வெள்ளி, 29 டிசம்பர், 2017

இயற்கை அறிவியலாளர் கோ. நம்மாழ்வார் நினைவு தினம் டிசம்பர் - 30. 2013.


இயற்கை அறிவியலாளர் கோ. நம்மாழ்வார் நினைவு தினம் டிசம்பர் - 30. 2013.

கோ. நம்மாழ்வார் (06 ஏப்ரல் 1938 - 30 திசம்பர் 2013) தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர் ஆவார்.
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு சிற்றூரில் பிறந்த இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பை கற்றவர். பசுமைப் புரட்சி , தொழில்மயமாக்கம், சூழல் மாசடைதல் தொடர்பாக காரமான விமர்சனங்களையும் ஆக்கபூர்வமான மாற்றுகளையும் முன்வைத்தவர். தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்தவர். வானகம், குடும்பம் அமைப்பு  உட்பட பல அரசு சாரா அமைப்புகளின் அமைப்பாளராக இருந்தார்.
30 திசம்பர் 2013 அன்று பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டியில் (பிச்சினிக்காடு சிற்றூரில்) மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த சென்றிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார் .

வரலாறு

நம்மாழ்வார், தஞ்சை மாவட்டத்தில் 1938இல் பிறந்தார். தந்தை பெயர் ச கோவிந்தசாமி. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 2007இல் காந்திகிராம பல்கலைக்கழகம் அறிவியலில் மதிப்புறு முனைவர் பட்டம் தந்தது. கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் 1960ஆம் ஆண்டு ஆய்வு உதவியாளராக பணியில் சேர்ந்து ஆய்வகங்களில் நிலவும் களப்பணியில் ஈடுபடாது செய்யப்படும் பயனில்லாப் பணிகளுக்கு எதிராக குரல் கொடுத்து மூன்றாண்டுகளில் வெளியேறினார். 1963ஆம் ஆண்டு முதல் 1969ஆம் ஆண்டு வரை அவர் மண்டல விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் வேலை செய்தார். ஜப்பானிய சிந்தனையாளர் மற்றும் விவசாயி, மசனோபு ஃபுக்குவோக்காவால் ஈர்க்கப்பட்டு இயற்கை அறிவியலாளர் ஆனார் நம்மாழ்வார்.
எதிர்த்துப் போராடியவை
பூச்சி கொல்லிகள்
மீத்தேன் வாயு திட்டம், இந்தியா
மரபணு சோதனைகள்
பி.டி. கத்தரிக்காய்க்கு அனுமதி
வெளிநாடுகளில் இருந்து உணவு தானியங்கள் இறக்குமதி
விவசாய நிலங்களை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்துதல்.

களப்பணிகள்

சுனாமியினால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்ட நிலங்கள் சீரமைப்பு
இந்தோனேசியாவில் சுனாமி பாதிக்கப்பட்ட பகுதியில் 30 மாதிரி பண்ணைகள் அமைத்தல்
60 க்கும் மேற்பட்ட கரிம விவசாய பயிற்சி மையங்களை தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் நிறுவினார்.
மீத்தேன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்தார்.
"தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்' என்ற அமைப்பினைத் தொடங்கி, தமிழ்நாட்டின் கிராமப்புறங்கள் எல்லாவற்றையும் கால்நடையாக எட்டி, அங்கு கருத்தரங்கங்களும், பயிற்சி வகுப்புகளும் நடத்தினார். "பேரிகை' என்றொரு இயற்கை உழவாண்மை வாழ்வியல் மாத இதழை வெளிட்டார்.

நடைப் பயணங்கள்

1998 - கன்னியாகுமாரி - சென்னை - சுதேச பயிர் வளர்ப்பின் முக்கியத்துவத்திற்காக
2002 - 25 நாட்கள் பாத யாத்திரை ஈரோடு மாவட்டம் - அங்கக வேளாண்மைப் பிரச்சாரம்.
2003 - பூம்புகார் முதல் கல்லனை வரை 25 நாட்கள் - கரிம வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து பிரச்சாரம்
2002 - இயற்கை உழவாண்மைகாக ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து கொடுமுடி வரை 25 நாள் நடைபயணம் மேற்கொண்டார். [8]
உருவாக்கிய அமைப்புகள்
1979ல் குடும்பம்
1990 லிசா (1990 – LEISA Network)
1990 – மழைக்கான எக்லாஜிக்கள் நிறுவனம், கொலுஞ்சி , ஒடுகம்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம்
இந்திய அங்கக வேளாண்மை சங்கம் (Organic Farming Association of India)
நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்
வானகம் , நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம் உலக உணவு பாதுகாப்பிற்கான பண்ணை ஆராய்ச்சி மையம்
தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்
படைப்புகள்
தாய் மண் (இயற்கை வழி உழவாண்மை பாடநூல்), வெளியீடு: வானகம்
உழவுக்கும் உண்டு வரலாறு (நூல்)
விகடன் வெளியீடு
தாய் மண்ணே வணக்கம் (நூல்) நவீன வேளாண்மை வெளியீடு
நெல்லைக் காப்போம்
வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும், இயல்வாகை வெளியீடு
இனி விதைகளே பேராயுதம், இயல்வாகை வெளியீடு
நோயினைக் கொண்டாடுவோம், இயல்வாகை வெளியீடு
எந்நாடுடையே இயற்கையே போற்றி,
விகடன் வெளியீடு
பூமித்தாயே, இயல்வாகை வெளியீடு
நோயினை கொண்டாடுவோம், இயல்வாகை வெளியீடு
மரபை அழிக்கும் மரபணு மாற்று விதைகள் (நூல்) வாகை வெளியீடு
களை எடு கிழக்கு பதிப்பகம்.

விருதுகள்

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், இவருக்கு சுற்றுச் சூழல் சுடரொளி விருதினை வழங்கியது. திண்டுக்கல்லைச் சேர்ந்த காந்திகிராம கிராமப்புற நிறுவனம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது .

வியாழன், 28 டிசம்பர், 2017

மாசற்ற குழந்தைகள் தினம் டிசம்பர் 28.


மாசற்ற குழந்தைகள் தினம் டிசம்பர் 28.

மாசற்ற குழந்தைகள் தினம் என்றால் என்ன? இதனைக் கொண்டாடுவதன் நோக்கம் என்ன? உரோமை அரசால், யூதர்களை ஆள்வதற்கு என்று நியமிக்கப்பட்ட ஏரோது அரசரால் கொல்லப்பட்ட குழந்தைகளைத்தான், மாசற்ற குழந்தைகள் தினமாக, திருச்சபை கொண்டாடுகிறது. ஏரோது எதற்காக, ஒன்றுமறியாத பச்சிளங்குழந்தைகளைக் கொல்ல வேண்டும்? ஞானிகளால் மெசியா பிறந்திருக்கிறார் என்பதை அறிந்த ஏரோது, குழந்தையினால் தன்னுடைய அரசுக்கு ஆபத்து என்று நினைத்தான். ஆனால், எந்த குழந்தை தன்னுடைய பதவிக்கு ஆபத்தாக வருகிறது என்பதை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. தன்னுடைய பதவியை காப்பாற்றுவது ஒன்றே, அவனுடைய இலக்காக இருந்தது. அதற்காக எத்தனை குழந்தைகளை பழிகொடுத்தாலும் தகும் என்று நினைத்தான். அவர்கள் அனைவரையும் ஈவு, இரக்கமில்லாமல் கொன்றொழித்தான். எத்தனை குழந்தைகள் கொல்லப்பட்டார்கள் என்பது தெளிவாக இல்லை. ஆனால், கொல்லப்பட்ட குழந்தைகள் அனைவருமே, திருச்சபையினால் மறைசாட்சிகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். அதிகார வெறிக்கு பழிகடாக்கள் தான் இந்த மாசற்ற குழந்தைகள். இன்றைக்கு பெற்றோர், தாங்கள் நிறைவேற்ற முடியாத ஆசைகளை தங்களின் குழந்தைகளிடத்தில் திணித்து, அவர்களை தங்களுடைய விருப்பு, வெறுப்புக்களுக்கு ஏற்ப வளர்க்க வேண்டும் என்று நினைத்து, குழந்தைகளின் ஆளுமையைச் சிதைக்கின்றனர். குழந்தைகளை அவர்களின் இயல்பில் வளர நாம் முயற்சி எடுப்போம். கடவுளின் கரம் யூதப் பாரம்பரிய மக்கள் கனவு வழியாக கடவுள் மக்களோடு பேசுகிறார் என்று நம்பினர். எனவே, கனவு வருகிறபோது, அவர்கள் அதை சாதாரணமானதாக கருதுவதில்லை. அதில் இருக்கக்கூடிய அர்த்தங்களை விளக்குவதற்கு ஏராளமான பேர், பாலஸ்தீனத்தில் இருந்தார்கள். எனவே, யோசேப்பு கனவை சிந்தித்து, அர்த்தம் கண்டுபிடிக்க முனைவதில், பொருள் இருக்கிறது. ஆனால், இந்த பகுதியை வாசிக்கிறபோது, நமக்கு எழுகிற முக்கியமான கேள்வி: யோசேப்பு எதற்காக எகிப்திற்குச் செல்ல அறிவுறுத்தப்படு
கிறார்? எகிப்திற்கும் பாலஸ்தீனத்திற்கும் என்ன தொடர்பு? இவற்றை இப்போது பார்ப்போம். யூதர்களுக்கு எப்பொழுதெல்லாம் வேற்று அரசர்கள் வந்து அவர்களைத் துன்புறுத்தினார்களோ, அப்போதெல்லாம் தாங்கள் புகலிடம் செல்லும் இடமாக எகிப்தை அவர்கள் வைத்திருந்தார்கள். ஒருவேளை அவர்களது முன்னோர் அங்கே பல ஆண்டுகளாக பாரவோன் மன்னனுக்கு அடிமைகளாக இருந்ததால், அவர்களின் பல உறவுகள் அங்கே இருந்தனர். அங்கிருந்து வேற்று நாட்டிற்கு வந்துவிட்டாலும் கூட, நிச்சயம் எகிப்தும் அவர்களுக்குத் தாய்வீடு போன்றதுதான். அவர்களது முன்னோர் வாழ்ந்த நாடு. இதனால், எகிப்தின் ஒவ்வொரு நகரங்களிலும் ஏராளமான யூதர்கள் வாழ்ந்து வந்தனர். அலெக்ஸாண்டிரியாவில் மட்டும் ஏறத்தாழ பத்து இலட்சம் யூதர்கள் வாழ்ந்ததாக ஒரு புள்ளவிபரம் கூறுகிறது. எனவே, எகிப்திற்குச் சென்றால் உணவுக்கோ, தங்குமிடத்திற்க
ோ கவலைப்படத் தேவையில்லை. அது அவர்களுக்கு அந்நிய தேசம் அல்ல. ஆக, குழந்தைக்கு ஆபத்து என்றதும், யோசேப்பு தப்பியோட, எகிப்தைத் தேர்ந்தெடுத்தது ஆச்சரியம் அல்ல. கடவுளுடைய கரம் தேவைப்படுகிற நேரத்தில், யோசேப்பிற்கு கிடைக்கிறது. என்ன செய்வது? ஏது செய்வது? என்ற குழப்பமான நேரத்தில் கடவுள் யோசேப்பிற்கு உதவி செய்கிறார். நிச்சயம் அந்த கடவுளின் கரம் நம்மையும் தேற்றும் என்றால் அது மிகையாகாது. நாம் துன்பப்படுகிற நேரத்தில் கடவுள் தாமே, தம் தூதரை அனுப்பிக் காத்திடுவார்.

புதன், 27 டிசம்பர், 2017

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பிறந்த நாள் டிசம்பர் 28 , 1964.



தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பிறந்த நாள் டிசம்பர்  28 , 1964.

ஜி.கே.வாசன் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் கிராமத்தில் பெரும்பண்ணையார் குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் ஜி. கே. மூப்பனார், தாயார் பெயர் கஸ்தூரி. சென்னை புதுக் கல்லூரியில் பி.ஏ. நிருவன செயலியல் பட்டம் பெற்றார். 29-11-1996 ல் சுனிதாவை திருமணம் புரிந்தார்.

ஜி. கே. வாசன்
தமிழ் மாநில காங்கிரசு
தலைவர்
தனிநபர் தகவல்
பிறப்பு திசம்பர் 28 , 1964
சுந்தரபெருமாள் கோவில்,தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு
வாழ்க்கை துணைவர்(கள்)
சுனிதா
பிள்ளைகள் பிரனாவ் கருப்பையா
இருப்பிடம் சென்னை
கல்வி பி.ஏ. நிருவன செயலியல்
இணையம் www.gkvasan.net

காங்கிரஸ் கட்சியில்

தனது தந்தையின் மரணத்திற்கு பின் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக பணியாற்றி பின்னர் அதனை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார். பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவராகவும் , அகில இந்திய காங்கிரஸ் செயலாளராகவும் , இருமுறை
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக வெற்றி பெற்று ஒருமுறை மத்திய புள்ளிவிவரத்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.சென்ற மத்திய கப்பல் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.
புதியகட்சித் துவக்கம்
காங்கிரஸ் கட்சி 2014ஆண்டு மக்களவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் காங்கிரஸ் தலைமையுடன் வாசனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய ஜி.கே. வாசன், 2014 நவம்பர் 28இல் தமிழ் மாநில காங்கிரசு என்ற கட்சியை மீண்டும் தொடங்கினார்.
திருவையாறு தியாகபிரம்மா மகாஉத்சவ சபாவின் தலைவராகவும், அதன் நிர்வாக அறங்காவலராகவும் உள்ளார்.

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பிறந்த நாள் டிசம்பர் 31 , 1947.


எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பிறந்த நாள் டிசம்பர் 31 , 1947.

நாஞ்சில் நாடன் (பிறப்பு: திசம்பர் 31 , 1947 , வீர நாராயண மங்கலம் ( கன்னியாகுமரி மாவட்டம்) ) நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் க.சுப்பிரமணியம். துணைவியார் பெயர் சந்தியா சுப்பிரமணியம். வேலையின் காரணமாகப் பல ஆண்டுகள் மும்பையில் வாழ்ந்தார். தற்போது கோயம்புத்தூரில் வாழ்ந்து வருகிறார்.
நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ்பெற்றவர். தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் என்ற சிறுகதைத்தொகுதி மூலம் புகழ்பெற்றார். தலைகீழ்விகிதங்கள் இவரது முதல் நாவல்.
இவரின் மிக முக்கியமான அடையாளம் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கிலான எழுத்துநடை. தலைகீழ் விகிதங்கள் நாவலை இயக்குநர் தங்கர்பச்சான் சொல்ல மறந்த கதை என்ற பெயரில் திரைப்படமாக்கி இருக்கிறார்.
பெருமைகளும் விருதுகளும்
2010ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது இவரது "சூடிய பூ சூடற்க" என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது. [1]
கனடாவின் இலக்கியத்தோட்டத்தின் 2012 ஆம் ஆண்டுக்கான இயல்விருது
தொராண்டோவில் இவருக்கு அளிக்கப்பட்டது
படைப்புகள்
புதினங்கள்
1977 தலைகீழ் விகிதங்கள்
1979 என்பிலதனை வெயில்காயும்
1981 மாமிசப்படைப்பு
1986 மிதவை
1993 சதுரங்க குதிரை
1998 எட்டுத் திக்கும் மதயானை
சிறுகதை தொகுதிகள்
1981 தெய்வங்கள் ஆடுகள் ஓநாய்கள்
1985 வாக்குப்பொறுக்கிகள்
1990 உப்பு
1994 பேய்க்கொட்டு
2002 பிராந்து
2004 நாஞ்சில் நாடன் கதைகள்
சூடிய பூ சூடற்க
முத்துக்கள் பத்து (தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு)
கான் சாகிப்
கொங்குதேர் வாழ்க்கை
கவிதை
2001 மண்ணுள்ளிப் பாம்பு
பச்சை நாயகி
வழுக்குப்பாறை
கட்டுரைகள்
2003 நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை
2003 நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று
நதியின்பிழையன்று நறும்புனல் இன்மை
தீதும் நன்றும்
திகம்பரம்.
காவலன் காவான் எனின்
அம்பறாத்தூணி (கம்பராமாயணம் குறித்த கட்டுரை தொகுதி)
அகம் சுருக்கேல்
எப்படிப் பாடுவேனோ?
2015 கைம்மண் அளவு (குங்குமம் வார இதழ் கட்டுரைகள்)
கருத்துக்கள்
இவர் தனக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது பற்றி குறிப்பிடுகையில் காலம் கடந்து இந்த விருது தனக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார் [2] .
சாகித்ய அகாடமி அரசியல் மற்றும் பணபலத்தின் செயல்பாட்டுக் களமாகி விட்டது. அங்கு வெறும் கல்வியாளர்களின் கைதான் ஓங்கி உள்ளது. அவர்கள் மரபு இலக்கியங்களை முழுமையாக படிப்பதில்லை. அரசியல் செல்வாக்கோ, பண செல்வாக்கோ இருந்தால் விருதை பெறவேண்டியதில்லை, வாங்கிவிடலாம் என்கிறார். எனக்கு முன்னால் மிகப் பெரிய தகுதியுடையவர்கள் 20 முதல் 30 பேர் வரை விருது பெற காத்திருக்கின்றனர். ஆண்டுதோறும் 25 பேருக்கு இந்த விருதை வழங்கலாம் [3] என்றும் கூறியுள்ளார்

செவ்வாய், 26 டிசம்பர், 2017

அன்னை மீனாம்பாள் சிவராஜ் பிறந்த நாள் டிசம்பர் 26, 1904.



அன்னை மீனாம்பாள் சிவராஜ் பிறந்த நாள் டிசம்பர் 26, 1904.

மீனாம்பாள் சிவராஜ் (அன்னை மீனாம்பாள் சிவராஜ்) 26 டிசம்பர் , 1904 - 30 நவம்பர் , 1992 பெண் விடுதலைக்காகவும், தலித் விடுதலைக்காகவும் போராடுவததைத் தன் வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டு போராடி வென்ற பெண். இவர் இந்தி எதிர்ப்புப் போரின் முதல் படைத்தலைவியாக விளங்கியவர்.
தமிழ் , தெலுங்கு , இந்தி , ஆங்கிலம் போன்ற மொழிகளில் வல்லமை பெற்றவர். சென்னை மாநகராட்சியின் துணை மேயர். 1938 திசம்பரில் நீதிக்கட்சியின் மாநாடு 29,30,31 மூன்று நாட்கள் நடைப்பெற்றன.அந்த மாநாட்டில்தான் பெரியார் நீதிக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த மாநாட்டுப் பந்தலிலேயே மூன்றாம்நாள் இறுதியில் ஆதி திராவிடர் மாநாடு நடத்த மீனாம்பாள் சிவராஜ் நீதிக்கட்சி தலைவர்களிடம் ஒப்புதல் பெற்றிருந்தார்.மீனாம்பாள் தலைமையில் நடைபெற்ற அந்த மாநாட்டில் அம்பேத்கர் தலைமையை ஏற்று அகில இந்திய அளவில் மாநாடு நடத்துவது என்று தீர்மானித்தனர் .


குடும்பவிபரம்

இவர் தலித் சமுதாயத்திலிருந்து சென்னை மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதிநிதியான வாசுதேவப்பிள்ளையின் மகள். முதன் முதல் கப்பலோட்டிய தமிழர் என்று புகழப்பட்டவரும், கோடீஸ்வரப்பிள்ளை என்று அழைக்கப்பட்டவருமான மதுரைப்பிள்ளையின் பேத்தி.இவர் அக்காலத்தில் ரங்கூனில் மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். அக்காலத்திலேயே ரங்கூனில் மெட்ரிக்குலேசன்வரை படித்தவர். [2] இவர் தனது 16வது வயதில் 1918இல் தலித் இயக்கத் தலைவர் ந. சிவராஜ் என்பவரை மணந்து கொண்டார்.
பொறுப்புகளும் பணிகளும்
கவுன்சிலர் (6 ஆண்டுகள்)
கௌரவ மாகாண நீதிபதி (16 ஆண்டுகள்)
திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் (6 ஆண்டுகள்)
சென்னை மாகாண ஆலோசணைக் குழு உறுப்பினர் (9 ஆண்டுகள்)
தொழிலாளர் ட்ரிப்யூனல் உறுப்பினர்
சென்னை நகர ரேஷன் ஆலோசனைக் குழு உறுப்பினர்
சென்னை பல்கலைக் கழக செனட் உறுப்பினர் (13 ஆண்டுகள்)
போருக்குப்பின் புனரமைப்புக்குழு உறுப்பினர்
S.P.C.A உறுப்பினர்
நெல்லிக்குப்பம் பாரி கம்பெனி தொழிலாளர் தலைவர்
தாழ்த்தப்பட்டோர் கூட்டுறவு வங்கி இயக்குனர்
அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினர் (6 ஆண்டுகள்)
சென்னை கூட்டுறவு வீட்டு வசதி சங்க இயக்குனர்
விடுதலை அடைந்த கைதிகள் நலச்சங்க உறுப்பினர்.

காந்தி நகர் மகளிர் சங்கத் தலைவர்

மகளிர் தொழிற் கூட்டுறவு குழுத்தலைவர் (6 ஆண்டுகள்)
சென்னை அரசு மருத்துவ மனைகளின் ஆலோசனைக் குழு உறுப்பினர்
அடையார் மதுரை மீனாட்சி மகளிர் விடுதி நடத்துனர்
லேடி வெலிங்டன் கல்லூரி தேர்வுக்குழு தலைவர்.



டாக்டர் அம்பேத்கரின் தங்கை அன்னை மீனாம்பாள் சிவராஜ்!

டாக்டர் அம்பேத்கரின் தங்கை அன்னை மீனாம்பாள் சிவராஜ்!
மானுட விடுதலைக்கு, பெண் விடுதலையை தலித் விடுதலையை முன் நிபந்தனைகளாகக் கொண்ட அன்னை மீனாம்பாள், பெண்களுக்கு மட்டுமல்ல தலித் மக்களுக்கும் தலைவராக வாழ்ந்தார். தமிழ் வள்ளலாகவும், ஆதிதிராவிடர் மகாஜனசபாவின் புரவலராகவும், முதன் முதலில் கப்பலோட்டிய தமிழராகவும் புகை உச்சியில் இருந்த கோடீஸ்வரப் பிள்ளை என்று அழைக்கப்பட்ட மதுரைப்பிள்ளையின் பேத்திதான் அன்னை மீனாம்பாள். அன்னை மீனாம்பாள், 1902 இல் பிறந்தார். அன்னை மீனாம்பாளின் தந்தை வாசுதேவப் பிள்ளை தலித் சமுதாயத்திலியிருந்து சென்னை மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதிநிதி. 1918இல் அன்னை மீனாம்பாள் அவர்களுக்கு வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தம் ஏற்பட்டது. தலைவர் சிவராஜ் அவர்கள் துணைவராக வாய்க்கபெற்றார்.
அன்னை மீனாம்பாள், இளம் வயதிலேயே எழும்பூர் நீதிமன்றத்தில் பதிமூன்று ஆண்டு காலம் கவுரவ நீதிபதியாக இருந்தவர். கவுரவ நீதிபதிக்கான நேர்முகத் தேர்வில், உங்கள் கணவர் வழக்குரைஞராக இருந்து நீங்கள் நீதிபதியானால் அவர் வாதாடுகிற பக்கம் தீர்ப்புச் சொல்ல மாட்டீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு அன்னை மீனாம்பாள் கணவர் என்பது வீட்டோடுதான். நீதி மன்றத்தில் அவர் வழக்குரைஞர், நான் நீதிபதி. கணவன் மனைவி உறவு அங்கே கிடையாது என்று ஆளுமையுடன் பதிலளித்தார். நீதிபதி பொறுப்பின் போது உலகத்தையும், வாழ்க்கையையும் மக்களின் பல்வேறு பிரச்சினைகளையும் பெருமளவு புரிந்து கொண்டார்.
அன்னை மீனாம்பாள் சுயமரியாதை இயக்க மாநாடுகளில் வரவேற்புக் குழுத்தலைவராக, திறப்பாளராக, தலைவராக, சிறபுரையாளராக முக்கியத்துவம் பெற்றியிருந்தார். ஈ.வெ. ராமசாமிக்கு 20/11/1938 இல் தமிழக பெண்கள் மாநாட்டில் நாயக்கர் பட்டத்தை ஒழித்து பெரியார் என்ற மதிப்பு மிக்க பட்டத்தை தந்தவர் அன்னை மீனாம்பாள். டாக்டர் அம்பேத்கர் அன்னை மீனாம்பாள் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார். ஒருமுறை செட்டி நாட்டரசர் ராஜா சர் முத்தையாருடன், டோகோட்ரோ அம்பேத்கர் பம்பாயில் பேசிக்கொண்டு இருந்த போது "சென்னையில் எனக்கு ஒரு தங்கை இருக்கிறார்" என்றார். அதற்கு முத்தையா அவர்கள் சென்னையிலா? அதுவும் உங்களுக்கா? என்று ஆச்சரியப்பட அதற்க்கு அண்ணலும் ஆமாம், அவர் பெயர் மீனாம்பாள். தலைவர் சிவராஜின் துணைவி என்று விளக்கமாகச் சொன்னார். 1942-இல் அன்னை மீனாம்பாள் தலைவர் சிவராஜ் அவர்களுடன் பம்பாயில் தங்கியிருக்கையில் டாகடர் அம்பேத்கர் தன கைவண்ணத்தில் அற்புதமாகச் சமைத்து அவரே அன்போடு பரிமாறினார். டாக்ற்றோர் அம்பேத்கர் சமைத்துச் சாப்பிடக் கொடுத்த வைத்தவர் அன்னை மீனாம்பாள்.

திங்கள், 25 டிசம்பர், 2017

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பிறந்த நாள் டிசம்பர் 26, 1925



இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பிறந்த நாள் 
டிசம்பர் 26, 1925 (அகவை 91).

நல்லக்கண்ணு சுமார் 25 ஆண்டுகள் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார். 13 ஆண்டுகாலம் . இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராகவும் இருந்துள்ளார். இப்போது மத்திய கமிட்டி உறுப்பினர்,தேசிய கட்டுப்பாட்டுக் குழு தலைவர்.
வாழ்க்கை வரலாறு
திருநெல்வேலி மாவட்டம்
ஸ்ரீவைகுண்டத்தில் 1925ல் பிறந்தார். நல்லக்கண்ணு அவர்கள் 18ஆவது வயதிலேயே . இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர்.
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இரண்டாயிரம் மூட்டை நெல் வைத்திருப்பதைக் கண்டுபிடித்து ஜனசக்தி பத்திரிகையில் எழுதினார். அதைப் படித்த கலெக்டர், உடனடியாக நடவடிக்கை எடுத்து அத்தனை மூட்டைகளையும் பறிமுதல் செய்தார். இவருடைய முதல் நடவடிக்கை என்று பார்த்தால் இதுதான். இனிமேல் மக்களுக்காக முழு நேரமும் உழைப்பது என்று முடிவெடுத்தார். அப்பாவிடம் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறினார். கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடைவிதிக்கப்பட்ட போது நெல்லைச் சதி வழக்கில் கைது செய்யப்பட்டார். ஏழு ஆண்டுகள் இருட்டறை வாழ்க்கை நாங்கள் வெளியில் வந்தபோது நாடு சுதந்திரம் அடைந்திருந்தது. அன்று ஆரம்பித்தது அரசியல் பயணம் இன்று வரை தொடர்கிறது.

சாதி எதிர்ப்புப் போராளி
இவருடைய 80 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய் வசூலித்து“ கொடுத்தது கட்சி. அதை அந்த மேடையில் வைத்து கட்சிக்கே திருப்பிக் கொடுத்து விட்டார். தமிழக அரசு அம்பேத்கர் விருது கொடுத்து ஒரு லட்சம் ரூபாயை வழங்கியது. அதில் பாதியைக் கட்சிக்கும் மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்துவிட்டார்.
சாதீய அக்கிரமங்களுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். அதற்காக தன் வாழ்க்கையைச் சிறைக்கொட்டடிகளிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்தவர். இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை. சாதீய ஒடுக்கு முறைகள் மேலோங்கியிருக்கும் தென்மாவட்டங்களில் குறிப்பாக முக்குலத்தோர் பிரிவில் பிறந்தவர்.
விருதுகள்
தமிழக அரசின் அம்பேத்கர் விருதைப் பெற்றுள்ளார்.

ஹாலிவுட் நடிகர் சார்லி சாப்ளின் நினைவு தினம் டிசம்பர் 25 , 1977.


ஹாலிவுட் நடிகர் சார்லி சாப்ளின் நினைவு  தினம் டிசம்பர் 25 , 1977.

சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் ( Sir Charles Spencer Chaplin , ஏப்ரல் 16 , 1889 - டிசம்பர் 25 , 1977 ) என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின் , ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன.
இளமைப் பருவம்
சாப்ளின், இலண்டனில் உள்ள
வால்வோர்த்தில் சார்லசுக்கும் ஹன்னா ஹாரியட் ஹில்லுக்கும் மகனாகப் பிறந்தார். இவர் பெற்றோர் இருவரும்
மியூசிக் ஹால் கலைஞர்கள். சாப்ளின் பிறந்த சில நாட்கள் கழித்து இவர்களது திருமண வாழ்க்கை முறிந்தது. சாப்ளின் தனது அன்னையின் கண்காணிப்பில் வளர்ந்தார். 1896ஆம் ஆண்டில் ஹாரியட்டிற்கு வேலை ஏதும் கிடைக்காத நிலையில், சார்லியும் அவரது சகோதரர் சிட்னியும் லாம்பெத் வொர்க்கவுசில் இருக்கும் நிலை ஏற்பட்டது. பின்னர் இருவரும் Hanwell School for Orphans and Destitute Children என்னும் ஆதரவற்றோருக்கான பள்ளி ஒன்றில் வளர்ந்தனர். இதற்கிடையில், சாப்ளினின் தந்தை குடிப் பழக்கத்தால் உடல் நலம் குன்றி சாப்ளினின் பன்னிரண்டாவது வயதில் இறந்தார். இதனால் இவர் தாயும் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி கிராய்டனில் இருந்த கேன் ஹில் அசைலம் (Cane Hill Asylum) என்ற மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டார். பின்பு இவரும் 1928ஆம் ஆண்டில் இறந்தார்.
சாப்ளின் ஐந்து வயதிலேயே நடிக்கத் தொடங்கி விட்டார். முதன் முதலில் 1894ஆம் ஆண்டில் மியூசிக் ஹாலில் தனது தாய்க்குப் பதிலாக ஒரு வேடத்தில் நடித்தார். சிறுவனாக பல நாட்கள் உடல் நலக் குறைவால் படுத்த படுக்கையாக இருந்தபொழுது, இரவுகளில் அவரது தாய் சன்னல் ஓரம் அமர்ந்து வெளியில் நடக்கும் நிகழ்வுகளை நடித்துக் காட்டுவார். சாப்ளினுக்கு பத்து வயதாக இருந்த பொழுது சிட்னி இலண்டன் ஹிப்போட்ரோமில் சின்ட்ரெல்லா பாண்டோமைமில் ஒரு பூனையாக, நகைச்சுவையான பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை வாங்கித் தந்தார். 1903ஆம் ஆண்டில் "ஜிம், எ ரொமான்ஸ் ஆஃப் காக்கைய்ன்" (Jim, A Romance of Cockayne) நாடகத்தில் நடித்தார். இதற்குப் பிறகு அவரது முதல் நிரந்தர வேலை கிடைத்தது - செர்லாக் ஹோம்ஸ் நாடகத்தில் செய்தித்தாள் விற்கும் சிறுவன் பில்லி வேடம். இதனைத் தொடர்ந்து கேசீஸ் கோர்ட் சர்க்கஸ் (Casey's Court Circus) நடத்திய பல்சுவை நிகழ்ச்சியிலும், Fred Karno's Fun Factory slapstick நகைச்சுவை நிறுவனத்தில் கோமாளி வேடத்திலும் நடித்தார். அமெரிக்காவின் குடிபெயர்வுப் பதிவுகளின்படி கார்னோ குழுவுடன்
அக்டோபர் 2 , 1912 - அன்று அமெரிக்கா வந்தடைந்தார். கார்னோ குழுவிலே ஆர்த்தர் ஸ்டான்லே ஜெப்பர்சனும் இருந்தார் - இவரே பின்னர் ஸ்டான் லாரலாக பிரபலமானார். இருவரும் சிறிது காலம் ஒரே அறையில் தங்கினர்.
திரையுலக வாழ்க்கை
" தி கிட் " திரைப்படத்தில்
ஜாக்கி கூகனுடன் சாப்ளின் ( 1921 )
தயாரிப்பாளர் மாக் செனட் சாப்ளினின் திறமையைக் கவனித்து அவரது நிறுவனமான கீஸ்டோன் திரைப்பட நிறுவனத்தில் (Keystone Film Company) சேர்த்துக் கொண்டார். முதலில் சாப்ளினுக்கு கீஸ்டோன் நடிப்பு முறைக்கு தன்னை மாற்றிக் கொள்வது சற்று கடினமாக இருந்தது. ஆனால் மிக விரைவில் தன்னைப் பழக்கிக் கொண்டு கீஸ்டோனின் சிறந்த கலைஞராக வளர்ந்தார். இவரது கிடுகிடு வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது அவர் தனக்கென்று உருவாக்கிக் கொண்ட நாடோடி வேடமும், நிறுவனத்தில் இவருக்கு இயக்கவும் புது படைப்புகள் படைக்கவும் கொடுக்கப்பட்ட உரிமையுமாகும். இவரது வளர்ச்சியையும், இவரது நிருவாகியாக பணிபுரிந்த சிட்னியின் ஆற்றலையும் சாப்லினின் சம்பளப் பட்டியல் எடுத்துக்காட்டியது.
காலம்; நிறுவனம் சம்பளம்
1914 கீஸ்டோன் வாரத்துக்கு $150
1914-1915
எசானே ஸ்டூடியோஸ் (Essanay Studios), இலினாய்ஸ், சிகாகோ
வாரத்துக்கு $1250 மற்றும் $10,000 சேர்வதற்கான ஊக்கத் தொகை
1916-1917 மியூச்சுவல் (Mutual)
வாரத்துக்கு $10000 மற்றும் $150,000 சேர்வதற்கான ஊக்கத் தொகை
1917 பர்ஸ்ட் நேஷனல் (First National)
$1 மில்லியன் ஒப்பந்தம் (ஒரு மில்லியன் டாலர் ஊதியம் பெற்ற முதல் நடிகர்)
இவர் 1919ஆம் ஆண்டில் மேரி பிக்போர்ட் ,
டக்லஸ் ஃபேர்பேங்க்ஸ் , கிரிபித்துடன் இணைந்து யுனைட்டடு ஆர்டிஸ்ட்ஸ் ஸ்டுடியோவைத் துவங்கினார்.
1927ஆம் ஆண்டில் ஓசையுடன் கூடிய திரைப்படங்கள் வெளிவரத் துவங்கி மிகவும் பரவலானாலும் 1930ஆம் ஆண்டு வரை சாப்ளின் பேசும் படங்களில் இருந்து ஒதுங்கியே இருந்தார். சாப்ளின் சினிமாவின் பல துறைகளில் கை தேர்ந்தவராகத் திகழ்ந்தார். 1952ஆம் ஆண்டில் வெளிவந்த லைம்லைட் திரைப்படத்தில் நடன அமைப்பையும் 1928ஆம் ஆண்டுத் திரைப்படம் "தி சர்க்கஸ் " படத்தின் தலைப்பு இசை அமைப்பையும் இவரே செய்தார். இவர் இசையமைத்த பாடல்களில் பெரும் புகழ் பெற்றது ஸ்மைல்.
தி கிரேட் டிக்டேடர்
டிக்டேட்டராக சாப்ளின்
இவரது முதல் டாக்கீஸ் 1940 ஆம் ஆண்டில் வெளியான "தி கிரேட் டிக்டேடர் " (The Great Dictator). இது அடால்ஃப் ஹிட்லரையும் அவரது பாசிச கொள்கையையும் எதிர்த்து குரல் கொடுத்த படம். இப்படம் அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் புகுவதற்கு ஒரு வருடம் முன்பு அங்கு வெளியிடப்பட்டது. இதில் சாப்ளின் இரு வேடங்கள் பூண்டிருந்தார் - ஹிட்லர் மற்றும் நாசியர்களால் கொடுமையாக கொல்லப்படும் யூத இனத்தைச் சேர்ந்த ஒரு நாவிதன். சினிமா மீது மோகம் கொண்ட ஹிட்லர் இப்படத்தை இரு முறைப் பார்த்தார். போர் முடிந்த பிறகு,
ஹோலோகாஸ்ட்டின் கொடுமை உலகிற்கு தெரியவந்த பிறகு சாப்ளின் இக்கொடுமைகள் எல்லாம் தெரிந்திருந்தால் ஹிட்லரையும், நாசியர்களையும் கிண்டல் செய்திருக்க முடியாது என்றார்
இவரது கடைசி திரைப்படங்கள் "தி கிங் இன் நியூ யார்க் " (1957), " தி சாப்லின் ரெவ்யூ " (1959) மற்றும் சோஃபியா லாரென், மார்லன் ப்ராண்டோ நடித்த "அ கௌண்டஸ் ·ஃப்ரம் ஹாங்காங் ".
The Bond படக் காட்சி ( கோப்பு விவரம் )
சார்லி சாப்ளின் நடித்த பேசும் படமான தி பாண்ட் திரைபடத்திலிருந்து ஒரு காட்சி.
ஒளிக்கோப்பை பார்ப்பதில் சிக்கலா? பார்க்கவும் ஊடக உதவி .
கம்யூனிச சிந்தனைகளும் குற்றச்சாட்டுகளும்
மகாத்மா காந்தியுடன் சாப்ளின்
சாப்ளினின் அரசியல் சிந்தனைகள் இடது சார்புடையதாகக் கருதப்படுகிறது. இதனையே இவரது திரைப்படங்களில், முக்கியமாக "மாடர்ன் டைம்ஸ் " (Modern Times) பிரதிபலித்தன. இப்படம் பாட்டாளிகள் மற்றும் ஏழைகளின் கவலைக்கிடமான நிலைமையை சித்தரித்தது. "மெக்கார்த்திச காலங்களில்" இவர் அமெரிக்க கொள்கைகளுக்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும்,
கம்யூனிஸ்ட்-எனவும் சந்தேகிக்கப்பட்டார்;
ஜே.எட்கார் ஹூவர் எஃப்.பி.ஐ -யிடம் இவரை கண்காணிக்குமாறு உத்தரவிட்டு, அமெரிக்காவில் சாப்ளின் வாழும் உரிமையை நீக்க முயற்சித்தார். சாப்ளினின் வெற்றிகள் அனைத்துமே அமெரிக்காவில் அமைந்தாலும், அவர் பிரிட்டிஷ் குடியுரிமையினையே நீட்டித்தார். 1952 ஆம் ஆண்டில் சாப்ளின்
இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இதனை தெரிந்துகொண்ட ஹூவர் ஐ.என்.எஸ் (Immigration and Naturalization Service)-உடன் பேச்சுவார்த்தை நடத்தி, சாப்ளின் அமெரிக்கா திரும்பும் அனுமதிச் சீட்டை ரத்து செய்தார். ஆதலால் அவர் ஐரோப்பாவிலேயே தங்கும்படி நேர்ந்தது - பெரும்பாலும் வெவே, சுவிஸர்லாந்தில் வாழ்ந்தார். இவர் 1972 ஆம் ஆண்டில் சிறிது காலம், தனக்கு அளிக்கப்பட்ட கௌரவ
ஆஸ்கார் விருதைப் பெறுவதற்காக அமெரிக்கா திரும்பினார்.
திருமணங்கள்
இவரது திரையுலக வெற்றிகள் மூலமாக இவருக்கு கிடைத்த புகழ், பலமுறை தன் தனிப்பட்ட வாழ்வினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. அக்டோபர் 23 1918 -இல் இருபத்தியெட்டு வயது சாப்ளின் பதினாறு வயது மில்ட்ரெட் ஹாரிசை மணந்தார். இவர்களுக்கு பிறந்த குழந்தை சிறு வயதிலேயே இறந்தது. இவர்களது திருமண வாழ்க்கை 1920 ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. முப்பத்தி ஐந்து வயதில் "தி கோல்ட் ரஷ் " திரைப்படத்திற்கு தயார் செய்து கொண்டிருந்த பொழுது, பதினாறு வயது லீடா க்ரே மீது காதல் கொண்டார். நவம்பர் 26 1924 -இல் க்ரே கர்ப்பமான நிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு மகன்கள் பிறந்தனர். இவர்களது மண வாழ்க்கையும் $825,000 ஒப்பந்ததுடன் விவாகரத்தில் முடிந்ததது. இந்த கசப்பான விவாகரத்தினாலும் வருமான வரி சிக்கல்களாலும் மன அழுத்தத்திற்கு ஆளாகி இவரது தலைமுடி நரைக்கத் துவங்கியது. [2]
மேலும் நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில் சாப்ளினைப் பற்றிய பல அந்தரங்க செய்திகள் இடம்பெற்றது. இதனால் இவரை எதிர்த்து பிரச்சாரங்கள் நடைபெற்றன. சாப்ளினின் நாற்பத்தி ஏழாவது வயதில் பாலட் கொடார்டை ஜூன் 1936-இல் ரகசியமாக மணமுடித்தார். சில வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தபின் இத்திருமணமும் விவாகரத்தில் முறிந்தது. இக்காலகட்டத்தில் நடிகை
ஜோன் பேரியுடன் இவருக்கு உறவு ஏற்பட்டது; ஆனால், பேரி சாப்ளினை துன்புறுத்தியதால் மெதுவாக அவ்வுறவினை முடித்துக் கொண்டார். ஆனால் மே 1943-ஆம் ஆண்டு தனது குழந்தைக்கு சாப்ளினே தந்தை என்று வழக்கு தொடர்ந்தார். இரத்த பரிசோதனைகள் சாப்ளினை குற்றமற்றவர் என்று காட்டினாலும், அக்காலத்தில் இரத்த பரிசோதனைகள் நீதி மன்றங்களில் சாட்சிகளாக எடுத்துக்கொள்ளப்படவில்லை; குழந்தை 21 வயது வரும் வரை வாரம் $75 வழங்குமாறு உத்தரவிடப்பட்டார். சில நாட்கள் கழித்து,
ஐகன் ஓ'நீலின் மகள், ஓனா ஓ'நீலை சந்தித்தார். இவரை ஜூன் 16, 1943 அன்று மணந்தார். சாப்ளினின் வயது அப்பொழுது 54, ஓ'நீலின் வயது 17. இத்திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் பல வருடங்கள் நீடித்தது. இவர்களுக்கு எட்டு குழ்ந்தைகள் பிறந்தனர்.
சாப்ளினின் மரணம்
சாப்ளின், 1977 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தனது எண்பத்தி எட்டாவது வயதில் வேவேவில் இறந்தார். இவரது உடலை வாட்(Vaud) நகரில் உள்ள கார்சியர்-சுர்-வெவே கல்லறையில் அடக்கம் செய்தார்கள். மார்ச்சு 1, 1978 ஆம் ஆண்டு இவரது உறவினர்களிடமிருந்து பணம் பறிப்பதற்காக இவரது உடல் கல்லறையிலிருந்து திருடப்பட்டது. ஆனால் இத்திட்டம் தோல்வியுற்று, திருடர்கள் பிடிபட்டனர். பதினொரு வாரங்களுக்குப் பின் ஜெனீவா ஆற்றின் அருகில் சாப்ளினின் உடலைக் கைப்பற்றினார்கள். சாப்ளினின் நினைவாக வேவேவில் அவரது சிலை ஒன்றை அமைத்துள்ளனர்.
விருதுகளும் பெருமைகளும்
சாப்ளின் இருமுறை சிறப்பு ஆஸ்கார் விருதினைப் பெற்றார். மே 16, 1922-இல் ஆஸ்கார் விருதுகள் வழங்கியபொழுது, இப்பொழுதுள்ள வாக்களிப்பு முறை இல்லை. சாப்ளின் தி சர்க்கஸ் திரைப்படத்துக்காக சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குனர் விருதுகளுக்குத் தேர்வானார். இவருக்கு விருது கிடைக்காதென்று இருந்த நிலையில், இத்திரைப்படத்தை எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்த அவருடைய பன்முகத்தன்மையையும் மேதைமையையும் பாராட்டிச் சிறப்பு விருது அளித்தார்கள். அதே ஆண்டு, தி ஜாஸ் சிங்கர் படத்துக்காக இன்னொரு சிறப்பு விருதை வழங்கினார்கள். திரைப்படத்தை இந்நூற்றாண்டின் கலை வடிவமாக்குவதில் அளவிடமுடியாத பங்காற்றியதற்காக 44 ஆண்டுகளுக்குப் பிறகு 1972ஆம் ஆண்டில் இரண்டாவது ஆஸ்கர் விருதைப் பெற்றார்.
சாப்ளின் Monsieur Verdoux திரைப்படத்திற்காக சிறந்த
திரைக்கதைக்கான விருதுக்காகவும், தி கிரேட் டிக்டேடர் திரைப்படத்திற்காக சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை ஆகிய விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்டாலும், விருதுகள் பெறவில்லை. 1972 ஆம் ஆண்டில் சிறந்த இசையமைப்புக்கான விருதை கிளயர் புளூம் நடித்திருந்த லைம்லைட் (1952) திரைப்படத்திற்காக பெற்றார். 1952 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டாலும் மெக்கார்த்திசத்தினால் சாப்ளினுக்கேற்பட்ட பிரச்சனைகளால் லாஸ் ஏஞல்சில் வெளிவரவில்லை. 1972 ஆம் ஆண்டிலேதான் விருதுக்குத் தேர்வாவதற்கான கட்டுப்பாடுகளை நிறைவு செய்தது. "லைம்லைட்" திரைப்படத்தில் பஸ்டர் கீட்டனும் நடித்திருந்தனர். இதுவே இவ்விரு நகைச்சுவை மேதைகளும் முதலும் கடைசியுமாக சேர்ந்து தோன்றிய திரைப்படம்.
மார்ச் 4, 1975 அன்று பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபத் அரசி சாப்ளினுக்கு "சர் " பட்டம் அளித்தார். இவருக்கு இந்தப் பெருமையை வழங்கக் கோரி 1956ஆம் ஆண்டே பரிந்துரைத்திருந்தாலும், இதனை பிரித்தானிய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக எதிர்த்தது. சாப்ளின் ஒரு பொதுவுடைமையாளர் என்றும், அவரைச் சிறப்பிப்பதன் மூலம் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே ஏற்கனவே விரிசல் விட்டிருந்த உறவு பாதிக்கப்படும் என்றும் கருதினார்கள். அக்காலத்தில் தான்
பனிப் போர் அதன் உச்சக்கட்டத்தில் இருந்தது; மேலும் சூயஸ் கால்வாயினை கைப்பற்றும் முயற்சியும் இரகசியமாக திட்டமிடப்பட்டு வந்தது.
சாப்ளின் "ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேமில்" இடம் பெற்றார். 1985 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு, இவரது உருவத்தை அஞ்சல் தலை ஒன்றில் வெளியிட்டு பெருமை சேர்த்தது. 1994 ஆம் ஆண்டு அல் ஹிர்ஸ்ஃபெல்ட் வடிவமைத்த அமெரிக்க அஞ்சல் தலை ஒன்றிலும் இடம் பெற்றார். 1992 ஆம் ஆண்டு இவரது வாழ்க்கை "சாப்ளின்" என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டது. இதனை இயக்கியவர் ஆஸ்கார் விருது பெற்ற சர். ரிச்சர்ட் அட்டன்பரோ. இதில் நடித்தவர்கள் ராபர்ட் டௌனி ஜூனியர், டான் ஐக்ராய்ட், ஜெரால்டின் சாப்ளின் (சாப்ளினின் மகள் சாப்ளினின் தாயாக நடித்திருந்தார்), சர் அந்தோனி ஹாப்கின்ஸ், மில்லா ஜோவோவிச், மொய்ரா கெல்லி, கெவின் கிலைன், டயானா லேன், பெனிலோப் ஆன் மில்லர், பால் ரைஸ், மரீசா டோமை, நான்சி டிராவிஸ் மற்றும் ஜேம்ஸ் வுட்ஸ்.
2005 ஆம் ஆண்டு நடைபெற்ற "நகைச்சுவையாளர்களின் நகைச்சுவையாளர்"கருத்துக் கணிப்பில் உலகத்தின் தலை சிறந்த இருபது நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக சாப்ளினைத் தேர்ந்தெடுத்தார்கள்.
சாப்ளினைப் பற்றிய சுவையான செய்திகள்
கேலிச்சித்திரம் ஒன்றில் சார்லி சாப்ளின்
சாப்ளினின் கண்கள் நீல நிறத்தில் இருந்தன. கருப்பு வெள்ளைப் படங்களில் மட்டுமே அவரைப் பார்த்திருந்த ரசிகர்கள், அவரை நேரில் பார்க்கும்பொழுது பெரிதும் வியப்புற்றனர்.
சாப்ளின் நல்ல சதுரங்க ஆட்டக்காரர். இதனை பிரபல ஆட்டக்காரர் சாமி ரிஷவெஸ்கியிடம் பயின்றார்.
சாப்ளினின் புகழினால் சாப்ளினைப் போல் தோற்றம் அளிப்போருக்கான போட்டிகள் பலவற்றை நடத்தினார்கள். ஒரு முறை அப்போட்டி ஒன்றில் சாப்ளின் இரகசியமாகப் பங்கு பெற்றார். இதில் இவரால் மூன்றாம் பரிசையே வெல்ல முடிந்தது!
திரையாக்கங்கள்
நடிகராக நடித்த குறும்படங்கள்
1914
பிட்வின் ஷவர்ஸ்
எ பிஸி டே
காட் இன் எ கேபரே
காட் இன் தி ரெய்ன்
க்ரூயல், க்ரூயல் லவ்
டோ அண்ட் டைநமைட்
தி ஃபேஸ் ஆன் தி பார்ரூம் ஃப்ளோர்
தி ஃபேடல் மால்லட்
எ ஃபிலிம் ஜானி
ஜென்டில்மேன் ஆஃப் நெர்வ்
கெட்டிங் அக்வின்டட்
ஹர் ஃப்ரிண்டி தி பாண்டிட்
ஹிஸ் ஃபேவரைட் பாஸ்டைம்
ஹிஸ் மியூசிகல் கேரீர்
ஹிஸ் நியூ புரொஃபெஷன்
ஹிஸ் ப்ரீஹிஸ்டோரிக் பாஸ்ட்
ஹிஸ் ட்ரைஸ்டிங் பிளேஸ்
கிட் ஆட்டோ ரேசஸ் அட் வெனிஸ்
தி நாக்ஓவர்
லாஃபிங் கியாஸ்
மேபெல் அடி தி வீல்
மேபெல்ஸ் பிஸி டே
மேபெல்ஸ் மேரிட் லைஃப்
மேபெல்ஸ் ஸ்ட்ரேஞ்ச் பிரிடிகமெண்ட்
மேக் எ லிவிங்
தி மாஸ்குரேடர்
தி நியூ ஜேனிடர்
தி பிராபர்டி மேன்
ரிக்ரியேஷன்
தி ரௌண்டர்ஸ்
தி ஸ்டார் போர்டர்
டாங்கோ டாங்கில்ஸ்
தோஸ் லவ் பேங்க்ஸ்
டிவெண்டி மினிட்ஸ் ஆஃப் லவ்
1915
தி பாங்க்
சார்லி சாப்ளின்ஸ் பர்லெஸ்கியூ ஆன் கேமென்
பை தி சீ
தி சாம்பியன்
ஹிஸ் நியூ ஜாப்
ஹிஸ் ரீஜெனரேஷன்
இன் தி பார்க்
எ ஜிட்னி எலோப்மெண்ட்
மிக்சட் அப்
எ நைட் அவுட்
எ நைட் இன் தி ஷோ
ஷாங்கேய்ட்
தி டிராம்ப்
எ வுமன்
வர்க்
1916
பிஹைண்ட் தி ஸ்கிரீன்
தி கௌண்ட்
தி ஃபையர்மேன்
தி ஃப்ளோர்வாக்கர்
ஒன் ஏ.எம்.
தி பான்ஷாப்
போலீஸ்!
தி ரிங்க்
தி வாகபாண்ட்
1917
தி அட்வென்சுரர்
தி கியூர்
ஈஸி ஸ்ட்ரீட்
தி இமிகிரண்ட்
1918
தி பாண்ட்
சேஸ் மீ சார்லீ
எ டாக்ஸ் லைஃப்
டிரிப்பிள் டிரபள்
1919
எ டேஸ் பிளஷர்
சன்னிசைட்
1921
தி ஐடில் கிளாஸ்
1922
பே டே
1923
தி பில்கிரிம்
திரைப்படங்கள்
டில்லிஸ் பங்க்சர்ட் ரோமான்ஸ் (1914) (நடிகராக மட்டும்)
ஷோல்டர் ஆர்ம்ஸ் (1918)
தி கிட் (1921)
தி நட் (1921) (கௌரவ வேடம்)
சோல்ஸ் ஃபார் சேல் (1923) (கௌரவ வேடம்)
எ வுமன் ஆஃப் பாரிஸ் (1923) (கௌரவ வேடம், இயக்குநர்)
தி கோல்ட் ரஷ் (1925)
எ வுமன் ஆஃப் தி ஸீ (1926) (தயாரிப்பாளர்)
தி சர்கஸ் (1928)
ஷோ பீப்பிள் (1928) (கௌரவ வேடம்)
சிட்டி லைட்ஸ் (1931)
மாடர்ன் டைம்ஸ் (1936)
தி கிரேட் டிக்டேட்டர் (1940)
மோன்சியர் வெர்டாக்ஸ் (1947)
லைம்லைட் (1952)
எ கிங் இன் நியூயார்க் (1957)
எ கௌண்டஸ் ஃப்ரம் ஹாங் காங் (1967) (கௌரவ வேடம் மற்றும் இயக்குநர்)

விடுதலைப் போராட்ட வீரர் ராஜாஜி நினைவு தினம் டிசம்பர் 25 ., 1972.



விடுதலைப் போராட்ட வீரர் ராஜாஜி நினைவு  தினம் டிசம்பர்  25 ., 1972.

சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி ( Chakravarti Rajagopalachari , 10 திசம்பர் 1878 – 25 திசம்பர் 1972) இந்திய வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் சுருக்கமாக ராஜாஜி என்றும் சி.ஆர் என்றும் அழைக்கப்பட்டவர். இந்தியாவின் கடைசித் தலைமை ஆளுநராகப் பணியாற்றியவர். அத்துடன் இந்திய தேசிய காங்கிரசின் தலைவர், சென்னை மாகாணம், சென்னை மாநில
முதலமைச்சர் , மேற்கு வங்க ஆளுநர், இந்திய ஒன்றியத்தின் உட்துறை அமைச்சர் போன்ற பல பதவிகளிலும் பணியாற்றியுள்ளார். பாரத ரத்னா விருதைப் பெற்ற முதல் இந்தியர்களில் ஒருவர். பிற்காலத்தில் சவகர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக 1959இல்
சுதந்திராக் கட்சியது தொடங்கினார். இக்கட்சியுடன் கூட்டணி அமைத்து 1967இல்
திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்த போதும் பெரியார் ஈ. வே. இராமசாமியுடன் தமது கடைசிக் காலம் வரையில் நட்பு பாராட்டியவர். அணுவாற்றல் போர்க்கருவிகளைக் குறைக்க போராடியவர். சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர்.
வாழ்க்கை வரலாறு
கிருட்டிணகிரி மாவட்டத்தில் (பழைய
சேலம் மாவட்டத்தின்) ஓசூருக்கு அருகில் உள்ள தொரப்பள்ளி கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை சக்கரவர்த்தி வெங்கடார்யா தாயார் சிங்காரம்மா ஆவார். ராஜாஜியின் பள்ளிக் கல்வி ஒசூரிலும், உயர்நிலைக் கல்வி பெங்களூரில். கல்லூரிக் கல்வி பெங்களூரு சென்ட்ரல் கல்லூரியிலும் சென்னை மாகாணக் கல்லூரியிலும் கழிந்தது. 1898 இல் சித்தூர் திருமலை சம்பங்கி ஐயங்கார் மகள் அலர்மேலு மங்கம்மாளை மணந்தார். மூன்று ஆண்பிள்ளைகள், இரண்டு பெண்பிள்ளைகள் பிறந்தனர். 1900இல் தமது
வழக்கறிஞர் தொழிலை நன்கு நடத்தி வந்தார். பின்னர் அரசியலில் ஈடுபட்டு 1917 இல் சேலம் நகராட்சி உறுப்பினராகவும் பின்னர் நகர தந்தையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரசில் சேர்ந்து ரௌலத் சட்டத்திற்கெதிரான இயக்கம், ஒத்துழையாமை இயக்கம் , வைக்கம் சத்தியாகிரகம் போன்றவற்றில் ஈடுபட்டார். 1930 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின்
தண்டி யாத்திரையை ஒட்டி
வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் நடத்தி சிறை சென்றார். 1937 ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்தின் முதன்மை மந்திரியாக பொறுப்பேற்று 1940 வரை பதவி வகித்தார். பிரித்தானியா
ஜெர்மனியுடன் போர் தொடுத்த வேளையில் காந்தியின் வெள்ளையனே வெளியேறு போராட்ட முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தார். போர்க்காலத்தில் பிரிட்டானியாவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது. பின்னாளில் முகமது அலி ஜின்னாவுடனும் அகில இந்திய முஸ்லிம் லீக்குடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு காண விழைந்தார். இவரது திட்டம் சி ஆர் பார்முலா என அழைக்கப்பட்டது. 1946 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் தொழில், வழங்கல், கல்வி மற்றும் நிதித்துறை அமைச்சராக பணியாற்றினார்.
அமர்ந்திருப்பவர்கள் காரைக்குடி இராமநாதன், சா. கணேசன் , ராஜாஜி, பாகனேரி பில்லப்பா,
காமராஜர் , ரா. கிருஷ்ணசாமி நாயுடு
இந்திய விடுதலை இயக்கம்
குடும்பம்
ராஜாஜியின் மகள் லட்சுமி, மகாத்மா காந்தியின் நான்காவது மகன் தேவதாஸ் காந்தியை மணந்தவர். இவரது ஒரே மகன்
சி. ஆர். நரசிம்மன் இந்திய அரசியல்வாதி ஆவார்.
வகித்த பதவிகள்
1948 இல் பொது நிகழ்ச்சி ஒன்றில்
1947 முதல் 1948 வரை மேற்கு வங்க ஆளுனராகவும் 1948 முதல் 1950 வரை விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் 1951 முதல் 1952 வரை உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக 1952 முதல் 1953 வரை பதவி வகித்தார். அப்போது அவர் கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்திற்காக மிகுந்த விமரிசனத்திற்கு ஆட்பட்டார். காங்கிரசின் சோசலிச நோக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியிலிருந்து விலகி அரசின்
பெர்மிட்-கோட்டா ஆட்சி க்கு மாறான தாராளமயத்தை கொள்கையாகக் கொண்ட சுதந்திராக் கட்சியை நிறுவி 1962,1967 மற்றும் 1972 பொது தேர்தல்களில் போட்டியிட்டார். 1967 சட்டமன்ற தேர்தலில் காங்கிரசிற்கு எதிரான அணியை ஒருங்கிணைத்து தமிழக அரசியலில் முதன்முறையாக காங்கிரசல்லாத ஆட்சி மலர துணை நின்றார்.அவருடன் கூட்டணி கண்ட சி. என். அண்ணாதுரை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.நாடாளுமன்றத்திலும் சுதந்திராக் கட்சி 45 இடங்களைப் பிடித்து முதன்மை எதிர்கட்சியாக விளங்கியது.
பாரத ரத்னா
1954 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய குடிமையியல் விருதான பாரத ரத்னா விருது இவருக்கு வழங்கப்பட்டது
இலக்கியம்
ராஜாஜி தமது எழுத்தாற்றலால் ஆங்கில இலக்கியத்திற்கு சிறப்பாக பங்களித்துள்ளார். தமிழிலும் ராமாயணம் மற்றும் மகாபாரதம் காவியங்களை மொழிபெயர்த்துள்ளார். இவர் கல்கி மற்றும் ரசிகமணி டி.கே.சியுடன் இணைந்து குற்றாலத்தில் இலக்கிய ஆய்வுகள் நடத்தினார். புகழ்பெற்ற கர்நாடக இசைப்பாடலான "குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி கண்ணா " இவர் இயற்றிய பாடலே. .
இந்தி திணிப்பு
1937 ஆம் ஆண்டு பிற காங்கிரசு ஆட்சி மாகாணங்களில் இல்லாத திட்டமான இந்தி மொழி கட்டாயப்பாடத் திட்டத்தைக் கொணர்ந்தவர். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு கொண்டு உயிரிழந்த தாலமுத்து (தாளமுத்து) குறித்து சென்னைச் சட்டமன்றக் கூட்டத்தில் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பிய போது, ’தற்குறி தாலமுத்து தேவையில்லாமல் சிறைப்பட்டு இறந்தார்’ என்று இவர் கூறிய பதில் கோடிக்கணக்கான தமிழர்களின் மனத்தைப் புண்படுத்தியது என்றும் அம்மக்களின் தற்குறித்தன்மையைப் போக்க எந்த நடவடிக்கையும் எடுக்காதவர் இவ்வாறு விமர்சித்தது பண்பாடல்ல என்றும் நெ.து.சுந்தரவடிவேலு குறிப்பிடுகின்றார். [4]
மதுவிலக்கு
இந்திய தேசிய காங்கிரசின் கொள்கைகளில் ஒன்றான மதுவிலக்குக் கொள்கையில் ராஜாஜி ஈடுபாடு உடையவராக இருந்தார். அவர் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக 1937ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற பின்னர், அன்றைய சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கை அமல்படுத்தினார். அதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட 1939ஆம் ஆண்டில் விற்பனைவரியை விதித்தார். 1952ஆம் ஆண்டில் சென்னை மாகாண முதல்வராக இரண்டாம் முறை இருந்தபொழுது மாகாணம் முழுக்க மதுவிலக்கை அமல்படுத்தினார். 1971-ஆகத்து-31ஆம் நாள் முதல் தமிழ்நாட்டில் மதுவிலக்கு கைவிடப்படும் என அன்றைய முதலமைச்சர் மு. கருணாநிதி அறிவித்தபொழுது, அம்முடிவைக் கைவிடும்படி கோபாலபுரத்தில் இருக்கும் கருணாநிதியின் வீட்டிற்கு 1971-சூலை-20ஆம் நாள் மாலை கொட்டும்மழையில் சென்று கருணாநிதியைச் சந்தித்து மதுவிலக்கை கைவிட வேண்டா என கேட்டுக்கொண்டார். [5]
நினைவுச் சின்னங்கள்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அமைந்திருக்கும் இராசாசியின் சிலை
தமிழ்நாடு அரசு சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி நினைவைப் போற்றும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளியில் அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாகவும், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடமான
சென்னை கிண்டியில் அவருக்கு நினைவு மண்டபமும். அமைத்துள்ளது. மேலும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான மண்டபத்திற்கு ராஜாஜி மண்டபம் என்று பெயர் சூட்டியுள்ளது. பார்க்க
படைப்புகள்
தமிழில் முடியுமா
திண்ணை ரசாயனம்
சக்கரவர்த்தித் திருமகன்
வியாசர் விருந்து
கண்ணன் காட்டிய வழி
பஜகோவிந்தம்
கைவிளக்கு
உபநிஷதப் பலகணி
ரகுபதி ராகவ
முதல் மூவர் (மீ.ப.சோமுவுடன்)
திருமூலர் தவமொழி (மீ.ப.சோமுவுடன்)
மெய்ப்பொருள்
பக்திநெறி
ஆத்ம சிந்தனை
ஸோக்ரதர்
திண்ணை இரசாயனம்
பிள்ளையார் காப்பாற்றினார்
ஆற்றின் மோகம்
வள்ளுவர் வாசகம்
ராமகிருஷ்ண உபநிஷதம்
வேதாந்த தீபம

முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த நாள்: டிசம்பர் 25 .1924 )



முன்னாள்  இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்  பிறந்த நாள்: டிசம்பர் 25 .1924 )

அடல் பிகாரி வாச்பாய் (பிறப்பு: டிசம்பர் 25 1924 ) 1996ம் ஆண்டு சில காலமும், 1998ல் இருந்து 2004 வரையிலும் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர். இவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் பிறந்த இவர் திருமணம் செய்து கொள்ளாதவர். 50 வருட பாராளுமன்ற உறுப்பினரான இவர் மக்களவைக்கு 9 முறையும் மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 4 முறை வெவ்வேறு மாநிலங்களில் ( உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், டெல்லி ) இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே உறுப்பினர் இவர் ஆவார். மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இவர் பணியாற்றி உள்ளார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
கிருஷ்ணா தேவி - கிருஷ்ணா பிகாரி வாஜ்பாய் ஆகியோருக்கு 25 டிசம்பர் 1924 இல் நடுத்தர பிராமண குடும்பத்தில்
குவாலியர் என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை கிருஷ்ணா பிகாரி வாஜ்பாய் ஒரு கவிஞர் மற்றும் பள்ளி ஆசிரியர். இவர் பள்ளிப்படிப்பை குவளியரில் பயின்றார்.
அரசியலில் ஈடுபாடு
இவர் இரண்டாவது முறையாகப் பிரதமராகப் தேர்ந்தெடுக்கப்பட்டபின் நாடு பல கோணங்களில் முன்னேறியது. குறிப்பாகத் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறைகள்.
வெள்ளை மாளிகையில் அடல் பிகாரி வாச்பாயும் அதிபர் புஷ் சந்திப்பு,2001
விருது
இந்தியாவின் உயரிய பாரத் ரத்னா விருதினை, 27 மார்ச் 2015 அன்று இந்தியக் குடியரசுத் தலைவரும் மற்றும் இந்தியப் பிரதமரும், வாஜ்பாயின் இல்லம் சென்று வழங்கி கௌரவித்தனர்.

வீரமங்கை வேலுநாச்சியார் வரலாறு !


வீரமங்கை வேலுநாச்சியார் வரலாறு !

*இராமநாதபுரம் மன்னர் (1749-62) செல்லமுத்து சேதுபதி, சிவகங்கைக்கு  அருகிலுள்ள  ‘சக்கந்தி” என்னும் ஊரைச் சேர்ந்த முத்தாத்தாள் நாச்சியார்  என்பவரைத்  திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஓர் அழகிய பெண் குழந்தை  பிறந்தது.  அவர்கள் அக்குழந்தைக்கு வேலு நாச்சியார் எனப் பெயரிட்டார்கள்.  செல்லமுத்து சேதுபதி தனது மகள் வேலு நாச்சியாரைக் கல்வி -  கேள்விகளில்  சிறந்தவராக வளர்த்து ஆளாக்கினார். வேலு நாச்சியார்  போர்க்களம் சென்று,  வாளெடுத்துப் போர் புரியும் ஆற்றலும் விளங்கினார்.  அவர் ஒரு சிறந்த  வீராங்கணையாக உருவாக்கப்பட்டார்.*

சிவகங்கைச் சீமையின்  இரண்டாவது மன்னர்  முத்து வடுகநாதப் பெரிய உடையத் தேவருக்கு,  வேலுநாச்சியார் திருமணம் செய்து  வைக்கப்பட்டு அவரது பட்டத்து ராணியானார்.
முத்துவடுகநாதத் தேவர், சிவகங்கைச் சீமையை ஆட்சி செய்த போது, அவரது   நிர்வாகத்திற்கு பிரதானி தாண்டவராய பிள்ளை, ராணி வேலு நாச்சியார், மருது   சகோதரர்கள் பெரிதும் துணையாக இருந்தனர். நெடுநாட்களாக வேலு நாச்சியாருக்கு  குழந்தைச் செல்வம் இல்லாமலிருந்தது. பின்னர் அவருக்கு ஒரு பெண் மகவு   பிறந்தது. அக்குழந்தைக்கு வெள்ளச்சி எனப் பெயரிட்டு இளவரசியைப் பாலூட்டிச்  சீராட்டி செல்லமாக வளர்த்து வந்தார்.

இந்நிலையில் முத்து வடுகநாதத் தேவர், ஆற்காடு நவாபிற்கு கப்பம் கட்ட   மறுத்ததால் கம்பெனிப் படையும், நவாபின் படையும் இணைந்து காளையார் கோயிலில்  தங்கியிருந்த முத்து வடுகநாதத் தேவர் மேல் போர் தொடுத்தன. 25-6-1772ல்  நடைபெற்ற காளையார் கோவில் போரில், கம்பெனிப்  படையின் பீரங்கிக்  குண்டுகளுக்குப் பலியாகி, மன்னரும் அவரது இளைய ராணி  கௌரி நாச்சியாரும்,  அவரது படைவீரர்களும் வீர மரணமடைந்தனர். முத்து வடுகநாதர் இறந்தவுடன் வேலு நாச்சியார் உடன்கட்டையேறி, தனது உயிரைப் போக்கிக் கொள்ள விரும்பினார்.

பிரதானி தாண்டவராய பிள்ளை,மருது சகோதரர் கள் வேலு நாச்சியாரைச் சமாதானம்  செய்து, இழந்த சீமையை அவர்கள் எவ்வகையிலும்  மீட்டுத் தருவதாக ராணிக்கு  வாக்குறுதி வழங்கினர். கொல்லங்குடியில்  தங்கியிருந்த வேலுநாச்சியார், வெ  ள்ளச்சி நாச்சியார் முதலியோர் பிரதானி  தாண்டவராய பிள்ளை, மருது சகோதரர்கள்  துணையுடன் மேலூர் வழியாக  திண்டுக்கல்லுக்கருகிலுள்ள  விருப்பாட்சிப்பாளையத்திற்குத் தப்பிச்  சென்றார். விருப்பாட்சிப் பாளையக்காரர் கோபால நாயக்கர், விருப்பாட்சியில் அவர்கள்   மிகப் பாதுகாப்பாகத் தங்குவதற்குத் தகுந்த வசதிகளைச் செய்து கொடுத்தார்.   ஆற்காடு நவாபின் பிடியிலிருந்து இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மறவர் சீமைகளை  விடுவித்து நவாபை விரட்டி அடிப்பதற்கு ராணி வேலுநாச்சியார்   திண்டுக்கல்லில் தங்கியிருந்த மைசூர் மன்னர் ஹைதர் அலியிடம் படை உதவி   கேட்டார்.

பிரதானி தாண்டவராயபிள்ளை 8-12-1772 வேலுநாச்சியார் சார்பாக ஹைதர் அலிக்கு   ஒரு கடிதமெழுதி ஐயாயிரம் குதிரை வீரர்களையும், ஐயாயிரம் போர் வீரர்களையும்  அனுப்பி வைத்தால், அவர்களுடன் இணைந்து போரிட்டு, இரு சமஸ்தானங்களையும்   நவாபிடமிருந்து கைப்பற்ற இயலுமென்று, அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். பிள்ளையவர்கள் உடல் நலிவுற்று முதுமையின் காரணமாக படை உதவி கேட்ட ஆறு   மாதங்களுக்குள் 1773ம் ஆண்டு இம்மண்ணுலகைவிட்டு மறைந்தார்.

பின்னர் வேலு நாச்சியார் தனது படைகளை ‘சிவகங்கை பிரிவு”, ‘திருப்புத்தூர்   பிரிவு”, ‘காளையார் கோயில் பிரிவு” என்று மூன்று பிரிவுகளாகப் பிரித்தார்.   சிவகங்கைப் பிரிவிற்கு தனது தலைமையிலும், திருப்புத்தூர் பிரிவிற்கு   நள்ளியம்பலம் என்பவர் தலைமையிலும், காளையார் கோயில் பிரிவிற்கு மருது   சகோதரர்கள் தலைமையிலும் படைகளைப் பிரித்து வேலு நாச்சியார் அனுப்பி   வைத்தார். வேலுநாச்சியார் அம்முப்படைப் பிரிவை அனுப்பி மும்முனைத்   தாக்குதல் நடத்தி நவாபின் படைகளை எளிதில் வெற்றி கண்டார ராணி வேலுநாச்சியார் ஹைதர் அலியின் படை உதவியை எதிர்பார்த்து, எட்டு   ஆண்டுகள் விருப்பாட்சிப்பாளையத்தில் தங்கியிருந்தார். அவருக்குப்   பக்கபலமாகப் பெரியமருதுவும், சின்னமருதுவும் துணையாக உடனிருந்தனர்.

ஒரு சமயம் வேலு நாச்சியார், அவரது மகள்வெள்ளச்சி நாச்சியார் மருது  சகோதரர்கள் முதலியோர் திண்டுக்கல் கோட்டையிலிருந்த மைசூர் மன்னர்  ஹைதர்  அலியைச் சந்தித்தனர். அவர், அவர்களை வரவேற்று உபசரித்தார்.  ராணியுடனிருந்த  சின்னஞ்சிறு சிறுமி வெ ள்ளச்சி நாச்சியாரைக் கண்டு  மனமிரங்கி அனுதாபம்  கொண்டார். அச்சிறுமி மேல் பரிவும், பாசமும், கருணையும் கொண்டார். அவர்களது  தாய் நாட்டுப் பற்றையும், வீரத்தையும் கண்டு வியந்து  அவர் மகிழ்ச்சியுற்று  அவர்களுக்கு உதவி செய்வதாக ஆறுதல் கூறினார்.

பிரதானியின் மறைவிற்குப் பின்னர், வேலுநாச்சியார் தான் நேரடியாக அரசியல்   விவகாரங்களில் ஈடுபடத் தீர்மானித்தார். பிரதானி விட்டுச் சென்ற பணிகளை   குறிப்பாக, சிவகங்கைச் சீமையின் நாட்டார்களுடன் கொண்ட ஓலைத் தொடர்புகளை,   தொடர்ந்து கடைப்பிடித்து வந்தார். தமது கணவரிடம் மிகுந்த விசுவாசத்துடன்   பணியாற்றிய மருது சகோதரர்களையும் இந்த அரசியல் பணியில் வேலுநாச்சியார்   ஈடுபடுத்தினார்.
விருப்பாட்சியிலிருந்து சிவகங்கைச் சீமைத் தலைவர்களுக்கு அனுப்பிய   ஓலைகளுக்கு நல்ல பலன் கிடைத்தது.

சிவகங்கைச் சீமை மக்கள் பலர், சிறுசிறு   குழுக்களாக ஆயுதங்களுடன் விருப்பாட்சி போய்ச் சேர்ந்தனர். அவர்கள் ராணி   வேலுநாச்சியாரைச் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். சிலர் அங்கேயே   ராணிக்குப் பாதுகாப்பாகத் தங்கவும் செய்தனர். எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன.
ராணி வேலு நாச்சியாரது முயற்சிகள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு நெருங்கி   வந்து கொண்டிருந்தது. ஆங்கிலேயர்களையும் ஆற்காடு நவாபையும்,   அழித்தொழிக்கும் அற்புதத் திட்டமொன்றினை உருவாக்கி அதைச்   செயல்படுத்துவதற்கு ஹைதர் அலி ஆயத்தமானார். சிவகங்கைச் சீமையை ஆற்காடு நவாபின் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பதற்கு உதவும்  படைகளைத் திண்டுக்கல் கோட்டை வந்து பெற்றுக் கொள்ளுமாறு ஹைதர் அலி, ராணி  வேலுநாச்சியாருக்கு செய்தி அனுப்பினார்.

விருப்பாட்சியிலிருந்து   சிவகங்கைபுறப்படுவதைத்திண்டுக்கல் கோட்டை கிலேதார் சையது காகிற்கு உடனே   ராணி தகவல் கொடுத்தார். குறிப்பிட்ட நாளன்று, ராணி வேலு நாச்சியார், மருது  சகோதரர்கள் வழிகாட்டுதலில் ஹைதர் அலி வழங்கிய குதிரைப் படைகள், சின்ன  மறவர்  சீமை சிவகங்கை நோக்கிச் சீறிப் பாய்ந்தன.
ஆற்காடு நவாபின் படைகள் வழியில் பல்வேறு தடைகளை அமைத்தன. வேலு நாச்சியாரது  குதிரைப் படைகள், அத்தடைகளைத் தகர்த்தெறிந்து, பெரும் தாக்குதலில்   ஈடுபட்டன. மதுரைக்கருகில் ‘கோச்சடை” என்னுமிடத்தில் கம்பெனிப் படைகளும்,   நவாபின் படைகளும் தடைகள் ஏற்படுத்தித் தாக்கின. வேலு நாச்சியாரது படைகள்,   நவாபின் படைகளைப் பாய்ந்து தாக்கித் தவிடுபொடியாக்கின.
மானாமதுரை   வைகையாற்றுப் பகுதியில், வேலு நாச்சியாரது படைகள், கம்பெனி படைகளைத் தாக்கி  அவை ஓடி ஒளியுமளவிற்குச் சண்டையிட்டு வெற்றி பெற்றன.

வெற்றி பெற்ற வேலு நாச்சியார், இளவரசி வெ ள்ளச்சி நாச்சியாரும் மருது   சகோதரர்களும் சிவகங்கைக் கோட்டைக்கு வந்து சேர்ந்தனர். மக்கள் கூட்டம்   அவர்களை மகிழ்வுடன் வரவேற்று வாழ்த்தி வணங்கியது. 1780ம் ஆண்டு   வேலுநாச்சியார், தனது மகள் வெ ள்ளச்சி நாச்சியாரை சிவகங்கைச் சீமையின்   அரசியாக மகிவும் எளிமையான ஒரு விழாவில் முடிசூட்டி, அரியணையில் அமரச்   செய்தார்.
பெரிய மருதுவைத்தளபதியாகவும் (தளவாய்) சின்ன மருதுவை   முதலமைச்சராகவும் (பிரதானி) நியமனம் செய்து வேலுநாச்சியார் ஆணைகள்   பிறப்பித்தார். இளவரசி வெ ள்ளச்சி நாச்சியாரின் பிரதிநிதியாக ராணி   வேலுநாச்சியார் சிவகங்கைச் சிமையை 1780ம் ஆண்டு முதல் ஆட்சி செய்து   வந்தார்.

சீமையின் நிர்வாக இயக்கத்திற்கு பிரதானிகள் (மருது சகோதரர்கள்)   உதவி வந்தனர்.
‘இளவரசி வெள்ளச்சி திருமணம் ஆகாத கன்னிகையாகவும், ராணி வேலுநாச்சியார்   கணவரை இழந்த கைம்பெண்ணாகவும் இருந்த காரணத்தினால் அவர்கள் இருவரும் அரசயில்  நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து பணிகளிலும் நேரடியாக ஈடுபட இயலாத நிலை,   அத்துடன் அன்றைய சமுதாய அமைப்பில், இத்தகைய உயர்குலப் பெண்கள், தங்கள்   தனிமை நிலையைத் தவிர்த்து பொது வாழ்க்கையில் முழுமையாக ஈடுபடுவது விரும்பத்  தகாததாகவும் இருந்தது. ‘பெண் உரிமை” என்ற விழிப்புணர்வுடன் பாரம்பரியமாக  வந்த மரபுகள் மீறுவதையும் ஏற்று சகித்துக் கொள்ளாத சமூகநிலை இத்தகைய   இறுக்கமான அகச்சூழலில் அரசியலை பிரதானிகள் மூலமாக அரசியார் சிறப்பாக நடத்தி  வந்திருப்பது அருமையிலும் அருமை.” எனவே சிவகங்கைச்சீமை நிர்வாகத்தை மருது  சகோதரர்கள் மிகச் சிறப்பாக நடத்தி வந்தனர்.

வேலுநாச்சியார் நாலுகோட்டை சசிவர்ணப் பெரிய உடையத்தேவர் குடும்ப வழியில்   வந்த உறவினரான படமாத்தூர் கௌரி வல்லபத் தேவர் என்ற புத்திசாலி இளைஞனைத்   தமது பாதுகாப்பில் வைததிருந்தார். படமாத்தூர் கௌரி வல்லபத் தேவரை சுவீகாரம்  எடுத்து தனக்குப் பின்னர் தனது வாரிசாக அவருக்குப் பட்டம் சூட்ட   வேலுநாச்சியார் விரும்பினார். அவருக்கு தனது மகள் இளவரசி வெ ள்ளச்சி   நாச்சியாரைத் திருமணம் செய்து கொடுத்து, அவரை சிவகங்கை மன்னராக ஆக்கவும்   ராணி முடிவு செய்திருந்தார். அதைஉணர்த்தும் வகையில் அரசு விழா ஒன்றில் அவரை  அறிமுகப்படுத்தி வைப்பது என்று ராணி முடிவு செய்திருந்தார்.

அதன்படி   காளையர் கோயில் ஆலயத்தில் படமாத்தூர் கௌரி வல்லபத் தேவருககு இளவரசுப்   பட்டம் சூட்டப்பட்டது.
அவ்விழாவிற்கு நாட்டுத் தலைவர்கள் அனைவரும் வந்திருந்தனர். சிறப்பான   வழிபாடுகள் முடிந்த பின்னர் கோயில் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த   இருக்கையில் இளவரசர் கௌரி வல்லபத் தேவரை அமரச் செய்து, பிரதானிகளும்   நாட்டுத் தலைவர்களும் அவருக்கு மரியாதை செலுத்தி வணங்கினர்.

சில காலம் சென்ற பின்னர் சிவகங்கை பிரதானிகளுக்கு (மருது சகோதரர்களுக்கு)   இளவரசர் கௌரி வல்லபத் தேவரை பிடிக்கவில்லை.

வேலுநாச்சியார், தமது மகளை   படமாத்தூர் கௌரி வல்லபத் தேவருக்குத் திருமணம் செய்து கொடுப்பது   சம்பந்தமாய், இரு பிரதானிகளுடன் ஆலோசனை செய்தார். மருது சகோதரர்கள் அந்த   திருமண சம்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்தனர். கௌரிவல்லபத் தேவர் சிவகங்கைச்  சீமைக்கு மருமகனாவதற்குத் தகுதி, திறமையில்லாதவரென்றும், முரட்டுத்  தனமும்,  அரச குடும்பத்திற்குரிய தகுதிகள் இல்லாதவரென்றும், அவர்கள்  மறுப்புத்  தெரிவித்தனர். மிகுந்த வேதனையால் ராணி மிகக் கவலையடைந்தார்.

இதற்கிடையில் ராணி கௌரி வல்லபத் தேவரை தனது வாரிசாகத் தத்தெடுப்பதையும்   திருமண உறவின் மூலம் அதிகாரம் பெறுவதையும் மருது சகோதரர்கள் விரும்பவில்லை.  எனவே, அவர்கள் கௌரி வல்லபத் தேவரை காளையார் கோயில் ஆலயத்தில், தக்க   பாதுகாப்பில் சிறைவைத்து அவரைக் கொலை செய்ய முயன்றனர். இந்தச் செய்தி   ராணியாருக்குக் கிடைத்ததும், மருது சகோதரர்களிடம் இதுபற்றிக் கேட்டார்.

கௌரி வல்லபத் தேவர் சிறையில் வைக்கப்படவில்லையென்றும், அவர் சிவகங்கைச்   சீமையைக் கைப்பற்றி இராமநாதபுரம – சிவகங்கைகொண்ட ஒருமுகப்படுத்தப்பட்ட   ‘சேது நாடு” ஒன்றை உருவாக்க இராமநாதபுரம் முத்துராமலிங்க சேதுபதி மன்னருடன்  ஓலைத் தொடர்பு கொண்டிருப்பதாகவும், அது தொடர்பான விசாரணைக்காக   அவரைக்காளையார் கோயில் ஆலயத்தில் தனிமைப்படுத்தி வைத்திருப்பதாகவும் கூறி   ராணியைச் சமாதானப்படுத்தினர்.

பின்னர் கௌரி வல்லபத் தேவர் காளையர்கோயில் ஆலயத்தில் பணியாற்றும் கருப்பாயி  என்ற நடப் பெண் உதவி செய்து தப்பிக்க வைத்ததின் மூலம் காளையார்   கோயிலிருந்து தப்பிச் சென்று, கரிசப்பட்டிப்பாளையக்காரர் வெ ள்ளை பொம்மை   நாயக்கரிடம் தஞ்சமடைந்தார். பின்னர் மருது சகோதரர்களின்பலம் அறிந்து, அவர்  கௌரி வல்லபத் தேவரைப் புதுக்கோட்டை மன்னரிடம் தஞ்சமடைந்த கௌரி வல்லபத்   தேவரை மன்னர் அறந்தாங்கியில் மிகப் பாதுகாப்பாகத் தங்க வைத்திருந்தார்.

இளவரசி வெள்ளச்சி நாச்சியார் திருமணம் பற்றி மீண்டும் ராணி மருது   சகோதரர்களிடம் ஆலோசனை செய்த போது தக்க மணமகன் ஒருவரை அவர்கள் தேடி   வருவதாகவும், விரைவில் ராணிக்கு முடிவான தகவல் தருவதாகவும் அவர்கள்   தெரிவித்தனர். ராணி மருது சகோதரர்களை மீறி எதுவும் செய்ய முடியவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு மருது சகோதரர்கள், இளவரசி வெ ள்ளச்சி   நாச்சியாருக்கு சக்கந்தி வேங்கை பெரிய உடையணத் தேவர் என்பவரை   திருமணம்செய்து வைக்கலாம் என்று கூறினர்.
சக்கந்தி வேங்கை பெரிய உடையணத்   தேவர் சிவகங்கைக்கருகிலுள்ள சக்கந்தி நிலக்கிழாரில் ஒருவரான சக்கந்தித்   தேவரின் மகனென்றும் செம்பிய நாட்டு கிளையைச் சேர்ந்த மறவர் என்பதால்,   திருமணம் செய்யலாம் என்றும் மருது சகோதரர்கள் ஆலோசனை கூறினர்.

ராணி வேங்கை  பெரிய உடையணத் தேவருக்கு தனது மகள் வெ ள்ளச்சி நாச்சியாரைத் திருமணம்   செய்து கொடுத்தார்.
இந்தத் திருமணத்திற்குப் பின்னர் ராணிக்குப் படமாத்தூர் கௌரி வல்லபத்   தேவருடன் திருமண உறவு ஏற்படவில்லையே என்ற ஆதங்கம் இருந்தது.

இந்நிலையில்   ராணி வேலுநாச்சியாருக்கும் மருது சகோதரர்களுக்குமிடையே பெருத்த கருத்து   வேறுபாடொன்று உருவாகியது. ஒரு சமயம் சிவகங்கைச் சீமைக்கும், புதுக்கோட்டைத் தொண்டைமான்   நாட்டிற்குமிடையே ஒரு சிறு எல்லைப் பிரச்சனை தோன்றியது. சிவகங்கைப் பிரதானி  சின்னமருது, அந்த எல்லைப் பிரச்சினையில் ராணி வேலுநாச்சியாரைக் கலந்து   ஆலோசனை செய்யாமல், அவரது முன் அனுமதியைப் பெறாமல்தொண்டமான்நாட்டின் மீது   படையெடுத்தார்.

தொண்டமான் நாட்டில் வாழ்பவர்களில் பெரும்பான்மையான மக்கள் கள்ளர் வகுப்பைச்  சார்ந்தவர்கள்.  அவர்களோடு சிவகங்கைச் சீமை மக்கள் திருமண உறவும், பல்வேறு  தொடர்புகளும்  கொண்டுள்ளதால் சிவகங்கைப் படையெடுப்பு கள்ளர் இன மக்களது  விரோதத்தை  வளர்க்கும் என்று ராணி கருதினார்.

1788ம் ஆண்டுராணி வேலுநாச்சியாருக்கும், பிரதானி சின்ன   மருதுவிற்குமிடையேஇருந்த கருத்துவேறுபாடு உச்ச நிலையை அடைந்தது. சிவகங்கைச்  சீமையில் ராணி வேலுநாச்சியார் ஆதரவாளர்களென்றும் பிரதானி சின்னமருது   ஆதரவாளர்களென்றும் இருபிரிவுகள் தோன்றின.

சிவகங்கைக் குடிமக்கள் இரு   பிரிவுகளாகப் பிரிந்து அடிக்கடி தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர்.

இதனையறிந்த ஆற்காடு நவாப், தனது பிரதிநிதியைச் சிவகங்கைக்கு அனுப்பி   வைத்தான். அப்பிரதிநிதி ராணி வேலுநாச்சியாரை சந்தித்துப் பேசினான்.   ராணியின்பாதுகாப்பைப் பலப்படுத்தவும், அவரது நிர்வாகத்திற்கு உதவுவதற்கு  
அவரது நிர்வாகத்திற்கு உதவுவதற்கு   வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவும், ராணியும், நவாப்பும் ஓர்   உடன்பாடுசெய்து கொண்டனர். அதனால் மருது சகோதரர்கள், ராணியின்   பரிவாரங்களுடன் சண்டையிட்டனர். அதன் காரணமாக ராணி வேலுநாச்சியார்   சிவகங்கைக் கோட்டை வாசலை மூடிவிட்டு மிகப் பாதுகாப்பாகக் கோட்டைக்குள்   தங்கியிருந்தார்.

10-02-1789ல் ராணியின் பாதுகாப்பு தொடர்பாக நவாப், சென்னை கவர்னருக்கு ஒரு  கடிதம் எழுதினார். உடனே கம்பெனியாரும், நவாப்பும் தங்கள் படைகளை   சிவகங்கைகக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தனர். 29-04-1789ம் தேதி தளபதி   ஸ்டூவர்ட் தலைமையில் கம்பெனிப் படை, திருப்புத்தூர் கோட்டைக்கு வந்து   சேர்ந்தது. 8-05-1799ம் தேதி புதுக்கோட்டைத் தொண்டமானின் மூவாயிரம்   வீரர்களிடங்கிய படையும் சிவகங்கை வந்து சேர்ந்தது. பின்னர்   இராமநாதபுரத்திலிருந்து தளபதி மார்ட்டின் தலைமையில் வந்த கம்பெனிப் படையும்  அவர்களுடன் சேர்ந்து கொண்டது.
தளபதி ஸ்டூவர்ட் ராணி வேலுநாச்சியாரைச் சந்தித்துப் பேசினார். ஆங்கிலத்   தளபதி தனது படை வீரர்களுடன் 13-05-1799ல் கொல்லங்குடியைத் தாக்கினார்.  

மருது சகோதரர்கள் அங்கு திரண்டிருந்த தனது ஆதரவாளர்களின் உதவியுடன்   துப்பாக்கிகளைப் பயன்படுத்தி கம்பெனிப் படையை எதிர்த்துப் போரிட்டனர்.   கம்பெனிப் படையின் கடுமையான தாக்குதலைச் சமாளிக்க முடியாமல், மருது   சகோதரர்கள் ராம மண்டலம் என்ற காட்டுப் பகுதிக்குப் பின் வாங்கினர்.   கொல்லங்குடிக்கோட்டை கம்பெனி தளபதி ஸ்டூவர்ட்டின் கைவசமானது.
19-05-1789ல் ராணி வேலுநாச்சியார், தளபதி ஸ்டூவர்டிற்கு ஒரு கடிதம்   எழுதினார். அதில் ஆங்கிலேயர்களும், ஆற்காடு நாவப்பும் சிவகங்கைச் சீமை   பொறுப்பை தான் ஏற்றுக் கொள்வதற்குத் தனக்கு உதவி செய்ய வேண்டுமென்று   அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். ராணி எழுதிய கடிதத்தை தளபதி   ஸ்டூவர்;ட் 21-05-1789ல் சென்னை கவர்னருக்கு அனுப்பி வைத்தார். தளபதி ஸ்டூவர்ட் தலைமையில் கம்பெனிப் படைகள் முன்னேறிச்சென்று மருது   சகோதரர்களது படைகளைத் துரத்தி அடித்தன. அடுத்த ஐந்து மாதங்கள் சிவகங்கைச்   சீமையில் அமைதி நிலவியது. கம்பெனிப் படைகள் சிவகங்கைக் கோட்டையில்   பாதுகாப்பிற்குக் காவல் இருந்தன.

ஐந்து மாதங்களுக்குப் பிறகு மருது சகோதரர்கள் மைசூர் மன்னர் திப்பு   சுல்தானின் உதவியைப் பெற்று, திண்டுக்கல் பகுதியிலிருந்து தனது படைகளைத்   திரட்டிக் கொண்டு வந்து, திருப்புத்தூர் கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டனர்.   மருது சகோதரர்களுடன் தான் போரைத் துவக்கினால், கி.பி. 1783ல் மைசூர்  மன்னர்  திப்புசுல்தானுடன், தான் செய்து கொண்ட உடன்படிக்கையை மீறிய  செயலாகும் என  நவாப் கருதினான். எனவே மருது சகோதரர்களுடன் ஓர் உடன்பாடு  செய்து கொள்ளுமாறு  நவாப்பை கம்பெனித் தலைமை கேட்டுக் கொண்டது.

அந்த  ஆலோசனையை நவாப்பும்  ஏற்றுக் கொண்டான். சக்கந்தி வேங்கை பெரிய உடையத் தேவரின் மனைவி வெ ள்ளச்சி நாச்சியார்,   துரதிஷ்டவசமாக வேலுநாச்சியாருக்கு முன்னரே மரணமடைந்துவிட்டார். எனவே,   சிவகங்கைச் சீமையில் சுமுகமான ஆட்சி மாற்றமும், நிர்வாகமும் ஏற்படும்   வகையில்ஆற்காடு நாவபும், கம்பெனித் தலைமையும் சில ஆலோசனைகளை ராணிக்கு   வழங்கினார்கள்.
ராணி வேலுநாச்சியார் சிவகங்கைச் சீமையின் அரச பதவியிலிருந்து   விலகுவதென்றும், அவருக்குப் பதிலாக சிவகங்கை மன்னராக வேங்கை பெரிய உடையணத்  தேவர் பதவி ஏற்பதென்றும், மருது சகோதரர்கள் பிரதானியாகவும், தளபதியாகவும்  பதவியேற்பதெனவும் ஒரு திட்டம் உருவாக்கப்பட்டது.

ராணி வேலுநாச்சியார் இந்த சமரசத் திட்டத்தை தனது அரச பதவியைப் பறிப்பதற்கான  சதித் திட்டமெனக் கருதினார். எனினும், தனது மருமகன் வேங்கை பெரிய உடையணத்  தேவர், தனக்குப் பதிலாகச் சிவகங்கைச் சீமையின் மன்னராகப்   பதவியேற்கவிருப்பதால், வேலுநாச்சியார் இந்த சமரச உடன்பாட்டை வேலுநாச்சியார்  இந்த சமரச உடன்பாட்டை ஏற்றுக்கொண்டார். மருது சகோதரர்களும் இந்த   உடன்பாட்டை வரவேற்றனர். ராணி வேலு நாச்சியாரின் பத்தாண்டு கால ஆட்சி 1789ம்  ஆண்டு டிசம்பரில் முடிவுற்றது. 1800ம் ஆண்டு வேலுநாச்சியார் இம்மண்ணுலகைவிட்டு மறைந்தார்.

வீரநங்கை வேலுநாச்சியாரை (velu nachchiyar)  ’இந்தியாவின் ஜோன் ஆஃப் ஆர்க்” என அழைக்கலாம். ‘வெ ள்ளையருக்கு எதிராக வாளெடுத்து வீரப்போர் புரிந்த ‘முத்து வடுகநாதரின்  மனைவி – வீரமங்கை வேலுநாச்சி – அன்று நடத்திய சிறப்பு வாய்ந்த வீரப்போர்   வாயிலாக ‘வேங்கடத்திற்கு வடக்கே ஒரு ஜான்சி ராணி தோன்றுவதற்கு இரு   நூற்றாண்டுகட்கு முன்பே தமிழகம் தன் ஜான்சி ராணியைக் கண்டுவிட்டது” என்று   வரலாற்று ஆசிரியர்கள் போற்றும்படி செய்துவிட்டாள் என்று வரலாற்றுப்   பேராசிரியர் திரு. ந. சஞ்சீவி அவர்கள் ‘மருதிருவர்” என்ற தனது நூலில்   குறிப்பிடுகின்றார்.

மேலும் அதே ஆசிரியர் வீரமங்கை வேலு நாச்சியை ‘தமிழகத்தின் ஜான்சி ராணி”   என்று போற்றுவதைவிட ஜான்சி ராணியை ‘வடநாட்டு வேலுநாச்சி” என்று புகழ்வதே   சாலப் பொருத்தமுடையதாகத் தோன்றுகிறது” என்று வேலு நாச்சியாரைப் பற்றி   சிறப்பாகப் புகழ்ந்து கூறியுள்ளார்.

*25-12-1796 ஆம் தேதி வெ ள்ளிக்கிழமை விடிகாலை வீரமங்கை இறந்து போனார் என   வீரம் வளர்ந்த மண் பக்கம் 59ல் உள்ளது. இதற்கு எந்த ஆதாரமும்  கிடையாது.*

ஞாயிறு, 24 டிசம்பர், 2017

கீழ்வெண்மணி படுகொலை தியாகிகள் நினைவு தினம் டிசம்பர் 25.


கீழ்வெண்மணி படுகொலை  தியாகிகள் நினைவு தினம் டிசம்பர் 25.

தஞ்சை மாவட்டத்தில் 44 வேளாண் தொழிலாளர்கள் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்ட துக்க தினம் 48வது வருட தியாகிகள் தினமாக இன்று அனுசரிக்கப்படுகிறது.
நாகையில் இருந்து 25கிமீ தொலைவில் உள்ள கீழ்வெண்மணி எனும் கிராமத்தில், நிலக்கிழார்கள் அங்குள்ள கீழ் சமூகத்து மக்களை அடிமைகளாக நடத்தி வந்தனர். குறைந்த ஊதியத்தில் அதிகமாக வேலை வாங்கி “பண்ணையாள்” முறையில் மக்கள் நடத்தப்பட்டனர். ஒரு கட்டத்தில் கொடுமை தாங்கமுடியாத மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து விவசாயிகள் சங்கத்தை உருவாக்கினர். இதனால் கோபமடைந்த நிலக்கிழார்கள் கிசான் போலீஸ் எனும் காவலர் அமைப்பை உருவாக்கி விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தினர்.
1968ஆம் ஆண்டு டிசம்பர் 25ம் நாள் அன்று ஊருக்குள் புகுந்த காலர்கள் மற்றும் நிலக்கிழார்களின் ஆட்கள் விவசாயிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் விவசாயிகள் பலரும் ஓடி தெருவின் மூலையில் இருந்த ராமையா என்பவரின் குடிசைக்குள் ஒளிந்தனர். சிறிய அளவுள்ள அந்த குடிசையில் சுமார் 48 அடைந்திருந்தனர். அப்போது வெளிப்புறமாக கதவை அடைத்து குடிசைக்கு தீ வைத்து எரித்ததில் 44 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர்.
இதில் 20 பெண்கள், 19 குழந்தைகள் அடங்குவர். இந்த குற்றம் சம்பந்தமாக 103 பேர் கைது செய்யப்பட்டு 1973ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர். இந்த குடிசை எரிப்பு சம்பவத்தின் போது இறந்தவர்களின் நினைவாக வருடந்தோரும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் நாளன்று “கீழ்வெண்மணி தியாகிகள் தினம்” அனுசரிக்கப்படுகிறது.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் நினைவு தினம் டிசம்பர் 24, 1987.



புரட்சித்தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன்  நினைவு தினம் டிசம்பர் 24, 1987.

மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்ற இவர், ‘எம்.ஜி.ராமச்சந்திரன்’ என்றும், ‘எம்.ஜி.ஆர்’ என்றும் அன்போடு அழைக்கப்பட்டார். இவர் இந்தியாவின் தலைச்சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். அவருடைய வாழ்க்கையில், நடிப்பும், அரசியலும் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது. அவருடைய இளமைக்காலத்திலேயே, பல நாடக குழுக்களில் பிரபலமாக திகழ்ந்தார். அவர் காந்தியின் மீதும் அவரது கொள்கைகள் மீதும் மிகவும் பற்றுடையவராக இருந்ததால், அவருடைய இளம்வயதிலேயே இந்திய நேஷனல் காங்கிரஸில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள், தமிழ் திரையுலகை முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆதிக்கம் செய்தார். பின்னர், திமுக அரசியல் கட்சியுடன் கைகோர்த்தார். ஒரு தமிழ் நடிகர் என்ற மகத்தான புகழ் பெற்றிருந்தாலும், எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் சமமான வெற்றிகரமான அரசியல் வாழ்க்கையையும் அனுபவித்தார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டப்பின், அவர் தனது சொந்தக் கட்சியான அ.தி.மு.கவை உருவாக்கினார். மக்கள் எம்.ஜி.ஆரை மிகவும் நேசிக்க முக்கிய காரணம், அவர் ஏழை மக்களின் இதய தெய்வமாக விளங்கினார். நாட்டின் மாநில முதலமைச்சர் நாற்காலியை ஆக்ரமித்த, முதல் இந்திய திரையுலக பிரமுகர் என்ற பெருமை எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களையே சேரும். ஒரு நடிகராக இருந்து அரசியலில் பதவி அடைந்த போதும், அவர் ஏழைகளின் தோழனாகவும், இல்லாதோருக்குக் கொடையாளியாகவும் விளங்கினார். தனது மனிதநேய பண்புகளால் அன்பு செலுத்தியதால் பெருமளவில் பிரபலமானார்.
பிறந்த தேதி: ஜனவரி 17, 1917
பிறந்த இடம்: நாவலப்பிட்டி, கண்டி,
இலங்கை
இறந்த தேதி: டிசம்பர் 24, 1987
தொழில்: நடிகர், தயாரிப்பாளர்,
அரசியல்வாதி
குடியுரிமை: இந்தியா
குடும்ப பின்னணி மற்றும்


ஆரம்பகால வாழ்க்கை
கேரள பெற்றோருக்கு பிறந்தவர், மருதூர் கோபாலன் ராமச்சந்திரன். அவருடைய பெற்றோரான மேலக்காடு கோபால மேனன் மற்றும் மருதூர் சத்யபாமா அவர்கள், கேரளாவின் பாலக்காடு பகுதியில் வடவனூர் பகுதியில் வசித்து வந்தனர். ஆனால், எம்.ஜி.ஆரின் தந்தை வழக்கறிஞர் என்பதால், அவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் இருந்தது. இதன் காரணமாக அவர் கேரளாவிலுள்ள தனது சொந்த வீட்டில் இருந்து தப்பி ஓடினார். அவர் இலங்கை சென்று வாழ்க்கையைத் தொடங்கினார். அங்கு தான் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் பிறந்தார். மேலக்காடு கோபால மேனன் அவர்கள் ஒரு பிராமண விதவையுடன் தொடர்பு வைத்திருந்ததால், அவர் கேரளாவிலிருந்து வெளியேற்றப்பட்டதாக, அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கேரள சமூகத்தின் மரபுகளை பின்பற்றி, சக மனிதர்கள் அவருக்கு ‘ஸ்மார்தவிசாரம்’ செய்து அவரை ஊரை விட்டு ஒதுக்கிவைத்தனர். அவருடைய குடும்பமும் இதை ஏற்றுக்கொண்டது. இதன் காரணமாகவே அவர் சிலோனுக்குத் தப்பி ஓடினார். மேலக்காடு கோபால மேனன் அவர்கள், சிலோனில் மருதூர் சத்யபாமா என்பவரை திருமணம் செய்தார். அங்கு அவர்களுக்கு ஜனவரி 17, 1917 ஆம் ஆண்டு, எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் மகனாக பிறந்தார். எம்.ஜி.ஆரின் பிறந்த இடம் இன்றும் இலங்கையில் இருக்கிறது. தனது குழந்தை பருவ தொடக்கத்தில் இருந்தே, எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள், இந்து மதத்தைத் தீவிரமாகவும், உறுதியாகவும் நம்பினார். இந்துக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தெய்வமாக இருக்கும் முருகக்கடவுளைத் தனது ஆஸ்தான கடவுளாக எண்ணித் தீவிரமாக வழிபாடு செய்து வந்தார்.
திரையுலக வாழ்க்கை
எம்.ஜி.ஆர் தனது இளமைப்பருவத்திலேயே, நடிப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அவர் சிறுவனாக இருந்த போதே அவரது தந்தை இறந்துவிட்டார். அவரது தந்தையின் மறைவுக்குப் பின், குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத்தொடர முடியாமல், பணம் சம்பாதிக்கும் நிர்பந்தம் ஏற்பட்டதால், இவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தில், தனது பெயரை முதல்முறையாக ‘ஒரிஜினல் பாய்ஸ்’ என்ற நாடக குழுவில் பதிவு செய்தார். அவருடைய சகோதரரும் இந்த குழுவில் உறுப்பினராக இருந்தார். சில ஆண்டுகளுக்கு பிறகு, நாடகத்தில் நடிப்பதை விட்டுவிட்டு, 1935ல் தமிழ் திரையுலகில் சேர்ந்தார். 1936ல் ‘சதிலீலாவதி’ என்ற படத்தில் துணை கதாபாத்திரமாக முதல்முறையாக நடித்தார். 1940களில் தான் அவருக்கு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. தமிழ் சினிமாவிலேயே இதுவரை பார்த்திராத வர்ததகரீதியான ரொமாண்டிக் மற்றும் ஆக்க்ஷன் ஹீரோ என்று அவரை உருவாக்கிய படம், ‘இராஜகுமாரி’. இது கலைஞரால் எழுதி உருவாக்கப்பட்டது. 1947ல், இராஜகுமாரி’ திரைப்படம் தமிழக திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. பின்னர், தமிழ் திரையுலகம் மூன்று தசாப்தங்களுக்கும் எம்.ஜி.ஆரை முழக்கமிட்டனர். 1956ல், எம்.ஜி.ஆர், திரையுலகில் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் உருவெடுத்தார். அவர் இயக்கிய முதல் படமான ‘நாடோடி மன்னன்’, தமிழ்நாட்டில் பல திரையரங்குளில் ஓடி, பெரிய வெற்றிப்பெற்று, தமிழ் ரசிகர்களின் மனதில் ஒரு அங்கீகாரத்தைப் பெற்றது. ஒரு இயக்குனராக தனது முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அவர் இரண்டு படங்களை இயக்கி நடிக்கவும் செய்தார். அவை ‘உலகம் சுற்றும் வாலிபன்’ மற்றும் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ ஆகும். 1971ல் வெளியான ‘ரிக்க்ஷாக்காரன்’ படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததால், எம்.ஜி.ஆர் அவர்களுக்கு, சிறந்த நடிகருக்கான ‘தேசிய விருது’ கிடைத்தது.
விருதுகள் மற்றும் அங்கீகாரம்
1960ல், எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் இந்தியாவின் ‘பத்மஸ்ரீ விருதுக்காகத்’ தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவர் அரசாங்கத்தின் பற்றற்ற நடத்தையின் காரணமாக அதை ஏற்க மறுத்துவிட்டார். ஏனென்றால், விருதில் பாரம்பரிய ஹிந்தி வார்த்தைகளுக்கு பதிலாக தனது தாய்மொழியான தமிழில் இருக்க வேண்டுமென்று அவர் விரும்பினார்.
‘ரிக்க்ஷாக்காரன்’ படத்திற்காக, தனது நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை 1972ல், எம்.ஜி.ஆர் பெற்றார்.
சென்னை மற்றும் உலக பல்கலைக்கழகமும் அவருக்கு ‘முனைவர் பட்டம்’ வழங்கி சிறப்பித்தது.
தமிழ்நாட்டின் சமுதாயத்தின் நன்மைக்காக அவருடைய பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக அவர் இறந்த பிறகு 1988ல் ‘பாரத ரத்னா விருதை’ வழங்கப்பட்டது.
தனிப்பட்ட வாழ்க்கை
எம்.ஜி.ராமச்சந்திரன் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். அவரது முதல் இரண்டு மனைவிகள் நோயின் காரணமாக இறந்துவிட்டனர். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, அவரது மூன்றாவது மனைவியான ஜானகி ராமச்சந்திரன் அவர்கள் அ.இ.அ.தி.மு.கவின் பொறுப்பை ஏற்றார்.


 இறப்பு
எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களுக்கு சிறுநீரக பிரச்சினைகள் இருந்தது. சிறுநீரகக் கோளாறு காரணமாக 1984ஆம் ஆண்டு அக்டோபரில், அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் உள்ள டவுன்ஸ்டேட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதே ஆண்டு, சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொண்டார். இறுதியாக 1987ல் நோய்வாய்ப்பட்டார். டிசம்பர் 24ஆம் தேதி, 1987ல் இயற்கை எய்தினார். எம்.ஜி.ஆருடைய மரணம் தமிழ்நாட்டில் பெருங்கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கட்டுக்கடங்காத மக்களையும், அதிகளவில் போராடி உயிரிழந்த உணர்ச்சித் தமிழர்களையும் நிர்வகிக்க தமிழக அரசும், போலீஸ் அதிகாரிகளும் கடுமையாக போராடினர். அவரது மறைவுக்குப் பின், அஇதிமுக இரண்டு பிரிவுகளாக பிரிந்தது. ஒன்று அவரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலும், மற்றொன்று ஜே.ஜெயலலிதா தலைமையிலும் தனித்தனி கட்சிகள் உருவாகின. அவரது ‘சத்யா ஸ்டுடியோ’ இப்போது ஒரு பெண்கள் கல்லூரியாக உள்ளது. சென்னை டி.நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டை தமிழக அரசு நினைவு இல்லமாக மாற்றி பராமரித்து வருகிறது.
காலவரிசை
1917 : எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் ஜனவரி ம் தேதி 17 பிறந்தார்.
1936 : தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
1947 : அவரின் முதல் வெற்றிப்படமான ‘ராஜகுமாரி’ வெளியானது.
1953 : அரசியல் கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தில் சேர்ந்தார்.
1956 : முதல் முறையாக திரைப்பட இயக்குனராக மாறினார்.
1960 : பத்மஸ்ரீ விருதை ஏற்க மறுத்து விட்டார்.
1962 : மாநில சட்ட மன்றத்தின் உறுப்பினரானார்.
1967 : தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார்.
1967: எம். ராதாவால் கழுத்தில் சுடப்பட்டார்.
1969 : திமுக பொருளாளராக மாறினார்.
1972 : தனது சொந்த அரசியல் கட்சியான, அ.தி.மு.கவை உருவாக்கினார்.
1972 : ‘ரிக்க்ஷாக்காரன்’ படத்திற்காக தேசிய விருதை வென்றார்.
1977 : முதல் முறையாகவும், மூன்று முறை தொடர்ந்தும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார்.
1984 : சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார்..
1987 : டிசம்பர் 24ஆம் தேதி,1987ல் இறந்தார்.
1988 : இறப்பிற்கு பின், பாரத ரத்னா விருதை அரசு அவருக்கு வழங்கியது.



எம்.ஜி.ஆர் - சில சுவையான தகவல்கள்!
1. எம்.ஜி.ஆர் நடித்த மொத்தப் படங்கள் 136. முதல் படம் சதிலீலாவதி(1936). கடைசிப் படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977)
2. எம்.ஜி.ஆர் பெரும்பாலும் (60 படங்கள்) தெலுங்குப் படங்களைத்தான் ரீ-மேக் செய்வார். அத்தனையும் என்.டி.ஆர். நடித்ததாகவே இருக்கும். ‘உரிமைக்குரல்’ மட்டும் அதில் விதிவிலக்கு. அது நாகேஸ்வர ராவ் நடித்த தெலுங்குப் படம்.
3. எம்.ஜி.ஆரின் முதல் மனைவி தங்கமணி. இரண்டாவதாக சதானந்தவதியைத் திருமணம் செய்தார். அவரது மறைவுக்குப் பிறகு வி.என்.ஜானகி.
4. எம்.ஜி.ஆர்.நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் ‘அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிட உடைமையடா...’ பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும்.
5. எம்.ஜி.ஆர் சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைப் பெரும்பாலும் தவிர்த்து விடுவார். ‘நினைத்ததை முடிப்பவன் ’படத்தில் சிகரெட்டை வாயில் வைத்திருப்பார். மலைக்கள்ளனில் ‘ஹீக்கா’ பிடித்தது மாதிரி வருவார்.
6. தமிழ்நாடு முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஷீட்டிங் போக முடியாது என்பதால், அந்தப் பதவியேற்பு விழாவை 10 நாட்கள் தள்ளிப் போட்டு ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை நடித்து முடித்துக் கொடுத்தார்.
7. எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா.
8. எம்.ஜி.ஆர் - கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம் ‘மலைக்கள்ளன்’. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ்படமும் இதுதான். இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
9. நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - இந்த மூன்று படங்களும் எம்.ஜி.ஆர் நடித்து இயக்கிய படங்கள்.
10. அடிமைப் பெண் பட ஷீட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர்.குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார்.

தந்தை பெரியார் நினைவு தினம் டிசம்பர் 24, 1973.



தந்தை பெரியார் நினைவு தினம் டிசம்பர் 24, 1973.

பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள், எழுச்சியூட்டும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்ததிற்காவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், சாதி வேற்றுமைகளை அகற்றுவதற்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர். தமிழகத்தின் மிகப்பெரிய கழகமான திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவர். பெண்விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும், திராவிடர்கள் பார்பனரல்லாதார் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும் எதிர்த்துப் போராடிய சமூக சீர்திருத்தத்தின் தந்தை. தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ் என்றும் இந்தியாவின் கண்ணிராத பகுத்தறிவு சிற்பி என்றும் போற்றப்பட்ட ஈ.வெ. ராமசாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை இங்கு விரிவாக காண்போம்.
பிறப்பு: செப்டம்பர் 17, 1879
இடம்: ஈரோடு, தமிழ்நாடு(இந்தியா)
இறப்பு: டிசம்பர் 24, 1973
பணி: அரசியல்வாதி, சமூக சேவகர்.
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு:
ஈ.வெ. ராமசாமி அவர்கள், 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் நாள் வெங்கட்ட நாயக்கருக்கும், சின்னதாயம்மைக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர், ஈரோடு வெங்கட்ட இராமசாமி நாயக்கர். இவருக்கு கிருஷ்ணசாமி என்ற சகோதரனும், கண்ணம்மா மற்றும் பொன்னுதாயி என்ற சகோதரிகளும் இருந்தனர். இவருடைய குடும்பம் வசதியான வணிக பின்னணியைக் கொண்டதாக இருந்தது.
ஆரம்ப வாழ்க்கை:
தனது படிப்பை ஐந்தாம் வகுப்புவரை முடித்துகொண்ட ஈ.வெ.ரா, அதன் பின் கல்வி பயில விருப்பம் இல்லாததால் தன்னுடைய 12 வது வயதில் தந்தையின் வணிகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தன்னுடைய இளம் வயதிலேயே, தனது பகுத்தறிவு சிந்தனையால், திராவிடத்தை சதியால் அடக்கியாண்ட ஆரியத்தை பல கேள்விகள் கேட்கத்தொடங்கினார். அவருடைய 19 வது வயதில்,13 வயது நிரம்பிய நாகம்மையாரை மணந்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு நாகம்மையார் தன்னுடைய கணவரின் புரட்சிக்கு முழுவதுமாக தன்னை அற்பணித்துக்கொண்டார். திருமணமான இரண்டு ஆண்டுகளில் ஒரு பெண்குழந்தை பிறந்தது ஆனால், அந்த குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்துவிட்டது.1902 ஆம் ஆண்டுகளில் கலப்புத் திருமணங்களைநடத்திவைத்தார். அனைத்து சமய, சாதியினருடனும் சேர்ந்து விருந்துண்டார். இதனால் இவருக்கும், இவருடைய தந்தைக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. பின்னர்,இவருடைய பகுத்தறிவு செயல்களை ஏற்கமுடியாத தந்தையின் கண்டனத்தால் துறவு பூண்டு காசிக்கு சென்றார்.
காசிக்கு பயணம்:
காசியில் அவருக்கு நடந்த நிகழ்வு அவரின் எதிர்கால புரட்சிகரசிந்தனைக்கு வித்திட்டது. பெரியாருக்கும் அவரது தந்தைக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் காசிக்கு சென்ற அவருக்கு, அங்கு பிராமணரல்லாதார் வழங்கும் நிதியில் நடத்தப்படும் அன்னசத்திரத்தில் உணவு மறக்கப்பட்டு வீதியில் தள்ளப்பட்டார். இந்த நிலைமையை எண்ணி மிகவும் வருந்தினார். பின்னர் குப்பைத் தொட்டியில் விழும் எச்சில் இலைகளின் உணவை உண்டு பசியாற்றினார். அதுமட்டுமல்லாமல், காசியில் வேசிகளின் வேசமும், திராவிடர்கள் பிச்சைகாரர்களாக இருப்பதையும் மற்றும் புனித கங்கையில் பிணங்கள் மிதப்பதையும் கண்ட அவர் அன்றிலிருந்து இறைமறுப்பாளராக(ஒரு நாத்திகவாதியாக) தன்னை மாற்றிக் கொண்டார்.
ஆரம்பகால அரசியல் வாழ்க்கை:
காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளில் ஈடுபாடுகொண்ட பெரியார்,1919 ஆம் ஆண்டு தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். காந்தியடிகளின் கொள்கைகளை பின்பற்றியதுமட்டுமல்லாமல் பிறருக்கும் எடுத்துக்கூறினார். வெளிநாட்டு துணிகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல் போராட்டங்களையும் நடத்தினார். 1921 ஆம் ஆண்டுகள்ளுக்கடைகளை மூட வலியிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்,தன்னுடைய தோட்டத்திலிருந்த 500 தென்னைமரங்களை வெட்டிச்சாய்த்தார். இப்போராடத்தில்,கைது செய்யப்பட்டு சிறைதண்டனையும் பெற்றார்.1921-1922-ல் ஒத்துழையாமை மற்றும் மிதமாக மதுகுடித்தல் சட்டங்களை எதிர்த்து மறியலில் ஈடுபாட்ட அவர், மீண்டும் கைதுசெய்யப்பட்டார்.1922-ல் சென்னை மாகாண காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்தெடுக்கப்பட்டார். பின்னர், திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் அரசுப் பணிகளிலும், கல்வியிலும் இடஒதுக்கீட்டை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். ஆனால்,இது இனவேற்றுமையை பிரதிபலிப்பதாக அமைவதால் அன்றைய காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் ஏற்க மறுத்தனர். இதனால் பெரியார் 1925- ல் அக்கட்சியை விட்டு விலகினார்.


வைக்கம் போராட்டம்:
பெரியாருக்கு காந்தியின் கொள்கைகளில் ஒரு வலுவான நம்பிக்கை இருந்தது. கேரளாவில் வைக்கம் என்னும் ஊரில் அரிசன மக்கள் என்றழைக்கப்படும் தலித் மக்களும், ஈழவர்களும் கோயில் இருக்கும் வீதிகளில் நடக்கவும் கோயிலுக்குள் நுழையவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. 1924 ஆம் ஆண்டு டி.கே. மாதவன் அவர்கள், இதை எதிர்த்து காந்திய வழியில் சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கினார். இப்போராட்டதில், நாடெங்குமுள்ள காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தமிழகத்தின் சார்பாக தந்தை பெரியார் கலந்துகொண்டார் பின்னர்,கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். அவருடைய துணைவியான நாகம்மையாரும் இப்போராட்டத்தில் பங்கேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பெரியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டபோதிலும், அவருடைய தொண்டர்கள் கைவிடாது போராட்டத்தை தொடர்ந்ததால் வெற்றியும் கிட்டியது. இந்த போராட்டதிற்கு பிறகு பெரியார் ‘வைக்கம் வீரர்’ என தமிழக மக்களால் அழைக்கப்பட்டார்.
சுயமரியாதை இயக்கம்:
1925 ஆம் ஆண்டு பெரியாரால் சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் முக்கிய கொள்கையே ‘மூடபழக்க வழக்கங்களை சமுகத்தில் மக்களிடம் இருந்து அகற்றுவதை’ நோக்கமாக கொண்டு செயல்பட்டது.தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைபிடிக்கும் பார்ப்பனியம், பெண்களை தாழ்வாக கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து குரல்கொடுத்தார். தென்னிந்தியாவில் பழம்பெருமை வாய்ந்த திராவிடர்கள் பார்பனரல்லாதார் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர் வாழ்வு சுரண்டப்படுவதையும், பெரியார் எதிர்த்தார். கைம்பெண் மறுமணம் போன்ற புரட்சி திருமணங்களை நடத்திக்காட்டியது மட்டுமல்லாமல் கலப்பு திருமணமுறையையும் இவ்வியக்கம் ஆதரித்தது. கோயில்களில் சட்டத்திற்கு புறம்பாக பின்பற்றப்படும் தேவதாசி முறையையும், குழந்தைகள் திருமணத்தையும் தடைசெய்தது.அரசு நிர்வாகப் பணி மற்றும் கல்வி ஆகியவற்றில் இடஒதுக்கீடு முறையை கடைபிடிக்க இவ்வியக்கம் வலியுறுத்தியது. பின்னர், தன்னுடைய கொள்கைகளையும் சிந்தனைகளையும் பரப்புவதற்கு “குடியரசு நாளிதழை” 1925 ஆம் ஆண்டு தொடங்கினார். சுயமரியாதை இயக்கம், வெகுவேகமாக வளர்ந்தது மட்டுமல்லாமல், மக்களின் ஆதரவையும் பெற்றது. சுயமரியாதையாளர்கள் ஈரோடு மற்றும் பிற மாவட்டங்களிலும்,மாநாடுகளும், கூட்டங்களும் நடத்தப்பட்டு மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 1929 முதல் 1932 வரை மலேசியா, ரஷ்யா, ஐரோப்பா, பிரான்ஸ், ஜெர்மனி, கிரிஸ், சிங்கப்பூர், இலங்கை, மேலும் பல வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு தன்னுடைய சுயமரியாதைக் கொள்கைகளை விளக்கிக்கூறினார்.


இந்தி எதிர்ப்பு:
1937 ஆம் ஆண்டு சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றபிறகு ‘இந்தி’ கட்டாயமொழியாக பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் வெடித்தன. இந்தி பேசும் வடஇந்தியர்களிடமிருந்து தமிழர்களை பிரித்து இரண்டாம் தர குடிமக்களாக காட்டுவது மட்டுமல்லாமல், தமிழர்களின் முன்னேற்றத்தையும், பண்பாட்டையும் சிதைத்து விடும் என வலியுறுத்தி 1938- ல் நீதிக்கட்சியின் சார்பாக பெரியார் மற்றும் சர்.ஏ.டி. பன்னீர் செல்வம் தலைமையில் நடந்த போராட்டத்தில் பெரியாருடன் பலர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். 1939 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட பெரியார் “நீதிக்கட்சியின்”(1916 ஆம் ஆண்டு பிராமணர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக தொடங்கப்பட்ட தென்னிந்திய நலஉரிமை சங்கம் என்ற அரசியல் கட்சி பின்னாளில் நீதிக்கட்சியாக மாறியது) தலைவராக பொறுப்பேற்றார். அவரது தலைமையில் நீதிக்கட்சி பெரும் வளர்ச்சிப்பெற்றது. இருப்பினும், நீதிக்கட்சியில் பெரும்பாலான உறுப்பினர்கள் செல்வந்தராகவும், கல்வியறிவு பெற்றவர்களாகவும் இருந்ததால், பெரியாரின் கீழ் செயல்பட மனமில்லாமல் கட்சியிலிருந்து விலகினார்.
பெரியாரின் திராவிட கழகம்:
பெரியார் அவர்கள், நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு ‘நீதிக்கட்சி’ என்ற பெயரை 1944-ல் ‘திராவிட கழகம்’ என பெயர் மாற்றினார். திராவிட கழகத்தின் கொள்கைகள் வெகு விரைவில் மக்களிடத்தில் சேர்ந்தது. திராவிடர் கழகம், சமுகத்தில் பரவிக் கிடந்த தீண்டாமையை ஒழிப்பதிலும், சுயமரியாதை, சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு, இறைமறுப்பு, பெண் உரிமை மற்றும் பெண்கல்வி போன்றவற்றையும் வலியுறுத்திதொடங்கப்பட்ட ஒரு சமூக இயக்கமாகும்.‘கருப்பு சதுரத்தின் நடுவே சிவப்பு வட்டம்’ என்பதே திராவிட கழகத்தின் கொடியாக இருந்தது.
பெரியாருக்கும் அண்ணாவிற்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு:
பெரியாரின் திராவிட கழகம், சமுதாய மறுமலர்ச்சி, விழிப்புணர்வு, மூடநம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு போன்ற கொள்கைகளை சார்ந்து இருந்ததால், திராவிட கழகத்தை அரசியல் கட்சியாக மாற்ற பெரியார் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாமல்,‘திராவிடநாடு’ அல்லது ‘தனி தமிழ்நாடு’ என்ற கோரிக்கையையும் முன்வைத்தார். ஆனால் கா.ந. அண்ணாதுரை மத்திய அரசுடன் இணைக்கமாக இருந்து கொண்டு கூடுதல் அதிகாரங்களை கொண்ட மாநில சுயாட்சியை பெறுவதில் அக்கறை காட்டினார். இதனால் இருவருக்குமிடைய கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. திராவிட கழகத்தின் தொண்டர்களும், உறுப்பினர்களும் கழகத்திலிருந்து விலக சரியான நேரத்தை எதிர்நோக்கி காத்திருந்தபொழுது, ஜூலை 9, 1948 ஆம் ஆண்டு பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான மணியம்மையை மறுமணம் புரிந்து கொண்டதை காரணம் காட்டி, அண்ணாதுரை தலைமையிலான திராவிட கழகத்திலிருந்து விலகினார். பின்னர் கா.ந. அண்ணாதுரை தனது வழிகாட்டியான பெரியாரிடமிருந்து பிரிந்து,1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க) என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
இறுதிகாலம்:
இந்து மத மூடநம்பிக்கைகளை அறவே எதிர்த்த பெரியார்,1952-ல் பிள்ளையார் உருவ பொம்மைகளை உடைத்தது மட்டுமல்லாமல்,1956 ஆம் ஆண்டு இந்துக்களின் கடவுளாக கருதப்பட்ட ராமரின் உருவப்படம் எரிப்புப் போராட்டத்தையும் நடத்தி, கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர்,1962 –ல் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளராக கி. வீரமணியை நியமித்தார். மக்களுக்குள் சுயமரியாதை, சமத்துவம், சகோதரத்துவம் ஓங்கி வளரவேண்டும் என்று கடைசிவரை போராடிய பெரியாரின் கடைசி கூட்டம் 1973 டிசம்பர் 19 ஆம் தேதி சென்னை தியாகராஜர் நகரில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ‘சாதிமுறையையும், இழிவுநிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடவேண்டும்’ என்று முழக்கமிட்டு தன்னுடைய கடைசி உரையை முடித்துக்கொண்டார்.
புனைபெயர்கள்:
இவருடைய சமுதாய பங்களிப்பைப் பாராட்டி ‘யுனஸ்கோ நிறுவனம்’ ஜூன் 27, 1973 ஆம் ஆண்டு பெரியாரை ‘புத்துலக தொலைநோக்காளர்’, ‘தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ்’, ‘சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை’ என பாராட்டி விருது வழங்கியது. அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் ‘கடும் எதிரி’, ‘பகுத்தறிவு பகலவன்’, ‘வைக்கம் வீரர்’மற்றும் ‘தந்தை பெரியார்’ என பல்வேறு பெயர்களில் அழைக்கபடுகிறார்.


இறப்பு:
‘பகுத்தறிவின் சிற்பி’,‘அறிவு பூட்டின் திறவுகோல்’, எதையும் ‘ஏன்? எதற்கு? எப்படி?’ என்று கேட்கவைத்தவர், மூட நம்பிக்கையை ஒழித்துத் தன்னம்பிக்கையை விதைத்தவர், உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும், அழியாத வரலாற்றின் அறிஞருமான தந்தை பெரியார், டிசம்பர் 24, 1973 ஆம் ஆண்டு தனது 94 வது வயதில் காலமானார்.
பலநூற்றாண்டு கால வரலாற்றை வெறும் இருபது வருடங்களில் நிகழ்த்திக்காட்டிய வரலாற்றுத் தேடல்; மனிதகுல வரலாற்றில் தன் மக்களின் விடியலுக்காகப் போராடிய மாபெரும் விரர்; இந்திய விடுதலையில் பங்காற்றி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராயிருந்து, மதுவிலக்குக் கொள்கைகளை காந்திக்கு எடுத்துரைத்து, சுயமரியாதை இயக்கம் கட்டமைத்து, சீர்திருத்த திருமணம் என்ற ஒரு புதிய வாழ்க்கை ஒப்பந்த முறையை சட்டமாக்கி, தன் தமிழினம் தலைநிமிர்ந்து வாழ வகைசெய்த பகுத்தறிவு பகலவன், திராவிடம் என்கிற பல நூற்றாண்டு கால வரலாற்றின் ‘வெற்றி நாயகன்’என இன்னும் சொல்லிக்கொண்டே போகக்கூடிய அரும்பணியை ஆற்றிய மாபெரும் சிந்தனையாளர் ‘பெரியார்’ என்றால் அது மிகையாகாது.
காலவரிசை:
1879 – செப்டம்பர் 17 ஆம் தேதி ஈரோட்டில் பிறந்தார்.
1898 – நாகம்மையாரை மணந்தார்.
1904 – காசிக்கு சென்று ஒரு நாத்திகவாதியாக திரும்பினார்.
1919 – இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
1922 – மெட்ராஸ் ப்ரிசிடென்ஸி காங்கிரஸ் கமிட்டி தலைவரானார்.
1925 – இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.
1924 – வைக்கம் போராட்டத்தை நடத்தினார்.
1925 – சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது.
1929 – ஐரோப்பா, ரஷ்யா, மற்றும் மலேஷியா போன்ற சர்வதேச நாடுகளுக்கு பயணம்.
1929 – தன்னுடைய பேருக்கு பின்னால் இருந்த ‘நாயக்கர்’ என்ற பட்டத்தைத் துறந்தார்.
1933 – பெரியாரின் துணைவியாராகிய நாகம்மையார் மரணம்.
1938 – தமிழர்கள் வாழும் நாடு தமிழர்கே என முழங்கினார்.
1939 – நீதி கட்சி தலைவரானார்.
1944 – நீதி கட்சியின் பெயர் ‘திராவிட கழகம்’ என மாற்றப்பட்டது.
1948 – ஜூலை 9, ஆம் தேதி பெரியார் மணியம்மையை மறுமணம் புரிந்து கொண்டார்.
1949 – பெரியார் மற்றும் கா.ந.அண்ணாதுரையிடையே பிளவு ஏற்பட்டு ‘திராவிட முன்னேற்ற கழகம்’ என்ற புதிய கட்சி தொடங்கப்பட்டது.
1973 – பெரியார் டிசம்பர் 24 ஆம் தேதி, தனது 94 வது வயதில் காலமானார்.

வெள்ளி, 22 டிசம்பர், 2017

தேசிய விவசாயிகள் தினம் டிசம்பர் 23.



தேசிய விவசாயிகள் தினம் டிசம்பர் 23.

முன்னாள் இந்திய பிரதமா் சௌத்ரி சரண் சிங்கின் பிறந்தநாளான டிச. 23ம் தேதி ஒவ்வொரு வருடமும் தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப் படுகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் மாவட்டத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவா் முன்னாள் பிரதமா் சரண் சிங். இவா் உத்தரப்பிரதேச அரசில் வேளாண்துறை மற்றும் வனத்துறை மந்திரியாக பொறுப்பு வகித்துள்ளார். இவர் உத்தரப்பிரதேச முதலமைச்சராக இருந்தபோது, நிலக் கையிருப்புச் சட்டம் கொண்டு வருவதற்கு முக்கிய பங்காற்றினார். இச்சட்டம் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான நிலக் கையிருப்பின் உச்ச அளவை குறைக்கும் முயற்சியாக அமைந்தது. இந்தியாவில் நெடுநாள் பிரச்சினையாக இருந்துவந்த உழுபவர்களுகே நிலம் என்பதை பல கூட்டங்களில் முன்வைத்தவர்.
1979-ம் ஆண்டு ஜூலை மாதம், நாட்டின் 5-வது பிரதமராக பதவியேற்றார், சரண் சிங். 1980-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி வரை 7 மாதங்கள் ஆட்சியில் இருந்த சரண் சிங் 'ஜமீன்தாரி ஒழிப்புமுறை சட்டத்தை கொண்டு வந்தார். அதேசமயம் நிலச் உரிமையாளர்கள், வட்டிக்கு பணம் வழங்குவோர் மீது கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும், விமர்சனங்களையும் முன்வைத்தவர் சரண்சிங்.
அவருடைய ஆட்சியின்போது தான் விவசாயிகளின் விளைபொருள் விற்பனைக்காக 'வேளாண் விளைபொருள் சந்தை மசோதா'வையும் அறிமுகப்படுத்தினார்.
'ஜமீன்தாரி முறை ஒழிப்பு', 'கூட்டுறவு பண்ணை முறை', 'இந்தியாவில் வறுமை ஒழிப்பும் அதற்கான தீர்வும்', 'வேலை செய்பவர்களுக்கு நிலம்' உள்ளிட்ட பல தலைப்புகளில் நூல்கள் எழுதியுள்ளார். தன் வாழ்நாள் முழுவதும் விவசாயிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்த அவர், 1987-ம் ஆண்டு மே 29-ம் தேதி உயிாிழந்தார். டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்துக்கு 'கிசான் காட்' (விவசாயிகளின் நுழைவாயில்) என பெயரிடப்பட்டுள்ளது.
தன் வாழ்நாளில் விவசாயிகளின் நில உரிமைக்காக குரல் கொடுத்ததற்காக, 2001-ம் ஆண்டிலிருந்து வட இந்திய விவசாயிகள் சார்பாக, அவரது பிறந்தநாளான டிசம்பர் 23-ம் தேதி (இன்று) தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடி வருகின்றனா். இந்த நாளில் விவசாயம் சம்பந்தமாக கருத்தரங்குகள், கூட்டங்கள், பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.



விவசாயிகள் தினம்! அதை ஏன் கொண்டாடுகிறார்கள் தெரியுமா?

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம். உண்மைதான். இன்றும் இந்தியாவின் மக்கள்தொகையில் 60 சதவிகிதத்துக்கு மேலானோர் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவின் முக்கியமான விவசாய விளைபொருட்களான நெல், கோதுமை, பருப்பு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவை பெற்று வருகிறது. பயிர் சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்கள், நவீன பண்ணைக் கருவிகள், மகசூல் அதிகரிக்கும் விதைகள் என்று நாளுக்கு நாள் விவசாயத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே வருகிறது. பசுமை புரட்சியின் பாதிப்புகள் மண் வளத்தை நஞ்சாக்கி இருந்தாலும், விவசாயிகள் தொடர் உழைப்பால், ஆண்டுக்கு 265 மில்லியன் டன் உணவு பொருட்களை உற்பத்தி செய்து வருகிறார்கள் விவசாயிகள். இப்படி விவசாயத்தில் சாதனைகள் தொடர்ந்து கொண்டிருந்தாலும், இன்னும் விவசாயம் ஆட்சியாளர்களுக்கு முதன்மை துறையாக இல்லாதிருப்பது வருத்தத்தை அளித்து வருகிறது.

ஜமீன்தாரி ஒழிப்புமுறை சட்டம்!
இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23-ம் தேதி 'தேசிய விவசாயிகள் தினமாக' கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பிறந்த நாளே கடந்த 15 ஆண்டுகளாக விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 10-க்கும் மேற்பட்ட பிரதமர்கள் இந்தியாவை ஆட்சி புரிந்து வந்திருந்தாலும், சரண் சிங்கின் பிறந்த நாளை விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுவதற்கு காரணம் உண்டு.
பல அரசியல் நெருக்கடி சூழல்களுக்கிடையே ஜூலை 1979-ம் ஆண்டு, 5-வது பிரதமராக பதவியேற்றார் சவுத்ரி சரண் சிங். 1980-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி வரை 7 மாதங்கள் ஆட்சியில் இருந்த சரண் சிங்
'ஜமீன்தாரி ஒழிப்புமுறை சட்ட'த்தை கொண்டு வந்தார். அதேசமயம் நிலச் சுவான்தார்கள், வட்டிக்கு பணம் வழங்குவோர் மீது கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும், விமர்சனங்களையும் முன்வைத்தவர் சரண்சிங். அவருடைய ஆட்சியின்போதே விவசாயிகளின் விளைபொருள் விற்பனைக்காக 'வேளாண் விளைபொருள் சந்தை மசோதா'வையும் அறிமுகப்படுத்தினார். இதுதான் அவர் ஆட்சியின் போது விவசாயிகளின் நலன்களுக்காக கொண்டுவரப்பட்ட முக்கிய அம்சங்கள்.
அதேசமயம் உத்தர பிரதேச மாநிலம், மீரட் மாவட்டம், நூர்பூர் என்ற ஊரில் நடுத்தர விவசாய குடும்பத்தில் பிறந்த சரண் சிங், எளிமையான விவசாயத்தை நேசிக்கக்கூடிய மனிதராகவே வாழ்ந்து வந்தவர். உத்தரபிரதேச அரசில் வேளாண்துறை, வனத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தவர். உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த நிலச் சீர்திருத்தங்களில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. உத்தரபிரதேச முதலமைச்சராக இருந்தபோது, நிலக் கையிருப்புச் சட்டம் கொண்டு வருவதற்கு முக்கிய பங்காற்றினார். இச்சட்டம் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான நிலக் கையிருப்பின் உச்ச அளவை குறைக்கும் முயற்சியாக அமைந்தது. இந்தியாவில் நெடுநாளைய பிரச்னையாக இருந்துவந்த உழுபவர்களுகே நிலம் என்பதை பல கூட்டங்களில் முன்வைத்தவர்.

'ஜமீன்தாரி முறை ஒழிப்பு', 'கூட்டுறவு பண்ணை முறை', 'இந்தியாவில் வறுமை ஒழிப்பும் அதற்கான தீர்வும்', 'வேலை செய்பவர்களுக்கு நிலம்' உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியவர். தன் வாழ்நாளில் விவசாயிகளின் நில உரிமைக்காக குரல் கொடுத்து வந்தவர். 1987-ம் ஆண்டு மே 29-ம் தேதி இறந்தார். புது டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்துக்கு, வட இந்திய விவசாய சமூகங்களின் அன்பின் காரணமாக 'கிசான் காட்' (விவசாயிகளின் நுழைவாயில்) என பெயரிடப்பட்டுள்ளது.
தன் வாழ்நாளில் விவசாயிகளின் நில உரிமைக்காக குரல் கொடுத்ததற்காக, 2001-ம் ஆண்டிலிருந்து வட இந்திய விவசாயிகள் சார்பாக,டிசம்பர் 23-ம் ததேதி தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் விவசாயம் சம்பந்தமாக கருத்தரங்குகள், கூட்டங்கள், பயிற்சிகள் நடத்தப்பட்டு அவர் பெயருக்கு சிறப்பு சேர்க்கப்பட்டு வருகின்றன.
விவசாயிகளின் துயரங்கள் மறைய வேண்டும்!
விவசாயிகள் தினம் குறித்து பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்திடம் பேசியபோது, "வருடத்தின் ஒவ்வொரு நாளும் வெயிலிலும், மழையிலும் கஷ்டபடும் விவசாயிகளை ஏதாவது ஒருநாள் மட்டும் நினைத்துவிட்டு இருந்துவிடக் கூடாது. நாம் சாப்பிடும் ஒவ்வொரு வேளை உணவின்போதும் விவசாயிகளை நினைக்க வேண்டும். அவர்களுடைய கஷ்டங்களை ஒவ்வொரு நாளும் உணர்ந்து, விவசாய சமூகங்களுக்கு இயன்ற உதவிகளை அளிப்பது நல்லது. இந்தியாவில் அரை மணி நேரத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்வதாக புள்ளிவிவரம் சொல்கிறது. இதுபோன்ற துயரங்கள் எல்லாம் மறைந்து, விவசாயிகள் என்றைக்கு நிம்மதியாக அவர்களது தொழிலை செய்கிறார்களோ... அதுவே உண்மையான விவசாயிகள் தினமாக இருக்கும்" என்றார்.
முன்னோடி இயற்கை விவசாயி அரியனூர் ஜெயச்சந்திரனிடம் பேசியபோது, "இந்தியாவில் சுதந்திரத்துக்கு பிறகு
மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டது. அதன்பிறகு குட்டி குட்டி சாம்ராஜ்யங்களாக இருந்த ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட சட்டம் கொண்டுவரப்பட்டது. 'ஜமீன்' என்றால் இந்தியில் 'பூமி' என்று அர்த்தம். ஜமீன்தாருக்கு ஒரு கிராமத்தில் உள்ள அனைத்து நிலங்களும் சொந்தமானவையாக இருந்தது. அந்த நிலத்தில் உழுபவர்கள் ஜமீன்தாருக்கு வரியை கட்ட வேண்டும். ஆனால், நிலத்தின்மீது எந்த உரிமையையும் கோர முடியாது என்ற நிலை இருந்தது. காலப்போக்கில் சட்டங்கள் வந்தபிறகு நிலங்கள் ஓரளவுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. இருந்தாலும் பெரும்பான்மையான நிலங்கள் இன்னும் நில உடைமையாளர்களிடம் இருந்து வருகிறது. இதன்பிறகு நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இன்னும் விவசாயிகளுக்கு முழுமையான நிலங்கள் கைக்கு வரவில்லை என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். ஏதெதுக்கோ தினங்கள் கொண்டாடப்பட்டு வரும் காலக்கட்டத்தில், விவசாயிகளுக்கும் தினங்கள் கொண்டாடப்படுவது வரவேற்கத்தக்கது" என்றார்.
தமிழகத்தில் ஜூலை 5-ம் தேதி உழவர் தினம்!
1970-1973ம் ஆண்டுகளில் விவசாயிகளுக்கான மின்சாரக் கட்டணம் 1 பைசா உயர்த்தப்பட்டதற்காக விவசாயிகள் மாபெரும் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டங்களில் சாலையில் மாடுகள் மற்றும் வண்டிகளை நிறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது மாட்டுவண்டி போராட்டம் என அழைக்கப்பட்டது. இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் செய்திகள் வெளியானது. ஆயிரக்கணக்கான மாடுகள், வண்டிகள் தமிழ்நாடு முழுவதும் சாலையில் கட்டி விடப்பட்டன. இந்த போராட்டத்தில் 62 விவசாயிகள் காவல்துறையால் துப்பாக்கி சூட்டுக்கு ஆளாகி பலியானார்கள்.
திருப்பூர், பல்லடம், உடுமலைப்பேட்டை, ஆத்தூர், விருதுநகர், கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் விவசாயிகள் சுடப்பட்டனர். அதில் 3 பெண்களும் இறந்தனர். அந்த விவசாயிகள் ரத்தம் சிந்தியதால்தான், கட்டணமில்லாமல் வழங்கப்படும் இலவச மின்சாரத்தை அனுபவித்து வருகிறோம். கடன் தள்ளுபடி, ஜப்தி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக போராடி உயிர் நீத்தவர்களுக்காகவும், விவசாய சங்கத்தினர் ஜூலை 5-ம் நாளை 'உழவர் தின'மாக அனுசரிக்கின்றனர். அன்றைக்கு ஒரே விவசாய சங்கம் மட்டும்தான் இருந்தது. அது 13 சங்கங்களாக பிரிந்து, இப்போது 13 இடங்களில் உழவர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த போராட்டங்களை தலைமைத் தாங்கி நடத்தியவர் விவசாய போராளியும், விவசாய சங்கங்களுக்கு முன்னோடியுமான நாராயணசாமி நாயுடு ஆவார். கடந்த டிசம்பர் 21-ம் தேதி இவரது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.