆண்டுகளாக அந்த நிலையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பெற்று மாவீரர்நாளான நவம்பர் 27ஆம் நாளிலேயே அனேகமான புலம்பெயர் நாடுகளில் மாவீரர்நாள் நிகழ்கிறது.
கொடியேற்றுதல்
உயிரிழந்த மாவீரர் ஒருவரின் தாய், தமிழீழத் தேசியக்கொடியை ஏற்றுகிறார். இடம்: ஜெர்மனி; ஆண்டு: 2002

முதன்மை கட்டுரை: தமிழீழத் தேசியக்கொடி

தமிழீழத் தேசியக்கொடி இலங்கையின்
வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகப் பிரதேசமான தமிழீழத்தின் தேசிய கொடியாக, தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தின் போது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியிலுள்ள எழுத்துக்கள் நீக்கப்பெற்ற கொடி, விடுதலைப் புலிகளின் தலைவர்
வே. பிரபாகரனால் 1990ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அத்துடன் புலிகளின் நிழல் ஆட்சி நடந்த பகுதிகளில்
 அனைத்து நிகழ்வுகளின் போதும் ஏற்றும் வழக்கு உருவாகியது. அதனைத் தொடர்ந்து உலகெங்கும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில், இக்கொடியை ஏற்றும் வழக்கம் தொடர்ந்தது. தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டனர் என்று கருதும் நிலையிலும், புலம் பெயர் நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களால் தேசியக்கொடியாக தமிழீழக் கொடியை தம் இனத்தின் தேசிய கொடியாக உயர்த்தி வருகின்றனர். ஈழத் தமிழருக்கு ஆதரவான நிகழ்வுகளின் போது
இந்தியாவிலும் இக்கொடி உயர்த்தப்பட்டு வருகின்றது. உலகின் ஏனைய நாடுகளின் மத்தியிலும் தமிழீழத் தேசியக் கொடி பலவேறு நிகழ்வுகளின் உயர்த்தப்பட்டு தமது தேசியத்தின் தனித்துவத்தை நிலை நிறுத்தும் முயற்சிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இலங்கையின் தேசிய கொடி உயர்த்தப்படும் அதே களத்தில் தமிழீழத் தேசியக் கொடியையும் உயர்த்திய நிகழ்வுகளும் உள்ளன.
வரலாறு
விடுதலைப் புலிகளின் கொடி 1977ம் ஆண்டு தொடக்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியாக இருந்து வருகிறது. தமிழீழ விடுதலைப் போரில் மரணமடைந்தவர்களை நினைவுகூர்ந்த இரண்டாவது மாவீரர் நாளில் ( நவம்பர் 21 , 1990 ) முதல் தடவையாக பிரபாகரனது பாசறையில் ஏற்றி வைக்கப்பெற்றது.
நிறங்களும் குறிக்கோளும்
இக்கொடியில் மஞ்சள், சிவப்பு, கறுப்பு, வெள்ளை ஆகிய நான்கு நிறங்கள் உள்ளன.
தனிப்பாங்கான தேசிய இனமான தமிழீழத் தேசிய இனம் தனது சொந்த மண்ணில் தன்னாட்சி அமைத்துக்கொள்ள விளைவது அதனது அடிப்படை அரசியல் உரிமையும் மனித உரிமையுமாகும். தமிழீழ மக்கள் நடத்துகின்ற தேசிய விடுதலைப் போராட்டம் அறத்தின்பாற்பட்டது, நியாயமானது என்பதையும் தமிழீழத்தேசம் எப்பொழுதும் அறத்தின் பக்கம் நிற்குமென்பதையும் மஞ்சள் நிறம் குறித்து நிற்கிறது.
தேசிய விடுதலை பெற்ற தமிழீழத் தனியரசை அமைத்துவிடுவதால் மட்டும் முழுமையான விடுதலையைப் பெற்றுவிட்டதாகக் கொள்ளமுடியாது. தமிழீழக் குமுகாயத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்படவேண்டும். சாதிய, வகுப்பு முரண்பாடுகள் அகற்றப்படவேண்டும். பெண்ணடிமைத்தனம் நீக்கப்படவேண்டும். இதற்குக் குமுகாய அமைப்பிற் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். சமன்மையும், சமதருமமும் குமுகாய நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும். இத்தகைய புரட்சிகரமான குமுகாயமாற்றத்தை வேண்டிநிற்கும் தமிழீழ அரசியல் இலக்கைச் சிவப்பு நிறம் குறியீடு செய்கின்றது.
விடுதலைப்பாதை கரடுமுரடானது. சாவும் அழிவும் தாங்கொணாத் துன்பங்களும் நிறைந்தது. இவற்றைத் தாங்கிக் கொள்ளவும் விடுதலையடைந்தபின் ஏற்படப் போகும் நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு தேசத்தைக் கட்டியெழுப்பவும் பாதுகாக்கவும் உருக்குப் போன்ற உறுதியான உள்ளம் வேண்டும். அசையாத நம்பிக்கை வேண்டும். தளராத உறுதி வேண்டும். இவற்றைக் கறுப்பு நிறம் குறித்துக் காட்டுகின்றது.
விடுதலை அமைப்பும், மக்களும், தலைவர்களும் தூய்மையையும், நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டுமென்பதை வெள்ளை நிறம் குறித்து நிற்கிறது.
தமிழீழ தேசியக்கொடிப் பயன்பாட்டு விதிக்கோவை
பெருமையும் கொடி வணக்கமும்
நாட்டைப் போற்றி வணங்குதற்கு ஈடாக தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்தப்படுகின்றது. தேசியக்கொடியை வணங்குவது, நாட்டை வணங்குவது போலாகும். நாட்டின் தலைவர், படை, ஆட்சி என்பவற்றைவிடவும் உயர்ந்ததாகத் தேசியக்கொடி மதிக்கப்படுகின்றது. எனவேதான் எந்தவொரு நாட்டிலும் எந்தச் சிறப்பு நிகழ்வுகளின்போதும் நாட்டின் தலைவர், படை வீரர், அரசுப் பணியாளர், குடிமக்கள் அனைவரும் கொடிவணக்கம் செய்கின்றனர்.
நாட்டின் எல்லைப்புறப் பகுதிகளிலும், குறிப்பிட்ட சில பொது இடங்களிலும் தேசியக்கொடியை நாள்தோறும் பறக்கவிடலாம்.
வெளிநாடுகளிலுள்ள எமது பணியகங்களிலும் தூதரகங்களிலும் பகலில் எந்நாளும் தேசியக்கொடியைப் பறக்க விடலாம்.
தேசியக்கொடி ஏற்றப்படும்போது அனைவரும் எழுந்துநின்று வணக்கம் செலுத்துதல் வேண்டும்.
+ கொடிவணக்கத்தின்போது சீருடையில் இருக்கும் பணி ஆளணியினர் (படையணிகள், சாரண இயக்கத்தவர், முதலுதவிப்படை முதலியன) தத்தமது பணிகளுக்குரிய கட்டளைகளில் விதித்துரைக்கப்பட்டவாறு முறைப்படி கொடிவணக்கம் செலுத்துவர்.
சீருடை அணிந்தவர்கள் தவிர ஏனையோர் தலையணி (தொப்பி) அணிந்திருப்பின் தேசியக்கொடி ஏற்றப்படும் வேளையில் அவற்றை வலது கையாற் களைதல் வேண்டும். தலையணியைக் களைந்த பின்பு வலது கையை இடப்பக்க நெஞ்சின் மீது வைத்துக் கொடி வணக்கம் செலுத்தவேண்டும். தமிழீழக் குடியுரிமையாளரல்லாதாரும் வலது கையை இடப்பக்க நெஞ்சின் மீது வைத்து வணக்கம் செலுத்தலாம். அல்லது கவன நிலையில் (Attentntion) நிற்கவேண்டும்.
வணக்கத்துக்குரிய தேசியக்கொடியை உடையாக அணியவோ, உடையின் பகுதியாகப் பொருத்தவோ கூடாது.
தேசியக்கொடியிற் பொறிக்கப்பட்டுள்ள இலச்சினையைப் பெறுமதியான பொருட்களிலோ, உடைகளிலோ பொறிக்கலாம்.
தேசியக்கொடியில் எவ்வகையான அடையாளங்களையோ, எழுத்துக்களையோ, சொற்களையோ, எண்களையோ, வடிவங்களையோ, படங்களையோ எழுதவோ, வரையவோ கூடாது.
தற்காலிகமாகப் பயன்படுத்திவிட்டு வீசப்படும் எப்பொருளிலும் தேசியக்கொடியைப் பதிக்கக்கூடாது.
தேசியக்கொடி நிலத்தில் வீழ்வதை எப்பாடுபட்டேனும் தவிர்க்க வேண்டும். ஒருவேளை நிலத்தில் வீழ்ந்து விட்டால் உடனடியாக நிலைமையைச் சீராக்கி விடவேண்டும். கொடியில் அழுக்குப்படிந்துவிட்டால் உடனடியாகக் கழுவிக் காய விட்டபின்பே பயன்படுத்தவேண்டும்.
தேசியத்துயர நிகழ்வின்போது தேசியக்கொடியை அரைக்கம்பத்திற் பறக்க விடப்படுவதன் மூலம் நாட்டின் துயரம் உணர்த்தப்படுகின்றது. கொடிக்கம்பத்தின் நுனியிலே பறக்கின்ற கொடி நடுப்பகுதிவரை இறக்கப்பட்டு அரைக்கம்பத்திற் பறப்பதே நாட்டின் மிகுதுயரை உணர்த்துவதாயின் தேசியக்கொடி சிதைவுறுவதோ, கீழே வீழ்த்தப்படுவதோ, வீசப்படுவதோ, கால்களில் மிதிக்கப்படுவதோ எண்ணிக்கூடப் பார்க்க முடியாத இழி நிலையாகும்.
தேசியக்கொடியின் நிறம் மங்கிப்போனாலோ வேறு ஏதாவது வகையிற் பழுதடைந்து பறக்கவிடுவதற்குரிய நிலையை இழந்துவிட்டாலோ அதனை உரியமுறையில் எரித்து அழித்துவிட வேண்டும். பழந்துணியாகப் பயன்படுத்துவதோ, குப்பைத்தொட்டியிற் போடுவதோ தேசத்திற்குச் செய்யப்படும் அவமானமாகும். எனவே அவ்வாறு செய்யக் கூடாது.
கொடிவணக்கத்தின்போது செய்யப்படக் கூடாதவை
தேசியக்கொடிக்கு வழங்கப்படுகின்ற மதிப்பு, சிறப்பு என்பன அந்த நாட்டைச் சென்றடைவது போன்று, தேசியக்கொடிக்கு ஏற்படுத்தப்படும் இழிவு, புறக்கணிப்பு என்பனவும் அதன் நாட்டையே சென்றடையும். எனவேதான் தேசியக்கொடிக்கு ஏற்படுத்தப்படும் இழிவு பெருங்குற்றமாகக் கருதப்பட்டு அக்குற்றத்துக்கு மிகுதியான ஒறுப்பு (தண்டனை) வழங்கப்படுகின்றது.
தேசியக்கொடிக்கு மதிப்புச் செலுத்துகின்ற கொடிவணக்க நிகழ்வுக்கு நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட சீரான ஒழுங்குமுறை வரையறுக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப் படுகின்றது. கொடியேற்றம், கொடிவணக்கம் என்பனவற்றுக்கான ஒழுங்குமுறை, நடைமுறை நாட்டுக்கு நாடு வேறுபட்ட முறையில் அமைந்திருக்கும். அந்த வரையறுக்கப்பட்ட ஒழுங்கு முறைகளை மீறுவது தேசியக்கொடிக்கு இழைக்கப்படுகின்ற இழிவாகவே கொள்ளப்படும்.
தேசியக்கொடியைத் தலைகீழாகப் பறக்கவிடக்கூடாது.
மடித்தபடி மேலே ஏற்றி அங்கிருந்து விரிந்து பறக்கும் வகையில் தேசியக்கொடியை ஏற்றுதல் கூடாது. தேசியக்கொடியைக் கீழிருந்து பறந்தபடி இருக்கும் நிலையிலேயே ஏற்றவேண்டும்.
தேசியக் கொடிப் பாடல்
பாடல்: ஏறுதுபார் கொடி
ஏறுது பார் கொடி என்ற பாடல் புதுவை இரத்தினதுரையால் இயற்றப்பட்டு, ] தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்படும் போது பாடப்படுகிறது.
ஏறுதுபார் கொடி ஏறுது பார்
ஏறுதுபார் கொடி ஏறுது பார் – இங்கு
ஏறுதுபார் கொடி ஏறுது பார் – தமிழ்
ஈழத்தின் வேதனை தீர்த்தகொடி – எட்டுத்
திக்கிலும் மானத்தைச் சேர்த்தகொடி
காலத்தை வென்றுமே நின்றகொடி – புலி
காட்டியபாதையில் சென்ற கொடி
(ஏறுதுபார்)
செக்க நிறத்திலே வேங்கை நடுவிலே
சீறிடும் கொடியிது – தமிழ்
மக்களைக் காத்த நம்மானமா வீரரை
வாழ்த்திடும் கொடியிது – புலி
வீரத்தின் கொடியிது – மா
வீரனின் கொடியிது (ஏறுதுபார்)
எத்தனை எத்தனை வேங்கைகள் ரத்தத்தில்
ஏறிய கொடியிது – பெரும்
சத்திய வேள்வியில் செந்தமிழ் மீதினில்
சாற்றிய கொடியிது – தமிழ்
ஈழத்தின் கொடியிது – புலி
ஏந்திய கொடியிது (ஏறுதுபார்)
சாதிகள் சண்டைகள் சாய்த்து விழுத்திய
சாதனைக் கொடியிது – சங்கு
ஊதி முழங்கிட ஊர்மனை யாவிலும்
உலவிய கொடியிது – சம
தர்மத்தின் கொடியிது – எங்கள்
தாயவள் கொடியிது – (ஏறுதுபார்)
ஆயிரமாயிரம் பேரென வேங்கைகள்
ஆக்கிய கொடியிது – பிர
பாகரன் என்றிடும் காவிய நாயகன்
போற்றிடும் கொடியிது – தமிழ்த்
தேசத்தின் கொடியிது – எங்கள்
தேசியக் கொடியிது (ஏறுதுபார்)

மாவீரர் நாள் நிகழ்வுகளில் தமிழீழத் தேசியக்கொடியை ஏற்றிப் போற்றுதல் மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. தமிழீழத் தேசியக் கொடி மாவீரர் குடும்ப உறுப்பினர்களால் ஏற்றப்படும். கொடியேற்றப்படும் போது
புதுவை இரத்தினதுரையால் எழுதப்பெற்ற ஏறுது பார் கொடி ஏறுது பார்... என்ற உணர்வு மிக்க பாடல் ஒவ்வொரு முறையும் ஒலிக்க விடப்படும்.
மாவீரர் நாள் உறுதிமொழி
உலகத் தமிழர் அனைவரும் மாவீரர் நாளன்று தமிழ் மக்களைக் காக்க இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவர்கள் கண்ட தமிழீழக் கனவை நனவாக்கவும் அரும்பாடு படுவேன் என்றும் உறுதிக்கூறி கீழ்க்கண்ட உறுதிமொழியை எடுப்பார்கள்.
"மொழியாகி,
எங்கள் மூச்சாகி - நாளை
முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை
உருவாக்கும் தலைவன்
வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடு இங்கு
துயில்கின்ற வேங்கை
வீரர்கள் மீதிலும் உறுதி!
இழிவாக வாழோம்
தமிழீழப் போரில்
இனிமேலும் ஓயோம் உறுதி!"
ஈகைச்சுடரேற்றுதல்
ஈகைச்சுடர் ஏற்றப்படுகிறது. இடம்: ஜெர்மனி
தொடக்க காலங்களில் மாவீரர் நாளில் ஈகைச்சுடரேற்றுவது நள்ளிரவு 12.00 மணிக்கு என்றிருந்தது. பின்னர் அது மாலை 06.05 மணிக்கு என்று மாற்றப்பட்டு விட்டது. அதற்கும் காரணம் உள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதற் களப்பலியான சங்கர் வீரமரணமடைந்தது நவம்பர் 27, 1982 அன்று மாலை 6.05 மணிக்கு. லெப். சங்கர் தனது தாய் நாட்டுக்காக தன் இன்னுயிரை அணைத்துக் கொண்ட அதே நாள், அதே நேரமான 6.05 மணியே தமீழீழ மாவீரர்நாளில் ஈகைச்சுடரேற்றும் நேரமானது.
ஈசைக்சுடரேற்றும் போது மாவீரர்நாள் பாடல் பாடப்படும்.
மாவீரர்நாள் பாடல்
மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!
இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே
வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!
வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!
உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்!
உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்!
வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!
சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது!
சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது!
எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது!
எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்!
அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்!
உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்!
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்!
எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!
எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
முதன்மை கட்டுரை: மாவீரர் நாள் பாடல்
மாவீரர் நாள் அன்றும் போராளிகளின் இறுதிச் சடங்குகளின் அன்றும் ஒலிக்கப்படும் பாடல் மாவீரர் நாள் பாடல் ஆகும். இந்தப் பாடல் புதுவை இரத்தினதுரை இயற்றியதாகும். வர்ணராமேஸ்வரன் பாடியது. ஈகச்சுடரேற்றும் பொழுது இது பாடப்படுகிறது, அல்லது ஒலிபரப்படுகிறது. [1] இந்தப் பாடல் பின்வருமாறு தொடங்குகிறது:
மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!
இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
மாவீரர் குடும்ப கௌரவிப்பு
மாவீரர் வாரத்தில் மாவீரர் குடும்பங்களின் உறுப்பினர்களும் விடுதலைப்புலிகள் அமைப்பினரால் கௌரவிக்கப்பட்டார்கள். ஆரம்பத்தில் இந்தச் செயற்பாடு தமிழீழத்தில் மட்டுமே கடைப்பிடிக்கப் பெற்றது. அதற்குப் பிறகு வெளிநாடுகளிலும் இந்தக் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.
தமிழீழத்தில்
ஒரு மாவீரனின் நினைவுச்சின்னம் எந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் உள்ளதோ அந்த இடத்துக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் (பெற்றோர்கள், உடன்பிறப்புகள்) அழைத்து வரப்பட்டு மாவீரர் வாரத்தின் மூன்று நாட்கள் அதற்குரிய மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு கௌரவ விருந்தினர்களாகக் கவனிக்கப்பட்டனர்.
புலம்பெயர் நாடுகள்
அதற்கென மாவீரர் வாரத்தின் ஒரு நாளையோ அன்றி மாவீரர் நாளையோ தேர்ந்தெடுத்து அந்த நாளில் மாவீரர் குடும்பத்தினர் கௌரவிக்கப்பட்டார்கள்.


மாவீரர் நாள் உரை


முதன்மை கட்டுரை: மாவீரர் நாள் உரை
மாவீரர்நாள் உரை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் ஒவ்வோர் ஆண்டும் மாவீரர் நாளில் உரைக்கப்பட்டது. இவ்வுரை தமிழீழத்தில் இருந்து ஆற்றப்பட்டாலும் உலகின் பல நாடுகளுக்கும் நேரடி ஒலிபரப்பாகவும், ஒளிபரப்பாகவும் எடுத்துச் செல்லப்பட்டது. இவ்வுரை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் பற்று கொண்டோர்களால் மட்டுமன்றி விடுதலையில் அக்கறை கொண்ட மற்றைய அமைப்பினர்களாலும், மாற்றுக் கருத்துக்கொண்ட அமைப்பினர்களாலும், விடுதலைப்போரையே வெறுப்பவர்களாலும், சாதாரண தமிழ் மக்களாலும், சிங்கள அரசினாலும் கூட மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு செவிமடுக்கப்பட்டது.
கார்த்திகைப் பூ
கார்த்திகைப் பூ
தமிழர்களின் தேசியப்பூவாக, கார் காலத்தில் மலர்ந்திடுவதும், தமிழீழ தேசியக்கொடியின் வர்ணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதும், தமிழீழத் தேசியத் திருநாளாம் மாவீரர் நாள் வருகின்ற திங்களில் கொடிபரப்பி பூத்துக் குலுங்குவதும், தமிழீழ தேசமெங்கும் பரவி முகிழ் விடுவதுமான கார்த்திகைப் பூ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கார்த்திகைப் பூவினை பண்டைத் தமிழ் இலக்கியங்களிலே காந்தள் என்றே அழைப்பர்.

இந்தியாவின் 10வது பிரதமர் வி.பி.சிங் பிறந்த தினம் நவம்பர் 27, 1940.இந்தியாவின் 10வது பிரதமர் வி.பி.சிங் பிறந்த தினம் நவம்பர் 27, 1940.

1931-ம் ஆண்டு ஜுன் மாதம் 25-ந்தேதி அலகாபாத் நகரில் பிறந்த வி.பி.சிங் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை உத்தரபிரதேசத்தில் இருந்த `தையா' சமஸ்தான மன்னர் ஆவார். அந்த மன்னருக்கு 2 மகன்கள். மூத்த மகன் சந்திரசேகர் பிரதாப் சிங். இரண்டாவது மகன்தான் வி.பி.சிங் என்றழைக்கப்பட்ட விஸ்வநாத் பிரதாப் சிங்.

வி.பி.சிங்குக்கு 5 வயதானபோது, மண்டா நகரின் மன்னர் ராஜ்பகதூர் அவரை தனது வாரிசாக தத்து எடுத்துக் கொண்டார். டேராடூன் கர்னல் பிரவுன் பள்ளியில் படிப்பை தொடங்கிய வி.பி.சிங், பின்பு அலகாபாத்தில் உள்ள பாய்ஸ் உயர்நிலைப்பள்ளியிலும், புனே பெர்குஷன் கல்லூரியில் பி.எஸ்.சி.யும் படித்தார்.

அப்போது அணுசக்தி விஞ்ஞானத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த வி.பி.சிங் கல்லூரியில் சிறந்த மாணவராகவும் தேர்ச்சி பெற்றார்.

1950-ல் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. படிப்பை முடித்த வி.பி.சிங், தீவிர அரசியலில் குதித்தார். வினோபாவேவின் பூமிதான இயக்கத்தில் ஆர்வம் கொண்டவர். தனது சொந்த நிலத்தையே அந்த இயக்கத்துக்கு தானமாகக் கொடுத்தார்.

1969-ம் ஆண்டு ஆண்டு உ.பி. சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். 1971-ல் முதல் முறையாக பாராளுமன்றத்துக்கு போட்டியிட்டு எம்.பி. ஆனார். 1974-ம் ஆண்டு இந்திராகாந்தி மந்திரி சபையில் துணை வர்த்தக மத்திய மந்திரி ஆனார்.

இவர் நேரு காலத்தில் அலகாபாத் உள்ளூர் அரசியலில் நுழைந்து விரைவில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் தன் உறுதியான நேர்மையின் காரணமாக புகழ் பெற்றார். இவரின் அரசியல் வாழ்வு முழுக்க நேர்மையாக இருந்து மதிப்பு பெற்றார்.

பிறகு மீண்டும் மாநில அரசியலுக்குத் திரும்பி 1980-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரியாக பணியாற்றினார். 1980 ல் ஜனதா கட்சியிடமிருந்து ஆட்சியை இந்திய தேசிய காங்கிரஸ் கைப்பற்றியது, இந்திரா காந்தி இவரை உத்திரப் பிரதேசத்தின் முதல் அமைச்சராக நியமித்தார். தென் மேற்கு மாவட்டங்கள் வழிப்பறி, கொள்ளை போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. முதல்வரானதும் வழிப்பறி & கொள்ளையை தடுக்க கடும் நடவடிக்கையை மேற்கொண்டார். முழுவதுமாக இக்கொள்ளையை தடுக்கமுடியாததால் இதற்கு தானே பொறுப்பேற்றுக்கொண்டு பதவி விலக முன்வந்தார், இவரின் இச்செய்கை இவருக்கு இந்தியா முழுவதும் பெயர் பெற்று தந்தது. 1983 ல் இவரின் மேற்பார்வையில் சில பயங்கரமான கொள்ளையர்கள் சரண் அடைந்தனர்.

1984ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் இராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் பெருவெற்றி பெற்றது. இராஜீவ் காந்தி முக்கியதுவம் வாய்ந்த நிதி அமைச்சகத்துக்கு இவரை அமைச்சராக்கினார். இராஜீவ் நினைத்தபடி லைசன்ஸ் ராஜ்' முறையை சீராக தளர்த்தி வந்தார். இந்தியாவில் தங்கம் விலை அதிகமாக இருந்ததால் அதிகளவில் தங்க கடத்தல் இருந்துவந்தது. தங்கத்திற்கான வரியை குறைத்தும், கடத்தப்பட்ட தங்கத்தை பிடிக்கும் காவல்துறையினருக்கு அவர்கள் பிடித்த தங்கத்தில் சிறியதை ஊக்கமாக கொடுத்தும் தங்க கடத்தலை கட்டுக்குள் கொண்டுவந்தார். அமுலாக்கப்பிரிவுக்கு அதிக அதிகாரங்களை கொடுத்தார். வரிஏய்ப்பு செய்பவர்களுக்கு எதிராக இப்பிரிவு பல அதிரடி சோதனைகளை நடத்தியது. குறிப்பாக திருபாய் அம்பானி , அமிதாப் பச்சன் போன்ற அதிகாரவட்ட செல்வாக்குள்ள பலர் சோதனைக்குள்ளாகினர். பலர் காங்கிரஸ் கட்சிக்கு நிதி உதவி செய்தவர்கள் ஆனதால் வேறுவழியின்றி இராஜீவ் காந்தி இவரை நிதி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினார். நிதி அமைச்சராக அவர் எடுத்த நடவடிக்கைகள் புகழடைந்ததால் அமைச்சரவையை விட்டு விலக்காமல் அவருக்கு மற்றொரு முக்கிய துறையான பாதுகாப்பு துறை ஒதுக்கப்பட்டது.

பாதுகாப்பு துறை அமைச்சரானதும் பாதுகாப்பு தளவாடங்களை கொள்முதல் செய்யும் முறையை ஆய்வு செய்தார். போபர்ஸ் பீரங்கி பேர ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடு தொடர்பான தகவல்களை இவர் வைத்திருப்பதாகவும் அவை பிரதமரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் தகவல்கள் என்றும் செய்திகள் வர தொடங்கியது. அதைத்தொடர்ந்து இவர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கு பதில் கொடுக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரிலிருந்து இவர் விலகிக்கொண்டார், மக்களவை உறுப்பினர் (அலகாபாத் தொகுதி) பதவியையும் இராஜினாமா செய்தார்.

மக்களவையிலிருந்து விலகியதும் அருண் நேரு & ஆரிப் முகமது கானுடன் இணைந்து ஜனமோர்ச்சா என்ற கட்சியை தொடங்கினார். இவர் பதவி விலகியதால் அலகாபாத் மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் போட்டியிட்டு கடும் போட்டிக்கிடையே காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அனில் சாஸ்திரியை தோற்கடித்தார். ஜனதா கட்சியின் குருவான ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பிறந்த நாளான அக்டோபர் 11 அன்று 1988 ல் ஜனமோர்ச்சா, ஜனதா கட்சி, லோக் தளம், காங்கிரஸ் (எஸ்) ஆகிய கட்சிகள் இணைந்து ஜனதா தளம் என்ற புதிய கட்சியை தோற்றுவித்தனர். ஜனதா தளத்திற்கு வி.பி.சிங் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநில கட்சிகளான திமுக, தெலுங்கு தேசம், அசாம் கன பரிசத் ஆகியவற்றுடன் இணைந்து தேசிய முன்னனி உருவாக்கப்பட்டது, இதற்கு என்.டி.இராமா ராவ் தலைவராகவும், வி.பி.சிங் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தனர்.

காங்கிரஸுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் இருப்பதற்காக இடது சாரி கம்யூனிஸ்டுகளுடனும், வலது சாரி பாஜகவுடனும் தேர்தல் கூட்டணி வைத்து தேசிய முன்னனி 1989 பொது தேர்தலில் போட்டியிட்டது. தேசிய முன்னனி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மக்களவையில் பெரும்பான்மை இடங்களை பெற்றதால் ஆட்சி அமைக்க முடிவு செய்தன. கம்யூனிஸ்டுகளும், பாரதிய ஜனதா கட்சியும் அரசில் பங்கேற்க மறுத்துவிட்டு அரசில் பங்குபெறாமல் வெளியிலிருந்து தேசிய முன்னனி அரசை ஆதரிப்பதாக கூறின.

இராஜிவ் காந்திக்கு மாற்றாக காங்கிரஸ் எதிர் அணியினர் வி.பி.சிங் அவர்களையே தூய்மையான மாற்று பிரதம் வேட்பாளராக முன்னிருத்தி இருந்த போதிலும் டிசம்பர் 1, 1989 அன்று வி.பி.சிங் அவர்கள் நாடாளுமன்றத்தின் நடு அவையில் தேவிலாலை பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார். அரியானாவின் ஜாட் தலைவரான தேவி லால் அப்பரிந்துரையை மறுத்து வி.பி.சிங்கையே பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார். ஐனதா தளத்தில் வி.பி.சிங்கிற்கு போட்டியாளராக விளங்கிய சந்திர சேகருக்கு தேவிலால் பிரதமர் பதவியை மறுத்தது ஆச்சரியத்ததை கொடுத்தது. ஏனென்றால் கருத்தொருமித்த வேட்பாளராக தேவிலால் வருவார் என சில தலைவர்கள் அவரிடம் கூறியதே. வி.பி.சிங் பிரதமருக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் நாடாளுமன்ற கூட்டத்திலிருந்து அவர் வெளியேறிவிட்டார், அமைச்சரவையில் பங்கு பெறவும் மறுத்து விட்டார். காங்கிரஸ் அல்லாத கட்சிகளுடன் இணைந்து மத்தியில் முதல் கூட்டணி அரசை அமைத்தவர் என்ற பெருமையும் வி.பி.சிங்குக்கு உண்டு.

டிசம்பர் 2, 1989 லிருந்து நவம்பர் 10 1990 வரை இவர் இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்தார்.

பதவியேற்ற சில தினங்களிலேயே அரசு நெருக்கடியை சந்தித்தது. காஷ்மீர் தீவிரவாதிகள் அப்போதய உள்துறை அமைச்சர் முப்தி முகமது சையதின் மகளை கடத்திச்சென்றனர். தீவிரவாதிகளின் நிபதனைக்கிணங்க சில தீவிரவாதிகளை அரசு விடுதலை செய்து அமைச்சரின் மகளை மீட்டது. மாநில பிரிவினைவாதிகளுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்கவில்லை என கருதிய பாஜகவின் வற்புறுத்தலினால் சர்ச்சைக்குரிய முன்னால் அதிகாரியான ஜக்மோகனை ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுனராக நியமித்தார். அதிகாரபூர்வமற்ற காஷ்மீர் இஸ்லாம் தலைவரான மிர்வாச்சின் மரண ஊர்வலத்தின் போது நடந்த துப்பாக்கி சூடு நடத்த ஜக்மோகன் உத்தரவு கொடுத்ததன் விளைவாக காஷ்மீர் தீவிரவாதம் மேலும் பரவகாரணமாக இருந்தார்.

பஞ்சாபில் கடும் போக்குடைய சித்தார்த்த சங்கர் ரேவை நீக்கிவிட்டு மித போக்குடைய முன்னால் அதிகாரி நிர்மல் குமார் முகர்ஜி அவர்களை ஆளுனராக நியமித்தார். இவர் புது தேர்தல் நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து சென்றார். வி.பி.சிங் பொற்கோவிலுக்கு சென்று இந்திரா காந்தி அரசில் நடைபெற்ற புளுஸ்டார் நடவடிக்கைக்காக மன்னிக்கும் படி வேண்டிக்கொண்டார்.

இலங்கையிலிருந்து இந்திய அமைதி காக்கும் படையை வி.பி.சிங் விலக்கிக்கொண்டார்.

தேசிய அளவில் சமூக நீதி தொடர்புடைய கருத்துக்களையும் பிரச்சனைகளையும் முன்னெடுத்து செல்ல முடிவு செய்து மண்டல் கமிசன் பரிந்துரைகளை நடைமுறை படுத்த முடிவு செய்தார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பொது துறை அமைப்புகளில் வேலை வாய்ப்புகளில் குறிப்பிட்ட விழுக்காடு இடங்களை ஒதுக்கீடு செய்ய மண்டல் கமிசன் பரிந்துரைத்தது. வட இந்தியாவில் இம்முடிவுக்கு பிற்படுத்தப்பட்ட மக்கள் அல்லாதவர்களிடம் கடும் எதிர்ப்பு ஏற்பட்டு நகர்புறங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.

இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் 1992-ம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசின் உத்தரவு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியபோது, `இந்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது. பல்லாண்டுகளாக சுரண்டப்பட்டு வந்தவர்களுக்கு இந்த தீர்ப்பு மகத்தான வெற்றியாகும்' என்று வி.பி.சிங் மகிழ்ச்சி தெரிவித்து இருந்தார்.

1989 ல் அம்பானி லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். 1990 ல் லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் முழு நிர்வாகத்தை கைப்பற்ற திருபாய் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் மேற்கொண்ட முயற்சிகளை அரசு நிதி நிறுவனங்களான ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மற்றும் பொது காப்பீட்டு நிறுவனம் ஆகியவை தடுத்தன. லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் நிர்வாகத்தை கைப்பற்ற முடியாது என்பதை உணர்ந்து கொண்ட அம்பானி அந்நிறுவனத்தின் செயற்குழு- தலைவர் பதவியிலிருந்து விலகிக்கொண்டார். அதைத்தொடர்ந்து இந்திய ஸ்டேட் வங்கியின் டி.என்.கோஸ் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

தீவிர இந்து அமைப்புகளின் போராட்டமாக இராம ஜென்மபூமி இருத்தது, பாஜக அதை ஆதரித்து வந்தது. இராம ஜென்மபூமி இயக்கத்துக்கு ஆதரவு திரட்ட பாஜகவின் தலைவர் எல் கே அத்வானி வட இந்திய மாநிலங்களில் இரத யாத்திரை மேற்கொண்டார். அவருடைய இரத யாத்திரை அயோத்தியை அடையும் முன்னர் பீகாரில் கைது செய்யப்பட்டார். இதனால் பாஜக தேசிய முன்னனிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டது. இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தில் வி. பி. சிங் அரசு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு சென்றது. அதில் 142-346 என்ற அளவில் வி. பி. சிங் அரசு தோல்வி கண்டது.

வி.பி.சிங் 17 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். தவிர, அவருக்கு சிறுநீரக கோளாறும் இருந்து வந்தது.வி.பி.சிங் உடல் நலக்குறைவால் 27-11-2008 அன்று மரணம் அடைந்தார்.வி.பி.சிங்குக்கு சீதா குமாரி என்ற மனைவியும், அஜய் சிங், அபய்சிங் என்னும் இரண்டு மகன்களும் உள்ளனர்.மூத்த மகன் அஜய் சிங் சார்ட்டட் அக்கவுண்டண்ட் படித்து அமெரிக்காவில் வங்கி அதிகாரியாக பணியாற்றினார். இளைய மகன் அபய் சிங் டாக்டர் ஆவார். மனைவி சீதாகுமாரியும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்தான்.

சனி, 25 நவம்பர், 2017

இந்திய அரசியலமைப்பு நாள் (Constitution Day Of India) எனப்படும் இந்நாள், 2015 நவம்பர் 26 .


இந்திய அரசியலமைப்பு நாள் (Constitution Day Of India) எனப்படும் இந்நாள், 2015 நவம்பர் 26 .

இந்திய அரசியல் சாசன தினம் அல்லது இந்திய அரசியலமைப்பு நாள் (Constitution Day Of India) எனப்படும் இந்நாள், 2015 நவம்பர் 26 ஆம் திகதியன்று முதல் முறையாக
அனுசரிக்கப்படுவதாகவும். மேலும் இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தினமான நவம்பர் 26 ஆம் நாளை, அரசியலமைப்பு தினமாக, கொண்டாடப்படுவதாக அறியப்படுகிறது.
துவக்கம்
இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வரைவுக்குழுவின் தலைவராக செயற்பட்ட டாக்டர் அம்பேத்கர் [3] என்பவரை கௌரவிக்கும் விதமாகவும், நினைவுகூரும் வகையிலும் மற்றும் இந்திய அரசியலமைப்புக்காக அயாரதுழைத்த அனைவருக்கும் மரியாதை செய்யும் விதமாகவும்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் தலையில் உள்ள இந்திய அரசால் 2015 ஆம் ஆண்டு, நவம்பர் 26 இல் அரசியல் சாசன தினம் துவக்கப்பட்டு கொண்டாடப்பட்டது.

வரலாறு
தெற்கு ஆசியா நாடான இந்தியாவின் பெரும்பகுதி 1858 லிருந்து 1947 வரையில் ஆங்கிலேயர்கள் காலனித்துவ ஆட்சிக்கு கீழ் இருந்துள்ளது. இக்காலகட்டத்தில், ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலைப்பெற
இந்திய சுதந்திர இயக்கம் படிப்படியாக முயன்று வெற்றியை ஈட்டியது. 1934 ஆம் ஆண்டுவாக்கில் இந்திய நாட்டிற்கு அரசியல் நிர்ணயசபை அமைக்க ஒரு கோரிக்கை முனவைக்கப்பட்டது. பிறகு
1936 இலும், மற்றும் 1939 -லும் இருமுறை இக்கோரிக்கையை பற்றி வலியுறத்தப்பட்டன. அதன்படி 1942 ஆம் ஆண்டு மார்ச் இல் கிரிப்ஸ் தூதுக்குழு
அரசியல் நிர்ணய சபையை உருவாக்க பரிந்துரைக்கப்பட்டது. அதன்பின்பு 1946
மே இல் அரசியல் நிர்ணய சபை ஏற்பத்த பரிந்துரைக்கப்பட்டு, 1946 சூலையில் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் நடைபெற்றது 1946 திசம்பர் 11 இல் அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு அச்சபையின் தலைவராக இராசேந்திர பிரசாத் தேர்வு செய்யப்பட்டார்.
1947 ஆகத்து 15 க்கு (விடுதலைக்கு) பின்பு, பிரித்தானியாவின் இந்தியா , இந்திய மாகாணம், பாக்கித்தான் மாகாணம் என இருவேறு பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டு சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச்சாசனத்தை, உருவாக்கும் பணியை அரசியல் நிர்ணயசபை குழு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது.
இவையையும் காண்க
இந்திய அரசியலமைப்பு
இந்திய அரசியலமைப்புச் சட்டம், உறுப்பு 14
குடியரசு நாள் (இந்தியா)
உப தகவல்கள்
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை
1946 திசம்பர் 6-ஆம் திகதி தோற்றுவிக்கப்பட்டது.
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை முதல் கூட்டம் 1946 -ம் ஆண்டு திசம்பர்-9-ல் நடைபெற்றது.
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை தலைவராக டாக்டர் சச்சிதானந்த சின்கா (தர்க்காலிகம்) செயற்பட்டார்.
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை தலைவராக டாக்டர் இராசேந்திர பிரசாத் (நிரந்தரம்) தலைமைவகித்தார்.
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை முதல் கூட்டம் தில்லியில் நடைபெற்றது.
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை அமைச்சரவை தூதுக்குழு திட்டத்தின் கீழ் உறுவாக்கப்பட்டது.
இந்திய அரசியலமைப்பு எழுது வரைவுக்குழு தலைவராக டாக்டர்
அம்பேத்கர் செயல்பட்டார்.
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின், ஆரம்பகால மொத்தம் 389 உறுப்பினர்கள் இருந்துள்ளனர்.
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின், உறுப்பினர்களின் எண்ணிக்கை 299-ஆக இருந்தது.
இந்திய அரசியலமைப்பு பொதுவாக
இங்கிலாந்து அரசியலமைப்போடு ஒத்ததாகும்.


இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்:
Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும் . உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான
அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது. இது அடிப்படை அரசியல் கொள்கைகள், அரசாங்க நிறுவனங்களின் கட்டமைப்பு, நடைமுறைகள், சக்திகள், மற்றும் அடிப்படை உரிமைகள், உத்தரவுக் கொள்கைகள், குடிமக்களின் கடமைகள் ஆகியவற்றின் கட்டமைப்புகளை உள்ளடக்கியுள்ளது. இது தான் இதுவரை உலக நாடுகளின் இடையே எழுதப்பட்டதில் மிக நீண்ட அரசியலமைப்பாகும். இதில் மொத்தம் 22 பிரிவுகள், 12 அட்டவணைகள், 101 திருத்தங்கள், 465 உட்பிரிவுகள் மற்றும் 117,369 சொற்கள் உள்ளன. இது ஆங்கிலப் பதிப்பைத் தவிர, ஒரு அதிகாரப்பூர்வ
இந்தி மொழிபெயர்ப்பினையும் கொண்டுள்ளது. இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி 29 ஆகஸ்ட் 1947 அன்று முதல் இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தால் தொடங்கப்பட்டது. முழுமையடைந்த அரசியலமைப்பு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. (இத்தேதி 26 ஜனவரி 1929, முழு தன்னாட்சி சாற்றல் நினைவாகத் தேர்வு செய்யப்பட்டது). இதன் மூலம் இந்தியா ஒரு ஒருங்கிணைந்த, தன்னாட்சி கொண்ட, குடியரசின் மக்களாட்சிக் கோட்பாட்டின்படி வழிநடத்துகின்ற நாடாக அறிவித்துக் கொண்டது. நடைமுறைக்கு வந்த பிறகு, அதுவரை நாட்டின் அடிப்படை நிருவாக ஆவணமாக இருந்த இந்திய அரசு சட்டம், 1935 என்னும் சட்டத்திற்கு பதில் இந்திய அரசியலமைப்பு நாட்டின் அடிப்படை நிர்வாக ஆவணமாக மாற்றியது. அரசியலமைப்புக்கு வலுசேர்க்கும் விதமாக 1976 ல் நடைபெற்ற திருத்தங்களில் இந்தியா
பொதுவுடைமை, மதச்சார்பின்மை மற்றும் நேர்மை இவைகளை தன் கொள்கைகளாக அறிவித்தது. இந்தியா தனது அரசியலமைப்பின் ஏற்பை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ம் தேதியை
குடியரசு நாளாகக் கொண்டாடுகிறது.
இந்திய அரசியலமைப்பின் படி இந்தியா ஒரு கூட்டாட்சி (federalism) நாடாகும். இருப்பினும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 'கூட்டாட்சி' (கூட்டரசு - federal government) என்ற சொல்லிற்குப் பதிலாக 'ஒன்றியம்' (union) என்ற சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பின் முகப்புரை(preamble)யில், " இறையாண்மை உடைய ஜனநாயக, சமதர்ம, சுதந்திரக் குடியரசு" என்றும் " இந்திய யூனியன்" என்றும் இந்தியா பெயரிடப்பட்டுள்ளது. இது இச்சட்டத் தொகுப்பின் முழுப் புரிதலையும் தரும்படி அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியக் குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் தொடக்கத்திலேயே வழங்கப்பட்டிருந்தாலும், பின்பு அடிப்படைக் கடமைகளும் உருவாக்கப்பட்டன. இந்திய அரசமைப்பின் தனிச் சிறப்புக்களில் ' அடிப்படை உரிமைகளும்' அடங்கும்.
இந்திய அரசமைப்பு சட்டம் உருவாக்கப்படும் போது, பல்வேறு நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களின் கூறுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதனால் இந்திய அரசமைப்பு சட்டத்தை, 'கடன்களின் பொதி' என்பர். 'கூட்டாட்சி முறையை' கனடாவில் இருந்தும், 'அடிப்படை உரிமைகள்'
அமெரிக்க ஐக்கிய நாடுகளிடம் இருந்தும், அடிப்படைக் கடமைகளை அன்றைய
சோவியத் யூனியனிடமிருந்தும் பெற்றது. அரசியல் சட்டத்திருத்த முறையை தென்னாப்பிரிக்கா இருந்தும், ராஜ்யசபா நியமன எம்.பி.,க்கள் முறையை
அயர்லாந்திடம் இருந்தும் பெற்றது.
இந்திய அரசியலமைப்பு உருவான வரலாறு
இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பாலான பகுதி 1858 லிருந்து 1947 வரை ஆங்கிலேயர் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த காலத்தில் வெளிநாட்டு ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற இந்திய சுதந்திர இயக்கம் படிப்படியாக உயர்வு கண்டது. 1934-ல் இந்தியாவிற்கு ஒரு அரசியல் நிர்ணய சபை வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. பின்னர் 1936-இலும் 1939-இலும் இக்கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அதன்படி, அரசியல் நிர்ணய சபையை உருவாக்கலாம் என
கிரிப்ஸ் தூதுக்குழு மார்ச்-1942-ல் பரிந்துரைத்தது. பின்னர் வந்த
அமைச்சரவைத் தூதுக்குழு (மே-1946) அரசியல் நிர்ணய சபை ஏற்படுத்த வேண்டும் எனப் பரிந்துரைத்தது. அதன்படி அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல், ஜூலை 1946-ல் நடைபெற்றது. டிசம்பர் 1946-ல் அரசியல் நிர்ணய சபை கூடியது. அச்சபையின் தற்காலிக தலைவராக சச்சிதானந்த சின்ஹா டிசம்பர் 09 தேர்வுசெய்யப்பட்டார். பிறகு நிர்ணய மன்றத்தின் நிரந்தர தலைவராக டிசம்பர்-11, 1946-ல் இராசேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1947,ஆகஸ்ட் 15-ல் பிரித்தானிய இந்தியாவானது இந்திய மாகாணம், பாக்கிஸ்தான் மாகாணம் என்ற இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டதால் சுதந்திர இந்தியாவிற்கான அரசியலமைப்பை மட்டும் உருவாக்கும் பணியை அரசியல் நிர்ணய சபை செய்ய வேண்டியதாயிற்று.
இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்
முதன்மை கட்டுரை: இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்
ஒன்றிய மற்றும் மாநில சட்டமன்றங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய உறுப்பினர்களால் அரசியலமைப்பு நிர்ணய மன்றம் அமைக்கப்பட்டது. ஜவகர்லால் நேரு , சி ராஜகோபாலாச்சாரி ,
ராஜேந்திர பிரசாத், சர்தார் வல்லபாய் படேல், சந்திப் குமார் படேல், டாக்டர்
அம்பேத்கர் , மவுலானா அபுல் கலாம் ஆசாத், ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, நளினி ரஞ்சன் கோஷ், மற்றும் பால்வந்த் சிங் மேத்தா ஆகியோர் சட்டமன்றத்தில் முக்கிய பிரமுகர்களாக இருந்தனர். தாழ்த்தபட்ட வகுப்புகளை சேர்ந்த 30 மேற்பட்ட உறுப்பினர்கள் அங்கு இருந்தன. பிராங்க் அந்தோணி ஆங்கிலோ இந்திய சமூகத்தை பிரதிபலித்தார். பார்சி இனத்தவர்களை ஹெச்பி மோடி பிரதிபலித்தார். சிறுபான்மையினர் குழுவின் தலைவராக, ஆங்கிலோ இந்தியர்கள் தவிர மற்ற அனைத்து கிரிஸ்துவர்களின் பிரதிநிதியாக ஃஅரென்ட்ர Cஊமர் முகெர்ஜீ என்ற புகழ்பெற்ற கிரிஸ்துவர் இருந்தார். அரி பகதூர் குறூங் கோர்கா சமூகத்தை பிரதிபலித்தார். அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், பி ஆர் அம்பேத்கர், பெனகல் நர்சிங் ராவ் மற்றும் கி.மீ. முன்ஷி, கணேஷ் மவ்லன்கர் போன்ற முக்கிய நடுவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தனர். சரோஜினி நாயுடு , ஹன்சா மேத்தா, துர்காபாய் தேஷ்முக் , ராஜ்குமாரி அம்ரித் கவுர் மற்றும் விஜயலட்சுமி பண்டிட் போன்றவர்கள் முக்கியமான பெண்கள் உறுப்பினர்களாக இருந்தனர். அரசமைப்பு சபையின் முதல் ஜனாதிபதியாக டாக்டர் சச்சிதானந்தன் சின்ஹா ​​இருந்ததார். பின்னர், ராஜேந்திர பிரசாத் சட்டசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசமைப்பு சபை உறுப்பினர்கள் டிசம்பர் 9, 1946 அன்று முதல் முறையாகக் கூடினர்.
அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு
1947, ஆகஸ்ட் 29 -ல் அரசியல் நிர்ணய சபை ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத பீ. இரா. அம்பேத்கர் தலைமையில் அவர் உட்பட ஏழுபேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு (Drafting committee) உருவாக்கப்பட்டது.
1. பீ. இரா. அம்பேத்கர்
2. கோபால்சாமி ஐயங்கார்
3. அல்லாடி கிருஷ்ணமூர்த்தி
4. கே. எம். முன்ஷி
5. சையது முகமது சாதுல்லா
6. மாதவராவ்
7. டி. பி. கைதான்
ஆகியோர் இக்குழுவில் உறுப்பினர்களாக இடம்பெற்றனர். இக்குழு தனது அறிக்கையை 1948, பிப்ரவரி 21-ல் ஒப்படைத்தது. நவம்பர் 4-ல் அரசியல் நிர்ணய சபைக்கு ஒப்படைக்கப்பட்ட இவ்வறிக்கை, முழு வடிவம் பெற்று 1949 நவம்பர் 26-ல் அரசியல் நிர்ணய சபையின் தலைவர் இராஜேந்திரப் பிரசாத்தின் கையொப்பம் பெற்றது. ஜனவரி 24-ல் நடைபெற்ற அரசியல் நிர்ணய சபையின் கடைசிக் கூட்டத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இராசேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். லாகூரில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில் 1930,ஜனவரி 26-ல் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றே தீருவது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நினைவாக ஜனவரி 26 தேதியை இந்தியக் குடியரசு நாளாக ஏற்பது என்றும் அரசியல் நிர்ணய சபை முடிவு செய்தது. "இந்திய அரசியலமைச் சட்டம்-1950" இந்தியக் குடியரசு தினத்தில் நடைமுறைக்கு வந்தது.
இது பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து அதன் விடுதலைக்கு பிறகு இந்திய அரசின் நில சட்டத்தின் ஸ்தாபக கொள்கைகளைக் கொண்டிருந்தது. அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து, இந்தியா பிரிட்டிஷ் அரசாட்சியில் இருந்து நீக்கப்பட்டது.
வரைவு
சட்டமன்றத்தின் 14 ஆகஸ்ட் 1947 கூட்டத்தில், பல்வேறு குழுக்களை உருவாக்கும் திட்டம் வழங்கப்பட்டது. அத்தகைய குழுக்களில் அடிப்படை உரிமைகள், ஒன்றியத்துக்கான அதிகாரக் குழு மற்றும் ஒன்றிய அரசியல் குழு அடங்கியிருந்தன. 29 ஆகஸ்ட் 1947 அன்று, வரைவு குழு, தலைவரை டாக்டர் அம்பேத்கராக கொண்டு, ஆறு உறுப்பினர்களுடன் நியமிக்கப்பட்டது. அரசியலமைப்பின் வரைவு தயாரிக்கப்பட்டு 4 நவம்பர், 1947 அன்று சட்டமன்ற குழுவிடம் சமர்பித்தது. இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்கள், பல வெளிப்புற ஆதாரங்களை தழுவினாலும், மிக அதிக அளவில் பிரிட்டிஷ் முறையான பாராளுமன்ற ஜனநாயகத்தால் ஈர்க்கப்பட்டனர். கூடுதலாக பல கொள்கைகள் அமெரிக்க அரசியலமைப்பிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டன. அரசாங்கத்தின் முக்கிய கிளைகள் மத்தியில் அதிகார பிரிப்பு, உச்ச நீதிமன்ற நடைமுறை, மற்றும் கூட்டாட்சி கட்டமைப்பு ஆகிய கொள்கைகள் அடங்கும். சட்டமன்ற அரசியலமைப்பு தத்தெடுக்கும் முன்னதாக 2 ஆண்டுகள் 11 மாதங்கள் மற்றும் 18 நாட்கள் முழுவதும் கொண்ட மொத்தம் 166 நாட்கள், பொது திறந்த அமர்வுகளில் சந்தித்தது. சில மாற்றங்களுக்கு பிறகு, சட்டமன்றத்தின் 308 உறுப்பினர்களும் இரண்டு ஒப்பந்ததிலும் (இந்தி மற்றும் ஆங்கிலம்)24 ஜனவரி,1950 அன்று கையெழுத்து இட்டனர். இந்தியாவின் உண்மையான அரசியலமைப்பு கையால் எழுதப்பட்டு, பியூகார் ராம்மனோஹர் சின்ஹா ​​மற்றும் மற்றவர்கள் உட்பட சாந்திநிகேதன் கலைஞர்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு பின்னர், 26 ஜனவரி 1950 அன்று, இந்திய அரசியலமைப்பு அனைத்து இந்திய மாநிலங்களுக்கும் ஒன்றியப் பகுதிகளுக்குமான சட்டமானது.
அரசியலமைப்பு அதன் அரங்கேற்றம் முதல் பல திருத்தங்களை பெற்றுவிட்டது.
பிறநாட்டு அரசியலமைப்பின் தாக்கங்கள்
டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான சட்ட வரைவுக்குழு இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கும் பொருட்டு அப்போது மக்களாட்சி நடைபெற்ற நாடுகள் பலவற்றிலிருந்து இந்திய நடைமுறைக்கு பொருத்தும் சட்டக்கூறுகளை இந்திய அரசியல் சாசன வரைவில் சேர்த்தது. இவற்றில், 1935ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட இந்திய அரசாங்க சட்டம் 1935 -உம் அடக்கம்.
இங்கிலாந்து
பாராளுமன்ற முறையிலான அரசாங்கம்
ஒற்றைக்குடியுரிமை
'சட்டத்தின் ஆட்சி' கருத்தியல்
அவைத்தலைவர் முறைமை மற்றும் அவரது பணிகள்
சட்டமியற்றும் முறை
Procedure established by Law
ஐக்கிய அமெரிக்கா
அடிப்படை உரிமைகளுக்கான சாசனம்
கூட்டாட்சி முறை அரசாங்கம்
வாக்களர் மன்றம்
நீதித்துறையின் தன்னாட்சி மற்றும் அரசாங்கத்தின் மூன்று அங்கங்களுக்கிடையேயான அதிகாரப் பகிர்வு
நீதித்துறையின் புலனாய்வு
முப்படைகளின் தலைவராக குடியரசுத்தலைவர்
சட்டத்தின் சம பாதுகாப்பு
அயர்லாந்து
அரசின் நெறிமுறை கோட்பாடுகள்
ஆஸ்திரே
Freedom of t within the co the states
Power of the to make law treaties, eve normal Fede
பொதுப்ப
முகவுர வாசகங்க
பிரான்சு
சுதந்திர மற்றும் ச கருத்தாக்
கனடா
பலமிக்க ந அரசாங்க அமையப்ப அரைகுற முறை
மைய மற் அரசுகள அதிகாரப்
எஞ்சிய அ மைய அரச
சோவியத்
அடிப்பட
நாட்டின் வளர்ச்சிக முன்னெ திட்டக்கு
அமைப்பு
அரசியலமைப்பு அதன் தற்போதைய வடிவத்தில் (மார்ச்,2011), ஒரு முன்னுரை, 450 கட்டுரைகள், 12 அட்டவணை, 2 பின் இணைப்பு மற்றும் 114 திருத்தங்களை இன்றுவரை கொண்டு மொத்தம் 24 பகுதிகளை கொண்டுள்ளது. இது கூட்டாட்சி தத்துவம் கொன்டது எண்றாலும் ஒரு வலுவான ஒற்றை சார்பு கொண்டிருக்கிறது.
முகவுரை
இந்திய அரசியலமைப்பின் முகப்புரை என்பது இந்திய அரசியலமைப்பின் அறிமுகப்பகுதியாகும்.
“ நாம், இந்திய மக்கள் , உறுதிக் கொண்டு முறைப்படி தீர்மானித்து, இந்தியாவை ஓர்
இறையாண்மை சமூகத்துவ சமயசார்பற்ற ஜனநாயக குடியரசாக கட்டமைத்திட, மற்றும் இதன் எல்லா குடிமக்களுக்கும்
சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி
எண்ணம், கருத்து, பக்தி, நம்பிக்கை மற்றும் வழிபாடு
தன்செயலுரிமை ;
படிநிலை மற்றும் வாய்ப்பு
சமத்துவம் ஆகியன உறுதிசெய்திட;
மற்றும் தனிநபர் கண்ணியத்தையும், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைபாட்டையும் உறுதிப்படுத்த அனைவரிடத்திலும்
உடன்பிறப்புணர்வை ஊக்குவித்திட.
இந்த 1949, நவம்பர் இருபத்தி-ஆறாம் நாள் நம்முடைய அரசியல் நிர்ணய சபையில் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பு முறைமையை, இதன்படி ஏற்று, சட்டமாக்கி நமக்கு தருகிறோம். ”
பகுதிகள்
பகுதி 1 (உட்பிரிவு 1-4) இந்திய யூனியன் பற்றியது. அதாவது மாநில அமைப்பு. மாநில எல்லை வரையறை போன்றவை.
பகுதி 2 (உட்பிரிவு 5-11) இந்திய குடியுரிமை பற்றியது.
பகுதி 3 (உட்பிரிவு 12-35) அடிப்படை உரிமைகள்/ அது மறுக்கப்படும் போது அதற்கான தீர்வுகள்.
பகுதி 4 (உட்பிரிவு 36-51) அரசு கொள்கைக்கான வழி காட்டும் நெறிகள்.
பகுதி 4A ( உட்பிரிவு 51 A) அடிப்படை கடமைகள்.(1976 ஆம் ஆண்டு 42வது திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டது)
பகுதி 5 (உட்பிரிவு 52- 151) ஒன்றிய அரசமைப்பு அதாவது குடியரசு தலைவர், துணைக் குடியரசு தலைவர், நடுவண் அமைச்சரவை, பாராளுமன்றம் மற்றும் அதன் அமைப்பு, உச்ச நீதிமன்றம் மற்றும் அதன் அமைப்பு.
பகுதி 6 ( உட்பிரிவு 152-237) மாநில அரசமைப்பு, கவர்னர், மாநில அமைச்சரவை. மாநில சட்டமன்றம் / சட்ட மேலவை அதன் அமைப்பு உயர் நீதி மன்றம் அதன் அமைப்பு.
பகுதி 7 (உட்பிரிவு 238) அரசமைப்பு சட்டம் முதல் பட்டியலில் உள்ள மாநிலங்கள் பற்றியது- இந்தப் பிரிவு இப்போது நீக்கப் பட்டுள்ளது.
பகுதி 8 (உட்பிரிவு 239 -242) ஒன்றியப் பகுதிகள் குறித்து.
பகுதி 9 ( உட்பிரிவு 243) உள்ளாட்சி நிர்வாகம் இந்த உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளன.
பகுதி 9A ( உட்பிரிவு 243P-243Z,243ZA-243ZG) நகராட்சி நிர்வாகம் இந்த உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளன.
பகுதி 10 (உட்பிரிவு 244) பட்டியல் சாதிகள்/ பழங்குடியினர்/ ஆங்கிலோ இந்தியர் ஆகியோர் குறித்து.
பகுதி 11 (உட்பிரிவு 245-263) ஒன்றிய மற்றும் மாநில அரசு உறவு, மாநிலங்ளுக்கிடையேயான உறவு.
பகுதி 12 (உட்பிரிவு 264-300) அரசின் நிதி குறித்த உட்பிரிவுகள் நிதி / நிதியினைக் கையாளும் நெறிகள்.
பகுதி 13 ( உட்பிரிவு 301- 307) இந்திய நாட்டில் வணிகம் செய்யும் நடைமுறைக்கான உட்பிரிவுகள்.
பகுதி 14 ( உட்பிரிவு 308-323) அரசுப் பணிகள்
பகுதி 14A (உட்பிரிவு 323ஏ மற்றும் 323 பி) ஒன்றிய அரசின் தீர்ப்பாயங்கள்.
பகுதி 15 (உட்பிரிவு 324-329) தேர்தல்கள், தேர்தல் ஆணையம்.
பகுதி 16 (உட்பிரிவு 330-342) - பகுதிவாரி பெரும்பாண்மை சாதிகளுக்கான உரிமைகள் பற்றி.
பகுதி 17 (உட்பிரிவு 343-351) அலுவல் மொழி, வட்டார மொழி, நீதி மன்றங்களில் மொழி.
பகுதி 18 (உட்பிரிவு 352-360) அவசர நிலைக்கானது (எமெர்ஜென்சி)
பகுதி 19 (உட்பிரிவு 361-367) இதர (இதில் குடியரசு தலைவர், கவர்னர் இந்தப் பதவிக்கான சட்ட சிறப்பு பாதுகாப்பு மற்றும் சில)
பகுதி 20 (உட்பிரிவு 368) இந்திய அரசமைப்புச் சட்டம் திருத்தம் அதற்கான நடைமுறை.
பகுதி 21 (உட்பிரிவு 369-392) தற்காலிக, இடைநிலை மற்றும் சிறப்பு ஒதுக்கீடுகள்
பகுதி 22 (உட்பிரிவு 392-395) குறுகிய தலைப்பு, ஆரம்பம் தேதி, இந்தி மற்றும் ரிப்பீல்ஸில் அதிகாரப்பூர்வ உரை.
அட்டவணைகள்
முதலாம் அட்டவணை (Articles 1 and 4)
இரண்டாம் அட்டவணை (Articles 59(3), 65(3), 75(6), 97, 125, 148(3), 158(3), 164(5), 186 and 221)
மூன்றாம் அட்டவணை (Articles 75(4), 99, 124(6)
நான்காம் அட்டவணை (Articles 4(1) and 80(2))
ஐந்தாம் அட்டவணை (Article 244(1))
ஆறாம் அட்டவணை (Articles 244(2) and 275(1))
ஏழாம் அட்டவணை (Article 246)
எட்டாம் அட்டவணை (Articles 344(1) and 351)
ஒன்பதாம் அட்டவணை (Article 31-B)
பத்தாம் அட்டவணை (Articles 102(2) and 191(2))
பதினோராம் அட்டவணை (Article 243-G)
பனிரெண்டாம் அட்டவணை (Article 243-W)
இந்திய அரசியலமைப்பின் முக்கிய கூறுகள்
இந்திய அரசியலமைப்பில் 22 அத்தியாயங்களும்(Chapters) 9 அட்டவணைகளும் (Schedules) (முதலில் 8 அட்டவணைகளே இருந்தன; 1951-ல் 9-ஆவது அட்டவணை சேர்க்கப்பட்டது) 22 அத்தியாயங்களும் 395 பிரிவு (Article) களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமைகள், அரசு நெறிமுறைக் கோட்பாடுகள், ஒன்றிய அரசின் நிர்வாகக்குழு, மாநில அரசுகள், நீதிமன்றங்கள் ஆகியன பற்றி சொல்லப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு கீழ்கண்ட முகப்புரையுடன் தொடங்குகிறது:
“ இந்தியாவின் மக்களாகிய நாங்கள் இந்தியாவை ஒரு சுதந்திரமான, சமுதாயநலம்நாடும், சமயச்சார்பற்ற, சமஉரிமைக் குடியரசு நாடாக அமைக்க மனமார்ந்து முடிவுசெய்து,
அதன் குடிமக்கள் எல்லோருக்கும் சமூக, பொருளாதார, மற்றும் அரசியல் நியாயமும், எண்ணத்தில், வெளிப்பாடுகளில், நம்பிக்கையில், மதம் மற்றும் வழிபாடுகளில் சுதந்திரமும், சமூகநிலையில் மற்றும் வாய்ப்புகளில் சமத்துவமும் கிடைக்கச் செய்யவும், ஒவ்வொரு மனிதனின் மதிப்பையும் நாட்டின் ஒருமையையும் முழுமையையும் காக்கும்வண்ணம் அவர்கள் அனைவரிடமும் சகோதரத்துவத்தை ஊக்குவிக்கவும் நம் அரசியல் அமைப்பு உருவாக்கும் அவையில் இந்த 1949 நவம்பர் இருபத்தாறாம் நாளில் இங்ஙனம் இந்த அரசாங்க சாசனத்தை இயற்றி, எங்களுக்கே தந்து, ஏற்றுக்கொள்கிறோம். ”
அடிப்படை உரிமைகள்
இந்திய அரசியலமைப்பின் முதல் அத்தியாயத்தில் நாட்டின் பெயர், ஆட்சிப்பரப்பு ஆகியனவும், இரண்டாவது அத்தியாயத்தில் குடிமை(Citizenship) பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. 12-ஆவது பிரிவு முதல் 35-ஆவது பிரிவு வரை உள்ள மூன்றாவது அத்தியாயத்தில்
இந்தியரின் அடிப்படை உரிமைகள் பட்டியலிடப்பட்டு உள்ளன. அவற்றுள்:
1. இந்தியாவிற்குள் அனைவரும் சம பாதுகாப்பு (பிரிவு-14)
2. வேறுபாடின்றி சட்டத்தின் முன் அனைவரும் சமம் (பிரிவு-15)
3. பொதுவேலைவாய்ப்பில் சம வாய்ப்பு (பிரிவு-16)
4. தீண்டாமை ஒழிப்பு (பிரிவு-17)
5. பட்டங்கள் ஒழிப்பு (பிரிவு-18)
6. ஏழு சுதந்திரங்கள் (பிரிவு-19 முதல் 22)
7. சமய உரிமை (பிரிவு 25-28)
8. சிறுபான்மையினரின் பண்பாட்டு,கல்வி உரிமை (பிரிவு 29-30)
9. இவ்வுரிமைகளைக் காத்துக் கொள்ள உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் உரிமை (பிரிவு-32)
ஆகியன முக்கியமானவையாகும். நெருக்கடி நிலையின் போது தற்காலிகமாக அடிப்படை உரிமைகள் நீக்கப்படும். ஆனால் நெருக்கடி நிலை ரத்தானதும் அடிப்படை உரிமைகள் தானாக அமுலாகிவிடும்.
அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்
இந்தியாவிலுள்ள ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் மக்களைப் பாதுகாத்து நல்வழிப்படுத்த, எந்தக் கோட்பாடுகளை உள்ளடக்கி சட்டங்கள் இயற்ற வேண்டும் என்பதே அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் (Directive Principles) ஆகும். இது பற்றி நான்காம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எல்லோருக்கும் போதுமான வாழ்க்கை வசதிகள், வயதுக்கும் வேலைக்கு ஏற்ற பொருத்தமான வேலை, தொழில் செய்ய ஏற்ற சூழ்நிலை, வேலைக்கு ஏற்ற வயது வரை இலவச கட்டாயக் கல்வி, பொது சுகாதாரம், மது விலக்கு, வேளாண்மை வளர்ச்சி, வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு ஆகியன அக்கோட்பாடுகளுள் சிலவாகும்.
இக்கோட்பாடுகள் யாவும் அறிவுரைகளே ; இவற்றைச் செயல்படுத்தக் கோரி அரசுகள் மீது நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியாது.
கூட்டாட்சி அமைப்பு
அரசியலமைப்பு ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே அதிகாரங்களை பகிர்ந்து வழங்குகிறது. இது பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் அதிகாரங்களை மூன்று பட்டியல்,அதாவது ஒன்றிய அரசுப் பட்டியல், மாநில பட்டியல் மற்றும் உடன்நிகழ்கிற பட்டியல் என பிரிக்கிறது. தேசிய பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை, நாணய வழங்கல் போன்ற விஷயங்கள் யூனியன் பட்டியலில் ஒதுக்கப்பட்டுள்ளன. பொது ஒழுங்கு, உள்ளூர் அரசாங்கங்கள், சில வரிகள் ஆகியவை மாநிலம் பட்டியல் உள்ளன. பாராளுமன்றம் விதிவிலக்கான சூழ்நிலைகளில் தவிர, அந்த சட்டங்களை இயற்ற எந்த சக்தியும் கிடையாது.கல்வி, போக்குவரத்து, குற்றவியல் சட்டம் ஆகிய உடன்நிகழ்கிற பட்டியலில் உள்ள பாடங்களில் மாநில சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் சட்டங்களை இயற்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது .எஞ்சியுள்ள அதிகாரங்கள் யூனியன் வசம் உள்ளது.மாநிலங்களின் பிரதிநிதிகளை கொண்டிருக்கும் மேல்சபையான ராஜ்ய சபா ,மேல் கூட கூட்டாட்சி அரசாங்கம் முறைக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.
பாராளுமன்ற ஜனநாயகம்
இந்திய குடியரசு தலைவர், பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுபவர்.நேரடியாக மக்களால் கிடையாது. பாராளுமன்றத்தில் இயற்றப்படும் நிர்வாகம் மற்றும் சட்டங்கள் அனைத்தும் அவர் பெயரில் நிறைவேற்றப்படுகிறது. ஆனால் இந்த அதிகாரங்கள் பெயரளவுக்கு மட்டுமே உள்ளன, ஜனாதிபதி பிரதமர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனையின் படி தான் செயல்பட வேண்டும். இதே போன்ற ஒரு அமைப்பு, நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்,முதல்வர் மீதும் அமைச்சர்கள் மீதும் தங்கள் கட்டுப்பாட்டை செலுத்தும் முறை தற்போது மாநிலங்களில் உள்ளது.

சுதந்திரமான நீதித்துறை

இந்திய நீதித்துறை, நிர்வாகிகள் முதல் பாராளுமன்றம் வரை அதன் கட்டுப்பாட்டை செலுத்த முடியும். நீதித்துறை அரசியல் பொருள் விளக்குபவராக செயல்படுகிறது. இரு மாநிலங்களுக்கு இடையிலோ,ஒரு மாநிலத்துக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையிலோ ஏற்படும் பிரச்சினைகளில் நடுநிலையாளராக செயல்படும். பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் இயற்றப்பட்ட சட்டம் நீதிமுறை மேலாய்வுக்கு உட்பட்டது. அந்த சட்டம் அரசியலமைப்பு விதிகளை மீறுகிறது என்று நினைத்தால் நீதித்துறை அரசியலமைப்பில் அல்லாததாக அறிவிக்க முடியும்.
சட்டங்களின் நீதிமுறை மேலாய்வு
நீதிமுறை மேலாய்வை அமெரிக்காவின் அரசியலமைப்பிலிருந்து இந்திய அரசியலமைப்பு பயன்படுத்திக்கொண்டது. நீதிமன்ற உறுப்புரை 13 கீழ் நீதிமுறை மேலாய்வு செயல்படுகிறது. நீதிமன்ற அரசியலமைப்பு நாட்டின் உச்ச சக்தி மற்றும் அனைத்து சட்டங்களும் அதன் மேலாதிக்கத்தின் கீழ் என்பதை குறிக்கிறது. உறுப்புரை 13 கூறுவதாவது,
1. அனைத்து முன் அரசியலமைப்பு சட்டங்களும் பின்னர் அரசியலமைப்பு சட்ட விதிகளுடன் மோதல்கள் ஏற்பட்டால், அரசியலமைப்பின் விதிகள் அதற்கு ஏற்றதாக மாற்றப்படும் வரை செயல்படுத்த படாமல் இருக்கும்.இது டாற்றின் ஆப் எலிப்ஸ் கொள்கை என்று அழைக்கப்படுகிறது. 2. இதே முறையில், அரசமைப்பு சபையால் அரசியலமைப்பு ஏற்றுக்கொண்டதிலிருந்து இயற்றபடும் சட்டங்கள் அரசியலமைப்புக்கு இணக்கத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும், இல்லையெனில் சட்டங்கள் மற்றும் திருத்தங்களை வய்டு-அ பி- இனிடியோ வேண்டும் என கருதப்படுகிறது.
ஒன்றிய அரசு நிர்வாகக் குழு
குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், ஒன்றிய அமைச்சரவை, பாராளுமன்றம் ஆகியவற்றைக் கொண்டதாக ஒன்றிய அரசு நிர்வாகக் குழு அமையும்.
குடியரசுத் தலைவர் (President of India)
இந்தியக் குடியரசுத் தலைவர் என்பவர் இந்தியக் குடியரசு எனப்பட்ட "இந்திய அரசின் தலைவர்" ஆவார். ஒன்றிய அரசு நிர்வாகக் குழுவின் தலைவரும், கூட்டாட்சி நிர்வாகத்தின் தலைவரும், இந்திய இராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதியும் ஆவார். 'இந்தியாவின் முதல் குடிமகன்' என்றும் அவர் குறிப்பிடப்படுகிறார்.
குடியரசுத் துணைத் தலைவர்
இந்தியாவின் இரண்டாவது மிக உயர் பதவிக்குரியதாகும், குடியரசுத் தலைவருக்கு அடுத்த நிலையில் வரும் பதவியாகும். துணைக்குடியரசுத்தலைவரே நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைத் தலைவராவார். எனினும் இவருக்கு மாநிலங்களவை வாக்கெடுப்பில் வாக்களிக்கும் உரிமை இல்லை. ஏனெனில் இவர் மாநிலங்களவை உறுப்பினர் அல்லர். எனினும் வாக்குகள் சமநிலையில் இருக்கும் போது இவர் வாக்களிக்கலாம்.
ஒன்றிய அமைச்சரவை
பாராளுமன்றம்
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் உள்ளதைப்போல் இந்தியாவிலும் பாராளுமன்றம் ஈரவை கொண்ட அமைப்பாக விளங்குகிறது. முதலாம் மன்றம் அல்லது கீழவை அல்லது மக்களவை (First Chamber or Lower House or House of the People) என்ற அவை மக்களை பிரதிநித்துவப்படுதுகிறது. இரண்டாம் மன்றம் அல்லது மேலவை அல்லது
மாநிலங்களவை ( Second Chamber or Upper House or Council of the States) என அழைக்கப்படும் இரண்டாவது அவை இந்திய யூனியனில் இடம்பெற்றுள்ள மாநிலங்களையும் மற்றும் ஒன்றிய அரசின் ஆளுகைப்பகுதிகளையும் பிரதிநித்துவப்படுத்துகிறது. இது தவிர குடியரசுத்தலைவர் இந்தியப் பாராளுமன்றத்தின் ஒரு அங்கமாக விளங்குகிறார்.
மாநிலங்களவை
முதன்மை கட்டுரை: மாநிலங்களவை
மாநிலங்களவையின் 233 உறுப்பினர்கள் மாநில-பிரதேச சட்டப்பேரவைகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்கள். இவர்கள் ஆறு வருடங்களுக்கு பணிபுரிவார்கள். மூன்றில் ஒரு பகுதி மாநிலங்களவை உறுப்பினர்கள் இரு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
மக்களவை
முதன்மை கட்டுரை: இந்திய மக்களவை
மக்களவை, மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் 543 உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றது. மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும்.
முன்பு நிலவிய சட்டங்கள்
1935 முன்பான பிரித்தானிய நாடாளுமன்றத்தின் சட்டங்கள்
அச்சட்டம் மேலும் இங்கிலாந்தில் இந்திய மாநில செயலாளர் அலுவலகத்தை நிறுவி நாடாளுமன்றம், அதன் மூலம் ஆட்சி செய்தது. அதே போல் இந்திய அரச பிரதிநிதி அலுவலகத்தை நிறுவியது. நிருவாகச் சபை மற்றும் அல்லாத அதிகாரப்பூர்வ உறுப்பினர்கள் கொண்ட சட்ட சபையை இந்திய சபைகள் சட்டம், 1861 வழங்கியது. இந்திய சபைகள் சட்டம், 1892 மாகாண சட்டமன்றங்களை நிறுவியது. சட்ட சபையின் அதிகாரங்களை அதிகரித்தது. இந்த சட்டங்களால் அரசாங்கத்தில் இந்தியர்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்த போதிலும், அவர்களின் அதிகாரம் குறைவாகத் தான் இருந்தது.
இந்திய சபைகள் சட்டம், 1909 மற்றும் இந்திய அரசுச் சட்டம், 1919 ஆகியவற்றால் இந்தியர்களின் பங்கு மேலும் விரிவடைந்தது.


இந்திய அரசுச் சட்டம் 1935
முதன்மை கட்டுரை: இந்திய அரசுச் சட்டம், 1935
இந்திய அரசு சட்டம் 1935 யின் விதிகள் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை, எனினும் இந்திய அரசியலமைப்பில் பெரும் தாக்கத்தை ஏர்படுத்தியது. சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பின் பல முக்கிய அம்சங்கள் நேரடியாக இந்த சட்டத்தில் இருந்து எடுக்கப்பட்டன.
கூட்டாட்சி அரசாங்கம் அமைப்பு, மாகாண சுயாட்சி, கூட்டாட்சி சட்டமன்றம் மற்றும் சட்ட அதிகாரங்களை மத்தியிலும் மாகாணங்களின் இடையிலும் பிரித்தல் ஆகியவற்றை தற்போது இந்திய அரசியலமைப்பு அவை சட்டத்தின் விதிகளில் இருந்து எடுத்துக்கொண்டது.
கேபினெட்டு மிஷன் திட்டம்
முதன்மை கட்டுரை: இந்திய 1946 கேபினெட் மிஷன்
1946 இல், பிரித்தானியப் பிரதமர் கிளெமென்ட் அட்லி அதிகாரத்தை பிரித்தானிய இந்தியாவிடமிருந்து இந்திய தலைமைக்கு மாற்ற விவாதித்து முடிவு செய்யவும், காமன்வெல்த்து நாடுகளின் ஒரு அங்கமாக இந்தியாவை
மேலாட்சி அரசுமுறையின் கீழ் சுதந்திரம் வழங்க ஒரு அமைச்சரவைக் குழுவை உருவாக்கினார். இக்குழு கேபினட்டு மிஷன் என அழைக்கப்பட்டது.
பிரித்தானிய இந்திய மாநிலங்களில் ஒதுக்கப்பட்டிருந்த 296 இடங்களுக்கான தேர்தல் ஆகத்து 1946 இல் நிறைவு பெற்றது. இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் திசம்பர் 9, 1946 அன்று முதல் கூடி புதிய அரசமைப்பை உருவாக்கும் வேலையைத் தொடங்கியது.
இந்திய சுதந்திர சட்டம் 1947
முதன்மை கட்டுரை: இந்திய சுதந்திர சட்டம், 1947
சூலை 18 , 1947 பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இந்திய விடுதலை (சுதந்திர)ச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அது இரண்டு புதிய சுதந்திர மேலாட்சி நாடுகளான - இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் என்று பிரித்தானிய இந்தியாவைப் பிரித்து, அவர்கள் தங்களுக்கான புதிய அரசியலமைப்பு சட்டம் எழுதப்படும் வரை, காமன்வெல்த் நாடுகள் கீழ் இருக்க வேண்டும் என்றது. தனி மாநிலங்களுக்காக அரசமைப்பு சபை இரண்டாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு புதிய சட்டமன்றத்திற்கும் சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரங்கள் வழங்கப்பட்டது. இந்த சட்டம் மன்னர்கள் ஆளும் மற்ற மாநிலங்களை ஏதாவது ஒன்றின் அடியே இணையச் சொன்னது. இந்திய அரசியலமைப்பு 1950 ஆம் ஆண்டு சனவரி 26 அன்று வழக்குக்கு வந்த போது இந்திய விடுதலைச் சட்டம் நீக்கப்பட்டது. இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுப்பட்டு இறையாண்மை கொண்ட மக்களாட்சிக் குடியரசாக மாறியது. 26 நவம்பர், 1949 தேசிய சட்ட தினம் என்று அறியப்படுகின்றது.
அரசாங்கத்தின் அமைப்பு
பின்வருமாறு ஒன்றிய அரசு அடிப்படை வடிவம் எதிர்நோக்குகிறது
"ஒரு ஜனநாயக நிர்வாகம் மூன்று நிலைகளை தீர்க்க வேண்டும்: 1. ஒரு நிலையான நிர்வாகம் இருக்க வேண்டும் 2. ஒரு பொறுப்பான நிர்வாகம் இருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, அது சம அளவு இரண்டு நிலைமைகளையும் உறுதி செய்ய ஒரு முறையை திட்டமிடுவது இதுவரை சாத்தியமே இல்லை. ..... அமெரிக்க முறையில் இல்லாத தினசரி பொறுப்பு மதிப்பீடு குறித்த காலத்து மதிப்பீட்டை விட மிகவும் பயனுள்ளதக இந்தியா போன்ற நாடுகளில் மிகவும் பயனுள்ளதாக அமையும். வரைவு அரசியமைப்பு நிலைத்தன்மையைவிட பொறுப்புக்கு விருப்பமாக பாராளுமன்ற அமைப்புக்கு பரிந்துரைத்துள்ளது.”
அரசியலமைப்பை மாற்ற
கட்டுரை 368 அமைக்கப்பட்டுள்ள செயல்முறை படி, அரசியல் சட்ட திருத்தங்களை பாராளுமன்றம் மாற்றம் செய்யலாம். ஒரு திருத்த மசோதா மூன்றில் இரண்டு பெரும்பான்மையினரின் வாக்கெடுப்பால் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற வேண்டும். மேலும் கூட்டாட்சி அரசியலமைப்பு தொடர்புடையதான சில திருத்தங்களை மாநில சட்டமன்றங்கள் பெரும்பான்மை மூலம் உறுதிப்படுத்த வேண்டும். செப்டம்பர் 2010 வரை, பாராளுமன்றம் முன் செலுத்தப்பட்ட 108 திருத்த மசோதாக்களில் 94 திருத்தம் சட்டமாக நிறைவேறி உள்ளது. எனினும், அரசியலமைப்பு அரசாங்க அதிகாரங்களை மிகவும் கவனிப்பதால் இந்த பிரச்சினைகளில் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட வேண்டும். இதன் விளைவாக, ஆவணம் ஒரு வருடத்திற்கு சுமார் இரண்டு முறை திருத்தப்பட்டு உள்ளது.இந்திய அரசியலமைப்புச் சட்டதின் 14ஆம் உறுப்பு இந்திய குடிமக்களின் சமத்துவத்தை கூறுகிறது.

சம நிலை மற்றும் சம பாதுகாப்பு
"சட்டத்தின் முன் சம நிலை" மற்றும் "சட்டங்களின் சம பாதுகாப்பு" என்ற இரண்டு வரிகளும் ஒன்றையே குறிப்பதை போல் தோன்றினாலும், உண்மையில் இரு வேறு பொருளை சொல்கிறது.
ஆனால், "சட்டங்களின் சம பாதுகாப்பு" என்பது சூழ்நிலைகள் சமமாக இருக்கும்போது, சட்டத்தால் சமமாக நடத்தப்படுவதற்கான ஒருவரின் உரிமையை நேர்மறையாக எடுத்து இயம்புகிறது.
இந்த இரண்டு கருத்துக்களும், ஒரு அரசியல் மக்களாட்சியில் சமூக மற்றும் பொருளாதார நியதியை உள்ளடக்கியது (டால்மியா சிமென்ட் (பாரத்) லிட். எதிர். இந்திய அரசு, 1996, 10 எஸ்.சி.சி. 104)
சட்டத்தின் ஆட்சி
"சட்டத்தின் முன் சம நிலை" என்ற கோட்பாடானது "சட்டத்தின் ஆட்சி" (பேராசிரியர் டைசியின் "அரசியலைப்புச் சட்டம்", 1885) என்ற கருத்தின் இயற்கையான விளைவாகும். எந்த ஒரு மனிதனும் நாட்டின் சட்டத்திற்கு மேலானவன் அல்ல, ஒவ்வொருவரும் சட்டத்திற்கு உட்பட்டவரே, என்பதையே "சட்டத்தின் ஆட்சி" என்ற கருத்து குறிக்கிறது. ஆனால், இத்தகைய சமத்துவமானது கட்டுப்பாடற்ற ஒன்று அல்ல, சில விதிவிலக்குகளுக்கு உட்பட்டதே ஆகும்.
வகைப்படுத்தும் சட்டங்கள்
உறுப்பு 14 ஒரு வகுப்பிற்காக சட்டம் இயற்றுவதை தடை செய்யும் அதே நேரத்தில், அறிவார்ந்த காரணங்களுக்காக வகைப்படுத்துவதை தடை செய்யவில்லை. மக்களை, சொத்துக்களை அல்லது பணிகளை வகைப்படுத்தி தனித்தனியான மற்றும் தகுதியான சட்டங்களுக்கு உட்படுத்துவது பொது நலனுக்கு கட்டாயமான ஒன்றாகும்.
ஏற்கத்தக்க வகைப்பாடுகள்
ஒரு வகைப்பாடானது ஏற்கத்தக்கதா என்பதை கண்டறிய இந்திய உச்ச நீதிமன்றம் இரண்டு சோதனைகளை உருவாக்கியது (மேற்கு வங்க மாநிலம் எதிர். அன்வர் அலி சர்கார், ஏ.ஐ.ஆர். 1952 எஸ்.சி. 75):
(1) அறியக் கூடிய வேறுபாடு சோதனை: எந்த நபர்களோ அல்லது பொருட்களோ அடங்கிய குழுவை வேறுபடுத்த விரும்புகிறோமோ அதற்கும் விடுபட்ட குழுவிற்கும் இடையே உள்ள அறியக்கூடிய வேறுபாட்டின் அடிப்படையில் வகைப்பாடானது அமைந்திருக்கிறதா?
(2) தொடர்பு சோதனை: சோதனைக்கு உள்ளாகியுள்ள சட்டத்தின் நோக்கத்திற்கும், மேற்சொன்ன அறியக் கூடிய வேறுபாட்டிற்கும் அறிவார்ந்த தொடர்பு இருக்கிறதா?
உதாரணத்திற்கு, இந்திய ஒப்பந்த சட்டம், 1872 -ன் பிரிவு 11 -ன் படி இளவர்கள் ஒப்பந்தம் மேற்கொள்ள இயலாது. இங்கு இளவர்கள், வயது வந்தோர் என்ற வகைப்பாடு மேற்கொள்ளப்படுகிறது. வயதின் அடிப்படையிலான இந்த வகைப்பாடு அறியக் கூடிய ஒரு தகுதியான வேறுபாடாகும். வயதிற்கும் ஒருவரின் ஒப்பந்தம் மேற்கொள்ளக் கூடிய தகுதிக்கும் அறிவார்ந்த தொடர்பு இருக்கிறது. ஆகவே இந்த வகைப்பாடு செல்லத்தக்கது.
ஆனால், கருப்பு நிற தலைமுடி உள்ளவர் மட்டுமே ஒப்பந்தம் மேற்கொள்ள முடியும் என்று சொன்னால், அது ஏற்கத்தக்கது அல்ல. ஏனெனில் அத்தகைய வகைப்பாட்டிற்கும் சட்டத்தின் நோக்கத்திற்கும், அதாவது ஒப்பந்தம் மேற்கொள்பவரின் தகுதிக்கும் எந்தவொரு அறிவார்ந்த தொடர்பும் இல்லை.
புதிய அணுகுமுறை
1970 -ல் இருந்து உறுப்பு 14 -ற்கு ஒரு புதிய அணுகுமுறையை உச்ச நீதிமன்றம் கொடுக்கத் தொடங்கியது. இ.பி. ராயப்பா எதிர். தமிழ்நாடு மாநில அரசு (ஏ.ஐ.ஆர். 1974 எஸ்.சி. 555) என்ற வழக்கில் நீதியரசர் பகவதி சமத்துவம் என்பது ஒரு துடிப்பான கருத்து, அதனை விதிகளுக்குள் கட்டுப்படுத்த இயலாது என்றும் எந்தவொரு செயல் தன்னிச்சையானதாக இருக்கிறதோ அது உறுப்பு 14 -ஐ மீறுவதாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அவரே, மேனகா காந்தி எதிர். இந்திய அரசு (ஏ.ஐ.ஆர். 1978 எஸ்.சி. 597) என்ற வழக்கிலும் உறுப்பு 14 அரசின் தன்னிச்சையான செயல்பாட்டை தாக்குவதாகவும் நியாயத்தையும், சமமாக நடத்தப்படுவதையும் கட்டிக் காப்பதாகவும் உள்ளது என்கிறார்.
ஆகவே அரசின் செயல்பாடுகளில் நியாயத் தன்மை அமைந்திருக்க வேண்டும் என்பதே உறுப்பு 14 -ன் தேவையாகும்.
சமத்துவக் கொள்கையின் புதிய வளர்ச்சிகளில் ஒன்றாக அரசின் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்தலும் திகழ்கிறது. சமத்துவம் ஒரு ஆக்கப்பூர்வமான உரிமை, சமமற்ற நிலையை குறைத்து சமமற்றோருக்கும் வாய்ப்பில்லாதோருக்கும் சிறப்பு கவனம் செலுத்த அது அரசை பணிக்கிறது (இந்திரா சானி எதிர். இந்திய அரசு ஏ.ஐ.ஆர். 1992 எஸ்.சி. 477)அரசியலமைப்புச் சட்டம் ஒப்புதல் பெற்ற நாள்: 1949 நவம்பர் 26
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அரசியல் சட்டத்துக்கு மிகப் பெரிய வரலாற்றுப் பின்னணியும் சிறப்புகளும் உண்டு. உலகிலேயே மிகப் பெரிய அல்லது மிக நீண்ட, எழுத்துபூர்வமான அரசியல் சட்டம் நம்முடையதுதான். 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தால் இது முறையாக ஏற்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடையும்போது அதற்கென்று தனி அரசியல் சட்டம் வேண்டும், அதற்கான பணிகளை இப்போதே தொடங்க வேண்டும் என்று தலைசிறந்த இடதுசாரிச் சிந்தனையாளர் எம்.என். ராய் முதன்முதலாக 1934-ல் குரல் கொடுத்தார். அவருடைய யோசனையை ஏற்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 1935-ல் அதையே தீர்மானமாக நிறைவேற்றி, பிரிட்டிஷ் அரசுக்கு அனுப்பியது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டிஷ் அரசும் அந்த யோசனையை ஏற்றது. கவர்னர் ஜெனரல் லின்லித்கோ பிரபு தலைமையிலான தேசிய நிர்வாகக் கவுன்சில் இதற்காக விரிவுபடுத்தப்பட்டது. அப்போதே பூர்வாங்க வேலைகள் தொடங்கின.
நிர்ணய சபை
அரசியல் சட்டத்தை வகுப்பதற்கான அரசியல்சட்ட நிர்ணய சபை 9.12.1946-ல் முதல்முறையாகக் கூடியது. நாடாளுமன்றத்தின் மைய மண்டபம் என்று இப்போது அழைக்கப்படும் இடத்தில்தான் அரசியல் சட்ட நிர்ணய சபை கூடியது. இந்தச் சபையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 389 என்று முதலில் நிர்ணயிக்கப்பட்டது. பாகிஸ்தான் தனி நாடாகப் பிரிந்ததாலும், சில சமஸ்தானங்கள் உறுப்பினர் தகுதியை இழந்ததாலும் இந்தியப் பகுதிக்கான அரசியல் சட்ட நிர்ணய சபையின் உறுப்பினர் எண்ணிக்கை 299 ஆகக் குறைந்தது. இவற்றுள் 207 உறுப்பினர்கள் பல்வேறு மாகாண சட்டசபைகளிலிருந்து பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சுதேச சமஸ்தானங்கள் 93 பிரதிநிதிகளை அனுப்பின. 4 பிரதான மாகாணங்களிலிருந்து 4 பேர் சேர்க்கப்பட்டனர்.
13.2.1946-ல் இந்த சபைக்கான நோக்கங்களைத் தெரிவிக்கும் தீர்மானத்தை ஜவாஹர்லால் நேரு முன்மொழிந்தார். 22.1.1947-ல் இந்தத் தீர்மானம் ஏற்கப்பட்டது. 14.8.1947-ல் இந்த சபை கூடி, சட்டத்தை வகுக்கும் பணியைத் தொடங்கியது. 29.8.1947-ல் அரசியல் சட்டத்தை வகுக்கும் குழு, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமை யில் அமைக்கப்பட்டது. அரசியல் சட்ட நிர்ணய சபைக்கு முதலில் சச்சிதானந்த சின்ஹா தலைவரானார். பிறகு, பாபு ராஜேந்திர பிரசாத் தலைமையேற்றார். ஹரேந்திர குமார் முகர்ஜி என்ற வங்காள கிறிஸ்தவர் துணைத் தலைவரானார்.
இந்த அரசியல் சட்ட நிர்ணய சபை, பல்வேறு குழுக்களாகப் பிரிந்து பணி செய்தது. பாபு ராஜேந்திர பிரசாத் 4 குழுக்களுக்குத் தலைவராக இருந்தார். நிர்ணய சபைக்கான விதிகளை வகுக்கும் குழு, வழிகாட்டும் குழு, நிர்ணய சபைக்காகும் நிதியை நிர்வகித்தல், ஊழியர்களை அமர்த்துதல் ஆகியவற்றுக்கான குழு, தேசியக் குடியைத் தேர்வுசெய்யும் குழு ஆகியவற்றுக்கு அவர் தலைவராகத் திகழ்ந்தார்.
தலைவர் அம்பேத்கர்
மாநிலங்களின் சட்டங்களுக்கான குழு, மத்திய அரசின் அதிகாரங் களையும் கடமைகளையும் வகுக்கும் குழு, மத்திய அரசின் அரசியல் சட்டங்களைத் தெரிவு செய்யும் குழு ஆகியவற்றுக்கு ஜவாஹர் லால் நேருவே தலைவராக இருந்தார். அடிப்படை உரிமைகள், சிறுபான்மை யினர், பழங்குடிகள் உரிமை, விலக்களிக்கப்பட்ட பகுதிகள் தொடர்பான ஆலோசனைக் குழுவுக்குத் தலைவர், உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபபாய் படேல். ஒட்டுமொத்தமான அரசியல் சட்ட வரைவுக் குழுத் தலைவர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்.
இந்த அரசியல்சட்ட நிர்ணய சபை மொத்தம் 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 17 நாட்களுக்குப் பணி செய்தது. 11 தொடர்களாகக் கூட்டங்கள் நடந்தன. மொத்தம் 165 நாட்கள் சபை கூட்டம் நடந்தது. அதில் 114 நாட்கள் வரைவு அரசியல் சட்டம் தொடர்பான பிரதான விவாதங்களுக்கும் திருத்தத் தீர்மானங்களுக்கும் செலவிடப்பட்டது. மொத்தம் 7,635 திருத்தத் தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றுள் 2,473 விவாதித்து பைசல் செய்யப்பட்டன. பிரிட்டனில் நடை முறையில் உள்ள அரசியல் சட்டத்தை அடிப்படையாக வைத்து, இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டது. அமெரிக்கா, கனடா, அயர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகளின் அரசியல் சட்டங்களின் சில அம்சங்களும் தேவைக்கேற்பச் சேர்க்கப்பட்டன.
சமத்துவ, மதச்சார்பற்ற…
இந்திய அரசியல் சட்டத்தில் மொத்தம் 395 பிரிவுகள், 12 அட்ட வணைகள் இடம்பெற்றன. இந்திய அரசியல் சட்டம் ஆங்கிலம், இந்தி ஆகிய 2 மொழிகளில் இயற்றப்பட்டிருக்கிறது.
“இறையாண்மை மிக்க, சோஷலிச, மதச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசு” என்று இந்திய அரசியல் சட்டம் நம் நாட்டைப் பற்றிக் கூறிக்கொள்கிறது. அனைவருக்கும் சம நீதி, சம அந்தஸ்து, சம சுதந்திரம் வழங்குவதே இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சம். 1976-ல் இந்திராகாந்தி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திருத்தம் மூலமாகத்தான் நம்முடைய அரசியல் சட்டத்தின் முகப்பு வாசகத்தில் ‘சோஷலிச, மதச்சார்பற்ற’ என்ற 2 வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. 26.11.1949-ல் அரசியல் சட்டம் இறுதி செய்யப்பட்டு ஏற்கப்பட்டது. சபையின் 284 உறுப்பினர்கள் 24.1.1950-ல் அதில் கையெழுத்திட்டார்கள்.
26.1.1950-ல் புதிய இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்தது. அன்றைய தினம் தேசிய சட்டப் பேரவையின் பதவிக்காலம் முடிந்து, அதுவே நாடாளுமன்றமாக மாறியது. 1952-ல் முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு, புதிய நாடாளுமன்றம் உருவானது.
இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடாகத் திகழ முக்கியமான காரணம், நம்முடைய அரசியல் சட்டம்தான். மகத்தான மானுட ஆவணம் என்று அழைக்கப்படும் ‘இந்திய அரசியலமைப்புச் சட்ட’த்தின் உருவாக்கத்தில் நூற்றுக் கணக்கான ஆண்டுகளின் போராட்டங்கள், தவிப்புகள், மகத்தான தலைவர்களின் கனவுகள், தியாகங்கள் எல்லாமே இருக்கின்றன. நள்ளிரவில் சுதந்திர நடையை ஆரம்பித்த நம் தேசத்துக்கு, வெளிச்சத்தைத் தந்தது நமது அரசியலமைப்புச் சட்டமே. அது ஏற்கப்பட்ட இந்த நாள் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள்.
ஒட்டுமொத்த இந்தியாவா, இந்தி இந்தியாவா?
இந்தி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளின் ஆதிக்கத்தை எதிர்த்துத் தமிழகத்தைச் சேர்ந்த டி.டி. கிருஷ்ணமாச்சாரி எழுப்பிய குரல் மிகவும் முக்கியமானது: “ஷேக்ஸ்பியரையும் மில்டனையும் படிக்குமாறு கட்டாயப்படுத்தியதால் ஆங்கிலத்தை வெறுத்தோம்; இந்தியைப் படித்துத்தான் தீர வேண்டுமென்றால், படிக்கும் வயதைக் கடந்துவிட்ட என்னால் படிக்க முடியாது. நீங்கள் எனக்குத் தரும் நெருக்கடியாலும் படிக்க முடியாது. வலுவான மத்திய அரசு வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், அந்த மத்திய அரசு மக்களை அடிமைப்படுத்தி தேசிய மொழியைப் படிக்குமாறு கட்டாயப்படுத்தும் என்றும் அஞ்சுகிறோம். ஏற்கெனவே, தென்னிந்தியாவில் சிலர் பிரிவினையைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இந்தியைக் கட்டாயமாக்க வேண்டும் என்று ஐக்கிய மாகாண நண்பர்கள் வலியுறுத்துவது நாட்டின் ஒற்றுமைக்கு எந்த விதத்திலும் உதவாது. ஒட்டுமொத்த இந்தியா வேண்டுமா, இந்தி இந்தியா வேண்டுமா என்பதை அவர்கள்தான் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.”
பக்கம்பக்கமாய்…
இந்திய அரசியல் சட்ட நிர்ணய சபைக் கூட்டத்தில் நடந்த விவாதங்கள், நடைமுறைகள், செயல்பாடுகள் 11 பெரிய தொகுப்புகளாக அச்சிடப்பட்டுள்ளன. இவற்றில் சில 1,000 பக்கங்களுக்கும் மேல் கொண்டவை.
தனி சோபை
காந்தி குல்லாய்களும் நேரு பாணி சட்டைகளும் நிறைந்த அவையில் 9 பெண்கள் இடம்பெற்றிருந்தது அவைக்குத் தனி சோபையைத் தந்தது என்று ஒரு தேசிய நாளிதழ் வர்ணித்திருந்தது. காலம்காலமாகப் பெண்களை வீட்டுக்குள்ளே பூட்டிவைத்திருந்த இந்திய சமூகத்தில் இது பெரும் புரட்சி!
காந்தியும் அம்பேத்கரும்
இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவர் அம்பேத்கருடன் குழு உறுப்பினர்கள்.
மிகக் குறுகிய காலமே சட்ட அமைச்ச ராகப் பணியாற்றினாலும், சுதந்திர இந்தியாவின் சட்டப் பாதைக்கு மகத்தான வழிகாட்டியவர் அம்பேத்கர். சுதந்திரத்துக்குப் பிந்தைய முதல் அமைச்சரவைப் பட்டியல் காந்தியின் பார்வைக்குப் போனபோது அதில் அம்பேத்கர் பெயர் இல்லை. அப்போது “சுதந்திரம் இந்தியாவுக்குக் கிடைத் திருக்கிறது. காங்கிரஸுக்கு அல்ல” என்றார் காந்தி. சட்ட அமைச்சராக அம்பேத்கர் பெயர் இடம்பெற்றது.
இங்கிலீஷ் பேண்டு
அரசியலமைப்புச் சட்டத்துக்கு விமர்சகர்களும் உண்டு. கிராமம், நகரம் இரண்டில் இந்தியா எதை அடிப்படையாகக்கொள்வது என்ற கேள்வி அப்போது எழுந்தது. கிராமமா, நகரமா என்பதைவிட, தனிநபரை அடிப்படையாக வைத்தே சட்டங்கள் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அரசியல் சட்டம் தொகுக்கப்பட்ட பிறகு, காந்தியத் தன்மையே இதில் இல்லையே என்று மகாவீர் தியாகி ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். “என்னைப் போன்ற சுதந்திரப் போராட்டத் தியாகிகள் வீணை அல்லது சிதாரின் ஒலியைத்தான் எதிர்பார்த்தோம், முடிவில் இங்கிலீஷ் பேண்டு அல்லவா ஒலிக்கிறது?” என்று அங்கலாய்த்தார் கே. ஹனுமந்தையா.