பக்கங்கள்

செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

உலக தாய்மொழி நாள் ( International Mother Language Day) பிப்ரவரி 21 .


உலக தாய்மொழி நாள் ( International Mother Language Day) பிப்ரவரி 21 .

பன்னாட்டுத் தாய்மொழி நாள் ( International Mother Language Day) பெப்ரவரி 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 1952 இல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாகித்தான் தலைநகர்
தாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூறப்படும் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.

வங்காள தேச அரசாங்கத்தின் முயற்சிகள், அனைத்துலக அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெசுக்கோ) அமைப்பின் 1999 , பெப்ரவரி 21 பொது மாநாட்டின் 30 ஆவது அமர்வில் இந்நாளை அனைத்துலக தாய் மொழிநாளாக அறிவித்தது. பல்வேறு சமூகங்களின் மொழி , பண்பாட்டுத் தனித்தன்மைகளைப் பேணுவதுடன் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும் உருவாக்கும் எண்ணத்தோடு இந்த நாளை யுனெசுக்கோ அறிவித்தது. 2000 ஆம் ஆண்டு முதல் இந்த நாளானது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 2013 ஆம் ஆண்டின் அனைத்துலகத் தாய்மொழி நாளை ஒட்டி யுனெசுக்கோ பாரிசில் "தாய்மொழிகளும் நூல்களும் - எண்ணிம நூல்களும் பாடநூல்களும்" (“Mother tongues and books - including digital books and textbooks”) என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.


சிந்தனை எனும் சிற்பத்தைச் செதுக்க
தாய் மொழி எனும் உளியால் மட்டுமே முடியும்... இன்று உலக தாய் மொழி தினம்
உலகளவில் மனித சமுதாயம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள முடிகிறது என்றால் அதற்கு காரணம் மொழி. உலகில் பேச்சு வழக்கில், ஆயிரக்கணக்கான மொழிகள் உள்ளன. இது மாவட்டம், மாநிலம், நாடு, கண்டம் என வேறுபடுகிறது. ஒவ்வொரு பகுதி மக்களுக்கும், ஒரு தாய்மொழி இருக்கும். இவற்றின் தனித்தன்மை, பண்பாட்டை பாதுகாக்கும் நோக்கிலும், அவற்றுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கிலும் பிப்., 21ம் தேதி, சர்வதேச தாய்மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
உலகில் 6 ஆயிரம் மொழிகள் உள்ளன. இதில் 1,500 மொழிகள் ஆயிரம் பேருக்கு கீழ் பேசுபவை. 3 ஆயிரம் மொழிகள் பத்தாயிரம் பேருக்கும் குறைவானோர் பேசுபவை. ஆனால் தமிழ் மொழியை 7 கோடி பேர் பேசுகின்றனர். உலகில் 94 நாடுகளில் தமிழ்பேசுபவர்கள் உள்ளனர். இந்தியா பல மொழிகள் பேசும் நாடு. இதில் 74 சதவீத மக்கள் இந்திய, ஐரோப்பிய மொழிகளையும், 23 சதவீத மக்கள் தமிழை உள்ளடக்கிய திராவிட மொழியையும் பேசுகின்றனர். இருப்பினும் இந்திய அரசால் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மாதம் ஒரு தாய்மொழி அழிவதாகவும், அதனை தடுக்க இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
உலக நாடுகள் பலவற்றில் இன்று தமிழர்கள் குடியேறி, வாழ்ந்தும் பல சாதனைகள் புரிந்தும் வருகின்றனர். நாட்டின் உடன் பிறப்புகளோடு உறவாட ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளை கற்றாலும், நமது அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் தொலைக்காமல் இருக்க தாய் மொழியான தமிழில் கல்வி கற்று, தமிழர்களோடு தமிழில் உரையாடி தாய் மொழியை வளர்ப்போமாக.


யுனெஸ்கோ அமைப்பு கடந்த 2000ம் ஆண்டு முதல் பிப்ரவரி 21-ம் தேதியை உலக தாய்மொழி நாளாக அறிவித்தது. அதன்படி தாய்மொழி நாள் கொண்டாடப்படுகிறது. உலகில் 6 ஆயிரம் மொழிகள் உள்ளன. இதில் 1,500 மொழிகள் ஆயிரம் பேருக்கு கீழ் பேசுபவை. 3 ஆயிரம் மொழிகள் பத்தாயிரம் பேருக்கும் குறைவானோர் பேசுபவை. உலகில் பல நாடுகளில் தமிழ்பேசுபவர்கள் உள்ளனர். தமிழ்மொழியை சுமார் 7 கோடி பேர் பேசுகின்றனர்.
நாளுக்கு நாள் தாய்மொழிகள் மருகி அழிகிறது. தாய்மொழிகள் அழிவதை தடுக்கத்தான் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
ஒருவருக்கு ஒருவர் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள பேசப்பட்ட மொழி, இனத்தின் அடையாளமாக மாறியது. மொழியானது நாட்டுக்கு நாடு, மாநிலத்துக்கு மாநிலம், சமூகத்துக்கு சமூகம் மாறுபடுகிறது.
மொழிகள் பொது மொழி, தாய்மொழி என இரண்டு வகைப்படும். 100 ஆண்டுகளுக்கு முன் 6,200 ஆக இருந்த மொழிகள், இன்று, 3,000மாக குறைந்துள்ளதாக மொழியியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
இந்தியாவில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு,பெங்காளி, மலையாளம், கர்நாடகம் உள்ளிட்ட, 22 மொழிகள் அதிகாரப்பூர்வமாக உள்ளன.
எந்த மொழியையும் அழிக்கக் கூடாது.”ஒருவர் பல மொழிகளை தெரிந்து கொள்ளவும், வெளிநாட்டு மொழிகளை கற்றுக் கொள்ளவும், மொழிபெயர்ப்பு மூலம் அமைதியை உருவாக்கவும்’ இத்தினம் வலியுறுத்துகிறது.
தமிழை தாய்மொழியாக கொண்ட, தமிழகத்தில், தமிழ் எழுத்துக்களை கூட, மாணவர்களால், வாசிக்க முடியாத நிலையில் இருக்கின்றனர் எனில், நம் தாய்மொழி பற்று குறித்த கேள்வி எழுகிறது. மொழியை அறிதல் வேறு; அறிவை வளர்த்தல் வேறு. பள்ளி கல்விமுறை தாய்த்தமிழுக்கு உரிய இடத்தை கொடுக்க தவறிவிட்டது
“தாய் மொழி கண் போன்றது; பிற மொழி கண்ணாடி போன்றது’ என்பது மூதுரை. கண்ணாடிகளுக்காக கண்ணை இழக்காமல் வாழ்வது குறித்து, வளரும் தலைமுறைக்கு வழிகாட்டுவோம்.
தமிழ் அடையாளம் காப்போம்! ஒன்றிணைந்து உயர்வோம்!


மனித குலத்தின் அறிவு மற்றும் பண்பாட்டை வளர்த்தெடுக்கும் தாய்மொழியைப் போற்றும் விதமாக ஆண்டுதோறும் பிப்ரவரி 21ம் தேதியன்று உலகத் தாய்மொழிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
வங்கதேச தலைநகர் டாக்காவில் 1952ம் ஆண்டு மொழிக்காக நடந்த போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக ஆண்டுதோறும் பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழிகள் தினமாகக் கடைபிடிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை ரஃபீக்குல் இஸ்லாம் எனும் வங்கதேச அறிஞர் ஜனவரி 1998ல் முன்மொழிந்தார். அவரது கோரிக்கையை பரிசீலித்த யுனெஸ்கோ அமைப்பு 1999ம் ஆண்டு நவம்பரில் இந்த தீர்மானத்தை அங்கீகரித்தது. இதையடுத்து 2000த்திலிருந்து உலக தாய்மொழிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
‘பன்மொழி கல்வியின் வாயிலாக நிலையான எதிர்காலத்தை நோக்கி’ என்ற வாசகத்தின் அடிப்படையில் நடப்பு 2017ம் ஆண்டின் உலக தாய்மொழிகள் தினம் கடைபிடிக்கப்படும் என்று யுனெஸ்கோ அமைப்பு அறிவித்துள்ளது. இந்த நாளில் ஒவ்வொரு மொழிக்குழுவினரும், தங்கள் மொழியைக் கொண்டாடும் விதமாக இலக்கிய செழுமை குறித்த கருத்தரங்கள், கலந்துரையாடல்களை நிகழ்த்துமாறும் யுனெஸ்கோ கேட்டுக்கொண்டுள்ளது.
என்றும் இளமை குன்றா தமிழ்
காலத்துக்கேற்ப ஒரு மொழி, தன்னை புதுப்பித்துக் கொண்டே வந்தால்தான் அது பரிணாம வளர்ச்சிக்கேற்றார் போல் தன்னை தகவமைத்துக் கொள்ளும். ஏராளமான தொன்மொழிகள் அத்தகைய தகவமைப்புத் திறன் இன்றி வழக்கொழிந்து போயுள்ளன.
இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய பகுதிகளில் இயேசு பயன்படுத்தியதாகக் கூறப்படும் அராமியா மொழி இன்று வழக்கிலேயே இல்லை. உலக அளவில் கடந்த நூறு ஆண்டுகளில் வழக்கில் இருந்த மொழிகளின் எண்ணிக்கை 7,000-த்திலிருந்து 3,000மாக குறைந்துள்ளதாக மொழியியல் ஆய்வுகள் கூறுகின்றன.
உலக மொழிகளில் ஆறு மொழிகள் மட்டுமே செரிவான கலாசாரக் கூறுகளை உள்ளடக்கியதாகக் கருதப்படுகிறது. கிரேக்கம், லத்தீன் உள்ளிட்ட மொழிகள் அடங்கிய இந்த பட்டியலில் நமது தாய்மொழி தமிழுக்கு சிறப்பான இடமுண்டு. கல்தோன்றி, மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த மொழி எனப் புகழ் பெற்ற தமிழ் மொழியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலக்கியங்கள் தோன்றி விட்டன. தொன்மையான மற்றும் பழமையான மொழிகள் பல அழிந்த நிலையில், தமிழ் பழமையான மொழியாக இருந்தாலும் இப்போதும் காலத்திற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொண்டு இளமையுடன் திகழ்கிறது.



1999 யுனெஸ்கோ மாநாட்டில் எடுக்கப்பட்ட
முடிவின்படி தாய்மொழி தினம் வருடாவருடம் உலகம் முழுக்க
கொண்டாடப்பட்டு வருகிறது . மொழியெல்லாம்
ஒரு சிக்கலா என்று இன்றைக்கு பலபேர் கேட்கலாம்.
ஆனால்,மொழி தேசங்களை கூறுபோடும்
வல்லமை படைத்தது என்பதே உண்மை.
மதத்தை அடிப்படையாக கொண்டு பாகிஸ்தான் என்கிற
தேசத்தை உருவாக்கினார்கள். ஆனால்,மிகக்குறைவான மக்கள்
பேசிய உருதுவை மட்டும் தேசிய மொழியாக
அறிவித்துவிட்டு வங்க மொழியை புறக்கணித்தார்கள்
பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள்.
அதை எதிர்த்து இதே தினத்தில்
போராடிய எண்ணற்ற கல்லூரி மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். பின்னர் மொழிசார்ந்த
சிக்கல்
தனி வங்கதேசத்துக்கே வழிவகுத்தது
தாய்மொழி என்பது வெறும் கருவி இல்லை ;ஒரு இனத்தின்
பண்பாடு,கலாசாரம்,வாழ்க்கைமுறை,சிந்தனை எல்லாவற்றிலும் முக்கிய
பங்காற்றும்,நீங்காத அங்கமாக இருக்கும்
சிறப்பு அன்னை ,மொழிக்கு உண்டு . அன்னை மொழியை பிழையற
பேசவும் எழுதவும் தெரியாமல் இளைய
சமுதாயத்தை வளர்த்து விடுகிறோம்
என்பது வருத்தமான நிகழ்வு . உலகில் அதிக இலக்கிய நோபல்
பரிசுகளை அள்ளி இருக்கும் பிரான்ஸ் நாட்டு மக்கள் பிரெஞ்சு மொழியில்
பேசுவதை பெருமையாக நினைப்பவர்கள் ! ஆங்கில மொழியின்
சொற்கள் தன்னுடைய மொழியில் கலக்கக்கூடாது என்று சட்டமியற்றுகிற
அளவுக்கு மொழிப்பற்று கொண்ட அவர்களுக்கும் இங்கிலாந்துக்கும் சில
நாட்டிகல் மைல் தான் தூரம்.
அன்னை மொழியை புறக்கணித்து பிள்ளைகளின் இயல்பான
சிந்தனையை சிதைக்கிறோம் என எச்சரிக்கிறார்கள் உளவியல்
நிபுணர்கள். அறிவியலில் அதிகபட்ச நோபல் பரிசை பெற்றவர்கள் எல்லாம் தங்களின்
தாய்மொழியில் பயின்றவர்களே. இந்தியாவின் மிகச்சிறந்த அறிவியல் மேதைகளும்
தாய்மொழி வழிக்கல்வியே தேவை என்று வலியுறுத்தினார்கள்.
ஏசு காலத்தில் பேசப்பட்ட அராமிக் மொழி மற்றும் ஹீப்ரு மொழியில் யூதர்களின்
இஸ்ரேல் நாட்டால் இரண்டாவது மொழி உயிர்த்திருக்கிறது.
ஏசு பேசிய அராமிக் உயிர் பெறவே இல்லை. ஐஸ்லாந்து மக்கள்
பேசும் ஐஸ்லாண்டிக் மொழியை சில லட்சம் பேரே பேசுகிறார்கள்.
தாய்மொழியை பயன்படுத்துவது என்பது பெருமைக்க
ஒன்றாக அவர்களால் பார்க்கப்படுகிறது. சூடான் நாட்டில் தூய அன்னை மொழியில்
மட்டுமே பேசுவார்கள். ஆங்கில வார்த்தையின்
கலப்பைக்கூட பார்க்க முடியாது. ஆங்கிலம்
இணைப்பு மொழி என்பதும்,வேலை
அது பங்காற்றுகிறது என்பது ஒருபுறம் இருக்க
புரிதலுக்கு அன்னை மொழியே பெருமளவில் உதவும் என்பதும்,சரிசமானமான
கல்வி வழங்கப்படும் பொழுது தாய்மொழியே தனித்து மின்னும்
என்பதும் உண்மை.
பாரதி காந்திக்கு திருவல்லிக்கேணி கூட்டத்தில்
ஆங்கிலத்தில்
பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கடிதம்
எழுதினார் ." உங்கள்
அன்னை மொழி குஜராத்தியிலோ அல்லது பெரும்பான்மை மக்கள்
பேசும் மொழியான ஹிந்தியிலோ உரையாற்றி இருக்கலாமே ? "என
கேள்வி எழுப்ப,"இனிமேல் அவ்வாறே செய்கிறேன் நீங்கள் ஏன்
இக்கடிதத்தை ஆங்கில மொழியில் எழுதினீர்கள் ?" என
காந்தி கேட்க பிறர் மனம் நோக
பொழுது அன்னை மொழியை உபயோகப்படுத்த
கூடாது என்பதே எங்களின் பண்பாடு என்று பதில் தந்தார்
பாரதி .தாய் மொழி வெறும் தாய் சொல்லித்தந்த
மொழி மட்டுமில்லை ; தாய்மை உணர்வோடு பயன்படுத்தப்பட
வேண்டிய மொழி எனப்பாடம் நடத்தினார் பாரதி . அன்னை மொழி மீதான
பற்று ஒவ்வொருவருக்கும்
கட்டாயத்தேவை மட்டுமல்ல ;அதை அடுத்
தலைமுறைக்கும் கடத்த வேண்டும

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக