சனி, 28 டிசம்பர், 2019

வரலாற்றில் இன்று டிசம்பர் 29.

வரலாற்றில் இன்று டிசம்பர் 29.

இந்தி திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார்... பிறந்த தினம் !!
வரலாற்றில் இன்று !!
ராஜேஷ் கன்னா


🎬 இந்தி நடிகர் ராஜேஷ் கன்னா 1942ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்திலுள்ள அமிர்தசரஸில் பிறந்தார். இவரின் இயற்பெயர் ஜதின் கன்னா.

🎬 1966ஆம் ஆண்டு ஆக்ரி கத் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ராஜேஷ் கன்னா, 1969ஆம் ஆண்டு வெளியான ஆராதனா திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 15 வெற்றிப் படங்களை தொடர்ந்து தந்து 'சூப்பர் ஸ்டார்" அந்தஸ்தை பெற்றார்.

🎬 இவர் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய திரையுலகினர் இவரை 'இந்தித் திரையுலகின் சிவாஜி" என்றனர். ராஜீவ் காந்தி இவரது ரசிகராக இருந்து பின்பு நண்பரானார்.

🎬 இவர் மூன்று முறை சிறந்த நடிகருக்காக ஃபிலிம்ஃபேர் விருது பெற்றுள்ளார். மேலும் 2005ஆம் ஆண்டு ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. 1990-களில் சினிமாவை விட்டு விலகி, காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் வென்று மக்களவை உறுப்பினரானார்.

🎬 இந்தி திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாரான ராஜேஷ் கன்னா 2012ஆம் ஆண்டு மறைந்தார். இவரின் மறைவுக்குப் பிறகு, பத்ம பூஷண் விருது இவருக்கு வழங்கப்பட்டது.குவெம்பு


✍ இந்திய எழுத்தாளர் கே.வி.புட்டப்பா என்று பரவலாக அறியப்படும் குப்பாலி வெங்கடப்பகௌடா புட்டப்பா 1904ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி கர்நாடகாவில் பிறந்தார்.

✍ 20ஆம் நூற்றாண்டு கன்னட இலக்கியத்தின் பெரும் கவிஞராகப் போற்றப்படுபவர். புட்டப்பா தன்னுடைய படைப்புகள் அனைத்தையும் குவெம்பு என்ற புனைப்பெயரில் எழுதியுள்ளார்.

✍ இவர் இராமாயணக் கதையை நவீன கன்னடத்தில் ஸ்ரீ ராமாயண தரிசனம் என்று எழுதியுள்ளார். கர்நாடக மாநில நாட்டுப்பண்ணான ஜெய பாரத ஜனனீய தனுஜாதே இவர் எழுதியதாகும்.

✍ இவர் பத்ம பூஷண், பத்ம விபூஷண், சாகித்ய அகாடமி விருது, ஞானபீட விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். இராஷ்ட்ரகவி என்று பாராட்டப்பட்ட இவர் 1994ஆம் ஆண்டு மறைந்தார்.முக்கிய நிகழ்வுகள்
👉 1949ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வீரர், சையத் கிர்மானி சென்னையில் பிறந்தார்.
👉 1993ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி உலகின் மிகப்பெரிய செப்பினாலான புத்தர் சிலை ஹாங்காங்கில் அமைக்கப்பட்டது.

மாசற்ற குழந்தைகள் தினம் டிசம்பர் 28.


மாசற்ற குழந்தைகள் தினம் டிசம்பர் 28.

மாசற்ற குழந்தைகள் தினம் என்றால் என்ன? இதனைக் கொண்டாடுவதன் நோக்கம் என்ன? உரோமை அரசால், யூதர்களை ஆள்வதற்கு என்று நியமிக்கப்பட்ட ஏரோது அரசரால் கொல்லப்பட்ட குழந்தைகளைத்தான், மாசற்ற குழந்தைகள் தினமாக, திருச்சபை கொண்டாடுகிறது. ஏரோது எதற்காக, ஒன்றுமறியாத பச்சிளங்குழந்தைகளைக் கொல்ல வேண்டும்?

ஞானிகளால் மெசியா பிறந்திருக்கிறார் என்பதை அறிந்த ஏரோது, குழந்தையினால் தன்னுடைய அரசுக்கு ஆபத்து என்று நினைத்தான். ஆனால், எந்த குழந்தை தன்னுடைய பதவிக்கு ஆபத்தாக வருகிறது என்பதை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. தன்னுடைய பதவியை காப்பாற்றுவது ஒன்றே, அவனுடைய இலக்காக இருந்தது. அதற்காக எத்தனை குழந்தைகளை பழிகொடுத்தாலும் தகும் என்று நினைத்தான். அவர்கள் அனைவரையும் ஈவு, இரக்கமில்லாமல் கொன்றொழித்தான். எத்தனை குழந்தைகள் கொல்லப்பட்டார்கள் என்பது தெளிவாக இல்லை. ஆனால், கொல்லப்பட்ட குழந்தைகள் அனைவருமே, திருச்சபையினால் மறைசாட்சிகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.

அதிகார வெறிக்கு பழிகடாக்கள் தான் இந்த மாசற்ற குழந்தைகள். இன்றைக்கு பெற்றோர், தாங்கள் நிறைவேற்ற முடியாத ஆசைகளை தங்களின் குழந்தைகளிடத்தில் திணித்து, அவர்களை தங்களுடைய விருப்பு, வெறுப்புக்களுக்கு ஏற்ப வளர்க்க வேண்டும் என்று நினைத்து, குழந்தைகளின் ஆளுமையைச் சிதைக்கின்றனர். குழந்தைகளை அவர்களின் இயல்பில் வளர நாம் முயற்சி எடுப்போம்.



கடவுளின் கரம்

யூதப் பாரம்பரிய மக்கள் கனவு வழியாக கடவுள் மக்களோடு பேசுகிறார் என்று நம்பினர். எனவே, கனவு வருகிறபோது, அவர்கள் அதை சாதாரணமானதாக கருதுவதில்லை. அதில் இருக்கக்கூடிய அர்த்தங்களை விளக்குவதற்கு ஏராளமான பேர், பாலஸ்தீனத்தில் இருந்தார்கள். எனவே, யோசேப்பு கனவை சிந்தித்து, அர்த்தம் கண்டுபிடிக்க முனைவதில், பொருள் இருக்கிறது. ஆனால், இந்த பகுதியை வாசிக்கிறபோது, நமக்கு எழுகிற முக்கியமான கேள்வி: யோசேப்பு எதற்காக எகிப்திற்குச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்? எகிப்திற்கும் பாலஸ்தீனத்திற்கும் என்ன தொடர்பு? இவற்றை இப்போது பார்ப்போம்.

யூதர்களுக்கு எப்பொழுதெல்லாம் வேற்று அரசர்கள் வந்து அவர்களைத் துன்புறுத்தினார்களோ, அப்போதெல்லாம் தாங்கள் புகலிடம் செல்லும் இடமாக எகிப்தை அவர்கள் வைத்திருந்தார்கள். ஒருவேளை அவர்களது முன்னோர் அங்கே பல ஆண்டுகளாக பாரவோன் மன்னனுக்கு அடிமைகளாக இருந்ததால், அவர்களின் பல உறவுகள் அங்கே இருந்தனர். அங்கிருந்து வேற்று நாட்டிற்கு வந்துவிட்டாலும் கூட, நிச்சயம் எகிப்தும் அவர்களுக்குத் தாய்வீடு போன்றதுதான். அவர்களது முன்னோர் வாழ்ந்த நாடு. இதனால், எகிப்தின் ஒவ்வொரு நகரங்களிலும் ஏராளமான யூதர்கள் வாழ்ந்து வந்தனர். அலெக்ஸாண்டிரியாவில் மட்டும் ஏறத்தாழ பத்து இலட்சம் யூதர்கள் வாழ்ந்ததாக ஒரு புள்ளவிபரம் கூறுகிறது. எனவே, எகிப்திற்குச் சென்றால் உணவுக்கோ, தங்குமிடத்திற்கோ கவலைப்படத் தேவையில்லை. அது அவர்களுக்கு அந்நிய தேசம் அல்ல. ஆக, குழந்தைக்கு ஆபத்து என்றதும், யோசேப்பு தப்பியோட, எகிப்தைத் தேர்ந்தெடுத்தது ஆச்சரியம் அல்ல.

கடவுளுடைய கரம் தேவைப்படுகிற நேரத்தில், யோசேப்பிற்கு கிடைக்கிறது. என்ன செய்வது? ஏது செய்வது? என்ற குழப்பமான நேரத்தில் கடவுள் யோசேப்பிற்கு உதவி செய்கிறார். நிச்சயம் அந்த கடவுளின் கரம் நம்மையும் தேற்றும் என்றால் அது மிகையாகாது. நாம் துன்பப்படுகிற நேரத்தில் கடவுள் தாமே, தம் தூதரை அனுப்பிக் காத்திடுவார்.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

புதன், 25 டிசம்பர், 2019

உலக சுனாமி விழிப்புணர்வு தினம் நவம்பர் 05.


உலக சுனாமி விழிப்புணர்வு தினம் நவம்பர் 05.

ஜப்பானில் ஏற்பட்ட சுனாமிக்குப் பிறகு பொதுமக்களிடம் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உலக அளவில் ஒத்துழைப்பு அவசியம் என ஐ.நா. சபை வலியுறுத்தியது. இதற்காக அனைத்து உலக நாடுகளையும் ஒங்கிணைத்து ஐ.நா. சபை கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு மாநாடு நடத்தியது.

அதில் பேசியவர்கள் இயற்கைப் பேரிடர்கள் குறித்த விழிப்புணர்வு, கல்வியறிவு மக்களுக்கு அளிக்க வேண்டும். இயற்கைப் பேரிடர்களில் இருந்து மக்களைக் காப்பாற்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினர். மேலும் சுனாமியில் இருந்து உயிர் பிழைத்த செக் குடியரசின் பிரதிநிதி உட்பட சிலர் பேசும்போது சுனாமி தொடர்பான தங்கள் எண்ணங்களை கூட்டத்தில் பகிர்ந்து கொண்டனர்.

இதேபோல் 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமியில் தாய்லாந்து கடற்கரையில் இருந்து தப்பித்த செக் குடியரசைச் சேர்ந்த பெட்ராநெம்கோவா என்பவர் பேசும்போது, ‘‘தண்ணீர் அல்ல ஒரு பெரிய கான்கிரீட் கட்டிடம் தன் மீது விழுந்ததைப் போன்று உணர்ந்தேன். நான் தங்கியிருந்த பயணியர் விடுதி சில வினாடிகளில் முழுவதும் இடிந்து தரைமட்டமானது. எல்லா இடங்களிலும் இடிபாடுகளே காணப்பட்டன. எனவே இயற்கைப் பேரிடர் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாடுகள் கையாள்வது அவசியம்’’ என்றார்.

முடிவில் ஆண்டுதோறும் நவம்பர் 5-ம் தேதி உலக சுனாமி விழிப்புணர்வு தினமாகக் கடைப்பிடிக்க ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 5-ம் தேதி சுனாமி விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

சுனாமி பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் அது குறித்த பாதிப்பை பெருமளவில் குறைக்க முடியும் என்பதே இதன் நோக்கம்.

இதனால் உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தில் மக்களிடம் சுனாமி பாதிப்புகள், அதுபோன்ற அவசர காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் நடத்தப்படுகின்றன.

கடலில் நிலத்தட்டுகள் மோதுவதால் கொந்தளிப்பு

கடலில் உள்ள தரைப்பகுதிக்கு அடியில் நிலத்தட்டுகள் நகரும்போது அல்லது ஒன்றுடன் ஒன்று மோதும்போது அங்கு திடீர் மாற்றம் ஏற்படும். அப்போது கடல் கொந்தளித்து ராட்சதஅலைகள் உருவாகி அருகில் உள்ள அனைத்து கடலோரப் பகுதிகளில் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தும். இதை சுனாமி என்று அழைக்கிறார்கள்.

கடல் அடியில் பூகம்பம் மட்டுமல்லாமல், நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு மற்றும் விண்வெளியில் இருந்து விண் கல் விழுதல் ஆகியன வற்றின் காரணமாகவும் ‘சுனாமி’ ஏற்படுகிறது.

சுனாமி அபூர்வமாக நிகழக் கூடியதுதான். எனினும் இயற்கைப் பேரிடர்களில் அதிகபட்ச உயிரிழப்பையும், பலத்த பொருட்சேதத்தையும் ஏற்படுத்துகிறது. சுனாமிக்கு எல்லையே கிடையாது.

கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள 58 சுனாமிகளால் இதுவரை பல லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இது ஒவ்வொரு முறை ஏற்பட்ட சுனாமியின்போது சராசரியாக 4,600 பேர் உயிரிழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது இடிபாடுகளில் சிக்கி 18,000 பேர் உயிரிழந்தனர்.

ஜப்பானில் சுனாமி, தமிழில் ஆழிப்பேரலை

சுனாமி என்பது ஜப்பான் சொல். சு (tsu) என்றால் துறைமுகம். நாமி (nami) என்றால் அலை. எனவே சுனாமி என்றால் "துறைமுக அலை" என்று பொருள். சுனாமிக்கு வேறு சில மொழிகளில் வேறு வார்த்தைகள் உள்ளன. தமிழில் “ஆழிப்பேரலை " என்று அழைக்கப்படுகிறது.

ஆக்கினஸ் மொழியில் சுனாமியை “பியுனா" அல்லது “அலோன் புலூக்" என்று அழைப்பர். “அலோன்" என்ற வார்த்தைக்குப் பிலிப்பைன்ஸ் மக்களின் மொழியில் “அலை" என்று பெயர். இந்தோனேசியாவின் மேற்கு சுமத்திரா கடற்கரையில் உள்ள சிமிலி தீவில் “சுமாங்" என்றும், சிகுலி மொழியில் “எமாங்" என்றும் அழைக்கப்படுகிறது.

சுனாமி என்பது அடுக்கடுக்கான பல அலைகளால் உருவாகும். இந்த அலைகள், கடற்பரப்பு முழுவதும் பரவி, கரையை நோக்கி, மணிக்கு 1,000 கி.மீ. வேகத்தில் சீறிப் பாய்ந்து செல்லும். இந்த அலைகளின் வேகம், ஜெட் விமானத்தின் வேகத்துக்கு சமமானதாக, சில சமயத்தில் கூடுதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சுனாமியின் வேகம் ஒவ்வொரு முறையும் வேறுபடுகிறது.

ஆபத்தை உணர்ந்து பலரை காப்பாற்றிய மாணவி

இங்கிலாந்தைச் சேர்ந்த பள்ளி மாணவி டில்லி ஸ்மித் தனது பெற்றோர் மற்றும் ஏழு வயது சகோதரியுடன் கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கழிக்க தாய்லாந்து நாட்டில் உள்ள மைக்காவோ கடற்கரைக்கு வந்திருந்தார்.

டிசம்பர் 26, 2004-ம் ஆண்டு மைக்காவா கடற்கரையில் இருந்த சுற்றுலாப் பயணிகள் கடல் உள்வாங்குவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

கடற்கரையில் தனது சகோதரியுடன் விளையாடிக் கொண்டிருந்த டில்லி ஸ்மித், தனது பெற்றோரிடம், ‘‘நாம் தற்போது ஆபத்தில் இருக்கிறோம். சுனாமி அலைகடற்கரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. கடற்கரையை விட்டு நாம்தூரத்தில் சென்று விடவேண்டும். சுனாமிகுறித்து எனது பள்ளியில் புவியியல்ஆசிரியர் பாடம் எடுத்தார். சுனாமி வந்தால்எப்படி முன்னெச் சரிக்கையாக செயல்பட வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார்’’ என்றார்.

உடனே டில்லி ஸ்மித்தின் பெற்றோர் கடற்கரையில் நின்று கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை எச்சரித்தனர். இதனால் கடற்கரையில் நின்று கொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேறினர்.

சுனாமியிலிருந்து நூறுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை காப்பாற்றியதற்காக பிரான்ஸின் குழந்தைகள் பத்திரிகையான மோன் கோடிடியன் 2004-ம் ஆண்டின் மிகச் சிறந்த குழந்தை விருதை வழங்கியது. மேலும் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனிடம் பாராட்டு பெற்றார்.
நன்றி இந்து தமிழ் திசை.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

சுனாமி நினைவு தினம் டிசம்பர் 26


15வது சுனாமி நினைவு தினம் - கடல் அரக்கனின் கோரத்தாண்டவம் மறந்து போகுமா?
#Tsunami #MemorialDay

15வது சுனாமி நினைவு தினம் - கடல் அரக்கனின் கோரத்தாண்டவம் மறந்து போகுமா?

கடல்... உலகெங்கும் வியாபித்து இருக்கும் பெரிய நீர்நிலை. எப்போதும் ஓய்வெடுக்காமல் உழன்றுகொண்டே இருக்கும். நீலக்கடலில் இருந்து எழும் வெள்ளை நிற அலை, இடைவிடாது கரையை முத்தமிட்டுக் கொண்டிருக்கும் அழகைக் காண குவியும் மக்களின் எண்ணிக்கைக்கு கடற்கரை மணலில் அவர்கள் பதியவிட்டு செல்லும் காலடித்தடங்களே சாட்சி. இப்படி, ரசிக்க மட்டுமே என்று இருந்த கடல், ஆபத்தானது என்பதை உணர்த்திய ஆண்டு 2004.

14 ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 26-ந் தேதி அதிகாலை நேரத்தில், இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட பூகம்பத்தால் சுனாமி என்ற ஆழிப்பேரலை கடல் அரக்கனாய் விஸ்வரூபம் எடுத்து, கடற்கரையோர மக்களையும், அவர்களின் உடைமைகளையும் வாரிச் சுருட்டிச் சென்ற கொடிய நாள்.



சுனாமி கடல் அரக்கனின் கோரத்தாண்டவத்துக்கு இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து, கிழக்கு ஆப்பிரிக்கா, மலேசியா, மாலத்தீவு, மியான்மர், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில், கடற்கரையோரம் வசித்த 2 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் பலியானார்கள். தமிழகத்தில் மட்டும் 7,941 பேர் மாண்டு போனார்கள். அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 6,039 பேர் பலியானார்கள். கன்னியாகுமரியில் 798 பேர் இறந்துபோனார்கள். கடற்கரையோரம் குவிந்து கிடந்த பிணங்களை ஒரே குழிக்குள் போட்டு புதைக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது. அன்று ஒலிக்கத் தொடங்கிய மரண ஓலம் இத்தனை ஆண்டுகள் கடந்த பின்பும் ஓய்ந்த பாடில்லை.

“ஆண்டொன்று போனால், வயதொன்று போகும்” என்று சொல்வார்கள். அன்று... சிறுவர்-சிறுமியாய் மாண்டுபோனவர்கள், இன்றைக்கு உயிரோடு இருந்திருந்தால் இளம் வயதினராய் வலம் வந்திருப்பார்கள். அன்றைக்கு இளம் வயதில் இருந்தவர்கள், இன்று.. திருமணம் முடிந்து குடும்பமாய் பிள்ளைகளோடு வாழ்ந்து மகிழ்ந்திருப்பார்கள். ஆனால், அன்றைக்கு ஆழிப்பேரலையின் கோரப் பசிக்கு இரையானவர்களின் புகைப்படங்கள் இன்றைக்கு அவர்களது வீடுகளில் சுவற்றில் நினைவுச் சின்னமாக தொங்கிக் கொண்டிருக்கின்றன. அதைப் பார்க்கும் போதெல்லாம் மரித்துப்போனவர்களின் ரத்த சொந்தங்களுக்கு கண்களில் கண்ணீர் பொங்கி நிற்கிறது.

2004-ம் ஆண்டு நடந்த இந்த பெரிய இயற்கை பேரிடருக்கு பிறகு, எப்போதாவது இடையிடையே ‘சுனாமி’ என்னும் அரக்கன், கடல் கொந்தளிப்பாக உருவெடுத்து கரையோர மீனவர்களை மிரட்டிக் கொண்டே இருக்கிறான். 2005-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி இந்தோனேசியாவில் ஏற்பட்ட பூகம்பத்தால், கடல் கொந்தளித்து தமிழக கடலோர மாவட்டங்களில் சுனாமி பீதியை கிளப்பியது. மீண்டும் அதே ஆண்டு மார்ச் 28-ந் தேதி, இந்தோனேசியா அருகே ஏற்பட்ட கடுமையான பூமி அதிர்ச்சி காரணமாக சுனாமி பீதி ஏற்பட்டது. தமிழகத்தில் கடலோர பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த பூகம்ப தாக்குதலில் இந்தோனேசியாவில் 2 ஆயிரம் பேர் பலியானார்கள். இப்படி, ஆழிப்பேரலையின் மிரட்டல்கள் அவ்வப்போது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

எனவே மக்களின் மனங்களில் சுனாமி ஏற்படுத்திய வடு இன்னும் மறைந்தபாடில்லை. 14-வது சுனாமி நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. உயிர்களை இழந்த சொந்தங்கள், கடல் தாயிடம் வேண்டி முறையிட்டு கனத்த இதயத்தோடு கடற்மணல் பரப்பில் அஞ்சலி செலுத்துகின்றனர். கடலில் பால் ஊற்றியும் பிரார்த்தனை செய்கின்றனர். இனியும் இதுபோன்ற கோரத் தாக்குதல்கள் தொடர வேண்டாம் என்பதே அவர்களுடைய வேண்டுதலாக உள்ளது.

எந்தவொரு கவலைக்கும் சரியான மருந்து காலத்திடம் தான் இருக்கிறது. எனவே, பாதிக்கப்பட்ட மக்கள் மனதில் சுனாமி ஏற்படுத்திய ஆறாத வடுவையும் காலம் என்ற மருந்து விரைவாக ஆற்றட்டும் என்று இறைவனிடம் நாம் வேண்டுவோம்.


15-வது சுனாமி நினைவு தினத்தையொட்டி சுனாமியால் உயிர்களை பறிகொடுத்த சொந்தங்கள் கடற்கரை பகுதிகளில் அஞ்சலி செலுத்தினர். 

நன்றி மாலை மலர்.
#Tsunami #MemorialDay #சுனாமி #சுனாமி_நினைவு_தினம்
 
Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

வீரமங்கை வேலு நாச்சியார் நினைவு தினம்.. டிசம்பர் 25


வீரமங்கை வேலு நாச்சியார்  நினைவு தினம்..
டிசம்பர் 25 

வீரமங்கை #வேலு_நாச்சியார்
அவர்களின் நினைவு தினம்..

வீரத்தின் அடையாளமாகவும் வெற்றித் திருவுருமாகவும் விளங்குகிறார் அவர்.

உலகில் மிகப்பழமையான பாதுகாப்பு இனமாகவும் சேதுபாலம் ராமலிங்கத்தின் பாதுகாவலர்களான சேதுபதி வம்சத்தில் 1730ஆம் ஆண்டு,உதித்தவர் தான் வேலு நாச்சியார்.

தந்தை இராமநாதபுர மன்னர் முத்து விஜயரகுநாத செல்லத்துரை சேதுபதி. தாய் முத்தாத்தாள் நாச்சியார். இவர்களின் ஒரே பெண் குழந்தை வேலுநாச்சியார்.

வேலுநாச்சியார் பிறந்தது ‘சக்கந்தி’’ இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள ஊர். ராமநாதபுரத்தின் இளவரசியான அவர் மகாபாரதம், ராமயணம், இலக்கியங்களை சிறு வயதிலேயே கற்றுத்தேர்ந்தார்.

மேலும் அவருக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, உருது, அரபி, பிரஞ்ச், இங்கிலிஷ், ஜெர்மன் என பத்து மொழிகள் பேசக்கற்றவர்.

சிறு வயதிலேயே போர்கலைகளிலும் தேர்ந்தவராக விளங்கினார். வாள் சண்டை, வில்வித்தை, யானையேற்றம், குதிரையேற்றம், வளைதடி ஆகியவற்றில் சிறந்து விளங்கினார்.
போர்வாளை தன் கைகளால் இரண்டாக உடைக்கும் வலிமைப் பெற்றவர்.

ஆறடி உயரத்தில் பேரெழில் கொஞ்சும் அழகில் மயிலாகவும் வீரத்தில் விட்டு கொடுக்காத புலியாக இருக்கும் அவரை வீரத்தையும் அழகையும் கண்டு காதல்வயப்பட்டு சிவகங்கை இளவரசர் கவுரிபவல்லப உடையன முத்துவடுகநாதத்தேவர் வேலுநாச்சியாரை மணந்து கொண்டார்.

1746ம் வருடம். வேலுநாச்சியார் சிவகங்கைக்கு குடிபுகுந்தார். சிவகங்கையை ஆக்ரமிக்க நினைத்து போர் தொடுத்த நவாப் கிழக்கிந்தியபடையை விரட்டியடித்தார்.

அதனால் நவாப் கிழக்கிந்தியபடையினர் வஞ்சத்தால் கொல்ல நினைத்தனர் கோவிலுக்கு ஆயுதமின்றி சென்ற இளவரசியையும் கொல்ல படையை அனுப்பினர் மன்னர் வளரிவீச்சீல் பல எதிரிகளை கொன்றார்.

நவாப் படையினர் மன்னரின் குதிரைக்கால்களை வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும், கண்டந்துண்டமாக வெட்டி மன்னரையும் இளவரசியையும் படுகொலை செய்தனர்

இதற்கு தலைமை தாங்கியவன் தளபதி பான்ஜோர்,ஜோசப ஸ்மித். சிவகங்கையை கைப்பற்றி உசேன்பூர் என்று பெயர் மாற்றம் செய்தனர்.

மன்னர் இறந்த செய்தி எட்டி வேலு நாச்சியார் கதறினார். கணவரின் உடலைப் பார்க்க துடித்தார்.

இந்தச் சமயத்தில் நாச்சியாரைக் கைது செய்ய நவாப் படை ஒன்றை அனுப்பினான் வேலு நாச்சியார் எதிரிப்படைகளை துவம்சம் செய்தார்.

இறந்த கணவரை சென்று பார்த்துவிட வேண்டுமென துடித்தார்.கணவரின் உடலைக் காண காளையர் கோயில் சென்றார் வேலு நாச்சியார்.

காளையர் கோயிலில் எங்கெங்கும் பிணக் குவியல். இறந்த அரசரும் இளையராணியும் காண, தானும் உடன்கட்டை ஏறி உயிர் விட முடிவு செய்தார்.

அமைச்சர் தாண்டவராய பிள்ளை, தளபதிகளாயிருந்த மருது சகோதரர்கள் மனதை மாற்றி நாட்டை எதிரியிடமிருந்து மீட்டு உங்கள் கைகளால் பழி வாங்கவேண்டும் என உரைத்தனர்.

அரசியையும் வெள்ளச்சி நாச்சியார்யையும் திண்டுக்கல் கோபால நாயக்கர் கோட்டைக்கு மருது சகோதரர்களின் பாதுகாப்போடு கொண்டு சென்றனர் .

விருப்பாட்சிப் பாளையக்காரர் கோபால நாயக்கர்,விருப்பாட்சியில் பாதுகாப்பாக தங்க வைத்தார்.

ஆண் வேடத்தில் ஐதர் அலியை சந்தித்து படையுதவி கேட்டார் அவரும் 5000 குதிரைவீரர்களையும் 5000 காலாட் வீரர்களையும், பீரங்கிப்படைஒன்றையும் உடன் அனுப்பி வைத்தார்.

1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது.,

விஜயதசமி அன்று சிவகங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம், கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம்.

வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும். வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோவிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தியது.

இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை. வேலு நாச்சியாரை காட்டி கொடுக்காததால் கொல்லப்பட்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு,தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தினார்.

இன்று தெய்வமாக அவர் வெட்டுண்ட காளியம்மனாக வணங்கப்படுகிறார்.

மறவர் சீமையின் படைகளோடு மருதுபாண்டியரின் மக்கள் படையும் சேர்ந்து கம்பனிபடையை நாசம் செய்தது. மருதுபாண்டியரின் கொரில்லா போர் முறை உக்கிரம் தாளது அந்திய படை தோற்று ஓடியது.

ராணியார் பெண் படையுடன் மகாஉக்கிரம் காட்டினார். தேசப்பற்று மிக்க குயிலி என்ற பெண் உடலில் தீ மூட்டி கம்பனியின் ஆயுதக்கிடங்கில் புகுந்து சர்வநாசம் செய்து இறந்தார்.

தனது ஐம்பதாவது வயதில், தனதுகணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார்.

கடைசியில் எதிரிப்படை வீழ்ந்தது ராணி பான்ஜோர் கழத்தில் கத்தி வைக்க பான்ஜோரும் ஸ்மித்தும் மண்டியிட்டு ராணியிடம் உயிர்பிச்சை அளிக்குமாறு வேண்டினர் ராணிக்கு மன்னிப்பு பட்டயம் எழுதி கொடுத்தனர் மண்டியிட்டவருக்கு மரணம் விளைவிப்பது அதர்மம் ஆதலால் மன்னிப்பு அளித்தார்.

சிவகங்கையின் ராணியாய் மீண்டும் பதவி ஏற்றார்.சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது.

1790-ல் அவரது மகளின் மறைவினால் மனமுடைந்த வேலுநாச்சியார் இதய நோயாளியாகி சிகிச்சைக்காக பிரான்ஸ்நாட்டுக்குச் சென்றார்.

மருது சகோதரர்களை மகன்களாக எண்ணி நாட்டின் ஆளுநர்களாக நியமித்தார் 1793-ல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்கு துயரம் அதிகமானது.

அதனால்,விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். வேலுநாச்சியார் 25டிசம்பர் 1796 இறந்தார்.உலகில் எந்த ராணியும் ராணி வேலு நாச்சியாருக்கு இணையாக முடியாது.இந்நாளில் அவரை வணங்குவோம்.

ஞாயிறு, 22 டிசம்பர், 2019

விவசாயிகள் தினம் டிசம்பர் 23.


விவசாயிகள் தினம் டிசம்பர் 23.

விவசாயம் இல்லையேல் இவ்வுலகம் இல்லை

நமக்கு உணவிடும் விவசாயிகளுக்கு இனிய விவசாயிகள் தின நல்வாழ்த்துக்கள் !!
🌾இந்தியாவின் முதுகெலும்பு விவசாயமாகும். நம் நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பாலானோர் விவசாயம் சார்ந்த தொழில்களையே செய்து வருகின்றனர். உணவு மனித வாழ்வில் மகத்தான இடம் பெற்றுள்ளது. அதற்கு முக்கிய காரணம் விவசாயம்.

🌾இந்தியாவின் முக்கியமான விவசாய விளைபொருட்களான நெல், கோதுமை, பருப்பு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவை பெற்று வருகிறது. பயிர் சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்கள், நவீன பண்ணைக் கருவிகள், மகசூல் அதிகரிக்கும் விதைகள் என்று நாளுக்கு நாள் விவசாயத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே வருகிறது.

🌾ஊருக்கே உணவளிப்பவன் விவசாயி. விவசாயத்தையும், விவசாயிகளையும் போற்றும் வகையில் கொண்டாடப்படும் ஒரு தினம் தான் விவசாயிகள் தினம். ஆண்டுதோறும் டிசம்பர் 23-ம் தேதி தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

📅இல்லை இல்லை.. டிசம்பர் 23-ம் தேதி தேசிய விவசாயிகள் தினமாக அறிவிக்கப்பட்டதே தவிர, இந்த நாளை இதுவரை யாரும் கொண்டாடி நாம் பார்த்திருக்க மாட்டோம். அதுமட்டுமில்லாமல் இப்படியொரு தினம் இருப்பது பலருக்கும் தெரியுமா..? என்றால் அதுவும் சந்தேகம் தான்.

👉இந்த தேசிய விவசாயிகள் தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது? என இப்போதாவது தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

👉நம் நாட்டின் முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பிறந்தநாளே விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


👉உத்தரப்பிரதேச மாநிலம் நூர்பூர் என்ற ஊரில் நடுத்தர விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், எளிமையான விவசாயத்தை நேசிக்கக்கூடிய மனிதராக வாழ்ந்து வந்தார்.

👉இவர் ஜூலை 1979-ம் ஆண்டு, 5-வது பிரதமராக பதவியேற்றார். 7 மாதங்கள் வரை மட்டுமே ஆட்சியில் இருந்த இவர் முதன் முதலில் ஜமீன்தாரி ஒழிப்புமுறை சட்டத்தை கொண்டு வந்தார்.

👉மேலும் விவசாயிகளின் விளைபொருட்களை விற்பதற்காக வேளாண் விளைபொருள் சந்தை மசோதாவையும் அறிமுகப்படுத்தினார்.

👉அதோடு இவர் கூட்டுறவு பண்ணை முறை, இந்தியாவில் வறுமை ஒழிப்பும் அதற்கான தீர்வும், வேலை செய்பவர்களுக்கு நிலம் உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.

👉தன் வாழ்நாளில் விவசாயிகளின் நில உரிமைக்காகவும், விவசாயிகளுக்காகவும் குரல் கொடுத்து வந்தவர். அதனால் இவருடைய பிறந்தநாளை 2001ஆம் ஆண்டிலிருந்து விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

🌱பலர் தனக்கும், விவசாயத்திற்கும் சம்பந்தம் இல்லை என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் விவசாயிகள் தினம் கொண்டாடுவதில் அவர்கள் அக்கறை காட்டுவதில்லை.

🌱ஆனால் அது தவறு.. நாம் உண்ணும் உணவிற்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் நம் மீது அக்கறை கொண்ட யாரோ ஒரு விவசாயி, ஏதோ ஒரு மூலையில், பல கஷ்டங்களுக்கு மத்தியில் காய்கறி, பழம், அரிசி என அனைத்தையும் நமக்காக விளைவித்து கொடுக்கிறார்.

🌱அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நாம் அனைவரும் அவர்களுக்கு ஆதரவாகவும், விவசாயத்தை காக்கவும் தேசிய விவசாயிகள் தினத்தை கொண்டாட வேண்டும் என விரும்பி உங்களில் ஒருவராக நாங்கள் விவசாயிகளுக்கு விவசாயிகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

🌱இந்த தலைமுறைக்கு தெரியாமல் போன மகிழ மரமும், இலுப்பை மரமும் ஊருக்கு ஊர் வைக்க வேண்டியதும் நமது கடமையே.

பல பேர் சோற்றில் கை வைக்க..
தன்னை வருத்தி சேற்றில் கை வைத்து பாடுபடுபவன்...
விவசாயி..🌱


Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

புதன், 18 டிசம்பர், 2019

டிசம்பர் 18 சிறப்புகள்.


டிசம்பர் 18 சிறப்புகள்.

நவீன அணு இயற்பியலின் தந்தை பிறந்த தினம் !!
முத்தான சிந்தனை துளிகள்!
மலை போன்ற சகிப்புத்தன்மை, இடைவிடாத முயற்சி, எல்லையற்ற நம்பிக்கை இவைதாம் நற்காரியத்தில் வெற்றி தரும்.சர்வதேச இடம்பெயர்வோர் தினம்


சர்வதேச இடம்பெயர்வோர் தினம் டிசம்பர் 18ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. வேலை வாய்ப்பிற்காக பலரும் வெளிநாடுகளுக்கு சென்று குடியேறுகின்றனர். ஆனால், அங்கு அவர்களுக்கு சட்டப்படியான உரிமைகள் கிடைப்பதில்லை. அவர்கள் வன்முறை, துன்புறுத்தல், அடக்கு முறைகளுக்கு ஆளாகின்றனர்.

ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் குடியேறுபவர்களை தனது சொத்தாக மதித்து நடத்த வேண்டும் என்பதற்காக இத்தினம் 2001ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது.ஜெ.ஜெ.தாம்சன்


நவீன அணு இயற்பியலின் தந்தை ஜெ.ஜெ.தாம்சன் 1856ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் என்ற இடத்தில் பிறந்தார்.

இவர் அணுவின் அடிப்படைப் பொருளான மின்னணு எனப்படும் எலக்ட்ரானைக் கண்டுபிடித்தார். 1906ஆம் ஆண்டு மின்னிறக்கக் குழாயில் வாயுக்களின் வழியே மின்சாரத்தை செலுத்தும்போது ஏற்படும் விளைவுகளைப் பற்றிய இவருடைய ஆய்வுகளுக்காக, நோபல் பரிசு வழங்கப்பட்டது.

பல பரிசுகள் பெற்று சிறந்து விளங்கிய தாம்சன் 1940ஆம் ஆண்டு மறைந்தார். இங்கிலாந்தின் புகழ்பெற்ற பல மேதைகள் புதைக்கப்பட்ட வெஸ்ட் மினிஸ்டர் அப்பே (றுநளவ ஆinளைவநச யுடிடிநல) என்ற இடத்தில் இவருடைய உடல் அனைத்து மரியாதைகளுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.நா.பார்த்தசாரதி


தமிழ் எழுத்தாளர் நா.பார்த்தசாரதி 1932ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்திலுள்ள நரிகுடி என்னும் சிற்றூரில் பிறந்தார். இவர் தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களை கொண்டுள்ளார்.

1983ஆம் ஆண்டு இவர் எழுதிய சாயங்கால மேகங்கள் எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல்கள் என்ற நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் பல நூல்களை எழுதியிருக்கிறார்.

சாகித்ய அகாடமி, கம்பராமாயணத் தத்துவக் கடல் போன்ற பல விருதுகளைப் பெற்ற நா.பார்த்தசாரதி 1987ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1822ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி தமிழ் மொழி செழிக்க பாடுபட்ட ஆறுமுக நாவலர் இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள நல்லூரில் பிறந்தார்.1890ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி பண்பலையைக் (குஆ) கண்டுபிடித்த எட்வின் ஹோவர்ட் ஆர்ம்ஸ்ட்ராங் அமெரிக்காவில் பிறந்தார்.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

ஞாயிறு, 15 டிசம்பர், 2019

வெற்றி தினம் டிசம்பர் 16


வெற்றி தினம் டிசம்பர் 16.

வெற்றி நாள் (இந்தி: विजय दिवस Eng- Victory Day) 1971ல் இந்தியா வங்கதேச முக்திவாகினியுடன் இணைந்து இந்திய-பாகிஸ்தான் போர், 1971 இல் பெற்ற வெற்றியின் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் திசம்பர் 16 அன்று கொண்டாடப்படுகிறது.

வெற்றி தினம்

டாக்காவில் 16 திசம்பர், 1971ல் இந்திய இராணுவ அதிகாரிகள் முன்னிலையில் பாகிஸ்தான்  சரணாகதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பாகிஸ்தான் லெப்டினன்ட். ஜெனரல் ஏ. ஏ. ஏ. கே. நியாசி
1971 இல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரின் விளைவாக பாகிஸ்தான் இராணுவம் தானாக முன்வந்து  நிபந்தனையற்ற சரணாகதி அடைந்தது. கிழக்குப் பாகிஸ்தான் வங்காளதேசம் என்ற தனி நாடாக உருவானது. தங்களின் தோல்விக்குப் பின்னர் டாக்காவில் ரமணா குதிரைப் பந்தைய மைதானத்தில் 93,000 பாகிஸ்தான் வீரர்கள் ஜெனரல் அமீர் அப்துல்லாகான் நியாஸி தலைமையில் இந்தியாவின் லெப்டினெண்ட் ஜெனரல் ஜெகத்சிங் சிங் அரோரா, தலைமையிலான கூட்டணிப் படைகளிடம் சரணடைந்தனர். இப்போரில் உயிர் நீத்த தங்கள் நாட்டு வீரர்களின் தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தும்விதமாக ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் வெற்றி நாள் அனுசரிக்கப்படுகிறது.


வெற்றி தினம் 2014ல் விசாகப்பட்டினம் தியாகிகள் போர் நினைவிடத்தில் துணை அட்மிரல் பிமால் வர்மா அஞ்சலி செலுத்துகிறார்.
இந்நாளன்று, இந்தியாவின் தலைநகர் புது தில்லி இந்தியவாயிலில் (India Gate) உள்ள அமர் ஜவான் ஜோதியில், முப்படைகளின் தளபதிகளுடன் இணைந்து நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அஞ்சலி செலுத்துகின்றார். அதேபோல் பெங்களூரில் உள்ள தேசிய இராணுவ நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. குடிமக்கள், மாணவர்கள், மூத்த அரசு அதிகாரிகள், முன்னாள் இராணுவத்தினர் ஆகியோர் ஆண்டுதோறும் திசம்பர் 16 அன்று மலரஞ்சலி செலுத்தி வீரர்களின் தியாகத்தை நினைவு கூறுகின்றனர்
நன்றி விக்கிபீடியா.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

சனி, 14 டிசம்பர், 2019

உலக தேயிலை தினம் டிசம்பர் 15.



உலக தேயிலை தினம் டிசம்பர் 15.

திரைப்படங்களில் வரும் பாடல் காட்சிகள் என்றாலே சுற்றிலும் பசுமை நிறைந்த காட்சிகளைத் தான் நிறையக் காண்பிப்பார்கள். எவ்வளவு குளுமையான இடம், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை பசேல்… என்று மெய் சிலிர்த்து பார்த்துக் கொண்டிருப்போம். அப்படிக் காட்டப்படும் இடங்களில் டீத் தோட்டமும் ஒன்று. மலை முகடுகளில் நெருக்கமாக வளர்ந்து நிற்கும் டீ செடிகளால் மலைக்கே ஏதோ பச்சைப் போர்வை போர்த்தியது போல இருக்கும். தூரத்திலிருந்து பார்க்கும் நாம் தான் அதனை ரசித்துக் கொள்ள வேண்டும். உண்மையில் அங்கிருக்கும் மக்கள் குறிப்பாக டீ தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் என்னென்ன பாதிப்புகளை சந்திக்கிறார்கள் தெரியுமா?

டயர்டாக இருக்கிறதென்றும்… தலைவலிக்கிறது என்றும் நினைத்த நேரத்தில் டீ சாப்பிடும் பழக்கம் உடையவர்கள் நம்மில் பலர் இருக்கிறார்கள். ஆனால் டீயை விளைவித்து அதனை மக்களின் பயன்பாட்டிற்காக அனுப்பி வைத்திடும் தொழிலாளர்கள் பலர் இன்றளவும் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

இன்றைக்கு பன்னாட்டு தேயிலை நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. மற்ற தொழிலாளர்களை விட இந்த தொழிலாளர்களின் பிரச்சனை முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. இவர்களது பிரச்ச னையை வெளிப்படுத்த தனியான ஒரு நாள் வேண்டுமென்று ஆலோசிக்கப்பட்ட போது, அசாம் தேயிலைத் தோட்டத்தில் இருந்த சீன ஒப்பந்த தொழிலாளர்கள் 1838 ஆம் ஆண்டு திசம்பர் பதினைந்தாம் நாள் முதலாவது சம்பளப் போராட்டத்தினை மேற்கொண்டார்கள். அதன் நினைவாக ஆண்டு தோறும் டிசம்பர் பதினைந்தாம் நாள் சர்வதேச தேயிலை தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

இன்று உலகில் தண்ணீருக்கு அடுத்த படியாக உலக மக்களால் அதிக அளவில் அருந்தப்படும் பானமாக தேநீர் உள்ளது. தேயிலையை சர்வ நோய் நிவாரணி பானமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தமையினால் இன்று உலகின் அனைத்து நாடுகளும் தேநீரைப் பருகும்படி தம்நாட்டு மக்களை ஊக்குவித்து வருகின்றன. எனவே தேயிலை உற்பத்தியின் தேவை மக்கள்தொகை அதிகரிப்பிற்கேற்ப அதிகரித்துச் செல்லவேண்டிய தேவை உள்ளது. எனவே, தேயிலை உற்பத்திற்கான சூழலைக் கொண்டுள்ள நாடுகள் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன.

அறுபதுகளுக்கு முன்பதாக சீனா, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளே தேயிலையை உற்பத்தி செய்து வந்தன. ஆனால் இன்று உலகின் 58 நாடுகள் தேயிலை உற்பத்தி யில் ஈடுபட்டு வருகின்றன. சர்வதேச தேயிலை தொழிலாளர் மாநாடு ஒன்றின்  தொடர்ச்சியாக 2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரேஸிலின் போர்டே அல்க்கிரியில் உலக சமூக மாமன்ற கூடுதல் நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வில் ஆங்கிலேயரின் ஆட்சியில் முதலாவது இந்திய அஸாம் தேயிலைத் தோட்டத்தில் சீன நாட்டைச் சார்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் 1838 டிசம்பரில் நடத்திய முதலாவது சம்பளப் போராட்டத்தினை நினைவு கூறும் விதமாக சர்வதேச தேயிலைத் தினமாக டிசம்பர் 15 ஆம் தேதியை அறிவிக்கலாம் என்று முடிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக முதலாவது சர்வதேச தேயிலை தின மாநாடு புது டெல்லியில் 2005 டிசம்பர் 15 அன்று நடந்தேறியது.

ஆனாலும் பரந்த விரிந்த கண்ணைக் கவரும் பசுமை, சில்லென உடல் வருடும் குளிர்காற்றென மலைப் பிரதேசங்களின் நினைவே நமக்குப் பரவசமூட்டுவதாய் அமைகின்றன. ஆனால், அவற்றின் மறுபுறத்தில், அகண்ட பள்ளத்தாக்குகளில் தலைமுறைகளாய் உழைத்தும் தலையெடுக்க வழியின்றி கொத்தடிமைகளாக உழலும் பல இலட்சம் தோட்டத் தொழிலாளர்களின் இருள் நிறைந்த வாழ்வோ நம்மால் அறியப்படாமலே கிடக்கின்றது, நூறாண்டுகள் கடந்த பின்பும்.

பச்சைப் போர்வையென பல்லாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துகிடக்கும் தேயிலைத் தோட்டங் கள், நெடிதுயர்ந்த கழுகு மரங்கள், காய்த்துக் குழுலுங்கும் மிளகு, ஏலக்காய், காப்பித் தோட்டங்கள், பால்வடியும் இரப்பர் மரங்களென இமயத்தின் அடிவாரந்தொட்டு தென்குமரி வரையிலான மலைத் தோட்டங்கள் அனைத்திலும் நிறைந்து, மறைந்து, உறைந்து கிடக்கிறது பல இலட்சம் கூலித் தொழிலாளர்களின் பல்லாண்டுகால உழைப்பு.

வெள்ளையர்களின் காலனியச் சுரண்டல் ஆட்சியின் கீழ், செழிப்பான மலைப்பிரதேசங்களில் தேயிலை, மிளகு, காப்பி உள்ளிட்ட பணப்பயிர் வளர்த்துக் கொள்ளை இலாபம் ஈட்டிய ஆங்கிலேய முதலாளிகளால் வதைத்துக் கொல்லப்பட்டோர் ஏராளம். இலங்கை, பர்மா, மலேசியா உள்ளிட்ட தனது காலனி நாடுகளின் தேயிலைத் தோட்டங்களில் கூலி வேலை செய்வதற்காக மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல ஆயிரம் தாழ்த்தப்பட்ட மக்களை அடிமைகளாக இழுத்துச் சென்றனர் வெள்ளை முதலாளிகள். வறண்டு போன பூமியில் வாழ வழியின்றி ஆண்டு முழுவதும் வேலை, நல்ல வருமானம் என்ற ஏஜென்டுகளின் பேச்சில் மயங்கி, பசி, பட்டினிக் கொடுமைகளிலிருந்து தப்பித்துப் பஞ்சம் பிழைக்க மலைப் பிரதேசங்களை நாடி வந்தவர்களை எதிர்கொண்டதோ நரக வாழ்க்கை.

மலைத் தோட்டப் பயிர்களில் பிரதானமானது தேயிலை, அஸ்ஸாம், மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் இமயமலை அடிவாரத்திலும், கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் பரவிக் கிடக்கின்றன தேயிலைத் தோட்டங்கள், உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி, தங்க இடமின்றி, நோய்க்கு மருந்தின்றி கொத்தடிமை வாழ்வில் அடக்கி, ஒடுக்கி, ஒட்டச் சுரண்டப்பட்டு, அரைவயிற்றுக் கஞ்சியுடன் கடுங்குளிரிலும், சுட்டெரிக்கும் வெயிலிலும் உழைத்துக் களைத்து, இளைத்துப்போய் இற்றுவீழும் உழைக்கும் மக்களின் உடல்களில் உரம்பெற்றுத் தழைத்து நிற்கின்றன தேயிலைச் செடிகள்; கொழுத்துக் கிடக்கின்றனர் இந்தத் தேயிலை எஸ்டேட்டுகளுக்குச் சொந்தக்காரர்களான பன்னாட்டு முதலாளிகளும், டாடா, வாடியா, கோத்ரெஜ் உள்ளிட்ட தரகு முதலாளிகளும்.

இந்தியா முழுவதிலும் சுமார் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் உள்ளனர். தமிழகத்தில் நீலகிரி, ஆனைமலை உள்ளிட்ட எஸ்டேட்டுகளில் இரண்டு இலட்சத்திற்கும் மேற் பட்டோர் பணிபுரிகின்றனர். நம் அனைவருக்கும் புத்துணர்ச்சியூட்டும் தேயிலையை உற்பத்தி செய்யும் இந்தத் தொழிலாளர்களின் வாழ்க்கையிலோ அவலச் சுவை மண்டிக்கிடக்கிறது.

அதிகாலையில் எழுந்து சமைத்து முடித்து, இருள் அகலும் முன்பே கிளம்பி நடந்து சென்று மலையேறி காலை 8 மணிமுதல் மாலை 5 மணி வரை இடைவேளையின்றித் தேயிலைக் கொழுந்துகளைப் பறித்து, ஆலைக்கு எடுத்துச் சென்று எடைபோட்டு முடிப்பதற்குள் இரவாகி விடும். பின்னர் இரவு உணவுக்கான சமையல் வேலைகள். இடைப்பட்ட மிகக்குறைவான நேரத்தில்தான் கண்ணயர முடியும்.

இப்படி இரவு, பகல் பாராமல் ஒய்வு, ஒழிச்சலின்றிப் பாடுபடும் இவர்களுக்கு வழங்கப்படும் கூலியோ அரை வயிற்றுக் கஞ்சிக்குக் கூடப் போதுமானதாக இருப்பதில்லை. சத்தான உணவின்மை, நோய் வாய்ப்படுதல் போன்றவற்றால் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக வேலைக்குச் செல்ல முடிவதில்லை. மாதத்தில் அதிகபட்சமாக 20 நாட்கள் மட்டுமே வேலை செய்ய முடிகின்ற நிலையில் கணவனும்,மனைவியுமாக குடும்பமே பாடுபட்டாலும் மாதக் கூலியாக அவர்கள் பெறும் தொகை பத்தாயிரத்தைத் தாண்டுவதில்லை. அதிலும் பல்வேறு பிடிமானங்கள் போக சொற்பத் தொகையே கைவந்து சேருகிறது. இதைக் கொண்டு வாழ்க்கைத் தேவைகளைச் சமாளிக்க முடியாத தொழிலாளர்கள் கந்துவட்டிக்கு கடன் பெற்றே காலம் தள்ளுகின்றனர். மறுபுறத்தில், அற்பக் கூலிக்கு தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டும் எஸ்டேட் முதலாளிகளோ கோடிகளில் இலாபத்தை வாரிச்சுருட்டுகின்றனர்.

தேயிலை பறிக்கும் பணியில் பெண்கள் மட்டுமே ஈடுபடுத்தப்படுகின்றனர். வெயிலிலும், மழையிலும் காலையிலிருந்து மாலைவரை நின்றபடியே, அட்டைக்கடியையும், உண்ணிக் கடியையும் தாங்கிக் கொண்டு, முதுகில் பாரத்தையும் சுமந்தகொண்டு, கொழுந்து பறிக்க வேண்டும். சிறிது நேரம்கூட ஓய்வெடுக்க முடியாது. மதிய உணவுக்கு மட்டுமே சிறிது இடை வேளை உண்டு. மற்றபடி இயற்கை உபாதைகளுக்கு ஒதுங்கினால்கூட கங்காணிகளின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாக நேரிடும். இவ்வாறு தொடர்ச்சியாக நின்றுகொண்டே வேலைசெய்வதால் ஏற்படும் மூட்டுவலி, போதிய பாதுகாப்புக் கவசங்களின்றி வேலைசெய்ய நிர்ப்பந்திக்கப் படுவதாலும், உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்ற நச்சு இராசயனங்களாலும் ஏற்படும் தலைவலி, நரம்புக் கோளாறுகள், மார்புவலி, கருச்சிதைவு, சிறுநீரக, கருப்பைக் கோளாறுகள் போன்ற பல்வேறு நோய்களுக்கு இரையாக்கப்படுகின்றனர் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள். ஆனால், இவற்றிற்கெல்லாம் உரிய சிகிச்சை அளிப்பதற்கான எவ்வித மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தித் தருவதில்லை முதலாளிகள். இதுதவிர, பாம்புக்கடி, வனவிலங்குகளால் தாக்கப்படுதல், விபத்துகள் உள்ளிட்ட எதற்கும் உரிய மருந்துகளோ பெயரளவுக்கு நடத்தப்படும் எஸ்டேட் மருத்துவமனைகளில் இருப்பதில்லை. எனவே, தோட்டத்தொழிலாளர்கள் தங்களது சொற்ப வருமானத்திலும் கணிசமான தொகையை மருத்துவத்திற்காகச் செலவளிக்க வேண்டியுள்ளது.

பனியிலும், மழையிலும், வெயிலிலும் வாடி வதங்கி, வேலைசெய்துவிட்டுச் சோர்வுடன் திரும்பும் இந்தத் தொழிலாளர்கள் தங்கி, உண்டு, உறங்கி ஓய்வெடுக்கத் தரமான வீடுகள் எதுவும் கிடையாது.ஆங்கிலேய முதலாளிகள் காலந்தொட்டு இன்றுவரையிலும் லைன் வீடுகள் எனும் கொட்டடிகளில் தான் வதைபடுகிறது இவர்களது வாழ்க்கை. ஆஸ்பெஸ்டாஸ் எனும் நச்சுக் கூரையால் மூடப்பட்ட இத்தகரக் கொட்டகைகளில் பல்லாண்டுகளாக வாழ நிர்ப்பந்திக்கப்படும் தொழிலாளர்களில் பலர் புற்று நோய்க்கு ஆட்பட்டு மாண்டுபோகும் அவலங்களும் தொடர்கின்றன. மேலும், இந்த ஒண்டுக் குடித்தனமும் இவர்களுக்குச் சொந்தம் கிடையாது. 58 வயதில் பணியிலிருந்து நீக்கி, குடியிருப்புகளிலிருந்து தொழிலாளர்களை வெளியேற்றி வீடற்ற அநாதைகளாக நிறுத்துகின்றனர் முதலாளிகள்.



தோட்டத் தொழிலாளர்களில் பெரும்பான்மையோர் கல்வியறிவற்றவர்கள்; ஐந்தாம் வகுப்புவரை படித்தவர்கள் மிகச்சிலர் மட்டுமே. இந்நிலையில், இவர்களது குழந்தைகளின் கல்விக்காக போதிய உட்கட்டமைப்புகள், ஆசிரியர்களைக் கொண்ட பள்ளிக்கூடங்கள் எதுவும் எஸ்டேட்டுகளில் கிடையாது. எனவே, தங்களது குழந்தைகளின் எதிர்கால நலன்கருதி வெளியுரில் படிக்க வைப்பதால், தனியார்பள்ளி முதலாளிகளின் கட்டணக் கொள்ளைக்கும் இரையாக்கப்படுகின்றனர், இத்தொழிலாளர்கள். இப்படி வெளியூர்களில் தங்கிப் படிக்கவைக்க முடியாத நிலையிலுள்ள தொழிலாளர்களின் குழந்தைகளோ, குடும்ப பாரத்தைச் சுமக்க வேண்டி, தாயுடன் தேயிலை பறிக்கும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டு, இளமையிலேயே சிறகுகள் முறிக்கப்பட்டு, மீண்டும் அடிமை வாழ்விலேயே புதைக்கப்படுகின்றனர்.

இன்றைய மறுகாலனியாக்கச் சூழலில் தோட்டத்தொழிலாளர்களின் வாழ்கை நெருக்கடிகள் மென்மேலும் முற்றிப்போயுள்ளன. தனியார்மய தாராளமய-உலகமயக் கொள்கையின் விளைவாக தேயிலை இறக்குமதியின் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து சந்தையில் பச்சைத் தேயிலையின் கொள்முதல் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனை சாதகமாகக் கொண்டு தொழிலாளர்கள் மீதான சுரண்டலைத் தீவிரப் படுத்தியுள்ளனர், எஸ்டேட் முதலாளிகள். நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து காண்ட்ராக்ட் தொழிலாளர்களைப்பணிக்கு அமர்த்தி வருகின்றனர். ஒரிஸ்ஸா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநிலத் தொழிலாளர்களை ஒப்பந்தப் பணிக்கு அமர்த்தி,நிரந்தரத் தொழிலாளர்களைப் போல இருமடங்கு பணிச்சுமையை அவர்கள் மீது திணித்து கொடூரமாகச் சுரண்டுகின்றனர். ஆனால், வழங்கப்படுவதோ அற்பக்கூலி, இந்த அற்பக்கூலியைக் கூட முறையாக வழங்காமல், விலை வீழ்ச்சியைக் காரணம் காட்டி, மாதக்கணக்கில் இழுத்தடித்து, தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கின்றனர்.

இந்த விலை வீழ்ச்சி என்பதே முதலாளிகளின் கூட்டுக் களவாணித்தனத்தின், சதியின் விளைவாக, செயற்கையாகத் தோற்றுவிக்கப்பட்ட ஒன்றுதான். தேயிலை உற்பத்தியிலும், விற்பனையிலும் ஈடுபடுகின்ற டாடா போன்ற தரகு முதலாளிகளும், பன்னாட்டு முதலாளிகளும் தேயிலை உற்பத்திக்கும், தேயிலையைத் தூளாக மாற்றி விற்பதற்குமென தனித்தனியாக வெவ்வெறு பெயர்களில் நிறுவனங்களை உருவாக்கிக் கொள்கின்றனர். இவர்கள் தங்களுக்குள் கள்ளக்கூட்டை (cartels, syndicates) உருவாக்கிக்கொண்டு திட்டமிட்டே பச்சைத் தேயிலையைக் குறைவான விலையில் கொள்முதல் செய்கின்றனர். பின்னர் விலை வீழ்ச்சியைக் காரணம் காட்டி தொழிலாளர்களின் மீதான பணிச்சுமையை அதிகரிப்பது, கூலியைக் குறைப்பது, சம்பளம் தராமல் இழுத்தடிப்பது, காண்ட்ராக்ட் தொழிலாளர்களைப் பணிக்கமர்த்துவது என்று உழைப்பவர்களைச் சுரண்டுகின்றனர். மறுபுறத்திலோ, மிக அதிகமான விலைக்குத் தேயிலை தூளை விற்று கொள்ளை இலாபம் ஈட்டுகின்றனர்.

இந்த செயற்கை விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட, தேயிலை உற்பத்தியில் மட்டுமே ஈடுபட்டு வந்த பல சிறிய, நடுத்தர எஸ்டேட் முதலாளிகள் நட்டம் ஏற்படுவதாகக் கூறி எஸ்டேட்டுகளை இழுத்து மூடிவருகின்றனர். இதுநாள்வரை தங்களுக்காக உழைத்து, கோடிகளில் இலாபத்தை ஈட்டித்தந்த தொழிலாளர்களை நடுத்தெருவில் நிறுத்துகின்றனர். மேற்கு வங்கம், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் இப்படித்திடீரென இழுத்து மூடப்பட்ட எஸ்டேட்டுகளால் வாழ்விழந்த தொழிலாளர்கள் பலர் பசியிலும், பட்டினியிலும் வாடி கொத்துக் கொத்தாக மடியும் கொடூரமும் அரங்கேறி வருகிறது.

தோட்டத் தொழிலாளர் சட்டம் 1951, குறைந்த பட்ச ஊதியம் சட்டம் 1948, தொழிற் தகராறுகள் சட்டம் 1947, காண்டிராக்ட் தொழிலாளர்கள் முறைபடுத்தல் மற்றும் ஒழிப்புச்சட்டம் 1970, உள்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நலச் சட்டம் 1979 உள்ளிட்ட தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்கான சட்டங்கள் அனைத்தையும் குப்பையென ஒதுக்கித் தள்ளியுள்ளனர், முதலாளிகள். இச்சட்டங்களை அமல்படுத்த மறுக்கும் முதலாளிகள் மீது சிறு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடாமல் வேடிக்கை பார்க்கிறது அரசு. பெருமளவிலான தொழிலாளர்களை அணிதிரட்டியுள்ள போலிக் கம்யூனிஸ்டுகளின் தொழிற்சங்களோ முதலாளிகளின் எச்சில் காசுக்கு வாலாட்டிக் கொண்டு தொழிலாளிகளுக்குத் துரோகமிழைக்கின்றன. போலிகளின் முகத்திரை கிழித்தெழுந்த மூணாறு தேயிலைத் தோட்டப் பெண் தொழிலாளர்களின் தன்னெழுச்சியான போராட்டமும் சித்தாந்த வலுவின்றிப் போனதால் கோரிக்கைகளை முழுமையான நிறைவேற்ற முடியாமல் முட்டுச்சந்தில் முடங்கிப்போனது. தற்போது இருக்கின்ற சட்டங்களையும் திருத்தி, தொழிலாளர் களை போராடிப்பெற்ற உரிமைகளைப் பறித்து, அவர்களைக் கொத்தடிமைகளாக மாற்றும் வேலைகளில் சதித்தனமாக ஈடுபட்டு வருகிறது பாசிச மோடி அரசு.

சட்டங்கள் அனைத்தும் செல்லாக் காசுகளாகிவிட்டன. பிழைப்புவாதிகளின், போலிக் கம்யுனிஸ்டுகளின் தொழிற்சங்களோ கங்காணிகளாக மாறி நிற்கின்றன; ஆங்கிலேயன் காலத்தில் பூட்டப் பட்ட அடிமை விலங்கோ அகற்றப்படாமலேயே கிடக்கிறது இன்றுவரை. தமது வாழ்க்கை யைச் சிதைத்துச் சூறையாடும் பன்னாட்டு, இந்தியத் தரகு முதலாளிகளையும், அவர்களைத் தாங்கி நிற்கும் இந்தப் போலி ஜனநாயக அரசமைப்பையும் தாக்கித் தகர்த்து, தூக்கியெறியும் வகையிலான போராட்டங்களைக் கட்டிமைப்பதன் வாயிலாகவே தோட்டத் தொழிலாளர்கள் தங்களைப் பிணைத்துள்ள கொத்தடிமைத் தளையை அறுத்தெறிய முடியும்.



எக்ஸ்ட்ரா ரிப்போர்ட் :✍?

•☕உலகம் முழுவதும் 1500 தேநீர் வகைகள் உள்ளன.

•☕சீனாவில் உள்ள ஹூனான் பிரதேசம்தான் தேயிலையின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. அங்கு கிடைத்த 800 ஆண்டுகள் பழமையான தேயிலைச் செடிகளை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.

☕•சீனாவில் கிரீன் டீ தேசிய பானமாகும்.

•☕உலகிலேயே அதிகமாகத் தேநீர் பருகுபவர்கள் உள்ள நாடு இந்தியாதான். நாட்டின் தேயிலை உற்பத்தியில் 80 சதவீதத்தையும், உலக உற்பத்தியில் 20 சதவீதத்தையும் ருசிப்பவர்கள் இந்தியர்கள்தாம்.

•☕இந்தியாவில் அசாம், டார்ஜிலிங், வட வங்காளம் மற்றும் நீலகிரி டீ வகைகள் அதிகமாகக் கிடைக்கின்றன.

•☕சாதாரண டீயுடன் சேர்ந்து இப்போது ஆர்கானிக் டீ, கிரீன் டீ, ஒயிட் டீ, ஹுலாங் டீ, ஃபிளேவர்டு டீ, டீ காஃப் டீ, ஹெர்பல் டீ போன்ற மருத்துவப் பயன்பாடுள்ள தேநீர் வகைகளும் இப்போது கிடைக்கின்றன.

•☕ஷன்ஷா, கியமாகரோ, ஜென்மாய்ஷா, மேட்ஷா, பன்ஷா, குகிஷா, ஹங்ஜிஷா இவையெல்லாம் என்ன என்று கேட்கிறீர்களா? ஜப்பானில் கிடைக்கும் புகழ் பெற்ற டீயின் பெயர்கள்.

•☕உலகத்தில் ஜப்பானியர் மட்டுமே சா நோ ஹூ என்ற டீ விழா எடுக்கிறார்கள். தேநீர் உடல் நலத்துக்கு மட்டுமல்ல, ஆன்மீக நலனுக்கும் உகந்தது என்பது அவர்களுடைய நம்பிக்கை.

•☕தேநீரைப் பற்றியும், தேயிலைத் தொழிலைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்கென்றே ஓர் இதழ் வெளிவருகிறது. பெயர்: டீ தி மகஸின். இந்த ஆங்கில இதழின் நிறுவனரான பேர்ஸ் டெக்ஸ்டர் என்ற பெண்மணி ஒரு பள்ளிக்கூடத்தைத் தொடங்கினார். அதற்குப் பெயர்: தி டீ ஸ்கூல்.
நன்றி ஆந்தையார்.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

வெள்ளி, 13 டிசம்பர், 2019

டிசம்பர் 05 சிறப்புகள்.


டிசம்பர் 05 சிறப்புகள்.

இன்று இந்திய எரிசக்தி சேமிப்பு தினம்... மேலும் வரலாறு என்ன கூறுகிறது?
இன்றைய பொன்மொழி
'வாய்ப்புகள் எப்போதும் மிக மென்மையாகத்தான் கதவைத் தட்டும், அதை சரியாக பயன்படுத்திக்கொள்வது நமது பொறுப்பாகும்."இந்திய எரிசக்தி சேமிப்பு தினம்


🌲 எரிபொருள் பயன்படாத துறையே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். முக்கியமாக பெட்ரோலியம் மற்றும் நிலக்கரியின் பயன்பாடு மிக அதிகமாக இருக்கிறது.

🌲 இன்னும் சிறிது நாட்களில் இந்த எரிபொருட்கள் இந்தப் பூமியில் தீர்ந்து போய் நமக்கு கிடைக்காமல் போகும் அபாயம் இருக்கிறது. எனவே, நிலைமையை சமாளிக்க எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

🌲 அதனால், எரிசக்தி சேமிப்பை வலியுறுத்தும் வகையில் தேசிய எரிசக்தி சேமிப்பு தினம் டிசம்பர் 14ஆம் தேதியும், எரிசக்தி சேமிப்பு வாரம் டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 21ஆம் தேதி வரையும் அனுசரிக்கப்படுகின்றன.விஜய் அமிர்தராஜ்


🎾 டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் 1953ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி சென்னையில் பிறந்தார்.

🎾 இவர் 1970ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை உலக அளவில் டென்னிஸ் போட்டிகளில் கலந்துகொண்டார். 1974ஆம் ஆண்டு மற்றும் 1987ஆம் ஆண்டு இறுதிப் போட்டியை அடைந்த ஐனெயைn னுயஎளை ஊரி குழுவுக்குத் தலைமை தாங்கினார். இவர் உலகத்தின் 16வது சிறந்த ஆட்டக்காரராக இருந்தார்.

🎾 இவர் தொலைக்காட்சி விளையாட்டு விமர்சகராகவும், நிகழ்ச்சிகளை தயாரிப்பவராகவும் உள்ளார். திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். ஐ.நா சபையின் கௌரவ தூதராக போஸ்னியா நாட்டில் பணிபுரிந்தார்.முக்கிய நிகழ்வுகள்
👉 1911ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி ரோல்ட் அமுண்ட்சென் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு தென் முனையை அடைந்த முதலாவது மனிதர் என்ற பெயரைப் பெற்றனர்.👉 1900ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி மாக்ஸ் பிளாங்க் தனது கரும்பொருள் கதிர்வீச்சு பற்றிய கொள்கையை நிறுவினார்.👉 1959ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி தமிழறிஞர் சோமசுந்தர பாரதியார் மறைந்தார்.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

இந்திய எரிசக்தி சேமிப்பு தினம் டிசம்பர் 14.





இந்திய எரிசக்தி சேமிப்பு தினம் டிசம்பர் 14.

#இந்திய_எரிசக்தி_சேமிப்பு_தினம்

எரிபொருள் பயன்படாத துறையே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். முக்கியமாக பெட்ரோலியம் மற்றும் நிலக்கரியின் பயன்பாடு மிக அதிகமாக இருக்கிறது.
இன்னும் சிறிது நாட்களில் இந்த எரிபொருட்கள் இந்தப் பூமியில் தீர்ந்து போய் நமக்கு கிடைக்காமல் போகும் அபாயம் இருக்கிறது. எனவேஇ நிலைமையை சமாளிக்க எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
அதனால்இ எரிசக்தி சேமிப்பை வலியுறுத்தும் வகையில் தேசிய எரிசக்தி சேமிப்பு தினம் டிசம்பர் 14ஆம் தேதியும்இ எரிசக்தி சேமிப்பு வாரம் டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 21ஆம் தேதி வரையும் அனுசரிக்கப்படுகின்றன
சேமிப்பே உற்பத்திக்கு சமம்: இன்று தேசிய ஆற்றல் சேமிப்பு தினம்.

காலை எழுந்தவுடன் சமைப்பதில் ஆரம்பித்து, பயணம் செய்ய பஸ்சில் சென்று, இரவு தூங்கும் போது மின்விசிறி இயக்கும் வரை, அனைத்துக்கும் தேவைப்படுவது ஆற்றல் (எனர்ஜி). மனித வாழ்க்கையில் ஆற்றல் என்பது, உணவுக்கு சமமான ஒன்றாகிவிட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, வாழ்க்கை நவீனமாகி விட்டது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் பெரும்பாலானவை ஆற்றல் சக்தி மூலமே இயங்குகிறது. ஆற்றல் பெரும்பாலும் புதுப்பிக்க இயலாதவையாக உள்ளன.

நிலக்கரி, கச்சா எண்ணெய், மின்சாரம் என பல ஆற்றல் சக்திகளும் குறைந்து கொண்டே வருகின்றன. இவை இன்று கிடைப்பது போலவே, எதிர்காலத்திலும் கிடைக்கும் என சொல்ல முடியாது. இன்னும் ஐம்பது ஆண்டுகளில் ஆற்றல் தட்டுப்பாடு ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். ஆற்றல் சக்திகளை சிக்கனமாக பயன்படுத்த வலியுறுத்தியும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நவ., 14ம் தேதி தேசிய ஆற்றல் சேமிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. எரிசக்தியை குறைவாக பயன்படுத்தினால் அதுதான் சேமிப்பு. எரிசக்தி சேமிப்பு என்பது, எரிசக்தி உற்பத்திக்கு சமம். எரிசக்தியை உற்பத்தியைவிட, அதிகமாக செலவழித்து வருகிறோம். இந்தியாவில் ஆற்றல் வளங்கள் குறைவாகவே உள்ளன. நாம் இறக்குமதியைத் தான், அதிகம் சார்ந்திருக்கிறோம்.


ஆற்றலை எப்படி சேமிப்பது:

* மின்சாரத்தை அவசியத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மின்சார சேமிப்பு, நமக்கு பணத்தையும் சேமிக்கிறது. எதிர்காலத்தில் சூரியசக்தி மின்சாரம் முக்கிய பங்கு வகிக்கும்.
* மின்சாரத்துக்கு அடுத்தாக, வாகனப் பயன்பாடு. கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதன் விலையை பொறுத்தே, அனைத்து பொருட்களின் விலையும் உள்ளது. வாகனத்தை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* சமையல் எரிவாயு சிக்கனமும், அவசியம் பின்பற்ற வேண்டும்.
* ஆற்றல் சேமிப்பு என்பது, வீட்டில் தொடங்கி, நமது தெரு, பள்ளி, அலுவலகம், ஊர், மாநிலம் என பயணித்து, இந்தியா முழுவதும் ஆற்றல் சேமிப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்.

எரிசக்தி சேமிப்பு
இந்த பூமி ஒவ்வொரு மனிதனின் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு வேண்டியவற்றைத் தருமே தவிர ஒவ்வொருவரின் பேராசையைத் திருப்திப் படுத்துமளவிற்கு அல்ல.

நாம் எரிசக்தியை உற்பத்தி செய்யும் வேகத்தைக் காட்டிலும் அதிகமான வேகத்தில் செலவழிக்கிறோம்-நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவை மிகப்பெரும் அளவில் பயன்படும் வளஆதாரங்கள். இவை உருவாவதற்குப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன
எரிசக்தி வள ஆதாரங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன-இந்தியாவில் உலக எரிசக்தி வள ஆதாரத்தில் 1% மட்டுமே இருக்கிறது. ஆனால் உலக மக்கள்தொகையில் 16% இந்தியாவில் உள்ளது.
நாம் பயன்படுத்தும் எரிசக்தி வள ஆதாரங்களில் பெரும்பாலானவை, மறுபடியும் பயன்படுத்தக் கூடியதாகவோ புதுப்பிக்கப்படக்கூடியதாகவோ இல்லை- மறுபடி புதுப்பிக்கப்பட முடியாத எரிசக்திதான் 80% எரிபொருளாகப் பயன்படுகிறது. நம்மிடமுள்ள எரிசக்தி வள ஆதாரங்கள் இன்றும் 40 வருடங்கள் வரையில்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது
நாம் எரிசக்தியைச் சேமித்தால், நாட்டிற்காக பெரும் பணத்தைச் சேமிப்பதற்கு சமம்- நமது கச்சா எண்ணெய் (குரூட் ஆயில்) தேவையில் 75% இறக்குமதி மூலமே நிறைவேற்றப் படுகிறது. இதற்கான செலவு வருடத்திற்கு ரூ. 1,50,000 கோடி
நாம் எரிபொருளைச் சேமிப்பதன் மூலம் நமது பணத்தையும் சேமிக்கிறோம்- உங்களது எல்பிஜி சிலிண்டர் ஒரு வாரம் அதிகமாகப் பயன்பட்டாலோ, உங்களது மின்சாரக் கட்டணம் குறைந்தாலோ, எந்த அளவுக்கு சேமிக்கலாம் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்
எரிசக்தியை சேமிப்பதன் மூலம் நமது சக்தியை நாம் சேமிக்கிறோம்.- நாம் விறகுகளை சிக்கனமான முறையில் எரிக்கப் பழகினால், அதைக் சேகரிக்கத் தேவையான வேலைபளு குறைவாகும்.
சேமிக்கப்பட்ட எரிசக்தி, எரிசக்தியை உற்பத்தி செய்வதற்குச் சமமாகும்- நாம் ஒரு யுனிட் மின்சாரத்தைச் சேமித்தால், அது 2 யூனிட்டுகள் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்குச் சமம்.
சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் குறைக்க, எரிசக்தியை சேமியுங்கள் - எரிசக்தி உற்பத்தி மற்றும் பயன்பாடு ஆகியன, காற்று மாசுபடுவதற்கும் மிகப் பெரிய காரணிகள்
இந்தியப் பழமொழி ஒன்று சொல்வது போல, “இந்த பூமி, நீர், மற்றும் காற்று ஆகியன நமது பெற்றோர்களிடமிருந்து நாம் பெற்ற பரிசு அல்ல மாறாக, நமது குழந்தைகளிடமிருந்து நாம் பெற்ற கடன்”


Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

புதன், 11 டிசம்பர், 2019

சர்வதேச மலைகள் தினம் டிசம்பர் 11.


சர்வதேச மலைகள் தினம் டிசம்பர் 11.

மலை வளம் காக்கவும், மழை வளம் பெறவும், ஐ.நா., சார்பில், 'சர்வதேச மலைகள் தினம்' இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.சர்வதேச அளவில், பல்லுயிர்க் காடுகளின் அஸ்திவாரமாகவும், வனவிலங்குகளின் வாழ்விடமாகவும் இருப்பவை, மலை பிரதேசங்களே.உலக நிலப்பரப்பில், 27 சதவீதம் மலைகளே உள்ளன. இதனால் தான், நிலையான பொருளாதார வளர்ச்சி ஏற்படுகிறது.உலகெங்கிலும் உள்ள மக்கள் தொகையில், 13 சதவீதம் பேர், மலைகளில் வாழ்கின்றனர். தண்ணீர், உணவு, சுத்தமான காற்று என, அனைத்திற்கும் மலைகளை நம்பியே மக்கள் உள்ளனர்.மலைகளில் இருந்து தான், 75 சதவீதம் நன்னீர் பெருக்கெடுக்கிறது. மலைகளில் விளையும் அற்புத மூலிகைகளும், அவை பாதுகாத்து வைத்துள்ள எண்ணற்ற உயிரினங்களும் தான், உணவுச் சங்கிலியில், மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.இத்தகைய மலைகள், இன்று மெல்ல மெல்ல காணாமல் போய்க்கொண்டு இருக்கின்றன. கிரானைட்டுக்காக மலைகளை வெட்டுவதும், மலைகளில் உள்ள மரங்களை வெட்டிச் சூறையாடுவதும் தொடர்கிறது.அதனால், பல மலைப்பிரதேசங்களில், அவற்றின் இயற்கையான சூழல் மாறி, அங்கு, இயல்பான குளிரையே காண முடிவதில்லை. இவற்றுள், மிக முக்கிய அழிவை சந்தித்து வருபவை, நம் நாட்டில் உள்ள கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகள் தான்.இது குறித்து, இயற்கை ஆர்வலர், எஸ்.சரவணன் கூறியதாவது:உலகின், 20 சதவீத சுற்றுலா வருவாய், மலைகளை நம்பியே உள்ளது. சர்வதேச அளவில், வளரும், வளர்ந்த நாடுகளில், மலைகள் மற்றும் மலை சார்ந்த வனங்களை பாதுகாப்பதில், முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.அதேநேரம், நாகரிக வளர்ச்சிக்காக, கனிம வளங்களை அழிப்பதும், இன்றுவரை தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.அந்த வகையில், பாரம்பரியமிக்க மலை பிரதேசங்களை கொண்ட, இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில், மற்ற நாடுகளை விட மலை வளம், கனிம வளம் அழிப்பு என்பது, அதிகளவில் நடக்கிறது.இதுவே, நம் நாட்டின் மிக முக்கிய மலைத்தொடர்களான, கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகள், அழிய காரணமாக உள்ளது.ஒடிசாவில் தொடங்கும், கிழக்கு தொடர்ச்சி மலைகள், நீலகிரியின் மேற்கு பகுதியுடன் இணைந்து நீடிக்கிறது.இதனுள் அடங்கியது தான், சேர்வராயன், கல்வராயன், ஏற்காடு, கொல்லி மலை உள்ளிட்ட மலைத்தொடர்கள்.இந்த மலைத்தொடர்கள் பயணிக்கும் பகுதிக்கு ஏற்றவாறு, அலுமினியம், பாக்சைட், இரும்பு, மேக்னசைட் உள்ளிட்ட எண்ணற்ற தாது பொருட்கள் உள்ளன.இவற்றில், பெரும்பாலானவை நாகரிக வளர்ச்சிக்காகவும், தொழில் தேவைகளுக்காகவும் அழிக்கப்பட்டு வருகின்றன.கனிம வளங்கள் அழிவால், 50 ஆண்டுகளில், கிழக்கு தொடர்ச்சி மலைகளின் பயணம், பெரும்பாலான இடங்களில் துண்டிக்கப்பட்டு, அங்கு பாய்ந்த வாணியாறு, வெள்ளாறு, சரபங்கா, திருமணிமுத்தாறு, வசிஷ்ட நதி, ஸ்வேதா நதி உள்ளிட்ட பல நதிகளும் அழிந்துவிட்டன.இதில் திருமணிமுத்தாறு, அடுத்த கூவமாகவே மாறிவிட்டது. கடல் மட்டத்தில் இருந்து, 1,600 மீட்டர் உயரம் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகள், குஜராத்தில் துவங்கி கன்னியாகுமரி வரை பயணிக்கிறது.இந்த மலைத்தொடர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்த, ஐ.நா., சபை, இதை, உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்து, அதற்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்கவும், மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.ஆனால், ஐ.நா., உத்தரவையும் மீறி, மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள மரங்களை வெட்டி சூறையாடுவதும், தேயிலை தோட்டங்கள் அமைப்பதும், நடந்து கொண்டு தான் இருக்கிறது.இதனால், இந்தியாவில் பருவமழை பொய்த்து, சில ஆண்டுகளாக புயல், வெள்ளம் என, இயற்கை பேரிடர்கள் அதிகரித்துள்ளன.இது ஒருபுறமிருக்க, சர்வதேச அளவில், பல மலைத்தொடர்களில் உள்ள பனிப்பாறைகள், பருவநிலை மாற்றங்களாலும், புவி வெப்பமயமாதலாலும் அழிவை சந்தித்து வருகின்றன.கடந்த, 10 ஆண்டுகளில், 600க்கும் மேற்பட்ட பனிப்பாறைகள் அழிந்துள்ளன. இதனால், கடல் மட்டம் உயர்ந்து, பல இடங்கள் மாயமாகும் சூழல் உருவாகி உள்ளது.அதேபோல், மலைகள் அழிவால், சர்வதேச அளவில் மலைகளை நம்பியே வாழும், 40 சதவீத பழங்குடியின மக்கள், உணவு பற்றாக்குறையால் தவிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இதை தடுக்கவும், மலைப்பகுதியின் மகத்துவத்தை உணர்ந்து, மலைகளை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையிலும், 2002ம் ஆண்டை, 'அகில உலக மலைகள் ஆண்டு' என, ஐ.நா. சபை அறிவித்தது. தொடர்ந்து, 2003ல், யுனெஸ்கோவால், டிச., 11ம் தேதி, 'சர்வதேச மலைகள் தினமாக' அறிவிக்கப்பட்டது.அதன்படி, ஒவ்வொரு ஆண்டும், டிச., 11ம் தேதி, ஏதேனும் ஒரு கருப்பொருளை மையமாக வைத்து, 'சர்வதேச மலைகள் தினம்' கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டிற்கான கருப்பொருளாக, ஐ.நா., நிர்ணயித்து இருப்பது, 'இயற்கை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் வளர்ச்சி மற்றும் உணவு பாதுகாப்பு' என்பதாகும்.அதாவது, மலைகளில் ஏற்படும் வளர்ச்சியானது, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும், மக்களுக்கு உணவு பாதுகாப்பை அளிக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என, ஐ.நா., கருதுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.மலையும், மலை சார்ந்த வனங்களும், நம் முன்னோர்கள் நமக்கு அளித்த கொடை. அவற்றை, பழமை மாறாமல் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு அளிப்பதே, நாம் அவர்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு செய்யும், மிகப்பெரும் உதவியாக அமையும்.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

செவ்வாய், 10 டிசம்பர், 2019

சுப்பிரமணிய பாரதி பிறந்த நாள் டிசம்பர் 11, 1882.



சுப்பிரமணிய பாரதி பிறந்த நாள் டிசம்பர் 11, 1882.

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 12, 1921) ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.[3] தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.

மகாகவி
சி. சுப்பிரமணிய பாரதியார்

பிறப்பு
சுப்பையா (எ) சுப்பிரமணியன்
திசம்பர் 11, 1882
எட்டயபுரம், தூத்துக்குடி மாவட்டம், இந்தியா இந்தியா
இறப்பு
செப்டம்பர் 12, 1921 (அகவை 38)
சென்னை, இந்தியா
இருப்பிடம்
திருவல்லிக்கேணி
தேசியம்
இந்தியா
மற்ற பெயர்கள்
பாரதியார், சுப்பையா, முண்டாசுக் கவிஞன், மகாகவி, சக்தி தாசன்

பணி

செய்தியாளர்
அறியப்படுவது
கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி
குறிப்பிடத்தக்க படைப்புகள்
பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு, குயில் பாட்டு மற்றும் பல.
பின்பற்றுவோர்
பாரதிதாசன்
அரசியல் இயக்கம்
இந்திய விடுதலை இயக்கம்
சமயம்
இந்து சமயம்
பெற்றோர்
சின்னசாமி ஐயர், இலக்குமி அம்மாள்
வாழ்க்கைத்
துணை
செல்லம்மாள்
பிள்ளைகள்
தங்கம்மாள் (பி: 1904)
சகுந்தலா (பி: 1908)
கையொப்பம்

பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின் மாணவியான சகோதரி நிவேதிதையை தமது குருவாகக் கருதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

சின்னசாமி ஐயர் இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு திசம்பர் 11, 1882இல் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள (அன்றைய திருநெல்வேலி மாவட்டம்) எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று அழைக்கப்பட்டார். [6] 1887 ஆம் ஆண்டு இலக்குமி அம்மாள் மறைந்தார். அதனால், பாரதியார் அவரது பாட்டியான பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார்.

தனது பதினொன்றாம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவி புனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டயபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சில காலத்திலேயே, அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டயபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றில் பாரதி வாழ்ந்தார். ஏழு ஆண்டுகள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் 'விவேகபானு' இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு காலகட்டங்களில் இதழாசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றினார்.

பாரதி தமிழ், ஆங்கிலம், இந்தி, சமசுகிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்தார்.

இலக்கியப் பணி தொகு

பாரதியாரின் அபூர்வ புகைப்படம்
கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி      - பாரதி.

நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்      - பாரதி.

தம் தாய்மொழி தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" எனக் கவிபுனைந்தார். சமற்கிருதம், வங்காளம், இந்தி, பிரான்சியம், ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின் மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்டவர் என்று அறியப்படுகின்றார். தேசியக் கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவின்றதினாலும், இவர் உலகின் சிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர் என்றும், அண்மைக்காலத் தமிழின் தன்னிகரற்ற கவியேறு என்றும் பலர் கருதுகின்றனர்.

தேடிச் சோறு நிதந் தின்று
பல சின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரை யெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?

பாஞ்சாலி சபதம் தொகு
இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் பாஞ்சாலி சபதம். அழகிய இலக்கிய நயத்தையும் மிக அழகான கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாகப் பாரதியின் பாஞ்சாலி சபதம் விளங்குகிறது. பாஞ்சாலி சபதம் வியாசரின் பாரதத்தை தழுவி எழுதப் பெற்றது. பாஞ்சாலி சபதம் இரு பாகங்கள் உடையது. இது சூழ்ச்சிச்சருக்கம், சூதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச் சருக்கம் என ஐந்து சருக்கங்களையும், 412 பாடல்களையும் கொண்டது.

இதழியல் பணியும் விடுதலைப் போராட்டமும் தொகு
பாரதியார், முதலில் நவம்பர் 1904 முதல் ஆகத்து 1906 வரை சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகத்து 1920 முதல் செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றி மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905 - ஆக. 1906), இந்தியா என்ற வார இதழில் (மே 1905 - மார்.1906 / செப். 1906, புதுச்சேரி: 10.19.1908 – 17. மே 1910), சூரியோதயம் (1910), கர்மயோகி (திசம்பர் 1909–1910), தர்மம் (பிப்.1910) என்ற இதழ்களிலும் பாலபாரத யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆங்கில அரசால் தடை செய்யப்பட்ட பாரதியின் "இந்தியா" பத்திரிகை புதுவையில் வெளியானது.

தடை செய்யப்பட்ட புத்தகங்கள் தொகு
பாரதியாரின் பாடல்களை பிரித்தானிய ஆட்சிக்குட்பட்டு இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பர்மா மாகாண அரசு தடைசெய்தது. இதனைப் பின்பற்றி சென்னை மாகாணத்தின் காவல் துறை உத்தரவுமூலம் பாரதியார் பாடல்கள் தடைசெய்யப்பட்டு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாகாணச் சட்ட அவையில் விரிவான விவாதம் 1928 ஆம் ஆண்டு அக்டோபர் 8, 9 தேதிகளில் நடந்தது . தீரர் சத்திய மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விவாதத்தில் இலக்கியம் சார்ந்த பல கருத்துகள் பதிவாகின.

தேசியக் கவி தொகு

எட்டயபுரத்தில் பாரதி பிறந்த வீடு தற்போது தமிழக அரசால் சீர்செய்யப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளது.
விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி தேசியக் கவியாகப் போற்றப்படுகிறார். மண்ணும் இமயமலை எங்கள் மலையே... மாநிலமீதிதுபோல் பிறிதிலையே... இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே... இங்கிதன் மாண்பிற்கெதிர் எது வேறே என்று எழுதியவர்.

தன்னுடைய தாய்நாட்டை நினைத்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்க வேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். "வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" என்றவர், பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்றார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர்.

புதுக்கவிதைப் புலவன் தொகு
பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவன். இவருக்கு முன்பாகக் கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல், பொருள்கொள், யாப்பு, அணி என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புனைந்தனர். இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக் கவிதை எனப் புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசனக் கவிதையைத் தமிழுக்குத் தந்தவர். சிறு பிள்ளைகள் முதல் முதியவர் வரை அனைவருக்கும் உதவும் ஒரு அறிவு சார்ந்த புதுக்கவிதை இவர் தொகுப்பில் இருக்கும். அதற்கு ஒரு மிக சிறந்த உதாரணம் தான் பாப்பா பாட்டு என்ற தலைப்பில் இவர் எழுதிய கவிதை.

பாரதியும் சோவியத் ஒன்றியமும் தொகு
1905ஆம் ஆண்டில் தன்னிடம் கோரிக்கை மனு அளிக்க வந்த ரஷ்ய மக்களை ஜார் மன்னன் நூற்றுக்கணக்கில் சுட்டுக் கொன்றதைக் கண்ட பாரதி, தான் நடத்தி வந்த ‘இந்தியா’ பத்திரிகையில் பின்வருமாறு எழுதினார்:

"சுயாதீனத்தின் பொருட்டும் கொடுங்கோன்மை நாசத்தின்
பொருட்டும் நமது ருஷ்யத் தோழர்கள் செய்து வரும்
"உத்தமமான முயற்சிகள் மீது ஈசன் பேரருள் செலுத்துவாராக”


இச்சம்பவம் நடந்த 12ஆண்டுகளுக்குப் பின்னர் 1917ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரஷ்யாவில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நடைபெற்று ஜார் மன்னன் பதவியிலிருந்து அகற்றப்பட்டு , கெரன்ஸ்கி தலைமையில் அரசாங்கம் அமைந்தபோது, பாரதி தன் பத்திரிகையில் காக்காய் ‘பார்லிமெண்ட்’ என்ற கட்டுரையில் எழுதினார்: “கேட்டீர்களா, காகங்களே, அந்த ருஷ்யா தேசத்து ஜார் சக்கரவர்த்தியை இப்போது அடித்துத் துரத்தி விட்டார்களாம். அந்த ஜார் ஒருவனுக்கு மாத்திரம் கோடான கோடி சம்பளமாம்” இந்தக் கட்டுரையை பாரதி எழுதி 7 மாத காலத்திற்குள்ளாகவே அவ்வாண்டு நவம்பர் 7ஆம் தேதி மகத்தான ரஷ்யப் புரட்சி லெனின் தலைமையில் வெற்றி பெற்றது. அதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த பாரதி பாடினார்:

“மாகாளி பராசக்தி உருசிய நாட்
டினிற் கடைக்கண் வைத்தாளங்கே
ஆகாவென் றெழுந்தது பார் யுகப்புரட்சி
கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்...”


பெண்ணுரிமைப் போராளி

பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத்திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே எனப் பெண்ணுரிமையை ஏத்தினார். "போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான்" என்ற பாரதி பெண்மை வாழ்கவெனக் கூத்திடுவோமடா என்றார். பெண்களின் கல்வியறிவுக்காகச் சட்டங்களைச் செய்திடவும் கனவு கண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று கண்டார்.

பாரதியார் நினைவுச் சின்னங்கள்

புதுவையில் மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லம்

சுட்டும் விழி சுடர் - பாரதியார் பாடல்
தமிழ்நாடு அரசு மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் பாரதியார் நினைவுச் சின்னங்களாக எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம், புதுச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லம் ஆகியவற்றை நினைவு இல்லங்களாகப் போற்றி வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில் மகளிர்க்கான பல்தொழில்நுட்பக் கல்லூரியும், பாரதி மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மைய மண்டபத்தில் பாரதியின் ஏழு அடி உயரச் சிலை அமைக்கப்பட்டு 13-02-2000 அன்று பஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இங்கு பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது.

மறைவு
1921 ஆம் ஆண்டு சூலை மாதம் திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவில் யானை தாக்கியதால் நோய்வாய்ப்பட்டார். கோவில் யானையால் தாக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, கடும் வயிற்றுக்கடுப்பு நோயால் பாதிக்கப்பட்டார். பிறகு 1921 இல் செப்டம்பர் 12 அதிகாலை 01:30 மணிக்கு காலமானார். அவர் கடைசி நாட்களைக் கழித்த இல்லம் திருவல்லிகேணியில் உள்ளது.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

சோனியா காந்தி பிறந்த தினம் டிசம்பர் 9.



சோனியா காந்தி பிறந்த தினம் டிசம்பர் 9.

இத்தாலியில் பிறந்து, இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரியாக இருந்த இந்திராகாந்தியின் மருமகளாகவும், ராஜீவ் காந்தியின் மனைவியாகவும் இந்திய மண்ணில் காலடி எடுத்து வைத்தவர், சோனியா காந்தி அவர்கள். தனது கணவரான ராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பின்னரும், அரசியலில் சேர விரும்பாமல் இருந்த அவர், 1997 ஆம் ஆண்டில் அரசியலில் கால்பதித்தார். அதன் பின்னர், இந்திய தேசியக் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இந்திய தேசியக் காங்கிரஸ் தலைவராகவும் இருந்து வருகிறார். ஒரு வெளிநாட்டவராக இருந்து, காங்கிரஸ் கட்சியில் நீண்ட கால ஆட்சியில் இருப்பவர் என்று வரலாறு படைத்த அவர், ‘உலகிலேயே மிகச் சிறந்த சக்தி வாய்ந்த பெண்மணி’ என்று எல்லோராலும் போற்றப்படுகிறார். பரம்பரைப் பரம்பரையாக காங்கிரஸில் இருந்து வரும் நேரு குடும்பத்தின் ஒரு முக்கிய அங்கத்தினாராக மாறிய சோனியா காந்தி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அரசியலில் அவரது பங்களிப்பையும், சாதனைகளையும் காண்போம்.

பிறப்பு: டிசம்பர் 09, 1946

பிறப்பிடம்: லூசியானா, வெனிடோ, இத்தாலி

பணி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இந்திய தேசியக் காங்கிரஸ் தலைவர்

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

சோனியா காந்தி அவர்கள், இத்தாலியில் உள்ள வெனிடோப் பிரதேசத்திற்கு அருகிலிருக்கும் விசென்ஸாவில் உள்ள லூசியானா என்றொரு சிறிய கிராமத்தில், ஸ்டெஃபனோ மற்றும் பாவ்லோ மையினோ தம்பதியர்களுக்கு மகளாக டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி, 1946 ஆம் ஆண்டில் ஒரு பாரம்பரிய ரோமன் கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்

சோனியா காந்தி அவர்களின் குழந்தைப் பருவத்திலேயே அவரது குடும்பம், இத்தாலியில் உள்ள ஆர்பாஸனோ என்ற இடத்திற்குக் குடிபெயர்ந்தது. இதனால், தனது பள்ளிப்படிப்பை, ஒரு கத்தோலிக்கப் பள்ளியில் பயின்றார். தனது பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்த அவர், ஆங்கிலம் கற்க விரும்பியதால், 1964 ஆம் ஆண்டில், கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள பெல் கல்வி அறக்கட்டளையின் மொழிப் பள்ளியில் சேர்ந்தார். அங்கு படித்துக் கொண்டிருக்கும் போது, தனது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, ஒரு கிரேக்க உணவகத்தில் பணியாளராகவும் பணிபுரிந்தார்.

இல்லற வாழ்க்கை

1965 ஆம் ஆண்டில், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் டிரினிட்டி கல்லூரியில் சேரப் பதிவுசெய்திருந்தார், அப்போதைய பிரதம மந்திரியான இந்திரா காந்தியின் மகன் ராஜிவ் காந்தி அவர்கள், சோனியா காந்தியை ஒரு கிரேக்க உணவகத்தில் சந்தித்தனர். முதல் சந்திப்பிலேயே இருவருக்குமிடையே காதல் மலர்ந்ததால், மூன்று ஆண்டுகளாகக் காதலித்துவந்த அவர்கள், 1968 ஆம் ஆண்டில் திருமண பந்தத்தில் இணைந்தனர். திருமணமானவுடன் சோனியாவை இந்தியா அழைத்து வந்த ராஜீவ் காந்தி அவர்கள், அவரது இல்லத்திற்கே அவரைத் துணிவாக அழைத்துச் சென்றார். அவர்களின் திருமணத்தை இந்திராகாந்தியும் ஏற்றுக் கொண்டார். அவர்கள் இருவருக்கும் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி என்று இரு குழந்தைகள் பிறந்தனர். இந்திராகாந்தியின் மறைவுக்கு முன்னரும், 1982 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி அவர்கள் இந்தியாவின் பிரதம மந்திரி பொறுப்பை ஏற்றப் பின்னரும், எந்தவொரு பெருமிதமும் இல்லாமல் இல்லத்தரசியாகவே இருந்து வந்தார்.

அரசியல் வாழ்க்கை

பிரதம மந்திரியின் மனைவியாக மாறிய பின்னர், தனது கணவருக்குத் துணையாக அரசியலிலும் ஈடுபட எண்ணிய அவர், 1984ல், அமேதியில் ராஜீவை எதிர்த்து போட்டியிட்ட அவரது தம்பி மனைவியான மேனகா காந்திக்கு எதிராக, தனது கணவருக்கு ஆதரவாகப் பிரசாரத்தில் முதன்முதலில் களமிறங்கினார். 1991 ஆம் ஆண்டில், ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட போதும், அரசியலில் நுழையாத சோனியா அவர்கள், அவரது மரணத்திற்குப் பின்னர், காங்கிரஸ் கட்சி பல பிரிவுகளாகப் பிரிந்து தொய்வடைந்ததாலும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலரின் வேண்டுதலின் பேரிலும், 1997ல் அரசியலில் இறங்கப் போவதாக விருப்பம் தெரிவித்தார். முதலில் காங்கிரஸின் அடிப்படை உறுப்பினாராக மாறிய சோனியா அவர்கள், அடுத்த ஆண்டிலேயே அதாவது 1998 ஆம் ஆண்டிலே, அக்கட்சித் தலைவர் பொறுப்பேற்றார்.

காங்கிரஸ் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற அவரை, அவைத்தலைவராகவும் பொறுப்பேற்க வேண்டுமென்று அக்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியதால், லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். 1999ல், அவரது கணவர் போட்டியிட்ட இடமான உத்திரப் பிரதேசத்தில் உள்ள அமேதி என்ற இடத்தில் போட்டியிட்ட அவர், பெல்லாரியில் பிஜேபியின் அனுபவமிக்கத் தலைவர், சுஸ்மா சுவராஜ் என்பவரைத் தோற்கடித்து, பதிமூன்றாவது லோக்சபாவின் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றார். பிஜேபி-ஏற்படுத்திய என்டிஏ – தேசிய ஜனநாயக முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை 2003ல் கொண்டுவந்தார். காங்கிரஸ் தலைவராக பத்து வருடங்களுக்குத் தொடர்ந்து பதவி வகித்து, சாதித்துக் காட்டிய அவர், 2004 மற்றும் 2009-ல் உத்தரப்பிரதேசத்தில் ராய்பரேலியிலிருந்து லோக்சபாவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிரதம மந்திரி பொறுப்பைப் புறக்கணித்தல்

2004 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில், என்டிஏ கட்சியைப் படுதோல்வியடையச் செய்த அவர், இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், தோல்வியடைந்த என்டிஏ கட்சி, சோனியாவை ‘அந்நியப் பிறப்பு’, ‘இந்திய குடி உரிமைச் சட்டத்தின் ஐந்தாம் பிரிவு’ போன்ற பல சட்ட பூர்வமான காரணங்களை சுட்டிக் காட்டி, அவர் பிரதம மந்திரியாகத் தடைகளாக இருப்பதாகக் கூறி, கிளர்ச்சிகளைக் கிளப்பி, உச்ச நீதி மன்றத்தில் உரிமைக் கோரியது. ஆனால், இறுதியில் உச்ச நீதிமன்றம் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து, ‘அவர் பிரதமராக சட்டப்படி எந்த தடையுமில்லை’ எனத் தீர்ப்பு வழங்கியது. இதற்கிடையில், இடதுசாரிகளின் ஆதரவுடன் 15-கட்சி கூட்டணி அரசாங்கத்தை நடத்த அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இக்கட்சியே பின்னாளில் ‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி’ (யுபிஏ) என்ற பெயரிடப்பட்டது. உச்ச நீதிமன்றம் தடைகளை விளக்கினாலும், ‘லோக் சபாவின் காங்கிரஸ் பாராளுமன்றத் தலைமைப் பொறுப்பையும், பிரதம மந்திரி பதவியே வேண்டாம்!’ என்று புறக்கணித்தார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவராக சோனியா

ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவராகப் பொறுப்பேற்ற அவர், பிரசித்தி பெற்ற பொருளாதார நிபுணர் டாக்டர். மன்மோகன் சிங் என்பவரை பிரதம மந்திரி பதவிக்காகப் பரிந்துரைத்தார். அதைத் தொடர்ந்து, ஒன்றிரண்டு நாட்களிலேயே தனது லோக்சபா பொறுப்பு மற்றும் தேசிய ஆலோசனைக் குழவின் மன்றத்தலைவர் பதவிப்பொறுப்பிலிருந்தும் ராஜினாமா செய்தார். இருப்பினும், 2006 மே மாதம் நிகழ்ந்த ராய்பரேலி பாராளுமன்றத் தொகுதித் தேர்தலில், 4,00,000 ஓட்டுக்களில் வெற்றிபெற்ற அவர், மீண்டும் அப்பதவிப் பொறுப்பேற்றார். தேசிய ஆலோசனைக் குழுவின் கூட்டத்தலைவராகவும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவராகவும் இருந்து வரும் அவர், தேசிய கிராமிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மற்றும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் போன்றவற்றை நடைமுறையில் கொண்டுவர முக்கியப் பங்காற்றினார்.

2009 பொதுத்தேர்தல்களில் அவரது தலைமையில் உள்ள காங்கிரஸ்-ஏற்படுத்திய-யுபிஏகட்சி அறுதிப்பெரும்பான்மை பெறக்கூடிய அளவில் வெற்றிப் பெற்றது. அவர் அறிவித்தது போலவே, மன்மோகன் சிங்கே பிரதம மந்திரி என்ற நிலையில், காங்கிரஸ் 206 லோக்சபா இடங்களில் வென்று, வரலாறு காணாத சாதனைப் படைத்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

விருதுகளும், அங்கீகாரங்களும்

2006 ஆம் ஆண்டில் பிரஸ்ஸல்ஸ் பல்கலைக்கழகம் மூலமாகவும், 2008 ஆம் ஆண்டில் சென்னை பல்கலைக்கழகம் மூலமாகவும் ‘கௌரவ டாக்டர் பட்டம்’ வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

சோனியா காந்தி அவர்களை, ஃபோர்ப்ஸ் இதழ் ‘உலகின் மிக சக்திவாய்ந்த பெண்மணிகள் பட்டியலில்’, அவரது பெயரை மூன்றாவதாக 2004 ஆம் ஆண்டிலும்,  ஆறாவதாக 2007 ஆம் ஆண்டிலும் பெயரிட்டது. அதே இதழ், அவரை 2010 ஆம் ஆண்டில், ‘கிரகத்தில் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்பதாவது நபர்’ என்று மதிப்பிட்டது. மேலும், ‘உலகின் மிகவும் செல்வாக்கு பெற்ற நபர்’ என்று அவரைப் பல பத்திரிக்கைகளும் கணித்தது.

திங்கள், 9 டிசம்பர், 2019

டிசம்பர் 10 சிறப்புகள்

டிசம்பர் 10 சிறப்புகள்

மனித உரிமைக்கு அர்த்தம் கொடுத்த... மனித உரிமைகள் தினம் !
நோபல் பரிசு விழா

இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறப்பானவர்களை தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் டிசம்பர் 10ஆம் தேதி நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு நோபல் பரிசாகும். சுவீடன் நாட்டு விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் அவர்களால் 1895ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1901ஆம் ஆண்டிலிருந்து இப்பரிசு வழங்கப்படுகிறது. ஆல்பிரட் நோபல் நினைவு நாளான டிசம்பர் 10ஆம் தேதியில் நோபல் பரிசு விழா நடைபெறுகிறது.சர்வதேச விலங்குகள் உரிமைகள் தினம்

சர்வதேச விலங்குகள் உரிமைகள் தினம் டிசம்பர் 10ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. விலங்குகளின் உரிமைக்காக விலங்குகள் போராட முடியாது. விலங்குகளின் நலன் காக்க அவைகளின் உரிமைக்காக மனிதர்கள்தான் போராட வேண்டும் என விலங்குகளின் நலன் கருதி இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.உலக மனித உரிமைகள் தினம்


உலக மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஐ.நா.பொதுச்சபை 1948ஆம் ஆண்டு இத்தினத்தை பிரகடனப்படுத்தியது. மனிதர்களை சாதி, மதம், இனம், நிறம், மொழி, நாடு என்கிற பாகுபாடு காட்டி வேறுபடுத்தக்கூடாது. தனி மனிதன் சுதந்திரமாகவும், கௌரவமாகவும் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு வகை செய்வதே மனித உரிமையாகும். இத்தினம் 1950ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது.மூதறிஞர் ராஜாஜி

சுதந்திரப் போராட்ட வீரர், வழக்கறிஞர், இந்தியாவின் கவர்னர் ஜெனரல், சென்னை மாகாண முதல்வர் என பன்முகப் பரிமாணம் கொண்ட ராஜகோபாலாச்சாரி 1878ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் (அன்றைய சேலம் மாவட்டம்) தொரப்பள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார்.

இவர் காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு விடுதலைப் போராட்ட இயக்கத்தில் இணைந்தார். மேலும் ரௌலட் சட்டத்திற்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களில் பங்கேற்றார்.

இவர் 1917ஆம் ஆண்டு சேலம் நகராட்சி உறுப்பினராகவும், பின்னர் நகராட்சி தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1937ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்தின் பிரதான மந்திரியாகப் பொறுப்பேற்றார். 1946ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் தொழில், கல்வி மற்றும் நிதித்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.

1954ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. சேலத்து மாம்பழம் என்று அழைக்கப்பட்ட ராஜாஜி 1972ஆம் ஆண்டு மறைந்தார்.முக்கிய நிகழ்வுகள்
👉 2006ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி இந்திய இயற்பியலாளரான மதன் லால் மேத்தா மறைந்தார்.👉 2016ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி இந்திய பொறியியல் அறிஞரும், கல்வியாளருமான வா.செ.குழந்தைசாமி மறைந்தார்.

வெள்ளி, 6 டிசம்பர், 2019

டிசம்பர் 07 சிறப்புகள்


டிசம்பர் 07 சிறப்புகள்

இன்று முப்படை வீரர்களை போற்றும் நாள் !!
கொடி நாள் (இந்தியா)


இந்தியாவில் கொடி நாள் டிசம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கொடி நாள் என்பது இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாகும். இத்தினத்தை இந்திய அரசும், இந்திய மாநில அரசுகளும் 1949ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கின்றன.சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினம்


சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினம்
 டிசம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தற்போது சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. எனவே இதற்காக ஒரு அமைப்பு 1944ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஐ.நா. பொதுச்சபை டிசம்பர் 7ஆம் தேதியை சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினமாக அறிவித்துள்ளது.சோ ராமசாமி


இன்று இவரின் நினைவு தினம்..!!

பிரபல பத்திரிக்கையாளரான சோ ராமசாமி 1934ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி சென்னையிலுள்ள மயிலாப்பூரில் பிறந்தார். இவர் 1957ஆம் ஆண்டு முதல் 1962ஆம் ஆண்டு வரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார்.

இவர் தேன்மொழியாள் என்ற நாடகத்தில் சோ என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். பிறகு, அதுவே இவரது பெயராக நிலைத்துவிட்டது.

துக்ளக் வார இதழை 1970ஆம் ஆண்டும், பிக்விக் என்ற ஆங்கில இதழை 1976ஆம் ஆண்டும் தொடங்கினார். இவரது இந்து மகா சமுத்திரம் நூல் 6 தொகுதிகளாக வெளிவந்தது.

இவர் மாநிலங்களவை உறுப்பினராக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். கோயங்கா விருது, நசிகேதஸ் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

பத்திரிக்கையாளர், நாடக ஆசிரியர், நடிகர் என பன்முகப் பரிமாணம் கொண்ட சோ ராமசாமி 2016ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி மறைந்தார்.
ஜெரார்டு குயூப்பர்


வானியல் அறிஞர் ஜெரார்டு குயூப்பர் 1905ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி ஹாலந்தில் உள்ள ஹெரன்காஸ்பெல் கிராமத்தில் பிறந்தார்.

இவர் செவ்வாய் கிரகம், சூரிய குடும்பம் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளார். யுரேனஸ், நெப்டியூன் கிரகங்களின் துணைக் கோள்களான மிரான்டா, நீரிட் ஆகியவற்றைக் கண்டறிந்தவர்.

செவ்வாய் கிரகத்தில் கார்பன்-டை-ஆக்சைடு இருப்பதையும், சனிக்கிரகத்தில் மீத்தேன் வாயு இருப்பதையும் கண்டறிந்தவர். நெப்டியூனுக்கு தொலைவில் இவர் கண்டறிந்த குறுங்கோள்கள், இவரது பெயரால் 'குயூப்பர் பெல்ட்" எனக் குறிப்பிடப்படுகிறது.

நவீன கோள் அறிவியலின் தந்தை என்று போற்றப்பட்ட ஜெரார்டு குயூப்பர் 1973ஆம் ஆண்டு மறைந்தார்.முக்கிய நிகழ்வுகள்
1972ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி அப்போலோ திட்டத்தின் கடைசி விண்கலம் அப்பல்லோ 17 சந்திரனை நோக்கி ஏவப்பட்டது.

உலக சிவில் விமானப் போக்குவரத்து தினம் டிசம்பர் - 7. (International Civil Aviation Day)


சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினம் டிசம்பர் - 7. (International Civil Aviation Day)

விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டப்பிறகு பயணத்தின் நேரம் குறுகிப் போனது. தற்போது சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து நடைபெறுகிறது. இதற்கான ஒரு அமைப்பு 1944இல் ஆரம்பிக்கப்பட்டு, அதன் 50 ஆவது ஆண்டு விழா 1994ஆம் ஆண்டில் கொண்டாடியது. இந்த அமைப்பின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு ஐ.நா. பொதுச்சபை டிசம்பர் 7 ஆம் தேதியை சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினமாக அறிவித்தது.
#International_Civil_Aviation_Day

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

கொடி நாள் டிசம்பர் 07 .



கொடி  நாள் டிசம்பர் 07 .
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7 -ஆம் தேதி கொடி நாளாக கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தின் ஏழாம் நாளை படை வீரர் கொடி நாளாக இந்திய அரசும் இந்திய மாநில அரசுகளும் கடைப்பிடிக்கின்றன. இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. கொடி நாள் கொண்டாடும் மரபானது 1949ஆம் ஆண்டு டிசம்பர் ஏழாம் நாள் முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
நாட்டைக் காக்கும் தியாக உணர்வுடனும் , முழுமையான அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியில் ஈடுபடும் முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் காக்கும் சமுதாயக் கடமை நமக்கு உள்ளது. அதனை நிறைவேற்றும் வகையில், கொடி விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும்  நன்கொடைகள் மூலம் திரட்டப்படும் நிதியானது படைவீரர்களின் குடும்ப நல்வாழ்வுக்காகவும், உடல் உறுப்புகளை இழந்த முன்னாள் வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
#flag_day

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*


வியாழன், 5 டிசம்பர், 2019

புரட்சியாளர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் நினைவு தினம் டிசம்பர் 05.


புரட்சியாளர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் நினைவு தினம் டிசம்பர் 05.

#Dr_BR_Ambedkar

விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கியவர்,‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’. இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த பொருளியல் அறிஞராகவும், அரசியல் தத்துவமேதையாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், பகுத்தறிவு சிந்தனையாளராகவும், சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளராகவும்,  வரலாற்று ஆசானாகவும் விளங்கியவர். தலித் இன மக்களுக்கு மட்டுமல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்விருளைப் போக்க, உதித்த சூரியன். மகாத்மா காந்திக்கு பிறகு, சுதந்திர இந்தியாவின் மாபெரும் தலைவர் என்று போற்றப்பட்டவர், டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் அவர்கள். தன் வாழ்நாள் முழுவதையும் சமூகத்திற்கென அர்ப்பணித்த மாபெரும் சிற்பியான டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை காண்போம்.


பிறப்பு: ஏப்ரல் 14, 1891

இடம்: மாவ், உத்தரபிரதேச மாநிலம், (இப்போது மத்தியபிரதேசத்தில் உள்ளது), பிரிட்டிஷ் இந்தியா

பணி: இந்திய சட்ட அமைச்சர், இந்திய அரசியலமைப்பு வரைவுகுழுவின் தலைவர்

இறப்பு: டிசம்பர் 6,  1956

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

‘பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்’ என அழைக்கப்படும் ‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’ அவர்கள், 1891ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் நாள், இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மாவ் (இப்போது மத்தியபிரதேசத்தில் உள்ளது) என்ற இடத்தில், ராம்ஜி மாலோஜி சக்பாலுக்கும், பீமாபாயிக்கும் பதினான்காவது குழந்தையாக, ஒரு மராத்திய குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை இராணுவப்பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

“மகர்” என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த பீமாராவ் ராம்ஜி அவர்கள், ‘சாத்தாராவில்’ உள்ள ஒரு பள்ளியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். இளம் வயதில், தனி மண்பானையில் தண்ணிர் குடிப்பது; குதிரை வண்டியில் போகும்போது, தாழ்த்தப்பட்ட பிரிவினர் என்றதும் இறக்கிவிடப்பட்டது; பள்ளியில் படிக்கும்போது, ஒதுக்கிவிடப்பட்டது என பல்வேறு துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்தார்.ஆனால், மகாதேவ அம்பேத்கர் என்ற பிராமண ஆசிரியர், இவர்மீது அன்பும், அக்கறையும் கொண்டவராக விளங்கினார். இதனால், தன்னுடைய குடும்ப பெயரான ‘பீம்ராவ் சக்பால் அம்பாவடேகர்’ என்ற பெயரை, ‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’ என்று மாற்றிக்கொண்டார்.

1904 ஆம் ஆண்டு, இவருடைய குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது.அங்கு “எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில்” சேர்ந்து கல்வியைத் தொடர்ந்தார்.குடும்பத்தில் மிகவும் வறுமை சூழ்ந்த நிலையிலும், கல்வியை விடாமல் தொடர்ந்த அவர், 1907 ஆம் ஆண்டு தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு, பரோடா மன்னரின் உதவியுடன் மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பைத் தொடர்ந்த அவர், 1912ல் அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சிறிதுகாலம் பரோடா மன்னரின் அரண்மனையில் படைத் தலைவராகவும் பணியாற்றினார்.

உயர்கல்வி கற்க அமெரிக்கா பயணம்

பரோடா மன்னர் ‘ஷாயாஜி ராவ்’ உதவியுடன் உயர்கல்வி கற்க அமெரிக்கா பயணம் ஆனார். உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற அம்பேத்கர் அவர்கள், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களைக் கற்றார். 1915ல் “பண்டைய இந்தியாவின் வர்த்தகம்” என்ற ஆய்விற்கு முதுகலைப் பட்டம் பெற்றார்.பின்னர் “இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு” என்ற ஆய்வுக்கு,‘கொலம்பியா பல்கலைக்கழகம்’ அவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கியது. மேலும், 1921 ஆம் ஆண்டு “பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்” என்ற ஆய்வுக்கு ‘முது அறிவியல் பட்டமும்’, 1923 ஆம் ஆண்டு “ரூபாயின் பிரச்சனை” என்ற ஆய்வுக்கு ‘டி.எஸ்.சி பட்டமும்’ பெற்றார். பிறகு சட்டப் படிப்பில் ‘பாரிஸ்டர் பட்டமும்’ பெற்றார்.

சமூகப்பணிகள்

1923 ஆம் ஆண்டுக்கு பிறகு, இந்தியாவிற்கு திரும்பிய அம்பேத்கர் அவர்கள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அதுமட்டுமல்லாமல், சமூதாய அமைப்பிலும், பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைக்க போராட வேண்டும் என முடுவுசெய்தார். ஜூலை 1924ல், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக “பஹிஸ்கிருத ஹிதகாரிணி சபா” என்ற அமைப்பை நிறுவினார். இதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் சமூதாய உரிமைக்காக போராடினார். 1930 ஆம் ஆண்டு, லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக புறப்படும் முன் அவர் கூறியது,“என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காக போராடுவேன் என்றும், அதே சமயத்தில் சுயராஜ்ய கோரிக்கைகளை முழு மனதுடன் ஆதரிப்பேன் என்றும் கூறினார்.”

இரண்டாவது வட்டமேச மாநாட்டில், பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சனை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமையும், விகிதாச்சார பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார். இதன் விளைவாக, ஒரு தொகுதியில் பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்தப்பட்ட சமூக வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் “இரட்டை வாக்குரிமை” முறை தாழ்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், இதை ஏற்க மறுத்த காந்திஜி, உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதன் விளைவாக, செப்டம்பர் 24, 1931 ஆம் ஆண்டு காந்திஜிக்கும், அம்பேத்கருக்கும் இடையே “பூனா ஒப்பந்தம்” ஏற்பட்டு, தாழ்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்கு பதிலாக, பொது வாக்கெடுப்பில் தனி தொகுதி என முடிவுசெய்யப்பட்டது.


தீண்டாமைக்கு எதிராக அம்பேத்கர் நடவடிக்கைகள்

வர்ணாசிரம தர்மத்திலிருந்து தோன்றிய சாதியமைப்பையும், தீண்டாமை கொடுமைகளையும் எதிர்த்து தீவிரமாக போராடிய அம்பேத்கர் அவர்கள், 1927 ஆம் ஆண்டு தாழ்தப்பட்ட மக்கள் மீதான தீண்டாமைக்கொடுமைகளை எதிர்த்து போராட்டத்தினைத் தொடங்கினார். பிறகு, 1930 ஆம் ஆண்டு தொடங்கிய நாசிக் கோயில் நுழைவு போராட்டத்தினை நடத்தி வெற்றிக்கண்டார். தீண்டாமை என்பது ஒரு சமூகப் பிரச்சனை மட்டுமல்லாமல், அது ஒரு அரசியல் பிரச்சினை எனவும் கருதிய அவர் தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தையும் கொண்டுவந்தார். இறுதியில், 1956 ஆம் ஆண்டு “புத்த மதத்திலும்” இணைந்தார்.

விடுதலை இந்தியாவின் அரசியல் அமைப்பில் அம்பேத்காரின் பங்கு



ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு, இந்தியா விடுதலைப் பெற்ற பிறகு, காங்கிரஸ் அரசு அம்பேத்கரை சட்ட அமைச்சராக பதவிஏற்றுக்கொள்ளும்படி அழைத்தது. அதன்பேரில், விடுதலைப் பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராகவும் பொறுப்பேற்றார். நவம்பர் 26,  1949 ஆம் ஆண்டு அம்பேத்கர் தலைமையிலான இந்திய அரசியல் அமைப்பு சட்ட வரைவுக்குழு நாடாளுமன்றத்திடம் சட்ட வரைவை ஒப்படைத்தது.    அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பு, குடிமக்களின் உரிமைகளுக்கு பலவகைகளில் பாதுகாப்பை அளிப்பதாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், இது ‘மிகச்சிறந்த சமூக ஆவணம்’ என வரலாற்று ஆசிரியர்களால் போற்றப்பட்டது. ஆனால் இச்சட்டத்தை கொண்டுவருவதில் நேருவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால், 1951 ஆம் ஆண்டு தன் பதவியைத் துறந்தார்.

பெளத்த சமயம் மீது பற்று

தம்முடைய சமூகப் போராட்டதிற்கு, தாம் இந்து மதத்தில் இருப்பதே ஒரு பெரிய தடையாக கருதிய அவர், பௌத்த சமயக் கொள்கைகளின் மீது ஈடுபாடுகொண்டு, 1950 ஆம்ஆண்டுக்கு பிறகு பௌத்த சமயத்தின் மீது தன் கவனத்தை செலுத்தினார். இலங்கையில் நடைபெற்ற பௌத்த துறவிகள் கருத்தரங்கின் கலந்துக்கொண்ட அவர், உலக பௌத்த சமய மாநாடுகளிலும் கலந்துகொண்டார். 1955 ஆம் ஆண்டு “பாரதீய பௌத்த மகாசபாவை” தோற்றுவித்தார்.1956 ல் “புத்தரும் அவரின் தம்மாவும்” என்ற புத்தகத்தை எழுதினார். பிறகு 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் நாள் பௌத்த சமயத்திற்கு முழுவதுமாக தன்னை மாற்றிக்கொண்டார்.


அம்பேத்கரின் பொன்மொழிகள்

“ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள், அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.”
“ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல; ஆடுகளாக இருக்க வேண்டாம், சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழுங்கள்.”
“நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று, முதல் தெய்வம் – அறிவு, இரண்டாவது தெய்வம் – சுயமரியாதை, மூன்றாவது தெய்வம்– நன்னடத்தை”.
“சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர்.”
“வெற்றியோ, தோல்வியோ, எதுவாயினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்பொழுது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.”
இறப்பு

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வந்த அம்பேத்கர் அவர்களுக்கு, 1955ல் உடல் நலம் மோசமடைய தொடங்கியது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன்னுடைய வாழ்வையே அர்பணித்த பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் நாள் தில்லியிலுள்ள அவருடைய வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுதே உயிர் நீத்தார். பௌத்த சமயத்தில் அதிக ஈடுபாடு கொண்டமையால், பௌத்த சமய முறைப்படி இவருடைய உடல் “தாதர் சௌபதி” கடற்கரையில் தகனம் செய்யப்பட்டது. இவருடைய மரணத்திற்கு பின், இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான “பாரத ரத்னா விருது” 1990 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, விடுதலை இந்தியாவின் அரசியல் சாசனத்தையே வரைந்த மாபெரும் சட்டமேதை பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் என அனைத்து துறைகளிலும் திறமைப்பெற்று விளங்கிய அவர், இந்திய வரலாற்றின் பழமைவாதப் பக்கங்களைக் கிழித்தெறிந்த மாமனிதர். தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளியாய், ஈடுஇணையற்ற ஜோதியாய் விளங்கியசமூகப் போராளி. இப்படிப்பட்ட மனிதரின் வாழ்க்கை, அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டு என்றால் அது மிகையாகாது.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*