ஞாயிறு, 21 ஜூலை, 2019

உலக மாம்பழம் தினம் ஜூலை 21.


உலக மாம்பழ தினம் ஜூலை 21.

உலக மாம்பழ தினம் ஜூலை 21 ஆம் தேதி உலக முழுவதும்  கொண்டாடப்படுகிறது,
சுமார் 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இருந்த மரம், இந்தியா இதன் தாய்நாடுகளில் ஒன்று, இந்தியாவில் இருந்து உலகம் முழுதும் பயணித்துள்ளதது இந்த மரம்,
கி.பி ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த யுவான் சுவாங், இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து உருவான இந்த மரத்தின் பழம் ஆசியாவெங்கும் அனுப்பப்பட்டதாக குறிப்புகள் காணக்கிடைக்கிறது.
இந்தியாவினை ஆண்ட மொகாலயர்களின் காலம்தான் இந்த மரத்தில் இருந்து உருவான பழத்தின் பொற்காலம் என்றும் கூறலாம்

அறுவத்து மூன்று நயன்மார்களில் ஓருவருக்கு இந்தப்பழம்தான் அவர் நயன்மாராக இருக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
தமிழத்தில் உள்ள பல ஊர்களில் இதுதான் தல விருட்சம் 
ஐங்குறு நூறு, கம்பராமாயணம் என எல்லாவற்றிலும் இதன் வாசம் வீசும்
இந்த பழத்திற்கு சித்த மருத்துவத்தில் பெரிய பலன் உண்டு.
இப்ப பல சிறப்புகளை பெற்றுள்ள பழம், மாம்பழம்ஒற்றை எழுத்தில் ஓர் கனி. உலக நடுகள் விரும்பும் அற்புத கனி. ஆண்டிற்கு ஒரு முறை தான் கிடைக்குமென்றாலும் முக்கனிகளில் முதலில் வைத்துப் போற்றப்படுவது ‘மா’. மாம்பழத்திற்கு மயங்காதவர்கள் எவரேனும் உண்டா? எத்தனை எத்தனை ரகங்கள்? எத்தனை நிறம்? எத்தனை மணம்? எத்தனை சுவை. இந்தப் பழம் கிடைக்கவில்லை என்று முருகப்பெருமான் கோவித்துக் கொண்டதும் நியாயமாகத்தான் படுகின்றது. மாவின் சுவை அலாதியானது.


பழங்களின் அரசன் என அழைக்கப்படும் ‘மா’ இந்தியாவில் அதிகம் உற்பத்தியாகும் பழமாகும். இதன் அற்புதமான சுவை, மணம் போன்றவைகளுடன் இதனுள் இருக்கும் வைட்டமின் A ம் C ம் நல்ல சக்தியை கொடுக்கின்றது. வங்காள தேசம், தென் கிழக்கு ஆசிய நாடுகளை தன் தாயகமாக கொண்டது. Mangiferra Indica எனும் தாவரவியல் பெயர் கொண்ட மாம்பழம் கோடை காலங்களில் உலகெங்கும் சுவைக்கப்படுகின்றது. மேங்கோ எனும் ஆங்கிலப் பெயரே தமிழின் மாங்காய் என்பதிலிருந்து திரிந்தது தான் என்கின்றனர் மொழியியலாளர்கள். தற்போது மா மரம் ஆசியா, அமெரிக்கா, மத்திய ஆப்ரிக்கா, தெற்கு ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியாவில் தற்போது வளர்க்கப்படுகின்றது.

மாம்பழத்தில் மாவடு, மாங்காய், மாம்பழம் என அதன் அத்தனை வளர்நிலைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. மாவடு, ஊறுகாய் செய்ய உதவுகின்றது. மாங்காயும் உலகெங்கும் பலவிதமாக உண்ணப்படுகிறது. மாங்காய் துண்டுகளை பத்தைகளாக நறுக்கி உப்பு, மிளகாய் தூள் தூவி சுவைக்காதவர் வெகு சிலரே. நினைத்தாலே நாவில் எச்சில் ஊறவைக்கும் அற்புதமானதொரு உணவுப் பண்டமிது. மாங்காயில் குழம்பு, தொக்கு, பச்சடி ஊறுகாய் போன்றவை தயார் செய்யலாம். மாங்காயை காய வைத்து சமையல் பொடியாகவும் சேமித்து வைத்துப் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. பெரும்பாலும் மாம்பழம் தோலையும், கொட்டையையும் நீக்கிய பின் பழத்தை துண்டுகளாக்கி அப்படியே உண்ணப்படுகிறது. இந்த சதைப் பகுதி கூழாக்கப்பட்டு சேமிக்கப்பட்டு ஆண்டு முழுவதும் பழச்சாறாகவும் பயன்படுத்தப்படுகின்றது. மாம்பழத்தையும், கெட்டித்தயிரையும் கலந்து மாம்பழ லஸ்சி செய்யலாம். மாம்பழ ஐஸ்க்ரீம் செய்யலாம். சர்க்கரை சேர்த்து மாம்பழ மிட்டாய் செய்யலாம்.

100 கிராம் எடையுள்ள மாம்பழத்தில் என்னென்ன சத்துக்கள் உள்ளன?

சக்தி - 70 கிலோ கலோரி

கார்போஹைட்ரேட் - 17 கிராம்

சர்க்கரை - 14.8 கிராம்

நார் பொருள் - 1.8 கிராம்

கொழுப்பு - 0.27 கிராம்

புரதச் சத்து - 0.51 கிராம்

வைட்டமின் A - 4%

வைட்டமின் B6 - 10%

வைட்டமின் C - 46%

தயமின் - 4%

பான்டேதெனிக் அமிலம்- 3%

நியாசின் - 4%

ரிபோஃபிளாவின் - 4%

வைட்டமின் B9 - 4%

சுண்ணாம்பு - 1%

இரும்பு - 1%

மக்னீஷியம் - 2%

பாஸ்பரஸ் - 2%

பொட்டாஷியம் - 3%

துத்தநாகம் - 0.02%


பழங்களின் மா மன்னன் மாம்பழம்.

மாம்பழம் என்பது மாமரத்தில் இருந்து பெறப்படும் ஒரு பழமாகும். இவை பழமாகவும், பழரசமாகவும் உண்ணப்படுகின்றது. மா, பலா, வாழை ஆகியவை தமிழ் இலக்கியத்தில் முக்கனிகள் என அறியப்படுகின்றன. இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளின் தேசியப் பழமாக மாம்பழம் உள்ளது.

வரலாறு

இந்தியாவின் வேதங்களில் மாம்பழத்தைக் கடவுள்களின் உணவாகக் குறிக்கின்றன. மேங்கோ(Mango) என்ற ஆங்கிலப் பெயர் 'மாங்காய்' என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து உருவானதே ஆகும். மேலும் மாம்பழம் பண்டைய தமிழகத்தில் முக்கனிகளுள் ஒன்றாகும்.

இந்தியாவில், மாம்பழங்கள் சுமார் கி.மு 4000 ஆண்டிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன. 1800 களில் ஆங்கிலேயர்கள் மாம்பழத்தை ஐரோப்பாவிற்கு அறிமுகம் செய்தனர். அதற்கு முன், ஃபிரென்சு மற்றும் போர்ச்சுகீசிய வியாபாரிகள் மாம்பழத்தை பிலிப்பைன்ஸ், மெக்சிகோ, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகம் செய்தனர்.

மாமரம்

பூத்துக் குலுங்கும் மாமரம்
மாமரம் 35 – 40 மீ உயரம் வளரக்கூடிய பெரிய மரமாகும். இதன் இலைகள், எப்போதும் பசுமையாகவும் மாற்றடுக்காகவும் அமைந்துள்ளன. இவை 15 – 35 செ.மீ நீளமும், 6 – 16 செ.மீ அகலமும் கொண்டிருக்கும். கொழுந்து இலைகள் கருஞ்சிவப்பாகவும், வளர வளர பச்சையாகவும் மாறுகின்றன. பூக்கள் கிளை நுனியில் கொத்தாகத் தோன்றுகின்றன. இவை மிகச்சிறியதாக, 5 – 10 மி.மீ. நீளமுடைய இதழ்களையும், மிதமான இனிய மணத்தையும் கொண்டுள்ளன. பூத்து, மூன்று முதல் ஆறு மாதங்களில் பழங்கள் முற்றுகின்றன.


மாம்பழம் நீன்ட காம்புகளுடன் மரக்கிளைகளில் கொத்தாய் தொங்கும். பழங்கள் 10 – 25 செ.மீ நீளமும், 7 – 12 செ.மீ விட்டமும், 2.5 கிலோகிராம் வரை எடையும் உடையவை. காய்கள் பச்சையாகவும், பழங்கள் மஞ்சள், இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறங்களிலும் காணப்படுகின்றன. பெருபாலும் இரகத்தைப் பொருத்து நிறம் மாறினாலும், சூரியன் படும் பாகங்கள் சிவப்பாகவும், மற்ற இடங்கள் மஞ்சளாகவும் இருக்கும். பழுத்த பழம் இனிய மணம் கொண்டிருக்கிறது. பழத்தின் நடுவில் கடின ஓடுடைய ஒற்றை விதை காணப்படும். இரகத்தைப் பொருத்து இந்த ஓடு நார்களுடனோ வழுவழுப்பாகவோ இருக்கும். விதை 4 – 7 செ.மீ நீளமும், 3 – 4 செ.மீ அகலமும், 1 செ.மீ தடிமனும் கொண்டு, ஒரு மெல்லிய விதை உறையுடன் இருக்கும்.

தோட்டம் அமைக்கும் போது கன்றுகள் 40 – 50 அடி இடைவெளியில் 90x90x90cm pit (ஏக்கருக்கு சுமார் 100 மரங்கள்) நடப்படுகின்றன. சாதாரணமாக, மாமரத்தோட்டங்களில் கழித்து விடுதல் தேவையற்றது. எனினும், முதல் சில ஆண்டுகள் அடிப்பாகத்தில் 3 அடி உயரம் வரை கிளைகள் வளராமல் கழித்து விடுவது நல்லது. அதன் பிறகு மாமரங்கள் தாமாகவே விரும்பத்தகுந்த நிலைக்கு வளரும்.

மாம்பழ விளைச்சல்

மாம்பழம்
உலகிலேயே மாம்பழம்தான் மற்ற எல்லாப் பழங்களையும் விட கூடுதலாக மக்கள் உண்ணும் பழம். மாப்பழத்தின் விளைச்சல் வாழைப்பழம், ஆரஞ்சுப்பழம் ஆகிய மற்றெல்லாப் பழங்களைக்காட்டிலும் கூடுதல் ஆகும். உலகநாடுகள் மன்ற உணவு, வேளாண்மை நிறுவனம் (The Food and Agriculture Organization of the United Nations), கணித்தபடி 2001 ஆம் ஆண்டில் உலகில் 23 மில்லியன் டன் மாம்பழம் விளைவிக்கப்பட்டது. இதில் இந்தியாவில் விளைந்த அளவு 12 மில்லியன் டன். இது உலக விளைவில் பாதிக்கு மேலாகும். சீனாவில் 3 மில்லியன் டன்னும், பாக்கித்தானில் 2.25 மில்லியன் டன்னும், மெக்சிக்கோவில் 1.5 மில்லியன் டன்னும் தாய்லாந்தில் 1.35 டன்னும் அடுத்து நிற்கும் நாடுகள். முன்னணி 10 நாடுகளின் மொத்த விளைச்சல் உலக விளைச்சலில் 80% ஆகும்.


பயன்பாடு

மாம்பழம்
மாம்பழம் பெரும்பாலும், அப்படியே பழமாக உண்ணப்படுகிறது. தோலையும், விதையையும் நீக்கிய பிறகு, பழச்சதை துண்டு செய்யப்பட்டு உண்ணப்படுகிறது. இந்தியாவில், இது மிக அதிக அளவில் காணப்படும் பழக்கம். பழச்சதை நன்றாக கூழாக்கப்பட்டு, மாம்பழச்சாறாகவும் பருகப்படுகிறது. இந்தியாவின் சில இடங்களில், மாம்பழக்கூழில் சர்க்கரை சேர்த்து உலர்த்தப்பட்டு சிறு துண்டுகளாக மிட்டாய் போலவும் உண்ணப்படுகிறது. மாம்பழச்சாறு பாலுடன் கலந்தும் பருகப்படுகிறது அல்லது ஐஸ் கிரீம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில், மற்றொரு பிரபலமான பானம், மாம்பழத்தையும் தயிரையும் கலந்து செய்யப்படும் மாம்பழ லஸ்ஸி ஆகும்.


உப்பு, மிளகாய் சேர்க்கப்பட்ட மாங்காய்த் துண்டுகள்

மாங்காயும், பலவிதமாக உலகெங்கும் உண்ணப்படுகிறது. இந்தியாவில், மாங்காய் துண்டுகள் மிளகாய்த் தூள் அல்லது உப்பு சேர்த்து உண்ணப்படுகின்றன. மேலும் மாங்காயைக் கொண்டு குழம்புகள், ஊறுகாய்கள், பச்சடிகள் ஆகியவையும் தயாரிக்கப்படுகின்றன. இந்தோனேசியாவிலும், மலேசியாவிலும், மாங்காய்கள் ருஜக் அல்லது ரொஜக் எனப்படும் புளிப்பு பச்சடி செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. பிலிப்பைன்ஸ் நாட்டில், மாங்காய்கள் 'பகூங்க்' எனப்படும் மீன் அல்லது இறால் கொண்டு தயாரிக்கபடும் கூழுடன் உண்ணப்படுகின்றன. மாங்காய் கொண்டு தயாரிக்கப்படும் சட்னி இனிப்பாகவோ, புளிப்பாகவோ, காரமாகவோ பல நாடுகளில் தயாரிக்கப்படுகிறது.

இந்தியாவில், மாங்காயைக் காயவைத்து அரைத்து 'அம்ச்சூர்' என்ற சமையல் பொடியாக பயன்படுத்தப்படுகிறது.

A mango tree in full bloom in Kerala, India


உடல் நல பலன்கள்

மாம்பழம், சமைக்காதது
100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து
ஆற்றல் 70 kcal   270 kJ
மாப்பொருள்    17.00 g
- சர்க்கரை  14.8 g
- நார்ப்பொருள் (உணவு)  1.8 g
கொழுப்பு 0.27 g
புரதம் .51 g
உயிர்ச்சத்து ஏ  38 μg 4%
தயமின்  0.058 mg  4%
ரிபோஃபிளாவின்  0.057 mg  4%
நியாசின்  0.584 mg  4%
பான்டோதெனிக் அமிலம்  0.160 mg 3%
உயிர்ச்சத்து பி6  0.134 mg 10%
இலைக்காடி (உயிர்ச்சத்து பி9)  14 μg 4%
உயிர்ச்சத்து சி  27.7 mg 46%
கால்சியம்  10 mg 1%
இரும்பு  0.13 mg 1%
மக்னீசியம்  9 mg 2%
பாசுபரசு  11 mg 2%
பொட்டாசியம்  156 mg  3%
துத்தநாகம்  0.04 mg 0%


ஐக்கிய அமெரிக்கா அரசின்
வயதுக்கு வந்தவருக்கான,
உட்கொள்ளல் பரிந்துரை .
மூலத்தரவு: USDA Nutrient database
மாம்பழச்சதையில் 15% சர்க்கரை, 1% புரதம், பெருமளவு உயிர்ச்சத்துக்கள் ஏ, பி, சி ஆகியவை உள்ளன. பெரும்பாலான மாம்பழ வகைகள் இனிப்பாக இருப்பினும், சில சற்றே புளிப்பாக இருக்கும். இரகத்தைப் பொறுத்து பழச்சதை மிருதுவாகவோ, கூழாகவோ, உறுதியாகவோ இருக்கும்.

மாங்காயின் பால் சிலருக்கு தோலில் எரிச்சலும், கொப்புளங்களும் உண்டாக்கலாம். மாம்பாலில் இருக்கும் அமிலப்பொருட்களே இதற்குக் காரணமாகும். இந்திய மக்கள் மாம்பழம் உண்பதால் வயிற்றுத் தொல்லைகள் சரியாகும், இரத்த இழப்பு நிற்கும், இதய நலம் உண்டாகும் என நம்புகின்றனர்.

இந்திய துணி வகைகளில் மாம்பழ வடிவம் அழகுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

                     
வகையினங்கள் அல்லது இரகங்கள்

செந்தூரா மாம்பழம்
கறுத்த கொழும்பான்
வெள்ளைக் கொழும்பான்
பங்கனப்பள்ளி மாம்பழம்
மல்கோவா மாம்பழம்
ருமானி மாம்பழம்
திருகுணி
விலாட்டு
அம்பலவி [கிளி சொண்டன் மற்றும் சாதாரண அம்பலவி என இரண்டு]
செம்பாட்டான்
சேலம்
பாண்டி
பாதிரி
களைகட்டி
பச்சதின்னி
கொடி மா
மத்தள காய்ச்சி
நடுசாலை
சிந்து
தேமா (இனிப்பு மிக்கது)
புளிமா – (BUCHANANIA AXILLARIS) (புளிப்பு மிக்கது)
கெத்தமார்
சீமெண்ணெய் புட்டிக்காய்
ஆகிய பல வகைகள் உள்ளன.


மாம்பழம் மருந்துவ குணங்கள் (Mango Benefits In Tamil)..!

கோடைகாலமானது வெயிலுக்கும் மட்டுமின்றி மாம்பழங்களுக்கும் தான் பிரபலமானது ஏனெனில் கோடைகாலத்தில் அதிகம் சுவையான மாம்பழங்கள் கிடைக்கும்  அது மட்டும் இல்லாமல் நீர்ச்சத்து உள்ள தர்பூசணி, நுங்கு அதிகமாக கிடைக்கும். கோடைகாலத்தில் அதிகம் சுவையான பழங்கள் கிடைத்தாலும் பெரும்பாலானோர் அதிகம் விரும்பி சாப்பிடுவது மாம்பழம் (Mango Benefits In Tamil) தான். அதுவும் மாம்பழத்தை பார்த்தவுடன் அனைவருக்கும் நாவிலிருந்து எச்சில் ஊறும். பொதுவாக மாம்பழங்கள் பல வகைகளில் இருக்கின்றது. ஒவ்வொரு மாம்பழங்களும் ஒவ்வொரு சுவையாக இருக்கும். இத்தகைய ருசியான மாம்பழத்தால் நம் உடலுக்கு கிடைக்கும் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா உங்ளுக்கு?

சரி மாம்பழத்தில் (Mango Benefits In Tamil) இருந்து நமக்கு கிடைக்கும் மருத்துவ குணத்தை பற்றி இங்கு நாம் காண்போம்.MANGO


மாம்பழம் நன்மைகள் (Mango Benefits In Tamil)..!

1. மாம்பழம் (Mango Benefits In Tamil) தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தோல் பளபளப்பாக இருக்கும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும்.

2. தீராத தலைவலியை மாம்பழ சாறு குணப்படுத்தும் மற்றும் கோடை மயக்கத்தை தீர்க்கும்.

3. மாம்பழத்தில் உள்ள நார்சத்து ஜீர்ணகிக்க உதவுகிறது.

4. பல்வலி மற்றும் ஈரல்களில் இரத்தம் கசிவு ஆகிய பிரச்சனைகளை குணப்படுத்தும் தன்மை வாயிந்தது.

5. மாம்பழத்தில் அதிகம் நோய் ஏதிர்ப்பு சக்திகள் உள்ளது மற்றும் மாம்பழம் (Mango Benefits In Tamil) அதிகம் சாப்பிட்டால் நம் உடலில் இரத்தம் அதிகமாக ஊற உதவுகிறது.

6. மாம்பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதை மிக்சியில் போட்டு அவற்றில் கொஞ்சம் பால், கொஞ்சம் ஐஸ் கட்டி மற்றும் தேவையான அளவு சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாக அரைத்து ஜூஸாக குடித்தால் நாக்குக்கு சுவையாக இருப்பது மட்டுமின்றி கோடை காலத்தில் ஏற்படும் உடல் வெப்பம் மற்றும்  உடலில் ஏற்படும் சில வகை தோல் பிரச்சனைகளை குணப்படுத்தப் பயன்படுகிறது.

7. கண்களில் ஏற்படும் பிரச்சனைகளான நீர் வடிதல், கண் அரிப்பு மற்றும் மாலைக்கண் நோய்கள் குணப்படுத்த மிகவும் உதவுகிறது.

8. தினமும் மாம்பழம் ஜுஸ் (Mango Benefits In Tamil) குடித்து வந்தால் நரம்பு தளர்ச்சி பிரச்சனைகள் குணமாகும்.

9. சிறுநீரகத்தில் கல் உருவாகும் ஆபத்தைக் கூட மாம்பழம் (Mango Benefits In Tamil) தடுத்துவிடுவிறது என்கிறது ஒரு ஆய்வு.

10. மாம்பழத்தில் பொட்டாசியம் மற்றம் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இது உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு இரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்க மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

மாம்பழம் பயன்கள் (Mango Benefits In Tamil):
உடல் சக்திக்கு:
உடலில் சத்துக் குறைபாடுகளால் சிலருக்கு சிறிது நேரத்திலேயே பலம் இழந்து, உடல் சோர்ந்து விடும். மாம்பலத்தில் உடலுக்கு தேவையான பல விட்டமின்கள், தாது சத்துகள் உள்ளதால் அதை சாப்பிடுபவர்களுக்கு உடல் சக்தி கிடைக்கும்.

நரம்பு தளர்ச்சிக்கு:
உடலில் பல பாகங்களுக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் பணியை நரம்புகள் செய்கின்றன. மாம்பழத்தை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு நரம்புகள் நன்கு வலுப்பெறும் நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்கள் நீங்கும்.

சரும பளபளப்புக்கு:
இளம் வயதில் நமது தோலில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் தோல் சுருக்கமில்லாமல் இருக்கிறது. வயது அதிகமாகும் போது இந்நிலை நீடிக்காது. நடுமத்திய வயதில் இருப்பவர்கள் மாம்பழத்தை சாப்பிடுபவர்களுக்கு தோல் சுருக்கம் நீங்கி தோல் பளபளப்பாகும்.

ஹார்மோன்கள்:
நமது உடலில் இருக்கும் நாளமில்லா சுரப்பிகள் உடலின் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கான பல ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. மாம்பழத்தை உண்டு வருபவர்களுக்கு இந்த ஹார்மோன்களின் செயல்பாடு சமநிலையில் இருக்கும்.

கருப்பை பிரச்சனைகள்:
பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் ஒரு இயற்கை நிகழ்வு மாதவிடாய் ஆகும். மாம்பழங்களை சாப்பிட்டு வரும் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் சீராகி, கருப்பையில் இருக்கும் தீங்கான கழிவுகள் நீங்கும். பெண்களின் உடல்நலம் மேம்படும்.

 மலட்டுத்தன்மை

ஆண்களும், பெண்களும் உடலளவில் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே திருமணத்திற்கு பின்பு ஆரோக்கியமான குழந்தை பிறக்கும். மாம்பழம் சாப்பிடுபவர்களுக்கு மலட்டுத்தன்மை நீங்கி நல்ல குழந்தைப்பேறு ஏற்படும்.

உடல்சக்தி 
சத்துக் குறைபாடுகளால் சிலருக்கு சிறிது நேரத்திலேயே பலம் இழந்து, உடல் சோர்ந்து விடும். மாம்பலத்தில் உடலுக்கு தேவையான பல விட்டமின்கள், தாது சத்துகள் உள்ளதால் அதை சாப்பிடுபவர்களுக்கு உடல்சக்தி கிடைக்கும்.

வயிறு நலம்

ஒரு சிலர் வயிற்றில் பூச்சிகள் தொல்லையால் பல வயிறு சார்ந்த நோய்களால் அவதியுறுவர். மாம்பலத்தில் கிருமிகளை அழிக்கும் சிறந்த இயற்கை ரசாயனங்கள் உள்ளன. இதை அடிக்கடி சாப்பிடுவதால் ஜீரண உறுப்புக்கள் நன்றாக இருக்கும்.

நரம்புகள்

உடலில் பல பாகங்களுக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் பணியை நரம்புகள் செய்கின்றன. மாம்பழத்தை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு நரம்புகள் நன்கு வலுப்பெறும் நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்கள் நீங்கும்.

சரும பளபளப்பு

இளம் வயதில் நமது தோலில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் தோல் சுருக்கமில்லாமல் இருக்கிறது. வயது அதிகமாகும் போது இந்நிலை நீடிக்காது. நடுமத்திய வயதில் இருப்பவர்கள் மாம்பழத்தை சாப்பிடுபவர்களுக்கு தோல் சுருக்கம் நீங்கி தோல் பளபளப்பாகும்.

 கண்களின் நலம்

நமது உடலில் இருக்கும் முக்கியமான உறுப்பு கண்கள். சிலருக்கு சத்துக்குறைபாடுகள் மற்றும் இதர காரணங்களால் கண்புரை, கண்பார்வை மங்குதல் போன்றவை ஏற்படுகிறது. அதை முற்றிலும் நீக்கும் உணவாக மாம்பழம் இருக்கிறது.

பசிபோக்கி

பசி நன்கு எடுப்பது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த அறிகுறி. ஆனால் சிலருக்கு அளவிற்கு அதிகமாக பசி எடுக்கும் நிலை ஏற்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் மாம்பழங்களை உண்பதால் அதீத பசியெடுக்கும் தன்மை குறையும்.


மூளை செயல்பாடு

மாம்பழத்தில் மனிதர்களின் மூளை செல்களை அதிகம் தூண்டக்கூடிய தாது மற்றும் அத்தியாவசிய சத்துக்கள் இருக்கின்றன. மாம்பழத்தை அடிகடி உண்பவர்களுக்கு மூளை சுறுசுறுப்பாக இயங்கும்.

ஹார்மோன்கள்

நமது உடலில் இருக்கும் நாளமில்லா சுரப்பிகள் உடலின் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கான பல ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. மாம்பழத்தை உண்டு வருபவர்களுக்கு இந்த ஹார்மோன்களின் செயல்பாடு சமநிலையில் இருக்கும். கருப்பை பிரச்சனைகள் பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் ஒரு இயற்கை நிகழ்வு மாதவிடாய் ஆகும். மாம்பழங்களை சாப்பிட்டு வரும் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் சீராகி, கருப்பையில் இருக்கும் தீங்கான கழிவுகள் நீங்கும். பெண்களின் உடல்நலம் மேம்படும்.

நோய்யெதிர்ப்பு

மாம்பழத்தில் காரச்சத்து கொண்ட இயற்கை வேதிப்பொருட்கள் நிறைந்திருக்கின்றன. இதை தொடர்ந்து உண்பவர்களுக்கு ரத்தத்தில் நோயெதிர்ப்பு திறன் அதிகமாகி, உடலை தொற்று நோய்களிலிருந்து காக்கிறது.

சிறுநீரக கற்கள்

குறைவான அதேசமயம் உப்புத்தன்மை அதிகம் கொண்ட நீரை அருந்துபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உண்டாகிறது. இவர்கள் மாம்பழத்தை அடிக்கடி உண்டு வர சிறுநீரக கற்கள் கரையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக