பக்கங்கள்

வியாழன், 11 ஜனவரி, 2018

தமிழர் தை பொங்கல் திருநாள்



தமிழர் தை பொங்கல் திருநாள்

பொங்கலோ பொங்கல்! பொங்குக மங்கலம்!!

உழவர் திருநாள், சூரியத் திருநாள், பொங்கல் என பல பெயர்களில் அழைக்கப்பட்டு வரும் பொங்கல் திருநாள், இந்தியாவின்பழமையான திருவிழாக்களில் முதன்மையானது.
தமிழர்களின் தனிப்பெரும் திருநாள்தான் பொங்கல் பெருநாள். எந்தப் பண்டிகைக்கும் இல்லாத பல சிறப்புகள் பொங்கல்பண்டிகைக்கு உண்டு. முதல் நாள் போகி, அடுத்த நாள் பொங்கல், மூன்றாவதாக மாட்டுப் பொங்கல் என மூன்று நாள்திருவிழாவாக பொங்கல் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகை எப்போது முதல் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதை உறுதியாக கூற முடியாத அளவுக்குஇதன் வரலாறு மிகப் பழமையானது, தொன்மையானது.
சங்க இலக்கியங்களில் பொங்கல் பண்டிகை குறித்து பல குறிப்புகள் உள்ளதால், இது சங்ககாலம் முதல் கொண்டாடப்பட்டுவருவதாக ஒரு சாரார் தெரிவிக்கின்றனர். பரிபாடல் எனப்படும் சங்க இலக்கியத்தில், பொங்கல் குறித்த பல பாடல்கள்,குறிப்புகள் உள்ளன.
வேத காலத்திற்கும் முன்பிருந்தே பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருவது, அத்திருநாளின் தொன்மையைவிளக்குவதோடு, தமிழர்களின் பண்பாடு எவ்வளவு ஆழமானது என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. தமிழர்களின் தனிப் பெரும்திருநாளான பொங்கல், மதச் சார்பற்ற ஒரு பண்டிகை, தமிழ் இனத்தின் திருநாள்.
பொங்கல் பண்டிகையின் இன்னொரு சிறப்பு, தமிழ் மாதங்களில் தலை மாதமான தை மாதத்தின் பிறப்பு. தைத் திங்களில்தொடங்கும் எதுவும் தழைத்தோங்கும் என்ற நம்பிக்கை தமிழர்களின் மனதில் காலம் காலமாக வேரூண்றி விட்ட ஒன்று. தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழியே அதற்கு நல்ல சான்று.
தை மாதப் பிறப்பில் அறிவியலும் ஒளிந்துள்ளது. சூரியனுடைய முழுச் சுழற்சியும் தென் கோடியில் முடிந்து, திரும்பவும் வடக்குநோக்கி நகரும் காலத்தை உத்தராயணம் என்பார்கள். அந்த உத்தராயணத்தின் தொடக்கம்தான் தை மாதம்.
போகி:
பொங்கல் பண்டிகையின் மூன்று நாள் விழாவையும் குறித்து விரிவாகப் பார்ப்போம் ...
முதலில் போகி ....
பொங்கலுக்கு முதல் நாள் கொண்டாடப்படுவது போகி. பழைய கழிதலும், புதியன புகுதலும் என்ற தத்துவத்தை விளக்கும்வகையில் போகி கொண்டாடப்படுகிறது. இதுநாள் வரை உபயோகித்து வந்த பழைய பொருட்களை தீயிட்டுக் கொளுத்தி புதியபொருட்களுக்கு வரவேற்பு அளிப்பது தமிழர்களின் போகி சம்பிரதாயம். இப்படித் தீயிட்டுக் கொளுத்துவதற்கு சொக்கப்பனைஎன்று பெயர்.
தை மாதப் பிறப்பை புத்துணர்வுடன், புதுப் பொருட்களுடன் வரவேற்கும் நிகழ்வாகவும் போகி கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில், பழைய பொருட்களுத்து தீயிட்டு, மேளமடித்து அதை சுற்றி வந்து, பழையன கழியட்டும், புதுவாழ்வு மலரட்டும்என்று இறைவனை வேண்டி வணங்குவர்.
போகிக்கு இன்னொரு கதையும் உண்டு. மழை தரும் வருண பகவானின் மறுபெயர் போகி என்பதாகும். நல்ல மழை தந்து,விவசாயத்தை செழிப்பாக்கி, உழவர் பெருமக்களின் மனதில் உவகை பொங்க உதவிய வருண பகவானை வணங்கும்விதமாகவும் போகிப் பண்டிகை கொண்டாடப்படுவதாக ஒரு வரலாறு உண்டு.
பொங்கல்:
அடுத்து பொங்கல் ..
தைத் திங்களின் முதல் நாள். தலைத் தமிழ் மாதத்தை வரவேற்கும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வீடுமுழுக்க சுத்தம் செய்து, புதுப் பானையில், அறுவடை செய்த புது நெல்லைப் போட்டு பொங்கல் வைப்பர் இந்த நாளில்.
புதுப்பானையில் இட்ட புத்தரிசி பொங்கி வருவதைப் பார்த்து பொங்கலோ பொங்கல், பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக என்றுபாடி, குலவையிட்டு மகிழ்ச்சி அடைவர் தமிழ் மக்கள்.
இப்படிப் பொங்க விடுவதால்தான் பொங்கல் என்ற பெயர் ஏற்பட்டதாம். நன்கு பொங்கி வழிந்தால் அந்த ஆண்டு முழுவதும்வீட்டிலும் சந்தோஷம் பொங்கி வழியும் என்ற நம்பிக்கை தமிழர்களிடம் உள்ளது.
பொங்கல் பண்டிகையின்போது வீட்டின் முன்பு வாசலில், அரிசி மாவால் கோலமிட்டு அலங்கரிப்பர். அரிசி மாவுக் கோலம்இடுவதற்கு முக்கியக் காரணம், எறும்பு போன்ற சிற்றுயிரினங்கள் அதை சாப்பிட்டு நம்மை வாழ்த்திச் செல்லும் என்பதால்தான்அரிசி மாவால் கோலமிடுகிறார்கள்.
படைக்கப்பட்ட பொங்கலை நம்மைக் காக்கும் தெய்வங்களுக்குப் படையலிட்டு பின்னர் குடும்பத்தோடு உண்டு மகிழ்வதுவழக்கம். பொங்கல் பண்டிகையின் நாயகனே சூரிய பகவான்தான். எனவே பொங்கலை வீட்டுக்குள் வைக்காமல், வெட்டவெளியில், படைப்பதே சிறந்தது.
பொங்கல் பண்டிகையுடன் இணைந்த மற்றொரு சிறப்பு கரும்பு. இந்திரனின் கரும்பு வில்லை நினைவு கூறும் வகையிலேயேகரும்பு பொங்கல் பண்டிகையில் முக்கிய இடம் பிடித்துள்ளதாக ஒரு செய்தியும் உண்டு.
மாட்டுப் பொங்கல்:
மாட்டுப் பொங்கல் ..
உழவர் திருநாளான பொங்கல் பண்டிகையில் அந்த உழவனுக்கு உற்ற துணையாக விளங்கும் மாடுகளைக் கவனிக்காமல்விடலாமோ? அதற்காகத்தான் மாட்டுப் பொங்கல்.
உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருந்து, வருடமெல்லாம் கடுமையாக உழைத்து, நமது உயர்வுக்கு உழைக்கும் மாடுகள்அன்று நன்கு குளிப்பாட்டப்பட்டு, கொம்புகளில் வர்ணம் பூசி, புதுக் கயிறு கட்டி, பொங்கலிட்டு அதை மாடுகளுக்குப் படைப்பர்விவசாயிகள்.
மாடுகளுக்கு பூஜையும் நடத்தப்படும். இதற்கும் ஒரு கதை உண்டு. சிவபெருமான் தனது வாகனமான பஸவா எனப்படும்நந்தியிடம், நீ பூலோகத்திற்குச் சென்று, மக்களிடம், தினமும் எண்ணெய் குளியல் எடுத்து, மாதம் ஒரு முறை சாப்பிடும்படி கூறுஎன்று அனுப்பி வைத்தாராம்.
ஆனால் நந்தியோ அதை மாற்றி தினசரி சாப்பிட்டு, மாதம் ஒருமுறை எண்ணெய் குளியல் எடுக்கும்படி கூறி விட்டதாம்.இதனால் கோபமடைந்த சிவபெருமான், என் பேச்சை கேட்காத நீ, பூலோகத்திலேயே இருந்து மனிதர்களின் விவசாயப்பணிகளுக்கு உழைத்து அங்கேயே இரு என்று சபித்து விட்டாராம்.
இதனால்தான் காளை மாடுகள், விவசாயப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதாக அந்த ஐதீக செய்தி கூறுகிறது.
ஜல்லிக்கட்டு:
மாட்டுப் பொங்கலுடன் இணைந்த மற்றொரு விசேஷம் ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறு தழுவுதல். அந்தக் காலத்தில் ஏழு தழுவுதல்என்று அழைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கும் ஒரு தனிப்பெரும் வரலாறு உண்டு.
அந்தக் காலத்தில் கன்னி ஒருவளை மணம் முடிக்க விரும்பும் ஆடவன், ஜல்லிக்கட்டு காளையை அடக்கியாக வேண்டும். அப்படிகாளையை அடக்கும் காளைக்குத்தான் தங்களது பெண்களை அந்தக்கால தந்தையர் மணம் முடித்துக் கொடுப்பார்களாம்.இதற்காகவே வீடுகள் தோறும் காளைகள் வளர்க்கப்படுமாம்.
தமிழர்களின் வீர விளையாட்டுதான் ஜல்லிக்கட்டு. இன்றும், தமிழக கிராமங்களில் எந்த விசேஷம், திருவிழா நடந்தாலும்ஜல்லிக்கட்டுகள் நடத்தப்படுவதைக் காணலாம். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுதான் இதில் வெகு பிரபலம். காரணம்,அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு உள்ள பல வரலாற்றுச் சிறப்புகள்.
குக்கர் பொங்கல்:
இப்படி பொங்கலுக்கு தனிப் பெரும் வரலாறுகள் இருந்தாலும் இன்று குக்கர் பொங்கல், ஹோட்டல் பொங்கல் என்று நமதுஇனத்தின் பாரம்பரியம் சுருங்கி, மாடர்ன் ஆகி விட்டது.
இருந்தாலும் பொங்கல் பண்டிகையின் இனிமை, சிறப்பு குன்றுமணியளவு கூட குறையாமல் தமிழர்களின் மனதில் இது தங்களதுதிருநாள் என்ற பெருமிதத்தையும், மதிப்பையும் ஏற்படுத்தத் தவறவில்லை என்பதே பொங்கல் திருநாளின் தனிச் சிறப்பு.
புது நெல்லைப் புடைத்து
புத்தரிசி ஆக்கி,
புதுப்பானையில் இட்டு
சர்க்கரையும், வெல்லமும்
சங்கமிக்க,
பொங்கல் அது பொங்கி வர,
குடும்பத்தோடும், சுற்றத்தோடும்
குலவையிட்டு, குதூகலிக்க
பொங்கலைக் கொண்டாடுவோம்!
பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!- சுதா அறிவழகன்..



தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழர்களால் தமிழ்நாடு, இலங்கை ,
மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள் , வட அமெரிக்கா , தென் ஆப்பிரிக்கா , மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும் , மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
மஞ்சள் தோரணங்கள் கட்டி, புது அரிசியில் பொங்கல் பொங்கி, கரும்பு உண்டு கொண்டாடப்படும் பொங்கல் விழா
தைப்பொங்கல் வரலாறு
ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சருக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கிக் சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.
நீர் வளம் கொண்ட இடங்களில் மூன்று வேளாண்மை நடக்கும். நீர் வளமில்லா இடங்களில் மழை நீர்த் தேக்கத்தால் ஒரு வேளாண்மைதான் விளைக்க முடியும். ஆகவே, மார்கழி (சிலை) அல்லது தை (சுறவை) மாத அறுவடையே நாடெங்கும் நிகழும். அறுவடை முடிந்து பெற்ற புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, நம்முடைய கொடிவழிக் காய்கறிகள் (குறிப்பாக அவரை, புடலை, கத்திரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவையே படையலாக வைக்கப்படும். செந்நெற் பச்சரிசியைப் பெரும்பாலும் தவிடு போக்காமல் நீர் சேர்த்துச் சமைத்து பருப்புக் குழம்புடன் உண்பதும் மரபு. பொங்கு என்ற சொல் கொதித்தல், மிகுதல், சமைத்தல், செழித்தல் எனப் பொருள்படும். பொங்குவதால் பொங்கல். பொங்கல் விழாவை தமிழர் என்னும் இனக்குழு தொடர்பான விழா என்று தெளிவாக உணரமுடியும். இந்த விழாவின் நடைமுறையைப் பார்த்தால், மெய்யியற் சமயங்கள் தமிழகத்தில் நிலைகொள்ளுவதற்கு முன்னாலிருந்தே, இனக்குழு வழிபாடுகள் நிலவிய போதே, இந்த விழாக் கொண்டாடுவது தொடங்கியிருக்க முடியும் என்பதையும் புரிந்துக் கொள்ள இயலும்.

தமிழர் தேசிய விழா
பொங்கல் விழாவை தமிழர் தேசிய விழாவாக பலர் கருதுகின்றனர். பொங்கலை தமிழர்கள் சமயங்களைக் கடந்து கொண்டாடும் வழக்கமும் உள்ளது. கிருத்துவர்கள் தங்கள் தேவாலயங்களில் கரும்புடன் பொங்கள் வைத்து கொண்டாடுகின்றனர். தமிழ் முஸ்லீம்களில் பல குடும்பங்களில் பொங்கலன்று சர்க்கரைப் பொங்கலுடன் 16 வகைக் காய்கறிகளைச் சமைத்துச் சிறப்பு விருந்தாக குடும்பத்தினருடன் உண்பதும், பொங்கல் நாளன்று வீட்டில் அசைவ உணவுகளை தவிற்கும் வழக்கமும் உள்ளது.

உழவர் திருநாள்
தமிழர் விழாக்களும்
கொண்டாட்டங்களும்
தைப்பொங்கல்
இந்திர விழா
தமிழ்ப் புத்தாண்டு
ஆடிப் பெருக்கு
தொகு
பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த
கால்நடைகளுக்கும் , தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா.
உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை
மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.
பொங்க வைக்கும் முறை
தைப்பொங்கலுக்குச் சில நாள்களுக்கு முன்னரே தயாராகுதல் தொடங்கும். பொங்கலுக்குத் தேவையான பொருள்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர்.
தமிழீழம் , தமிழ்நாடு போன்ற இடங்களில் புதுப்பானைகளை பலர் வாங்குவர்.
நான்கு நாள் திருவிழா
பொங்கல் விழா நான்கு நாள் கொண்டாட்டம் ஆகும்.
போகி
போகியன்று, வீட்டின் கூரையில் செருகப்படும்
பூலாப்பூ (அ) காப்புக்கட்டு
முதன்மை கட்டுரை: போகி
போகி பண்டிகை என்பது பழையன கழித்தல் என்பதாக அடையளம் கொண்டு வேளாண்மையை மேற் கொண்டவர்களால் கொண்டாடப்படும் விழாவாகும்.
போகி பண்டிகை என்பது ‘மார்கழி’ மாதம் முடிந்து ‘தை’ மாதம் ஆரம்பிக்கும் நேரம் வருகிறது. பழையன கழிந்து புதியது புகும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. பழையதாகி தேவையில்லாமல் ஆகிவிட்ட பொருட்களை இந்நாளில் எரித்து விடுகிறோம். ஒரு பண்டிகையாக, கொண்டாட்டமாக இதைச் செய்கிறோம்.
பொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாகும். மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம்.ஆயர்கள் இந்திரவிழாவை முடித்து சூரியவழிபாடை தொடர்ந்தனர்.
அக்காலத்தில் போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் இருந்தது. அப்போது அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளைப் புத்தர் இறந்த தினமென்று கண்டறிந்துள்ளனர்.
தைப்பொங்கல்
தை மாத முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
மாட்டுப் பொங்கலன்று தொழுவத்தில் மாடுகள்
மாட்டுப் பொங்கல்
முதன்மை கட்டுரை: மாட்டுப் பொங்கல்
உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. 'பொங்கலோ பொங்கல் ! மாட்டுப் பொங்கல்!
பட்டி பெருக! பால் பானை பொங்க! நோவும் பிணியும் தெருவோடு போக!' என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.
காணும் பொங்கல்
முதன்மை கட்டுரை: காணும் பொங்கல்
இந்நாளில் மக்கள் தங்கள் உற்றார் உறவினரைச் சென்று சந்தித்து தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர். இது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காம் நாள் இடம்பெறும்.இது பொதுவாக இந்தியாவிலேயே கொண்டாடப்படுகிறது.
பொங்கலை ஒத்த பிற விழாக்கள்
வடமாநிலங்களில் சூரியபகவானுக்கு
நன்றி தெரிவிக்கும் நாள் உண்டு.
இந்தியாவின் வட மாநிலங்களில் இது மகர சங்கராந்தி எனவும் சங்கராந்தி எனவும் கொண்டாடப்படுகிறது. மகரம் என்றால் சூரியன் என்று பொருள். பகலவன்/பரிதி தனுர் ராசியில் இருந்து மகர ராசியின் நுழைவதன் மூலம் உத்தரயானத்தில் பகலவன்/பரிதி சஞ்சரிக்கும் காலம் துவங்குகிறது. எனவே தான் இதை மகர சங்கராந்தி என rஅழைக்கின்றனர். மணிப்பூர் மாநிலத்தில் குடியிருக்கும் தமிழ்மக்கள் தங்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகையைக்கொண்டாடினர்.

தமிழக அரசுகள் செய்த மாற்றங்கள்

2006-2011 வரையிருந்த தமிழக அரசு, தை 1 தமிழாண்டின் முதல் நாளானபடியால், அதுவே தமிழர்களின் தமிழ்ப் புத்தாண்டு என சனவரி 29, 2008 அன்று அறிவித்தது.
சூரியன் அன்று மகர ராசியில் நகர்கிறது என்றும் ஒரு மகரராசிப் பிரவேசத்திற்கும் அடுத்த மகர ராசிப் பிரவேசத்திற்கும் உள்ள இடைப்பட்ட காலமே ஒரு திருவள்ளுவர் ஆண்டு என்றும் கூறப்பட்டது
 . அன்றைய நாள் பொங்கலிட்டு சூரியனுக்கு நன்றி செலுத்துவது வழமையாதலால், அந்நாளை புதுநாள் எனவும் கூறுவர். அதன்படி 2006-2011 வரையிருந்த தமிழக அரசும், அவ்வரசு அறிவித்த புத்தாண்டு தினத்துக்கு ஆதரவு தந்த பிரிவைச் சேர்ந்த மக்களும் தையில் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடினர்.
2006-2011 வரையிருந்த தமிழக அரசின் இந்த அறிவிப்பு சில பிரிவினரிடையே அதிருப்தியை உருவாக்கியது
. தமிழக அரசுக்கு தமிழகப் பாரம்பரிய விடயங்களில் தலையிட அனுமதி உண்டா என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆகத்து 23, 2011ல் தமிழக அரசு மீண்டும் சித்திரை ஒன்றை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்தது. . அதற்கு 2006-2011 வரை இருந்த தமிழக அரசைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சங்க இலக்கியங்களில் தைப்பொங்கல்
“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை
“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை
“”தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு
“தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு
“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகை


பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?!
தைப்பொங்கல் வரலாறு:
சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த விரதத்தை முடிப்பார்கள்.  உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல். உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்தது வழிபட்டனர்.
பொங்கல் விழா சில இடங்களில் நான்கு நாள் கொண்டாட்டமாக கொண்டாடப்படுகிறது.
முதல் நாள் போகிப் பண்டிகை:
தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. போகியன்று, வீட்டின் கூரையில் பூலாப்பூ செருகப்படும். அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.
இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும். பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் "போக்கி' என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி "போகி' என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி வருடத்தின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும்.
போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் உள்ளது. அங்ஙனம் அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளை புத்தர் இறந்த தினமென்று கண்டறிந்துள்ளனர்.
இரண்டாம் நாள் தைப்பொங்கல்:
தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
தைப்பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட வெடிகள் வெடிக்க தொடங்கி விடும். பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். தமிழீழம், தமிழ்நாடு போன்ற இடங்களில் புதுப்பானை பலர் வாங்குவர். மேற்குநாடுகளில் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கொண்ட பொதிகள் விற்பனைக்கு இருக்கும். வசதிபடைத்த பலர் புத்தாடை வாங்குவர்.
பொங்கலன்று அதிகாலை எழுந்து முழுகுவர். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். இந்துத் தமிழர்கள், சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது என்பர்.
மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல்
மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.
அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.
உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.
இப்போதும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும்.
உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. 'பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக' என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.
நான்காம் நாள் காணும் பொங்கல்:
காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும்.
இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக