பக்கங்கள்

வெள்ளி, 29 செப்டம்பர், 2017

உலக இதய தினம் செப்டம்பர் கடைசி ஞாயிறு




உலக இதய தினம் செப்டம்பர் கடைசி ஞாயிறு...

ஆண்டுதோறும் செப்டம்பர் கடைசி ஞாயிறு உலக இதய தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதய நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உலக இதய கூட்டமைப்பின் சார்பில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதயத்துடன் இணைந்து பணியாற்றுவோம் என்பது இந்த ஆண்டு இதய தினத்தின் நோக்கமாக முன்வைக்கப்பட்டுள்ளது.
அதிக உயிரிழப்புகள்: ஆண்டுதோறும் 1 கோடியே 75 லட்சம் பேர் இதயம் தொடர்பான நோய்களால் உயிரிழக்கின்றனர். உலகிலேயே அதிக உயிரிழப்புக்கு காரணமான நோயாக இதய நோய்களே கருதப்படுகின்றன. இந்தியாவில் 40 லட்சத்துக்கும் அதிகமானோர் இதய நோய்களால் மரணமடைகின்றனர்.
பொருளாதார இழப்பு: இந்த ஆண்டு உலக பொருளாதார மன்றத்துடன் இணைந்து இதய ஆரோக்கியத்துக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த உலக இதய கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது. இதய நோய் காரணமாக நடுத்தர வயதில் மரணமடைபவர்களால் அந்த குடும்பங்களுக்கு மட்டுமன்றி, அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களுக்கும் இழப்பு. இந்தியாவில் மட்டும் இதனால் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இழப்பு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் புகையிலை தொடர்பான பழக்கங்களுக்கு தடைவிதிப்பது, உடற்பயிற்சி செய்ய ஊக்கப்படுத்துவது போன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என உலக பொருளாதார மன்றம், பெரிய நிறுவனங்களுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளது.
நோய்களை தவிர்க்க...: முறையான உடற்பயிற்சி, சரியான உணவுப்பழக்கம் உரிய முறையில் மருத்துவம் எடுத்துக்கொள்வது இதய நோயிலிருந்து பாதுகாக்கும். கொழுப்பு இல்லாத மீன், பருப்பு வகைகள், பழங்கள், ஆலிவ் எண்ணெய் ஆகியன, ஓய்வின்றி உழைக்கும் இதயத்துக்கு பாதுகாப்பளிக்கின்றன.
கட்டுப்பாடான எளிய வழிகளை கடைப்பிடித்து காப்போம் இதயத்தை.....


உலக இதய தினம் செப்டம்பர் கடைசி ஞாயிறு

இதயத்தைப் பாதுகாக்கவும் இதயநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் செப்டம்பர் 29 ஆம் தேதியை உலக இருதய தினமாக அனுசரிக்கப்படுகிறது.
உலகில் ஏற்படும் உயிரிழப்புகளில், இருதய நோயால் ஏற்படும் இறப்புகள் தான் அதிகம் என்று உலக சுகாதார நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது. ஆண்டுதோறும் 1 கோடியே 73 லட்சம் பேர் இந்நோயால் இறக்கின்றனர் .


இன்று உலக இதய தினம்; இதய நோய்களிலிருந்து தப்பிக்க வேண்டுமா? இதோ வழிகள்!

இதய நோய்களிலிருந்து தப்பிக்க, கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்களை இங்கே காணலாம்.
மனித உடலில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பு இதயம். அத்தகைய இதயம் நோய்வாய்ப்பட்டால், எளிதில் மீண்டு வர இயலாது.
எனவே இதய நோய்கள் குறித்து விழிப்புணர்வு பெறும் வகையில், ஆண்டுதோறும் செப்டம்பர் 29ஆம் தேதி உலக இதய தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ஒழுங்கற்ற வாழ்வியல் முறைகளால், பல்வேறு இதய நோய்கள் ஏற்படுகின்றன. உரிய தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால், அத்தகைய இதய நோய்கள் வராமல் பாதுகாக்கலாம்.
இதய நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள worldheartday.org என்ற இணையதளத்தில் 4 வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1 - இதயம் அறிவோம்:
நமது இதயத்தை முழுவதுமாக அறிந்து கொள்ள வேண்டும். அப்போது தான், வரவிருக்கும் நோய்களில் இருந்து இதயத்தை பாதுகாக்க முடியும். சரியான கால அளவில் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.
2 - போதிய உணவு:
ஒமேகா-3 சத்துள்ள மீன், நட்ஸ், பெர்ரி பழங்கள், ஓட்ஸ், லெக்யூம்ஸ் போன்ற உணவுப் பொருட்கள் இதயத்தின் நலத்திற்கு ஏற்றது.
3 - செயல்பாட்டு இதயம்:
உடல் உழைப்பு மிகவும் முக்கியம். உடற்பயிற்சி, யோகா உள்ளிட்டவை மூலம் உடலைப் பேணலாம்.
4 - இதயம் காப்போம்:
ஃபாஸ்ட் புட், ஒழுங்கற்ற உணவு நேரம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். புகை, மதுப் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.



உலக இதய தினம் 2017: இதய நோய்களிலிருந்து தப்பிக்க நிச்சயம் கடைபிடிக்க வேண்டிய 4 விஷயங்கள்..

நமது உடலுறுப்புகளில் எல்லா பாகங்களுமே முக்கியம்தான். ஆனால், இதயம் இன்னும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பு. இதய நோய்களிலிருந்து காத்துக்கொள்ளவும், அவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு ண்டும் செப்டம்பர் 29-ஆம் தேதி உலக இதய தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1999-ஆம் ஆண்டிலிருந்து இந்நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதய நோய்கள் தாக்காத வகையில் தற்காப்பு நடவடிக்கைகளையும், ஒழுங்கான வாழ்வியல் முறைகளையும் கடைபிடித்தாலே இதய நோய்கள் நம்மை நெருங்காது. இன்றைய நாளில் இதய நோய்கள் குறித்த அடிப்படையான விஷயங்களை தெரிந்துகொள்வோம்.
இருதய நோய்கள் என்றால் என்ன?
இதயத்தில் ரத்த திட்டுகள் இருத்தல், ரத்த நாளங்களில் கோளாறு, இதய வடிவமைப்பில் பிரச்சனைகள், பக்கவாதம், பிறவியிலிருந்து இருக்கும் இதய நோய்கள், ரத்த அழுத்தம், இதய தமனி நோய், இதய அடைப்பு நோய் உள்ளிட்ட அனைத்துமே இருதய நோய்களில் அடங்கும். ஒழுங்கற்ற வாழ்வியல் முறைகள், உடல் பருமன், புகைபிடித்தல், அளவுக்கதிகமான குளுக்கோஸ், தீய கொழுப்புகள், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால் இதய நோய்கள் ஏற்படுகின்றன.
இந்தாண்டு worldheartday.org இணையத்தளமானது இதய நோய்களிலிருந்து நம் இதயத்தைக் காத்துக்கொள்ள 4 முக்கியமான பரிமாணங்களை உருவாக்கியுள்ளன. அவற்றை காண்போம்.
1. உங்கள் இதயத்தை அறிந்துகொள்ளுங்கள்:
உங்கள் இதயத்தை முழுமையாக அறிந்துகொள்வதன் மூலம், உங்களுக்கு வரவிருக்கும் இதய நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். சீரான கால அளவில் மருத்துவர்களிடம் சென்று பரிசோதனை செய்தல் மூலம் இதய நோய்களிலிருந்து முன்கூட்டியே தப்பித்துக் கொள்ளலாம்.
2. இதயத்திற்கு சரியான உணவை அளியுங்கள்:
ஆரோக்கியமான உணவை உண்பது முக்கியமான விஷயம். ஒமேகா-3 சத்துள்ள மீன், நட்ஸ், பெர்ரி பழங்கள், ஓட்ஸ், லெக்யூம்ஸ், இதுதவிர ஆரோக்கியமான உடல்நலத்திற்காக உங்களால் நுகர முடிந்த உணவுப்பொருட்களை உண்ணலாம்.
3. இதயத்தை ஆக்டிவாக வைத்திருங்கள்:
வியர்வை வரும் வரை உடற்பயிற்சி செய்வது முக்கியம். உடற்பயிற்சி, யோகா உள்ளிட்டவை மூலம் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருங்கள்.
4. உங்கள் இதயத்தை காதலியுங்கள்:
துரித உணவுகள், ஒழுங்கற்ற வேலை நேரம் இவற்றை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். ஆரோக்கியமான உணவை உண்பது, புகை பிடித்தலை தவிர்ப்பது, மது பழக்கத்தை நிறுத்துவது உள்ளிட்டவற்றால் இதயம் நன்றாக செயல்படும்.


 உலக இதய தினம்: இதயம் பற்றிய சில செய்தி துளிகள்

இன்று உலகம் முழுவதும் இதய தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உணவு முறைகளில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்களால் அதிகம் பாதிக்கப்படும் உறுப்பாக இதயம் மாறி வருகிறது. அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
* புகைப் பழக்கமே இல்லாத 6 லட்சம் பேர் ஒவ்வொரு வருடமும் காற்றில் கலக்கும் புகையால் பாதிப்பட்டு உயிரிழகின்றனர். இதில் உலக அளவில் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 50 சதவீதம். புகைப் பிடிப்பதினால் 10 சதவீதம் பேர் இருதய நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
* புகைப்பிடிப்பதை நிறுத்தி 15 வருடமான பிறகும்கூட மாரடைப்பு வரலாம். அதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன.
அதிக கொழுப்பு, அதிக சர்க்கரை மற்றும் உப்பு உள்ள உணவை உண்ணுவது இதய நலனுக்கு எதிராவை. இதனால் இதய நோய் மற்றும் வலிப்பு நோய் உண்டாகிறது.
* உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் குழந்தைகளில் 10 லட்சம் குழந்தைகள் பிறவியிலேயே இதயக் கோளாறுடன் பிறக்கின்றன. இதயக் கோளாறு என்பது பெரும்பாலும் ஆண்களையும், வயதானவர்களையும் மட்டுமே தாக்கும் என்ற கருத்து பரவலாக உள்ளது. அது தவறு, பெண்கள், குழந்தைகள் உட்பட அனைத்து வயதினருக்கும் இதய பாதிப்பு ஏற்படலாம்.
* உலக அளவில், பத்துக்கு ஒன்று என்ற விகிதாச்சாரத்தில் பள்ளிக் குழந்தைகள் அதிக எடை உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதிக எடை, இதய நோய் மற்றும் வலிப்பு நோய்கள் வருவதற்கு காரணமாக அமையும்.
கவனிக்க வேண்டியவை:
* சமச்சீர் சத்துகள் உள்ள பழங்களும் காய்கறிகளும் இதய நோய் மற்றும் வலிப்பு நோய் வருவதைத் தடுக்க உதவுகின்றன.
* வெறுமனே உடற்பயிற்சியில் மட்டும் ஈடுபடாமல் தினமும் விளையாடுவது, மதி வண்டிகளை அதிகம் பயன்படுத்துவது, மாடிப்படிகள் ஏறி இறங்குவது உடல்நலத்திற்கு நல்லது.
* சரியான நேரத்தில் சீரான கலோரிகள் கொண்ட உணவை உட்கொள்வது.
* 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் சீரான இடைவெளியில் முழு உடற்பரிசோதனை செய்து கொள்வது நலம்.
* ரத்தத்தின் சர்க்கரை அளவை அடிக்கடி பரிசோதனை மூலம் கவனித்து வருவது
* எண்ணெணய் பண்டங்களை அதிகம் உட்கொள்வதை தவிர்ப்பது.
* நல்ல தூக்கம், அதிக மன அழுத்தம் வராமல் பார்த்து கொள்வது.


உலக இதய தினம்: வயதானவர்கள் மட்டுமின்றி இளைஞர்களையும் பாதிக்கும் நோய்

இதயநோய் தற்போது வயதானவர்களை மட்டுமின்றி இளைஞர் களையும் அதிகம் பாதிக்கிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
உலக இதய தினம் ஆண்டு தோறும் செப்டம்பர் 29-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதுதொடர்பாக ஸ்டான்லி அரசு மருத்துவமனை இதயவியல் துறை தலைவர் டாக்டர் கே.கண்ணன், அப்பல்லோ மருத்துவமனை இதய மற்றும் நுரையீரல் அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் பால் ரமேஷ் தங்கராஜ் ஆகியோர் கூறியதாவது:

இந்த ஆண்டில் உலக இதய தினத்தின் கருப்பொருள் ‘இதயத்துக்கு இதமான சூழலை உருவாக்குவோம்’ என்பதாகும். வீடு, விளையாடும் இடம், பணிபுரியும் அலுவலகம் போன்ற வற்றில் இதயத்துக்கு இதமான சூழலை உருவாக்க வேண்டும் என்பதே இதன் பொருளாகும். உலக அளவில் இதய நோய் ஒரு சவாலாகவே உள்ளது. அதிலும் மாரடைப்பு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
மாரடைப்பு ஏற்படும் 100 பேரில் 20 பேர் உயிரிழக்கின் றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 50, 60 வயதுகளில் வந்த இதய நோய், தற்போது 30 வயது இளைஞர்களுக்கே வருகிறது. வாழ்க்கை முறை மாற்றம், மாறி வரும் உணவுப் பழக்கத்தால் ஏற்படும் உடல் பருமன், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புகை மற்றும் மதுப்பழக்கம் போன்றவை இதய நோய்கள் வருவதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
இவை தவிர இதய ரத்தக் குழாய்கள் சுருங்குதல் மற்றும் வீங்குதல், இதய தசைகள் செயலிழத்தல், இதயம் செயலிழந்து போதல், இதய துடிப்புகளில் பிரச்சினை போன்ற இதய நோய்களும் உள்ளன. இதய நோய்களால் பாதிக்கப்படும் 80 சதவீதம் பேரை மாத்திரைகளால் குணப்படுத்திவிட முடியும். 20 சதவீதம் பேருக்குத்தான் அறுவைச் சிகிச்சை தேவைப்படுகிறது. இதய நோய்களுக்கு பல நவீன சிகிச்சை முறைகள் வந்துள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாரடைப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்
இதய நோய்களில் மாரடைப்பு முக்கிய பிரச்சினையாக உள்ளது. வயிற்றுப் பகுதியில் அழுத்தம் கொடுத்தல், மூச்சுத் திணறல், மயக்கம், உடல் வலி, சோர்வு போன்றவை மாரடைப்பின் அறிகுறிகளாகும். மாரடைப்புக்கான அறிகுறிகள் இருந்தாலோ அல்லது திடீரென மாரடைப்பு வந்து வந்து விட்டாலோ உடனடியாக ஆஸ்பிரின் மாத்திரையை போட்டுக் கொள்ள வேண்டும். அதன்பின், அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைப் பெற வேண்டும்.
இதய நோய்களை தவிர்க்க...
மது, புகை பழக்கத்தை விட்டு சத்துள்ள உணவை உட்கொள்ள வேண்டும். உணவுடன் காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். வயிறு நிறைய சாப்பிடுவதை விட்டுவிட்டு குறைவாக சாப்பிட வேண்டும். தினமும் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். இவற்றை தொடர்ந்து கடைபிடித்து வந்தாலே இதய நோய்கள் வராமல் 80 சதவீதம் தடுக்கமுடியும்.



மனித உடலின் மகத்தான எந்திரம்... இதயம்! #WorldHeartDay
இதயம்... மனித உடலின் மகத்தான எந்திரம்... ஆனால் அந்த எந்திரத்தின் மீது நாம் எந்த அளவுக்குக் கவனம் காட்டுகிறோம் என்பது தான் கேள்விக்குறி. உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி, அதிக இதய நோயாளிகள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் உலகத்தில் இதயநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இதயம் குறித்து விழிப்புணர்வு உருவாக்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29-ம் தேதி 'உலக இதய தினம்'-ஆகக் கடைபிடிக்கப்படுகிறது. 'சக்தியைப் பரப்புவோம்' ('Share the power') என்ற கருத்தின் அடிப்படையில் உலக இதயக் கூட்டமைப்பு மற்றும் உலக சுகாதார நிறுவனம் இந்த ஆண்டு இந்த நாளைக் கொண்டாடவிருக்கின்றன.
இந்த உலக இதய நாளில், நம் உயிர் வாழ ஆதாரமாக இருக்கும் இதயத்தை பாதுகாப்பது குறித்தும், இதய நோய்கள் குறித்தும், முதலுதவி, சிகிச்சை முறைகள் குறித்தும் விளக்குகிறார் இதய நோய் அறுவை சிகிச்சை நிபுணர் வி.சொக்கலிங்கம்.
இதயம் நம் கைகளில்!
இதயத்தின் அளவென்பது, நம்முடைய மூடிய கைகளின் அளவு தான். 400 கிராம் எடை கொண்டது. நாம் கருவிலிருக்கும்போதே இதயம் துடிக்க துவங்கும். ஒரு நிமிடத்துக்கு, சராசரியாக 72 முறையும், ஒரு நாளுக்கு ஒரு லட்சம் முறையும் துடிக்கும். 'Myocardium' என்னும் இதயத் தசைகளால் ஆன இதயம், நான்கு அறைகள், நான்கு வால்வுகள் உடையது. உடலில் உள்ள அனைத்து அசுத்த ரத்தத்தையும் சுத்திகரித்து மீண்டும் உடலுக்குச் செலுத்துவதே இதயத்தின் பிரதான பணியாகும்.


இதயம் பத்திரம்! – உலக இதய தினம்!
September last Sunday.
* இதயநோய் ஏற்படுவதற்கு, உயர் ரத்த அழுத்தம் மிக முக்கியக் காரணமாக இருக்கிறது. எனவே, உங்கள் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கிறதா என்பதை அவ்வப்போது பரிசோதித்துக்கொள்ளுங்கள்.
* புகைபிடிப்பது, புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவது போன்றவற்றால் இதயம், ரத்தக் குழாய்கள், நுரையீரல், கண், வாய், இனப்பெருக்க மண்டலம், எலும்பு, செரிமான மண்டலம் என உடலில் உள்ள ஒவ்வோர் உறுப்பையும் பாதிக்கிறது.
* சாதாரண மக்களைக் காட்டிலும், சர்க்கரைகள் நோயாளிகளுக்கு இதயநோய் வருவதற்கான வாய்ப்புகள் இரண்டு மடங்கு அதிகம்.
* மாரடைப்புக்கான வாய்ப்புகள் உள்ளவர்கள், வருடத்துக்கு ஒரு முறை ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைப் பரிசோதித்துக்கொள்ளவேண்டும்.
* 45 நிமிடங்களையாவது உடற்பயிற்சிக்குச் செலவிடுங்கள். நடைப் பயிற்சி, ஓட்டப் பயிற்சி அல்லது நீச்சல் பயிற்சி செய்வது உடலுக்கு ஆரோக்கியம் தரும்.
* 7 மணி நேரத்துக்கும் குறைவாகத் தூங்குபவர்களுக்கு மாரடைப்பு உள்ளிட்ட இதயநோய்க்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக