பக்கங்கள்

புதன், 16 அக்டோபர், 2019

உலக உணவு நாள் அக்டோபர் 16 .


உலக உணவு நாள் அக்டோபர் 16 .

உலக உணவு நாள் (World Food Day) ஆண்டு தோறும் அக்டோபர் 16 ஆம் நாளன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது. 1945 ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூர ஐநா இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது. நவம்பர் 1979 ஆம் ஆண்டில் இவ்வமைப்பின் 20வது பொது மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் பால் ரொமானி என்பவரின் முன்முயற்சியினால் இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டு தற்போது 150ற்கும் அதிகமான நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.

உலக உணவு நாள்
World Food Day
கடைபிடிப்போர்
அனைத்து ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள்
நாள்
அக்டோபர் 16
காலம்
1 நாள்
நிகழ்வு
ஒவ்வொரு ஆண்டும்
2008 ஆம் ஆண்டிற்கான உலக உணவு நாளின் கருப்பொருள் "உலக உணவுப் பாதுகாப்பு: காலநிலை மாற்றம் மற்றும் உயிரியல் ஆற்றலுக்கான சவால்கள்" என்பதாகும்.


உலக உணவு தினம் – அக்டோபர் 16

உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அக்டோபர் 16ம் தேதி உலக உணவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 1979ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மூலம் இந்த தினம் அறிவிக்கப்பட்டது. உயிர் வாழ உணவு அவசியம். அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. இது மனித உரிமையும் கூட. இன்றைய நிலையில் பசியால் யாரும் வாடக் கூடாது, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உலக உணவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

அத்துடன் உணவு தொடர்பான பிரச்னையில் மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், உலக அளவில் வறுமையை ஒழிப்பதும் இந்தத் தினத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. உணவில் மாவு, புரதம், தாது, கொழுப்பு, உயிர் சத்து (விட்டமின்) போன்றவை கலந்து இருப்பதே சரிவிகித உணவாகும். உயிர் சத்தும் தாது உப்புகளும் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

உலகில் அதிகரிக்கும் மக்கள் தொகை பெருக்கத்தால், வறுமையும் அதிகரிக்கிறது.அடுத்த வேலை உணவு கிடைக்குமா என்ற ஏக்கத்தில் இருப்பவர்களும், உலகில் இருக்கத்தான் செய்கின்றனர். மக்கள் தொகை வளர்ச்சியை ஒப்பிடும்போது, உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைவாகவே உள்ளது.

உலக வங்கி தகவல்படி 2010& 11ம் ஆண்டில் உணவுப் பொருட்களின் விலை உயர்வால் சுமார் 7 கோடி பேர் வறுமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். வளரும் நாடுகளில் நிலவும் விலைவாசி காரணமாக உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மக்கள் தொகை பெருக்கம், உற்பத்தி குறைவு போன்றவை, விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கின்றன. ஏழைகளுக்கு 3 வேளை உணவு என்பது எட்டாக்கனியாக இருக்கிறது. எனவே சமச்சீரான வளர்ச்சியை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும். எதிர் காலங்களில் பட்டினியால் சாவு என்பதை தவிர்க்க உறுதிமொழி ஏற்க வேண்டும்.



உலக உணவு தினம்: எந்த ராசிக்காரங்க உணவை வேஸ்ட் பண்ணாம சாப்பிடுவாங்க
தெரியுமா #WorldFoodDay

 நாம் உண்ணும் உணவுதான் கடவுள். பசியோடு இருப்பவர்களுக்கு உணவு கொடுப்பவர்கள் தெய்வத்திற்கு சமமானவர்கள். எந்த உயிரினமாக இருந்தாலும் சரி அதற்கு உணவு கொடுப்பது புண்ணியம். உலக உயிர்கள் அனைத்திற்கு உணவு கிடைத்து ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச உணவு தினமாக கொண்டாடுகின்றனர். இன்றைய தினம் ஜாதகப்படி உணவை வீணாக்குபவர்கள் யார் என்று என்றும் எந்த ராசிக்காரர்களுக்கு எந்த உணவு பிடிக்கும் ருசிக்காக சாப்பிடுபவர்கள் யார் பசிக்காக சாப்பிடுபவர்கள் எந்த ராசிக்காரர்கள் என்று பார்க்கலாம்.


தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' எனப் பாடினார் பாரதி. ஆனால் இந்தியாவில் தினமும் பல கோடி மக்கள் காலை அல்லது மதிய உணவின்றி வாழ்கிறார்கள். பல கோடி மக்கள் இரவு உணவு இல்லாமல் தூங்குகிறார்கள். உலகிலேயே அதிகப்படியான அளவாக இந்தியாவில் 20 கோடி பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் தெரிவிக்கிறது. அனைத்து உயிர்களுக்கும் உணவு கிடைக்க வேண்டும், பசியால் யாரும் வாடக்கூடாது, உணவு குறித்த விழிப்பு உணர்வு மக்களிடம் சரியாக சென்றடைய வேண்டும் என்பதற்காகவும் உலக உணவு நாள் கடைபிடிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு 1945ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள் தொடங்கப்பட்டது. 1979ஆம் ஆண்டு ஐநா சபையின் 20வது பொது மாநாட்டில் அக்டோபர் 16ஆம் நாள் உலக உணவு தினமாக அறிவிக்கப்பட்டது. 40 ஆண்டுகளை கடந்துவிட்டாலும் உலகின் அனைத்து மக்களுக்கும் பொதுவாக, சரிவிகிதமான உணவு கிடைப்பது உறுதி செய்யப்படவில்லை.

ஐப்பசி மாத ராசி பலன்கள் 2019: துலாம், விருச்சிகம் ராசிகளுக்கு பலன்கள் - பரிகாரங்கள்


வீணாகும் உணவு
இந்தியாவில் நடுத்தர குடும்பத்தினர் ஆண்டுக்கு 100 கிலோ உணவை வீண் செய்கிறார்கள். திருமண மண்டபங்கள், விருந்து நடைபெறும் இடங்கள், கேளிக்கை விடுதிகளில் சராசரியாக ஐம்பது முதல் 100 பேர் உண்ணும் அளவிலான உணவுப்பொருள் வீண் செய்யப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்பவர்களும், பள்ளிக் கல்லூரி மாணவ மாணவிகளும் அன்றாடம் பல டன் உணவுகளை தெரிந்தோ தெரியாமலேயே வீண் செய்கின்றனர். இவை அனைத்திற்குமே உணவுப் பொருள் குறித்த விழிப்பு உணர்வு இல்லாமல் இருப்பதே. உணவை வீணாக்காமல் இருந்தாலே பசியால் வாடும் மக்களின் உணவுத் தேவையை கணிசமான அளவு பூர்த்தி செய்ய முடியும்.


உணவு வீணாவது எப்படி
எப்போதும் வீட்டிலிருக்கும் வரை நமக்கு நம் அன்னையிடும் உணவின் அருமை தெரிவதில்லை. ஆனால் வேலைக்காகவோ படிப்பிற்காகவோ வெளியூர் சென்று தங்க நேர்ந்தால் வீட்டு சாப்பாட்டின் அருமையும் அம்மாவின் பெருமையும் தெரியும். ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் அசுபராகி இரண்டாம் பாவத்தில் நிற்க விருந்து மற்றும் ஹோட்டல்களில் சாப்பிட்டு வீட்டு உணவுகளை வீணடிப்பார்.



காரமான உணவுகள்
ஒரு ஜாதகரின் இரண்டாம் பாவத்தில் சூரியன் அசுப தொடர்பு பெற்று அல்லது பாதகாதிபதியாகி நிற்க கோதுமை மற்றும் கோதுமையில் செய்த உணவு பொருட்களை வீணாக்குவார்களாம். ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் அசுபத்தொடர்பு பெற்று இரண்டாம் பாவத்தில் நிற்க அந்த ஜாதகர் ஊறுகாய், வடான், வத்தல் வகைகள், சூடான, காரமான சாப்பாடு வகைகளைக் கூட வீணாக்கி விடுவார்.


பழங்கள் வீணாகும்
ஒருவர் ஜாதகத்தில் புதன் அசுப கிரகத்தின் தொடர்பு பெற்று இரண்டாம் பாவத்தில் நிற்க பசுமையான காய்களை சமைக்காமலேயே வீணக்கிடுவார். மேலும் தேவைக்கு அதிகமாக நொறுக்கு தீனிகளை வாங்கி வீணடிப்பார்கள். ஒருவர் ஜாதகத்தில் குரு அசுபராகி இரண்டாம் வீட்டில் நிற்க நெய்யில் செய்த இனிப்பு வகைகளையும், பழங்களையும் வீணடிப்பார்.



ருசியான உணவுகள்
சூடாகவும் சுவையாகவும் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் மேஷ ராசிக்காரர்கள். வேகமாக சாப்பிட்டு விடுவார்கள். இனிப்பு, துவர்ப்பு காரமான உணவுகள் ரொம்ப பிடிக்கும். அதே நேரம் ரிஷப ராசிக்காரர்கள் அறுசுவை உணவுகளையும் ரசித்து ருசித்து மெதுவாக சாப்பிடுவார்கள். இனிப்பு, உவர்ப்பு சுவை ரொம்ப பிடிக்குமாம்.


உணவும் தண்ணீரும்
புதனை அதிபதியாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களுக்கு இனிப்பு, துவர்ப்பு சுவை ரொம்ப பிடிக்கும் குடும்பத்தோடு சேர்ந்து கூட்டாஞ்சோறு சாப்பிடுவார்கள். கடக ராசிக்காரர்கள் ரொம்ப டேஸ்டா ஹைஜீனிக்காக சாப்பிடுவார்கள். அதுவும் வீட்டில் சமைத்து சுடச்சுட சாப்பிடுவார்கள். பக்கத்தில் தண்ணீர்பாட்டில் ரெடியாக இருக்க வேண்டும் அப்போதான் உணவு உள்ளே இறங்கும்.


சுவையோ சுவை
சிம்ம ராசிக்காரர்கள் வெரைட்டியாக சாப்பிடுவார்கள். ஆஹா ஓஹோ பேஸ் பேஸ் ரொம்ப டேஸ்ட்டா இருக்குப்பா என்று பாராட்டிக்கொண்டே சாப்பிடுவது ரொம்ப பிடிக்கும். சூடாகவும் காரகமாகவும் சாப்பிடுவார்கள். ஊறுகாய் ரொம்ப பிடிக்கும். கன்னி ராசிக்காரர்களுக்கு இனிப்பு துவர்ப்பு பிடிக்கும். அதுவும் தனியாகத்தான் சாப்பிடுவார்கள். இவர்கள் தான் தின்னி தனிக்காட்டு ராஜாக்கள்.


உணவு வீணாகாது
துலாம் ராசிக்காரர்களும், விருச்சிக ராசிக்காரர்களும் உணவுக்கு மரியாதை கொடுப்பார்கள். உணவை வீணாக்க மாட்டார்கள். பழைய உணவைக்கூட பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவார்கள். ஊறுகாய், காரமான உணவுகள் பிடிக்கும். இனிப்பு துவர்ப்பு ரொம்ப பிடிக்கும். அதே போல செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்கள் பசிக்காக சாப்பிடுவார்கள். சூடாகவும் அதே நேரம் துவர்ப்பு சுவையுள்ள உணவும் ரொம்ப பிடிக்குமாம்.


கசப்பு ரொம்ப பிடிக்கும்
தனுசு ராசிக்காரர்களுக்கும் மகரம் ராசிக்காரர்களுக்கும் கசப்பு ரொம்ப பிடிக்கும். நன்றாக பசித்த பின்னர் வேகமாக மென்று சாப்பிடுவார்கள். காய்கறிகள், கீரை, பழங்களை விரும்பி சாப்பிடுவார்கள். அதே போல கசப்பு சுவை ரொம்பவே பிடிக்கும் பழைய உணவு கூட ரொம்ப பிடிக்கும் உணவு வீணாகாது.


சுவையான உணவு
கும்பம் ராசிக்காரர்களுக்கு பல ஊர் உணவுகள் ரொம்ப பிடிக்கும் தேடி தேடி ருசியாக சாப்பிடுவார்கள். உண்ட மயக்கம் அப்படியே ரெஸ்ட் எடுப்பது பிடிக்கும். அறுசுவையும் அற்புதமாக சரி சமமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதே போல மீனம் ராசிக்காரர்கள் சூடாக சாப்பிடுவார். வேகமாக சாப்பிடுவார். காரம், இனிப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவு ரொம்பவே பிடிக்கும்.Thanks oneindia.


Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக