பக்கங்கள்

வெள்ளி, 1 ஜூன், 2018

உலக பாலியல் தொழிலாளர்கள் தினம் ஜூன் 2.



உலக பாலியல் தொழிலாளர்கள் தினம் ஜூன் 2.

1971 ஜீன் 2ந்தேதி முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் உலக பாலியல் தொழிலாளர்கள் தினமாய் அனுசரிக்கப்படுகிறது. அதற்கு முந்தைய வருடம்.. அதாவது, 1976ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி, பிரான்சு நாட்டின் லியோன் நகரில் உள்ள ஒரு தேவாலயத்தில் நூற்றுக்கணக்கான பாலியல் தொழிலாளர்கள் ஆவேசமாக புகுந்தார்கள்.
தங்களின் கொடுமையான அவல வாழ்க்கைக்கு தீர்வு காண வேண்டும் எனும் கோரிக்கை உள்ளிட்ட பல வாழ்வியல் உரிமைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்தினார்கள். எட்டு நாட்களுக்கு பின்,அந்த தேவாலயத்தில் நுழைந்த பிரான்சு நாட்டு காவல்துறை அவர்களை அப்புறப்படுத்தியது.
ஆனாலும் பாலியல் தொழிலாளர்களுக்கான சில உரிமைகள் அளிக்கப்பட்டன. அந்த வெற்றியை கொண்டாடும் விதத்தில் தான் ஜீன் 2ந்தேதி பாலியல் தொழிலாளர் தினமாய் அனுசரிக்கப்படுகிறது.


பாலியல் தொழிலாளிகளுக்கு சிவப்புக் குடை பிடிக்கலாமா?
தே னீக்கள் தீண்டத் துடிக்கும் தனது தேகத்தை, வானவில்லுக்கே வண்ணம் தரும் தன்னுதடை, தன் தாய் தந்துபோன உயிர்நாடியை, சொந்தங்களோடு கழிக்க வேண்டிய அந்திப்பொழுதை, எவனோ ஒருவன் தரும் காசுக்காக விற்கிறாள் அவள். அவள் விற்பது உடலை மட்டுமல்ல. தனது ஆசைகளை, இன்பங்களை, சொந்தங்களை, காதலை. ஆனால் அவள் கற்பை விற்பதை மட்டும்தான் பார்க்கிறது இச்சமூகம். அதனால் தான் அவளுக்கு இந்தப் பெயரையும் வைத்துள்ளது – பாலியல் தொழிலாளி என்று.
அவளின் மொத்த அங்கத்தையும் கூறு போட்டு அருந்தும் ஆணினம் அவளை மனித பிறப்பாய் பார்ப்பதில்லை போல. எத்தனை எத்தனை இன்னல்களை அவள் இங்கு சந்திக்க வேண்டியுள்ளது. அவளுக்கு எதிராக நடக்கும் தீண்டல்கள், பலாத்காரங்கள், கொலைகள், அவளை பூனையிடமிருந்து உயிரைக் காக்க ஓடும் எலியைப் போல் இன்று ஓடவைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் இவ்வுலகில் அவளின் நலனைப் பற்றிக் கவலைப்படும் சில உயிர்களும் பிறந்துள்ளன.
அவளை வன்கொடுமைகளிலிருந்து காப்பாற்ற நினைக்கும், அவளுக்கு குரல் கொடுக்கவும், போராடவும் தயாராய் இருக்கும் ஒருசிலர் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவளைப்பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்நாள் – சர்வதேச பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு தினம்.
ஆண் இனமும் விதிவிலக்கல்ல
2012-ம் ஆண்டில் நடந்த கணக்கெடுப்பின் படி, உலகம் முழுதும் சுமார் 4 கோடி பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். அதில், அமெரிக்காவில் மட்டும் 10 லட்சம் பேர் உள்ளனர். 75 சதவிகிதம் பாலியல் தொழிலாளர்களின் வயது 13-25. இதைக் கண்டு ஏளனம் செய்ய ஆண்களுக்கு ஒன்றுமேயில்லை. காரணம் சுமார் 80 லட்சம் ஆண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். உலகின் பல நாடுகளில் பாலியல் தொழில் அனுமதியுடனேயே நடக்கிறது. அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. நமது நாட்டில் கூட பாலியல் தொழில் செய்வது குற்றம் என்று சட்டத்தில் இல்லை. உடலுறவுக்கு ஒருவரை அழைப்பதே குற்றம். அப்படியிருக்கையில் அதிகார வர்க்கம் முதற்கொண்டு பொதுஜனம் வரை இவர்களை இழிக்காதவர்களும் தாக்காதவர்களும் இல்லை. அமெரிக்காவில் ஆண்டுதோறும் ஒரு லட்சத்துக்கு 29 டாக்சி டிரைவர்கள் கொல்லப்படுகின்றனர். அதேபோல் மதுபானக் கடை பெண் ஊழியர்களில் ஒரு லட்சத்துக்கு 4 பேர் கொல்லப்படுகின்றனர். ஆனால் பாலியல் தொழில் செய்பவர்களில் ஒரு லட்சத்துக்கு சுமார் 204 பேர் கொல்லப்படுகின்றனர். காரணம் அவர்களை பாதுகாக்கவும், குரல் கொடுக்கவும் யாரும் இல்லை என்பதே.
இன்று நாம் டிராபிக் போலீசிடம் லஞ்சம் கொடுப்பதற்கும், பொறியியல் கல்லூரிகளில் லட்சங்களில் டொனேஷன் கொடுக்கவும் காரணங்கள் சரியானது என்று கருதுகிறோம். ஒவ்வொருவரின் செயலுக்கும் தவறுக்கும் காரணம் உண்டென்றில், அவர்கள் இந்நிலைக்குத் தள்ளப்படவும் காரணம் உண்டுதானே? அக்காரணம் அறிந்து கொள்ளவும், அதைப் புரிந்து கொள்ளவும் இங்கு யாரும் தயாராய் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
பிச்சை எடுப்பவர்களுக்கும், கடன் வாங்குபவர்களுக்கும் மட்டுமல்ல இவர்களுக்கும் உடல்நிலை சரியில்லாத தாய் தந்தை, கஷ்டப்படும் குடும்பம் என எல்லோமும் உண்டு. குடும்பப் பிரச்னைகளுக்காக எங்கெங்கோ திரிந்து யாரும் உதவாத நிலையில், இவர்கள் கண்களில் பணத்தைக் காட்டுவது ஏனோ காமத்தின் எதிர்ப்பார்ப்பில் திரியும் ஒரு கொடிய மிருகம்தான். உயிர்கொல்லி நோய்கள் தாக்கும் என்று தெரிந்திருந்தும் ஒருத்தி அதைச் செய்கிறாள் என்றால் அவள் நிச்சயம் எதிர்பார்ப்பது உடல் சுகம் அல்லவே. அவளுக்கான வாய்ப்பும் அன்பும் மறுக்கப்பட்டதால்தானே அவள் அந்த முள் பாதையை தேர்ந்தெடுக்கிறாள். உறவினர்களால் கைவிடப்பட, பெண்ணுக்கான அடையாளங்கள் முழுமையடையாத நிலையிலும் கூட பல சிறுமிகள் இதற்கு முற்படுகிறார்கள். ஏன் இந்தக் கொடுமை. யார்தான் இவர்களுக்கான வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதம் அளிப்பது?
பெண்களே ஒதுக்காதீர்கள்
பாலியல் தொழில் செய்யும் பெண்களை மற்ற பெண்களே ஏளனமாய் நினைப்பதுதான் பெரும் கொடுமை. இவ்வுலகில் புலி, பூனை, மண்புழு என எந்தவொரு உயிரும் மனிதன் வாழ முக்கியம் என்கின்றனர் வல்லுனர்கள். அதில் எந்த உயிர் இல்லாவிட்டாலும் அதுவும் மனிதனின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும். இன்று பாலியல் தொழிலாளிகள் என்று ஒதுக்கப்படும் இவர்கள் இல்லை என்றால் குடிப்பழக்கத்திற்கும், போதைப்பழக்கத்திற்கும் ஆளான, ஆண்களின் வக்கிர வடிகால் விபரீத விளைவுகளை அல்லவா உருவாக்கும்?


கடந்த 10 ஆண்டுகளில் ஆண்களின் கொடூர தாக்குதலால் காயமடைந்து பலியான பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆயிரங்களில். அமெரிக்காவில் பாலியல் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக ஆண்டுதோறும் டிசம்பர் 17-ம் நாள் ‘பாலியல் தொழிலாளர்களுக்கெதிரான வன்கொடுமை எதிர்ப்பு தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. ஐரோப்பாவில் இதற்கென அமைப்புகள் பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வருகின்றன.
சிவப்புக் குடை சின்னம் பாலியல் தொழிலாளர்களின் வன்கொடுமைக்கு எதிரான சின்னமாக கடைபிடிக்கப்படுகிறது. சமீபத்தில் ஏற்பட்ட சென்னை வெள்ளத்தின் நிவாரண நிதிக்கு மும்பையைச் சார்ந்த பாலியல் தொழிலாளர்கள் இணைந்து 1 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர். அவர்களுக்கும் எல்லா மனித உணர்வுகளும் காலாவதி ஆகாமல் உள்ளது. நாம் தான் அவர்களை நம்மில் ஒருவராக ஏற்க மறுக்கின்றோம். மனிதம் என்பது எல்லோரையும் ஏற்றுக் கொள்வதுதான்.
இனியாவது அவர்களிடத்திலும் கொஞ்சம் அன்பு செலுத்துவோம். அவர்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தடுப்போம். அதற்கான உறுதியை இந்த சிவப்புக் குடை நாளில் மேற்கொள்வோம்! நன்றி விகடன்.


இந்தியாவின் பிரபல ‘ரெட் லைட்‘ ஏரியாக்கள்

பாலியல் தொழில் என்பது மிகவும் மோசமான, இந்திய கலாசாரத்துக்கு எதிரான செயலாகப் பார்க்கப்படுகிறது. நம் நாட்டில் மறைமுகமாக அங்கீகரிக்கப்பட்ட, பாலியல் தொழில் நடக்கும் இடங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் சில இடங்களில் இந்த பாலியல் தொழில் அங்கு வாழும் மக்களுக்கான பிரதான வருமானமாக இருக்கிறது.
உலகின் பல்வேறு இடங்களைப் போலவே இந்தியாவிலும் பாலியல் தொழில் மூலம் மிகப்பெரும் வருமானம் ஈட்டும் இடங்களும் உள்ளன.
சோனாகச்சி, கோல்கத்தா
சோனாகச்சியில் திரும்பிய இடமெல்லாம் பாலியல் தொழிலாளிகளைச் சந்திக்க முடியும். சோனாக்கச்சிக்கு ஆசியாவின் மிகப்பெரிய சிவப்பு விளக்கு பகுதி என்ற புகழும் உண்டு. இந்த பகுதியில் மட்டும் சுமார் 11,000 பாலியல் தொழிலாளிகள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆவணப்படத்தில் பெண் குழந்தை பிறக்கும்போதே பாலியல் தொழிலாளியாகப் பிறக்கும் கொடுமை காட்சியாக்கப்பட்டுள்ளது.
காமத்திப்புரம், மும்பை
இந்தியாவின் இரண்டாவது பெரிய சிவப்பு விளக்குப் பகுதி இந்த காமத்திப்புரம் தான். இங்கு வசிக்கும் பெண்களில் பெரும்பாலானோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த பெண்களால், அப்பகுதியில் ஒரு பீடி சுற்றும் தொழில் நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது. 1980-களில் ஹாஜி மஸ்தான், தாவூத் இப்ராகிம் ஆகியோர் இந்த காமத்திப்புரத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக இருந்துள்ளனர்.
புத்வார், புணே
புத்வார் பகுதி முழுக்க எலக்ட்ரானிக் பொருட்கள் விற்கும் கடைகளும் புத்தகக் கடைகளும் நிறைந்திருக்கின்றனர். இந்தப் பகுதியில், ஏறக்குறைய 5000 பாலியல் தொழிலாளிகள் வசிக்கின்றனர். இந்த புத்வர் பகுதி தான் இந்தியாவில் உள்ள மூன்றாவது பெரிய சிவப்பு விளக்குப் பகுதியாகும்.
மீர்கஞ்ச், அலகாபாத்
இங்கு அங்கீகரிக்கப்படாத, சட்டத்துக்குப் புறம்பாக பாலியல் தொழில் செய்யப்படுகிறது. இத்தொழிலில் ஈடுபடும் பெண்கள் சாலையில் போகும் ஆண்களை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலுக்கு அழைத்துச் செல்வதுண்டு. இந்த பகுதிக்கு செல்பவர்களுக்கு அழகான ஆபத்துகள் எப்போதும் காத்திக்கொண்டிருக்கும்.
ஜி.பி. ரோடு, டெல்லி
டெல்லியில் உள்ள ஜி.பி.ரோட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட லாட்ஜ்கள் பாலியல் தொழிலை மையமாகக் கொண்டே நடத்தப்படுகின்றன. இந்த பகுதியில் உள்ள பெரும்பான்மையான கட்டடங்களில், தரைத்தளத்தில் ஆட்டோமொபைல் போன்ற கடைகளும் மேல்தளங்களில் பாலியல் தொழிலும் நடைபெறுகின்றன.


இந்தியாவில் பாலியல் தொழில் நடக்கும் பலான இடங்கள்..!! ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்.!!

பண்டையக் காலம் முதலே தேவர்களுக்கு பணி செய்து வந்த பெண்களை தேவர் அடியவர் என்று கூறப்பட்டு வந்தனர்.
இப்போது அது கெட்ட வார்த்தையாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. பாலியல் தொழிலை அந்த சொல்லை கூறி குறிப்பிடவும் செய்கிறோம்.
இந்த பகுதில், இந்தியாவில் பாலியலை முக்கிய தொழிலாக வைத்து இயங்கி வரும் இடங்களை பற்றி பார்க்கலாம்…
சோனாகாச்சி – கொல்கத்தா :
இந்த பட்டியலில் முதலிடம் பிடிப்பது கொல்கத்தாவில் உள்ள சோனாகாச்சி. ஆசியாவிலேயே மிகப்பெரிய பாலியல் தொழில் நடக்கும் இடமாக சோனாகாச்சி திகழ்கிறது.
கொல்கத்தாவில் இது ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு 12,000-க்கும் மேற்பட்ட பாலியல் தொழில் புரிவோர் இருக்கின்றனர்.
காமாத்திபுரா – மும்பை :
இந்தியாவின் இரண்டாவது பெரிய பாலியல் தொழில் நடக்கும் இடம் காமாத்திபுரா. இங்கு பாலியல் தொழில் புரிவோர் பெரும்பாலும், வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர்களும், வறுமையில் வாடுபவர்களும்தான்.
புத்வார் பெத் – புனே :
புத்வார் பெத், இந்தியாவின் பாலியல் தொழில் புரிவோர் இடங்களில் மூன்றாவது இடத்தில உள்ளது.
இங்கு 5000-க்கும் மேற்பட்ட பாலியல் தொழிலார்கள் இருக்கின்றனர்.
இதே இடத்தில் ஏலேக்ட்ரோனிக்ஸ் பொருள்கள் விற்கப்படும் மையம் ஒன்று செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மீர்குஞ்சி (Meergunj) – அலகாபாத் :
இது மிகவும் ஆபத்தான பகுதியாக கருதப்படுகிறது. இங்கு வலுக்கட்டாயமாக பாலியல் தொழில் புரிவதாக பல முறை குற்றச்சாட்டுகள் சுமத்தப்படிருக்கின்றன.
இங்கு சட்டவிரோதமாக, சாலையில் செல்வோரை கட்டாயப்படுத்தி அழைப்பதாகவும் கூறப்படுகிறது. இது ஓர் நரகம் போன்ற இடம் என்றும் அந்த பக்கம் செல்லவே பலர் பயப்படுவர் என்றும் கூறப்படுகிறது.
ஜி.பி ரோடு – டெல்லி :
மற்றுமொரு பெரிய பாலியல் தொழில் நடக்கும் இடம், டெல்லியில் இருக்கும் ஜி.பி. ரோடு பகுதி ஆகும்.
இந்த சாலையில் நூற்றுக்கும் அதிகமாக விபாச்சாரம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்த சாலையில் அமைந்திருக்கும் பல கடைகளின் மேல் மாடிகளில் சாதரணாமாக விபச்சாரம் நடைப்பெறுகிறது.
இத்வாரி – நாக்பூர் :
இத்வாரி எனும் இவ்விடம் கங்கா ஜமுனா என்று பரவலாக அழைக்கப்படுகிறது. இங்கு கிரிமினல் குற்றங்களும் சேர்ந்து நடைப்பெருகிறது. இந்த இடம் மிகவும் ஹாட்டான இடமாக கருதப்படுகிறது.
சிவதாஸ்பூர் – வாரணாசி:
பண்டைய காலத்தில் இருந்து பாலியல் தொழில் நடைபெற்றுவரும் மற்றுமொரு இடமாக இந்த கிராமம் கருதப்படுகிறது.
இங்கு மிகவும் குறைந்த விலையில் விபாச்சாரம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக