வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவர் பிறந்த தினம் செப்டம்பர் 1, 1715.சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவர் பிறந்த தினம் செப்டம்பர் 1, 1715.

பூலித்தேவன் (1715–1767) நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார். இந்திய விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’ என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும்  சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்.
“ "நெற்கட்டாஞ் செவ்வலுக்கு பெருமை என்ன?
நெருப்பாற்றைக் கடந்த பூலித்தேவனாலே" ”
என்ற நாட்டுப்புற பாடலை கொண்டு இவரின் சிறப்பை அறியலாம்.

பூழி நாடு

பூழி நாடு என்பது பாண்டிய நாட்டில் அமைந்த அகநாடுகளுள் ஒன்று. சங்ககாலம் தொட்டே இருந்து பாண்டியர் ஆட்சியின் கீழ் வரும் இந்நாடு 1378ஆம் ஆண்டு சேர நாட்டில் இருந்த ஒரு பாண்டிய மன்னனால்
வரகுண ராமன் சிந்தாமணி காத்தப்ப பூழித்தேவர் என்ற தளபதிக்குத் தானமாக வழங்கப்பட்டது. இவர் ஆப்பநாட்டுக் கொண்டையங்கோட்டை மறவர் வழியில் வந்தவராவார். ஆரம்ப காலத்தில் இதன் தலைநகரம் ஆவுடையாபுரம். நாயக்கர் காலத்தில் (1529–64) பாண்டி நாடு 72
பாளையங்களாக பிரிக்கப்பட்ட போது, பூழி நாட்டின் பகுதிகள் அதனுள் அடங்கின. அதன் பிறகு சில வருடங்கள் கழித்து அதன் தலைநகரம்
நெற்கட்டாஞ்செவ்வலுக்கு மாற்றப்பட்டது. நாயக்கர் கால வீழ்ச்சியின் போது பாளையங்கள் சுயவுரிமை பெறத்தொடங்கின. வரகுண ராமன் சிந்தாமனி காத்தப்ப பூலித்தேவரின் வழிவந்த பத்தாம் தலைமுறை மன்னனே சித்திர புத்திரத்தேவர் என்றவர் ஆவார்.

பெயர் காரணம்
பூலித்தேவன், தன்பகுதியில் நிலத்தை அடமானம் பிடிக்கும் பண்ணையார்களுக்கோ அல்லது ஆதிக்கம் செலுத்தும் மேல் இடத்திற்கோ, மேல்வாரம் தன்மையிலோ, வரி என்ற பெயரிலோ, ஒரு மணி நெல்லைக் கூட யாருக்கும் கண்ணில் காட்டமாட்டாராம், இதன் காரணமாய் ஆவுடையாபுரம்
நெற்கட்டுஞ்செவ்வல் என்றாகியது.

பட்டியல்
தலைமுறை பெயர் ஆ
1 வரகுண சிந்தாமணி பூலித்தேவன் 137
2 வடக்காத்தான் பூலித்தேவன் 142
3 வரகுண சிந்தாமணி வடக்காத்தான் பூலித்தேவன் 151
4 சமசதி பூலித்தேவன் 154
5 முதலாம் காத்தப்ப பூலித்தேவன் 157
6 இரண்டாம் காத்தப்ப பூலித்தேவன் 160
7 முதலாம் சித்திரபுத்திரத்தேவன் 161
8 மூன்றாம் காத்தப்ப பூலித்தேவன் 163
9 இரண்டாம் சித்திரபுத்திரத்தேவன் 166
10 நான்காம் காத்தப்ப பூலித்தேவன் 172
வரகுண ராமன் சிந்தாமனி காத்தப்ப பூலித்தேவரின் வழிவந்த பத்தாம் தலைமுறை மன்னனே சித்திர புத்திரத்தேவர் என்றவராவார். இவருக்கு பிறந்த பூலித்தேவன் என்பவரே இந்திய விடுதலைப் போராட்டத்தை தமிழகத்தில் தொடங்குவதற்கு காரணமாயிருந்த
பாளையக்காரர் போர்களின் முன்னோடி.


பிறப்பு

மதுரையில் நாயக்க மன்னர்களின் ஆட்சி 1529 முதல் 1736 வரை இருந்தது. இவர்களில்
விசுவநாத நாயக்கர் முதல்வராவார். இவர் 1529 முதல் 1564 வரை ஆட்சி புரிந்தார். இவருடைய ஆட்சி காலத்தில் தான் பாண்டிய நாடு ஆறு மண்டலங்கள் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டதில்
மதுரை ,திருவில்லிப்புத்தூர் ,திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் 18 மறவர் பாளையங்கள் ஏற்படுத்தப்பட்டது.ஒவ்வொரு பாளையமும் ஒருவரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு அவர்களுக்கு அந்த பாளையத்துக்கு முழுமரியாதையும், தனி அதிகாரங்களும்  வழங்கப்பட்டன. இத்தகைய பாளையங்களில் ஒன்று நெற்கட்டுஞ்செவ்வல் பாளையம் ஆகும்.

பூலித்தேவரின் பெற்றோர்கள் பெயர்
சித்திரபுத்திரத் தேவரும் சிவஞான நாச்சியாரும் ஆவர். பூலித்தேவர் 1-9-1715 ல் இவர்களின் புதல்வராகப்பிறந்தார். இயற்பெயர், 'காத்தப்பப் பூலித்தேவர்' என்பதாகும். 'பூலித்தேவர்' என்றும்
'புலித்தேவர்' என்றும் அழைக்கலாயினர்.
சிறுவயதிலேயே வீர உணர்ச்சியும், இறையுணர்வும் மிகுந்தவராக விளங்கினார். அவர் தன்னுடைய ஆறு வயது சிறுவனாக இருக்கும் பொழுது அவருக்கு முறைப்படியான கல்வி ஆரம்பிக்கப்பட்டது. இலஞ்சியைச் சேர்நத சுப்பிரமணிய பிள்ளை என்பவரிடம் சன்மார்க்க நெறிகளைப் பூலித்தேவர் பயின்று வந்தார். மற்ற தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களையும் கற்று, தாமே கவிதை எழுதும் அளவுக்குத்திறம் பெற்று விளங்கினார்.
பூலித்தேவருக்கு பன்னிரண்டு வயதான பொழுது அவருக்குப் போர்ப் பயிற்சி தொடங்கப்பட்டது. குதிரை ஏற்றம், யானை ஏற்றம்,மல்யுத்தம், வாள் வீச்சு, வேல் எய்தல், அம்பு எய்தல், சிலம்பு வரிசைகள், கவண் எறிதல், வல்லயம் எறிதல் மற்றும் சுருள் பட்டா சுழற்றுதல் போன்ற சகலவிதமான வீரவிளையாட்டுகளிலும் அவருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
இவர்கள் முக்குலத்தில் ஒரு பிரிவினர் ஆனாலும் இவர்கள் பெரும்பாலும் தங்களில் வீரத்திற்காக மட்டுமே அடையாளம் காணப்பட்டனர். தமிழில் "மறம்" என்றால் "வீரம்" என்று பொருளாகும். யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை என பல்வேறு பிரிவுகளை போர்ப்படை பிரிவுகள் இருந்தாலும் வெற்றியை நிர்ணயிப்பது காலாட்படையாகவே அப்பொழுது இருந்தது. அன்றைய காலாட்படையில் அதிக வீரமிக்க மக்கள் மறவர் குழுக்களுக்கே பெரும்பங்கு அளிக்கப்பட்டது. செம்ம நாட்டு மறவர்கள் செம்ம நாட்டு மறவர் பெண்கள் மூக்குத்தி அணியும் பழக்கம் உள்ளவர்கள். செம்ம நாட்டு மறவர்கள் அக்கா மகளை திருமணம் செய்யும் பழக்கம் உள்ளவர்கள். முதன்முதலில் வெள்ளையனை எதிர்த்த மன்னர் புலித்தேவன் இந்த செம்ம நாட்டு மறவர் இனத்தை சேர்ந்தவர். மறவர் இனத்தில் இவர்கள் மிகவும் தொன்மையானவர்கள்.

வாழ்க்கை

இவர் குளம் அமைத்துக் கொடுத்ததற்கான செப்பேடு.
அவரைப் பற்றிய ஒரு நாட்டுப் பாடலில் அவரின் உடல்வாகு பற்றிக் கூறப்பட்டுள்ளது. மாவீரன் பூலித்தேவர் ஆறடி உயரமுடையவர். ஒளி பொருந்திய முகமும், திண் தோள்களையும் உடையவர், பவளம் போன்ற உதடுகளும், மார்பும் இருந்ததாக அப்பாடல் கூறுகின்றது.
மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள புலிகளைக் கொன்று விளையாடுவதில் மிகுந்த விருப்பம் கொண்டு விளங்கினார். புலித்தோல் மற்றும் புலி நகங்களை அணிவதிலும் அவருக்கு விருப்பம் இருந்தது. இதனால்
பூலித்தேவரை எல்லோரும் புலித்தேவர் என்றே அழைத்து வந்தனர்.
காத்தப்ப பூலித்தேவரின் திறமையைக் கண்ட அவரது பெற்றோர் அவருடைய பன்னிரண்டாவது வயதில் அதாவது 1726 ல் அவருக்குப் பட்டம் சூட்டி அரசராக்கினார்கள்.
பின்னர் பூலித்தேவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. அவருக்கு வாழ்க்கைத் துணைவியாக அமைந்தவர் அவருடைய (அக்கா) மகள் கயல்கண்ணி என்கின்ற இலட்சுமி நாச்சியார் . கயல் கண்ணியின் சகோதரர் சவுணத்தேவரும் , பூலித்தேவரும் இணைபிரியாத நண்பர்கள். பூலித்தேவருக்கு கோமதி முத்துத் தலவாச்சி , சித்திரபுத்திரத் தேவன் மற்றும் சிவஞானப் பாண்டியன் என்று மூன்று மக்கள் பிறந்தனர்.
பாளையத்திலிருந்து வரும் வருமானத்தை அவர் நிர்வாகத்திற்கும், மக்களுக்கும் பயன்படுத்தி மற்றும் எஞ்சியதை கோயில் திருப்பணிக்காகவும் செலவு செய்தார். சங்கரன்கோயில், பால்வண்ணநாதர் கோயில், வாசுதேவநல்லூர்
அர்த்தநாரீசுவரர் கோயில், நெல்லை
வாகையாடி அம்மன் கோயில் மற்றும் மதுரை சொக்கநாதர் கோயில் என்று திருநெல்வேலிச் சீமையில் உள்ள பல கோயில்களுக்கும் பூலித்தேவர் திருப்பணி செய்துள்ளார். திருப்பணிகள், முழுக்கோவிலையும் சீர்படுத்துவது முதல் அணிகலன்கள் வழங்குவது வரை பலதரப்பட்டது. இவர் குளம் அமைத்துக் கொடுத்ததற்கான செப்பேடுகளும் உள்ளன.

விடுதலைப்போராட்டத்தில் பங்கு

1750-ல் இராபர்ட் கிளைவ் திருச்சிக்கு வந்து ஆங்கிலக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு தென்னாட்டுப் பாளையக்காரர்கள் தன்னை பேட்டி காண வேண்டுமென்ற அறிவிப்பைக் கொடுத்தான். இதனால் வெகுண்ட பூலித்தேவன் திருச்சிக்குத் தனது படையுடன் சென்று ஆங்கிலேயரை எதிர்த்தான். இதில் பூலித்தேவனே வெற்றிபெற்றான் என 'பூலித்தேவன் சிந்து' என்ற கதைப்பாடல் கூறுகிறது. [4] பூலித்தேவனும் இராபர்ட் கிளைவும் திருவில்லிப்புத்தூர் கோட்டையில் சந்தித்திருக்கலாம் என்றவும் கருதப்படுகிறது.
1755ஆம் ஆண்டு கர்னல் கீரோன் (கர்னல் அலெக்ஸாண்டர் ஹெரான்) தம் கோட்டையை முற்றுகையிட்டு கப்பம் கட்ட நிர்ப்பந்தம் செய்தபோது தன்னுடைய நிலப்பகுதியில் வசூலிக்கும் உரிமை வெள்ளையர் எவருக்கும் கிடையாது என வீர முழக்கமிட்டு வெள்ளையனை விரட்டியடித்து முதல் வெற்றி பெற்றார். [6]
அதே ஆண்டில் களக்காட்டிலும், நெற்கட்டும் செவல் கோட்டையிலும் நடைபெற்ற போரில் ஆங்கிலேயரின் கைக்கூலியான மாபூஸ்கானை தோற்கடித்தார். அதனை அடுத்து திருவில்லிபுத்தூர் கோட்டையில் நடைபெற்ற போரில் ஆற்காடு நவாபின் தம்பியைத் தோற்கடித்தார்.
1756 மார்ச்சு மாதம் திருநெல்வேலியில் மாபஸ்கானுடன் புலித்தேவர் நடத்திய போரில் புலித்தேவனின் உயிர்த்தோழன் மூடேமியாவை ஆங்கிலேயர்கள் துண்டு துண்டாக வெட்டி எறிந்ததால் மனமுடைந்த புலித்தேவன் போரை நிறுத்தித் திரும்பினார். அதனால் மாபஸ்கான் திருநெல்வேலியை தன்வசப்படுத்தினான். 1765 அக்டோபர் மாதம் வாசு தேவ நல்லூர் கோட்டையைத் தாக்கிய காப்டன் பெரிட்சன் புலித்தேவனிடம் தோற்றான்.
1760ஆம் ஆண்டு யூசுபுகான் நெற்கட்டும் செவல் கோட்டையைத் தாக்கியபோதும், 1766ஆம் ஆண்டு கேப்டன் பௌட்சன் வாசுதேவ நல்லூர்க் கோட்டையைத் தாக்கிய போதும் அவற்றை முறியடித்து வெற்றி கொண்டார். 1766ஆம் ஆண்டு தொடர்ந்து ஆங்கிலேயரிடம் தலைமைத் தளபதி பொறுப்பேற்றிருந்தவனும், கொடூரமான போர்முறைக்கும் பெயர் பெற்றவனுமாகிய கான்சாகிப்வால்
பூலித்தேவரை ஆரம்பத்தில் வெல்ல முடியாமல் சுமார் 10 ஆண்டுகள் போரிட்டு அதன் பின் பூலித்தேவர் தோல்வியடைந்தார். அதன் பின் தலைமறைவானார்.
நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட ஆங்கிலேயருக்கு எதிரான போர் என்கின்ற வகையில் உதவ வந்த டச்சுக்காரர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியையும் பூலித்தேவர் மறுத்துவிட்டார்.

அன்னியர் எதிர்ப்பு

பூலித்தேவர் ஆட்சி செய்து காலம் பாண்டியராட்சியின் முடிவும், நாயக்கராட்சியின் சரிவு காலமும் ஆகும். ஆற்காடு நவாப்பின் அத்துமீறல்கள் அதற்குள் ஆங்கிலேயரின் வருகை என்று பல தோற்றம் மறைவுகளைச் சந்தித்துக் கொண்டிருந்த காலம். இவ்வாறு பெரிய அளவில் நடக்கும் ஆட்சி மாற்றங்களால் சிறிய பாளையக்காரர்களுக்கு ஆபத்து என்பதை மன்னர் உணர்ந்தார். அதனால் அனைத்துப் பாளையக்காரர்களையும் ஒன்று கூட்டி அரசியலில் ஏற்படும் மாற்றங்களை பற்றித் தீவிரமாக விவாதித்து பாளையக்காரர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார்.
பூலித்தேவர் திட்டப்படி அனைத்து பாளையக்காரர்களும் நாயக்கராட்சிக்குக் கப்பம் கட்டுவதைத் தவிர்த்தனர். நாயக்கராட்சியும் வலுவிழந்து முகம்மதியர்கள் கையில் விழுந்தது. பின்னர் அது மகாராஷ்டிர அரசர்கள் கைகளுக்கு மாறி பின்னர் மீண்டும் முகம்மதியர் கைக்கு வந்தது.
ஆனால் ஆற்காடு நவாபுக்கும் மற்றோர் முகம்மதிய அரசனுக்கும் இடையில் ஏற்பட்ட பூசல் காரணமாக இரு பிரிவனரும் தனித்தனியே கப்பம் வசூல் செய்ய முனைந்தனர். இந்த இரு பிரிவினருக்கும் நடந்த குழப்பத்தைப் பயன்படுத்தி, பாளையக்காரர்கள் கப்பம் கட்டுவதை மொத்தமாக நிறுத்தினார்கள்.
இத்தகு சூழ்நிலையில் ஆற்காடு நவாபு ஆங்கிலேயர்களின் உதவியை நாடினான். இருவருக்கும் நடந்த ஒப்பந்தப்படி ஆற்காடு நவாபு வரிவசூலிக்கும் உரிமையை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்தான். அன்றிலிருந்து ஆங்கிலேயர்கள் இந்திய மன்னர்களோடு நேரடியாகப் போரிட ஆரம்பித்தனர்.
பாளையக்காரர்கள் கப்பம் கட்டாததால் கர்னல் கீரான் தலைமையில் கும்பினிப் படைமற்றும் ஆற்காடு நவாபின் அண்ணன் மாபூஸ்கான் தலைமையில் நவாபு படைகளும், கான்சாகிப் தலைமையில் உள்நாட்டுச் சிப்பாய் படைகளும் 1755-ஆம் ஆண்டு பாளையக்காரர்களைத் தாக்குவதற்குப் புறபட்டது. பேச்சளவில் இருந்த பாளையக்காரர்களின் ஒற்றுமை போர் என்றவுடன் உடைந்தது.
மாபூஸ்கான், கர்னல் கீரானுக்குச் செய்தி அனுப்பி உடனே புறப்பட்டுவரச் செய்தான். இருவரும் சேர்ந்து பூலித்தேவரின் கோட்டையை முற்றுகையிட்டனர். ஆங்கிலேயர் வசம் வெடிமருந்துகளும், துப்பாக்கிகளும், பீரங்கிகளும் இருந்தன. இருந்தும் பூலித்தேவரின் கோட்டையில் ஒரு சிறு விரிசலைக் கூட ஏற்படுத்த முடியவில்லை. மாறாக அவர்களிடம் இருந்த தளவாடங்களும் உணவும் தீர்ந்தது. இந்த செய்தியைத் தன் ஒற்றர்கள் மூலம் கேள்விப்பட்ட மன்னர் உடனடியாக கோட்டையை விட்டு வெளியே வந்து ஆங்கிலப்படைகளைக் கொன்று குவித்து சின்னாபின்னமாக்கினார்.
ஆங்கிலேயருடனான முதல் போரில் பூலித்தேவர் வெற்றி பெற்றாலும் மறுபடியும் அவர்கள் தாக்குவார்கள் என்கிற காரணத்தினால் மீண்டும் பாளையகாரர்களை ஒன்றுபடுத்த பூலித்தேவர் முயற்சி செய்தார். ஆனால் அவருடைய எண்ணம் ஈடேறவில்லை. பல பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்க்கத் துணிவின்றி தங்கள் அரசாட்சியே போதும் என்கின்ற சுயநலத்தோடு ஒதுங்கிவிட்டார்கள். பூலித்தேவரின் கூட்டணி முயற்சி ஆற்காடு நவாபுக்கும் ஆங்கிலேயர்க்கும் தெரியவந்தது. உடனே அவர்கள் மற்ற பாளையக் காரர்களோடு தொடர்பு கொண்டு அவர்களுக்குப் பதவி ஆசையைக் காட்டி, தங்கள் வசப்படுத்தினார்கள்.
இதன் மூலம் சுதேசிப்படை என்கின்ற புதிய படையை உருவாக்கி அதை யூசுப்கான் என்பவனிடம் ஒப்படைத்தனர். இந்த யூசுப்கான் பிறப்பால் மருதநாயகம் என்ற தமிழன். பின்னர் நாளடைவில் மதம் மாறி ஆங்கிலேயர்களோடு துணை சேர்ந்து பின்னர் சுதேசிப் படைகளின் தலைவன் ஆன இவன், பதவி ஆசைக்காக, அன்னியராட்சியை எதிர்த்து முதல் குரல் கொடுத்த மாவீரன் பூலித்தேவரை கடுமையாக எதிர்த்தான்.
1755-ஆம் ஆண்டு தொடங்கி 1767-ஆம் ஆண்டு வரை பல போர்களைப் பூலித்தேவர் சந்திக்க நேர்ந்தது, பரப்பளவில் ஒரு சிறிய பாளையத்திற்கு மட்டுமே தலைவரானாலும் பூலித்தேவரால் ஆங்கிலேயர்களையும், கூலிப்படைகளையும் எதிர்த்துப் பன்னிரெண்டு ஆண்டுகள் போர் புரிய முடிந்தது.
1761-ஆம் ஆண்டு கான்சாகிபுடன் இறுதியாக நடைபெற்ற போரில் பூலித்தேவரின் படைகள் யூசுப்கான் படைகளிடம் தோற்றன. பத்தாண்டுகளாக போராடியும் வெற்றி பெற இயலாத நிலையில் இங்கிலாந்திலிருந்து தருவிக்கப்பட்ட பேய்வாய் பீரங்கிகளின் உதவியோடு பூலித்தேவரின் கோட்டையில் முதன் முதலாக உடைப்பு ஏற்படுத்தப்பட்டது.
அதற்குப்பின் ஆங்கிலேயப் படை, தளவாடங்களோடு கோட்டைக்குள் புகுந்தது. இந்நிலையில் வேறு வழியின்றி எஞ்சிய படைகளோடு பூலித்தேவர் கடலாடிக்குத் தந்திரமாகத் தப்பிச் சென்றார். அவர் கோட்டையை விட்டு சென்றாலும் ரகசியமாக படைகளைத் திரட்டும் பணியில் ஈடுபட்டார். சில மாதங்களுக்குப் பின்னர் பூலித்தேவர் மீண்டும் கோட்டையைப் பிடித்து பாளையத்தைச் சீர்படுத்தினார்.
ஆனால் இதையறிந்த ஆங்கிலேயர் நெற்கட்டான் செவ்வல் பாளையத்தின் மன்னர் பூலித்தேவரைப் பிடிக்க ஒரு நாட்டையே வளைக்கக் கூடிய அளவுக்குப் பெரும் படையுடன் வந்தனர். 1767 மே மாதம் டொனால்டு காம்பெல் தலைமையில் மேஜர் பிளிண்ட், காப்டன் ஹார்பர் ஆகியோர் வாசு தேவ நல்லூர் கோட்டையைத் தாக்கினர். இத்தகைய பெரும்படையை எதிர்பார்க்காத நிலையிலும் பூலித்தேவர் நிலைத்து நின்று போரைத் தொடர்ந்தார். ஆனால் ஆங்கிலேயப் படை பீரங்கிகளின் முன் மன்னர் படையின் வாளும் வேலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. குண்டுகளால் கோட்டை சுவரில் ஏற்பட்ட ஓட்டையை வீரர்கள் களிமண்ணும் வைக்கோலும் வைத்து அடைத்தனர். அதுவும் முடியாத சூழ்நிலையில் தத்தம் உடல்களைக் கொண்டு ஓட்டையை அடைத்துக் காத்தனர். ஒருவாரம் நடந்த இந்த போரில் எதிர்பாராமல் அச்சமயம் பெய்த பலத்த மழையைப் பயன்படுத்தி மன்னர் தப்பிச்சென்று மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மறைந்து கொண்டார்.
1767 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போரே மன்னரின் கடைசிப்போர்.

மறைவு

பூலித்தேவரின் மறைவு பற்றி இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. மன்னர் தப்பிச் சென்றாலும் அவர் உயிரை குறியாகக் கொண்ட ஆங்கிலேயர்கள் அவரைத் தீவிரமாகத் தேடினர். ஒரு சாரார் கருத்துப்படி ஆரணிக் கோட்டையின் தலைவன் அனந்த நாராயணன் என்பவனின் மாளிகைக்கு பூலித்தேவரை வரச் செய்து அங்கு கைது செய்யப்பட்டார் என்றும், பாளையங்கோட்டைக்குக் கொண்டு செல்லும் வழியில், சங்கரன் கோயிலின் இறைவனை வழிபட வேண்டும் என்று பூலித்தேவர் விரும்பியதாகவும், அதன்படி கும்பினியப் போர் வீரர்கள் புடைசூழச் சென்று இறைவனை வழிபட்டதாகவும், அப்போது பெரிய புகை மண்டலமும் சோதியும் கைவிலங்குகள் அறுந்து விழ சோதியில் கலந்தார் என்றும், பூலித்தேவன் சிவஞானத்துடன் ஐக்கியமானதால் "பூலிசிவஞானம்" ஆனார் என்றும் நாட்டுப்புறப் பாடல்கள் கூறுகின்றன. இன்றைக்கும் சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயணன் கோவிலில் பூலித்தேவர் மறைந்த இடம் என்று ஒரு இடம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
மற்றொரு கருத்து பூலித்தேவர் ஆங்கிலேயரால் கைதுசெய்யப்பட்டு தூக்கிலிட்ட செய்தியை மக்கள் அறிந்தால் அவர்கள் கிளர்ச்சி செய்யக்கூடும் என்பதால் ஆங்கிலேயர் இதனை ரகசியமாகச் செய்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் தமிழக அரசால் புதுப்பிக்கப்பட்டு அவரது நினைவு மாளிகையாக அமைக்கப்பட்டுள்ளது.

நினைவு மாளிகை
தமிழ்நாடு அரசு திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி வட்டம் பகுதியிலுள்ள நெல்கட்டும்செவல் எனும் ஊரில் பூலித்தேவன் நினைவைப் போற்றும் வகையில் பூலித்தேவன் நினைவு மாளிகை, திருமண மண்டபம் ஆகியவைகளை அமைத்துள்ளது. இந்த நினைவு மாளிகையின் முகப்பில் பூலித்தேவன் முழு அளவு திருஉருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு ஆயிரம் பேர் அமரக்கூடிய அளவில் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. பூலித்தேவன் காலத்து நினைவுச் சின்னங்கள் மற்றும் ஆயுதங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.


பூலித்தேவன் .விடுதலைப்போராட்டத்தில் பங்கு...

நெல்லை சீமையில் சிவகிரி பகுதியிலுள்ள நெல்கட்டும்செவல் என்னும் குறு நில பகுதியை ஆண்ட மன்னன்தான், பூலித்தேவன். இவனது பிறப்பு,-வளர்ப்பு பற்றி முந்திய வார பகுதியில் படித்தோம். இந்த மன்னன், இந்திய சுதந்திர போராட்டத்திற்கு முன்னோடியானவன்.
1750-ல் இராபர்ட் கிளைவ் திருச்சிக்கு வந்து ஆங்கிலக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு, தென்னாட்டுப் பாளையக்காரர்கள் தன்னை காண வேண்டுமென்ற அறிவிப்பைக் கொடுத்தான். இதனால் வெகுண்ட பூலித்தேவன், திருச்சிக்குத் தனது படையுடன் சென்று, ஆங்கிலேயரை எதிர்த்தான்.
இதில் பூலித்தேவனே வெற்றிபெற்றான் என ‘பூலித்தேவன் சிந்து’ என்ற கதைப்பாடல் கூறுகிறது. 1755–ம் ஆண்டு ஆங்கிலேய தளபதி கர்னல் அலெக்ஸாண்டர் ஹெரான், பூலித்தேவனின் கோட்டையை முற்றுகையிட்டு கப்பம் கட்ட நிர்ப்பந்தம் செய்தபோது, “என்னுடைய நிலப்பகுதியில் வரி வசூலிக்கும் உரிமை வெள்ளையர் எவருக்கும் கிடையாது” என வீர முழக்கமிட்டு வெள்ளையனை விரட்டியடித்து, வெற்றி பெற்றார், பூலித்தேவன்.
அதே ஆண்டில் களக்காட்டிலும், நெற்கட்டும் செவல் கோட்டையிலும் நடைபெற்ற போரில், ஆங்கிலேயரின் கைக்கூலியான மாபூஸ்கானை, பூலித்தேவன் தோற்கடித்தார். அதனை அடுத்து திருவில்லிபுத்தூர் கோட்டையில் நடைபெற்ற போரில் ஆற்காடு நவாபின் தம்பியை, பூலித்தேவன் தோற்கடித்தார். 1756 மார்ச் மாதம் திருநெல்வேலியில் மாபஸ்கானுடன் பூலித்தேவர் நடத்திய போரில், புலித்தேவனின் உயிர்த்தோழன் மூடேமியாவை, ஆங்கிலேயர்கள் துண்டு துண்டாக வெட்டி எறிந்ததால் மனமுடைந்த பூலித்தேவன், போரை நிறுத்தித் திரும்பினார்.
அதனால் மாபஸ்கான் திருநெல்வேலியை தன்வசப்படுத்தினான். 1765 அக்டோபர் மாதம் வாசு தேவ நல்லூர் கோட்டையைத் தாக்கிய காப்டன் பெரிட்சன், புலித்தேவனிடம் தோற்றான்.1760–ம் ஆண்டு யூசுப்கான், நெற்கட்டும் செவல் கோட்டையைத் தாக்கியபோதும், 1766–ம் ஆண்டு கேப்டன் பௌட்சன், வாசுதேவ நல்லூர் கோட்டையைத் தாக்கிய போதும் , பூலித்தேவன், கடுமையாக போராடி அவர்களை முறியடித்து வெற்றி கொண்டார்.
1766–ம் ஆண்டை தொடர்ந்து ஆங்கிலேயரிடம் தலைமைத் தளபதி பொறுப்பேற்றிருந்தவனும், கொடூரமான போர்முறைக்கும் பெயர் பெற்றவனுமாகிய கான்சாகிப்வால், பூலித்தேவரை ஆரம்பத்தில் வெல்ல முடியாமல், சுமார் 10 ஆண்டுகள் போரிட்டு அதன் பின்தான் பூலித்தேவர் தோல்வியடைந்தார். அதன் பின் பூலித்தேவன் தலைமறைவாகி விட்டார். நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட ஆங்கிலேயருக்கு எதிரான போரில், அவருக்கு உதவ வந்த டச்சுக்காரர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்கள் முன் வந்தனர் ஆனால் அவர்களின் உதவியை ஏற்க பூலித்தேவர் மறுத்துவிட்டார்.
பூலித்தேவர் ஆட்சி செய்த காலம், தென் பாண்டியில் பாண்டியராட்சியின் முடிவும், மதுரையில் நாயக்கராட்சியின் சரிவு காலமும் ஆகும். ஆற்காடு நவாப்பின் அத்துமீறல்கள், ஆங்கிலேயரின் படைகளுடன் போர் என்று பலவிதமான சம்பவங்களை சந்தித்துக் கொண்டிருந்த காலம். இவ்வாறு பெரிய அளவில் நடக்கும் ஆட்சி மாற்றங்களால் சிறிய பாளையக்காரர்களுக்கு ஆபத்து என்பதை மன்னர் பூலித்தேவர் உணர்ந்தார். அதனால் அனைத்துப் பாளையக்காரர்களையும் ஒன்று கூட்டி, அரசியலில் ஏற்படும் மாற்றங்களை பற்றித் தீவிரமாக விவாதித்து பாளையக்காரர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார்..

உலக கடித தினம் செப்டம்பர்-1


உலக கடித தினம் செப்டம்பர்-1

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 1-ஆம் தேதி கடிதம் எழுதும் தினமாக உலக அளவில் கொண்டாடப்படுகிறது. உலக கடித தினம் என்றும் அழைக்கப்படும் இந்த நாள் கையால் கடிதம் எழுதும் முறையை பாராட்டும் விதமாக கொண்டாடப்படுகிறது.
இன்றைய கணிப்பொறி உலகில், கையால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று நமக்கு வருகிறது என்பதே ஒரு பெரிய பரிசாக எண்ணிக் கொண்டாடப்பட வேண்டிய ஒரு விஷயமாகும். பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கடிதமே மக்கள் தொடர்பு கொள்ளும் சாதனமாக இருந்தது என்பது நம்மால் நம்ப முடியாத ஒன்றாகவுள்ளது.
உலக கடித தினம் என்பது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்படக்கலைஞர் ரிச்சர்ட் சிம்ப்கின் என்பவரால் 2014-ஆம் ஆண்டு கொண்டு வரபட்ட ஒரு விஷயமாகும். கையால் கடிதம் எழுதும் முறையின் காதலரான அவர், ஒரு கடிதம் என்பது இன்றைய மின்னஞ்சல் ஆகியவற்றை விட ஒரு தனிப்பட்ட அனுபவமாக அமையும் என்று கருதுபவர். அதனால்தான் அதனை கொண்டாடும் விதமாக இந்த தினத்தை அனுசரிக்கிறார்.
இன்றைய தினத்தில் நமது டிஜிட்டல் தகவல் தொடர்பு முறைகளை கைவிட்டு, நமக்கு பிடித்த ஒருவருக்கு ஒரு கடிதம் எழுதுவதே சிறப்பான கொண்டாட்டமாக இருக்கும்.


கடிதம் எழுதலாம் வாங்க!

இருபதாண்டுகளுக்கு முன்பு வரை வீட்டு வாசலில், ‘சார் போஸ்ட்’ என்ற குரல் கேட்டால் வீடே பரபரப்பாகிவிடும். உறவினர் அல்லது நண்பர்கள் அனுப்பிய அந்தக் கடிதத்தை ஆளாளுக்கு வாங்கிப் படிப்பார்கள். பின்னர் ஒரு கடிதத்தைப் பதிலாக எழுதித் தபாலில் சேர்ப்பார்கள்.
பிற்பாடு கூரியர் எனப்படும் தனியார் தபால் சேவையும், கம்ப்யூட்டர் உதவியால் இமெயிலில் தகவல் தொடர்பு என அடுத்தடுத்த நிலைகளுக்குச் சென்றது. இன்றோ வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மூலம் தகவலைப் பரிமாறிக்கொள்கிறோம் அல்லவா? இருந்தாலும் கைப்பட ஒருவரின் கையெழுத்தில் நலம் விசாரித்து, தகவல்களைத் தெரிவிக்கும் கடிதங்களுக்குத் தனி மதிப்பு உண்டு. பாரம்பரியமான இந்தக் கடிதம் எழுதும் பண்பு என்பது வாழ்க்கையில் அவசியமான ஒன்று. அதனால்தான் அது குறித்துப் பாடப் புத்தகங்களிலும் படித்துவருகிறீர்கள்!.
தனிப்பட்ட வகையில் எழுதப்படும் கடிதங்கள், அலுவலக மற்றும் வணிக நோக்கங்களுக்காக எழுதப்படுபவை, அரசியல்ரீதியானவை எனக் கடிதங்கள் பல வகைப்படும். புகழ் பெற்ற தலைவர், எழுத்தாளர்களின் கடிதங்கள் அவற்றின் ஆழமான கருத்துகளுக்காகப் புத்தக வடிவில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, சுதந்திரப் போராட்டக் காலத்தில் சிறையில் அடைபட்டிருந்தபோது மகள் இந்திராவிற்கு எழுதிய ‘மகளுக்குக் கடிதம்’ இந்த வகையில் புகழ் பெற்றவை.
தகவல் தொடர்பின் முக்கிய அம்சமான கடிதம் எழுதுதலை வளர்ப்பதற்காக ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் தேதி உலகக் கடிதம் எழுதும் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டிக் கடிதம் எழுதும் போட்டிகள்கூட நடத்தப்படுகின்றன. கடிதம் எழுதும் கலையை மீட்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ரிச்சர்டு சிம்ப்கின் என்பவரால் தொடங்கப்பட்டது உலகக் கடிதம் எழுதும் தினம்.
சில நாடுகளில் டிசம்பர் 7 அன்று இத்தினம் கொண்டாடப்படுகிறது. இதுதவிரப் பல்வேறு நாடுகளும் கடிதம் எழுதுதலை ஊக்குவிப்பதற்காகத் தேசிய கடிதம் எழுதும் நாளை தனியாகக் கொண்டாடுகிறார்கள். கடிதம் எழுதுவதை மறந்துவிட்ட இந்தக் காலத்தில் அதை மீட்பதுதான் அனைவரின் நோக்கம்.
உலகக் கடிதம் எழுதும் நாளை முன்னிட்டு நீங்கள் என்ன செய்யலாம்? ஒரு பேனா, பேப்பர் எடுங்கள். ஊரில் உள்ள உங்கள் தாத்தா, பாட்டி, விருப்பத்திற்குரிய உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் ஆகியோரில் யாருக்கேனும் ஒரு கடிதம் எழுதி அனுப்புங்கள். அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் நீங்களே உங்கள் கைப்பட எழுத முயற்சி செய்யுங்கள். சந்தேகம் எழுந்தால் பெற்றோர், ஆசிரியரிடம் கேளுங்கள்.
கடிதம் எழுதும் பழகத்தால் எழுத்து, சிந்தனை, தகவல் தொடர்பு, பொது அறிவு, பிறரை மதிக்கும் பண்பு, நட்பு பாராட்டுவது, நயமாக நாம் சொல்ல வருவதைத் தெரிவிக்கும் பழக்கம் பலப்பல திறமைகள் கிடைக்கும். ஊரில் இருக்கும் தாத்தா பாட்டிக்கு நீங்கள் கைப்பட கடிதம் எழுதினால் அவர்கள் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. அவர்களிடமிருந்து கிடைக்கும் பதில் கடிதங்கள் உங்களை உற்சாகப்படுத்தி வழிகாட்டும்.
குழந்தைகளே, எங்கே போகிறீர்கள்? ஓ… கடிதம் எழுதவா?


வியாழன், 30 ஆகஸ்ட், 2018

கல்வியாளர் மரியா மாண்ட்டிசோரி பிறந்த தினம் ஆகஸ்ட் 31 , 1870 –மே 6 , 1952.


கல்வியாளர் மரியா மாண்ட்டிசோரி பிறந்த தினம் ஆகஸ்ட் 31 , 1870 –மே 6 , 1952.

மரியா மாண்ட்டிசோரி ( ஆகஸ்ட் 31 , 1870 –
மே 6 , 1952 ) இத்தாலியைச் சேர்ந்த கல்வியாளர், மனோதத்துவ மருத்துவர். இத்தாலியில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண். இவர் சிறு குழந்தைகளை பயிற்றுவிக்க ஒரு புதிய முறையை உருவாக்கி ஜனவரி 6 , 1907 இல் ரோம் நகரில் தனது பள்ளியில் அறிமுகப்படுத்தினார்.
இவரது முறையை பின்பற்றி கல்வி கற்ற குழந்தைகள் சிறு வயதிலேயே விளையாட்டை விட வேலையில் சாதிக்க அதிக ஆர்வம் காட்டினர். தொடர்ந்து
மூளைக்கு வேலை கொடுத்தாலும் அதிகம் களைப்படைவதில்லை. இதனால் இவரது முறையை ஐரோப்பா முழுவதும் பயன்படுத்த துவங்கினர். நெதர்லாந்தில் மிக புகழ் வாய்ந்த ஆசிரியப்பயிற்சி பள்ளியை நிறுவினார். பின்னாளில் 1939 முதல் 1947 வரை இந்தியாவிலும்
இலங்கையிலும் பணியாற்றினார்.
மாண்டிசோரி முறைக் கல்வி
இந்த கல்வி முறை குழந்தைகள் தாமாக முன்வந்து செயல்படுவதற்கும், தனது தேவைகளை தானே செய்து கொள்ளவும் வழி செய்கிறது. இந்த முறையில் நடக்கும் வகுப்புகளில் ஆசிரியர்கள் இல்லை, மாறாக அவர்கள் வழிநடத்துபவர்கள் என்றே கருதப்படுகிறார்கள்.
குழந்தைகள் புதியவற்றை தாமாக முன்வந்து ஆர்வமுடன் கற்றுக் கொள்ளவும். அவர்கள் தவறான பழக்கங்களை கற்றுக் கொள்ளாமலும், குழந்தைகளின் முயற்சிகள் வீணாகிப் போகாமலும் பார்த்துக் கொள்வதே இந்த வழிநடத்துபவர்களின் (ஆசிரியர்களின்) பணி. இவரது மிகச்சிறந்த புத்தகங்கள் "The Absorbent Mind", "The Discovery of the Child"

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

பாப் இசைப் பாடகர் மைக்கல் ஜாக்சன் பிறந்த தினம் ஆகஸ்ட் 29, 1958பாப் இசைப் பாடகர் மைக்கல் ஜாக்சன் பிறந்த தினம் ஆகஸ்ட்  29, 1958

மைக்கல் ஜோசஃப் ஜாக்சன் ( Michael Joseph Jackson , ஆகத்து 29, 1958 - சூன் 25, 2009) ஓர்
ஆபிரிக்க அமெரிக்க பாப் இசைப் பாடகர், நடன இயக்குனர், பாடல் ஆசிரியர், தொழில் தலைவர், மற்றும் வள்ளல் எனப் பல முகங்கள் கொண்டவர். புகழ்பெற்ற ஜாக்சன், இசைக் குடும்பத்தில் ஏழாம் பிள்ளை. 1964இல் இவரின் நான்கு உடன்பிறந்தவர்களுடன் சேர்ந்து ஜாக்சன் 5 என்ற இசைக்குழுவில் சேர்ந்தார். பின் 1971 இல் தனியாக பாடத் துவங்கி புகழடைந்தார். கிங் அஃப் பாப் (பாப் இசையின் மன்னர்) என்றும் எம்.ஜெ என்றும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். இவரால் வெளியிடப்பட்ட இசைத்தொகுப்புகளில் ஐந்து உலகெங்கும் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டதாகும். 1982இல் வெளிவந்த திரில்லர் உலகில் பெருமளவில் விற்பனை செய்யப்பட்ட இசைத் தொகுப்புகளின் பட்டியலில் முதலாம் நிலையில் உள்ளது. உலகெங்கிலும் உள்ள பல தரப்பு மக்களின் நடுவில் நாற்பது ஆண்டு காலமாகப் புகழ்பெற்றவராக வாழ்ந்து வந்துள்ளார்.
பாடல் எழுதி, அதற்கு இசையமைத்து, பாடலுக்கு ஏற்றாற் போல் நடனம் ஆடுவது, இடை இடையே நடிப்பு என அனைத்தும் கலந்த 'பாப்' புதிய நடனத்தை படைத்தார்.
1980களின் துவக்கத்தில் பாப் இசை உலகில் புகழ் பெற்ற பாடகரானார்.
அமெரிக்காவில் முதலாகப் பல மக்கள் செல்வாக்குப் பெற்ற கருப்பின இசைக்கலைஞரானார். இவரின் இசை நிகழ்படங்களை எம்.டி.வி. ஒளிபரப்பு செய்து எம்.டி.வி.யும் புகழடைந்தது. இதனாலும் இசை நிகழ்படம் படைப்பு ஒரு தலைமையான கலை ஆனது. ஜாக்சன் படைத்த ரோபாட், மூன்வாக் போன்ற நடன வகைகளும் பிரபலமானது. இவரின் நடனமாலும் இசையாலும் பல இசை வகைகள் தாக்கம் பெற்றன.
பல சமூக தொண்டுகளுக்கு உலக முழுவதிலும் இசையரங்கு நிகழ்ச்சிகளை நடத்தி நிதியுதவி செய்துள்ளார். ஆனால் குழந்தைகளுடன் உடலுறவு செய்தார் என்று 1993இல் இவர் குற்றம் சாட்டப்பட்டார். இறுதியில் இவர் குற்றமில்லாதவர் என்று தெரிவித்துள்ளது, ஆனாலும் இவர்பற்றிய பொது மக்களின் கருத்துகள் மோசமானது. இன்று வரையும் அமெரிக்கப் பரவலர் பண்பாட்டில் இவர் ஒரு செல்வாக்கு பெற்றவர் ஆவார்.

பிறப்பு
மைக்கேல் ஜாக்சன் 1958 ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி இண்டியானா நகரில் ஜோசப் வால்டர் - கேத்ரின் எஸ்தர் என்ற தம்பதிக்கு ஏழாவது மகனாகப் பிறந்தார். மைக்கேல் ஜாக்சனின் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 8 குழந்தைகள். மைக்கேலின் தந்தை ஒரு இரும்பு ஆலையில் கிரேன் இயக்குபவராக இருந்தார். ஜோசப் ஒரு இசைக் கலைஞன். ஜோசப் தன் உடன்பிறந்தவர்களுடன் பாண்டு வாத்திய குழுவில் இருந்தார். ஆனால் அவரால் சாதிக்க முடியவில்லை. அதனால் தன் மகன்களுக்குக் கடுமையான பயிற்சிகளைக் கொடுத்தார். ஆறு வயதில் துவக்கப் பாடசாலையின் பாடல் போட்டியில் முதல் பரிசு வாங்கினார். பின் இசையில் நாட்டம் அதிகமாக மைக்கல் ஜாக்சன் தன் தமயன்களுடன் சேர்ந்து ஜாக்சன்-5 என்ற குழுவில் இணைந்தார். உலகின் புகழ்பெற்ற இசையரங்குகளில் ஒன்றான அப்பல்லோ அரங்கில் ‘ஜாக்சன் 5’ குழுவின் முதல் பாட்டுத் தொகுப்பை அந்நாளில் மிகவும் புகழ்பெற்ற டயானா ராஸ் எனும் பாடகி வெளியிட்டார். அதன் பிறகு தொடர்ந்து டயானா ராஸ் மைக்கேலுடன் இணைந்து பாட துவங்கினார். அதன் பின் மைக்கலும் உலகப் புகழ்பெற்ற பாடகராக மாறினார். ஒன்பது வயதிலேயே மைக்கல் விண்மீன் நிலையை பெற்றார்.
திருமணம்
1996ல் பிரஸ்லி என்ற பெண்ணை மைக்கேல் ஜாக்சன் மணந்தார். பின்னர் 1999ல் டெபோரே என்ற பெண்ணையும் மணந்தார். இரண்டு திருமணங்களுமே மைக்கேல் ஜாக்சனின் அன்னியமான நடவடிக்கைகளால் மணமவிலக்கில் முடிந்தன. மைக்கேல் ஜாக்சனுக்கு பாரிஸ் மைக்கல் காதரின் ஜாக்சன் என்ற மகளும், மைக்கல் ஜோசப் ஜாக்சன் மற்றும் பிரின்ஸ் மைக்கல் ஜாக்சன்-2 என்று இரு மகன்களும் உள்ளனர்.
பாடல் தொகுப்புகள்
ஆண்டு பெயர்
1972 காட் டு பி தேர்
1979 ஆப் தி வால் ,
1982 திரில்லர் ,
1987 பேட் ,
1991 டேஞ்சரஸ் மற்றும்
1995 ஹிஸ்டரி
சாதனை
"திரில்லர்" என்ற பாடல் தொகுப்பு ரசிகர்கள் நடுவில் பெருத்த வரவேற்பை ‌பெற்றது. ஒட்டு மொத்த உலகத்தையும் ஜாக்சனை திரும்பிப் பார்க்க வைத்தது. பல கிராமி விருதுகளையும், அமெரிக்க இசை விருதுகளையும் வாங்கியுள்ளார். கிராமி வாழ்நாள் சாதனையாளர் விருதும் வாங்கியுள்ளார். 75 கோடி தொகுப்புகள் விற்றதற்காகவும், 13 கிராமி விருதுகள் பெற்றும் இரண்டு முறை கின்னஸ் நூலில் இடம் பெற்றார் மைக்கேல் ஜாக்சன்.‘ப்ளாக் ஆர் ஒய்ட்’ என்ற காணொளி ஒரே நேரத்தில் 27 நாடுகளில் ஒளிபரப்பப்பட்டது. 50 கோடி பார்வையாளர்கள் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தார்கள். இன்றுவரை இதுவே உலக அளவில் அதிகப் பார்வையாளர்கள் பார்த்த நிகழ்ச்சியாகும்.
நேவர்லேன்ட்
நேவர்லேன்ட் என்கிற பண்ணை வீடு ஒன்றை மைக்கல் ஜாக்சன் வாங்கினார். அது குழந்தைகள் உலகமாகவே மாறிப்போனது. நெவர்லேண்ட் 3000 ஏக்கரில் அமைக்கப்பட்ட ஒரு பெருவீடு. மாயக் கதைகளில் வருவது போன்ற அமைப்பில் மைக்கல் ஜாக்சன் அதை வடிவமைத்திருந்தார். மலைப்பாம்பு, நாகப்பாம்பு, தவளை, நாய், ஒட்டகச் சிவிங்கி, குரங்கு, யானை, உராங் உடாங், மைக்கேலின் அறைத் தோழனாக இருந்த பபிள்ஸ் என்ற சிம்பன்ஸி, சிங்கம், புலி, கரடி என்று பலவிதமான விலங்குகளும், பெருகுடை சுற்றிகள், பொம்மை வீடுகள், கேளிக்கை ரயில், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதற்கு உந்து வசதியும், ஒரு உந்து நிலையமும் அந்த வீட்டிலேயே அமைக்கப்பட்டிருந்தது. அங்கு குழந்தைகளைத் தவிர வேறு யாரையும் மைக்கேல் ஜாக்சன் இசைவு அளித்ததில்லை.

ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம்
1979இல் ஒரு நடனப் பயிற்சியின்போது மைக்கேல் ஜாக்சனின் மூக்கு உடைந்தது. அதனால் முதன் முதலில் ஒர் ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம் செய்து கொண்டார். அதனால் சுவாசிப்பதில் தொந்தரவு ஏற்படவே மீண்டும் ஒர் ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம் செய்ய வேண்டி வந்தது. 1984, 3000 பார்வையாளர்களுக்கு முன் பில்லி ஜீன் பாடலைப் பாடி ஆடிக் கொண்டிருக்கும்போது, மேடையில் வெடித்த வெடியின் தீ மைக்கேல் ஜாக்சனின் முடியில் பட்டது.

இறப்பு
2009, ஜூன் 25 அன்று இவர் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக இறந்தார்  . இதனை லாஸ் ஏஞ்சலஸ் தீயணைப்பு துறை கேப்டன் இச்டீவ் ருடா உறுதிப்படுத்தினார் .ஆற்றல்பூர்வமாக இவரின் இறப்பிற்கான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.நடனத்தின் எல்லை மைக்கேல் ஜாக்சன் -ஒரு சகாப்தம்!

தனது இனிய இசையால் உலகையே கட்டிப் போட்டவர் மைக்கேல் ஜாக்ஸன். 1958ல் அமெரிக்காவில் பிறந்தார். தனது 9 வயதிலேயே இசைத்துறையில் கால் பதித்த ஜாக்ஸன், வெற்றிகரமான பாப் பாடகராக மேடைகளைக் கலக்க ஆரம்பித்தார். தி ஜாக்ஸன் 5 எனும் பெயரில் தனி இசைக் குழுவைத் தொடங்கிய ஜாக்ஸன், 1970 ல் அந்தசக் குழுவின் சூப்பர் ஸ்டாராகவும், உலக பாப் இசையின் மிகச் சிறந்த பாடகராகவும் பார்க்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 12.
1972 ம் ஆண்டு 'பென்' எனும் பெயரில்     தனது தனி  ஆல்பத்த வெளியிட்டார். 6 வருடங்களுக்குப் பின் தனது முதல் திரைப்படமான 'தி விஸ்'ஸில் நடித்தார். பின்னர்தான் தனது நண்பர் ஜோனுடன் இணைந்தார். 1979 ல் ஆஃப் தி வால் மற்றும் 1982 ல் த்ரில்லர் ஆகிய ஜாக்ஸனின் இசை ஆல்பங்கள் சரித்திரம் படைத்தன. ஆஃப் தி வால் ஆல்பம்தான் டிஸ்கோ இசையை உலகம் எங்கும் பிரபலப்படுத்தியது. 10 மில்லியன் இசைத்தட்டுகள் விற்பனையாகின. அன்றைக்கு உலகையே வாய்பிளக்கச் செய்த சாதனை இது. த்ரில்லருக்கு மட்டும் 8 கிராமி விருதுகள் கிடைத்தன. உலக இசையின் சக்ரவர்த்தியாக அறிவிக்கப்பட்டார் மைக்கேல் ஜாக்ஸன். உலகமே இனம் மொழி நாடு என்ற எல்லைகளைக் கடந்து அவரது இசைக்காக உருகியது. த்ரில்லர் ஆல்பம் மட்டுமே 41 மில்லியன் விற்றுத் தீர்ந்தன. இன்றும் பாப் இசையில் அதிகம் விற்பனையாகும் ஆல்பங்களில் ஒன்றாகவே த்ரில்லர் திகழ்கிறது. இது உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றது. இசையிலும் கூட நிறவெறி கொண்டிருந்த மேற்குலக நாடுகளில் ஜாக்ஸனின் வருகை ஒரு புதிய விடியலாகத் திகழ்ந்தது. வேறு வழியே இல்லாமல் வெள்ளையர்கள், ஜாக்ஸனைக் கொண்டாடும் அளவுக்கு, இசையை தனது வசப்படுத்திக் கொண்டிருந்தார் ஜாக்ஸன். பணம், வியாபாரம் இரண்டிலும் வெல்பவருக்கே உலகம் சொந்தம்... நிறமும் இனமும் ஒரு பிரச்சினையில்லை என்பதை அவரது முன்னேற்றம் உலகுக்கு எடுத்துச் சொன்னது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு புதிய தன்னம்பிக்கை தருவதாகவும் அது அமைந்தது.
1992 ம் ஆண்டு ஹீல் த வேர்ல்டு எனும் அறக்கட்டளையைத் துவங்கினார் மைக்கேல் ஜாக்ஸன். இந்த அமைப்பு மூலம், உடலால் மனதால் நிறவெறியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிகளை செய்வதாக அறிவித்தார். ஆதரவற்ற பல சிறுவர்களை இந்த அமைப்பின் மூலம் பராமரிப்பதற்காக அமெரிக்காவில் நெவர்லாண்ட் எனும் பெரிய பண்ணை இல்லத்தை வாங்கினார். அங்கேயே இந்த சிறுவனர்களுடன் பொழுதைக் கழித்தார். இங்குதான் வந்தது வம்பு. சிறுவர்களை அவர் பாலியல் தொந்தரவு செய்வதாக அவர் மீது புகார்கள் எழுந்தன, வழக்குகள் தொடுக்கப்பட்டன, கோர்ட்டுக்கு வெளியே செட்டில்மெண்டுகள் நடந்தன. இந்த சிக்கல்களில் சிக்கித் தவித்த ஜாக்ஸனால் மீண்டும் ஒரு இசை ஆல்பத்தைத் தர முடியாமல் போனது. ஆனாலும் பாப் உலகின் மன்னனாகவே கடைசி வரை அவர் பார்க்கப்பட்டார்.
1994 ல் எல்விஸ் பிரஸ்லேயின் மகள் லிசா மேரியைத் திருமணம் செய்து கொண்டு, தன்மீதான 'சிறுவர் பாலியல் தொந்தரவு' புகார்களுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க முயன்றார். ஆனால் இந்தத் திருமணமும் இரு ஆண்டுகள்தான் நீடித்தது. லிசா மேரியை விவாகரத்து செய்த கையோடு 1996 ல் டெபி ரோவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரு குழந்தைகளும் பிறந்தனர். 1999 ம் வரைதான் இந்தத் திருமண உறவும் நீடித்தது. பின்னர் வேறொரு பெண் மூலம் மூன்றாவது குழந்தையும் பிறந்தது அவருக்கு. மூவருமே ஆண் குழந்தைகள். ஜாக்ஸன் மகன்களின் பெயர் மைக்கேல் பிரின்ஸ், மைக்கேல் பிரின்ஸ் 1 மற்றும் மைக்கேல் பிரின்ஸ் 2. 2005 ம் ஆண்டு அனைத்து பாலியல் புகார் வழக்குகளிலிருந்தும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார் மைக்கேல் ஜாக்ஸன்.
மீண்டும் ஒரு சாதனையைப் படைக்க ஆர்வமாக இருந்த அவர், வரும் ஜூலை 13 ம் தேதி முதல் லண்டன் மற்றும் பிரிட்டனின் குறிப்பிட்ட நகரங்களில் 50 இசை நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டிருந்தார். இதற்காக லாஸ் ஏஞ்சல்ஸில் தீவிரமான ஒத்திகையும் நடந்து வந்தது. இந்த நிகழ்ச்சிகள் மூலம் தனது இமேஜை திரும்பப் பெற முடியும், புதிய இசை ஆல்பத்தை உருவாக்க முடியும் என்று பலமான நம்பிக்கை கொண்டிருந்தார்.
மைக்கேல் ஜாக்சன் அடுத்த மாதம் 13ந் தேதி தொடர் இசை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டிருந்தார். லண்டன் நகரில் 50க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்த இருந்த மைக்கேல் ஜாக்சன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தன்னுடைய இல்லத்தில் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். பயிற்சிக்கு நடுவே மைக்கேல் ஜாக்சன் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டார். அவருடைய சுவாசம் பாதிக்கப்பட்டதால் குடும்பத்தினர் உடனடியாக மருத்துவர்களுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த மருத்துவர்கள் 1 மணி நேரத்திற்கும் மேலாக அவருடைய உயிரை காப்பதற்காக போராடினர். பின்னர் யு.சி.எல்.ஏ. மருத்துவ மையத்திற்கு மைக்கேல் ஜாக்சன் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவரது உயிரை மீட்க மருத்துவர்கள் போராடினர். பின்னர் மைக்கேல் ஜாக்சன் உயிர் பிரிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. மாரடைப்பு காரணமாக அவர் இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அமெரிக்க நேரப்படி மாலை 2.26 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. (இந்திய நேரப்படி 26.06.09 அதிகாலை 2.56 மணி)
மைக்கேல் ஜாக்சன் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகே அவர் மரணத்திற்கான உண்மையான காரணம் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
மைக்கேல் ஜாக்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அந்த இடத்தில் திரண்டனர். பதட்டத்தோடு காத்திருந்த அவர்கள், ஜாக்சன் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டதும் கேவி அழுதனர். ஜாக்சன் மரணமடைந்த செய்தி பரவியதும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரது இல்லத்தின் முன் கூடினர். ரசிகர்கள் தாங்க முடியாத சோகத்தில் ஆழ்ந்திருந்தனர். பலர் கண்ணீர் விட்டபடி இருந்தனர். மைக்கேல் ஜாக்சன் மரணத்தை அடுத்து எம்டிவி தன்னுடைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்து விட்டு மைக்கேல் ஜாக்சனின் புகழ் பெற்ற பாடல்களை ஒளிபரப்பியது. வானொலி நிலையங்களும் மைக்கேல் ஜாக்சனின் சாகாவரம் பெற்ற பாடல்களை ஒளிபரப்பி வருகிறது. மைக்கேல் ஜாக்சனின் மரணம் இசையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவருடைய முதல் ஆல்பத்தை தயாரித்த நிறுவனத்தை சேர்ந்த குவின்சி ஜோன்ஸ், இத்தனை இளம் வயதில் மைக்கேல் ஜாக்சன் உலகை விட்டு பிரிந்தது வேதனையை தருவதாகவும், அதனை விளக்க வார்த்தைகளே இல்லையென்றும் கூறியுள்ளார்.
மைக்கேல் ஜாக்சன் இசையுலகில் செலுத்திய தாக்கமும், பாதிப்பும் என்றென்றும் உணரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மைக்கேல் ஜாக்சனுக்கு 3 பிள்ளைகள் இருக்கின்றனர். மேலும் ஜாக்சனுக்கு ஜெர்மினி, டிட்டோ, ராண்டி ஆகிய மூன்று சகோதரர்களும், ஜேனே மற்றும் லாடோயோ ஆகிய இரண்டு சகோதரிகளும் உள்ளனர்.
பாப் இசையுலகம் கொண்டாடிய மைக்கேல் ஜாக்சனின் எதிர்பாராத மரணத்தை அடுத்து அமெரிக்கா மட்டும் அல்ல உலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

அனைத்துலக காணாமற்போனோர் நாள் ( International Day of the Disappeared ) ஆகஸ்ட் 30


அனைத்துலக காணாமற்போனோர் நாள் ( International Day of the Disappeared ) ஆகஸ்ட் 30

அனைத்துலக காணாமற்போனோர் நாள் ( International Day of the Disappeared ) ஆகஸ்ட் 30 ஆம் நாளன்று உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலகின் பல நாடுகளிலும் காவற்துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு காணாமற்போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
கொஸ்டா ரிக்காவில் 1981 இல் தொடங்கப்பட்ட கைதாகிக் காணாமற்போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு (Federation of Associations for Relatives of the Detained-Disappeared, FEDEFAM) என்ற அரசு சார்பற்ற அமைப்பினால்
இலத்தீன் அமெரிக்காவில் இரகசியமான முறையில் கைது செய்யப்படலை எதிர்த்து இக்கோரிக்கை முதன் முதலில் விடுக்கப்பட்டது.

அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் குறிப்பாக அனைத்துலக மன்னிப்புச் சபை , மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு , செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன இந்த இரகசியக் கைதுகளுக்கு எதிராக அதிக அக்கறை எடுத்துச் செயற்படுகின்றன. "அனைத்துலக காணாமற்போனோர் நாள்" இந்த அமைப்புகளின் சேவை குறித்து பொதுமக்களுக்கு விளக்கவும் அவர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நிதி மற்றும் தன்னார்வலர்களை சேர்ப்பதற்கும் உதவுகிறது.


அனைத்துலக காணாமற்போனோர் தினம் (International Day of the Disappeared) உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 30ம் திகதி அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது.
'காணாமற்போனோர்' என்பது இன்று உலகளாவிய ரீதியில் ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. மனிதாபிமானம் பற்றி, மனித உரிமைகள் பற்றி எத்தனை அமைப்புகள் செயற்பட்டாலும் கூட இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாதுள்ளது.
காணாமற்போனோர் எனுமிடத்து இது ஒரு நாட்டிற்கு மாத்திரம், அல்லது ஒரு கண்டத்திற்கு மாத்திரம் உரித்தான பிரச்சினையாக எடுத்துக்கொள்ள முடியாது. இது உலகளாவியது.
இப்பிரச்சினையின் தோற்று நிலையை நோக்குமிடத்து மத்திய காலம் வரை பின்னோக்கிச் செல்லலாம். வரலாற்றுக் காலங்களில் யுத்த காரணிகள் நிமித்தமும் மன்னர்களின் அதிகாரப்பின்னணியிலும் இக் காணாமற்போனோர் இடம் பெற்றதாக சான்றுகள் மூலம் அறிய முடிகிறது.
அடிமைத்துவ யுகம் காணப்பட்ட நேரத்தில் இந்த காணாமற்போனோர் பிரச்சினை முக்கிய பிரச்சினையாக அமையவில்லை. 20ஆம் நூற்றாண்டு கால கட்டங்களில் காணாமற்போனோர் வரலாற்றில் முன்னைய காலங்களை விட அதிகமாகக் காணப்பட்டதாக கூறப்படுகின்றது. குறிப்பாக நாடுகளுக்கிடையே ஏற்பட்ட யுத்தங்கள், இனங்களுக்கிடையில் ஏற்பட்ட கலவரங்கள் பல்நாட்டு யுத்தங்கள் காரணமாக இத்தொகை அதிகரித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
முதலாம் உலக மகாயுத்த காலத்திலும், இரண்டாம் உலகமகா யுத்த காலத்திலும் மில்லியன் கணக்கானோர் காணாமற்போயுள்ளனர். இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் ஹிட்லரின் கொடூரமான நடவடிக்கையின் காரணமாக பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட யூத இனத்தவர் மாத்திரம் காணாமற்போயுள்ளனர். இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் சுவிடனைச் சேர்ந்த ரஓல் வொலண்பேக் என்பவர் காணாமல்போவோர் விடயத்தில் கூடிய அக்கரை கொண்டு செயலாற்றியுள்ளார்.
20ஆம் நூற்றாண்டில் தலை சிறந்த மனிதாபிமானி என வர்ணிக்கப்படும் ரஓல் வொலண்பேக் ஓரு லட்சத்திற்கும் மேற்பட்ட காணாமற்போனோரை மீட்டுள்ளதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. உலக வரலாற்றில் ஒரே சந்தர்ப்பத்தில் காணாமற்போனோர் பெரும் தொகையாக மீட்கப்பட்ட கைங்கரியத்தின் உரித்தாளராக ரஓல் வொலண்பேக் இன்று வரை போற்றப்படுகிறார்.
1945ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் திகதி ரஓல் வொலண்பேக் ரஸ்யப்படையினால் கைது செய்யப்பட்டார்.இவரின் கைதை அடுத்து இவருக்கு என்னவானது என்பது இன்னும் உலகிற்கு மர்மமாகவே உள்ளது.
காணாமற்போனோர் தினம் அனுஸ்டிக்கப்படும் நேரங்களில் ரஓல் வொலண்பேக் நினைவு கூறப்பட்டே வருகின்றார்.
காணாமற்போனோர் பற்றி ஆய்வுகளை மேற்கொள்ளும் போது உலகின் பல நாடுகளிலும் காவற்துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ அல்லது தீவிரவாதிகளாலோ, மாஃபியா குழுக்கலாலோ, ஆயுதக்குழுக்களினாலோ பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு காணாமற்போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
வட அமெரிக்காவுக்கும், தென் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள நிலப்பகுதியில் உள்ள ஒரு குடியரசு நாடான கொஸ்டாரிக்காவில் 1981 இல் தொடங்கப்பட்ட கைதாகிக் காணாமற்போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு (Federation of Associations for Relatives of the Detained-Disappeared, FEDEFAM) என்ற அரச சார்பற்ற அமைப்பின் நடவடிக்கைகளுக்கமைய இத்தினம் ஏற்படுத்தப்பட்டது. லத்தீன் அமெரிக்காவில் இரகசியமான முறையில் கைது செய்யப்படலை எதிர்த்தே இவ்வமைப்பு முதன் முதலில் கோரிக்கை விடுத்தது.
அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் குறிப்பாக சர்வதேச மன்னிப்பு சபை (Amnesty International), மனித உரிமை மீறல்களைக் கையாள்வதற்காக உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் சர்வதேச அமைப்பான "மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு" மற்றும் பன்னாட்டு மனிதாபிமான அமைப்பான சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம் ஆகியன இந்த இரகசியக் கைதுகளுக்கு எதிராக அதிக அக்கறை கொண்டு செயற்படுகின்றன.
"அனைத்துலக காணாமற்போனோர் நாள்" இந்த அமைப்புகளின் சேவை குறித்து பொதுமக்களுக்கு விளக்கவும் அவர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நிதி மற்றும் தன்னார்வலர்களை சேர்ப்பதற்கும் உதவுகிறது.
அண்மைக்காலத்தில் ஹிஸ்புல்லாஹ் இயக்கம் ஆள் கடத்தல் என்பதும் யுத்தத்தின் இன்னொரு மிக முக்கியமானதொரு அத்தியாயம். என்றபடி செயற்பட்டது. ஹமாஸ் கார் குண்டுக்கு விசேடம் பெற்றதாக விளங்குகிறதோ, அல் காயிதா பயங்கர திட்டங்களின் ஆதாரக் கேந்திரமாக இருக்கிறதோ, அம்மாதிரி ஆள் கடத்தல் விஷயத்தில் ஹிஸ்புல்லா போராளிகள் வல்லவர்கள் என்று கூறப்படுகிறது.
இலங்கையிலும் கடந்த 30 ஆண்டு கால யுத்தத்தின் போதும் தீவிரவாத அமைப்புகள் தமது படைபபலத்தை அதிகரித்துக் கொள்வதற்காக ஆட்கடத்தல் நடவடிக்கைகளை மேற் கொணடனர். இதனூடாகவும் காணாமட் போனோர் எண்ணிக்கை அதிகரித்தது. அதே நேரம அண்மைய வன்னி யுத்தத்தின் போதும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகிறது.
அண்மைக்காலங்களாக இலங்கையில் வெள்ளை வேன்கள் மூலமாக கடத்தப்படுதலும் காணாமல் போதலும் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படும் அதே நேரத்தில் இது விடயமாக பாராளுமன்றத்தில் கூட பல்வேறு பட்ட வாதப்பிரதி வாதங்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும் இயற்கைகாரணிகளாலும் காணாமல் போவது இடம் பெறுகின்றது. உதாரணமாக 2004ஆம் ஆண்டு சுனாமியின் போது இலங்கையில் மாத்திரம் காணாமல் போனோர் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் எனக் கூறப்படுகிறது.
கடந்த நான்கு தசாப்தங்களாக காணாமற்போனோர் தொடர்பான காரணிகளை எடுத்து நோக்குமிடத்து யுத்தக்காரணிகள் மாத்திரம் அன்றி பாலியல் நோக்கத்திற்காகவும், விற்பனை நோக்கத்திற்காகவும் சிறுவர்கள், இளம் பெண்களை கடத்தல், பழிவாங்கும் நோக்கத்தோடு கடத்தல், கப்பம் பெறும் நோக்கத்துடன் கடத்தல் உடல் உறுப்புக்களை திருடும் நோக்கத்துடன் கடத்தல்.... இவ்வாறு பல நோக்கங்கள் முதன்மைப்படுத்தப்படுகிறது.
'அமெரிக்கா உள்ளிட்ட உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் ஆள் கடத்தல் வியாபாரம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் இக் கொடுமைக்கு உள்ளாகின்றனர். இவ்வாறு நாடு விட்டு நாடு சட்ட விரோதமாகக் கடத்திச் செல்லப்படுபவர்கள் வீட்டு வேலைகளைச் செய்வதற்கோ, பாலியல் தொழிலிலோ பலவந்தமாக உட்படுத்தப்படுகிறார்கள். குழந்தைகளைக் கடத்தி வந்து ராணுவத்தில் சேர்ப்பது அல்லது ஆலைகளில் மற்றும் சிறு வர்த்தக நிறுவனங்களில் வேலை செய்யுமாறு நிர்பந்திப்பதும் நடக்கிறது. உண்மையில் சொல்லப் போனால், இவையெல்லாம் நவீன யுக அடிமைத்தனம்தான்" என்று முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சரின் முதுநிலை ஆலோசகரும், ஆள் கடத்தலுக்கு எதிரான உலகளாவிய கண்காணிப்பு மற்றும் ஒழிப்பு அலுவலகத்தின் இயக்குனருமான மார்க் பி. லகான் என்பவர் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
200 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க நாடுகளுக்கிடையே மனிதர்களை அடிமைகளாக விற்கும் வியாபாரம் நடைமுறையில் இருந்தது. அந்தக் கொடுமையான வியாபாரத்தைத் தடை செய்த 200ஆவது ஆண்டு நிறைவை அமெரிக்கா தற்போது கொண்டாடி வருகிறது. 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில், மனித குலத்திலேயே சக மனிதர்களில் சிலரை மனிதரிலும் கீழாகக் கருதும் இழிவான கருத்து நிலவியது. அதுவே மனிதர்களை அடிமைகளாகக் கருதி வியாபாரம் செய்வற்கும் வழிவகுத்தது. அதே உணர்வுதான் இன்றும், சட்ட விரோதமாக ஆட்களைக் கடத்திச் சென்று தங்கள் விருப்பத்துக்குப் பயன்படுத்தும் செயலுக்கு அடிப்படையாக இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும் இந்தச் சட்டவிரோத செயல்களை முற்றிலும் களைந்தெறிய வேண்டியதன் அவசியத்தை நேரிடை அனுபவம் வாயிலாக உணர்ந்திருக்கிறேன் என்றும் இந்த விஷயத்தில், அரசுகள், தன்னார்வக் குழுக்கள் மற்றும் தனி நபர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் கிடைக்கும் தாக்கத்தையும் அறிந்திருக்கிறேன் என்றும் அவ்வறிக்கையில் மார்க் பி. லகான் தெரிவித்திருந்தார்.
ஆள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் - சட்டத்திற்குப் புறம்பாக வேலைக்கு ஆள்களை எடுக்கும் மோசடிக்காரர்கள், தொழிலாளர்களைச் சுரண்டும் அதிபர்கள், அதற்குத் துணை போகும் ஊழல் மிகுந்த அரசு அதிகாரிகள் - இவ்வாறு சம்பந்தப்பட்ட அனைவரும் சட்டத்தின் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டு உரிய தண்டனையும் அளிக்கப்பட வேண்டும்.
கடந்த ஐந்தாண்டுகளில், உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் ஆள் கடத்தலுக்கு எதிரான கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்திருக்கின்றன; அல்லது ஏற்கெனவே இருக்கின்ற சட்டங்களை இன்னும் கடுமையாக்கி இருக்கின்றன. ஐந்தாண்டுகளுக்கு முன்பிருந்த நிலையுடன் ஒப்பிட்டால், தற்போது உலகெங்கிலும் ஆயிரக்கணக்கானவர்கள் இத்தகைய சட்டங்களால் உரிய முறையில் விசாரிக்கப்பட்டு தண்டனையும் பெற்று வருகிறார்கள். முன்பு வெகு சிலரே சட்டத்தின் பிடிக்கு உட்படுத்தப்பட்டார்கள்.
அமெரிக்க வெளியுறவுத் துறை முன்னால் செயலாளர் கொண்டலீசா ரைஸ், 'ஆள் கடத்தல் என்பது மனிதர்களின் சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் பறிக்கும் குற்றம்" என்று ஆள் கடத்தல் தொடர்பான அமெரிக்காவின் எட்டாவது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டிருந்ததுடன் இதற்கு எதிரான சர்வேதச செயல்பாட்டை ஊக்குவிப்பதன் அவசியத்தையும் உணர்த்தியிருந்தார். நவீன யுக அடிமைத்தனத்தை ஒழிப்பது தொடர்பாக உலகின் கவனத்தை ஈர்க்கும் சிறந்த ஆய்வறிக்கை அது.
இந்தியாவில் 2007-ம் ஆண்டில் மட்டும் 2 லட்சம் பெண்கள் பாலியல் தொழில், ஒப்பந்தத் தொழிலுக்காக வெளி மாநிலங்களுக்குக் கடத்தப்பட்டுள்ளனர் என்ற திடுக்கிடும் புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. பெண்களைக் கடத்தும் மாஃபியா கும்பல், தங்களிடம் சிக்கும் 11 முதல் 25 வயது வரையிலான பெண்களை பாலியல் தொழில் செய்யும் "புரோக்கர்'களிடத்தில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறார்கள். இவர்களில் 25 சதவிகிதம் பேர் 18 வயதுக்குக் குறைவான பெண்கள் மற்றும் ஆண்கள். பாலியல் தொழில்,சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளை பறிப்பதற்கும், ஒப்பந்தத் தொழிலில் ஈடுபடுத்தவும் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை மாஃபியா கும்பல் வெளி மாநிலத்துக்கு கடத்துவதாக தெரிவித்திருந்தது.
இந்த புள்ளி விவரங்களை மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், ஆந்திரம், கோவா, பிகார் உள்ளிட்ட மாநிலங்களின் குற்ற விசாரணை துறையில் உள்ள ஆள் கடத்தல் தடுப்பு மைய அதிகாரிகள் அளித்துள்ளனர். 2007-க்குப் பிறகு இந்த புள்ளி விவரங்கள் அதிகரித்திருக்கலாம். ஆனால், இதுதொடர்பாக அரசிடம் சரியான புள்ளி விவரங்கள் இல்லை. அதேபோல நாடு முழுவதும் சுமார் 30 லட்சம் பேர் மாஃபியா கும்பலிடம் சிக்கி கடத்தப்பட்டுள்ளனர்.
கர்நாடகத்தில் இருந்து பெண்கள் கடத்தப்படுவது அதிகமாகி வருவதால் ஆந்திரத்தைப் போல இம் மாநிலத்திலும் குற்ற விசாரணை துறையில் ஆள் கடத்தல் தடுப்பு மையம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. கைது செய்யப்படும் கடத்தல் மாஃபியா கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்கச் செய்ய மாநிலத்தில் ஒரு விரைவு நீதிமன்றமும் அமைக்க வேண்டும் என்று தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், நிபுணர்களும் அரசை வலியுறுத்துகின்றன.
சாதாரண மக்களின் ஆதார வாழ்க்கைத் தேவையே எவ்வாறு ஆள் கடத்தலுக்கு ஓர் அடிப்படைக் காரணமாக அமைகிறது என்பதை அந்த அறிக்கை உலகின் தனிக் கவனத்துக்கு உட்படுத்தி இருந்தது. உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமெனில், பாலியல் தொழிலுக்கான தேவையே, ஆள் கடத்தலையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஊக்குவித்து வருகிறது.
வேலைக்காக ஆட்களைக் கடத்தும் விஷயத்தில் தொழில் நிறுவனங்கள் உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதன் மூலம் முக்கிய பங்கு வகிக்கலாம். பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் பெண்கள் அல்லது குழந்தைகள், வீட்டு வேலையாட்கள், பண்ணைத் தொழிலாளர்கள் போன்று ஆள் கடத்தல் கொடுமைக்கு இலக்காகி, ஊமைகளாய்த் தத்தளிக்கும் எண்ணற்ற மனிதர்களுக்காகத் தொடர்ந்து ஓங்கி ஒலிக்கும் குரலாக நாம் உறுதியுடன் செயல்பட வேண்டியுள்ளது.
அவர்களது அடிமைத்தனம் நமது கவனத்துக்கும் உகந்த நடவடிக்கைக்கும் உரியது. மனிதநேயமற்ற, கொடூரமான இத்தகைய செயல்களால் பாதிக்கப்பட்ட மனிதர்களின் கண்ணியத்தை மீட்டெடுப்பதில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டியது அனைவரினதும் கடமையாகும்.
காணாமற்போனோர் பற்றி எடுத்துப் கொள்கையில் காணாமற்போனவர் ஒரு குடும்பத்து தலைவராக இருக்கும் இடத்து அவரின் குடும்பமும் பாதிக்கப்படுகிறது.எனவே அனைத்துலக காணாமற்போனோர் தினத்தில் இவர்கள் குடும்ப நிலைகள் பற்றியும் கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது.
மனிதாபிமானத்தை மீறி காணாமற்போனோர் இடம் பெற்றாலும் மனிதாபிமான சிந்தனையுடன் இதன் விளைவுகளை நோக்க வேண்டியுள்ளது.

இந்திய ஹாக்கி வீரர் தியான் சந்த் (Dhyan Chand, ध्यान चंद) பிறந்த தினம் ஆகஸ்ட் 29, 1905.


இந்திய ஹாக்கி வீரர் தியான் சந்த் (Dhyan Chand,  ध्यान चंद) பிறந்த தினம் ஆகஸ்ட் 29, 1905.

தியான் சந்த் (Dhyan Chand, இந்தி : ध्यान चंद); பிறப்பு: அலகாபாத்தில் ஆகத்து 29, 1905 – இறப்பு:திசம்பர் 3, 1979), எக்காலத்தும் சிறந்த வளைதடிப்பந்தாட்ட விளையாட்டுக்காரராக கருதப்படும் ஓர்
இந்திய வளைதடிப் பந்தாட்ட விளையாட்டு வீரர். 1928 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டமிலும் 1932ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலசிலும் 1936ஆம் ஆண்டு பெர்லினிலும் நடைபெற்ற
ஒலிம்பிக் விளையாட்டுக்களில் தங்கப் பதக்கம் பெற்ற இந்திய அணியில் பங்கேற்றிருந்தார். பெர்லின் ஒலிம்பிக்சில் அணித்தலைவராகவும் இருந்தார்.

சிறப்பு நிகழ்வுகள்

ஒருமுறை வளைதடிப் பந்தாட்டமொன்றில் என்ன முயன்றும் தியான் சந்தினால் கோல் அடிக்க முடியவில்லை; பலமுறை தவறியபின்னர் தியான் சந்த் நடுவரிடம் இரு கோல் வலைகளுக்கும் இடையே உள்ள தூரம் சரியில்லை என்று முறையிட்டார். அளவெடுத்துப் பார்த்தபோது பன்னாட்டு விதிகளின்படி இடைத்தூரம் சரியாக இல்லை என்றறிந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
1936 ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதல் ஆட்டத்திற்கு பிறகு தியான் சந்தின் மயக்கவைக்கும் வளைதடி கைவண்ணம் பிற ஆட்டக்களங்களிலிருந்தும் கூட்டத்தை ஈர்த்தது. செருமன் நாளிதழ் ஒன்று 'ஒலிம்பிக் வளாகத்தில் இப்போது மாயவித்தையும் நடக்கிறது ' என்று தலைப்புச் செய்தி இட்டது. அடுத்தநாள் பெர்லின் முழுவதும் இந்திய மாயவித்தைக்காரர் தியான் சந்தின் செயல்களைக் காண வளைதடிப் பந்தாட்ட அரங்கத்திற்கு வருக என சுவரொட்டிகள் எழுந்தன.
1936 பெர்லின் ஒலிம்பிக்கில் அவரது ஆட்டத்தைக் கண்டு அடோல்ஃப் ஹிட்லர் பிரித்தானிய இந்திய படைத்துறையில் மேஜராக இருந்த தியான் சந்திற்கு செருமன் குடியுரிமை வழங்கி கேனலாகவும் பதவி உயர்வு தர முன்வந்தார். (இதனை தியான் சந்த் மறுத்து விட்டார்).
ஹாலந்தில் அவரது வளைதடியில் காந்தம் ஏதேனும் உள்ளதா என அறிய தடியை உடைத்து பரிசோதித்தனர்.
ஆஸ்திரியாவின் வியன்னாவில் அவரை கௌரவிக்கும் விதமாக நான்கு கைகளுடனும் நான்கு வளைதடிகளுடனும் ஓர் சிலையை அமைத்தனர்.
வாழ்க்கை வரலாறு
தியான் சந்த் குறித்த சுயசரிதை "கோல்" சென்னையின் ஸ்போர்ட்ஸ் & பேஸ்டைம் பதிப்பகத்தால் 1952ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
பத்ம பூசண் விருது
1956 ஆம் ஆண்டு தமது 42 வது வயதில் பத்ம பூசண் விருது பெற்றார்.


பாரத் ரத்னா
இந்தியாவின் உயரிய குடியுரிமை விருதான பாரத் ரத்னா 2014 வரை விளையாட்டுவீரர்களுக்கு கொடுக்கப்படவில்லை. உள்துறை அமைச்சு விதிகளை மாற்றியமைத்து விளையாட்டு வீரர்களுக்கு பாரத் ரத்னா வழங்க முடிவு செய்யுமானால் முதல் விருது தியான் சந்த்திற்கு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது . இதனிடையே மத்திய பிரதேச அரசு அவர் நினைவாக அருங்காட்சியகம் ஒன்று திறக்க முடிவு செய்துள்ளது.
பாரத ரத்னா விதிமுறைகள் தளர்த்தப்பட்டு ’பாரத ரத்னா’ விருது மட்டையடி விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது. தமது பெயரில் விருது வழங்கப்படும் தியான் சந்திற்கு ’பாரத ரத்னா’ விருது வழங்கப்படாதது பாரத ரத்னா விருதின் தேர்வு முறை குறித்த விமர்சனங்களை ஏற்படுத்தியது.

தியான் சந்த் விருது (Dhyan Chand Award)

இந்தியாவில் விளையாட்டுக்களில் சிறப்புமிகு வாழ்நாள் சாதனை நிகழ்த்தியவர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் ஓர் விருதாகும். புகழ்பெற்ற
வளைதடிப் பந்தாட்ட வீரரான தியான் சந்த் நினைவாக 2002 ஆம் ஆண்டு இந்த விருது நிறுவப்பட்டது. இவ்விருது பெற்றோருக்கு இந்திய ரூபாய்கள் ஐந்து
இலட்சம் (500000) நிதிப்பரிசு தவிர ஓர் பாராட்டுச் சான்றிதழ், சிலைவடிவம், மற்றும் அலங்கார உடையும் வழங்கப்படுகிறது.
விருது பெற்றோர் பட்டியல்
எண் பெயர் ஆண்டு விளையாட்
1. அபர்ணா கோஷ் 2002 கூடைப்பந்த
2. அசோக் திவான் 2002 வளைதடிப் பந்தாட்டம்
3. சாகுராஜ் பிரஜ்தார் 2002 குத்துச்சண்ட
4. சார்லசு கார்னியலசு 2003 வளைதடிப் பந்தாட்டம்
5. தரம் சிங் மான் 2003 வளைதடிப் பந்தாட்டம்
6. ஓம் பிரகாஷ் 2003 கைப்பந்தாட்ட
7. ராம் குமார் 2003 கூடைப்பந்த
8. சிமிதா யாதவ் 2003 துடுப்பு படகோட்டம்
9. அர்தயாள் சிங் 2004 வளைதடிப் பந்தாட்டம்
10. லாப் சிங் 2004 தடகளம்
11. மெகெந்தளே பரசுராம் 2004 தடகளம்
12. மனோஜ் கோத்தாரி 2005
பில்லியர்ட்சு மற்றும்
மேடைக் கோற்பந்தாட்ட
13. மாருதி மானே 2005 மற்போர்
14. ராஜிந்தர் சிங் 2005 வளைதடிப் பந்தாட்டம்
15. அரிச்சந்திர பிரஜ்தார் 2006 மற்போர்
16. நந்தி சிங் 2006 வளைதடிப் பந்தாட்டம்
17. உதய் பிரபு 2006 தடகளம்
18. ராஜேந்திர சிங் 2007 மற்போர்
19. சம்சேர் சிங் 2007 கபடி
20. வரீந்தர் சிங் 2007 வளைதடிப் பந்தாட்டம்
21. கியான் சிங் 2008 மற்போர்
22. அக்கம் சிங் 2008 தடகளம்
23. முக்பெய்ன் சிங் 2008 வளைதடிப் பந்தாட்டம்
24. இஷார் சிங் தியோல் 2009 தடகளம்
25. சத்பீர் சிங் தயா 2009 மற்போர்
“ஜெர்மன் குடியுரிமை தருகிறேன், ராணுவத்தில் உயர் பதவியும் தருகிறேன்.”
என் நாட்டு அணிக்காக விளையாடு – ஹிட்லர்
“He scores goals like runs in cricket” – Bradman
தயான் சந்த் இந்திய ஹாக்கி விளையாட்டின் பிதாமகராக அறியப்படுபவர். ஆஸ்திரேலியா, ஐரோப்பிய தேசம் தாண்டியும் அறிமுகம் கொண்ட இவரை இந்தியாவில் பலர் இன்னமும் அறியாமல் இருப்பது ஆச்சர்யமே.
இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கி அங்கீகரிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் இவர் என்றால் அது மிகையல்ல. தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்ட் 29 இவரது பிறந்த நாளிலே கொண்டாடப்படுகிறது.
சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கப்படுவது போல, விளையாட்டில் சிறந்த விளங்கியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது தயான் சந்த் பெயரிலேயே வழங்கப்படுகிறது.
சந்திரன் வருகை
ஆரம்பத்தில் மல்யுத்தத்தில் ஆர்வம் கொண்ட இவர் தனது 16 வயதில் அப்போதைய பிரிட்டன் இந்திய ராணுவத்தில் இணைந்த பின்னர் தான் ஹாக்கி விளையாட துவங்கினார்.
ராணுவ நண்பர்கள் இவரை சந்த் என செல்லமாக அழைக்கத் துவங்கினர். சந்த் என்றால் சந்திரன் என அர்த்தம், பணி நேரம் முடிந்ததும் எல்லோரும் உறங்கும் வேளையில் தயான் மைதானத்தில் தனித்து நிற்பார்.
மின்விளக்குகள் அற்ற அக்காலத்தில் இரவு சந்திரன் வெளிச்சத்திற்காக அலைகளைப் போல இவர் காத்திருப்பார். இரவெல்லாம் பயிற்சி செய்வார்.
பல வருடங்களுக்கு பிறகு 1928 ல் ஒலிம்பிக்கில் ஹாக்கி மீண்டும் சேர்க்கப்பட்டது.ஆங்கிலேயர்களால் பிரிட்டன் இந்திய அணி உருவாக்கப்பட்டது.
இந்தியாவின் பயிற்சி பெற்ற அணி இங்கிலாந்திற்கு பயிற்சிக்காக அனுப்பட்டது. பிரிட்டிஷ் இந்திய அணியுடன் இங்கிலாந்து தேசிய அணி விளையாடியது.
11-0 என இங்கிலாத்தை சிதறடித்தது பிரிட்டிஷ் இந்திய அணி. இதன் காரணமாக தி கிரேட் பிரிட்டன், 1928 ஒலிம்பிக் போட்டிக்கு தங்கள் அணியை அனுப்பவில்லை.
அவர்கள் தேசிய அணி இந்தியாவிடன் தோல்வியுற்றதையும் தாண்டி இங்கிலாந்து சர்வதேச களத்தில் அடிமை நாடான இந்தியாவை சந்திக்க அஞ்சியது ஒரு காரணமாகலாம்.
தயான் சந்த் பற்றி அதுவரை உள்ளுர் மக்கள் மட்டுமே அறிந்திருந்தனர். தயான் சந்த ரயில் தண்டவாளங்களுக்கு இடையில் பந்தை தட்டிக்கொண்டே 2 கிமீ தொலைவிற்கு விடாமல் பயிற்சி செய்வார் என மக்களால் கிசுகிசுக்கப்பட்டது.
ஒலிம்பிக்கில் இந்தியா
1928 ல் பிரிட்டிஷ் இந்தியா தன் முதல் ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரியா நாட்டை 6-0 என வென்றது. சந்த் 3 கோல்கள் அடித்தார், அடுத்தடுத்து தொடர் வெற்றி காண இறுதி போட்டிக்கு முன்னேறியது. இருப்பினும் உடல் நல குறைவால் சந்த் இறுதி போட்டியில் பங்கேற்கவில்லை.
நெதர்லாந்துடன் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 3-0 கோல் கணக்கில் வரலாற்று வெற்றியை வசமாக்கி முதல் தங்கத்தை ருசித்தது. அந்த ஒட்டுமொத்த தொடரிலும் இந்தியாவிற்கு எதிராக எந்த கோலும் அடிக்கப்படவில்லை என்பது சரித்திரம்.
தன் வல்லமையான மட்டை திறனால் 14 கோல்கள் அடித்து அதிக கோல்கள் அடித்தவராக பெருமை அடைந்தார் சந்த். அந்நாட்டு பத்திரிகை ஒன்றில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
This is not a game of hockey, but magic.
Dhyan chand is in fact the magician of hockey.
செல்லும் போது 3 நபர்கள் வழியனுப்பிய அணிக்கு, நாடு திரும்பிய போது பம்பாய் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வரவேற்றனர்.
உள்ளுர் போட்டி ஒன்றில் எவ்வளவு முயன்றும் தயானால் கோல் அடிக்க முடியவில்லை, உடனே அவர் நடுவரிடம் சென்று கோல் கம்பத்தை அளக்க சொன்னாராம்.
அதிசயதக்க வகையில் சர்வதேக விதிமுறைகளை விட அதன் அகலம் குறைவாக இருந்தது.
அரண்ட அமெரிக்கா
1932 ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்றது. வழக்கம் போல ஜப்பான் போன்ற அணிகளை 11-0 கணக்கில் தோற்கடித்து இறுத்திக்குள் நுழைந்த இந்திய அணி போட்டி நடத்தும் அமெரிக்காவை எதிர் கொண்டது.
தயான் 8 கோல்கள், ரூப் சிங் 10 கோல்கள் உட்பட 24-1 என்ற கணக்கில் இரண்டாவது ஒலிம்பிக் தங்கத்தை சூரையாடியது. அந்த நேரத்தில் அதிக கோல்கள் அடித்த உலக சாதனை போட்டியாக இது அமைந்தது.
கதற விடப்பட்ட அமெரிக்க ஹாக்கி அணி அப்போது விட்ட விளையாட்டை இன்னும் சரிவர பிடிக்கவில்லை என்றே சொல்லலாம்.
தயானின் சகோதரர் ரூப் சிங் பற்றி கூறிய ஆக வேண்டும். அவரை போன்ற ஒரு இடது உள்பக்க வீரர் இந்தியாவிற்கு இன்னமும் கிடைக்கவில்லை.
தயானிற்கு துணை நிற்கும் இவர் எப்போதும் அணியின் நம்பிக்கையை ஏமாற்றியது இல்லை. ஹாக்கி வரலாற்றில் நடுவரோடு வாதிட ஆட்டக்கார்களில் இவரும் ஒருவர்.
1932 ஒலிம்பிக்கில் இந்தியா அடித்த 35 கோல்களில் தயான்-ரூப் அடித்த கோல்கள் மட்டுமே 25. ஹாக்கியின் இரட்டையர்களாக இவர்கள் வர்ணிக்கப்பட்டார்கள்.
காந்தம் இருக்கிறதா
தொடர்ந்து இந்த அணி நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாது என பல நாடுகளுக்கு சுற்று பயணம் சென்றது.
ஒருமுறை ஹாலாந்து சென்ற போது இவரது ஹாக்கி மட்டையில் காந்தம் இருப்பதால சந்தேகம் கொண்ட மக்கள் அவரது மட்டையை உடைத்தே பார்த்தார்களாம்.
ஒரு பெண் இவரிடம் தனது கைத்தடியை கொடுத்து விளையாட சொல்ல அதை வைத்துக் கொண்டும் எப்படியோ ஒரு கோல் அடித்தார் இந்த சாம்பவான்.
அந்த பெண் இங்கிலாத்தின் ராணி எனவும் சிலரால் கூறப்படுகிறது.பயண முடிவில் 37 போட்டிகளில் கலந்து கொண்டு 34 வெற்றி, 2 சமன்,1 ரத்து என உலகை பிரமிக்க வைத்தது இந்திய ஹாக்கி. 338 கோல்கள் அடித்த அணியில் 133 கோல்களை சந்த் அடித்திருந்தார்.
கேப்டன் தயான்
1934ல் சந்த் இந்திய ஹாக்கி அணியுன் கேப்டனாக பொறுப்பேற்று நடத்தினார்.
1935 ல் நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரில் கிரிக்கெட் சாம்பவான் பிராட்மேன் இவர் ஆட்டத்தை காண நேர்ந்தது.
வியந்து போன பிராட்மேன் ஹாக்கி என சொல்லிவிட்டு கிரிக்கெட்டை காட்டுகிறார்கள், அவர் நாங்கள் ரன் எடுப்பது போல கோலகளை அடித்து கொண்டே இருக்கிறார் என்றார்.
1936 ஹாக்கி அணியின் சோதனை காலமாக மாறியது. பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள பணத்தை தயார் செய்து செல்ல வேண்டிய காட்டாயம் இருந்தது.
இந்திய அணி கப்பலில் போக 50000 வரை செலவு பிடிக்கும். அவர்கள் பலரிடம் ஸ்பான்சர் கேட்டுச் சென்றனர். காந்தி இந்த ஹாக்கி பொருள் என்பது என்னவென்று கேட்டாராம், அன்றைய அரசியல் சூழல் அப்படி.
டாட்டா பிர்லா போன்றோர் உதவினர். பெரும் கடல் பயணத்திற்கு பின் ஒருவழியாக பெர்லினை சென்றடைந்தார்கள்.


தயான் vs ஹிட்லர்
அன்று வரை தோற்கடிக்கவே முடியாத பலம் வாய்ந்த இந்திய அணி பயிற்சி போட்டியில் ஜெர்மனியிடம் 1-4 என அதிர்ச்சி தோல்வியுற்றது.
இவர்கள் ஆட்டம் அடங்கிவிட்டது என மற்றவர் எண்ண தயான் தன் அணியுடன் பலவீனத்தை ஆலோசித்தார்.
தங்கள் வலது பக்க ஆடுநபர் சரியாக அமையவில்லை என்பதை உணர்ந்தவர்கள் டாரா என்பவரை அழைத்து வர கேட்டுக் கொண்டார். முதலாவதாக விமானத்தில் பறந்து வந்தவர் அவர் மட்டுமே.
அதன் பின்னர் நடைபெற்ற போட்டிகளில் இந்தியா தொடர் வெற்றி கொண்டு இறுதி போட்டிக்குள் நுழைந்தது.
இந்திய ஹாக்கி மந்திரவாதியின் மந்திரஜாலங்களை காண அரங்கத்திற்கு வாருங்கள் என்ற போஸ்டர் பெர்லின் தெருவெங்கும் ஒட்டப்பட்டது.
இந்திய ஹாக்கி மந்திரவாதியின் மந்திரஜாலங்களை காண அரங்கத்திற்கு வாருங்கள்.
ஜெர்மனியின் ஆதிக்கம் நிறைந்த அந்த ஒலிம்பிக் போட்டி நாசி ஒலிம்பிக்(Nazi Olymbic) என அறியப்பட்டது.
ஏற்கனவே பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்திதால் ஜெர்மன் அணி மிக வலுவான மனநிலையில் இருந்தது.
ஹிட்லர் தன் நாட்டு ரசிகர்களோடு ஆட்டத்தை ஆர்வத்தோடு கவனிக்க வந்திருந்தார்.
அன்றும் ஆகஸ்ட் 15. இந்தியாவின் அதிகாரப்பூர்வ மற்ற மூவர்ண கொடியை வணங்கி களத்தில் வீரர்கள் இறங்கினர்.
போட்டி துவங்கியதும் இந்திய அணி பெரும் ஆக்ரோஷத்தை சந்தித்தது. ஜெர்மனி தனது முதல் கோலை பதிவு செய்தது, ரசிக ஆரவாரங்கள் மண்ணை பிளந்தன.
சுற்றி வளைப்பட்ட தயான் எவ்வளவு முயன்றும் முதல் பாதியில் சற்று காட்டுத்தனமான கோல்கீப்பரால் அவர் பல் பறி போனது தான் மிச்சம்.
ஜெர்மனி வீரர்களின் உடல் வலிமை சிறப்பாக இருந்தது. இந்தியர்கள் வலிமையானவர்கள் அல்ல என்ற கூற்றை ஹிட்லர் விரும்பியதும் ஒரு காரணம்.
இந்தியர்களின் வாழ்வா சாவா போராட்டமாக இரண்டாவது பாதி தொடங்கியது. தயான் சந்த் தனது காலணிகளை கழற்றி வீசி வெற்று கால்களோடு களத்தில் இறங்கினர்.
>நீங்கள் ஹாக்கி விளையாட்டை கவனித்திருந்தால் காலுறை உள்ளே பலமான அட்டையை பொருத்திருப்பார்கள்.
அது மட்டையை வீசும் வேகத்தில் கால் எலும்புகள் உடையாமல் வீரர்களை பாதுகாக்கும், அதுவும் அப்போதைய காலத்தில் மாற்று வீரரெல்லாம் அனுமதிக்க மாட்டார்கள். அடிபட்டால் அவ்வளவுதான்.
ஆனால் அந்த நிமிடத்திலிருந்து தான் போட்டி சூடுபிடித்தது. இந்திய அணி ஒரு நேர்த்தியான ஹாக்கி விளையாட்டை ஜெர்மனுக்கு சொல்லி தர விரும்பியது.
புராதாண இந்திய ஹாக்கி ஒன்று அங்கே அரங்கேறியது. பந்து லாவகமாக ஜெர்மன் வீரர்களை தாண்டி இலக்கை சென்றடைந்தது.

தயான் சந்த் தன் மந்திர ஜாலத்தை பந்தாடினார். தொடர்ச்சியாக ஹாட்ரிக் கோல்கள் அடித்து ஜெர்மன் வீரர்களை மிரள வைத்தார், போட்டி முடிவடிகையில் இந்தியா 8 கோல்கள்.
ஜெர்மனி அடித்த ஒரு கோல் தான் பெர்லினின் நடைபெற்ற மொத்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு எதிராக அடிக்கப்பட்ட ஒட்டுமொத்த கோல் எண்ணிக்கை.
திருடி விட்டு மாட்டிக் கொண்ட குழந்தை போல ஹிட்லர் முகம் மாறியிருந்தது. 50000 ரசிகர்களும் ராணுவ அமைதியில் அரங்கத்தை விட்டு வெளியேறினர்.
மிரண்டு போயிருந்த ஹிட்லர் தயான் சந்த்யை நேரில் சந்தித்து உனக்கு ஜெர்மன் நாட்டுரிமை அளிக்கிறேன், ராணுவத்தில் உயர் பதவியும் தருகிறேன் எங்கள் நாட்டுக்காக விளையாடு என்றார்.
தயான் சந்த் என்ன சொன்னார் தெரியுமா. “ நான் ஒரு ஹாக்கி வீரன் தான், ஆனால் அதற்கு முன்பிருந்தே ஒரு இந்திய ராணுவ வீரன்” என்று சிரித்துக் கொண்டே சொன்னாராம்.
அவரது சூரத்தனமாக ஆட்டத்தை பார்த்து வியந்த ஹிட்லர் தயான் சந்தின் மட்டையை விலைக்கு வாங்க விரும்பினாராம்.
ஜெர்மன் பத்திரிக்கைகள் இந்திய ஹாக்கி அணியை இதுபோல் உலகின் தலைசிறந்த நேர்த்தியான அணி இனிமேல் உருவாக போவதில்லை,தயான் சந்த் யை போன்ற ஆட்டக்காரரும் என்றது.
அடையாளம்
வியான்னா வில் தயான் சந்த்ற்கு நான்கு கைகளும் அதில் நான்கு ஹாக்கி மட்டையோடு இருப்பது போன்ற சிலை உருவாக்கப்பட்டது.
அப்படிபட்ட ஒருவரால் மட்டுமே இப்படி விளையாட முடியும் என பொருள் தருமாறு அது உருவாக்கப்பட்டது.
ஆனால் இன்று வரை அது ஒரு மர்மமாகவே உள்ளது , பல பத்திரிக்கைகளில் குறிப்பிட்டிருந்தும் அச்சிலையை யாருமே பார்த்தது இல்லை.
அவரது மகன் அசோக் சந்த் 1975 ஒலிம்பிக்கில் பாகிஸ்தானுடம் முக்கிய கோல் அடித்து இந்தியாவிற்கு தங்கம் வாங்கி தந்தவர்.
அவர் ஒருமுறை நியூசிலாந்து செல்கையில் அங்கிருந்த உணவக நிறுவாகி நீங்கள் இந்திய ஹாக்கி அணியா என விசாரித்து தான் சிறுமியாக இருந்தபோது தயான் சந்தின் அனைத்து போட்டிகளையும் பார்த்துள்ளேன், அந்த மாயத்தை என்னால் மறக்க முடியாது என்றாராம்.
டெல்லியில் தேசிய மைதானத்திற்கு தயான் சந்த் பெயரே சூட்டப்பட்டுள்ளது.
இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூசன் விருது பெற்ற ஒரே ஹாக்கி வீரர் இவர் மட்டுமே.
>அன்றைய காலக்கட்டத்தில் இந்தியாவின் உயரிய விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டது. பதம் பூஷன் விருது வாங்கிய ஒரே ஹாக்கி வீரர் இன்று வரை இவர் மட்டுமே. இவரது பிறந்த நாளை(ஆகஸ்ட் 29) தேசிய விளையாட்டு தினமான இந்தியா அறிவித்தது.
லண்டன் ஜிம்கானா கிளப்பில் ஹாக்கி அரங்கித்திற்கும் லண்டன் சுரங்க ரயில் பாதை நிலையம் ஒன்றிற்கும் இவர் பெயர் சூடிடப்பட்டுள்ளது.
அவரது மாநிலத்தில் அவரது உயரிய சிலை ஒன்று மலைப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது, தற்போது அதனடியில் அமர்ந்தே இளைஞ்ர்கள் கஞ்சா அடிக்கின்றனர்.
இந்தியாவின் முகம்
1956 க்கு பிறகு அவர் ராணுவத்திலிருந்து ஒய்வு பெற்றார். அவரது இறுதி காலங்கள் வறுமையிலே வாடியது.
உலக புகழ் பெற்ற இந்தியன் ஆனாலும் உள்ளூர் மக்களிடம் அவருக்கு போதிய அங்கீகாரம் கிடைக்க வில்லை.
22 வருடம் ஹாக்கி சகாப்தத்தினை அகமதாபாத் உள்ள நகர போட்டியின் போது யாரென தெரியவில்லை என மக்கள் கூறினார்கள்.
தன் முதுமை பருவத்தில் கல்லீரல் புற்றுநோய் காரணமாக டெல்லி மருத்துவமனையில் பொது வார்டில் சேர்க்கப்பட்டார் சந்த். 1978 அவரது சகாப்தம் முடிவுற்றது.
நியாப்படி சொல்லப்போனால் முதல் பாரத ரத்னா இவருக்கே வழங்கப்பட்டிருக்க வேண்டும், சச்சின் 21 நூற்றாண்டின் தலைசிறந்த வீரர் என்றால் உலக களத்தில் இந்தியாவை பெருமையடைய வைத்த இவர் 20 நூற்றாண்டு மட்டுமல்ல ஆல்-டைம் தலைசிறந்த வீரராக இருப்பார்.
ஹாக்கி உள்ளவரை இவர் பெயரும் நுணுக்கமும் உலக ஒசையில் உச்சரிக்கப் பட்டுக்கொண்டே இருக்கும்.
இறப்பதற்கு சில காலம் முன்பு அவர் சொன்னது, “நான் மரணித்த பிறகு உலகில் பலரும் எனக்காக கண்ணீர் சிந்துவார்கள் என எனக்கு தெரியும், ஆனால் என் இந்திய மக்கள் என்னை நினைவில் வைத்திருக்க மாட்டார்கள்.”ஹாக்கி வாழும் வரை தயான் சந்தும் வாழ்வார்

இந்திய ஹாக்கியில் எத்தனையோ வீரர்கள் வந்து சென்றிருக்கலாம். சிலர் எப்போதாவது நினைவு கூறப்படலாம். சிலர் காலத்தின் போக்கில் மறக்கடிக்கப்பட்டிருக்கலாம்.
ஆனால் ஓய்வுபெற்ற 66 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்த உலகைவிட்டு சென்றுவிட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு ஹாக்கி வீரர் பேசப்படுகிறார் என்றால், அந்த மகத்தான வீரர் வேறு யாருமல்ல அவர்தான் “மேஜிக் மேன்” மேஜர் தயான் சந்த்.
ஹாக்கி என்றால் தயான் சந்த், தயான் சந்த் என்றால் ஹாக்கி தான். அவர் விளையாடிய காலம் இந்திய ஹாக்கியின் பொற்காலமாகவே கருதப்படுகிறது. இந்திய ஹாக்கிக்கு மட்டுமல்ல, இந்திய ராணுவத்துக்கும் மகத்தான பங்களிப்பு செய்தவர். கற்பனையில்கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு களத்தில் பந்தை கடத்துவதில் அசாத்திய திறமை பெற்றவர். அவருடைய ஆட்டம் மற்றவர்களுக்கு “மேஜிக் ஷோ” போன்றுதான் இருக்கும். அதன் காரணமாக பின்னாளில் “மேஜிக் மேன்” என்றழைக்கப்பட்டார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் 1905 ஆகஸ்ட் 29-ம் தேதி ராணுவ குடும்பத்தில் பிறந்தார் தயான் சந்த். அப்போதைய பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த தயான் சந்தின் தந்தை சமேஷ்வர் தத் சிங்கும் ஒரு ஹாக்கி வீரர்தான். ஹாக்கி வீரரின் மகனாக பிறந்தாலும் இளம் வயதில் மல்யுத்த விளையாட்டின் மீதுதான் காதல் கொண்டிருந்தார் தயான் சந்த்.
சந்தும் சந்திரனும்…
தனது 16 வயதில் ராணுவத்தில் இணைந்தார் தயான் சந்த். அப்போதுதான் மல்யுத்த விளையாட்டை மறந்து ஹாக்கியில் காலடி வைத்தார். ஹிந்தியில் சந்த் என்றால் நிலவு என்று அர்த்தம். பெயருக்கேற்றாற்போலவே இந்த சந்துக்கும், அந்த சந்திரனுக்கும் தொடர்பு உண்டு. தினந்தோறும் பணியை முடித்துவிட்டு இரவில் ஹாக்கி விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் தயான் சந்த். ஆனால் அப்போது மைதானங்களில் மின்விளக்குகள் கிடையாது என்பதால், சந்திரன் ஒளிவீசத் தொடங்கிய பிறகுதான் இந்த சந்தின் ஆட்டமே தொடங்கும். அதனால் அவருடைய நண்பர்கள் தயான் சந்தை “சந்திரனே” என்றுதான் அழைப்பார்களாம்.
திருப்புமுனை
1922 முதல் 1926 வரை ராணுவ மற்றும் ரெஜிமென்ட் ஹாக்கிப் போட்டிகளில் விளையாடி வந்த தயான் சந்த், பின்னர் நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய ராணுவ அணியில் இடம்பிடித்தார். அதுதான் அவருடைய சர்வதேச ஹாக்கி வாழ்க்கைக்கு அச்சாரமிட்ட தொடர். அதில் 18 ஆட்டங்களில் விளையாடிய இந்திய அணி 15 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியைப் பதிவு செய்தது. இரு டெஸ்ட் போட்டிகளில் முதல் போட்டியில் வெற்றி கண்ட இந்தியா, அடுத்த போட்டியில் மயிரிழையில் தோல்வியைத் தழுவியது. நியூஸிலாந்தில் பெற்ற வெற்றியின் மூலம் ராணுவத்தில் லான்ஸ் நாயிக்காக பதவி உயர் பெற்றார் தயான் சந்த்.
ஒலிம்பிக் பயணம்
ஒலிம்பிக்கில் ஹாக்கிப் போட்டி மீண்டும் அறிமுகப்பட்டதைத் தொடர்ந்து, அதில் பங்கேற்கும் இந்திய அணியைத் தேர்வு செய்வதற்காக 1925-ம் ஆண்டு மாகாண அளவிலான ஹாக்கிப் போட்டி நடத்தப்பட்டது. 5 மாகாண அணிகள் பங்கேற்ற அந்தப் போட்டியில் ஒருங்கிணைந்த மாகாண அணிக்காக களத்தில் குதித்தார் தயான் சந்த்.
முதல் போட்டியில் மத்திய முன்கள வீரராக களமிறங்கிய தயான் சந்த், பந்தை மிக அற்புதமாக கடத்திய விதம் போட்டியைப் பார்த்தவர்களுக்கு ஆச்சர்யமாகவும், எதிரணிகளுக்கு அதிர்ச்சியாகவும் அமைந்தது. அப்போதே இந்திய ஒலிம்பிக் அணியில் அவருடைய இடமும் உறுதியானது.
ஒலிம்பிக்கில் நிகழ்ந்த மேஜிக்
1928-ல் ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஏ பிரிவில் இடம்பெற்ற இந்தியா, தயான் சந்தின் அபார ஆட்டத்தால் ஆஸ்திரேலியா, பெல்ஜியம், டென்மார்க் அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. குரூப் சுற்றில் இரு முறை தலா 3 கோல்களை அடித்த தயான் சந்த், அரையிறுதியில் 4 கோல்களை அடிக்க, இந்தியா 6-0 என்ற கணக்கில் ஸ்விட்சர்லாந்தை தோற்கடித்தது.
ஆனால் தயான் சந்துக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே, அவரால் நெதர்லாந்துக்கு எதிரான இறுதியாட்டத்தில் விளையாட இயலாமல் போனது. எனினும் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கத்தை கைப்பற்றி வரலாறு படைத்தது. இந்திய கோல் கீப்பர் ரிச்சர்ட் ஆலன், எதிரணிகளிடம் ஒரு கோல்கூட வாங்காமல் புதிய சாதனை படைக்க, அதிக கோல் அடித்தவர் என்ற பெருமை தயான் சந்துக்கு (14 கோல்கள்) கிடைத்தது. அப்போது இந்தியாவின் வெற்றியைப் புகழ்ந்த பத்திரிகை ஒன்று, “இது ஹாக்கி விளையாட்டல்ல, மேஜிக். ஹாக்கியின் வித்தைக்காரர் தயான் சந்த்” என்று குறிப்பிட்டது.
1932-ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் இறுதியாட்டத்தில் இந்தியா 24-1 என்ற கணக்கில் அமெரிக்காவை தோற்கடித்து 2-வது முறையாக தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. இந்த ஒலிம்பிக்கில் இந்தியா அடித்த 35 கோலில் 25 கோல் தயான் சந்த் மற்றும் அவருடைய சகோதரர் ரூப் சிங்கால் அடிக்கப்பட்டதாகும்.
இந்தியாவின் கேப்டன்
1934-ம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்தார் தயான் சந்த். 1936-ல் ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தயான் சந்த் தலைமையில் பங்கேற்ற இந்திய அணி ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெற்ற இறுதியாட்டத்தில் ஜெர்மனியை எதிர்கொண்டது.
பயிற்சி ஆட்டத்தில் 1-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் தோற்றிருந்ததால், இந்திய வீரர்கள் மிகுந்த பதற்றத்தோடு இருந்தனர். மூவர்ணக் கொடிக்கு மரியாதை செலுத்திய பிறகு இறைவனை பிரார்த்தித்துக் கொண்டு களமிறங்கிய இந்தியா 8-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தயான் சந்த் 3 கோல்களை அடித்தார்.
ஹாக்கியில் 22 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்த தயான் சந்த், 1956-ம் ஆண்டு தனது 51-வது வயதில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார். அப்போது அவர் மேஜராக பதவி வகித்தார். அதே ஆண்டில் இந்தியாவின் 3-வது உயரிய விருதான பத்ம பூஷண் விருது அவருக்கு வழங்கப்பட்டது.
வறுமையான வாழ்க்கை
ஓய்வுக்குப் பிறகும் ஹாக்கி விளையாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தயான் சந்தின் கடைசி காலம் மோசமானதாக அமைந்தது. சாதனைகள் பல படைத்தபோதும் அவருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. அஹமதாபாதில் நடைபெற்ற ஒரு போட்டிக்கு அவர் சென்றபோது, யார் என்று தெரியாது எனக்கூறி திருப்பியனுப்பப்பட்ட அவமானமும் நிகழ்ந்தது.
இந்தியாவுக்காக 3 ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தந்த தங்க மகனான தயான் சந்த், பணத்திற்காக எப்போதுமே விளையாடியதில்லை. அதனால்தான் ஹிட்லரின் அழைப்பைக்கூட அவர் மறுத்தார். வாழ்நாளின் கடைசி வரை வறுமையோடே வாழ்ந்த அவர், கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோதுகூட, சிறப்பு சிகிச்சை கிடைக்கவில்லை. எய்ம்ஸ்
மருத்துவமனையில் பொதுப்பிரிவில் சிகிச்சை பெற்ற அவர், 1979 டிசம்பர் 3-ம் தேதி மரணமடைந்தார்.
தயான் சந்த் வாழ்வார்
தயான் சந்த் மறைந்துவிட்ட போதிலும், அவர் ஆடிய ஆட்டமும், காட்டிய மேஜிக்கும் இப்போதும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. எத்தனையோ வீரர்கள் இன்னும் அவரை முன்மாதிரியாகக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த உலகைவிட்டு சென்று 35 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், அவர் இன்றும் பேசப்பட்டு கொண்டிருக்கிறார். அவருடைய ஆட்ட நுணுக்கங்கள் பற்றி எங்கேயோ ஒரு மூலையில் யாராவது ஒருவர் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். ஹாக்கி வாழும் வரை தயான் சந்தும் அவருடைய மேஜிக்கும் வாழ்ந்து கொண்டேயிருக்கும்.
தேசிய விளையாட்டு தினம்
வாழும்போது அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆனால் தற்போது அவர் பிறந்த தினமான ஆகஸ்ட் 29-ம் தேதி தேசிய விளையாட்டு தினமாக அறிவிக்கப்பட்டு, விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருதுகளும், சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும் வழங்கப்படுகின்றன. தயான் சந்தின் பெயரிலேயே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

“மேஜிக் மேனு”க்கு இன்று 109-வது பிறந்த நாள்.
ஹிட்லரை கவர்ந்த தயான் சந்த்
*22 ஆண்டுகால ஹாக்கிப் பயணத்தில் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் 1,000 கோல்களுக்கு மேல் அடித்திருக்கிறார். டெல்லியில் உள்ள தேசிய விளையாட்டு மைதானம், லண்டனில் உள்ள இந்திய ஜிம்கானா கிளப்பில் அமைக்கப்பட்டுள்ள ஹாக்கி மைதானம் ஆகியவற்றுக்கு தயான் சந்த் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
*ஒருமுறை ஹாக்கி விளையாடியபோது தயான் சந்தால் கோலடிக்க முடியவில்லை. அப்போது நடுவர்களிடம் சென்ற அவர், கோல் கம்பத்தின் அளவு தொடர்பாக வாதிட்டது ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் சர்வதேச விதிமுறைப்படி இரு கோல் கம்பம் இடையிலான அகலம் இல்லை என்பது பின்னர் தெரியவந்தது. இதிலிருந்து தயான் சந்தின் ஆட்டம் எவ்வளவு துல்லியமானது என்பதை அறியலாம்.
*1936 ஒலிம்பிக் போட்டியின்போது “ஹாக்கி மைதானத்தில் இப்போது “மேஜிக் ஷோவையும்” பார்க்கலாம். இந்திய “மேஜிக் மேன்” தயான் சந்தின் ஆட்டத்தைக் காண செல்லுங்கள்” என ஜெர்மனி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது.
*கிரிக்கெட்டின் பிதாமகன் என்றழைக்கப்படும் டான் பிராட்மேனும், தயான் சந்தும் 1935-ம் ஆண்டு அடிலெய்டில் சந்திக்க நேர்ந்தது. அப்போது இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. தயானின் ஆட்டத்தைப் பார்த்து வியந்த பிராட்மேன், கிரிக்கெட்டில் ரன் அடிப்பதைப்போல் தயான் சந்த் கோலடிக்கிறார் என புகழ்ந்தார்.
*ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் தயான் சந்துக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதில் அவர் 4 கைகள் மற்றும் 4 ஹாக்கி மட்டைகளுடன் இருப்பார். அவரின் அபாரத் திறமையை பிரதிபலிக்கும் வகையில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.
*லண்டனில் உள்ள சுரங்க ரயில்பாதையில் உள்ள ஒரு நிறுத்தத்துக்கு தயான் சந்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
*நெதர்லாந்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் தயான் சந்த் விளையாடியபோது அவருடைய மேஜிக் ஆட்டத்தைப் பார்த்து போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு வியப்பு ஏற்பட்டது. அவருடைய மட்டையின் உள்புறத்தில் காந்தம் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரின் மட்டை உடைத்துப் பார்க்கப்பட்டது.
*1936 ஒலிம்பிக் போட்டியில் தயான் சந்தின் ஆட்டத்தைப் பார்த்து ஜெர்மனியை அப்போது ஆண்ட சர்வாதிகாரி ஹிட்லரே, அசந்து போனார். அதன் எதிரொலியாக ஜெர்மனி குடியுரிமை தருவதாகவும், ஜெர்மனி ராணுவத்தில் பணி வழங்குவதாகவும் கூறி தயான் சந்தை இழுக்க நூல்விட்டார் ஹிட்லர். ஆனால் தயான் சந்தோ, சிரித்துக் கொண்டே மறுத்துவிட்டார்.

தேசிய விளையாட்டு தினம் ( Indian National Sports Day ) ஆகஸ்ட் 29.தேசிய விளையாட்டு தினம்  ( Indian National Sports Day ) ஆகஸ்ட் 29.

தேசிய விளையாட்டு நாள் ஆகஸ்ட் 29.
இந்திய தேசிய விளையாட்டு நாள் (Indian National Sports Day) இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராக திகழ்ந்த தியான் சந்த்தைப் பெருமைப்படுத்தும் விதமாக அவரது பிறந்த நாளன்று (ஆகத்து 29) கொண்டாடப்படுகிறது. இந்நாளின் முக்கிய நோக்கமானது நாட்டு மக்களிடம் ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிப்பதாகும். தேசிய விளையாட்டு நாளில் குடியரசுத் தலைவரால், விளையாட்டுகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, மற்றும் துரோணாச்சாரியார் போன்ற விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. 2012 இல் முதன் முதலாக இந்திய அரசு, தியான் சந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 29ஆம் நாளை, தேசிய விளையாட்டு தினமாக அறிவித்தது.
கத்தார் தேசிய விளையாட்டு நாள்
கத்தார் நாட்டில் தேசிய விளையாட்டு நாள் ஆண்டுதோறும் பெப்ரவரி மாதத்தின் இரண்டாம் செவ்வாய்க்கிழமையில் கொண்டாடப்படுகிறது. இந்நாள் ஒரு பொது விடுமுறை நாளும் ஆகும். முதலாவது தேசிய விளையாட்டு நாள் 2012 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.
பெரிய பதவி தருகிறேன். எங்கள் நாட்டுக்காக விளையாட வந்துவிடுங்கள்' - என்று ஹிட்லர் கேட்டபோது, மறுத்து தாய்நாடுதான் பெரிது என்று இந்தியாவுக்காக தொடர்ந்து ஹாக்கி விளையாடிய வீரர் தயான் சந்த்-தின் பிறந்த தினம் தான் தேசிய விளையாட்டு தினம்!
இந்தியாவில் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 29-ம் தேதி தேசிய விளையாட்டு தினமாக (National Sports Day) கொண்டாடப்படுகிறது.
இந்தத் தினம், நாட்டின் தேசிய விளையாட்டான ஹாக்கியில் சாதனை படைத்த தயான் சந்த் நினைவாக அவரின் பிறந்த தினத்தில் கொண்டாடப்படுகிறது.

தயான் சந்த் கடந்த 1905-ம் ஆண்டு, ஆகஸ்ட் 29-ம் உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் பிறந்தார். இவரின் தந்தை சாமேஸ்வர் தத் சிங், இந்திய ராணுவத்தில் பணி புரிந்தார். அவர் ராணுவ ஹாக்கி அணிக்காக விளையாடி இருக்கிறார். அரசு பணி என்பதால் சாமேஸ்வர் தத் சிங் பல ஊர்களுக்கு பணி மாற்றம் நடந்தது. இதனால், தயான் சந்த் சரிவர கல்வி கற்க முடியவில்லை. அவர் ஆறாம் வகுப்புடன் படிப்பை முடித்துக் கொண்டார். இவர்கள் குடும்பம் ஒரு வழியாக உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் வீடு கட்டி அமர்ந்தது.
சிறு வயது முதல் தயான் சந்த்க்கு வலுதூக்குவதில்தான் அதிக ஆர்வம். 1922-ம் ஆண்டு ராணுவத்தில் தயான் சந்த் சேர்ந்த பிறகே அவருக்கு ஹாக்கி மீது ஒர் ஆர்வம் பிறந்தது. அப்போது அவருக்கு வயது 16. அப்போது ஹாக்கி விளையாட்டில் சாதனை படைக்க வேண்டும் என்கிற மனதில் இருத்துக் கொண்டார். 1926 வரை இந்திய ராணுவ அணி சார்பில் ஹாக்கி போட்டிகளில் பங்கேற்று விளையாடினார். 1934-ல் தயான் சந்த் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஆக உயர்ந்தார்.
ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம்..!
1928 (ஆம்ஸ்டர்டாம்), 1932 (லாஸ் ஏஞ்செல்ஸ்), 1936 (பெர்லின்),  ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்ல தயான் சந்த் முக்கிய காரணமாக இருந்தார்.
ஆயிரம் கோல்களுக்கு மேல் போட்டு சாதனை படைத்த இவர், தன் 51-வது வயதில் 1956-ம் ஆண்டு இந்திய ராணுவ மேஜர் பதிவியிலிருந்து ஓய்வு பெற்றார். அந்த ஆண்டு அவருக்கு நாட்டின் மூன்றாவது பெரிய விருதான பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. இன்றைய தேதி வரையில் ஹாக்கி வீரர் ஒருவர் இவர் மட்டும்தான் இந்த உரிய விருதை பெற்றிருக்கிறார்.
பணி ஓய்வுக்கு பிறகு ராஜஸ்தானில் மவுண்ட் அபு-ல் இருந்துக் கொண்டு ஹாக்கி பயிற்சி அளித்தார். மேலும், பாட்டியாவில் உள்ள தேசிய விலையாட்டு அமைப்பின் தலைமை ஹாக்கி பயிற்சியாளராக இருந்தார்.
1952-ல் கோல் என்கிற பெயரில் சுய சரிதை எழுதினார். இதை சென்னையை சேர்ந்த ஸ்போர்ட் அன்ட் பாஸ்டைம் நிறுவனம் வெளியிட்டு பெருமை சேர்த்துக் கொண்டது. தயான் சந்த், 1979-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி இந்த உலகிலிருந்து விடை பெற்றார்.
தயான் சந்த்-தின் தேசப்பற்று..
1936-ல் பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் தயான் சந்த் சிறப்பாக விளையாடினார். அதை பார்த்த ஹிட்லர், 'மேஜர் பதவி மற்றும் ஜெர்மன் குடியுரிமை தருகிறேன்,' என்று சொல்லி இருக்கிறார். அதற்கு எல்லாம் மசியாமல் தாய்நாட்டுக்கு மட்டும் தான் ஹாக்கி விளையாடுவேன் என்று தயான் சந்த் சொல்லி இருக்கிறார்.
1935-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உலக கிரிக்கெட் சாதனையாளர் பிராட்மேன், தயான் சந்த்தின் ஹாக்கி ஆட்டத்தை பார்த்தார். இது குறித்து பிராட்மேன் கூறும் போது, "கிரிக்கெட்டில் ரன் எடுப்பது போல் தயான் சந்த் கோல்களை எடுக்கிறார்" என்றார்.
ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் இவருக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது. அது நான்கு கைகளில் நான்கு ஹாக்கி மட்டைகளுடன் காட்சி அளிக்கிறது.
ஆனால், தற்போது 'இந்திய ஹாக்கி'யோ ஐ.சி.யு.வில் முடங்கியுள்ளது. தேசிய விளையாட்டு மீண்டும் எழுச்சி பெறுவது ஒன்றே தயான் சந்த்-துக்கு நாம் அளிக்கிற உண்மையான சல்யூட்!