பக்கங்கள்

புதன், 14 செப்டம்பர், 2016

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பிறந்த நாள் செப்டம்பர் 16,


முன்னாள் மத்திய  அமைச்சர் ப. சிதம்பரம் பிறந்த நாள் செப்டம்பர் 16,
ப. சிதம்பரம்- பழனியப்பன் சிதம்பரம் (:P. Chidambaram) தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும் , இந்தியாவின் முன்னாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சர் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு
இவர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம் கண்டனூர் கிராமத்தில் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமுதாயத்தில் பழனியப்பசெட்டியார், லட்சுமி தம்பதிக்கு செப்டம்பர் 16,1945ஆம் நாள் மகனாகப் பிறந்தார். இவரது மனைவி பெயர் நளினி. இவருக்கு கார்த்தி என்ற மகன் உள்ளார்.

கல்வி
சென்னை கிருத்தவக் கல்லூரி பள்ளியில் படிப்பு. சென்னை மாநிலக்கல்லூரியில் பி.எஸ்.சி. (புள்ளியியல்) சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ.

அரசியல் வாழ்க்கை
இவர் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராகவும், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளராகவும், இருமுறை மத்திய இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இருமுறை மத்திய நிதி அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இவர் 1984 முதல் முறையாக மக்களவையின் உறுப்பினராகச் சிவகங்கை மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொழில் முறையில் வழக்கறிஞரான இவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்தவர். காங்கிரஸிலிருந்து பிரிந்து சிலகாலம் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்ற கட்சியை நடத்திவந்தார். பின்னர் மீண்டும் காங்கிரஸில் இணைந்தார்.

மத்திய நிதி அமைச்சராக இதுவரை 8 பட்ஜெட்களையும்,1 இடைக்கால பட்ஜெட்டையும் சிதம்பரம் அவர்கள் தாக்கல் செய்துள்ளார். மொரார்ஜி தேசாய்க்கு அடுத்து அதிக பட்ஜெட்களைத் தாக்கல் செய்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.1997–98ஆம் ஆண்டு இவர் தாக்கல் செய்த பட்ஜெட், கனவு பட்ஜெட் என்று பத்திரிக்கைளால் போற்றப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக