உலக முதலுதவி தினம் செப்டம்பர் 2வது சனிக்கிழமை.
உயிர் காக்கும் உயரிய உதவி இன்று உலக முதலுதவி தினம்
இந்தியாவில் விபத்துகளால் இறப்பவர்களில் 80 சதவீதம் பேர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதல் ஒரு மணி நேரத்தில் பலியாகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இது விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான முதல் உதவி கிடைக்கவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. அவர்களுக்கு உரிய முறையில் முதலுதவி கிடைத்திருந்தால், உயிர் பிழைத்திருப்பர்.
முதலுதவி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, உலக ரெட்கிராஸ் அமைப்பால், செப்டம்பர் 2வது சனிக்கிழமை (செப்., 9) உலக முதலுதவி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. என்ன செய்ய வேண்டும் ஒருவர் பாதிப்புக்கு உள்ளானால் தயங்காமல் முதலுதவி செய்ய முன்வர வேண்டும்.
முதலில் பாதிப்படைந்தவர், உணர்வுடன் இருக்கிறாரா (ரத்த ஓட்டம், சுவாசப் பாதையில் அடைப்பு, சுவாசம் உள்ளதா) என்பதை சோதிக்க வேண்டும்.
எவ்வகை பாதிப்பானாலும் இந்த மூன்றும் அவசியம்.
ஒருவர் மயக்கமடைந்துவிட்டால், அவரை சூழ்ந்து நிற்கக்கூடாது. காற்றோட்டத்துக்கு வழி செய்ய வேண்டும்.
ஒருவருக்கு ஆபத்து ஏற்பட்டால், உடனடியாக 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
தனியாக இருந்தால், அருகிலுள்ளவர்களை உதவிக்கு அழைக்க வேண்டும்.
அப்போது தான் மனப்பதட்டம் குறையும்.
ஆம்புலன்ஸ் வருவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பதை பொறுத்து, முதல் உதவியை தொடர வேண்டும்.
பயிற்சி தேவை ஒவ்வொரு பாதிப்புக்கும் அளிக்கப்பட வேண்டிய முதலுதவி பற்றி சுகாதாரத்துறை சார்பில், மக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
மருத்துவ வசதி குறைவான கிராமப்புறங்களில் இதை உடனே செய்ய வேண்டும்.
ஒவ்வொரு அலுவலகத்திலும் முதல்உதவி பெட்டி இருப்பது அவசியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக