பக்கங்கள்

ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

உலக காது கேளாதோர் தினம்: செப்டம்பர் 28!


உலக காது கேளாதோர் தினம்: செப்டம்பர் 28!

காதுகொடுத்துக் கேட்டேன் ஆஹா குவா குவா சத்தம்...

காதோடுதான் நான் பேசுவேன்...

காதோரம் லோலாக்கு...

ஆம். இன்று காது கேளாதோர் தினம். அவர்களும் நம்மைப் போன்றவர்கள்தான். சற்று வித்தியாசமாக பழகுவதோ அல்லது சமூகத்திலிருந்து ஒதுக்கி பார்ப்பதோ இல்லாமல், அதை ஒரு குறைபாடாக கருதாமல், இயல்பாக அவர்களுடன் பழகுவதே நாம் அவர்களுக்குச் செய்யும் உதவியாகும்.

முழுமையாகவோ, பாதியாகவோ ஒலியை உணர அல்லது புரிந்துகொள்ள முடியாதவர்கள் காது கேளாதவர் எனப்படுகிறார். சிலர் நாம் சொல்வதை திரும்ப திரும்ப கேட்பார்கள். அப்படியெனில் அவர்களுக்கு காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

இயர்போனில் பாடல்கள் கேட்கும்போது, இசை சத்தமாக இருந்தாலோ, நீண்ட நேரம் இசையைக் கேட்டாலோ காது கேட்கும் திறனை இழக்கும் ஆபத்து அதிகரிக்கிறது. தொடர்ந்து அதிக ஒலியைக் கேட்டால் கேட்கும் திறன் பாதிக்கப்படும். இசையை இயர்போனில் கேட்கும்போது மெதுவாகவும் இடைவெளி விட்டும் கேட்பது நல்லது.

காதில் வலி, காதில் நீர்வடிதல், கேட்கும் திறன் பாதிப்படைதல் போன்ற அறிகுறிகள் இருப்பின் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.



காது கேளாதோர் மற்றும் காது கேட்போர் ஆகிய இருதரப்பினரின் இடையில் இருக்கும் இடைவெளியைக் குறைக்க சைகை மொழிக் கல்வியை பல நிறுவனங்கள் வழங்குகின்றன.

காதுகளில் ஏற்படும் தொற்று, வயதாதல், சத்தமான இடங்களில் பணிபுரிவது, மரபு, நீண்டகாலமாக அதிக சத்தத்தை கேட்டல் ஆகியவற்றால் காது கேளாமை ஏற்படுகிறது.

சளிபிடித்தல், தொண்டை வலி ஏற்படுதல் ஆகியவற்றால் நடுச்செவியையும் தொண்டையையும் இணைக்கும் குழாய் வீங்கிவிடுகிறது. இதனால் தற்காலிக காதுகேளாமையும் ஏற்படுகிறது.



தொலைக்காட்சி, ஸ்டீரியோ, ஹெட்செட் ஆகியவற்றின் ஒலியைக் குறைப்பதன் மூலம் கேட்கும் திறன் இழப்பதைத் தவிர்க்கலாம். முக்கியமாக கூர்மையான பொருள்களைக் காதில் இடுவதை தவிர்க்க வேண்டும்.

குழந்தைகளுக்குக் காது கேளாமை இருந்தால் உடனே டாக்டரிடம் பரிசோதிக்க வேண்டும். இல்லையெனில், இது குழந்தையின் பேச்சுத்திறனை பாதிக்கும். அலைபேசி கதிர்வீச்சு காரணமாகக்கூட கேட்கும் திறன் பாதிக்கப்படலாம்.

இதற்குப் பதிலாக அதற்கென தயாரிக்கப்பட்டுள்ள ‘பஞ்ச்’ உள்ள குச்சியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பலத்த சத்தம் ஏற்படும் இடங்களில் வேலை செய்வோர், ஒலித்தடுப்பு கருவிகளைப் பொருத்திக் கொண்டால், காது கேளாமையில் இருந்து தப்பிக்கலாம்.



மருத்துவர் ஆலோசனை இல்லாமல் திரவங்களையோ, மருந்துகளையோ காதில் ஊற்றக் கூடாது. சாலையோரத்தில் இருப்போரிடம் காதைச் சுத்தம் செய்ய சொல்ல வேண்டாம். தற்போதுள்ள அறிவியல் வளர்ச்சியில் அதிநவீன காதுகேட்கும் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.

இவற்றையெல்லாம் தெரிந்துகொண்டு கடந்து சென்றுவிடாமல், நமக்குத் தெரிந்தவர்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்படும்போது ஆரம்பத்திலேயே தடுக்க முயல்வோம். பாதிக்கப்பட்டோருக்கு தற்போதுள்ள அறிவியல் தொழில்நுட்பக் கருவிகளைத் தெரியப்படுத்தி அவர்களையும் சமூகத்தில் சகஜமாக வாழ வைப்போம். நன்றி மின்னம்பலம்

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக