பக்கங்கள்

ஞாயிறு, 2 அக்டோபர், 2016

தினமலர் நாளிதழின்  டி.வி.இராமசுப்பையர் பிறந்த தினம் அக்டோபர் 2.

தினமலர் நாளிதழின்  டி.வி.இராமசுப்பையர் பிறந்த தினம் அக்டோபர் 2.

டி.வி.இராமசுப்பையர் ( அக்டோபர் 2, 1908 –
ஜூலை 21, 1984 ) தினமலர் நாளிதழின்
நிறுவனர். பொதுவாக டி.வி.ஆர்
என அறியப்படும் இவர் கன்னியாகுமரி
மாவட்டத்தை தமிழகத்துடன்
இணைப்பதற்கான போராட்டத்தில் முக்கிய
பங்கு வகித்தவர்.
வாழ்க்கை குறிப்பு
தேதி நிகழ்வு
02.10.1908 பிறப்பு. பெற்றோர் -
இராமலிங்க ஐயர், பகவதி
1915
வேங்கடபதி ஐயர்,
ஆவுடையம்மாள்
தம்பதியினருக்கு தத்து
கொடுக்க பட்டார்
1919 திருமணம். மனைவி -
கிருஷ்ணம்மாள்
06.09.1951
தினமலர் நாளிதழ்
திருவனந்தபுரத்தில்
தொடக்கம்
20.10.1954
தினமலர் குமரி மாவட்ட
போராட்டத்திற்கு தமிழர்களின்
குரலாக ஒலித்தது என்ற
குற்றச்சாட்டின் மேல்
திருவனந்தபுரம் உயர்
நீதிமன்ற நீதிபதி சங்கரன்
முன்னிலையில் டி.வி.ஆர் ஒரு
நாள் முழுவதும்
விசாரிக்கப்பட்டார்
3.11.1956
குமரி மாவட்டம் தாய்
தமிழகத்துடன் இணைந்த
வெற்றி விழா டி.வி.ஆர்
தலைமையில் நடந்தது
16.04.1957
திருவனந்தபுரத்திலிருந்து
நெல்லைக்கு மாறியது
தினமலர் பதிப்பு
21.07.1984 டி.வி.ஆர் மறைவு.
............................................
“தமிழர்களின்
வரலாற்றை யாரும்
எழுதவில்லை,” என தமிழ்
பல்கலைக்கழக கல்வெட்டு -
தொல்லியல் துறையின்
முன்னாள் தலைவர் இராசு
தெரிவித்தார்.
‘தினமலர்’ நாளிதழின் நிறுவனர்
திரு டி.வி.இராமசுப்பையர்
அறக்கட்டளை சொற்பொழிவும்,
நூல் வெளியீடும் உலகத்
தமிழாராய்ச்சி நிறுவனத்தில்
செப்., 26ம் தேதி நடந்தது. தஞ்சை
தமிழ்ப் பல்கலைக்கழக கல்வெட்டு -
தொல்லியல் துறையின்
முன்னாள் தலைவர் இராசு
எழுதிய ‘அறந்தாங்கித்
தொண்டைமான்’ நூலினை,
‘தினமலர்’ நாளிதழின் ஆசிரியர்
டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி
வெளியிட, முதல் பிரதியை
முன்னாள் துணைவேந்தர்
க.ப.அறவாணன் பெற்றுக்
கொண்டார்.
வரவேற்புரையாற்றிய உலகத்
தமிழாராய்ச்சி நிறுவன
இயக்குனர் குணசேகரன்
பேசியதாவது:
புலவர் இராசு தமிழகத்திற்கு
கிடைத்த ஒரு பேரறிஞர்.
புதையுண்ட பல்வேறு பழந்தமிழ்
வரலாறுகளை அகழ்வாய்வு
செய்து, ஓலைச்சுவடி, செப்பேடு
ஆகியவற்றின் மூலம் பழந்தமிழர்
நாகரிகம், வரலாறு, பண்பாடு
குறித்து எடுத்துரைத்தவர்.
‘தினமலர்’ ஆசிரியர்
இரா.கிருஷ்ணமூர்த்தி,
ஆண்டுதோறும் சிறந்த
நூல்களை, அண்மைக் கால
வெளியீடுகளை உலகத்
தமிழராய்ச்சி நிறுவனம் பெற
உதவி வருகிறார். ‘தினமலர்’
நாளிதழுக்கு மதிப்புரைக்காக
வரும் நூல்களை, அப்பணி
முடிந்தவுடன் கட்டுக்கட்டாக
எங்களுக்கு அனுப்பி வருகிறார்.
இன்றைய ஆய்வாளர்கள் தற்கால
நூல்களை பெற <உதவுகிறார்.
இவ்வாறு குணசேகரன்
பேசினார்.
நிகழ்ச்சியில் ‘தினமலர்’
நாளிதழின் ஆசிரியர் டாக்டர்
இரா.கிருஷ்ணமூர்த்தி
பேசியதாவது:
எனது தந்தை மிகுந்த தமிழ் பற்று
உடையவர். என் இளம் வயதில்,
நாகர்கோவிலில் தசாவதானி
ஆறுமுகப்பிள்ளையிடம் எனது
தந்தை தமிழ் இலக்கியம் படித்ததை
பார்த்திருக்கிறேன்.
திருவிதாங்கூர் தமிழர்களின்
போராட்டம் நடந்த காலம் அது.
அவர்களது உரிமை பறிக்கப்பட்டதன்
காரணமாக, அவர்களுக்கு
கேடயமாக இருக்க வேண்டும் என
‘தினமலர்’ நாளிதழை
திருவனந்தபுரத்தில் 1951ம் ஆண்டு
எனது தந்தையார் ஆரம்பித்தார்.
திருவனந்தபுரத்தில் ஆறு
ஆண்டுகள் நடத்தினார். ஆறு
ஆண்டுகளும் நஷ்டத்தில் தான்
இயங்கியது.
திருநெல்வேலிக்கு 1957ம் ஆண்டு
பத்திரிகையின் பதிப்பை
மாற்றினார். அந்த ஆண்டும்
நஷ்டத்தில் தான் இயங்கியது. ஏழு
ஆண்டுகள் தொடர்ந்து தமிழக
பணிக்காக, பெரிய குடும்பத்தின்
தலைவனாக இருந்து கொண்டு,
நஷ்டத்தை ஏற்று நடத்திய
பெருமை அவருக்கு உண்டு.
மிக்க மனவலிமை உடையவர். எந்தத்
துன்பத்தையும் தாங்கும் சக்தி
உடையவர்.
சிறப்பு சொற்பொழிவு
ஆற்றவுள்ள இராசு, 40
ஆண்டுகளுக்கு முன்பு படித்த
கட்டுரை, ‘செமினார் ஆன்
இன்ஸ்கிரிப்ஷன்’ என்ற
தொகுப்பில் வந்திருக்கிறது.
கொங்கு நாட்டு கோவில்களில்
காணப்படும் கல்வெட்டுக்களை
தொகுத்து, கொங்கு நாட்டு
பெருமையை
வெளிப்படுத்தியிருக்கிறார்.
வரலாற்று மாணவர்கள் 1968ம்
ஆண்டு வெளியான ‘செமினார்
ஆன் இன்ஸ்கிரிப்ஷன்’ நூலை
கண்டிப்பாக படிக்க வேண்டும்.
1966ம் ஆண்டு நடந்த கருத்தரங்கம்,
1968ம் ஆண்டு நூலாக
வெளிவந்தது. இந்நூலில் இரண்டு
முக்கியமான கட்டுரைகளை
கண்டிப்பாக படிக்க வேண்டும்.
முதலாவது ஐராவதம் மகாதேவன்
வெளியிட்ட ‘கார்பஸ் ஆப் தமிழ்
பிராமி இன்ஸ்கிரிப்ஷன்’ என்ற
கட்டுரை. தமிழக குகைகளில்
காணப்படும் தமிழ் பிராமி
எழுத்துக்களை தொகுத்து,
எழுத்துக்களின் வரி
வடிவங்களையும் போட்டு
சிறப்பான கட்டுரையை
வெளியிட்டிருந்தார்.
அந்த கட்டுரையை படித்ததால்
தான், தமிழ் பிராமி
எழுத்துக்களை என்னால் கற்க
முடிந்தது. அதனால் தான்
மதுரையில் கிடைத்த சதுர வடிவ
பாண்டிய நாணயத்தில்,
‘பெருவழுதி’ என்ற பெயரை
படிக்க முடிந்தது.
மற்றொன்று நாகசாமி எழுதிய,
சாதவாகனர்கள் வெளியிட்ட
இருமொழி நாணயம் பற்றிய
கட்டுரை. சாதவாகனர்கள் ஆந்திரா,
கர்நாடகாவில் பெரும்பகுதியில்,
கி.மு., இரண்டாம்
நூற்றாண்டிலிருந்து, கி.பி.,
மூன்றாம் நூற்றாண்டு வரை
ஆண்ட பெரிய வல்லரசர்கள்.
அவர்களது நாணயத்தில் ஒரு
பக்கத்தில் மன்னன் தலை,
பிராகிருத மொழியில் தாயின்
பெயரும், மன்னரின் பெயரும்
பொறிக்கப்பட்டிருக்கும்.
பின்புறத்தில் வேறு பல
சின்னங்களோடு, தமிழ் பிராமி
எழுத்தில் ‘வசிட்டி மகனுக்கு’
என்று இருந்தது. கி.பி., இரண்டாம்
நூற்றாண்டிலேயே தமிழ்
மொழி, தமிழ் எழுத்துக்கள்
பொறிக்கப்பட்ட நாணயங்களை
சாதவாகனர்கள் வெளியிட்டார்கள்
என தெரியவந்தது.
வடநாட்டு அறிஞர்கள் அக்காசில்
உள்ள மொழி தெலுங்கு மொழி
என சொல்லிக் கொண்டிருந்தனர்.
நாகசாமி தான் தமிழ்
மொழிக்கே உரிய மெய் எழுத்து,
தமிழ் பிராமி எழுத்தின் ‘ம’
எழுத்து இருக்கிறது என்று
கட்டுரை எழுதினார். தமிழகத்தில்
கடந்த 25 ஆண்டுகளாக தான்
வரலாற்றில் பல உண்மைகள்
வெளிவந்து
கொண்டிருக்கின்றன.
கொங்குநாடு தமிழகத்திற்கு
பெருமை சேர்க்கும் மாவட்டம்.
1987ம் ஆண்டு கரூரில்
முதல்முதலாக சங்ககால, சேர
நாணயத்தை கண்டு பிடித்தேன்.
முன்பகுதியில் யானை,
பின்புறத்தில் வில், அம்பு
பொறிக்கப்பட்டிருக்கும். பிறகு
கரூரில் ஏராளமான நாணயங்கள்
கிடைத்தன. ‘மாகோதை’ என்ற
வெள்ளி நாணயம், குட்டுவன்
கோதை என்ற நாணயங்களை
கண்டுபிடித்தேன். கரூரில்
கிரேக்க நாணயங்களை
கண்டுபிடித்தேன்.
கரூருக்கும், மேலை நாடுகளுக்
கும் கி.மு., மூன்றாம்
நூற்றாண்டிலிருந்தே
தொடர்புகள் இருந்தது என்பதை
அறிய முடிகிறது. கரூர்
சேரர்களின் தலைநகரம். சேரர்கள்,
கிரேக்கர்களிடமும்,
ரோமானியர்களிடமும் நீண்டகால
வணிகத் தொடர்பு
வைத்திருந்தனர் என்பது இந்த
நாணயங்கள் மூலம் தெரிகிறது.
இவ்வாறு டாக்டர்
இரா.கிருஷ்ணமூர்த்தி
பேசினார்.
‘அறந்தாங்கித் தொண்டைமான்’
என்ற தலைப்பில், தமிழ்
பல்கலைக்கழக கல்வெட்டு -
தொல்லியல் துறையின்
முன்னாள் தலைவர் இராசு
பேசியதாவது:
பெரும்பாலும் மேடைகளில் பலர்
தமிழகத்திற்கு வரலாறு இல்லை
என பேசிவருகின்றனர்.
வரலாறு இல்லாமல் இல்லை;
வரலாற்றை யாரும் எழுதவில்லை
என்பது தான் உண்மை. 45 ஆயிரம்
கல்வெட்டுக்களை படியெடுத்து,
மூன்றில் இரண்டு பங்கினை
மட்டுமே அச்சிட்டிருக்கிறோம்.
1887ம் ஆண்டு முதல் 1910ம் ஆண்டு
படியெடுத்த கல்வெட்டுக்கள் தான்
வெளியாகியிருக்கின்றன.
செப்பேடுகளில் முதல் மூன்று
தென்னிந்திய தொகுதிகள்
மட்டுமே காணப்படுகிறது.
பின்வந்த செப்பேடுகளை
பதிப்பிக்கவில்லை. இவற்றை
செய்யாமல், தமிழகத்திற்கு
வரலாறு இல்லை என்கின்றனர். பல
சோழ செப்பேடுகள் இன்னும்
ஆங்கில மொழியில் தான்
இருக்கின்றன. குறுநில
மன்னர்களைப் பற்றி பல்வேறு
செய்திகள் இன்னும்
வெளிவரவில்லை.
அறந்தாங்கி தொண்டைமான்
வரலாறு எந்த நூலிலும், எந்த
வரலாற்றிலும் பெரும்பாலும்
இடம்பெறவில்லை. 17ம்
நூற்றாண்டுக்கு பிறகு சுதேச
மன்னர்கள், பாளையக்காரர்கள்,
பட்டயக்காரர்கள் ஆவணங்களை
யாரும் தொகுக்கவில்லை.
கிழக்கிந்திய கம்பெனிகளின்
வியாபாரங்களைத் தான்
வரலாற்று ஆசிரியர்கள்
பார்த்தார்களே தவிர, தங்கள்
உள்ளூர் வரலாற்றுக்கு
ஆதாரமாக இருக்கும் கல்வெட்டுக்
களை, செப்பேடுகளை யாரும்
படித்துப் பார்க்கவில்லை.
அறந்தாங்கி தொண்டைமான்
மரபு புதுக்கோட்டை மரபுக்கு
350 ஆண்டுகள் முந்தையது.
அறந்தாங்கி தொண்டைமான்
பெயர் பொறித்த 50
கல்வெட்டுக்கள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
படையெடுத்து, பிறபகுதிகளை
வெல்லவில்லை என்றாலும், படை
வைத்திருந்தாக கல்வெட்டு
கூறுகிறது. தனிச்சிறப்பு
கருதி ‘தொண்டைமானார்’ என
குறிப்பிட்டிருக்கின்றனர். மழை,
வறட்சி, போர் போன்றவற்றால்
அழிந்த பயிர்கள் போக, வளர்ந்து
நின்ற பயிர்களுக்கு மட்டும் வரி
வசூலித்திருக்கிறார்கள்.
வரிக்குறைப்பும், வரி நீக்கமும்
செய்திருக்கிறார்கள்.
வரிவசூலில் கண்டிப்போடும்,
கருணையோடும் நடந்து
கொண்டிருக்கிறார்கள்.
இவர்களது ராணி பற்றி எங்கும்
குறிப்பிடப்படவில்லை. நோய்
நீங்க கொடை
வழங்கியிருக்கிறார்கள்.
கொடையை தவறாக
கொடுத்தபோது, மீண்டும்
விசாரித்து உரியவருக்கு
கொடுத்திருக்கிறார்கள்.
நிலத்தை விற்கும் போது, ஒரு
ஜாதியினர் அந்த
ஜாதியினருக்கு மட்டுமே
விற்கவேண்டும் என
கூறியிருக்கின்றனர்.
நீர்ப்பாசனம், நீதித்துறை
குறித்தும் குறிப்புகள்
காணப்படுகின்றன. 1319ம் ஆண்டு
முதல் 1759 வரை தனிஆட்சி செய்த
மரபினர். அறந்தாங்கி
தொண்டைமான்கள் ஆட்சிப்
பகுதியில் வரலாற்று
ஆசிரியர்கள் மீண்டும் களஆய்வு
மேற்கொண்டு, விரிவான
அறந்தாங்கி தொண்டைமான்கள்
வரலாற்றை எழுத இந்நூல்
முன்னோடியாக இருக்கும்.
இவ்வாறு இராசு பேசினார்.
நன்றி கூறிய உலகத் தமிழராய்ச்சி
நிறுவன பேராசிரியர் பகவதி,
“தினமலர் நாளிதழை நிறுவிய
திரு.டி.வி.இராமசுப்பையரையும்,
ஆசிரியர்
இரா.கிருஷ்ணமூர்த்தியும்,
திருவள்ளுவரின், தந்தை - மகன்
குறளுக்கு சான்றாக
சொல்லலாம்.
இரா.கிருஷ்ணமூர்த்தியும்,
இராசுவும் வரலாற்று அறிஞர்கள்
மட்டுமல்ல, வரலாற்று ஆர்வலர்கள்.
இளைஞர்கள், தங்களுக்கு
வழிகாட்டிகளாக
கொள்ளத்தக்கவர்கள்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக