பக்கங்கள்

வியாழன், 13 அக்டோபர், 2016

உலக கண்பார்வை தினம் அக்டோபர் மாதம் இரண்டாவது வியாழன்.

உலக கண்பார்வை தினம் அக்டோபர் மாதம் இரண்டாவது வியாழன்.

👧 உலக கண்பார்வை தினம் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் இரண்டாவது வியாழன்  அன்று கொண்டாடப்படுகிறது.

👧 இது 2000 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது.

👧 பார்வை இழப்பு மற்றும் பார்வை குறைபாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.
மார்கரெட் ஹில்டா தாட்சர்

✍ இங்கிலாந்தின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமரான மார்கரெட் ஹில்டா தாட்சர் 1925 ஆம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி இங்கிலாந்தின் லிங்கன் பகுதியில் உள்ள கிரேந்தம் என்னும் இடத்தில் பிறந்தார்.

✍ இவர் இருபதாம் நு}ற்றாண்டில் நீண்டகாலம் பொறுப்பாற்றிய இங்கிலாந்து பிரதமர். இவர் 1979 முதல் 1990 வரை தொடர்ச்சியாக பணியாற்றினார். இவர் மூன்று முறை தொடர்ச்சியாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

✍ இவர் இங்கிலாந்தின் 'இரும்பு பெண்மணி" என அழைக்கப்பட்டார். இவரால் செயலாக்கப்பட்ட கொள்கைகள் 'தாட்சரிசம்" என அழைக்கப்பட்டது.

✍ இவர் தனது 87 வது வயதில் 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி லண்டனில் காலமானார்.
அஷோக் குமார்

👉 இந்திய சினிமாவில் புகழ்பெற்ற நடிகர் அஷோக் குமார் 1911 ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி பீகாரில் உள்ள பாகல்பு+ரில் பிறந்தார்.

👉 இவரது பங்களிப்புகளுக்காக இந்திய அரசு 1988ஆம் ஆண்டில் தாதாசாகெப் பால்கே விருதும், 1998ஆம் ஆண்டு பத்ம பு+சன் விருதும் வழங்கி சிறப்பித்தது.

👉 மாநில அரசின் பல விருதுகளை பெற்ற இவர் மும்பையில் தனது 90வது வயதில் 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி காலமானார்.
✑ 1792 ஆம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் டிசியில் வெள்ளை மாளிகை கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது.
✏ 1923 ஆம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல் நகரில் இருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக