உலக பத்திரிகை சுதந்திர நாள் ( World Press Freedom Day ) மே 3.
உலக பத்திரிகை சுதந்திர நாள் ( World Press Freedom Day ) என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் "மனித உரிமைகள் சாசனம்" பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் நாளன்று பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆபிரிக்கப் பத்திரிகைகளால் கூட்டாக 1991 ஆம் ஆண்டு இந்நாளிலேயே "பத்திரிகை சுதந்திர சாசனம்" ( Declaration of Windhoek) முன்வைக்கப்பட்டது. இது 1991 ஆம் ஆண்டு யுனெஸ்கோ (UNESCO) அமைப்பினால் நடாத்தப்பட்ட பொதுக் கூட்டத்தின் 26 ஆம் அமர்வில் சிபாரிசு செய்யப்பட்ட ,'உலகின் சகல பிராந்தியங்களிற்குமான பேச்சு மற்றும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்திற்கானதும், ஊடகச் சுதந்திரத்தினதும் பாதுகாப்பிற்கும் மேம்படுத்தலிற்குமான ஆணை' என்ற தொனிப் பொருளில் பரிந்துரைக்கப்பட்ட கட்டளையின் நிமித்தமாக உருவானது.
இந்நாளில் ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு ஆண்டுதோறும் யுனெஸ்கோ நிறுவனத்தினர் யுனெஸ்கோ/கிலெர்மோ கானோ உலக பத்திரிகை சுதந்திர விருது வழங்கிக் கௌரவிக்கின்றனர். இவ்விருது
கொலம்பியப் பத்திரிகையாளர்
கிலெர்மோ கானோ இசாசா என்பவரின் நினவாக வழங்கப்பட்டு வருகிறது. இவர் 1986 ஆம் ஆண்டு டிசம்பர் 17 இல் அவரது அலுவலகம் முன்பாக வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவரின் கொலையின் பின்னரே பத்திரிகை சுதந்திரம் தொடர்பான பேச்சு வலுப்பெற்றது.
இந்நாள் அன்று, உலக அமைதிக்காகவும், பேச்சுச் சுதந்திரத்திற்காகவும் மற்றும் பத்திரிக்கை தர்மத்தினூடாகவும் பல இன்னல்களைத் தாண்டிப் போராடிய பத்திரிகை எழுத்தாளர் ஒருவருக்கு 25,000
டொலர் பெறுமதியான பரிசு வழங்கப்படுகின்றது. சுமார் 14 நபர்களைக் கொண்ட குழுவால் குறிப்பிட்ட இத்தெரிவு நடைபெறுகிறது.
உலக பத்திரிகை சுதந்திர நாள் - புதனை பற்றிய ரகசியங்கள்!
சென்னை: இன்று மே 3 புதன் கிழமை சர்வதேச பத்திரிகையாளர் தினமாக உலகமெங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது. பத்திரிகை நிறுவனங்கள், அல்லது ஊடக நிறுவனங்கள் செய்திகளை, கருத்துக்களை சுதந்திரமாக எவ்வித அச்சுறுத்தல்களும் தடைகளுமின்றி உள்ளதை உள்ளபடி மக்களுக்கு வெளியிடுவதை பத்திரிகை சுதந்திரம் என்று வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றது.
இத்தினம் பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் 'மனித உரிமைகள் சாசனம்' பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் நாளன்று பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆபிரிக்கப் பத்திரிகைகளால் கூட்டாக 1991 ஆம் ஆண்டு இந்நாளிலேயே 'பத்திரிகை சுதந்திர சாசனம்' முன்வைக்கப்பட்டது. இந்நாளில் ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு ஆண்டுதோறும் யுனெஸ்கோ நிறுவனத்தினர் யுனெஸ்கோ ஃகிலெர்மோ கானோ உலக பத்திரிகை சுதந்திர விருது வழங்கி கௌரவிக்கின்றனர்.
2018ம் ஆண்டிற்கான விக்கிபீடியாவின் பத்திரிக்கை சுதந்திர அட்டவனையில் கண்டுள்ளபடி உலகளவில் பத்திரிக்கை சுதந்திரம் மிக்க நாடுகளில் நார்வே முதலிடத்தை பெற்றுள்ளது. மேலும் புள்ளிவிவரப்படி 2002ம் ஆண்டிலிருந்து 2012ம் ஆண்டு வரை தொடர்ந்து முதலிடத்தை பெற்றுவருகிறது. பிறகு 2017ம் ஆண்டிலிருந்து மீண்டும் முதலிடத்தை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த பத்திரிக்கை சுதந்திர அட்டவனையில் இந்தியா 138வது இடத்தில் இருக்கிறது.
ஜோதிடத்தில் பத்திரிக்கை சுதந்திரம்:
ஜோதிடத்தில் பத்திரிக்கைம், மீடியா, தகவல் தொடர்பு ஆகியவற்றை குறிக்கும் பாவம் கால புருஷனுக்கு மூன்றாம் பாவமான மிதுனமாகும். காரக கிரகம் இன்றைய நாயகர் புதன் தாங்க!
சுதந்திரத்திற்க்கு காரக பாவம் கால புருஷனுக்கு இரண்டாம் பாவமான ரிஷபம் மற்றும் ஜாதக இரண்டாம் பாவம் என்கிறது பாரம்பரிய ஜோதிடம். இந்தியாவின் சுதந்திர தின ஜாதகத்தில் கால புருஷனுக்கு இரண்டாம் பாவமான ரிஷபமே லக்னமாகி நிற்பது குறிப்பிடத்தக்கது.
நார்வேயின் சுதந்திர தின (7-6-1905 காலை 10.30 மணி) ஜாதகத்தை ஆய்வு செய்யும் பொழுது சிம்ம லக்னமாகி லக்னாதிபதி சூரியனும் இரண்டாம் வீட்டதிபதி புதனும் சேர்க்கை பெற்று கால புருஷனுக்கு இரண்டாம் வீடான ரிஷபத்தில் நிற்பதை காண முடிகிறது. மேலும் பூர்வ புண்ய ஸ்தானதிபதி குரு பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரனோடு சேர்க்கை பெற்று லக்னத்தை பார்பதும் சிறப்பான அமைப்பாகும்.
மேலும் பத்திரிக்கை, மீடியா மற்றும் தகவல் தொடர்பை குறிக்கும் புதன் ஐந்து வர்கங்களில் வர்கோத்தமம் பெற்று சிம்மாசனாம்சம் பெற்றும் நிற்பதும் நார்வே பத்திரிக்கை சுதந்திரத்தில் முதல் இடத்தில் தொடர்ந்து நிற்பதற்க்கு காரணமாகிறது.
அதே நேரத்தில் 138வது இடத்தில் நிற்க்கும் இந்தியாவின் சுதந்திர தின ஜாதகத்தில் ரிஷப லக்னமாகி இரண்டிற்க்குறிய புதன் மூன்றில் சனியுடன் சேர்க்கை பெற்று நிற்பதும், கேதுவின் பார்வை பெற்று நிற்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே நமது நாட்டில் பத்திரிக்கை சுதந்திரம் என்பது இன்னும் முழுமை பெறவில்லை என்றே கூறவேண்டும். சந்திரன், சனி, சுக்கிரன், சூரியன் ஆகிய கிரகங்களுடன் சேர்க்கை பெற்று மூன்றாம் வீட்டில் நிற்க்கும் புதன் நமது நாட்டில் பத்திரிக்கை துறை பல நேரங்களில் தன்னிச்சையாக செயல்பட முடியாமல் அரசியல், பண படைத்தவர்கள் ஆகியவர்களிடம் கட்டுண்டு கிடப்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளது.
என்றாலும், நமது நாட்டிலும் நேர்மையுடனும் தர்மத்துடனும் பல பத்திரிக்கைகள் இருந்திருக்கிறது என்பதை குறிப்பிட வேண்டும். அத்தகைய நேர்மையான பத்திரிக்கையாளர்களை நினைவு கூறும் தினமாக போற்றுவோம்.
- அஸ்ட்ரோ சுந்தரராஜன் ,9498098786
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக