பக்கங்கள்

சனி, 10 ஜூன், 2017

எழுத்தாளர். து. இரவிக்குமார் பிறந்த நாள் ஜுன் 10.



எழுத்தாளர். து. இரவிக்குமார் பிறந்த நாள் ஜுன் 10.

து. இரவிக்குமார் ( D. Ravikumar ) இவர் ஒரு தமிழக அரசியல்வாதி,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர், எழுத்தாளர், வழக்கறிஞர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2006 -ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வாழ்க்கைக் குறிப்பு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி வட்டத்தில் காவிரிக்கரை கிராமமான மாங்கணாம்பட்டில் 10-06-1961 இல் பிறந்தவர். பெற்றோர் : துரைசாமி- கனகம்மாள். மனைவி: செண்பகவல்லி, மகன்கள்: ஆதவன், அதீதன். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர்.

எழுதிய நூல்கள்
கட்டுரைத் தொகுப்புகள்
கண்காணிப்பின் அரசியல் (1995) விடியல் பதிப்பகம்
கொதிப்பு உயர்ந்து வரும் (2001) காலச்சுவடு பதிப்பகம்
கடக்க முடியாத நிழல் (2003) காலச்சுவடு பதிப்பகம்
மால்கம் எக்ஸ் (2003) காலச்சுவடு பதிப்பகம், உயிர்மை மறுபதிப்பு (2010)
வன்முறை ஜனநாயகம் (2004) தலித் வெளியீடு
சொன்னால் முடியும் (2007) விகடன் பதிப்பகம்
இன்றும் நமதே (2007) விகடன் பதிப்பகம்
தமிழராய் உணரும் தருணம் (2009) ஈழ விடுதலைப் போராட்டம் குறித்த கட்டுரைகளிந்தொகுப்பு. ஆழி பதிப்பகம்
துயரத்தின்மேல் படியும் துயரம் (2010) ஆழி பதிப்பகம்
காணமுடியாக் கனவு (2010) ஆழி பதிப்பகம்
சூலகம் ( 2009) பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்த கட்டுரைகள் உயிர்மை பதிப்பகம்
கற்றனைத்தூறும் (2009) கல்வி தொடர்பான கட்டுரைகள் , உயிர்மை பதிப்பகம்
பிறவழிப் பயணம் (2010) உயிர்மை பதிப்பகம்
பாப் மார்லி - இசைப் போராளி (2010) பாப் மார்லியின் வாழ்க்கை வரலாறு , உயிர்மை பதிப்பகம்
அண்டை அயல் உலகம் (2010) அண்டை நாடுகள் குறித்த கட்டுரைகள், உயிர்மை பதிப்பகம்
கடல்கொள்ளும் தமிழ்நாடு (2010) சூழலியல் கட்டுரைகள் , மணற்கேணி பதிப்பகம்
காற்றின் பதியம் (2010) மணற்கேணி பதிப்பகம்
எல்.இளையபெருமாள்- வாழ்வும் பணியும் (2010) மணற்கேணி பதிப்பகம்
சொல்லும் செயல் - ரவிக்குமார் சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள் (2010) மணற்கேணி பதிப்பகம்

கவிதை

அவிழும் சொற்கள் (2009) உயிர்மை பதிப்பகம்
மழைமரம் (2010) க்ரியா பதிப்பகம்

மொழிபெயர்ப்புகள்
உரையாடல் தொடர்கிறது (1995) ஃபூக்கோ, எட்வர்ட் செய்த்,அம்பர்த்தோ எக்கோ முதலான உலகச் சிந்தனையாளர்களின் நேர்காணல்களும் கட்டுரைகளும்[3]
எட்வர்ட் ஸெய்த், தமிழில் ரவிக்குமார், அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல், மணற்கேணிப் பதிப்பகம், புதுச்சேரி, 2010
கட்டிலில் கிடக்கும் மரணம் (2002) மஹாஸ்தாதேவி, இஸ்மத் சுக்தாய், இஸபெல் ஆலண்டே போன்ற பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்
வெளிச்சமும் தண்ணீர் மாதிரிதான் (2003) காபிரியேல் கார்சியா மார்க்யூஸ், இஸபெல் அலண்டெ மற்றும் சிலரது கதைகள்
பணிய மறுக்கும் பண்பாடு (2003) எட்வர்ட் செய்தின் எழுத்துகள்.
வரலாறு என்னும் கதை (2010) - எட்வர்டோ கலியானோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகள்
வலசைப் பறவை ( 2010) எஹுதா அமிக்கய், கவாஃபி,மாயா ஆஞ்சலூ முதலானோரின் கவிதைகள்
தொகுப்பு நூல்கள்
தலித் இலக்கியம், அரசியல், பண்பாடு (1996)
தலித் என்கிற தனித்துவம் (1998)
அயோத்திதாஸ் பண்டிதர் சிந்தனைகள் – 4 தொகுதிகள் (1999)
ரெட்டைமலை சீனிவாசன் ஜீவித சருக்கம் - ( தன்வரலாறு) (1999)
மிகைநாடும் கலை (2003) சினிமா கட்டுரைகள்
சுவாமி சகஜாநந்தா- மேலவையிலும் பேரவையிலும் ஆற்றிய உரைகள் , மணற்கேணி பதிப்பகம்
எங்கள் காலத்தில்தான் ஊழி நிகழ்ந்தது (2009) ஈழ இனப்படுகொலை குறித்த கவிதைகள், மணற்கேணி பதிப்பகம்

ஆங்கில நூல்கள்
We, the Condemned (1999) (Against Death Penalty)
Venomous Touch (2009) selected articles of Ravikumar, Samya, kolkatta
Waking is another dream (2010) Poems on Mullivaykal, Navayana Publishing
Tamil Dalit Writing (2010) An anthology of Tamil Dalit Literature , Oxford University Press
இதழ்கள் வெளியீடு
நிறப்பிரிகை - நவீன அரசியல் விவாதக்களத்தை உருவாக்கிய நிறப்பிரிகை இதழை அ.மார்க்ஸ், பொ.வேல்சாமி ஆகியவர்களோடு இணைந்து நடத்தியவர்.அந்த இதழ் இவரது முகவரியிலிருந்துதான் இவரால் வெளியிடப்பட்டது.
தலித் - தலித் இலக்கியத்துக்கென தமிழில் வெளியிடப்பட்ட தலித்- இருமாத இதழின் ஆசிரியர். அது பதினொரு இதழ்கள் வெளியானபின் நின்றுபோனது.
போதி - தலித் வரலாற்றுக்கென இவரால் உருவாக்கப்பட்ட காலாண்டிதழ். இரண்டு இதழ்கள் வெளியாகி நின்றுபோயிருந்தது. தற்போது மீண்டும் வெளியாகத் தொடங்கியுள்ளது.
மணற்கேணி - இவரை ஆசிரியராகக்கொண்டு தமிழ்ச் செவ்வியல் இலக்கியம், தொல்லியல் முதலானவை குறித்த ஆழமான ஆய்வுகளைத் தாங்கி வெளிவரும் இருமாத இதழ்.
இண்டியன் எக்ஸ்பிரஸ், பயோனிர், செமினார், தி ஹிந்து, போன்ற ஆங்கில இதழ்களில் கட்டுரைகளையும், தினமணி, இந்தியாடுடே, ஜுனியர் விகடன் போன்ற இதழ்களில் பத்திகளையும் எழுதிவருகிறார். ஜூனியர் விகடன் இதழில் 400க்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.
பிபிசி (தமிழ்), தமிழ். காம் போன்றவற்றிற்குத் தொடர்ச்சியாகக் கட்டுரைகள் வழங்கியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக