உலக புகைப்பட நாள் (World photograph day ) ஆகஸ்ட் 19 .
புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்படக்காரர்களின் திறமையும் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
வரலாறு
20ம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உலக வரலாற்றை மாற்றியுள்ளன. உதாரணமாக, சீனவீரர்களின் ராணுவ பீரங்கியை எதிர்த்து நின்ற டேங்க் மேன் , வியட்நாம் போரை நிறுத்த காரணமாக இருந்த சிறுமியின் புகைப்படம், 1994ம் ஆண்டு, சூடானில் நிலவிய உணவுப் பஞ்சத்தை எடுத்துரைத்த குழந்தையின் போட்டோ ஆகியவற்றை சொல்லலாம்.
லூயிஸ் டாகுரே
19ம் நூற்றாண்டின் துவக்கத்தில், லூயிசு டாகுவேரே என்பவர், "டாகுரியோடைப்' எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். 1839ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ் இம்முறைக்கு ஒப்புதல் அளித்தது. ஆகஸ்ட் 19ம் தேதி , பிரான்ஸ் நாட்டு அரசு "டாகுரியோடைப்' செயல்பாடுகளை ""ப்ரீ டூ தி வேர்ல்டு என உலகம் முழுவதும் அறிவித்தது. இதை எடுத்துரைக்கும் வகையில் இன்றைய தினம் உலக புகைப்பட தினமாக கொண்டாடப்படுகிறது.
முதல் புகைப்படம்
1826 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் நைஸ்போர் நீப்ஸ் என்பவர் முதல் நிலையான நவீன புகைப்படத்தை எடுத்தார். இந்த புகைப்படம் நாளடைவில் அழிந்தது. இதன் பின், 1839ம் ஆண்டு லுõயிஸ் டாகுரே பாரிசில் உள்ள போல்வர்டு கோயிலை அருகில் உள்ள தெருவை புகைப்படமாக எடுத்தார். தனிநபர் எடுத்த முதல் புகைப்படம் இது.
புகைப்பட விருதுகள்
சிறந்த புகைப்படங்களுக்கு ஆண்டு தோறும் பல்வேறு அமைப்புகளால் விருதுகள் வழங்கப்படுகின்றன. பத்திரிக்கை துறையில் சிறந்த புகைப்படங்களுக்கு "வேர்ல்டு பிரஸ் போட்டோ' ,"டைம்' இதழ் மற்றும் புலிட்சர் விருதுகள் வழங்கப்படுகின்றன.
ஆகஸ்ட் 19-ம் தேதியானஇன்று 'உலகப் புகைப்பட தினம்'
ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாததை ஒரு புகைப்படம் உணர்த்திவிடும். எளிதாக மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலும் புகைப்படத்துக்கு உண்டு. அவ்வளவு சாதனைகளை நிகழ்த்தும் புகைப்படக்காரர்களைப் பெருமைப்படுத்தும் விதமாகவே உலகப் புகைப்பட தினம் ஆகஸ்ட் 19-ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. 20-ம் நூற்றாண்டில் எடுத்த சில புகைப்படங்கள் உலக வரலாற்றையே மாற்றியது. 1989-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி, சீன வீரர்களின் பீரங்கிகளை எதிர்த்து நின்ற 'டேங்க் மேன்' புகைப்படம், வியட்நாம் போரை நிறுத்த காரணமாக இருந்த சிறுமியின் புகைப்படம், சூடானில் உணவுப்பஞ்சத்தை எடுத்துரைத்த பிஞ்சுக் குழந்தையின் புகைப்படம் என இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
19-ம் நூற்றாண்டில் லூயிசு டாகுவேரே என்பவர்தான் 'டாகுரியோடைப்' என்ற புகைப்படத்தின் செயல்முறையை வடிவமைத்தவர். இம்முயற்சிக்கு பிரான்ஸ் அகாடமி 1839-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி அனுமதி அளித்தது. அதன் பின்னர், 1839-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு அரசு, ஆகஸ்ட் 19-ம் தேதி டாகுரியோடைப் செயல்பாட்டை உலக மக்கள் அனைவரும் இலவசமாகப் பயன்படுத்தலாம் என அறிவித்தது. அந்த ஆகஸ்ட் 19-ம் தினம்தான் உலகம் முழுவதும் புகைப்பட தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது லூயிசு டாகுவேரே பாரீஸில் உள்ள போல்வர்டு கோயிலைப் புகைப்படமாக எடுத்தார். அதுதான் தனிநபர் எடுத்த உலகின் முதல் புகைப்படம். சிறந்த புகைப்படங்களுக்கு ஆண்டுதோறும் பல அமைப்புகளால் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாகப் பத்திரிகை துறையில் சிறந்த புகைப்படங்களுக்கு 'வேர்ல்டு பிரஸ் போட்டோ' , 'டைம்' இதழ் மற்றும் புலிட்சர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த புகைப்படத்துக்காகப் பல மணிநேரங்கள் பொறுமை காக்கும் புகைப்பட நண்பர்களுக்கு 179-வது புகைப்பட தின வாழ்த்துகள்...
ஸ்மைல் ப்ளீஸ்... இன்று உலக புகைப்பட தினம்.
ஆயிரம் வார்த்தைகள் சொல்வதை ஒரு புகைப்படம் உணர்த்தி விடும். மக்களிடம் எளிதில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் புகைப்படத்துக்கு மட்டுமே உண்டு. எனவே தான் புகைப்பட தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது.
ஒரு நல்ல புகைப்படத்திற்காக மணிக்கணக்கில் ஏன் நாள் கணக்கில் கூட காத்திருக்கின்றனர் புகைப்படக்கலைஞர்கள்.
புகைப்படக்கலையின் பெருமையை அனைவரும் உணர்ந்து கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. இன்று 177வது புகைப்பட தினம் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.
உலகிலேயே
சிறந்த நிழல் படம்...
காலம் தின்ற
கண்ணாடிக்குள் கரையான் அரித்த
அட்டையில்
ஒட்டியிருக்கும்
என் அம்மாவின்
சிரித்த முகம்! என்று புகைப்பட தினத்தில் கவிதை எழுதியுள்ளார் ஒரு கவிஞர்.
கேமரா அப்ஸ்குரா என்ற கருவி மூலம் 13ம் நூற்றாண்டில் தனது பயணத்தை தொடங்கிய புகைப்படக்கலை, தற்போது பல பரிமாணங்களையும் கடந்து நிற்கிறது. டிஜிட்டல் கேமிரா, ஸ்மார்ட்போன் போன்றவற்றை பயன்படுத்தி யார் வேண்டுமெனாலும் எளிதாக புகைப்படத்தை எடுக்கலாம்.
புகைப்படக் கலை
புகைப்படம் எடுப்பது என்பது ஒரு தனிக்கலை. ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கும் சமம்... ஒரு சந்ததியினரின் வாழ்க்கை முறையை, வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ள புகைப்படங்கள் உதவுகின்றன.
புகைப்படம்: மதன்
போட்டோகிராபி
1839 ஆம் ஆண்டு சர் ஜான் ஹெர்செல் என்பவர் கண்ணாடியை பயன்படுத்தி நெகட்டிவ்களை எடுக்கும் முறையை கண்டுபிடித்தார். அவர்தான், இக்கலைக்கு போட்டோகிராபி என்று பெயர் வைத்தார்.
ஒளியின் எழுத்து
போட்டோகிராபி என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து வந்த சொல்லாகும். அதன் அர்த்தம் ஒளியின் எழுத்து என்பதாகும். அதே ஆண்டு, லூயிஸ் டாகுரே என்பவர், சில்வர் காப்பர் பிளேட்டில் பிம்பங்கள் விழும் வகையிலான புகைப்படம் எடுக்கும் முறையை அறிமுகப்படுத்தினார்.
பிலிம் புகைப்படங்கள்
1888 ஆம் ஆண்டு ஜார்ஜ் ஈஸ்ட்மேன் முதல் முறையாக பேப்பர் பிலிம்களை பயன்படுத்தி பாக்ஸ் கேமராவில் புகைப்படம் எடுக்கும் முறையை கண்டறிந்தார்.
கேமரா அறிமுகம்
1900 இல் பாக்ஸ் பிரவுனி என்ற வகை கேமராக்களை கோடாக் அறிமுகப்படுத்தினார். 35 மில்லி மீட்டர் ஸ்டில் கேமராக்களை 1913 இல் ஆஸ்கர் பர்னாக் வடிவ மைத்தார். இது புகைப்படத்துறையையே புரட்டிப்போட்டது.
டிஜிட்டல் கேமராக்கள்
முதல் டிஜிட்டல் கேமராவை சோனி நிறுவனம் 1981 ஆம் ஆண்டு தயாரித்தது. அதன் பின்பு, தற்போது வரை டிஜிட்டல் கேமராக்களில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
அதிர வைத்த ஐலான்
ஆயிரம் வார்த்தைகள் சொல்லததை ஐலான் சிறுவனின் புகைப்படம் உலகிற்கு உணர்த்தியது. சிரியாவைச் சேர்ந்த 3 வயது சிறுவன் ஐலான், தனது குடும்பத்தினருடன் படகில் துருக்கிக்கு அகதியாக வந்தபோது, படகு கடலில் கவிழ்ந்ததில் ஐலான் பரிதாபமாக உயிரிழந்தான். அவனது உடல் செப்டம்பர் 2ம் தேதி கடற்கரையில் சடலமாக ஒதுங்கிய காட்சியைப் பார்த்து உலகமே அதிர்ந்து போனது.
எளிதான புகைப்படக்கலை
முன்பெல்லாம் புகைப்படம் எடுப்பது மிகவும் அரிதான செயலாக இருந்தது. ஆனால், தற்போது தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் புகைப்படம் எடுப்பது எளிதாகி விட்டது. அனைவரும் தற்போது புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். குழந்தைகள் கூட புகைப்படம் எடுக்கின்றன.
புகைப்படம்: மதன்
செல்போன் செல்ஃபிக்கள்
கேமராக்களில் மற்றவர்கள் நம்மை புகைப்படம் எடுத்தது போய் இப்போது செல்ஃபி எடுப்பது அதிகரித்து வருகிறது. என்னதான் செல்போனில் செல்ஃபி எடுத்தாலும் கறுப்பு வெள்ளையில் அட்டென்சன் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை யாராலும் மறக்க முடியாது.
புகைப்படக்கலையின் பெருமையை அனைவரும் உணர்ந்து கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19-ம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. அதிலும், இன்று 175-வது ஆண்டு புகைப்பட தினமாகும். புகைப்பட கருவியை உருவாக்கு வதற்கான முயற்சி 13-வது நூற்றாண்டிலேயே தீவிரமடைந்து விட்டது. அப்போது கேமரா அப்ஸ்குரா என்ற கருவி கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, சிறியதும், பெரியதுமாக பல்வேறு கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. மிகப்பெரிய முன்னேற்றம் 1825-ம் ஆண்டு ஏற்பட்டது. பிரான்ஸை சேர்ந்த ஜோசப் நீப்ஸ் என்பவர் ஒரு கட்டிடத்தின் புகைப்படத்தை தனது கருவியில் படம் எடுத்தார். ஆனால், அந்த பிம்பம் 8 மணி நேரத்திற்கு பிறகு அழிந்துவிட்டது.
1839-ம் ஆண்டு சர் ஜான் ஹெர்செல் என்பவர் கண்ணாடியை பயன்படுத்தி நெகட்டிவ்களை எடுக்கும் முறையை கண்டுபிடித் தார். அவர்தான், இக்கலைக்கு போட்டோகிராபி என்று பெயர் வைத்தார். இது கிரேக்க மொழியி லிருந்து வந்த சொல்லாகும். அதன் அர்த்தம் ஒளியின் எழுத்து என்பதாகும். அதே ஆண்டு, லூயிஸ் டாகுரே என்பவர், சில்வர் காப்பர் பிளேட்டில் பிம்பங்கள் விழும் வகையிலான புகைப்படம் எடுக்கும் முறையை அறிமுகப்படுத்தினார்.
மரத்தாலான இந்த புகைப்படக் கருவியில் லென்ஸ் பொருத்தப்பட்டிருந்தது. இதற்கு டாகுரியோடைப் என்று பெயரிடப்பட்டு மிகவும் பிரபலமாக விளங்கியது. இந்த முறைக்கு பிரான்ஸ் அகாடமி ஆஃப் சயின்ஸ் ஒப்புதல் அளித்தது. இதன் செயல் பாடுகளை 1839-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ம் தேதி ‘ப்ரீ டூ தி வேர்ல்ட்’ என உலகம் முழுவதும் அறிவித்தது. அந்த நாளையே ஆண்டுதோறும் உலக புகைப்பட தினமாக கொண் டாடுகிறோம்.
1841-ல் பிரிட்டனை சேர்ந்த வில்லியம் ஹென்ரி பாக்ஸ் என்பவர் கலோடைப் என்ற முறையை அறிமுகப்படுத்தினார். இதில் நெகட்டிவ்களாக பேப்பர் கள் பயன்படுத்தப்பட்டன. அதிலிருந்து பாசிட்டிவ் இமேஜ் உருவாக்கப்பட்டது. 1851-ல் பிரெடிரிக் ஸ்காட் என்பவர் சில்வர் நைட்ரேட் பயன் படுத்தப்பட்ட வெட் கோலோடியன் செயல் முறையை கண்டறிந்தார். 1880-களில் செல்லுலாய்ட் பிலிம்களை பயன்படுத்தி புகைப் படம் எடுக்கும் கருவியை ஜான் கார்பட், ஹன்னிபால் குட்வின், ஈஸ்ட்மேன் கோடாக் ஆகியோர் தயாரித்தனர் இந்த முறையில் செல்லுலாஸ் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டது.
1888-ம் ஆண்டு ஜார்ஜ் ஈஸ்ட்மேன் முதல் முறையாக பேப்பர் பிலிம்களை பயன்படுத்தி பாக்ஸ் கேமராவில் புகைப்படம் எடுக்கும் முறையை கண்டறிந்தார். அதைத்தொடர்ந்து 1900-ல் பாக்ஸ் பிரவுனி என்ற வகை கேமராக்களை கோடாக் அறிமுகப்படுத்தினார். 35 மி.மி. ஸ்டில் கேமராக்களை 1913-ல் ஆஸ்கர் பர்னாக் வடிவ மைத்தார். இது புகைப்படத் துறை யையே புரட்டிப்போட்டது.
முதல் டிஜிட்டல் கேமராவை சோனி நிறுவனம் 1981-ம் ஆண்டு தயாரித்தது. அதன் பின்பு, தற்போது வரை டிஜிட்டல் கேமராக்களில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக