வியாழன், 31 மே, 2018

உலக குழந்தைகள் தினம் ஜுன் 1.


உலக குழந்தைகள் தினம் ஜுன் 1.

பன்னாட்டு குழந்தைகள் நாள் (International Children's Day, ICD) பல நாடுகளில் சூன் 1ம் நாள் கொண்டாடப்படுகிறது
திகதிகளில் வேறுபாடு
பன்னாட்டு குழந்தைகள் நாளை கொண்டாடும் போது திகதி குறித்து பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ஒவ்வொரு நாடுகளும் வெவ்வேறு தினங்களில் இத்தினத்தை கொண்டாடுகின்றன. ஒவ்வொரு ஆண்டும்
நவம்பர் 14ஆம் நாள் இந்தியாவில் குழந்தைகள் நாளாக கொண்டாடப்படுகிறது. இலங்கையில்
அக்டோபர் 1ஆம் திகதி இத்தினம் கொண்டாப்படுகின்றது. பன்னாட்டு குழந்தைகள் நாளை டிசம்பர் 14 , 1954 இலிருந்து, ஐக்கிய நாடுகள் மற்றும் யுனிசெஃப் அமைப்புகள் ஆண்டு தோறும் நவம்பர் 20 அன்று கொண்டாடுகின்றன. உலகெங்கணும் உள்ள குழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக இந்நாள் ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டது. அத்துடன் குழந்தைகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான பல பொதுநல திட்டங்களை உலகெங்கும் நடாத்துவதற்கும் இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1954இல் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தீர்மானப்படி சர்வதேச சிறுவர் தினத்தை அமுல்படுத்தும் பொறுப்பு யுனிசெஃப் இடம் ஒப்படைக்கப்பட்டது. யுனிசெஃப்,
யுனெஸ்கோ, சேவ் த சைல்ட் (SAVE THE CHILD) போன்ற அமைப்புக்கள் பல செயற்றிட்டங்களை முன்வைத்துச் செயற்படுகின்றன.


சூன் 01 ஏன்?

ஆரம்பகாலங்களில் குறிப்பாக 20ஆம் நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தங்களில் சிறுவர்கள் தினம் என்றடிப்படையில் அல்லாமல் சிறுவர்களை மகிழ்விக்கும் சில நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக 1920ஆம் ஆண்டில் துருக்கியில் சூன் 1ஆம் திகதி சிறுவர்களை மகிழ்விக்க சில போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. 1925ஆம் ஆண்டு சூன் 01ஆம் திகதி ஐக்கிய அமெரிக்காவின்
சான் பிரான்சிஸ்கோவில் சீனா கொன்சல் ஜெனரலாகக் கடமையாற்றியவர் சீன அநாதைச் சிறுவர்களை ஒன்றுதிரட்டி ‘டிராகன் படகு’ விழாவை சிறப்பாக நடத்தினார். இப்படகு விழா அநாதைச் சிறுவர்களை மகிழ்விக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதே தினத்தில்
ஜெனீவாவில் சிறுவர்கள் தொடர்பான மகாநாடொன்று நடத்தப்பட்டுள்ளது. எனவே, இவ்விரு சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டு ஜுன் 01ஆம் திகதி சிறுவர் தினமாக ஆரம்பகாலங்களில் கொண்டாடப்பட்டிருக்கலாம் கருத இடமுண்டு.
கம்யூனிச நாடுகளில் சூன் 01ஆம் திகதி
உலகில் சில நாடுகளும், சில ஐக்கிய
அமெரிக்கா மாநிலங்களும், பல கம்யூனிச நாடுகளும் சூன் 1ஆம் திகதியில் இத்தினத்தைக் கொண்டாடுகின்றன. இச்சிறுவர் தினம் சீனா - கம்யூனிச நாட்டாவரால் ஆரம்பிக்கப்பட்டமையினால் இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்பு உலகளாவிய ரீதியில் கம்யூனிச, முதலாளித்துவ நாடுகளுக்கிடையிலான அணி வேறுபாடு காரணமாக முதலாளித்துவ நாடுகள் இந்நாளை ஏற்றுக் கொள்ளாமல் பிறிதொரு நாளைத் தீர்மானித்திருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது.
எவ்வாறாயினும் சூன் 1 1925ஆம் திகதி
ஜெனீவா மகாநாட்டினையடுத்து சிறுவர்களுக்கெதிரான எல்லாவித துஸ்பிரயோகங்களையும் (பாலியல், சிறுவர்களை வேலைக்கமர்த்துதல், சிறுவர்களைக் கடத்துதல், சிறுவர்களின் கல்வியைத் தடுத்தல்) களைவது தொடர்பாக சிந்திக்கப்படுவது விசேட அம்சமாகும். எனவே, இத்தினத்தில் கொண்டாடப்படுகின்றது என்பதை விட இத்தினம் கொண்டாடப்படும் நோக்கம் ஒன்றாக இருப்பதை அவதானித்தல் வேண்டும்.
சிறுவர் என்பது யார்?
உலக சனத்தொகையில் கணிசமான தொகையினர் சிறுவராவர். இலங்கை சனத்தொகைப் புள்ளிவிபரங்களின்படி 1995இல் 27.7 சதவீதம் சிறுவராவர். சிறுவர் என்பது இலங்கை சிறுவர் சாசனப்படி 18 வயதுக்குக் கீழ்ப்பட்டவராவர். 1939இன் சிறுவர், இளைஞர் கட்டளைச்சட்டம் சிறுவர் 14 வயதுக்குக் கீழ்ப்பட்டவர் என்றும், இளைஞர் 14 - 16 என்றும் வரையறுத்துள்ளது. 1989இன் வயது வந்தவர் திருத்த சட்டத்தின்படி சிறுவர் 18 வயதுக்குக் கீழ்ப்பட்டவராவர். பொதுவாக 14 வயதுவரை என ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
சிறுவர்களை வேலைக்கு அமர்த்தல்
இன்று உலகின் பல பாகங்களிலும் சிறுவர் எத்தகைய பாதிப்புக்கு உட்படுகின்றனர் என்பதை வெகுசன ஊடகங்கள் மூலம் அறியமுடிகிறது. அவர்கள் குறைந்த சம்பளத்தில் கடின வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். வீட்டு எஜமானிகளின் தண்டனைகள், நெருப்பினால் சூடு, உணவின்றிப் பட்டினி போடல், வீட்டைவிட்டுத் துரத்தல் போன்ற கொடூர செயல்களால் சிறுவர்கள் தெருவில் அலைகிறார்கள் பிச்சை எடுக்கிறார்கள். யுனிசெஃப் அறிக்கையொன்றின்படி (1996) உலகில் 14 வயதுக்குக் கீழ் 250 மில்லியன் சிறுவர்’ கடின உழைப்பில் ஈடுபடுகின்றனர். இந்தியாவில் மட்டும் 60 - 115 இலட்சம் சிறுவர் வேலை செய்கின்றனர்.
இலங்கையில்
14 வயதுக்குக் கீழ் சிறுவரை வேலைக்கமர்த்தலுக்கு எதிராக இலங்கையில் பல சட்டங்கள் இருந்தபோதிலும், 10 இலட்சம் சிறுவர், உழைப்பில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 1 இலட்சம் சிறுவர் தெருவில் நிர்க்கதிக்குள்ளாகின்றனர். ஒடுக்கப்படுவதன் காரணமாக இளங் குற்றவாளிகளாகவும் மாறுகிறார்கள்.
சிறுவர்கள் போர் நடவடிக்கை
சுமார் 5 இலட்ம் சிறுவர் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுவரை இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதும் உலகளாவிய ரீதியில் காணப்படும் அம்சமாகும். சிறுவரை ஆயுதப் போரில் ஈடுபடுத்துவது தொடர்பான ஐ.நா.வின் விசேட பிரதிநிதி அலுவலகம் விடுத்துள்ள தகவலின்படி ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான சிறுவர்கள் போர் நடவடிக்கைகளால் கொல்லப்பட்டுள்ளனர். 250, 000 சிறுவர் உலகின் பல பாகங்களிலும் நடைபெறும் யுத்தங்களில் இளம் போர் வீரர்களாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 12 மில்லியன் சிறுவர் வீடிழந்து நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.
சிறுவர் துஸ்பிரயோகம்
யுனிசெஃப் இன் கணிப்பீட்டின்படி 14 வயதுக்குக் கீழ்ப்பட்ட சுமார் 30000 சிறுவர் கடற்கரைப் பிரதேசங்களில் தன்னினச் சேர்க்கைக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 1970களின் பின் சுற்றுலாத்துறை அபிவிருத்தியுடன் இந்நடவடிக்கைகள் பெருகிவருகின்றன. தாய்லாந்தில் 2 இலட்சம் சிறுவர்களும், பிலிப்பைன்சில் 20000 சிறுவர்களும் பாலியல் துஸ்பிரயோகத்துக்குப் பயன்படுகின்றனர். சிறுவர் பாலியல் நடத்தைகள் Aids எனும் கொடிய நோய்ப் பரம்பலுக்கும் காரணமாக அமைகின்றது. விரிவான குடும்ப அமைப்புகள் ஆசிய நாடுகளில்கூட, அதாவது பெற்றாரின் கண்காணிப்பில் பிள்ளைகள் வாழுகின்ற போதிலும்கூட, சிறுவர் துஸ்பிரயோகம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
சிறுவர் உரிமை தொடர்பான கொள்கை
”குழந்தைகள் நட்சத்திரத்தை ஆகாசத்தில் காண்பதில்லை. ஓடும் நதி நீரிலே கண்டு விடுகிறார்கள் ” என்றார். பிரபல ருஷ்யத் திரைப்பட இயக்குநர் உவ்சென்கோ. இவ்விடத்தில் மேற்படி கருத்தினை ஆழமாக சிந்தித்தல் வேண்டும். 1924 ஆம் ஆண்டிலேயே முதன் முதலில் சிறுவர் உரிமை தொடர்பான கொள்கை வெளியிடப்பட்டது. அதன் பின்னர் 1959 ஆம் ஆண்டு பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக ஐக்கிய நாடுகள் சபையால் விரிவாகவும் தெளிவாகவும் சிறுவர்களுக்குரிய உரிமைகள் தொடர்பான கொள்கைப் பிரகடனம் வெளியிடப்பட்டது. 1959 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கொள்கைப் பிரகடனம் 1924 ஆம் ஆண்டின் பிரகடனத்தை விட பல அம்சங்களை உள்ளடக்கியதாக அமைந்தது.
1979 ஆம் ஆண்டு உலக சிறுவர் ஆண்டு
இந்நிலையிலேயே 1979 ஆம் ஆண்டு உலக சிறுவர் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டு பரந்தளவில் சிறுவர் உரிமைகள் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் 1989 ஆம் ஆண்டின் சிறுவர் உரிமைகள் தொடர்பான கொள்கைப் பிரகடனத்தை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டது. 1992 ஆம் ஆண்டு மேற்படி உரிமைகள் தொடர்பான விதிமுறைகளை இலங்கையும் நடைமுறைப்படுத்துவதாக உறுதி செய்து ஏற்றுக் கொண்டுள்ளது.
சிறுவர்களுக்குரிய உரிமைகள்
சர்வதேச ரீதியில் சிறுவர்களுக்குரிய உரிமைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளவை பின்வருமாறு அமைகின்றது.
வாழ்வதற்கும் முன்னேற்றுவதற்குமான உரிமை.
பிறப்பின் போது பெயரொன்றையும் இன அடையாளத்தையும் பெற்றுக் கொள்ளும் உரிமை.
பெற்றோரைத் தெரிந்து கொள்வதற்கும் அவர்களது பாதுகாப்பைப் பெற்றுக் கொள்வதற்குமான உரிமை.
பெற்றோரிடமிருந்து தம்மைத் தனிமைப்படுத்தப்படாதிருப்பதற்கான உரிமை.
கருத்தை வெளிப்படுத்தும் உரிமை.
சிந்திப்பதற்கும், மனச் சாட்சிப்படி நடப்பதற்கும், சமயமொன்றைப் பின்பற்றுவதற்குமான உரிமை.
சமூக உரிமை, தனியுரிமை, சுகாதார வசதிகள் பெறும் உரிமை.
போதிய கல்வியைப் பெறும் உரிமை.
பொருளாதார சுரண்டல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் உரிமை.
பாலியல் வல்லுறவுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் உரிமை.
சித்திரவதை, குரூரமாக நடத்துதல் போன்ற தண்டனைகளிலிருந்து தவிர்த்துக் கொள்ளும் உரிமை.
சாதாரண வழக்கு விசாரணைக்குள்ள உரிமை.
சுதந்திரத்திற்கும், பாதுகாப்பிற்குமான உரிமை.
இவ்வாறு பல்வேறு உரிமைகள் சிறுவர் உரிமை தொடர்பில் பட்டியலிடப்பட்டுள்ளன. நடைமுறையில் உலக நாடுகளிலாகட்டும் அல்லது நமது நாட்டிலாகட்டும் இவற்றில் எத்தனை நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

உலக பெற்றோர் தினம் ஜீன் 1 .உலக பெற்றோர் தினம்  ஜீன் 1 .

உலக பெற்றோர் தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபையால் ஜீன் 1 ஆம் தேதி அன்று பெற்றோரின் அர்ப்பணிப்புக்கான ஒரு அடையாளமாக உலகளாவிய பெற்றோர் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது முதலில் அன்னையர் தினமாக மட்டுமே வடிவமைக்கப்பட்டது. பின்னர் இது தந்தையர் தினம் தனியாகக் கொண்டாடப்படுவது மற்றும் விடுமுறை நாட்களைக் கணக்கில் கொண்டு பெற்றோர் இரண்டையும் சேர்த்து தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

சர்வதேச அளவில்

உலகெங்கிலும் அனைத்து பெற்றோர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு மற்றும் குழந்தைகளுக்காக வாழ்க்கையைத் தியாகம் செய்தல் ஆகியவற்றிற்காக உலகின் அனைத்து பெற்றோர்களையும் பாராட்ட வேண்டும் எனக் கருதி ஜூன் 1 ம் தேதியை உலக பெற்றோர் தினம் என ஐக்கிய நாடுகள் சபையினர் அறிவித்தனர். இதுவும் பன்னாட்டுக் குழந்தைகள் நாளும் ஒரே நாளில் கொண்டாடப்படுகிறது.

அமெரிக்காவில்

அமெரிக்காவில் பெற்றோர் தினம் ஜூலை மாதம் நான்காம் ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. இது குழந்தைகள் வளர்ப்பதில் பெற்றோரின் பங்கை அங்கீகரிப்பதற்காக 1994 ஆம் ஆண்டில் குடியரசுத்தலைவர் பில் கிளிண்டன் அவர்களால் கொண்டுவரப்பட்டது.Parents' Day is celebrated throughout the United States.

தென் கொரியாவில்

தென் கொரியாவில் பெற்றோர் தினம் மே 8 ஆம் தேதி அன்று கடைபிடிக்கப்படுகிறது.


உலக பால் தினம் ஜூன் 1.


உலக பால் தினம் ஜூன் 1.

உலக பால் தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பினால் உலகளாவிய உணவாக பாலின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வதற்காகக் கடைபிடிக்கப்படும் ஒரு தினம் ஆகும்.

வரலாறு

இது 2001 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 ம் தேதியன்று கடைபிடிக்கப்படுகிறது. இது பால் பண்ணைடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்குக் கவனம் செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பை வழங்கும் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது. பால் ஒரு உலகளாவிய உணவு என்பதை உணர்ந்து கொள்ள இதே நாளில் பல நாடுகளில் தனிப்பட்ட மற்றும் தேசிய விழாக்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தரப்படுகிறது. 2016 ஆம் ஆண்டில், உலக பால் தினம் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்பட்டது. தேசியப் பொருளாதார மதிப்பை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் தேசிய பால் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பதில் கவனம் செலுத்துவதன் நோக்கம் ஆகியவற்றை உணர்த்த மாரத்தான் ஓட்டம், பண்ணைப் பார்வையிடல், பள்ளி சார்ந்த நடவடிக்கைகள், கச்சேரிகள், நிகழ்ச்சிகள், மாநாடுகள் , கருத்தரங்குகள் மற்றும் போட்டிகள் மூலம் பாலின் முக்கியத்துவத்தை உணர்த்துதல்.  2017 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி, பண்ணைத் துறை "ஒரு கோப்பையை உயர்த்துங்கள்" (ஆங்கிலத்தில் : “Raise a Glass” ) தலைப்பில் சமூக வலைதளங்களில் உலக பால் தினம் (#WorldMilkDay) எனும் பிரச்சார ஹேஸ்டேக்(hashtag) மூலம் ஒரு சிறப்பு பிரச்சாரத்தை கொண்டாடுகிறது.


பாலின் முக்கியத்துவத்தை உணர்த்த ஐநா சபையால் ’உலக உணவு’ என அங்கீகரிக்கப்பட்டு ஒவ்வொர் ஆண்டும் ஜூன் 1-ஆம் தேதி ‘உலக பால் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.
இயற்கை தரும் இனிய ஊட்டச்சத்து பானம் பால் . தினசரி காலையில் காபியில் தொடங்குவது, மதிய உணவில் தயிர், வெப்பத்தைத் தணிக்க மோர், உணவின் சுவையைக் கூட்ட நெய் எனப் பால் பொருள்கள் இல்லாத நாளை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. இத்தகைய சிறப்பும், சத்தும் நிறைந்த பால், ஐநா சபையால் உலக உணவாக அங்கீகரிக்கப்பட்டது. இதை உலகுக்கு உணர்த்த ஐநா சபை ஒவ்வொர் ஆண்டும் ஜூன் 1-ஆம் தேதி உலக பால் தினமாகக் கொண்டாடப்பட வேண்டுமென அறிவுறுத்தியது. இதன்படி 2001-ஆம் ஆண்டிலிருந்து ‘உலக பால் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.


புதன், 30 மே, 2018

உலக புகையிலை எதிர்ப்பு தினம் மே 31.


உலக புகையிலை எதிர்ப்பு தினம் மே 31.

உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை
1987ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது. உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன் இறப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறது.


'உலக புகையிலை எதிர்ப்பு தினம்'...இந்த ஆண்டிற்கான தீம் 'ப்ளெயின் பேக்கேஜிங்!' #WorldNoTobaccoDay
இ ன்று, "உலக புகையிலை எதிர்ப்பு தினம்". புகையிலை உபயோகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும், உலக சுகாதார அமைப்பு புகையிலை உபயோகத்தைக் குறைக்க பல்வேறு விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறது.
ஒவ்வோர் ஆண்டும், ஏதாவதொரு 'தீம்'-ஐ மையப் படுத்தியே இந்த தினம் குறிக்கப்படுகிறது. அந்த தீமில் கூறப்பட்டுள்ளது கடைபிடிக்கப்பட வேண்டும். 2015 ஆம் ஆண்டின் தீம் "புகையிலைப் பொருட்களின் சட்ட விரோத வர்த்தகத்தை தடை செய்வது" (Stop illicit trade of tobacco products) என்பதாகும். உலகளவில் உபயோகிக்கப்படும் பத்தில் ஒரு சிகரெட், சட்டவிரோதமாகக் கொண்டு வரப்படுவதாகும்.
இளைஞர்களை தன் வலைக்குள் விழ வைக்க, மிகக் குறைந்த விலையில் இப்புகையிலைப் பொருட்கள் விற்கப்படுகின்றன. மேலும், அரசை ஏமாற்றுவது, அதிக விலையில் விற்பது, போலியான பொருட்களை விற்பது எனப் பல பிரச்னைகள் உள்ளன. இவற்றை எல்லாம் முடிவுக்கு கொண்டு வர இந்த முடிவு எடுக்கப்பட்டது.


இந்த ஆண்டிற்கான தீம் "Plain packaging".
இப்படிச் செய்வதற்கான முக்கியமான காரணம் , plain packaging புகையிலை பொருட்களின் கவர்ச்சியைக் குறைக்கிறது; புகையிலை விளம்பரங்களை ஒரு கட்டுக்குள் கொண்டு வருகிறது; மேலும், நமக்கான எச்சரிக்கை உணர்வை அது மேலும் அதிகரிக்கிறது.
இனி புகையிலைப் பொருட்களின் அட்டைகளில், நிலையான நிறம் மற்றும் நடையில் மட்டுமே எழுத்துக்கள் இருக்கும் (Standard styles and fonts). பிராண்டின் பெயர், தயாரிப்பாளரின் பெயர் மற்றும் லோகோ தவிர பிற விளம்பர தகவல்கள் ஏதும் இனி அட்டையில் இடம்பெறாது.
புகையிலையைக் கட்டுப்படுத்த பல நிலைகளில் எடுக்கப்படும் முயற்சிகளில் இதுவும் ஒன்று. இந்த plain packaging முறையை நம் அரசு நடைமுறைப் படுத்துகிறதா என்பதை நம் சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் கவனித்துக்கொள்ள வேண்டும்.
2012 ஆம் ஆண்டு டிசம்பரில், முதன் முதலில் ஆஸ்திரேலியா முற்றிலுமாக அனைத்து புகையிலைப் பொருட்களுக்கும் plain packaging முறையைக் கொண்டு வந்தது. இதேபோல், 2015-ல் அயர்லாந்து, இங்கிலாந்து, பிரிட்டன் மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. பல நாடுகளில் இத்திட்டத்தை அமல்படுத்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகளவில் இத்திட்டத்தைக் கொண்டு வர, இதை மையப்படுத்தி இந்த ஆண்டின் "உலக புகையிலை எதிர்ப்பு தினம்" அமையப் போகிறது.
2016 WNTD (World No Tobacco Day)க்கான இலக்குகள்...
புகையிலைக் கட்டுப்பாட்டின் விரிவான அணுகுமுறையின் ஒரு பகுதியாக Plain packaging முன்னிலைப்படுத்தப்படப் போகிறது.


#சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம்: புகைப்பழக்கத்தில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது தெரியுமா?

உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின் அடிப்படையில், புகைப்பழக்கத்தில் சீனா முதலிடத்தில் உள்ளது.
 உலகம் முழுவதிலும் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அநேக மக்களின் மரணங்களுக்கு புகைப்பழக்கம் ஒரு காரணியாக இருப்பதாக, மருத்துவ ஆராய்ச்சியாளர்களும் கூறிவருகின்றனர். இந்நிலையில், உலக சுகாதார நிறுவனம் (WHO), புகைப்பழக்கம் அதிகம்கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. மே 31ஆம் தேதி, உலக புகையிலை தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு இந்த ஆய்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் சீனா முதலிடத்தில் உள்ளது. சீனாவில் தனி நபர், ஒரு வருடத்தில் 4,124 சிகரெட்டுகளைப் புகைப்பது தெரியவந்துள்ளது. பெலாரஸ் 2-வது இடத்திலும் லெபனான் 3-வது இடத்திலும் உள்ளன. இந்தப் பட்டியலில், இந்தியா 159-வது இடத்தில் உள்ளது. நன்றி விகடன்.


ஆரோக்கியம் காக்க வழி : இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்

உலகம் முழுவதும் ஆண்டு தோறும் மே 31ம் தேதி சர்வதேச புகையிலை இல்லா தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனை உலக சுகாதார நிறுவனம் 1887 ல் அறிவித்தது. உலக அளவில் புகைப் பழக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் புகையிலையை மெல்லுவது, புகையிலை பொருட்கள் கலந்த பான், பாக்கு, மூக்குப்பொடி, பீடி, சிகரெட் போன்றவற்றை நுகர்வதை காண முடிகிறது.புகையிலை பொருட்களால் ஆண்டுதோறும் 60 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இவர்களில் 10 லட்சம் பேர் இந்தியர்கள். புகையிலையினால் ஏற்படும் வாய்புற்றுநோய், லட்சத்தில் 10 பேரை பாதிக்கிறது. 'வரும் 2020 ல் இந்தியாவில் 13 சதவீத மரணங்கள் புகையிலை பழக்கத்தால் அமையும்' என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.உலகில் 47 சதவீத ஆண்களும், 12 சதவீத பெண்களும் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்கள்.
இந்தியாவில் 53 சதவீத ஆண்களும், 3 சதவீத பெண்களும் புகைப்பழக்கம் உள்ளவர்கள்.
மலட்டுத்தன்மை: எய்ட்ஸ், காசநோய், வாகன விபத்துக்கள் போன்றவற்றால் ஏற்படும் மரணத்தை விட புகையிலை பழக்கத்தால் ஏற்படும் மரணம் அதிகம். புகை பிடிப்பதன் மூலம் வாய், நுரையீரல், சிறுநீரகம், மார்பகம் பாதிக்கப்பட்டு புற்றுநோய், ஆஸ்துமா, காசநோய், இதயநோய், உயர் ரத்த அழுத்தம், செவிட்டுத்தன்மை, மலட்டுத்தன்மை போன்ற பல நோய்கள் வருகின்றன.
* வாய், தொண்டை, நுரையீரல், வயிறு, சிறுநீரகம், சிறுநீர்ப்பையில் புற்றுநோய் ஏற்பட புகையிலை காரணமாகிறது.
* புகையிலையால் ஏற்படுகிற வாய் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இந்தியாவில்தான் அதிகம்.
* இந்தியாவில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் புற்று நோய்களுக்கு, முறையே ௫௬ சதவீதம் மற்றும் ௪௫ சதவீதம் புகையிலை காரணமாக இருக்கிறது.


* 90 சதவீதத்திற்கும் மேலாக நுரையீரல் புற்றுநோய் மற்றும் பிற நுரையீரல் நோய்களை, புகைப்பழக்கம் ஏற்படுத்துகிறது.
* இதயம் மற்றும் ரத்தக்குழாய் நோய்களான மாரடைப்பு, மார்புவலி, பக்கவாதம், கால்களில் ஏற்படும் காங்கரின் எனப்படும் புற ரத்தக்குழாய் நோய்கள் போன்றவை ஏற்பட புகையிலை காரணமாகிறது.
* இந்தியாவில் 82 சதவீத, நுரையீரல் சுவாசக்குழாய் அடைப்பு நோய் புகைப்பிடித்தல் மூலம் வருகிறது.
* புகையிலை மறைமுகமாக நுரையீரல் காசநோயை (டி.பி.,) ஏற்படுத்துகிறது. புகைப்பவர்களுக்கு டி.பி., ஏற்படும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம்.
* திடீரென ரத்த அழுத்தத்தினை அதிகரிக்கிறது. இதயத்திற்கு செல்லும் ரத்தத்தின் அளவினை குறைக்கிறது.
* கால்களுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை குறைக்கிறது.
* உடல் முழுவதும் உள்ள தமனி எனப்படும் ரத்தத்தை ஏந்திச் செல்லும் ரத்த குழாய் சுவர்களை சேதப்படுத்துகிறது.
* சர்க்கரை நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
* ரத்தத்தில் உள்ள நன்மை தரக்கூடிய கொழுப்பின் அளவை குறைக்கிறது.
* புகையிலை நுகர்வதால் ஒவ்வொரு 8 வினாடிகளிலும் ஒரு மரணம் நிகழ்கிறது.
* புகையிலையை தவிர்ப்பதால் ஒருவரின் ஆயுள் 20 ஆண்டுகள் கூடுகிறது.
* பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சுரப்பதை குறைக்கிறது. மாதவிடாய் விரைவாக நின்று விடுகிறது.
* புகைக்கும் பெண்கள், கர்ப்பத்தடை மாத்திரைகளை பயன்படுத்தும் போது பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
* குறைந்த எடையுடன், வளர்ச்சியில் கோளாறு உள்ள, குழந்தை பிறக்கும் வாய்ப்பு உள்ளது. பிறந்த குழந்தை திடீரென இறக்க வாய்ப்பு உள்ளது.
2-வது இடம்
புகைப்பழக்கம், புற்றுநோய், இதய நோய் ஆகியவற்றை 30 சதவீதம் அதிகரித்திருக்கிறது. தினம் ஒரு சிகரெட் பிடித்தால் ஒருவரின் ஆயுளில் தினமும் 5 நிமிடங்கள் குறைகிறது. புகைப்பிடிப்பதால் அல்லது பிறர் பிடிக்கும் சிகரெட், பீடி புகையை நுகர்வதால் இருமல், சளி, உருவாகி ஆஸ்துமா வருகிறது. ஆஸ்துமா இருப்பவர்கள் புகைத்தால் அது மேலும் தீவிரமாகிறது. இறுதியில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்கே உலை வைக்கிறது. புகைப் பழக்கம் கொண்டவர்களின் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. 'புகையிலை இல்லா தினம்' அனுசரிக்கப்படுவதன் முக்கிய நோக்கம், புகையிலையினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் இறப்பினை பெருமளவு குறைக்க வேண்டும் என்பதுதான்.


உடனடி நிவாரணம் புகையிலையில் இருக்கும் நிக்கோட்டின் என்ற ரசாயனம், மூளைக்கு சென்று 'நன்றாக இருக்கிறது' என்ற உணர்வை ஏற்படுத்தி, அதை பயன்படுத்துபவர்களை அந்த பழக்கத்திற்கு அடிமையாக்கி விடுகிறது. புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால், எத்தனை வருடங்களில் பாதிப்பு ஏற்படும் என்று சொல்ல முடியாது. அவரவர் உடலமைப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்து ஓரிரு வருடங்களில் அல்லது 20 முதல் 25 ஆண்டுகள் கழித்து கூட பாதிப்புகள் ஏற்படலாம். ஆனால், புகைப்பழக்கத்தை நிறுத்தியதும், உடனடியாக அதன் பாதிப்புகள் விலகத் தொடங்குகிறது. அதனால் புகையிலை பழக்கத்தை தவிர்ப்பது, நல்லது. அதனை விட்டொழிக்க, முதலில் மனதை கட்டுப்படுத்த பழகிக்கொள்ள வேண்டும்.சிகரெட்டை நிறுத்த
1. உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி 'நிக்கோட்டின் ரீப்பிளேஸ்மென்ட் தெரபி' சிகிச்சை பெறலாம்.
2 சிகரெட் பிடிப்பவர்களோடு சேராமல் எப்போதும் பிசியாக இருப்பதுபோல் வேலை வைத்துக் கொள்ள வேண்டும்.
3 வேறு வேலை இல்லாத நேரத்தில் தான் பெரும்பாலும் சிகரெட் புகைக்க தோன்றும். இந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்யுங்கள்.
3 சிகரெட் பிடிக்காத நண்பர்களுடன் வெளியில் செல்லுங்கள். இது, உங்களுக்கு சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை நீக்கும்.
5 . பாக்கு போடும் எண்ணம் தோன்றும் போதெல்லாம், அதற்கு பதிலாக உடலுக்கு நலம் தரும் உலர் திராட்சை, பேரிச்சம்பழம், கிராம்பு போன்ற பொருட்களில் ஏதாவது ஒன்றை வாயில் போட்டு சுவைக்கலாம்.
சுய நன்மைகள்
புகையிலையை தவிர்ப்பதால் உடலில் ஏற்படும் நன்மைகள்
* உங்களுக்கு புற்றுநோய் மற்றும் இதய நோய் ஏற்படும் ஆபத்து குறைகிறது.
* உங்கள் இதயத்தில் ஏற்படும் அழுத்தம் குறைகிறது.
* நீங்கள் நேசிக்கும் நபர் புகையிலையினால் பாதிக்கப்பட மாட்டார்.
* புகைப்பழக்கத்தினால் ஏற்படும் சளி மற்றும் இருமல் மறையும்.
* உங்கள் பற்கள் வெண்மையாகவும், சுத்தமாகவும் மாறும்.சமுதாய நன்மைகள்
* நீங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் ஒரு நபராக இருப்பின் சிகரெட் உங்களை கட்டுப்படுத்தாது.
* உங்கள் சுய தோற்றம், சுயநம்பிக்கை வளரும்.
* இப்போதும், எதிர்காலத்திலும் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பெற்றோராக இருப்பீர்கள்.
* புகையிலை தவிர்ப்பதால் மிஞ்சும் பணம் வீட்டிற்கும், நாட்டிற்கும் பயனுள்ளதாக இருக்கும்.
உலக மக்களின் ஆரோக்கியத்தை பாதிப்புள்ளாக்கும் புகையிலை பயன்பாட்டை நாம் எளிதாக தவிர்க்க முடியும். அதற்கு தேவை மன திடமும்,
தன்னம்பிக்கையும் தான். இதன் மூலம் நாம் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும். எனவே, புகையிலை பயன்பாட்டை
தவிர்ப்போமாக!
-டாக்டர் பழனியப்பன்,நுரையீரல் சிகிச்சை நிபுணர், நன்றி தினமலர்.


வேண்டாம் புகையிலை, வேண்டாம் புற்றுநோய்‘: இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்

 இன்று உலக புகையிலை எதிர்ப்புத்தினம் ஆகும்.
உலகம் முழுவதும் வருடந்தோறும் மே, 31 ஆம் தேதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் ஆக(World No Tobacco Day) அனுசரிக்கப்படுகிறது.
இந்நன்நாளில், சில சமூக அமைப்புகள் புகையிலை பயன்படுத்துவதால், புகை பிடிப்பதால் ஏற்படும் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் பற்றி பொது மக்களிடம் எடுத்துச் சொல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
அவர்கள் எலும்புக்கூடு முகமூடி அணிந்துக் கொண்டு, புகை, மற்றும் மது குடிப்பதால் ஏற்படும் அபாயங்களை விளக்குகிறார்கள்.

உலக சுகாதார நிறுவனம்....
கடந்த 1987 இ ல் உலக சுகாதார நிறுவனம் ( WHO) மே - 31 ஆம் நாளை உலக புகை எதிர்ப்பு தினமாக அறிவித்தது.
புள்ளி விவரம்...
ஆண்டுதோறும் சுமார் 55 லட்சம் பேர் புகைப் பழக்கத்தால் இறந்து வருகிறார்கள். இவர்களுள் 10 லட்சம் பேர் இந்தியர்கள். 15 வயதிற்கு மேற்பட்ட ஆண்களில் 57% பேரும், பெண்களில் 10.8% பேரும் புகையிலையை ஏதோ ஒரு வடிவில் உபயோகிக்கின்றனர். புகையிலையினால் ஏற்படும் வாய்புற்று நோய் லட்சத்திற்கு இந்தியாவில் 10 பேரை பாதிக்கிறது. 2020 - ம் ஆண்டில் இந்தியாவில் 13% மரணங்களுக்கு புகையிலை பழக்கம் காரணமாக அமையும் என புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
புகை அடிமைகள்...
உலகில் ஆண்கள் 47%, பெண்கள் 12% புகைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்கள். வளர்ந்த நாடுகளில் 42% ஆண்களும் 24% பெண்களும், வளரும் நாடுகளில் 48% ஆண்களும் 7% பெண்களும் புகைபிடிக்கிறனர். இந்தியாவில் 53% ஆண்களும் 3% பெண்களும் (குறிப்பாக வயது வந்த இளம் பெண்கள்) புகைப்பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதாகத் தகவலகள் தெரிவிக்கின்றன.
அதிக மரணங்கள்...
எய்ட்ஸ் நோய் (எச்.ஐ.வி.), காசநோய், வாகன விபத்துகள், தற்கொலைகள், கொலைகள் போன்றவற்றால் ஏற்படும் மரணத்தைவிட புகையிலையினால் ஏற்படுவது அதிகமாக இருக்கிறது.
அபாயகரமான பாதிப்பு...
புகைபிடிப்பது மூலம் வாய், நூரையீரல், சிறுநீரகம், மார்பகம் ஆகியவற்றில் புற்றுநோய், ஆஸ்துமா, காசநோய், இதயநோய், உயர் ரத்த அழுத்தம், செவிட்டுத் தன்மை, மலட்டுதன்மை என பல நோய்கள் வருகின்றன.


இளமையில் புகை....
தொடர் புகைப் பழக்கத்தால் நுரையீரல் புற்றுநோய் விரைவிலேயே வருகிறது. புற்று நோய், இதய நோய் ஆகியவற்றை புகைப் பழக்கம் 30 சதவீதம் அதிகரிக்கிறது என்று கண்டறியப்பட்டிருக்கிறது. புகைப் பழக்கத்திற்கு உலகம் முழுவதும் 115 (2011 நிலவரப்படி) கோடிக்கும் மேலானவர்கள் அடிமையாகியுள்ளனர். உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் 15 வயதிற்கு மேற்பட்டவர்களான இவர்கள்தான் அதிகமாக புகை பிடிக்கிறார்களாம்.
குறையும் ஆயுள்...
தினம் ஒரு சிகரெட் பிடித்தால் ஒருவரின் வாழ்க்கையில் தினமும் 5 நிமிடங்கள் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.. புகை பிடிப்பதால் அல்லது பிறர் பிடிக்கும் சிகரெட், பீடி ஆகியவற்றின் புகையை நுகர்வதால் இருமல், சளி உருவாகி ஆஸ்துமா பிரச்சனை வருகிறது. ஆஸ்துமா இருப்பவர்கள் புகை பிடித்தால், அது ஆஸ்துமாவை மேலும் அதிகரித்து, மூச்சுத் திணறலை உருவாக்கி உயிருக்கே உலை வைக்கிறது. கர்ப்பிணி பெண்கள் புகைபிடித்தால் அது கர்ப்பத்தில் இருக்கும் சிசுவை பாதிக்கும்.
ஆர்வக்கோளாறுகள்...
ஆர்வக் கோளாறுகள் சிலர், பெற்றோர், உறவினர், நண்பர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் போன்றவர்களை பார்த்துப் புகைபிடிக்கிறார்களாம். ஒருவர் புகை பழக்கத்தை நிறுத்தினால் இதய நோய், நுரையீரல் புற்றுநோய், நுரையீரல் நோய்கள், வலிப்பு நோய் போன்றவை படிப்படியாக குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.15 ஆண்டுகள் ஆகும்...
புகை பழக்கத்தைக் கை விட்டு 10 - 15 ஆண்டுகள் கழித்துதான் மனிதன் முழு ஆரோக்கியம் பெறுகிறான். அது வரைக்கும் அதன் பாதிப்பு உடலுக்குள்ளே இருந்துக் கொண்டேதான் இருக்கும்
வெளிநாட்டில் அரிது...
தாய்லாந்து, தைவான், மலேசியா போன்ற நாடுகளில் வயது வந்தோருக்கு மட்டுமே கண்டிப்பாக பீடி, சிகரெட் போன்றவை விற்பனை செய்ய வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. அது தீவிரமாகவும் அமல்படுத்தப்படுகிறது. இதனால், அங்கு சிறுவர்கள் புகைப்பது என்பது அரிதாகவே காணப்படுகிறது.
கள்ள மார்க்கெட்...
இந்தியாவில் சட்டம் என்ன தான் போட்டாலும், பெரும்பாலான வியாபாரிகள், வருமானத்தை மட்டுமே பார்க்கிறார்கள். எந்த ஒரு வருமானமும் நியாமானதாக இருக்க வேண்டும் என்று வியாபாரிகள் செய்தால் இது போல் செய்ய மாட்டார்கள்.
இதுலயும் ரெண்டாவது இடம்...
புகை பிடிப்பவர்களை அதிக அளவில் கொண்டுள்ள நாடுகளில் உலகில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. உலக அளவில் ஆரோக்கிய பராமரிப்புக்காகக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 9 சதவிகிதம் செலவிடப்படுகிறது. அதேநேரத்தில், இந்தியாவில் இது வெறும் 3% ஆக இருக்கிறது.
மனது வைத்தால் சாத்தியமே...
புகை பிடிப்பதை நிறுத்துவது என்பது ரொம்ப கஷ்டமான காரியமல்ல. மனதிருந்தால் மார்க்கமுண்டு. புகை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் போது நூலகம், கோவில், தியானம் என்று மனதை திசை மாற்ற பழகிக் கொண்டாலே போதும்.


திங்கள், 28 மே, 2018

உலக தம்பதியர் தினம் மே 29.

உலக தம்பதியர் தினம் மே 29.

உலகமே உறவுகளாலும், அன்பாலும் நிறைந்திருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் உலக தம்பதியர் தினம் மே 29ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

உலக அளவில், பல சம்பவங்களின் அடிப்படையில் மனித உறவுகளை மேம்படுத்த இத்தினம் கொண்டாடப்படுகிறது...


உலக தம்பதியர் தினம் கொண்டாடலாமே!

உலக அளவில், பல சம்பவங்களின் அடிப்படையில், பல தினங்கள் கொண்டாடப்படுகின்றன. ஆனால், அப்படியான தினங்கள் ஒவ்வொன்றும், ஏதாவது ஒரு வகையில் மனித உறவுகளை மையப்படுத்தி தான் இருக்கும். இப்படியான தினங்களை அறிவித்து, அதை கொண்டாடுங்கள் என அறிவிப்பது, உலகமே உறவுகளாலும், நட்பு, காதலாலும் நிறைந்திருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் தான்.
ஆனாலும், மேலைநாடுகளில் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டாடப்படும் பல தினங்களை, நம் நாட்டில் நாம் கண்டு கொள்வதில்லை.
மிக விமரிசையாக அந்த தினங்களை அனுபவிக்கவில்லை என்றாலும் இப்படியான தினங்கள் உண்டு. இதுவரை இந்த தினங்களை கொண்டாடியிருக்கிறீரா; இனியாவது கொண்டாடுவீரா என, நம் நாயகியரை அவர்களின் நாயகருடன் கேட்ட போது...
எனக்கும், ரவிக்கும், 1988ல், கோவையில் திருமணம் நடந்தது. பொதுவாக, மார்ச், 8ம் தேதி எப்படி மகளிர் தினம் கொண்டாடப்படுகிறதோ அதே போன்று, மே, 29ல் தம்பதியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. என் கணவர் படப்பிடிப்புகளுக்காக மேலைநாடுகளுக்கு போய் வருவதால், இது மாதிரியான தினங்களை ஞாபகமாய் கொண்டாட வைத்து விடுவார். இதுவும் நல்லதற்கு தானே. கடந்த கால நினைவுகளை, மலரும் நினைவுகளாய் அசை போட இது உதவும். இடையில் இருவருக்கும் மட்டுமல்ல; இரு குடும்பங்களுக்கும் இடையில் இருக்கும் மன கசப்புகள் கூட மறையலாம். உலக குடும்ப தினம் எப்படி, அனைத்து உறவுகளாலும் கொண்டாடப்படுகிறதோ, அதே அளவு முக்கியத்துவத்துடன், இந்த உலக தம்பதியர் தினம் கொண்டாடப்படுவதும் நல்லது.
திருமதி விஷ்ணுபிரியா நிழல்கள் ரவி
எங்களுக்கு, சென்னை, வடபழனி முருகன் கோவிலில், 1972ல் திருமணம் நடந்தது. என்னவர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி; மேலும், ஒரு பத்திரிகையாளர். நாங்கள் எங்கள் பிறந்த நாள், கல்யாண நாள், பிள்ளைகளின் பிறந்த நாள், பேரன், பேத்திகளின் பிறந்த நாள் என, ஏதாவது விஷேசமாக கொண்டாடிக் கொண்டே தான் இருப்போம். பண்டிகைகளும், விரதம், சடங்குகள், இப்படியான தினங்கள் கொண்டாடுவதே, உறவுகளுடன் நேரம் செலவழிக்கவும், உறவை பலபடுத்திக் கொள்ளவும் தானே! மகளிர் தினம், அம்மா, அப்பா, குழந்தைகள், குடும்பம் என, சிறப்பு தினங்கள் கொண்டாடுவது போல, இந்த தம்பதியர் தினத்தையும் கொண்டாடுவதில் தவறொன்றுமில்லை. இது தேவையான நல்ல விஷயம் என நினைத்து கொண்டாடுங்கள்.
திருமதி கஸ்தூரி லோகநாதன்
எங்கள் திருமணம், 1987ல் திருவேற்காட்டில் நடந்தது. குடும்பம் என இருந்தால், பல உறவுகள் வேண்டும். அப்படி உறவுகள் இருந்தால், குடும்ப பிரச்னைகளுக்கும் குறைவிருக்காது. அத்தனை மனக் கசப்பையும் நீக்கி சரிபடுத்தி, குடும்ப உறவுகளிடம் மட்டுமல்லாமல், தம்பதியரிடமும் சுமுகமான உறவை ஏற்படுத்த, இப்படி ஏதாவது தினத்தைக் கடைபிடித்து கொண்டாடுவது. என் கணவர் சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் என்பதால், எப்போதுமே வேலையென்றே இருப்பார். அதனால் கிடைக்கும் நேரத்தில், பெரிதாக மெனெக்கெடாமல் பிறந்த நாள், திருமண நாள், பண்டிகை தினங்களை கொண்டாடுவது போல, இதையும் கொண்டாடினால் கூடுதல் மகிழ்ச்சி தானே! அதனால் இனிமேலாவது, மே, 29 ஞாபகமாய் தம்பதியர் தினத்தையும் கொண்டாடிடுவோமே!
திருமதி ப்ரியா சிவன் சீனிவாசன்
எங்கள் திருமணம், 1979ல் நடந்தது. இப்படி ஏதாவது தினத்தை முன்னிறுத்தி வாழ்த்துகளையும், பரிசுகளையும் ஒவ்வொருவருக்குள் பரிமாறிக் கொள்வதற்காகவாவது, தம்பதியர் தினத்தை கொண்டாடலாமே. அன்று போஸ்டர் அடித்து, மேடை போட்டு, உறவுகளுக்கு சொல்லி, விருந்து வைத்தா செய்யப் போகிறோம். தம்பதியருக்குள் வாழ்த்துகளை பரிமாறி, பழைய மலரும் நினைவுகளை அசை போட்டு, பேரப் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டியது தான். இதனால், மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் செலவோ, வேலையோ நாம் வைக்கப் போவதில்லை. அதனால் கண்டிப்பாய் இப்படியான தினங்களை தேடி கண்டுபிடித்து கொண்டாடினால், நம் வரும் காலங்கள் வசந்தமாய் இருக்கும்.
திருமதி பத்மா நடராஜன்
இந்த ஆண்டு, 2016ல் தான் எங்கள் திருமணம் திருச்செந்தூரில் நடந்தது. நீங்கள் சொல்லி தான் இப்படி ஒரு நாள் இருப்பதே, எங்களுக்கு தெரிய வந்துள்ளது. அதனால், கண்டிப்பாய் எங்களின் முதல் வருட பிறந்த நாள், திருமண நாள், பிறக்க போகும் குழந்தைகளின் பிறந்த நாள் வரிசையில், இந்த தம்பதியர் தினத்தையும் கொண்டாடப் போகிறோம். உறவுகளுக்குள் ஏற்படலாம் என்கிற மாதிரியான சின்ன சின்ன மனக் கசப்பைக் கண்டுபிடித்து சரி செய்து கொள்ள, இப்படியான தினங்களை கொண்டாடுவதில் தயக்கம் ஒன்றுமில்லை. மகிழ்ச்சியான விஷயம் தான். எங்களின், 50வது திருமண நாளை எப்படி கொண்டாட திட்டமிடுகிறோமோ அதே அளவு, எங்களின் தம்பதியர் தினத்தையும் கொண்டாட, இதோ இன்றே தீர்மானித்துவிட்டோம்.
திருமதி கலையரசி சரவணன்
நாட்டில் ஆயிரம் அரசியல் மாற்றங்கள், ஆட்சி மாற்றங்கள், தட்ப வெப்பநிலை மாற்றங்கள் என, எது நடந்தாலும், அதையெல்லாம் எதிர் கொள்ளவும், சமாளிக்கவும் நாம் நம்மை முதலில் திடமும், தெளிவும் குடும்ப அளவில் ஏற்படுத்திக் கொள்ள இது மாதிரியான தினங்கள் மிக அவசியமாகவே இருக்கின்றன. நன்றி  தினமலர்.

உலக அமைதி காப்போர் தினம் மே 29.


உலக அமைதி காப்போர் தினம் மே 29.

ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைதி காப்போர் தினம் International Day of United Nations Peacekeepers எனப்படுவது ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் இரு சாராரையும் கௌரவப்படுத்துவதற்கும், சமாதானத்திற்கான இந்நடவடிக்கைகளின்போது உயிர் நீத்தவர்களை ஞாபகமூட்டுவதற்காகவும் 2001ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை பிரகடனப்படுத்திய தினமாகும். இத்தினம் மே 29ஆம் திகதி அனுட்டிக்கப்படுகிறது.
பின்னணி
முதலாம் உலக மகா யுத்தம் முடிவுற்ற பின்பு உருவாக்கம் பெற்ற சர்வதேச சங்கத்தால் உலக சமாதானத்தைப் பேண முடியாதுபோனதன் காரணமாகவே இரண்டாம் உலக மகா யுத்தம் ஏற்பட்டது. இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவடைந்த பின்பு யுத்தத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புக்களும், சொத்திழப்புக்களும் கணிப்பிட முடியாதவை. இந்த அடிப்படையில் மற்றுமொரு உலக மகா யுத்தம் ஏற்படாமல் உலக சமாதானத்தை நிலைநிறுத்துவதை அடிப்படையாகக் கொண்டே ஐக்கிய நாடுகள் அவை உருவாக்கம் பெற்றது.
ஐக்கிய நாடுகள் அவை உருவாக்கம் பெற்றதையடுத்து யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் என்பவற்றின்போது சமாதானத்தை ஏற்படுத்தவும், நிவாரணங்களை ஒருங்கிணைக்கவும், அமைதி காப்போர்களையும், கண்காணிப்பாளர்களையும் உரிய இடங்களில் பணிக்கமர்த்தும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. குறிப்பாக யுத்த நிறுத்தங்களின்போது அல்லது தற்காலிக யுத்த நிறுத்தங்களின்போது அமைதி காக்கும் படைகளின் பணியினை ஐக்கிய நாடுகள் அவை உருவாக்கக் காலத்திலிருந்தே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த அடிப்படையில் மே 29ஆம் திகதி சர்வதேச அமைதி காப்போர் தினமாகப் பெயரிடப்பட்டது.
உருவாக்கம்
மே 29 1948 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை முதன் முதலாக மத்திய கிழக்கில் அமைதி காப்போர் நடவடிக்கையை (தற்காலிக போர் நிறுத்த உடன்பாட்டினைக் கண்காணிக்கும் சபையை) உருவாக்கியது.
அமைதிப்படையின் உயிரிழப்புகள்
1948ஆம் ஆண்டு அரேபிய இஸ்ரேலிய யுத்தத்தின் போது தற்காலிக போர் நிறுத்த உடன்பாட்டின் ஏற்பாடுகளை மீறிய, இஸ்ரேலிய படைகள் பற்றி விசாரணையை மேற்கொண்டிருந்தபோது பிரான்சைச் சேர்ந்த யுத்தநிறுத்த கண்காணிப்பாளர் “ரென்னே லப்பாரியர்” (Rene Labarriere) என்பவர் முதன் முதலாக விபத்தில் உயிரிழந்தார். ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பு நடவடிக்கையின் போது முதலாவது உயிரிழந்தவராக இவரே கருதப்படுகின்றார். சூலை 13 1948ஆம் திகதி ஜெரூஸலத்தில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த “ஒலே எச் பேக்கே” சேர்ந்த (Ole H. Bakke) எனும் நோர்வே ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியாளர் கொல்லப்பட்டார். அதேபோல ஆகத்து 28 ,
1948 ஆம் திகதி “காசாப் பகுதியில்’ சேவையாற்றிய லெப்டினன்ட் கர்ணல் ஜோசப் குவேறு (Joseph Queru) மற்றும் கப்டன் பியரே ஜின்னல் (Pierre Jeannel) என்ற பிரான்சிய அமைதி காக்கும் படை வீரர் உயிரிழந்ததோடு மற்றும் ஆறு படை வீரர்கள் காயமுற்றனர். மேலும், செப்டம்பர் 17
1948 ஆம் திகதி “கவுண்ட் போர்க் பெர்னடொட்” எனும் அமைதி காக்கும் வீரர், யுத்தத் தீவிரவாத இயக்கமான 'ஸ்டர்ன் கேங்' (STERN GANG) எனும் கும்பலினால் கொலையுண்டார்.
இவ்வாறாக அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கலாயிற்று. எனவே அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொல்லப்பட்டவர்கள் இத்தினத்தில் விசேடமாக நினைவுகூரப்படுகின்றனர்.


மே 29.. இந்த தினம்- ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைதி காப்போர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

முதலாம் உலக மகா யுத்தம் முடிவுற்ற பின்பு உருவாக்கம் பெற்ற சர்வதேச சங்கத்தால் உலக சமாதானத்தைப் பேண முடியாதுபோனதன் காரணமாகவே இரண்டாம் உலக மகா யுத்தம் ஏற்பட்டது. இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவடைந்த பின்பு யுத்தத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புக்களும், சொத்திழப்புக்களும் கணிப்பிட முடியாதவை. இந்த அடிப்படையில் மற்றுமொரு உலக மகா யுத்தம் ஏற்படாமல் உலக சமாதானத்தை நிலைநிறுத்துவதை அடிப்படையாகக் கொண்டே ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கம் பெற்றது.
ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கம் பெற்றதையடுத்து யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் என்பவற்றின்போது சமாதானத்தை ஏற்படுத்தவும், நிவாரணங்களை ஒருங்கிணைக்கவும், அமைதி காப்போர்களையும், கண்காணிப்பாளர்களையும் உரிய இடங்களில் பணிக்கமர்த்தும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. குறிப்பாக யுத்த நிறுத்தங்களின்போது அல்லது தற்காலிக யுத்த நிறுத்தங்களின்போது அமைதி காக்கும் படைகளின் பணியினை ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கக் காலத்திலிருந்தே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த அடிப்படையில் மே 29ம் தேதி சர்வதேச அமைதி காப்போர் தினமாகப் பெயரிடப்பட்டது. கடந்த ஆண்டு மே 29ம் தேதி 60வது அமைதி காப்போர் தினம் கொண்டாடப்பட்டது. அதேநேரம், 2001ம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் இரு சாராரையும் கௌரவப்படுத்துவதற்கும், சமாதானத்திற்கான இந்நடவடிக்கைகளின்போது உயிர் நீத்தவர்களை ஞாபகமூட்டுவதற்காகவும் மே 29ம் தேதியை ஐக்கிய நாடுகளின் சர்வதேச அமைதி காப்போர் தினமாக பிரகடனப்படுத்தியது.

61 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தினத்திலே ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை முதன் முதலாக மத்திய கிழக்கில் அமைதி காப்போர் நடவடிக்கையை (தற்காலிக போர் நிறுத்த உடன்பாட்டினைக் கண்காணிக்கும் சபையை) உருவாக்கியது. (UNTSO) 1948ம் ஆண்டு அரேபிய இஸ்ரேலிய யுத்தத்தின் போது தற்காலிக போர் நிறுத்த உடன்பாட்டின் ஏற்பாடுகளை மீறிய, இஸ்ரேலிய படைகள் பற்றி விசாரணையை மேற்கொண்டிருந்தபோது பிரான்சைச் சேர்ந்த யுத்தநிறுத்த கண்காணிப்பாளர் "ரென்னே லப்பாரியர்" (Rene Labarriere) என்பவர் முதன் முதலாக விபத்தில் உயிரிழந்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பு நடவடிக்கையின் போது முதலாவது உயிரிழந்தவராக இவரே கருதப்படுகிறார். 1948ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி ஜெரூஸலத்தில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த "ஒலே எச் பேக்கே" சேர்ந்த (Ole H. Bakke) எனும் நோர்வே ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியாளர் கொல்லப்பட்டார்.
அதேபோல 1948ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி காசா பகுதியில் சேவையாற்றிய லெப்டினன்ட் கர்ணல் ஜோசப் குவேறு (Joseph Queru) மற்றும் கப்டன் பியரே ஜின்னல் (Pierre Jeannel) என்ற பிரான்சிய அமைதி காக்கும் படை வீரர் உயிரிழந்ததோடு மற்றும் ஆறு படை வீரர்கள் காயமுற்றனர். மேலும், 1948ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி கவுண்ட் போர்க் பெர்னடொட் எனும் அமைதி காக்கும் வீரர், யுத்தத் தீவிரவாத இயக்கமான “STERN GANG" (ஸ்டர்ன் கேங்) எனும் கும்பலினால் கொலையுண்டார்.
இதேபோன்று 1958ம் ஆண்டு அரேபிய இஸ்ரேலியப் போர் 1973 அரேபிய இஸ்ரேலிய போர், 2008ம் ஆண்டு இஸ்ரேலிய லெபனன் போர் போன்றவற்றின் கடமையாற்றிய ஐக்கிய நாடுகளின் அமைதி காப்பாளர்கள் பலரும் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையைச் சேர்ந்த 300க்கும் அதிகமானோரும் கொல்லப்பட்டுள்ளனர். இக்கொலைகளில் அதிகமானோர் இஸ்ரேலியப் படைகளாலே கொல்லப்பட்டனர் என்பதுவும், ஐக்கிய நாடுகளின் தற்காலிப் போர் நிறுத்த உடன்பாட்டு ஏற்பாடுகளை மீறி செயற்பட்டவர்களும் இஸ்ரேலியர்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்க விஷயமாகும். இந்த அடிப்படையில் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொல்லப்பட்டவர்கள் இத்தினத்தில் விஷேசமாக நினைவுகூறப்படுகின்றனர்.
உலக சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக வேண்டி ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கம் பெற்றாலும்கூட, இதன் நடவடிக்கைகள் அமெரிக்க சார்பாக அமைந்துள்ளமையினால் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் நடவடிக்கைகள் கேள்விக் குறியாகவே மாறி வருகின்றன.
யுத்தத்தை உருவாக்கியோரே சமாதானத்தையும் தோற்றுவிக்க வேண்டும் என்று ஐ.நா. சமாதான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் ஜேன்மேரி கைகென்னோ கூறிய விடயம் இவ்விடத்தில் கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும். இது விடயமாக அவர் தொடர்ந்தும் தெரிவித்த கருத்துகள் மேலும் எமது சிந்தனையைத் தூண்டக்கூடியவையே.
அதாவது, சம்பந்தப்பட்ட தரப்பினரின் இதயசுத்தியுடனான அரசியல் விருப்பமே முரண்பாட்டுக்கு தீர்வைத் தேடித்தரும். ஐ.நா. சமாதானப் படையினர் அதனைத் தேடித் தருவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.. யுத்தத்தை ஏற்படுத்தியவர்களாலேயே சமாதானத்தை உருவாக்க முடியும். உங்களால் அவர்களுக்கு உதவ முடியும். யுத்தத்தில் களைப்படைந்த தருணத்தில் உங்களால் அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். அதாவது, நல்ல நோக்கத்துக்கான நம்பிக்கையைத் தோற்றுவிக்க முடியும். இதுவே ஐ.நா. சமாதானப் படை மேற்கொள்ள வேண்டிய பணியாகும். ஐ.நாவால் பலவந்தமாக சமாதானத்தை உருவாக்க முடியாது. இங்கு ஜேன்மேரியின் கருத்து யதார்த்தபூர்வமானவை.
அமெரிக்கா தலைமையிலான கூட்டணி, ஈராக் மீது நடத்திய போர் சட்ட விரோதமானது என கனடாவைச் சேர்ந்த 31 சர்வதேச சட்டப் பேராசிரியர்கள் தெரிவித்திருந்தனர். 15 சட்டக் கல்லூரிகளைச் சார்ந்த இந்த பேராசிரியர்கள் அமெரிக்க தாக்குதல், ''சர்வதேச சட்டத்தை அடிப்படையிலேயே மீறுகின்ற செயலாக அமைந்திருக்கிறது. இரண்டாம் உலகப்போர் முடிவிற்கு, பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சர்வதேச சட்ட நடைமுறைகளின் கட்டுக்கோப்பை கடுமையாக பாதிக்கின்ற வகையில் இந்த நடவடிக்கை அமைந்திருக்கிறது.
ஐ.நா. சாசனத்தின் 41 மற்றும் 42வது பிரிவுகள் போர் கடைசி ஆயுதம்தான் என்பதை தெளிவுபடுத்துகின்றன. உடனடி அச்சுறுத்தல் இருந்தால் மட்டுமே சர்வதேச சட்டப்படி திடீர் தாக்குதல் நடத்துவதற்கு பாரம்பரியமாக அனுமதி உண்டு. ஈராக் இத்தகைய அச்சுறுத்தலாக இல்லை எனவும் குறிப்பாக ஐ.நா. ஆயுத ஆய்வாளர்கள் அந்நாட்டில் (ஈராக்கில்) பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்கள் என சட்ட அறிஞர்கள் இதைப்பற்றி கருத்து தெரிவித்திருந்தனர். இப்படிப்பட்ட நிலையில் யுத்தம் முடிந்த பின்பு அதே பிரதேசத்தில் அமைதிப்படை செயல்படுவதென்பது பல்வேறுபட்ட விமர்சனங்களுக்குட்பட்டதே.
இவ்வாறாக பல்வேறுபட்ட விமர்சனங்கள் மத்தியிலே கடந்த சில தசாப்தங்களாக ஐ.நாவின் அமைதிப் பணிகள் இடம்பெற்று வருவதாக குறிப்பிடப்படுகிறது.ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைதி காப்போர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. முதலாம் உலக மகா யுத்தம் முடிவுற்ற பின்பு உருவாக்கம் பெற்ற சர்வதேச சங்கத்தால் உலக சமாதானத்தைப் பேண முடியாதுபோனதன் காரணமாகவே இரண்டாம் உலக மகா யுத்தம் ஏற்பட்டது.
இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவடைந்த பின்பு யுத்தத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புக்களும், சொத்திழப்புக்களும் கணிப்பிட முடியாதவை. இந்த அடிப்படையில் மற்றுமொரு உலக மகா யுத்தம் ஏற்படாமல் உலக சமாதானத்தை நிலைநிறுத்துவதை அடிப்படையாகக் கொண்டே ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கம் பெற்றது. ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கம் பெற்றதையடுத்து யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் என்பவற்றின்போது சமாதானத்தை ஏற்படுத்தவும், நிவாரணங்களை ஒருங்கிணைக்கவும், அமைதி காப்போர்களையும், கண்காணிப்பாளர்களையும் உரிய இடங்களில் பணிக்கமர்த்தும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது.
குறிப்பாக யுத்த நிறுத்தங்களின்போது அல்லது தற்காலிக யுத்த நிறுத்தங்களின்போது அமைதி காக்கும் படைகளின் பணியினை ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கக் காலத்திலிருந்தே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த அடிப்படையில் மே 29ம் தேதி சர்வதேச அமைதி காப்போர் தினமாகப் பெயரிடப்பட்டது. கடந்த ஆண்டு மே 29ம் தேதி 60வது அமைதி காப்போர் தினம் கொண்டாடப்பட்டது.
அதேநேரம், 2001ம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் இரு சாராரையும் கௌரவப்படுத்துவதற்கும், சமாதானத்திற்கான இந்நடவடிக்கைகளின்போது உயிர் நீத்தவர்களை ஞாபகமூட்டுவதற்காகவும் மே 29ம் தேதியை ஐக்கிய நாடுகளின் சர்வதேச அமைதி காப்போர் தினமாக பிரகடனப்படுத்தியது. 61 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தினத்திலே ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை முதன் முதலாக மத்திய கிழக்கில் அமைதி காப்போர் நடவடிக்கையை (தற்காலிக போர் நிறுத்த உடன்பாட்டினைக் கண்காணிக்கும் சபையை) உருவாக்கியது.

(UNTSO) 1948ம் ஆண்டு அரேபிய இஸ்ரேலிய யுத்தத்தின் போது தற்காலிக போர் நிறுத்த உடன்பாட்டின் ஏற்பாடுகளை மீறிய, இஸ்ரேலிய படைகள் பற்றி விசாரணையை மேற்கொண்டிருந்தபோது பிரான்சைச் சேர்ந்த யுத்தநிறுத்த கண்காணிப்பாளர் “ரென்னே லப்பாரியர்” (Rene Labarriere) என்பவர் முதன் முதலாக விபத்தில் உயிரிழந்தார். ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பு நடவடிக்கையின் போது முதலாவது உயிரிழந்தவராக இவரே கருதப்படுகிறார். 1948ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி ஜெரூஸலத்தில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த “ஒலே எச் பேக்கே” சேர்ந்த (Ole H. Bakke) எனும் நோர்வே ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியாளர் கொல்லப்பட்டார்.
அதேபோல 1948ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி காசா பகுதியில் சேவையாற்றிய லெப்டினன்ட் கர்ணல் ஜோசப் குவேறு (Joseph Queru) மற்றும் கப்டன் பியரே ஜின்னல் (Pierre Jeannel) என்ற பிரான்சிய அமைதி காக்கும் படை வீரர் உயிரிழந்ததோடு மற்றும் ஆறு படை வீரர்கள் காயமுற்றனர். மேலும், 1948ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி கவுண்ட் போர்க் பெர்னடொட் எனும் அமைதி காக்கும் வீரர், யுத்தத் தீவிரவாத இயக்கமான “STERN GANG” (ஸ்டர்ன் கேங்) எனும் கும்பலினால் கொலையுண்டார். இதேபோன்று 1958ம் ஆண்டு அரேபிய இஸ்ரேலியப் போர் 1973 அரேபிய இஸ்ரேலிய போர், 2008ம் ஆண்டு இஸ்ரேலிய லெபனன் போர் போன்றவற்றின் கடமையாற்றிய ஐக்கிய நாடுகளின் அமைதி காப்பாளர்கள் பலரும் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையைச் சேர்ந்த 300க்கும் அதிகமானோரும் கொல்லப்பட்டுள்ளனர். இக்கொலைகளில் அதிகமானோர் இஸ்ரேலியப் படைகளாலே கொல்லப்பட்டனர் என்பதுவும், ஐக்கிய நாடுகளின் தற்காலிப் போர் நிறுத்த உடன்பாட்டு ஏற்பாடுகளை மீறி செயற்பட்டவர்களும் இஸ்ரேலியர்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
இந்த அடிப்படையில் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொல்லப்பட்டவர்கள் இத்தினத்தில் விஷேசமாக நினைவுகூறப்படுகின்றனர். உலக சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக வேண்டி ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கம் பெற்றாலும்கூட, இதன் நடவடிக்கைகள் அமெரிக்க சார்பாக அமைந்துள்ளமையினால் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் நடவடிக்கைகள் கேள்விக் குறியாகவே மாறி வருகின்றன. யுத்தத்தை உருவாக்கியோரே சமாதானத்தையும் தோற்றுவிக்க வேண்டும் என்று ஐ.நா. சமாதான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் ஜேன்மேரி கைகென்னோ கூறிய விடயம் இவ்விடத்தில் கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும். இது விடயமாக அவர் தொடர்ந்தும் தெரிவித்த கருத்துகள் மேலும் எமது சிந்தனையைத் தூண்டக்கூடியவையே.
அதாவது, சம்பந்தப்பட்ட தரப்பினரின் இதயசுத்தியுடனான அரசியல் விருப்பமே முரண்பாட்டுக்கு தீர்வைத் தேடித்தரும். ஐ.நா. சமாதானப் படையினர் அதனைத் தேடித் தருவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.. யுத்தத்தை ஏற்படுத்தியவர்களாலேயே சமாதானத்தை உருவாக்க முடியும். உங்களால் அவர்களுக்கு உதவ முடியும். யுத்தத்தில் களைப்படைந்த தருணத்தில் உங்களால் அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். அதாவது, நல்ல நோக்கத்துக்கான நம்பிக்கையைத் தோற்றுவிக்க முடியும். இதுவே ஐ.நா. சமாதானப் படை மேற்கொள்ள வேண்டிய பணியாகும். ஐ.நாவால் பலவந்தமாக சமாதானத்தை உருவாக்க முடியாது. இங்கு ஜேன்மேரியின் கருத்து யதார்த்தபூர்வமானவை. அமெரிக்கா தலைமையிலான கூட்டணி, ஈராக் மீது நடத்திய போர் சட்ட விரோதமானது என கனடாவைச் சேர்ந்த 31 சர்வதேச சட்டப் பேராசிரியர்கள் தெரிவித்திருந்தனர். 15 சட்டக் கல்லூரிகளைச் சார்ந்த இந்த பேராசிரியர்கள் அமெரிக்க தாக்குதல், ”சர்வதேச சட்டத்தை அடிப்படையிலேயே மீறுகின்ற செயலாக அமைந்திருக்கிறது. இரண்டாம் உலகப்போர் முடிவிற்கு, பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சர்வதேச சட்ட நடைமுறைகளின் கட்டுக்கோப்பை கடுமையாக பாதிக்கின்ற வகையில் இந்த நடவடிக்கை அமைந்திருக்கிறது. ஐ.நா. சாசனத்தின் 41 மற்றும் 42வது பிரிவுகள் போர் கடைசி ஆயுதம்தான் என்பதை தெளிவுபடுத்துகின்றன. உடனடி அச்சுறுத்தல் இருந்தால் மட்டுமே சர்வதேச சட்டப்படி திடீர் தாக்குதல் நடத்துவதற்கு பாரம்பரியமாக அனுமதி உண்டு. ஈராக் இத்தகைய அச்சுறுத்தலாக இல்லை எனவும் குறிப்பாக ஐ.நா. ஆயுத ஆய்வாளர்கள் அந்நாட்டில் (ஈராக்கில்) பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்கள் என சட்ட அறிஞர்கள் இதைப்பற்றி கருத்து தெரிவித்திருந்தனர்.
இப்படிப்பட்ட நிலையில் யுத்தம் முடிந்த பின்பு அதே பிரதேசத்தில் அமைதிப்படை செயல்படுவதென்பது பல்வேறுபட்ட விமர்சனங்களுக்குட்பட்டதே. இவ்வாறாக பல்வேறுபட்ட விமர்சனங்கள் மத்தியிலே கடந்த சில தசாப்தங்களாக ஐ.நாவின் அமைதிப் பணிகள் இடம்பெற்று வருவதாக குறிப்பிடப்படுகிறது.


ஞாயிறு, 27 மே, 2018

உலக பட்டினி தினம் மே 28.


உலக பட்டினி தினம் மே 28.

🍝 உலக பட்டினி தினம் ஆண்டுதோறும் மே 28ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. தனிஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று அப்போதே பாரதியார் பாடினார்.

🍝 ஆனால் உயிர்கொல்லி நோய்களால் ஆண்டுதோறும் இறப்போர் எண்ணிக்கையை காட்டிலும்இ பட்டினியால் ஏற்படும் மரணங்களே அதிகம் என ஐ.நா அறிக்கை வெளியிட்டுள்ளது.

🍝 மேலும் ஒருமனிதன் ஆரோக்கியத்துடன் இருக்க நாள்தோறும் 2இ100 கலோரி உணவுகள் கிடைக்க வேண்டும் என்று கூறுகிறது. எனவேஇ பசி மற்றும் வறுமைக்கு நிலையான தீர்வுகளை கொண்டுவர வேண்டும் என்பதுதான் இத்தினத்தின் நோக்கமாகும்.


பட்டினியை ஒழிப்போம்...

   இன்று மே 28-ம் தேதி உலக பட்டினி தினம். ‘தனிஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று பாடினான் பாரதி.  பசி, உணவின்  முக்கியத்தை உணர்த்தவே இத்தனை ஆவேசத்துடன் அவன் கவிதை வடித்தான். பசி ஒரு பெருங்கொடுமை, ஒருவரை உயிரோடு கொல்லும் மரணத்திற்குச்  சமம். எய்ட்ஸ், எபோலா போன்ற உயிர்கொல்லி நோய்களால் ஆண்டுதோறும் இறப்போர் எண்ணிக்கையை காட்டிலும், பட்டினியால் ஏற்படும் மரணங்களே  அதிகம் என ஐ.நா அறிக்கை வெளியிட்டுள்ளது. பட்டினி குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் உணவு மற்றும் வேளான்அமைப்பு(F.A.O) கடைசியாக 2013-ல்  வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.

உலகில் 81 கோடி மக்கள் இன்னும் பட்டினியுடன் வாழ்கின்றனர். 79.1 கோடி மக்கள் அதாவது 98 சதவீதம் வளர்ந்துவரும் நாடுகளில் உள்ளனர்.உலகில் 8  பேரில் ஒருவர் பசியோடு ஓருவேளை உணவுக்கு கையேந்தி வாழ்கிறார்.ஆசியபசிபிக் பிராந்தியத்தில் 52 கோடி மக்கள், ஆப்பிரிக்காவில் 3 கோடி மக்கள்,  லத்தீன் அமெரிக்கா  மற்றும் கரீபியன் நாடுகளில் 4 கோடி மக்கள், வளர்ச்சியடைந்த நாடுகளில் 1.5 கோடி மக்கள் பட்டினியில் வாழ்கிறார்கள்.  உலகில்  ஊட்டச்சத்துக்குறைவால் 5 வயதுக்குட்பட்ட 71 லட்சம் குழந்தைகள் ஆண்டுதோறும்  உயிரிழக்கின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் 66 சதவீதம் பட்டினி  அதிகரித்துள்ளதாக உலக பட்டினி குறியீட்டெண் பட்டியல் (Global hunger index list) தெரிவிக்கிறது.

​பட்டினிச் சவாலை அதிகமாக ஆசியா, மேற்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்க கண்டங்களில் உள்ள நாடுகளில்  அதிகஅளவில் எதிர்கொண்டு வருகின்றனர். இது  தொடர்பாக சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.எப்.பி.ஆர்.ஐ.) வெளியிட்டுள்ள 78 நாடுகளின் பட்டியலில் இந்தியா இன்னமும் 63-வது  இடத்திலேயே உள்ளது. அந்த பட்டியலில் சீனா 1990-முதல் 2013- ஆண்டுக்கும் இடையே பட்டினி விகிதத்தை 58 சதவீதம் குறைத்துள்ளது. 1990-இல் 13  புள்ளிகளைப் பெற்றிருந்த சீனா, 2013-ல் 5.5 புள்ளிகளாக குறைத்துள்ளது. அதே காலகட்டத்தில் இந்தியா 32.6 புள்ளிகளில் இருந்து 21.3 ஆக மட்டுமே  குறைத்துள்ளது.

இந்தியாவில் ஐந்து வயதுக்குள்பட்ட 18 சதவீத குழந்தைகளுக்கும், 36 சதவீத இளைஞர்களுக்கும் சரிவிகித உணவு கிடைப்பதில்லை என்பது தேசிய குடும்ப  சுகாதார ஆய்வில் தெரிய வந்துள்ளது. 1970-களில் இருந்தே வறுமையை ஒழிப்போம் என்று அரசியல்  கட்சிகளால் எழுப்பப்படும் கோஷமும் மாறவில்லை,  வறுமையும் மறையவில்லை. பசியையும் நோயையும் வெல்ல முடியாத அரசுகள் இருந்தும் இல்லாத நிலைதான். அந்த வகையில் வறுமையும்  பட்டினியும்தான் தேசிய அவமானமாகக் கருதப்படுகிறது.

ஒருநாளுக்கு எவ்வளவு தேவை...: ஒரு மனிதனின் வயது, பாலினம், உடலமைப்பு, செயல்பாடுகள் வாழுமிடத்தைப்பொறுத்து உணவின் அளவு மாறும்.  ஐ.நாவின் கணக்கின் படி, ஒருமனிதன் ஆரோக்கியத்துடன் இருக்க நாள்தோறும் 2,100 கலோரி உணவுகள் கிடைக்க வேண்டும் என்று கூறுகிறது.இன்று மே 28-ம் தேதி உலக பட்டினி தினம்.

உலகில் 81 கோடி மக்கள் இன்னும் பட்டினியுடன் வாழ்கின்றனர். 79.1 கோடி மக்கள் அதாவது 98 சதவீதம் வளர்ந்துவரும் நாடுகளில் உள்ளனர். உலகில் 8  பேரில் ஒருவர் பசியோடு ஓருவேளை உணவுக்கு கையேந்தி வாழ்கிறார்.ஆசியபசிபிக் பிராந்தியத்தில் 52 கோடி மக்கள், ஆப்பிரிக்காவில் 3 கோடி மக்கள்,  லத்தீன் அமெரிக்கா  மற்றும் கரீபியன் நாடுகளில் 4 கோடி மக்கள், வளர்ச்சியடைந்த நாடுகளில் 1.5 கோடி மக்கள் பட்டினியில் வாழ்கிறார்கள்.  உலகில்  ஊட்டச்சத்துக்குறைவால் 5 வயதுக்குட்பட்ட 71 லட்சம் குழந்தைகள் ஆண்டுதோறும்  உயிரிழக்கின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் 66 சதவீதம் பட்டினி  அதிகரித்துள்ளதாக உலக பட்டினி குறியீட்டெண் பட்டியல் தெரிவிக்கிறது.
பட்டினிச் சவால் அதிகமாக ஆசியா, மேற்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்க கண்டங்களில் உள்ள நாடுகளில்  அதிகஅளவில் எதிர்கொண்டு வருகின்றனர். இது  தொடர்பாக சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.எப்.பி.ஆர்.ஐ.) வெளியிட்டுள்ள 78 நாடுகளின் பட்டியலில் இந்தியா இன்னமும் 63-வது  இடத்திலேயே உள்ளது. அந்த பட்டியலில் சீனா 1990-முதல் 2013- ஆண்டுக்கும் இடையே பட்டினி விகிதத்தை 58 சதவீதம் குறைத்துள்ளது. 1990-இல் 13  புள்ளிகளைப் பெற்றிருந்த சீனா, 2013-ல் 5.5 புள்ளிகளாக குறைத்துள்ளது. அதே காலகட்டத்தில் இந்தியா 32.6 புள்ளிகளில் இருந்து 21.3 ஆக மட்டுமே  குறைத்துள்ளது.
இந்தியாவில் ஐந்து வயதுக்குள்பட்ட 18 சதவீத குழந்தைகளுக்கும், 36 சதவீத இளைஞர்களுக்கும் சரிவிகித உணவு கிடைப்பதில்லை என்பது தேசிய குடும்ப  சுகாதார ஆய்வில் தெரிய வந்துள்ளது. 1970-களில் இருந்தே வறுமையை ஒழிப்போம் என்று அரசியல்  கட்சிகளால் எழுப்பப்படும் கோஷமும் மாறவில்லை,  வறுமையும் மறையவில்லை. பசியையும் நோயையும் வெல்ல முடியாத அரசுகள் இருந்தும் இல்லாத நிலைதான். அந்த வகையில் வறுமையும்  பட்டினியும்தான் தேசிய அவமானமாகக் கருதப்படுகிறது.


உலகில் பசியினால் வாடுவோர் தொடர்பிலான தகவல்கள் சில…!

⌘ உலக மக்களில் 900 மில்லியன் முதல் 1 பில்லியன் வரையிலானோர் பசி, பட்டினியின் பிடியில் வாழ்வதாக ஐ.நா அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதாவது உலக மக்களில்(13.1 சதவீதமானோர்) எட்டுப் பேரில் ஒருவர் பசி, பட்டினியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நாளொன்றில் உள்ளெடுக்க வேண்டியதென பரிந்துரைக்கப்பட்டுள்ள 2100 கலோரியினை விடவும் குறைவான போசணையினை உட்கொள்கின்றனர்.

⌘ எயிட்ஸ், மலேரியா, சயரோகம் ஆகியவை காரணமாக வருடாந்தம் இறப்போரினை விடவும் பசி, பட்டினியின் காரணமாக இறப்போரே அதிகமாகும்.  உலகில் நாளாந்தம் 25000+ பேர் பசி, பட்டினி, வறுமையின் காரணமாக இறக்கின்றனர்.

⌘ 2010ம் ஆண்டு பசி, பட்டினியின் காரணமாக 7.6 மில்லியன் குழந்தைகள் அதாவது நாளொன்றுக்கு 20,000+ குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

⌘ உலகில் பசியின் பிடியில் வாழ்வோரில் 98 சதவீதமானோர் குறைஅபிவிருத்தி நாடுகளிலேயே வாழ்கின்றனர். உலகில், பசியானது தாயிலிருந்து மகவுக்கு கடத்தப்படுகின்ற வழிமுறை தொடர்கின்றது. வருடாந்தம் 17 மில்லியன் குழந்தைகள் நிறை குறைந்து பிறக்கின்றனர், ஏனெனில் தாய்மார் போசணைக்குறைப்பாடு கொண்டவர்களாக காணப்படுகின்றமையாலாகும்.

⌘ அபிவிருத்தி அடைந்துவருகின்ற நாடுகளில், 15 குழந்தைகளில் ஒன்று பசியின் காரணமாகவே உயிரிழக்கின்றது.

⌘ உலகில் பசியின் பிடியில் வாழ்வோரில் 62.4 சதவீதமானோர் ஆசியா/தென் பசுபிக் நாடுகளிலேயே வாழ்கின்றனர்.

⌘ ஆசியா மற்றும் ஆபிரிக்க குழந்தைகளில் 20 சதவீதமானோர் தமது வயதிற்கேற்ற உடல் நிறையினை கொண்டிருக்கவில்லை.


⌘ 2012ம் ஆண்டுக்கான உலக பசி சுட்டெண்ணின்(Global Hunger Index) பிரகாரம் பசி, பட்டினியால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளாவன;
1) புரூண்டி                                 ╍ 37.1                        
2) எதித்திரியா                            ╍ 34.4
3) ஹெய்ட்டி                              ╍ 30.8                        
4) எதியோப்பியா                       ╍ 28.7
5) சாட்                                      ╍ 28.3                        
6) கிழக்கு தீமோர்                      ╍ 27.3
7) மத்திய ஆபிரிக்க குடியரசு      ╍ 27.3        
8) கொமொரஸ்                         ╍ 25.8
9) சியராலியோன்                     ╍ 24.7                        
10) யெமன்                               ╍ 24.3

15) இந்தியா                              ╍ 22.9                      
43) இலங்கை                           ╍ 14.4

திங்கள், 21 மே, 2018

மதிமுக நிறுவனர் வைகோ பிறந்த நாள்: மே 22, 1944.


மதிமுக நிறுவனர் வைகோ பிறந்த நாள்: மே 22, 1944.

வைகோ (இயற்பெயர்: வை. கோபால்சாமி, பிறப்பு: மே 22, 1944) தமிழக அரசியல் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் ஆவார்.

பிறப்பும் வளர்ப்பும்

வை கோபால்சாமி பிறந்த ஊர்,
திருநெல்வேலி மாவட்டம் கலிங்கப்பட்டி ஆகும். வையாபுரி - மாரியம்மாள் தம்பதியினருக்கு 1944ஆம் ஆண்டு பிறந்தவர். இவருக்கு மூன்று சகோதரிகள், ரவிச்சந்திரன் என்ற இளைய சகோதரரும் உள்ளனர்.

பிறப்பு மே 22, 1944 (அகவை 73)
கலிங்கப்பட்டி , திருநெல்வேலி மாவட்டம்
அரசியல் கட்சி ம.தி.மு.க
வாழ்க்கை துணைவர்(கள்) ரேணுகாதேவி
பிள்ளைகள் துரை வையாபுரி , ராஜலட்சுமி, கண்ணகி
இருப்பிடம் சென்னை
கல்வி கலைகளில் முதுகலை மற்றும் சட்ட இளங்கலை
இணையம் http://www.vaiko-mdmk.com

குடும்ப வாழ்க்கை

வை.கோ ரேணுகாதேவி என்ற பெண்ணை 14ஆம் தேதி சூன் மாதம் 1971ஆம் ஆண்டு மணந்தார், இவர்களுக்கு துரை வையாபுரி என்ற மகனும் ராஜலெட்சுமி மற்றும் கண்ணகி என்ற மகள்களும் உள்ளனர்.


அரசியல் வாழ்க்கை

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராக இருந்த இவர் 1992 இல் திமுக தலைவர் கருணாநிதியைக் கொலை செய்ய முயற்சித்தார் என்று கொலைப் பழி சுமத்தித் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார்.
மூன்று முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் (03/04/1978-02/04/1996), இருமுறை
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் பணிபுரிந்துள்ளார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தொடர்ச்சியாக ஆதரவளித்து வருபவர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதற்காக 2001 இல் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையிலிருந்தார்.
அரசியல் பயணத்தில் 50 ஆண்டு
1964 ஆம் ஆண்டு, பேரறிஞர் அண்ணா முன்னிலையில் சென்னை கோகலே மன்றத்தில் இந்தி எதிர்ப்புக் கருத்தரங்கத்தில் முதன் முதலில் பேசி தனது அரசியல் வாழ்வில் அடி எடுத்து வைத்தார் வைகோ.

மக்கள் நலக் கூட்டணி

வை.கோ மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்தார். இதில் 2016 சட்டமன்ற தேர்தலின் போது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் , விடுதலை சிறுத்தைகள் கட்சி , இந்திய கம்யூனிஸ்ட் ,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய முற்போக்கு திராவிட கழகம் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் என ஆறு கட்சிகள் அங்கம் வகித்தன. அதன் பின்னர் ௭திர்பார்த்த வெற்றி கிடைக்காததால் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தே. மு. தி. க மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் விலகியது. தற்பொழுது வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி மற்ற கட்சிகளோடு உடன்பாடில்லாமல் தனித்து போட்டியிடும் ௭ன்று வைகோ அறிவித்தார். திசம்பர் மாதம் 27 ந்தேதி மதிமுகவின் உயர்நிலைக் குழு கூட்டத்திற்கு பிறகு மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகினார்.
குற்றம் சாட்டுகிறேன்
2004-2009 யில் ஈழத்தில் நடந்த இனக்கொலைக்கு இந்திய அரசு எப்படி எல்லாம் உதவியது என்பதனை விளக்கி "குற்றம் சாட்டுகிறேன்" எனும் புத்தகத்தினை வைகோ எழுதியுள்ளார். 2004-2009 ஆண்டுகளில் இந்தியப் பிரதமருக்கு தான் எழுதிய கடிதங்களையும், தனக்குப் பிரதமர் எழுதிய கடிதங்களையும் இந்தப் புத்தகத்தில் தொகுத்து உள்ளார் வைகோ. இதை ஆங்கிலத்தில் "I Accuse" என்ற தலைப்பில் வெளியிட்டும் உள்ளார்.


பொதுச்சேவை

வைகோ 2015 ஆம் ஆண்டு மறுமலர்ச்சி இரத்ததான முகாமை தொடங்கினார். கிராம மக்கள் பயன்பெறும் வகையில் முகாம்களை நடத்தினார். நதிநீர் இணைப்புக்காக ஒரு மாதகாலம் நடைபயணமும் மேற்கொண்டார்.
இவரின் போராட்டங்கள்
தமிழகத்தின் முக்கியமான பிரச்சினைகளான முல்லைப்பெரியாறு பிரச்சினை, ஈழத்தமிழர் பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினை, ஸ்டெர்லைட் என பல போராட்டங்களை நடத்தி வருபவர் வைகோ.

மதுவிலக்கு போராட்டம
மதுவை எதிர்த்து 2400 கல் தொலைவு தூரம் தொடர் நடைப்பயணம் மேற்கொண்டவர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கக் கடுமையாகப் போராடி அதில் வெற்றி பெற்றவர். 30 முறை கைதானவர். ஐந்து ஆண்டுகள் சிறையில் தன் வாழ்நாளை கழித்தவர். ஒரு கோடி கல் தொலைவுகளுக்கும் மேல் பயணம் செய்தவர், தமிழகத்தில் 50000 கிராமங்களுக்கும் மேல் சென்று மக்களை சந்தித்தவர் ஆவார்.

சீமை கருவேல மரங்கள் ஒழிப்பு

சீமைக்கருவேல மரங்களை அழிப்பதற்காக வழக்குத் தொடுத்து வாதாடி இருக்கின்றார். தமிழ்நாட்டில் பல்வேறு நீர்நிலைகள், கண்மாய்கள், ஆற்றுப் படுகைகள் மற்றும் தரிசு நிலங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களால் நீர்வளம், நிலவளம் குன்றி வருகிறது. ௭னவே அம்மரங்களை அடியோடு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட பிற துறைகளின் செயலாளர்களுக்கு 2015 ஆம் ஆண்டு ஆகத்து 8 ஆம் திகதி கடிதம் எழுதினார். தமிழக அரசின் சார்பில் ௭வ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அதே ஆண்டு செப்டம்பர் 9 ஆம் திகதி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார்.
இதை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு சனவரி மாதம் 10 ஆம் திகதியன்று மாண்பமை நீதிபதிகள் செல்வம், கலையரசன் அமர்வில் நடந்த விசாரணையில், தமிழகத்தின் 13 தென்மாவட்டங்களில் சீமைக்கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. மாவட்ட நீதிபதிகளின் மேற்பார்வையில் அந்தப் பணிகளை விரைவுபடுத்த ஒவ்வாரு மாவட்டத்திற்கும் 5 வழக்கறிஞர்கள் கொண்ட குழு அமைத்தது. இதை தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள மற்ற 19 மாவட்டங்களிலும் சீமைக்கருவேல மரங்களை வெட்ட ஆணை பிறப்பிக்க கோரி வைகோ தாக்கல் செய்த மனுவை ஏற்ற உயர்நீதிமன்றம் மதுரை கிளை 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் திகதி அதற்கான உத்தரவையும் பிறப்பித்து, 19 மாவட்ட ஆட்சியர்களுக்கும் தாக்கீது அனுப்பியுள்ளது.

முல்லைப் பெரியாறு பிரச்சினை

முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக எட்டு ஆண்டுகள் போராடி இருக்கின்றார்.
மீத்தேன் ௭திர்ப்பு போராட்டம்
மீத்தேனை எதிர்த்துத் தஞ்சை மண்டலத்தில் ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்திருக்கிறார்.

காவேரி பிரச்சினை

காவிரிப் பிரச்சினையில் பத்தாயிரம் பேர்களைத் திரட்டிக் கொண்டு காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து கல்லணை வரையிலும் நடந்து சென்றிருக்கிறார்.

ஸ்டெர்லைட் போராட்டம்

ஸ்டெர்லைட் பிரச்சினையில் உலகக் கோடீசுவரர்களுள் ஒருவரான ஸ்டெர்லைட் அதிபரை எதிர்த்துப் பதினெட்டு ஆண்டுகள் போராடி இருக்கின்றார். இதற்காக உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் தானாகவே வாதாடியிருக்கின்றார்.தனித்தமிழ் ஈழம்

தனித்தமிழ் ஈழம் அமைப்பதற்காகப் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கருத்தை, உலக அரங்கில் முதன்முதலாக முன்வைத்தது இவரே. 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தில் பங்கேற்க மதிமுக பொதுச்செயலர் வைகோ ஜெனீவா சென்றார். ஜெனீவா விமான நிலையத்தில் ஈழத் தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகள் வைகோவை வரவேற்றனர்.சுவிஸின் ஜெனீவா நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2009-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டது தொடர்பான ஐ.நா. குழுவின் முழுமையான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

வகித்த பதவிகள்

1970- கலிங்கப்பட்டி பஞ்சாயத்து தலைவர் தனது 25வது அகவையில்
குருவிகுளம் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர்
திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவர்
1978- முதன்முதலாக மாநிலங்களவை உறுப்பினர்
1984-இரண்டாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினர்
1990- மூன்றாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினர் என 18 ஆண்டுகள்
1994- ம.தி.மு.க பொதுச்செயலாளர் மற்றும் நிறுவனர்
1998- பிப்ரவரி மாதம் சிவகாசி தொகுதியில் மக்களவை உறுப்பினர்
1999- அக்டோபர் மாதம் இரண்டாவது முறையாக சிவகாசி தொகுதியில் மக்களவை உறுப்பினர்
திமுக மாநில மாணவரணித் துணைத்தலைவர்
திமுக தேர்தல் பணிக்குழு தலைவர்
திமுக தொண்டர் அணித் தலைவர்
எழுத்துப் பணிகள்
வை.கோ 50க்கும் அதிகமான புத்தகங்களை இயற்றியுள்ளார். அதில் குறிப்பிட்ட புத்தகங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வரிசை எண் வருடம் புத்தகம் குறிப்பு

1 கனவு நனவாகியது
2 இதயச் சிறகுகள்
3 வீரத்தின் புன்னகை பரவட்டும்
4 தமிழிசை வெல்வோம்
5 நாதியற்றவனா தமிழன்?
6 குற்றம் சாட்டுகிறேன்
7 1988 இரத்தம் கசியும் இதயத்தின் குரல்
8 சிறையில் விரிந்த மடல்கள்
9 இந்தியை எதிர்க்கிறோமே ஏன்?
10 தமிழ் ஈழம் ஏன்?
11 படையின் மாட்சி
12 தமிழர் வாழ்வில் தந்தை பெரியார்
13 வைகோவின் சங்கநாதம்
14 வாழ்வு மலரும் வழி
15 தமிழ் இசைத்தேன்
16 இசைத்தேனாய் இலக்கிய தென்றலாய்
17 தடைகளை தகர்ப்போம்! தாயகம் காப்போம்!
18 உலக நாடுகளின் ஒன்றியம்
19 வரலாறு சந்தித்த வழக்குகள்
20 பெண்ணின் பெருமை
21 வெற்றிப்படிகள்
22 தனலும் தன்மையும்
23 என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?
24 வெற்றி சங்கொலி
25 வாகை சூடுவோம்
26 உலகுக்கு ஒரே பொதுமறை
27 புயலின் முகங்கள்
28 ஒற்றுமை ஓங்கட்டும்
29 தமிழரின் போர்வாள்
30 மனித உரிமைகள்
31 போற்றி பாடுவோம்
32 ஆம் நம்மால் முடியும்
33 வைகோவின் கடிதங்கள்- பாகம் 1
34 வைகோவின் கடிதங்கள்- பாகம் 2
35 மறுமலர்ச்சி பெற எழுச்சி நடை
36 உழைப்பால் உயருவோம்
37 யமுனைக் கரையில்
38 மனைமாட்சி
39 தமிழால் உயருவோம்
40 பரணிக்கரையில் புரட்சிக்கனல்
41 தாகம் தீர பாசனம் பெருக
42 தேன் மலர்கள்- (பேச்சுக்கள்)
43 நடுநாடு தந்த நம்பிக்கை

வெள்ளி, 18 மே, 2018

சமயச் சொற்பொழிவாளர் தேச. மங்கையர்க்கரசி பிறந்த நாள்: 19 மே 1984.சமயச் சொற்பொழிவாளர் தேச. மங்கையர்க்கரசி பிறந்த நாள்: 19 மே 1984.

தேச. மங்கையர்க்கரசி (பிறப்பு: 19 மே 1984) தமிழ்நாட்டின் தமிழ் இலக்கிய, சமயச் சொற்பொழிவாளர்.

வாழ்க்கைச் சுருக்கம்

தேச. மங்கையர்க்கரசி தேவி சண்முகம், பாக்கியலட்சுமி ஆகியோருக்கு
மதுரையில் பிறந்தவர். இவருக்கு ஒரு சகோதரியும், ஒரு சகோதரரும் உண்டு. எட்டாவது வகுப்பு வரை மதுரையில் தெப்பக்குளத்தில் அமைந்துள்ள ரோசரி சர்ச் பள்ளியிலும், பின்னர் மதுரையில் உள்ள ஈ. வே. ரா நாகம்மை பள்ளியிலும் படித்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழிக் கல்வி மூலம் இளநிலை (தமிழ் இலக்கியம்) பயின்று பட்டம் பெற்றார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகள் இவருக்கு தெரியும்.


இலக்கியப் பணி

தந்தையின் ஊக்குவிப்பில் மேடைகளில் இலக்கியச் சொற்பொழிவாற்றத் தொடங்கினார். திருக்குறள், தேவாரம், திருவாசகம் மற்றும் பிற தமிழ்ப் பாயிரங்களில் புலமை பெற்றார். கர்நாடக சங்கீதம் முறைப்படி கற்றுக் கொண்ட இவர் பரதநாட்டியக் கலையிலும் தேர்ச்சி பெற்றார்.
இலண்டன், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சுவிட்சர்லாந்து, மொரீசியசு போன்ற நாடுகளில் இலக்கிய உரைகள் ஆற்றியுள்ளார். இவரது இலக்கியச் சொற்பொழிவுகள் 12 குறுந்தகடுகளாக வெளிவந்துள்ளன.


எழுதிய நூல்கள்

1. இந்து மதம் என்ன சொல்கிறது?
2. நூறு ஆண்டுகள் இன்பச் சுற்றுலா
விருதுகளும், பட்டங்களும்
கலைமாமணி , பெப்ரவரி 13, 2011
கிருபானந்தவாணி எனும் பட்டம்


உலக உயர் இரத்த அழுத்த தினம் மே 17


உலக உயர் இரத்த அழுத்த தினம் மே 17 #May 17


உலக சுகாதார நிறுவனம் கார்டியோவாஸ்குலர் நோயினால் (இருதய நோய்) ஏற்படும் இறப்பு விகிதத்திற்கான முக்கிய காரணமாக உயர் இரத்த அழுத்தத்தைக் குறிப்பிட்டிருக்கிறது.

உலகத்தில் உயர் இரத்த அழுத்தம் உள்ள மக்களில், 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களுடைய நிலை குறித்து அறியாதவர்களாக இருக்கின்றனர். உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது.

இது சம்பந்தமாக விழிப்புணர்வை ஏற்படுத்தவே, உலக சுகாதார நிறுவனம் உயர் இரத்த அழுத்தம் குறித்து 2005ஆம் ஆண்டில் உலகளாவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியது என்பதுடன் ஒவ்வொரு ஆண்டும் மே 17ம் தேதியை உலக உயர் இரத்த அழுத்த தினமாக அறிவித்திருக்கிறது.இன்று உலக உயர் இரத்த அழுத்த (ஹைபர் டென்சன்) தினம் மே 17.
May 17, thanks- aanthai
உலக சுகாதார நிறுவனம் கார்டியோவாஸ்குலர் இறப்பு விகிதத்திற்கான முன்னணி காரணமாக உயர் இரத்த அழுத்தத்தைக் குறிப்பிட்டிருக்கிறது. 85 தேசிய உயர் இரத்த அழுத்த சங்கங்கள் மற்றும் குழுக்களின் அம்ப்ரல்லா அமைப்பான தி வேர்ல்ட் ஹைபர்டென்ஷன் லீக் (டபிள்யூஹெச்எல்), உலகம் முழுவதிலுமுள்ள உயர் இரத்த அழுத்தம் உள்ள மக்களின் 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களுடைய நிலை குறித்து அறியாதவர்களாக இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளது.இந்தப் பிரச்சினையைத் தெரிவிப்பதற்கு, உலக சுகாதார நிறுவனம் உயர் இரத்த அழுத்தம் குறித்து 2005 ஆம் ஆண்டில் உலகளாவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கியது என்பதுடன் ஒவ்வொரு ஆண்டும் மே 17 ஆம் தேதியை உலக உயர் இரத்த அழுத்த தினமாக (டபிள்யுஹெச்டி) அறிவித்திருக்கிறது.

hyper may 17

உயர் இரத்த அழுத்தம் (இரத்த கொதிப்பு) என்பது சமீபகாலமாக நம் நாட்டு மக்களில் அநேகம் பேரை பாதிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. பலருக்கு எந்த விளைவுகளும் ஏற்படுத்தாமல், எந்த அறிகுறியும் காட்டாமல், ஆபத்தான கட்டத்தை நோக்கி உள்ளே அது பூதாகாரமாக வளரும். ஆரோக்கியமான மனிதராகவே நாம் நடமாடிக் கொண்டிருக்க ஒரு நிலையில் திடீரென்று மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறோம். இதன் வெளிப்படையான அறிகுறிகளை கண்டுபிடிப்பது கடினம் என்பதாலும், மெதுவாக எல்லா முக்கிய உறுப்பு மண்டலங்களையும் பாதிப்பதாலும் இதனை ஒரு அமைதிக் கொலையாளி (Silent Killer) என்று அழைத்தால் அது மிகையாகாது.

இரத்தக் கொதிப்பு எப்படி ஏற்படுகிறது?

நாம் நடுத்தர வயதைக் (35 To 40) கடக்கும் போது நம் உடலில் உள்ள சிறிய சுத்த இரத்தக குழாய்கள் (Arterides) விரியும் தன்மையை இழக்கின்றன. மேலும் நமது தவறான உணவுப் பழக்கங்களினால் இரத்தக் குழாய்களின் உட்புறம் படியும் தீங்கு செய்யும் கொழுப்பு வகைகளினால் தடிப்பு ஏற்பட்டு உள் அளவு சுருங்குகிறது. இதனால் இரத்த ஓட்டத்தின் சீரான வேகம் குறைந்து அழுத்தம் அதிகமாகிறது. இந்த நிலையைத் தான் நாம் “இரத்தக் கொதிப்பு” என்று கூறுகிறோம்.

இரத்தக் கொதிப்பு என்பது நோயல்ல. ஆனால் ஆரம்பத்திலேயே இதனைக் கண்டுபிடித்துத் தடுக்கவில்லை என்றால் மெதுவாக நமது உடலின் பல்வேறு முக்கிய உறுப்பு மண்டலங்களை பாதித்து, அவற்றில் ஏற்படும் நோய்களுக்கு காரணமாக இரத்தக் கொதிப்பு அமைந்துவிடும்.


பல்வேறு காரணங்களால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படலாம். உடல் பருமன் அதிமாக உள்ளவர்கள், உடல் உழைப்பு குறைவாக இருப்பவர்கள், தைராய்டு ஹார்மோன் பிரச்சினைகள், இதயம் மற்றும் சிறுநீரகக் கோளாறுகள், மன அழுத்தம், அதிகமாக கோபப்படுதல் உணவில் அதிக அளவில் உப்பு சேர்த்துக் கொள்வது, வாழ்க்கை முறை மற்றும் பரம்பரை தன்மை அதாவது வீட்டில் அம்மா, அப்பாவிற்கு உயர் அழுத்தம் இருந்தால் அடுத்த தலைமுறைக்கும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

ஒரு ஆரோக்கியமான மனிதனின் இரத்த அழுத்தம் 120/80 மி.மீ மெர்க்குறி என்பதாகும். நடுத்தர வயதில் உள்ள ஆரோக்கியமான மனிதர்களுக்கு இந்த அளவானது சிறிது மாறுபடும். 139/89 மி.மீ மெர்க்குறி என்னும் அளவு வரை நார்மல் என்றே கூறலாம்.

140/90 முதல் 160/110 மி.மீ மெர்க்குறி வரை உள்ள அளவுகள் ஓரளவு உயர்ந்த இரத்த அழுத்தத்தைக் குறிக்கும் (Mild To Moderate Hypertension)

இதற்கு மேல் உள்ள அளவுகள் மிக அதிகமான உயர் இரத்த அழுத்தத்தினைக் குறிக்கும்.

நார்மல்

சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் (மி.மீ மெர்குறி) 130க்கு கீழ்
டயஸ்டாலிக் இரத்த அழுத்தம (மி.மீ மெர்குறி) 85க்கு கீழ்

இரத்த கொதிப்பு ஸ்டேஜ் -1

சிஸ்டாலிக் 140 – 159
டயஸ்டாலிக் 90 – 99

இரத்த கொதிப்பு ஸ்டேஜ் – 2

சிஸ்டாலிக் 160 – 179
டயஸ்டாலிக் 100 – 109

இரத்த கொதிப்பு ஸ்டேஜ் – 3

சிஸ்டாலிக் 180 – க்கு மேல்
டயஸ்டாலிக் 110 – க்கு மேல்

இரத்தக் கொதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் முறைகள் என்னென்ன?


மருந்து மட்டுமின்றி நமது வாழ்க்கை முறையில் சில நல்ல மாற்றங்களை செய்து கொள்வதினாலும் நாம் இரத்தக் கொதிப்பிலிருந்து விடுபடலாம்.

1) உணவில் உப்பு குறைத்துக் கொள்ளல்:

உப்பு அதிகமாக இருக்கும் பண்டங்களான ஊறுகாய், அப்பளம், கருவாடு, மற்றும் அதிக உப்பு சேர்க்கப்பட்டு பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்கப்படும் முந்தரி, சிப்ஸ், பாப்கார்ன் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.

2) பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்வது இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும்.

3) மனதை ரிலாக்ஸ் செய்யும் முறைகள்:

தொழுகையில் மனதை ஒருமுகப்படுத்துதல், இறைதியானம்(திக்ர்) போன்றவற்றில் ஈடுபடுதல், யோகா ஆகியவற்றை எந்த பரபரப்பும் இன்றி முறையாக பேணினால் இரத்தக் கொதிப்பு பெருமளவு குறையும்.

4) உடற்பயிற்சி:

தினமும் தவறாமல் மிதமான உடற்பயிற்சி செய்வது அவசியம். தினமும் 30 நிமிடங்கள் வாக்கிங் போவதோ, 20 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவதோ அல்லது நீச்சல் அடிப்பதோ சரியான உடற்பயிற்சி முறைகள். இவை உடற்பருமனையும் குறைப்பதால் இரத்த அழுத்தம் குறையும்.

5) புகை பிடித்தல், அளவுக்கதிகமாக மது அருந்துதல் முதலிய பழக்கங்களை அறவே நீக்குவதால் இரத்தக் கொதிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம்.6) தவறாமல் குடும்ப டாக்டரிடம் சென்று இரத்த அழுத்தத்தை பரிசோதித்துக் கொள்ளுதல்:

நம் நாட்டில் சமீபகாலமாக 30 வயதுக்குக் குறைவான இளைஞர்களுக்குக் கூட இரத்தக் கொதிப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகவே 20 லிருந்து 40 வயது வரை உள்ளவர்கள் வருடத்துக்குக் இரண்டு முறையாவது பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

40 வயதைக் கடந்தவர்கள் மூன்று மாதத்துக்கு ஒருமுறை இரத்த அழுத்தத்தை சோதித்துக் கொள்வது அவசியம். குறிப்பாக, குடும்பரீதியாக உயர் இரத்த அழுத்தப் பாதிப்பு உள்ளவர்கள் கண்டிப்பாக தங்களை மருத்துவரிடம் காட்டி பரிசோதித்துக் கொள்வது மிக மிக அவசியம்.

வியாழன், 17 மே, 2018

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் மே 18.முள்ளிவாய்க்கால் நினைவு தினம் மே 18.

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் என்பது ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இறந்தவர்களை நினைவு கூரும் நாள் ஆகும். இது இலங்கைத் தமிழர் , மற்றும் உலகத் தமிழரால் ஆண்டு தோறும் மே 18 ஆம் நாள் நினைவு கூரப்படுகின்றது. 2009 ஆம் ஆண்டில் இந்நாளிலேயே
இலங்கையின் வட-கிழக்குக் கரையில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் எனும் கிராமத்தில் ஈழப்போர் முடிவுற்றது.

பின்னணி

2010 நினைவேந்தல் நாள்
நியூசிலாந்து ,
வெலிங்டனில் நினைவுகூரப்பட்ட போது தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்சு சாவெல் விளக்கேற்றுகிறார்.

2013 நினைவு நாளின் போது யாழ்ப்பாணம்

உதயன் பத்திரிகை ஊழியர்கள் குருதிக்கொடை அளிக்கிறார்கள்.
இலங்கையின் வடகிழக்குப் பகுதியைத்
தமிழீழம் என்ற பெயரில் தனிநாடு அமைக்கக் கோரி 1983 முதல் 2009 வரை
தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட ஈழ இயக்கங்கள் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டன. 2007 வரை ஈழப்போரில் குறைந்தது 70,000 பேர் உயிரிழந்தனர். 2008 இன் இறுதிப் பகுதியிலும், 2009 ஆரம்பத்திலும், ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கைப் படைத்துத்துறையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் போர் நடைபெற்றது.
 இரு தரப்புக்குமிடையே ஏறத்தாழ 300,000 பொதுமக்கள் அகப்பட்டனர். 2009 மே 18 விடுதலைப் புலிகளின் தலைவரைத் தாம் கொன்று விட்டதாக இலங்கை அரசு அறிவித்ததை அடுத்து போர் முடிவுக்கு வந்தது. போரின் இறுதிக் கட்டத்தில் ஏறத்தாழ 40,000 பொதுமக்கள் வரை இறந்தனர் என ஐக்கிய நாடுகளின் அறிக்கை தெரிவித்தது. இவர்களில் பெரும்பாலானோர் இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாடற்ற ஏவுகணைத் தாக்குதல்களில் அகப்பட்டு இறந்தனர் என அவ்வறிக்கை தெரிவித்தது. இரு தரப்பினரும் போர்க்குற்றங்கள் இழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் இலங்கை அரசு இழைத்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்களை தற்போது விசாரணைக்குட்படுத்தியுள்ளது.


நினைவு நாள் நிகழ்வுகளுக்குத் தடை

இலங்கை அரசு மே 18 ஆம் நாளை வெற்றி நாளாக அறிவித்து இராணுவ அணிவகுப்புகளுடன் ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது. போரில் இறந்த இலங்கைப் படைத்துறையினர் வெற்றி வீரர்களாக அறிவிக்கப்பட்டு இந்நாளில் இலங்கையின் ஏனைய பகுதிகளில் நினைவுகூரப்பட்டு வருகின்றனர். ஆனாலும், இலங்கை அரசு அமைத்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போரில் இறந்த அனைவரும் பெப்ரவரி 4 இல் நினைவுகூரப்பட வேண்டும் எனப் பரிந்துரைத்தும், அரசு அக்கோரிக்கையை நிறைவேற்றவில்லை. பதிலாக, இலங்கைத் தமிழர் இறந்த தமது உறவுகளை நினைவு கூர இலங்கை அரசு தடை விதித்தது. மே 18 ஐ ஒட்டிய நாட்களில், வட, கிழக்குப் பகுதிகளில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டு, பாடசாலைகளும், பல்கலைக்கழகங்களும் மூடப்படுகின்றன.

தமிழர்கள் நிகழ்த்தும் எந்த நினைவுகூரலையும் இராணுவமும் இலங்கை அரசும் மக்கள் விடுதலைப் புலிகளை நினைவுகூருவதாகவே கருதுகிறது. பொதுமக்கள் தமது வீடுகளில் இறந்த விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தலாம் என இராணுவம் கூறியிருந்தாலும், வீடுகளில் புகுந்து இராணுவத்தினர் இந்நிகழ்வுகளைத் தடுத்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

நினைவு நாள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் மத்தியிலும் மே 18 ஆம் நாளிலும் அதற்கண்மைய நாட்களிலும் இலங்கைத் தமிழர் சிறிய அளவில் முள்ளிவாய்க்கால் நினைவு நாளைத் இறந்த உறவுகளை நினைத்து நினைவு கூர்ந்து வருகின்றனர்.  ஆனாலும், பொது இடங்களில் நடத்தப்படும் நிகழ்வுகள் பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்படுகின்றன.  தமிழ் அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புலம்பெயர் ஈழத்தமிழர் தாம் வாழும் நாடுகளில் இந்நினைவு நாளை பாரிய அளவில் கூடி நினைவு கூருகின்றனர்.


2015 நினைவுகூரல்

வடமாகாண முதல்வர் சி. வி. விக்னேஸ்வரன் தலைமையில் முள்ளிவாய்க்காலில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர் .

2016 நினைவுகூரல்

மே 18, 2016 - உலகெங்கும் வாழும் தமிழர்கள் நினைவுகூர்ந்தனர்.
கிழக்குப் பாடசாலையிலுள்ள
முள்ளிவாய்க்கால் முற்றம் என்னும் நினைவிடத்தில், வடமாகாண முதல்வர் சி. வி. விக்னேஸ்வரன் தலைமையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

2017 நினைவுகூரல்

மே 18, 2017 - நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு வடக்கு முதலமைச்சர் சீ. வி. விக்னேஸ்வரன், எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் ஆகியோர் வந்திருந்து உரையாற்றினர

சர்வதேச அருங்காட்சியக தினம் மே 18சர்வதேச அருங்காட்சியக தினம் மே 18

ஒவ்வொரு ஆண்டும் மே 18ஆம் தேதி உலகளாவிய ரீதியில் சர்வதேச அருங்காட்சியக தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அருங்காட்சியகங்களின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்கும் அதேபோல் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும்இ இத்தினம் 1977ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகின்றது
.

சர்வதேச அருங்காட்சியக தினம்

ஒவ்வொரு ஆண்டிலும் மே 18ம் தேதி உலகலாவிய ரீதியில் சர்வதேச அருங்காட்சியக தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஒரு சமூகத்தின், ஒரு தேசத்தின் மரபுரிமைகளைப் பேணி பாதுகாப்பதில் அருங்காட்சியகத்தின் பணி மிக முக்கியமானது.அதன் பரிமாணத்தை அளவிட முடியாது. கால காலங்களாக வரலாற்று மாற்றங்களின் சாட்சியங்களாக விளங்கும் அருங்காட்சியகங்கள் நாளைய சந்ததியின் விலை மதிக்க முடியாத சொத்துக்கள் நவீன உலகின் மிகப் பெரிய அருங்காட்சியகம் லண்டனிலுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகமாகும். உலகிலுள்ள ஒவ்வொரு நாடுகளிலும் பொதுவாக தேசிய அருங்காட்சியகங்கள் காணப்படுகின்றன. இந்த அருங்காட்சியகங்கள் பொதுப்படையாக அன்றேல் பல்வேறுபட்ட அலகு ரீதியாக அமைந்திருக்கும். இன்றைய உலகில் பல்வேறு நாடுகளில் தனியார் அருங்காட்சியகங்களும் காணப்படுகின்றன.
அருங்காட்சியகங்களின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்கும் அதே போல இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், சர்வதேச அருங்காட்சியக தினம் 1977ஆம் ஆண்டு முதல் உலகம் பூராகவும் கொண்டாடப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் இதற்கான கருப்பொருள் இதன் ஆலோசனைக்குழுவினால் தீர்மானிக்கப்படும். 2009 ம் ஆண்டுக்கான கருப்பொருள் “அருங்காட்சியகங்களும் சுற்றுலாத்துறையும்" என்பதாகும்.1992; ஆண்டு முதல் சர்வதேச அருங்காட்சியக தினம் ஒவ்வொரு ஆண்டுகளிலும் பின்வரும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு அனுஷ்டிக்கப்பட்டது.


2009 "Museums and tourism"
2008 "Museums as agents of social change and development"
2007 "Museums and Universal Heritage"
2006 "Museums and young people"
2005 "Museums bridging cultures"
2004 "Museums and Intangible Heritage"
2003 "Museums and Friends"
2002 "Museums and Globalisation"
2001 "Museums: building community"
2000 "Museums for Peace and Harmony in Society"
1999 "Pleasures of discovery"
1998-1997 "The fight against illicit traffic of cultural property"
1996 "Collecting today for tomorrow"
1995 "Response and responsibility"
1994 "Behind the Scenes in Museums"
1993 "Museums and Indigenous Peoples"
1992 "Museums and Environment"


சமூகத்திற்கும், அதன் விருத்திக்கும் சேவையாற்றும் ஒரு நிறுவனம் என்ற அடிப்படையில் அருங்காட்சியகங்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி பொது மக்களைச்சந்தித்து அவர்களின் கவனத்தைச் செலுத்தமாறு இத்துறை சார்ந்தோர் வலியுறுத்தி வருகின்றனர்.
அருங்காட்சியகங்கள் தொடர்பான கொண்டாட்ட நிகழ்வுகள் இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய போட்டி நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், கலை நிகழ்வுகள் போன்றன மே மாதம் 18ம் திகதியே நடாத்த வேண்டும் என சிபார்சு செய்யப்பட்டள்ளது. ஒவ்வொரு நாட்டிற்கும் உரிய சம்பிரதாயங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவர்களது நிகழ்ச்சிகளை நடத்த முடியும். கலாசாரப்பரிமாற்றம் அவை பற்றிய அன்னியோன்ய புரிந்துணர்வு, ஒத்துழைப்பு, மக்களிடையே சமாதானம் போன்றவற்றை அருங்காட்சியகங்களால் ஏற்படுத்த முடியும்.உலக அருங்காட்சியக நாள் ( International Museum Day ) மே 18

உலகின் மிகப் பிரம்மாண்டமான கலைப் பெட்டகம் "பிரிட்டிஷ் அருங்காட்சியகம்"

உலக வரலாற்றின் 80 லட்சத்திற்கும் மேலான சேகரிப்பை தன்னகத்தே வைத்திருக்கும் ஒரு பிரம்மாண்டமான கலைப் பெட்டகம் பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.
மனிதன் உருவான காலத்திலிருந்து இப்போது வரையிலான வரலாறு, கலை, கலாச்சாரம் தொடர்பான ஆதாரங்களையும், வேலைப்பாடமைந்த வினோத பொருள்களையும், கதை ஆவணங்களையும் அதிக அளவிலும் விரிவான முறையிலும் விளக்கும் உலக வரலாற்றின் ஒரு வாழ்விடம் என்றே இந்த அருங்காட்சியத்தை சொல்லலாம்.

பிரிட்டனின் டாப் 15 அருங்காட்சியகங்கள் இவை தான்!

பிரிட்டன் நாடு அருங்காட்சியகங்களுக்கு பெயர் பெற்றதாகும். கலாச்சாரம், விளையாட்டு, மீடியாக்கள் ஆகிய துறைகள் கொண்ட அருங்காட்சியகங்கள், புகைப்பட காட்சியகங்கள் ஆகியவைகளின் முன்னணி பட்டியல் வெளியாகியுள்ளது.
பார்வையாளர்களின் எண்ணிக்கையை பொறுத்தவரையில் போன வருடத்தை விட இந்த வருடம் மூன்று மில்லியன் அளவுக்கு குறைந்துள்ளது.

இந்த பட்டியலில் பிரிட்டீஷ் அருங்காட்சியகம் முதல் இடத்தை பிடிக்கிறது.
முதல் 15 இடங்களுக்கான பட்டியல் :
1. British Museum
2. National Gallery
3. Tate Modern
4. Natural History Museum
5. Science Museum
6. V&A Museum
7. Royal Museums Greenwich
8. National Portrait Gallery
9. White Tower
10. Tate Britain
11. IWM London
12. Horniman Museum
13. Science National Railway
14. Science and Industry Manchester
15. Tate Liverpool