பக்கங்கள்

சனி, 31 மார்ச், 2018

ஆனந்தரங்கம் பிள்ளை பிறந்த தினம் மார்ச் 30

 

ஆனந்தரங்கம் பிள்ளை பிறந்த தினம் மார்ச் 30

ஆனந்தரங்கம் பிள்ளை (1709 மார்ச் 30 - 1761 ஜனவரி 10) பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் உரைபெயர்ப்பாளராகவும் #துய்ப்ளெக்சு என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர். #பதினெட்டாம் நூற்றாண்டு காலத்திய #பிரெஞ்சு அரசு பற்றி அறிய உதவும் சிறந்த வரலாற்றுக் கருவூலமாகவும் ஆவணமாகவும் இலக்கியமாகவும் திகழக்கூடிய நாட்குறிப்புகளைத் தந்தவர்.
      1736 முதல் 1761 வரை ஏறத்தாழ #இருபத்தைந்து ஆண்டுகள் #நாட்குறிப்பு எழுதியுள்ளார். உலக நாட்குறிப்பு இயக்கத்தின் முன்னோடியான புகழ் பெற்ற ஆங்கில நாட்குறிப்பாளர் சாமுவேல் பெப்பீசு என்பவரைப் போன்று தமிழில் நாட்குறிப்பு எழுதியமையால், இவர் #இந்தியாவின் பெப்பீசு எனவும் #நாட்குறிப்பு வேந்தர் எனவும் போற்றப்படுகின்றார். இவரது நாட்குறிப்பு அக்காலத்தில் நடந்த சமூக மாற்றங்கள், அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றின் பதிவாகத் திகழ்கிறது. பிரெஞ்சு ஆளுநர் துய்ப்ளெக்சின் அந்தரங்கப் பேச்சாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பன்மொழிப் புலவராகவும் இருந்தவர்.
    இவரின் நாட்குறிப்பு மூலம் நமக்கு பதினெட்டாம் நூற்றாண்டு #தென்னிந்திய ஆளுமைகளைப் பற்றியும், #முக்கியமான அரசியல், இராணுவ நிகழ்வுகளைப் பற்றியும் அறிய முடிகிறது. இவரது நாட்குறிப்புகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் இன்றளவும் நடைபெற்று வருகின்றன.
ஆனந்தரங்கம் #இந்திய மன்னர்களுக்கும் #பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஒரு பாலமாக விளங்கினார். 1749 ஆம் ஆண்டு முசபர்சங் என்ற இந்திய மன்னர் ஆனந்தரங்கத்துக்கு 3000 குதிரைகளை வழங்கி, அவருக்கு #மன்சுபேதார் என்ற பட்டத்தையும் வழங்கினார். பின்பு #செங்கல்பட்டு கோட்டைக்குத் தளபதியாகவும், அம்மாவட்டம் முழுமைக்கும் #ஜாகீர்தாரராகவும் நியமனம் பெற்றார். ஆளுநருக்கு மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றுவோர் தமிழ் மக்களின் தலைவராக அறிவிக்கப்படுவார்.
   
பாராட்டுக்கள்:

* அருணாசலக் கவிராயர் தம் இராம நாடகத்தைத் திருவரங்கத்திலே அரங்கேற்றிய பிறகு, மீண்டும் ஒருமுறை ஆனந்தரங்கம் முன்னிலையில் அரங்கேற்றினார் என்று குறிப்பிடுவர்.

* "ஆனந்தரங்கத்தினுடைய நாட்குறிப்புக்கள் அவரது காலத்தில் யாருமே புரிந்திராத அரியதொரு இலக்கியப் பணி"- கே. கே. பிள்ளை.

,*. "தான் நேரில் கண்டும் கேட்டும்
 அறிந்துள்ள செய்திகளைச் சித்திரகுப்தனைப்போல் ஒன்றுவிடாமல் குறித்து வைத்துள்ளார்." - வ. வே. சு. ஐயர். (தமது ‘பால பாரதி’ இதழில்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக