பக்கங்கள்
▼
ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009
நட்பு மொழிகள்
நட்பில் இருந்துதான் காதல் பிறக்கிறது. சில காதல்களைத் தவிர.
புத்தகங்கள்தான் நம்முடன் பேசும் மெளன நண்பர்கள்.
எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.
வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.
உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.
பெருமைக்காரன் கடவுளை இழப்பான், பொறாமைக் காரன் நண்பனை இழப்பான், கோபக்காரன் தன்னையே இழப்பான்.
நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதை விட, உயிரைக் கொடுக்கும் அளவிற்கு நண்பன் கிடைப்பதுதான் அரிது.
நான் உன் முன்னால் நடந்து வழிகாட்டியாக இருக்க மாட்டேன், உன் பின்னால் வந்து உன்னைக் கண்காணிக்க மாட்டேன். உன் பக்கத்தில் நடக்கிறேன் நண்பா உன் துணையாக.
நண்பர்கள் காதலர்களாகலாம். ஆனால் காதலர்கள் நண்பர்களாகக் கூடாது.
உன் நண்பர்களை அறிமுகப்படுத்தி வை. உங்கள் நட்பு ஒரு வளையம் ஆகும்.
எங்கள் சிநேகிதனின்
பதிலளிநீக்குநட்பை பற்றிய நட்பு மொழிகளும்
கூட்டமாய் பிறப்பெடுக்கும் காளானின் படமும்
அற்புதம் வாழ்த்துக்கள்
அன்புடன்