பக்கங்கள்

திங்கள், 29 மே, 2017

புதுச்சேரி முதலமைச்சர் வி. நாராயணசாமி V. Narayanasamy , பிறந்த நாள் மே 30.1947.



புதுச்சேரி முதலமைச்சர் வி. நாராயணசாமி  V. Narayanasamy , பிறந்த நாள்  மே 30.1947.

வி. நாராயணசாமி ( V. Narayanasamy , பிறப்பு: 30 மே 1947) இந்திய தேசிய காங்கிரசு கட்சி அரசியல்வாதியும்,
புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் முதலமைச்சரும் ஆவார். வி. நாராயணசாமி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக இருந்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

நாராயணசாமி பாண்டிச்சேரியில் வேலு, ஈசுவரி ஆகியோருக்குப் பிறந்தவர். சென்னை, டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி , அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயின்று பட்டம் பெற்றார்.

அரசியலில்
நாராயணசாமி மூன்று முறை
மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 இல்
புதுச்சேரி தொகுதி மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மன்மோகன் சிங்கின் இரண்டாவது அமைச்சரவையில் இணை அமைச்சராகவும், முதலாவது அமைச்சரவையில் நாடாளுமன்ற அலுவல்கள் இணை அமைச்சராகவும் பணியாற்றினார்.
2014 இந்தியப் பொதுத் தேர்தலில் இவர்
அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் கட்சியின் ஆர். இராதாகிருஷ்ணனிடம் தோற்றார்.
2016 மே மாதத்தில் நடைபெற்ற
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசு, திமுக கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து மாநில முதலமைச்சராக நாராயணசாமி காங்கிரசு கட்சியினால் நியமிக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக