பக்கங்கள்

ஞாயிறு, 15 அக்டோபர், 2017

உலக உணவு நாள் ( World Food Day ) அக்டோபர் 16 .



உலக உணவு நாள் ( World Food Day )  அக்டோபர் 16 .

உலக உணவு நாள் ( World Food Day ) ஆண்டு தோறும் அக்டோபர் 16 ஆம் நாளன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது. 1945 ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூர ஐநா இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது. நவம்பர் 1979 ஆம் ஆண்டில் இவ்வமைப்பின் 20வது பொது மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் பால் ரொமானி என்பவரின் முன்முயற்சியினால் இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டு தற்போது 150ற்கும் அதிகமான நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.
2008 ஆம் ஆண்டிற்கான உலக உணவு நாளின் கருப்பொருள் "உலக உணவுப் பாதுகாப்பு: காலநிலை மாற்றம் மற்றும் உயிரியல் ஆற்றலுக்கான சவால்கள்" என்பதாகும்.



உணவு பாதுகாப்பில் இந்தியா: சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் தரும் அதிர்ச்சி!
   
“தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதி. இன்றும் ஒருவேளை உணவுக்கு வழியின்றி வறுமையில் வாடும் ஏழைகள் அதிகம். உயிர் வாழ உணவு அவசியம். அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. இது மனித உரிமையும் கூட. பசியால் யாரும் வாடக்கூடாது, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆண்டுதோறும் அக்.16-ம் தேதி, உலக உணவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

தொடக்கம்

1945 அக்டோபர் 16 -ம் நாளன்று ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்த நாளை நினைவு கூறும் வகையில்தான் நவம்பர் 1979 - ம் ஆண்டில்  நடந்த 20-வது பொது மாநாட்டில் ஐ.நா,  உலக உணவு தினத்தை அறிவித்தது.  ஹங்கேரியின் முன்னாள் அமைச்சர் பால் ரொமானி என்பவரின் முயற்சியினால் தற்போது 192- க்கும் அதிகமான நாடுகளில் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.



இந்தியாவில் உணவு நிலை

உணவுப் பாதுகாப்பில் இந்தியா பின்தங்கிய நிலையில் உள்ளது. சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட புள்ளி விவரப்படி, உலக அளவில் பட்டினியால் பாதிக்கப்பட்டோர் தரப்பட்டியலில் இந்தியா அச்சுறுத்தலான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஊட்டச்சத்து குறைபாட்டினால் மகாராஷ்டிரா மாநிலத்தின் 3 மாவட்டங்களில் கடந்த 11 மாதங்களில் 1,274 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். நந்தர்பர் மாவட்டத்தில் 662, பால்காரில் 418, தானேயில் 194 குழந்தைகள் என அதிர்ச்சி அளிக்கிறது புள்ளிவிவரங்கள். தானே மாவட்டத்தின் பிவாண்டி பகுதியில் சராசரி எடைக்கும் கீழ் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 2013-ம் ஆண்டு 286-ஆக இருந்தது.

இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டினால் 19 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண் நிறுவனம் தெரிவித்துள்ளது.  உலக நாடுகளில் மற்ற எந்த நாட்டை காட்டிலும், இந்தியாவில் அதிகப்படியாக மக்கள் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக அளவில் பசியோடு இருக்கும் மக்களின் எண்ணிக்கையானது, 2014-15 ஆண்டில் 795 மில்லியனாக குறைந்து உள்ளது. கடந்த 1990-92-ம் ஆண்டுகளில் பட்டினியாக இருக்கும் மக்களின் எண்ணிக்கையானது ஒரு பில்லியன் ஆகும். உலகில் உணவுப் பாதுகாப்பின்மை நிலைகுறித்து (‘தி ஸ்டேட் ஆப் புட் இன்செக்யூரிட்டி இன் தி வேல்ட் 2015’ ) ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு அறிக்கை சமர்ப்பித்து உள்ளது. இந்தியாவில் பட்டினி குறைந்து உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

1990-92-ம் ஆண்டுகளில் பசியோடு இருந்த மக்களின் எண்ணிக்கை 210.1 மில்லியனாக இருந்தது. தற்போது 2014-15ல் 194.6 மில்லியனாக குறைந்து உள்ளது.

சர்வதேச விருது

உலகளவில் அதிக உணவு உற்பத்திக்கு காரணமானவர்களை பாராட்டும் விதத்திலும், ஊக்குவிக்கும் விதத்திலும் சர்வதேச உணவு விருது, 1986 முதல் வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு வென்ற, நார்மன் போர்லாக் என்ற அமெரிக்கரின் முயற்சியால் இவ்விருது உருவாக்கப்பட்டது. இவ்விருது பெறுபவருக்கு 13 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தியாவின் சார்பில் இதுவரை எம்.எஸ்.சுவாமிநாதன், வர்கீஸ் குரியன் உள்ளிட்ட ஆறு பேர் இவ்விருதை பெற்றுள்ளனர்.

விவசாயிகள் தங்கள் வறுமையினால் தற்கொலையை எதிர் கொண்டு வரும் சூழலில், இன்றும் நமக்கு கிடைத்த உணவை வீணடிக்கிறோம். அன்று முதல் இன்று வரை நம் மக்களில் பெரும்பாலானோர் விவசாயிகளையும் அவர்கள் படும் துயரத்தையும் எண்ணிப் பார்ப்பதில்லை. இனியாவது நமது நாட்டின் முதுகெலும்பாக இருக்கக்கூடிய விவசாயிகளை மதித்து, அவர்களால் கிடைக்கக்கூடிய உணவை வீணாக்காமல் அவர்களுக்கு நன்றி செலுத்துவோம்.


சர்வதேச உணவு தினம்

உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் அக்டோபர் 16ம் தேதி சர்வதேச உணவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த உணவு தினத்தை முன்னிட்டு அன்றாட வாழ்க்கையில் அத்தியாவசியமான உணவின் முக்கியத்துவம் மற்றும் சர்வதேச அளவில் வறுமையை ஒழிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்படுகின்றன. பசி, பட்டினி ஒழிந்து அனைத்து மக்களுக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற குறிக்கோளுக்காக உலக உணவு தினம் கடைப்பிடிப்படுகிறது.

கடந்த 1945ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி முதல் அனுசரிக்கப்பட்டு வரும் இந்த உலக உணவு தினம், ஐ.நா.வின் உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. ஐ.நா. பொது கூட்டத்தில் சிறப்பு தினமாக அறிவிக்கபப்ட்ட இத்தினத்தை ஆண்டுதோறும் பல்வேறு நாடுகள் கொண்டாடி வருகின்றது.


இந்நிலையில் இந்தியாவில் உணவு உற்பத்தி அதிகரித்து வந்தாலும் அதன் பாதுகாப்பில் பின் தங்கி உள்ளதாக ஐ.நா அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஊட்டச்சது குறைப்பட்டால் சுமார் 20கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் அந்நிறுவனம் நடத்திய ஆய்வில் உலக அளவில் ஊட்டச்சத்து குறைப்பாட்டின் அளவு 21கோடியாக குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தியாவில் 15% மக்கள் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

உலகில் அதிக அளவு உணவு உற்பத்திக்கு காரணமானவர்களை பாராட்டி ஊக்குவிக்கும் வித்தத்தில் சர்வதேச உணவு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. இது அமேரிக்காவை சேர்ந்த நார்மன் போர்லாக் முயற்சியால் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது நம் நாட்டில் பட்டினியால் சாகும் உயிர்களை விட மந்தமான விவசாயத்தில் பாதிக்கப்பட்டு உயிர்விடும் விசாயிகளே அதிகம் என்பது வேதனைக்குரிய ஒன்றாக இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக