விடுதலைப் போராட்ட வீரர் சர்தார் வல்லப்பாய் படேல் அக்டோபர் 31.
சர்தார் வல்லப்பாய் படேல்
(பி.31.10.1875 - இ.15.12.1950) ( Sardar
Vallabhbhai Jhaverbhai Patel, குஜராத்தி : વલ્લભભાઈ
પટેલ, இந்தி : सरदार वल्लभभाई पटेल) இந்திய
விடுதலைப் போராட்ட வீரர் ஆவார்.
குஜராத் மாநிலத்தில் பிறந்து வளந்த
படேல் குஜராத் மாநிலத்தில்
வழக்கறிஞராக இருந்து
ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழி
போராட்டங்களை நடத்தினார். இந்திய தேசிய
காங்கிரசில் ஒரு தலைவராக இருந்து
வெள்ளையனே வெளியேறு
இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக
இருந்தார்.
சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதம
அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும்
பணியாற்றிய சர்தார் வல்லப்பாய்
படேல் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த
சிற்பியாவார், ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட
சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து இன்றைய
ஒருங்கிணைந்த இந்தியாவை
உருவாக்கினார். இவர் இந்தியாவின்
இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டார்.
வாழ்க்கை வரலாறு
சர்தார் வல்லபாய் படேல் லேவா படேல்
சமூகத்திலிருந்து ஒரு குஜராத்தி குடும்பத்தில்
பிறந்தார். சர்தார் வல்லபாய் படேலின்
சொந்த ஊர் கரம்சாத் ஆகும்.
இவருக்கு சோமாபாய், நர்சிபாய் மற்றும்
விதால்பாய் பட்டேல் என்ற மூன்று
அண்ணன்களும், காசிபாய் என்ற
தம்பியும் தைபா என்ற தங்கையும் உடன்
பிறந்தவர்கள் ஆவார். அவரது தந்தை
சுவாமிநாராயணனின் சம்ப்ரதாயின்
ஒரு பக்தராக இருந்தார். அவரது தந்தை 20
கிமீ தொலைவில் உள்ள
சுவாமிநாராயண் கோயிலுக்கு நடந்தே
அழைத்துச் செல்வார். அது அவரது
உடலை கட்டுகோப்பாகவும் வலிமையாகவும்
உருவாக்க உதவியது. படேல் தனது 22
வயதில் தன்னுடைய மெட்ரிக்குலேசன்
கல்வியில் தேர்ச்சி அடைந்தார். பட்டேல்
தனக்குள்ளாகவே வழக்கறிஞர் ஆக
வேண்டும் என தீர்மானித்து இங்கிலாந்து
சென்று வழக்குரைஞர் படிப்பு படித்தார்.
அவர் மற்ற வழக்குரைஞர்களின் புத்தகங்களை
வாங்கி படித்து இரண்டு ஆண்டுகளில்
தேர்ச்சி அடைந்தார்.
சாதனைகள்
சோமநாதபுரம் கோயிலை கே. எம். முன்ஷியுடன்
இணைந்து மீண்டும் எழுப்ப காரணமாக
இருந்தவர்.
**********************************
இந்தியாவின் இரும்பு மனிதன் என்று இந்திய
வரலாறு சொல்லும் சர்தார்
வல்லப்பாய் பட்டேலின் நினைவு நாள்,
இன்று!!!
சுமார் 600 சமஸ்தானங்களா இருந்த
இந்தியவை, ஒற்றை ஆளாய் நின்று, ஒன்றுபட்ட
இந்தியா ஆகிய பெருமை இவரை மட்டுமே
சேரும். இந்திய சுதந்திரத்துக்கு முன்பே இவர்
துவங்கிய ஒன்றுபட்ட இந்தியா கனவே இன்று
நாம் காணும் சுதந்திர இந்தியா!!!
இந்தியாவின் முதல் பிரதம மந்திரி
ஆகவேண்டியவரும் இவரே, காந்தியின்
வேண்டுகோளுக்கு இனங்கி தனக்கு கிடைக்க
வேண்டிய பிரதமர் பதவியை நேருவுக்கு
விட்டுக்கொடுத்தார். இந்தியாவின்
முதல் துணை பிரதமராக இவர்
பணியாற்றினார். இவர் உள்துறை மற்றும்
தகவல் தொலைதொடர்பு
துறைகளை கவனித்துவந்தார். இவருடைய்
முயற்சியாலேயே டாக்டர் அம்பேத்கார்
இந்தியாவின் அரசியல் சாசனம்
வடிவமைப்பு குழுமத்தின் தலைவராக
நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிட தகுந்தது.
இவர் டிசம்பர் 15, 1950ல் தனது 75வது
வயதில் மாரடைப்பால் காலமானார்.
இன்றைய இந்தியாவின் சிற்பி என்ற
முறையிலும், சுதந்திர இந்தியாவை காண
இவர் செய்த தியாகத்தையும் இன்று
நினைவு கூறுகிறேன். நான் மதிக்கும் சுதந்திர
போராட்ட வீரர்களில் இவரும் ஒருவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக