சர்வதேச கழுகுகள் விழிப்புணர்வு தினம்,செப்டம்பர் முதல் சனிக்கிழமை.
(International Vulture Awareness Day)
உலகளவில் 23 பிணம் தின்னி கழுகுகள் உள்ளன. இந்தியாவில் 9 வகை பிணம் தின்னி கழுகுகள் உள்ளன. இக்கழுகு உள்ளன. இக்கழுகு இனங்கள் உலகளவில் விரைவாக அழிந்து வருகின்றன. டைகுளோபினாக் மருந்தை சாப்பிட்ட கால்நடைகள இறந்த பின்பும் அதன் உடலில் இந்த மருந்து தங்கிவிடும். இந்தக் கால் நடைகளை சாப்பிடும் கழுகுகள் இறந்துவிடுகின்றன. இவ்வினத்தைப் பாதுகாக்க இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இன்று (செப்டம்பர் 7-ந் தேதி 2019) சர்வதேச கழுகுகள் விழிப்புணர்வு தினம்.
கழுகு என்பது அக்சிபிட்ரிடே என்னும் பறவைக் குடும்பத்தைச் சேர்ந்த, வலுவான பெரிய கொன்றுண்ணிப் பறவை ஆகும். பறவைகளின் அரசன் என்ற சிறப்பு பெறுகிறது கழுகு. அதிகாரம், சுதந்திரம், மேன்மை ஆகியவற்றின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.
உலகம் முழுவதும் கழுகுகள் பரவலாகக் காணப்படுகின்றன. பெரும்பாலும் பழைய உலகம் என்று சொல்லப்படும் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பாவில் தான் அதிகம் காணப்படுகின்றன. கழுகுகளில் மொத்தம் 74 இனங்கள் உள்ளன. ஆனாலும், அவற்றுள் 60 இனங்கள் யூரேஷியா, ஆப்பிரிக்கப் பகுதிகளில் காணப்படுகின்றன. பொதுவாக கழுகுகள் நான்கு வகையாக பிரிக்க படுகின்றன. அவை, 1. கடல் கழுகுகள் 2. கால் வரை ரோமம் உள்ள கழுகுகள் 3. பாம்பு உண்ணும் கழுகுகள் 4. ராட்சச காட்டு கழுகுகள்.
கழுகு இனத்தை சேர்ந்த பறவைகள் தமிழில் எழால், கழுகு, கங்கு, கங்கம், கூளி, பருந்து, பணவை, பாறு, கருடன், கிருஷண் பருந்து, செம்பருந்து, பூகம் வல்லூறு என அழைக்கப்படுகின்றன.
பறவை இனத்திலேயே கழுகு மட்டும்தான் 70 ஆண்டு ஆயுட்காலம் வாழக்கூடியது. பறவை இனத்தில் அதிக உயரம் பறக்க கூடியவை. பெண் கழுகு, ஆண் கழுகை விட சற்றுப் பெரிதாக இருக்கும். பெண் கழுகு, ஆண் கழுகின் மீது பரீட்சையின் பின்பே நம்பிக்கை வைக்கும்.
பெண் கழுகு ஓர் ஆண் கழுகை சந்தித்து உறவு கொள்ளும் முன், அந்த ஆண் கழுகுடன் நிலத்திற்குச் சென்று சிறு தடி போன்ற குச்சியை எடுக்கும். பின்பு மேலே ஆணுடன் உயரத்திற்குப் பறந்து சென்று அந்தக் குச்சியினைக் கீழே போட்டுவிட்டு காத்து கொண்டிருக்கும். நிலத்தை நோக்கி வீழ்ந்து கொண்டிருக்கும் குச்சியை ஆண் கழுகு விரட்டிச் சென்று, அது நிலத்தில் விழும்முன் பிடித்து, அதை உயரப் பறக்கும் பெண் கழுகிடம் சேர்க்கும். பெண் கழுகு மீண்டும் குச்சியைக் கீழே போட்டுவிடும். ஆண் கழுகு பிடிப்பதற்காக கீழே செல்லும். இவ்வாறு குச்சியை வீழ்த்துவதும், எடுத்து வருவதுமாக பல மணி நேர பரீட்சை நடைபெறும். பெண் கழுகு, ஆண் கழுகிடமுள்ள பொறுப்புணர்வை நிச்சயப்படுத்திக் கொண்டதும், அது உறவு கொள்ள இடமளிக்கும்.
கழுகு மிக உயரமான முட்களை உடைய மரக்கிளைகளில் அல்லது மலைச்சரிவுகளில், பாறை பிளவுகளில், மற்ற உயிரினங்கள் எளிதில் நெருங்க முடியாத இடத்தில் கூடு கட்டும். இடம் தேர்வானதும் ஆண் கழுகு முள், குச்சி, புல், வேர்கள், சிறு கற்கல் மற்றும் வைக்கோல் வைத்து லாவகமாக கூடுகட்டும். பின் பெண் கழுகு முட்டையிட்டு அடைகாத்து குஞ்சு பொறிக்கும். ஒருமுறை இரண்டு முட்டைகள் இடுகின்றன. முதலில் பொரித்து வெளிவரும் அல்லது பெரிய குஞ்சு தன் இளவலைக் கொத்திக் கொன்றுவிடும். இவ்வாறாக ஆதிக்கம் செலுத்தும் குஞ்சானது பொதுவாகப் பெண்ணாக இருக்கும். ஏனெனில், பெண் குஞ்சு, ஆண் குஞ்சை விட பெரியது. இந்த படுகொலையைத் தடுக்க அவற்றின் பெற்றோர் கழுகுகள் எந்த முயற்சியும் எடுப்பதில்லை. எதிரிகளைத் தாக்கவும், தன்னுடைய முட்டைகளைப் பாதுகாக்கவும் ஆபத்து நேரங்களில் உடலில் இருக்கிற கந்தக அமிலத்தைக் கழுகுகள் உமிழ்கின்றன. கந்தக அமிலம் எந்த ஓர் உயிரினத்தின் மீது பட்டாலும் கருகிவிடும்.
கழுகு குஞ்சுகள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை கூட்டில் வைக்கப்பட்டு, தாய் பறவை உணவு ஊட்டும். பிறகு மென்மையான கூட்டினை நீக்கி விட்டு முட்கள் குச்சுகளை குத்துவது போல வைக்கும். இதனால் கூட்டின் ஓரத்திற்கு வரும் குஞ்சுகளை, கீழே தள்ளிவிடும். குஞ்சுகள் நிலைதடுமாறி விழப்போகும்போது, இறக்கைகளை விரித்து பறக்கமுயலும். ஆனால் பறக்க முடியாது. குஞ்சுகள் கீழே விழுந்து அடிபடாமல் ஆண் கழுகு பறந்து சென்று, தன் முதுகில் தாங்கி, மீண்டும் கூட்டிற்கு கொண்டு வந்து சேர்க்கும். இது போல் தொடர்ந்து பயிற்சியளிக்கப்பட்டு குஞ்சுகளை பறக்க வைத்து இரைத்தேடும்.
எலி, கோழி, மீன்கள், முயல், பாம்பு போன்றவற்றை விரும்பி உண்ணும் மாமிச உண்ணி கழுகு ஆகும். இறந்தவற்றை உண்ணாது. கழுகு புதிதான இரையினையே உண்ணும். இவை மிக அபாரமான பார்வைத் திறனைக் கொண்டுள்ளன. ஆயிரம் அடி உயரத்தில் பறந்தாலும், தரையில் ஓடும் ஒரு முயலைக் கண்டு வேட்டையாட முடியும்.
கழுகு தன் 40 வயதை அடையும்போது, அதன் அலகு இரையைப் பிடிப்பதற்கும், உண்பதற்கும் பயனற்றதாகிவிடும். அதன் அலகும் வளைந்து விடும். அதன் இறக்கைகளும் தடித்து, பறப்பதற்குக் கனமாக மாறிவிடும். இந்த நிலையில், ஒன்று இறப்பது அல்லது வலிமிக்க நிகழ்ச்சிக்குத் தன்னையே உட்படுத்துவது இவை தான் கழுகுக்கு இருக்கும் இரண்டு வாய்ப்புகள்.
இந்தக் காலத்தில், கழுகு உயர்ந்த மலைக்குப் பறந்து சென்று அங்கிருக்கும் பாறையில் தன் அலகைக் கொண்டு வேகமாக மோதி அலகை உடைக்கும். புதிய அலகு வளரும் வரை, தான் கூட்டிலேயே தனித்திருக்கும். புதிய அலகு வளர்ந்த பின் இறகுகளைத் தானே பிய்த்தெடுக்கும். ஐந்து மாதங்களுக்குப் பின், புதிய இறகுகள் முளைக்க ஆரம்பிக்கும். இந்த மாற்றத்துக்குச் சுமார் 150 நாட்கள் ஆகும். அத்தனை நாட்கள் காத்திருந்து, வலியை அனுபவித்து, மறுபிறவி அடைந்த கழுகு இன்னும் 30 ஆண்டுகள் வாழத் தகுதியுள்ளதாக மாறும்.
கழுகுகள் புயலை விரும்புகின்றன. புயல் காற்றின் மூலம் அவை மேகங்களுக்கு மேலாக எளிதில் பறக்க முடிகிறது. கழுகுகள் மணிக்கு 32 கிலோமீட்டர் வேகம் பறக்கும் திறன் உடையவை. கழுகுகளின் இறக்கைகள் ஒரு ஆகாய விமானத்தின் இறக்கைகளை விட வலிமை வாய்ந்தது. குதிரைகள் நின்றுகொண்டுதூங்குவதுபோல, கழுகுகள் மரக்கிளையில் உட்கார்நது கொண்டே தூங்கும் திறன் கொண்டவை. கழுகுகள் மிகவும் புத்திசாலித்தனம் கொண்டவை. ஆமை, நத்தை போன்றவற்றை உண்ணும் போது அவற்றின் ஓடுகள் உடையும் வண்ணம், அவைகளை மலை உச்சியில் இருந்து பாறை மேல் வீசி எறிந்து, பின் உண்ணும். உலகின் மிகப்பெரிய கழுகான பிலிப்பைன்ஸ் நாட்டு கழுகுகளின் இறக்கை எட்டு அடி நீளம் உள்ளவை. அவை ஒரு ஆட்டையோ அல்லது ஒரு மானையோ தூக்கி செல்லும் திறன் உடையவை.
உலகில் கழுகு இனம் வெகுவேகமாக அழிந்து வருகிறது. சுற்றுச்சூழல் மாசடைதலை தடுப்பதில் கழுகுகளுக்கு முக்கியமான இடமுண்டு. உலகில் இந்தியா உள்பட சில நாடுகளில் கழுகுகளைத் தெய்வமாகக் கருதி வழிபடுகின்றனர். காடுகளை அழித்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, பயிர்ச்செய்கையை நாசம் செய்யும் எலி மற்றும் சிறிய விலங்குகளை அழிப்பதற்காக விவசாயிகள் நச்சுப் பொருட்களை உபயோகிக்கின்றனர். இவற்றை உண்ணும் கழுகுகள் நச்சுத் தாக்கத்துக்கு உள்ளாகி இறக்க நேரிடுகிறது. இன்னொரு காரணம் மின்சாரக் கம்பிகள் அதிகரிப்பதாகும். அனேகமான கழுகுகள் மின் கம்பியில் மோதி அதன் தாக்கத்துக்குள்ளாகி இறக்கின்றன. இது பெரிய பிரச்சினையாக உருவெடுத்ததை அடுத்து அபாயத்தை எதிர்நோக்கும் உயிரினங்கள் பட்டியலில் கழுகும் சேர்க்கப்பட்டதோடு அதனைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. பிணந்தின்னிக் கழுகுகளை சங்கத் தமிழ் நூல்கள் பாறு என்று குறிப்பிடுகின்றன. சென்னைக்கு அருகில் உள்ள திருக்கழுக்குன்றம் கோவிலுக்கு ஒரு ஜோடி பாறுக் கழுகுகள் 20 ஆண்டுகளுக்கு முன்புவரை, தினசரி வந்து இரை எடுத்துச் சென்றிருக்கின்றன. ஆனால், இப்போது வருவதில்லை. இந்த பாறு தற்போது நீலகிரியையும், அதைச்சுற்றிய பகுதிகளிலுமே எஞ்சியுள்ளது. இப்பறவைகளின் அழிவுக்கு அடிப்படைக் காரணம் டைக்ளோஃபினாக் எனப்படும் வலிநிவாரணி (மூட்டுவலி, தசைவலிகளுக்கு வெளியில் தடவும் மருந்தாக இப்போதும் இதை நாம் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம்) எனக்கூறுகின்றனர். இந்த மருந்து கால்நடைகளுக்கு ஊசி மூலம் செலுத்தப்படுகிறது.
இந்து கடவுள்களில் பகவான் பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்குகிறது. அத்துடன் முக்கியமான காரியத்திற்கு செல்லும் போது, கழுகு வானில் பறப்பதை கண்டால், நல்ல சகுனம் ஆகும். காரிய சித்தி உண்டாகும் என்று நம்பப்படுகிறது. கோவிலில் கும்பாபிஷேகம், யாகம், சிறப்பு வழிபாடுகள் நடக்கும்போது, கோவிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவதை இன்றும் காணலாம்.
முனைவர் வே. ஞானப்பிரகாசம்,
முன்னாள் துணைவேந்தர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்.
‘🦉உலக கழுகுகள் தினம்🦅’:
சுற்றுச்சூழலின் 'துப்புரவு பணியாள்' என அழைக்கப்படும் கழுகுகள், இயற்கை மாற்றத்தால் அழிவின் விளிம்பில் உள்ளன. ஆனால் உலக அளவில் கழுகுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அவற்றை பாதுகாக்கும் வகை யில் செப்டம்பர் முதலாவது சனிக் கிழமை, `கழுகுகள் தின’மாக உலக நாடுகளால் கடைபிடிக்கப் படுகின்றது.
தமிழகத்தில் அழிந்து வரும் பறவைகள் பட்டியலில் கழுகுகள் உள்ளன. கழுகுகளை பார்ப்பது அரிதாக உள்ளது. இறந்து அழுகும் பறவைகள், விலங்குகளின் உடலை உண்டு, அவற்றில் இருந்து நோய் கள் பரவாமல் தடுக்கும் சிறந்த துப்புரவு பணியை கழுகுகள் மேற்கொள்கின்றன.
உலகில் 23 வகையான கழுகு களில் 14 வகை கழுகுகள் அழிந்து வரும் பட்டியலில் உள்ளன. இந்தி யாவில் 7 வகை கழுகுகள் மட்டுமே காணப்படுகின்றன. வெண்முதுகு கழுகு, கருங்கழுத்து கழுகு, மஞ் சள்முக கழுகு, செந்தலை கழுகு ஆகிய 4 வகை கழுகுகள் தமிழகத்தில் காணப்படுகின்றன. இவை நீலகிரி வனப்பகுதி, சத்தியமங்க லம், மாயாறு பள்ளத்தாக்கு, பண் டிப்பூர், கேரளாவில் வயநாடு பகுதி களில் குறைந்த எண்ணிக்கையில் உள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு, கீரிப்பாறை, ஆரல்வாய்மொழி மலைப்பகுதிகள் மற்றும் தாம்பரம், கொடைக்கானல், கோவை, தஞ்சை, திருநெல்வேலி பகுதிகளில் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை கழுகுகள் பரவலாக இருந்துள்ளன.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வனத் துறை கணக் கெடுப்பின்படி தமிழகத்தில் 600 கழுகுகள் இருந்தன. தற்போது, பாதியாக குறைந்துவிட்டன. கழுகு, கங்கு, கூளி, பருந்து, பாறு, வல்லுாறு' என பல வகை பெயர்களால் அழைக்கப்படுகின்றன. பிணம் தின்னி கழுகுகள் இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும் முக்கிய பங்காற்றுகின்றன. இயற்கை, மனிதர்கள் உதவியின்றி தன்னைத் தானே காத்துக் கொள்ளும் தனித்தன்மை வாய்ந்தவை
கழுகு நமக்கு கற்று தரும் பாடத்தை அறிந்து கொள்வோமா?
கழுகுகளை, வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம். ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்தியும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப்படுபவை தான். குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள் பலவீனமாகவே இருக்கின்றன. அவை அப்படியே இருந்து விட்டால் வலிமையாகவும், தந்திரமாகவும் மாறுவது சாத்தியமல்ல. எனவே குஞ்சுகளாக இருக்கும் போது வேண்டிய உணவளித்து, பாதுகாப்பாக வைத்திருக்கும் தாய்ப்பறவை, குஞ்சுகள் பறக்க வேண்டிய காலம் வரும் போது முதலில் கூடுகளில் மெத்தென இருக்கும் படுக்கையினைக் கலைத்து சிறு குச்சிகளின் கூர்மையான பகுதிகள் வெளிப்படும்படி செய்து விடுகின்றது. பின் தன் சிறகுகளால் குஞ்சினை அடித்து இருக்கும் இடத்தை விட்டுச் செல்லத் தூண்டுகின்றது. தாய்ப்பறவையின் இம்சை தாங்க முடியாத கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்பு வரை வந்து நிற்கின்றது. அது வரை பறந்தறியாத குஞ்சு கூட்டின் வெளியே உள்ள உலகத்தின் ஆழத்தையும் உயரத்தையும் விஸ்தீரணத்தையும் பார்த்து மலைத்து நிற்கின்றது.
அந்தப் பிரம்மாண்டமான உலகத்தில் தனித்துப் பயணிக்க தைரியமற்று பலவீனமாக நிற்கின்றது. அது ஒவ்வொரு குஞ்சும் தன் வாழ்க்கையில் சந்தித்தாக வேண்டிய ஒரு முக்கியமான தவிர்க்க முடியாத கட்டம். அந்த நேரத்தில் அந்தக் குஞ்சையே தீர்மானிக்கவிட்டால் அது கூட்டிலேயே பாதுகாப்பாகத் தங்கி விட முடிவெடுக்கலாம். ஆனால் கூடு என்பது என்றென்றைக்கும் பாதுகாப்பாகத் தங்கி விடக் கூடிய இடமல்ல. சுயமாகப் பறப்பதும் இயங்குவதுமே ஒரு கழுகுக்கு நிரந்தரப் பாதுகாப்பு என்பதைத் தாய்ப்பறவை அறியும்.
என்ன செய்வதென்று அறியாமல் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கும் அந்தக் கட்டத்தில் தாய்ப்பறவை அந்தக் குஞ்சின் உணர்வுகளை லட்சியம் செய்யாமல் கூட்டிலிருந்து வெளியே தள்ளிவிடுகிறது. அந்த எதிர்பாராத தருணத்தில் கழுகுக்குஞ்சு கஷ்டப்பட்டு சிறகடித்துப் பறக்க முயற்சி செய்கின்றது. முதல் முறையிலேயே கற்று விடும் கலையல்ல அது.
குஞ்சு காற்றில் சிறகடித்துப் பறக்க முடியாமல் கீழே விழும் நேரத்தில் தாய்க்கழுகு வேகமாக வந்து தன் குஞ்சைப் பிடித்துக் கொள்கிறது. குஞ்சு மீண்டும் தாயின் பிடியில் பத்திரமாக இருப்பதாக எண்ணி நிம்மதியடைகிறது. அந்த நிம்மதி சொற்ப நேரம் தான். தாய்க்கழுகு மீண்டும் அந்தக் கழுகுக்குஞ்சை அந்தரத்தில் விட்டு விடுகிறது. மறுபடி காற்று வெளியில் சிறகடித்துப் பறக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அந்தக் குஞ்சு உள்ளாகிறது.
இப்படியே குஞ்சை வெளியே தள்ளி விடுவதும் காப்பாற்றுவதுமாகப் பல முறை நடக்கும் இந்தப் பயிற்சியில் கழுகுக் குஞ்சின் சிறகுகள் பலம் பெறுகின்றன. காற்று வெளியில் பறக்கும் கலையையும் கழுகுக்குஞ்சு கற்றுக் கொள்கிறது. அது சுதந்திரமாக ஆனந்தமாக தைரியமாக வானோக்கிப் பறக்க ஆரம்பிக்கிறது.
கழுகுக் குஞ்சு முதல் முறையாக கூட்டுக்கு வெளியே உள்ள உலகத்தின் பிரம்மாண்டத்தைக் கண்டு பயந்து தயங்கி நிற்கும் அந்தத் தருணத்தில் தாய்க்கழுகு அதனை முன்னோக்கித் தள்ளியிரா விட்டால் அந்தச் சுதந்திரத்தையும் ஆனந்தத்தையும் தைரியத்தையும் அந்தக் கழுகுக்குஞ்சு தன் வாழ்நாளில் என்றென்றைக்கும் கண்டிருக்க முடியாது. பறக்க அறியாத அந்தக் குஞ்சை கூட்டினை விட்டு வெளியே தாய்ப்பறவை தள்ளிய போது அது ஒருவிதக் கொடூரச் செயலாகத் தோன்றினாலும் பொறுத்திருந்து விளைவைப் பார்க்கும் யாருமே அந்தச் செயல் அந்தக் குஞ்சிற்குப் பேருதவி என்பதை மறுக்க முடியாது.
இன்று உலக பாறு கழுகு தினம்.
முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதனை ஒட்டிய மாயாறு பள்ளத்தாக்கு பகுதியில் வெண்முதுகு நீண்ட அலகு செந்தலைப் மஞ்சள் திருடி ஆகிய நான்கு வாகை கழுகுகள் உள்ளன.கடந்த காலங்களில் அதிகளவில் காணப்பட்ட இவ்வகை கழுகுகள் வாழ்வதற்கான சூழல் அழிந்து வருகிறது. இதனை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் அனைத்து தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ளது.கோவை அருளகம் இயற்கை பாதுகாப்பு அமைப்பின் செயலாளர் பாரதிதாசன் கூறியதாவது:காடுகளை பாதுகாக்கும் பணியை மேற்கொள்ளும் இந்த வகை கழுகுகள் இறந்த கால்நடைகளை உணவாக கொண்டுள்ளதால் இதனை பாதிக்கும் 'டைக்குளோபிளாக்' போன்ற வலி நிவாரணி மருந்துகளை கால்நடைகளுக்கு பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும். இந்த கழுகுகம் ஆண்டுக்கு ஒரு முட்டை மட்டுமே இடும். இவை ௩௦ முதல் ௪௦ ஆண்டுகள் வாழ கூடியவை. மாநிலத்தில் அதிகபட்சமாக மாயாறு பகுதியில் இதன் எண்ணிக்கை ௧௫௦ முதல் ௨௦௦ வரை இருக்க வாய்ப்புள்ளது. இந்த எண்ணிக்கை இரு மடங்கு ஆக ௧௦ ஆண்டுகள் ஆகும். எனவே இவை வாழ்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும். இதனை கருத்தில் கொண்டு தான் ஆண்டுதோறும் உலக பாறு கழுகுகள் தினம் கொண்டாடப்படுகிறது.
Posted by
MBM ACADEMY
WhatsApp 9629933144
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக