பக்கங்கள்

திங்கள், 29 ஜூலை, 2019

தமிழகத்தில் ‘மருத்துவமனை தினம்’ ஜூலை 30.


தமிழகத்தில் ‘மருத்துவமனை தினம்’ ஜூலை 30.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1886-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ந்தேதி நாராயணசாமி-சந்திரம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகளாக பிறந்தவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. இந்தியாவின் முதல் பெண் டாக்டரான இவரது பிறந்த நாள், மருத்துவமனை தினமாக கொண்டாடப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கடந்த 16-ந்தேதி சட்டசபையில் அறிவித்தார்.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் முதல் முறையாக இன்று (செவ்வாய்க்கிழமை) மருத்துவமனை தினம் கொண்டாடப்பட உள்ளது.

இதற்காக தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இந்த தினத்தை கொண்டாடுவதற்கு அரசு சார்பில் நிதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் மருத்துவமனைகளில் செயல்பாடுகள், சாதனைகள், மற்றும் சிறப்புகளை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவமனை தினம் கொண்டாடப்பட உள்ளது.


மேலும் மருத்துவமனையின் சாதனைகள் மற்றும் அங்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து இன்று சிறப்பு கண்காட்சியும், மருத்துவமனைகளில் வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து பயனாளிகள் தெரிவிக்கவும், மருத்துவமனை ஊழியர்கள் தங்களது பணிகள் குறித்து தெரிவிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றியவர்கள் மற்றும் மருத்துவமனைக்கு உதவும் சமூக அமைப்புகளை பாராட்டவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் சென்னையில் உள்ள முக்கிய அரசு மருத்துவமனைகளான ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ராயப்பேட்டை மருத்துவமனை, எழும்பூர் கண் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளின் சாதனை குறித்த விளக்க கண்காட்சி அந்தந்த மருத்துவமனைகளில் அமைக்கப்பட உள்ளது.

மேலும் மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து அந்தந்த துறை மருத்துவர்கள் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தவும் மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

ஞாயிறு, 28 ஜூலை, 2019

உலக புலிகள் தினம் ஜூலை 29.



உலக புலிகள் தினம் ஜூலை 29.

இயற்கையை விரும்புபவர்களுக்குப் புலிகள் பிடிக்கும். புலிகளைத் தவிர்த்து விட்டு காடுகளைப் பாதுகாக்க முடியாது. புலிகளைப் பாதுகாப்பது என்பது மனிதர்களைக் காப்பது என்பதே பொருள். புலிகள் சுதந்திரமாகப் பாதுகாக்கப்பட்டால் காடுகளையும், காட்டில் வாழும் மற்ற விலங்குகளையும், உயிரினங்களின் உணவுச் சங்கிலியையும் காப்பாற்றி விட்டோம் என்றே அர்த்தம். 13 நாடுகளில்தான் இவை இருக்கின்றன. 15 முதல் 25 வருடங்கள் வரை வாழும் இவை உண்மையில் ஒரு தனிமை விரும்பி. மான்களை விரும்பி உண்ணும் புலிகள் 2 முதல் 6 குட்டிகள் போடும். இதன் கர்ப்ப காலம் 105 நாள்கள்தான். பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த புலிகளின் உடலில் உள்ள கோடுகள் ஒவ்வொரு புலிகளுக்கும் தனித்துவமானவை.

பதினெட்டு கிலோ எடை இறைச்சியை உண்ணும் இவை தனியாகவே வேட்டையாடும். தனியாக மோதினால் சிங்கத்தை வெல்லக்கூடிய ஆற்றல் படைத்தது புலி. மனிதனை விட 6 மடங்கு கூர்மையான ஆற்றல்கொண்ட புலிக்கு 30 மைல் சுற்றளவை தனது எல்லையாக கொண்டு வாழும். அதில் வேறொரு புலி வந்தால் சண்டைதான். 60 கி.மீ. வேகத்தில் ஓடும். 10 மீட்டர் வரை உயரம் தாண்டும். இந்த நீளமான புலியைப் பற்றிய தகவல்கள் எல்லாம் ஏன் என்கிறீர்களா? சர்வதேச புலிகள் தினம் இன்றுதான்.


அழிந்து கொண்டே வரும் புலிகள் இனத்தைக் காப்பதற்கு என்றே 2010-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொர் ஆண்டும் ஜூலை 29-ம் நாளை கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. மூவாயிரம் புலிகளை மட்டுமே உலகெங்கும் விட்டு வைத்திருக்கிறோம். சுமத்ரான், சைபீரியன், மலேசியன், காஸ்பியன், ஜவான், பாலினீஸ், பெங்கால், இந்தோசீனா, தென்சீன புலிகள் என 9 வகைகள் இருந்து வந்துள்ளன. அதில் ஜவான், காஸ்பியன், தென்சீன புலி வகை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. சுமத்ரான் வகை புலிகள் அழியும் நிலையில் இருக்கின்றன. இந்தியாவின் தேசிய விலங்கான புலிகளைப் பாதுகாக்க 49 காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் புலிகள் அழிந்து போவதை பெரும்பாலும் தடுக்கவே முடியவில்லை. அரசு மட்டுமல்ல, நாமும் இணைந்து விழிப்புஉணர்வை உண்டாக்கினால்தான் புலிகளின் அழிவை, இல்லை இல்லை நமது அழிவையும் தடுத்துக் கொள்ளலாம்.
நன்றி விகடன்.

சர்வதேச புலிகள் தினம் ஜூலை 29.




 சர்வதேச புலிகள் தினம் ஜூலை 29.

புலிகளுடைய வாழ்வாதாரங்கள் அழிவில் இருந்து மீட்டெடுக்கப்படுமா?

புலியைக் கண்டால் எல்லோருக்கும் ‘கிலி’ ஏற்பட்டது அந்த காலம். ஆனால் இப்போது எல்லாம் தலைகீழாகிவிட்டது. இன்று மனிதனைக் கண்டு புலிகள் அஞ்சி ஓடுகிற நிலமை ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு மனிதர்கள் புலிகளை வேட்டையாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

20-வது நூற்றாண்டு ஆரம்ப காலத்தில் ஆசியாவில் மேற்கே துருக்கியில் தொடங்கி ஆசியாவின் கிழக்கு எல்லை வரை பல நாடுகளிலும் எட்டு வகை புலிகள் இருந்தன. அதில், தற்போது பாலி இனம், காஸ்பியன் இனம் மற்றும் ஜாவன் இனம் முற்றிலும் அழிந்து விட்டது. இந்திய இனம் (ராயல் பெங்கால் புலிகள்) இந்தோசீனா இனம், சுமித்திரன் இனம், சைபீரியன் இனம் மற்றும் தெற்கு சீன இனம் ஆகியவைகளே எஞ்சியுள்ளன. இந்த இனங்களில் தற்போது 4,600 முதல் 7,200 புலிகள் மட்டுமே உலக காடுகளில் உள்ளன.


சர்வதேச அளவில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கையில் இந்திய இனமான ராயல் பெங்கால் புலிகள் 60 சதவீதம் உள்ளன. இதில் இந்திய காடுகளில் மட்டுமே 70 சதவீத ராயல் பெங்கால் டைகர் காணப்படுகின்றன. 20-ம் நூற்றாண் டின் தொடக்கத்தில் இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை 40 ஆயிரமாக இருந்தது.

அதன்பின் புலிகள் வாழ்விடம் அழிக்கப்பட்டதாலும் அவை வேட்டையாடப்பட்டதாலும் இந்தியாவின் பாரம்பரிய ராயல் பெங்கால் புலிகள் எண்ணிக்கை குறைந்து விட்டன. காடுகளின் செழிப்பு அங்கு வாழும் புலிகளின் எண்ணிக்கையை வைத்தே புரிந்து கொள்ளப்படுகிறது. Thanks Tamil Hindu

நண்பர்கள் தினம் எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது? அதன் வரலாறு என்ன?


நண்பர்கள் தினம் எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது? அதன் வரலாறு என்ன?

Friendship Day 2019 : நண்பர்கள் தின வரலாறு தெரியுமா உங்களுக்கு?

Friendship Day 2019 :  நாம் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு சிறப்பான நாளை நம் அம்மாவிற்காக, அப்பாவிற்காக, மற்றும் நம் உடன்பிறப்புகளுக்காக நாம் கொண்டாடுவது வழக்கம். ஆனால் நண்பர்கள் தினம் என்பது மிகவும் சிறப்பான நாளாகும். ஒவ்வொருவர் வாழ்விலும் மிகப் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துவது இந்த நண்பர்கள் தான்.

Friendship Day 2019 : சிறப்புக் கட்டுரை
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிறு அன்று நண்பர்கள் தினம் கொண்டாடுவது வழக்கம். இவ்வருடம் ஆகஸ்ட் 4 ஆன இன்று நண்பர்கள் தினம் கொண்டாடப்பட இருக்கிறது.

ஹிட்லரின் உற்ற நண்பர் யாரென்று தெரியுமா ?

ஒவ்வொரு நாட்டிலும் இந்த நண்பர்கள் தினம் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்பட்டு வந்தது. எடுத்துக்காட்டாக ஓஹியோவில் ஏப்ரல் 8ம் தேதி நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்தது. ஐக்கிய நாடுகளின் சபை ஜூலை 30ஐ நண்பர்கள் தினம் என்று அறிவித்தது. ஆனால் அமெரிக்கா மற்றும் இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளில் ஆகஸ்ட் முதல் ஞாயிறு அன்று நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

நண்பர்கள் தின வரலாறு
உலக நண்பர்கள் தினம் 1958ல் கொண்டாடுவதற்காக கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்கு முன்பு நண்பர்கள் தினத்தினை உருவாக்கியவர் ஜாய்ஸ் ஹால் என்பவராவார். ஆனால் இதற்கு இடைப்பட்ட காலங்களில் கூட வாழ்த்து அட்டைகள் எல்லாம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

அமெரிக்காவில் நண்பர்கள் தினம் நல்ல வரவேற்பினைப் பெற்ற பின்பு அன்றைய ஐக்கிய நாடுகள் சபையின் தலைவராக இருந்த கோஃபி அன்னன் அவர்களின் மனைவி நானே அன்னன் நண்பர்கள் தினம் பற்றிய முறையான அறிவிப்பினை வெளியிட்டார்.

ஜூலை 20 தேதியில் பராகுவே மற்றும் பிரேசில் நாடுகளில் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்தது. இந்தியா, நேபாளம், தென்னமெரிக்க நாடுகளில் இந்நாள் வாழ்த்து அட்டைகள், அன்பளிப்புகள், மற்றும் பூங்கொத்துகள் கொடுத்து கொண்டாடப்படுகிறது.

நண்பர்கள் தினம் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக் கிழமை


நண்பர்கள் தினம் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக் கிழமை.

நண்பர்கள் தினம்.இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக் கிழமையை நண்பர்கள் தினமாக கொண்டாடுகின்றனர். இந்த நாளில் நண்பர்களின் கையில் பட்டை அணிவித்து வாழ்த்து அட்டைகளுடன் பரிசு பொருட்களை கொடுத்து நட்பை பரிமாறிக் கொள்வது ‘பிரண்ட்ஷிப் டே’ இலக்கணமாக இருக்கிறது.

அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, பிள்ளைகள் போன்ற சொந்தங்களிடம் நாம் அன்பு காட்டுவது இயற்கை. ஆனால் எந்த உறவும் இல்லாமல் வரும் நட்புக்கும் நண்பர்களுக்கும் எல்லை இல்லை. தோள் கொடுப்பான் தோழன். நட்பு என்ற வார்த்தைக்கு கட்டுப்பட்டவன் நண்பன். வாழ்க்கையின் கடினமான நேரங்களில் ஆறுதலாகவும், ஊன்றுகோலாக இருப்பான் உண்மையான நண்பன். அந்த நட்பு உன்னதமானது. இன்றளவும் நட்புக்கு உதாரணமாக நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்களை பார்க்கிறோம்.

உலகம் போற்றும் ஒவ்வொரு தினத்துக்கும் ஒரு பெரிய வரலாறு உண்டு. ஆனால், நண்பர்கள் தினத்துக்கு எந்த பின்னணியும் இல்லை. நண்பர்கள் தின கொண்டாட்டத்தை 1930ம் ஆண்டு Ôஹால்மார்க்Õ வாழ்த்து அட்டைகள் நிறுவனர் ஜோய்ஸ் ஹால் என்பவர் அறிமுகம் செய்தார். ஆரம்ப காலத்தில் ஆகஸ்ட் 2ம் தேதி நண்பர்கள் தினமாக கொண்டாடப்பட்டது.

1935ம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில் நண்பர்கள் தினத்தை கொண்டாட முயற்சிகள் எடுக்கப்பட்டது. அதன்பிறகு, 1958ம் ஆண்டு பராகுவே நாட்டைச் சேர்ந்த ஆர்டிமியோ பிராக்கோ என்பவர் தனது நண்பர்களுக்கு அளித்த விருந்து ஒன்றில் உலக அளவில் நண்பர்கள் தினத்தை கொண்டாடும் முடிவை வெளியிட்டார். பல்வேறு நாடுகளில் கிடைத்த வரவேற்பு காரணமாக இன்று பெரும்பாலான நாடுகளில் நண்பர்கள் தின கொண்டாட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக இந்தியா, நேபாளம், வங்கதேசம் மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் நண்பர்கள் தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

பெரும்பாலான நாடுகளில் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினத்தை கொண்டாடுகிறார்கள். சில நாடுகளில் ஜூலை மாதத்தில் கொண்டாடுகிறார்கள். பராகுவே நாட்டில் ஜூலை 30, அர்ஜெண்டினா, பிரேசில், உருகுவே நாடுகளில் ஜூலை 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. உலக நண்பர்கள் தினத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை 1998ம் ஆண்டு அங்கீகாரம் அளித்துள்ளது.. பெற்றோர், சகோதரர் போன்ற உறவுகள் அவரவர் விருப்பத்தில் வருவதல்ல. ஆனால், நட்பு என்பது அவரவர் முடிவு செய்யும் ஒன்று. எனவே, நண்பர்களை தேர்வு செய்வதில் பொறுப்பும் கடமையும் நமக்கு உள்ளது. அந்த நட்பு நம்மை கடைசி காலம் வரை வழி நடத்துவதாக இருக்க வேண்டும்.


ஏடிஎம் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்த தினம் ஜூலை 27 (1968).



ஏடிஎம் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்த தினம்   ஜூலை 27  (1968).
               
*ஏ.டி.எம்மை முதன் முதலில் உருவாக்கியவர் ”ஜான் ஷெப்பர்ட் பாரன்”.* *இந்த ஏ.டி.எம் இயந்திரம் உருவான கதை சுவராஸ்யமானது.*
*ஒரு நாள் அவசரத் தேவைக்காக வங்கிக்கு பணம் எடுக்க சென்றபோது,வங்கி பூட்டப்பட்டு இருந்ததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார் பாரன்.*
*வீடு திரும்பிய பாரன் குளிக்க சென்றார்.*
*குளித்துகொண்டிருந்த பாரனுக்கு இன்றைக்கு அவசரதேவைக்கு பணம் எடுக்கமுடியாமல் போனதைப் பற்றிய சிந்தனையே மனதில் ஓடிக் கொண்டிருந்தது.* *அந்த சிந்தனையின் போது உதித்ததுதான் இந்த ஏ.டி,எம், இயந்திரம்.*
*1967ஆம் ஆண்டு ஜூலை் 27 அன்று வடக்கு லண்டனில் “பார்கிளேஸ் வங்கியில்” பாரன் உருவாக்கிய ஏடிஎம் முதல் முதலில் நிறுவப்பட்டது.* *ரசாயனக் குறி இடப்பட்ட சிறப்புக் காசோலையையும்,ஆறு இலக்கம் கொண்ட ” பின் ” எண்ணையும் கொண்டு அந்த இயந்திரத்தில் இருந்து பணம் பெற முடிந்தது.*
*ஆறு இலக்கம் கொண்ட ” பின் ” நம்பரை நினைவில் வைத்துக்கொள்வது சற்று சிரமமாக இருக்கிறது, எனவே அதை 4 இலக்கம் கொண்ட எண்களாக மாற்றி தாருங்கள் என்று மனைவி ”கரோலின்” கூறியதை ஏற்று,ஆறு இலக்கம் கொண்ட ” பின் ”* *நம்பரை நான்கு இலக்கமாக குறைத்தார் பாரன்.*
*இத்தனைக்கும் சொந்தக்காரரான ”ஜான் ஷெப்பர்ட் பாரன்” இந்தியாவில் ஷில்லாங்கில் பிறந்தவர் என்பது மற்றுமொரு சிறப்பு.*

புதன், 17 ஜூலை, 2019

உலக நீதி நாள் ஜூலை 17


உலக நீதி நாள் ஜூலை 17

உலக நீதி நாள் கொண்டாடுவோம்!
'எல்லாரும் ஓர் நிறை; எல்லாரும் ஓர் விலை; எல்லாரும் இந்நாட்டு மன்னர்' - என்று புளகாங்கிதம் அடைந்து பாடியவன் மகாகவி பாரதி. மண்ணில் பிறந்த எல்லோரும் சமமானவர்கள். ஆண் பெண், படித்தவர் படிக்காதவர், ஏழை பணக்காரர், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதமே இல்லாமல் வாழ வேண்டும் என்பதே எல்லா நாட்டின் சட்டமும் விருப்பமும் ஆகும். இதை நிலை நாட்டவே, ஒவ்வொரு நாட்டிலும் நீதி வகுக்கப்படுகிறது. ஒரே ஒரு தனி மனிதனுக்காவது அவனது உரிமைகள் மறுக்கப்படும்போது, அந்த நாட்டின் சட்டம் அவனுக்கு நீதி வழங்குகிறது. இதற்காகவே நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. ஒருவேளை, நீதி மறுக்கப்படும்போதோ தாமதிக்கப்படும்போதோ மக்களின் வாழ்க்கை முறை அச்சத்துக்குள்ளாகிறது.

நீதியை நிலைநாட்டவும் நீதிமன்றங்களின்மீது நம்பிக்கைகொள்ளவுமே, ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 17-ம் நாள் சர்வதேச நீதி நாள் கொண்டாடப்படுகிறது. இதே நாளில்தான், ரோமில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. இதனாலேதான், இந்த நாளை சர்வதேச நீதி நாளாகத் தேர்ந்தெடுத்தது ஐக்கிய நாடுகள் சபை. நீதிமன்றங்களின்மீது நம்பிக்கை உண்டாகவும், தவறு செய்தவர் எவராக இருப்பினும் அவருக்குத் தண்டனை அளித்திடவும், நிரபராதிகள் தண்டிக்கப்பட்டு விடாமலும் இருக்க, இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. நாடுகளைத் தாண்டியும் சர்வதேச அளவிலும் ஒரு நாட்டுக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உள்ளது என்பதையும், அது நிச்சயம் நீதியை அளிக்கும் என்பதையும் நினைவுறுத்தவே இந்த உலக நீதி நாள் கொண்டாடப்படுகிறது.

நாட்டில் நடக்கும் கொடுமைகளைத் தட்டிக் கேட்கவும், நீதிமுறைகளைத் தவறாது கடைப்பிடிக்கவும் இந்த நாளில் உறுதி ஏற்போம். சமாதானமும் சகிப்புத்தன்மையும் நம்முள் உருவாக எண்ணுவோம். இதுவே இந்நாளில் நமக்கு தேவைப்படும் நல்ல ஆயுதம்.

திங்கள், 15 ஜூலை, 2019

கல்வி வளர்ச்சி நாள் ஜூலை 15 .


கல்வி வளர்ச்சி நாள் ஜூலை 15 .

பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான  தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15  ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில்  ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர்  புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன்  கொண்டாடப்படுகிறது.

உண்மை கல்வி வள்ளல் காமராஜர்...!

மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும்  நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும்  வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா  எழுச்சியுடன் கொண்டாடப்பட வேண்டுமென்பதற்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்து  வருகிறது.

விமான நிலையம், கடற்கரை சாலை, கன்னியாகுமரி மண்டபத்திற்கு என பலவற்றுக்கு  காமராஜரின் பெயர் சூட்டப்பட்டு அவர் நினைவு போற்றப்படுகிறது. சென்னையில் உள்ள  காமராஜர் நினைவு மண்டபத்தில் அணையா விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
கல்வியறிவு தினத்தை காங்கிரஸ்,. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட  கட்சிகள் கொண்டாடி வருகின்றன.

எழுத்தறிவித்தவன் இறைவன்

அந்தக் காலத்தில் போதிய வருமானம் இல்லாததால் பிள்ளைகளை பெற்றோர் பள்ளிக்கு  அனுப்ப மிகவும் கஷ்டப்பட்டனர். பிள்ளைகளை பள்ளிக்கு வரவைக்க தான் பிறந்த  எட்டயபுரத்திலேயே பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டத்தை தொடங்கி  வைத்தார், காமராஜர். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பதற்கிணங்க, இலவச  கல்வி, மதிய உணவு, சீருடை என கல்வி வளர்ச்சி ஒன்றே இந்த நாட்டின் வளர்ச்சி என  கருதி செயல்பட்ட காரணத்தினால், கல்விக்கண் திறந்த கடவுளாக போற்றப்படுகிறார்,  பெருந்தலைவர் காமராஜர்.

நம் நாடு முன்னேற நாளும் உழைத்த தலைவர், நாட்டு மக்களுக்கு பணியாற்றுவதில்  தொய்வு ஏற்படக் கூடாது என்று கல்யாணமே செய்துக் கொள்ளாத தலைவர்.
இன்றைக்கு தமிழகம் கல்வி, ஐ.டி. தொழில்நுட்பத்தில் மேம்பட்டு திகழ காமராஜர்  ஏற்படுத்தி கொடுத்த அடிப்படை கல்வி என்றால் மிகை இல்லை.

காமராஜர் எப்போதும் எளிமையான வாழ்க்கை நடத்தினார். வேட்டி, சட்டை அணிந்தார்.  அதிகமாக பேச மாட்டார். ஆனால், மற்றவர்கள் பேசுவதை கூர்ந்து கேட்பார்.
பொற்கால ஆட்சி..!

தமிழக கிராமங்கள் பள்ளிக் கூடங்கள், பேருந்துகள், மின்சார விளக்குகளை பெற்றது  காமராஜரின் ஆட்சியில்தான்.காமராஜர் ஆட்சியில் தொடக்கக் கல்வி எழுச்சி பெற்றது.

கல்வியில் தமிழகம் முன்னோடி

இந்தியாவில் 12% பேர் மட்டுமே உயர்கல்விக்குச் செல்கிறார்கள்.ஆனால் தமிழகத்தில்  இந்த எண்ணிக்கை 17 சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ளது.படிக்காத மேதையான  காமராஜர் கல்விச் செல்வத்தை தான் பெரிதாக நினைத்தார். தனக்கு கிடைக்காத அந்தச்  செல்வம் மற்றவர்களுக்கு கிடைக்க பாடுபட்டார்.

மாணவர்கள், மதியம் உணவு கிடைக்கிறது என்பதற்காகவது பள்ளிக் கூடத்துக்கு  வருவார்கள் என்பதற்காக மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். வாழும் போதே  சிலைகள் எழுப்பப் பெற்ற தலைவர்கள் வெகுசிலரே. 1961, அக்டோபர் 9-ம் தேதி  சென்னையில் காமராஜர் சிலையை பிரதமர் நேரு திறந்து வைத்து பெருமை சேர்த்தார்.  தன் குருவான காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2-ம் தேதி (ஆண்டு 1975)  காமராஜர் காலமானார்.

கறுப்பு காந்தி என்று அழைக்கப்பட்ட காமராஜர் தியாகத்தின் மறு உருவமாக விளங்கினார்  என்றால் மிகையில்லை! 
நன்றி விகடன்.

செவ்வாய், 2 ஜூலை, 2019

ஒரு வருடத்தின் நடு நாள் ஜூலை 02.


 ஒரு வருடத்தின் நடு நாள் ஜூலை 02.

 ஜூலை 2ஆம் தேதிக்கு முன்னர் 182 நாட்களும் அதற்கு பின்னர் 182 நாட்களும் இருக்கும். நாம் பயன்படுத்தும் நாட்காட்டியானது கிரிகேரியன் காலண்டர் என குறிப்பிடப்படுகின்றது. இது ஏறத்தாழ பூமியின் தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொள்ளும் கால அளவினை கொண்டுள்ளது. சுழற்றி நேரத்திற்கும் காலண்டர் நேரத்திற்கு இருக்கும் மிகச்சிறிய வித்யாசமே நான்குவருடத்திற்கு ஒரு லீப் வருடம் வந்து ஒரு நாள் அதிகரிக்கின்றது. கிரிகேயனின் காலண்டர் கிரிகேரி என்ற போப்பின் பெயரால் அழைக்கப்படுகின்றது. இந்த காலண்டருக்கு முன்னர் ஜூலியன் காலண்டரே பயன்பாட்டில் இருந்தது. கிரிகேரி வாழ்ந்த காலம் 1502-1585. நாம் பயன்படுத்தும் மாதங்களின் பெயர்கள் அனைத்தும் லத்தின் மொழியில் இருந்து வந்தவை / தழுவியவை. தற்போது நிகழும் ஜூன் மாதமும் ஜூனியஸ் என்ற வார்த்தையில் இருந்து வந்தது தான். (ஜூனோ என்ற பெண் கடவுளை குறிக்கலாம் என நம்புகின்றனர்)

அது சரி ஏன் பிப்ரவரி மாதத்திற்கு 28 அல்லது 29 நாட்கள் வருகின்றது நியாயமாக பார்த்தால் டிசம்பருக்கு தான் இந்த மாறுதல்கள் வரவேண்டும் என்று தோன்றலாம். அதுவும் சரி தான். ஆரம்பத்தில் வருடத்தின் முதல் மாதம் ஜனவரியாகவும் கடைசி மாதம் பிப்ரவரியாகவும் இருந்தது. அப்போது பிப்ரவரியில் 23 நாட்களே இருந்தன. பின்னர் ஒவ்வொரு மாதத்திற்கு நாட்கள் இறுதியானது. பிப்ரவரி கடைசியில் இருந்தாதால் அதற்கு 28 அல்லது 29 என வந்தது. பின்னர் மீண்டும் மாதங்களின் பெயர்கள் மாற்றியமைக்கப்பட்டன.

நடு வருட நாளில் (ஜூலை 2) என்ன செய்யலாம்?
ரொம்ப உற்சாகமா புதுவருடத்திற்கு ஏகப்பட்ட தீர்மானங்களும் முடிவுகளும் எடுத்திருப்போம். அது எல்லாம் எந்த அளவிற்கு இருக்குன்னு பார்த்து மறுஆய்வு செய்து திரும்பவும் உற்சாகமா ஆரம்பிப்போமே.