பக்கங்கள்

ஞாயிறு, 1 அக்டோபர், 2017

தேசிய ரத்த தான தினம் அக்டோபர் 1



தேசிய ரத்த தான தினம்  அக்டோபர் 1


இறுதியில் காக்கும் குருதி: இன்று தேசிய ரத்த தான தினம்

எதிர்பாராத விபத்து, மகப்பேறு, ஆபரேஷன், நோய் ஆகியவற்றின் போது,பாதிக்கப்பட்டவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. உலகளவில் ரத்தத்தின் தேவை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. இதனால் தேவைப்படும் ரத்தம், இன்னொருவர் தானம் செய்தவன் மூலம் மட்டுமே பெற முடியும். இதுவரை மனித ரத்தத்துக்கு மாற்றாக எதுவும் கண்டறியப்படவில்லை.
ரத்ததானம் செய்வதன் மூலம், யாரோ ஒருவருடைய உயிர் காப்பற்றப்படுகிறது. மேலும் மற்றொருவர் ரத்த தானம் செய்வதற்கும் வழிகாட்டியாக அமைகிறது. இன்று நீங்கள் ரத்த தானம் செய்தால், அது நாளை உங்களுக்கு கூட பயன்படலாம். பாதுகாப்பாக ரத்ததானம் செய்வது பற்றி போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அக்., 1ம் தேதி தேசிய ரத்ததான தினம் கடைபிடிக்கப்படுகிறது.
யார் ரத்தம் வழங்கலாம்:
நல்ல உடல்நிலையில் உள்ள 18 முதல் 60 வயது உள்ள எவரும் ரத்ததானம் செய்யலாம். உடலின் எடை 45 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும். ரத்ததானம் கொடுக்கும் முன், ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, ஹீமோகுளோபின் ஆகியவற்றை சோதனை செய்த பின், ரத்ததானம் செய்ய வேண்டும். உடலின் வெப்பநிலை 37.50 டிகிரி செல்சியசுக்கு மிகாமல் இருக்க வேண்டும். சராசரியாக நமது உடலில் 5 லிட்டர் ரத்தம் இருக்கும். தானத்தின் போது, 350 மி.லி., ரத்தம் மட்டுமே உடம்பில் இருந்து எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதுவும் 2 நாட்களில் இழந்த ரத்தத்தை மீட்டு விடுகிறது. 2 மாதங்களில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை சரியான அளவுக்கு வந்து விடுகிறது. மூன்று மாதத்துக்கு ஒரு முறை ரத்ததானம் வழங்கலாம்.
பெறுபவருக்கு மட்டுமல்ல:
ரத்தம் வழங்குவதால் மற்றவர் பயன்பெற்றாலும், தானம் செய்பவர்களுக்கும் இது பலன் அளிக்கிறது. புதிதாக ரத்தத்தை உருவாக்கும் முயற்சியாகவும் இதை கருதலாம். இதனால் தானம் செய்த ரத்தத்தை இழந்ததாக கருத வேண்டியதில்லை. ரத்தத்தில் உள்ள இரும்புச்சத்தை சரியான அளவில் வைத்துக் கொள்ள ரத்ததானம் செய்வது உதவுகிறது. ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள கொழுப்பும் ரத்த தானம் செய்யும் போது சீரடைகிறது. ஒரு யுனிட் ரத்தத்தை மூன்று பகுதியாக பிரித்து தேவைப்படுபவர்களுக்கு ரத்த சிவப்பனுக்கள், பிளாஸ்மா, பிளேட்ளட்கள் என பயன்படுத்த முடியும். இதனால் மூன்று பேர் உயிரை ஒருவரால் காப்பாற்ற முடிகிறது.
ரத்த தானத்தின் அவசியம்:
தினந்தோறும் நூற்றுக்கணக்கான பேருக்கு எதாவது ஒரு விதத்தில் ரத்தம் தேவைப்படுகிறது. பெரும்பாலான நேரங்களில், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலமே ரத்ததானம் செய்யப்படுகிறது. எனவே ரத்தானம் ஒவ்வொருவரும் தானாக முன்வந்து செய்தால் மட்டுமே, இந்தியாவில் தேவைப்படும் ரத்தத்தை பெற முடியும்.


தேசிய ரத்த தான தினம்  அக்டோபர் 1

சாதாரண எடையுள்ள ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் ரத்தம் உள்ளது. எனினும் 300 முதல் 350 மில்லிலிட்டர் (ஒரு யுனிட்) ரத்தம் மட்டுமே தானத்தின் போது பெறப்படும். அவ்வாறு கொடுத்த ரத்தத்தின் அளவு ரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும். 3 மாதங்களுக்கு ஒரு முறை எந்தவித பாதிப்பும் இன்றி ரத்த தானம் செய்யலாம். ரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும். பொதுவாக 17 – 60 வயதுக்கு இடைப்பட்டவர்களால் ரத்த தானம் செய்ய முடியும்.
ரத்தம் வழங்குவதால் மற்றவர் பயன்பெற்றாலும், தானம் செய்பவர்களுக்கும் பலன் அளிக்கிறது. புதிதாக ரத்தத்தை உருவாக்கும் முயற்சியாகவும் இதை கருதலாம். இதனால் தானம் செய்த ரத்தத்தை இழந்ததாக கருத வேண்டியதில்லை. ரத்தத்தில் இரும்புச்சத்தை சரியான அளவில் வைத்துக் கொள்ள தானம் உதவுகிறது. ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள கொழுப்பும், தானம் செய்யும் போது சீரடைகிறது. ஒரு யூனிட் ரத்தத்தை மூன்று பகுதியாக பிரித்து, ரத்த சிவப்பணுக்கள், பிளாஸ்மா, பிளேட்ளெட் என பயன்படுத்த முடியும். இதனால் மூன்று பேர் உயிரை ஒருவரால் காப்பாற்ற முடிகிறது. தினமும் நூற்றுக்கணக்கான பேருக்கு எதாவது ஒரு விதத்தில் ரத்தம் தேவைப்படுகிறது. பெரும்பாலான நேரங்களில், உறவினர்கள், நண்பர்கள் மூலமே ரத்த தானம் செய்யப்படுகிறது. ஒவ்வொருவரும் தானாக முன்வந்து ரத்ததானம் செய்தால் மட்டுமே, தேவையான ரத்தத்தை பெற முடியும்.
ரத்த தானம் அளிப்பதால் நமது உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சொல்லப்போனால் நமது உடலில் புதிய ரத்தம் உற்பத்தியாகும். அது உடலுக்கு நன்மையாகத்தான் அமையும். தானமாக அளித்த ரத்த அளவை, நமது உடல் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் மீண்டும் உற்பத்தி செய்துவிடும். ரத்த தானத்தின் போது நாம் இழக்கும் சிவப்பணுக்களின் எண்ணிக்கை 56 நாட்களிலேயே சீராகிவிடும். ரத்த தானம் அளிப்பதற்கு எந்தவிதமான உணவுக் கட்டுப்பாடோ, மருந்தோ தேவையில்லை.
யார் ரத்த தானம் செய்யலாம்?
18 வயது முதல் 6௦ வயதுடையவர்கள்.
எடை 45 கிலோவுக்கு மேல்.
ஹீமோகுளோபின் அளவு 12.5 கி/டி.எல் மேல் உள்ளவர்கள்.
ரத்த அழுத்தம் இதயம் விரிவடையும்போது (Diastolic) 100/60 முதல் இதயம் சுருங்கும் போது (Systolic) 150/100 வரை உள்ளவர்கள்.
தொடர்ந்து தானம் செய்யும் கொடையாளர்கள் 3 மாத இடைவெளியில் தானம் செய்யலாம்.
யார் ரத்ததானம் செய்யக்கூடாது?
ஒரு வார காலத்துக்குள் சளி, காய்ச்சல் இருப்பவர்கள்.
ஆறு மாதங்களுக்குள் பெரிய அளவில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள். மற்றும் மூன்று மாதங்களுக்குள் சிறிய அளவில் அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள்.
மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், காய்ச்சல் குணமான மூன்று மாதம் வரையிலும் ரத்த தானம் செய்ய வேண்டாம்.
மஞ்சள்காமாலை சிகிச்சை முடிந்து ஒரு வருடத்துக்கு முன்னதாக செய்யக் கூடாது.
மது அருந்தியவர்கள்.
சமீபத்தில் தடுப்பு ஊசி போட்டுக்கொண்டவர்கள்.
பால்வினை நோய், ஹெச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளோர்.
மாதவிடாய்க் காலங்களிலும், கருவுற்றிருக்கும் போதும், தாய்ப்பாலூட்டும்போதும் பெண்கள் ரத்ததானம் செய்யக் கூடாது.
சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் உள்ளவர்கள், கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பகுதியில் ஏற்பட்ட பிரச்னைக்காக மருந்துகள் எடுத்துக்கொள்பவர்கள், ரத்த உறைதல் குறைபாடு உள்ளவர்கள் ரத்த தானம் செய்யக் கூடாது.
ரத்ததானம் கொடுத்தவர்களின் கருத்துகள்!
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் கே.என்.ஜெயராமன் ரத்ததானம் செய்த தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துக்கொள்கிறார். 31 வது வயதில் எனக்கு தெரிந்த மருத்துவர் ஒருவர் இதய அறுவைசிகிச்சைகாக அவசரமாக 6 யூனிட் ரத்தம் தேவை என்றார். என்னிடமிருந்து 1 யூனிட் ரத்தம் பெற்றுக்கொண்டார்.அப்போதுதான் என்னுடைய ரத்ததான பயணம் தொடங்கியது. அன்றுமுதல் 3 மாதத்திற்கு ஒருமுறை நான் ரத்தம் கொடுக்க ஆரம்பித்தேன். ஒருவர் சாதாரணமாக 18 வயதிலிருந்து 6௦ வயது வரை தான் ரத்ததானம் கொடுக்க முடியும். ஆனால் நான் என்னுடைய 65 வயது வரை 35 வருடமாக ரத்த தானம் செய்தேன்.
ரத்த தானம் செய்வதால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். பழைய ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு புதிய ரத்தம் உருவாகும். எனவே நான் ரோட்டரி சங்கத்தில் இணைத்து பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளேன். என்னுடைய ரத்தினால் பல்வேறு மனிதர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. என் வாழ்வில் இதுவரை 102 முறை ரத்த தானம் செய்துள்ளேன்.
ரத்ததானம் செய்பவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.அவர்கள் ரத்ததானம் செய்வதற்கு முன் அவர்கள் மது, போதைப்பொருட்களை பயன்படுத்தியிருக்க கூடாது. அனைவரும் ரத்ததானம் செய்தால், அடுத்தவர்களுக்கு மட்டுமின்றி நமக்கும் பலனே.
அச்சு ஊடகத்துறையில் பல்வேறு ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த இ.சி.பிர்லா அவர்கள் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துக்கொள்கிறார்.
நான் என்னுடைய 19 வயதில் ரத்ததானம் செய்யத் தொடங்கினேன். இதுவரை 52 முறை ரத்ததானம் செய்துள்ளேன். ரத்த தானம் செய்வதால் நமது உடல் பாதிப்படையும், நாம் சோர்வாகி விடுவோம் என்று தான் நம்மில் பெரும்பாலானவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது தவறு. அதனால் நமக்கு உள, உடல் ரீதியான நன்மைகளே ஏற்படுகின்றன.
மருத்துவ முறைப்படி 3 மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே ரத்ததானம் செய்ய வேண்டும். ஆனால் நான் ஒருமுறை அவசரத்தேவை காரணமாக ஒரே மாதத்தில் 3 முறை ரத்ததானம் செய்துள்ளேன். அதற்கான சான்றிதழ்களும் என்னிடம் உள்ளன. உலகத்திலேயே ஒரே மாதத்தில் 3 முறை ரத்ததானம் செய்தது நானாகத்தான் இருக்கும். இதனால் எனக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. உடல் ஆரோக்கியமாகவும்,புத்துணர்ச்சியுடனும் காணப்படுகிறது.
ரத்ததானத்திற்கு மட்டுமன்றி நமது உணவில் அடிக்கடி பீட்ருட்,நெல்லிக்காய் போன்றவற்றை உணவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் நம்முடைய ரத்தம் அதிகரிக்கும். ஆரோக்கியமாகவும் இருக்கும்.
கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்று பொருளாதாரத்துறையில் பணிப்புரியும் செந்தில்குமரன் என்பவருடைய அனுபவம். நான் கல்லூரியில் படிக்கும் போது என்னுடைய நண்பனின் அக்காவிற்கு பிரசவத்திற்காக முதல்முறையாக ரத்த தானம் செய்தேன். முதல்முறை ரத்தம் கொடுப்பதால் கொஞ்சம் பதட்டம் இருந்தது. பயத்துடனே ரத்ததானம் செய்தேன்.ரத்ததானத்திற்கு பின், ஒரு புதிய மாற்றத்தைக் கண்டேன். என்னுடைய ரத்தத்தினால் இரண்டு உயிர்களை காப்பாற்றிய மகிழ்ச்சி எனக்குள் ஏற்பட்டது. ரத்ததானம் செய்து உயிர்களைக் காப்போம்.
ரத்ததானம் செய்வது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஜூன் 14ம் தேதி, உலக ரத்ததானம் செய்வோர் தினமாகவும், அக்டோபர் 1ம் தேதி தேசிய ரத்த தான தினமாகவும் கடைபிடிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக