பக்கங்கள்

சனி, 17 மார்ச், 2018

உகாதி பண்டிகை @ யுகாதி பண்டிகை


உகாதி பண்டிகை @ யுகாதி பண்டிகை

உகாதி அல்லது யுகாதி ( தெலுங்கு : ఉగాది, கன்னடம் : ಯುಗಾದಿ) தெலுங்கு மற்றும் கன்னடப் புத்தாண்டு ஆகும். மகாராஷ்டிர மக்கள் இதே நாளை குடிபாட்வா
(गुढीपाडवा) எனவும் சிந்தி மக்கள் சேதி சந்த் எனவும் பலவாறாகக் கொண்டாடுகின்றனர். உகாதி ஒவ்வோர் ஆண்டும் ஆங்கில நாட்காட்டியின் படி
ஏப்ரல் 6 அல்லது 7 தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இந்து நாட்காட்டியின் படி உகாதி சைத்ர ( சித்திரை ) மாதத்தின் முதல் நாள் ஆகும்.
உகாதி கொண்டாட்டம்
சைத்ர மாதத்தின் முதல் நாள் தான்
பிரம்மன் உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்நாளில் புது முயற்சிகளை மேற்கொள்ள நல்ல நாளாக கருதப்படுகிறது. மேலும் சைத்ர மாதத்தின் முதல் நாள் வசந்த காலத்தின் பிறப்பை குறிப்பதால், இந்நாள் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்நாளில் மக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் செய்து புத்தாடை அணிந்து உகாதி பச்சடி செய்வதில் இருந்து நாள் ஆரம்பிக்கிறது. உகாதி அன்று பல்வேறு இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், தெலுங்கு சாகித்ய நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்குதல் ஆகியவை உகாதி நாளன்று நடைபெறும்.
உகாதி பச்சடி
உகாதி அன்று அறுசுவை கூடிய பதார்த்தமாக உகாதி பச்சடி செய்யப்படுகிறது. இது உகாதி அன்று செய்யப்படவேண்டிய மிக முக்கியமான பதார்த்தமாகும். இந்த உகாதி பச்சடி
வேப்பம்பூ, மாங்காய் , புளி , வெல்லம் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து செய்யப்படுகிறது. இந்த புத்தாண்டு அனைத்து மகிழ்ச்சி, துக்கம் முதலிய அனைத்தையும் உடைய ஒன்றாக இருக்கும் என்பதை குறிக்கிறது. இந்தப் பதார்த்தத்தை கன்னட மொழியில் பேவு பெல்லா (ಬೇವು-ಬೆಲ್ಲ) என அழைப்பர்.
தமிழ் நாட்டில் உகாதி
தமிழ் நாட்டில் உகாதி, தமிழ்நாட்டை தாயகமாக கொண்ட தெலுங்கு பேசுவோராலும் ஆந்திராவில் இருந்து இங்கு குடியேறியவர்களாலும் கொண்டாடப்படுகிறது. தமிழக தெலுங்கு பேசுவோர் பெரும்பாலும், உகாதி பச்சடி போன்ற உகாதியுடன் தொடர்புடையவற்றை செய்யாது போயினும், இனிப்பு வகைகள் முதலியவற்றை செய்து வழிபாடு நடத்தி உகாதியை கொண்டாடுவர்.


யுகாதி மார்ச் 18. 2018.

யுகாதி என்பதற்கு யுகம் என்கிற ஆண்டு ஆதியில் இருந்து தொடங்குகிறது என்று பொருள். தெலுங்கு சம்பிரதாயப்படி புத்தாண்டு தொடங்குவதைக் குறிக்கிறது. இன்றைய நாளில் சம்ஹத்தர கௌரி விரதம் என்ற விசேஷ விரதத்தைக் கொண்டாடுவார்கள். நாம் எல்லோரும் வேத வராகக் கர்ப்பத்தில் இருக்கிறோம்.
அந்தக் கர்ப்பம் தொடங்கிய நாளும் தேவர்களால் இன்று கொண்டாடப்படுகிறது. சூரியன் பன்னிரெண்டு ராசிகளில் நிற்பதைக் குறிக்கும் வகையில் சௌரமான மாதங்கள் என்று குறிப்பிடப்படுகிறது. அதேபோல் சந்திரன் நிற்கின்ற ஒரு மாதத்தின் நட்சத்திரத்தை வைத்து சாந்திரமான மாதங்கள் என்று தெலுங்கு சம்பிரதாயத்தில் குறிப்பிடப்படுகிறது.
யுகாதியின் சிறப்பு
ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில் வருகிற அமாவாசைக்கு மறுதினம் சாந்திரமான வருடம் என்ற பெயரில் சந்திரன் பன்னிரெண்டு அம்சங்களோடு திகழும் மாதங்கள் தொடங்குகின்றன. அதன்படி ஒவ்வொரு அமாவாசைக்கு மறு நாள் வரும் பிரதமை முதல் அடுத்துவரும் அமாவாசை வரை கணக்கிடப்படும் மாதங்களுக்கு வடமொழியில் ஒவ்வொரு பெயர் உண்டு. இந்த மாதங்களின் பெயர்கள் பவுர்ணமி எந்த நட்சத்திரத்தின் நாளில் நிகழ்கிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரில் அழைக்கப்படும்.


எப்படிக் கொண்டாடுவது?

பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் யுகாதி கொண்டாட வேண்டும். அன்று அமாவாசை ஒரு நாழிகை இருந்தால்கூட மறுநாள்தான் யுகாதி கொண்டாட வேண்டும் என்பது விதி. மனித வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறிவரும் என்பதையும் அதைப் பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த யுகாதி பண்டிகை உணர்த்துகிறது.
காலையில் எழுந்து புனித நீராடி, கௌரி தேவியை நினைத்து, தீபம் ஏற்றி வழிபட வேண்டும். புதிய பஞ்சாங்கத்தைப் பூஜையறையில் வைத்து, அதைச் சந்தனம், குங்குமம், மலர்களால் அலங்கரிக்க வேண்டும். தொடர்ந்து ஏழு ருசியுள்ள பச்சடியைச் செய்ய வேண்டும். இதற்கு சத்ருஜி (சத் - ஏழு) பச்சடி என்று பெயர். இதில் உப்பு, புளிப்பு, இனிப்பு, கசப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு ஆகிய ருசிகள் இருக்க வேண்டும்.
விநாயகர், பெருமாள், கௌரி அம்பிகை மற்றும் இஷ்ட தெய்வம், குலதெய்வங்களை முன்வைத்து ஒப்பட்லு என்கிற விசேஷ போளி, புளியோதரை, பால் பாயசம் செய்து ஏழு ராகங்கள் பாடி தெய்வங்களுக்குப் படையல் செய்து, ஆரத்தி செய்வது வழக்கம். அனைவரும் அஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு பிரசாதம் எடுத்துக்கொண்டு, மங்கள ஆரத்தி செய்வது வழக்கம்.


பஞ்சாங்கப் படனம்

யுகாதி பண்டிகையை வரவேற்று ஒரு துதி கூறிய பிறகு அந்தந்த மாதத்தின் பலனைக் குடும்பத் தலைவர் படிப்பார். இந்த ஆண்டின் இயற்கை வளம், மழைப் பொழிவு, அரசாங்கத்தின் மூலம் கிடைக்கும் நன்மை, ஆட்சியாளர்களின் நிலை, நட்சத்திரங்களின் அடிப்படையில் முற்பாதி, நடுப்பகுதி, பின்காலப் பலன்கள், ஆண்டின் கந்தாய பலன்கள், நவக்கிரகங்கள் எந்தெந்த பொறுப்பில் இந்த ஆண்டு முதல் மந்திரிகளாகவும் அரசர்களாகவும் வருகிறார்கள் ஆகிய விவரங்களைப் பஞ்சாங்கப் படனத்தின் மூலம் அறியலாம்.
அவர்களால் இயற்கையிலும் மனித வாழ்க்கையிலும் ஏற்படும் மாறுதல்கள், குரு, சனி, ராகு, கேது கிரச்சார முறையில் இடம் மாறுதல்களால் பூமியிலும் மக்கள் மத்தியிலும் எவ்விதமான மாற்றங்கள், எந்தக் காலங்களில் நிகழும் என்ற குறிப்புகளைப் படித்தறிவது வழக்கம்.
யுகாதி பண்டிகை ஒரு ஆண்டாகிய யுகத்தின் தெய்வ அனுகூலத்தையும் உலக மக்களின் வாழ்க்கை நலனகளையும் முன்னதாகவே அறிந்துகொள்ளக்கூடிய காலக்கண்ணாடியாக திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்ற ஐந்து விதமான அங்கங்களைக் கொண்ட மங்களகரமான பஞ்சாங்கப் படனமாக மலர்கிறது.
மகாகவி காளிதாசரின் உத்தரகாலாமிருதம் என்னும் ஜோதிட நூலில் முப்பத்தியெட்டாம் பாடல் கீழ்வரும் வரிகள் மூலம் யுகாதிப் பண்டிகையைக் குறிப்பிட்டுள்ளது.
வருஷாதி பிரதிபந்தவேத சஹிதா க்ராஹ்யா ரக்ஷ்னாம் பதே:
மத்யாஹ்னே நவமி பிதௌ பகவதோ ஜென்மா பவத்சா திதி:


யுகாதிப் பண்டிகையின் பச்சைப் பச்சடி உணர்த்தும் தத்துவம் என்ன? #HappyUgadi விகடன்.

ஆ ந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வாழும் மக்களின் புத்தாண்டு தினம்தான், 'யுகாதி பண்டிகை'. இந்தப் பண்டிகை, 'உகாதி' என்றும் அழைக்கப்படுகிறது. நாளைய தினம் (18.3.18) யுகாதிப் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படவிருக்கிறது. பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாளே யுகாதிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. யுகத்தின் ஆரம்பம் இந்தநாளில்தான் தொடங்கியது என்பதால், `யுகாதி’ என்ற பெயர் ஏற்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. `சைத்ர மாதத்தின் முதல் நாளான இன்றுதான் பிரம்மதேவர் யுகத்தைத் தொடங்கினார்’ என்று பிரம்ம புராணம் கூறுகிறது. ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, கொங்கன் மற்றும் தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் உள்ள தருமபுரி, திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் வசிக்கும் தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களால் யுகாதிப் புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகிறது. மராட்டிய மக்கள் 'குடிபாட்வா ' என்றும், சிந்தி இன மக்கள் 'சேதி சந்த்' என்றும் இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள்.

யுகாதி வழிபாடு :

காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை அணிந்து இந்த நாளைத் தொடங்குகிறார்கள். மாவிலைத் தோரணம் கட்டி, வண்ணக் கோலங்கள் இடுவார்கள். வயல்களில் விளைந்த தானியங்களை வீட்டின் முகப்பில் கட்டுவதும் சில இடங்களில் வழக்கமாக உள்ளது. இந்த நாளில் பெருமாள், சிவன், கணபதி போன்ற இஷ்ட தெய்வங்களை அலங்கரித்து வழிபடுகிறார்கள். அம்பிகை வழிபாடு இந்த நாளில் விசேஷமாகச் செய்யப்படுகிறது. சிலர், குலதெய்வ வழிபாடும் செய்வார்கள். பூஜையில் பாட்டுப் பாடி வழிபடுவது தெலுங்கு இன மக்களின் வழக்கம். ஒப்பட்லு என்ற பணியாரம், பூரன் போளி, பால் பாயசம், புளியோதரை போன்றவற்றை நைவேத்தியமாகப் படைத்து உண்கிறார்கள். அந்த ஆண்டின் புதிய பஞ்சாங்கத்தையும், பஞ்சகவ்யத்தையும் பூஜையில் வைப்பதும் வழக்கம்.

பஞ்சாங்கம் வாசித்தல் :

ஆண்டின் முதல் நாளான இந்த நாளில் திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் எனப்படும் பஞ்ச அங்கங்களையும் கூறும் பஞ்சாங்கத்தினை படிக்கும் வழக்கம் பெரியோர்களிடம் இருக்கிறது. நாட்டின் நிலைமை, விளைச்சல், மக்களின் வாழ்க்கை நிலை எல்லாவற்றையும் இந்த நாளில் பஞ்சாங்கத்தின் மூலம் தெரிந்துகொள்ளும் வழக்கம் இன்றும் கிராமங்களில் உள்ளது. சிலர் ஜோதிடரிடம் சென்று குடும்ப உறுப்பினர்களின் எதிர்கால நன்மைகளையும் அறிந்து கொள்வார்கள். ஆலய வழிபாடும், தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்குப் பரிசளிப்பதும் இந்த நாளில் கண்டிப்பாகப் பின்பற்றப்படும் வழக்கமாக உள்ளது.

பச்சைப் பச்சடி உணர்த்தும் தத்துவம் :

யுகாதிப் பண்டிகையின் விசேஷம் என்றால், அது பச்சைப் பச்சடிதான். வாழ்க்கையென்றால் இன்பம், துன்பம், ஏமாற்றம், தோல்வி, வெறுமை, விரக்தி எல்லாமே சேர்ந்ததுதான் என்பதை உணர்ந்த மக்கள், இந்த யுகாதி நாளில் இனிப்பு, காரம், உப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு என அறுசுவை கலந்த பச்சடியைச் செய்து உண்கிறார்கள். வேப்பம்பூ, வெல்லம், உப்பு, புளி, மிளகாய், மாவடு போன்றவற்றைச் சேர்த்து இந்தப் பச்சடியைச் செய்கிறார்கள். 'பேவு பெல்லா' என இதைக் கன்னட மொழியில் கூறுகிறார்கள்.


வசந்த காலத்துக்கு வரவேற்பு விழா :

யுகாதி நாளன்று மாலையில், ஒரு பொது இடத்தில் மக்கள் கூடி இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், புராணங்கள் படிப்பது, விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வார்கள். புதிய முயற்சிகளுக்கு வித்திடும் நாளாக இந்த நாள் அமைவதாக மக்கள் கருதுகிறார்கள். எனவே, இந்த நாளில் மங்களமான காரியங்களைத் தொடங்குகிறார்கள். யுகாதிப் பண்டிகையையொட்டி திருப்பதி வேங்கடாசலபதி பெருமாள் கோயிலில் 40 நாள்கள் நித்ய உற்சவம் நடைபெறும். ஆந்திர, கர்நாடகப் பகுதியிலுள்ள எல்லா ஆலயங்களிலும் விசேஷ பூஜைகளும் ஆராதனைகளும் இந்த நாளில் நடைபெறும். புத்தாண்டாக மட்டுமன்றி இளவேனிற்காலத்தின் தொடக்க நாளாகவும், அதை மகிழ்வோடு வரவேற்கும் நாளாகவும் இந்த யுகாதி தினம் மராட்டிய, கொங்கண் பகுதிகளில் அனுஷ்டிக்கப்படுகிறது.
சடங்குகளும், சம்பிரதாயங்களும் குறைந்து வரும் இந்தக் காலத்தில் இதுபோன்ற
பண்டிகை கள் மக்களிடையே மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் கொண்டு வரட்டுமென பிரார்த்திப்போம். யுகாதி நாளைக் கொண்டாடவிருக்கும் அனைத்து மக்களுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறோம். பொங்கும் மங்களம் இல்லம்தோறும் தங்கிட வாழ்த்துகிறோம்.



உகாதி பண்டிகையின் சடங்குகளும்... மரபுகளும்...

டெக்கான் பகுதியை சேர்ந்த மக்கள் கொண்டாடும் வருட பிறப்பே உகாதியாகும். உகாதி என்பது 'யுகாதி' என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து உருவானது. 'யுக்' என்றால் வயது என்றும் 'ஆதி' என்றால் ஆரம்பம் என்றும் பொருள் தரும். உகாதி என்பது ஆந்திர பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் கொங்கன் பகுதிகளில் வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்து புராணத்தின் படி, இந்த நாளில் தான் தன் படைத்தல் வேலையை தொடங்கினாராம் பிரம்ம தேவன். அதனால் உகாதி பண்டிகையை தெற்கு இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. உகாதி என்பது இளவேனிற் கால வருகையை குறிக்கும் தினமாக விளங்குகிறது. இக்காலத்தில் மரங்களில் பூக்களும் பழங்களும் மீண்டும் துளிர்வதால், புது வாழ்க்கையின் ஆரம்பத்தை இது குறிக்கும்.
மரபுகளின் படி, பண்டிகை நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே உகாதிக்கான ஏற்பாடுகள் தொடங்கி விடும். பண்டிகை தொடங்குவதற்கு முன்பாகவே வீட்டை துடைத்து சுத்தப்படுத்தும் சடங்கு முறையை பின்பற்ற வேண்டும். சுத்தப்படுத்துவதை தவிர வேறு சில சடங்குகளும், மரபுகளும் இருக்கின்றன. அதனைப் பற்றி பார்க்கலாமா?


உகாதி பச்சடி

உகாதி தினத்தன்று, உகாதி பச்சடி என்ற சிறப்பு உணவு செய்யப்படும். இதில் ஆறு வகை சுவை அடங்கியிருக்கும் - இனிப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு மற்றும் துவர்ப்பு. இதனை தயாரிக்க இவைகள் பயன்படுத்தப்படும் - வெல்லம் (இனிப்பு) சந்தோஷத்தை குறிக்கும், உப்பு (உவர்ப்பு) வாழ்க்கையின் மீதான பற்றை குறிக்கும், வேப்பம் பூக்கள் (கசப்பு) வாழ்க்கையின் கஷ்டங்களை குறிக்கும், புளி (புளிப்பு) சவாலான தருணங்களை குறிக்கும், மாங்காய் துண்டுகள் (துவர்ப்பு) புதிய சவால்கள் மற்றும் ஆச்சரியங்களை குறிக்கும், கடைசியாக மிளகாய் பொடி (கார்ப்பு) கோபம் ஏற்படுத்தும் வாழ்க்கையின் தருணங்களை குறிக்கும். சந்தோஷமாக வாழ்ந்திட, வாழ்க்கையின் இந்த ஆறு கட்டத்தையும் மனிதர்கள் சமமாக பார்க்க வேண்டும் என்பதை குறிக்கவே இந்த பச்சடி.

விடியற்காலை குளியல்

பண்டிகையின் போது அனைவரும் விடியற்காலையில் குளித்து விடுவார்கள். அதன் பின் வீட்டின் முகப்பை மாவிலைகளால் அலங்கரிப்பார்கள். சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் புதல்வர்களுக்கான விநாயகருக்கும் முருகனுக்கும் மாம்பழம் என்றால் கொள்ளை பிரியம் என்று நம்பப்படுகிறது. அதனால் மாவிலைகளை கட்டினால், நல்ல தானியங்களை அளித்து குடும்ப நலனை அவர்கள் காப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

ரங்கோலி

சுற்றுச்சூழலை தூய்மையாக்க, நற்பதமான மாட்டின் சாணம் கலந்த நீரை கொண்டு வாசல் தெளிப்பார்கள். அதன் பின் ஒவ்வொரு வீட்டிலும் அழகிய ரங்கோலி கோலங்கள் போடப்படும்.
பஞ்சாக சரவணம்
வீட்டினுள் உள்ள அனைவரின் வருங்காலத்தை கணிக்க, புகழ் பெற்ற இந்த மரபு பின்பற்றப்படுகிறது. ஒரு ஜோதிடரை உகாதி தினத்தன்று வீட்டிற்கு வர வைத்து, அந்த வருடத்திற்கு குடும்ப உறுப்பினர்களின் நேரம் எப்படி இருக்கிறது என்பது கணிக்கப்படும்.
கவி சம்மேளம்
உகாதி தினத்தன்று இலக்கியம் சார்ந்த கூட்டங்களும் நடைபெறும். இதில் கவிதைகள் படித்து, இலக்கியம் சார்ந்த விவாதங்களும் நடைபெறும். மேலும் வந்திருக்கும் விருந்தாளிகளுக்கு, பல விதமான சுவைமிக்க சைவ உணவுகளை சமைத்து போடுவதும் ஒரு வழக்கமாகும்.



வீரம் நிறைந்த யுகாதி பண்டிகை- தெலுங்கு, கன்னட மக்கள் உற்சாக கொண்டாட்டம்

தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டு யுகாதி ஆகும். மகாராஷ்டிர மக்கள் இதே நாளை குடிபாட்வா எனவும் சிந்தி மக்கள் சேதி சந்த் எனவும் பலவறாக கொண்டாடுகின்றனர். யுகத்தின் ஆரம்பத்தை யுகாதி என அழைக்கப்படுகிறது. இந்த பண்டிகையை தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் இன்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
ஜோதிட ரீதியாக குரு தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளின் அதிபதியாகவும் செவ்வாய் தெலுங்கு தமிழ் மராட்டியம் ஆகிய மொழிகளின் அதிபதியாகவும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
தெலுங்கு மக்கள்
தெலுங்கு பேசுபவர்கள் மற்றும் ஆந்திர மக்கள் செவ்வாயின் அதிக்கம் நிறைந்து காணப்படுகின்றனர். ஒல்லியான தேகம், முரட்டுதனம் கடின உழைப்பு, எளிதில் உணர்ச்சி வசப்படுவது, அதிக காரம் மிகுந்த உணவுகளை விரும்பி சாப்பிடுவது செவ்வாயின் காரக குணங்களாகும்.
கன்னட மக்கள்
அதேநேரம் கன்னடம் பேசுபவர்களும் கன்னடர்களும் சாத்வீகமானவர்களாகவும் இனிப்பு மற்றும் நெய் சேர்த்த காரம் குறைந்த உணவு உண்பவர்களாகவும் பருத்த தேகமுடையவர்களாகவும் இருக்கின்றனர்.
செவ்வாய் பகவான்
தெலுங்கு வருடப்பிறப்பு எந்த தினத்தில் வருகிறதோ அந்த தினத்தின் கிரகம் அந்த வருடத்தின் ராஜாவாக அமைவார். இந்த வருடம் யுகாதி ஜோதிட நாளான செவ்வாயன்றே பிறந்துவிடுவதால் ஹேவிளம்பி வருடத்தின் ராஜாவாக செவ்வாய் பகவான் அமைந்துள்ளார்.
சித்திரை மாதம்
அதே போன்று சித்திரை மாதம் பிறக்கும் நாளின் அதிபதியே அந்த வருடத்தின் மந்திரியாகும். அவ்வாறே குரு பகவான் ஹேவிளம்பி வருட மந்திரியாவார்.
வரும் ஹேவிளம்பி வருடம் வீரமுள்ள ராஜாவும் விவேகமுள்ள மந்திரியும் இணைந்து ஆளப்போகும் குரு மங்கள யோகம் நிறைந்த அற்புத வருடமாகும்.
உகாதி கொண்டாட்டம்
பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் யுகாதி கொண்டாட வேண்டும். அன்று அமாவாசை ஒரு நாழிகை இருந்தால்கூட மறுநாள்தான் உகாதி கொண்டாட வேண்டும் என்பது விதி. மனித வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறிவரும் என்பதையும் அதைப் பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த உகாதி பண்டிகை உணர்த்துகிறது.
உகாதி கொண்டாட்டம்
சைத்ர மாதத்தின் முதல் நாள் தான் பிரம்மன் உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்நாளில் புது முயற்சிகளை மேற்கொள்ள நல்ல நாளாக கருதப்படுகிறது. மேலும் சைத்ர மாதத்தின் முதல் நாள் வசந்த காலத்தின் பிறப்பை குறிப்பதால், இந்நாள் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்நாளில் மக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் செய்து புத்தாடை அணிந்து உகாதி பச்சடி செய்வதில் இருந்து நாள் ஆரம்பிக்கிறது. உகாதி அன்று பல்வேறு இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், தெலுங்கு சாகித்ய நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்குதல் ஆகியவை உகாதி நாளன்று நடைபெறும்.


உகாதி பச்சடி
உகாதி அன்று அறுசுவை கூடிய பதார்த்தமாக உகாதி பச்சடி செய்யப்படுகிறது. இது உகாதி அன்று செய்யப்படவேண்டிய மிக முக்கியமான பதார்த்தமாகும். இந்த உகாதி பச்சடி வேப்பம்பூ, மாங்காய், புளி, வெல்லம் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து செய்யப்படுகிறது. இந்த புத்தாண்டு அனைத்து மகிழ்ச்சி, துக்கம் முதலிய அனைத்தையும் உடைய ஒன்றாக இருக்கும் என்பதை குறிக்கிறது. இந்தப் பதார்த்தத்தை கன்னட மொழியில் பேவு பெல்லா என அழைப்பர்.
உகாதி சுலோகம்
உகாதி பண்டிகையான இன்று கீழ்கண்ட சுலோகம் சொல்லி வெல்லம் கலந்த வேப்பம்பூ பச்சிடியை ஆண்கள் பெண்கள் என அனைவரும் சாப்பிட வேண்டும், இதனால் வைரம் போன்ற உடலும், அனைத்து ஸம்பத்தும் கிட்டும்
சதாயூர் வஜ்ர தேஹாய சர்வ சம்பத்கராய ச |
சர்வாரிஷ்ட விணாசாய நிம்பஸ்ய தல பக்ஷ்ணம் ||.
பஞ்சாங்கம் படித்தல்
உகாதி பண்டிகை ஒரு ஆண்டாகிய யுகத்தின் தெய்வ அனுகூலத்தையும் உலக மக்களின் வாழ்க்கை நலன்களையும் முன்னதாகவே அறிந்துகொள்ளக்கூடிய காலக்கண்ணாடியாக திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்ற ஐந்து விதமான அங்கங்களைக் கொண்ட மங்களகரமான பஞ்சாங்கப் படனமாக மலர்கிறது. திருமலையில் இன்று யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று உற்சவ மூர்த்திகளை தங்க வாசல் அருகில் எழுந்தருளச் செய்து ஆஸ்தானம், பஞ்சாங்கம் படித்தல் நிகழ்ச்சி நடைபெறும்.



யுகாதித் திருநாள் புதிய வாழ்க்கையின் ஆரம்பமாகக் கொண்டாடப்படுகிறது..!
"யுகாதி'என்றால் "புதிய பிறப்பு'.

புதிதாக பிறக்கும் ஒவ்வொரு ஆண்டும் நலமாகவும், ஒற்றுமை உணர்வை தூண்டுவதாகவும் அமைய வேண்டும் என்னும் நோக்கத்தில் சிறப்புப்பெறுகிறது..!
சந்திரனின் சஞ்சாரப்படி சித்திரை முதல்நாள் தான் யுகாதி கொண்டாடப்பட்டது.
பிற்காலத்தில் சூரிய சஞ்சாரத்தின் அடிப்படையில் புத்தாண்டு பிறப்பு கணிக்கப்பட்ட போது, யுகாதி கொண்டாட்ட நாளில் மாற்றம் ஏற்பட்டது.
யுகாதித்திருநாளில் திருப்பதியில் விசேஷ பூஜைகள் நடக்கும்.
ஏழுமலையான் பவனி சிறப்பாக நடக்கும்.
யுகாதி நாளில் லட்சுமி குபேரருக்கு செல்வ அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

நம்ம ஊர் மாவிளக்கு போல ஆந்திரத்தில் பிரபலமான இனிப்பான சலுவுடி என்னும் மாவுப்பண்டம் . தெலுங்கு வருடப்பிறப்பிற்கு வீட்டுக்கு வீடு அவசியம் செய்வார்கள் .

அதிரசம் யுகாதி அன்று செய்யடும் சிறப்பான இனிப்பு..!
“தெலுங்கு தேவதை”.ஒரு கையில் அமிர்த கலசம் மறுகையில் விவசாயிகளின் உயிர் “நெற்பயிர்” கொண்டு யுகாதி – யுகத்தின் தொடக்கம் (யுகம் + ஆதி = யுகாதி) என்று பொருள்.
, ஒரு சில இடங்களில், சந்திர நாட்காட்டியின் வழியே புத்தாண்டு கொண்டாடப்பட்டு வந்தது...
சூரிய நாட்காட்டியின் வழியே, தமிழ் நாட்டில் தமிழ் புத்தாண்டாகவும், அசாமில் பிஹுவாகவும், பஞ்சாபில் வைசாஹியாகவும், ஒரிஸாவில் பாண சங்கராந்தியாகவும், மேற்கு வங்கத்தில் நாப பார்ஷாவாகவும்
ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் யுகாதி, மகாராஷ்டிராவில் குடி பட்வா,
சேடி சந்த் (Cheti Chand) என்றும் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
இது பெரும்பாலும், ஏப்ரல் 14 அல்லது இரு தினங்கள் முன்னரோ அல்லது இரு தினங்கள் பின்னரோ கொண்டாடப்படுகிறது.
கோவில்களில், சர்க்கரை மற்றும் வெண் பொங்கலுடன் யுகாதி பச்சடியும் வழங்கப்படும்....
""யுகாதியின் போது, அறுசுவை கொண்ட யுகாதி பச்சடி பரிமாறப்படும். இந்த பச்சடியை ஆண்டுக்கு ஒரு முறை சாப்பிடுவது நல்லது.
பச்சடியில், இனிப்புக்கு வெல்லம், புளிப்புக்கு புளி தண்ணீர், கசப்புக்கு வேப்பம்பூ, துவர்ப்புக்கு மாங்காய், காரத்திற்கு மிளகு மற்றும் உப்பு சேர்த்து வழங்கப்படும். இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது ,

மக்கள் தத்தம் வீடு வாசல்களை தூய்மையாக்கி, வெள்ளையிட்டு, புத்துணர்வு பெற என்னை குளியல், உற்சாகத்துக்கு புது துணிமணிகள் அணிந்து மிகவும் மகிழ்ச்சியாக புது வருடத்தை வரவேற்று பிரார்த்தனை செய்வர்.
யுகாதி பச்சடி எனப்படும், ஆறு சுவை கொண்ட பாரம்பரியமிக்க உணவினை உண்ட பிறகே மற்ற இனிப்பு வகைகளைக் கூட அருந்துவர்.
அந்த நாள் முழுவதும், வண்ணங்களால் சூழ வாசலில் ரங்கோலி கோலமிட்டு, “பஞ்சாங்க சரவணம்” என்னும் “பஞ்சாங்கம்” படித்து அந்த வருடத்தின் தன்மையை தெரிவிப்பார்கள்..!
யுகாதித் தினத்தில் , நல்ல காரியங்கள் துவங்கினால் நிச்சயம் வெற்றி கிட்டும் என்றும் நம்பப்பட்டு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
 அனைவருக்கும், “யுகாதி சுபக்காஞ்சலு”


யுகாதித் திருநாள் வாழ்த்துகள்...

யுகாதி ஆன்று ராமாயணக்கதை ஒன்றை உதாரணமாகச் சொல்வார்கள்.
ராமர் காட்டிற்கு புறப்பட்டார். மகனின் பிரிவைத் தாங்காத தாய் கவுசல்யா அவருடன் காட்டுக்கு வருவதாக அடம் பிடித்தாள்."
"அம்மா! கணவருக்குப் பணிவிடை செய்வதே மனைவிக்குரிய தர்மம். நீங்கள் அப்பாவைக் கவனித்துக் கொண்டு இங்கேயே இருங்கள்,'' என்று பக்குவமாக எடுத்துச் சொல்லி தாயை சமாதானப்படுத்தினார் ராமர்..!
இதையடுத்து சீதையும் அவருடன் வருவதாக கிளம்பிய போது, ""சீதா நீ அங்கே வராதே. கல்லிலும் முள்ளிலும் சிரமப்படுவாய். வேண்டாம்,'' என்றார்.
""ஸ்ரீராமா! என்ன நியாயம் இது? உங்கள் அம்மா உங்களுடன் கிளம்பிய போது, கணவனைக் காப்பது மனைவியின் கடமை என்று தர்மத்தைப் போதித்தீர்கள். அதே தர்மம் தானே எனக்கும் பொருந்தும்! அம்மாவுக்கு ஒரு விதி, மனைவிக்கு ஒரு விதியா! நானும் உங்களுக்கு சேவை செய்ய வேண்டுமல்லவா! நீங்கள் இருக்குமிடமே எனக்கு அயோத்தி, நின் பிரிவினும் சுடுமோ பெரும் காடு ...! அதனால் உங்களோடு வருகிறேன்,'' என்று சாதுர்யமாக பதிலளித்தாள்.
ராமரால் பேச முடியவில்லை. மனைவியை அழைத்துச் செல்ல சம்மதித்தார் ...
எந்தக்காலத்தில் தான் தன் மனைவியை கணவனால்
பேச்சில் வெல்லமுடிந்திருக்கிறது..!??
கணவனுக்காகமனைவி, மனைவிக்காக கணவன், குடும்பத்துக்காக பிள்ளைகள் என்ற ஒற்றுமை தத்துவத்தை இந்தக்கதை போதிக்கிறது.
யுகாதியன்று இதுபோல ராமாயண சம்பவங்கள் மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படும். குடும்ப ஒற்றுமை ஓங்க யுகாதி நன்னாளில் சபதமேற்கும் நன்னாளாகும்..!
தொடர்புடைய பதிவு கள்
யுகாதித் திருநாள்
வசந்தத்திருநாள் யுகாதி..


யுகாதி அன்று விரதமிருந்து வழிபாடு செய்வது எப்படி?

மனித வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறிவரும் என்பதையும் அதைப் பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த யுகாதி பண்டிகை உணர்த்துகிறது.
ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில் வருகிற அமாவாசைக்கு மறுதினம் சாந்திரமான வருடம் என்ற பெயரில் சந்திரன் பன்னிரெண்டு அம்சங்களோடு திகழும் மாதங்கள் தொடங்குகின்றன. அதன்படி ஒவ்வொரு அமாவாசைக்கு மறு நாள் வரும் பிரதமை முதல் அடுத்துவரும் அமாவாசை வரை கணக்கிடப்படும் மாதங்களுக்கு வடமொழியில் ஒவ்வொரு பெயர் உண்டு. இந்த மாதங்களின் பெயர்கள் பவுர்ணமி எந்த நட்சத்திரத்தின் நாளில் நிகழ்கிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரில் அழைக்கப்படும்.
எப்படிக் கொண்டாடுவது?

பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் யுகாதி கொண்டாட வேண்டும். அன்று அமாவாசை ஒரு நாழிகை இருந்தால்கூட மறுநாள்தான் யுகாதி கொண்டாட வேண்டும் என்பது விதி. மனித வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறிவரும் என்பதையும் அதைப் பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த யுகாதி பண்டிகை உணர்த்துகிறது.
காலையில் எழுந்து புனித நீராடி, கௌரி தேவியை நினைத்து, தீபம் ஏற்றி வழிபட்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். புதிய பஞ்சாங்கத்தைப் பூஜையறையில் வைத்து, அதைச் சந்தனம், குங்குமம், மலர்களால் அலங்கரிக்க வேண்டும். தொடர்ந்து ஏழு ருசியுள்ள பச்சடியைச் செய்ய வேண்டும். இதற்கு சத்ருஜி (சத் - ஏழு) பச்சடி என்று பெயர். இதில் உப்பு, புளிப்பு, இனிப்பு, கசப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு ஆகிய ருசிகள் இருக்க வேண்டும்.
விநாயகர், பெருமாள், கௌரி அம்பிகை மற்றும் இஷ்ட தெய்வம், குலதெய்வங்களை முன்வைத்து ஒப்பட்லு என்கிற விசேஷ போளி, புளியோதரை, பால் பாயசம் செய்து ஏழு ராகங்கள் பாடி தெய்வங்களுக்குப் படையல் செய்து, ஆரத்தி செய்வது வழக்கம். அனைவரும் அஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு பிரசாதம் எடுத்துக்கொண்டு, மங்கள ஆரத்தி செய்வது வழக்கம்.
யுகாதி பண்டிகை ஒரு ஆண்டாகிய யுகத்தின் தெய்வ அனுகூலத்தையும் உலக மக்களின் வாழ்க்கை நலன்களையும் முன்னதாகவே அறிந்துகொள்ளக்கூடிய காலக்கண்ணாடியாக திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்ற ஐந்து விதமான அங்கங்களைக் கொண்ட மங்களகரமான பஞ்சாங்கப் படனமாக மலர்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக