பக்கங்கள்

வியாழன், 14 டிசம்பர், 2017

உலக தேயிலை தினம் டிசம்பர் 15 ( International Tea Day )



உலக தேயிலை தினம் டிசம்பர் 15 ( International Tea Day )

பன்னாட்டுத் தேயிலை நாள் ( International Tea Day ) 2005 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் டிசம்பர் 15 ஆம் நாள் தேயிலை உற்பத்தி செய்யப்படும் வங்காளதேசம்,இலங்கை , நேபாளம் , வியட்நாம்,இந்தோனேசியா , கென்யா , மலாவி ,மலேசியா, உகாண்டா , இந்தியா , மற்றும் தன்சானியா உட்படப் பல நாடுகளில் நினைவு கூரப்பட்டு வருகிறது.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், தேயிலை உற்பத்தி செய்வோர், மற்றும் தேயிலையைப் பயன்படுத்துபவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரசாங்கக்களுக்கும், குடிமக்களுக்கும் கொண்டு செல்வதே இந்நாளின் முக்கிய நோக்கம் ஆகும். முதலாவது பன்னாட்டுத் தேயிலை நாள் 2005 டிசம்பர் 15 இல் புது தில்லி நடைபெற்றது. இரண்டாவது பன்னாட்டு நாள் 2006 இடிசம்பர் 15 இல் இலங்கையில் கண்டி நகரில் நடைபெற்றது.  பன்னாட்டுத் தேயிலை நாள் கொண்டாட்டங்கள் ஊடாக நடைபெறும் பன்னாட்டு மாநாடுகள் தேயிலைத் தொழிற்சங்க இயக்கங்கள் முன்னெடுக்கின்றன.


பின்னணி

2001 ஆம் ஆண்டில் உலக நாடுகளின் அரசு சார்பற்ற அமைப்புகள், மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து உலக சமூக மாமன்ற மாநாட்டை பிரேசிலில் நடத்தின. இதன் விளைவாக 2003 இல் உலக சமூக மாமன்றத்தின் ஆசிய மாநாடு இந்தியாவில் ஐதராபாது நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் இலங்கை, இந்தியத் தேயிலைத் தோட்டத் தொழிற்சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதன் போது, 2004 ஆம் ஆண்டு
மும்பை மாநாட்டில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக தனியான மாநாடு ஒன்று நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. 2004 மும்பை மாநாட்டில் பன்னாட்டுத் தேயிலைத் தொழிலாளர்களின் பிரச்சினை ஏனைய தொழிற்துறை சார்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளில் இருந்து வேறுபட்டது என அடையாளம் காணப்பட்டது. இவர்களது பிரச்சினைகளை வெளிப்படுத்த தனித்துவமான தினத்தின் அவசியம் குறித்து உடன்பாடு எட்டப்பட்டது.
பிரித்தானியாவின் முதலாவது இந்திய
அசாம் தேயிலைத் தோட்டத்தில் சீன ஒப்பந்தத் தொழிலாளர்கள் 1838 டிசம்பர் 15 இல் மேற்கொண்ட முதலாவது சம்பளப் போராட்டத்தின் நினைவாக ஆண்டு தோறும் டிசம்பர் 15 இல் இந்நாளைக் கொண்டாடுவதென 2005 ஆம் ஆண்டில் பிரேசிலில் நடந்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.


உலக தேயிலை தினம்.டிசம்பர்-15.

தேயிலை (Tea, Camellia sinensis) ஒரு பசுமைத் தாவரம். இது ஒரு வாணிகப் பயிராகும் இந்தத் தாவரத்தின் கிளைகளின் நுனியிலுள்ள இலையரும்பையும், அதற்கு அடுத்ததாக இருக்கும் இரு இளம் இலைகளையும் கொய்து அதனை உலர வைத்து, நொதிக்கச் செய்து, பொடியாக்கி, பின்னர் படிப்படியாக பக்குவப்படுத்தி தேநீர் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலைத்திணை தொடக்கத்தில் கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு ஆசியாவில் காணப்பட்டது. வெள்ளைத் தேயிலை, பச்சைத் தேயிலை, ஊலோங் தேயிலை, கறுப்புத் தேயிலை போன்ற வெவ்வேறு வகையான தேயிலைகள் இவ்வின நிலைத்திணையிலிருந்து பெறப்பட்டாலும், பக்குவப்படுத்தல் முறையில் வேறுபடுகின்றன. குக்கிச்சாவில் இவ்வின நிலைத்திணையின் இலைகளுக்குப் பதிலாக கொப்பு, தண்டு என்பவற்றைப் பக்குவப்படுத்திச் செய்யப்படுகிறது.
இந்நிலைத்திணையின் இருசொற்பெயர் (Camellia sinensis )என்பதாகும், இங்கு sinensis என்பது இலத்தீன் மொழியில் சீனாவைச் சேர்ந்த என்ற பொருள்படும். Camellia என்பது அருட்திரு. செரொக் காமெல் (1661-1706) என்ற இயேசு சபை பாதிரியாருடைய பெயரின் இலத்தீனாக்கப்பட்ட வடிவமாகும். அருட்திரு. செரொக் காமெல் தேயிலைச் செடியைக் கண்டுப்பிடிக்கவோ அல்லது பெயரிடவோ இல்லை எனினும் திணைவகையீட்டை உருவாக்கிய கரோலஸ் லின்னேயஸ் அறியப்பட்ட தாவரவியலாளரான அருட்திரு. செரொக் காமெல் அடிகள் அறிவியல் துறைக்காற்றிய சேவையை பாராட்டும் வகையில் இப்பேரினத்துக்கு இப்பெயரை இட்டார்.




சர்வதேச தேயிலை தினம்!! ஒரு பார்வை...

தேநீர் நம் அன்றாட வாழ்க்கையில் ஒன்றாகிப்போன ஒன்று. தேயிலை…என்று சொல்லும்போதே தேநீரின் சுவை நாவில் ஊறுகிறது. இதை உபயோகிப்போர் அதிகம். தெரியாதவர்கள் மிகவும் சிலர்.
தேயிலை சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் சீனர்கள் தற்செயலாக கண்டுபிடித்தார்கள் என்று சொல்லப்படுகிறது. சீன பேரரசர் ஷேன் நாங் அவருககாக குடிநீர் கொதிக்க வைக்கும் போது, அருகில் உள்ள ஒரு புதரில் இருந்து காய்ந்த இலைகள் கொதிநீரில் விழுந்தது, தண்ணீர் குறைந்த போது கலர் மாற்றம் ஏற்பட்டது. அதை சுவைத்துப் பார்ததில் அதுசுவைக இருந்திருக்கிறது பருகியபின் சுறுசுறுப்பு எற்பட்டதின் விளைவாக தேயிலை சீனர்களால் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
தேயிலைச் செடிகள் வெப்பமான காலநிலை மற்றும் சூரிய ஒளி குறைந்தபட்சம் 5-6 மணி நேரம் ஒவ்வொரு நாளும் வேண்டும். பெரும்பாலும் வெப்பமண்டல அல்லது துணை வெப்பமண்டல காலநிலையில் வளர்க்கப்படுகின்றன.
தேயிலை உற்பத்தியில் முன்னணி உள்ள முக்கிய நாடுகள், சீனா, ஜப்பான், வியட்நாம், இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா, மற்றும் தென் ஆப்பிரிக்கா.
சீனா இவர்களது, கேமில்லியா சைனஸிஸ், தேயிலை செடி, இப்போது உலகம் முழுவதும் பயிரிடப்படுகிறது. இன்று, இந்தியா, ஜப்பான் இலங்கை, தைவான், ஆப்பிரிக்கா, மற்றும் இந்தோனேஷியா உள்ள தேயிலை தோட்டங்கள், உலகின் தேயிலை தேவையை பூர்த்திசெய்கிறது.
வெவ்வேறு தேயிலைகள் அனைத்தும் பல்வேறு வகைகள் இருக்கின்றன, வெள்ளை, பச்சை, ஊலோங், சிவப்பு, கருப்பு போன்ற அவைகள். கேமில்லியா சைனஸிஸ், பொதுவான தேயிலை. தேயிலை வளர்க்க மண்வளம் முக்கியம் தண்ணீர் தேங்காத மலை பகுதியாக இருக்கவேண்டும்.
தேயிலை செடிகளின் உயரம்1.5 மீட்டர் வரை வளரவிடலாம் அதற்குமேல் விட்டால் கொழுந்து பறிக்கமுடியாது. தேயிலை செடியினை வளர விட்டுவிட்டால், 30 அடி உயரம் மேல் வளர்ந்து விடும். தேயிலை செடி உண்மையில் செடி அல்ல அது மரம் அதை வெட்டி வளர்காமல் விட்டால் மரமாகிவிடும். இந்தத் தாவரத்தின் கிளைகளின் நுனியிலுள்ள இலையரும்பையும், அதற்கு அடுத்ததாக இருக்கும் இரு இளம் இலைகளையும் கொய்து அதனை உலர வைத்து, நொதிக்கச் செய்து, பொடியாக்கி, பின்னர் படிப்படியாக பக்குவப்படுத்தி தேனீர் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
நமது நாட்டில் அஸாம், கர்நாடகா, தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. இவ்வளவு சுவை மிக்க தேநீர் நாம் சுவைக்கும் போது, அதில் வேலை செய்யும் தோட்டத் தொழிலாளர்களின் நிலமை படுமோசமாக இருக்கும்.

இயற்கை நேசியுங்கள் இயற்கையோடு ஒத்து வாழுங்கள். இயற்கை அழகு, புத்துணர்ச்சி, உற்சாகம் இவையனைத்தையும் தரும் ...
தேயிலை…என்று சொல்லும்போதே தேநீரின் சுவை நாவில் ஊறுகிறது. அந்த இனிய தேயிலையின் தினம் இன்று சர்வதேச ரீதியில் நினைவுகூரப்படுவதும் ஒரு இனிப்பான செய்திதானே?
தேயிலை கண்டுபிடிக்கப்பட்டு பல நூற்றாண்டு காலமானாலும் அதற்கென ஒரு தினம் ஒதுக்கப்பட்டிருப்பதென்னவோ இந்த 20ஆம் நூற்றாண்டில் தான் என்ற கசப்பான உண்மையையும் நாம் ஏற்றுக் கொள்ளவே வேண்டும். 2008 ஆம் ஆண்டு புதுடில்லியில் முதற்தடவையாக ஷசர்வதேச தேயிலை தினம்| ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளே டிசம்பர் 15 ஆம் திகதியை சர்வதேச தேயிலைத் தினமாகக் கொண்டாட திர்மானித்தன. தேயிலை தினம் தொடர்பான பல நிகழ்வுகள் இன்று நம் நாட்டின் மத்தியில் குறிப்பாக நாவலப்பிட்டியில் நடைபெறுகின்றன.
பிரிட்டி~hரின் ஆட்சிக் காலத்திலேயே தேயிலை இலங்கையில் அறிமுகமானது என வரலாறு கூறுகின்றது. தேயிலைச் செய்கைக்காக இந்தியாவிலிருந்து தொழிலாளர்கள் இலங்கை அழைத்து வரப்பட்டனர் என்பதும் கூட ஒரு பெரிய வரலாறுதான்.
ஆரம்ப காலத்தில் கொக்கோவும் கோப்பியுமே இலங்கையின் அதிகூடிய உற்பத்திப் பொருட்களாக காணப்பட்டன. இவற்றின் மூலம் ஏராளமான பண வருவாய் பெறப்பட்டிருந்தாலும் போதிய அக்கறை செலுத்தப்படாமையால் அவற்றின் உற்பத்தி வீழ்ச்சியடைந்தது.
அதன் பின்னரே பிரிட்டிசாருக்குத் தேயிலை மீது நாட்டம் எழுந்தது. அதனைத் தொடர்ந்து படிப்படியாக தேயிலை உற்பத்தி இலங்கையில் புகழ் பெற ஆரம்பித்தது. இன்று சர்வதேச தரத்தில் ஒரு முதன்மை இடத்தை இலங்கை பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கதொன்றே.
தேயிலையில் பல ரகங்கள் உள. அந்தந்த ரகங்களைப் பொருத்து தேநீருக்குப் பெயரிடப்படுவதுமுண்டு. ப்ளெக் டீ ,க்ரீன் டீ என்பன அவற்றில் சில. இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மசாலா டீ என்று ஒரு வகையும் உள்ளது. இது மருத்துவ குணம் கொண்டது எனக் கூறப்படுகின்றது.
வெளிநாடுகளில் தேயிலைக்கு என்று தனியான கலாசாரம் ஒன்று உள்ளது. நம் நாட்டில் அவ்வாறு இல்லையென்றாலும் தேயிலையை விரும்பி அருந்துபவர்கள் ஏராளமாகவே உள்ளனர்.
இலங்கையில் தேயிலையின் பிறப்பிடம் மலையகம் தான். உயர்ந்த பனி மலைப் பிரதேசங்களிலேயே தேயிலை செழித்து வளரக் கூடியதாக உள்ளமையே இதற்குக் காரணம். இலங்கையின் மத்தியப் பிரதேசங்களில் இன்று தேயிலையே பேராட்சி புரிந்து வருகிறதென்றால் கூட அது மிகையல்ல.
பச்சை மெத்தை விரித்தாற் போல் மலையகமெங்கும் தேயிலை மலைகள் கண்களுக்கு விருந்தளிப்பவை. நாள் முழுவதும், காலம் முழுவதும் அதன் அழகை ரசித்துக் கொண்டே இருக்கலாம்.
இவ்வருட தேயிலை தினத்தின் தொனிப் பொருள் ஷபெண்கள் தலைமைத்துவத்தை உருவாக்குவோம்| என்பதே. உண்மைதான் தேயிலைத் தளிர்களைப் பக்குவமாகக் கொய்து தருபவர்கள் பெண்கள்  அல்லவா? இவர்கள் கௌரவிக்கப்பட வேண்டியதும் காலத்தின் தேவைதான்.


தேனீர் (டீ): பலே வகைகளும், தயாரிக்கும் முறைகளும்! – தேனீரில் (டீயில்) இவ்வளவு வகைகளா?

சிறுவர் முதல் முதியோர் வரை அனைவருக்கும் சுறுசுறுப்பும், புத்து ணர்வும், உற்சாகமும் அளிக்கவல்ல ஒரு சுவையான
பானம் தேநீர். சுவையான தேநீர் தயாரிப்பதும் ஒரு கலை தான்.
சில வித்தியாசமான சுவையான தேநீர் தயாரிக்கும் முறைகளை பார்ப்போம்.

சாதாரண டீ

1/2 லிட்டர்பாலுக்கு , 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து, நன்றாக கொதிக்க
வைக்கவேண்டும். அடுப்பில் கொதித்துக் கொ ண்டிருக்கும் போதே அதில், டீத்தூள், சர்க்கரை சேர்த்து, அடுப்பில் வைத்து இன்னும் ஒரு 10 நிமிடம் கொதிக்க விடவும். பொங்கி வரும்போ தெல்லாம் கலக்கி, கலக்கி, திரும்ப வைக்க வேண்டும். பொங்கி வழிந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவும். சிறிதுநேரம் கழித்து அதை அப்படியே எடுத்து வடி கட்டுங்கள்.

டீ டிக்காஷன்

1/2 லிட்டர் பச்சை தண்ணீரில் 2 டேபிள்ஸ்பூன் டீ தூளை கலந்து 12 மணி நேரம் ஊற வைக்கவும். அதன் பின்பு வடிகட்டினால் டீ டிக்காஷன் ரெடி.

ஐஸ் மின்ட் டீ

ஒரு தம்ளரில் உடைத்து வைத்துள்ள ஐஸ் கட்டி யில் டீ டிக்காசனை ஊற்றவும். அதில் எலுமிச்சை மற்றும் ஆரஞ்ச்துண்டுகளை போடவும். சிறிது புதினா இலை களை தண்ணீர் கலந்து மிக்ஸ்யில் அடித்து அதில் போடவும், பின்னர் பரிமாறினால் சுவையாக அருந்த லாம்.

கிரீன் டீ

ஒருடம்ளர் தண்ணீரை கொதிக்கவைத்து, அதே கொதிநிலையி
லே யே இறக்கிவிட்டு பின், ஒரு தேக்கரண்டி அளவு கிரீன் டீ போட்டு நன்றாக மூடி வைக்கவும். 2 நிமிடம் கழித்து பார்த்தால், குருணை போல் நாம் போட்ட கிரீன் டீ இலை இலையாக இருக்கும். வடிகட்டி ஓரிருசொட்டுகள் எலுமிச்சை சாறு கல ந்து சர்க்கரைசேர்க்காமல் அப்படியேகுடிக்கலாம். சர்க்கரை சேர்க் காமல் குடிப்பது ரொம்ப நல்லது. குடிக்க கஷ்டமாக
இருந்தால், தேன் கலந்தோ, சிறிதளவு சர்க்கரை சேர்த்தோ குடிக்கலாம். ரொம்ப துவர்ப்பதுபோல் இருந்தா ல், தூளைக்கொஞ்சம் குறைத்துக்கொள்ளலாம் .

ஆப்பிள் அபரிடிஃப் டீ

ஒரு தம்ளரில் டீ டிகாஷன் மற்றும் ஆப்பிள் ஜூஸ் இரண்டும் சம அளவில் ஊற்றவும். அதி ல் சிறிது ஐஸ் கட்டிகளை உடைத்து போடவும். அதில் ஒரு டீஸ்பூன் சீனி மாற்று மேலுமிச்சை பழ சாறுகளை ஊற்றவும். நன்றாக கலந்த பின் பரிமாறினால் நன்றாக இருக்கும்.

மசாலா டீ:

ஏலக்காய் 6, கிராம்பு-6, சோம்பு 1 டீஸ்பூன், தனியா 1/2 ஸ்பூன் ஜாதிக்காய் சிறு துண்டு சுக்கு சிறு துண்டு, பட்டை சிறிது இவற்றை நைஸாக பொடிசெய்யவும். தேநீருக்கு தண்ணீர்கொதித்து ம் இந்த பொடியையும் தேயிலையுடன் சேர்த்துப் போட்டு கொதித்ததும் சீனி, பால், சேர்த்து வடிகட்டி அருந்தவும். இது குளிர்காலத்திற்கு சூடு கொடுக் கும் அருமையான தேநீர்.

ரோஸ் டீ:

தேநீர் கொதிக்கும் போது புத்தம் புது ரோஜா இதழ்கள் சிலவற்றை போட்டு தேநீர் தயாரிக்க வும். ரோஜா பூ இதழ்களை ஒரு டப்பாவில் போ ட்டு வைத்தும் தேவையான போது உபயோகிக் கலாம்.

கோகோ டீ:

குழந்தைகள் சாக்லேட் மணம் கொண்ட கோ கோ டீயை மிக விரும்புவர். டீ தயாரிக்கும் போ து தேவையான கோகோ பவுடர் சேர்த்து கொ திக்க விட்டு பரிமாறவும்.

இஞ்சி டீ:

அஜீரணம் வயிற்று கோளாறுகளை நீக்க வல் லது இஞ்சி டீ. இஞ்சியை தோலை சீவி விட்டு நன்கு நசுக்கி டீ கொதிக்கும் போது சேர்த்து தேநீர் தயாரிக்கவும்.

ஏலக்காய் டீ:

ஏலக்காய்களை தோலுடன் பொடி செய்து தே நீரில் சேர்த்து கொதிக்க விடவும். இனிப்புகள் செய்ய ஏலப்பொடி செய்யும்போது ஏலக்காய் தோலை எரியாமல் சேகரித்து வைத்த உப யோகப்படுத்தலாம்.

எலுமிச்சை டீ:

நீரை கொதிக்கவிட்டு தேயிலைப்போட்டு நன்கு கொதித்ததும் இறக்கி வடிகட்டவும். ஆறியதும் அதில்தேவையான எலுமிச்சைசாறு பிழியவும். தேவையான சர்க்கரை சேர்த்து சில ஐஸ் கட்டி களைப் போட்டு பால் இல்லாமல் குடிக்கவும்.

புதினா டீ:

சில புதினா இலைகள், துளசி இலைகள், இவ ற்றுடன் சிறுதுண்டு இஞ்சியை நசுக்கி போட்டு 4,5 மிளகைப்பொடி செய்துபோட்டு நீரில் கொதி த்ததும் தேயிலை, சீனி, பால், கலந்து வடிகட்டி அருந்தவும். இதுஜலதோஷம் இருமல் இவற்றிற் கு உடனடிநிவாரணம் அளிக்கும்.

சிறு குறிப்பு
தேநீர் நம் இதயத்திற்கும் நுரையீரலுக்கும் பலமளிக்கும் டானிக். நரம்பு, தசை, மண் டலங்களை சுறுசுறுப்பாக்கி புத்துணர்வு தருகிறது. காபி அருந்துவதைவிட தேநீர் அருந்துவது நல்லதே! அளவோடு அருந்த வேண்டும். அளவுக்குமீறினால் நரம்புக ளையும் வயிற்றையும் பாதிக்கும். மிக சூடாக அருந்தும் தேநீர் வயிற்றின் உட் சுவர்களை புண்ணாக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக