தமிழ்நாட்டின் பரத நாட்டிய ஆசிரியை, முதலாவது பெண் நட்டுவனார் கே. ஜே. சரசா நினைவு தினம் ஜனவரி 2 2012 .
கே. ஜே. சரசா (K.J. Sarasa, இறப்பு: சனவரி 2 2012) தமிழ்நாட்டின் பிரபலமான பரத நாட்டிய ஆசிரியைகளுள் ஒருவரும்,முதலாவது பெண் நட்டுவனாரும் ஆவார்[2] இவர் பரத நாட்டியத்தில் 500க்கும் மேற்பட்ட அரங்கேற்றங்களையும், 1,500க்கும் மேற்பட்ட பரத நாட்டிய நிகழ்ச்சிகளையும் உலகம் முழுதும் நடத்தி பரத கலையைப் பரப்புவதில் முக்கிய பங்கு வகித்தார். சென்னையில் மந்தைவெளியில் சரசாலயா நடன பள்ளியை 1960 ஆம் ஆண்டு தொடக்கம் நடத்திவந்த இவர் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
மாணவர்கள்
இவரிடம் நடனம் கற்றுக் கொண்ட பிரபலமானவர்களில் சிலர்.
முன்னால் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா
நடிகர் கமல்ஹாசன்
நடன இயக்குநர் ரகுராம்
நடிகை சோபனா
விருதுகள்
கலைமாமணி விருது, 1973-74, வழங்கியது: தமிழ் நாடு அரசு
சங்கீத நாடக அகாதமி விருது, 1992 வழங்கியது: இந்திய அரசின் சங்கீத நாடக அகாதமி
இசைப்பேரறிஞர் விருது, 2004
இறப்பு
கே. ஜே. சரசா, சிறிது கால உடல் நலக் குறைவின் பின்னர், தமது 78 ஆவது வயதில் சனவரி 2, 2012 அன்று சென்னையில் காலமானார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக