உலக அமைதி நாள் ( International Day of Peace ) செப்டம்பர் 21.
உலக அமைதி நாள் ( International Day of Peace )
ஐக்கிய நாடுகளின் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும்
செப்டம்பர் 21ம் நாளில் அனைத்து ஐநா உறுப்பு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. [1] . இந்நாள் முன்னர் 1981இல் இருந்து ஓவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாம்
செவ்வாய்க்கிழமையிலேயே கொண்டாடப்பட்டு வந்தது. ஆனாலும்
2002 இல் இருந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 21இல் கொண்டாடப்படுகிறது.
சர்வதேச அமைதி நாள்
இன்று தகவல் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். விரல் நுனியின் சிறு அசைவினால் எண்ணற்ற தகவல்களைப் பெற்று பெருமிதம் அடைகிறோம். ஆனால், இந்த முன்னேற்றம் கோடிக்கணக்கான இளைஞர்களின் உயிர்களைப் பலிகொண்டு அப்பாவி மக்களின் வாழ்வை அழித்தொழிக்கும் போர்களுக்கு மாற்றீடாக அமையவில்லை. போரினதும், சமாதனத்தினதும் சொல்லொனாத் துயரங்களை வீடுவீடாகக் கொண்டு செல்லும் ஒலி, ஒளி ஊடகங்களால் போரின் கொடுமைகளைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. போர் உணர்வினை சமாதான உணர்வாக மாற்ற முடியுமானால் அது உலகளாவிய கிராமத்தின் (Global Village) மிக உன்னத சாதனையாக அமையும்.
நோபல் பரிசு வழங்கப்பட்டு வந்த காலம் முதல் சமாதானத்திற்காக பங்களிப்ப வழங்கியோருக்கும் நிறுவனங்களுக்கும் சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுக் கொண்டே உள்ளன.கடந்த மூன்று தசாப்த காலத்தில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றோர் விபரங்கள் வருமாறு:
2008 மார்ட்டி ஆட்டிசாரி (Martti Ahtisaari),
2007 ஆல் கோர் (Al Gore), காலநிலை மாற்றல் பல அரசு சபை (Intergovernmental Panel on Climate Change)
2006 முகமது யூனுஸ் (Muhammad Yunus), கிராமின் வங்கி (Grameen Bank)
2005 பன்னாட்டு அணுசக்தி முகமையகம் (International Atomic Energy Agency), மொகம்மது எல்பரதேய் (Mohamed ElBaradei)
2004 வங்காரி மாதாய் (Wangari Maathai)
2003 ஷிரின் எபாடி (Shirin Ebadi)
2002 ஜிம்மி கார்டர் (Jimmy Carter)
2001 ஐ.நா. (United Nations), கோஃபி அணான் (Kofi Annan)
2000 கிம் டே-ஜுங் (Kim Dae-jung)
1999 எல்லைகளில்லா மருத்திவர்கள் அமைப்பான மெடிசின்ஸ் சாண்ஸ் ஃப்ராண்டியர்ஸ் (Medecins Sans Frontières)
1998 ஜான் ஹ்யூம் (John Hume), டேவிட் ட்ரிம்பில் (David Trimble)
1997 கன்னிவெடிகளை தடைசெய்யக்கோரிய உலகலாவிய பிரச்சாரம் (International Campaign to Ban Landmines, ஜோடி வில்லியம்ஸ் (Jody Williams)
1996 கார்லோஸ் ஃபிலிபெ சிமிணெஸ் பெலோ (Carlos Filipe Ximenes Belo), ஜோஸ் ராமோஸ்-ஹார்தா (Jose Ramos-Horta)
1995 ஜோஸஃப் ரோட்ப்ளாட் (Joseph Rotblat), அறிவியல் மற்றும் உலக நாடுகள் உறவு பற்றிய பக்வாஷ் கருத்தரங்குகள் (Pugwash Conferences on Science and World Affairs)
1994 யாசர் அராஃபத் (Yasser Arafat), ஷிமோன் பெரேஸ் (Shimon Peres), இட்ஷாக் ரபின் (Yitzhak Rabin)
1993 நெல்சன் மண்டேலா (Nelson Mandela), F.W. டி க்ளார்க் (F.W. de Klerk)
1992 இரிகபெர்டா மென்ஷூ டும் (Rigoberta Menchú Tum)
1991 ஆங் ஸாங் சூ கி (Aung San Suu Kyi)
1990 மிக்கெயில் கார்பஷெவ் (Mikhail Gorbachev)
1989 14வது தளாய் லாமா (The 14th Dalai Lama)
1988 ஐ.நா. அமைதி காக்கும் படை (United Nations Peacekeeping Forces)
1987 ஆஸ்கார் ஏரியேஸ் சான்செஸ் (Óscar Arias Sánchez)
1986 எளீ வெய்செல் (Elie Wiesel)
1985 அணுவாயுத போர் தடுக்கும் பன்னாட்டு மருத்துவக்குழு (International Physicians for the Prevention of Nuclear War)
1984 டெஸ்மாண்ட் டூட்டூ (Desmond Tutu)
1983 இலெய்ச் வலெய்சா (Lech Walesa)
1982 ஆல்வா மிருதால் (Alva Myrdal), அல்ஃபோன்ஸோ கார்சியா ரௌபிள்ஸ் (Alfonso GarcÍa Robles)
1981 ஐ.நா. அகதிகள் ஆணைய உயரதிகாரி அலுவலகம் (Office of the United Nations High Commissioner for Refugees)
1980 அடோல்ஃபோ பெரீஸ் எஸ்க்யுவெல் (Adolfo Perez Esquivel)
1979 அன்னை தெரேசா (Mother Teresa)
1978 அன்வர் அல் சதாத் (Anwar al-Sadat), மென்கெம் பெகின் (Menachem Begin)
அண்மையில் வத்திக்கான் வானொலியில் அடுத்த ஆண்டு உலக அமைதி நாள் தின விழாவுக்கு திருத்தந்தை மையக்கருத்தொன்றை வழங்கியிருந்தார். அக் கருத்தின்படி 'அமைதியைக் காக்கவேண்டுமென்றால் இயற்கையைப் பாதுகாக்கவேண்டும். இதனடிப்படையிலேயே 2010 ஆம் ஆண்டில் உலக அமைதி தினம் கொண்டாடப்படும்".
இங்கு இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதற்கும், உலக அமைதிக்கும் உள்ள தொடர்பைக் காணுமாறு திருத்தந்தை வலியுறுத்தியுள்ளார். சுற்றுப்புறத்தைப் பாதிக்கும் செயல்களும் இயற்கையைப் பயன்படுத்தும் முறையும் வெப்பமாற்றமும் மக்கள் தொகையும் தொடர்புடையவை எனத் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் தெரிவித்துள்ளார். இந்த சவால்களை நீதியின் அடிப்படையில், சமூகச் சமத்துவக் கண்ணோட்டத்தோடு மக்களுக்கு நலம் பயக்கும் எனவும் திருத்தந்தை தெரிவித்துள்ளார். சுற்றுப்புரத்தைப் பாதுகாப்பது அவசரத்தேவை எனத் திருத்தந்தை கூறுகிறார். அதுவே அமைதிக்கு வழி வகுக்கும் எனத் தெரிவிக்கிறார். இவ்விடத்தில் ஆலோசணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு உயரிய கருத்தாகும்.
சர்வதேச அமைதி தினம் – செப்டம்பர் 21
உலக அமைதி நாள் (International Day of Peace International) ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் பிரகடனத்தின் மூலம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி ஐக்கிய நாடுகளின் சபையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினம் 1981 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் மூன்றாம் செவ்வாய்க் கிழமை கொண்டாடப்பட்டு வந்தது. 2002 ஆம் ஆண்டிலிருந்து இந்தத் தினம் செப்டம்பர் 21 ஆம் தேதியில் கொண்டாடப்படுகிறது.
அமைதி என்பதற்குப் பல அர்த்தங்கள் இருக்கின்றன. தற்காலத்தில் அமைதி என்பது, பகை இல்லாத நிலையைக் குறிக்கிறது. சர்வதேச அளவில் போர் இல்லாத நிலையையும் குறிக்கிறது. மகாத்மா காந்திஜியின் கருத்துப்படி, அமைதி என்பது வன்முறை இல்லாமையை குறிக்கும். அமைதி – இது எங்குள்ளதோ அந்த இடம் எவ்வித பிரச்னைகளும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கும். அனைத்து பிரச்னைகளுக்கும், அமைதியே மருந்து
sep 21 - peace day
மேலும் உலகின் சகல முன்னேற்றத்திற்கும் அடிப்படையானது சமாதானம். வரலாற்றில் பல யுத்தங்கள் நடை பெற்றுள்ளன. 20 ஆம் நூற்றாண்டின் இரு பெரும் உலக மகா யுத்தங்கள் கோடிக்கணக்கான உயிர்களையும் சொத்துக்களையும் காலி செய்திருக்கின்றன. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் உலக சமாதானத்திற்காக 1945 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை, உலக நாடுகளிடையே பூசல்களையும், போர்களையும் தடுக்க பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நம்மால் துப்பாக்கிகளுக்கும் குண்டுகளுக்கும் ஓய்வு கொடுக்க முடியவில்லை.
அதே சமயம் உலகின் நிரந்தர சமாதானத்தை உருவாக்கும் பணி யுனெஸ்கோ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. உலக சமாதான முயற்சி ஒன்றின் போது ஐ.நாவின் பொதுச் செயலாளர் ஹாமர்சீல்ட் விமான விபத்தில் உயிர் துறந்தது கொடுமையிலும் கொடுமையாகும். அவர் 1961 ஆம் ஆண்டு செப்டம்பர் மூன்றாம் வாரத்தின் செவ்வாய்க் கிழமையில் மரணம் அடைந்தார். அந்தத் தினமே உலக அமைதி தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்த யுனெஸ்கோவின் பணி, கல்வி, அறிவியல், பண்பாட்டு நடவடிக்கைகளின் வழியாக உலக சமாதானம், மனித இனத்தின் பொது நலன் ஆகிய குறிக்கோள்களை நிறைவேற்ற வேண்டும். ஐ.நா சபையும், ஐ.நா சாசனமும் இந்தக் குறிக்கோள்களின் அடிப்படையிலே அமைக்கப்பட்டிருக்கிறது. மனித உரிமைகளையும், கடமைகளையும் செயல்படுத்த முக்கியமாக தேவைப்படுவது சமாதானமாக இருக்கிறது. அதாவது, குடிமக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் சுதந்திரமான, நியாயமான சட்டம், சமத்துவம், ஒருமைப்பாடு என்பது தான் சமாதானமாக இருக்கிறது. சமாதானம், வளர்ச்சி, ஜனநாயகம் ஆகிய மூன்றும் ஒன்றுக்கு ஒன்று உருதுணைபுரிபவையாக இருக்கின்றன. அவை ஒன்றையொன்று வலுப்படுத்துகின்றன.
உலகில் அணு ஆயுதங்களுக்கு ஐக்கிய அமெரிக்க நாடுகள், ரஷ்யா (முன்னாள் சோவியத் ஒன்றியம்), சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா போன்ற நாடுகள் உரிமை கொண்டாடிக் கொண்டுள்ளன. உலக அமைதியை வலியுறுத்தும் நாடுகள் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையையே தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் நாடுகள் கூட பாதுகாப்பு என்கிற போர்வையில் அணு ஆயுத பலத்தை பெருக்குகின்றன என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக