உலக விண்வெளி வாரம் ( World
Space Week ) அக்டோபர் 4 முதல் அக்டோபர் 10 .
உலக விண்வெளி வாரம் ( World
Space Week ) அக்டோபர் 4 முதல் அக்டோபர் 10 , இந்த இடைப்பட்ட
நாட்களை உலக விண்வெளி
வாரமாக
கொண்டாடப்படுகிறது. 1957 ஆம்
ஆண்டு அக்தோபர் 4 இல் ஸ்புட்னிக் 1 ( Sputnik
1) என்ற செயற்கைகோள் உலகின்
முதலாவது செலுத்தப்படும்
செயற்கைகோளாகும். 1967 இல் அக்தோபர்
10 ஆம் திகதி புற விண்வெளி அமைதி
உடன்படிக்கை செய்யப்பட்டு, உலக
நாடுகளிடையே ஒப்பந்தம்
கையொப்பம் ஆனதாக
அறியப்படுகிறது.
யாது? எப்போது?
சர்வதேச விண்வெளி
வாரமென்பது, அறிவியல்,
தொழினுட்பம் மற்றும் மனித
மேம்பாட்டிற்கும், அமையபெற்று தங்கள்
பங்களிப்பை கொடுப்பதாகும். 1999
ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள்
பொதுசபையால் அக்டோபர் 4-10 இரு
திகதிகள் (இரு நிகழ்வுகள்) இடைநாட்கள்,
நினைவுகூரும் வகையில் உலக விண்வெளி
வாரம்
கொண்டாடப்படுமென
அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
1957 அக்டோபர் 4இல், மனிதனால்
உருவாக்கப்பட்ட, பூமியின் முதல்
செயற்கைக்கோள் ஸ்புட்னிக் 1 ஏவப்பட்டு
விண்வெளி ஆய்விற்கு வழிவகுத்தது.
1967 அக்டோபர் 10இல், விண்வெளி
கோட்பாடுகள், மாநிலங்களின்
செயல்பாடுகளை காணல்,
அமைதியான முறையில் சந்திரன் மற்றும் இதர
கோள்கள் உள்ளிட்ட விண்வெளி
பயன்கள் ஒப்பந்தம் நிர்வாகக்குழுவால்
கையொப்பமானது.
சர்வதேச அளவில் விண்வெளி அறிவியல்
மற்றும் தொழில்நுட்பம்
வளர்ச்சியடைந்துள்ளது. ஒவ்வொரு
நாடும், மற்ற நாடுகளுடன் போட்டி
போட்டிக்கொண்டு விண்வெளி
ஆராய்ச் சியில் ஈடுபடுகின்றன. உலகிலேயே
முதன் முதலாக செயற்கைக்கோளை விண்
வெளிக்கு அனுப்பி, உலகின் கவனத்தை
ஈர்த்த பெருமைக்குரிய நாடு ரஷ்யா.
1957 அக். 4இல், "ஸ்புட்னிக் 1' எனும்
செயற்கைகோளை விண்வெளிக்கு
அனுப்பியது. இது தான் மனிதனால்
உருவாக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள்.
இந்த வெற்றியை தொடர்ந்து விண்
வெளியில் இடம் பிடிப்பதற்காக
ரஷ்யா, அமெரிக்கா நாடுகளுக்கிடையே
போட்டி உருவானது. இதுதான்
விண்வெளி வளர்ச்சியின் துவக்கம்.
விண்வெளியை அமைதியான முறையில்,
பயனுள்ள வகையில்
பயன்படுத்திக்கொள்ள உலக
நாடுகளிடையே 1967 அக். 10இல் ஒப்பந்தம்
கையெழுத்தானது. இந்த சம்பவங்களை
கொண்டாடும் வகையில் அக்.4 முதல்
அக். 10 வரை சர்வதேச விண்வெளி
வாரமாக கொண்டாடப்படும் என
அய்.நா., அறி வித்தது. உலகில்
முதன்முதலாக செயற்கைக் கோளை அனுப்பிய
ரஷ்யா, 1961இல் விண்வெளிக்கு
முதன்முதலாக மனிதனை அனுப்பி சாதனை
படைத்தது.
செவ்வாயில் மனிதர்கள் வாழ
முடியுமா; அதற்கான சாத்தியக்கூறுகள்
இருக்கின்றனவா என்பதைப்பற்றிய ஆய்வு
செய்வதற்காக இஸ்ரோ, மங்கள்யான்
விண்கலத்தை 2013 நவ., 5ஆம் தேதி அனுப்பியது.
இது கடந்த செப்., 24ஆம் தேதி
வெற்றிகரமாக செவ்வாயின்
சுற்று வட்டப் பாதையை அடைந்தது. இதன் மூலம்
செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பிய
4ஆவது நாடு என்ற பெருமையை
பெற்றது. முதல் முயற்சியிலே வெற்றி
பெற்ற நாடு மற்றும் குறைந்த
செலவில் விண்கலம் அனுப்பிய நாடு
என்ற பெருமையையும் இந்தியா
பெற்றது. இந்தியா விண்வெளித்
துறையில் முதன் முதலாக 1975இல் கால்
பதித்தது. அப்போது தான் தயாரித்த
செயற்கைக்கோளை (ஆர்யபட்டா),
மற்றொரு நாட்டின்
ராக்கெட்டில் வைத்து விண்ணுக்கு
அனுப்பியது. இன்று உள்நாட்டு
தயாரிப்பிலேயே ராக்கெட்,
செயற்கைக்கோள், விண்கலம் என அசுர
வளர்ச்சி பெற்றுள்ளது.
இதன்காரணமாக உலகின்
விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா
தவிர்க்க முடியாத நாடாகத் திகழ்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக