பக்கங்கள்

ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

உலக பேனா தினம், செப்டம்பர் 10


உலக பேனா தினம், செப்டம்பர் 10,
 (ஊற்று எழுதுகோல் ,fountain pen ) #world_fountain_pen_day_September_10.
#worldfountainpenday
.
எழுதுகோல் அல்லது எழுதி அல்லது பேனா எனப்படுவது, எழுத உதவும் ஒரு கருவி அகும். பேனா என்னும் சொல் ஆங்கிலத்தில் pen (பென்) என்னும் சொல்லில் இருந்து பெற்றது.

இதில் பலவகையன எழுதுகோல்களும் உண்டு. அவை உருளைப‌ந்து எழுதுகோல், ஊற்று எழுதுகோல், மை பேனா மற்றும் பல வகைகளும் உண்டு.

வரலாறு

பழங்காலத்து எகிப்தியர் பாப்பிரசு (papyrus) சுருள்களில் எழுத சிறு நாணலால் (reed) ஆன எழுதுகோல்களைப் பயன்படுத்தினர். இந்த நாணல் போன்ற செடிக்கு சங்க்கசு மாரிட்டிமசு (Juncus Maritimus) என்று பெயர். சிட்டீவன் ரோச்சர் ஃவிசர் (Steven Roger Fischer) தான் எழுதிய எழுதுதலில் வரலாறு (A History of Writing) என்னும் நூலில் எகிப்தில் சக்காரா என்னும் இடத்தில் கிடைத்துள்ள சான்றுகளின்படி நாணல்-போன்ற எழுதுகோல்கள் எகிப்திய அரசர்களின் முதற்பரம்பரையினர் காலத்திலேயே, அதாவது கி.மு 3000 ஆண்டு தொடக்கத்திலேயே வழக்கில் இருந்திருக்கலாம் என்று கூறுகின்றார். ஏறத்தாழ இன்றைக்கு 300-400 ஆண்டுகளுக்கும் முன் வரை, கி.பி. 17 ஆவது நூற்றாண்டு வரை, இந்த நாணல்-போன்ற எழுதுகோல்கள் இருந்தன.

பறவைகளின் இறகாகிய தூவல் (quill) எழுதுகோல்கள் இசுரேல்-பாலசுத்தீனத்தில், மேற்குக் கரை என்னும் பகுதிக்கு அருகே உள்ள கும்ரான் (Qumran) என்னும் இடத்தில் இருந்து கிடைத்த செத்தக் கடல் சுருள்கள் (Dead Sea Scrolls) எழுதப் பயன்படுத்தப்பட்டன. ஐரோப்பாவில் இப்பழக்கம் கி.பி 700களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வகை தூவல் எழுதுகோலே 1787 இல் ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் சட்டம் எழுதவும், கையெழுத்திடவும் பயன்பட்டது. செத்த கடல் சுருள்கள் 1947 இல் கண்டுபிடிக்கப்பட்டது. அது கி.மு 100 இல் எழுதியதாகக் கருதப்படுகின்றது. ஐரோப்பியர்கள் நாணல் போன்ற குழல்கள் கிடைக்காததால் தூவல் எழுதுகோலை வரவேற்றனர். செவில்லைச் சேர்ந்த கி. பி. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புனித இசிடோர் (St. Isidore of Seville) அவர்கள் எழுதி வைத்துள்ளதில், தூவல் எழுதுகோலைப் பற்றிய குறிப்பு ஒன்று உள்ளது. . தூவல் எழுதுகோல்கள் 19 ஆம் நூற்றாண்டு வரையில் வழக்கில் இருந்தன


வெண்கலத்தால் ஆன எழுதுகோல் நுனி உடையது ஒன்று கி.பி 79 ஆம் ஆண்டிலேயே பயன்பாட்டில் இருந்தது என்பற்கான சான்றுகோள் அழிந்து பட்ட பாம்ப்பை நகரில் கிடைத்துள்ளது.. சாமுவேல் பெப்பீசு என்பாரின் தன்வாழ்க்கைக் குறிப்பேட்டில் ஆகசட்டு 1663 ஆம் ஆண்டிற்கான பதிவில் இது பற்றிய குறிப்பொன்றும் உள்ளது. 1803 இல் மாழையால் (உலோகத்தால்) ஆன எழுதுகோல் நுனிக்கான காப்புரிமம் ஒன்று உள்ளது ஆனால் செய்து விற்பனை செய்யவில்ல்லை. 1822இல் பர்மிங்காம் என்னும் இடத்தைச் சேர்ந்த சான் மிட்செல் (John Mitchell) மாழை நுனி உடைய எழுதுகோல்களை அதிக எண்ணிக்கையில் படைத்து விற்பனை செய்தார்.


ஊற்று எழுதுகோல் (fountain pen) 

ஊற்று எழுதுகோல் (fountain pen) என்பது காகிதத்தில் எழுதப் பயன்படும் ஓர் எழுதுகோல் ஆகும். இதன் முன்னோடி எழுதுகோல் நனை எழுதுகோல் (Dip Pen) ஆகும். நனை எழுதுகோலில் எழுத அடிக்கடி எழுதுகோலை மையில் நனைக்கவேண்டி இருந்தது. இது சிரமத்தைத் தந்ததால் 1884ஆம் ஆண்டில் எல். ஈ. வாட்டர்மேன் என்ற அமெரிக்கர் இந்தப் புதிய முறையைக் கண்டுபிடித்தார். இதில் உள்ள குப்பியில் நீரை ஆதாரமாகக் கொண்ட மையை நிரப்பி அங்கிருந்து மையை எழுதுகோலின் முனைக்குக் கொண்டுவருவது தான் இந்தப் புதிய முறை. இதன் முனையில் உலோகத்தாலான முள் (Nib) பொருத்தப்பட்டிருக்கும். இம்முள்ளின் நடுவில் ஒரு சிறிய பிளவு இருக்கும். இப்பிளவில் தந்துகிக் கவர்ச்சியின் காரணமாக மை
தாளினை அடைந்து எழுதப் பயன்படுகிறது.


முள்

ஊற்று எழுதுகோலின் முள்
ஊற்று எழுதுகோலின் முனையில் உள்ள முள் துருபிடிக்காத எஃகு அல்லது தரங்குறைந்த தங்கப்பூச்சுக்கொண்டு இந்த முள் தயாரிக்கப்படுகிறது. இந்த முள்ளைக் காகிதத்தின் மீது அழுத்தி எழுதுவதால் நீண்ட காலம் உழைக்கவேண்டி பிளாட்டினம் போன்ற உலோகத்தை உருக்கி அதில் இந்த முள்ளின் முணையை முக்கி எடுத்து வலிமை கூட்டுகிறார்கள்.


குமிழ்முனைப் பேனா.(ballpoint pen) 

குமிழ்முனைப் பேனா (ballpoint pen) என்பது உள்ளக மை தாங்கியையும் கோள வடிவிலான குமிழ்முனையையும் கொண்ட எழுதுகோல் ஆகும். உள்ளகத் தாங்கிக் குழாய் எழுதுத் தன்மையான மையைக் கொண்டிருக்கும். குமிழ்முனை சுழலும்போது மை வெளியேறி எழுதும். குமிழ்முனைக் கோளம் பொதுவாக 0.5மிமீ முதல் 1.2 மிமீ வரையான விட்டத்தை கொண்டதாகவும், பித்தளை, உருக்கு, தங்குதன் காபைட்டு ஆகியவற்றால் ஆனதாகவும் இருக்கும்.

வரலாறு

An authentic "birome", made in Argentina by Bíró & Meyne
பொருளாதார ரீதியிலும் பயன்பாட்டிலும் மேம்பட்ட குமிழ்முனைப் பேனாக்கள் 20ஆம் நூற்றாண்டுத் தொழில்நுட்பங்களால் தான் தோற்றம் பெற்றன. ஆரம்பகாலத்தில் குமிழ்முனைப் பேனாவில் வடிவமைப்பில் பலமுறை தோல்விகளைக் கண்டது. 17ஆம் நூற்றாண்டில் கலீலியோ கலிலியால் வடிவமைக்கப்பட்ட வடிவமைப்பே குமிழ்முனைப் பேனா எனும் கருத்தும் காணப்படுகின்றது. குமிழ்முனைப் பேனாவுக்கான முதலாவது காப்புரிமம் 1888 அக்டோபர் 30 ஆம் நாள் ஜோன் லோட் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் ஒரு தோல் தயாரிப்பாளர். இத்தோற்பொருட்களில் எழுதுவதற்கு ஊற்றுமைப் பேனாக்கள் பொருத்தமற்றவையாயிருந்ததால் இதனைப் பயன்படுத்தினார். லோட்டின் பேனாவில் உருக்கினாலான சிறிய சுழலும் கோளவுருக் குமிழ் அடைப்பான் ஒன்றின் மூலம் நிறுத்தப்பட்டிருந்தது.


1904 க்கும்1946க்கும் இடையில் பல மாற்று ஊற்றுமைப் பேனாக்கள் கண்டறியப்பட்டன.சிலாவொல்யுப் எடுவாட் பென்காலா 1907 ஆம் ஆண்டு திண்ம மை ஊற்றுமைப் பேனாவினை கண்டறிந்தார்.1910 இல் சேர்மனி கண்டுபிடிப்பாளர் பாவும்(Baum) மற்றொரு குமிழ்முனைப் பேனாவுக்கு சொத்துரிமை பெற்றார். 1916 இல் மற்றொரு குமிழ்முனைப் பேனா Van Vechten Riesburg இனால் கண்டறியப்பட்டது. இக்கண்டுப்புகளில் எல்லாம் ஒடுங்கிய குழாயின் முனையில் சிறு கோளம் இடப்பட்டு இருந்தது. இது உள்ளேயோ வெளியேயோ வழுக்கி விழுதல், சீரற்று எழுதுதல்,மைகசிதல் என பல பிரச்சினைகளைக் கொடுத்தது.


பேனா பற்றிய தகவல்கள்.

‘பேனா’ - நம் அடிப்படைத் தேவைகளில் ஒன்று. இப்போது அநேகமாக யாரும் மை பேனாவைப் பயன்படுத்துவது கிடையாது. எல்லாம் பால் பாயின்ட் பேனாதான். அதுதான் வசதியும்கூட. பல வண்ணங்களில், டிசைன்களில், வடிவங்களில் பேனா கிடைக்கிறது. உடைகளுக்கு ஏற்ப பேனா கொண்டு வருவார் என் ஆசிரியை. அந்தளவு பேனா நம்மோடு இணைந்துவிட்டது. அந்தப் பேனா பற்றிய சுவாரஸ்யமான சில தகவல்கள்:சராசரியாக ஒரு பேனா ௪௫ வார்த்தைகள் எழுதக் கூடியது. ஒரு நபர் ஆண்டொன்றுக்கு ௪.௩ பேனாக்களைப் பயன்படுத்துகிறார். (அவ்வளவுதானா? தொலைத்துவிடும் பேனாக்கள் கணக்கில் சேர்வதில்லை பாஸ்)

1938ஆம் ஆண்டு, முதன்முதலில் Laszio Biro என்ற பத்திரிகையாளரால் முதன்முதலில் பால் பாயின்ட் பேனாவை கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அதன் காப்புரிமை John Loud என்பவருக்கு வழங்கப்பட்டது.

நியூயார்க்கில், பால் பாயின்ட் பேனா விற்பனைக்கு வந்தபோது, 1945ஆம் ஆண்டு கடைகளில் கூட்டம் அலைமோதியதாம். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், காவல் துறை அழைக்கப்பட்டுவிட்டது. முதல் நாள் விற்பனையிலேயே 10,000 பேனாக்கள் விற்கப்பட்டு விட்டன.

உலகின் மிகப் பெரிய பால் பாயின்ட் பேனாவின் எடை 37.23 கிலோ; நீளம் 5.5 மீட்டர். Acharya Makunuri Srinivasa என்ற இந்தியரால் 2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இப்பேனாவில், இந்தியப் புராணக் கதைகளிலிருந்து காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

பார்க்கர் பேனாக்களின் மை தீருவதற்கு முன் 8 கி.மீ நீளமான கோடு ஒன்றைப் போட்டுவிடலாம்.

பித்தளை, டங்க்ஸ்டன், கார்பைடு அல்லது ஸ்டீல் ஆகியவற்றில் ஏதோவொன்றில் செய்யப்பட்ட உருண்டைதான் பேனாவின் முனையில் வைக்கப்பட்டிருக்கும். அந்த உருண்டைக்கு இரு வேலைகள். ஒன்று, வெளியே வரும் மையின் அளவைக் கட்டுப்படுத்துவது. இரண்டு, மை காயாமல் பார்த்துக்கொள்வது. பேனாவின் அந்த முனை, வைரம் அளவுக்குக் கடினமாக இருக்கும்.

பேனாக்கள் சேகரிக்கும் பொழுதுபோக்கு stylophilia என்று அழைக்கப்படுகிறது.

வாயில் பேனாவை வைத்து விளையாடி, அதன் மூடியை விழுங்கிவிடுவதால் மட்டும், ஆண்டொன்றுக்கு 100 மரணங்கள் நிகழ்கின்றன.

ஒவ்வொரு விநாடியும், 125 பால் பாயின்ட் பேனாக்கள் விற்பனையாகின்றன.

அமெரிக்கர்கள் மட்டும் ஓராண்டில் 106 பில்லியன் பால் பாயின்ட் பேனாக்கள் பயன்படுத்துகின்றனர். 2005ஆம் ஆண்டு Bic என்ற நிறுவனம் 100 பில்லியன் பேனாக்களை அதுவரை விற்றிருப்பதாக அறிவித்தது. இப்பேனாக்கள் பயன்பாட்டுக்குப் பின் நேராக குப்பைகளுக்குச் சென்று, அங்கிருந்து நீர்நிலைகளுக்குச் செல்கின்றன. மாசுபாட்டில் முக்கியப் பங்கு வகிப்பது பால் பாயின்ட் பேனா. அதனால், ஒரு பேனாவை முடிந்தவரை அதிகமாகப் பயன்படுத்தலாம்.


“மை” பற்றிய உண்மைகள்!

உங்கள் ரீபில் பேனா அல்லது இங்க் பேனாவுக்குள் இருக்கும் மை பற்றிய ரகசியங்கள் தெரியுமா?

தாவர சாயங்கள், எலும்புகளில் இருந்து பழைய காலங்களில் மை தயாரிக்கப்பட்டுள்ளன. இன்றைய டிஜிட்டல் உலகில் மையின் பயன்பாடு அதிகம். மை தயாரிப்பு முறைகளும் புதிய பரிமாணத்தை எட்டிவிட்டன. மை பற்றிய சுவாரசியமான தகவல்களை தெரிந்து கொள்வோமா குட்டீஸ்?

காலம் காலமாக எழுத்துகள் மனிதனின் சிந்தனையை வெளிப் படுத்தி வந்துள்ளன. அச்சிடும் முறைகள் தோன்றிய பின் எழுத்துகளை பதிவிட மைகள் பெரிதும் பயன்பட்டன. அதற்கு முன்பும் சாயங்களை மையாக பயன்படுத்தி உள்ளனர். மை திரவமாகவும், பசைபோலவும் காணப்படுவது உண்டு.


4 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பே மை பயன்படுத்தப்பட்டுள்ளது. சீனர்களும், எகிப்தியர்களும் எழுதுவதற்காக மையை பயன் படுத்தி உள்ளனர். கரி மற்றும் சாம்பலில் இருந்து அவர்கள் மை தயாரித்து உள்ளனர். தண்ணீர், எண்ணெய் மற்றும் விலங்குகளின் உடல் திரவங்களை, சாம்பலுடன் சேர்த்து மை தயாரிக்கப்பட்டது. தாவரங்களின் சாயங்களையும் மையாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.

மை பேனாக்கள் உருவாக்கப்படும் முன்பு மையை தொட்டு எழுத இறகுகள், தூரிகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கூட்டன்பர்க் என்பவர் அச்சுத்துறைக்கு பயன்படும் மையை 15-ம் நூற்றாண்டில் உருவாக்கினார்.

நவீன கால மை தயாரிக்கப் பயன்படும், கனரக உலோகங்கள் மற்றும் புதுப்பிக்கமுடியாத எண்ணெய்ப் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாக உள்ளன.

இன்றைய காலத்தில் மையானது பவுடராகவும், திடப்பொருளாகவும்கூட தயாரிக்கப்படுகிறது. நீர்போல திரவமாகவும், கெட்டிப்பொருளாகவும், பசைபோலவும் மைகள் உள்ளன. அடிப்படை வண்ணங்கள் மட்டுமல்லாமல், தேவைக்கேற்ற அனேக வண்ணங்களில் மை தயாரிக்கப்படுகிறது.


சாதாரண பந்துமுனை (பால்பென்) பேனாக்களில் உள்ள மை 3 கிலோமீட்டர் தூரம் எழுதக்கூடியது.

பிரபலமான அமெரிக்க கார்ட்டூன் கதாசிரியர்களில் ஒருவர் மார் குருன்வால்டு. மார்வெல் காமிக்ஸ் என்ற பெயரில் நிறைய காமிக் கதைகளை வெளியிட்டார். த அவெஞ்சர்ஸ், கேப்டன் அமெரிக்கா போன்ற புகழ்பெற்ற படங்களிலும் பணியாற்றி உள்ளார். இவர் தனது கடைசி ஆசையாக, தான் மரணம் அடைந்ததும், தனது சாம்பலை, மையுடன் கலந்து காமிக் புத்தகம் வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று ஸ்குவாடிரான் சுப்ரீம் என்ற அவருடைய கதை, அவரது அஸ்தி மையில் அச்சிடப்பட்டது.

கரையான்களின் உடலில் ஒருவிதமான மை சுரக்கிறது. பெரோமோன் எனப்படும் இந்த ரசாயனப் பொருளை, தனது உணவுபொருட்களில் சுரந்து அடையாளமிடும். நீண்ட காலத்திற்குப் பிறகும் அவற்றால் இந்த ரசாயனப் பொருளைக் கொண்டு தனது இரையை அடையாளம் காண முடியும். நாம் பயன்படுத்தும் பேனாமையில் பெரோமோன் ரசாயனப் பொருள் வாசனை உண்டு. இதைக் கொண்டுதான் நோட்டுபுத்தகம் இருக்கும் இடத்தை எளிதில் கண்டுபிடித்து கரையான்கள் அரிக்கின்றன.

பேனாவுக்கு பயன்படுத்தப்படும் மை, விலை மலிவானது. பிரிண்டர்களில் பயன்படுத்தப்படும் கேட்ரிஜ் மை, அதிக விலை கொண்டது. அமெரிக்காவில் ஒரு காலன் (3.7 லிட்டர்) பிரிண்டர் மை, 9 ஆயிரத்து 600 டாலர் விலை கொண்டது. இந்த விலைக்கு 9 ஆயிரத்து 250 லிட்டர் பெட்ரோல் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்டோபஸ், ஸ்குயிட் மற்றும் கட்டில்பிஷ் மீன் இனம் ஆகியவை ஆபத்து காலத்தில் ஒருவித மையை பீய்ச்சி அடிக்கும். இது உப்புசுவை கொண்டது. மேலை நாட்டு உணவு விடுதிகளில் ‘ஸ்குயிட் இங்க்’ என்ற பெயரில் இந்த மை, ஒரு சாஸ் வகையாக விருந்தில் பரிமாறப்படுகிறது. அதேபோல சில மருந்து பயன்பாட்டிற்கும் இந்த மையை பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக புற்றுநோய் மருந்திலும் இது சேர்க்கப்படுகிறது.


அமெரிக்காவில் 1985-க்கு முன்பு அச்சிடப்பட்ட புத்தகங்களை குழந்தைகளுக்கு விற்க தடை போட்டு ஒரு சட்டம் வெளியானது. ஏனெனில் அப்போது பயன்படுத்தப்பட்ட மையில் ஈயம் கலந்திருப்பதும், அது குழந்தைகளை எளிதில் பாதிக்கும் என்றும், ஈய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்பே குழந்தைகள் புத்தகத்தை விற்க வேண்டும் என்றும் அந்த தடைச்சட்டத்தில் கூறப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து அங்கு நூலகங்களில் இருந்தும், விற்பனையாளர்களிடம் இருந்தும் ஏராளமான குழந்தைப் புத்தகங்கள் திரும்பப் பெறப்பட்டு அழிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ரத்தத்தை விலை மலிவான மையாக கருதுவது உண்டு. ஆனால் ரத்தம் வெளியேறுவது வேதனையைத் தரும் என்பதால் பலரும் ரத்தத்தை எழுதப் பயன் படுத்துவதில்லை. இருந்தாலும் ஆபத்தான வேளைகளில் ரத்தத்தை எழுத்தாகப் பயன்படுத்தி கருத்தை வெளியிட்ட சம்பவங்கள் நிறைய நடந்துள்ளன. காதலர்களும், ஓவியர்களும் தங்கள் ரத்தத்தால் காதல் மொழிகளையும், ஓவியங்களையும் தீட்டியுள்ளனர்.

மையில் ரசாயனப் பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கும் என்பதால் அதை வாயில் வைத்து சுவைக்கவோ, குடிக்கவோ கூடாது. மையில் உள்ள பொருட்கள் தலைவலி, சரும எரிச்சலை உருவாக்கலாம். நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஆபத்தும் உண்டு.


இங்க் (Ink) உருவான வரலாறு, மை (Ink) பிறந்த கதை; History of Ink

அனைவருக்கும் வணக்கம், பத்தொன்பதாம் நூற்றாண்டில் மனித இனத்தின் தலைசிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்று கணிப்பொறி (Computer) என்றால் மிகையில்லை. இந்த கணிப்பொறி கண்டறியப்பட்ட பின்புதான் மனித சமுதாயத்தின் லட்சிய இலக்குகள் இப்புவியையும் தாண்டி வானத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. இத்தகைய அதி முக்கியத்துவம் வாய்ந்த இந்த கணிப்பொறிக்கு நிகரான கண்டுபிடிப்பு என்று வேறு ஏதாவது இருக்குமென்றால் அது சுமார் 4600 ஆண்டுகளுக்கு (2600 BC) முன்பு சீனர்களால் கண்டறியப்பட்டு இன்றுவரை நாம் எழுதுவதற்காக பயன்படுத்திக் கொண்டிருக்கும் மையைத் (Ink) தவிர வேறொன்றும் இருக்க வாய்ப்பில்லை என்பேன் நான்..!

மனிதனது நினைவாற்றலின் வலிமை குறிப்பிட்ட எல்லை கொண்டது. அந்த எல்லையையும் தாண்டி சில விசயங்களை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டியதேவை ஏற்பட்ட போது தோன்றியதுதான் எழுத்துக்கள். ஆரம்பத்தில் மனிதன் எழுதியது அல்லது செதுக்கியது (Carving) கற்களில் மீது தான். பின்பு மரங்களிலும் அதைத்தொடர்ந்து விலங்குகளின் எலும்புகளிலும் ஒரு கூர்மையான கம்பி (Pointed Rod) கொண்டு எழுத்துக்கள் துளையிட்டு செதுக்கப்பட்டது. நாளடைவில் மனிதன் தனது எண்ணங்களையும் கருத்துக்களையும் இளைய தலைமுறைகளிடம் பரிமாறிக்கொள்ள களிமண்ணிலும் (Clay) தனது கருத்துக்களை எழுத ஆரம்பித்தான்.

இப்படி எழுத்துக்களை உருவாக்க கற்களிலும் மரத்திலும் துளையிட்டு துளையிட்டு சோர்ந்து போயிருந்த மனிதர்களுக்கு புத்துணர்ச்சியை உண்டாக்கிய கண்டுபிடிப்புதான் இங்க் (Ink) என்று அழைக்கப்படும் மை. சீன (China) தத்துவவாதியான (Philosopher) டியன் சியு (Tien Lcheu) என்பவர் கி.மு. 2697-ஆம் ஆண்டில் கார்பன் நிறமி (Carbon Black), புகைக்கரி (பைன் மர துண்டுகளை (Pine Wood) எரித்து கிடைக்கப்பெற்றது), ஊண் பசை (Gelatin Bone Clue-விலங்குகளின் எலும்புகளிலிருந்து எடுக்கப்பட்டது), ஆகியவற்றுடன் விளக்கு எண்ணெய்யையும் (Lamp Oil) சேர்த்து ஆட்டு உரலில் (Mortar and Pestle) இட்டு அரைத்து அடர் கருப்பு நிறத்தை உடைய திரவத்தை தயாரித்தார். இது தான் உலகில் முதன் முதலில் எழுதுவதற்காக தயாரிக்கப்பட்ட மை ஆகும்.


உலகிலேயே முதன் முதலாக எழுதுவதற்காக தயாரிக்கப்பட்ட இந்த மை-க்கு அதை தயாரித்த டியன் சூட்டிய பெயர் என்னவென்று தெரியுமா நண்பர்களே இந்தியா இங்க் (India Ink). ஒரு சீனமனிதரால் சீனாவில் கண்டறியப்பட்ட மைக்கு ஏன் இந்தியா இங்க் என்று பெயரிட்டார் என்று கேட்கிறீர்களா அதருக்கு ஒரு காரணம் உண்டு அப்போது மை தயாரிக்க தேவைப்பட்ட முக்கிய மூலப்பொருளான கார்பன் நிறமி (Carbon Black) இந்தியாவில் இருந்துதான் சீனாவில் இறக்குமதி செய்யப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில்தான் டியன், தான் தயாரித்த உலகின் முதல் மைக்கு இந்தியா இங்க் என்று பெயரிட்டார்.

அப்போது வரை கற்களை குடைந்து குடைந்து எழுத்துக்களை செதுக்கிக் கொண்டிருந்த மனிதன், மை (Ink) கண்டறிந்த பின்பு பறவைகளின் இறகுகளை (Bird’s Feather) கொண்டு அதே கற்களின் மீது துளையிடாமலே எழுத ஆரம்பித்தான். கி.மு. ஆயிரத்தி இருநூறாம் நூற்றாண்டு வரை (1200 BC) எந்த வித மாற்றத்தையும் சந்திக்காமல் டியன் தயாரித்த அதே தொழில் நுட்பத்தை கொண்டுதான் மை தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுவந்தது. அதன் பிறகு தாவரங்களில் இருந்து பெறப்பட்ட தாவர நிரமிகளை கொண்டும் ஆங்காங்கே நிலத்தில் கிடைக்கும் தாதுக்களை கொண்டும் வெவ்வேறு வண்ணங்களில் இங்க் தயாரிக்கும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டது.

இந்தியர்களை பொருத்தவரை சுமார் ரெண்டாயிரத்து நானூறு ஆண்டுகளாக (400 BC) மை தயாரித்து பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். கி.மு. நான்காம் நூற்றாண்டளவில் இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் கார்பன் கரி, விலங்குகளின் எலும்புகளை எரித்துக் கிடைக்கும் கரி மற்றும் நிலக்கரியிலிருந்து எடுக்கப்பட்ட தார் (Tar) ஆகியவற்றுடன் மேலும் சில மூலப்பெருட்களை சேர்த்து மாசி (Masi) என்று அழைக்கப்பட்ட ஒருவித மையை தயாரித்து பயன்படுத்தி வந்திருக்கின்றனர் என்று வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.

எப்போது பேப்பர் தயாரிக்கும் தொழில் நுட்பத்தை சீனர்கள் கண்டுபிடித்தார்களோ (கி.பி.105) அப்போது முதலே எழுதுவதற்கு பயன்படுத்தும் மை-யின் தரத்தையும் மேம்படுத்தும் முயற்ச்சியில் தீவிரமாக இறங்கினார்கள். இதன் விளைவாக கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் பசை, Gallnuts, எண்ணெய், இரும்பு உப்புகள் (Iron Salts) போன்றவற்றை கொண்டு மேம்பட்ட மை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை சீனர்கள் கண்டறிந்தனர். இந்த தொழில்நுட்பம் தான் நவீன மை தயாரிக்கும் தொழில்நுட்பத்திற்கு வழிகாட்டியாக அமைந்தது.

கி.பி. மூன்றாம் நூற்றாண்டுகளில் கெட்டியான அதாவது திடமான (Solid) இங்க் தயாரிப்பதில் சீனர்கள் வெற்றிபெற்றிருந்தனர். இந்த இங்க் குச்சிகளில் அடைக்கப்பட்டு எழுத நினைக்கும் போது தண்ணீரில் முக்கி நனைத்து பின் எழுதப்பட்டது. அதைதொடர்ந்து எட்டாம் நூற்றாண்டுகளில் ஹாவ்தொர்ன் (Hawthorn) என்ற மரத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட மர பட்டைகளை தண்ணீரில் எட்டு நாள் ஊற வைத்து பின்பு அந்த தண்ணீருடன் ஒய்ன் (Wine) சேர்த்து நன்றாக வற்றும் வரை கொதிக்க வைக்கப்பட்டது. பின்பு அதற்கென்று பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பைகளில் அடைக்கப்பட்டு சூரிய ஒளியில் உலர்த்தபட்டது. பின்பு மீண்டும் அதனுடன் ஒய்ன் மற்றும் இரும்பு உப்புக்கள் சேர்க்கப்பட்டு நீர்ம நிலைக்கு எட்டச்செய்து எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்டது. இந்த வகையில் தயாரிக்கப்பட்ட மை முதலில் கரு நீல நிறத்திலும் காலப்போக்கில் அடர்த்தி குறைந்த நீல நிறத்திலும் இருந்தது.

மேலும் கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை மை தயாரிக்க தேவைப்படும் கார்பன் என்கிற முக்கிய நிறமிப்பொருள் சீனாவிற்கு இந்தியாவில் இருந்துதான் இறக்குமதி செய்யபட்டுவந்தது. இந்நிலையில் சாங் வம்சத்தினர் (Song Dynasty) ஆட்சிக்காலத்தில் சீனாவில் புகழ் பெற்று விளங்கிய பல்துறை (polymath) வல்லுனரான சென் கெள (Shen Kuo; 1031 - 1095 AD) பெட்ரோலை எரிப்பதன் மூலம் கிடைக்கும் புகைக்கரியை கொண்டு கார்பன் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்தார். அதன் பிறகு சீனாவிற்கு தேவைப்பட்ட கார்பன் என்ற நிறமிப்பொருள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வது தவிர்க்கப்பட்டது.

இரும்பு உப்புகள் (பெர்ரஸ் சல்பேட்), பசை, தண்ணீர், வால்நட் ஆயில் (Walnut Oil), மற்றும் புகைக்கரி ஆகியவற்றை கொண்டு அச்சகங்களுக்கு தேவைப்படும் மையை ஜெர்மனியை சேர்ந்த வல்லுநர் ஜோகன்னஸ் குட்டன்பர்க் (Johannes Gutenberg) என்பவர் பதினைந்தாம் நூற்றாண்டு வாக்கில் தயாரித்து உலகின் முதல் அச்சகத்தையும் நிறுவினார். அதைத் தொடர்ந்து கரைப்பான்கள், பிசின்கள், உராய்வு நீக்கிகள், நிறமிகள் மற்றும் சாயங்கள் கொண்டு இன்றைய நவீன இங்க் தயாரிக்கப்பட்டது. உலகில் மை கொண்டு எழுதும் எழுத்து முறைகள் சீனாவில் துவங்கி ஜப்பானில் பிரபலமாகி ஐரோப்பிய நாடுகளை எட்டி பின்பு உலகம் முழுவதும் பரவியது.

டியன் மிகப்பெரிய கண்டுபிடிப்புகள் எதையும் கண்டறிந்திருக்கவில்லை தான் ஆனால் மை கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் கல்வியறிவு போதிக்கும் முறைகள் புதிய பரிணாமத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது என்றால் மிகையில்லை. கொஞ்சம் நினைத்து பாருங்கள் மை மட்டும் கண்டுபிடிக்கபடாமல் இருந்திருந்தால் இன்று நாம் பாடசாலைகளுக்கு புத்தகங்களுக்கு பதிலாக கற்களை தான் சுமந்து செல்ல வேண்டியதிருந்திருக்கும். ஆகையால் தான் பதிவின் துவக்கத்தில் மையை கணிப்பொறிக்கு ஈடான கண்டுபிடிப்பாக கூறினேன்.

சரி நண்பர்களே இன்றைய பதிவு உங்களக்கு சில பயனுள்ள தகவல்களை கொண்டு வந்திருக்கும் என்று நம்புகிறேன், மறக்காமல் உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் அது என்னை மேன்மேலும் வளர்த்துக்கொள்ள உதவும். நன்றி., மீண்டும் சந்திப்போம்.., வணக்கம்...!
Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக