உலக பட்டினி தினம் மே 28.
🍝 உலக பட்டினி தினம் ஆண்டுதோறும் மே 28ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. தனிஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று அப்போதே பாரதியார் பாடினார்.
🍝 ஆனால் உயிர்கொல்லி நோய்களால் ஆண்டுதோறும் இறப்போர் எண்ணிக்கையை காட்டிலும்இ பட்டினியால் ஏற்படும் மரணங்களே அதிகம் என ஐ.நா அறிக்கை வெளியிட்டுள்ளது.
🍝 மேலும் ஒருமனிதன் ஆரோக்கியத்துடன் இருக்க நாள்தோறும் 2இ100 கலோரி உணவுகள் கிடைக்க வேண்டும் என்று கூறுகிறது. எனவேஇ பசி மற்றும் வறுமைக்கு நிலையான தீர்வுகளை கொண்டுவர வேண்டும் என்பதுதான் இத்தினத்தின் நோக்கமாகும்.
பட்டினியை ஒழிப்போம்...
இன்று மே 28-ம் தேதி உலக பட்டினி தினம். ‘தனிஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று பாடினான் பாரதி. பசி, உணவின் முக்கியத்தை உணர்த்தவே இத்தனை ஆவேசத்துடன் அவன் கவிதை வடித்தான். பசி ஒரு பெருங்கொடுமை, ஒருவரை உயிரோடு கொல்லும் மரணத்திற்குச் சமம். எய்ட்ஸ், எபோலா போன்ற உயிர்கொல்லி நோய்களால் ஆண்டுதோறும் இறப்போர் எண்ணிக்கையை காட்டிலும், பட்டினியால் ஏற்படும் மரணங்களே அதிகம் என ஐ.நா அறிக்கை வெளியிட்டுள்ளது. பட்டினி குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் உணவு மற்றும் வேளான்அமைப்பு(F.A.O) கடைசியாக 2013-ல் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.
உலகில் 81 கோடி மக்கள் இன்னும் பட்டினியுடன் வாழ்கின்றனர். 79.1 கோடி மக்கள் அதாவது 98 சதவீதம் வளர்ந்துவரும் நாடுகளில் உள்ளனர்.உலகில் 8 பேரில் ஒருவர் பசியோடு ஓருவேளை உணவுக்கு கையேந்தி வாழ்கிறார்.ஆசியபசிபிக் பிராந்தியத்தில் 52 கோடி மக்கள், ஆப்பிரிக்காவில் 3 கோடி மக்கள், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் 4 கோடி மக்கள், வளர்ச்சியடைந்த நாடுகளில் 1.5 கோடி மக்கள் பட்டினியில் வாழ்கிறார்கள். உலகில் ஊட்டச்சத்துக்குறைவால் 5 வயதுக்குட்பட்ட 71 லட்சம் குழந்தைகள் ஆண்டுதோறும் உயிரிழக்கின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் 66 சதவீதம் பட்டினி அதிகரித்துள்ளதாக உலக பட்டினி குறியீட்டெண் பட்டியல் (Global hunger index list) தெரிவிக்கிறது.
பட்டினிச் சவாலை அதிகமாக ஆசியா, மேற்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்க கண்டங்களில் உள்ள நாடுகளில் அதிகஅளவில் எதிர்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.எப்.பி.ஆர்.ஐ.) வெளியிட்டுள்ள 78 நாடுகளின் பட்டியலில் இந்தியா இன்னமும் 63-வது இடத்திலேயே உள்ளது. அந்த பட்டியலில் சீனா 1990-முதல் 2013- ஆண்டுக்கும் இடையே பட்டினி விகிதத்தை 58 சதவீதம் குறைத்துள்ளது. 1990-இல் 13 புள்ளிகளைப் பெற்றிருந்த சீனா, 2013-ல் 5.5 புள்ளிகளாக குறைத்துள்ளது. அதே காலகட்டத்தில் இந்தியா 32.6 புள்ளிகளில் இருந்து 21.3 ஆக மட்டுமே குறைத்துள்ளது.
இந்தியாவில் ஐந்து வயதுக்குள்பட்ட 18 சதவீத குழந்தைகளுக்கும், 36 சதவீத இளைஞர்களுக்கும் சரிவிகித உணவு கிடைப்பதில்லை என்பது தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தெரிய வந்துள்ளது. 1970-களில் இருந்தே வறுமையை ஒழிப்போம் என்று அரசியல் கட்சிகளால் எழுப்பப்படும் கோஷமும் மாறவில்லை, வறுமையும் மறையவில்லை. பசியையும் நோயையும் வெல்ல முடியாத அரசுகள் இருந்தும் இல்லாத நிலைதான். அந்த வகையில் வறுமையும் பட்டினியும்தான் தேசிய அவமானமாகக் கருதப்படுகிறது.
ஒருநாளுக்கு எவ்வளவு தேவை...: ஒரு மனிதனின் வயது, பாலினம், உடலமைப்பு, செயல்பாடுகள் வாழுமிடத்தைப்பொறுத்து உணவின் அளவு மாறும். ஐ.நாவின் கணக்கின் படி, ஒருமனிதன் ஆரோக்கியத்துடன் இருக்க நாள்தோறும் 2,100 கலோரி உணவுகள் கிடைக்க வேண்டும் என்று கூறுகிறது.
இன்று மே 28-ம் தேதி உலக பட்டினி தினம்.
உலகில் 81 கோடி மக்கள் இன்னும் பட்டினியுடன் வாழ்கின்றனர். 79.1 கோடி மக்கள் அதாவது 98 சதவீதம் வளர்ந்துவரும் நாடுகளில் உள்ளனர். உலகில் 8 பேரில் ஒருவர் பசியோடு ஓருவேளை உணவுக்கு கையேந்தி வாழ்கிறார்.ஆசியபசிபிக் பிராந்தியத்தில் 52 கோடி மக்கள், ஆப்பிரிக்காவில் 3 கோடி மக்கள், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் 4 கோடி மக்கள், வளர்ச்சியடைந்த நாடுகளில் 1.5 கோடி மக்கள் பட்டினியில் வாழ்கிறார்கள். உலகில் ஊட்டச்சத்துக்குறைவால் 5 வயதுக்குட்பட்ட 71 லட்சம் குழந்தைகள் ஆண்டுதோறும் உயிரிழக்கின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் 66 சதவீதம் பட்டினி அதிகரித்துள்ளதாக உலக பட்டினி குறியீட்டெண் பட்டியல் தெரிவிக்கிறது.
பட்டினிச் சவால் அதிகமாக ஆசியா, மேற்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்க கண்டங்களில் உள்ள நாடுகளில் அதிகஅளவில் எதிர்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.எப்.பி.ஆர்.ஐ.) வெளியிட்டுள்ள 78 நாடுகளின் பட்டியலில் இந்தியா இன்னமும் 63-வது இடத்திலேயே உள்ளது. அந்த பட்டியலில் சீனா 1990-முதல் 2013- ஆண்டுக்கும் இடையே பட்டினி விகிதத்தை 58 சதவீதம் குறைத்துள்ளது. 1990-இல் 13 புள்ளிகளைப் பெற்றிருந்த சீனா, 2013-ல் 5.5 புள்ளிகளாக குறைத்துள்ளது. அதே காலகட்டத்தில் இந்தியா 32.6 புள்ளிகளில் இருந்து 21.3 ஆக மட்டுமே குறைத்துள்ளது.
இந்தியாவில் ஐந்து வயதுக்குள்பட்ட 18 சதவீத குழந்தைகளுக்கும், 36 சதவீத இளைஞர்களுக்கும் சரிவிகித உணவு கிடைப்பதில்லை என்பது தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தெரிய வந்துள்ளது. 1970-களில் இருந்தே வறுமையை ஒழிப்போம் என்று அரசியல் கட்சிகளால் எழுப்பப்படும் கோஷமும் மாறவில்லை, வறுமையும் மறையவில்லை. பசியையும் நோயையும் வெல்ல முடியாத அரசுகள் இருந்தும் இல்லாத நிலைதான். அந்த வகையில் வறுமையும் பட்டினியும்தான் தேசிய அவமானமாகக் கருதப்படுகிறது.
உலகில் பசியினால் வாடுவோர் தொடர்பிலான தகவல்கள் சில…!
⌘ உலக மக்களில் 900 மில்லியன் முதல் 1 பில்லியன் வரையிலானோர் பசி, பட்டினியின் பிடியில் வாழ்வதாக ஐ.நா அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதாவது உலக மக்களில்(13.1 சதவீதமானோர்) எட்டுப் பேரில் ஒருவர் பசி, பட்டினியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நாளொன்றில் உள்ளெடுக்க வேண்டியதென பரிந்துரைக்கப்பட்டுள்ள 2100 கலோரியினை விடவும் குறைவான போசணையினை உட்கொள்கின்றனர்.
⌘ எயிட்ஸ், மலேரியா, சயரோகம் ஆகியவை காரணமாக வருடாந்தம் இறப்போரினை விடவும் பசி, பட்டினியின் காரணமாக இறப்போரே அதிகமாகும். உலகில் நாளாந்தம் 25000+ பேர் பசி, பட்டினி, வறுமையின் காரணமாக இறக்கின்றனர்.
⌘ 2010ம் ஆண்டு பசி, பட்டினியின் காரணமாக 7.6 மில்லியன் குழந்தைகள் அதாவது நாளொன்றுக்கு 20,000+ குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
⌘ உலகில் பசியின் பிடியில் வாழ்வோரில் 98 சதவீதமானோர் குறைஅபிவிருத்தி நாடுகளிலேயே வாழ்கின்றனர். உலகில், பசியானது தாயிலிருந்து மகவுக்கு கடத்தப்படுகின்ற வழிமுறை தொடர்கின்றது. வருடாந்தம் 17 மில்லியன் குழந்தைகள் நிறை குறைந்து பிறக்கின்றனர், ஏனெனில் தாய்மார் போசணைக்குறைப்பாடு கொண்டவர்களாக காணப்படுகின்றமையாலாகும்.
⌘ அபிவிருத்தி அடைந்துவருகின்ற நாடுகளில், 15 குழந்தைகளில் ஒன்று பசியின் காரணமாகவே உயிரிழக்கின்றது.
⌘ உலகில் பசியின் பிடியில் வாழ்வோரில் 62.4 சதவீதமானோர் ஆசியா/தென் பசுபிக் நாடுகளிலேயே வாழ்கின்றனர்.
⌘ ஆசியா மற்றும் ஆபிரிக்க குழந்தைகளில் 20 சதவீதமானோர் தமது வயதிற்கேற்ற உடல் நிறையினை கொண்டிருக்கவில்லை.
⌘ 2012ம் ஆண்டுக்கான உலக பசி சுட்டெண்ணின்(Global Hunger Index) பிரகாரம் பசி, பட்டினியால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளாவன;
1) புரூண்டி ╍ 37.1
2) எதித்திரியா ╍ 34.4
3) ஹெய்ட்டி ╍ 30.8
4) எதியோப்பியா ╍ 28.7
5) சாட் ╍ 28.3
6) கிழக்கு தீமோர் ╍ 27.3
7) மத்திய ஆபிரிக்க குடியரசு ╍ 27.3
8) கொமொரஸ் ╍ 25.8
9) சியராலியோன் ╍ 24.7
10) யெமன் ╍ 24.3
15) இந்தியா ╍ 22.9
43) இலங்கை ╍ 14.4
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக