பக்கங்கள்

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

378வது வருடத்தில்..அடியெடுத்து வைக்கும் சென்னை !



378வது வருடத்தில்..அடியெடுத்து வைக்கும் சென்னை !


22/08/17 செவ்வாய்க்கிழமை!

*இன்று 378-வது சென்னை தினம் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.*

தமிழ்நாட்டின் தலைநகரம், வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று என பல பெருமைகளை பெற்ற சென்னை, தென்னிந்தியாவின் வாசலாகக் கருதப்படுகிறது.

*சென்னை தினம்:*

சென்னை தினம், கி.பி.1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதியை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு தினமாகும்.

பத்திரிக்கையாளர்களான சசி நாயர், மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியரான வின்சண்ட் டிசோசா, மெட்ராஸ் மியூசிங்ஸின் ஆசிரியரான முத்தையா ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கியதே இந்த சென்னை தினம்.

முதன் முதலில் ஒரு சில கருப்பு வெள்ளைப் படங்களுடன் 2004-ஆம் ஆண்டு தொடங்கிய இந்தக் கொண்டாட்டம் இன்று வளர்ச்சியடைந்து பல பரிமாணங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

*சென்னை நகரம்*
*கடந்து வந்த பாதை:*

*பல்லவ, சோழ, மற்றும் விஜயநகர பேரரசுகள் காலத்தில் இந்தப் பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது.*

1639-ம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை ஆங்கிலேயர்கள் சென்னையில் கட்டியதால் இந்நகரம் உருவானது.

1639 ஆகஸ்ட் 22ஆம் தேதி தான் தமிழர்களின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் நகரமாக இந்நகரம் உருவானது.

ஓராண்டிற்குப் பின் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டிமுடிந்த பிறகு, கோட்டையை மையமாகக் கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது.

இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன.

*1947ஆம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்த பிறகு மதராஸ் மாகாணத்தின் தலைநகரானது.*

*1996-ம் ஆண்டு, மெட்ராஸ் என்பது சென்னை எனப் பெயர; மாற்றம் செய்யப்பட்டது.*

*சென்னையின் சிறப்புகள்:*

*இந்தியாவின் மிக நீண்ட கடற்கரை, உலகத்தின் இரண்டாவது மிக நீளமான கடற்கரை என்ற சிறப்புகளை தாங்கி நிற்கிறது மெரினா கடற்கரை.*

இக்கடற்கரையை ஒட்டி புகழ்பெற்றோரின் உருவச்சிலைகள், நினைவிடங்கள், சமாதிகள் அமைந்துள்ளதால் இது சென்னை நகரின் சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா, வண்டலூர் பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது.

இப்பூங்கா 1855ல் தோற்றுவிக்கப்பட்ட இந்தியாவின் முதல் விலங்கியல் பூங்காவாகும்.

சென்னை மாநகராட்சியில் அமைந்துள்ள ஒரு தேசியப் பூங்கா. இது, இந்தியாவில் எட்டாவது சிறிய தேசியப் பூங்காவாகும்.

*விவேகானந்தர் இல்லம் சென்னையில் உள்ளது. இது ஐஸ் ஹவுஸ்  எனவும் ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது*.

சென்னையின் பிரதான வரலாற்றுச் சின்னமாக கருதப்படும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை இங்கிலாந்தின் மத குருவான செயின்ட் ஜார்ஜ் பெயரில் அமைந்துள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., வாழ்ந்த ஆற்காடு சாலையில் உள்ள இல்லம் எம்.ஜி.ஆர்., நினைவு இல்லமாக தமிழக அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதுபோல இன்னும் பல எண்ணற்ற சிறப்புகள் சென்னை நகரில் அமைந்துள்ளது.

*இந்தியாவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாகவும், பழமையான நகரங்களில் ஒன்றாகவும் விளங்கி வருகிறது சென்னை.*

*ஜாதி, மத, இன வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் வாழ்வளிக்கும் நகரங்களில் ஒன்று.*

உலக அளவில் சென்னை பலதுறைகளில் முன்னேறியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்னை தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று சென்னை தினம் கொண்டாடும் அனைவருக்கும் ...

இதயம் கனிந்த சென்னை தின நல்வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக