முதுகுத்தண்டுவடம் குறித்த 5 முக்கியமான விசியங்கள்.
1.முதுகுத்தண்டுவடம் என்றால் என்ன? அது எப்படி இயங்குகிறது?
முதுகுத்தண்டுவடம் என்பது நமது மூளையின் கடைசி பகுதி முகுளத்திலிருந்து தொடங்கி ஆசன வாய் வரை உள்ள மத்திய நரம்பு மண்டல பகுதி. இது இன்னொரு மூளைக்கு சமமாக இயங்கக்கூடிய நமது உடலின் ஒரு பகுதி. இது மூளையில் இருந்து உடலின் பிற பகுதிகளுக்கு கட்டளைகளை எடுத்து செல்வதும் பிற பகுதிகளில் இருந்து வரும் கட்டளைகளை பெற்று அதற்கு உரிய எதிர்வினை புரிவதும் முக்கியப் பணி.
2.முதுத்தண்டுவடம் எப்படி பாதிக்கப்படும்?
i) விபத்தின் காரணமாக ஏற்படும்,
உயர்த்தில் இருந்து விழுதல்
ii) நோய் - புற்றுநோய் மற்றும் இதர சில நோய்கள்
iii) இயற்கையாக பிறப்பின் போது பாதிக்கப்பட்டு இருக்கலாம்.
3.முதுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டால் என்ன ஆகும்?
முதுத்தண்டுவடம் என்பது 33 எலும்புகள் இணைத்த முள்ளெலும்பு தொடர்ச்சி எனவே இந்த 33 எலும்பில் எங்கு பாதிக்கப்பட்டாலும் பாதிப்பிற்கு ஏற்ப உணர்வு இருக்காது. சிறுநீர் மலம் கழிக்க முடியாது.
4.முதுத்தண்டுவடம் பாதித்த பின் என்ன செய்ய வேண்டும்?
உடனடியாக மருத்துவம் செய்திட வேண்டும் பின் மறுவாழ்வு மையத்தில் தக்க பயிற்சி எடுக்க வேண்டும்.
எங்களை போன்ற முதுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட நபர்களை தொடர்பு கொண்டு உரிய ஆலோசனை பெறுவது மிக மிக முக்கியமான ஒன்று.
5.இந்த முதுத்தண்டுவடம் இவ்வாறு பாதிக்கப்படாமல் எவ்வாறு தவிர்ப்பது?
வருமுன் காப்பது மிகவும் சிறந்தது
i)அதிவேக பயணம் மிகவும் ஆபத்தானது.
ii)ஹெல்மெட் அணிவது மிக் மிக முக்கியம்.
iii)கைபேசி பேசிக்கொண்டே பயணிக்க கூடாது.
iv)சீட் பெல்ட் அணிவது முக்கியம்.
v)உயரமான இடங்களில் தக்க பாதுக்காப்பு இல்லாமல் எந்த வேலையும் செய்யக்கூடாது.
தற்போது தமிழகத்தில் எங்களை போன்ற முதுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் தோயாரமாக 2500 நபர்கள் உள்ளனர் இவர்களில் 75% நபர் விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்கள் எனவே மேல் குறிப்பிட்ட விபத்தில் ஏற்படும் முதுத்தண்டுவடம் பாதிப்பு குறைந்தால் 75% பாதிப்பு குறையும் எனவே மிக மிக கவனம்...
எதிரிக்கும் எங்களைப் போன்று இதுபோல் முதுத்தண்டுவடம் பாதிக்கப்படகூடாது. அவ்வளவு வலி மிகுந்தது எமுதுத்தண்டுவடம் பாதிப்புக்கு பின்...
மாற்றுத்திறனாளிகள் என பொதுவாக முதுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களை குறிப்பிடுவது மிக மிக தவறு காரணம்
ஒரு குறிப்பிட்ட வயதுவரை நன்றாக ஓடி ஆடி வந்தவர்கள் இவ்வாறு முதுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட பின் ஒரு இடத்தில் முடங்கிய விடுவதால் மனதளவில் சொல்ல முடியாத துயரத்தை மனதினில் சுமப்பவர்கள்
முதுத்தண்டுவடம் பாதிக்கப்படும் போது அவரது உடல்நிலை முற்றிலுமாக செயலற்றுப் போகிறது.
ஒருவரின் உதவி இல்லாமல் படுக்கையில் கூட புரண்டு பக்க முடியாது.
எனவே முதுத்தண்டுவடம் நமது உடலின் முக்கியமான ஒன்று எனவே
கவனம்
கவனம்
கவனம்......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக