#உலக_கைம்பெண்கள்_தினம் ஜுன் 23
காலங்கள் செய்திடும் கோலங்களில்
கறைபட்டு போன கன்னிகள்.....
பூப்பூக்கும் நந்தவனத்தில் இனி...
பூவே பூக்காத காலம்...
மேகமில்லா வானத்தில் சூரியன்..
இனி வரமுடியாத நேரம்..
இதுவல்ல உங்களின் விதி
நீங்கள் நகருகின்ற சுவர்களாக ....
நாள்தோறும் இருந்தது போதும்...
நீங்கள் உணர்ச்சியற்ற உள்ளங்களுக்கு..
ஒடுங்கியிருந்தது போதும்!...
புதியதோர் சகாப்தம் படைக்க...
புறப்படு பெண்ணே புறப்படு...
நீங்கள் கையெழுத்திட்டால்...
கான உலகமும் இயங்குகின்ற நேரமிது..
நீங்கள் தரலாம் பலருக்கு வாழ்வு –அதை
நிச்சயம் உலகம் ஏற்கும்....
ஜுன் 23 ஆம் நாள் உலகம் முழுவதும் பன்னாட்டுக் கைம்பெண்கள் நாள் என ஐ.நா. சபை அறிவித்துள்ளது.
கணவன்மார்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் பெண்களின் நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இத்தேதியினை பன்னாட்டு விதவைகள் நாளாக அறிவித்துள்ளார்கள்.
இந்த நாளில் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கைம்பெண்கள் சந்தித்துவரும் பிரச்னைகள், மற்றும் இன்னல்கள் குறித்து ஐ.நா. கண்காணித்து அவர்கள் நல்வாழ்விற்கு வழி வகுக்கும்.
பன்னாட்டுக் கைம்பெண்கள் நாளை அறிவிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி உலகத் தலைவர்கள் அனைவரும் ஐ.நா.சபையில் பேசி வந்தனர்.
காபூல் நாட்டின் மறைந்த முன்னாள் அதிபர் ஒமர் பூன்கோ ஒடிம்பாவின் மனைவி சில்வையோ பூன்கோ ஒடிம்பாவின் கோரிக்கைப்படி ஐ.நா.வின் பொதுச்சபைக் கூட்டத்தில் மொத்தம் 195 பிரதிநிதிகளின் சார்பில் அமைக்கப்பட்ட 3 வது குழுவின் அறிக்கையின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து ஐ.நா. பொதுச் சபையில் 23 டிசம்பர், 2010 அன்று ஒரு மனதாகத் தீர்மானமும் நிறைவேறியது.
உலகில் எத்தனையோ பெண்கள் ஆண் துணையின்றி குடும்பத்தையும், குழந்தைகளையும் பராமரித்து வாழ்க்கையில் வெற்றியும் பெற்று வருகிறார்கள்.
பெண்களுக்கு பாதுகாப்பற்ற இன்றைய சூழலில் இத்தகைய பெண்களின் வாழ்க்கை போற்றுதலுக்கும், பாராட்டுதலுக்கும் உரியதாகும்.
அவர்கள் வாழ இந்த சமுதாயம் நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை.
அவர்கள் மேல் வீண் அவச்சொற்களை கூறாமல் இருந்தாலே அவர்களால் ஒரு சிறப்பான இடத்தை அடைய முடியும்.
இவர்கள் வாழ்வும் மலர வாழ்த்துவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக