உலக குறைப்பிரசவ குழந்தை தினம் - நவம்பர் 17.
உலக முழுவதும் ஆண்டிற்கு 15 மில்லியன் குறைப்பிரசவக் குழந்தைகள் பிறக்கின்றன. அதாவது 10 இல் 1 குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்கிறது. ஒரு குழந்தை 37 வாரத்திற்கு குறைவாகப் பிறந்தால் அது குறைப்பிரசவம். குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு எதிர்ப்புச்சக்தி குறைவாக இருப்பதால் பல்வேறு நோய்கள் தொற்றிக்கொள்ளும். இது சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்த இத்தினம் கொண்டாடப்படுகிறது.
குறைப்பிரசவ குழந்தை பிறக்க இதுதான் காரணம் #WorldPrematurityDay!
உலகம் முழுவதும் 15 மில்லியன் குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறப்பதாகவும், மேலும் ஒரு மில்லியன் குழந்தைகள் குறைப்பிரசவத்தால் இறப்பதாகவும் ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. குறைமாத பிரசவம் என்பது முழுமையான கர்ப்ப காலத்திலிருந்து முன்கூட்டியே பிரசவிக்கும் பிரசவம் ஆகும். பொதுவாக பிரசவ காலம் என்பது 40 வாரங்கள். இதில் 40 வாரங்களுக்கு முன்னரே பிறக்கும் குழந்தைகள் குறைப்பிரசவக் குழந்தைகளாக கருதப்படுவர். 37 வாரங்களுக்கு முன்பு நடக்கும் பிரசவங்கள் குறைமாத பிரசவங்கள் ஆகும்.மேலும், 33 வாரங்களுக்கு உட்பட்டு பிறக்கும் குழந்தைளுக்கு எடை குறைவு காரணமாக உள் உறுப்புகள் முழுமையாக வளர்ச்சியடைந்து இருக்காது.
எனவே, இவர்களை தீவிரமாக கண்கானிக்க வேண்டியது அவசியம். சிசுவை சுற்றியுள்ள பனிக்குடம் வெடிப்பது, முந்தைய குறை பிரசவ நிகழ்வு, தாயின் சீரற்ற உணவு பழக்கம், உயர் ரத்த அழுத்தம், மன உளைச்சல், மரபணு குறைபாடுகள் போன்றவை இதற்கான காரணங்கள் ஆகும். மேலும், போலிக் அமிலம், வைட்டமின் பி மற்றும் சி குறைவு, ரத்தசோகை, தைராய்டு பிரச்னை, கர்ப்ப கால உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரகப்பாதை தொற்று உள்ளிட்ட பிரச்னைகள் குறைப்பிரசவத்திற்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இந்த நேரத்தில் குழந்தையின் வளர்ச்சிக்கு தாயின் பங்களிப்பு மிகப்பெரும் காரணியாகும். தாய் எடுத்துக் கொள்ளும் உணவில் இருந்து, உறக்கம் வரை சீராக இருக்க வேண்டியது அவசியம். இந்த நேரத்தில் தாயின் உடல் எடை 40 கிலோவிற்கு குறையாமல் இருப்பது நல்லது.
தலைப் பிரசவமே குறைப்பிரசவமாக இருந்தால் அடுத்ததாக பிறக்கும் குழந்தையும் குறைப்பிரசவமாக அமைய வாய்ப்பு உள்ளது. தாய்மை அடைந்த பெண் உண்ணும் உணவில், இரும்புச்சத்து, வைட்டமின் சி, கால்சியம் போன்ற சத்துக்கள் இருக்குமாறும், கர்ப்பகால சர்க்கரை தாக்காதவாறும், ஹார்மோன் சமநிலையற்ற தன்மை உருவாகாதவாறும் பார்த்துக் கொண்டாலே போதுமானது. மேலும், குறைப்பிரசவத்திற்கு ஹார்மோன் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது.
ஹார்மோனின் சமநிலையில் மாறுபாடு ஏற்படும்பொழுது குறைப்பிரசவம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் தவறாமல் தானியங்கள், முளைகட்டிய பயிறு வகைகள், உலர் பழங்கள், கேரட், பீட்ருட், கீரை, பால் சார்ந்த உணவுகள், மீன் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வதன் வாயிலாக பால் சுரப்பு நார்மலா இருக்கும். குறைப்பிரசவக் குழந்தையை பெற்றெடுக்கும் தாய்க்கு சில நேரங்களில் பால் சுரப்பு குறைவாகவே இருக்கும்.
மேற்கண்டவைகளை உணவில் சேர்த்துவர பால் சுரப்பு நார்மலாக இருக்கும். குறைப்பிரசவக் குழந்தைகளுக்கு பெரும்பாலும் மூச்சுத் திணறல், இரத்த ஓட்டப் பாதிப்பு, மஞ்சள் காமாலை, தொற்றுநோய்களும் ஏற்பட அதிக அளவு வாய்ப்புள்ளது. இவை அனைத்தையும் எடுத்துக் கொண்டாலும், சந்தோஷமான மனநிலை, நிம்மதியான தூக்கம், மனக்கவலை இன்றி இருத்தல் போன்றவற்றால் குழந்தைப் பிறப்பு எளிதாகும் எந்த பிரச்னைகளும் இல்லாமல். நன்றி விகடன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக