பக்கங்கள்

வெள்ளி, 8 செப்டம்பர், 2017

உலக எழுத்தறிவு தினம்! – செப்டம்பர் -8



உலக எழுத்தறிவு நாள்  செப்டம்பர் 8

அனைத்துலக எழுத்தறிவு நாள் உலகெங்கும்  செப்டம்பர் 8ம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை யுனெஸ்கோ நிறுவனம் நவம்பர் 17 , 1965 இல் உலக எழுத்தறிவு நாளாகப் பிரகடனம் செய்தது. இது 1966ம் ஆண்டு தொடக்கம் கொண்டாடப்படுக்கிறது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும், அமைப்புக்களுக்கும் அறியவைப்பது இதன் முக்கிய நோக்கம் ஆகும்..
உலகில் சுமார் 781 மில்லியன் வயது வந்தோர் அடிப்படை எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள் ஆவர். அத்துடன், சுமார் 103 மில்லியன் சிறார்கள்
பாடசாலை வசதிகள் அற்ற நிலையில் உள்ளார்கள். இதனால் இவர்கள் அடிப்படைக் கல்வியான எழுத,, வாசிக்க, எண்ணத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.
யுனெஸ்கோவின் "அனைவருக்கும் கல்வி பற்றிய உலக அறிக்கை (2006)" அறிக்கையின்படி [2][3] , தெற்கு மற்றும்
மேற்கு ஆசியாப் பகுதிகளிலேயே மிகக் குறைந்த வீதமானோர் (வயது வந்தோரில்) (58.6%) படிப்பறிவில்லாமல் உள்ளனர். அதற்கு அடுத்த படியாக உள்ள பகுதிகள்
ஆபிரிக்கா (59.7%), அரபு நாடுகள் (62.7%). தனிப்பட்ட நாடுகளை எடுத்துக் கொண்டால் மிகக் குறைந்த எழுத்தறிவில்லாதோர் புர்கினா பாசோ (12.8%), நைஜர் (14.4%), மாலி (19%). அறிக்கையின் படி எழுத்தறிவின்மைக்கும் நாடுகளின் வறுமைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
எந்த மொழியிலும் இலகுவான வசனங்களை எழுதவும் படிக்கவும் தெரியாமையே எழுத்தறிவின்மையாகும் என ஐநாவின் சாசனம் எழுத்தறிவின்மையை வரையறுக்கிறது.
இவற்றையும் பார்க்கவும்
எழுத்தறிவு
எழுத்தறிவின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்.


உலக எழுத்தறிவு தினம்! – செப்டம்பர் -8

ஒரு மொழியில் புரிதலுடன் சரியாக பேசவும், எழுதவும் தெரிந்தவரே எழுத்தறிவு பெற்றவர். மற்றபடி, எழுத்தறிவு பெற்றவராக கருத குறிப்பிட்ட வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என எந்த அளவும் தீர்மானிக்கப்படவில்லை. கல்விக்கு எழுத்தறிவு அடிப்படையாக இருக்கிறது. இது ஒருவரின் அடிப்படை உரிமை. எழுத்தறிவு பெற்றால் தான் ஜனநாயகத்தில் உரிமைகளை நிலைநாட்ட முடியும். சமூக, பொருளாதார மற்றும் மனித முன்னேற்றத்திற்கும் இது அவசியம். எனவே எழுத்தறிவு பெறுவது ஒருவரின் கடமை, கட்டாயம். உலகில் இனம், மொழி, வயது, சமூக பாகுபாடின்றி அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, செப்.,8ம் தேதி உலக எழுத்தறிவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
எழுத்தறிவு பெற்றல்
எழுத்தறிவு அடிப்படைக் கல்வியின் இருதயமாக உள்ளது. எழுத்தறிவு பெறுவதன் மூலம் வறுமை, குழந்தை திருமணம், மக்கள் தொகைப் பெருக்கம், வேலைவாய்ப்பின்மை, பாலின வித்தியாசம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை தடுக்க முடியும். எழுத்தறிவு மூலம் அமைதி மற்றும் ஜனநாயகத்தை நிலைநிறுத்த முடியும். எழுத்தறிவு பெற்ற பெற்றோர், குழந்தைகøள் பள்ளிக்கு அனுப்ப தயங்க மாட்டார்கள்.
உலகளவில், 15 வயதுக்குட்பட்டோர் எண்ணிக்கையில், 77 கோடியே 40 லட்சம் பேரும், 15—-24 வயதுக்குட்பட்டவர்களில், 12 கோடியே 30 லட்சம் பேரும் எழுத்தறிவு அற்றவர்கள். <உலகில் எழுத்தறிவு பெறாதவர்களில், மூன்றில் 2 பங்கு பேர் பெண்கள்.
இந்தியாவின் நிலை
2011ன் படி, இந்தியாவின் எழுத்தறிவு 74 சதவீதமாக உள்ளது. இதில் ஆண்கள் 82.14 சதவீதம், பெண்கள் 65.46 சதவீதம். இது 2001ம் ஆண்டு கணக்கெடுப்பை விட 9.2 சதவீதம் அதிகம். தமிழக எழுத்தறிவு சதவீதம் 80.4 சதவீதமாக உள்ளது. இது 2001ம் ஆண்டு கணக்கெடுப்பை விட 6.9 சதவீதம் அதிகம்.100 சதவீத எழுத்தறிவு என்பதை நோக்கி முன்னேற வேண்டியது காலத்தின் கட்டாயம்.
திரிபுரா முதலிடம் :
எழுத்தறிவு சதவீதத்தில் நாட்டிலேயே முதலிடத்தில் திரிபுரா உள்ளது. இப்பட்டியலில் தமிழகம் (80.33) 14வது இடத்தில் உள்ளது. பீகார் (63.82) கடைசி இடத்தில் உள்ளது.
மாநிலம்சதவீதம்
1. திரிபுரா94.65
2. கேரளா93.91
3. லட்சத்தீவு92.28
4. மிசோரம்91.58
5. கோவா87.40

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக