எழுத்தாளர் ஞானி பிறந்த நாள் ஜூலை 1 , 1935.
ஞானி (பிறப்பு: சூலை 1 , 1935 ) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர், திறனாய்வாளர், கவிஞர்.
வாழ்க்கைக் குறிப்பு
கோயம்புத்தூர் மாவட்டம் சோமனூரில் பிறந்த இவரது இயற்பெயர் கி. பழனிச்சாமி . இவர் இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் மார்க்சியக் கோட்பாட்டாய்வுகளையும் செய்து வருபவர். முன்பு தமிழாசிரியராக பணியாற்றி பணி நிறைவு பெற்று, தற்போது கோயம்புத்தூரில் வசித்து வருகிறார். மார்க்சிய ஆய்வாளரான எஸ். என். நாகராஜனின் வழி வந்தவர். பண்பாட்டை வெறுமே பொருளியல் அடிப்படையில் ஆராயும் செவ்வியல் மார்க்சியத்துக்கு எதிரானவர். அண்டோனியோ கிராம்ஷி , அல்தூஸர் போன்ற நவமார்க்ஸியர்களை தமிழுக்கு அறிமுகம் செய்தவர். இளம் மார்க்ஸ் முன்வைத்த அன்னியமாதல் கோட்பாட்டின் அடிப்படையில் மார்க்ஸியத்தை விளக்க முயன்றவர்.
ஞானி புதியதலைமுறை, நிகழ் என இரு சிற்றிதழ்களை நடத்திவந்தார். இப்போது தமிழ்நேயம் என்ற சிற்றிதழை நடத்திவருகிறார். கவிதைக்காக உருவான வானம்பாடி இயக்கத்தில் முக்கியமான பங்காற்றியிருக்கிறார். ஞானிக்கு கனடாவில் இருந்து வழங்கப்படும் இயல்விருது 2010ல் அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு சிறந்த நூலாசிரியர் விருது
இவர் எழுதிய “மார்க்சியம் பெரியாரியம்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சமயம், ஆன்மீகம், அளவையியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
நூல்கள்
திறனாய்வு நூல்கள்
மார்க்சியமும் தமிழ் இலக்கியமும் - 1988
தமிழகத்தில் பண்பாட்டு நெருக்கடிகள் - 1994
எண்பதுகளில் தமிழ் நாவல்கள் - 1994
படைப்பியல் நோக்கில் தமிழிலக்கியம் -
தமிழில் நவீனத்துவம் பின்நவீனத்துவம் - 1997
நானும் என் தமிழும் - 1999
தமிழன் வாழ்வும் வரலாறும் - 1999
தமிழில் படைப்பியக்கம் - 1999
மறுவாசிப்பில் தமிழ் இலக்கியம் - 2001
எதிர் எதிர் கோணங்களில் - 2002
மார்க்சிய அழகியல் - 2002
கவிதையிலிருந்து மெய்யியலுக்கு - 2002
தமிழ் தமிழர் தமிழ் இயக்கம் - 2003
தமிழ் நாவல்களில் தேடலும் திரட்டலும் - 2004
வரலாற்றில் தமிழர் தமிழ் இலக்கியம் - 2004
தமிழ் வாழ்வியல் தடமும் திசையும் - 2005
தமிழன்பன் படைப்பும் பார்வையும் - 2005
வள்ளுவரின் அறவியலும் அழகியலும் - 2007
தமிழ் மெய்யியல் அன்றும் இன்றும் - 2008
நெஞ்சில் தமிழும் நினைவில் தேசமும் - 2009
செவ்வியல் நோக்கில் சங்க இலக்கியம் - 2010
தமிழிலக்கியம் இன்றும் இனியும் - 2010
வானம்பாடிகளின் கவிதை இயக்கம் - 2011
ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம் - 2012
அகமும் புறமும் புதுப்புனல் - 2012
அகமும் புறமும் தமிழ்நேயம் - 2012
ஞானியின் எழுத்துலகம் - 2005
ஞானியோடு நேர்காணல் - 2012
மெய்யியல்
மார்க்சியத்திற்கு அழிவில்லை - 2001
மார்க்சியமும் மனித விடுதலையும் - 2012
இந்திய வாழ்க்கையும் மார்க்சியமும் - 1975
மணல் மேட்டில் ஓர் அழகிய வீடு - 1976
கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை - 1996
நானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும் - 2006
கவிதை நூல்கள்
கல்லிகை - 1995
தொலைவிலிருந்து - 1989
கல்லும் முள்ளும் கவிதைகளும் - 2012
தொகுப்பு நூல்கள்
தமிழ்த் தேசியம் பேருரைகள் - 1997
அறிவியல் அதிகாரம் ஆன்மீகம் - 1997
மார்க்சியத்தின் எதிர்காலம் - 1998
படைப்பிலக்கியம் சில சிகரங்களும் வழித்தடங்களும் - 1999
மார்க்சியத்தின் புதிய பரிமாணங்கள் - 1999
விடுதலை இறையியல் - 1999
இந்தியாவில் தத்துவம் கலாச்சாரம் - 2000
மார்க்சியம் தேடலும் திறனாய்வும் - 2000
நிகழ் நூல் திறனாய்வுகள் 100 - 2001
பெண்கள் வாழ்வியலும் படைப்பும் - 2003
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக