உலக வானொலி தினம் பிப்ரவரி 13 .
உலக வானொலி நாள் என்பது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல். பண்பாட்டு அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க ஆண்டு தோறும் பெப்ரவரி 13 ஆம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
மார்க்கோனி எனப்படும் குலீல்மோ மார்க்கோனி வானொலியைக் கண்டு பிடித்தவர். “நீண்ட தூரம் ஒலிபரப்பப்படும் வானொலியின் தந்தை” எனப்படுபவர்.
“கம்பியற்ற தகவல்தொடர்பு முறை” மற்றும் “மார்க்கோனி விதி” ஆகியவற்றை உருவாக்கியவர். இக்கண்டுபிடிப்பிற்காக 1909-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் உடன் இணைந்து பெற்றார்.
இவர் ஒரு தொழில் முனைவர், தொழிலதிபர் மற்றும் 1897 ல்“மார்க்கோனி வானொலி நிறுவனத்தின் நிறுவனர்”, “வானொலி” மற்றும் அதனோடு தொடர்புடைய கருவிகளை உருவாக்கியவர்.
நவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள், டி.வி.மொபைல், ஸ்மார்ட்போன், ஐ.பேட் இன்டர்நெட் என பல வழிகளில் தகவல் தொடர்பு அதிகரித்துவிட்டபோதிலும், வெகுஜன ஊடகத்தின் (MASS MEDIA) முன்னோடி வானொலி தான்.
தகவலை மக்களிடம் விரைவாக கொண்டு சேர்ப்பதில் வானொலியின் பங்கு அளவிடற்கரியது. ரேடியஸ்( radius) என்ற இலத்தீன் மொழியில் பிறந்தது தான் ரேடியோ என மருவியுள்ளது.
ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல், மைக்கேல் பாரடே இரு விஞ்ஞானிகள் மின்காந்த அலைகளை, ஒலி அலைகளாக மாற்றும் கருவியை கண்டறிந்தனர். இவர்களை பின்பற்றி ஹென்றிச் ஹெர்ட்ஸ் என்பவர் மின்காந்த அலைகளை , டிரான்ஸ்மீட்டராக மாற்றினார்.
பின்னர், இயற்பிலுக்கான நோபல் பரிசு (1909) பெற்ற இத்தாலியைச் சேர்ந்த கூலில்மோ மார்கொனி (1874-1937) வானொலியை கண்டறிந்தார். இன்று உலக முழுவதும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வானொலி நிலையங்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முந்தைய காலங்களில் பேரிடர் குறித்த தகவல்கள், போர் அறிவிப்புகள் போன்றவற்றினை ஒலிப்பரப்பு வாயிலாக விரைந்து அளித்தது வானொலி. அப்படி இன்றளவும் விரைந்து ஒரு தகவலினை அளிக்கும் சாதனம் ரேடியோ என்றால் அது மிகையாகாது.
ஆப்ரிக்கா, ஆசியா, வளைகுடா போன்ற நாடுகளில் இன்று உலக வானொலி தினத்தை கொண்டாட உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக